All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மீசைக்கும் பூவாசம் தந்தாயடி...!" கதை திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த புது கதையுடன் வந்து இருக்கிறேன் தோழமைகளே 🥰 உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்🥰♥️♥️😍

தலைப்பு - மீசைக்கும் பூவாசம் தந்தாயடி

தலைவன் - தொண்டைமான்
தலைவி - பல்லவி
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தொண்டைமானுக்கு பெண்ணவளின் ஸ்பரிசம் அதிக போதையை கொடுக்க விழிகளை மூடிக் கொண்டான். அதுவும் அவனது மார்பில் படிந்த விரல்களில் ஏற்பட்ட மெல்லிய நடுக்கம் அவனை அதிகமாக மயக்கியது...
“கடவுளே கடவுளே...” என்று வேண்டிக்கொண்டே அவனது காட்டு தேக்கு தேகத்தில் தன் மெல்லிய விரல்களை படரவிட்டாள். அதற்கு மேல் செல்ல அவளுக்கு பெரும் தயக்கமாய் இருந்தது.
இதெல்லாம் அவளுக்கு மிகவும் புதிது. அவளது வீட்டில் அவளுக்கு கூட தலையில் எண்ணெய் வைத்துவிட்டுக் கொண்டது கிடையாது. பல்லவியின் தாய் ஜெயந்தி தான் இவளுக்கும் இவளின் தம்பி நரேன், தகப்பன் மூர்த்திக்கும் செய்து விடுவார். கூடவே பல்லவியின் அழகு குறையாமல் இருப்பதற்காக அதிக நேரம் பார்லரில் செலவு செய்ய விடுவார்.
பாதி நேரம் அவர்களை எல்லாம் வீட்டுக்கே வரவைத்து இவளுக்கு சேவகம் செய்ய வைப்பார். கண்ணின் இமைபோல பார்த்துக் கொண்டார் ஜெயந்தி. ஆனால் அதற்கு மாறாக அவளை பணம் காய்க்கும் இயந்திரமாக மாற்றினார்.
இன்னுமொரு வாரத்தில் மெட்ராஸ் பேஷன் ஷோ இருக்கு பல்லவிக்கு. இவளுக்கு வெறும் செட்யூல் மட்டும் தான் வரும். கமிட்மென்ட் குடுப்பது எல்லாமே ஜெயந்தி தான். கொஞ்ச நேரம் கூட ப்ரீயாக விடமாட்டார் அவளை. ஓடு ஓடு என்று ஓடவிட்டுக் கொண்டே இருப்பார்.
அப்படி பட்டவளை மசாஜ் செய்ய சொல்லி கொடுமை படுத்தினான் தொண்டைமான்.
அவளிடம் இருந்த தயக்கத்தை பார்த்து, “ம்ம்ம்” என்று அவனிடமிருந்து உறுமல் வெளியே வர அவளது கைகளில் இன்னும் நடுக்கம் கூடியது.
“சார்...” என்று அவள் பதறிப் போனாள்.
“நல்லா மூட் ஜேஞ்சாகுது.. இப்படியே இந்த ப்லோலையே போ” என்று இன்னும் சொகுசாக அமர்ந்துக் கொண்டான்.
அவனிடம் ஒரே ஒரு முறை பேசி பார்க்கலாம் என்று “சார்” என்று அவனது தவத்தை கலைக்க,
“ப்ச் பேசி பேசி என் மூடை ஸ்பாயில் பண்ணாதடி.. அப்புறம் பெட்ரூம்ல போய் தான் மசாஜ் பண்ண சொல்லுவேன்” என்று அவளை மிரட்டினான் ரவுடி. அதில் பக்கென்று ஆனது அவளுக்கு.
தொண்டை குழியை அடைத்துக் கொண்டு வர,
“தடிமாடு தடிமாடு... சின்ன பிள்ளைன்னு கூட இரக்கம் காட்டாம படுத்தி எடுக்கிறானே..” புலம்பியவள் அவனது மார்பில் கையை ஓட்டினாள்.
“ஹைய்யோ ஹைய்யோ... ஒரு பச்ச பிள்ளைக்கு இப்படியெல்லாமா சோதனை குடுப்பா இறைவா?” நொந்துப் போனவள் ஏனோ தானோ என்று அவனின் மார்பில் இருந்து வயிற்றுக்கு கைகளை நகர்த்தினாள்.
மிக மெதுவாக விரல் நுனியில் பட்டும் படாததுமாக அவள் வருடிவிட அந்த மெதுவான வருடலே தொண்டைமானுக்கு கிறக்கத்தை கொடுத்தது. கண்களை மூடி அந்த கிறக்கத்தை ஆழ்ந்து அனுபவித்தான்.
“செம்மடி” என்று கமெண்ட்ஸ் வேற சொல்ல பத்திக் கொண்டு வந்தது அவளுக்கு.
அந்த நேரம் “மிஸ்டர் தொண்டைமான்” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க, அவன் கொஞ்சம் கூட அசையவே இல்லை. பல்லவி தான் பட்டென்று அவன் மீதிருந்து கைகளை எடுத்துக் கொண்டாள். கூடவே அவனது மடியில் இருந்து எழுந்துக் கொண்டாள். அது வரை விழிகளை திறக்கதவன் இவள் கைகளை எடுத்துக் கொள்ளவும் மடியை விட்டு எழவும் விழிகளை படக்கென்று திறந்தான். அவனது அந்த செயலில் நெஞ்சு ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது.
கண்ணை திறப்பதில் கூட பயமுருத்த இந்த ஆளாலதான் முடியும் சாமி... என்று மனதுக்குள் படபடத்துப் போனாள் பல்லவி.
“நான் உன்னை எழுந்திரிக்க சொல்லலையே..” என்று சிவந்துப் போன விழிகளை உருட்டி அவளை கூர்ந்து பார்த்தான்.
“இல்ல.. அவங்க கூப்பிட்டாங்க அதான்” என்றாள்.
“உன்னைய கூப்பிட்டாளா என்னைய கூப்பிட்டாளா?” நறுக்கு தெரித்தார் போல அவன் கேட்க,
“உங்களை தான்..” என்று தலையை குனிந்துக் கொண்டாள் தவறு செய்த சிறுபிள்ளையாய்.
“ம்ம் அப்போ உன் வேலையை பாரு” என்று அதட்டல் போட்டான். அதில் மிரண்டுப் போனவள் மீண்டும் அவனின் மடியில் அமர்ந்து அவனது நெஞ்சை வருடி விட ஆரம்பித்தாள் உள்ளுக்குள் கடுப்புடன்.
“தொண்டைமான் இங்க என்ன நடக்குது?” என்று வந்தவள் கத்தினாள்.
“ப்ச் இப்போ எதுக்கு நீ கத்திட்டு இருக்க...” என்று காதை குடைந்துக் கொண்டான்.
“நீ செய்யிறது எதுவும் நல்லா இல்ல தொண்டைமான்... உனக்கு ஏதாவது வேணும்னா நீ என்னை தானே கூப்பிடனும். அதை விட்டுட்டு இவ யாரு... இவ எதுக்கு உன் மடியில உட்கார்ந்து இருக்கா... ஏய் முதல்ல எழுந்திரிடி அவர் மடியில இருந்து” என்று சக கிழத்தி சண்டை போல அவள் வரிந்துக் கட்டிக்கொண்டு வர,
“ஹலோ மிஸ் ஒரு நிமிடம்..” என்று தன்மையாக அவள் ஆரம்பித்து அவன் மடியை விட்டு எழப் பார்க்க அவளின் இடையில் இரண்டு பக்கமும் கைக்கொடுத்து இழுத்து மீண்டும் அவனது மடியில் அமர்த்திக் கொண்டவன்,
“உள்ள ரெண்டு பேர் படுத்து கிடக்குறானுங்க. அவனுங்களுக்கு போய் வைத்தியம் பாரு. அதை விட்டுட்டு இங்க வந்து உன் அதிகாரத்தை காட்டாத. நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்று கர்ஜித்தவன்,
“இன்னொரு முறை என் அனுமதி இல்லாம என் அறைக்குள்ள வர்ற வேலை வச்சுக்கிட்ட பிறகு உயிரோட இங்க இருந்து போக மாட்ட” என்று அப்பட்டாமாக மிரட்டியவன் சிவந்து வெறி ஏறிப்போன விழிகளால் பல்லவியை ஒரு பார்வை பார்த்தான்.
அவ்வளவு தான் பல்லவி பெட்டி பாம்பாய் சுருண்டுப் போய் விட்டாள்.
ஷீலாவின் முகம் கருத்துப் போனது.
“நான் அதுக்காக சொல்லல தென்பாண்டியன்” என்று அவள் விளக்கம் சொல்ல வர,
“வெளிய போ... நான் ரிலாக்ஸ் பண்ணிட்டு இருக்கேன்” என்றவன்,
“சேரா...” என்று ஒரு குரல் கொடுத்தான்.
“அண்ணன்” என்று ஒருவன் வந்து நின்றான்.
“எங்கடா போய் இருந்த... கண்டவளும் என் அறைக்கு வராளுங்க. இங்க நிக்காம எங்க புடுங்கப் போன” என்று எரிந்து விழுந்தான் அவனிடம்.
“இல்லன்னா தண்ணி குடிக்க சமையலறைக்கு தான் போய் இருந்தேன். அதுக்குள்ள இந்த பொண்ணு வரும்னு நான் எதிர்பார்க்கலண்ணா.. இதோ ஒரே ஒரு நிமிடம் ண்ணா கிளியர் பண்றேன்” என்று அவனிடம் பம்மியவன் ஷீலாவை பார்த்து முறைத்தான்.
“நீயா வெளிய வர்றியா? இல்ல பொணமா வெளிய வர்றியா?” என்று துப்பாகியை அவளின் நெற்றியில் வைத்தான் சேரன்.
அதை பார்த்து பல்லவிக்கு மயக்கமே வந்திடும் போல ஆனது. ‘அறையை விட்டு வெளியே போன்னு சொல்றதுக்கு கூடவடா துப்பாக்கியை தூக்குவீங்க.. படுபாவி பசங்களா’ என்று நொந்துக் கொண்டவளுக்கு தொண்டைமானின் மீது இன்னும் பயம் அதிகரித்தது.
“ம்ம் நீ என்ன வாயை பார்த்துக்கிட்டு இருக்க...? உனக்கும் கன்னை காட்டணுமா?” என்று தொண்டைமான் தன் மடியில் அமர்ந்து இருப்பவளின் காதில் மீசை முடி உரச முணகினான். அவனது அந்த நெருக்கமான ஸ்பரிசத்தில் இன்னும் அச்சப்பட்டுப் போனாள்.
“ஏன் இப்படில்லாம் பண்றீங்க... டான்ஸ் மட்டும் ஆடிட்டு பொயிடுறனே... நான் வேணா இதே மாதிரி செய்யிற ஆட்களை பார்த்து குடுக்கவா?” சின்ன பிள்ளையாய் அவள் கேட்க, அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். அதில் கொஞ்சம் கூட கள்ளம் கபடம் எதுவுமே இல்லாமல் இருந்தது.
“என் தொடுகை பிடிக்கலையா?” என்று நேரடியாக கேட்டான்.
அவளுக்கு வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. பிடிக்கலன்னு சொன்னா சுட்டுடுவானோ என்று பயந்தவள் எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள்.
அதை கண்டு அவளின் மீது இன்னும் பார்வை அழுத்தமாய் படிந்தது. அவனது பார்வையில் இருந்த கூர்மையில்,
“உண்மையை சொல்லனும்னா எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு சார். அது தான்” என்றாள்.
“புதுசா இருக்கா? பிடிக்கலையா?” அழுத்தமாய் அவன் மேலும் கேட்டான்.
“எனக்கு சொல்ல தெரியல சார்..” என்றவளுக்கு உடம்பு மிகவும் சோர்வாக இருந்தது. அவளின் கண்கள் மூடி மூடி திறக்க,
“என்னடி கிறக்கமா இருக்கா?” என்று கேட்டான். அவனின் கை அவளின் இடையை இறுக்கிப் பிடித்து இருந்தது. ஒரு வேலை அதனால் வந்த கிறக்கமோ என்று எண்ணினான்.
“இல்ல சார்” என்றவளுக்கு தொக்கம் சுழட்டி எடுத்தது.
“என்னடி பண்ற?” என்று கேட்டவனின் தோளிலே சிறு பிள்ளையாய் தூங்கிப் போனாள்.
அவள் இப்படி தலை தொங்கி அவன் மீதே விழுந்தவளை புரியாமல் பார்த்தவன் பின் உதட்டை சுளித்து அவளை கைகளில் அள்ளிக் கொண்டவன் அவளை தன் மீது முழுமையாக சாய்த்துக் கொண்டு விழிகளை மூடிக் கொண்டான். முதல் முறை ஒரு பெண்ணின் ஸ்பரிசம். அதுவும் முழுமையாக...
ஆறடி ஆண் மகனை அந்த உணர்வுகள் என்னவோ செய்தது. அவனுக்கு இந்த உணர்வுகள் மீண்டும் மீண்டும் வேண்டும் என்பது போல தோன்ற படுக்கையில் கிடத்தி அவளின் மீது ஏறி படுத்துக் கொண்டான்.
இறுக்கி அணைத்து அவளின் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டு அவளின் வாசனையை நாசியில் உறிஞ்சியவனுக்கு என்னவோ நீண்ட நெடிய நாட்களின் தேடலை கண்டு அடைந்து விட்டதாக உணர்ந்துக் கொண்டான்.
“ம்ம்...” என்று மீண்டும் அவளின் வாசனையை நுகர்ந்தான். மீண்டும் மீண்டும் அவன் அதே வேலையை செய்ய,
“ப்ச் தூங்க விடாம என்ன செய்யிற டெடி.. ஒழுங்கா தூங்கு” என்ற பல்லவி தன் கழுத்தில் புதைந்து இருந்த முகத்தை சற்றே கீழ நகர்த்தி மார்பில் புதைத்துக் கொண்டாள்.
அவளின் வெற்று தோளில் கழுத்தில் புதைந்து இருந்த முகத்தில் அடர்ந்து இருந்த தாடியும் மீசையும் அவளுக்கு இம்சையை கூட்டியதில் உறக்கத்திலே கூச்சம் கொண்டவள் தான் எப்பொழுதும் கட்டி பிடித்து தூங்கும் பொம்மை என்று எண்ணி அவனது முகத்தை இழுத்து மார்பில் புதைத்துக் கொண்டாள்.
அவள் பொம்மை என்று எண்ணி அந்த செயலை செய்ய, ஆணவனோ உடலும் உயிரும் கொண்டவனாயிற்றே... பொம்மை அசையாமல் இருக்கும். ஆனால் தொண்டைமான் ஒரு இடத்தில் அசையாமல் இருப்பானா? அவனது முகத்தை பெண்ணவளின் நெஞ்சில் அழுத்தமாக புதைத்துக் கொண்டான்.
கூடவே தன் முகத்தை வைத்து அங்கும் இங்குமாய் அசைத்து திருப்ப தூக்கத்திலே பல்லவி உடல் முழுவதும் சிவந்துப் போனாள்.
பெண்ணவளின் மெல்லிய மென்மையான யாக்கையில் முற்றும் முழுதுமாக தொலைந்துப் போக பேராவல் கொண்டான் தொண்டைமான்.


படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 🥰 ♥️
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் பொம்மை என்று எண்ணி அந்த செயலை செய்ய, ஆணவனோ உடலும் உயிரும் கொண்டவனாயிற்றே... பொம்மை அசையாமல் இருக்கும். ஆனால் தொண்டைமான் ஒரு இடத்தில் அசையாமல் இருப்பானா? அவனது முகத்தை பெண்ணவளின் நெஞ்சில் அழுத்தமாக புதைத்துக் கொண்டான்.
கூடவே தன் முகத்தை வைத்து அங்கும் இங்குமாய் அசைத்து திருப்ப தூக்கத்திலே பல்லவி உடல் முழுவதும் சிவந்துப் போனாள்.
பெண்ணவளின் மெல்லிய மென்மையான யாக்கையில் முற்றும் முழுதுமாக தொலைந்துப் போக பேராவல் கொண்டான் தொண்டைமான்.
அதை செய்ய முயலும் முன் அவனது போன் அடித்தது. “ம்ம்ம்” எடுத்து பேசினான். அந்த பக்கம் ஏதோ சொல்ல,
“நாளைக்கு அசைன்மென்ட்.. முடிச்சுட்டு கூப்பிடுறேன் இப்ப வை போனை” என்று சுல்லேன்று பேசியவன் பெண்ணவளிள் புதைந்துப் போனான்.
கொஞ்ச நேரம் கூட ஆகி இருக்காது. போன் சத்தம் கேட்டது. அதில் கடுப்பானவன் தன் போனை தூக்கி எறியப்போக அவனது போனிலிருந்து சத்தம் வரவில்லை.
வேறு எங்கிருந்தோ சத்தம் வர அவனது நிம்மதியான மனநிலையை கெடுத்தது அந்த போன் சத்தம். கடுப்பானவன் போனை தேடி பார்த்தான். பல்லவியின் கைப்பையில் தான் இருந்தது. எடுத்து அதை சுவரில் அடித்து வீசப் போனவன் அதில் மிளிர்ந்த புகைப்படத்தை பார்த்து நெற்றி சுறுக்கினான். அதோடு சஞ்சு என்று பெயர் வர போனை அட்டென் செய்து காதில் வைத்தான்.
“என்ன லவி பண்ற? போனே பண்ண மாட்டிக்கிற. நாளைக்கு சினிமாவுக்கு போகலாம்னு ப்ளான் பண்ணினோம். டிக்கெட் எடுத்து வச்சுட்டேன். நாளைக்கு ஈவினிங் ஷோ போறோம். உங்க அம்மாவுக்கு தெரியாது. அதனால நான் கோட் வேர்ட்ல மெசேஜ் பண்றேன் நைட்டு... அப்புறம் எப்பவும் போல புடவையை சுத்திட்டு வராம ஸ்லீவ்லெஸ் குட்டி டாப், த்ரீ போர்த் பேன்ட்ல வா” என்று அவன் வைத்து விட்டான்.
அதை கேட்ட தொண்டைமானுக்கோ சம்மந்தமே இல்லாமல் நெஞ்சு எரிந்தது. அங்கு அலுங்காமல் நலுங்காமல் தூங்கிக் கொண்டு இருந்தவளை ஒரு பார்வை பார்த்தான்.
ஏனோ அவளை அவனுடன் நாளைக்கு சினிமாவுக்கு விட மனம் வரவில்லை அவனுக்கு. ஏன் இப்படி யோசிக்கிறோம் என்று கூட எண்ணாமல் அவளின் போனை அனைத்து வைத்து விட்டு அவளின் மீது படுத்துக் கொண்டான்.
அவள் மீது படுத்து இருந்தவனுக்கு என்றும் இல்லாத அளவு தூக்கம் வந்தது. எப்பொழுதுமே ஒரு அலெர்ட்டுடன் தான் தூங்குவான்.
ஆனால் இன்றைக்கு எந்த அலேர்ட்டும் இல்லாமல் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து படுக்கையில் வீசியவன் அவள் மீது கவிழ்ந்துக் கொண்டான்.
இருவருக்கும் நல்ல தூக்கம். வீட்டில் இருந்தால் ஜெயந்தி நிச்சயம் தூங்க விட்டிருக்க மாட்டார் பல்லவியை. ஓய்வு ஒழிவு இல்லாமல் அலைந்துக் கொண்டு இருந்தவளுக்கு தூக்கம் வெகுவாக அழுத்தியது.
அதனால் தன் மீது ஒரு முரட்டு தடிமாடு தூங்கிக் கொண்டு இருப்பது கூட தெரியாமல் தூங்கி இருந்தாள். ஒரு நாள் ஒருபொழுது கூட ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறாள்.
எப்பொழுது இந்த பீல்டுக்கு வந்தாளோ அப்போதிருந்து ஓட்டம் தான். நிதானிக்க கூட அவளுக்கு நேரம் வாய்க்கவில்லை. பிரெண்ட்ஸ் நோ, அவுட்டிங் நோ, ஏன் ஷாப்பிங் கூட நோ தான். அவளுக்கானதை எல்லாம் ஜெயந்தி தான் வாங்குவார்.
“நீ ஷாப்பிங் போறேன்னு அதுல கொஞ்ச நேரத்தை செலவு செய்யாத. உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லி அவரின் அசிஸ்டெண்டை வைத்து வாங்கி வந்து கொடுத்து விடுவார்.
விரும்பிய உணவுகளை சாப்பிட கூட அவளுக்கு அனுமதி இல்லை.
“ஏன்ம்மா?” பாவமாய் கேட்பாள் பல்லவி.
“உடம்பு ஏறிபோச்சுன்னா யார் சம்பாதிச்சு குடுக்குறது” என்று கேட்பார்.
“அப்போ நான் சம்பாரிக்கிற மிஷினா? எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. அதை நான் எப்போ வாழுவேன்” அழாத குறையாக கேட்பாள்.
“இப்ப உனக்கு என்ன வயசு... இருபத்தி அஞ்சு தானே ஆகுது. இருபத்தி ஏழுல கல்யாணம் செய்து வைக்கிறேன்.அப்பு நீ உனக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துக்க. யாரு வந்து கேட்கப்போறா” என்று சொல்லி சொல்லியே இவ்வளவு நாளையும் கடத்திக் கொண்டு இருக்கிறார் ஜெயந்தி.
பல்லவியை வைத்தே மிகபெரும் கோடீஸ்வரியாக மாறிவிட்டார் ஜெயந்தி. ஆனாலும் இன்னும் அவரின் ஆசை தீரவில்லை. ஓட மறுப்பவளை கல்யாணம் எண்ணும் ஆசையை காட்டி ஓட விட்டுக் கொண்டு இருந்தார்.
“காதலிக்கவா மா. சஞ்சு எனக்கு ப்ரபோஸ் பண்ணுனான். நான் இல்லாம அவன் வாழவே மாட்டேன்னு சொல்றான் மா” என்று ஒரு நாள் வந்து நின்றவளை பார்த்த ஜெயந்திக்கு பக்கென்று இருந்தது.
“ஓடுகிற வயசில் ஓடாமல் இதென்ன காதல் கல்யாணம் பிள்ளைன்னு” என்று முகம் சுழித்தவர்,
“கண்டிப்பா அவனுக்கு உன்னை கல்யாணம் செய்து வைக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி நீ கமிட் ஆகி இருக்கிற பல வேலைகள் இருக்கு. அதை முதல்ல முடிப்போம். அதுக்கு பிறகு ஒரு நல்ல நாளா பார்த்து அவனையும் அவனது வீட்டு ஆட்களையும் வர சொல்லி சம்மந்தம் போட்டுக்கலாம்” என்று ஆசை வார்த்தைகளை சொல்லியதோடு,
“அது வரை கொஞ்சம் வெளிப்படையா காதலிக்கிறது சுத்துறது இதை எல்லாம் நிறுத்திக்கோ, வெளிய விசயம் தெரிஞ்சா பிறகு எல்லோரும் குடுத்த அட்வான்ஸை திருப்பி கேட்பாங்க” என்று அவளை கட்டுப்படுத்தி வைத்து இருந்தார்.
அதனால் தன் விருப்பத்தை சஞ்சயிடம் காட்டிக் கொள்ளவில்லை பல்லவி. அம்மாவை முழுமையாக நம்பினாள். ஆனால் ஜெயந்திக்கு அந்த எண்ணமே இருக்கவில்லை. இன்னும் சம்பாதிக்கணும் என்கிற எண்ணம் மட்டும் தான் இருந்தது. என்ன அதை மகளிடம் காண்பித்துக் கொள்ளவில்லை. அவளை எவ்வளவு சக்கையாக பிழிய வேண்டுமோ அந்த அளவுக்கு சக்கையாக பிழிந்து எடுத்தார்.
அவரிடம் மறுக்க தைரியம் இல்லாமல் இதோ ஓடிக்கொண்டே இருக்கிறாள். அந்த ஓட்டம் அதிக அளவுக்கு அவளை சோர்வுற செய்தது.
அதனால் தானோ என்னவோ ஒரு ரவுடியின் அருகில் அசந்து தூங்கி விட்டாள் போல. அடுத்த செட்யூல் ஆரம்பிக்க அங்கு போய் சேராத தன் மகளுக்கு போன் போட்டு போன் போட்டு சலித்துப் போனவருக்கு நெஞ்சில் பயம் வந்தது.
“எங்கயும் ஓடி போயிட்டாளா?” என்று தான் அவரின் முதல் சிந்தனையே வந்தது.
வேகமாய் சஞ்சய்க்கு போனை போட்டார்.
“ஹலோ ஆன்டி” என்று அவன் பேச ஆரம்பிக்கும் முன்பே,
“பல்லவி உன்னை பார்க்க வரேன்னு சொன்னா... வந்து இருக்காளா ப்பா” என்று சாதூரியமாக கேட்டார்.
“இல்லையே ஆன்டி.. அவ இங்க வரலையே. இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணேன் பேசுனாளே.. ஆனா அப்ப கூட என்னை பார்க்க வரேன்னு சொல்லலையே” என்று என்றான்.
“அப்படியா ஒரு வேலை சர்ப்ரைசுனு சொல்லி உன் கிட்ட எதுவும் சொல்லாம இருந்து இருப்பா.. நான் தான் அவுட் பண்ணிட்டேன் போல தம்பி” என்று மழுப்பி சிரித்தவர் வைத்து விட்டார்.
சஞ்சய் அதற்குள் கனவுக்குள் சென்று விட்டான். “ஆஹா சர்ப்ரைஸ் ஆஆ... எனக்கா” என்று ட்ரீம் வேல்டுக்குள் நுழைந்து விட்டான்.
இங்கே ரவுடியிடம் சிக்கிய பல்லவி கொஞ்ச நேரம் கழித்து மூச்சு விட முடியாமல் திணறினாள் தூக்கத்திலே.
“ஏன் இந்த டெடி இவ்வளவு கனமா இருக்கு... என்னால தூங்கவே முடியல... மூச்சு முட்டுது” என்று சொல்லி தன் மீது இருந்தவனை தூக்கத்திலே தள்ளிவிடப் பார்த்தாள். ஆனால் அவளால் தள்ளி விடவே முடியவில்லை.
“டெடி சொன்னா சொன்ன பேச்சு கேளு... மூச்சு முட்டுது” என்று வாய் விட்டு சொன்னவளுக்கு கண்களை திறக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு அசதி அவளை படுத்தி எடுத்தது.
“ப்ளீஸ் டெடி” என்று கெஞ்சியவளின் முணகல்கள் தொண்டமானை போய் சேர்ந்ததோ என்னவோ அவள் மீதிருந்து விலகி அருகில் படுத்துக் கொண்டவன் அவளை தனக்கு நெருக்கமாக இழுத்து அவளின் நெஞ்சில் முகம் புதைத்து, அவள் மீது கையையும் காலையும் போட்டு சிறை செய்துக் கொண்டான்.
முன்பிருந்த நிலைக்கு இது கொஞ்சம் இளகுவாக இருக்க, அவனின் மீது கையை போட்டு கட்டிக் கொண்டு, “குட் டெடி” என்று தொண்டைமானின் உச்சந்தலையில் தூக்கத்திலே முத்தம் கொடுத்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.
அந்த முத்தத்தை தூக்கத்திலே உணர்ந்தவனின் இதழ்களில் மெல்லிய குறுநகை எழுந்தது. அதை இருவருமே உணராமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள்.
இந்த பக்கம் சத்தமே இல்லாமல் ஜெயந்தி பல்லவியை தேட ஆரம்பிக்க மூர்த்திக்கு அவ்வளவு கோவம் வந்தது.
“இதுக்கு தான் சொன்னேன்... அவளை ரொம்ப புழிஞ்சி எடுக்காதன்னு. சொன்னா கேட்டியா? இப்போ நமக்கிட்ட சொல்லாம எங்கையோ ஓடிப் போயிட்டா. இப்ப உனக்கு ரொம்ப சந்தோசமா? இருக்குறதை வச்சு மகிழ கத்துக்கனு உனக்கு எத்தனையோ முறை சொல்லிட்டேன். ஆனா நீ கேட்கவே மாட்டிக்கிற ஜெயந்தி” என்று முறைத்தார் மூர்த்தி.
“எல்லாம் எனக்கு தெரியும். நீங்க உங்க வேலையை பாருங்க” என்று அவரை முறைத்து விட்டு மகாவுக்கு போனை போட்டார்.
“இன்னைக்கு அந்த தொண்டைமான் டான்ஸ் ஆட கூப்பிட்டு இருந்தாரு ம்ம்மா. அங்க தான் போயிருப்பா. நீங்க அங்க கேளுங்க” என்றவள் வைத்து விட்டாள்.
அந்த நேரத்துக்கு காரை எடுத்துக்கொண்டு தொண்டமானின் இடத்துக்கு வந்தார் கொஞ்சமும் பயமில்லாமல்.
அங்கே வந்து விசாரிக்க,
“அப்படி எந்த பொண்ணும் வரல... நீ போகலாம்” என்று தொண்டைமானின் தம்பி வலது கை என இருக்கும் சேரன் சொன்னான்.
“இல்ல தம்பி நீங்க உள்ள நல்லா தேடி பாருங்களேன்” என்று ஜெயந்தி விடாமல் நிற்க,
சேரன் தன் பின் புற இடுப்பில் இருந்து கன்னை எடுத்து அவரின் முகத்துக்கு நேராக நீட்ட விதிர் விதிர்த்துப் போய் விட்டார்.
“என்ன தம்பி பொசுக்குன்னு கன்னை தூக்கிட்டீங்க? இல்லன்னு சொன்னா கேட்டுக்கப் போறேன். அதுக்கெதுக்கு இப்படி துப்பாக்கியை தூக்குறீங்க? அதுக்கெல்லாம் அவசியமே இல்லை” என்று பம்மியவர் வேகமாய் காரில் ஏறி வீட்டுக்கே போய் விட்டார். உயிர் மேல அவ்வளவு பயம் இருந்தது அவருக்கு.
“இனி யார் வந்து கேட்டாலும் இதையே சொல்லுங்க டா” என்று மற்றவர்களுக்கு கட்டளை போட்டவன் தூங்கிப் போனான்.
“எங்க அண்ணனே இன்னைக்கு தான் நிம்மதியா தூங்குறாரு. அதை கெடுக்க வந்தா சும்மா விட்டுடுவனா?” என்று கொக்கரித்தவனுக்கு தொண்டைமானின் மீது அவ்வளவு மரியாதையும் பாசமும் இருந்தது. சிறு வயதில் இருந்து அவனுடனே வைத்து வளர்த்து இருந்தான் இவனை.அதனால் அந்த நன்றி எப்பொழுதும் அவனுக்கு இருந்தது.
ஐந்து மணி நேரம் எந்த கவலையும் இல்லாமல் தூங்கி எழுந்தவள் தன்னை கட்டிக்கொண்டு படுத்து இருந்த தொண்டைமானை பார்த்து ‘வீல்’ என்று கத்தினாள் பல்லவி.
அவளது கத்தலில் காதை குடைந்துக் கொண்டே அவளை இழுத்து மீண்டும் கட்டிக் கொண்டவன் விட்ட தூக்கத்தை தொடர்ந்தான் தொண்டைமான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
--
S.Rami
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தொண்டைமான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் மீண்டும் கட்டிக் கொண்டு தூங்குவதை பார்த்து அதிர்ந்துப் போனவளுக்கு அப்பொழுது தான் நினைவுக்கே வந்தது. அவன் டான்ஸ் ஆட சொன்னது, பிறகு அவனது உடலுக்கு மசாஜ் மாதிரி செய்ய சொன்னது. தானும் அவனது மடியிலே அமர்ந்து அவனது நெஞ்சை நீவி விட்டது என எல்லாமே வரிசையாக வந்தது.

அவன் மடியில் அமர்ந்த வாக்கிலே அவன் மீதே தூங்கி விழுந்து இருக்கிறோம் என்று புரிந்துப் போனது.தன் மடத்தனத்தை நொந்துக் கொண்டு இருக்கும் பொழுதே அவளின் கழுத்தில் முகம் புதைத்து அவளின் வாசனையை மோப்பம் பிடித்தான் தொண்டைமான்.
அவனது அடர்ந்த தாடியும் மீசையும் அவளின் கழுத்தில் அழுந்தி பதிய அவளுள் சொல்லொண்ணாத பல உணர்வுகள் வெடித்து கிளம்பியது.

“இது என்னடா புது அவஸ்த்தையா இருக்கு...” நொந்துக் கொண்டவளின் மெல்லிய இடையை இன்னும் இறுக்கிப் பிடித்தான். அதில் கலவரமானவள்,

“அச்சோ என்ன பண்றீங்க நீங்க? முதல்ல எழுந்திரிங்க என் மேல இருந்து.. இவ்வளவு நேரம் உங்களை கட்டிப்பிடிச்சு தான் தூங்கிட்டு இருந்தேனா.. அது என் டெடி இல்லையா?” என்று கவலைப்பட்டாள்.

“இல்ல அதுக்கு இப்ப என்னங்கற?” என்று அமர்த்தலாக கேட்டான் தொண்டைமான்.

“என்ன நீங்க இப்படி பொசுக்குன்னு சொல்றீங்க. என் கற்பு என்ன ஆகிறது.. எனக்கு வேற இன்னும் ஒரு முறை கூட கல்யாணமே ஆகல தெரியுமா. யாரோ முன் பின் தெரியாத ஒரு ஆணை கட்டி புடிச்சிட்டு தூங்குறது எல்லாம் பொம்பள பிள்ளைக்கு அழகா சொல்லுங்க” என்று கேட்டுக்கொண்டே அவனது பிடியிலிருந்து நழுவ பார்த்தாள்.

ஆனால் தொண்டைமான் அவளை விடவே இல்லை. மீண்டும் தன் மீது இழுத்து தூக்கி போட்டுக் கொண்டான்.

“ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? நான் போகணும். நேரம் ஆச்சு” என்ற படியே கண்களை சுழல விட்டு அங்கு மாட்டி இருந்த கடிகாரத்தை பார்த்தாள். அப்பொழுது தான் நேரம் கண்ணில் பட்டது.

“என்ன இது இவ்வளவு நேரமா தூங்கிருக்கேன்? மணி ராத்திரி ரெண்டு மணி ஆகுது. போச்சு போச்சு எங்க அம்மா என்னை திட்ட போறாங்க. ஏற்கனவே ஏகப்பட்ட கமிட்மென்ட்டோட சுத்திட்டு இருக்குறேன் நானு. இப்ப ரெண்டு கமிட்மெண்ட் கை விட்டு போச்சு.. ரெண்டு சேலரி போச்சுன்னா அம்மா என்னை ரொம்ப திட்டுவாங்க” என்று பல்லவி பாட்டுக்கு புலம்பி கொண்டு இருந்தாள்.

“ஏய் சும்மா காதுகிட்ட இருந்து நொய் நொய்யின்னு கத்திட்டு இருக்காதடி. முதல்ல வாய கொற. வாய மூடுடி” என்று தொண்டைமான் முறைக்க,

“உங்களுக்கு என்ன அசால்ட்டா போச்சு. நான்ல எங்க அம்மா கிட்ட அடி வாங்குவேன். திட்டு வாங்குவேன்” என்று அவளது கண்கள் கலங்கிப்போனது.

“இதுக்கு ஏன் இவ்வளவு ட்ராம பண்ற?” என்று அவன் கேட்க,

“ஏது டிராமாவா?” என்று அவனை முறைத்தவள், “உங்களுக்கு தெரியாது எங்க அம்மாவ பத்தி. சொன்னா சொன்ன கமிட்மெண்டை ஒத்துக்கிட்டு செய்யணும். அப்படி செய்யலன்னா அவ்வளவு தான் அவங்களுக்கு ரொம்ப கோவம் வரும். கண்டபடி பேசுவாங்க” என்று அவள் வேதனை பட்டாள்.

“சரி விடு என்னைக்காவது ஒருநாள் உடம்பு சரியில்லாமல் போனா லீவ் எடுத்துக்குற மாதிரி இன்னைக்கு நினைச்சுக்க வேண்டியது தானே. தூங்குறதுக்கு கூடவா கணக்கு பார்ப்பாங்க” என்றான் தொண்டைமான்.

“உங்களுக்கு என்ன தெரியும் நான் காய்ச்சலா இருந்தா கூட நடிக்க போயிருக்கேன் தெரியுமா? ஊசி மாத்திரியை போட்டுனடிக்க போயே ஆகணும். என் வாழ்க்கையில நான் நிம்மதியா தூங்குனது இன்னைக்கு ஒரு நாள் தான். சேர்ந்த மாதிரி ஐந்து மணி நேரம் தூங்கிருக்கேன். இதுநாள் வரையிலும் ஒரு மணி நேரமோ ப்ரேக் டைம்ல கிடைக்குற அரை மணி நேரமோ அப்படித்தான் நான் தூங்கிருக்கேன்” என்று தன்னையும் மீறி தன் வாழ்வில் இருந்த சோகங்களை எல்லாம் அவனுடன் அவளுக்கு தெரியாமலே பகிர்ந்து கொண்டாள்.

தொண்டைமான் அவளையே பார்த்தான்.

“சரி இதுக்கு மேலயும் நான் டிலே பண்ணா நல்லா இருக்காது. நான் கிளம்புறேன் சார்... ப்ளீஸ்” என்று தன் மீதிருந்த அவனது கையையும் காலையும் விலக்கி விட்டுட்டு அவனது முகத்தையும் தன் மீது இருந்து நகர்த்தி விட்டுட்டு பல்லவி கிளம்பினாள்.

அவன் கொடுத்த மாடன் உடையை களைந்து விட்டு புடவையை கட்டிக்கொண்டு வெளியே வர, தொண்டைமான் துப்பாக்கியுடன் நின்று இருந்தான். அதை பார்த்து பயந்தவள்,

“மறுபடியும் சுட போறீங்களா?” என்று அவள் பயந்துக் கொண்டே கேட்டாள்.
அவளது பயத்தை பார்த்தவன்,

“இல்லல்ல வா நானே உன்னை கொண்டு வந்து உன் வீட்டில் விடுகிறேன்” என்றவன் அவளை தன்னுடைய காரில் அழைத்துக் கொண்டு சென்று அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு வந்தான்.

“என்னடா ஆச்சு உனக்கு? நீ பெரிய ரவுடி டா.. இந்த ஊரே இந்த சிட்டியை உன்ன பாத்தா அப்படி பயப்படும். ஆனா நீ ஒரு பொண்ணுக்கு காவலா அவளை கொண்டு போய் வீட்ல விட்டுட்டு டிரைவர் வேலை பார்த்துட்டு வந்து இருக்க. அவ சொன்ன கலர்கலர் கதையை காது குடுத்து கேட்டுட்டு இருக்க.. இது நீயல்லடா தொண்டைமான். உனக்கு என்னவோ ஆச்சு” என்று அவனது மனசாட்சியே அவனை கேலி செய்தது.

அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய படுக்கையில் போய் விழுந்தான். அந்த படுக்கையில் பெண்ணவளின் வாசம் இன்னும் வீசுவது போலவே தோன்றியது. அவள் தலை வைத்திருந்த தலையணையை முகர்ந்து பார்த்தான். அதில் அவளது வாசம் இன்னும் அதிகமாக வீசியது போல தோன்றியது. அதை எடுத்து இறுக கட்டிக் கொண்டு படுத்து விட்டான்.

அப்போது தான் அவனது சிந்தனையில் நாளைக்கு யாரோடையோ தியேட்டர் போற போலையே என்று தன் முரட்டு இதழ்களை கடித்துக் கொண்டான். அவனால் அவளை வேறு யாரோடும் இணைத்து பார்க்க முடியவில்லை.

“சேரா” என்று தன் தம்பியை கூப்பிட்டான் அர்த்த ராத்திரியில். “அண்ணா” என்று வந்து நின்றான் அவன் அந்த நேரத்திலும்.

அவனது காதில் ஏதோ சொன்னான் தொண்டைமான்.

“சரிண்ணா நான் பாத்துக்குறேன். நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று அவனுக்கு உறுதிமொழி கொடுத்தவன் தன் அண்ணனுக்காக சிலபல வேலைகளை பார்த்தான் சேரன்.

அடுத்த நாள் மாலை நேரம் தியேட்டர் போக பல்லவி ரெடியாகிக் கொண்டிருந்தாள் அம்மாவுக்கு தெரியாமல். ஜெயந்திக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கிளம்ப எண்ணினாள். அதற்குள் சஞ்சு “கிளம்பிட்டியா?” என்று அவளுக்கு போன் பண்ணினான்.

“இதோடா ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு. நான் அம்மாகிட்ட ஏதாவது காரணம் சொல்லிட்டு வந்துடறேன்” என்று சாக்கு போக்கு சொல்லிவிட்டு அன்னையின் கண்களில் மண்ணை தூவி விட்டு தியேட்டருக்கு ஓடி வந்து விட்டாள் யாருக்கும் தெரியாமல்.

தியேட்டர் இருளில் மூழ்கி இருந்தது. இருவரும் அருகருகே உட்கார்ந்து இருந்த நேரம் அவளுக்கு மிக அருகில் இன்னொரு உருவம் வந்து அமர்ந்தது வலப்பக்கமாக. அதை முதலில் கண்டு கொள்ளாதவள் அவளது கைகளை இறுகப்பற்றிய உடன் திடுக்கிட்டு போனாள் பல்லவி.

“யாருடா அது எவ்வளவு உரிமையா என் கைய புடிக்கிறது” அப்படின்னு படத்தில் இருந்த கவனத்தை திருப்பி தன் அருகில் இருந்தவனை பார்த்தாள் பல்லவி. அங்கு இருக்கையை முழுமையாக தன் உருவத்தால் நிறைத்தபடி தொண்டைமான் அமர்ந்திருக்க அவள் விக்கிது போனாள்.

“இங்க என்ன பண்றார்?” என்று அதிர்ந்து போனாள்.
--
S.Rami
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“யாருடா அது எவ்வளவு உரிமையா என் கைய புடிக்கிறது” அப்படின்னு படத்தில் இருந்த கவனத்தை திருப்பி தன் அருகில் இருந்தவனை பார்த்தாள் பல்லவி. அங்கு இருக்கையை முழுமையாக தன் உருவத்தால் நிறைத்தபடி தொண்டைமான் அமர்ந்திருக்க அவள் விக்கிது போனாள்.

“இங்க என்ன பண்றார்?” என்று அதிர்ந்து போனாள்.

“ஹலோ சார் இங்க என்ன பண்றீங்க? எதுக்காக என் கையை பிடித்து இருக்கீங்க.. முதல்ல கையை விடுங்க” என்று அவனிடம் எகிறினாள்.

அவளை நக்கலாக பார்த்துக் கொண்டே “என்ன உன் அம்மாவுக்கு தெரியாம ஊர் சுத்தற போல? உங்க அம்மாவுக்கு போன் போட்டு சொல்லவா?” என்று நக்கல் பண்ணினான்.

“அது எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று பயந்து போனவள்,
“இங்க பாருங்க இப்படி எல்லாம் ப்ளாக் மெயில் பண்ண கூடாது சொல்லிட்டேன்...” என்று பம்மினாள்.

“எனக்கு எப்படியோ தெரியும்... அதை பத்தி உனக்கு என்ன?” என்றவன் அவளின் காதோரம் சரிந்து தன் மீசை முடி உரச, “ஆமா நீ தியேட்டர் வந்ததை உங்க அம்மா கிட்ட போட்டு கொடுக்கவா? என்று பிளாக்மெயில் பண்ணினான் தொண்டைமான். அதில் கோவம் கொண்டவளுக்கு சுல்லேன்று வந்தது.

“என்ன இது எப்ப பாரு எல்லாரும் எங்க அம்மா வச்சே பிளாக் மெயில் பண்ணிட்டு இருக்கீங்க? நான் எங்க அம்மாவுக்கு பயப்படுவேன். ஆனா அதுக்காக இப்படி எல்லாம் கிடையாது” என்று அவள் சிணுங்க அவளது சினுங்களை பார்த்துக் கொண்டிருந்தவன் சஞ்சு அவர்களின் புறம் திரும்ப, சட்டென்று சேரன் அவனது அந்தப் பக்கம் இருந்து அவனது கவனத்தை தன் புறம் திருப்பிக் கொண்டான்.

அதன் பிறகு சஞ்சு அவளிடம் பேச முடியாமல் போனது. சேரன் அந்த அளவு சஞ்சுவை கவனித்துவிட்டான். தொண்டைமான் பல்லவியோட அமர்ந்து முழு சினிமாவையும் பார்த்துவிட்டு எழுந்தான்.

அது வரை அவனது கையில் சிறையிருந்த பல்லவியின் கை விடுதலை ஆனது.
“மாவு கட்டு போடுற அளவுக்கு கொண்டு வந்துட்டான் ரவுடி... ச்சை இப்படியா பிடிப்பாங்க கையை...” என்று நொந்துப் போனாள்.

அவனது மீசை மறுபடியும் அவளின் கதை உரசியது. பெண்ணவளின் முதுகு தண்டில் ஆயிரம் மின்னல் வெட்டிப் போனது பயத்தில். “இனி சினிமா போறதுன்னா என்னை மட்டும் கூப்பிடுற...! அதையும் மீறி யாரோடவவாது போனான்னு கேள்விப்பட்டேன்” என்று துப்பாக்கியை தூக்கி அவளிடம் காட்டியவன் “நான் பேச மாட்டேன். இது தான் பேசும்” பயம் காட்டி விட்டு வெளியே கிளம்பி விட்டான். அதன் பிறகு தான் மூச்சு வந்தது பல்லவிக்கு.

“இந்த ரவுடிக்கு என்ன ஆச்சு? எதுக்காக இப்படி எல்லாம் என்கிட்ட நடந்துக்கணும்? ஒன்னும் புரியலையே.. யார் கூப்பிட்டா இந்த ரவுடிய” என்று தனக்குள் புலம்பி கொண்டவள்,

“சஞ்சு என்னடா இது? அவன் பாட்டுக்கு வந்தான். போறான். என்னடா நடக்குது இங்க? நீ எதுவும் அவனை கூப்பிட்டியா?” என்று சஞ்சுவிடம் புலம்பினாள்.

“எனக்கும் ஒன்னும் புரியல பல்லவி. அசால்ட்டா துப்பாக்கியை காட்டுறானுங்க. கத்த கூட முடியல... இந்த விசயம் வெளிய தெரியக் கூடாதாம். மிரட்டிட்டு போறானுங்க..” என்று நொந்துக் கொண்டவன்,

“பாத்துக்கலாம் விடு” என்றவன், “சரி அடுத்து என்ன ப்ரோக்ரம்” என்று கேட்டான்.

“அடுத்து என்ன இந்த மூணு மணி நேரத்துக்கே எங்க அம்மா கிட்ட என்னென்ன கதை சொன்னேன்றதே எனக்கு மறந்து போச்சு. அதனால நான் ஒழுங்கா கிளம்புறேன். வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு ஆட் ஒன்னு இருக்கு. அந்த ஷூட்டிங் முடிச்சிட்டு தான் போகணும். இல்லன்னா ஜெயந்தியை சமாளிக்க முடியாது” என்றாள்.

“அப்படியா சரி ஓகே” என்று அவன் அவ்விடத்தில் இருந்தே விடை பெற்றுக்கொண்டான். தன்னுடைய காரில் ஏறி அமர்ந்தவள் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றாள். நேற்றைக்கு கேன்சல் ஆன ஷூட்டிங் ஒன்று இன்றைக்கு படம் பிடிக்கப்பட்டது. அதே போல அவளது அம்மாவும் சரியான நேரத்திற்கு அந்த ஷூட்டிங் வந்து விட அதன் பிறகு ஜெயந்தியோடு அவளது நேரங்கள் இடைவிடாமல் வேலையிலே மூழ்கிப்போனது.

“ஆமா நேத்திக்கு எங்க போயிருந்த?” என்று கேள்வி கேட்டார் ஜெயந்தி. பார்வை மொத்தமும் அவளை துளைத்து எடுத்தது. இடைவேளை நேரத்தில் தான் இந்த கேள்வியை கேட்டார். இன்று காலையிலிருந்து அவரால் அவளிடம் பேச முடியவில்லை. சரமாரியாக வேலை இருந்த வண்ணமாகவே இருந்ததால் அவளிடம் பேசவே முடியவில்லை அவரால். இப்பொழுது இந்த நேரம் கிடைத்திருப்பதால் அவளிடம் கேட்டார் ஜெயந்தி.

“இல்லம்மா நேத்திக்கு அந்த ரவுடி சார் ரொம்ப நேரமா ஆட சொல்லிட்டாங்க. அதனால தான்” என்றாள் அவள்.

“என்ன சொல்ற நான் வந்தேனே அந்த இடத்துக்கு? நீ இல்லன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்கா” என்றார்.

“எப்பம்மா வந்தீங்க? எனக்கு தெரியாதே” என்றாள் பாவமாய்.

“நேத்திக்கு நைட் ஷூட் இருக்குன்னு சொன்னேன் இல்லையா? நீ வராததுனால எனக்கு போன் பண்ணாங்க. அப்போ தான் நீ ஷூட்க்கு போகாததே தெரிந்தது. மகா கிட்டா கேட்டு உன்னை அங்க தேடி வந்தேன். வந்தா அந்த ரவுடி நீ இல்ல அப்படின்னு சொல்லி என்னை தொரத்தி விட்டுட்டான். எடுத்தவுடனே கன்னை வேற காட்டிட்டான் படுபாவி. நான் ரொம்ப பயந்துட்டேன்..” என்று நேற்று நடந்ததை சொன்னவர்,

“இனி அந்த ஆளோட பழக்கம் வச்சுக்காத. எதா இருந்தாலும் இப்பவே விட்டுடு” என்றார் ஜெயந்தி.

“சரிங்கமா நீங்க சொல்றதும் சரிதான்மா. இனிமேட்டுக்கு நான் அங்க போகவே மாட்டேன். நீங்க தான் அம்மா காப்பாத்தணும்” என்று தன் தாயை சரணாகதி அடைந்து விட்டாள் பல்லவி.

தன் எதிர்காலமே தொண்டைமான் என்று தெரியாமல் அப்பொழுதே அவனை வெட்டி விட முயற்சி செய்தாள் பெண்.

‘ஜெயந்திக்கு உள்ளுக்குள் பெருமகிழ்ச்சி நல்ல வேலைக்கு என் பொண்ண அது இதுன்னு எதுவும் இல்லாம இருக்கிறாளே அது வரையில சந்தோசம்’ என்று மகிழ்ச்சி கொண்டவர் அதன் பிறகு மகாவிடம் சொல்லி ரவுடி தொண்டைமானுக்கு நடனமாட இனி என் பெண் வரமாட்டா என்பதை தெளிவாக சொல்லிவிட்டார். ஆனால் தொண்டைமான் அதற்கெல்லாம் விடுவானா என்ன... அடுத்த நாளே வீடு புகுந்து அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு தன்னிடத்திற்கு சென்று விட்டான்.

“சார் இதெல்லாம் ரொம்ப அராஜகம். அவளுக்கு தான் வர பிடிக்கல, ஆட புடிக்கலல்ல.. நீங்க ஏன் அவளை கம்பெல் பண்றிங்க?” என்று கேட்ட ஜெயந்தி தான் அவளுக்காக போராடிக் கொண்டிருந்தார். அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல தொண்டைமான் முகத்தை பார்ப்பதும் ஜெயந்தியின் முகத்தை பார்ப்பதுமாக இருந்தாள். அவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தாலும் நேற்றைக்கு அவன் தன்னைத் தூங்க விட்டதிலேயே கொஞ்சம் அவளது மனம் இளகி இருந்தது.

‘அங்கப்போனா நல்லா தூங்கலாம் போலவே’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள். ஆனாலும் வெளியே எதையும் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்துக் கொண்டாள்.

தாயிடம் தனக்கு விருப்பமில்லை என்பதேயே பறை சாற்றி கொண்டாள். இல்லை என்றால் ஜெயந்தி அவளை பேசும் வார்த்தை கொஞ்ச நஞ்சம் இருக்காது. அதனாலே விருப்பம் இல்லாததை போலவே காண்பித்துக் கொண்டாள்.

ஆனால் தொண்டைமான் எதையும் காதல் வாங்கிக் கொள்ளாமல், “எனக்கு அவ வேணும் அவ்வளவு தான். இப்போதைக்கு டான்ஸ் ஆட மட்டும் தான் கூட்டிட்டு போறேன். நீ ஓவரா பண்ணிட்டு இருந்தா அவளை வேற எல்லாத்துக்கும் நான் யூஸ் பண்ண வேண்டியது வரும். அதனால கவனமா இரு என்கிட்டே. அப்புறம் உன் தங்க முட்டை இடும் வாத்து மொத்தமா உன்னை விட்டு போயிடும்” என்று ஜெயந்தியை மிகவும் மிரட்டி விட்டு பல்லவியை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு போய்விட்டான் தொண்டைமான்.

விக்கித்துப் போய் விட்டார் ஜெயந்தி..
--
S.Rami
 
Status
Not open for further replies.
Top