All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

teaser

Status
Not open for further replies.

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் மண்டைக்குள் உக்காந்து ரொம்ப நாளா டிஸ்டர்ப் பன்றான் ... அவனின் பெயர் முகிலன் .
உற்றார் உறவினர் பார்த்து செய்து வைத்த திருமணத்தில் வரும் இன்னல்களும் துன்பங்களும் இன்பமும் ... இது தான் இந்த கதை .

முகிலன்
குடும்பத்தின்(தாய் மற்றும் தங்கை ) மீது அன்பு , பாசம் , நேசம் உயிர் என அனைத்தையும் அளவில்லாமல் வைத்திருப்பவன் . அவன் ஒரு நவ நாகரிக கிராமத்து இளைஞன் . (அதாகப்பட்டது மஹா ஜனங்களே அவன் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே விவசாயத்தை உயிர் மூச்சாக நேசித்து பார்ப்பவன் .. அதை தான் நவ நாகரிக கிராமத்து இளைஞன் என்று சொன்னேன் ).

ஒரு குட்டி டீ அத்துறேன் நல்லா இருந்தா கருத்தை சொல்லுங்கோ நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் இவர் உங்களை சந்திப்பார் .

கதையின் பெயர் : நான் இன்னும் அதை யோசிக்கனும்

முன்னோட்டம் :

அந்த மதி பேஷன்ஸ் ஆடை மாளிகையில் ஐந்து அடுக்குகள் . அதன் உரிமையாளர் மதிவதனி .

அங்கு ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்தாள் ஸ்வேதா . அவள் நேராக ஆண்கள் சட்டை பிரிவில் சென்று மும்முரமாக தேர்வு செய்து கொண்டு இருந்தாள் . ஆண்களின் ஆடைகளும் அங்கு கொட்டி கிடக்கும்.

அப்பொழுது அவனின் உயரத்தில் அந்த தளத்தை சிறியதாக காட்டும் அளவுக்கு அசாத்திய உயரத்துடன் உள்ளே வந்தான் முகிலன் . முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் ஸ்வேதாவின் அருகில் சென்று காதில் எதோ கூறினான் . அவள் முழித்த முழியில் மீண்டும் குனிந்து எதோ கூறினான் சிரித்துக்கொண்டே செல்லமாக அவன் தோளில் ஒன்று வைத்தாள் ஸ்வேதா .

அப்பொழுது அங்கே வந்த மதிவதனி அந்த தளத்தின் மேலாளரிடம் எதையோ கேட்டுக்கொண்டு இருந்தாள் . "ஹாய் மதி " என்ற குரலில் திரும்பி அங்கு நின்றிருந்த பெண்ணை தெரியாத பார்வை பார்த்தாள் .

அந்த பெண்ணின் பின் வந்து நின்றவனை அறியாத பார்வை பார்த்தாள் . அந்த ஸ்வேதா தானாக முன் வந்து "இது உங்க கடையா இப்பதான் முகில் சொன்னான் ... சுபெர்ப் கலெக்ஷன் ..ஆண்களுக்கும் சூப்பரா இருக்கு " என்று படபடத்தால் ஸ்வேதா .

இதழ் பிரியாத புன்னகையை உதிர்த்த மதிவதனி முன்னே நகர முற்பட்டாள் அவளை தடுத்த ஸ்வேதா "ஆம் ஸ்வேதா முகிலின் பியான்ஸ் . எங்களுக்கு இன்னும் 2 மந்த்ஸ்ல கல்யாணம் . சோ பர்சைஸ் . நீங்க ? " என்றாள் கேள்வியாக .

அவள் சொன்ன செய்தியில் ஒரு நொடி பார்வையை முகிலின் பக்கம் செலுத்தி மீண்டும் அவளை பார்த்து "ஆம் மதிவதனி " என்று மட்டும் கூறினாள் .

"மிஸஸ் மதிவதனி...... ? " என்று கேள்வியாக கேட்ட ஸ்வேதாவை எரிக்கும் பார்வை பார்த்து "ஆம் ஜஸ்ட் மதிவதனி " என்று கூறி நிற்காமல் அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .

............................................................................................

"ஏங்க உங்க தங்கச்சிக்கு வேற வேலையே இல்லையா எப்ப பார்த்தாலும் உங்களோட மல்லுக்கே நிக்கிறா ... உங்க தங்கச்சி மதி படிச்சது தைக்கிறது ஒற்றது பத்தி எதுக்கு தேவை இல்லாம சம்பந்தமே இல்லாத பேக்டரியை உங்களுக்கு போட்டியா ஆரம்பிச்சு நம்மள கஷ்ட படுத்தறா ?? " என்று கோவமாக கேட்டுக்கொண்டிருக்கும் தனது மனையாள் லக்ஷ்மியை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான் ரகு .

"அவளுக்கு திறமை இருக்கு பேக்டரி நடத்துறா இதுல உனக்கு என்ன வந்துச்சு ? " ரகுவும் நக்கலாகவே கேட்டான் .

"எங்க அண்ணன் முகில் இப்ப நமக்கு பணம் தரமாட்டான் . நீங்க என் நகை எல்லாத்தையும் அடகு வைக்க கேக்கறீங்க எனக்கு கோவம் வராம என்ன செய்யும் ... ? " என்று ஆத்திரத்துடன் கேட்டாள் லட்சுமி .

"இதற்கெல்லாம் யார் காரணம் லட்சுமி ? " என்று ஆழமான குரலில் கேட்டான் ரகு .

............................................................

"கணம் நீதிபதி அவர்களே எனது கட்சிக்காரர் மதிவதனி விவாகரத்து பெறுவதில் உறுதியாக உள்ளார் ." என்றார் அந்த வக்கீல் .

"எதாவது நியாயமான காரணங்கள் இருக்கா " என்று கேட்டார் நீதிபதி .

"இருக்கு இவரின் கணவர் அவர்களின் வீட்டு பெண்ணனிற்கு பிள்ளை இல்லை என்ற காரணத்தினால் நம்பி வந்த பெண்ணான இவரை கருவுற்ற சமயம் மாத்திரை கொடுத்து அந்த சிசுவை இந்த உலகத்தை காணாமல் அளித்துவிட்டார் அதும் எனது கட்சிக்காரரின் சம்மதம் இல்லாமல் .., மேலும் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகாலமாக ஒன்றாக இல்லை பிரிந்து இருக்கிறார்கள் . ஆகையால் இந்த கல்யாணம் நியாயமாக செல்லாது விவாகரத்து பெறுவதில் பெரிதாக எந்த பிரச்னையும் இருக்காது என்பதை முன்னிறுத்துகிறேன் யுவர் ஹானர் " என்றார் அந்த வக்கீல் .

மதிவதனி துட்சமான பார்வையை அவன் மீது செலுத்தினாள் . அவனோ 'உன்னை விடமாட்டேன் டி என்னையும் என் குடும்பத்தையும் நீதிமன்றம் வரைக்கும் வர வச்சுட்டாள தி ரியல் கேம் ஸ்டார்ட் நொவ் ' என்று மனதில் கூறிக்கொண்டு உஷ்ணமான பார்வையை அவள் மீது செலுத்தினான் .

அந்த கொளுத்தும் வெயிலிலும் அவனின் பார்வையின் உஷ்ணம் தாங்காமல் சூரியன் தனது கரங்களை மேகத்தின் நடுவே மறைத்துக்கொண்டது .
 
Status
Not open for further replies.
Top