All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

New teaser

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்..

அடுத்தக் கதைக்கான முன்னோட்டத்துடன் வந்துவிட்டேன்.ஜூலையிலிருந்து கதைக்கான அத்தியாங்கள் பதிவிடப்படும்.

தலைப்பு- இருள் துகளில் உன் பிம்பம்..!!

ஏற்கனவே ஒரு டீஸர் போட்ருக்கேன்.கதை போக்கில் டீசரில் மாற்றம் ஏற்படலாம்.

டீஸர்-2

"அரசியல்வாதி மட்டும் அல்லாது இந்த கல்லூரியின் முன்னால் மாணவியான அமைச்சர் கோப்பெருந்தேவி அவர்களை நமது கல்லூரியின் பொன் விழா கொண்டாட்டாத்திற்குச் சிறப்பு விருந்தினராக வரவேற்பதில் பெருமை கொள்கிறது நமது கல்லூரி"என்று அக்கல்லூரியின் முதல்வர் உரையாற்ற.. மேடையின் கீழ் ஓரமாக நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் இகழ்சியாய் வளைந்தது.

"இப்போது அமைச்சர் கோப்பெருந்தேவி அவர்களுக்கு நமது கல்லூரியின் பேராசிரியை.." என்று முதல்வர் பேசிக்கொண்டிருக்கும் போது, தனது காரிய தரிசியிடம் கண்ணை காண்பித்தாள்.. அதை புரிந்து கொண்ட அவரும்.. பேசிக் கொண்டிருந்தவரின் காதில் ஏதோ சொல்ல.. அதற்கு சம்மதமாக தலை அசைத்து விட்டு.. "நமது பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் பொன்னாடை போற்றி வரவேற்பார்"என்று மொழிய..

அவனது முகமோ அதிர்ச்சியை வெளிப்படுத்தி விட்டு மேடையில் அமர்ந்திருந்தவளை பார்த்து முறைத்தான்.அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் போலும்.. அவன் முறைப்பை எல்லாம் புறம் தள்ளியவள்.. அவனை பார்த்து புருவத்தை உயர்த்தி எப்படி என்பது போல் கெத்தாகச் சிரித்து வைத்தாள்.

முதல்வரே அழைத்த பிறகு எதுவும் செய்ய முடியாத நிலையில் மேடையை நோக்கி சென்றவன்..பொன்னாடையை கையில் வாங்கிக் கொண்டு.. அவள் அருகில் சென்று முகத்தை பார்க்காமல் கையில் கொடுக்க.. அதை வாங்காதவள்..

"ப்ரொபெஸர்க்கு போர்த்தி விட கை எட்டாதோ.. உங்களால் இப்போ எதுவும் செய்ய முடியாது. சீன் கிரியேட் பண்ணாமல் ஒழுங்கா போர்த்தி விடுங்க" மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்குமாறு கூறினாள்.

எதுவும் செய்ய முடியாத நிலையில் பல்லை கடித்தவன்.. இருக்கும் இடம் கருதி அவளுக்கு போர்த்தி விட்டு கைகளை குவித்து வணக்கம் வைத்தான்."அரசியல் வாதி முன்னாடி என் கை உயரவே உயராதுன்னு சொன்னிங்க.. இப்போ எப்படி வணக்கம் வைக்க வச்சேன் பார்த்திங்களா..?" அவனை சீண்டினாள்.

அவள் வேண்டுமென்றே தன்னை சீண்டி பார்க்கிறாள் என்பதை உணர்ந்தவன்.. அவளுக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

"சரியான பாறை அசைக்க முடியாதே..!"என முணுமுணுத்தாள்.கலை நிகழ்ச்சி ஆரம்பமாக, சிறிது நேரம் கவனித்தவளின் மனமும்,கண்களும் அதில் இலயிக்காமல் செழியனை கொத்தி செல்லும் பருந்தாக அவனை வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

அவளது பார்வையை உணர்ந்தவன்.. அங்கு இருக்க பிடிக்காமல் வெளியே சென்று விட்டான்.அவன் சென்றதும் அவளும் பாதுகாவலர்களைத் தவிர்த்து விட்டு அவனை தொடர்ந்து சென்றாள்.

செழியன் ஒரு மரத்தடியில் நின்று கோபத்தை குறைப்பதற்காக சிகிரெட்டை புகைத்துக் கொண்டிருந்தான். அங்கு சென்றவள்.. அவன் கையிலிருந்து சிகிரெட்டை பிடிங்கி கீழே போட..

"ஏய்..! அறிவிருக்கா உனக்கு..?"அவளை பார்த்து காந்தினான்.

"உங்களுக்கு முதலில் இருக்கா..? கேம்பஸ்குள்ள சிகரெட் பிடிக்கலாமா..? உங்க பசங்களுக்கு இதைத்தான் சொல்லி தரீங்களா..? உங்கள் ஹெல்த்க்கு இது நல்லதா..?" சீட்டு கட்டு போன்று கேள்விகளை அடுக்கினாள்.

"அதை பத்தி உனக்கு என்ன வந்தது.. முதலில் இங்கிருந்து போ மனுஷனை டென்ஷன் படுத்திகிட்டு.. அதான் உன் ஆசை நிறைவேறிருச்சே அப்புறம் என்ன..? ஓ..! நான் சொன்ன மாதிரி உன்னை பண்ண வச்சேன்.. எப்படின்னு குத்திக் காட்ட வந்தியா..?"என்றான் கேலிக் குரலில்.

"ஆமாம் அப்படி தான்னு வச்சுக்கோங்க.. இல்லைன்னு சொன்னால் நம்பவா போறீங்க..? உங்களுடைய எண்ணத்தை மாத்த முடியாது. என்னோட பழைய செழியன் நீங்க இல்லை. எப்போதான் என்னை புரிஞ்சுக்குவீங்க..?" விரக்தியாகக் கேட்க..

"நான் ஏன் உங்களை புரிஞ்சுக்கணும் அமைச்சர் மேடம்."என்று பதிலுக்கு அவனும் சொல்ல..

"நீங்க புரிஞ்சுக்கலைன்னா வேற யார் என்னை புரிஞ்சுக்குவாங்க..?"

"எனக்கு பிடிக்கலைன்னாலும்.. உன்னோட சூழ்நிலையை கருதி இந்த அரசியலை ஏத்துக்கிட்டேன்.. எல்லாம் உனக்காக மட்டும்.. ஆனால், அன்னைக்கு.."அன்றைய கொடூரத்தின் தாக்கம் இன்றும் கண் முன் நிழலாட.. கண்கள் மூடி திறந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்..

"உறவுகள் இல்லாதவனுக்கு தாண்டி உறவுகளோட அருமை தெரியும். வேண்டாம் என்னை இதுக்கு மேல் பேச வைக்காதே போய்டு.." என்றவன் அங்கிருந்து அகல.. அவனை நகர விடாமல் கையை பற்றியவள்..

"தினம் தினம் அதை நினைத்து நானும் துடிச்சுகிட்டு தான் இருக்கேன்" சொல்லும்போதே அவள் குரல் தன்னுடைய கலக்கத்தை வெளிப்படுத்தியது. "சரி அதை விடுங்க நான் பண்ண தவறுக்கு நீங்க ஏன் தனி மரமா நிற்கணும்.. இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க"குரல் தழுதழுக்கக் கூற..

அவள் கையை உதறிவிட்டு தீயாய் முறைத்தவன் "இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசுனே.. என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது போடி இங்கிருந்து" என கர்ஜித்தவன்.. அவ்விடமிட்டு வேகமாக நடந்தான்.

செல்லும் அவனை இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் கோப்பெருந்தேவி நெடுஞ்செழியன்..!!

அன்புடன்
வியனி❤
 
Shalini M

Bronze Winner

அக்கா டீஸர் சூப்பர்... வெயிட்டிங் ஃபார் தி அப்டெட்😍😍😍
 
வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருள் துகளில் உன் பிம்பம்..!

முன்னோட்டம்-2

படிச்சுட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்..

"கிளாஸ் நடந்துகிட்டு இருக்கும்போது பெர்மிஸ்ஷன் கேட்டு உள்ளே வரணுங்கிற இங்கிதம் தெரியாது..?" முகம் எப்போதும் போல் சாந்தமாக இருந்தாலும் கண்களில் குளிர் பரவ,வார்த்தைகள் அழுத்தமாக அவனிடமிருந்து வந்து விழுந்தன..

அதற்கு எல்லாம் அசருபவளா அவள்..! அவன் பேச்சை அசட்டை செய்தவள் "நான் உங்க கிட்ட சில விஷயங்களை பேசி கிளியர் பண்ணிக்கணும்.இரண்டு மாசமா மனசை போட்டு பாடாப் படுத்துது.இன்னைக்கு அதை கிளியர் பண்ணாதான் எனக்கு தூக்கம் வரும், வந்து கிளயர் பண்ணுங்க" என்றவளை வெட்டவா..? குத்தவா..? என்பது போல் பார்த்து வைத்தவன்.

தங்களது சம்பாஷணைகளை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களை பார்வையால் ஒரு முறை சுற்றி பார்த்தான்.அவர்கள் முன்பு தான் தவறான உதாரணமாக மாறி விடக் கூடாது என்பதை மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் அவள் புறம் திரும்பி.. "இங்க பார்.. நீ பொலிட்டிகள் சயின்ஸ் ஸ்டுடென்ட்..! நான் பயோகெமிஸ்ட்ரி லெக்சரர்..! என்கிட்ட பேசி கிளியர் பண்ணிக்கிற அளவுக்கு எந்த பேப்பரும் உனக்கு நான் எடுக்கிறதா எனக்கு ஞாபகம் இல்லை. நீ போகலாம்" என்றவன்,

"ஆகாஷ்..! அங்க என்ன வேடிக்கை,நான் சொன்னதை செய்" என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு கூறினான்.

'சிட்டிக்கு கோபம் எல்லாம் வருதே..!' உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள், "எனக்கு கெமிஸ்ட்ரில கொஞ்சம் தனிப்பட்ட சந்தேகம் இருக்கு" என அந்த கெமிஸ்ட்ரியில் அழுத்தம் கொடுத்து சொல்லியவள்,

"அலைடு பேப்பர் நீங்க தான் பக்கத்து கிளாஸ்க்கு எடுக்குறீங்கன்னு கேள்வி பட்டேன், அதனால் எனக்கும்.." என இழுத்து பேச.. அதை மாணவர்கள் கண்டும் காணதது போல், சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

அதற்கு மேல் பொறுக்க முடியாதவன், 'இந்தத் தலை வலியை இன்றோடு ஒழித்துக் கட்ட வேண்டும்' என முடிவு செய்து, "எந்த டவுட்டா இருந்தாலும் கிளாஸ் முடிஞ்சதும் வந்து கேளு கிளயர் பண்றேன்" அமைதியாகச் சொன்னான் செழியன், அவளை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்..

"இல்லை இந்த கிளாஸ் முடிஞ்சதும் நீங்க கிளம்பிப் போயிடுவீங்க.. இப்போதே நான் உங்கக் கூட பேசி கிளியர் பண்ணனும்" பிடிவாதமாகக் கூற..

இடுப்பில் கை வைத்து, வாயை குவித்து காற்றை ஊதி வெளியிட்டவன், 'அரசியல்வாதி பொண்ணுங்கிற திமிர்ல இப்படி எல்லாம் பண்ணுது,சரியான ரவுடி பொண்ணா இருக்கும் போல..? இம்சையை கூட்டுது' அவளை வெளியில் திட்ட முடியாமல் மனதிற்குள் சினந்தான்.

இதற்கு மேல் மாணவர்கள் முன்னால் இந்த வெட்டி வாதத்தை வளர்க்க விரும்பாதவன் "எல்லாரும் நோட்ஸ் எடுத்துகோங்க, டென் மினிட்ஸ்ல வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

'யாருக்கிட்ட என்கிட்டையேவா..! நினைச்சதை சாதிப்பாள் இந்த தேவி!' தன்னையே தட்டிக் கொடுத்துக் கொண்டவள், அவன் பின்னால் சென்றாள்.

நன்றாக வளர்ந்து பரவி, படர்ந்து நிழல் தந்துக் கொண்டிருந்த ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றவன் "கெமிஸ்ட்ரில உனக்கு என்ன டவுட்..? சீக்கிரம் சொல்லு, எனக்கு டைம் இல்லை."கை கடிகாரத்தை திருப்பி பார்த்துக் கொண்டு சொல்ல..

அவனை தலை முதல் பாதம் வரை தன் பார்வையால் அளந்தவள்,"உங்களுக்கு நான் சொன்னது உண்மையாலும் புரியலையா..? இல்லை, புரியாத மாதிரி நடிக்கிறிங்களா..?" நக்கலாகக் கேட்க..

"நீ எதுவுமே சொல்லாமல், புரியலையான்னு கேட்டால், நான் என்ன பதில் சொல்ல முடியும்..? உன் சந்தேகத்தை கேளு.."என்றான் எரிச்சல் மிக..

"நமக்கு இடையில் இந்த ரெண்டு மாசமா கெமிஸ்ட்ரி கிளாஸ் ஓடுதுன்னும் என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க, எனக்கும் அப்படி தான் ஃபீல் ஆகுது.நீங்க எப்படி ஃபீல் பண்றிங்க அதை சொல்லுங்க..?" என்றாள்.

'இந்த பொண்ணு என்னடா இப்படி பேசுது' அலுப்பாகப் பார்த்தவன், "படிக்கிற பொண்ணு படிக்கிற வேலையை மட்டும் பாரு.. அவன் சொன்னான், இவன் சொன்னான்னு மனசுக்குள்ள கண்ட கருமத்தை வளர்த்துக்காதே.."என்றான் கண்டனக் குரலில்..

"என்னை என்ன அடுத்தவங்க பேச்சை கேட்குறவன்னு நினைச்சிங்களா..? யார் சொல்லியும் நான் கேட்க மாட்டேன், எனக்கு என்ன தோணுதோ அதைதான் செய்வேன். நான் நேரடியா விசயத்துக்கு வரேன்,உங்களை நான் காதலிக்கிறேன்..!அதற்கு நீங்கள் உங்கள் முடிவை சொல்லுங்க" தீர்க்கமான முடிவு எடுத்தவளாக, அவனது நேத்திரங்களை நேருக்கு நேருக்கு பார்த்துக்கொண்டு கூறினாள்.

'இந்த பொண்ணு அடிக்கடி நம்மளை பார்க்கிற பார்வையே சரி இல்லைன்னு என் மனசு சொன்னது எவ்வளவு உண்மை'என நினைத்தவன், "இங்க பாரு மா..! அப்படி எல்லாம் என் மனசில் இந்த மாதிரி எண்ணம் இல்லை. இந்த வயசுல டோபமைன்(dopomine), நார்எபிநெப்ரின்(norepinephrine) ஹார்மோன் பண்ற வேலை, வேற ஒண்ணும் இல்லை.இதுக்கு காதல்னு பேரை சொல்லி பினாத்துறதை விட்டுட்டு படிக்கிற வழியை மட்டும் பாரு.."என அறிவியல் பூர்வமாக.. ஆசிரியராக விளக்கம் கொடுத்தவன்,

"இன்னொரு விஷயம் நல்லா கேட்டுக்கோ, அரசியல்னு பேப்பரில் எழுதி வைத்தால் கூட அதை நான் தொட மாட்டேன்.அவ்வளவு ஒவ்வாமை எனக்கு, அதனால் உன்ன மாதிரி அரசியல்வாதி ஆகணுங்கிற நினைப்பில் உள்ள பெண்ணை திரும்பி கூட பார்க்க மாட்டேன்.

வீணா மனசில் ஆசையை வளர்த்துக்கிட்டு அவஸ்தை படாதே, என் பேரையும் எல்லார் முன்னாடியும் கெடுக்காதே.. என்னுடைய சில மாத வாழ்வாதாரம் இந்த வேலையை நம்பி தான் இருக்கு, அதற்கு உலை வைக்காமல் ஒதுங்கியே இரு, எனக்கு டைம் ஆச்சு கிளம்புறேன்" என்று நடையை கட்டினான்.

"உருகிற வெண்ணை மாதிரி சாப்ட்டா, சிரிக்கும்போது குழந்தை கணக்கா அழகா இருக்கிறார்னு பார்த்தால்.இப்படி காதலுக்கு நானே தூங்குற அளவுக்கு பாடம் எடுத்து, பொங்கிட்டு போறார், இவரை எல்லாம் என்னை தவிர எவளும் லவ் பண்ண மாட்டா.. இதில வேற எவளாவது கொத்திட்டு போய்டுவான்னு முன்னாடியே துண்டு வேற போட வந்துட்டேன், சரியான சம்புராணி" என தலையில் அடித்துக் கொண்டாள்.

"அதுவும் எனக்கு பிடிச்ச அரசியல் இவருக்கு ஒவ்வாமையாமே..! எல்லாருக்கும் அரசியல்வாதின்னா அவ்வளவு கேவலமா போய்டுச்சு.இருங்க திட்டிட்டு போற அந்த வாயால் மனைவியே மந்திரின்னு சொல்ல வைக்கிறேன், அப்படி சொல்ல வைக்கல நான் கோப்பெருந்தேவி இல்லை..!"மானசீகமாக சபதம் எடுத்துக்கொண்டாள்.

அன்புடன்
வியனி❤

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புது கதைக்கான டீஸர்

எப்போதும் போல் கதைக்கு இன்னும் பெயர் வைக்கல.

டீசர்

அந்தச் சிறிய நடுகூடம் முழுவதும் ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. அந்த அமைதியை கலைக்கும் விதமாக.. "நீங்க என்ன சொல்றீங்க..?" என்று வினவி, அவர் பதிலுக்காக முகத்தை நோக்கியவாறு பதைபதைப்புடன் காத்திருந்தான் ஈஸ்வரன்.

குரலை செருமியாவறு "இப்போதான் மலை மாதிரி ஒருத்தனை தூக்கி கொடுத்துட்டு துக்கம்கூட முழுசா இன்னும் வீட்டு வாசலை தாண்டாமே.. விதியேன்னு வாழ்ந்துகிட்டு இருக்கோம். அதுக்குள்ள நீங்க கல்யாணத்தை பத்தி பேசுறீங்க! மகன் போன துக்கத்துல சுவாதீனம் இல்லாமல் எப்போதும் வெறிச்சுகிட்டு, நைட்டானா அவன் கூப்பிடுறான்னு மருண்டு மருண்டு ஓடுறவளே காவல் காக்க முடியாம, சோறு தண்ணிய நினைக்காம வீடும், மனசும் வறண்டு போய் கிடக்குது, இன்னும் ஒரு வருஷம் ஆகட்டும் தம்பி அப்புறம் பார்த்துக்கலாம்" என்றார்.

"நான் நாளைக்கு மறுபடியும் வெளிநாடு போறேன், ஊருக்கு போறதால் இப்போதைக்கு உங்ககிட்ட பேசி வச்சுட்டு அடுத்த வருஷம் வந்து கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் கேட்டேன், கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க" என்றான்.

"இல்லை தம்பி இப்போ நான் எந்த முடிவையும் உறுதியா சொல்ல முடியாது. அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்" என்று சமாளித்தார்.

அவனுக்கு ஏமாற்றத்தில் முகம் சிறுத்து போக, "அப்போ சரிங்க நான் கிளம்புறேன்" என்று எழுந்து வெளியேறி விட்டான்.

"ஏன் அண்ணே ஒரு கெட்டது நடந்த வீட்ல, நல்லது நடந்தா துக்கத்தை மறந்து கொஞ்சம் சந்தோசம் பிறக்கும்னு தான் நல்ல காரியத்தை செய்வாங்க. அந்த பையன் ரொம்ப தங்கமானவனா தெரியுறான், அவனை ஏன் வேண்டாம்னு சொல்றீங்க" என்று கேட்டார் அவருடைய தங்கை.

"பாராட்டி, சீராட்டி வளர்த்து படிக்க வச்சு இப்போதான் கொஞ்சம் முன்னேறி வர சமயத்துல.. காலம் முழுக்க அவன் நினைவோடையே ஜடம் மாதிரி வாழ்ற வாழ்க்கையை கொடுத்துட்டு ஒருத்தன் போய்ட்டான். என் பொண்ணுங்களுக்கு நல்லது கெட்டது ஏதாவது ஒண்ணுன்னா அவன் துணையாக இருப்பான்னு நினைச்சுருந்தேன். ஆனால், அந்த சண்டாளன் எனக்கு கொல்லி வச்சு என்னை நிம்மதியா அனுப்பி வைப்பான்னு நினைச்சா.. கடைசியில் அவனுக்கு நான் கொல்லி வச்சு அனுப்பி வைக்க வேண்டியதா போய்டுச்சு. எனக்கும் இப்போ மனசில் தெம்பு இல்லை. எவ்வளவு நாள் இருப்பேன்னு எனக்கே தெரியல! எடுத்தோம் கவுத்தோம்னு கல்யாணத்தை பண்ண முடியாது. எனக்கு பிறகு என் மகள்கள் வாழ்க்கை நிம்மதியா இருக்கணும்னு நினைக்கிறேன், அதான் எதையும் யோசிச்சு செய்யலாம்னு இருக்கேன். சின்னவளை பத்தி கவலை இல்லை, அவளுக்கு மாப்பிள்ளை இருக்கு. பெரியவளை நினைச்சுதான் எனக்கு கவலை!" என்று நாற்காலியில் தலையை சாய்த்தார்.

"அந்த பையனோட அம்மா ராங்கின்னு உனக்கு தெரியும்ல, பெரிய மருமகளோட ஏகப்பட்ட பிரச்சனை நடந்து போலீஸ் கேஸ் வரைக்கும் போச்சு, என் புள்ளைங்க கால் வயிறு கஞ்சி குடிச்சாலும் எந்த ஒரு இடிசொல் இல்லாமல் நிம்மதியா குடிக்கணும் அதான் எனக்கு முக்கியம். வருஷம் திரும்பட்டும்மா வேற மாப்பிள்ளை பார்த்துக்கலாம்" என்றார்.

அருந்ததி பேருந்தை விட்டு இறங்கி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கும்போது, அவளது வீட்டிலிருந்து வண்டியில் சென்று கொண்டிருந்தவன், அவளை சமீபித்ததும் வண்டியும் வேகத்தை குறைத்து, அவளை திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றான்.

"இந்த ஆளு ஏன் என்னை திரும்பி திரும்பி பார்த்துட்டு போறான். முகத்தில் ஏதாவது ஒட்டிருக்கோ?" என்று முகத்தை துடைத்தாவறு வீட்டை அடைந்தாள், வாசலில் நின்றிருந்த "டிஸ்கவர்" இருசக்கர வாகனத்தை கண்டதும் தயங்கி நின்று, அதை தடவி கொடுத்தவளின் நினைவு 'இது ஓடாது பறக்கும்' என்று சொல்லும் தமையனின் ஞாபகம் வர, அவன் மிச்சத்தின் எச்சமாக இருந்த வாகனத்தை, அவன் தலையை தடவி கொடுப்பது போல் வருடி கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே வந்ததும், உடையைக்கூட மாற்ற விடாமல் கையை பிடித்து வீட்டின் பின்புறம் அழைத்து சென்ற அவளது தமக்கை, "இன்னைக்கு ஒரு அதிசயம் நடந்துச்சு, அதை பார்த்ததும் எனக்கு உன் மேல் பொறாமை வந்துடுச்சுக்கா" என்றாள் தலையும் புரியாமல் காலும் புரியாமல்.

"ஏற்கனவே நான் ரொம்ப சோர்ந்து போயிருக்கேன், நீ வேற ரம்பம் போடாமல் என்னன்னு சொல்லு, வீட்டு வேலை நிரம்ப கிடக்கு"

"அது வந்து அந்த பாடிபில்டர் இருக்காருல்ல.."

"எந்த பாடிபில்டர்..?"

"அதான்கா நான் கூட உன்னி முகுந்த் மாதிரியே இருக்கிறதால உன்னி ஏட்டன்னு சொல்லுவேனே.. அவர் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து அப்பாகிட்ட உன்னை பொண்ணு கேட்டார். அப்பா கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார்" அவள் தந்தை மறுதலித்ததும் வருத்தமாக மொழிந்தாள்.

"இதுதான் அதிசயமா..?" சாரமில்லாத குரலில் சொன்னவள், 'இதனால்தான் அந்த ஆளு என்னை திரும்பி திரும்பி பார்த்துட்டு போனான் போல' காரணம் பிடிபட, அதை பெரிதாக எண்ணாமல் சென்று விட்டாள்.

*************************************

"எவ்வளவும்மா ஆச்சு..?"

"பதினைந்து ரூபாய் ஆச்சுண்ணா" என்று நகல் எடுத்தவற்றை அவர் கையில் கொடுத்து விட்டு, பணத்தை பெற்றுக் கொண்டாள்.

"எனக்கு பான் கார்டு அப்ளை பண்ணனும்" என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவளை, ஒரு வருடம் கழித்து பார்ப்பதால் குறுகுறுவென்று பார்த்தான் ஈஸ்வரன்.

"வைட் பண்ணுங்க, இவங்களுக்கு முடிச்சுட்டு பண்ணலாம்" என்று எந்த வித முகமாறுதலும் இல்லாமல் கணினியின் முன் அமர்ந்தவள், மற்றொரு வேலையை முடித்தாள்.

அடுத்ததாக அவன் வந்து, அவள் அருகில் அமர.. "யம்மா இந்த ஆதார் கார்டை ரெண்டு ஷெரொக்ஸ் போட்டு கொடு" ஒரு முதியவர் கேட்க,

'நான் வந்து உட்காரும்போதுதான் எல்லாரும் இடைஞ்சல் பண்ணுவாங்க' மெல்லிய சினத்துடன் அலுத்துக் கொண்டான்.

"ஏய் அமலா! அந்த வேலையை முடிச்சுட்டு இவருக்கு பான் அப்ளை பண்ணி கொடு" என்று எழுந்தவள், அந்த முதியவர் கொடுத்த ஆதார் கார்டை நகல் எடுத்து கொண்டிருந்தாள்.

"அண்ணே! உங்க ப்ரூஃப் எல்லாம் கொடுங்க" என்று அமலா என்பவள் அவனிடம் கேட்க,

"இல்லை நான் அவகிட்ட பண்ணிக்கிறேன்" என்றவனின் 'அவள்' என்ற உரிமையான அழைப்பில் அவனை பாதாதிகேசம் அளந்தவள்,

"அது சரி" என்று தலையாட்டி நக்கலாக இதழ் வளைத்து,.

"அம்மா 'தீ' நீ தான் அப்ளை பண்ணி கொடுக்கணும்னு கஷ்டமர் விருப்பம் வந்து இந்த ஆசனத்தில் அமரு, நான் அந்த வேலையை பார்த்துக்கிறேன்" என்று நமட்டு சிரிப்புடன் எழுந்து சென்றாள்.

அருந்ததி அமர்ந்து கடமையே கண்ணாக அவளது வேலையை செய்து கொண்டிருக்க, எப்படி பிள்ளையார் சுழி போட்டு பேச்சை ஆரம்பிப்பதென்று தெரியாமல் "அருந்ததி" என்று மெல்ல அழைத்தான்.

"ஏதாவது தப்பா இருக்கா?" கணினி திரையை காட்டி கேட்டாள்.

"இல்லை, உங்க அப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டார், உனக்கு என்னை பிடிச்சிருக்கா?" என்று கேட்டான்.

"ஊரிலிருந்து வந்ததும் இந்த வேலையை தான் முதலில் பார்த்தீங்களா..?"

"உனக்கு கல்யாணமாயிடக் கூடாதுன்னு ஒவ்வொரு நாளும் வேண்டிக்கிட்டே இருப்பேன். அதான் வந்ததும் விசாரிச்சுட்டு பேசி முடிச்சுட்டேன்" அவன் வைத்திருந்த தாடி கன்னக்குழியை மறைக்க விரிந்த முறுவலை சிந்தியவாறு கூறினான்.

அவனை ஒரு மாதிரியாக பார்த்தவள், "எனக்கு சில கண்டிஷன் இருக்கு அதுக்கு ஓகே சொன்னா, உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதில் எனக்கு ஆட்சேபனை இல்லை" என்றாள் கணினி திரையிலிருந்து பார்வையை விலக்காமல்.

"சொல்லு என்னது?"

"நீங்க கல்யாணம் பண்ண கொஞ்ச நாளில் வெளிநாடு போய்டுவீங்க, என் அம்மா முன்னை இருந்ததை விட பரவாயில்லை. ஆனால், இன்னும் வீட்டை விட்டு வெளியில் வர மாட்டேங்கிறாங்க அப்படியே தான் இருக்காங்க, அப்பாவுக்கு அண்ணா போன கவலையில் உடல் பலவீனம் ஆயிடுச்சு. என் தங்கச்சி இப்போ படிச்சுட்டு இருக்கா அவளால் வீட்டை பார்த்துக்க முடியாது. அதனால், நீங்க போனதும் நான் எங்க வீட்டில் குடும்பத்தை பார்த்துகிட்டு இருப்பேன். நீங்க திரும்பி வர வரைக்கும்"

"நீங்க ஒரு ரெண்டு வருஷம் மட்டும் வெளி நாட்டிலிருந்துட்டு என்ன குடும்ப சூழ்நிலையாக இருந்தாலும் திரும்ப வந்துடணும். நீங்க அங்க, நான் இங்கன்னு வருசத்துக்கு ஒரு மாதம் மட்டும் பொண்டாட்டியா குடும்பம் நடத்தி, கடைமைக்கு புள்ளைகளை பெத்து போட நான் ரெடியில்ல. என் குடும்பத்தில் என் அண்ணன் இடத்திலிருந்து என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். பணத்தை பத்தி நான் சொல்லல.. ஆதரவனா உறவு முறைக்கு சொல்றேன், நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம். உங்க குடும்பத்தை உடனே நான் எப்படி ஏத்துக்கிட்டு எல்லாம் செய்யணும்னு நினைப்பிங்களோ அதே மாதிரி தான் நீங்களும் என் குடும்பத்தை ஏத்துக்கிட்டு அவங்ககிட்ட நல்லபடியா நடந்துக்கணும்."

"நான் எனக்கு பிடிக்கிற வரைக்கும் இங்க வேலைக்கு வருவேன், என்னை தடுக்கக் கூடாது. உங்களுக்கு நான் சொன்ன விஷயங்களில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், இல்லைன்னா சொல்லிடுங்க ஒரு பிரச்சனையும் இல்லை" என்று முடித்தாள்.

"எனக்கும் பிரச்சனை இல்லை, நீ சொன்னதுக்கெல்லாம் எனக்கு சம்மதம்" எள்முனை அளவுக்கூட யோசிக்காது சம்மதம் சொன்னதும், அவனை நெற்றி ரேகைகள் சுருங்கப் பார்த்தாள்.

"இல்லை, நீங்க நிதானமா யோசிச்சு சொல்லுங்க ஒண்ணும் அவசரமில்ல, எனக்கு வந்த மாப்பிள்ளைங்க எல்லாருக்கும் இந்த கண்டிஷன் போட்டதால் தான் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. அதனால் தான் சொல்றேன் கொஞ்சம் நிதானமா முடிவெடுங்கன்னு"

"இதில் யோசிக்க என்ன இருக்கு? எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை" திருமண வாழ்க்கையை பற்றி சரியாக விளங்கிக் கொள்ளாமல் அவன் சொல்லிவிட்டுருந்தான்.

"அப்போ சரி, நான் அப்பாகிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடுறேன்" என்று முகத்தில் எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தாமல் அவள் கூறியிருந்தாள்.

'இவ என்ன முகத்தில் ரியாக்ஸனே காமிக்காமல் பேசுறா..? இவ குணமே இப்படிதானா? இல்லை, அவ அண்ணன் போனதும் வருத்தத்தில் இப்படி ஆயிட்டாளா?' என்று சிந்தித்தவன், அவள் சொன்னது போல் அவள் குடும்பத்தை தன் குடும்பம் போல் பார்த்துகொள்ள வேண்டும் என்று எண்ணினான்.

************************

"நானும் வந்ததிலிருந்து பார்த்துகிட்டே இருக்கேன், என்கூட ஒழுங்கா பேச மாட்டேங்குறே.. பக்கத்தில் வந்தா தள்ளி போறே.. என்ன தான் உன் பிரச்சனை?"

'நீ சொன்னபடி நடந்து கொண்டிருந்தால், நான் ஏன் இப்படி இருக்க போகிறேன்' என்ற பார்வை பார்த்து வைத்தவள்,

"ஒண்ணுமில்ல.." என்று வெளியே செல்ல முனைந்தவளை கை பிடித்து தடுத்தவன்,

"இல்ல ஏதோ இருக்கு, என்னன்னு சொல்லு.."

"நான் தான் ஒண்ணுமில்லன்னு சொல்றேனே.. என்னமோ அக்கறை இருக்க மாதிரி என்ன என்னன்னு நச்சரிக்கீறீங்க.. ஒழுங்கா கையை விடுங்க" என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினாள்.

"அக்கறை எல்லாம் நிறைய இருக்கு, இப்போ நீ ஏன் இப்படி இருக்கேன்னு சொல்லாமல் நான் விட போறது இல்லை."

"நான் நாளைக்கு எங்க வீட்டுக்கு போறேன்" என்று அருந்ததி சொல்ல,

அவளை உறுத்து பார்த்தவன், "அங்க தான் போகக்கூடாதுன்னு சொல்லிருக்கேனே.."

"என் வீட்டுக்கு போறதுக்கு யாரோட பெர்மிசனும் எனக்கு தேவை இல்லை."

"என்னோடதுக்கூட தேவை இல்லையா..?"

"நான் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு.. அதில் ஒன்னை கூட நிறைவேத்தாமல், உங்க குடும்பத்தில் உள்ளவங்க பேச்சை மட்டும் கேட்டுகிட்டு, நான் சொன்னதை காது கொடுத்து என்னன்னுகூட கேட்காமல், எங்க வீட்டுக்கு போக கூடாதுன்னு சொல்லி தடுத்தவங்க பேச்சை நான் ஏன் கேட்கணும்? அது புருஷனா இருந்தாலும் இப்போ கேட்கிற நிலையில் நான் இல்லை. அதை தாண்டி வந்துட்டேன்"

"நீங்க சொன்னதுக்கு நான் உடன்பட காரணம்.. வெளியில் இருக்கீங்க, வீணா சண்டை போட்டு மனசை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான். இப்போ இங்க வந்துட்டீங்க.. இனி நீங்களாச்சு, உங்க குடும்பமாச்சு. என் தங்கச்சி கல்யாணத்துக்கு போகக்கூடாதுன்னு உங்க வீட்டில் உள்ளவங்க சண்டை போட்டாங்க. அவங்க பேச்சை கேட்டுகிட்டு நீங்களும் வரலை. இப்போ உங்க தம்பி கல்யாணத்துக்கு மட்டும் வந்துருக்கீங்க.. அப்போ நான் அவ்வளவு இளக்காரமா போய்ட்டேன்ல. இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க உங்க தம்பி கல்யாணத்துக்கு நான் வர மாட்டேன்" என்று கண்களில் நீர்திரை மறைக்க கூற..

"என்னை பழி வாங்குறியா..?"

"நான் இங்கையும், நீங்க அங்கையும் சிறப்பா வாழ்ந்த இந்த ஐந்து வருஷ வாழ்க்கைக்கு பழிதான் வாங்குறேன்.
இனிமேலும் இப்படி தான் என் வாழ்க்கை போகும்னு எனக்கு தெரியும். அதுக்கு ஒரு மண்ணுக்கும் பிரயோஜனப்படதா இந்த வாழ்க்கையை வாழ்றதுக்கு நான் தனியா வாழ்றதே மேல். கேட்க ஆள் இல்லைன்னா இப்படி தான் உங்க இஷ்டத்துக்கு நடத்துவீங்க! நான் வாழ்ந்த வாழ்க்கை போதும், இனியாவது என் அம்மா அப்பாவை பக்கத்திலிருந்து பார்த்துக்கிற பாக்கியம் எனக்கு கிடைக்குட்டும், அதிலையாவது எனக்கு நிம்மதி கிடைக்கும்" குரலில் வேதனை தொனிக்க விரக்தியுடன் மொழிந்தாள்.

"அப்போ நான் உனக்கு வேண்டாமில்லை?" அவளை ஆழ்ந்து பார்த்தவாறு வினவினான்.

"நீங்க வேணும்னு தான் இங்க நடந்த பல கசப்பான சம்பவத்துக்கு பிறகும் அமைதியா இருந்தேன். இதுக்கு மேல் என்னால் முடியாது எனக்கு யாரும் வேண்டாம். வாழ்க்கையே வாழ்றதுக்கு தானே.. அந்த வாழ்க்கை நல்லா இல்லாதபோது, எதுக்கு கோமாளி மாதிரி கூத்துகட்டி எல்லாரும் சிரிக்க வாழணும்? அதுக்கு நான் இந்த வாழ்க்கையை முடிச்சுக்கலாம்" என்று ஆத்திரத்தில் சொல்ல,

அவள் சொன்ன 'வாழ்க்கையை முடிச்சுக்கலாம்' என்ற வார்த்தைகளில் உடல் முழுதும் நடுங்கிப்பதறி "அருந்ததி..!" என்று உச்சஸ்தாயில் கத்தியவன்,

"என்னால் யாரும் வாழ்க்கையையும் முடிச்சுக்க வேண்டாம். நாளைக்கு நானே உன்னை கொண்டு போய் விடறேன்" என்று அவனும் இப்படி பேசி விட்டாளே என்ற கோபத்தில் பிரஸ்தாபித்தான்.

"உங்கத் தப்பை உணரவே மாட்டிங்கள்ள? அப்படியே இருங்க" என்று கசந்த முறுவலை சிந்திவிட்டு செல்ல,

"ஆம்பளையா ஏன்டா பிறந்தோம்..? பொம்பளையா பிறந்திருந்தளாவது என் அம்மா மாதிரி மருமகளை குறை சொல்லிக்கிட்டும்.. இவ மாதிரி புருஷனை டார்ச்சர் பண்ணிக்கிட்டும் இருந்திருக்கலாம். பேசாமல் அங்கையே இருந்து செத்து போயிருக்கலாம், என்ன வாழ்க்கை!" என்று அவனும் தலையை பிடித்துகொண்டு அமர்ந்தான்.
 
Top