Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஏன் பெண்ணானேன்? அதிலிருந்து பெண்ணால் (என்னால்) ஏன் முடியாது என்பது வரை பயணிக்கின்ற கதை...
அக்கா என்ன சொல்லன்னு தெரியலை.
பெண்ணுக்கு பெண்ணே எதிரி, பெண் என்பதால் மட்டுமே மறுக்க படும் பல விசயங்கள், கொடுக்கப்படும் பட்டங்கள் எல்லாம் நல்லா சொல்லி இருக்கீங்க...
வைதேகி : பெற்றோருக்காக வளர்ந்து திருமணம் முடித்து கணவனுக்காக வாழ்ந்து மாமியாருக்கு பணிவிடை செய்து என எங்கும் யாரோ ஒருவருக்காக வாழும் குடும்ப தலைவி ஆனால் எங்கும் கடைசி இடம் sorry எங்கும் எதிலும் இடமில்லை.... பெறாத வளர்ப்பு மகள் வெண்ணிலா தான் ஒரே சந்தோசம்.. எவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள், கடும் சொற்கள் எல்லாம் மகளுக்காக, மகளின் நல் வாழ்வுக்காக மட்டுமே பொறுத்து போகிறாள்.... அவள் வைத்த உண்மையான நேசதுக்கான எதிரொலி கொஞ்சம் கூட இல்லை. அவளை ஒரு வேலைக்காரியா தான் பார்க்கிறாங்க மாமியாரும் கணவரும் அதுவும் அவர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம் ரொம்ப கொடுமையா இருக்கு... யாரிடமும் வாய் திறக்காமல் அவர்கள் தேவையை நிறைவேற்றும் அவளை நினைத்தே பார்க்கவில்லை அவர்கள். மாமியாரும் ஒரு பெண் தானே ஒரு காலத்தில் அவரும் மருமகள் தானே... கொஞ்சம் கூட ஈரம் பாசம் இல்லை... மகன் குடித்தால் அவனை திருத்தாமல் திட்டாமல் அவனை திருத்த மருமகளிடம் பேசுறார்.. அவனை கண்டிக்க அவருக்கு உரிமை உண்டு தானே... அதுவும் அவள் மேல் அவர் குற்றம் சொல்லும் இடம் எனக்கு கோபம் தான் வந்தது. என்ன பெண் இவர் என்று..
அவன் குடித்தது கூட அவளுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தாமல் வரும் ஆசுவாசம் அவன் எந்த அளவில் இருந்து இருக்கான் என காட்டுது. பெறாவிட்டாலும் மகள் தானே அவளுக்கு ஒரு கஷ்டம் எனும் போது வராத அவன் என்ன ஆண்மகன்?
அவன் மேல் அவளின் நேசம்... என்னுடைய நேர்மை என்று சொல்லும் இடம் சூப்பர்.. இப்படி தான் இன்னிக்கு பல பெண்கள் கலாச்சாரம், நேர்மை என தங்கள் வாழ்வில் எதையும் எதிர்பாராது முடங்கி போய் இருக்காங்க... விட்டு விலகவும் முடியாது சேர்ந்து இருக்கவும் முடியாது முள் மேல் நிற்கும் நிலை தான் பலருக்கு..
மனைவியை வேவு பார்த்ததை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சொல்லும் இவனெல்லாம் ஒரு ஆள்.. சட்டையை பிடிச்சதொட இல்லாம ஒரு அறை குடுத்து இருக்கணும். அவளின் நேசதுக்கும் காத்திருப்புக்கும் ரொம்ப நல்ல மரியாதை செய்துட்டான்... அகாஷ் பத்தி சொன்னது தான் ஒரே நல்ல விசயம்.
மகளை கூட்டிட்டு வெளில போனது சபாஷ்...
ஆகாஷ் எதேர்ச்சையாக பார்க்கும் இவன், மகளுக்கு உதவி கேட்கும் போது கூட நல்லவன் என்று தான் தோணுச்சு. அதுவும் நிலாவுக்கு உதவ வரும் போது ஒரு நல்லவன் இருக்கான் என... ஆனால் அவனின் நடத்தை அவைக்கு தெரிந்து விட்டது என தெரிந்தும் அவன் சமாளிப்பு செம்ம கடுப்பு..
அந்த செருப்பை காட்டும் மோமெண்ட் ரியலி சூப்பர்
ஆகாஷ் கெட்டவனா இருந்தாலும் கிறிஸ்டிக்கு தேவையான தாய்ப்பாசம் குடுப்பது சூப்பர் வைதேகி
நிலா அம்மாவுக்கு ஏற்ற மகள்... அம்மாவை உயர்த்த நினைக்கும் அவள் மனம், அம்மா பார்த்து சொல்லும் மாப்பிள்ளை என சொல்லி அம்மாவுக்கு மரியாதை செஞ்சிட்டா...
பங்கஜம் இவங்கள போல நாலு நல்லவங்க இருந்தால் நல்லது..
ஏன்னா அவ என் பொண்ணு அப்படினு கேசவிடம் சொல்லும் ஒவ்வொரு வரியும் அழகு...
congrats Akka
just shared my views about d story... RuBy
//பெண்ணுக்கு பெண்ணே எதிரி, பெண் என்பதால் மட்டுமே மறுக்க படும் பல விசயங்கள், கொடுக்கப்படும் பட்டங்கள் எல்லாம் நல்லா சொல்லி இருக்கீங்க...//
இங்கு பல நேரங்களில் பெண்ணின் முன்னேற்றத்திற்கு எதிராக வரும் முதல் குரல் பெண்ணுடையாதான் இருக்கு.
//கொஞ்சம் கூட ஈரம் பாசம் இல்லை... மகன் குடித்தால் அவனை திருத்தாமல் திட்டாமல் அவனை திருத்த மருமகளிடம் பேசுறார்.. //
அதெல்லாம் மாமியார் லாஜிக் போல.
//அவன் மேல் அவளின் நேசம்... என்னுடைய நேர்மை என்று சொல்லும் இடம் சூப்பர்.. இப்படி தான் இன்னிக்கு பல பெண்கள் கலாச்சாரம், நேர்மை என தங்கள் வாழ்வில் எதையும் எதிர்பாராது முடங்கி போய் இருக்காங்க...//
இது என்றும் மாறாத உண்மை. எவ்வளவோ திறமையான பெண்கள் இல்லை சாதாரண பெண்கள் கூட அவங்க இணை என்ன செஞ்சாலும் பொருத்து கொண்டு ,அது எங்கள் காதல் என்று தான் சொல்லுவாங்க.கூடவே அதைத்தாண்டி வந்தா அந்த பொண்ணை ரொம்ப வெகுவில் நல்லா வாழ்ந்திட விடமாட்டான்க நம்ம மக்கள்..
//ஆனால் அவனின் நடத்தை அவைக்கு தெரிந்து விட்டது என தெரிந்தும் அவன் சமாளிப்பு செம்ம கடுப்பு..//
ஆமா டா.இது முக்கியாமன பாய்ண்ட். nowadays many people are using a women's state of emotional breakdown.I just want to highlight it.that's y Aakash character has been shaped in that way.
//அந்த செருப்பை காட்டும் மோமெண்ட் ரியலி சூப்பர்//
My fav too da
//நிலா அம்மாவுக்கு ஏற்ற மகள்... அம்மாவை உயர்த்த நினைக்கும் அவள் மனம், அம்மா பார்த்து சொல்லும் மாப்பிள்ளை என சொல்லி அம்மாவுக்கு மரியாதை செஞ்சிட்டா...//
எஸ் டா.இங்க சுயமா வாழ வேண்டும் என நினைக்கும் பெண்கள் முதலில் அவங்களுக்கான அடையாளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.அதுவே அவளுக்கான மரியாதை கிடைக்க ஒரு வழி.
//பங்கஜம் இவங்கள போல நாலு நல்லவங்க இருந்தால் நல்லது..//
இப்படியும் சில நல்லவர்கள் இருக்கிறார்கள் அல்லவா !
//ஏன்னா அவ என் பொண்ணு அப்படினு கேசவிடம் சொல்லும் ஒவ்வொரு வரியும் அழகு...
congrats Akka//
மிக்க நன்றி டா. totally I too travelled with the story in your comment.such a detailed review.