All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஷாராதேவியாகிய நான்!!!’ - கருத்துத் திரி

Deebha

Well-known member
Hi sis , சச்சின் தன் கலெக்டர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஷாராவின் ஆலோசகன் ஆனது வியப்பளிக்கறது ... தன் பெற்றோர் வாழ்த்த வீட்டை பார்க்க மேற்கொண்ட பயணம் முழுதும் அவளின் செய்கைகள் சிறு பிள்ளையை ஒத்து இருந்தது.. ஐஸ்வர்யா தன்னை பற்றி மட்டுமே சிந்தித்து இரு மொட்டுகளை ஒரு கயவனிடம் விட்டு சென்றதை மன்னிக்க முடியவில்லை... ஷாரா மகிழனுக்கு கொடுத்த தண்டனை குறைவே...
தனுஷ்காவிற்கு அழகாக குடும்பம் அமைந்தது நிறைவு... ஷாரா சச்சின் அருமையான நண்பர்களாக இருந்தாலும் , இருவரும் குடும்ப வாழ்க்கை அமைத்து கொள்ளாமல் போனது வருத்தமே..
ஷாராவினால் பலர் வாழ்வு மலர்ந்ததும், இனிய ஆட்சி அமைந்ததும் நிறைவு...
ஷாராவின் அதிரடியும் ஷாராதேவியாக நான் என கேட்கும் போதும் தமிழ்நாட்டின் இரும்பு மனுசியையும் நியாபகபடுத்துகிறது....

பெண் என்பவள் துணிவு, அறிவு, சமயோசிதம், அன்பு, அதிரடி, ராஜதந்திரம், தெளிவு,விவேகம் கொண்டு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு ஷாரா மிக சிறந்த எடுத்துக்காட்டு....
Thank you for such a nice novel sister
🤝💞🤝:smiley7:
 

thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் மேடம்,

படித்து ஒருவாரம் ஆகிவிட்டது...இதோ அதோவென ஒரு வழியாக கருத்துக்களைத் தெரிவிக்க வந்து விட்டேன்.😁😁😁

கதை முழுவதும் கலவையான உணர்வுகளுடன் ஷாராதேவியைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது.
இந்த மாதிரியான இளமைப் பருவம் வாய்க்கப் பெற்ற ஒரு பெண் பெரும்பாலும் மன நோயாளியாகப் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் தன் பலவீனங்களையே பலங்களாக்கி நின்று சாதித்துக் காட்டிய சாதனைப் பெண் ஷாரா...hats off to her.நிஜத்திலேயே சில இடங்களைப் படிக்கும் போது உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது.:smiley7::smiley7:

ப்ரஜன் கிருஷ்ணா, சச்சின், தனஞ்செயன் என அவரவர் பாத்திரங்களில் சரியாகப் பொருந்திப் போனார்கள். 👌👌👌

ஷாராதேவியின் தைரியம் கொஞ்சமாவது தனிக்ஷாதேவிக்கு இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அனாவசியமாக ஒரு மன நோயாளியுடன் மாட்டிக் கொண்டு அவள் வாழ்வைக் கழிக்க நேர்ந்தது கொடுமை...ரிஷி அவனெல்லாம் மனிதனே கிடையாது...மிருகம்.😡😡😡

இன்னும் மகிழன், சிவானந்தம், மயில்வாகனன் அவனுக்கேற்ற மனைவி என இப்படியும் ஜென்மங்கள் இருப்பார்களா என அருவருப்புக் கொள்ள வைத்து விட்ட கதாபாத்திரங்கள்.

அருமையான படைப்பு மேடம். தாமதமாகக் கருத்துத் தெரிவிப்பதற்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வெற்றிப் பயணத்தில் "ஷாராதேவியாகிய நான்!" ஒரு மைல்கல் என்றால் அது மிகையில்லை.
:smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1:

வாழ்த்துக்களுடன்
தூரிகா
 
Top