அன்று
எப்பொழுதும் ஒரு வட்டத்திற்குள்ளே நின்று பழகும் md விஷ்வா,இன்று தனது நிலையில் இருந்து மாறுபட்டு அழைக்காமலே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது, அதுமட்டுமில்லாது கேக்கை ஊட்டியது என அத்தனையும் கண்ட நண்பர்களுக்கு ஒருபுறம் சந்தேகம் எழுந்தாலும்,வாலிப பருவதிற்கே உரிய விளையாட்டு குணத்துடன் அதை மறந்து கொண்டாட்டத்தில் அதை மறந்தும் போயினர்,
ஆண்,பெண் நட்பை சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை கொண்ட ஆதிராவிற்கு இது தப்பாக படவில்லை என்பதை காட்டிலும் விஷ்வாவின் நேர் கொண்ட கண்ணியமான பார்வை அதை தவறாக சிந்திக்க விடவில்லை…
நண்பர்களுடன் இரவு உணவையும் வெளியிலே ஒரு உணவகத்தில் முடித்து கொண்டு தான் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றவள்,அலைபேசியில் அன்னையுடன் பேசியபடியே களைப்பில் அப்படியே உறங்கிவிட்டாள்…
தொழில் சந்திப்பை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தவனை யாருமற்ற பிரமாண்டமான,வெறுமையே வரவேற்றது,
விவரம் தெரிந்த வயதிலிருந்தே தனிமையிலேயே இருந்தவனுக்கு இன்று அந்த தனிமை வெறுப்பை தந்தது,இதுவரை இப்படி தோன்றாது,இன்று மட்டும் என்ன! என்ற சிந்தனையுடனே வந்தவனுக்கு உணவு மேஜையில் தயாராக வைக்கப்பட்டிருந்த உணவு கண்ணில் பட்டது,இரவு அவன் வர தாமதமாகும் ஆதலால் இரவு உணவை தயார் செய்து வைத்துவிட்டு வீட்டிற்கு செல்ல சொல்லிவிடுவான்,
வீட்டை பராமரிப்பதற்கும்,சமையல் செய்வதற்கும் ஒரு குடும்பத்தை வேலைக்கு அமர்த்தி,அங்கேயே அவர்களுக்கென்று வீட்டின் பின்னே ஒரு வீடு கட்டிக்கொடுத்திருந்தான்,அந்த குழந்தைகளின் படிப்பு செலவையும் தானே செய்தான்,அதை அவர்களுக்காக செய்தானா?அல்லது செய்யும் பாவத்திற்கான நிவர்த்தியாக செய்தானா?என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்,
தனது அறைக்கு சென்று குளித்து உடை மாற்றி வந்ததும், தொலைக்காட்சியை உயிர்ப்பித்து செய்தியை ஓட விட்டவன் உணவு மேஜையில் அமர்ந்து உணவை வாயருகே கொண்டு சென்றதும், மாலை தன்னவளுக்கு கேக்கை ஊட்டியது நினைவில் தோன்றி புன்னகை பூக்க செய்தது…
தன்னவள் நினைவு தோன்றியதும் அதுவரை இருந்த வெறுமையான மனநிலை மாறி இதமான உணர்வு ஒன்று ஆட்கொண்டது,அதே மனநிலையுடன் உணவை முடித்தவன் உணவு பாத்திரங்களை ஒழுங்கு படுத்திவிட்டு தனதறைக்கு சென்றான்,
காதல் பிறந்துவிட்டால் அதனுடன் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தை போல ரசனையும் சேர்ந்து வந்துவிடுமோ?கண்கள் காணும் அனைத்தையும் மனம் ரசித்தது,இதுவரை இயந்திரம் போல தனது செயல்களை மட்டும் நேரப்படி செய்து வந்தவன்,இன்று நிதானமாக பால்கனியில் நின்று தழுவி செல்லும் காற்று,அதில் மிதந்து வரும் பூக்களின் நறுமணம்,நட்சத்திரங்களின் நடுவே ஓளி வீசும் பிறை நிலவு என அனைத்தையும் ரசித்து கொண்டிருந்தான்…
தான் ஒரு பெண்ணிடம் இப்படி காதலில் விழுவோம் என்று நேற்று கூறியிருந்தால் அதை பரிகாசம் செய்திருப்பான்,ஆனால் இன்று,” எப்படி சந்தித்த ஒரே நாளில் ஒரு பெண்ணால் தன்னை இப்படி வசியம் செய்ய இயலும்,அவளின் கண்கள் என்ன காதல் கடலா!அதில் மூழ்கினால் மீள இயலாதோ ?இதுவரை எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறேன்,எவரிடமும் தோன்றாத இந்த உணர்வு இவளிடம் மட்டும் தோன்றியதேன்?”என தன்னிடமே பேசிக்கொண்டிருந்தான்,
இதுவரை திருமணத்தை பற்றியே சிந்திக்காதவன்,செய்து வைப்பதற்கும் பெற்றோர்,உடன் பிறந்தவர் என யாரும் இல்லாது இருந்தவனிற்கு, தனக்கென்று ஒரு குடும்பம், உறவுகள் என சிந்தித்ததில்லை,ஆனால் இன்று அனைத்தும் வேண்டும் என்று தோன்றியது,
அதே நேரம் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அலைபேசி ஒலி எலுப்ப அதில் தோன்றிய பெயரை கண்டதும் அதுவரை இருந்த மன நிலையிலிருந்து முற்றிலும் மாறி அலைபேசியை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்…
தன்னை நினைத்து ஒருவன் உறங்காமல் விழித்து கொண்டு தனிமையில் தவித்து கொண்டிருக்கிறான் என அறியாது நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ஆதிரா…
இன்று
இந்தாம்மா... உன்ன பார்க்க கரண் தேவ் சார் வந்துருக்காரு வா,
அந்த நடுத்தர வயது பெண்மணியின் பின்னே ஓய்ந்த தோற்றத்துடன்,சோர்வாக நடந்து வந்தவளை கண்டதும் ஆணவன் மனதில் ஆயிரம் வலிகள்,அது அவளது நிலை கண்டா?அல்லது அவளது வாழ்வை நினைத்தா !அதில் அவனின் சுயநலமும் இருக்கின்றதோ?
தனது முன்னே நின்றவரை கண்டு முறுவலிக்க முயன்று,கண்களை எட்டாத புன்னகை ஒன்றை சிந்தியவள்,
நல்லாருக்கீங்களா சார்?வீட்ல எல்லாரும் எப்படி இருகாங்க, என எதிலிருப்பவனின் நலத்தை கேட்க ,
நான் நல்லாருக்கேன்,வீட்லயும் எல்லாரும் நல்லாருக்காங்க,எங்களுக்கு என்ன ஆதிரா?நீங்க தான் இருக்க இருக்க மெலிஞ்சுக்கிட்டே போறீங்க,ஒழுங்கா சாப்பிடுறீங்களா இல்லையா?
அதற்கு பதிலாக எதிரிலிருப்பவளிடமிருந்து விரக்தி புன்னகையே பதிலாக கிடைக்க,
“நடந்தது எதையும் மாற்ற முடியாது ஆதிரா,நீங்க உங்களை பார்த்துக்கிட்டா தான் உங்க குழந்தையும் நல்லாருக்கும்,உங்களுக்காக இல்லைனாலும் அந்த குழந்தைக்காகவாது உங்க உடம்பை பார்த்துக்க வேண்டாமா ?”,என்ற கேள்விக்கும் அதே புன்னகை தான்,
சரி உங்க உடம்பை பார்த்துக்கோங்க மருந்தெல்லாம் சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க,நான் கிளம்புறேன், என்றவனுக்கு தலையசைப்பையே பதிலாக கொடுத்தவள் மீண்டும் தனது இடத்திற்கு சென்றுவிட்டாள்…
எப்பொழுதும் தன்னை சுற்றி நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்,எல்லோரிடமும் எளிதில் பழகி விடுவாள்,தன்னை சுற்றி உள்ளவர்களை தனது பேச்சிலேயே கவர்ந்து விடுவாள்,அதுவும் ஓர் காரணம்,ஆனால் ஒருவர் தவறு செய்தால் அது யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள்,தன்னிடம் அன்பாக இருப்பவர்களிடம் அதை இருமடங்காக அன்பை செலுத்துவாள்,பகைமை பாராட்டினால் பல மடங்காக திருப்பி கொடுப்பாள்,அவளது சிரிப்பு,கோபம்,விளையாட்டு குணம் என்று அனைத்தயும் ரசிப்பதற்கே ஓர் நண்பர் பட்டாளம் இருந்தது,
இன்றோ, தன்னை காண சரணை தவிர வேறு எந்த நண்பர்களும் வரவில்லை,அவரது நட்பு கூட நெடுங்காலம் பழகிய நட்பில்லை,சிறிது காலமாக தான் தெரியும், ஆனால் பல காலங்கள் பழகிய நண்பனை போல தனக்கு இத்தனை உதவி செய்பவர்க்கு தான் எந்த விதத்தில் தன் நன்றியை செலுத்துவது!இவ்வாறாக சிந்தித்தவள்,
யாரையும் சந்திக்கும் மனநிலையிலா தான் இருக்கிறோம்?அவர்கள் வராததும் ஒரு வகையில் நல்லது தான் என்று மற்றொரு மனம் கூறியது,இப்படியே பல சிந்தனையில் குழம்பிய மனம் இறுதியாக தன்னவனிடம் சென்று நின்றது,
அவளும் அந்த நினைவுகளிலிருந்து வெளி வர தான் நினைக்கிறாள்,ஆனால் மறக்க கூடிய நினைவுகளா அவை,தான் வாழும் காலம் முழுதும் மறக்காது தன்னுடன், ஆழ் மனதில் பதிந்து,உயிருடன் கலந்து விட்ட உணர்வுகள் ஆயிற்றே!
பிறந்ததிலிருந்தே எதற்கும் கண்ணீர் சிந்தாதவள்,வாழ்க்கை முழுவதற்கும் போதும் போதும் எனும் அளவிற்கு துன்பத்தை அனுபவித்து விட்டாள்,இனியும் காலம் பெண்ணவளுக்கு என்ன என்ன வைத்திருக்கிறதோ?
அங்கிருந்து வெளியேறிய சரண் தேவ், தனது நண்பிக்கு அழைத்து ஆதிராவை பற்றி பேசிவிட்டு கிளம்பிவிட்டான்,செல்லும் வழியெங்கும் ஆதிராவின் நினைவுகளே துரத்த, வாகனத்தை அமைதியான இடத்தில் நிறுத்திவிட்டு இருக்கையில் தளர்வாக கண்மூடி அமர்ந்திருந்தான்,
தன் மனம் கவர்ந்தவளை முதல் முறை சந்தித்த தருணம் மூடிய விழிகளுக்குள் விரிந்தது,
அன்று அன்னையின் வேண்டுகோளுக்கு இணங்க கோவிலுக்கு சென்றிருந்தான் கரண் தேவ், தனக்கு எதிரே விழி மூடி அம்பாளை வணங்கி கொண்டிருந்தவளை கண்டதும் அவளது முக பாவனையில் இதழ்கள் அவன் அனுமதி இல்லாது புன்னகைத்தது,
எதிரிலிருப்பவரிடம் பேசுவது போல கண் மூடி முக பாவங்களை மாற்றி மாற்றி மூணு முணுத்து கொண்டிருந்தாள்,இதே போல பிரகாரத்தை சுற்றி உள்ள அனைத்து தெய்வங்களையும் வணங்கியவள் பிரசாதம் வாங்கி சுவைத்து உண்டவள் அதன் சுவையில் மயங்கி இருக்க வேண்டும்,பெண்ணவளின் முகம் அதையே பிரதிபலித்தது,நிதானமாக ரசித்து உண்டவள்,சுற்றி சுற்றி பார்த்து விட்டு இலையை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு மீண்டும் ஒரு முறை பிரசாதம் வாங்க சென்றாள்,அன்று விஷேஷ நாளும் இல்லாது,விடுமுறை நாளும் இல்லாது இருந்ததால்,கோவிலில் கூட்டம் ஏதுமின்றி இருந்தது,அதனால் பிரசாதமும் அதிகமாக இருந்தது,குறைவாக இருந்திருந்தாலும் சென்று மறுமுறை வாங்கி இருப்பாள் போலிருக்கிறது,அவளது செயல் அப்படி தான் இருந்தது,மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து ரசித்து, ருசித்து உண்ட பின் அம்பாளிடம் வந்து கை அசைத்து விடை பெற்று சென்றாள்…
இதுவரை தான் வந்த வேலையை,மறந்து விட்டு அம்பாளை கூட வணங்காது ஒரு பெண்ணின் பின்னே சுத்தி கொண்டிருக்கிறோம் என்பது அவள் செல்லும் வரை உணராதவன்,அவள் சென்றதும் தான் நினைவு வந்ததை போல தலையை கோதி கொண்டே கோவிலினுள் சென்றான்…
சாருலதா,பூமிநாதன் தம்பதியருக்கு இளைய மகனாக பிறந்தவன் சரண் தேவ்,வீட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்தவன்,அண்ணன் அஜய்க்கு பிரியமான தம்பி,இருவருக்கும் ஐந்து வருட இடைவெளி இருந்ததால்,சரண் தனது அண்ணனின் அன்பான விளையாட்டு தம்பியாகினான்,பெற்றவர்கள் கூட தனது தம்பியை கோபமாக ஒரு சொல் சொல்வதற்கு அனுமதிக்க மாட்டான்,செல்லமாக வளர்ந்தாலும்,ஒழுக்கமாக ,விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடனும் கிடைத்ததில் திருப்தி கொள்ளும் குழந்தையாக வளர்ந்தான்…
சிறு வயதிலிருந்தே படிப்பில் சிறந்தவனாக, தனது லட்சியத்தை வகுத்து அதை நோக்கி பயணித்தான்,அதை அடைந்தும் விட்டான்,
அடுத்து திருமணம் பற்றிய பேச்சை வீட்டினர் எடுத்ததும்,
ஆணவன் மனதிலோ கோவிலில் கண்ட பெண்ணின் முகம் அழையா விருந்தாளியாக,
அதை பெரிதாக ஆராயாமல் தனது வேலையில் கவனத்தை செலுத்தினான்,
சரணின் பொற்றோர் தேடி அலைந்து தனது மகனுக்கான வரணாக ஒரு பெண்ணை முடிவு செய்து பெண் பார்க்க செல்வதற்கான ஆயத்தங்களை செய்தனர்,
சரண் தேவ்வின் மனதில் இனம் காண முடியாத உணர்வு ஒன்று அவனை இம்சை செய்தது,காரணம் அறியாது குழம்பியவனை கண்ட அவனது அண்ணன் அஜய்,
சரண்...என்ன ஆச்சு ஏன் கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்க?எதாவது பிரச்சினையா?
அதெல்லாம் எதுவும் இல்லண்ணா,என்னவோ தெரியல மனசுக்கு ஒரு நிலையில இல்லை,
சரி சரண், உன்கிட்ட பொண்ணு பேட்டோ குடுத்தமே பார்த்துட்டியா? உனக்கு சம்மதம் தானே!என தன் அண்ணன் கேட்டதும் தான் தான் இன்னும் பெண்ணின் புகைப்படத்தையே பார்க்காதது நினைவில் தோன்றியது,
இல்லண்ணா மறந்துட்டேன், நீங்க போங்க நான் பாக்குறேன் என்றவனின் மீது சந்தேகம் தோன்ற
"உனக்கு கல்யாணத்துல விருப்பம் தானே சரண்,இல்ல வேற யாரையாவது விரும்புறியா?எ"ன கேட்ட அண்ணனிடம் இல்லை என்று மறுக்க தோன்றாது அமைதியாக நின்றான்,
இந்த நிலை அவனுக்கே புதிது,இதுவரை அந்த கோணத்தில் சிந்திக்காதவனின் மனம் இப்போது சிந்தித்தது,திருமணம் என்று சொன்னதும் ஏன் அந்த பெண்ணின் முகம் நினைவில் வந்தது?ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்த பெண், இத்தனை மாதங்கள் கழித்தும் மறக்காது நினைவில் தோன்றி இம்சை செய்வது ஏன்? ஒருவேலை அண்ணன் சொல்வது போல இது காதலாக இருக்குமோ?அதனால் தான் திருமணத்திற்காக பார்த்த பெண்ணின் புகைப்படத்தை கூட பார்க்க தோன்றவில்லையோ!என பல கேள்விகள் மனதில் எழ, தனது பதிலுக்காக உடன்பிறந்தவன் காத்துக்கொண்டிருப்பதை உணர்ந்து, நான் காலையில பேசுறேன் ண்ணா,இப்போ என நெற்றியை நீவியவனிடம்
தான் நினைத்ததை போல தனது தம்பி ஏதோ குழப்பத்தில் இருப்பதை உணர்ந்து,"புரியிது சரண் நீ நிதானமா யோசித்து சொல்லு,நான் வரேன்"என அங்கிருந்து செனாறான்,
அஜய் சென்றதும் கண்மூடி படுக்கையில் விழந்தவன் மனதிரையில் தோன்றிய பெண்ணவளை நினைத்து புன்னகை பூத்தான் சரண் தேவ்…
வெகு நேரமாக தனது சிந்தைனயில் மூழ்கியிருந்தவன் தொலை பேசியின் அழைப்பில் சுயம் பெற்று அலைபேசியில் அழைத்த அன்னைக்கு பதிலளித்தான்,மீண்டும் மனம் அவளது நினைவுகளிடமே சிக்கி தவித்தது,
அன்று சந்தித்தது இன்று போல் தோன்றினாலும்,அதற்குள் எத்தனையோ நடந்து விட்டது,
தனது காதலை தாமதமாக உணர்ந்தவன் பெண்ணவளை சேரும் முன் அவள் வேறு ஒருவருக்கு சொந்தமாகி இருந்தாள்,
முன்பே தன் காதலை உணர்ந்திருந்தால்!அவளிடம் தன் விருப்பத்தை கூறியிருந்தால்!இப்போது நிதழ்ந்த எதுவும் நடந்திருக்காதோ?என்ற கேள்வி தோன்றி இம்சித்தது,
இனி தனது வாழ்வில் என்ன?என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்தது …
வருவாள்.....