All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தவணை முறையில் காதல் (மரணம்) நிகழும் - 96 - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து 'அழகிய சங்கமம்' - 2 நாவல் போட்டி எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் எழுத்தாளருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் எழுத்தாளரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி எழுத்தாளரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே‌‍‌..,

நான் தான் கதை எண்‌ 96 எல்லாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. எல்லாரும் இனிப்பு சாப்பிட்டு தெம்பாக இருப்பீங்க..‌ அப்படியே இந்த முன்னோட்டத்தையும் சுடசுட படிச்சுடுங்க....

தவணை முறையில் காதல் (மரணம்) நிகழும்



அன்பில் நீ திளைக்க….,
வஞ்சத்தில் நான் திளைக்க…..,

நீ அறிந்து (அறியா) செய்த தவறால்….,
என் உயிரானவரை இழந்ததை நீ அறிவாயா….,,

யார் சொன்னது காதல் மட்டும் தான் ஏழு கடல் ஏழு மலை தாண்டி சென்று தன் உயிரானவர்களை சென்று அடையும் என்று….,

நான் உன் மேல் கொண்ட வஞ்சமும் ஏழு கடல் ஏழு மலை தாண்டி உன்னிடம் வந்தடையும்…..,

நீ செய்த பாவத்திற்கான தண்டனை மரண தண்டனை மட்டுமே…

வருகிறேன்…

என் ‌வஞ்சத்தை தீர்த்து கொள்ள….உன்னை மரணிக்க செய்ய வருகிறேன்……

மரணத்தை ‌எதிர் கொள்ள தயராகு…,

The game is begining for me and End for you...👽👽👽👽

 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே‌‍‌‌‌,
நான் தான் கதை எண்‌ 96, இதோ தவணை முறையில் காதல் (மரணம்) நிகழும் கதையின் முதல் அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.படித்து விட்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள் மக்களே.

தவணை முறையில் காதல் (மரணம்) நிகழும் 1


தன்‌ சோடா‌ புட்டி கண்ணாடியை சரி செய்தவாறே அன்றைய நாளிதழில் உள்ள வேலைவாய்ப்புக்கான விளம்பரங்களை தேடிக் கொண்டிருந்தாள் அவள் பூமிகா. அவள் தேடுவது கிடைக்காமல் போக சலிப்படைந்த அவள் அதை தூக்கி கடாசி விட்டு அடுத்த நாளிதழை எடுத்தாள்.

அவள் வீசிய நாளிதழ் கன கச்சிதமாக ஏற்கனவே அவள் வீசி வைத்திருந்த தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து மூலையில் ஐக்கியமானது.
தற்பொழுது அவள் கைகளில் பாந்தமாக அமர்ந்திருந்தது ஆங்கில நாளிதழ் இதிலாவது தனக்கு ஏற்ற வேலை கண்ணில் படுமா?? என்று ஏற்கனவே அவித்த முழு முட்டை போல் இருந்த அவளது கண்களுக்கு மேலே எக்ஸ்ட்ராவாக இரண்டு முட்டைகளை வைத்தது போல் இருக்கும் அவளது கண்ணாடியை நொடிக்கு ஒரு முறை தன் ஆள் காட்டி விரலால் மேலே தூக்கி விட்டவாறே ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

திடீரென அவளது முட்டைக் கண்கள் இரண்டும் தவுசண்ட் வாட்ஸ் பல்பு போல பளீரிட்டன. கிடைத்து விட்டது அவள் தேடிய அவள் படிப்பிற்கு ஏற்ற வேலை வேகவேகமாக அதன் விபரங்களை ஆராய்ந்தாள்.

எல்லாவற்றையும் ஆராய்ந்துப் பார்த்தவாறே வந்தவளின் முகம் அந்த கம்பெனியின் முகவரியை பார்த்ததும் தொங்கிப் போயிற்று. அந்த கம்பெனி இருக்கும் இடம் பூனே என்று‌ அச்சிடப்பட்டிருந்தது.
ஆம் அவள் பார்த்து வைத்திருந்த விளம்பரம் பூனேவில் உள்ள
ஷர்மாஷ் டைல்ஸ் & செராமிக் நிறுவனம்.

இந்த நிறுவனம் பூனேவில் மிகவும் பிரபலமான மற்றும் மக்களின் மத்தியிலும் மார்க்கெட் நிலவரப் படியும் இன்றைய
அளவிலும் முதலிடத்தில் இருக்கிறது. இதன் தரமான மற்றும் நியாயமான விலையும் பொருட்களுமே இந்த நிறுவனத்தின் முதலிடத்திற்கான காரணமாகும்.
வரவேற்பாளர்கள்(Receptionist) ஆட்கள் தேவை எனவும் அதற்கு தகுதிகளாக நல்ல ஆங்கிலப் புலமையும்…, ஹிந்தியும் தெரிந்திருக்க ‌வேண்டும் என கேட்டிருந்தனர். அதைப் பார்த்து தான் இவள் சந்தோஷமடைந்தது.

ஏனெனில் இவள் படித்தது (B.A ஆங்கிலம்) மற்றும் பள்ளியில் செகண்ட் லாங்க்வேஜ்ஜாக (second language) ஹிந்தி முடித்திருந்தார். எனவே, ஆங்கிலமும் ஹிந்தியும் இவளுக்கு சரளமாகவே வரும்.
'போச்சா இந்த வேலையும் என்னடா எல்லாமே நமக்கு தகுந்த மாதிரி இருக்கேன்னு கொஞ்சமா சந்தோஷப்பட்டுட்டேன் அதுக்கும் கடவுள் வச்சா பாரு ஆப்பு பூனேவுல கொண்டும் போய்…,ஹ்ம்ம் எல்லாம் விதி என மனதில் நினைத்து பெருமூச்செறிந்தாள்.'

ஏனோ அவளுக்கு இந்த வேலையை விட மனமில்லை சம்பளம் இவள் நினைத்ததை விட அதிகமாகவே போட்டிருந்தது. மொழியை பற்றியும் இவளுக்கு கவலை இல்லை சமாளித்துக் கொள்வாள். அவளுக்கு பிரச்சனையே அந்த நிறுவனம்
இருக்கும் இடம் தான்.எதற்கும் இருக்கட்டும் என அந்த விளம்பரத்தை வெட்டி எடுத்து வைத்துக் கொண்டவள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியையும் பார்த்துக் குறித்து வைத்துக் கொண்டாள்.

கடிகாரத்தின்‌ ஓசையில் கலைந்தவள் தூக்கி எறிந்திருந்த நாளிதழ்களை எல்லாம் எடுத்து அழகாக அடுக்கி வைத்தவள், முதல் வேலையாக தான் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டினாள்.

கழட்டும் போது அவனிடம் எப்பொழுதும் வாங்கும் திட்டு," நீ என்ன குருடியாடி இல்ல கண்ணுல ஏதும் பிரச்சனையா ஒரு மண்ணும் இல்ல லேசா தலை வலிச்சதுக்கு போய் டாக்டர் கிட்ட காட்டி கண்ணாடி வாங்குன அதுவும் எவ்வளவோ லேட்டஸ்ட் மாடல் இருக்கறப்போ இந்த பாக்கியராஜ் கண்ணாடி தான் வேணும்ணு அடம் பிடிச்சு வாங்கிக் கிட்ட சரி வாங்குனது தான்‌ வாங்குன தலை வலிக்கிறப்ப மட்டும் போட்டியான்னு கேட்டா அதுவும் இல்ல கதைப் புத்தகம் படிச்சா உனக்கு தலைவலிக்கும்னு தெரிஞ்சே இது போட்டுகிட்டு படிச்சு படிச்சு இப்ப சாதாரணமா ஒரு நியூஸ் பேப்பர் படிக்கும் போது கூட உன்னால் இந்த கண்ணாடி இல்லாமா இருக்க முடிய மாட்டேங்குது கிட்ட தட்ட இதுக்கு நீ அடிக்ட் ஆகிட்ட…,'என்ற வார்த்தைகள் ஞாபகம் வர மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்.

அவள் அடிக்கடி நினைத்துப் பார்ப்பது உண்டு,'ஒரு வேளை அவன் சொல்லுற மாதிரி இந்த கண்ணாடி நம்ம உடம்புல ஒரு பார்ட்டாவே மாறிடுச்சோ..'என‌ என்றும் போல் இன்றும் நினைத்துக் கொண்டவள்,'இந்த பழக்கத்தை நம்ம சீக்கிரமே மாத்திக்கணும் என தனக்குத் தானே நினைத்துக் கொண்டாள்' நினைக்க மட்டும் தான் அவளால் முடிந்தது ஆனால் இத்தனை வருடங்களில் அவளால் இப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள இயலவில்லை எதையாவது வாசிக்க வேண்டும்‌ என்று நினைத்தாலே அல்லது வெளியே செல்ல நினைத்தாலே அவளையும்‌ அறியாது கைகள் தன் பாட்டிற்கு கண்ணாடியை தேட ஆரம்பித்து விடுகிறது.

மனதில் யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தாலும் கைகள் அதன் பாட்டுக்கு வேலைகளை செய்ய ஆரம்பித்திருந்தன. எழுந்து வீட்டை கூட்டி முடித்தவள் அடுப்பில் இட்லியை ஊற்றி வைத்து விட்டு பக்கத்தில் குக்கரில் சாம்பாருக்கு வைத்தவள் குளிக்க சென்றாள். குளித்து முடித்து வந்தவள் இட்லியையும் சாம்பாரையும் இறக்கினாள். தனக்கு இரண்டு இட்லிகளை வைத்தவள் உண்டு முடித்து மணி பார்க்க எட்டு முப்பது.

அவசர அவசரமாக தலைவாரிப் பொட்டிட்டவளின் கண்கள் அவளையும் அறியாது இடது பக்க கன்னத்தில் மூக்கிற்க்கு சற்று பக்கவாட்டில் இருந்த தழும்பில் ஒரு வினாடி அதில் நிலைத்து பின் கலைந்தது.தெய்வமாகி விட்டு தந்தையின் புகைப்படம் முன் நின்று விளக்கேற்றி வணங்கினாள்.

பின் மதிய உணவிற்கு என எடுத்து வைத்திருந்த தயிர் சாதத்தையும் ஒரு டிபனில் அடக்கிக் கொண்டவள் தன்னுடைய ஹேன்ட் பேக்கில் அனைத்தையும்‌ எடுத்து வைத்து விட்டு மற்றொரு தட்டில் நான்கு இட்லிகளையும் ஒரு கிண்ணத்தில் சாம்பாரையும் எடுத்துக் கொண்டவள் அந்த அறைக்குள் நுழைந்தாள்.

நுழைந்தவள் அங்கிருந்த டேபிள் மீது இவற்றை வைத்து விட்டு உறங்கி கொண்டிருந்த தன் தாயின் அருகில் சென்றாள். நிர்மலமான முகத்துடன் ஒரு குழந்தையை போல் தூங்கி கொண்டிருந்தார் கோமதி. 'ஒரு காலத்தில் சேவலுடன் போட்டி போட்டு அது கூவும் முன் விழிப்பவர் ஆயிற்றே.., இன்றோ ஆதவன் எழுந்து பல மணி துளிகள் ஆன பின்னும் உறங்கிக் கொண்டிருக்கிறார். அனைத்தும் மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் ஆம் தன்னையே மறந்து தான் யார் என்ற நினைவை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்'. ஒரு பெருமூச்சுடன் நினைவுகளை ஒதுக்கி வைத்தவள் அவரை எழுப்பினாள்.

"அம்மா…. ம்மா!! எழுந்துக்கோங்க ம்மா விடிச்சிருச்சுப் பாருங்க.."என்றாள்.அவளின்‌ குரலில் குழந்தை போல் சிணுங்கியவர் மீண்டும் உறக்கத்தை தழுவினார்.

நேரமாவதை உணர்ந்து அவரை விடாப்பிடியாக எழுப்பியவள் கூட்டிக் கொண்டு பல் துலக்கி முகம் கழுவ வைத்தவள் மீண்டும் அறைக்குள் அழைத்து வந்தாள்.

அவள் கொடுத்த தட்டை வாங்காது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவரை காண காண அவளிற்கு சிரிப்பு வந்தது கோபமாக இருக்கிறாராம். தன் சிரிப்பினை விழுங்கியவள் சிறு வயதில் கோமதி அவளுக்கு உணவுட்டுவது போல்,"என் செல்ல அம்மால என் பட்டுக் குட்டியில்ல.., நான்‌ ஒவ்வொரு வாயா ஊட்டுவேணாம் நீங்க அது சமத்த சாப்புடுவீங்களாம் எனக்கு வேலைக்கு டயமாச்சும்மா நீங்க எல்லா இட்லியையும் சாப்பிட்டு முடிச்சா நான் உங்கள வேலைக்கு போயிட்டு வந்துட்டு சாயங்காலம் பார்க்குக்கு கூட்டிட்டு போறேன் சரியா…" என அவரை கொஞ்சியவாறு அனைத்து இட்லிகளையும் ஊட்டி முடித்திருந்தாள்.

உண்டு முடித்ததும் அவருக்கான மாத்திரைகளை எடுத்து தந்தவள் அப்போது தான் கவனித்தாள் மருந்து தீர்த்துக் போயிருப்பதை,'அச்சோ இத எப்படி கவனிக்காம போனேன் இன்னைக்கு ஈவினிங் வரும் போது மறக்காம வாங்கிட்டு வந்துடணும்..' என நினைத்தவள் அனைத்தையும் ஒதுங்க வைத்து விட்டு வசந்தி அக்காவிற்காக காத்திருந்தாள்.

சில நிமிடங்களில் வாசலில் வேகவேகமாக காலணியை கழட்டும் ஓசையும் பின் வேக எட்டுகளுடன் வீட்டினுள் நுழையும் காலடி ஓசையும் கேட்டது. அதனை தொடர்ந்து பூமிகா இருந்த அறையினுள் நுழைந்தார் வசந்தி நாற்பதைந்தை கடந்தவர்.

"சாரி சாரி பூமி கொஞ்சம் லேட்டாயிடுச்சு…" என்றவாரே வந்தார்.அவரின் பதட்டத்தை கவனித்தவள்," ரிலாக்ஸ் ரிலாக்ஸ் அக்கா பதட்ட படாதிங்க அவ்வளவு எல்லாம் லேட் ஆகல.., கொஞ்சம் தண்ணி குடிக்க" என்றவள் அவருக்கு தண்ணீரை கொடுத்து விட்டு,"அக்கா அம்மாக்கு சாப்பாடு கொடுத்து மருந்தும் கொடுத்துட்டேன் தூங்குறாங்க எழுந்த கொஞ்ச நேரம் வெளியே வாக்கிங் மாதிரி கூட்டிட்டு போங்க மதியத்துக்கு சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் அது தந்துட்டு மருந்து தந்துடுங்க நா கிளம்புறேன்.." என்றவள் தன் ஹேண்ட் பேக்கை எடுத்து கொண்டு வெளியேற அவள் பின்னே அவசரமாக வந்தார் வசந்தி.
அவர் வருகையை கவனித்தாள்,"என்னக்கா ஏதாச்சும் சொல்லணும்மா…" எனக் கேட்டாள்."ஆமா பூமிகா அது வந்து.."என‌அவர் தயங்கி இழுக்க, அவளோ"சொல்லுங்க அக்கா என்ன விஷயம்.."என அவரை ஊக்க..,"என் பையன் என்ன அங்க சிங்கப்பூருக்கு கூப்புடுறான் பூமிகா.."என்றார்.

அதற்கு அவளோ,"ஓஓ…. அப்புடியா எத்தன நாளைக்கு அக்கா" என்றாள்.ஏனெனில் அவர் அடிக்கடி இது போல சென்று வருவார் அந்த எண்ணத்தில் தான் அப்படி கேட்டாள்."நாள் கணக்கு எல்லாம் இல்ல பூமிகா நிரந்தரமாவே அங்க வரச் சொல்லிட்டான்.." என்றார் சிறு குரலில்.அதை கேட்டு முதலில் அதிர்ந்தாள் பின் தன்னை சமாளித்துக் கொண்டு,"நல்ல விஷயம் தானக்கா எப்ப கிளம்புறீங்க.."என்றாள்.

"இன்னும் ஒரு வாரத்துல பூமிகா உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே.., திடீர்னு போன் பண்ணி இந்த விஷயத்த சொல்லுறான். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலம்மா." என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

அவரின் வருத்தத்தை கண்டு கொண்டவள் அவரை தேற்றும் பொருட்டு,"விடுங்க அக்கா இதுக்கு எல்லாமா வருத்தப்படுவீங்க என்ன நீங்க இல்லனா அம்மாவ பாத்துக்க வேற ஆள் தேடணும் உங்கள் மாதிரி நம்பிக்கையானவங்க கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் பரவாயில்லை அந்த நா பாத்துக்குறேன் நீங்க அத நெனச்சு கவலைப்படாதீங்க.. சரிக்கா எனக்கு நேரமாச்சு நா கிளம்புறேன் ஈவினிங் பாக்கலாம்" என்றவள் வெளியேறினாள்.

பூமிகாவின் வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். வழமை போல் அன்று நடந்து சென்று கொண்டிருந்தவளுக்கு எண்ணம் முழுவதும் வசந்தி அக்காவே வீற்றிருந்தார். அவரிடம் சொல்லி விட்டாள் தான் பார்த்துக் கொள்வதாக ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயமாக அவளுக்கு தோன்றவில்லை.

வசந்தி அக்காவின் கணவர் ராணுவத்தில் பணியாற்றியவர். இவர் இங்கே செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பூமிகாவின் தாய் கோமதி சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் தான் வசந்தியும் பணியாற்றினார். கோமதியை வீட்டிலிருந்தே கவனித்து கொள்ள ஆள் இல்லாமல் பூமிகா தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் தானாகவே வந்து உதவி கரம் நீட்டினார்.

முதலில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சென்று கொண்டிருந்தவர் ஓய்வு பெற்ற பின்பு முழு நேரம் வேலைக்கு வந்தார். அவருக்கு ஒற்றைப் புதல்வன் சிங்கப்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

கடந்த மூன்று வருடங்களாக வசந்தி கோமதியை கவனிக்கும் பொறுப்பேற்றிருந்தார். அவரது மகன் சிங்கப்பூரிலே செட்டிலாகி விட வசந்தியும் அவரது கணவரும் அடிக்கடி சென்று மகனை மட்டும் பார்த்து வருவர். இத்தனை வருடங்கள் கழித்து இப்போது தான் அவர்களது மகன் அவர்களை அங்கு வரும்படி கூறுகிறான். வசந்திக்கும் மகனிடம் செல்ல விருப்பம் தான் ஆனால் அவர் தன்னை நினைத்து தயங்குவது புரிந்து தான் பூமிகா அவரிடம் அவ்வாறு கூறினாள். அவரது விருப்பத்திற்கு தடையாக அவள் இருப்பதை விரும்பவில்லை பூமிகா.

யோசனைகள் பல இருந்தாலும் இதோ பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட்டாள். அவள் செல்லும் பேருந்து சில நிமிடங்களில் வந்து விட கூட்ட நெரிசலில் அடித்து பிடித்து ஒரு வழியாக ஏறியும் விட்டாள். அதுவரை அகன்றிருந்த யோசனைகள் மீண்டும் அவள் மனதில் இடம் பிடித்து விட கவலையுடன் புறப்பட்டாள்.

********************

"டேய் இன்னும் எவ்வளவு நேரம் தான் டா இப்படியே இந்த புதருக்குள்ள பூச்சி கடில நிக்கிறது ஊர்ல இருக்கிற எல்லா பூச்சியும் இங்க தான் குடும்பம் நடத்துது போல…, வெரைட்டி வெரைட்டியா இருக்குதுங்க…,"என தன்னருகே நின்றவனிடம் புலம்பி தள்ளினான் அவன். அதற்கு‌ அவன் அருகில் நின்றவனோ,"பின்ன டாப் மோஸ்ட்ல இருக்குற ஷர்மா பிரதர்ஸ்ஸ போட்டோ எடுக்கணும்னா சும்மாவா இந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுத்து தான் ஆகணும் மச்சி.."என்றான் மற்றொருவன்.

"ச்சே.., மனுஷனாடா இவனுங்க இவுங்க போட்டாவ உலகத்துக்கு காட்டுனா என்னாவாம்…, அப்புடி பண்ணியிருந்தா நம்ம இப்படி அவஸ்தை பட வேண்டியிருக்காதுல.."என தனது ஆதங்கத்தை கொட்டினான் முதலில் பேசியவன்."அதுக்கு பேரு தன்னடக்கம் மச்சி அவுங்களுக்கு இந்த வெட்டி பந்தா பப்ளிசிட்டி எல்லாம் பிடிக்காது என்று அர்த்தம்…"என்றான் அவன் நண்பன்.

நண்பனின் பதிலில் கடுப்பான வானவன்,"இவனுங்க தன்னடக்கத்துல தீய வைக்க.., ஏண்டா என்னத்தான் பந்தா பண்றது பிடிக்கலனாலும் அதுக்குன்னு இவுங்க போட்டோ கூடவா வெளியிட கூடாது. வருஷத்துக்கு ஒரு தடவ இவுங்க பெஸ்ட் பிஸ்னஸ் மேன் அவார்டு வாங்கும் போது தான் போட்டோ எடுக்க முடியுது அப்பவும் சரியா பங்ஷன் ஆரம்பிக்கும் போது வராங்க முடிஞ்ச அடுத்த செகண்ட் கிளம்பிடுவாங்க…, அதுக்குள்ள எத்தன போட்டோ தான்டா எடுக்குறது அப்படியே எடுத்தாலும் அதுல கண்ணு சரியில்ல இதுல மூக்கு காணோம்னு எல்லாத்தையும் எடிட் பண்ணிட்டா கடைசியில் ஒத்த போட்டோ தான் மிஞ்சுது..""அந்த போட்டோ எல்லா பத்திரிக்கையிலும் வந்துடுது..,"என்றான்.

அதற்கு மற்றொருவனோ,"அந்த காரணத்த சொல்லி தான் ஷர்மா பிரதர்ஸ் அவங்க பேமிலியோட இருக்கும் போட்டோவ நம்மள எடுத்துட்டு வர சொல்லி மேலிடம் நமக்கு ஆர்டர் போட்டு இருக்காங்க…., அதுக்கு தான் இந்த ரெண்டு மாசமா நாயா பேயா இவுங்க பின்னாடி அலைஞ்சு ஷர்மா பிரதர்ஸ் அவங்க பேமிலியோட மன்த்லி ஒன்ஸ் இங்கே வந்து தங்குற இந்த கெஸ்ட் ஹவுஸ்ஸ கண்டு பிடிச்சிருக்கோம்…, நம்ம மட்டும் இவுங்கள போட்டோ எடுத்துட்டு போகல அந்த சொட்டை எடிட்டர் நம்ம மூஞ்சி மேலயே காரி துப்புவான்…., அவன் மூஞ்சில கரிய பூசுறதுக்காவே இன்னைக்கு போட்டோ எடுக்குறோம் அத நம்ம பத்திரிக்கையில போடுறோம் ஃபேமஸ் ஆகுறோம்…."என அவன் சபதமிட்டு கொண்டிருக்கையிலேயே
"டேய் போதும் நீ சபதம் போட்டு கிழிச்சது அங்க வந்துட்டாங்க பாரு கேமராவை எடுடா….," என்றவன் மெல்ல நகர்ந்து புதரை விட்டு வெளியே வந்தவன் அவர்களை கவனிக்கலானான்.

ஆறு அடிக்கு அதிகம் இல்லாமல் ஐந்தரை அடிக்கு குறைவும் இல்லாமல் உயரத்துடன் உயரத்திற்கு ஏற்ற‌ உடல் வாகுடன் தினமும் உடற்பயிற்சி செய்ததன் விளைவாக முறுக்கேறிய புஜங்களுடன் வாக்கிங் செல்வதற்கு தோதான உடையுடன் கம்பீரமாக வெளி வந்தான் ஆதேஷ் ஷர்மா. மீசை வைத்த ஆண்கள் ஒரு வகை அழகென்றால் மீசை இல்லாமல் இருக்கும் இவன் அழகு இல்லை என்று யாரும் சொல்லி விட இயலாது.

அவன் பின்னே அவனுக்கு குறையாத கம்பீரத்துடன் விழிகளில் எப்பொழுதும் இருக்கும் குறும்புடன் இதழ்களில் அழகிய புன்னையை தவழ விட்டவரே வெளிவந்தான் விஹான் ஷர்மா. அண்ணனை போல் அல்லாமல் ட்ரீம் செய்யப்பட்ட தாடி மீசையுடன் இருந்தான் அவன்.அவன் முகத்திற்கு சற்றே அழகு சேர்த்தன இடது பக்க புருவத்தின் மேல் இருந்த அழகிய மச்சம்.ஒரு டீசர்ட் ஷாட்ஸ்ஸூடன் வந்தவனை கண்ட ஆதேஷ் முறைத்து பார்த்தான்.

அண்ணனின் முறைப்பை அசால்ட்டாக புறம் தள்ளியவன் அழகிய புன்னகையை சிந்தியவன்"ஷால் வீ கோ பய்யா???என்றவன் முன்னே நடக்க,அவனை முறைத்தவாரு தானும் தம்பியை பின்பற்றி நடந்தான்.

வீட்டை சுற்றியுள்ள இடத்தில் சிறிது தூரம் நடந்தவர்கள் பின் சிறிது தூரம் ஓடினர். நடந்தவாறும் ஓடியவாறும் இருந்தனர். இடை இடையே அலுவலக விஷயங்களையும் பேசியவாறே வந்தனர். அவர்களின் செயலில் கடுப்பாகி போனது என்னவோ புகைப்படம் எடுக்க வந்த இருவர் தான்.

"ஷ்ஷ்ஷ்…… முடியல டா ஒண்ணு வாக்கிங் போகணும் இல்ல ஜாகிங் போகணும் இது என்னடா இவனுங்க ரெண்டுத்தையும் கலந்து செய்யுறாங்க ஒரு போட்டோ கூட இன்னும் உருப்படியா எடுக்கல…"என அவன் சலித்து கொண்டிருக்கும் வேளையில் அண்ணன் தம்பி இருவரும் இவர்கள் ஒளிந்திருந்த இடத்திற்கு வந்திருந்தனர்.

அவர்களை அருகில் கண்ட
ஆர்வத்தில் எப்படியாவது இந்த சான்ஸ்ஸை விட்டு விடக் கூடாது என நினைத்தவன் ஆர்வக் கோளாறில் அருகிலிருந்த முட் செடிகளை கவனிக்காது கால்களை அதில் வைத்திருந்தான்.

நன்றாக வளர்ந்திருந்த காட்டு முட்கள் அவன் பாதங்களை பதம் பார்த்திருக்க தன்னையும் அறியாது வலியில்,"ஆ..ஆ.. அவுச்.." என சிறிது சத்தமாக கத்தி விட்டான்.அதனை உணர்ந்தவன் அடுத்த நொடி தன் வாயினை இறுக பற்றியவன் கீழே அமர்ந்தான்.

அவன் அமர்ந்த வேகத்தில் அவன் நின்றிருந்த சிறிய கல்லும் சரிந்து மற்ற கல்லுடன் மோதி அதன் பங்கிற்கு சிறிது சத்தத்தை எழுப்பியிருந்தது. சத்தத்தை கேட்ட அண்ணன் தம்பி இருவரும் ஒரு நொடி நின்று அவ்விடத்தை தங்களது கூர்மையான கண்களால் அளவிட்டவர்கள்,பின் ஒருவரை ஒருவர் பார்த்து தோள்களை குலுக்கி கொண்டவர்கள் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.

இங்கே நெற்றியில் வியர்வை பூக்கள் பூக்க மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு எங்கே அண்ணன் தம்பி இருவரும் தங்களை பார்த்து விட்டார்களோ என்ற அச்சத்தில் அமர்ந்திருந்தனர் புகைப்படம் எடுக்க வந்தவர்கள்.

சிறிது நேரம் எதுவும் நடக்காமல் போக தங்கள் அச்சத்தை சிறிது விட்டொழித்தவர்கள் மெல்ல எழுந்து நின்று ஷர்மா பிரதர்ஸ்ஸை தேடினார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவர்களை காணது குழம்பியவர்கள் இன்னும் சற்றே எக்கி அவர்களை தேட முனைந்த போது இருவரின் முதுகிலும் "சுளீர்" என்று அடி விழுந்தது.

பயத்திலும் வலியிலும் முகத்தை சுருக்கியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மெல்ல பின்புறம் திரும்பி பார்த்தவர்களின் முகம் அதிர்ச்சியை வெளிக் காட்டியது.ஏனெனில் அங்கே கைகளில் நீண்ட குச்சியுடன் கண்களில் முறைப்புடனும், இதழ்களில் எள்ளல் புன்னகையுடன் நின்றிருந்தாள் ஆதேஷ் மற்றும் விஹானின் செல்ல இளவரசி யாஸ்மினி ஷர்மா.


 
Last edited:

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே‌‍‌‌‌,

#கதை எண் 96,
#தவணை முறையில் காதல் (மரணம்) நிகழும்

என்ன யாராவது தேடுனீங்களா ஹீ ஹீ ஹீ தேடிருக்க மாட்டீங்கன்னு தெரியும் இருந்தாலும் அடுத்த எபியோட வந்துட்டேன்.இராண்டாயிரம் வார்த்தைக்கு மேல் டைம் பண்ணியிருக்கேன் மக்களே.. ப்ளீச் படிச்சுட்டு ஒரு ஒத்த கமென்ட் சொன்னீங்கன்னா சந்தோஷமா இருக்கும்.




தவணை முறையில் காதல் மரணம் நிகழும் 2

பூமிகாவின் யோசனை முழுவதும் அவளது தாயை பற்றியே இருந்தது..,'முதலில் மருத்துவர்கள் கோமா என்றார்கள் கஷ்டப்பட்டு அதிலிருந்து அவரை மீட்டுக் கொண்டு வந்தாள் அதிர்ச்சியில் பழையதை மறந்து விட்டார்கள் அம்னீஷியா என்றார்கள்.., பின் செலக்டட் அம்னீஷியா என்றார்கள்…, பின் அவ்வப்பொழுது ஒன்றிரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும்.., சில சமயம் மூர்க்கத்தனமாகவும், சில சமயம் குழந்தை தனமாகவும் நடந்து கொள்வார் என்றார்கள்.

ஆக மொத்தம் இது தான் நிலைமை என உறுதியாக எவரும் கூறவில்லை..,அவரின் போக்கில் விட்டுவிட கூறினார்கள்.அவருக்காக நினைவு திரும்பும் போது திரும்பட்டும் மருந்து மாத்திரைகளை மட்டும் தவறாது எடுக்க வேண்டும் என கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.' தற்பொழுது மருத்துவரின் ஆலோசனைப்படி தான் பூமிகா கோமதியை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

நடத்துனரின் குரலில் யோசனை கலைந்த பூமிகா தான் இறங்கும் இடம் வந்து விட்டதை உணர்ந்தவள் வேகமாக இறங்கினாள். அவள் வேலை செய்யும் பள்ளிக்கு சென்றடைந்து போது மணி ஒன்பது இருபது. வேக வேகமாக பதிவேட்டில் கையொப்பம் இட்டவள் தன் இருப்பிடத்திற்கு சென்றமர்ந்தாள். அன்றைய காலை வகுப்பு ஏதும் இல்லாததால் அடுத்த வகுப்பிற்கான குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தாள்.சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு அவள் திரும்பி பார்க்க கையில் சர்குலர் உடன் நின்று கொண்டிருந்தார் அப்பள்ளியின் பியூன்.அவளிடம் சர்குலரை கொடுக்க வாங்கி படித்து விட்டு கையொப்பம் இட்டு அனுப்பி விட்டாள். சர்குலரில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு மீட்டிங் என போட்டிருந்தது. பூமிகா அப் பள்ளியில் வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன.என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே தன் வேலைகளில் கவனம் செலுத்தினாள்.

அன்றைய நாளில் பூமிகாவின் வாழ்வில் சனி பகவான் தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்தாரோ?? சோதனை மேல் சோதனைகளை கொடுத்து கொண்டிருந்தார். மதிய உணவை கூட உண்ணாது அதனை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள். சற்று முன் தான் மீட்டிங்கிற்கு சென்று வந்திருந்தாள். அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் அவள் வெளிவரவில்லை. கண்கள் அழுகைக்கு தயாராக உதடுகளை கடித்து அதை அடக்கியவள் உணவினை மூடி வைத்து விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள். பிறர் கவனத்தை இவரால் வகையில் தனிமையை தேடிச் சென்றவளுக்கு அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெளிவந்திருந்தது.

'இனி அடுத்து என்ன செய்வது எங்கு சென்று வேலை தேடுவது…' என நினைத்துப் பார்த்தவளுக்கு எந்த வழியும் புலப்படவில்லை. 'இப்படி திடீரென வேலையை விட்டு தூங்குவார்கள் என அவள் நினைக்கவில்லை'. அடுத்து என்ன?? என்ற கேள்வி அவள் முன் பூதாகரமாக தோன்றி மறைந்தது.
சற்றுமுன் மீட்டிங்கில் நடந்தவை அவள் கண் முன் தோன்றியது. புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் அனைவரும் மீட்டிங் ரூமில் தலைமை ஆசிரியருக்காக காத்துக் கொண்டிருந்தனர். அவரும் வந்தார், வந்தவர் எடுத்ததும் தான் பேச போகும் விஷயத்திற்கு வருத்தம் தெரிவித்தவர் B.Ed(ஆசிரியர் பயிற்சி படிப்பு) டிகிரி இல்லாத ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்கி விட்டதாக தெரிவித்தார். அவரது அறிவிப்பில் அனைவரும் அதிர்ந்து அவரைப் பார்த்தவர்கள் அதற்கான காரணத்தை கேட்க,அவரும் தற்போது அரசு இப் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது என கூறினார் அதாவது பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதிகளாக ஆசிரியர் பயிற்சி படிப்பு கட்டாயம் எனவும் கல்லூரி பேராசிரியர்களுக்கு MPhil மற்றும் PhD படிப்பை அறிவித்து உள்ளனர் என அவர் தெரிவித்தார். எனவே தான் தலைமை ஆசிரியர் B.Ed படிப்பு இல்லாதவர்களை நீக்க போவதாகவும் மேலும் அவர்களுக்கு கால அவகாசமாக ஒரு மாதம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தவர். இந்த ஒரு மாதத்திற்குள் அவர்கள் வேறு வேலை தேடிக் கொள்ளுமாறு கூறியவர் அதுவரை அவர்கள் இப்பள்ளியிலே பணியாற்றலாம் என அனுமதி வழங்கியவர் மேலும் ஒரு மாதத்திற்கு மேல் ஆனால் பள்ளி நிர்வாகமே அவர்களை நீக்கி விடும் என எச்சரிக்கையையும் வழங்கியவர், பேச்சு முடிந்தது எனும் விதமாக கூட்டத்தை கலைத்து விட்டார்.

அதை நினைத்து தான் தற்போது பூமிகா துயரப்பட்டு கொண்டு இருக்கிறாள். ஏனெனில் இவள் படித்தது வெறும் (B.A) மட்டுமே.
'இந்த ஒரு மாதத்துக்குள் எங்கு சென்று வேலை தேடுவது அப்படியே தேடினாலும் இதுப் போல் பாதுகாப்பான வேலை அமையுமா???,' என்றெல்லாம் கேள்வி கேட்டு கொண்டவளுக்கு விடை என்னமோ பூஜ்ஜியம் தான்.

அதையும் விட பூதகர விஷயமாக பணப் பிரச்சனை அவள் கண் முன் எழுந்தது. இவளுடைய சம்பள பணத்தை வைத்து தான் சமாளித்துக் கொண்டிருக்கிறாள். 'தற்பொழுது இவ் வேலையும் இல்லாவிடில் வீட்டு செலவை எவ்வாறு சமாளிப்பது, இதில் அம்மாவின் மருந்து மாத்திரைகளுக்கு குறிப்பிட்ட தொகை கட்டாயம் ஒதுக்கி ஆக வேண்டும்.இதையெல்லாம் விட இனி அம்மாவை கவனித்து கொள்ள ஆள் கிடைத்து விட்டால் வருபவர்கள் நிச்சயம் சற்று பெரிய தொகையை எதிர்பார்ப்பர். ஏனெனில் அம்மாவின் நிலை அப்படி இதுவரை இருந்த வசந்தி அக்கா என் சூழ்நிலை அறிந்து சம்பளம் குறைவாகவே வாங்கி கொண்டார்.அதையே இனி வருபவர்களிடமும் எதிர்பார்க்க முடியுமா??? என அனைத்தையும் போட்டு குழம்பி கொண்டவளுக்கு அவளையும் அறியாது கண்ணீர் பெருக்கெடுத்தது.தன்னை‌ தனியாக தவிக்க வைத்து விட்டு சென்ற தந்தை மீது அவளுக்கு கோபம் பன்மடங்கு பெருகியது.

பிரச்சனையை எதிர்கொள்ள தைரியம் இல்லாது குடும்பத்தை பற்றி கவலை கொள்ளாது தன்னை பற்றி மட்டுமே சிந்தித்து தற்கொலை செய்து கொண்ட தந்தையை நினைக்கையில் ஒரு பக்கம் அழுகையும் மறு‌பக்கம் ஆத்திரமும் ஒருங்கே மேலெழுந்து.


பலவாறு யோசனையில் கலங்கி கொண்டிருந்தவளை செல்பேசி ‌இவ்வுலகத்திற்கு அழைத்து வந்தது.
எடுத்து பார்த்தவளின் முகம் எரிச்சலை தத்தெடுத்து. தற்பொழுது அவள் இருக்கும் மனநிலையில் பேச தோன்றாது அணைத்து விட்டாள். விடாமல் வந்த செல்போன் அழைப்பில் எரிச்சலடைந்தவள் அதை எடுத்து,"மப்ச் கட் பண்ண புரிஞ்சுக்க மாட்டீங்களா வேலை இருக்கும்னு…" என ஒரு கத்து கத்திவிட்டாள்.அதற்கு மறுமுனையில்,"இல்ல பூமி இது உனக்கு மதியம் சாப்பாடு நேரம் தான அதான் போன் பண்ணேன்"என பதிலாக வந்தது."ஏன் சாப்பாடு நேரம் னா எனக்கு வேலை இருக்காதுன்னு அர்த்தமா என்ன விஷயமா போன் பண்ணிக்க சொல்லுங்க.."என்றாள் இவள்.

"இந்த மாச செலவுக்கு நீ இன்னும் பணம் அனுப்பல வீட்டுல ஒரு மளிகை சாமானும் இல்ல அதான் ஞாபகம் படுத்தலாம்னு…"என்றது மறுமுனை. அவ்வளவுதான் அதை கேட்டதும் எங்கிருந்து தான் பூமிகாவுக்கு அத்தனை கோபம் வந்ததோ….," நான் என்ன பணம் அச்சடிக்கிற மிஷினா??? எப்ப பார்த்தாலும் பணம் பணம் னு என்ன டார்ச்சர் பண்றீங்க எனக்கு இங்க வேலையே போய்டுச்சு, உங்க பையன் எங்க?? இன்னைக்கும் குடிச்சிட்டு விழுந்து கிடக்குறாரா?? எப்ப பார்த்தாலும் குடி தான் என்ன மனுஷன் அவர் எல்லாம்?? குடும்பத்துக்காக கூட அவரால் சம்பாதிக்க முடியாதா????" என அவள் பல்லைக் கடித்துக் கொண்டு தனது கோபத்தை முழுவதும் கொட்டிக் கொட்டிருந்த சமயம்,

எதிர்முனையில் "எங்க அண்ணன் இப்படி ஆனதுக்கு உன் குடும்பம் தான் காரணம் கிறத மறந்துட்டியா டி.." என்ற சுமதியின் கோபக் குரலில் பூமிகாவின் கோபம் முழுவதும் வடிந்து விட்டது.'இதை எப்படி நான் மறந்தேன்..'என தன்னைத்தானே நொந்து கொண்டவளுக்கு கோபம் முழுவதும் அகன்று குற்றவுணர்ச்சி அவளை ஆட்கொண்டது. அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை அவளால் பேச இயலவில்லை.
"சொல்லு டி ஏன் அமைதி ஆகிட்டா இவ்வளவு நேரம் வாய்கிழிய பேசுற இப்ப பதில் சொல்லு பாப்போம் உன்னால பதில் சொல்ல முடியுமா?? முடியாது!! ஏன்னா?? தங்கச்சி குடும்பத்தையே நம்ப வைத்து கழுத்தறுத்த குடும்பம் டி நீங்க.., நல்லா இருந்த என் அண்ணண ஆசை காட்டி மோசம் செஞ்சு இப்ப அவன் இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டீங்க…!!!என் அண்ணே பழைய மாதிரி இருந்திருந்த உன் கிட்ட எல்லாம் பணம் கேட்கனும்னு எங்களுக்கு என்ன தலை எழுத்தா???
'ஏன் அப்படின்னா நீ வேலைக்கு போய் இருக்க வேண்டியது தானா டிகிரி முடிச்சுட்டு தண்டத்துக்கு தானா வீட்டுல உக்காந்துருக்க..'என மனதில் நினைக்க மட்டுமே முடிந்தது பூமிகாவினால் அதை வெளியில் அவளிடம் சொல்லிவிட முடியுமா அப்படியே அவளிடம் சொன்னாலும், மீண்டும் அவளின் அண்ணன் புராணத்தை ஆரம்பித்து விடுவாள்."என் அண்ணன இந்த நிலைமைக்கு ஆளாக்குனது நீங்க தானா அப்ப நீ எங்களுக்கு உழைச்சு கொட்டுறதுல தப்பே இல்ல.." என ஆவேசமாக கத்தி கூப்பாடிட்டாள் சுமதி.

அந்த பக்கம் சொன்ன அனைத்து குற்றசாட்டுகளையும் ஆமோதிக்கும் பொருட்டு பூமிகா அமைதியாகவே இருந்தாள்.'அது தானே உண்மையும் கூட'‌ என அவள் நம்பியிருந்தாள், அப்படி நம்ப வைக்க பட்டிருக்கிறாள் என்பது அவள் அறியாத உண்மை.அதை அவள் அறியும் போது????
இதற்கு மேலும் சுமதியின் பேச்சை தாங்க இயலாது என எண்ணியவள்"போதும் சுமதி நிறுத்து!! இதுக்கு மேல பேசாத தப்பு எங்க பக்கம் இருக்குன்னு ஒரே காரணத்தால் தான் நான் அமைதியா இருக்கேன் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு…., நானும் மனுசி தானா??நாளைக்கு பணம் வந்து சேரும் இப்ப போனை கட் பண்ணு.."என்றவள் சுமதி அணைக்கும் முன் தான் கட் செய்து விட்டாள்.

போனை அணைத்தவளுக்கு அடுத்து என்ன செய்வது?? என்ற கேள்வியே முன் நின்றிருந்தது.'இனி அடுத்த வேலை தேட வேண்டும்,அம்மாவை பார்த்துக் கொள்ள ஆள் தேட வேண்டும், ஒரு மாதத்திற்குள் வேலை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.., அதுவரையிலும் வீட்டுச் செலவிற்கு என்ன செய்வது…???' என யோசனை செய்து கொண்டிருந்தவளுக்கு எந்த வழியும் புலப்படவில்லை. தலையை கைகளால் தாங்கி கொண்டு அமர்ந்திருந்ததவளுக்கு மின்னல் வெட்டாய் காலையில் பார்த்த வேலை விளம்பரம் ஞாபகம் வர, அவசர அவசரமாக தன் இருப்பிடம் சென்றாள்.

காலையில் எதற்கும் இருக்கட்டும் என வெட்டிய நாளிதழ் துண்டை தன்னுடைய கைப்பையில் போட்டு வைத்திருந்தாள். அதனை தேடி எடுத்தவள் மீண்டும் ஒரு முறை அனைத்து விவரங்களையும் சரிபார்த்தவள் அவர்கள் கொடுத்திருந்த மெயில் ஐடியிற்கு அவர்கள் கொடுத்திருந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியவள் தன்னுடைய ரெஃஸூமையும் இணைந்திருந்தாள்.

அதனை அனுப்பிய பிறகு தான் சற்றே‌ நிம்மதியாக உணர்ந்தாள்.ஏனோ இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என மனதிற்குள் கடவுளை வேண்டிக் கொண்டாள்.'இதனை அவனிடம் தெரிவிக்க வேண்டுமே என முதலில் எண்ணியவள் பின் வேண்டாம் அவர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கட்டும் பிறகு அவனிடம் சொல்லிக் கொள்ளலாம்..,எப்படியும் அவன் மறுக்க தான் செய்வான் இனி அவனை வேறு சமாளிக்க வேண்டுமே..' என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் உணவு வேளை முடிந்ததற்கான மணி அடித்திருந்தது.தற்காலிகமாக இதனை‌ ஒத்தி போட்டவள் தனது வேலைகளை கவனிக்க சென்றாள்.

அங்கே…,
"என்னம்மா என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு இவ எதிர்த்து பேச ஆரம்பிச்சிட்டா ஒரு வேளை சுதாரிச்சுட்டாலோ…"என தனது அன்னையான சிவகாமியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் சுமதி.அதற்கு,"ஹாஹாஹா போடி இவளே…, அப்படி சுதாரிக்க தான் நான் விட்டுடுவேனா அவளை அடக்கி வைக்கிறதுக்கு தான் இருக்கவே இருக்கு நம்ம கிட்ட உன் அண்ணன்கிற துருப்புசீட்டு,பூமிகாவோட குற்றவுணர்ச்சிய லேசா தூண்டி விட்டா போதும் காலத்துக்கும் நம்மளுக்கு அவ அடங்கி இருப்பா….,அவ எகிற நேரத்துல இப்ப நீ பண்ணியே அது மாதிரி நடந்ததை மறக்க விடாம நம்ம நிலையை அவளுக்கு ஞாபகம் படுத்தினால் போதும் அடங்கிடுவா.."என்றாள்.

"என்னம்மோ போ மா பூமிகா சுதாரிக்காமா இருக்கிற‌ வரைக்கும் தான் நமக்கு நல்லது ஒரு‌ வேளை அவளுக்கு உண்மை தெரிஞ்சுருச்சுன்னு வச்சுக்கோ நம்ம கதி அதோ கதி தான் அப்புறம் நம்மளால அவள ஏமாத்தவும் முடியாது நம்மளுக்கு அடங்கியதும் அவ இருக்க மாட்டா.., நம்மள அவளுக்கு கீழ அடங்கி இருக்க வச்சிருந்தா…" என தனது‌ பயத்தை சொல்லி விட்டாள் சுமதி."அவ ஏமாறுற வரைக்கும் நம்மளுக்கு எந்த நஷ்டமும் இல்லை ஒரு வேளை நீ சொல்ற மாதிரி ஏதாச்சும் நடந்தா இருக்கவே இருக்கு நம்ம கிட்ட அவள் அடியோடு சாய்க்கிறதுக்கான பிரமாஸ்த்திரம்…,அது போதும்.."அதற்கு சுமதியோ," ஏம்மா அவ அந்த பிரமாஸ்த்திரத்துக்கு அடங்கி இருப்பாளா?? அத ஏத்துக்குவாள??" என கேட்டாள்.

"சுமதி இன்னும் நம்ம நாட்டுல தாலி சென்ட்டிமென்ட் அப்புடியே தான்‌ இருக்கு அதை மீறுற தைரியம் யாருக்கும் இருந்ததில்லை.., அப்படி இருக்குறப்போ சாதாரண கிராமத்துல பிறந்த பூமிகாவுக்கு அந்த சென்டிமென்ட் இருக்காதுன்னு நெனைக்கிறியா??? அப்படியே இல்லாமல் இருந்தாலும் அதை கொண்டு வர்றதுக்கான வழியும் எனக்கு தெரியும்…., அதனால் எப்படி பாத்தாலும் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.."என்றவள்,"சரி மாரி எங்க??" என்னவளின் கேள்விக்கு,"அது இந்நேரம் எங்க எவக் கூட கூத்தடிச்சுட்டு இருக்குதோ…"என பதில் வந்தது சுமதியிடம் இருந்து.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் மாரி ஆக பட்டவன் அங்கே ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி என்ற பெயரில் அவளின் கழுத்திற்கு சுருக்கு மாட்டி கொண்டிருந்தான்.

*********************
தங்கள் முன்னே நின்றிருந்தவர்களை தங்களது கத்தி போன்ற கூர் விழிகளால் அங்குலம் அங்குலமாக அளவிட்டுக் கொண்டிருந்தனர் ஷர்மா பிரதர்ஸ். சற்றுமுன் புகைப்படக்காரர்கள் வைத்திருந்த கேமரா கேட்பாரற்று ஒரு மூலையில் சுக்கு நூறாக உடைந்து கிடந்தது.அவர்களின் புகைப்படம் இருந்த கேமராவிற்கே இந்த கதி என்றால் அதனை எடுத்து தங்களின் நிலையை எண்ணி பீதியில் உறைந்திருந்தனர் அந்த ரிப்போர்ட்டர்ஸ் பத்தாதிற்கு அவர்களின் இருபுறம் அவர்களின் உயரத்திற்கு எப்போது வேண்டுமானாலும் பாய்வேன் என்ற ரீதியில் அமைந்திருந்த நாய்கள் வேறு இன்னும் சற்றே பயத்தை அவர்களுக்கு கிளம்பியது. இதுவும் போதாது என்று அவர்களுக்கு நேர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த விஹானின் தோரணையும் அவனது கைகளில்‌ அலட்சியமாக சுழன்று கொண்டிருந்த துப்பாக்கி வேற அவ்வப் போது அவர்களுக்கு மரண பயத்தை காட்டிக் கொண்டிருந்தன.

மயான அமைதி என்பார்களே அது போல அந்த இடம் இருந்தது. அந்த அமைதியை கிழித்துக் கொண்டு வந்தது ஆதேஷின் குரல்."சொல்லுங்க யாரு அனுப்புனாங்க உங்கள..??"எனக் கேட்டான் அமைதியான குரலில்.அப்பொழுதாவது அவனின் கோபமில்லாத குரலை புரிந்துக் கொண்டு அவர்கள் உண்மையை சொல்லிருக்கலாம்?ஏதோ அவர்களது நிறுவனத்தை அந்நிய தேசத்து மக்களிடம் இருந்து நமது நாட்டை காப்பாற்ற போராடி வென்ற மாமனிதர்களை போல் தங்களை நினைத்துக் கொண்டு அவர்களது நிறுவனத்தை காப்பாற்றும் பொருட்டு,"இல்ல….இ….ல்ல…. சார் யார் சொல்லியும் நாங்க வரலை…. சும்மா நாங்க தான் உங்கள பாக்கணும்ன்ற ஆசையில தான் இப்புடி பண்ணோம் மத்தப்படி வேற எந்த நோக்கமும் இல்லை சார்.." என உண்மையை மறைத்து பொய் உரைத்த அடுத்த நொடி அதுவரையிலும் விஹானின் கரங்களில் விளையாடிக் கொண்டிருந்த துப்பாக்கியின் முனை ரிப்போர்ட்டர்ஸ்களில் ஒருவனின் தொண்டையில் அழுந்த படித்தது.

அவர்கள் உரைக்கும் பொய்யை நம்பும் அளவிற்கு ஷர்மா பிரதர்ஸ் ஒன்றும் முட்டாள்களில்லை,
தொழில் போட்டியில் இருக்கும் எதிரிகளையும் குள்ளநரி வேடமிட்டு வீழ்த்த காத்திருக்கும் ஆட்களை தங்களது புத்தி கூர்மையால் சமாளித்து இன்றைய அளவிலும் முதலிடத்தில் இருப்பவர்களுக்கு பொய்யுரைக்கும் மனிதர்களை இனம் காண முடியாதா என்ன??

துப்பாக்கியை சுமந்திருந்தவனின்‌ உடல் வெளிப்படையாகவே நடுங்கி தூக்கி போட ஆரம்பித்திருந்தது. அதனை கண்டு கொண்டவன்,"வெல் அப்ப உங்கள யாரும் அனுப்பல..?? நீங்க இங்க வந்திருக்கிறது யாருக்கும் தெரியாது அப்படி தான?? ம்ம்ம்.. அப்ப உங்கள் இந்த இடத்துலயே கொன்னு பொதச்சாலும் யாரும் உங்கள் தேடிட்டு வர மாட்டாங்க தானா???" என்றவாறே விஹான் துப்பாக்கியின் கீழ் முனையை பற்றி அழுத்தினான்.அதில் அரண்டவன்,"சார்...சார்… என்ன ஏதும் பண்ணிடாதீங்க சார்….., நான் உண்மைய சொல்லிடுறேன்.., எங்கள அனுப்பு…...‌"என அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் அருகில் இருந்த மற்றொருவன்…,"டேய்….டேய்….. ஏதும் உளறி வைக்காதடா இவங்களால நம்மள ஒண்ணும் பண்ண முடியாது சும்மா பயம் காட்டுறாங்க…" என அவன் சொல்லி முடித்த நொடி அதுவரை அமைதியாக இருந்த ஆதேஷ் அவனை பார்த்து இதழ் வளைத்து சிரித்தான்,"டாமி……, கேஃச்!!!" என சத்தமிட அடுத்த நிமிடம் டாமி பேசியவனின் மீது பாய்ந்திருந்தது.

ஒரு வித குருட்டு தைரியத்தில் பேசிவிட்டவன்…. தற்போது நாய் அவன் மீது பாயவும் பயத்தில் அரண்டு விழுந்தடித்து எழுந்தவன் வீட்டை சுற்றி ஓட துவங்க… டாமியும் வெறி கொண்டு அவனை விரட்டியது.. உயிர் பயத்தில் அவன் கெஞ்சிய வார்த்தைகளை காதில் வாங்கி கொள்ளாது அவனின் ஓட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.அப்பொழுது வீட்டினுள்‌ இருந்து…" டாமி டோன்ட் டூ தட்…."என கோபக் குரலில் உரைத்தபடி வெளி வந்தாள் அகழ்விழி. அவளது குரலில் அதுவரை வேட்டையாட துடித்த கொண்டிருந்த நாய் பெட்டி பாம்பாக அடங்கி அவள் அருகில் வந்து வாலை ஆட்டி கொண்டு அவளை உரசியவாறே வந்து நின்று கொண்டது.அதை ஒரு பார்வை பார்த்தவள் பெயருக்கேற்றாற்போல் அகலமாக விரித்து பரவி இருந்த அவளது விழிகள் முழுவதும் கோபக் கனலை தேக்கி துப்பாக்கியை ஒரு பார்வை பார்த்து பின் விஹானை பார்த்தவளின் விழி வழி செய்தியை புரிந்து கொண்ட ஆதேஷ்,"விஹான் வீல் இட்"என்க அண்ணனின் குரல் கேட்டும் எந்த வித அசைவும் இன்றி நின்று கொண்டிருந்தவனை நோக்கி…."விஹான்…." என அழுத்தமாக உரைத்தவளின் குரலில் இருந்த கட்டளையில் அதனை மீள முடியாதவனாக…"ஷீட்.." என்ற கோபத்தோடு துப்பாக்கியை எடுத்தவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான்.

அவனின் கோபத்தை அலட்சியம் செய்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் ரிப்போர்ட்டர்ஸ்களின் காயத்தை அதை கண்டு மேலும் கோபம் கொண்டவள்,"யாஸ்மினி போய் ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் எடுத்துட்டு வா!" என கட்டளையிட்டவள் யாஸ்மின் கொண்டு வந்ததும் அவர்களின் காயத்திற்கு மருந்திட்டு முடித்தவள் அங்கிருந்த ஷோபாவில் அவர்களை அமர செய்தவள் வேலையாளை அழைத்து அவர்களுக்கு குடிக்க ஏதாவது கொடுக்க சொன்னாள்.

பின் விஹான் மற்றும் ஆதேஷின் புறம் திரும்பியவள் ஏதும் பேசாது அவர்களை முறைத்தவாறே,"எப்ப இருந்து நீங்க ரெண்டும் பேரும் அடுத்தவங்கள கஷ்டப்படுத்தி அதுல சந்தோஷப்படுற சேஃடிஸ்ட்டா மாறினீங்க??"என ஒவ்வொரு வார்த்தையையும் ஊசியாய் இறக்கியிருந்தாள். அது சரியாக அவர்களின் மனதில் இறங்கியதற்கு சான்றாக,"ம்ப்ச்… என்ன நடந்ததுன்னு தெரியாம வார்த்தைய விடாத அகழ்.."எனக் இறுகிய குரலில் கூறினான் ஆதேஷ்.

"எல்லாம் எனக்கும் தெரியும்ங்க….,அவுங்களுக்கு கொடுத்த வேலையை
அவுங்க செஞ்சிருக்காங்க….,இதுல என்ன‌ தப்பு இருக்கு….. அப்படி நீங்க தண்டிக்கணும்னு நினைச்சா உங்களுக்கு போட்டோ வெளியிடறதுல விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சும்‌…. இந்த வேலையை இவுங்களுக்கு செய்ய சொல்லி ஆர்டர் போட்டு இங்க அனுப்பி வச்சிருக்காங்க…. இவுங்க வெறும் அம்பு தான்…. இவுங்கள எய்த்துனவங்களதான் நீங்க பனீஷ் பண்ணணும்"என்றாள்.

"அது தான் அண்ணி முதல்ல கேட்டோம்… இவனுங்க பொய் சொன்னாங்க அதனாலதான் உண்மையை வரவழைக்க பயம் காட்டுனேன்…. வேற எதுவும் பண்ணல…"என சலிப்பாய் கூறி முடித்தான் விஹான்."உன்ன பத்தி எனக்கு தெரியாதா உனக்கு முன்னாடி உன்னோட கோபம் தான் முதல்ல வெளி வரும்…. அதான் கேமரா இருக்கிற நிலைமையிலயே தெரியலையா…. நீ எப்புடி கேட்டு இருப்பேன்னு…"என அவள் நக்கலாக உரைக்க,அதனை கேட்டு,"ஹீ ஹீ ஹீ….. அது வந்து…"என அசடு வழிந்தான் விஹான் ஷர்மா.

பின் ரிப்போர்ட்டர்ஸ்களிடமும் பேசி அவர்களை யார் அனுப்பியது??? எந்த சேனலில் இருந்து வருகிறார்கள்?? என அனைத்து விபரங்களையும் கேட்டாள் அகழ்விழி. முதலில் அவர்கள் சொல்ல தயங்கிய போது…. தங்களால் அவர்களது வேலை பறிபோகாது என நம்பிக்கை அளித்து….. இதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் பிரச்சனையும் ஏற்படாது என வாக்குறுதி அளித்தவள்… உடைந்த கேமராவிற்கான பணத்தையும் கொடுத்து…. விவரங்களை வாங்கி விட்டு அவர்களை அனுப்பி வைத்து விட்டாள்.

அவர்கள் எந்த சேனலில் இருந்து வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட ஆதேஷ்…அடுத்த நொடி அந்த நிறுவனத்தின் ஹெட்டை தனது போனில் தொடர்பு கொண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.அனைவரும் அவர்களது வேலைகளை கவனிக்க சென்று விட வேலை விஷயமாக தனது மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான் விஹான். அப்பொழுது மெயில் நோட்டிபிகேஷன் ஒன்று வர அதை திறந்து பார்த்தவனுக்கு அது வேலைக்கான விண்ணப்பம் என அறிந்து கொண்டவன் யார்?? அனுப்பியது என பார்த்தான்.

அதில் பூமிகா…ப்ஃரம் தமிழ்நாடு என வந்திருந்தது. தமிழ்நாடு என ஊரை கண்ட அடுத்த நிமிடம் வேறு எதைப் பற்றியும் பார்க்காது அதனை அக்சப்ட் செய்து பதில் மெயிலும் அனுப்பி விட்டான்.

கருத்துக்களை இதில் பதிவிடுங்கள் அன்பர்களே(n)(n)(n)


 
Last edited:

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

நான் தான் கதை எண்‌ 96 சில தவிர்க்க முடியாத காரணத்தால என்னால யூடி‌ போட முடியல....கதை எழுத முடியாத சூழ்நிலை இப்பவும் டைம் எக்ஸ்டன்ட் பண்ணிருக்கறதுனால சரி டிரை பண்ணலாம்னு கிடைச்ச டைம்ல எழுதுறேன் இத டைம்குள்ள முடிப்பேனா இல்லையான்னு எனக்கு தெரியல இருந்தாலும் ஒரு கான்பிடன்ட்ல டிரை பண்றேன் பாப்போம்....

படிச்சுட்டு பிடிச்சி இருந்த ஒரு கமென்ட் சொல்லுங்க....


தவணை முறையில் காதல்
(மரணம்) நிகழும் 3:



பசிக்கு அழும் குழந்தை உணவு கேட்டு தாயை பார்க்கும்‌ ஏக்கமான பார்வையுடன் ரயில் நிலையத்தில் அமர்ந்து அவளின் கைகளை பற்றியவாறு விடாது பூமிகாவின் முகத்தையே பார்த்திருந்தார் கோமதி. இது இன்று மட்டும் நடைபெறும் ஒன்றல்ல. என்று பூமிகா வேலைக்கு அவரை விட்டு பூனே செல்கிறேன் என்று கூறினாலோ?? அன்றிலிருந்து ஆரம்பமாகி விட்டது அவரின் ஏக்கப் பார்வைகள். தாய் கோழி தன் குஞ்சுகளை அடைகாப்பது போல் நொடி நேரம் கூட அவளை விட்டு விலகாது அவளை பின் சுற்றியவாறு இருந்தார்.

அந்நேரம் கையில் தண்ணீர் பாட்டிலுடன் வந்த சத்யாவின் கண்களில் கோமதியின் பார்வை விழ பல்லைக் கடித்துக் கொண்டு அவளை முறைத்தவாறு பூமிகா விடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.அவனுக்கு பூமிகா பூனே செல்வதில் துளி அளவு கூட விருப்பம் இல்லை. வேலைக்கு விண்ணப்பித்து விட்டு வந்து தன்னிடம் அவள் சொன்ன போது கூட அதை அவ்வளவு பெரிதாக ஒன்றும் அவன் எடுத்துக் கொள்ளவில்லை. இன்டர்வியூக்கு அழைப்பு வரட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அசட்டையாக இருந்து விட்டான்.

பின் இரு வாரங்கள் கடந்த நிலையில் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி விட்டேன், இன்னும் ஒரு வாரத்தில் பூனே செல்ல வேண்டும் என அவள் வந்து நிற்பாள் என அவன் எதிர்பார்க்கவில்லை. தன் அலட்சியத்தை நினைத்து தன்னையே நொந்து கட் கொண்டவன்..,அவளிடம் பேசி பூனே செல்ல வேண்டாம் என புரிய வைக்க முயல.., அவனின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து இதோ ரயில் நிலையம் வந்து அமர்ந்து விட்டாள்.

அப்பொழுது பூனே செல்லும் ரயில் இன்னும் சில நிமிடங்களில் வந்து விடும் என அறிவிப்பு வர, பூமிகா தனது உடைமைகளை அனைத்தையும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள்.அவளின் நடவடிக்கையில் அவள் சில நிமிடங்களில் பிரிந்து சென்று விடுவாள் என கோமதிக்கு புரிந்ததோ என்னவோ?? அவளின் கைகளை இறுக பற்றியவரின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொண்ட ஆரம்பித்திருந்தது.அவரின் கண்ணீரை கண்டு பதறியவள்…,"என்னம்மா என்னாச்சு ஏன் அழறீங்க??" என்க,"நீ…..நீ…. போகாத…..நானும்…..நானும்…."என கண்ணீர் வழிய சிறு குழந்தை என அடம்பிடித்தார் கோமதி.

"அச்சோ…...என் செல்ல அம்மா இல்ல...நீங்க குட் கேர்ள் தான…. அதான் சத்யா இருக்கான்ல….அவன் கூட சமந்தா இருப்பீங்களாம்….. நான் போயிட்டு அங்க வீடு பாத்துட்டு உங்கள என் கூடவே கூட்டிட்டு போய்ட்டுவேன்......அழக் கூடாது!!!!கொஞ்ச நாள் தான் அம்மா….. நம்ம டெய்லியும் போன்‌ பேசலாம் சரியா……"என அவரை அணைத்து அவள் ஆறுதல் படுத்த முயல…..,அவளின் சமாதானங்கள் எதையும் காதில் வாங்காது அவளின் கையையும் விடாது அழுகையில் கரைந்து கொண்டிருந்தார்.அவருக்கு இருக்கும் ஒரே ஜீவன் அவள் தானே!!

அவரின் அழுகையை கண்ட சத்யாவிற்கு‌ பாவமாக இருந்தது.எந்த உணர்வையும் காட்டாது அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தவளை காண காண அவனிற்கு கோபம் அலையென பொங்கியது."ராட்சசியா டி நீ…..இவ்ளோ தூரம் அழுகுறங்கா அப்பவும் மனசு இறங்காமா போறேன்னு உறுதியாக இருக்க...இரக்கமே இல்லையா உனக்கு…"என வெடித்தவன் பின்,"சொல்றத கேளுடா பூமி மா உனக்கு இந்த வேலை வேண்டாம் பூனே போக வேண்டாம்...உனக்கு என்ன வேலை தான வேணும்…..?? இந்த ஊருல இல்லாத வேலையா நான் உனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்றேன்…….பாவம் எப்படி அழறாங்க பாரு…...என்ன தான் நாங்க இருந்தாலும்….நீ இருக்குற மாதிரி இருக்குமா??? உன்ன தான் அதிகம் தேடுவாங்க…..ப்ளீஸ் பூமி‌ உன்ன கெஞ்சி கேட்கிறே வா இப்பவே வீட்டுக்கு போய்டலாம்….யாருமே இல்லாமே நீயும் கஷ்டம் பட‌ தேவையில்லை…"என கெஞ்சினான்.

"ம்ப்ச்….. இதப் பத்தி நாமா நிறைய தடவை பேசியாச்சு …..நீயும் ஒரு வாராமா சொன்னதையே தான் சொல்லிட்டு இருக்க…..,நானும் என் முடிவுல எந்த மாற்றமும் இல்லன்னு….சொல்லிட்டேன்...ஷோ ப்ளீஸ் இதப் பத்தி பேச வேண்டாம்.."என்றவள் கோபத்தில் முகத்தை திருப்பி கொண்டு நின்றவனை கண்டு கொள்ளாது கோமதியிடம் திரும்பினாள்."ம்மா….நான் சொன்ன கேட்பீங்கள??"எனக் கேட்க"ம்ம்…..ப்ப்ச்...ம்ம்" என தலை ஆட்டினார். "அப்ப அழக் கூடாது…" என அவரது கண்களை துடைத்து விட்டவள், "கொஞ்ச நாள் தான் நா அங்க போனதும் வீடு பாத்துட்டு உங்கள கூப்பிட்டு போய்டுவேன்….நீங்க இப்படி அழுதுகிட்டு இருந்தா…. அப்புறம் நா உங்கள அங்க கூப்பிட்டு போக மாட்டேன்….."என அவள் மிரட்ட அதுவரை அழுது கொண்டிருந்தவரின் கண்ணீர் சட்டென்று நின்று விட்டது."ம்ம்ம்…..சமத்து ம்மா…"என கொஞ்சி அவரை அணைத்துக் கொண்டாள்.

அதே நேரம் ரயிலும் வந்து விட…. ஒரு முறை அவளின் தாயை இறுக்கி அணைத்துக் விடுவித்தவள்….. அதுவரையிலும் கோபத்தில் முகம் திருப்பி இருந்தவனை சிறிதும் கண்டு கொள்ளாது தனது உடைமைகளை எடுத்துக் கொண்டவள் ரயிலில் ஏறி அவளுக்குரிய இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

தன்னை சமாதானம் செய்வாள் என நினைத்திருந்தவன் அவளின் இந்த நடவடிக்கையில் "ஙே..." என விழித்தபடி நின்றவன், பின் 'திமிரு…..திமிரு…..உடம்பு முழுக்க திமிரு….ஒருத்தன் கோச்சுக்கிட்டு நிக்கிறானே சமாதானம் கூட செய்ய வேண்டாம்….. அட்லீஸ்ட் ஒரு சாரியாவது கேக்குறாளா???…..எனக்கேன்னன்னு போறத பாரு எரும…..எரும…..'என மனதுக்குள் பொருமியவன், மகளின் மிரட்டலில் உதடு துடிக்க கண்ணீரை அடக்கி கொண்டு நின்றிருந்த கோமதியை அழைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்த ஜன்னல் இருக்கையின் அருகே சென்று நின்று கொண்டனர்.

வந்ததில் இருந்து அவன் அவளை முறைத்து கொண்டே இருக்க….அவளோ,அங்கே‌ ஒருவன் இருப்பது போல் காட்டி கொள்ளாது தனது அன்னையிடம் அளாவளாவி கொண்டிருந்தாள். அதை பார்க்க பார்க்க இவனின் பி.பி தான் தாறுமாறாக எகிறியது.

அதற்குள் பூனே செல்லும் ரயில் இன்னும் சில நிமிடங்களில் புறப்பட்டு விடும் என அறிவிப்பு வெளிவர….,அதுவரை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்த வீம்பை கை விட்டவன் அவளின் கைகளை தனது கைகளுக்குள் அடக்கி கொண்டவன்,"பூமி……மா…… பாத்து பத்திரமா இருந்துக்கோ டா…. நா கொடுத்த கார்டு பத்திரமா இருக்குல….. அங்கே போய் இறங்குனதும் அந்த கார்ட்ல இருக்கிற நம்பருக்கு கால் பண்ணு என் பிரண்டு வந்து ரிசிவ் பண்ணிக்குவான். உனக்கு ஹாஸ்டல் பாத்தாச்சு அவனே உன்ன அங்க கூப்பிட்டு போவான்……..தென் நீ வேலை பாக்க போற கம்பெனிய பத்தியும் அவன் கிட்ட சொல்லிட்டேன்……..ஷோ கவலப்படாத அவன் பாத்துக்குவான் உனக்கு எல்லாம் அங்க செட் ஆகி ரூட் எல்லாம் தெரியிற வரைக்கும் ஒரு வாரம் அவன் உன் கூட வருவான்…….உனக்கு எப்ப என்ன தேவைனாலும் அவனுக்கு கால் பண்ணுடா…… இல்லன்னா எனக்கு பண்ணு சரியா…...உனக்கு அங்க பிடிக்கலைன்னா யோசிக்க மா இங்க கிளம்பி வந்துடுடா…...வீடு பாக்குற டென்ஷனும் உனக்கு வேண்டாம்…...என் பிரண்ட் பாத்துக்குவான்…...சரியா….போய் இறங்கியதும் எனக்கு கால் பண்ணு……. தைரியமா இரு….."என அவன் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே ரயில் மெதுவாக நகர ஆரம்பித்து விட…,கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டு பார்த்தவள்……"அம்மாவ பத்திரமா பார்த்துக்கோ…..உன்ன நம்பி தான் விட்டுட்டு போறேன்…….என்ன கேட்டு அடம் பிடிச்சாங்கன்னா….ப்ளீஸ் கொஞ்சம் சமாளிச்சிடு…..ஹார்ஸ்ஸா ஏதும் உங்க வீட்டுல பேசிட போறாங்க….. பாத்துக்கோ…."என்றவளின் குரல் உடைந்து விட….. அதை கண்டவனுக்கும் குரல் கலங்க துவங்கியது. இருந்தும் தான் கலங்கினால் இன்னும் உள்ளுக்குள் உடைந்து போவாள் என எண்ணியவன் முயன்று தனது குரலில் உற்சாகத்தை கொண்டு வந்தவன், "ரொம்ப பண்ணாதடி உனக்கு அம்மான்னா எனக்கு அவுங்க சித்தி….. நா பாத்துக்குறேன்….நா அங்க இல்லைன்ற தைரியத்துல நீ ரொம்ப ஆட்டம் போடாத…..நீ நிம்மதியா இரு சித்தி என் பொறுப்பு…" என்றவன் அருகில் நின்றிருந்த கோமதியின் தோள்களை அணைத்து பிடித்துக் கொண்டவன், "சித்தி….. சிரிச்சுக்கிட்டே அவளுக்கு டாட்டா சொல்லுங்க பாக்கலாம்…" என அவரையும் தேற்றி இருவரும் சேர்ந்து அவளுக்கு விடை கொடுத்தனர்.

அவர்களை விட்டு சிறிது தூரம் ரயில் நகர்ந்த நொடி அதுவரையிலும் பூமிகா அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு எழுந்தது.இத்தனை வருடங்களில் கோமதியை‌ விட்டு அவள் பிரிந்ததே இல்லை. இதுவே முதல் தடவை. அவரின்‌ அழுகையில் கரைந்த மனதை கடிவாளம் இட்டு கட்டி வைத்திருந்தாள். தாயாய் இருந்து சேயாய் மாறி நிற்கும் தன் நாற்பது வயது குழந்தையின் பிரிவை எண்ணி பூமிகாவின் இதயம் கதறி அழ அதன் வெளிப்பாடாக அவளின் கண்களில் இருந்து விடாது கண்ணீர் துளிகள் விடாது துளிர்த்துக் கொண்டே இருந்தன.

'இதோ இந்த நிமிடமே இறங்கி அவர்களுடன் சென்று விடு' என கட்டளையிட்ட மனதை கட்டுப்படுத்த இயலாது அதனுடன் போராட ஆரம்பித்தாள். 'இறங்கி சென்று விடலாம் தான் பிறகு அடுத்து என்ன செய்வது??? அடுத்த வேலை கிடைக்கும் வரையில் திரும்பவும் அவனிடம் பணத்திற்கு கையேந்த வேண்டுமே?? நான் கேட்டால் மறுப்பு ஏதும் சொல்லாது எல்லா செலவுகளையும் அவனே பார்த்துக் கொள்வான் தான்!! ஆனால் அதற்கு என்று ஒரு வரைமுறை இருக்க வேண்டாமா??? ஏற்கனவே அம்மாவின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் அவன் தலையில் கட்டியாயிற்று?? இதோ இப்பொழுது கூட ஹாஸ்டல் பார்ப்பது வீடு பார்ப்பது என அனைத்தையும் அவன் ஏற்று கொண்டு விட்டான்.இன்னும் அவனை கஷ்டப் படுத்த இயலாது!! என எண்ணியவளின் எண்ணம் கோமதியிடம் தாவியது.

பூமிகாவிற்கு தன் தாயை நினைத்து தான் சற்று கவலையாக இருந்தது. புவனாம்மா பார்த்துக் கொள்வார் தான் இருந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர் கோமதியை மட்டும் தனித்து கவனித்து கொள்ள இயலாது அல்லவா……..,


எண்ணங்களின் பயனோடு இதோ பூமிகாவும் பூனே வந்து விட்டாள். வந்து இறங்கியவள் செய்த முதல் வேலை சத்யாவிற்கு போன் செய்து தன் வருகையை கூறி தாயிடம் சில விஷயங்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி விட்டு போனை கட் செய்தவள், அடுத்து அழைத்தது என்னவோ சத்யாவின் நண்பனுக்கு தான்.

இவள் போன் செய்த சில நிமிடங்களில் அவன் வந்து விட சில நல விசாரிப்புகளுக்கு பிறகு அவனுடன் கிளம்பினாள்.

ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய இருவரும் நேரே சென்று இடம் மகளிர் விடுதிக்கு தான். ஏற்கனவே, அட்மிஷன் போட்டு‌ வைத்திருந்ததால் எந்த வித பிரச்சனையும் இன்றி அதில் சேர்த்து கொண்டார்கள்.நாளை வந்து பூமிகாவை அவள் வேலை செய்ய போகும் கம்பெனிக்கு அழைத்து செல்வதாக கூறியவன் அவளை ஓய்வு எடுக்குமாறு‌ கூறிவிட்டு அவளிடம் விடை பெற்று சென்று விட்டான்.

அறைக்குள் வந்தவள் அங்கிருந்த டேபிளில் தன் பையை வைத்துவிட்டு கட்டிலில் விழுந்ததில் எண்ணம் முழுவதும் கோமதியை சுற்றி தான் வந்தது.'என்ன செய்யுறாங்களோ??? என்ன தேடுறாங்களோ??சாப்பிட்டாங்களா இல்லையா??? என்ன கேட்டு அடம் பிடிச்சிருப்பாங்களோ?? பாட்டி ஏதும் திட்டிடுவாங்களோ????' என ஆயிரம் எண்ணங்கள் விடாது சுழல் நொடியும் தாமதிக்காமல் சத்யாவிற்கு அழைத்து விட்டாள்.

"ஹலோ….."என்று சொல்ல வந்த சத்யாவை இடையிலேயே வெட்டியவள்…….,"அம்மா என்ன பண்றாங்க…??. சாப்பிட்டாங்களா??…..என்ன தேடினாங்களா……??ஏதும் தொந்தரவு பண்ணாங்களா…..??"என மூச்சு விடாது பேசியவளை கண்டு நிறைந்தவன்,"பூமி… ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சித்தி இங்க வந்து இன்னும் முழுசா ஒரு நாள் கூட முடியல….,சாப்பிட்டாங்க…..தோ இங்க தான் என் பக்கத்துல தான் இருக்காங்க…...உன்ன கேட்டு எல்லாம் அடம் பிடிக்கல…...சமத்து பிள்ளையா இருக்காங்க…… இரு அவுங்க கிட்ட தரேன் பேசு.."என்றான்.

"ஓ..ஓ….."என்னவளின் குரலில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. தான் தேடிய அளவு கூட அவர் தேடவில்லையோ….என அவள் நினைக்கும் போது நெஞ்சில் "சுருக்" என்றது."ஹலோ…."என்ற கோமதியின் குரலில் கலைத்தவள்,"ம்மா…"எனும் போதே குரல் கரகரத்தது."பூமி…..இஇ...நீ வா…..நா…...நீ… வா….."என அதுவரை அமைதியாக இருந்தவர் இவள் குரல் கேட்டதும் அழுது அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்.

அவர் அழுகையில் இவளின் உதடுகளில் புன்சிரிப்பு மலர்ந்தது….'என்னை போல் அவரும் என்னை தேடுகிறார்..'என எண்ணியவளுக்கு.. "ம்ப்ச்… சித்தி அழ கூடாது……...ம்மா…. இவள பாருங்கம்மா அமைதியா இருந்தவங்கள போன் போட்டு அழுக வைக்கிற…." என்ற சத்யாவின் குரல் கேட்க… இன்னும் சிரிப்பு அதிகமானது.

அவளின் சிரிப்பு மெல்ல இதழ் விரித்து சத்தமாக வெளியேற….,‌ அடுத்த நொடி "இந்தாடி…..சில்வண்டு…. போதும் பல்லு சுளுக்கிக்க போகுது….. உன் ஆத்தாளுக்கும் உன் ஞாபகம் எல்லாம் இருக்கு…..இப்புடி போன் பண்ணி உன்ன ஞாபகப்படுத்தடும்னு….அவசியம் இல்ல…."என்றவரின் குரலில் அவளின் புன்னகை மறைந்து விட…...அழகிய கருவிழிகள்‌ இரண்டும் நீரில் மூழ்க…"ஆச்சி…" என அவளது உதடுகள் மென்மையாக பிரிந்தன.

அவளின் அழைப்பில் எதிர் இணைப்பில் இருந்தவரின் முகமும் மென்னகையை பூசிக் கொண்ட அடுத்த நொடி,
"ஆச்சி தாண்டி…. அது எல்லாம் உனக்கு இன்னும் நெனப்புல இருக்கா…….. அவ்வளவு ரோசக்காரியா டி நீயி…. உன் ஆத்தாள ஒத்த வார்த்தை சொல்லிட்டேன்னு முறுக்கிக்கிட்டு திரியிற...ஏன்?? எனக்கு அவ பொண்ணு இல்லையா ஏதோ கோபத்துல ஒத்த வார்த்தை விட்டுட்டேன் அதுவும் அவளுக்கு ஏதும் ஆகிடுமோன்னு பயத்துல தான திட்டுனேன் அதுக்கு கூட எனக்கு உரிமையில்லையா???..."
"ஊருக்கு போறத கூட சொல்ல முடியாத அளவுக்கு உனக்கு அந்நியமா போய்ட்டேனா????"என்றவரின் குரல் இறுதியில் கரகரத்து விட அவள் பதில் சொல்லும் முன் ,
"சத்யா…. இந்தா போன பிடி கோமதிக்கு பசிக்கும் நா போய் சாதம் பிசையிறேன்…"என்றவர் அலைப்பேசியை அவனிடம் தந்து விட்டு நகர்ந்து விட்டார்.

இங்கோ, அவர் பேச பேச பூமிகாவின் விழிகளில் கண்ணீர் வழிந்தோட…..உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித் தவித்தவளுக்கு தொண்டையில் இருந்து வார்த்தைகள் வர மறுத்தன…..

அவளின் நிலையறிந்த சத்யா…..
"பூமி மா……" என்றழைக்க….

அவளின் மெல்லிய விசும்பலே பதிலாக கிடைத்தது.

"ம்ப்ச்…. பூமி எதுக்கு இப்ப இந்த அழுகை???"எனக் கேட்டான் அவன்.

"ஆச்சி…….ம்ஹூம்…..எப்புடி இங்க…...அம்மாவ எங்க கூப்பிட்டு போய் இருக்க….சத்யா…."விசும்பலின் இடையே கேட்டாள் பூமி.

"சித்திய இங்க கற்பக ஆச்சி வீட்டுக்கு கூப்பிட்டு வந்து இருக்கேன்….இத ஸ்டேஷன்ல வச்சு சொல்லிருந்தா…… நீ தையதக்கா ன்னு குதிப்ப….அதான் சொல்லாம இங்க கூப்பிட்டுட்டு வந்துட்டேன்…… இனி நீ எங்க வீட்டுல இருக்கிறவங்க ஏதாச்சும் சித்திய சொல்லுவாங்கன்னு நெனச்சு பயப்பட வேணாம்….. நிம்மதியா இரு…. சித்திய ஆச்சி பாத்துக்குவாங்க…."என்றான் அவன்.

தன் நிலையை துல்லியமாக அவன் கணித்து விட்டதில் திகைத்தவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை தோன்ற…."ரொம்ப….ரொம்ப… தாங்க்ஸ் சத்யா…." என்றிருந்தாள்.

"போடி… யாருக்கு வேணும் உன் தாங்க்ஸ்ஸு… அத நீயே வச்சிக்க…"என்றவனின் இதழ்களும் புன்னகையில் மிளிர்ந்தன.
"சரி சரி போதும் பேசினது…. நீ ரெஸ்ட் எடு நான் அப்பறம் கூப்பிடுறேன்…."என்றவன் வைத்து விட,

பூமிகாவுக்கு இப்பொழுது தான் பயமின்றி நிம்மதியாக இருந்தது.ஏனெனில்

புவனாம்மா…. சத்யாவின் தாய்…...கோமதியின் பெரியம்மா கற்பகத்தின் மகள். கோமதியின் அன்னையும், கற்பகமும் உடன்பிறந்தவர்கள்.
திருமணத்திற்கு முன்பு வரை இருவரும் நெருங்கிய தோழிகள். புவனாவை திருமணம் செய்து கொடுத்த இடம் கூட்டுக் குடும்பமாகும். விசாலாட்சி சத்யாவின் பாட்டி அக்குடும்பத்தின் மூத்த தலைவி.கண்டிப்பான மற்றும் கறார் பேர்வழி.சட்டென்று முகத்தில் அடித்தவாறு பேசி விடுவார்.

அவரை நினைத்து தான் சற்று கலக்கமாக இருந்தது பூமிகாவிற்கு.. அதனால் தான் புவனா முன்வந்து கோமதியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை எடுத்துக் கொள்ள முற்பட்ட போது இவள் சம்மதிக்கவில்லை. இதோ சத்யா பண உதவி செய்வது விசாலாட்சி அறியாமல் எல்லாம் இல்லை, இருந்தும் தங்களின் நிலை அறிந்து அமைதியாக இருக்கிறார் என்பதும் பூமிகா அறிந்த ஒன்று தான்.எனவே, தான் சத்யாவிற்கு அதிக சுமைகள் தராது இவள் வேலைக்கு சென்று அத்தியாவசிய தேவைகளை தானே பார்த்துக் கொண்டாள்.

இப்பொழுதும் கோமதியை அங்கே விட்டு வர இவளுக்கு விருப்பம் இல்லாமல் தான் விட்டு வந்தாள்.
கோமதியின் சிறு பிள்ளை செய்கையில் ஏதேனும் மனம் நோகும் படி பேசி விடுவார்களோ என பயத்தில் உழன்று கொண்டிருந்தாள்.

ஆனால் தற்போது அந்த பயம் சுத்தமாக இல்லை….அவளிடம் காரணம் கற்பகம் அவரை நினைக்கையிலேயே மெல்லிய புன்முறுவல் ஒன்று பூத்தது அவளிடம்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தது அவள் மனம்.

வசந்தி அக்காவிற்கு முன்பு அவளின் கோமதியை பார்த்துக் கொண்டிருந்தவர் இவர் தான். பூமிகா கல்லூரி இறுதி வருடம் படித்துக் கொண்டிருந்த சமயம் அது.

ஒரு நாள் பூமிகா குளிப்பதற்காக போட்டு வைத்திருந்த வெந்நீரில் கோமதி தெரியாமல் கை விட்டு விட, அதில் அவர் கை நன்கு சிவந்து கொப்புளங்கள் வேறு துளிர்விட்டிட….அதனை கண்டு பதட்டமடைந்த பூமி,

"ஏன் ஆச்சி…..இத கூட கவனிக்காம நீ என்ன பண்ணிட்டு இருந்த……., எங்கம்மாவா பாத்துக்குறத விட உனக்கு வேற என்ன வேலை…" என கத்தி விட,

ஏற்கனவே பதட்டத்தில் இருந்த கற்பகத்திற்கு பூமியின் வார்த்தைகள் எரிச்சலை உண்டாக்க…..பதிலுக்கு இவரும் பேச என சிறு விஷயம் இருவரின் ஈகோவினாலும் பிடிவாதத்தினாலும் பூதகரமாக வெடித்தது. இதில் கற்பகம் கோவித்துக் கொண்டு சென்று விட…..பூமியும் அவர் மேல் உள்ள கோபத்தில் அவரை திரும்ப அழைக்காது வசந்தியை வேலைக்கு அமர்த்தி விட்டாள்.

இப்பொழுது அச்சம்பவத்தை நினைக்கையில் சிரிப்பு தான் வந்தது அவளிற்கு. இதை விட கொடுமையான விஷயம் என்னவென்றால் சண்டைக்கு காரணமான கோமதியோ…...அடுத்த நாள் எழுந்ததும் கற்பகத்தை காணாது தேடி அழ ஆரம்பிக்க...அப்போதிருந்த கோபத்தில் பூமி அவரை மிரட்டி இனி கற்பகம் வர மாட்டார் என சொல்லிவிட்டிருந்தாள்.

எது எப்படியோ……..இனி கோமதியை கற்பகம் ஆச்சி பார்த்துக் கொள்வார் பயமில்லை என்ற நிம்மதியில் அவள் கண்கள் உறக்கத்தை தழுவின.

*****************
அடுப்பில் ஒரு புறம் பால் கொதித்துக் கொண்டிருக்க….. மற்றொரு புறம் வாணொலியில் வெட்டி வைத்திருந்த காய்கறிகளை போட்டு வதக்கி கொண்டு இடையிடையே சில வேலைகளை செய்வதும் என பரபரப்பாக சமையலறைக்குள் சுற்றிக் கொண்டு இருந்தாள் அகல்விழி.

வாசலில் கேட்ட கார் சத்தத்தில் கணவனும் மைத்துனனும் அலுவலகத்தில் இருந்து வந்து விட்டதை உணர்த்துக் கொண்டவள்,அவர்கள் ப்பிரஸ் ஆகி வருவதற்குள் இரண்டு டம்ளர்களில் பாலை ஊற்றி இருவருரின் விருப்பத்திற்கேற்ப பொடி கலந்து கலக்கியவள்,

அருகே இருந்த சமையல் காரப் பெண்ணிடம்,
"இத தீஞ்சுடாமா வதக்கி கிட்டு இருங்க… நா இத கொடுத்துட்டு வந்துடுறேன்…"என்று விட்டு வெளியேறினாள்.

ஹாலில் அமர்ந்திருந்த இருவருக்கும் காபியை கொடுத்தவள் நகர போக,
"நீ குடிச்சிட்டியா அகல்"எனக் கேட்டான் ஆதேஷ்.

கணவணின் கேள்வியில் "இல்லை" என‌ மறுப்பாக தலையசைத்தவள்
"யாஸ்மினிக்கு ஸ்னாக்ஸ்‌ செஞ்சுட்டு இருக்கேன் ஆதேஷ்… அது முடிச்சிட்டு குடிச்சிக்கிறேன்….அவ ஸ்கூல்ல இருந்து வர்றதுக்குள்ள செஞ்சுடணும்….பாவம் பசி ல வருவ…."என் பதிலளித்தாள்.

"கொஞ்சம் நேரம் காபி குடிக்கிறதுல ஒண்ணும் ஆகிடாது…. நீ உட்காரு…."என அவளை அமர்த்தியவன் சமையல்காரர் பெண்மணியிடம் காபி எடுத்து வர பணிந்தான்.

அதற்கு‌ மேல் வாதாடாமல் கணவனருகே அமர்ந்துக் கொண்டாள் அகல்விழி.சற்று நேரத்தில் ஆதேஷ் தொழில் சம்பந்தமான பேச்சினை ஆரம்பிக்க...சிறிது நேரம் அதனை கேட்டவள் பின் நேரமாவது உணர்ந்து எழுந்து சென்று விட்டாள்.

அரை மணி நேரம் சென்று வீட்டினுள்‌ நுழைந்தாள் யாஸ்மினி. மிகவும் களைத்துப் போய் இருந்தாள்.அவள் வரும் வரையிலும் சகோதரர்களின் பேச்சு நீண்டு கொண்டிருந்தது.

வந்தவள் நேராக இருவருக்கும் இடையில் தனது பேக்கை வீசியவள் "பாபி…….அண்ணி….."என கூவி கொண்டே அகல்விழி இருந்த இடத்திற்கு சென்று விட்டாள்.

அவள் வீசிய‌ வேகத்தில் பேக்கின் முன் பக்க 'ஜிப்' கழன்று உள்ளிருந்த புத்தகங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு வெளி வந்திருந்தன.

அதில் கடுப்பான இருவரும் முறைப்புடன் நிமிர…. அய்யோ!!!!‌ பாவம்…..அவள் அங்கு இருந்தாள்
தானே….???? வேறுவழியின்றி இருவரும் அதை எடுத்து சரி செய்து எடுத்து அந்த பக்கம் வைத்து விட்டு தங்கள் பேச்சினை தொடர் நினைத்த நொடி,

சுவற்றில் அடித்த பந்தாய் சமையலறை சென்றவள் புயல் வேகத்தில் வெளிவந்து இருவருக்கும் இடையே "பொத்" என்று விழுந்திருந்தாள் யாஸ்மினி.

அவள் செயலில் கடுப்பான விஹான்,

"அடியே…..எருமை அறிவில்ல…...பேசிட்டு இருக்கோம்ல……..அங்கிட்டு போய் உக்கார‌ வேண்டியது தான..???"என,

"உனக்கு தான் மூளை இல்ல வீட்டுக்கு வந்தும் ஆபிஸ் விஷயத்த பேசிட்டு இருக்கீங்க…..எப்ப பாத்தாலும் ஆபிஸ் பேச்சு தான் என் கூட டைம் ஸ்பென்ட் பண்றது இல்ல..??? இன்னைக்காவது டைம் ஒதுக்குவீங்கன்னு பாத்த….அதுவும் இல்ல…….என்கிட்ட பேசி எத்தன நாள் ஆகுது தெரியுமா…???" என ஆதங்கமாக கேட்டாள் யாஸ்மினி.

தங்கையின் வருத்தத்தை உணர்ந்து கொண்டவர்களின் மனமும் கனத்து போனது...என்ன செய்வது?? அவர்கள் தொழில் அப்படி….

"யாஸ்மினி நீ முத போய் ப்பிரஸ் ஆகிட்டு வா...நாங்க எங்கேயும் போகல….இங்க தான் இருப்போம்...போயிட்டு வா…."என அவளை அனுப்பி வைத்தான் ஆதேஷ்.

"ம்ப்ச்…..அண்ணா…...அவ சொல்றதும் சரிதான்….நம்ம அவளுக்கு நேரம் ஒதுக்குறதே இல்ல….ரொம்ப ஏங்குறா போல…??"செல்லும் தங்கையின் முதுகை பார்த்துக் கொண்டே கூறினான் விஹான்.

"ம்ம்ம்...இனி பாத்துக்கலாம் விடு"
என ஆதேஷ் கூறும் போதே அவள் வந்து விட்டாள்.
வந்தவள் ஏதும் பேசாமல் ஆதேஷின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

அவளின் அமைதி இருவருக்கும் உறுத்த...அவளின் காலை எடுத்து தன் மடி மீது வைத்து கொண்ட விஹான்,

"அப்புறம் இன்னைக்கு ஸ்கூல்ல எத்தன பனிஷ்மென்ட் வாங்குன சொல்லு….."என அவளை சீண்ட,

"நா ஒன்னும் உன்ன மாதிரி கிடையாது…..பனிஷ்மென்ட் வாங்குறது எல்லாம் என் லிஸ்ட்டுலயே கிடையாது….என் காலை‌ விடு மொதல்ல நீ…..இப்புடி எல்லாம் பண்ணின நான் சமாதானம் ஆக மாட்டேன்... விடு….விடுடா….மோர் ஓவர் இந்த தடவ எக்ஸாம்ல நான் தான் கிளாஸ் டாப்பர்... தெரியுமா உங்களுக்கு?????என்ன பத்தின விஷயம் எதுவும் தெரியல உங்களுக்கு…."என கோபத்தில் முகத்தை திருப்பிய படி இருந்தாள்.

கோபத்தில் சுருங்கிய அவளது நெற்றியினை மென்மையாக நீவி விட்ட ஆதேஷ்,
"தெரியுமே…...நீ தான் கிளாஸ் டாப்பர்ணு…..அப்புறம் லாஸ்ட் எக்ஸாம்ல மேடம்க்கு ஃபைவ் மார்க்ஸ்ல கிளாஸ் டாப்பர் மிஸ் ஆயிடுச்சு அதுக்கும் சேத்து வச்சு இந்த இந்த எக்ஸாம்ல ஸ்கோர் பண்ணிட்டீங்க…"என்றான்.

ஆதேஷின் பதிலில் அவள் முகம் பிரகாசிக்க…."ஆமாம் பய்யா…...உங்களுக்கு அது தெரியுமா…...ஆனா பாருங்க விஹான் பய்யாக்கு…..என்ன பத்தி ஏதும் தெரியல…"என் அவள் சிணுங்க தொடங்க,

அவளின் தலையில் எக்கி தட்டிய விஹான்,
"நீ மேத்ஸ்ல எய்ட்டி, சைன்ஸ்ல ஹன்ட்ரர்….."என அவளின் மதிப்பெண்களை துல்லியமாக கூறினான்.

"இப்ப சொல்லு உன்ன பத்தி எங்களுக்கு ஏதும் தெரியலையா என்ன????" என இருவரும் சேர்ந்து கேட்க,

சந்தோஷத்தில் துள்ளி எழுந்தவள் இருவரையும் சேர்த்தணைத்து….."லவ் யூ…..லவ் யூ….சோ மச்….அண்ணாஸ்…."என்றாள்.

அவளின் வருத்தம் அவர்கள் இருவரும் தன்னை கவனிக்கவில்லை என்று தானே…..அந்த சந்தேகம் தீர்ந்து விட்ட மகிழ்ச்சியில் மிதந்தாள் யாஸ்மினி.

சமையலறையில் இருந்து வெளிவந்த அகல்விழியின் விழிகளில் மூவரும் அணைத்திருந்த காட்சி விழ அவளது இதழ்களில் மென்னகை தோன்றிற்று….மேலும் கடந்த கால நினைவுகளை தேடி செல்ல துடித்த மனதினை கடிவாளம் இட்டு அடக்கியவள் அவர்களை நோக்கி சென்றாள்.

"ம்ஹூம்….உங்க கூட்டணியில் எனக்கு இடம் உண்டா…."என கேட்டபடி அவர்களின் அருகில் நின்றாள் அகல்விழி.

அவளின் கேள்வியில் கண்விழித்த யாஸ்மினி,
"உங்களுக்கு இல்லாததா பாபி….நீங்க தான் பர்ஸ்ட்டு….. மத்தவங்க எல்லாம் நெக்ஸ்ட் தான்.."என கூறியபடி எழுந்து அகல்விழியை இறுக்கி அணைத்தவள் அவளது கன்னங்களில் இதழ்களை பதித்தாள்.

"ம்ம்ம்…..என்ன பாபி இது ஸ்மல் சூப்பர் இருக்கு…." அகல்விழியின் கையில் இருந்ததை சுட்டி காட்டி வினவினாள் யாஸ்மினி.

"பால் கொழுக்கட்டை….உனக்கு தான் உட்காரு…" என்றபடி மூவருக்கும் கிண்ணத்தினை கொடுத்தவள் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

புதிதாக இருந்ததை ஆவலுடன் ருசிப் பார்த்தனர் மூவரும். அதன் சுவையில் ஈர்க்கப்பட்ட யாஸ்மினி,
"வாவ் பாபி…..செம்ம டேஸ்ட்டா இருக்கு இன்னும் கொஞ்சம் தாங்க….உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு நீங்க இது எல்லாம் செஞ்சி கொடுத்துருக்கீங்களா????" என வினவினாள் அவள்.

அந்த கேள்வியில் ஆதேஷ் சட்டென திரும்பி அகல்விழியின் முகம் பார்க்க…..அவளது முகம் வேதனையில் கசங்கியது,

சட்டென தன்னை சமன் செய்து கொண்டவள், "நா போய் இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு‌ வரேன்…"என்றவள் யாஸ்மினியின் கேள்வியை தவிர்த்து விட்டு சென்று விட்டாள்.

செல்லும் அவளின் முதுகை வெறித்து பார்த்து ஆதேஷின் முகம் வேதனையை அப்பட்டமாக சுட்டி காட்டியது.

சமையலறைக்குள் நுழைந்தவளின் மனம் அவள் இட்ட கடிவாளத்தையும் மீறி கடந்த கால நினைவுகளுக்கு செல்ல...அதன் விளைவு‌ அவளது கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் கன்னங்களில் உருட்டோடியது.

மரணம் நிகழும்.......












 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவணை முறையில் காதல்(மரணம்) நிகழும் 4



இரண்டு வாரங்கள் ஓடிருந்தன பூமிகா வேலையில் சேர்ந்து.அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தவள் விடுதியில் காலை உணவை முடித்து விட்டு வெளியேற….ஆபிஸ் கேப் வந்துவிட்டது ஏறிக் கொண்டாள்.
அவளின் விடுதியின் முன்பே ஆபிஸ் கேப் வந்துவிடுவதால் எந்தவித பிரச்சனையும் இல்லை.

அலுவலகத்தில் நுழைத்தவள் வழக்கத்திற்கு மாறாக அன்று பரபரப்பாக இயங்குவதை கண்டவள்,காரணம் அறியாது தன் இருக்கைக்கு சென்றமர்ந்தாள்.
அருகில் இருந்த தோழியிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல் என்னவோ அன்று முக்கிய அலுவலக கூட்டம் நடக்க இருப்பது தெரிய வந்தது.

ஓ..ஓ…. என்ற சொல்லுடன் பேச்சினை முறித்து கொண்டவள் தனது வேலையை தொடங்கினாள்.வேலையில் கவனமாக இருந்தாலும் அவளிற்கும் ஷர்மா பிரதர்ஸை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

அவள் இங்கு வந்து சேர்ந்த தினத்தில் இருந்து இதுவரை அவர்களை கண்டதில்லை.அவள் நேர்முக தேர்விற்கு வந்த பொழுது கூட அவளுக்கு மேலதிகாரியான மேனேஜர் தான் நேர்முகத் தேர்வை நடத்தியது. அதுமட்டும் இல்லாமல் பூமிகா வின் வேலை தரைதளத்தில் என்பதால் இதுவரையிலும் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, அவர்களை பார்க்கும் ஆர்வத்தில் இருந்தாள் பூமிகா.


இங்கே ஷர்மா பிரதர்ஸின் வீட்டில்…….,

முக்கிய அலுவலக கூட்டம் என்பதால் அதற்குரிய கோப்புகளை சரி பார்த்து எடுத்து வைத்து கொண்டிருந்தான் விஹான்.

அப்பொழுது அவனின் அறைக்குள் மேலும் சில கோப்புகளை எடுத்த வந்தான் ஆதேஷ். இருவருமாக அதனை சரிபார்த்து எடுத்து வைத்தவர்கள் தங்களது திருப்திக்காக மறுபடியும் எடுத்து அனைத்தையும் சரி பார்த்தவர்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு கிளம்பினர்.

டைனிங் டேபிளில் அவர்கள் அமர அனைத்தையும் எடுத்து வைத்து தானும் உணவு உண்ண அமர்ந்த அகல்விழிக்கு அவர்களின் தோற்றத்தில் ஒருவித படபடப்பு தெரிய அதனை கேட்டு விட்டாள்.

"ஆதேஷ்….விஹான்… ஏன் இவ்ளோ டென்ஷன் நிதானமா சாப்பிடுங்க….சாப்பிடும் போது எதை பத்தியும் நினைக்காதீங்க….ரெண்டு பேரும் ஸ்ட்ராஸ்ஸா…. தெரியிறிங்க….ரிலாக்ஸ்….."என்க,

"இல்ல அகல் இன்னைக்கு ஒரு இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு….இதுல ஏதும் சொதப்பிட கூடாது…...இந்த மீட்டிங்னால நம்ம கம்பெனிக்கு இன்னும் கொஞ்சம் நல்ல ரீச் கிடைக்க வாய்ப்பிருக்கு…..ஷோ இந்த ஆஃபர் மிஸ் பண்ணிட கூடாதுன்னு டென்ஷனா இருக்கு"
என்ற ஆதேஷ் விஹானிடம்,

"விஹான் ஆபிஸ்ல எல்லா அரேன்ஞ் மென்ட்ஸ்ஸூம் சரியா இருக்குல எல்லாத்தையும் செக் பண்ணிக்கோ….இன்னைக்கு ஏதும் தப்பா நடந்துக்காமா….பார்த்துக்கறது உன்னோட பொறுப்பு…..நியாபகம் வச்சுக்கோ…." என்றான்.

இடைப்பட்ட நேரத்தில் இருவரும் உண்டு முடித்திருந்தனர்.

"ஓகே…..ஓகே…...இந்த மீட்டிங் நீங்க ஆசைப்பட்ட மாதிரி நடக்க என்னோட வாழ்த்துக்கள்...ஆல் த பெஸ்ட் போல் ஆஃப் யூ…" என்றாள் அகல்விழி.

அவளின் வாழ்த்தை ஏற்றுக் கொண்டவர்கள் கிளம்பும் வேலையில்……

"ஏன் அண்ணி நீங்களும் எங்களோட வரக் கூடாது….இந்த மீட்டிங் அட்டன் பண்ணா உங்களுக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும்…...அண்ட் நம்ம கம்பெனில என்ன என்ன நடக்குதுன்னு நீங்களே தெரிஞ்சுக்கலாம்….."என்றான் விஹான்.

"நானா……….."என இழுத்தாள் ஆதேஷை பார்க்க…...அவனின்
"போய் ரெடியாகிட்டு வா அகல்…."
என்ற பேச்சில் மறுக்காது தயாராக சென்றாள்.

அவளிற்கும் வீட்டில் இருப்பது போர் அடிக்க….விஹார் சொன்னது போல் ஒரு புது அனுபவமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தயாராகினாள்.

அகல்விழி தயாராகி வர…...மூவரையும் சுமந்து கொண்ட மகிழுந்து அலுவலகத்தை நோக்கி சென்றது.


திடீரென அலுவலகம் பரபரப்பாகவும் கணினியில் மூழ்கி இருந்த பூமிகா நிமிர்ந்து பார்க்க…..

வேக நடையில் உள் நுழைந்து கொண்டிருந்தனர் விஹான் மற்றும் ஆதேஷ்.அவர்களின் பின்னே அவர்களின் வேக நடைக்கு ஈடு கொடுக்காது நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் அகல்விழி.

அவர்கள் ரிசப்ஷனை கடந்து செல்லும் நொடியில் வேகமாக எழுந்த பூமிகா அவர்கள் இருவருக்கும் காலை வணக்கத்தை கூற பதட்டத்தில் இருந்தவர்கள் அவளை கவனியாது கடந்து சென்று விட அதில் அவள் முகம் சுருங்கி விட்டது.

அவர்கள் இருவரின் பின்னே வந்த அகல்விழி இதனை கவனித்து விட பூமிகாவை கடந்து செல்லாது அவளின் அருகில் நின்றவள்,
"குட் மோர்னிங்…." என்று கூற,

அதில் பூமிகாவின் முகம் மலர்ந்து விட பதிலுக்கு "குட் மோர்னிங்... மேடம்…"என்றாள்.

தங்களின் பின்னே வந்து கொண்டிருந்த அகல்விழியை காணாது ஆதேஷ் திரும்பி பார்க்க….அந்த நொடி விஹானின் அலைப்பேசிக்கு ஒரு அழைப்பு வர எடுத்து பேசியவன்,

" வாட்????.....எப்போ…???"

…………………..

"ஓ…...காட்……"

…………….

"இப்போ எப்புடி இருக்கு…."

……………..

"ஓகே….ஓகே...வீ வில் மேனேஜ்!!! டேக் கேர்….பணம் ஏதும் வேணும்னு அக்கவுன்ட்ஸ்ல கேட்டு வாங்கிக்கோங்க…" என்றவன் போனை அணைத்து விட்டு தன்னை கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த ஆதேஷை நோக்கியவன்….,

"நம்ம பி.ஏ.ஷீலாவோட பையனுக்கு ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சாம் ஐ.சி.யு.ல வச்சுருங்காங்களாம்… கொஞ்சம் சீரியஸான சிச்சுவேஷனாம்…." என

"ஓ..நோ...எப்ப நடந்துச்சாம்...அவுங்களுக்கு சின்ன பையன் தான இருக்கான்….அவனுக்கா??? எப்படி இப்படி ஆச்சாம்.." எனக் கேட்டான் ஆதேஷ்.

"ஆமாண்ணா…..ஸ்கூல் படிக்கிற பையன் தான்‌ இன்னைக்கு மார்னிங் தான் பையன் ஸ்கூல் வேன் ஏத்தி விட போறப்ப ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம்...இப்ப கூட அவுங்க ஹஸ்பண்ட் தான் கால் பண்ணாரு….ஷீ வாஸ் பெனிக்…..
அண்ட் இன்னைக்கு மீட்டிங் அட்டன் பண்ண முடியாததுக்கு சாரி கேட்டாங்க" என்றான் விஹான்.

"ஓ…. காட் இத எப்படி மறந்தோம்….அவுங்க தான நோட்ஸ் கிளியரா எடுப்பாங்க….வேற யார இப்ப தேடுறது….. இன்னும் கொஞ்சம் நேரத்துல மெம்பர்ஸ் எல்லாம் வந்துடுவாங்க…." என்றான் ஆதேஷ்.

இருவரின் பேச்சையும் கவனித்த அகல் அவர்கள் அருகில் வந்தவள்,

"என்னாச்சு...ஏதும் பிரச்சனையா…??" என்றவளின் கேள்விக்கு,

"ஆமா அகல் சின்ன பிராப்ளம்…"என நடந்த அனைத்தையும் சொன்னவன்
"ம்ப்ச்….இப்ப போய் யார தேடுறது…. மீட்டிங்க்கு வர்றவங்க ரொம்ப முக்கியமானவங்க...அவங்க சொல்றத...கேட்குற விஷயத்தை எல்லாம் ஷார்ட்டா டக்கு டக்குன்னு நோட்ஸ் எடுக்கணும்….அவுங்க லாங்குவேஜ் கொஞ்சம் பாஸ்ட்...அண்ட் ஷீலா.. அவுங்க ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் இதுல… ஷோ அவுங்கன்னா பயமில்ல…
இப்ப அவங்க இடத்துல வேற யாரா கொண்டு வர்றது...வர்றவங்க கரெக்ட்டா நோட்ஸ் எடுக்கணும் அவுங்க முன்னாடி புரியாமா நின்னா..நம்மளுக்கு தான் அவமானம்.." என்றவன் ஆபிஸ் பியூனை அழைத்து,

"யாராச்சும் ஷார்ட் ஹேண்ட்(சுருக்கெழுத்து) தெரிஞ்சவங்க...கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ்ஸான ஆளா இருந்தா கூட்டிட்டு வா.." என் கட்டளையிட,

அவனின் கட்டளையை ஏற்று சென்ற ப்யூன் அரைமணி நேரம் கழித்து வெறும் கையோடு திரும்பி வர,
"என்ன…???" என புருவத்தை உயர்த்தி கண்களால் முறைத்து கேள்வி கேட்ட ஆதேஷை கண்டு ஒரு நொடி எச்சில் கூட்டி விழுங்கியவன்,

" யாருமே இல்ல… சார்…" என் அவசரமாக சொல்லி முடித்திருந்தான்.

"என்ன??? ஷார்ட் ஹேண்ட் தெரிஞ்சவங்க ஒருத்தர் கூடவா இல்ல நம்ம ஆபீஸ்ல….இடியட்!!!! நல்லா செக் பண்ணியா??" என கோபத்தில் இரைந்தான் விஹான்.

ஆனால் உண்மை அதுவல்ல….. சுருக்கெழுத்து தெரிந்தவர்கள் இருந்தனர். ஆனால் ஷர்மா பிரதர்ஸின் கோபத்திற்கு பயந்து யாரும் முன் வரவில்லை. பின்னே வரும் ஆட்கள் பேசும் மொழியை வைத்து சரியாக எடுக்க வேண்டும் அதில் ஏதும் தவறு நடந்தால்….அவ்வளவு தான் இருவரும் எரிமலையாய் வெடித்து விடுவர்….இல்லையா பின் அப்படி நடந்தால் அது ஷர்மா பிரதர்ஸ்கு தானே அவமானம்…. அவர்களின் கோபத்திற்கு பயந்தே யாரும் வரவில்லை.

விஹானின் கோபத்தில் உண்மையை உரைக்க முடியாது ப்யூன் தவித்துக் கொண்டிருந்த வேளையில்,

அத்தனை நேரமும் அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள்,

"சார்….கேன் ஐ டூ திஸ்… எனக்கு ஷார்ட் ஹேண்ட் தெரியும்….." என்ற சொல்லோடு உள்நுழைந்தாள் பூமிகா.

அவளின் தலையீட்டால் விளங்காத பார்வையுடன்
"நீங்க……" என் அவளை யார் என்றறியாது புருவம் சுருக்கி பார்த்தனர் அண்ணன் தம்பி இருவரும்.

அவர்களின் பார்வையை புரிந்தவள்,
"பூமிகா...சார் ரிசப்ஷனிஸ்ட்டா ஜாயின் பண்ணி ரெண்டு வாரம் ஆகுது…"

ஏற்கனவே யாரும் வராத கடுப்பில் இருந்த விஹான்,
"மிஸ்.பூமிகா இது ஒண்ணும் கத்திரிக்கா வியாபாரம் இல்ல எவ்ளோ வாங்குறீங்கன்னு பேப்பர்ல எழுதுறதுக்கு…...இது டீலர்ஷிப் சம்பந்த பட்டது. ஜாயின் பண்ணி ரெண்டு வாரம் கூட ஆகல எக்ஸ்பீரியன்ஸ்ஸும் இல்ல எந்த தைரியத்துல இத செய்யுறேன்னு சொல்றீங்க….உங்களோட வேலை ரிசப்ஷனிஸ்ட் தானா….அத மட்டும் பாத்தா போதும்…….சும்மா கடுப்ப கிளப்பிக்கிட்டு….இருக்குற‌ நிலைமை புரியாமா சின்னபுள்ள தனமா வந்து பேசிக்கிட்டு.." என்றான்.

"விஹான் என்ன இது???? ஸ்டாப் கிட்ட இப்படி தான் நடந்துக்குறதா…."என அகல்விழி கடிந்து கொள்ள…..

தன்னை குறைவாக எடை போட்டு அவன் பேசியதில் அவளின் தன்மானம் விழித்து கொள்ள பயமின்றி விஹானை நேரடியாக முறைத்து பார்த்தவள்…..அருகிருந்து ஆதேஷிடம்,

"சார்….என்னால நிச்சயமா இதை செய்ய முடியும்….எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…..எக்ஸ்பீரியன்ஸ் இல்லைதான் ஒத்துக்கிறேன்...பட் ஷ்யூர்லி…..ஐ கேன் டூ இட் சார்…..எந்த தப்பும் நடக்காது….அப்படி நடந்தா...நீங்க என்ன ஆக்ஷன் எடுத்தாலும் ஓகே…."
என்றாள் பூமிகா.

அவளின் முறைப்பில் ஒரு நொடி திகைத்தான் பின் பதிலுக்கு தானும் முறைத்து பார்த்து விஹான்,
'எம்.டி என்ற நெனப்பே இல்லாமா எப்புடி முறைக்கிறத பாரு…' என நினைத்து கொண்டான்.

பூமிகாவின் தைரியமான பேச்சில் ஆதேஷின் இதழ்களில் மெல்லிய புன்முறுவல் ஒன்று தோன்ற..,

"ஓகே...மிஸ்.பூமிகா நீங்களே இத பண்ணுங்க…..இந்த ஆபர்ச்சுனிட்டியா...நல்லா யூஸ் பண்ணிக்கோங்க…" என்றான்.

"அண்ணா….என்ன.. இது…???" என இடைமறித்த விஹானை தனது பார்வையால் அடக்கியவன்,
"அவுங்க இவ்ளோ கான்பிடன்ட்டா இதை சொல்லும் போது நம்மளும் அது மதிக்கணும் விஹான்.." என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது மீட்டிங்கிற்கு ஆட்கள் வந்து விட….

"வெட்ஸ் கோ….அவுங்க வந்துட்டாங்க...அண்ட் பூமிகா உங்களுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் இப்ப கொண்டு வந்து தந்துடுவாங்க…." என்றபடி ஆதேஷ் வந்தவர்களை அழைக்க செல்ல பின்னூடே விஹானும் சென்று விட்டான்.

"பெஸ்ட்..ஆஃப்..லக்...பூமிகா.."
என்றபடியே அகல்விழியும் அவர்கள் பின்னே சென்று விட்டாள்.

சிறிது நேரத்தில் மீட்டிங் ஆரம்பித்து விட வந்தவர்கள் பேசும் மொழியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தட்டு தடுமாற ஆரம்பித்தாள் பூமிகா.

அவளின் தடுமாற்றத்தை கண்ட விஹானின் இதழ்கள் கேலியாக வளைய….ஏதோச்சையாக திரும்பியவளின் பார்வையில் அவனின் கேலி பார்வை பட்டு விட….அவனை கடுமையாக முறைத்தவள் தனது கவனத்தை சிதற விடாது காதுகளை கூர்மை தீட்டி அவர்களின் பேச்சில் முழு கவனத்தையும் வைத்தவள் அடுத்த
அரை மணி நேரத்திற்கு எல்லாம் அவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்திருந்தாள்.

அவளின் செய்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்த விஹானின் புருவங்கள் ஆச்சரியத்தில் உச்சி மேட்டை தொட...அவளின் மனக் கட்டுப்பாட்டை‌ கண்டவனின்
விழிகள் ஒரு நொடி வியப்பில் விரிந்தது, பின் அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பார்வையை அகற்றியவன் மீட்டிங்கில் ஆழ்ந்தான்.

அடுத்த சில மணி நேரங்களில் மீட்டிங் முடிந்து விட வந்திருந்த விருந்தினர்கள் கம்பெனியை சுற்றி பார்க்க அழைத்து செல்லப்பட்டனர்.

முதலில் கம்பெனியின் உள் சுற்றி பார்த்தவர்கள் அடுத்து சென்ற இடம் டைல்ஸ் கற்கள் தயாரிக்கும் கம்பெனியை சுற்றி பார்க்க அழைத்து செல்லப் பட்டனர்.

முதலில் அலுவலகத்தின் உள் பக்கம் சுற்றி பார்த்தவர்கள் அடுத்து சென்ற இடம் அலுவலகத்தின் பின்புறம் இருந்த டைல்ஸ் கற்கள் தயாரிக்கும் இடத்திற்கு.

இன்றைய கால சூழ்நிலையில் மனிதர்களாகிய நாம் உற்ற நண்பர்கள் உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட நாம் வாழும் வீட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்து விட்டோம்.

இல்லம் என்பது நம் வசிப்பதற்கான அடிப்படை தேவை என்ற நிலை மாறி ஆடம்பரமான வாழ்க்கையாக காணப்படுகிறது. அடுத்தவரின் பார்வையில் நம் வீடு வித்தியாசமாகவும், ஆடம்பரமாகவும், பெருமையாகவும் பார்க்க பட வேண்டும் என்ற காரணத்திற்காக வித விதமான பொருட்களை தேடி தேடி வாங்கி குவிக்கின்றோம்.

அதில் முக்கிய ஒன்று வீட்டிற்கான கற்கள் முதலில் மண் தரை பின் சிமெண்ட் தரை என்ற வரிசையில் தற்போது கிரானைட் கற்களும் டைல்ஸ் கற்களும் தான் அதிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளன.

வீட்டினுள்ளே நீச்சல் குளம் இருப்பது போன்ற கற்கள், மீன்கள் நீந்துவது போலவும்….நதிகள் மற்றும் அருவிகள் விழுவது போலவும்…. என மக்களின் ரசனையை தூண்டும் விதமாகவும் மற்றும் அவர்களை கவரும் விதமாகவும் என விதவிதமான டைல்ஸ் கற்கள் மார்க்கெட்டிங்ல் உலா வருகின்றன.

அந்த ரசனையையும் மக்களின் ஆர்வத்தையும் துல்லியமாக உள்வாங்கி கொண்டு அதற்கேற்ப கற்களை தயாரித்து இது நாள் வரையிலும் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது ஷர்மா நிறுவனம்.

பின்புறம் இருந்த கற்கள் தயாரிக்கும் கட்டிடத்திற்குள் முதலில் ஆதேஷ் நுழைய அவர்களின் பின்னே விருந்தினர்கள் அதற்கு பின்னே விஹான் என வரிசையாக உள் நுழைந்தனர்.

அவர்களின் பின்னே சிறு இடைவெளி விட்டு பாதையில் கவனத்தை வைக்காது சுற்றும் முற்றும் நடைபெற்ற வேலைகளை ஆர்வமாகப் பார்த்தவாறு நடந்து வந்து கொண்டிருந்தாள் அகல்விழி.

அந்த கட்டிடத்தில் கற்களை வெட்டுவதற்கும்….டிசைனிங் செய்வதற்கு…..பெயிண்டிங் செய்வதற்கு என் தனி தனி பிரிவுகள் அமைக்கப்பட்டிருந்தன.

எடுத்த நோட்ஸ்ஸை எல்லாம் சரிபார்த்து அக்ரீமண்ட் போடுவதற்கான பேப்பர்சையும் தயராக்கி கொண்டு சிறிது நேரத்தில் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள் பூமிகா.

அகல்விழியை தாண்டி முன் செல்ல இயலாது காரணத்தினால் அவளின் பின்னே நடந்து வந்தாள் பூமிகா.

அடுத்து இறுதியாக அவர்கள் சென்றது கற்களை வெட்டும் பிரிவிற்கு. பெரிதாக இருந்த கற்களை அதற்குரிய மெஷின்கள் மூலம் வெட்டி எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர் வேலையாட்கள்.

ஊசி போன்ற நாலாப்பக்கமும் கூரிய முனையுடன் அப்பொழுது தான் வெட்டி எடுத்து சற்று ஓரமாக வைக்கப் பட்டிருந்தது டைல்ஸ் கல்.

அதை கவனித்து அனைவரும் சற்று தள்ளி நடந்து சென்றனர். அகல்விழியும் அதை கவனித்து சற்று தள்ளி அதை சுற்றி நடந்த நொடி திடீரென அவளின் சேலையில் பின்புறம் எதிலோ மாட்டி இழுபடும் உணர்வு ஏற்பட அதை அசட்டை செய்ததாக அடுத்த அடி அவள் எடுத்த வைத்த நொடி நிலை தடுமாறி கீழே விழுந்திருந்தாள்.

அகல்விழி விழுவதை அவளுக்கு பின் வந்து கொண்டிருந்த பூமிகா கண்ட நொடி "மேடம்.."என்ற அலறலுடன் கையில் வைத்திருந்த பேப்பர்சை எல்லாம் கீழே போட்டவள்,

அகல்விழி கீழே விழாது அவளை தாங்க... அகல்விழியின் பாரம் தாங்காது பூமிகாவும் சேர்ந்து விழுந்திருந்தாள். அதில் பூமிகாவின்
கை அந்த கூரிய கற்களின் மீது விழ ஆழமான கீறல் அவளின் கைகளில் விழுந்திருந்தது. பூமிகா தாங்கி கொண்டதில் பெரிதாக ஏதும் காயம் இல்லை என்றாலும் சிறிய கீறல் ஒன்று அகல்விழியின் நெற்றியில் ஏற்பட்டிருந்தது.

திடீரென்று கேட்ட பூமிகாவின் குரலில் திகைத்த அண்ணன் தம்பி இருவரும் திரும்பி பார்க்க அவர்கள் கண்டது அகல்விழியும் பூமிகாவும் கீழே விழுவதை தான்.

"அகல்…." ‌ "அண்ணி…." என்ற சத்தத்துடன் இருவரும் அவளருகே விரைந்திருந்தனர்.

"அகல்…. என்னாச்சு…." என்று அவளை கை கொடுத்து எழுப்பி விட்டவன்,
அவள் நெற்றியில் இருந்த காயத்தை கண்டு பதறியவனாக…"என்ன அகல் பாத்து வர மாட்டியா பாரு நெத்தில காயம் பட்டுருச்சு…" என்றான் ஆதேஷ்.

"ம்ப்ச் ஆதேஷ் எனக்கு ஒண்ணும் இல்ல முதல்ல பூமிகாவா பாருங்க…." என வலியில் முடங்கி கொண்டிருந்தவளை காட்டினாள் அகல்விழி.

அப்பொழுது தான் இருவரும் கீழே விழுந்து கிடந்த பூமிகாவை கண்டனர். முழங்கையில் இருந்து ரத்தம் ஒழுக வலியில் துடித்து கொண்டிருந்தவளை கண்டு பதறியவர்கள்,
"ஹோ...ஷிட்…" என்றபடி அவளை தூக்கினர்.

"சீக்கிரம் போய் ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் எடுத்துட்டு வாங்க...பாஸ்ட்…." என அருகிலிருந்த பணியாளனை பணிந்த விஹான்,
"அண்ணா நீங்க விடுங்க...நான் பாத்துக்குறேன்.." என அவளை ஆதேஷின் பிடியில் இருந்து விடுவித்தவன் அவளை அழைத்து சென்று அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தான்.

தன் கைக்குட்டையால் அவளின் இரத்தத்தை துடைத்து எடுத்தான். அதற்குள் முதலுதவி பெட்டி வந்து விட காயத்தை சுத்தம் செய்து கட்டு போட்டிருந்ததால் இரத்தம் வருவது சற்று மட்டும் பட்டிருந்தது.


விஹான் கட்டிட்டு முடித்ததும் அருகில் வந்த அகல்விழி,
"இப்போ எப்படி இருக்கு பூமிகா...வலி இருக்கா…??. ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாமா??"என்

"இல்ல மேடம் இப்ப கொஞ்சம் வலி இல்லை.."என்றவள் அப்போது தான் அகல்விழியின் நெற்றி காயத்திற்கு மருந்திடாமல் இருப்பதை கண்டவள்,

"மேடம் நீங்க இன்னும் மருந்து போடலையா...ரத்தம் வருது பாருங்க…" என்க

இந்த களோபரத்தில் வந்திருந்த விருந்தினர்களை முறையாக வழியனுப்பி வைத்து விட்டு அப்போது தான் உள்ளே நுழைந்தான் ஆதேஷ்.

இவர்கள் அருகில் வந்தவனின் செவிகளில் பூமிகாவின் கேள்வி விழ, விஹானின் கையிலிருந்த முதலுதவி பெட்டியை வாங்கியவன் அகல்விழியின் காயத்திற்கு மருந்திட ஆரம்பித்தான்.

அவன் மருந்திட்டு முடிக்கும் வரை பொறுமை காத்த விஹான்…,
"என்னாச்சு…….எப்படி நடந்துச்சு இது.???" என பூமிகா விடம் கேட்டான்.

"தெரியல சார்….நா பாக்கும் போது மேடம் கீழே விழப் போனாங்க…" என்றாள் அவள்.

மூவரும் கேள்வியாக அகலை பார்க்க…., அவர்களின் கேள்வியில்…
"எனக்கும் சரியா தெரியல ஆதேஷ்….சாரில ஏதோ பட்டு இழுத்த மாதிரி இருந்துச்சு….சரி கொழுசுல தான் நூல் ஏதும் சிக்கியிருக்கும்னு நெனச்சு நா அத பெருசா கவனிக்கல…"என்றாள்.

அகல் விழி சொன்னதை கேட்டு அவர்கள் விழுந்த இடத்திற்கு விஹான் சென்று பார்க்க….கூரிய ஆணியுடன் ஒரு சிறு நீள மரக்கட்டை ஒன்று கிடந்தது, வேலையாளை அழைத்து அதனை சுத்தம் செய்ய சொன்னவன் ஆதேஷின் அருகில் வந்திருந்தான்.

"அண்ணா…...அண்ணி விழுந்த இடத்துல சின்ன மரக்கட்டை இருந்திருக்கு…..மே பி அதுல இருக்குற ஆணியில தான் அண்ணி சாரி மாட்டிருக்கணும் அத கவனிக்காமா இவுங்க வந்ததுல தான் இப்படி ஆகியிருக்கும்.." என்றான் விஹான்.

"இந்த இடத்துல எல்லாம் கொஞ்சம் அப்புடி தான் இருக்கும் நம்ம தான் கவனமா இருந்துக்கணும்...அகல் உனக்கு வேற எங்களையும் அடி எதுவும் படலையே…." எனக் கேட்டான் ஆதேஷ்.

"இல்லைங்க…..எனக்கு வேற எங்கேயும் அடி இல்லை….பூமிகா தான் பாவம் என்ன பிடிக்க வந்து இப்புடி ஆயிடுச்சு….ரொம்ப பெரிய‌ காயம்…. இரத்தம் வேற திரும்ப கசிய ஆரம்பிக்குது நா வேணும்னா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா…??" என்றாள்.

"ம்ம்ம் சரி கூட்டிட்டு போய்ட்டு வா.." என அனுமதி அளித்தான்.

அகல்விழி பூமிகாவை கைத்தாங்கலாக பிடித்து அழைத்து செல்ல அவர்களை கடந்து செல்ல இருந்த நிமிடம்,
"சார் நான் எடுத்த நோட்ஸ் அப்பறம் அக்ரீமென்ட் பேப்பர்ஸ் எல்லாம் அங்க…" என அவள் சுட்டி காட்டிய திசையில் பார்க்க காற்றிற்கு திசைக்கு ஒன்றாய் பறந்திருந்தது.

அவளின் கேள்வியில் கடுப்பான விஹான்,
"எம்மா..ஜன்ஸி ராணி போதும் உங்க கடமை உணர்ச்சி கைல இரத்தம் அதிகமாகிட்டே வருது முதல்ல ஹாஸ்பிட்டல் போற வழிய பாருங்க…"என்றான்.

அவனை முறைத்தாள் ஏதும் பேசாது பிடிவாதமாக நிற்க அதை கண்ட ஆதேஷ்,

"பூமிகா அந்த நோட்ஸ் எல்லாம் எங்கேயும் ஓடி போயிடாது நீங்க சரியாகிட்டு வந்து நீங்களே அது திரும்ப ரெடி பண்ணி கொடுங்க ஓகே வா… இப்ப ஹாஸ்பிடல் கிளம்புங்க ஹெல்த் விஷயத்துல அலட்சியமா இருக்க கூடாது.."என்

அவனின் பேச்சை மறுக்க முடியாது அகல்விழியுடன் கிளம்பி சென்றாள் பூமிகா.

மருத்துவமனையில் காயம் ஆழமாக பட்டுவிட்டதால் தையல் போட வேண்டும் என சொல்லி விட அகல்விழிக்கு தன்னால் தானே என்ற குற்ற உணர்வு தலை தூக்க ஆரம்பித்தது.

மருத்துவமனையில் இருந்து அவளை அழைத்து வந்து ஹாஸ்டலில் விட்டு விட்டு தேவையான மருந்துகளை வாங்கி கொடுத்து ஆயிரம் பத்திரங்களை கூறி சென்றாள் அகல்விழி.

வீட்டிற்கு வந்த அகல்விழிக்கு குற்ற உணர்வாகவே இருக்க ஆதேஷை அழைத்து விவரத்தை கூறியவள்,

"என்னால் தானேன்னு ரொம்ப கில்ட்டியா இருக்குங்க…"என்க

அவளின் குற்ற உணர்வை புரிந்து கொண்டவன் அவளை சமாதானப் படுத்தி விட்டு பூமிகாவிற்கு அழைத்து ரெஸ்ட் எடுத்து கை சரியானதும் ஆபிஸிற்கு வந்தால் போதும் என கட்டளையிட்டவன் அகல்விழியை காப்பற்றியதற்கும் நன்றி கூறி வைத்து விட்டான்.

மரணம் நிகழும்.......



Share it comment 👇👇👇

 
Last edited:

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

தவணை முறையில் காதல் (மரணம்) நிகழும் கதையின் 5,6 அத்யாயங்கள் பதிந்து விட்டேன்.

Pls read &. Share it comment

தவணை முறையில் காதல் (மரணம்) நிகழும் 5:



இதோ பூமிகாவும் ஓய்வில் இருந்து பணிக்கு திரும்பி விட்டாள். அவளின் பணி மாற்றப்பட்டிருந்தது. ஆம் ரிஷப்னிஷ்ட்டாக இருந்தவள் தற்போது பி.ஏ பதவிக்கு வந்துள்ளால்.

அவளின் பிழையில்லா வேலை திறனை கண்ட ஆதேஷ் அவளுக்கு இப் பதவி உயர்வை அளித்துள்ளான். பழைய பி.ஏ. ஷீலா விடுமுறையை அதிகரித்து உள்ளதால் அவர் வரும் வரை இவளை தற்காலிகமாக நியமித்த ஆதேஷ் அவள் வேலை செய்யும் பாங்கில் கவரப்பட்டு அசிஸ்டென்ட் பி.ஏ. வாக நிரந்தரமாக நியமித்து விட்டான்.

அவளின் திறமையை கண்கூடாக கண்ட விஹானும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அமைதியாக இருந்து கொண்டான். மற்றும் அகல்விழியை காப்பாற்ற சென்று அவளிற்கு காயம் பட்டதில் அண்ணன் தம்பி இருவருக்கும் அவள் மீது ஒரு நன்றியுணர்வை கொடுத்திருந்தது.

தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடித்து விட்டு ஆதேஷின் அறையினுள் நுழைந்திருந்தாள் பூமிகா.

"எக்ஸ்யூஸ்மி சார்….." என அனுமதி பெற்று உள்ளே நுழைந்தவள்…
"சார்….இந்த பைல் ஒர்க் முடிச்சிருச்சு….நீங்க ஒரு தடவ செக் பண்ணிட்டு சைன் பண்ணீங்கன்னா அனுப்பிடலாம்.." என

"ம்ம்ம்…வெயிட் பண்ணுங்க பூமிகா… ஐ வில் செக்.." என்று விட்டு அதனை ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில்..

"பூமிகா...xxx கம்பெனில இருந்து மெயில் வந்திருக்கு நீங்க செக் பண்ணலையா???" என கேட்டவாறே உள்ளே நுழைந்தான் விஹான்.

"இல்லையே சார் இமெயில் எதுவும் வரலையே.. இப்ப பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் செக் பண்ணிட்டு வந்தேன்…"என்றாள் அவள்.

" இல்ல இப்போ அனுப்பிருக்காங்காளாம்….எதுக்கும் இப்ப ஒரு தடவ செக் பண்ணுங்க மே பி சர்வர் எரர் கூட இருக்கலாம்.." என்றான் விஹான்.

"ஓகே சார் இதோ செக் பண்றேன்.." என்றவள் அதை ஆராய…

"மே ஐ கமின் சார்….."என்ற குரலுடன் இதழில் குறுசிரிப்பு தவழ கதவை திறந்து உள்ளே வந்தாள் அகல்விழி.

அகல்விழியின் குரலை கண்டு கொண்ட அண்ணன் தம்பி இருவரும் சிறு சிரிப்புடன் தத்தமது வேலைகளைத் தொடர

கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பிய பூமிகா அகல்விழியை கண்டதும் புன்னகையை பரிசாக வழங்கியவள்,
" குட் மோர்னிங் மேம்.." என

உள்ளே நுழைந்ததும் நேரே பூமிகாவிடம் வந்தவள் அவளின் வணக்கத்திற்கு பதில் வணக்கம் வைத்து விட்டு,
"இப்போ எப்படி இருக்கு காயம்…??" என நலம் விசாரிக்க….

"மேம் நீங்களும் டெய்லியும் இத தான் கேக்குறீங்க..நானும் தினமும் சரியாயிடுச்சுன்னு சொல்லுறேன்.. பாருங்க கைல இருக்குற தழும்பு கூட மறைய ஆரம்பிச்சுடுச்சு" என தனது கையை காட்டி சிறு புன்னகையுடன் கூறினாள் பூமிகா.

"ம்ம்ம்… இருந்தாலும் நான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்...என்னால தான் இப்புடி ஆச்சுன்னு குற்றவுணர்ச்சியா இருக்கு...ரியலி சாரி...பூமிகா.." என

"அட விடுங்க மேம் எத்தன தடவ தான் சாரி கேட்பீங்க…" என்றவள் விஹானிடம் திரும்பி,

"சார் இமெயில் வந்துடுச்சு நா போய் ரிப்ளே அனுப்புறேன்…" என கூறியவள் அகல்விழியிடம் " வரேன் மேம்" என விடை பெற்று சென்று விட்டாள்.

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் அகல்விழி. ஏனோ அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு இனம் புரியா அன்பு அவளின் மீது ஏற்பட்டிருந்தது அகல்விழிக்கு.

பூமிகாவை காணும் பொழுது எல்லாம் ஏதோ ஒரு உணர்வு பிரவாகம் அவளின் மனதில் இருந்து பொங்கி எழுகிறது. ஒரு வித உரிமை உணர்வும் அவளின் மீது எழுகிறது அகல்விழிக்கு.அது எதனால் என அகல்விழி ஆராய முற்படவில்லை.

"போதும் அண்ணி பூமிகா போய் ரொம்ப நேரமாகுது...இந்த பக்கம் கொஞ்சம் திரும்புங்க…" என சலிப்பான குரலில் கூறினான் விஹான்.

பின்னே அவனும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். அந்த சம்பவத்திற்கு பிறகு அகல்விழி அதிக நேரம் பூமிகாவை பற்றி பேசி கொண்டிருப்பதை அளவுக்கு அதிகமான அக்கறையை அவள் மீது செலுத்துவதாக விஹானுக்கு தோன்றியது.

அவனை பொறுத்த வரையில் இந்த அக்கறை எல்லாம் தேவையே இல்லை என்ற எண்ணம் அவள் காப்பாற்றியதற்கு நன்றி கூறியதோடு மட்டும் இல்லாமல் ஹாஸ்பிடல் செலவையும் ஏற்று கொண்டாயிற்று. இதற்கு இடையில் இரு முறை அகல்விழி ஹாஸ்டலில் வைத்து பூமிகாவை சந்தித்து வந்ததாயிற்று அதோடு முடித்து கொள்ளாமல் எதற்காக இந்த அக்கறை என அவனுக்கு விளங்கவில்லை.

விஹானின் குரலை அசட்டை செய்தவள் ஆதேஷிடம்,
" பூமிகாவ பார்க்கிறப்ப எல்லாம் ஏதோ சம்திங்….ம்ப்ச் எனக்கு சரியா தெரியல..ஆனா ஏதோ ஒரு உணர்வு… பாசமா?? இல்ல நன்றியுணர்ச்சியா….??? அவ மேல எனக்கு தோணுது…." என்க,

ஆதேஷ் பதில் அளிக்கும் முன் அவனை முந்தி கொண்டு,
"அண்ணி எனக்கு என்னமோ நீங்க பூமிகா மேல அதிகமா கேர் எடுத்துக்கிற மாதிரி இருக்கு…. யா அவுங்க உங்கள காப்பத்துனாங்கதான் அது ஒண்ணும் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல….நாங்க யாரும் உங்கள கவனிக்கல பாத்திருந்தா நானோ இல்லன்னா அண்ணாவே வந்துருப்போம் அந்த நேரத்துல உங்களுக்கு பின்னாடி பூமிகா வந்ததால அத கவனிச்சு உதவி பண்ணியிருக்காங்க….இது ஒரு சிம்பிள் விஷயம் அதுக்கு பதிலா நம்ம ஹாஸ்பிடல் பில் எல்லாம் செட்டில் பண்ணி ஹெல்ப் பண்ணிட்டோம்…இதோட‌ இந்த விஷயத்த விடாமா எதுக்கு இழுத்து புடிச்சிட்டு இருக்கீங்க….அவுங்க நம்ம கிட்ட வேலை பாக்குற ஸ்டாப் அந்த லிமிட்டோட நிப்பாட்டிகோங்க…" என தன் மனதில் இருந்த அபிப்ராயத்தை எல்லாம் கொட்டியிருந்தான் விஹான்.

அதுவரையிலும் அவனின் பேச்சை ஒரு வித கோபத்துடனே கேட்டு கொண்டிருந்த அகல்,
"எந்த ஸ்டாப் இப்புடி கைல இரத்தம் வர்ற அளவுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க விஹான்?? நீயோ இல்லன்னா உங்க அண்ணாவோ வந்து உங்களுக்கு அடிபட்டு இருந்துச்சுன்னா அது நீ உன் அண்ணிக்கு பண்ற உதவி ஆதேஷ் அவர் மனைவிக்கு பண்ற உதவி… ஆனா எந்தவித சம்பந்தமும் இல்லாமல் வெறும் ஸ்டாப்பா மட்டும் இருந்துக்கிட்டு அவ எதுக்காக எனக்காக அடிபடணும்….எனக்காக அவ காயம் படணும்னு என்ன தலை எழுத்தா அவளுக்கு...அவ என்ன தாங்காம இருந்து நா கீழ விழுந்து அவளுக்கு மாதிரியே எனக்கும் அடிபட்டு இருந்திருக்கணும் அப்ப தெரிஞ்சிருக்கும் உனக்கு நான் ஏன் பூமிகா வா இவ்ளோ கேர் பண்ணுறேன்னு.." என்க,

அவளின் வார்த்தையில் இருவரும் பதறி… "அகல்.." "அண்ணி…" என்றிட

"சும்மா வாய் வார்த்தைக்கு சொன்னதுக்காவே இப்புடி பதறுறீங்க...அந்த பொண்ணு நிஜமாவே எனக்காக என்ன காப்பாத்த போய் அடிபட்டிருக்கு...அப்புறம் எப்படி அவ மேல அக்கறை இல்லாமல் இருக்கும்..உன் வீட்டு ஆளுங்கன்னா ஒரு நியாயம் அடுத்தவங்கன்னா இளக்காரமா???" என கோப மிகுதியில் கத்தியிருந்தாள்.

"அகல் காம் டவுன்…..சில்...டென்ஷன் ஆகாத...இந்த தண்ணி குடி…" என தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்திய ஆதேஷ் விஹானை முறைத்தவாறே

"அவன் தான் ஏதோ உளருறான்னா...நீயே அத சீரியஸா எடுத்துக்கிட்டு டென்ஷன் ஆகுற…" என்றவன் தம்பியிடம் திரும்பி….

"விஹான்‌ இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்...இந்தப் டாபிக் பத்தி இனி வாயவே திறக்க கூடாது அகல்க்கு என்ன இஷ்டமோ அத செஞ்சிட்டு. போறா நீ இனி இதுல தலையிடாத…" என்க

அவனுமே அகல்விழி இந்த அளவிற்கு இந்த அளவிற்கு கோபப்படுவாள் என்று எதிர்பார்க்கவில்லை அதிர்ந்து நின்றவன் ஆதேஷின் பேச்சில் சுயம் பெற்று….."சாரி அண்ணி….." என்றவன் அடுத்த நொடி அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

"அகல் அதான் அவன் சாரி கேட்டுட்டான்ல இன்னும் ஏன் மூஞ்சிய‌ தூக்கி வச்சுகிட்டு இருக்க..கோபத்துல நீ அழகா எல்லாம் இல்ல..ரொம்ப கேவலமா இருக்க..கொஞ்சமாச்சும் சிரி அப்பதான் உன் முகம் கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்கும்…" என விஹான் சென்ற‌ பின்னும் உர்ரென்று இருந்தவளை சீண்டினான் ஆதேஷ்.

"அடேங்கப்பா…..ரொம்ப தான்….. இவரு பெரிய அப்பாடஇவரு‌ பெரிய அப்பாடக்கரு…..விஹான் சார்..ரொம்ப பெரிய மனுஷனா ஆயிட்டாரு போல எனக்கு மனுஷங்க கிட்ட பழக கிளாஸ் எடுக்குறாறு.." என்றபடி உதட்டு சுழிப்புடன் ஆதேஷின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் கோபம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்து விட்டதை அறிந்து கொண்டவன் பேச்சை தொடங்கினான்,
"அதான் சொல்லிட்டேன்ல இனி அதைப் பத்தி அவன் பேச மாட்டான் விடு….சரி சொல்லு என்ன விஷயமா மேடம் திடீர்ன்னு கிளம்பி வந்திருக்கீங்க…"‌ என்றான் ஆதேஷ்.

"அது வந்து ஆதேஷ் வீட்டுல பூஜை இருக்குல...அதான் பூமிகா வா இன்வைட் பண்ணலாம்னு வந்தேன்…" என எங்கே அவன் ஏதும் வேண்டாம் என்று சொல்லி விடுவானோ என தயங்கி தயங்கி தான் வந்த விஷயத்தை சொல்லி முடித்தாள் அகல்விழி.

அவள் சொன்னதை கேட்ட ஆதேஷ்க்கு விஹான் சொன்னது போல் அகல்விழி பூமிகாவிடம் சற்று அதிகப்படியான நெருக்கம் காட்டுவதாக தோன்ற ஏதும் பேசாது அமைதியாக அவளை பார்த்த படியே அமர்ந்திருந்தான்.

அவனின் அமைதியை கண்டவள்,
"உங்களுக்கு இதுல இஷ்டம் இல்லன்னா வேண்டாம் நான் கூப்பிடலங்க…" என அவள் கூறும் போது அவளின் முகம் தொங்கி விட்டது.

அவளின் முகவாட்டத்தை கண்டு தாங்கி கொள்ள முடியாதவன்..
"ஓகே..அஸ் யூர் விஷ்…"என்றிட அவள் முகம் பூவாய் மலர்ந்து விட்டது.

அவளின் மலர்ந்த முகம் கண்டு இவனின் இதழ்கள் அழகாய் விரிந்தன.

"தேங்க்யூ….ஆதேஷ்.. நா போய் பூமிகாவ பாத்து பேசிட்டு வந்துடுறேன்.." என்றவள் வெளியேறி விட,

செல்லும் அவளையே பார்த்த ஆதேஷிற்கு பல விதமான சிந்தனைகள்…. அவளிடம் அவனிற்கு பிடித்ததே அவளின் அழகிய புன்னகை முகம் தான்...எப்பொழுதும் சிறு சிரிப்பை இதழ்களில் தவழ விட்டவாறே வலம் வருவாள்.

ஆதேஷ் அவளை முதன் முதலாய் கண்ட போது அவனை ஈர்த்தது அகல்விழியின் சிரித்த முகம் தானே...அதனை நினைக்கையில் இவனின் முகமும் மலர்ந்து விகாசித்தது.

அதனை தொடர்ந்து அவனின் நினைவடுக்குகள் அவனை கடந்து காலத்திற்கு இழுத்து செல்ல முயல…!!
சுதாரித்து விழித்தவன் அதனை ஒதுக்கி விட்டு தனது வேலையில் கவனத்தை செலுத்தினான்.

இங்கே, அகல்விழியிடம் பேசி விட்டு சென்றதில் இருந்து நிலை கொள்ளாமல் தவித்து கொண்டிருந்தான் விஹான். அவனுக்கே உரைத்தது தான் பேசியது சற்று அதிகப்படி என்றே...இருந்தும் அந்த நேரத்தில் மனதில் தோன்றியதை யோசியாது பேசிவிட்டான்.
எனவே, அவளை தேடி ஆதேஷின் அறைக்கு சென்றான்.

உள்ளே நுழைந்தவர் அவளை காணாது,
"அண்ணி எங்க போயிட்டாங்க ண்ணா??" என

"பூமிகாவா பாக்க போய் இருக்கா…." என எதற்காக பூமிகாவை சந்திக்கச் சென்றுள்ளால் என்ற விஷயத்தை கூறினான் ஆதேஷ்.

அதை கேட்ட ஆதேஷிற்கு பிடித்தம் இல்லை என்றாலும் அதை முகத்தில் காட்டாது மறைத்தவன்,

"அண்ணி இங்க வந்த இத்தனை வருஷத்துல நம்ம பேமிலியா தவிர வேற யாருக்கிட்டயும் அவுங்க நெருக்கம் காட்டுவது இல்ல….ஆனா இப்ப பூமிகா கூட பேச பழக ரொம்ப ஆர்வமும் ஆசையும் காட்டுறாங்க…அதோட விளைவு தான் இப்ப நம்ம ஃபேமிலி பங்ஷனுக்கு கூப்புடுற அளவுக்கு போய் இருக்கு...அண்ணியோட விருப்பத்தை நெனச்சு சந்தோஷப் படுறதா இல்ல பூமிகா மேல இருக்குற அதிகமான அக்கறையால ஏதும் பிரச்சனை வந்துடுமோன்னு பயப்படுறதான்னு புரியல…" என்றிருந்தான் விஹான்.

"எனக்கும் அதே எண்ணம் தான் விஹான்...ஆனா அகலோட விருப்பத்துக்கு தடை சொல்லுற தைரியம் எனக்கில்லை...அவ முதல் முதலா ஒரு விஷயத்துக்கு ஆசைப்படுறா...அத வேண்டாம்னு தடுக்க என்னால முடியாது...அண்ட் உன் பயமும் எனக்கு புரியுது...பாத்துக்கலாம் விஹான் நம்மள தாண்டி எந்த பிரச்சனையும் அவள நெருங்காது….நெருங்கவும் விட மாட்டேன்.." என்றவன்,

"சரி இந்த பைல் கொஞ்சம் செக் பண்ணு இன்னைக்கு ஈவ்னிங் அனுப்பனும்…" என விஹானையும் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாது வேலையினுள் இழுத்துக் கொண்டான்.

"ம்ஹூம்...என்ன பூமிகா பயங்கர பிஸியா...இது பிரேக் டைம் தான?? அப்ப கூட சின்சியரா வேலை பார்த்துகிட்டு இருக்க…" என தன்னருகே கேட்ட குரலில் கணினியில் இருந்து கவனத்தை திரும்பியவள் அங்கே அகல்விழி நிற்பதை கண்டு,

"வாங்க மேம் உட்காருங்க ஏன் நிக்கிறீங்க…" என அவள் அமர்வதற்கு இருக்கையை காண்பித்த பூமிகா,

"இந்த இமெயில் கொஞ்சம் அர்ஜென்ட் மேம் அதான் பாத்துட்டு இருக்கேன்…" என்க

"முடிஞ்சிச்சா.???" என்ற அகலின் கேள்விக்கு,

"ம்ம்..முடிஞ்சிருச்சு மேம் சொல்லுங்க ஏதும் பேசணுமா???" என கணினியை அணைத்தவாறே அவளிடம் பூமிகா கேட்க..

"ஆமா பூமிகா…." என அவள் தொடங்குகையிலே அவள் வந்திருப்பதை அறிந்த பியூன் அவள் குடிப்பதற்கு காபி கொண்டு வந்து வைக்க அதை எடுத்து கொண்டவள்,

"இன்னொரு காபி எடுத்துட்டு வாங்க.." என பூமிகாவிற்கும் எடுத்து வர பணிந்தவள்,

அவள் மறுக்க மறுக்க விடாது அவளை காபியை எடுத்து கொள்ள உத்தரவிட்டவள் பூமிகா குடித்து முடிக்கும் வரை ஏதும் பேசாது அமைதி காத்தவள் அவள் முடித்ததும்,

"பூமிகா வர்ற சண்டே எங்க வீட்டுல ஒரு பூஜை லைக் பங்ஷன்னு கூட சொல்லலாம் அதுக்கு உன்ன இன்வைட் பண்ண தான் வந்தேன்.."
என்றவள் பூமிகா ஏதோ சொல்ல வந்ததை கேட்காது

" ம்ஹூம்..எந்த காரணமும் சொல்ல கூடாது நீ வந்தே ஆகணும் முதல் முதலாக எங்க வீட்டுக்கு உன்ன கூப்பிடுறேன் நோ சொல்லாமா வந்திடனும்.." என்றாள்.

"ஆனா மேம்...நான் மட்டும் எப்படி...எனக்கு அங்க யாரையும் தெரியாதே.." என்க

"உனக்கு என்னை தெரியும்ல அது போதாதா?? அப்புறம் உன்ன மட்டும் ஏன் கூப்பிடுறேன் நீ யோசிக்கலாம்.ஏன்னா?? நீ எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் அதான்….உன் ஹாஸ்டலுக்கு வண்டி அனுப்புவேன்...மறுக்காமா வந்து சேரணும் என்ன சரியா??" என்க

அதற்கு மேலும் மறுத்து பிகு செய்யாமல் "சரி மேம் நான் வரேன்…" என்றிருந்தாள்‌ பூமிகா.


*******************

நன்கு காய்ந்திருந்த எண்ணெய் சட்டியில் கடுகை அள்ளி போட்ட சிவகாமியின் முகமும் அந்த எண்ணைக்கு நிகராக காய்ந்திருந்தது.

அவரின் குடி(கார) மகன் செய்து வைத்த செயல் சிவகாமியின் காதுக்கு அரசல் புரசலாக வந்து கொண்டு தான் இருக்கிறது. அதை கேட்கும் பொருட்டு அவனது வருகையை இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் அவன் வந்தபாடில்லை.

இதோ இன்று வந்தவன் சிவகாமி தன் பேச்சை ஆரம்பிக்கும் முன்பே

"இந்தா சோத்தப் போடு மனுஷனுக்கு பசிக்குது…" என அவரை ஏவியவன் அருகில் நின்ற தங்கை சுமதியிடம்,

"ஏண்டி வெளியில போயிட்டு வர்றவனுக்கு குடிக்க தண்ணி கொண்டு வரணும்னு அறிவு கூட இல்லையா போடி...போய் தண்ணி எடுத்துட்டு வா.." என அவளையும் அதட்ட,

அப்பொழுதும் அவனை முறைத்து கொண்டு நின்றிருந்தவளை கண்டவனுக்கு கோபம் ஏற,
"என்ன டி முறைக்கிற செவுள்லயே ஓங்கி ஒன்னு விட்டேன்னு வை முறைக்கிற மூஞ்சி அந்த பக்கம் திரும்பிக்கும்...இப்ப போறியா இல்லையா….???" என கேட்டு கொண்டு அவளருகே வேகமாக வர

எங்கே வரும் வேகத்திற்கு அடித்தாலும் அடித்து விடுவானோ என பயந்த சுமதி பாய்ந்து சமையலறையில் புகுந்து மின்னல் வேகத்தில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தவள் அடுத்து நின்றாள் ஏதாவது வேலை வாங்கி விடுவானோ என நினைத்து அடுத்த நொடி தனது அறைக்குள் நுழைந்து கதவடைத்திருந்தாள்.

தாளித்ததை அருகில் இருந்த சட்டியில் கொட்டியவர் அதனையும் சாப்பாடு பாத்திரத்தையும் எடுத்து கொண்டு வெளியில் வந்தவர் அங்கே வீட்டின் நடுவில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தவனின் முன் "நங்" என்ற சத்தத்துடன் பாத்திரத்தை வைத்தவர் சற்று தள்ளி அமர்ந்து கொள்ள,

அவரின் கோபத்தை உணர்ந்திருந்த மாரியும் அதனை சட்டை செய்யாது சாதத்தை எடுத்து தனக்கு போட்டு கொண்டவன் உண்ண ஆரம்பித்து விட்டான்.

தன்னை பொருட்படுத்தாது உண்டு கொண்டிருந்தவனை கண்ட சிவகாமி மனதில் பொறும ஆரம்பிக்க சரியாக அந்த நேரம் சாப்பிட்டு கொண்டிருந்தவனுக்கு புரையேறிட,

தனக்கு தானே தலையில் தட்டி கொண்டவன் தண்ணீரை தேட அந்தோ பரிதாபம் அங்கே காலி செம்பு தான் தரையில் கிடந்தது.

இவ்வளவு நடந்தும் குத்துகல் போல் ஆடாது அசையாமல் அமர்ந்திருந்த சிவகாமியினை கண்டவன்,

"தண்ணி...லொக்….லொக்...என்ன…..லொக்.
உங்கப்பனா கொண்டு வந்து கொடுப்பான்….." லொக்… " உட்கார்ந்து கிட்டு இருக்க….
இவ்வளவு தூரம் லொக்….. லொக்…. சொல்லுறேன்…..அப்படியே இருக்க...கிழவி!!!! உன்ன..!!!!" என அவனருகே இருந்த செம்பை தூக்கி சிவகாமியின் மீது ஓங்கி வீச,

சற்று நகர்ந்து அதன் அடியில் இருந்து தப்பித்தவர் அவன் அடுத்து தட்டை தூக்குவதை கண்டு பதறியடித்து தனது உடலை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு சமையலறையை நோக்கி கிட்டதட்ட ஓடினார்.

சாமார்த்தியமாக அறைக்குள் நுழைந்து பதுங்கி கொண்ட தனது அருமை புதல்வியே கரித்து கொண்டியவாறே அவனிற்கு தண்ணீரை கொடுத்து விட்டு பழையபடி அவர் இடத்தில் அமர்ந்து கொண்டார்.

அவன் உண்டு முடிக்கட்டும் என கறுவியபடி சிவகாமி காத்து கொண்டிருக்க அதை உணர்ந்தானோ என்னவோ….சிவகாமியின் பி.பி.யை நன்றாக ஏற்றிவிட்டு பொறுமையாக உண்டு முடிக்க,

"ஏண்டா அந்த மேலக்கார வீதியில இருக்குற ******வூட்டுல உன்ன அடிக்கடி பாக்க முடியுதாமே என்ன சங்கதி..??" என அடுத்த நொடி தனது கேள்வி கணைகளை தொடங்கியிருந்தார்.

நிதானமாக அவரை ஏறிட்டவன் தனது அழுக்கேறி நைந்து போயிருந்த வேட்டியில் வாயை துடைத்து கொண்டே,
"ஆமா அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துருக்கேன் அதுக்கு என்ன இப்போ…" என்க

அவன் எதற்காக வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பான் என அறிந்தவர்க்கு கோபத்தில் முகம் சிவக்க,
"ஏண்டா...ஏன்?? இப்படி அநியாயம் பண்ணுற..கல்யாண வயசுல வீட்டுல ஒரு பொண்ண வச்சுக்கிட்டு நீ இப்புடி நடந்துக்கிட்டா யாருடா அவள கல்யாணம் பண்ண வருவாங்க??? இந்த தடவ எந்த சிறுக்கி சிக்கியிருக்கா??? இருக்கட்டும் எவளா இருந்தா என்ன?? முச்சந்தியில இழுத்து வச்சு வெளக்கமாத்தால நாலு சாத்து சாத்தி தொரத்தி விட்டு வரேன்…" என ஆவேசமாக கத்தியவாறே தனது முடியை அள்ளி கொண்டையாக போட்டு கொண்டவர் வெளி வாசலை நோக்கி நடக்க துவங்க,

"ச்சுச்ச…..வீட்டுக்கு வந்த மருமக மேல கைய வச்சியின்னா அப்புறம் மாமியார் கொடுமைன்னு உன்ன தூக்கி உள்ள வச்சிருவாங்க சிவகாமி…" என்க,

"யாருக்கு யாருடா மருமக…"

"நா தாலி கட்டின பொண்டாட்டி உனக்கு மருமக இல்லாம வேற யாரு கிழவி??" என அலட்டாமல் ஒரு குண்டை தூக்கி போட,

அவனின் வார்த்தையில் அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தவர்,
"என்னடா சொல்லுற???தாலி கட்டிட்டியா???"

"ஆமாம்…"

"டேய்….." என ஆத்திரத்துடன் அவனருகே வந்தவர்,
"உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சுடா..மடையா…" என்றவரின் வார்த்தைகளில் அறுவெறுப்பாக முகத்தை சுழிந்தவன்,

"ச்சீ…..அந்த தீஞ்சி போன மூஞ்சி எனக்கு பொண்டாட்டியா..??அன்னைக்கு நடந்தது எல்லாம் ஒரு கல்யாணமா??" என்க,

அருகில் இருந்த செம்பை எடுத்து முடிந்த மட்டும் அவனை அடித்த சிவகாமி,
"அடேய்….படுபாவி இப்படி பண்ணிட்டு வந்திருக்கியேடா…...போச்சு…..போச்சு….நான் போட்ட திட்டம் எல்லாம் வீணாப் போக போகுது….உன்ன யாருடா தாலிய கட்ட சொன்னது…" என திட்டியவாறே இவனை தொடர்ந்து அடித்து கொண்டிருக்க..

தன் கைப்பேசி அலறுவதை கண்டவன் எடுத்து,
"இதோ வரேன் டி…" என்றவன் "தோ கிழவி தள்ளு…." என அவரை ஒரு பிடியில் தள்ளியவன் வெளியேறி விட்டான்.

"அய்யோ….நா இப்போ என்ன பண்ணுவேன்...இந்த விஷயம் மட்டும் அந்த பய காதுக்கு போச்சுன்னா அவ்வளவு தான்…" என புலம்பி கொண்டிருக்க..

அவரின் புலம்பலை கேட்டவாறே வெளிவந்த சுமதி,
"என்னம்மா என்னாச்சு ஏன்?? இப்படி பைத்தியம் மாதிரி கிடந்து கத்திகிட்டு இருக்க...எங்க?? உன் சீமந்த புத்திரன் தின்னுட்டு போயிட்டானா சோறு ஏதும் மிச்சம் இருக்கா?? இல்ல எல்லாத்தையும் கொட்டிக்கிட்டு போயிட்டானா…" என்றவாறே சாப்பாடு இருந்த பாத்திரத்தை அவள் ஆராய….

இருந்த கோபத்தில் அவளிம் செய்கைகளை கண்ட சிவகாமி அவளின் மீது செம்பை விட்டு எறிய அது குறி தவறாமல் சுமதியின் தோள்பட்டையில் மீது விழுந்தது.

"ஆ..ஆ ஆ ஆ ம்மா...ஆஆ என்னம்மா நீ இப்ப எதுக்கு செம்ப கொண்டு அடிச்ச.." என வலியால் முகம் சுளித்தவாறு அவள் கூற

"கூறுகெட்ட சிறுக்கி இங்க நான் நம்ம திட்டம் எல்லாம் மண்ணோட மண்ணா போயி நம்ம குடி முழுக போகுதேன்ற கவலையில இருக்கேன்...உனக்கு சோறு திங்கிறது முக்கியமாடி…" என

"என்னம்மா என்னாச்சு…"

"உன் அண்ணங்காரன் ஒருத்திய கல்யாணம் பண்ணி தனிக்குடித்தனம் வச்சிருக்கான் டி.." என நடந்த அனைத்தையும் கூறி முடிக்க

"அய்யய்யோ….போச்சும்மா இது மட்டும் அந்த சத்யாவுக்கு தெரிஞ்சுச்சு நம்ம தொலைஞ்சேன்...ஏற்கனவே அன்னைக்கு நடந்த கல்யாணம் செல்லாதுன்னு சொல்லிட்டு திரியிறான்…..பத்தாததுக்கு இது வேற தெரிஞ்சது அவ்வளவுதான் நம்ம சோலி முடிஞ்சிடும்…" என

"எனக்கு அது தான் டி பயமா இருக்கு இந்த விளங்காதவன் இப்படி எல்லாம் செய்யுவான்னு நான் கனவுல கூட நெனச்சு பாக்கலையே ஏதோ அப்படி இப்புடி இருக்கான்னு நெனச்சா இவன் திடீர்ன்னு இப்புடி தாலிய கட்டி வச்சிருக்கான்….போதக் குறைக்கு அந்த கிழவிய வேற உன் அத்தக்காரிய பாத்துக்கறதுக்காக அந்த சத்யா பய கூட்டிட்டு வந்திருக்கான்...அந்த கிழவிக்கு ஆரம்பத்துல இருந்தே நம்மள கண்ட ஆகாது….உன் அத்தகாரி கிட்ட நம்மள நெருங்க கூட விடாம அந்த கிழவியே தான் பாத்துகிடுச்சு…"

"இப்ப வேற என்னம்மா பண்ணுறது…"

"யோசிப்போம்….இந்த விஷயத்த எப்படியாவது அந்த சத்யா பயலுக்கு தெரியாமா பார்த்துக்கணும்….பூமிகா பத்தி கவலை இல்லை அங்கே பூனேல போய் இருக்குறவளுக்கு இங்க என்ன நடக்குதுன்னு தெரியவா போகுது அப்புடியே தெரிஞ்சாலும் அவ நம்ம சொல்லுறத தான் நம்புவா….இதுக்கும் ஒரு வழி கிடைக்காமாய போயிடப் போகுது….நீ சோத்த போடு பசிக்குது…." என்றபடி ஒரு சிறு பெண்ணின் வாழ்வை சூனியமாக்குகிறோம் என்ற கவலை இல்லாமல் இருவரும் அடுத்த திட்டத்தை யோசிக்க ஆரம்பித்திருந்தனர்.

மரணம் நிகழும்……...

 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவணை முறையில் காதல் (மரணம்) நிகழும் 6:




கடந்து போன தவற விட்ட நேரத்தையும் காலத்தையும் திரும்ப பெற முடியாது என்பது எத்தனை உண்மை வாய்ந்த வார்த்தைகள். அந்த நேரத்தை சரியான விதத்தில் பயன்படுத்தாது திரும்ப கிடைக்காதா என எண்ணி ஏங்குபவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கின்றனர்.


அத்தகைய

நேரமும் காலமும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் ஜெட்

வேகத்தில் நகர்ந்து அகல்விழி சொன்ன ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டதை எண்ணி ஆச்சர்யப்பட்டவாறே தயாராகி கொண்டிருந்தாள் பூமிகா.


காலையில் இருந்து பத்து முறைக்கு மேலாவது அகல்விழி அழைத்திருப்பாள் "கார் அனுப்பவா??" என்று கேட்டு,

சற்று நேரம் கழித்து கிளம்பி கொள்ளலாம் என நினைத்திருந்த பூமிகா கூட அகலின் தொடர் அழைப்பில் பயந்து விரைவாக கிளம்பி கொண்டிருக்கிறாள்.


ஆரஞ்சு நிற சல்வாரில் தயாராகி நின்றவள் ஒரு முறை தன்னை கண்ணாடியில் பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று குறைவதாக தோன்ற என்ன என்று யோசித்தவளின் கண்களுக்கு அருகில் இருந்த அவளது கண்ணாடி தென்பட "ஆங்...இதோ இருக்கு" என்றபடி அதை எடுத்து அணிந்து கொண்டு கண்ணாடியை பார்க்க அவள் முகத்தை அது பாதி மறைத்திருந்தது அதை கண்டு திருப்பதி பட்டு கொண்டாள்.


எப்பொழுதும் அலுவலகம் கிளம்புவது போல கிளம்பியவளின் கைகளில் மட்டும் இன்று கூடுதலாக சிறிய தோள் பை அவ்வளவே…..


பூமிகா….ஆளை அசரடிக்கும் வெள்ளை நிற அழகில்லை என்றாலும் மாநிறமுடைய திருத்தமான முகம்...அழகிய கருவிழி கண்கள் இல்லை என்றாலும் சற்று கண்களை விரிந்தாலும் வெளியே வந்து விழுந்து விடும் என நினைக்க வைக்கும் முட்டை கண்கள்.....நீண்ட இமை முடிகள் இல்லை என்றாலும் அவளின் சிறிய(பெரிய) கண்களுக்கு அளவான இமை முடிகள்...வில் போன்ற புருவங்கள் இல்லை என்றாலும் பார்லரின் உதவியால் சற்று நெளிந்து வளைந்திருந்தது….முகத்தில் இருந்து ஒரு மீட்டர் நீண்டு இருக்கும் கூர்மையான மூக்கு இல்லை என்றாலும் அதில் கால்வாசி அதுவும் சற்று அமுங்கி போயிருந்தது…..பட்டு போன்ற மிருதுவான கன்னம் இல்லாவிடினும் பருக்கள் ஏதும் அண்டாத கன்னங்கள்…….அழகிய சிவந்த உதடுகள் இல்லாவிடினும் வெடிப்புகள் இல்லாத இதழ்கள்….ஆக மொத்தம் "வாவ்.." என சொல்ல வைக்கும் சூப்பர் அழகு இல்லை என்றாலும் ஐந்து நிமிடம் உற்று பார்த்தால் ரசிக்க வைக்கிற லட்சணமான முகம்….அந்த லட்சணமான முகத்தையும் கண்ணாடி என்ற பெயரில் சோடா புட்டிகளை போட்டு கொண்டு மொத்தமாக மறைத்து விடுகிறாள்.


எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒரு முறை ஆராய்ந்து கொண்டவள் அகல்விழிக்கு அழைத்து சொல்லி விட்டு ஹாஸ்டலுக்கு வெளியே வந்து நிற்க சரியாக பதினைந்து நிமிடங்களில் இவளை அழைத்து செல்ல கார் வந்து விட அதில்‌ ஏறி கொண்டவள் அகல்விழியின் வீட்டை நோக்கி பயணப்பட்டாள்.



நொடிக்கு ஒரு தடவை வாசலுக்குப் வீட்டிற்கும் நடையாய் நடந்த அகல்விழியை விசித்திரமாக பார்த்த யாஸ்மினி,


"அண்ணி...ஏன் இப்படி நடக்குறீங்க...ஒரு இடத்துலே உட்காருங்க…" என


"ம்ஹூம் நம்ம வீட்டுக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான கெஸ்ட் வராங்கன்னு சொன்னேன்ல அவுங்கள ரிசீவ் பண்ண தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…"


"ஆமா.. சொன்னிங்க..ஆனா இன்னும் அவுங்க வரல தான்?? கார் அனுப்பி பிப்டின் மினிட்ஸ் தான் ஆச்சு...அவுங்க வந்தப்பறம் போவிங்களாம் இப்ப வாங்க வந்து எனக்கு ஜடை போட்டு விடுங்க.." என அலைந்து கொண்டிருந்தவளை அதட்டி ஒரு இடத்தில் அமர வைத்து தனது முடியை அவள் வசம் விட்டாள் யாஸ்மினி.


இதனை எல்லாம் பார்த்தவாறே ஏதும் பேசாது அமைதி காத்தனர் ஷர்மா பிரதர்ஸ்.


யாஸ்மினிக்கு தலை வாரி கொண்டிருந்தவளின் கண்கள் நொடிக்கு ஒரு முறை வாசலை தொட்டு மீள காதுகள் வெகு கூர்மையாக வெளியில் நடக்கும் சத்தத்தை தனக்குள் அடக்கி கொள்ளும் வேலையை செவ்வனே செய்து வந்தன.


அப்படி நொடிக்கு ஒரு முறை வாசலை பார்த்தவள் யாஸ்மினியின் ஜடையில் கவனமின்றி சற்று இறுக்கி கட்டி விட அதன் வலி தாங்காது,

"ஆ..ஆ… அண்ணி….பாத்து வலிக்குது…" என அலறி விட்டாள்‌ யாஸ்மினி.


தங்கையின் வலியில் அதுவரை அகலின் செய்கைகளை பார்த்து கொண்டிருந்த ஆதேஷ் பொறுமை இழந்து,

"அகல்…??? கவனத்த எங்க வச்சிருக்க….?? இப்புடி வலிக்கிற மாதிரியா பின்னுவ?? கவனத்த சிதற‌விடாமா யஸ்ஸூவ கவனி!!" என ஓங்கி அதட்டலிட,


ஏற்கனவே யாஸ்மினியின் அலறலில் தனது கவனமின்மையை நினைத்து வருத்தப்பட்ட அகலின் சுருங்கி இருந்த அகலின் முகம் ஆதேஷின் அதட்டலில் மொத்தமாக சுருங்கி போய் தொங்கி விட,

"சாரி யஸ்ஸுமா.." என்றவள் இம்முறை பார்வையை திரும்பாது சிரத்தையாக யாஸ்மினிக்கு பின்னலிட்டு முடித்தாள்.


அவளின் தொங்கிய முகத்தை கண்டு வருத்தம் எழும்பினும் எந்த வித சமாதானமும் சொல்ல வில்லை

அவனிற்கு தெரியும் தானே தான் கொஞ்சம் இளகி சமாதானம் செய்தால் மறுபடியும் வாசலுக்கு வீட்டிற்கும் நடக்கும் வேலையை தொடங்கி விடுவாள் என்று.


தான் அமைதியாக இருந்தால் கோபம் என‌ எண்ணி சற்றே அமைதியாக அடுத்த வேலையை கவனிக்க செல்வாள் என நினைத்தவன் ஏதும் பேசாது முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான்.


அவனின் நினைப்பை பொய்யாக்காமல் ஆதேஷின் கோபத்தில் சற்று திணறியவள், எங்கே மறுபடியும் ஏதேனும் தவறு நடந்தால் கத்தி விடுவானோ என்கிற பயத்திலே...அடுத்து செய்து‌ கொண்டிருந்த வேலையில் முழு கவனத்தையும் வைத்திருந்தாள்.


டிரைவர் காரின் கதவை திறக்க இறங்கியவள் சுற்றும் முற்றும் பார்த்தவாறே யாரேனும் தென்படுகிறார்களா என எண்ணியவாறே நோட்டம் விட்டவாறே பூமிகா நடக்க பின்னோடு வந்த டிரைவர்,

"வழி இந்த பக்கம் மா" என பக்கவாட்டில் இருந்த பாதையை சுட்டி காட்ட,

"சரிண்ணா.." என்றவள் அந்த நீண்ட பாதையை கடந்து ஒரு வித தயக்கத்தோடு வீட்டினுள் காலடி எடுத்து வைக்க,


எதேச்சையாக திரும்பிய அகல்விழியின் விழிகளில் பூமிகாவின் தயங்கிய நடை விழ, அடுத்த நொடி எதையும் பற்றியும் சிந்திக்காது ஆதேஷின் கோபத்தை மறந்தவள்,


"ஹேய் பூமிகா….வா...வா ஏன் அங்கயே நிக்கிற…" என அவளை கண்ட மகிழ்ச்சியில் சற்றே கத்தியவாறே அவளின் அருகில் சென்றிருந்தாள் அகல்விழி.


அவளது கத்தலில் அனைவருமே ஒரு அதிர்ந்து பின் சமநிலை அடைந்தனர்.


'இவள..கொஞ்சமாச்சும் அடங்குறாளான்னு...பாரு……' என பல்லை கடித்தவாறே ஆதேஷ் எழுந்து முன்னறைக்கு வர அவனை தொடர்ந்து விஹானும் யாஸ்மினியும் முன்னறைக்கு வந்திருந்தனர்.


அதற்குள் பூமிகாவை கிட்டதட்ட கை பிடித்து இழுத்து வராத குறையாக அழைத்து வந்தவள் அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தாள்.


"காபியா.?? டீயா??? இல்ல ஜூஸ் ஏதாவது குடிக்கிறியா பூமிகா…. ச்ச்சே நா ஒரு முட்டாள் வீட்டுக்கு வந்தவளுக்கு தண்ணி கொடுக்காமா பேசிட்டு இருக்கேன்..இரு எடுத்துட்டு வந்துடுறேன்.." என்றவள் சமையலறையினுள் வேகமாக நுழைந்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்திருந்தாள் பூமிகா குடித்து முடிக்கும் வரை பொறுமை காத்தவள்,


"சொல்லு பூமிகா காபி….இல்ல இல்ல வெயில்ல வந்திருக்க ஜூஸ் எடுத்துட்டு வரேன்… இல்ல வேண்டாம் டிபன் எடுத்து வைக்கட்டுமா.. சாப்புடுறியா….?? நேரமே கிளம்புனதுனால நீ ஹாஸ்டல்ல சாப்பிட்டு இருக்க மாட்டா!! இங்க சாப்பிடு…." என்றவாறே பூமிகா பதில் பேச வாய்ப்பளிக்காமல் இவள் கேள்வி கணைகளாக தொடர,


முன்னறைக்கு வந்த மூவரும் அகல்விழியின் மூச்சு விடாமல் பேசம் இந்த பரிணாமத்தில் திகைத்து விழித்தனர். இத்தனை வருடங்களில் இப்படி ஒரு அகல்விழியை அவர்கள் கண்டதே இல்லையே…..


முதலில் சுதாரித்த விஹான் பூமிகாவை பார்க்க...அகலின் தொடர் கேள்விக் கணைகளால் தடுமாறி பதில் சொல்ல முடியாது விழி பிதுங்கி அமர்ந்திருந்தாள்.


அவளின் நிலையை நொடியில் கண்டு கொண்ட விஹானின் இதழ் கடையோரம் மெல்லிய சிரிப்பு ஒன்று எட்டி பார்க்க முயன்று அதை அடக்கியவன் அருகில் இருந்தவர்களிடம் கண்களால் பூமிகாவின் நிலைமையை சுட்டி காட்டினான்.


அப்பொழுது தான் மற்ற இருவரும் தங்களின் பார்வையை அகல்விழியிடம் இருந்து திருப்பி பூமிகாவை கண்டனர்.

பார்த்த வினாடியே அவளின் நிலைமையை உணர்ந்து கொண்டவர்களுக்கும் சிரிப்பு மேலிட விஹானை போல் ஆதேஷும் புன்னகையை அடக்க அப்படி எந்த வித அவசியமும் இல்லாமல் "க்ளுக்.." என்ற சத்தத்துடன் வாய் மூடி சிரிக்கலானாள் யாஸ்மினி.


யாஸ்மினி சிரிப்பு சத்தத்தில் திரும்பிய அகல் மூவரையும் கேள்வியாக பார்க்க…??


"அண்ணி போதும் கொஞ்சம் மூச்சு விட்டு பேசுங்க...பூமிகாவை கொஞ்சம் பதில் பேச விடுங்க...நீங்க இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா அடுத்து பூமிகா இந்த வீட்டு பக்கமே தலை காட்ட மாட்டாங்க...இப்பவே பாருங்க விட்ட ஓடிடுவேன்ற ரேஞ்சுல தான் உட்கார்ந்திருக்காங்க…" என உண்மையை கேலி கலந்த குரலில் கூறினான் விஹான்.


சட்டென பூமிகாவை திரும்பி பார்த்த அகல் அவளின் அவஸ்தையான உடலமைப்பில் தன் தவறுணர்ந்த,

"சாரி பூமிகா கொஞ்சம் எக்சைட்மென்ட் ஆகிட்டேன் உன்ன பாத்ததும்...ரிலாக்ஸா உட்காரு…..உன்ன பயம் காட்டிடேனா??" என்க,


"அச்சோ அப்படி எல்லாம் இல்ல மேம்...நான் கம்பர்டபிள்ளா தான் இருக்கேன்…" என விஹானை முறைத்தவாறே பூமிகா கூற,


"என்ன இல்ல?? இப்ப கூட பாரு எப்புடி நெளிஞ்சுக்கிட்டு உட்காந்திருக்க!!! இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல கம்பர்டபிளா?? நாங்க யாரும் உன்ன கடிச்சு தின்னும் மாட்டோம் ப்ரீயா இரு.." என்றஹான். விஹானை கண்டு கொள்ளாமல்,


"சரி சொல்லு பூமிகா என்ன சாப்பிடுற??" என்க,


மறுபடியும் முதல் இருந்தா என நினைத்த பூமிகா,

"இல்ல மேம் எனக்கு ஏதும் வேண்டாம்...நான் ஹாஸ்டல் இருந்து வரும் போதே சாப்பிட்டு தான் வந்தேன்….மேம்…" என எங்கே அகல் திரும்பவும் அடுத்து பேச ஆரம்பித்து விடுவாளோ...என்கிற பயத்தில் அவசர அவசரமாக பதில் சொல்லி முடித்திருந்தாள் பூமிகா.


அவளின் பதிலில் மற்ற நால்வருமே "பக்" கென்று சிரித்து விட்டனர். எதற்காக சிரிக்கின்றனர் என தெரியாமல் அவர்களது முகத்தை ஏறிட்ட பூமிகா

"ஏன் மேம் சிரிக்கிறீங்க….." என முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்க,


"நீ சொல்ற பதிலையே தெரியுது எந்த அளவுக்கு நீ பயந்துட்டேன்னு….சரி அத விடு யாஸ்மினி இங்க வா…" என அவளை அழைத்த அகல் அவள் வந்ததும்,


"அன்னைக்கு என்ன ஒருத்தவங்க காப்பாத்துனாங்கன்னு சொன்னேன்ல அந்த பூமிகா இவ தான்…." எனவும்


"அப்பறம் பூமிகா இது தான் யாஸ்மினி என்னோட செல்ல நாத்தனார் எங்க வீட்டோட கடைக்குட்டி.." என இருவரையும் மற்றவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.இருவரும் புன்னகையுடன் அதனை ஏற்று கொள்ள,


"ஷப்பா நீங்க தான் பூமிகாவா ஹாய் அக்கா உங்கள பத்தி பேசி பேசியே என் காதுல ரத்தம் வர வச்சுட்டாங்க உங்க மேம்...எனிவே தேங்க்யூ சோ மச் என் அண்ணிக்கு ஹெல்ப் பண்ணதுக்கு…." என யாஸ்மினி பூமிகாவுடன் பேச ஆரம்பித்து விட,


இனி தங்களுக்கு இவ்விடத்தில் வேலை இல்லை என ஆண்கள் இருவரும் நகர்ந்து விட்டனர்.


பெண்கள் மூவரும் பேச ஆரம்பித்தவர்கள் அடுத்து பூஜைக்கான வேலைகளில் இறங்கி விட,


சிறிது நேரத்தில் அலுவலகத்திற்கு தயாராகி வந்த அண்ணன் தம்பி இருவரும் அகலிடம் சொல்லியவர்கள் பூமிகாவிடமும் ஒரு தலையசைப்பை கொடுத்தவர்கள் கிளம்பி சென்று விட அதனை தொடர்ந்து யாஸ்மினியும் ஹோம்வொர்க் இருப்பதாக சொல்லி சென்று விட,


தற்போது இருவர் மட்டுமே அங்கு இருந்தனர்.


"மேம் ஏதோ பூஜை சொன்னிங்க ஆனா சாருங்க ரெண்டு பேரும் ஆபிஸ் கிளம்பி போயிட்டாங்க???" என்க,


" பூஜை ஆரம்பிக்க கொஞ்சம் நேரமாகும் பூமிகா அவுங்க இருந்தாலும் பிரயோஜனம் இல்ல..பூஜைக்கான வேலை எல்லாம் நான தான செஞ்சாகணும் அவுங்களுக்கு ஏதும் தெரியாது…...முக்கியமான விஷயம் அவுங்க ரெண்டு பேருக்கும் பொறுமைக்கிறதே இல்ல...வீட்டுல இருந்தா சும்மா இல்லாமா எனக்கு உதவுறேன்ற பேர்ல டென்ஷன் பண்ணி தான் விடுவாங்க...அதனால தான் பூஜை ஆரம்பிக்கும் போது வந்த போதும்னு ஆபிஸ்க்கு போக சொல்லிடுவேன்..அப்ப தான் நான் நிம்மதியா வேலை பாக்க முடியும்…" என்றாள் சிரித்தவாறே.


அகல்விழி வேலை செய்வதை சில மணி நேரம் பார்த்து கொண்டிருந்த பூமிகாவிற்கு அதற்கு மேல் முடியாமல் போர் அடிக்க ஆரம்பித்து விட நேரத்தை நெட்டி தள்ள இங்கும் அங்கும் நடந்தவாறே இருந்தாள்.


அதனை கவனித்த அகல்,

"என்ன பூமிகா ரொம்ப போர் அடிக்குதா...அவ்வளவு தான் இந்த வேலை முடிஞ்சிடுச்சு.." என்றபடி எழுந்தவள்

" வா உனக்கு வீட்ட சுத்தி காட்டுறேன் உனக்கும் நேரம் போகும்…" என்றவாரே அவளை அழைத்து சென்றாள் அகல்விழி.


முதலில் வெளி புறம் இருந்த தோட்டத்திற்கு அழைத்து சென்றவள் "உனக்கு ரோஜப் பூ பிடிக்குமா பூமிகா…..யஸ்ஸூக்கு ரொம்ப பிடிக்கும் எல்லா கலர்லயும் வாங்கி வளர்த்துட்டு வர…" என்க,


"பிடிக்கும் மேம்.." என்றவளின் பதிலை கேட்டு அவளை அந்த பக்கம் அழைத்து சென்றாள்.


"உனக்கு எந்த கலர் பிடிக்கும்..??"


"மஞ்சள் மேம்…" என்றவளின் பதிலில் அகலின் மனத் திரையில் நொடிப் பொழுதில் ஒரு முகம் மின்னி மறைந்தது.


பூமிகா சொன்ன மலரை பறித்தவள்,

"நானே வச்சு விடுறேன் திரும்பு.." என்றபடியே அவளின் கூந்தலில் மலரை வைத்து விட்டவள் அடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டாள்.


வீட்டினுள் சுற்றி பார்த்தவாறே அகல்விழியின் கேள்விகளுக்கு பதில் சொல்லியவாறே வந்து கொண்டிருந்த பூமிகாவின் விழிகளில் அங்கு மாட்டப்பட்டிருந்த புகைப்படம் விழ,


"மேம் அந்த போட்டோல இருக்குறது…" என அவள் இழுக்க…….


அவள் சுட்டி காட்டிய புகைப்படத்தை பார்த்தவளின் முகம் வருத்தத்தை தத்தெடுத்துக் கொள்ள,

"அவுங்க தான் என் அத்தை மாமா பூமிகா.."


"ஓஓ….எங்க மேம் இருக்காங்க நான் வந்ததுல இருந்து பாக்கவே இல்லையே??"


"அவுங்க இப்ப இல்ல பூமிகா"


"இல்லைன்னா மேம்??? இந்த வீட்டுல இல்லையா??? இல்ல வேற எங்கயாச்சும் இருக்காங்களா.."


ஆழந்த பெருமூச்செறிந்து அகல்விழி,

"அவுங்க இந்த உலகத்துலயே இல்ல….ஒரேடியா எல்லாரையும் விட்டுட்டு திரும்ப வரமுடியாத இடத்துக்கு போயிட்டாங்க…"


"அச்சோ...சாரி மேம் எனக்கு தெரியாது..இல்லன்னா கேட்டிருக்கவே மாட்டேன்.."


"நீ எதுக்கு சாரி கேட்கிற நீ என்ன தெரிஞ்சுக்கிட்டேவே கேட்ட.."


"ஆனா மேம்….எப்புடி..என்ன ஆச்சு அவுங்களுக்கு…"


"ஆக்ஸிடண்ட் பூமிகா…" என ஒற்றை வரியில் முடித்துக் கொண்டாள்.


பூமிகாவும் அதற்கு மேல் அதைப் பற்றி துருவாது அடுத்த படத்தை பார்க்க அதில் ஆதேஷூம் அகல்விழியும் இருந்தனர். ஏதோ பங்ஷனில் எடுத்திருப்பர் போலும் இருவரும் நன்றாக அலங்கரித்து காணப்பட்டனர்.


பூமிகா தங்களது புகைப்படத்தை பார்ப்பதை கவனித்தவள்,

"அது எங்க ரிஷப்ஷன் போட்டோ.." என


"வாவ்...மேம் அழகா இருக்கீங்க உங்க மேரேஜ் ஆல்பம் இருந்தா காட்டுங்களேன்"


"மேரேஜ் போட்டோஸ் இல்ல பூமிகா ரிஷப்சன் ஆல்பம் தான் இருக்கு பாக்குறியா??"


"ஏன் மேம்??? மேரேஜுக்கு போட்டோ ஏதும் எடுக்கலையா??"


"அது வந்து..பூமிகா….என அகல்விழி இழுக்கும் வேளையில்,


" அத நான் சொல்றேன் மேரேஜ்க்கு போட்டோஸ் எடுக்கல ஏன்னா அண்ணாவும் அண்ணியும் லவ் மேரேஜ்.." என்றபடியே அங்கு வந்தாள் யாஸ்மினி.


"நிஜமா ஆதேஷ் சார் லவ் மேரேஜா!!" என ஆச்சர்யம் தாளமால் பூமிகா கேட்க,


"ம்ம் ஆமா ஆமா….சாதாரண லவ் இல்ல ஆக்ஷ்ன் லவ்…" என


"அது என்ன ஆக்ஷன் லவ்…??" என புரியாமல் பூமிகா வினவ,


"அதுவா இவுங்க லவ்க்கு அண்ணி வீட்டுல ஒத்துக்கல வேற ஒருத்தன் கூட கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்க...ஷோ அண்ணா அண்ணிய அவங்க வீட்டு ஆளுங்க கிட்ட சண்டை போட்டு கூட்டிட்டு வந்துட்டாங்க அப்புடியும் அண்ணி வீட்டு ஆளுங்க விடாம துரத்துதனால அங்கயே வச்சி மேரேஜ் பண்ணிட்டாங்க….இங்க அண்ணி வந்ததும் கொஞ்ச நாள் கழிச்சு ரிசப்ஷன் மட்டும் வச்சோம்.." என்றாள் யாஸ்மினி.


"ஆஹா கேக்கவே இன்ட்ரஸ்டிங்கா இருக்கே...மேம் நீங்க முழுசா சொல்லுங்க மேம் சார பர்ஸ்ட் எங்க பாத்தீங்க??யாரு முதல ப்ரோப்போஸ் பண்ணா?? ஆபிஸ்ல சும்மா கெத்தா விரைப்பா சுத்திட்டு இருக்கிற சார்க்கு எப்புடி லவ் வந்திச்சுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.." என்க,


"அந்த கதைய இன்னொரு நாள் பொறுமையா சொல்லுறேன் இப்ப போய் ரெண்டு பேரும் கொஞ்சம் பிரஸ் ஆகுங்க டைம் ஆச்சு!! யாஸ்மினி பூமிகாவ கூட்டிட்டு போ…" என்று அவர்களை அனுப்பி வைத்தவள் தானும் ரெடியாகும் பொருட்டு தனதறைக்குள் நுழைந்து கொண்டாள்.


அறையின் உள்ளே வந்த அகல்விழியின் செவிகளில்,

"லவ் மேரேஜ்….!!!!!.....ஆக்ஷன் லவ்….." என்ற யாஸ்மினியின் வார்த்தைகளே ரிங்காரமிட்டன அதனை நினைத்தவளின் இதழ்கள் விரக்தி புன்னகையை சிந்தின.


"இந்த உலகத்துல யாருமே இப்படி ஒரு காதல் கல்யாணம் பண்ணிருக்க மாட்டாங்க.." என சொல்லியவளின் விழிகள் கண்ணீரை சொரிந்தன.


சில நிமிடங்கள் கண்ணீரில் கரைந்தவள் தன்னை திருத்தி கொண்டு வெளியே வரவும்...யாஸ்மினியும் பூமிகாவும் வரவும் சரியாக இருந்தது.


அதன் பின் அகல்விழி நிற்க நேரமின்றி பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள்.சிறிது நேரத்தில் விஹானும் ஆதேஷூம் வந்து விட பூஜை ஆரம்பித்து விட்டது.


கடவுளின் சிலைகளுக்கு அகல்விழி ஆரத்தி எடுத்து பூஜை செய்ய ஆரம்பிக்க,

தனதருகே இருந்த யாஸ்மினியின் தோளை சுரண்டினாள் பூமிகா.


"என்னக்கா??"


"இது என்ன பூஜை யாஸ்மினி??" எனக் கேட்டாள் பூமிகா.


"உங்களுக்கு இது என்னன்னு தெரியாதா??இது சுமங்கலி பூஜைக்கா" என


"ஓ..ஓ...எங்க ஊரு பக்கம் எல்லாம் வேற மாதிரி பண்ணுவாங்க.." என


"இங்க இப்படி தான் அக்கா பண்ணுவாங்க...காலையில சீக்கிரமே எழுந்து அண்ணி கொஞ்சம் ஸ்வீட் சாப்பிட்டு விரதம் இருக்க ஆரம்பிப்பாங்க...ஒரு நாள் முழுசும் ஏதும் சாப்பிடமா விரதம் இருப்பாங்க…." என


அப்பொழுது தான் பூமிகாவிற்கு ஞாபகம் வந்தது அவள் வந்ததில் இருந்து அகல்விழி ஏதும் சாப்பிடவில்லை என்று.


"அப்பறம் என்ன பண்ணுவாங்க யாஸ்மினி.."


"அத…" என யாஸ்மினி ஆரம்பிக்க போக


"ச்சு...என்ன இது கொஞ்சம் நேரம் பேசாம இருக்க மாட்டீங்களா?? பூஜை நடந்துட்டு இருக்குல...ரெண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடுங்க.." என அதலிட்ட விஹான் பூஜையில் கவனத்தைச் செலுத்தினான்.


அவனை முறைத்த பெண்கள் இருவரும் பூஜையில் கவனமாக சரியாக அந்நேரம் "ஹாய் அத்தான்ஸ்.." என்ற குரலுடன் யுவதி ஒருவள் உள்வர அவளின் பின்னே பெண்மணி ஒருவரும் வந்தார். இருவரும் தங்களது வயதுக்கு மீறிய அலங்காரத்தில் காணப்பட்டனர்.


"வாங்க அத்தை வா சுபி…" என வரவேற்ற ஆதேஷ் பூஜையில் கவனமாகி விட வந்தவர்களும் ஏதும் பேசாது பூஜையை கவனித்தனர்.


பூஜை முடிந்து விட அனைவருக்கும் ஆரத்தி காட்டி விட்டு ஆதேஷூம் அகல்விழியும் பால்கனிக்கு செல்ல மற்றவர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.


பால்கனி சென்று இருவரும் எதிர் எதிரே நின்று கொள்ள தன் சேலையுன் முந்தானையை எடுத்து தலையில் முக்காடு போட்டு கொண்ட அகல்விழி தான் வைத்திருந்த சல்லடை தட்டில் முதலில் நிலவை பார்த்தவள் அடுத்து எதிரே இருந்த தனது கணவனை பார்த்தாள்.


அடுத்து தான் கொண்டு வந்திருந்த ஆரத்தி தட்டை அவனுக்கு காண்பித்து விட்டு அவனின் நெற்றியில் விபூதி வைத்தவள் ஆரத்தி தட்டை அருகில் வைத்து விட,


தன் கையில் வைத்திருந்த ஸ்வீட்டை அவளுக்கு ஊட்டி விட்டு தண்ணீர் குடிக்க வைத்து அவளின் விரதத்தை முடித்து வைத்தான் ஆதேஷ்.


இவையனைத்தையும் ஒரு பார்வையாளராக இருந்து பார்த்து கொண்டிருந்தாள் பூமிகா.


அகல்விழி விரதத்தை முடித்ததும் அவளை தவிர அனைவரும் வெளியேறி விட்டனர். அகல்விழி அங்கு வைத்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.


யாஸ்மினி சமைத்த பதார்த்தங்களை எல்லாம் இரவு உணவு உண்பதற்காக டைனிங் டேபிளில் அடுக்கி கொண்டு இருக்க அவளிற்கு உதவி கொண்டிருந்தாள் பூமிகா.


" யாஸ்மினி நா போய் மேம்மா கூட்டிட்டு வரேன் அவுங்க தான் பசில இருப்பாங்க முதல அவுங்க சாப்பிடட்டும்.." என்றவள் அகல்விழியை தேடி சென்றாள்.


"மேம் வாங்க சாப்பிடலாம் பசில இருப்பீங்க.."


"தோ ரெண்டு நிமிஷம் பூமிகா இதை எல்லாம் எடுத்து வச்சிட்டு கிளீன் பண்ணிட்டு வரேன்"


"சரி மேம் நானும் உங்களுக்கு உதவி பண்ணுறேன்.." என்றவள் அகல்விழியின் பக்கவாட்டில் இருந்த பொருட்களை சேகரிக்க ஆரம்பித்தாள்.


அகல்விழி இன்னும் வராததை கவனித்த ஆதேஷ் நேரமாவதை உணர்ந்து அவளை அழைத்து செல்ல வந்தவன் அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்து "அகல்….." என கத்த…,


அவனின் சத்தத்தில் திகைத்த பூமிகா திரும்பி அகலை பார்க்க அவளும் அதிர்ச்சியில் நின்று விட்டாள்.


இவர்களின் இருவரின் அதிர்ச்சியையும் கண்ட அகல்விழி அவர்களின் பார்வை சென்ற தனது விழிகளை செலுத்தியவள் கண்டது அருகில் இருந்த ஆரத்தி தட்டில் விழுந்திருந்த தனது முந்தானையை தான்.


ஒரு வினாடி திகைத்த அகல்விழி அடுத்த நிமிடம் விரைந்து தனது சேலையை விளக்கில் இருந்து எடுத்து விட ஆனாலும் அவளையும் விட விரைவாக நெருப்பு அவளின் சேலையில் பற்றி கொண்டது.


நொடியில் நெருப்பு வேகமாக பரவ சுயம் பெற்ற ஆதேஷ் விரைந்து அவளருகே வருவதற்குள் அருகே இருந்த பூமிகா அகலின் அருகே சென்று தனது கைகளால் நெருப்பை அணைக்க ஆரம்பித்திருந்தாள்.


அதற்குள் ஆதேஷீம் வந்து விட அவனும் சேர்ந்து நெருப்பை அணைக்க ஆரம்பிக்க அது இன்னும் இன்னும் ஆக்ரோஷமாக மேல் எழ ஆரம்பித்தது.


ஆதேஷின் கத்தலில் வீட்டில் இருந்த அனைவரும் வந்து விட மூவரும் இருந்த நிலை கண்டு திகைத்து அடுத்த என்ன செய்வது என தெரியாமல் இருக்க…


விரைந்து செயல்பட்ட விஹான் அருகே இருந்த மண் தொட்டியை எடுத்து அவர்களருகே சென்றவன் அகல்விழியின் சேலையில் முழுவதுமாக கொட்டி நெருப்பை அணைந்திருந்தான்.


அடுத்த நொடி அகலை இழுத்து தனக்குள் அடக்கி கொண்டான் ஆதேஷ். நெருப்பு அணைத்ததும் நிம்மதியடைந்த பூமிகா தள்ளாடியபடியே எழுந்து நின்றவள் அடுத்த நிமிடம் நிற்க முடியாமல் மயங்கி சரிய ஆரம்பிக்க…


அதனை கண்ட விஹான்,


"ஹேய்….பூமிகா…" என்ற சொல்லுடன் அவளை விழாமல் தாங்கி கொண்டவன் அவளை எழுப்ப முயற்சித்து அவள் எழாததை கண்டு அவள் மயங்கி விட்டதை உணர்ந்தவன் எதைப் பற்றியும் யோசிக்காது அவளை தூக்கி கொள்ள,


அப்போது தான் அவள் இரு கைகளிலும் இருந்த தீ காயத்தை கண்டவன் அதிர்ந்து விட்டான் உள்ளங்கை முழுவதும் காயம் ஏற்பட்டிருந்தது.


"ஹோ ஷிட்.." என்றபடி அவளை தூக்கி கொண்டு உள்ளே விரைந்தான்.



மரணம் நிகழும்…..

read & share ur comments

 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவணை முறையில் காதல் (மரணம்) நிகழும் ‌7






மெதுவாக புரண்டு படுத்தவளின் தூக்கம் இன்னும் முழுதாக கலைய விடாமல் அந்த மெத்தை சுகமாய் அவளை உள்ளே இழுத்து கொண்டது.


வழக்கமாய் அவள் தூங்கும் ஹாஸ்டல் மெத்தை இப்படி இருக்காதே என அவள் தூக்கத்தில் நினைத்து கொண்டிருக்க,


ஏதேதோ...பேச்சு குரல்கள்... கனவில் கேட்பதாக நினைத்து அதை அசட்டை செய்து மீண்டும் தூங்க முயற்சித்தால் பூமிகா.


நேரம் செல்ல செல்ல பேச்சு குரல்கள் அதிகமாவதோடு தனது கைகளிலும் பஞ்சு போன்ற மென்மையை உணர்ந்தவள் முயன்று தனது கண்களை திறக்க முயல அதுவோ திறக்க மாட்டேன்‌ என அடம்பிடித்து கொண்டிருந்தது.


இரண்டு முறை முயற்சித்து முடியாமல் மீண்டும் தூக்கம் அவள் கண்களை தழுவும் நேரம் உள்ளங்கைகளில் சிறு எரிச்சல் அதை உணர்ந்து அவள் கைகளை இழுக்க முயல,


யாரோ அவளது கைகளை இறுக்க பிடிக்கும் உணர்வு...ஏதோ தவறாக பட தூக்கத்தின் பிடியில் இருந்த மூளையை தட்டி தனது விழிகளை கடினப்பட்டு திறக்க அவள் எதிரே இருந்தது அழகிய மயில் ஓவியம்.


'நம்ம ஹாஸ்டல்ல இப்படி எல்லாம் இருக்காதே…' என நினைத்தவளின் உள்ளங்கை சற்று அதிகமாக எரிய ஆரம்பிக்க…


கைகளை இழுத்தபடியே

"ஸ்ஸா...ஆ….அம்மா…" என்ற அலறலுடன் எழுந்தமர்ந்திருந்தாள்.


"அவ்ளோ தான் பூமிகா ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல..மருந்து போட்டாச்சு" என்ற அகலின் வார்த்தைகளில் பக்கவாட்டில் திரும்பி பார்க்க பூமிகாவின் இரண்டு உள்ளங்கைகளிலும் கட்டு போடப்பட்டிருந்தது.


"நா போய் உனக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வரேன் நைட்டும் நீ எதுவும் சாப்பிடல" என்றவாறே வெளியேறி இருந்தாள் அகல்விழி.


சிறிது நேரம் ஏதும் புரியாது மலங்க மலங்க விழித்து கொண்டிருந்த பூமிகா தன் கைகளை பார்க்க..

அப்பொழுது தான் நேற்று நடந்த அனைத்தும் சிறிது சிறிதாக ஞாபகம் வந்தது.


அகல்விழியின் புடவையில் பற்றியிருந்த நெருப்பை அணைத்த முடித்தவளுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வர தள்ளாடியபடியே அவள் இருந்த வரையில் மட்டுமே நினைவிற்கு வந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என சுத்தமாக‌ அவளிற்கு நினைவு வரவில்லை.


அமர்ந்த வாக்கிலே எத்தனை நேரம் யோசித்தாளோ….. ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் என நினைத்து கண்களை சுழற்றி அறையினுள் பாத்ரூம் இருக்கிறதா என பார்த்தவளின் கண்களுக்கு அங்கிருந்து தட்டு பட


உடைகளை சரி செய்து கொண்டு முயன்று எழுந்து நின்றவள் இரவில் இருந்து ஏதும் உண்ணாததால் அவளிற்கு பசி கண்களை மறைக்க மீண்டும் நிற்க முடியாமல் தள்ளாடிய படியே கட்டிலில் விழ போனவளை விழாமல் அவளின் தோள்பட்டைகளை இரண்டையும் பற்றி நிறுத்தியிருந்தான் விஹான்.


அகல்விழி பூமிகா எழுந்து விட்டதை உரைக்க கேட்டுக் கொண்டிருந்தவன் அவளை காணும் பொருட்டு உள்ளே நுழைந்தவன் விழிகளில் பூமிகா நிற்க முடியாமல் தடுமாறுவது விழ விரைந்து வந்து அவளை பிடித்திருந்தால்.


"பாத்து பூமிகா...ஏற்கனவே அடி பட்டு இருக்கு..திரும்பவும் விழுந்து வைக்காத...யாரையாச்சும் கூப்பிட வேண்டியது தான??அதுக்குள்ள ஏன் அவசரப்பட்டு எழுந்து நிற்கிற..??" என அவளை மீண்டும் அமர வைக்க முயற்சித்தவாறே பேச


அவனினற்கு‌ ஒத்துழைப்பு தராது

"ரெஸ்ட் ரூம் போகணும் சார்..??" என


"ஓ...சாரி...அண்ணியை வர சொல்லவா பூமிகா...வெயிட் பண்ண முடியுமா??"


"இல்ல சார் நான் மேனேஜ் பண்ணிக்குவேன்…" என்றபடி அவள் நகர,


அவள் நிலை உணர்ந்தவன்,

"சரி...நீ ஏதும் தப்பா எடுத்துக்கலைன்னா நான் உதவி பண்ணட்டுமா??"


அவளிற்கு இருந்த அவசரத்தில் அகல்விழி வரும் வரை நிற்க முடியாது என யூகித்தவள்,

"ம்ம்ம்.." எனக்கூறி தனது சம்மதத்தை தெரிவிக்க..


அவள் முழுங்கையை பட்டும் படாமல் அதே நேரத்தில் அவளிற்கு பேலன்சாகவும் பற்றியவன் அவளை. அழைத்து சென்று பாத்ரூம் அருகே விட்டவன் அவள் உள்ளே நுழைந்ததும்,

" நா போய் அண்ணியை அனுப்புறேன்.." என்றவன் அவள் சங்கடத்தை உணர்ந்து வெளியேறி இருந்தான்.


அப்போது தான் பிடித்து வைத்த மூச்சை வெளியிட்டாள் பூமிகா. அவன் உதவி செய்ததில் சற்று கூச்சமாக உணர்ந்திருந்தாள்.


அவன் இங்கிருந்து சென்றால் பரவாயில்லை என அவள் நினைக்கையிலேயே,


அவளின் நிலை அறிந்து வெளியேறியவனை கண்டு அவள் உதடுகள் மலர்ந்தன.


உள்ளிருந்த கண்ணாடி முன் நின்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு அவள் வெளி வரும் போது அவளின் கான் உணவுடன் அகல்விழி தயாராக இருந்தாள்.


"பிரஸ் ஆகிட்டீயா பூமிகா...வா வந்து உட்காரு.." என


அவள் சொல் கேட்டு அங்கிருந்த சேரில் அமர்ந்திருந்தவளை நோக்கி கையில் உணவுடன் வந்தவள்,


"இந்தா முதல் இத சாப்பிடு..வயித்துல ஒன்னுமே இல்லாததுனால தான் மயங்கி விழுகிற" என்றபடி ‌அவளிற்கு சிறு ஸ்பூன் போட்டு உணவு கிண்ணத்தை தந்தாள்.


இரு கைகளிலும் கட்டு போட்டிருந்ததால் ஸ்பூனை ஓரளவு லேசாக அவள் பிடித்து கொண்டு அவள் உண்ண முயல ஆனால் உண்ண முடியாது கீழே சிந்த ஆரம்பித்தாள்.



உணவு சிந்துவதை தடுக்கும் பொருட்டு கரண்டியை அழுத்தமாக பிடிக்க அவள் முயல அந்த அழுத்தத்தை தாங்காது கரண்டி‌ நழுவ ஆரம்பித்ததோடு அவள் கைகளிலும் வலி எடுக்க ஆரம்பிக்க,


அதற்கு மேல் முடியாது ஸ்பூனை கீழே வைத்தவள் தன்னை பார்த்து கொண்டிருந்த அகல்விழியிடம்,


"நோ மேம் என்னால ஸ்பூன் பிடிக்க முடியல நீங்க ஜூஸ் மட்டும் கொடுங்க நான் குடிச்சிக்கிறேன்.."


ஏற்கனவே அவள் படும் அவஸ்தையை கண்டு வேதனையுற்ற அகல்விழி பூமிகா கூறியதைக் கேட்டதும்

"சாரி பூமி..என்னால் தான்...எல்லாமே என்னால தான்….உன்னால சாப்பிட கூட முடியல.." என அவள் கண்களில் கண்ணீர் வழிய கூற


அவளின் அழுகையில் பதறிய பூமிகா,

"ஏன் மேம் இப்படி அழுறீங்க..அழாதீங்க ப்ளீஸ்..நீங்க என்ன வேணும்னா பண்ணிங்க இது எல்லாம் ஆக்சிடென்ட்டா நடந்தது.. இதுக்கும் உங்களுக்கும் ஏன் சம்பந்த படுத்துறீங்க??" என


"நீ ஏன் பூமிகா நெருப்பை கையால் அணைச்ச அதனால் தான் உனக்கு இப்படி காயம் ஏற்பட்டு இருக்கு!!"


"என்ன மேம் பேசுறீங்க கண்ணு முன்னாடி உங்களுக்கு ஒரு ஆபத்துன்றப்பா எப்படி மேம் கைய கட்டிட்டு சும்மா வேடிக்கை பாக்க சொல்றீங்களா??? அப்போதைக்கு எப்படியாச்சும் உங்கள் காப்பாத்தணும்னு மட்டும் தான் மைண்ட்ல இருந்துச்சு" என,


" இருந்தாலும் என்னால தான் ஒவ்வொரு முறையும் நீ காயப்படுற பூமிகா " என அவள் இன்னும் அழுக,


'ம்ஹூம் பூமி விட்டா இவுங்க இன்னைக்கு ஃபுல்லா அழுதுட்டே தான் இருப்பாங்க...ஏதாவது செஞ்சு டாபிக்க மாத்து..' என தனக்கு தானே சொல்லி கொண்டவள்,


"மேம் அந்த கைல வச்சிருக்கிற ஜூஸையாவது எனக்கு கொடுக்குறீங்களா??வயித்துக்குள்ள எலி கபடி ஆடிட்டு இருக்கு" என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,


"சாரி பூமிகா… சாரி...இந்தா இத சாப்பிடு முதல ஜூஸ் அப்புறம் குடிப்பியாம்" என்றவள் ஸ்பூனால் உணவை பூமிகாவுக்கு ஊட்ட,


பூமிகாவை தயக்கமாக அகல்விழியை பார்க்க…


அவளின் பார்வையை உணர்ந்தவள்,

"என்ன பூமிகா??"


"இல்ல மேம் உங்களுக்கு எதுக்கு கஷ்டம் கொடுங்க நானே சாப்பிட்டுகிறேன்" என்றபடி கரண்டியை அவள் வாங்க முயல,


"மூச்….எதுவும் பேசாம வாய திறக்கணும் நீ என்ன காப்பாத்த போய் இப்புடி கையெல்லாம் வெந்து போய் இருக்கு அது உனக்கு கஷ்டமாயில்லை...இத்தூணுட்டு கரண்டிய பிடிச்சு உனக்கு ஊட்டுறது எனக்கு பெரிய கஷ்டமாக்கும்..அது எல்லாம் ஒரு கஷ்டமும் இல்ல வாயைத் திற" என அகல்விழி அதட்ட


அதில் சிரித்தவள் வேறு ஏதும் பேசாது அவள் கொடுத்த உணவை உண்ண ஆரம்பித்தாள்.


பூமிகாவிற்கு உணவு ஊட்டி முடித்தவள்,

"தூங்கி எழுந்ததுல உன் முடி எல்லாம் கலச்சிருக்கு பாரு...இரு நா தலை வாரி விடுறேன்" என்றவள் பூமிகாவின் தலை முடியை பின்னி முடித்தவள்,


"கொஞ்சம் நேரம் வெளிய வந்து உட்காரு பூமிகா ரூம்குள்ளயே இருந்தா போர் அடிக்கும்"


"சரி மேம் வாங்க போகலாம்"


பூமிகாவை அழைத்து கொண்டு வெளியே வந்தவள் அவளை அங்கிருந்த சோபாவில் அமர வைத்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள்.


வாக்கிங் முடித்து விட்டு வந்த ஆதேஷ் பூமிகா அமர்ந்திருப்பதை கண்டு அவளருகே வர,


அவன் வருவதை கண்டவள்,

"குட் மோர்னிங் சார்.." என


"குட் மோர்னிங் பூமிகா இப்ப கை எப்புடி இருக்கு?? பெயின் ஏதும் இருக்கா??"


"பரவாயில்ல சார்… கொஞ்சம் கொஞ்சம் கைய அசைச்ச பெயின் இருக்கு" என்றவள் அவனின் ஒரு கையில் கட்டுப் போடப் பட்டிருந்ததை கண்டு,


"உங்களுக்கு எப்புடி இருக்கு சார்??"


"எனக்கு ஏதும் இல்லை பூமிகா சின்ன காயம் தான் சரி இத விடு நீ ஏதாச்சும் சாப்ட்டியா?? நேத்து நீ மயங்கியதும் பயம் ஆகிருச்சு...காலையில வரைக்கும் நீ கண் விழிக்கும் இருக்குறத பாத்து அகல் ரொம்ப பயந்துட்டா எங்களுக்கும் கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு நீ எழுந்ததும் தான் நிம்மதியா இருக்கு"


"மேம் டிபன் கொடுத்துட்டாங்க சார்"


"சரி பூமிகா நீ ரெஸ்ட் எடு நான் வரேன்" என அவளிடம் விடை பெற்றவன் அலுவலகம் கிளம்ப தயாராக சென்று விட்டான்.


ஆதேஷ் வந்து விட்டதை கவனித்த அகல் அவனிற்கு டீ எடுத்து கொண்டு அறைக்குள் சென்றாள்.


"வாங்க மேடம் இப்ப பயம் போச்சா?? பூமிகாவுக்கு ஏதும் ஆகல அவ இப்ப நல்லா இருக்கா!! இனியாச்சும் டென்ஷன் ஆகாமா இரு" என கதவை திறக்கு ஓசையில் அவள் வரவை உணர்ந்தவன் அவள் முகம் பாராது கூறி முடித்து திரும்பியவன் விழிகளில் அவளது தடித்த இமைகள் விழ,


அவளருகே வந்து டீ யை வாங்கி கொண்டே,

"அழுதியா அகல்??" என


அவனிடம் மறைக்க முடியாது என அறிந்தவள்

"ஆமா" என உண்மையை ஒத்து கொண்டாள்.


"ஏன்?? அதான் பூமிகாவுக்கு ஒன்னும் இல்லைன்னு தெரிஞ்சிடுச்சுல நைட் புல்லா பூமிகா கண் திறக்கலன்னு அழுத...இப்ப என்ன அவசியம் வந்துச்சு அழுக"


"அது அவ காயத்த பாத்ததும் அழுக வந்துருச்சு ரொம்ப வெந்துப் போயிருக்கு ரொம்ப எரியும்...என்னால தான...என்ன காப்பாத்த போய் தான இப்புடி.." என மீண்டும் அவள் அழுகையில் கரைய ஆரம்பிக்க


ஒரு கையில் அவளை இழுத்து தனது தோள் வளைவில் வைத்து கொண்டவன்,

"காம் டவுன் அகல் அதான் பூமிகா வேற பெருசா ஏதும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாருல நீயும் தான கூட இருந்து கேட்ட...காயம் பெருசு தான் அதுக்கான மருந்தையும் எழுதி கொடுத்துருக்காருல அத கரெக்டா பாலோவ் பண்ண சீக்கிரமே சரியாயிடும்" என


"ம்ம்ம்...பூமிகாவுக்கு சரியாகுற வரைக்கும் நான் தான் கூட இருந்து பாத்துக்குவேன் யாரும் ஏதும் சொல்ல கூடாது" என


"தாராளமா நீயே பாத்துக்கோ..யாரும் எதுவும் சொல்ல மாட்டோம் சரியா இப்ப கொஞ்சம் சிரிக்கலாமே" என்க,


அவனிற்காக சிரித்தவள்,

"சரி ரெடியாகிட்டு வாங்க நா கீழ போறேன்" என்றவள் கீழிறங்கி வர,


பூமிகா தனியாக இருப்பதை கண்டவள் அவளருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தவள் சிறிது நேரத்தில் யாஸ்மினி எழுந்து வரவும் அவளை பூமிகாவிடம் இருக்குமாறு பணிந்தவள் காலை உணவை தயாரிக்கும் பொருட்டு அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள்.


பேசி கொண்டிருந்த யாஸ்மினி பூமிகாவுக்கு போர் அடித்து விட..அடுத்து என்ன?? என யோசிக்க…

"டி.வி. பாக்கலாம் பூமிக்கா" என்றவாறே யாஸ்மினி அதை ஆன் செய்ய அதஇல் இருவருக்கும் பிடித்தமான பாடல் ஓட அதை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.


இடை இடையே வெளிவந்த அகல்விழி அவர்கள் இருவரும் டி.வி. யில் மூழ்கி விட்டதை கவனித்து விட்டு சென்று விட்டாள்.


காலை உணவை முடித்து விட்டு வெளிவந்த அகல்விழி,

"யஸ்ஸூ ஸ்கூலுக்கு டைம் ஆச்சு பாரு போய் கிளம்பு" என


"ம்ம் தோ போறேன் அண்ணி" என்றவள் எழுந்து சென்று விட,


அகல்விழியும் ஏதோ வேலையாக வெளியே சென்று விட்டாள்.


டி.வி பார்த்து கொண்டிருந்தவளுக்கு தாகம் எடுக்க சுற்றும் முற்றும் அகல்விழியை தேடியவள் அவளை காணாது தானே எழுந்து சென்றாள்.


நல்ல வேளையாக தண்ணீர் டைனிங் டேபிளில் இருக்க தட்டு தடுமாறி அதனை கிளாஸில் ஊற்றியவள் எடுத்து குடிக்க முயல கட்டு இடப்பட்டிருந்த கைகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டன.


யாரையாவது உதவிக்கு அழைக்கலாமா என பூமிகா பார்த்து கொண்டிருந்த வேளையில் தனதறையில் இருந்த வெளி வந்தாள் தர்ஷிகா.


அவளை கண்டதும்,

"ஏங்க இந்த கிளாஸ் மட்டும் எடுத்து கொடுக்குறீங்களா??" என கேட்க,


ஏற்கனவே நேற்றில் இருந்து பூமிகாவை அனைவரும் கவனித்த விதம் மற்றும் விஹான் அவளை தூக்கி சென்றதில் கடுப்பில் இருந்தவள் பூமிகா கேட்டதும் அவளிற்கு கோபம் தலைக்கேற,


"ஏய்...என்ன ஏங்க நோங்கன்னு சொல்லிட்டு இருக்க?? நீ எங்ககிட்ட வேலை பாக்குறவ மேடம்னு சொல்ல மாட்டியா?? நான் என்ன உனக்கு வேலைக்காரியா??எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே வேலை சொல்லுவ?? சீட்ட கிழிச்சு கம்பெனியை விட்டு துரத்திடுவேன் " என


அவளின் கோபத்தில் திகைத்த பூமிகா,

"சாரி மேம்" என


"ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும் வந்துட்டா பெரிய இவ மாதிரி" என சொல்லி கொண்டு திரும்பியவள் அதிர்ந்து விட்டாள்.


ஏனெனில் அங்கே இவளையே முறைத்தவாறே விஹான் வந்து கொண்டிருக்க,


அவன் முறைப்பில் இருந்தே தான் பேசியதை கேட்டு விட்டான் என உணர்ந்தவள் அவன் அருகே வர வர எங்கே அடித்து விடுவானோ என பயந்தவள் அடுத்த நொடி தனதறைக்குள் நுழைந்து தாழிட்டு கொண்டாள்.


முடிந்த மட்டும் அவளை வாய்க்குள் திட்டியவன் மூடியிருந்த கதவை ஒரு முறை முறைத்துவிட்டு பூமிகாவின் அருகில் சென்றான்.


இதை எதையும் அறியாது பூமிகா மீண்டும் தண்ணீர் கிளாசை எடுக்க முயன்று கொண்டிருக்க…


அவளருகே வந்தவன் கிளாசை எடுத்து அவள் கைகளில் தராமல் இதழ்களின் அருகே கொண்டு சென்றான் விஹான்.


அவனின் செய்கையில் திகைத்தவள்,

"சார்!!" என்க,


"ம்ம் குடி பூமிகா" என்றான் மென்மையாக,


அவனின் குரலின் மென்மையில் மறுக்க தோன்றாது குடித்து முடித்தாள்.


"இனிமே உனக்கு என்ன உதவி வேணும்னாலும் தாரளமா எங்ககிட்ட கேட்கலாம்..யாரும் அவ்வளவு சீக்கிரம் எல்லாம் உன் சீட்ட கிழிக்க முடியாது..நீ அநாவசியமா பயப்பட தேவையில்லை உன்ன பாத்துக்க நாங்க இருக்கோம் புரியுதா" என்க,


"அது வந்து...சார்...அவுங்களுக்கு என்ன டென்ஷனோ அப்புடி கத்திட்டாங்க வேற ஒண்ணும் இல்லை"


"விடு பூமிகா நான் எல்லாத்தையும் கேட்டுட்டு தான் இருந்தேன் அவள காப்பாத்த ட்ரை பண்ணாத" என


இதற்கிடையில் வேலையை முடித்து கொண்டு உள்ளே வந்த அகல்விழி பூமிகா டைனிங் டேபிள் அருகே இருக்கவும் அவளருகே வந்தவள்,


"என்ன பூமிகா ஏதும் வேணுமா??யாரும் ஏதும் சொல்லிட்டாங்களா??" என அவள் விஹான் அருகே நிற்பதை கண்டு எங்கே அவன் அன்று தன்னிடம் பேசியது போல் இவளிடமும் பேசி விட்டானோ என நினைத்தவள் விஹானை முறைத்தவாறே கேட்க,


பூமிகாவே சற்று முன் தர்ஷிகா பேசியதை கேட்டு விட்டார்களோ என நினைத்து அகலை பார்க்க..


ஆனால் விஹானிற்கு தெரிந்து விட்டது அகல்விழி எதற்காக இப்படி கேட்டாள் என்று உடனே,


"அய்யோ!! அண்ணி நான் எதுவுமே சொல்லல...தண்ணி குடிக்க ஹெல்ப் பண்ணேன் அவ்வளவு தான் நீங்க வேணும்னா பூமிகா கிட்டயே கேளுங்க எனக்கு டைம் ஆச்சு நான் வரேன்" என்றவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.


அவன் சென்றதை உறுதி படுத்திக் கொண்ட அகல்,

"விஹான் ஏதாச்சும் சொன்னானா?? பூமிகா" என,


"அச்சோ இல்ல மேம் யாரும் ஏதும் சொல்லலை சார் எனக்கு உதவி தான் செஞ்சாரு" என்க,


"ம்ம்ம்..சரி வா போய் உட்காரலாம்" என டி.வி. பார்த்து கொண்டே இருவரும் பேசிக் கொண்டிருக்க…


சிறிது நேரத்தில் உணவுண்ண ஒவ்வொருவராக தயாராகி வர அவர்களுக்கு உணவு பரிமாற அகல்விழி சென்று விட்டாள்.


அப்பொழுது நளினியும் வந்து அமர அகல்விழி,

"தர்ஷிகா வரலையா சித்தி??" என,


"என்னன்னு தெரியல நான் அப்பறம் வந்து சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லி படுத்துருக்கா"


"ஏன் உடம்புக்கு ஏதும் முடியலையா?? நா போய் பாத்துட்டு வரேன்" என்ற அகல்விழி நகர போக,


"அதான் அப்பறம் வந்து சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லிட்டாளே பசிச்சா அவளே வந்து சாப்பிட்டுக்குவா அண்ணி நீங்க சாப்பிடுங்க முதல" என்ற விஹானின் குரல் தடுத்து நிறுத்தியது.


அவனுக்கு தான் தெரியுமே அவள் எதற்காக வரவில்லை என்று.


"நீ உட்காரு அகல் விஹான் சொன்ன மாதிரி அவளுக்கு பசிச்சா தானா வரப் போறா" என்றான் ஆதேஷ்.


அகல்விழியும் மறுத்து பேசாது உண்ண ஆரம்பித்து விட்டாள்.


இவர்களின் பேச்சை கேட்ட நளினியின் முகம் தான் சிறுத்து விட்டது.


அனைவரும் உண்டு முடித்து யாஸ்மினி பள்ளிக்கு கிளம்பி விட ஆதேஷூம், விஹானும் அலுவலகத்திற்கு கிளம்ப தயாராக அவ்விடம் வந்த,


"சார் நானும் ஹாஸ்டலுக்கு கிளம்புறேன்" என்ற பூமிகாவின் வார்த்தைகளில் அனைவரும் ஒரு நிமிடம் அமைதி காத்தனர்.


அகல்விழி ஏதோ பேச முற்பட அவளை தன் கண்ணசைவில் தடுத்த ஆதேஷ் பூமிகாவிடம் தானே பேசலானாள்.


"பூமிகா.,. நீ எங்களுக்கு பண்ணியிருக்கிறது பெரிய உதவி...நீ மட்டும் சீக்கிரம் யோசிச்சு நெருப்ப அணைச்சு இருக்கலனா...உப்ப்...அத நாங்க நினச்சு கூட பாக்க விரும்பல...ம்ம் நானும் வந்து நெருப்ப அணைச்சேன் தான் பட் நா வரதுக்கு முன்னாடியே நீ உன்ன பத்தி யோசிக்காமா நெருப்ப அணைக்க ஆரம்பிச்சிட்ட...இன்பக்ட் நா வந்த அப்பறம் கூட நீ ஒதுங்காமா என் கூட நின்னு உதவி செஞ்ச எத்தனை பேருக்கு இந்த மென்டாலிட்டி வரும்னு எனக்கு தெரியல"


"ஏற்கனவே அகலும் சரி நாங்களும் சரி எங்களால தானே உனக்கு இப்புடி காயம் பட்டிருச்சுன்னு ரொம்ப பீல் பண்றோம் நீ இந்த பங்ஷனுக்கு வராம இருந்து இருந்தா உனக்கு இப்புடி ஆகியிருக்காதுல்ல….எங்களால கண்டிப்பா உன்னோட வலிய உணரவோ வாங்கிக்கவோ முடியாது!! ப்ளீஸ் எங்க மன திருப்திக்காகவாது உன் காயம் சரியாகுற வரைக்கும் இங்க இருக்கலாமே?? அகல் ரொம்ப குற்றவுணர்ச்சில இருக்கா இந்த மாதிரி நிலைமையில உன்ன கவனிச்சு கிட்ட அவ கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியா இருப்பா ஷோ ப்ளீஸ் இத ரெக்வோஸ்ட்டா எடுத்து கிட்டு இங்கயே ஸ்டே பண்ணலாமே" என அவன் முடிக்க…


"என்ன சார் இது நீங்க என்னோட பாஸ் இப்புடி ரெக்வெஸ்ட் அது இதுன்னு சொல்லி என்ன சங்கடம் படுத்தாதீங்க ப்ளீஸ் உங்களுக்கு இப்ப என்ன நான் இங்க காயம் சரியாகுற வரைக்கும் இருக்கணும் அவ்வளவு தான நா இருக்கேன் விடுங்க" என்க,


"ரொம்ப தாங்க்ஸ் பூமிகா.."


"சார் என்னோட டிரஸ் எடுக்கணும் ஹாஸ்டல்ல இருக்கு.."


"நம்ம ஈவ்னிங் போய் எடுத்துக்கலாம் பூமிகா இப்ப போய் கொஞ்சம் நீ ரெஸ்ட் எடு உன்னொட மொபைல் ரூம்ல இருக்கு" என அவசரமாக இடைப்புகுந்தாள் அகல்விழி.


"சரி மேம்" என்றவள் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று விட, மற்றவர்களும் கிளம்பி சென்று விட்டனர்.


"அகல் இப்ப எதுக்கு அந்த பொண்ண இங்க தங்க வச்சிருக்கீங்க ஏதாவது அஞ்சோ பத்தோ கொடுத்து அனுப்ப வேண்டியது தான??அத விட்டுட்டு அவளுக்கு சேவை செய்யணும்னு சொல்லுறீங்க" என அதுவரை அமைதியாக இருந்த நளினி வாயை திறந்தார்.


"இருக்கட்டும் சித்தி இதுல என்ன இருக்கு அவ என்ன காப்பத்தலன்னா?? நான் இப்புடி உங்க முன்னாடி நின்னு பேசியிருப்பேனா தெரியாது?? இதுல என்ன கஷ்டம் சித்தி நான் இஷ்டப்பட்டு தான் அவள கவனிச்சிக்கிறேன் எனக்கு எந்த கஷ்டமும் இல்ல" என்றபடியே அகல்விழி சென்று விட்டாள்.


"ஆமா...ஆமா உனக்கு எதுக்கு கஷ்டமா இருக்கப் போகுது இது என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா?? வெறும் கைய வீசிட்டு வந்தவ எல்லாம் நாட்டமை பண்ணிட்டு இருக்கா...அய்யோ!! என் அண்ணன் சொத்த இன்னும் யாருக்கெல்லாம் படியளக்க போறாளே??" என அகல்விழியை திட்டியபடியே தனதறைக்கு சென்று விட்டார்.


காரில் அலுவலகம் சென்று கொண்டிருந்த அண்ணன் தம்பி இருவரிடமும் பெருத்த அமைதி நிலவியது.


"பூமிகாவ பத்தி என்ன நினைக்கிற விஹான்" என அந்த அமைதியை கலைத்தான் ஆதேஷ்.


"முன்னாடி கொஞ்சம் சந்தேகமா தான் இருந்துச்சு ஏன்னா? நம்ம பட்ட வலி அப்படி அதனால நான் ஈஷியா நம்பல...ஆனா நேத்து நடந்த இன்சிடென்ட் க்கு அப்பறம் என்னால பூமிகாவ அப்படி தப்பா நினைச்சு சந்தேகப் பட மனசு வரலைன்னா…" என்க,


"ம்ம் அது உண்மை தான் விஹான் அப்படி அவ தப்பானவளாவோ இல்ல நமக்கு கெடுதல் பண்ண நினச்சியிருந்தால தன்னை காயப்படுத்தி கிட்டு நேத்து அகல காப்பாத்துற அளவுக்கு போயிருக்கமாட்டா!!…

ஷி இஸ் இன்னசென்ட் எந்தவித தப்பான நோக்கத்தோடும் அவ அகல் கிட்ட பழகலன்னு நேத்தே எனக்கு புரிச்சுடுச்சு...ஷோ நம்ம இனி அவுங்க ரெண்டு பேரும் பழகறத நினச்சு டென்ஷன் ஆக வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்" என,


"ஆமாண்ணா இனி முக்கியமா நான் டென்ஷன் பட தேவையே இல்ல" என சிறு சிரிப்புடன் கூறினான் விஹான்.


மரணம் நிகழும்......
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவணை முறையில் காதல் (மரணம்) நிகழும் 8






வேர்க்க விறுவிறுக்க இரண்டு கைகளிலும் பெரிய பெரிய பைகளுடன் வீட்டினுள் நுழைந்தான் சத்யா.


உள்ளே நுழைந்தவன் அங்கிருந்த சோபாவில் அனைத்தையும் வைத்து விட்டு "தொப்" என்று அமர்ந்தவன்,

"ஆச்சி.." என சத்தமிட்டு கற்பகத்தை அழைத்தான்.


அவனின் சத்தத்தை கேட்டு கையில் மோருடன் வந்தவர் அவனிடம் அதை கொடுத்து விட்டு அவன் கொண்டு வந்த பைகளை ஆராய ஆரம்பித்தார்.


"நீ சொன்ன சாமான் எல்லாம் வாங்கியாச்சு எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்க.. ஆமா சித்தி எங்க நா வந்து இவ்ளோ நேரம் ஆகுது இன்னும் ஆளைக் காணோம்" என்க,


"இவ்ளோ நேரம் டிவி. பாத்துட்டு தான்டா இருந்தா இப்ப தான் தூங்க போனா ஏலேய் எங்கடா நான் கேட்ட அந்த *****க்ரீம்மு???"


"இந்தா கிழவி உனக்கு எதுக்கு இப்ப அந்த க்ரீம்"


"ஏண்டா அத போட்டாதான் மூஞ்சில இருக்கிற சுருக்கம் எல்லாம் மறைச்சிரும்னு டி.வி. ல அந்த பிள்ளை சொல்லுச்சே...பாரு எனக்கு கூட கொஞ்சமா முகத்துல சுருக்கம் இருக்கு அதுக்கு தான் வாங்கிட்டு வர சொன்னேன்" என்க,


"ஆச்சி என்ன லொள்ளா?? இத்துணுண்டு சுருக்கமா இருக்கு உன் மூஞ்சில ஒரு இந்தியா மேப்பையே வச்சிருக்க" என,


"பேச்சை குறை டா வாங்கிட்டு வந்தியா இல்லையா?? அத மட்டும் சொல்லு"


"வாங்கியாச்சு...வாங்கியாச்சு" என்றவாறே தன் சட்டை பையினுள் இருந்து எடுத்து கொடுத்தான்.


"இத முன்னாடியே கொடுக்கிறதுக்கு என்ன அத விட்டுட்டு வியாக்கானம் பேசிட்டு திரியிற" என,


"ம்ம்ம்..எல்லாம் என் நேரம் கிழவி அது சரி அந்த பூலோக தேவி!!!! பூமி மாதா!!! போன் ஏதும் பண்ணாலா??"


"நேத்து பண்ணா ஏதோ அவ பாஸ் வீட்டு விசேஷத்துக்கு போறேன் நைட் வர லேட் ஆகும் அதனால காலையில பண்ணுறேன் சொன்னா காலையில போய் மதியம் கூட வந்துருச்சு இன்னும் போன காணோம்"


"சரி நான் பண்ணி பாக்குறேன்" என்றவன் பூமிகாவிற்கு அழைக்க…



அதே நேரம் பூமிகாவும் சத்யாவிற்கு அழைக்க போன் எடுத்தவள் இவன் அழைக்கவும் ஏற்று பேச ஆரம்பித்திருந்தாள்.


"ஹாலோ...பூமிகா"


"------------------------?"


"ம்ம்ம் நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்..நீ எப்புடி இருக்க??"


"------------------------"



"சித்தி படுத்துட்டு இருக்காங்க, ஆச்சி இங்க தான் பக்கத்துல இருக்கு சரி நீ இப்ப எங்க இருக்கா??"


"-----------------------"



"ஏன்???அங்க இருக்க ஆபிஸ் போகலையா??? ஆபிஸ் போகலனாலும் ஹாஸ்டலுக்கு போக வேண்டியது தான?"


"--------------------"


"என்ன பூமி சொல்ற உடம்புக்கு என்ன??"


"----------------------"


"இழுக்காமா விஷயத்த சொல்லு பூமி மா"


"---------------------"


"என்ன பூமி சொல்ற கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான கைய கிழிச்சுகிட்டு வந்த..இப்ப மறுபடியும் என்ன பண்ணி வச்சிருக்க??"


"------------------------"


"அறிவு இருக்காடி உனக்கு!! ஏற்கனவே கைய ஒடிச்சிட்டு வந்தது பத்தாதா?? உன் மனசுல என்ன பெரிய தியாகின்னு நினப்போ??? உனக்கு ஏதும் ஆகியிருந்தா என்ன பண்ணிருப்ப?? இப்ப எப்புடி இருக்கு காயம்??"


"------------------------"


"மண்ணாங்கட்டி ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்ணிருப்ப..நீ வை போன நா நைட் கிளம்பி அங்க வரேன்"


"-------------------------"


"சரி சரி நா வரல தாயே நீயே சமாளிச்சுக்கோ!!!ஆவுன்னா இத சொல்லி ஆப் பண்ணிடு உனக்கு போய் பூலோக தேவின்னு போர் வச்சாரு பாரு எங்க மாமா அவர சொல்லணும்!!!சரியான அவசர குடுக்கை எதுலயும் பொறுமைகிறது கொஞ்சம் கூட கிடையாது"


"-------------------"


"சிரிக்காத டி வீடு ஏதும் பாத்தியா உனக்கு பிடிச்சிருந்ததா??"


"------------------"


"சரி விடு இன்னும் கொஞ்சம் பெட்டரா கிடைக்குதான்னு பாப்போம் எத்தன நாள் அங்க இருப்ப?"


"----------------"


"ம்ம்ம்...மருந்து எல்லாம் கரக்ட் டைம்க்கு எடுத்துக்கோ...இனியாச்சும் பத்திரமா இரு சரியா??"


"---------"


"சரி நான் வைக்கிறேன்" என்றவன் போனை வைத்து விட்டு கற்பகத்தை பார்க்க அதிர்ந்து விட்டான்.


சற்று முன் அவன் வாங்கி வந்த க்ரீம்மை முகம் முழுவதும் பூசி கொண்டு,

"என்னாவாம் அந்த சில்வண்டுக்கு" என கேட்டவரை முறைத்து பார்த்தவன்,


"இங்க அவன் அவன் என்ன நிலைமைல இருக்கான்னு தெரியாமா??இப்ப இது உனக்கு அவசியமா ஆச்சி" என பல்லை கடிக்க….


"விஷயத்த சொல்லுடா இப்பவும் வளவளன்னு பேசிட்டு இருக்க"


"ஆங்….உன் பேத்தி அவ பாஸோட பொண்டாட்டியா நெருப்புல இருந்து காப்பாத்த போய் இரண்டும் கையிலயும் காயம் ஆகி கட்டு போட்டு உக்காந்திருக்கலாம்.. போதுமா??"


"அவளுக்கு வேற வேலை கழுதை இல்ல...எப்ப பாத்தாலும் எதையாச்சும் இழுத்துட்டு வருவா….நீ பாக்க வரன்னு சொன்னதுக்கு என்ன சொன்னா?? அத சொல்லுடா முதல்ல"


"நா அவ கிட்ட திட்டு வாங்குறதுல உனக்கு அவ்ளோ குஷி...வேற என்ன சொல்லுவா வழக்கமா சொல்லுற டயலாக் தான் நான் ஒண்ணும் சின்ன பிள்ளை இல்ல எனக்கு என்ன பாத்துக்க தெரியும் உன்ன நம்பி தான நான் அம்மாவ அங்க விட்டுட்டு வந்தேன் இப்புடி கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம இங்க வரேன்னு சொல்லுற…. அப்புடின்னு தான் சொன்னா"


"சரி அத விடு இப்ப எப்புடி இருக்காம் அவளுக்கு வீடு பாத்துட்டாலாமா??"


"டாக்டர் கிட்ட காட்டி கட்டு போட்டு இருக்கலாம் அவளுக்கு சரியாகிற வரைக்கும் அவளோட எம்.டி. அங்கயே தங்கிக்க சொல்லி வேண்டிக்கிட்டாராம் அதனால அங்க இருக்கா….வீடு ஒண்ணும் அவளுக்கு பிடிக்கலையாம் இந்த வாரம் வேற வீடு என் பிரண்ட் காட்டுறேன்னு சொல்லிருக்கானாம்" என்ற போதே அவனின் அழைப்பேசிக்கு புது நம்பரில் இருந்து அழைப்பு வர எடுத்து பேசினான்.


"ஹாலோ யாரு???"


"---------------------------

----------------------"


எதிர்முனையில் என்ன சொல்லப்பட்டதோ அதை கேட்க கேட்க இவனின் முகம் இறுக ஆரம்பித்தது.


பேசி முடித்தவன்

"ஆச்சி" என அழுத்தமாக அழைக்க,


அவனின் அழைப்பில் விஷயம் பெரியது என ஊகித்தவர்,

"என்ன சத்யா??ஏதும் பிரச்சனையா??"


"அந்த நாதாரி மாரிப் பய இப்ப புதுசா ஒரு வீட்டை வாடகைக்கு பிடிச்சு அடிக்கடி போயிட்டு வர இருக்கானாம்" என்க,


"ச்சீ விடுடா அந்த நாயோட புத்தி நமக்கு தெரிஞ்சது தான?எங்கேடோ கெட்டு ஒழியட்டும்"


"இல்ல ஆச்சி இந்த தடவ தாலி கட்டி குடி வச்சிருக்கானாம் அரசல் புரசலா பேச்சு வந்துட்டு இருக்காம்" என்றான் இறுகிய குரலில்.


அவன் சொன்னதை கேட்டு

"என்னடா சொல்லுற?? உண்மையாவா??" என அதிர்ந்து கேட்க,


"அப்படித்தான் பேசிக்கிறாங்களாம் ஆச்சி"


"அப்பாடி இப்பயாச்சும் நம்ம பொண்ணு வாழ்க்கையில் இருந்து அந்த பீடை ஒழிச்சதே அதுவோ போதும் அவன் தாலி கட்டுனா என்ன கட்டலைன்னா நமக்கு என்ன!! நம்ம பொண்ணு வாழ்க்கையை கெடுக்காம இருந்தா சரி...பாவி மக அன்னைக்கு அநியாயமா கல்யாணம்ன்ற பேர்ல நம்ம புள்ள வாழ்க்கையையே கெடுத்துட்டா அந்த சிவகாமி இனியாச்சும் என் பிள்ளைக்கு நல்ல காலம் வந்தா சரி"

என்க,


"அப்படி அவன் தாலி கட்டுன விஷயம் மட்டும் உண்மை யா இருந்துச்சு!!!!என் கையால தான் அவனுக்கு சாவு!!!! எவ்வளவு தைரியம் இருக்கணும் அவனுக்கு…நம்ம புள்ள வாழ்க்கைய ஒன்னும் இல்லாம ஆக்கிட்டு இவன் இஷ்டத்துக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா கூத்தடிப்பானாமா??


அன்னைக்கு நம்ம புள்ள மேஜர் கூட இல்ல ஆச்சி குழந்தை பதினஞ்சு வயசு குழந்தைய ஆத்தாளும் மகனும் என்னன்னமோ டிராமா பண்ணி அந்த குடிகார நாயி கல்யாணம் பண்ணிக்கிட்டான்.


அதை தடுக்க முடியாத கையாலாகாத நிலைமைல நின்னுட்டு இருந்தேன். அத நெனைக்க நெனைக்க...இப்பவே அவன கொல்லணும்ன்ற வெறி வருது ஆச்சி…. நம்ம புள்ள அனுபவிச்ச வலி வேதனைக்கு எல்லாம் கண்டிப்பா அவனுக்கு தண்டனை உண்டு….அவன அப்படியே சும்மா நான் விட்டுட மாட்டேன் இப்போதைக்கு நம்ம புள்ளைய எப்படியாவது அந்த சாக்கடை குடும்பத்துல இருந்து வெளிய கொண்டு வந்துடனும் ஆச்சி...எவ்வளவு சீக்கிரம் அத பண்ணுறமோ அவ்ளோ நல்லது" என,


"எல்லாம் அந்த ஆண்டவன் கையில தான் இருக்கு அவரு மனசு வச்சா எல்லாம் நல்லதாவே நடக்கும்" என்ற கற்பகம் சமையலை கவனிக்க சென்று விட


".சரி எனக்கு நேரமாகுது நாளைக்கு வரேன் பாத்துக்கோ" என்றவன் விடை பெற்று சென்று விட்டான்.


********************


அகல்விழி சொன்னது போல் பூமிகாவை அவளது ஹாஸ்டலிற்கு மாலை அழைத்து சென்று அவளது உடமைகளை எடுத்து கொண்டு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.


"இப்ப ஒரு தடவ டாக்டர் கிட்ட காட்டிட்டு போகலாமா பூமிகா வலி ஏதும் இருக்கா??" என கேட்டாள் அகல்விழி.


"இல்ல மேம் இப்ப வலி இல்ல அதான் டேப்ளட்ஸ் தந்துருங்காங்கள...ஹாஸ்பிடல் போக தேவையில்ல மேம் வீட்டுக்கு போய் காயத்துக்கு டிரஸ்ஸிங் பண்ணா போதும்" என,


"சரி பூமிகா பண்ணிக்கலாம்…" என அவள் சொல்லும் போதே வீடு வந்து விட தங்களது பேச்சினை முடித்து கொண்டனர்.


"நீ போய் ரூம்ல இரு பூமிகா நான் டிரஸ்ஸிங் பண்ண தேவையானது எல்லாம் எடுத்துட்டு வரேன்"


"ரூம்லயே அடைச்சிருக்குறது ஒரு மாதிரி இருக்கு மேம் நான் கொஞ்ச நேரம் வெளியே உட்காந்திருக்கேனே" என்க,


"சரி உட்காரு நான் வந்துடுறேன்" என்ற அகல் உள்ளே சென்று விட,


இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு தர்ஷிகாவும் அவளது தாயும் அங்கே இருக்க…


அவர்களுக்கு அருகே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவள் நளினியை பார்த்து புன்னகைக்க,


பதிலுக்கு புன்னகைக்காது அவளின் உடைகள் அடங்கிய பேக்கை பார்த்தவர்,

"என்னம்மா எத்தனை நாளைக்கு இங்கயே டேரா போடுறதா எண்ணம்??" என்க,


அவரின் கேள்வியில் திகைத்து போய்,

"என்ன மேம் கேட்டிங்க?" என்க,


"இல்ல எத்தன நாள் இங்க தங்குறதா எண்ணம்னு கேட்டேன் " என நக்கலாக கேட்க,


அவரின் நக்கலை உணர்ந்தவள்,

'ச்சே பொண்ணு மாதிரி தான அம்மாவும் இருப்பாங்க' என நினைத்தவள்,

"காயம் சரி ஆனதும் கிளம்பிடுவேன் மேம்" என இறுகிய குரலில் சொல்ல,


"ஆனா நீ கொண்டு வந்த திங்க்ஸ்ஸ பாத்தா ஒரு மாசத்துக்கு தாங்கும் போலயே" இடை புகுந்தாள் தர்ஷிகா.


இதற்கு ஏதேனும் பதில் பேசுவாள் என அவர்கள் எதிர்பார்க்க அவர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டவள் பதில் பேசாது அடுத்து அவர்கள் பேச்சை வளர்க்க வாய்ப்பு கொடுக்காமல் பூமிகா அமைதியாகி விட,


அவள் பேசாமல் போனதும் நளினியே பேச்சை ஆரம்பித்தார்,


"இந்தாம்மா பொண்ணே உனக்கு அடிபட்டது உங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கு தெரியுமா??நீ இங்க தங்குறேன்னு சொன்னதுக்கு உங்க வீட்டுல எதுவுமே சொல்லலியா என்ன??" என்றவர் அவளின் பதிலை எதிர்பாராமல்,


"ம்ம்ம்...அந்த காலத்துல எல்லாம் சொந்தக்காரங்க வீடேன்னாலும் வயசு புள்ளைகள எல்லாம் இப்படி தங்க விட மாட்டாங்க ஏன்?? நானே இதுவரைக்கும் என் பொண்ண அப்படி தங்க விட்டதுல ஆனா பாரேன் உங்க வீட்டுல முன்ன பின்ன பாக்காத ஆளுங்க விட்டுல கூட தைரியம் தங்க விட்டு இருக்காங்க..எனக்கெல்லாம் இந்த தைரியம் வராதுப்பா" என இரட்டை அர்த்தங்களில் அவர் பேச ஆரம்பிக்க….


பூமிகா ஏதும் பேசாமல் பொறுமையாக அகல்விழியின் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்.



"என் அண்ணன் பசங்களுக்கு சூதுவாது தெரியாது...எல்லாரையும் சீக்கிரமே நம்பிடுவாங்க...இப்ப உன்னையே எடுத்துக்கோ நீ பண்ண உதவிக்கு ஹாஸ்பிடல்ல காட்டிட்டு மருந்து செலவு எல்லாம் ஏத்துகிட்டு உன்ன ஹாஸ்டல்லயே விட்டருக்கலாம்….ஆனா அப்படி பண்ணாமா உன்ன இங்க ஒரு வாரம் சும்மா உட்காரு வச்சு கவனிச்சுகிறாங்க...இதுல இருந்தே தெரியலையா அவங்க நல்ல மனசு…. என்ன பண்ணுறது யார் யாரோ எல்லாம் என் அண்ணன் வீட்டுல உட்கார்ந்து ஓசி சோறு திங்கனும்னு விதி இருக்கு" என்க,


அதுவரை பொறுமை காத்தவள் அவரின் ஓசி என்ற வார்த்தைகளில் கோபம் தலைக்கேற எங்கே அங்கே நின்றால் வார்த்தைகளை விட்டு விடுவோமோ என அஞ்சிய பூமிகா அங்கிருந்து வெளியேறி தோட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.


"என்னம்மா நீ பேசுன பேச்சுக்கு பைய தூக்கிட்டு ஹாஸ்டலுக்கே போயிடுவான்னு பாத்தா...நகர மாட்டிங்கிறாலே…" என்றாள் தர்ஷிகா.


"இப்ப தான ஆரம்பிச்சிருக்கேன் இதுக்கே அவ அந்த அகல்விழி கிட்ட ஹாஸ்டல் போறேன்னு சொல்லுவா பாரு" என்க,


"உண்மையாவே சொல்லுவாளா??"


"அது எல்லாம் சொல்லுவா அவ ரோஷக்காரியா தெரியிற!!!! இப்பயும் ரோஷப்பட்டு தான் எழுந்து போயிருக்கா நா பேச பேச அவ முகத்த பாக்கணுமே அப்ப இறுகி போய் இருந்தா!!!அவளேோறேன்னு சொன்னா கூட இங்க இருக்குறதுங்க விடாதுங்க…..நம்ம பேசி பேசியே தான் அந்த பூமிகாவே கோபப்பட்டு போற மாதிரி பண்ணணும்" என்றார்.


அந்நேரம் வெளியே வந்த அகல்விழி பூமிகாவை காணாது,

"எங்க சித்தி பூமிகா??" எனக் கேட்க,


"அது என்னமோ தெரியல இங்க தான் இருந்தா நான் பேசிட்டு இருக்கேன் அதுக்கு எதுவும் பதில் சொல்லாமா எந்திரிச்சு வெளியே போய்ட்டா...கொஞ்சம் கூட மரியாதையே தெரியல அந்த பொண்ணுக்கு" என்றார் நளினி.


"கார்ல வரும் போதே தலை வலிக்குதுன்னு சொல்லிட்டருந்தா அதான் நீங்க பேசுறத கவனிச்சிருக்க மாட்டா!!! " என பூமிகாவிற்கு ஆதரவாக பேசியவள் அவளை தேடி வெளியே சென்று விட்டாள்.


வெளியே தோட்டத்தில் அமர்ந்திருந்த பூமிகாவின் அருகில் சென்று அமர்ந்த அகல்விழி ஏதும் பேசாது அவளின் கையை எடுத்து காயத்திற்கு டிரஸ்ஸிங் செய்ய ஆரம்பித்தாள்.


அவள் முடிக்கும் வரை பொறுமை காத்த பூமிகா,


"மேம் நான் ஹாஸ்டலுக்கே போயிடுறேன் மேம் எனக்கு இங்க அன்கம்பர்டபிளா பீல் ஆகுது இங்க இருக்க முடியும்னு தோணல!!" என அப்போதும் அவர்கள் பேசியதை சொல்லாது மறைத்தாள்.


"ஐயம் சாரி பூமிகா….சித்தி பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.." என்க,


"மேம் உங்களுக்கு...எப்புடி"


"எனக்கு தெரியும் பூமிகா அவுங்க பேசுனத நான் கேட்டுட்டு தான் இருந்தேன். அவுங்க அப்படி தான் அவங்கள மாத்த யாராலயும் முடியாது...அவங்க பேசும் போது நான் இடையில வந்துருந்தா இன்னும் ஜாஸ்தி பேசி ஆதேஷ் வரைக்கும் இந்த விஷயத்த பேசி பெருசாங்கிடுவாங்க அதனால தான் அமைதியா இருந்தேன்


ப்ளீஸ் நீ அவுங்க பேசுறத எல்லாம் காதுல வாங்கிக்காத எனக்காக உன் காயம் சரியாகுற வரைக்கும் இங்க இரேன்...நான் இனி அவங்க உன்ன பேசாத மாதிரி பாத்துக்கிறேன்" என்க,


"சரி மேம் நா அத நினைக்கல விடுங்க ஆமா யாரு மேம் அவுங்க??" எனக் கேட்டாள் பூமிகா.


”அவுங்க ஆதேஷோட அத்தை பூமிகா தர்ஷிகா அவுங்க பொண்ணு….என் மாமனாரோட சித்தி பொண்ணு தான் நளினி அத்தை"


"ஓ...ஓ….சொந்த தங்கச்சி இல்லையா நான் கூட அவுங்க பேசுனதுல சொந்த தங்கச்சின்னு நெனச்சேன்..ஏன் மேம் எனக்கொரு டவுட் என்னாயே இப்புடி பேசுறாங்கன்னா அப்ப உங்கள??" என கேள்வியாம அவள் நிறுத்த


"அது எல்லாம் ஜாடை மாடையா நிறைய பேசுவாங்க சில சமயம் நேரிடையா கூட பேசியிருக்காங்க ஆனா அதை எல்லாம் நான் காதுல வாங்கிக்க மாட்டேன் அப்படி வாங்கிகிட்ட குடும்பத்துல நிம்மதி இருக்காது பூமிகா….எப்படி இருந்தாலும் அவுங்கள பாத்துக்கிற கடமை எங்களுக்கு இருக்கு அத என்னைக்குமே நாங்க விட போறதில்ல அப்பறம் எதுக்காக சண்டை போட்டுக்கிட்டு வீணா பிரச்சனை பண்ணணும் சரி வா தோட்டத்த சுத்தி ஒரு வாக் போகலாம்" என


இருவரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர்.


"உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க மேம் கேட்க ஆர்வமா இருக்கு" என நடந்து கொண்டே பூமிகா வினவ,


சிறிதாக புன்னகைத்த அகல்விழி,

"அது ஒண்ணும் அவ்ளோ பெருசு இல்ல பூமிகா...என் ஊரு தென்காசி பக்கத்துல இருக்கிற குற்றாலம் அப்பா எங்க ஊரு நாட்டாமை….ஆதேஷ் சின்ன டிரிப்புக்காக அங்க வந்துருந்தாரு வந்த இடத்துல தான் என்ன பாத்துட்டு பிடிச்சுப் போய் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு தான் கேட்டாரு….நான் தயங்கவும் அப்பா கிட்ட வந்து பொண்ணு கேட்டாரு ஆனா அப்பா சம்மதிக்கல அதோட அவர அடிச்சி அசிங்கபடுத்தி அனுப்பிச்சிட்டாரு………

ஏற்கனவே அவர எனக்கு பிடிச்சிருந்தது இத புரிஞ்சிக்காமா அப்பா வேற கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணவும் வேற வழி இல்லாமா வீட்ட விட்டுட்டு வெளியே வந்துட்டேன் அப்பறம் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அப்பறம் இங்க கூட்டிட்டு வந்துட்டாரு அவ்ளோ தான் எங்க லவ் ஸ்டோரி முடிஞ்சது" என நடந்த உண்மையை மறைத்து பொய் கூறினாள் அகல்விழி.


ஏனோ பூமிகாவிடம் நடந்த உண்மையை சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை.

ஆனால் உண்மையை அன்றே சொல்லி இருக்கலாமோ என அகல்விழி வருந்தும் நாள் விரைவில் வரும் என்பதை அறியாது போனாள் அவள்


சிறிது நேரத்தில் யாஸ்மினி பள்ளி முடிந்து வந்து விட மூவரும் சற்று நேரம் தோட்டத்தில் நடந்தவர்கள் பின் வீட்டினுள் சென்று விட்டனர்.



இரவின் நிசப்தத்தில் பூச்சிகளின் ரிங்காரத்தில் புது இடம் என்பதாலும் உறக்கம் வராமல் தவித்த பூமிகா வெளிக்காற்றை அனுபவிக்கும் பொருட்டு தனதறையில் இருந்த வெளியேறி தோட்டத்திற்கு சென்றாள்.


இரவு நேரம் என்றாலும் வாட்ச்மேன் இருந்ததால் பயமின்றி தோட்டத்திற்குள் இறங்கினாள்.


குளிர் காற்று சுகமாக உடலை தழுவ தான் அணிந்திருந்த துப்பாட்டாவை இரு பக்கமும் போர்த்தி கொண்டு நடை பயின்று கொண்டிருந்தாள்.



அந்நேரம் வரை சில முக்கிய கோப்புகளை பார்வையிட்டு கொண்டிருந்த விஹான் அதனை முடித்து விட்டு தூங்க சென்றவன் அங்கிருந்த ஜன்னலை மூட சென்ற நேரம் தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்த பூமிகாவை கண்டவன்,


'இந்த அன்டைம்ல தூங்காமா என்ன பண்ணுற' என நினைத்தவன் அவளிடம் பேசும் பொருட்டு அவளை தேடி சென்றான்.


"பூமிகா" இரவின் நிசப்தத்தை கிழித்து கொண்டு வந்த சத்தத்தில் பதறாது நிதானமாக குரல் வந்த திசையில் அவள் திரும்பி பார்க்க,


"தூங்கலையா பூமிகா??" என்றவாறே வேக நடையில் அவளருகே வந்தான் விஹான்.


"இல்ல சார் தூக்கம் வரல அதான் சும்மா கொஞ்சம் நேரம் நடக்கலான்னு வந்தேன்"


"புது இடம்னால தூக்கம் வரலையா??"


"மே பி இருக்கலாம் சார் நீங்க இன்னும் தூங்கலையா??"


"ஒரு பைல் பாத்துட்டு இருந்தேன் லேட் ஆயிடுச்சு சரி தூங்கலாம்னு நினைக்கும் போது தான் ஜன்னல் வழியாக உன்ன பாத்தேன் " என


"அச்சோ!!என்னால தான் தூங்காம இருக்கீங்க சார்.. நீங்க போங்க சார் எனக்கு பயமில்லை கொஞ்ச நேரம் கழிச்சு நான் தூங்க போய்கிறேன்" என்க,


"இருக்கட்டும் நான் தூங்கவும் இன்னும் நேரம் ஆகும் உனக்கு டிஸ்டபர்ன்ஸ் இல்லன்னா நானும் கூட நடக்கலாமா?"


"அப்படி எல்லாம் இல்லை சார் வாங்க போகலாம்"


இருவரும் சிறிது நேரம் ஏதும் பேசாமல் குளிர்ந்த காற்றை அனுபவித்தபடியே நடை பயின்றனர்.



"அப்பறம் உன் ஃபேமிலி பத்தி சொல்லேன் பூமிகா..நீ தமிழ் நாடுன்னு மட்டும் தான் தெரியும் அது கூட உன் அப்ளிகேஷன்ல இருந்தது அத பாத்து தான் அக்சப்ட் பண்ணேன் உன் ஊர் எது??"


"சென்னை தான் சார் பேமிலிய பத்தினா என்ன சொல்றது..நா அம்மா ரெண்டு பேர் தான் அப்பா இல்லை இறந்துட்டாரு!!" என்க,


"ஓ..ஐயம் சாரி பூமிகா..இதுக்கு முன்னாடி எங்க வேலை பார்த்த ஏன் அங்க இருந்து இங்க வந்த??"


"நீங்க ஏன் சார் சாரி சொல்றிங்க சென்னையில் ஒரு ஸ்கூல்ல வேலை பார்த்து கிட்டு இருந்தேன்..குடும்ப சூழ்நிலையால் ஒரு டிகிரி மட்டும் எப்படியோ தட்டு தடுமாறி முடிச்சேன்..அத வச்சு தான் வேலை பாத்துட்டு இருந்தேன் திடீர்னு ஒரு நாள் வேலையை விட்டு நிப்பாட்டிட்டாங்க அப்ப தான் உங்க கம்பனி விளம்பரம் பாத்தேன் ஸ்கூல் படிக்கும் போது எனக்கு ஹிந்தி தான் செகண்ட் லாங்க்வேஜ் ஷோ தைரியமா அப்ளை பண்ணிட்டேன்"


"அப்போ உங்க அம்மா எங்க இருக்காங்க??"


"அங்க ஊர்ல தான் இருக்காங்க"


"உன் கூடவே கூப்பிட்டுக்க வேண்டியது தான பூமிகா"


"அந்த பிளான்ல தான்‌ சார் வந்தேன் ஆனா வீடு எதுவும் செட் ஆக மாட்டிங்குது அதனால லேட் ஆகுது."



"என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல பூமிகா...நான் ஏற்பாடு பண்றேன்"


"ம்ம்ம் சரிங்க சார்" என்றாள்.


பின் இருவரும் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து பேசினர் சில சமயம் மௌனமாக இருந்து அந்த நிமிடத்தை கிடந்தனர்.



"போதும் பூமிகா லேட் நைட் ஆகிடுச்சு வா போகலாம் இதுக்கு மேல இங்க இருக்குறது சேப் இல்ல" என்றவன் முன்னே நடக்க அவனை பின் தொடர்ந்தாள் பூமிகா.


இருவரும் தங்கள் அறைக்குள் செல்லும் நேரம் விஹான்,


"குட் நைட் பூமிகா" என்க,


பதிலுக்கு தானும்,

"குட் நைட் சார்" என்றவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


ஏனோ உறங்கும் போது இருவரின் இதழ்களிலும் அழகிய புன்னகை ஒன்று தோன்றியது.


மரணம் நிகழும்........



 
Status
Not open for further replies.
Top