நீ- 2
நடுங்கும் கரங்களோடு தன் தாயின் போனில் அழைப்பினை குரு மீண்டும் கனெக்ட் செய்த போது அதற்காகவே காத்திருந்ததை போல படபட என்று நடந்த விபத்தையும் அவர் எங்கே அட்மிட் செய்யபட்டிருக்கார் என்ற விபரத்தையும் கோர்வையாக அடுக்கிய நிகழினி பேசி மூடித்து மூச்சு விடுவதற்குள் போன் கீ என்ற இரைச்சலோடு கட் செய்யபட்டிருந்தது தெரிந்தது.
"யாரிது பேச முதலே கட் பன்னிட்டாங்களே.. ஏதோ வந்து சேந்தா சரி" என்று தோளை குலுக்கியவள் அப்போது தான் போன் ஆப் ஆக முதல் டிஸ் பிளேயை கவணித்திருந்தால்.
உள்ளே விபத்துக்குள்ளாகியிருந்த பெண்மணி புன்னகை முகமாய் அமர்ந்திருக்க அவரை அணைத்து கொண்டு தலைமேல் தலைசாய்தபடி ஒரு இளைஞனும் புண்ணகை முகமாய் அருகில் அமர்ந்திருந்தான்.
அவனை அவளுக்கு தெரியவில்லை ஆனால் அந்த பெண்மணியை.
"இந்த அம்மாவை பாத்திருக்கனே எங்கயோ" முகத்தில் ரத்த சொட்டியதாழும், அவரை கொண்டு வந்து சேர்க்கும் போது இருந்த பர பரப்பிலும் கருத்தில் பதியாத முகம் இப்போது தான் சிறிது சிறிதாக அவளுக்கு அடையாளம் தெரிந்தது.
போனை எடுத்து கூகிலில் சில கீ வேர்ட்சை அவள் தட்டியபோது அந்த விபரமும் கிடைத்தது.
ஜான்சி தீ அயர்ன் லேடி ஆப் இந்தியா என்று தேசிய ரீதியில் கருதப்படும் பெண்மணி என்று விசேடமாய் அவர் பெயரோடு அடிக்கோடு இடபட்டிருந்தது. இருபத்தி மூன்று வயதில் நடந்த ஒரு கார் விபத்தில் முதுகு தண்டில் ஏற்பட்ட எழும்பு முறிவோடு கால்களும் செயலிழந்து போன போதும், பிள்ளை பிறக்காது என்று கணவன் அவரை விட்டு விலகிய போதும் பெட் பேசண்டாக இருந்த தன்னை உடல் அளவிழும் மன அளவிழும் திடபடுத்தி கொண்டு வர்ணங்களால் மாயஜால ஓவியங்கள் பலதை தீட்டி அதனோடே தன்னை மற்றவர்கள் பரிதாபமாய் பார்க்க கூடாதென்ற வைராக்கியம் மிக, பல தொலைகாட்சி மற்றும் சர்வதேச நிகழ்சிகளை தொகுத்து வழங்குவது, இவன்ட் ஆர்கனைஸ் செய்வது என்று தன் வரவை பதிவு பன்னி கொண்டே வந்தவர். காலம் தாமதிக்காது அடுத்த இரு வருடத்திற்குள்ளையே ஆசிரமத்திலிருந்து மூன்று வயது குழந்தை ஒன்றை தன் பிள்ளையாய் தத்தெடுத்து சந்தோசமாய் வாழ்கையை ஆரம்பித்திருந்தவரின் அந்த மகன் இன்று குருநாதன் ஐ பி எஸ் போலிஸ் துறையில் துணை ஆணையாளராக சென்னையில் பணியாற்றுகிறான்.
என்று விக்கிபீடியாவில் இருந்த தகவலை சிறிதே வேக வேகமாய் படித்து பார்த்தவள் வியந்தபடி நிமிர்ந்த போது.
குரு வார்ட் கண்ணாடிக்குள்ளே அட் மிட் செய்ய பட்டிருந்த தாயை தவிப்போடு பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
"யாரிது" சட்டென்று எழுந்து அருகில் சென்று அவனது முகத்தை பார்தவளுக்கு இப்போது அடையாளம் தெரிந்தது இது அந்த ஜான்சி அவர்களின் மகன் குரு நாதன் என்று.
"நிகழிம்மா பைத்தனுக்கு பால் வாங்கி குடுத்துட்டேன், அப்பாவும் எம்புட்டு நேரமா தான் இங்கிட்டு அங்கிட்டுமா நடந்திட்டே இருக்கிறது அந்தம்மாவோட சொந்த காரங்க யாராச்சுக்கும் தகவல் சொல்லிட்டு கலம்புவோம் வா" என்று முன்னால் நின்ற குருவை கவணிக்காது படபட என்று பேசி கொண்டே போன அறிவுடை நம்பிக்கு.
"அப்பா அதெல்லாம் வந்திட்டாங்க, அந்தா நிக்குறாரே அவரு அந்தம்மாவோட பிள்ளை" என்று அவள் தானரிந்த விபரத்தை தகப்பனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து வந்து காவலதிகாரி ஒருத்தர்.
குருநாதனை கண்டு ஸ்சார் என்று சல்யூட் அடித்துவிட்டு பேச ஆரம்பிக்க அவனோ எதுவுமே கருத்தில் பதியாதவனாய் தாயை மட்டும் முடிக்கிவிட்ட பொம்மையை போல் அதே இடத்திலிருந்தபடி தவிப்போடு பாத்திருந்தான்.
சூழ் நிலை அறிந்த காவலதிகாரி அவனை விட்டு நிகழினி அறிவுடைநம்பி அவர்கள் புறம் வந்தவர்.
"நீங்களா இவங்களை இங்கே அட்மிட் செஞ்சது" என்றபடி அங்கு என்ன நடந்தது என்பதை கேட்டுக் குறித்து கொண்டவர்.
"இந்த ஆக்சிடன்ட் கேஸ் பத்தி எங்களுக்கு ஏதும் விபரம் தேவைபட்டாலோ, தெரிய வேண்டியோ இருந்தா நாங்க கூப்பிடும் போது நீங்க ஸ்டேசனுக்கு வந்து இந்த கேஸ் இன்வெஸ்டிகேசனுக்கு நீங்க கோப்ரேட் பன்னனும்".
"என்ன ஸ்சார் உயிருக்கு போராடுவங்களை கொண்டு வந்து அட்மிட் செஞ்சா , கேஸ் அது இது ஸ்டேசனுக்கு வந்துட்டு போங்கனுறீங்க , ஸ்சார் நாளைக்கு பின்ன வெளீல இருக்கவங்க என் பொண்ணை எதாச்சும் தப்பா நினைச்சா அவளுக்கு கல்யாணம் காட்சினு நான் பன்னி பாக்குறதில்லையா என்ன ?"
"ஸ்சார் இப்ப எதுக்கு டென்சனாகி பபிப்பிடுறீங்க, உங்க
பொண்ணுக்கோ இல்ல அவங்க பேருக்கோ இதனால எந்த பாதிப்பும் வராது ஜஸ் ஒரு பாமிலிட்டிக்கு தான்" சற்று பயந்திருந்த அறிவுடை நம்பிக்கு தெளிவு படுத்தி நம்பிக்கை கொடுத்து . "சரி உங்க ரெண்டு பேர் டீட்டெய்ல்சயும் சொல்லுங்க" என்று கேட்கவும் முதலில் தயங்கினாலும்.
எஸ்.அறிவுடை நம்பி ரிட்டையார் சிவில் இன்ஜினியர், அவ என் பொண்ணு நிகழினி இவெண்ட் மெனேஜர் A.N இவெண்ட் ஓர்கனைசிங் நூ சின்னதா கம்பணியை ரன் பன்றா.
இங்கே காவல் அதிகாரிக்கு தங்களை பற்றிய தகவல்களை இவர்கள் கொடுத்து கொண்டிருக்க, சிகிச்சையை முடித்த வெளியேறி டாக்டர் குருவோடு பேச ஆரம்பித்தார்.
"டோன்ட் வொரி குரு நவ் ஷீ இஸ் ஆல் ரைட், நா பாத்த வரைக்கும் உங்கம்மா மெண்டலி ஸ்டிரோங்கான வுமன் அப்பிடியிருக்க வேறு என்னாச்சுனு தான் தெரியலை கவணமா அவங்களை பாத்துக்கோங்க"
என்று அவனது தோலை தட்டி விட்டு டாக்டர் நகர்ந்துவிட தாயினருகே சென்றமர்ந்தவன் தலை வருடி அவர் கண்விழிக்க காத்திருந்தான்.
ஒன்றரை மணி நேரம் கழித்து கண்விழித்த ஜான்சி சிவந்த கண்களோடு எதையோ யோசணையோடு எண்ணிக் கொண்டு இலக்கற்று வெறித்திருந்த குருநாதனின் கன்னத்தில் கைவைக்க தன்ணுர்வு அடைந்தவன்.
"மீ எழுந்துட்டியா நீ, ரொம்ப பயந்திட்டேன் தெரியுமா , எல்லாம் என்னால தான் டின்னருக்கு என்னால வர முடியுமானு யோசிச்சப்ரமா என் பிளானை உனக்கு சொல்லிருக்கனும்"
"எனக்கு ஒன்னுமில்ல கண்ணப்பா டென்சனாகதே நீ"
"ம்ம்.. நீ ஒன்னும் இங்கையே இருக்க வேணாம் காலை ல டிஷ் ஜார்ஜ் பன்னி உன்னை கூட்டிட்டு போய்டலாமினு டாக்டர் சொன்னாரூ ஓகேயா என்று விட்டு என்று அவரின் கையின் மீது தலை சாய்திருந்தவனை.
"கண்ணப்பா நா வந்த வழீல *** ப்ரிஜ் சைட் மழையால ஈரலிப்பா இருந்திருக்கும் போல டிரைவர் காரீ ஸ்பீட்டை சரியா மேனேஜ் பன்னாம இருந்திருக்கானோ என்னமோ வண்டியேன் தடுமாற்றாமா எதுலயோ இடிபட்ட மாதிரி இருக்குனு அதிர்ந்து அசதியில கண்ண மூடியிருந்த நான் முழிச்சு பார்த்து என்ன ஆச்சு எதாச்சுனு நிதானிக்க முதலே நம்ம டிரைவர் திரு அந்த பக்கமா வண்டியை நிறுத்தாமலே ஓடிட்டு வந்தான்.
"என்னாச்சுடா நடந்தது என்னனூ விசாரிக்க முத லே நா இந்த அக்சிடன்டுக்கு காரணமில்லனூ பயந்த முகத்தோட சொன்னவன் தான் அடுத்த நொடி யோசிக்குறதுக்கு முதலே வண்டியை விட்டு குதிச்சுட்டான்"
"எனக்கு என்ன நடந்திச்சு ஏது நடந்திச்சுனு கொஞ்ச நேரம் ஒன்னுமே புரியலை, ஆனா ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்குமோனு மனசு பயந்திச்சு அவ்வளவு தான் அதுக்கப்ரமா நடந்தது எதுவும் ஞாபகத்திலே இல்லடா".
இப்போதும் அதை எண்ணி பயந்தவராய் சொன்ன ஜான்சியின் கண்ணத்தை கையிலேந்தியவன்.
"மீ நீ பயப்புடுற மாதிரி எதுவுமில்ல. பிரிட்ஜ் சைட்டிருந்த போலீஸ் பூத்தை இடிச்சிட்டு வலிக்கின வண்டியை கண்ட்ரோல் பன்ன தெரியாம அந்த இடியட் இப்படி பன்னட்டான், நீ இதையே யோசிக்காதே நாளைக்கு உனக்கு ஆர்ட் காம்படிசன் இருக்குல, நா தார சூப்பை குடிச்சிட்டு மருந்து சாப்பிட்டு தூங்கு என்றவனுக்கு.
பயத்திலும் துக்கத்திழும் தொண்டை அடைத்தது.
"ஷாக்சி உனக்கு என்னாச்சுடி?, நீ எங்கே இருக்க இப்போ?"
"உனக்கும்,செந்துவுக்கும் நடந்த இந்த விபத்துக்கு இந்த கார் மூலமா நாங்களும் ஒரு விதத்தில் காரணமா ஆகிட்டமோனு சொன்னா மீ யால, தாங்கிக்கொள்ள முடியுமா?" என்று பல்வேறு விடயங்கள் குருவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
**********************