தொண்டைமானுக்கு பெண்ணவளின் ஸ்பரிசம் அதிக போதையை கொடுக்க விழிகளை மூடிக் கொண்டான். அதுவும் அவனது மார்பில் படிந்த விரல்களில் ஏற்பட்ட மெல்லிய நடுக்கம் அவனை அதிகமாக மயக்கியது...
“கடவுளே கடவுளே...” என்று வேண்டிக்கொண்டே அவனது காட்டு தேக்கு தேகத்தில் தன் மெல்லிய விரல்களை படரவிட்டாள். அதற்கு மேல் செல்ல அவளுக்கு பெரும் தயக்கமாய் இருந்தது.
இதெல்லாம் அவளுக்கு மிகவும் புதிது. அவளது வீட்டில் அவளுக்கு கூட தலையில் எண்ணெய் வைத்துவிட்டுக் கொண்டது கிடையாது. பல்லவியின் தாய் ஜெயந்தி தான் இவளுக்கும் இவளின் தம்பி நரேன், தகப்பன் மூர்த்திக்கும் செய்து விடுவார். கூடவே பல்லவியின் அழகு குறையாமல் இருப்பதற்காக அதிக நேரம் பார்லரில் செலவு செய்ய விடுவார்.
பாதி நேரம் அவர்களை எல்லாம் வீட்டுக்கே வரவைத்து இவளுக்கு சேவகம் செய்ய வைப்பார். கண்ணின் இமைபோல பார்த்துக் கொண்டார் ஜெயந்தி. ஆனால் அதற்கு மாறாக அவளை பணம் காய்க்கும் இயந்திரமாக மாற்றினார்.
இன்னுமொரு வாரத்தில் மெட்ராஸ் பேஷன் ஷோ இருக்கு பல்லவிக்கு. இவளுக்கு வெறும் செட்யூல் மட்டும் தான் வரும். கமிட்மென்ட் குடுப்பது எல்லாமே ஜெயந்தி தான். கொஞ்ச நேரம் கூட ப்ரீயாக விடமாட்டார் அவளை. ஓடு ஓடு என்று ஓடவிட்டுக் கொண்டே இருப்பார்.
அப்படி பட்டவளை மசாஜ் செய்ய சொல்லி கொடுமை படுத்தினான் தொண்டைமான்.
அவளிடம் இருந்த தயக்கத்தை பார்த்து, “ம்ம்ம்” என்று அவனிடமிருந்து உறுமல் வெளியே வர அவளது கைகளில் இன்னும் நடுக்கம் கூடியது.
“சார்...” என்று அவள் பதறிப் போனாள்.
“நல்லா மூட் ஜேஞ்சாகுது.. இப்படியே இந்த ப்லோலையே போ” என்று இன்னும் சொகுசாக அமர்ந்துக் கொண்டான்.
அவனிடம் ஒரே ஒரு முறை பேசி பார்க்கலாம் என்று “சார்” என்று அவனது தவத்தை கலைக்க,
“ப்ச் பேசி பேசி என் மூடை ஸ்பாயில் பண்ணாதடி.. அப்புறம் பெட்ரூம்ல போய் தான் மசாஜ் பண்ண சொல்லுவேன்” என்று அவளை மிரட்டினான் ரவுடி. அதில் பக்கென்று ஆனது அவளுக்கு.
தொண்டை குழியை அடைத்துக் கொண்டு வர,
“தடிமாடு தடிமாடு... சின்ன பிள்ளைன்னு கூட இரக்கம் காட்டாம படுத்தி எடுக்கிறானே..” புலம்பியவள் அவனது மார்பில் கையை ஓட்டினாள்.
“ஹைய்யோ ஹைய்யோ... ஒரு பச்ச பிள்ளைக்கு இப்படியெல்லாமா சோதனை குடுப்பா இறைவா?” நொந்துப் போனவள் ஏனோ தானோ என்று அவனின் மார்பில் இருந்து வயிற்றுக்கு கைகளை நகர்த்தினாள்.
மிக மெதுவாக விரல் நுனியில் பட்டும் படாததுமாக அவள் வருடிவிட அந்த மெதுவான வருடலே தொண்டைமானுக்கு கிறக்கத்தை கொடுத்தது. கண்களை மூடி அந்த கிறக்கத்தை ஆழ்ந்து அனுபவித்தான்.
“செம்மடி” என்று கமெண்ட்ஸ் வேற சொல்ல பத்திக் கொண்டு வந்தது அவளுக்கு.
அந்த நேரம் “மிஸ்டர் தொண்டைமான்” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க, அவன் கொஞ்சம் கூட அசையவே இல்லை. பல்லவி தான் பட்டென்று அவன் மீதிருந்து கைகளை எடுத்துக் கொண்டாள். கூடவே அவனது மடியில் இருந்து எழுந்துக் கொண்டாள். அது வரை விழிகளை திறக்கதவன் இவள் கைகளை எடுத்துக் கொள்ளவும் மடியை விட்டு எழவும் விழிகளை படக்கென்று திறந்தான். அவனது அந்த செயலில் நெஞ்சு ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது.
கண்ணை திறப்பதில் கூட பயமுருத்த இந்த ஆளாலதான் முடியும் சாமி... என்று மனதுக்குள் படபடத்துப் போனாள் பல்லவி.
“நான் உன்னை எழுந்திரிக்க சொல்லலையே..” என்று சிவந்துப் போன விழிகளை உருட்டி அவளை கூர்ந்து பார்த்தான்.
“இல்ல.. அவங்க கூப்பிட்டாங்க அதான்” என்றாள்.
“உன்னைய கூப்பிட்டாளா என்னைய கூப்பிட்டாளா?” நறுக்கு தெரித்தார் போல அவன் கேட்க,
“உங்களை தான்..” என்று தலையை குனிந்துக் கொண்டாள் தவறு செய்த சிறுபிள்ளையாய்.
“ம்ம் அப்போ உன் வேலையை பாரு” என்று அதட்டல் போட்டான். அதில் மிரண்டுப் போனவள் மீண்டும் அவனின் மடியில் அமர்ந்து அவனது நெஞ்சை வருடி விட ஆரம்பித்தாள் உள்ளுக்குள் கடுப்புடன்.
“தொண்டைமான் இங்க என்ன நடக்குது?” என்று வந்தவள் கத்தினாள்.
“ப்ச் இப்போ எதுக்கு நீ கத்திட்டு இருக்க...” என்று காதை குடைந்துக் கொண்டான்.
“நீ செய்யிறது எதுவும் நல்லா இல்ல தொண்டைமான்... உனக்கு ஏதாவது வேணும்னா நீ என்னை தானே கூப்பிடனும். அதை விட்டுட்டு இவ யாரு... இவ எதுக்கு உன் மடியில உட்கார்ந்து இருக்கா... ஏய் முதல்ல எழுந்திரிடி அவர் மடியில இருந்து” என்று சக கிழத்தி சண்டை போல அவள் வரிந்துக் கட்டிக்கொண்டு வர,
“ஹலோ மிஸ் ஒரு நிமிடம்..” என்று தன்மையாக அவள் ஆரம்பித்து அவன் மடியை விட்டு எழப் பார்க்க அவளின் இடையில் இரண்டு பக்கமும் கைக்கொடுத்து இழுத்து மீண்டும் அவனது மடியில் அமர்த்திக் கொண்டவன்,
“உள்ள ரெண்டு பேர் படுத்து கிடக்குறானுங்க. அவனுங்களுக்கு போய் வைத்தியம் பாரு. அதை விட்டுட்டு இங்க வந்து உன் அதிகாரத்தை காட்டாத. நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்று கர்ஜித்தவன்,
“இன்னொரு முறை என் அனுமதி இல்லாம என் அறைக்குள்ள வர்ற வேலை வச்சுக்கிட்ட பிறகு உயிரோட இங்க இருந்து போக மாட்ட” என்று அப்பட்டாமாக மிரட்டியவன் சிவந்து வெறி ஏறிப்போன விழிகளால் பல்லவியை ஒரு பார்வை பார்த்தான்.
அவ்வளவு தான் பல்லவி பெட்டி பாம்பாய் சுருண்டுப் போய் விட்டாள்.
ஷீலாவின் முகம் கருத்துப் போனது.
“நான் அதுக்காக சொல்லல தென்பாண்டியன்” என்று அவள் விளக்கம் சொல்ல வர,
“வெளிய போ... நான் ரிலாக்ஸ் பண்ணிட்டு இருக்கேன்” என்றவன்,
“சேரா...” என்று ஒரு குரல் கொடுத்தான்.
“அண்ணன்” என்று ஒருவன் வந்து நின்றான்.
“எங்கடா போய் இருந்த... கண்டவளும் என் அறைக்கு வராளுங்க. இங்க நிக்காம எங்க புடுங்கப் போன” என்று எரிந்து விழுந்தான் அவனிடம்.
“இல்லன்னா தண்ணி குடிக்க சமையலறைக்கு தான் போய் இருந்தேன். அதுக்குள்ள இந்த பொண்ணு வரும்னு நான் எதிர்பார்க்கலண்ணா.. இதோ ஒரே ஒரு நிமிடம் ண்ணா கிளியர் பண்றேன்” என்று அவனிடம் பம்மியவன் ஷீலாவை பார்த்து முறைத்தான்.
“நீயா வெளிய வர்றியா? இல்ல பொணமா வெளிய வர்றியா?” என்று துப்பாகியை அவளின் நெற்றியில் வைத்தான் சேரன்.
அதை பார்த்து பல்லவிக்கு மயக்கமே வந்திடும் போல ஆனது. ‘அறையை விட்டு வெளியே போன்னு சொல்றதுக்கு கூடவடா துப்பாக்கியை தூக்குவீங்க.. படுபாவி பசங்களா’ என்று நொந்துக் கொண்டவளுக்கு தொண்டைமானின் மீது இன்னும் பயம் அதிகரித்தது.
“ம்ம் நீ என்ன வாயை பார்த்துக்கிட்டு இருக்க...? உனக்கும் கன்னை காட்டணுமா?” என்று தொண்டைமான் தன் மடியில் அமர்ந்து இருப்பவளின் காதில் மீசை முடி உரச முணகினான். அவனது அந்த நெருக்கமான ஸ்பரிசத்தில் இன்னும் அச்சப்பட்டுப் போனாள்.
“ஏன் இப்படில்லாம் பண்றீங்க... டான்ஸ் மட்டும் ஆடிட்டு பொயிடுறனே... நான் வேணா இதே மாதிரி செய்யிற ஆட்களை பார்த்து குடுக்கவா?” சின்ன பிள்ளையாய் அவள் கேட்க, அவளின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். அதில் கொஞ்சம் கூட கள்ளம் கபடம் எதுவுமே இல்லாமல் இருந்தது.
“என் தொடுகை பிடிக்கலையா?” என்று நேரடியாக கேட்டான்.
அவளுக்கு வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. பிடிக்கலன்னு சொன்னா சுட்டுடுவானோ என்று பயந்தவள் எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள்.
அதை கண்டு அவளின் மீது இன்னும் பார்வை அழுத்தமாய் படிந்தது. அவனது பார்வையில் இருந்த கூர்மையில்,
“உண்மையை சொல்லனும்னா எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு சார். அது தான்” என்றாள்.
“புதுசா இருக்கா? பிடிக்கலையா?” அழுத்தமாய் அவன் மேலும் கேட்டான்.
“எனக்கு சொல்ல தெரியல சார்..” என்றவளுக்கு உடம்பு மிகவும் சோர்வாக இருந்தது. அவளின் கண்கள் மூடி மூடி திறக்க,
“என்னடி கிறக்கமா இருக்கா?” என்று கேட்டான். அவனின் கை அவளின் இடையை இறுக்கிப் பிடித்து இருந்தது. ஒரு வேலை அதனால் வந்த கிறக்கமோ என்று எண்ணினான்.
“இல்ல சார்” என்றவளுக்கு தொக்கம் சுழட்டி எடுத்தது.
“என்னடி பண்ற?” என்று கேட்டவனின் தோளிலே சிறு பிள்ளையாய் தூங்கிப் போனாள்.
அவள் இப்படி தலை தொங்கி அவன் மீதே விழுந்தவளை புரியாமல் பார்த்தவன் பின் உதட்டை சுளித்து அவளை கைகளில் அள்ளிக் கொண்டவன் அவளை தன் மீது முழுமையாக சாய்த்துக் கொண்டு விழிகளை மூடிக் கொண்டான். முதல் முறை ஒரு பெண்ணின் ஸ்பரிசம். அதுவும் முழுமையாக...
ஆறடி ஆண் மகனை அந்த உணர்வுகள் என்னவோ செய்தது. அவனுக்கு இந்த உணர்வுகள் மீண்டும் மீண்டும் வேண்டும் என்பது போல தோன்ற படுக்கையில் கிடத்தி அவளின் மீது ஏறி படுத்துக் கொண்டான்.
இறுக்கி அணைத்து அவளின் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டு அவளின் வாசனையை நாசியில் உறிஞ்சியவனுக்கு என்னவோ நீண்ட நெடிய நாட்களின் தேடலை கண்டு அடைந்து விட்டதாக உணர்ந்துக் கொண்டான்.
“ம்ம்...” என்று மீண்டும் அவளின் வாசனையை நுகர்ந்தான். மீண்டும் மீண்டும் அவன் அதே வேலையை செய்ய,
“ப்ச் தூங்க விடாம என்ன செய்யிற டெடி.. ஒழுங்கா தூங்கு” என்ற பல்லவி தன் கழுத்தில் புதைந்து இருந்த முகத்தை சற்றே கீழ நகர்த்தி மார்பில் புதைத்துக் கொண்டாள்.
அவளின் வெற்று தோளில் கழுத்தில் புதைந்து இருந்த முகத்தில் அடர்ந்து இருந்த தாடியும் மீசையும் அவளுக்கு இம்சையை கூட்டியதில் உறக்கத்திலே கூச்சம் கொண்டவள் தான் எப்பொழுதும் கட்டி பிடித்து தூங்கும் பொம்மை என்று எண்ணி அவனது முகத்தை இழுத்து மார்பில் புதைத்துக் கொண்டாள்.
அவள் பொம்மை என்று எண்ணி அந்த செயலை செய்ய, ஆணவனோ உடலும் உயிரும் கொண்டவனாயிற்றே... பொம்மை அசையாமல் இருக்கும். ஆனால் தொண்டைமான் ஒரு இடத்தில் அசையாமல் இருப்பானா? அவனது முகத்தை பெண்ணவளின் நெஞ்சில் அழுத்தமாக புதைத்துக் கொண்டான்.
கூடவே தன் முகத்தை வைத்து அங்கும் இங்குமாய் அசைத்து திருப்ப தூக்கத்திலே பல்லவி உடல் முழுவதும் சிவந்துப் போனாள்.
பெண்ணவளின் மெல்லிய மென்மையான யாக்கையில் முற்றும் முழுதுமாக தொலைந்துப் போக பேராவல் கொண்டான் தொண்டைமான்.
படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே