அத்தியாயம் 1
“அம்மா அவளையெல்லாம் என்னால கண்ணாலம் கட்டிக்கிட முடியாது. வேற ஒரு நல்ல பொண்ணா பாரு” என்றான் பழமலை நாதன்.
“ஏண்டா அப்படி சொல்ற முகிலாம்பிகை எவ்வளவு அருமையான பொண்ணு தெரியுமா, அவளோட பழகி பார்க்காம அவளை முறைச்சிக்கிட்டே இருக்குறதுனலதான்டா அவளோட அருமை தெரியல, அவள மாதிரி ஒரு மருமக கிடைக்க புண்ணியம் பண்ணியிருக்கனும்டா” பழமலை நாதனின் அம்மா தன் மருமகளுக்காய் பேசினார்.
“அவளோட பழகி பார்த்தவரயிலும் போதும் சரியான சோம்பேறி அவப்பேச்சை முதல்ல விடு, அவளும் அவ மூஞ்சியும், என்னைய நல்லா பிடிச்சுக்கோ வீதி இனி மோடு பள்ளமா இருக்கும்” என்று எச்சரித்தபடி தன் இரு சக்கர வாகனத்தில் பயணமானார்கள்.
போன காரியம் முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவனின் பார்வை சுற்றும் முற்றும் அலசியது.
“என்னமோ சொன்ன உன் தம்பி பொண்ணு பெரிய பருப்பு பொறுப்புன்னு எல்லாம் அப்படி அப்படியே போட்டு வச்சுயிருக்கா ஒரு வேல பார்த்து வைக்கல. சரியான சோம்பேறி எந்த மூலைல படுத்து தூங்குறான்னு போய் பார்த்து அம்மணிக்கு சாமரம் வீசிவிடு”. என்றவன் சமையலறையை எட்டிப் பார்த்துவிட்டு
“ம்க்கும் சமைக்கக்கூட இல்ல, இந்த லட்ச்சனத்துல இவளை போய் நான் கல்யாணம் கட்டிக்கணுமாக்கும். போத்தா போய் தாலாட்டு பாடு உன் மருமக நல்லா தூங்கட்டும். தூங்கமூஞ்சி தூங்கமூஞ்சி ஒரு வேலைக்கும் லாயக்கு இல்ல. இன்னொரு முறை உன் தம்பி பொண்ணுக்கு வக்காலத்து வாங்கிகிட்டு என்னண்ட வந்த போறவு நடக்குறதே வேற” என்று திட்டிவிட்டு மாடிக்கு சென்றான்.
“ம்ஹும் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை, அவளோட அருமை உனக்கு இப்போ புரியாது. முகிலாம்பிகைக்கு வேற ஒரு நல்லா மாப்பிள்ளையா பார்த்து கல்யணம் பண்ணிவைக்க போறேன் அப்போ தெரியும்டா உனக்கு. போடா எடுபட்ட பயலே, ஏதோ இவன் மட்டும் தான் உலகத்துலேயே ஆம்பள மாதிரி பீத்திக்குறான். அவ படிச்ச படிப்பென்ன. இது பத்தாங்லசையே தாண்டல, அவ கால் தூசிக்கு சமமாக மாட்டான் பெருசா பேச வந்துட்டான்.” என்று ஆற்றாமையாக புலம்பினார்.
“ஏய் கிழவி வந்தேன்னு வச்சுக்க இடுப்பு எழும்ப முரிச்சுபோடுவேன் பார்த்துக்க” மாடியிலிருந்து குரல் வர,
“போடா போக்கத்தவனே கல்யாணம் பண்ணி அவ இடுப்பு எழும்ப ஓடிக்கிரத விட்டுட்டு என் இடுப்ப ஓடிக்கிரானாம். சரியான மாங்கா மடயண்ட நீ. சொன்னா ரோசம் மட்டும் போத்துக்குட்டு வருது.”
“கிழவி இப்ப நீ வாய மூடல உன் வாயில வசம்ப வச்சு தேச்சுபுடுவேன் பார்த்துக்க”
“நான் என்னத்தடா பார்க்குறது நீயே பார்த்துட்டு போ”
“என்னத்த பேக்குறது”
“ம்ம் என்ற மருமவளுக்கு எப்படியாப்பட்ட மாப்பிள்ளைய கொண்டுவறேன்னுதான்”
“நீ என்னத்தயோ பண்ணி தொல, ஆனா என்னய்ய மட்டும் உன்ற மருமவளோட கோர்த்து விட்டன்னு வச்சுக்கோ, அப்பறம் இருக்கு உனக்கு என் கையல தான் உனக்கு சாவு.”
“போடா டேய் முகிலாம்பிகைய கட்டிவை ஆத்தான்னு என் கால்ல விழ வைக்கல என்ற பேரு பருவதம் இல்லைடா”
“நெம்ப சந்தோஷம்” என்று நொடித்துவிட்டு போய்விட்டான்.
திரும்பிய பருவதம் முகிலாம்பிகை நிற்பதை கண்டவர் அவளின் முகத்தில் வழிந்த வியர்வையை தன் முந்தானையால் துடைத்துவிட்டு “என்னடி தங்கம் இப்படி வேர்த்திருக்கு, அப்படி என்ன பண்ண” பாசமாய் கேட்க
“அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை, மருத்துவமனைக்கு பொயிட்டு வந்தீங்களே வைதீயர் என்ன சொன்னங்க” என்று அவசரமாய் முகத்தில் புன்னகையை கொண்டு வந்தாள்.
“என்ன சொல்லுவாங்க காசை புடுங்க அதை இதை சொல்லுவாங்க நாம அதெல்லாம் காதுல போட்டுக்ககூடாது கண்ணு”
“ப்ச் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, ரத்த அழுத்தம் பார்த்தாங்களா, அதிகம் இருக்கா இல்ல கொஞ்சமாச்சும் குறைஞ்சிருக்கா. என்ன எழுதிருக்கங்கா காட்டுங்க அத்தை” என்று வாங்கிப்பார்த்தாள்.
“முன்னைய விட இப்போ குறைஞ்சிருக்கு அத்த, இத அப்படியே கடைபிடிச்சிக்கலாம், சரி போய் குளிச்சுட்டு வாங்க, பின்னாடி தண்ணீர் விலாவி வச்சுருக்கேன்”
“என் தங்கமடி நீ” கொஞ்சியவர் “பாவடைய எடுத்துப்போடு கண்ணு நான் குளிச்சுட்டு வந்து சமைக்கிறேன்” குளிக்க பின் பக்க தோட்டதுக்கு போக அங்கே ஐந்து கல் கூட்டி சமையலை முடித்து அப்பளம் வருக்க எண்ணையும் குளிக்க சுடுதண்ணீரும் காய்ந்து கொண்டு இருந்தது.
“ஏன் சாமி எறிவாயு தீர்ந்து போயிடுச்சா, பழமலைக்கு ஒரு அழைப்பு குடுத்துருக்கலாம்ல, கடைல ஏதாவது வாங்கிட்டு வந்திருப்போம்ல”
“இதுல ஒரு சிரமும் இல்லத்த, தண்ணீர் ஆரிட போகுது, நான் போய் பாவாடை எடுத்துட்டு வர்றேன்.” போக
“ஒரு சொல்லு பொருக்க மாட்டேங்குறா, இவனுக்கு ஏன் இவளை பிடிக்காம போச்சு. நம்ம கனவு நடக்காம போயிடுமோ? ம்ஹும் அதுமட்டும் இந்த பருவததுக்கிட்ட நடக்காது. ஜெயிக்க பிறந்தவடா இந்த பருவதம். என் கிட்டயேவா இருக்குடி மகனே இனி தானே இந்த ஆத்தாவோட ஆட்டத்த பார்க்க போற. இவ இப்படி இருந்தா இந்த பழமலை நாதன் கிட்ட காலம் கடத்த முடியாதே. முதல்ல இவளை மாத்தணும். பெருமூச்சுவிட்டு குளிக்க சென்றார்.
பாவடையை எடுத்து கதவில் போட்டுவிட்டு அரவையில் இருந்த தேங்காய் துவையலை எடுத்து கிண்ணத்தில் மாற்றிக்கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
புறங்கையில் துடைத்துவிட்டு வேலையப் பார்க்க அதுவோ நிற்கமாட்டேன் என்று வடிந்துகொண்டே இருந்தது. சிறு விசும்பல் இல்லை அவளிடம். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றிற்க்காக அவளை வதைத்துக்கொண்டே இருந்தான் பழமலை நாதன்.
காலையில் எழுந்து மாட்டுக்கு தண்ணீர் காட்டி முருகேசன் மாடுகளை ஓட்டிக்கொண்டு போக, மாட்டுத்தொளுவத்தை கூட்டிப்பெருக்க சோலையம்மா வராததால் தானே செய்து, பறந்து விரிந்திருந்த தோட்டத்தை சுத்தம் செய்து நீர் விட்டு, தான் குளித்து, பாத்திரம் துலக்கி, சிரமப்பட்டு அடுப்பை கூட்டி சமைத்து வைத்தால், அவனோ தன்னை சோம்பேறி என்று விட்டானே.... அவளால் அவன் பேசிய பேச்சுக்களை தாங்க முடியவில்லை.
இதற்க்கு தான் நான் இங்கு வரவில்லை என்றேன். யாரு கேட்டாங்க, ஒரு வருடம் முன்பு வரை நன்றாக போன அவளது வாழ்வு தாய் தந்தையாரின் இழப்பில் முழுவதும் மாறிவிட்டது.
சொகுசாக வாழ்ந்தவள் இங்கு வந்து பழமலை நாதனின் பேச்சில் மனமுடைந்து, தன்னால் இயன்றவரை வேலை செய்தாள். மாட்டை கண்டு மிரல்பவள் இன்று மாட்டிற்கு தண்ணீர் வைத்து குளிர்பாட்டி தீவனம் வைத்து, சாம்பிராணி போட்டு சாணியை கண்டு முகம் சுழிப்பவள் அதை தன் கைகளால் அள்ளி எடுத்து, புகையை கண்டு மூச்சு வாங்குபவள் அடுப்பூதி சமைக்கவும் செய்தாள்.
இது அத்தனைக்கும் காரணம் பழமலையின் பேச்சு மட்டுமே.
வீட்டுக்கு வந்த முதல் நாளே “தண்டமா உட்கார்ந்து சோறுதிண்ணா திண்ண சோறு உடம்புல ஒட்டாது. திங்கிற சொத்துக்காவது வேலயப்பாரு... நல்லா திண்ணு உடம்ப நல்லா தான் வளர்த்து வச்சிருக்க” என்றவனின் பார்வை அவளை அக்குவேறு ஆணிவேராக மேய அதில் தேகம் கூசி அருவருத்து போய் விலகிச்சென்றாள்.
“ஏய் பேசிட்டு இருக்கேன்ல, நீ பாட்டுக்கு போற என்னடி திமிரா, என் வீட்டுல இருந்துக்கிட்டு என் உழைப்புல திண்ணுக்கிட்டு இருக்கப்பவே உனக்கு இவ்வளவு அகம்பாவம் கூடாது. அதுவும் இந்த பழமலை நாதன்கிட்ட உன்னோட எகத்தாளத்தை கண்பிச்ச ஒட்ட நறுக்கிட்டு போய்கிட்டே இருப்பேன்டி.” என்று மேலும் ஏச
அவளுக்கு கண்கள் கலங்கியது.
முதல் நாள் ஆரம்பித்த வசவு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும் தொடர, அவளுக்கு மனம் ரணமானது.
அவள் கணினியில் படித்து வாங்கிய உயர் நிலை பட்டத்தை வைத்து வேலைக்கு போக முயற்ச்சிக்க, பழமலை நாதனோ எல்லா வகையிலும் அவளுக்கு முட்டுக்கட்டை போட்டன்.
“உங்க காசுல உட்கார்ந்து சாப்பிடுறேன்னு சொன்னதுனால தானே வேலைக்கு முயற்ச்சிக்கிறேன். அப்புறம் எதுக்கு வேலைக்குப்போக விடாம இப்படி அழிச்சாட்டியம் பண்றீங்க” பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டாள்.
“அப்படிதாண்டி பண்ணுவேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு” என்றவன் அவளை ஏளனமாக பார்த்தவன்
“உனக்கு ஒன்னு தெரியுமா, நீ எனக்கு வாழ்நாள் முழுதும் அடிமைடி. அதுக்காக உன்னை கல்யாணம் பண்ணுவேன்னு கனவுல கூட நினைச்சு பார்த்துட கூடாது. உன் திமிரை அடக்கி என் காலுக்கு கீழே நீ கிடக்கணும். அதை பார்த்து நான் சந்தோசப்படனும்.” என்றான் அதித வெறுப்புடன்.
“அப்படி என்ன நான் உங்களுக்கு செஞ்சிட்டேன்னு இப்படி பேசுறீங்க”
“நீ எதுவுமே பண்ணலடி அதனாலதான்”
“புரியல”
“புரியாத வரையிலும் ரொம்ப சந்தோசம்டி” எரிந்து விழுந்துவிட்டு சென்றான்.
அதன் பிறகு அவள் வெளி வேலை எதற்கும் முயற்ச்சிக்கவில்லை. வீட்டு வேலையை பழகிக்கொண்டாள்.
பெரும்பாலும் அத்தைக்கு எந்த வேலையும் விடாமல் தானே இழுத்து போட்டு செய்தாலும் அவனது குத்தல் பேச்சு மட்டும் ஓயவில்லை.
அன்னம் தண்ணீர் போல அவனது பேச்சும் அன்றாட இயல்பாய் மாறிப்போனது.
“ஏண்டி இப்படி நீ அழுது சீன போட்டா, நான் உடனே உன்னை விட்டுடுவேன்னு நினைச்சியா?” என்ற கடுமையான குரலில் உடல் தூக்கிவாரிப்போட அரைத்த விழுதை கிண்ணத்தில் மாற்றிக்கொண்டிருந்தவளின் விரல்கள் அதிலிருந்த கூறான கத்தியில் கீரிக்கொண்டது.
கிழித்த இடத்தில் மிளகாயின் சாறு பட்டு மேலும் எரிச்சலை தர “ஸ்ஸ்ஸ்” என்று சத்தம் இல்லாமல் முனங்கிக்கொண்டாள்.
“என்னடி நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன் நீ கண்டுக்காம நிக்கிற என்ன குளிர் விட்டுப்போச்சா” என முறைத்தான் பழமலை நாதன்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல” என்றாள் அமைதியாக.
“இல்லயே உன் பேச்சுல ஒரு திமிர் தனம் தெரியுதே”
‘ஆமா நீ ரொம்ப கண்ட’
“என்னடி பதிலையே காங்கள, என்ன மனசுக்குள்ளயே தாளிச்சு கொட்டுறியா”
‘கண்டுக்கிட்டானே’ “ம்ஹும் இல்ல”
“ஹேய் இருடி நான் என்ன தெருவுல போறவனாடி, பட்டும் படாம தொட்டும் தொடாம பேசுறவ, ஏன் மாமான்னு கூப்பிட்டா உங்க கௌவுரவம் கொரஞ்சிடுமா ஒழுங்கா மாமான்னு கூப்டுற” என்று எகிறினான்.
‘ஏன் நான் மாமான்னு கூப்பிட்டு வாங்கிக்கட்டிக்கிட்டது பத்தலயாக்கும் என்று மனம் முரண்ட அசையாமல் நின்றாள்.
“என்னடி நான் சொன்னதுக்கு ஒரு எதிர்வினையையும் காங்கள. என்ன ஏதாவது தேவையில்லாம யோசிக்கிறியா.”
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல மாமா”
“ஆக என்னை கட்டிக்கிடனும்னு ஆசை உன்ர அடி மனசுல இருந்திருக்கு. அதனால தானேடி அழுத்தி திருத்தி ஆசையா மாமான்னு கூப்பிடுற இல்ல”
‘ஐயோ சாவடிக்கிறானே’
போதும் போதும் என்றாகிவிட்டது அவளுக்கு அவனிடமிருந்து மீள
“கேட்கிறேன்ல பதில் சொல்லுடி”
‘ஐயோ’ என்று வந்தது அவளுக்கு இதுக்கு பதில் சொல்லலைனா இன்னும் தன்னை வறுத்தெடுப்பான் என்பது புரிய
“அப்படி எந்த ஆசையும் எனக்கு இல்ல” என்றாள்.
“ஓ அப்போ அம்மணிக்கு நல்லா படிச்ச டிப்டாப்பா, பெரிய உத்யோகத்துல இருக்கிற மாப்பிள்ளையா தான் பார்பீங்க போல, இவன் படிக்கவும் இல்ல, பெருசா சொத்தும் பத்தும் இல்ல. இருந்திருந்தா இவனையே சுத்திசுத்தி வந்திருக்கலாம். இவன்தான் வெறும் பயலா போயிட்டானே, இவன எதுக்கு ஆசை படனும்னு நினைச்சு என்னை ஓரம் கட்டிட்ட இல்லையா”
சத்தியமா இவன் இன்னைக்குள்ள முடிக்கமாட்டான் என்பது புரிய பேச்சை மாற்றும் பொருட்டு “அத்தை குளிச்சுட்டு வந்திட்டாங்க, நீங்க குளிக்க வாங்க நான் போய் தண்ணீர் விளாவி வைக்கிறேன்” என்று நகர அதில் அவனுக்கு கோவம் வர
“ஏண்டி என்னை மனுசனாவே மதிக்கமாட்டியா” கத்த
‘இதை நான் கேக்கணும்’
உடல் தளர்ந்து இதுக்கு மேல என்னால உன் கிட்ட மல்லு கட்ட முடியாது ராசா என்பது போல பாவமாய் பார்க்க
அதை புரிந்துக்கொண்டாலும் அவளை அப்படியே விட மனமில்லாமல் அவளை நெருங்க
முகிலாம்பிகைக்கு அடி வயிறு தடதடத்தது.
அந்த நேரம் சரியாய் “போய் குளிச்சுட்டு வாடா சாப்பிடலாம்” என்று அத்தையின் குரல் கேட்க நெஞ்சில் நிம்மதி பிறந்தது அவளுக்கு.
நிறைவான்(ள்)....