All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சமுத்ராவின் "நேசமெனும் கடலினிலே" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Samudhra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
திரி அமைத்துக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி ஸ்ரீ சிஸ்
 

Samudhra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்... நான் சமுத்ரா... எழுத்துலகில் புதுமுகம்.என் முதல் கதையோடு‌ உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.கதையின் நிறைக்‌குறைகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்...அது என் எழுத்தை மெருகேற்றும்... கதையின் சிறு அறிமுகம் இதோ...

ஹீரோ: சுகிர்தன்
ஹீரோயின்:சுஜன்யா

முதல் சந்திப்பே மோதலில் தொடங்கும் நம் நாயகன் நாயகி இருவரும் விதியின் விளையாட்டால் யாருமற்ற இடத்தில் மாட்டிக் கொள்கின்றனர்.தனிமை மோதலை அதிகப்படுத்துமா?காதலை அறிமுகப்படுத்துமா?

உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும் உங்கள்
சமுத்ரா
 

Samudhra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் ஒன்று

10406


விதவிதமான புல்லினங்களின் இசையில் தன் மூடிய சிப்பி இமைகளைத் திறந்தாள் சுஜன்யா.இளங்காலை காற்றில் பறந்த கூந்தலை ரப்பரில் அடக்கியவள் வேகவேகமாக குளித்து தயாரானாள்.


சுஜன்யா இன்ஜினியரிங் பட்டதாரி.கேம்பஸ் இன்ட்ரிவ்யூவிலேயே புகழ்பெற்ற கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்துவிட ஆறு மாதங்களாக அவளின் திறமையில் திருப்தியடைந்த அவர்கள் கனடாவில் ப்ராஜெக்ட் ஒன்றிற்கு அவளை தேர்வு செய்தனர்.இன்னும் ஆறு நாட்களில் அவள் கனடாவிற்கு பறக்க வேண்டும்.திரும்ப தாய்நாடு வர ஒரு வருடம் ஆகும்.


அவ்வளவு தூரம் ஒரு வருடமா என அவள் அன்னை மீனாட்சி முதலில் ஆட்சேப்பிக்க தான் செய்தார்.ஆனால் தந்தை விஸ்வநாதனுக்கு அவள் செல்ல மகளாதலால் மனைவியை எப்படியோ பேசி பேசி சரிக்கட்டி விட்டார்.மூத்த மகனைப் போல அல்லாது மகள் தைரியமும் தன்னம்பிக்கையும் விடமுயற்சியும் உடையவள் என்பதில் அவருக்கு அவள் மேல் அளவிட முடியாத பெருமை.


சுஜன்யாவின் அண்ணன் நவீன் எம்பிஏ பட்டதாரி.பார்வைக்கும் கம்பீரமான ஆண்மகனே.ஆனால் அவனின் பயந்த சுபாவத்தால் இதுவரை நான்கைந்து கம்பெனிகள் மாறி விட்டான்.எதை செய்யவும் பயம் மேலதிகாரியோடு பேசக் கூட பயம்.எதை செய்வதிலும் தயக்கம்.மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டை விட்டு கூட வெளியே செல்ல மாட்டான்.அந்த குணத்தை மாற்ற விஸ்வநாதனும் சுஜன்யாவும் எவ்வளவோ முயன்றுப் பார்த்துவிட்டனர்.ஆனால் பலன் தான் பூஜ்யம்.இதில் மீனாட்சி மட்டும் மகன் எப்படியிருந்தாலும் அவன் கட்சியே.அவன் அப்படி ஆக அவரும் ஒரு காரணமே.சிறுவயதில் கடுமையான சுகவீனம் ஒன்றில் எப்படியோ உயிர் பிழைத்த மகனை கண்ணுக்குள் வைத்து வளர்க்க தொடங்கினார்.அவரின் அதீத பாசத்தால் சுதந்திரமாக வெளியுலகில் சுற்ற வேண்டிய ஆண்மகன் எப்போதும் தாய் வீடு என்று தன்னுள்ளையே சுருங்கி விட்டான்.அவன் படித்து பட்டம் பெற்றதே விஸ்வநாதன் சுஜன்யாவிற்கு அளவில்லா ஆச்சரியமே.அவனை சரிசெய்யும் முயற்சிகள் தோல்வியடைந்தாலும் அவர்கள் மட்டும் புது புது உத்திகளை அவன் மேல் பிரயோகித்து வருகின்றனர்.


அழகான பிங்க் வண்ண பாட்டியாலாவில் தயாராகி கீழே டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தாள் சுஜி.முதலிலேயே அங்கு அமர்ந்திருந்த விஸ்வநாதன் அவளைக் கண்டதும் அன்போடு புன்னகைத்தார்.மீனாட்சி வந்து இட்லி சட்னி சாம்பாரை பறிமாறிச் சென்றார்.


"சுஜிம்மா! இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்ஸ்?அவுடிங் உண்டா?"


"ம்ப்பா...நிஷா கூட ஷாப்பிங் போறேன்... மத்தியானம் பெரியப்பா வீட்ல லன்ச்...வரதுக்கு சாயங்காலம் ஆயிடும்.."


"சரிடா...நா ட்ராப் பண்ணட்டுமா?"


"வேண்டாம்பா ஸ்கூட்டிலயே போறேன்..திரும்பி வர அதான் சரி..."


"ஓகேடா... ஜாக்கிரதையா போயிட்டு வா...தேவையானது எல்லாம் வாங்கிக்க..வேணும்னா என் க்ரிடிட் கார்ட் எடுத்துட்டு போ..சரியா"


"தேவையிருக்காதுன்னு நினைக்கிறேன்... எதுக்கும் கைல வச்சுக்கறேன்...லாக்கர் லெஃப்ட் சைட்ல தானே இருக்கு.."


"ஆமாடா...அதுதான்..."என்றவர் அவள் பயண விவரம் சிலவற்றை கேட்டு தெளிந்துக் கொண்டார்.அப்போது மாடியிலிருந்து இறங்கி வந்து தந்தையின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான் நவீன்.


மகன் வந்ததை கண்ட மீனாட்சி அவனுக்கு பிடித்த தோசையை பறிமாறி தேங்காய் பாலை அதன் மேல் ஊற்றினார்.அவனுக்கு மட்டும் இருந்த ஸ்பெஷலை தந்தை மகள் இருவரும் ஜாடைக் காட்டி புன்னகைத்தனர்.தோசையை ஒரு விள்ளல் தின்பது தங்கையின் முகத்தை பார்ப்பதுமாக திணறிய அண்ணனை,


"அண்ணா!எதா இருந்தாலும் தயங்காம பேசு...சொந்த தங்கைடையே உன் தயக்கத்தை ஆரம்பிச்சிட்டியா...!"


"அது...அது...சுஜி!நீ வாங்கிட்டு வர சொன்ன பேப்பர்..அது...அது"


"அதுக்கென்ன ண்ணா..! இல்லேன்னு சொல்லிட்டாங்களா?"


"இல்ல...இல்ல...அது அது வந்து அது நாளைக்கு தான் கொடுப்பாங்களாம்...சாரி சுஜி!நா ரொம்ப கேட்டேன்... முடியாதுன்னுடாங்க"


"ப்பூ..இவ்ளோ தானா..இதுக்கா இவ்ளோ தயங்கின... நாளைக்கு வாங்கிட்டா போச்சு...நீ கொடுத்த பில்டப்ப பாத்தா அவங்க இல்லேன்னு சொல்லிட்டாங்களோன்னு பயந்து போய்ட்டேன்..."


"அதானே நானும் அப்படியோன்னு நெனைச்சேன்...நவீன் நீ பெரிய கம்பெனில டாப் போஸ்ட்ல வேலை செய்ற...இப்படி சின்ன விஷயத்தை சொல்ல கூட வழவழான்னு இழுத்தா நல்லாவேயில்லை...மொதல்ல கரெக்டா பேச கத்துக்க"என்று கண்டித்தார் விஸ்வநாதன்.நவீனின் முகம் சுருங்கிப் போனது.அதுவரை அவர்கள் பேச்சை பொறுமையாக கேட்டிருந்த மீனாட்சி,


"நல்லாயிருக்கு அப்பாவும் பொண்ணுமா அவனை வறுக்கறது...ஏதோ வேலை ஆகிலயேன்னு சொல்ல தயங்கினா அவன போயி திட்றீங்களே!ராஜா நீ ஒண்ணும் வருத்தப்படாதப்பா...அம்மா இருக்கேன் உனக்கு"என்று அவன் கன்னத்தை அன்பாக தடவினார் அவர்.


ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டாள் சுஜன்யா.


"அம்மா!நீ தான் அவனை கெடுக்கற...நாங்க அவனுக்கு நல்லதுதான் சொல்றோம்...நீ இப்படியே பண்ணேன்னு வை..அவன் எதுக்கும் லயக்கில்லாதவனா ஆயிடுவான்...நா கெளம்பறேன்...அப்பா பை... அம்மா பை... அண்ணா பை..."என்று எல்லோரிடமும் விடைப்பெற்றவள் வெளியே நின்றிருந்த தன் ஸ்கூட்டியில் மைவுண்ட் ரோடை நோக்கி விரைந்தாள்.
 
Last edited:

Samudhra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வடக்கு உஸ்மான் சாலையின் சிக்னலில் தந்து நிறுத்தியவள் பச்சை விளக்காக காத்திருந்தாள்.அவள் தினமும் வரும் வழியாதலால் அங்கிருக்கும் ட்ராஃபிக் போலீஸ்,பூ விற்கும் வயதான பெண்மணி, காலையிலிருந்து வீடு வீடாக பேப்பர் போட்டு விட்டு கடைக்குத் திரும்பும் சிறுவன் என ஒவ்வொருவரும் அவளுக்கு தெரிந்த முகங்களே.அதிலும் பேப்பர்கார பையன் அவளை கண்டால் இரண்டு வார்த்தை பேசிவிட்டே செல்வான்.அன்றும் பிளாட்பாரம் அருகே நின்றிருந்த சுஜன்யாவைத் தாண்டும் முன்,


"யக்கா!நல்லாயிருக்கியா?வெள்நாட்டுக்கு எப்ப போற?"


"நல்லாயிருக்கேன்டா! இன்னும் அஞ்சு நாள் இருக்கு கெளம்ப"


"ஹோ...நீ திரும்பி வர சொல்ல எனக்கு எதுனா வாங்கியா சரியா"


"கண்டிப்பா டா...நா பெரிய லிஸ்ட்டே வச்சிருக்கேன்..அதுல உன் பேரும் இருக்கு..."


சிறுவன் ஆச்சரியமானான்.அவன் விளையாட்டிற்கு தான் அப்படி கேட்டான்.ஆனால் அவளோ ஏதோ ரோட்டில் சில முறைப் பார்த்து பழகிய தனக்கு பரிசுப் பொருள் தருவதாக கூறிய போது தேவதையாகத் தோன்றினாள் அவனுக்கு.


"ரொம்ப டாங்ஸ்கா"என்று சந்தோஷமாக அவளுக்கு கையாட்டியபடி சென்றான்.சந்தோஷமாக அவன் போவதை சுஜி பார்த்திருந்த போதே


'சர்.....'என கார் ப்ரேக் போடும் சத்தமும் சுஜியோடு பேசிய சிறுவனின் குரல் "அம்மா......!"என்று கத்திய குரலிலும் திடுக்கிட்ட சுஜி பைக்கை ஓரமாக பார்க்கிங்கில் நிறுத்தியவள் வேகமாக சத்தம் வந்த திக்கை நோக்கி ஓடினாள்.அங்கே உயர்ரக காரின் முன் விழுந்து கிடந்தான் அந்த சிறுவன்.பதறியபடி அருகில் சென்று அவனை தூக்கி நிறுத்த முயன்றாள்.எங்கே வலியோ ஓவோன கூவினான் அவன்.அவனை அப்படியே விட்டவள் இதுவரை கீழே இறங்கி வராமல் இருந்த கார்காரன் மேல் அதிகமான கோபத்தோடு ட்ரைவர் சீட் அருகே சென்று க்ளாசைத் தட்டினாள்.உள்ளே இருப்பவரை அவளால் பார்க்க முடியவில்லை.யாரேயாயினும் தன்னால் அடிப்பட்டு விழுந்துக் கிடக்கும் போது இறங்கி வந்து பாராமல் இருக்கிறான் என்றால் அவன் நிச்சயமாக திமிர் பிடித்தவனாகவே இருக்க வேண்டும் என்று தீர்மானித்த சுஜி இன்னும் பலமாக தட்டினாள்.


"ஹே யூ!வா வெளியே...கார் இருக்கற திமிரு...நடந்து போறவங்கள இடிச்சிட்டு இறங்காம என்னையா பண்ற...இறங்கி வா முதல்ல..."என்று படபடவென கண்ணாடி உடைந்து விடுமோ என்பது போல் தட்டினாள்.


பட்டென கதவை திறந்துக் கொண்டு இறங்கினான் ஆறடி உயர ஆஜானுபாகுவான இளைஞன்.திண்மையான உடல் ஜிம்மை பயன்படுத்துவதை பறைசாற்றியது.முகத்தில் பாதியை மறைத்திருந்த தாடி மீசைக் கூட அவனின் கம்பீரத்தை அதிகவேப்படுத்தியது.சுஜியின் அலப்பறையில் அவனின் கூர்கண்கள் கோபத்தை காட்டியது.


" கலாட்டா ஜாஸ்தியா இருக்கே...!என்ன பணம் பறிக்கற ஐடியாவா?"என்று எள்ளல் மிகுந்த குரலில் கேட்டான் அந்த மனிதன்.


ரசிக மனம் மிகுந்த சுஜியின் முதல் எண்ணம் 'வாவ் வாட் எ ஹேண்ட்சம் மேன்'என்பது தான்.ஆனால் அவனின் முதல் பேச்சு அந்த ரசனையை துணிக் கொண்டு துடைத்தார் போல் அழித்து அங்கே கோபம் குடிக் கொண்டது.


"ஹலோ மிஸ்டர்...இங்க யாருக்கும் உங்க பணம் வேண்டாம்... அடிப்பட்ட பையன ஹாஸ்பிடல் கூட்டிப் போகனும்...இடிச்சிட்டு எனக்கென்னனு போகலாம்னு பாக்கறீங்களா?"


"லுக் அதுக்கெல்லாம் எனக்கு டயம் இல்ல...ஐ ஹாவ் டு கோ!இதுல என் மிஸ்டேக் எதுவும் இல்ல..சடன்னா வந்து கார் மேல விழுந்தது அவன்...நா சமாளிச்சு காரை நிறுத்தினேன்...ஸோ இதுக்கு நா பொறுப்பேத்துக்க முடியாது..."


"என்னது பொறுப்பேத்துக்க முடியாதா?பண்றதையும் பண்ணிட்டு கழண்டுக்கவா பாக்கற?மரியாதையா ஹாஸ்பிடல் கூட்டி போயி ட்ரீட்மெண்ட் கொடு..இல்ல உன் மேல போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டி வரும்..."


இதற்குள் வேடிக்கைப் பார்க்க கூடியிருந்த பத்து பேரும் சுஜியின் பக்கமே பேச அவனின் பேச்சு எடுபடாமல் போனது.கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்தவன்,


"அந்த பையன கார் பேக் சீட்ல உட்கார்த்தி வைங்க.. ஹாஸ்பிடல் கூட்டி போறேன்"என்றான் பொறுமை பறந்த குரலில்.


அவன் கூறியதே தாமதம் இரண்டு மூன்று பேர் சேர்ந்து பையனைத் தூக்கி காரில் அமர்த்தினர்.சுஜியும் அவனோடு அமர்ந்தாள்.அந்த நெடியவன் மேல் அவளுக்கு சிறிதும் நம்பிக்கையில்லை.போகும் வழியில் பையனை காரிலிருந்து அவன் வெளியே வீசிவிட்டால்?


வழியெங்கும் அந்த பையன்"யக்கா அது!"என்று எதையோ கூற முயன்றான்.ஆனால் சுஜியோ


"கொஞ்சம் பொறுத்துக்கடா... ஹாஸ்பிடல் இப்ப வந்துரும்.."என்று அவனை மேல பேச விடவில்லை அவள்.


சிறிது தூரத்தில் இருந்த தனியார் மருத்துவமனையில் பையனை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தவன் ஆகும் பில்லை முன்கூட்டியே கட்டி சுஜியை திரும்பியும் பாராமல் அங்கிருந்து விரைந்து விட்டான்.


பையனை சரியாக பரிசோதித்த மருத்துவர் கால் சற்று சுளுக்கியதாக கூறி சிகிச்சை செய்து மாத்திரைகளை கொடுத்து வீட்டிற்கு செல்லலாம் என்றார்.


மெதுவாக அவன் கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்தவள் ஆட்டோ அழைத்தாள்.ஆட்டோவில் அவனோடு அவளும் அமர போகும் முன்,


"வேண்டாம்கா..நானே போய்க்குவேன்.."


"ஏன்டா வீடு வரைக்கும் வரேனே"


"ஐயோ யக்கா! எனக்கு ஒண்ணுமே ஆகல...நீ சும்மானாலும் அந்தாளக்கு திட்டி கலாட்டா பண்ணிட்ட...நீ எனக்கு ஏதோ தரேன்னு சொன்னியா..நா அதேயே நெனச்சிக்கிட்டே கனா கண்டுட்டு போயி கார் மேல விழுந்திட்டேன்..அவரு மேல எந்த தப்பும் இல்ல"


"இத ஏன்டா மொதல்லையே சொல்லல?"


"நீ எங்க சொல்ல வுட்ட...நா அப்பே புடிச்சு யக்கா யக்கான்னேன்... நீதான் என்னை பேசவே வுடல..போவட்டும் நா வரட்டா"என்று ஆட்டோவை போக சொன்னான்.


விரையும் ஆட்டோவைப் பார்த்தபடி பேந்த பேந்த விழித்தாள் சுஜன்யா.
 
Status
Not open for further replies.
Top