காதலோ
கானல் நீரோ...
முன்னோட்டம் -2
கதா நாயகன் - அதிரன்
கதாநாயகி - சாகித்யா
பல நாட்களாக தன் கனவனிடம் பேச எண்ணிய விடயம் தான்... இன்றுதான் பேசுவதற்கு நேரம் கிடைத்திருக்கின்றது. ஆனால் அதை எப்படி ஆரம்பிம்பது என்று தெரியாமல்தான் அவள் பால்கனியில் நகத்தைக் கடித்தவாறு நடை பயின்று கொண்டிருக்கின்றாள். கேட்டால் கோபம் போகுமா...? அப்படி அவனது கோபத்தை தாங்கும் சக்தி தனக்கு இருக்கா என்று நினைத்து நினைத்தே இதைப்பற்றி பேசாமல் காலம் தள்ளியிருந்தாள் அந்த மென்மையான இதயம் கொண்டவள். எத்தனை துன்பத்தையும் அவளது இதயம் தாங்கும் என்று அவள் நினைத்திருக்க தன்னவனின் முகத்திருப்பலைக்கூட தன் இதயம் தாங்காது என்பது அவள் மட்டுமே அறிந்த உண்மை.
தன் மடிக்கணினியை வைத்து வேலைப்பார்த்துக் கொண்டிருந்தவன் ஓரக் கண்ணால் தன்னவளின் குழப்பத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தான். ஏதோ அவனிடம் கேட்க தயங்கும் அவளைப் பார்த்தவனுக்கு சிரிப்பாகவும் அதே நேரம் அவளின் செய்கைகள் அவளை இரசிக்கவும் வைத்தது... ' இப்படித்தாண்டீ ஏதாவது பன்னி உன்கிட்ட சிக்க வைக்கிற.. அப்போதும் சரி.. இப்போதும் சரி நீ மாறவே இல்லை என் செல்லக்குட்டி...' என்று மனதுக்குள் அவளை கொஞ்சிக் கொண்டவன் இதற்கு மேல் பொறுமையின்றி அவளை அழைத்தான்.
"பொம்மு... அங்கே என்ன பன்ற...? இங்கே வா" என்று அழைக்க தன் குழப்பத்தையெல்லாம் கைவிட்டவளாய் அடுத்த நிமிடம் அவன் தேவையை நிறைவேற்ற அவன் முன் வந்து நின்றாள்.
"என்னங்க....., என்ன வேண்டும்..?" அவள் கேட்ட அடுத்த நிமிடம் அவள் அவன் மடியில் அவனது கைசிறைக்குள் இருந்தாள்.
"என்ன பார்த்தா உனக்கு கரடி சிங்கம் போல இருக்கா....? " அவளது காதருகே சூடாக வந்தது அவனது வார்த்தைகள். ஆனால் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் அவள் முழிக்க.. அவள் தலையை மட்டும் இடம் வலமாக ஆட்டினாள். அவளின் தலையில் ஒரு கூட்டு வைத்து "என் மக்கு பொண்டாட்டி... அப்பறம் ஏன் என்கிட்ட எதையோ சொல்ல தயங்குற....?"
"அது.... அது வந்து.... "என்று அவள் இழுக்க.." இதற்கு மேல் எங்கு வர...?" என்று கூறி அவனின் அணைப்பை இருக்கினான்..
"ஐயோ இல்லைங்க.. ரொம்ப நாளா தோனுது.. நான் ஏதாவது வேலைக்குப் போகவா..?." அவளின் மனதில் அரித்துக் கொண்டிருந்த விடயத்தை கேட்டே விட்டாள். அவன் முகத்தில் ஏதாவது மாறுதல் தென்படுகின்றதா என்று அவனி. முகத்தைப் பார்க்க அப்படியொன்றுமில்லை. அவள் கேட்டதில் அவனுக்கு கோபம் செல்லவில்லை என்பதே அவளுக்கு நிம்மதியைத் தந்தது.
இப்போ ஏனாம் என் பொண்டாட்டி வேலைக்குப் போகனும்..?
"எனக்கு வீட்டில ஒரே 'போரிங்கா' இருக்குங்க.. வேலைக்குப் போனாபடித்த படிப்புக்கு உபயோகமா இருக்கும்.. அதே நேரம் இருவரின் சம்பளமும் நம்ம வாழ்க்கைக்கு பிரயோஜனமா இருக்கும்... "
வீட்டில சும்மா இருந்தா தான் மா போரிங்கா இருக்கும்... வீட்டு வேலைகளை செய்.. அம்மாவுடன் பேசு.. தோட்டத்திற்கு தண்ணிர் ஊற்று.. தொலைக்காட்சி பாரு.. இப்படி ஏதவாவது செய் டா பொம்மு... வேலைக்கெல்லாம் போகத்தேவையில்லை.. எனக்கு சம்பாதிச்சு என் குடும்பத்தை காப்பாற்ற முடியும். நீ அதையெல்லாம் யோசிக்காத.. ஆபிஸ் வேலையெல்லாம் பொண்ணுங்களுக்கு சரியா வராதுடி என் பொண்டாட்டி... " எனக் கூற அவள் மண்டையை மண்டையை ஆட்டினாள்.
இருந்தாலும் ஒரு நப்பாசையாக...."ஏங்க .. ஆபிஸ் வேலை வேண்டாம் என்றால் டீச்சர் வேலைக்காவது போகட்டுமா....? " யாரிடமும் இப்படி கெஞ்சிப் பழக்கமில்லாதவள் அவள் எதிகாலத்திற்காக யாசம் கேட்பது போல் அவனிடம் கேட்க அவளின் குரல் தளுதளுத்தது. கண்கள் கலங்கியது..
அவளின் குரலின் கலக்கத்தை அறிந்தவன் அவள் முகத்தைத் திருப்பி தன் கைகள் கொண்டு ஏந்தி " என் பொம்முவுக்கு யாருக்காவது படித்து கொடுக்கணும் என்று இருந்தால் என் தம்பிக்கும் தங்கைக்கும் படித்துக் கொடு.. நான் சம்பளம் தருகிறேன்... " என்று கூற அவளுக்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை..
" இப்போ மனச போட்டு குழப்பிக்காத ரெஸ்ட் எடுடா என் செல்ல பொண்டாட்டி.. மாமாவுக்கு ஒரு சின்ன வேலை இருக்கு..." என்று கூறி தன் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டான்.
அவள் கண்கள் தானாக கண்ணிரை சொறிந்தன... எத்தனை திறமைகளிடனும் கனவுகளுடனும் கல்லூரி படிப்பை முடித்தவள் அவள்... எல்லாவற்றிலும் முதலிடம்...! " பொம்மு நீ பெரிய ஆளாய் வருவ....!" என்று அவன் அன்று கூறிய வார்த்தைகள் எங்கு சென்றது...! அவளுக்கே தெரரியவில்லை. அதிகாரமாய் கூறுபவனிடத்திலாவது ஆணாதிக்கம் என்று சண்டை போடலாம். அப்படி பல பெண்களின் வாழ்க்கைக்காக போராடியவள் தான். ஆனால் இன்று அவளது வாழ்க்கை.. அவளது முன்னேற்றம்.. அவளது அடையாளம் எல்லாம் காதலினால் கானாலாகின்றதே..... ! இதற்கு முடிவு தான் என்ன..?