All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் “மாயாவி” - கதைத் திரி

Status
Not open for further replies.

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் இதுதான் நான் எழுதிய முதல் கதை. தினமும் எபி பதிய படும்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

IMG_1555.jpeg

மாயாவி - 1



"யோவ் முருக்ஸ் எங்கய்யா இருக்க .... என் முன்னாடி வாயா...." ஆளை உறையவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடுநிசி வேளையில், அந்த குன்றின் விளிம்பில் நின்று கடவுளை சண்டைக்கு அழைத்து கொண்டிருந்தாள் அவள், திவ்யதர்ஷனி.



"என்னை இங்க பைத்தியக்காரி போல புலம்ப வச்சுட்டு நீ உன்னோட ரெண்டு பொண்டாட்டி கூட டூயட் பாடுறியா..."



"பைத்தியகாரி மாதிரி இல்லடி திவி.... நீ பைத்தியம் சொல்லித்தானே உன்னை துரத்திவிட்டாங்க" என்று தனக்குள் புலம்பியவள்,



"ஆமா தெரியாமத்தான் கேட்குறேன். நான் உன்னோட பக்தைதானே.... நானே பல தில்லாலங்கடி வேலை செஞ்சு... கஷ்டப்பட்டு என் அத்தானை கரெக்ட் பண்ணப்போற வேளைல என்னை காப்பாத்தாம என்னை மாட்டவச்சிட்டியே பாவி....நீ பண்ணாத பித்தலாட்டமா.... வள்ளியை கரெக்ட் பண்ண என்ன என்ன தகிடுதத்தம் பண்ணுன....நான் உன்ன மன்னிக்கவே மாட்டேன்...மேல வந்தவுடன் முதல் வேலை உன்னையும் வள்ளியும் பிரிக்கறது தான் "



ஏன்டா இவ கையால எல்லாம் அர்ச்சனை வாங்கினோம்னு நொந்து போகிற அளவுக்கு முருகனை வறுத்து கொண்டிருந்தாள் திவ்யா.



"திவி... நோ கரையிங்...பி ஸ்டராங் ....இந்த உலகத்தை விட்டு போற நேரம் வந்துருச்சு... உன்ன இந்த நிலைக்கு தள்ளியவர்களை நீ பழி வாங்கியே ஆகனும் ... இம்ம் சீக்கிரம் குதி" என்று தனக்குத்தானே பேசியபடி, அந்த இருட்டில் கீழே எட்டி பார்க்கவும்,



"அய்யோ ஒரே இருட்டா இருக்கே எப்படி குதிக்கிறது" என்று நடுங்கியவள்



"ஏய் திவி....பகல்ல குதிச்சாதான் பள்ளத்தை பார்த்து பயமா இருக்கும்... இப்போ நீ கண்ணை கூட மூடிக்க வேணாம்..ஒரே ஜம்ப்தான் மேட்டர் கிளோஸ்...... நிறைவேறாத ஆசையால் நீ இங்கதான் ஆத்மாவா சுத்திகிட்டு இருப்ப... கமான்..." தன்னைத்தானே உற்சாகப்படுத்தி கொண்டு குதிக்க தயாரானாள்.



புன்னகை மன்னன் கமல் போல "ஒன், டூ , த்ரீ ...." சொல்லி குதிக்கும் வேளையில்,

"ரேகா கையை புடிச்சுகிட்டு குதிக்க கமல் இருந்தார்... நமக்கு யாரு இருக்கா... யோவ் முருக்ஸ் உன்ன சும்மா விடமாட்டேன்." என்று சிறுபிள்ளை போல தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் திவி.



சிறிது நேரம் சென்று தலையை குலுக்கி தன்னை நிலைப்படுத்தி கண்களை துடைத்து கொண்டு மீண்டும் பள்ளத்தை எட்டி பார்த்தவளின் கண்களில் புது கண்ணீர் உற்பத்தி ஆக தேம்பியவாறு



" யாராவது இருக்கீங்களா என் கூட சேர்ந்து சாகிறதுக்கு..." என்று சத்தம் போட்டு கத்தியவளின் கோரிக்கை அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.



நேரம் செல்ல செல்ல அவளின் தைரியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வர , திரும்பவும் முருகனிடம் கோரிக்கை வைக்க ஆரம்பித்தாள் .



"முருக்ஸ் கடைசியா ஒரு வேண்டுதல்... ப்ளீஸ்... எப்படியாவது நிறைவேத்து" என்று சிறுபிள்ளை போல கெஞ்சியவள் இரு கைகளையும் கூப்பி



"என் கையை புடிச்சுக்க ஒரு துணையை காட்டு..." கண்மூடி உருகி வேண்டியவளின் அருகில்,



"ஏய் குதிக்கணும் தோணுச்சுனா குதிக்க வேண்டியதுதானே... எதுக்கு தொணதொணன்னு மனுஷன் உயிரை வாங்கிட்டு இருக்க...... " என்று ஆக்ரோஷமாக கேட்ட குரலில் தூக்கி போட கண் திறந்து திரும்பி பார்த்தவள் அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.



அந்த இரவு வேளையில் இப்படி ஒருவனை எதிர்பாக்காததால் மூளை வேலைசெய்யாமல் மலங்க மலங்க விழித்து கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு 'என்னமா வாயடிச்சுக்கிட்டு இருந்தா, இப்போ முழிக்கறதை பாரேன்' என்று மனதில் நினைத்தவன்.



"என்ன சாக பயமா இருக்கா .... நான் வேணா புடிச்சு தள்ளிவிடவா...."என்றபடி அவள் கைகளை பற்ற முயல்கையில் ஓர் அடி பின் எடுத்து வைத்தவள், அந்த இருட்டிலும் அவனை அளவிட முனைந்தாள்.



நல்ல உயரத்தில் வாட்டசாட்டமான உடல்வாகுடன் மாநிறத்தில் கண்களில் குறும்பு கூத்தாட கூர் நாசியுடன் அதுக்கும் கீழே முறுக்கிவிட்ட மீசையுடன் நக்கல் சிரிப்பால் ஒரு பக்கமாக வளைந்திருந்த உதடுகளும் ,கீழ் உதட்டையும் முக்கால்வாசி மூஞ்சியையும் மறைத்திருந்த அடர் தாடியையும் பார்த்தவளுக்கு 'கேப்டன் ஜாக் தாடிக்கு ரப்பர் பேண்ட் போட்டது போல இவனுக்கும் போட்டா எப்படி இருக்கும்' என்று கண்மூடி மனதில் கற்பனை பண்ணி பார்த்தவள் தன்னையும் மீறி சிரித்தாள் திவி,



மீண்டும் அவன் கண்களை பார்க்க அந்த இருட்டிலும் கண்மணிகள் பளபளப்பதை கண்டவளுக்கு திடீர் என்று சந்தேகம் வர பயத்துடன் அவன் கால்களை பார்க்க, இத்தனை நேரம் தன்னை ஆராய்ச்சி பண்ணியவளின் செய்கைகளை ஒருவித சுவாரஸ்யத்துடன் பார்த்தவன் அவள் தன் கால்களை பார்க்கவும்



தன் பாண்டை தூக்கி காட்டியபடி "இது ரைட் லெக் , இது லெப்ட் லெக்... நல்லா பார்த்துக்கோ, அதுக்கும் உன்னோட முருக்ஸ் கிட்ட சண்டைக்கு போகாத.. . ஒரு ரெண்டு ரூபாய்க்கு சூடத்தை ஏத்திட்டு நீ பண்ணுற அலம்பல் இருக்கே யப்பா முடில" என்றவன் மேலும்



"என்ன.. தள்ளிவிட ஹெல்ப் பண்ணவா, விடியப்போகுது பாரு ...சீக்கிரம் சொல்லு." என்றவனை



நம்பாதப்பார்வை பார்த்து "பேய் இல்லனா... அப்போ நீங்க இங்க என்ன பண்ணுறீங்க... நீங்களும் சூசைட் பண்ண வந்திங்களா.." மகிழ்ச்சியுடன் கேட்டவளை பார்த்து வந்த சிரிப்பை கஷ்டபட்டு அடக்கி ஆம் என்னும் விதமாக தலை அசைத்தவன்,



“பட் இப்போ பிளான் மாத்திட்டேன்“



“ஏன்” என்றவளை பார்த்து அந்த இருட்டிலும் வெண்பற்கள் தெரிய வசீகரமாக சிரித்தவன்



“மூட் இல்லை, வேணா நாளைக்கு இதே டைம் இதே லொகேஷன்க்கு வா சேர்ந்து குதிப்போம் அதுவும் புன்னகை மன்னன் ஸ்டைல்ல” கண்ணடித்தபடி கூற.



“வாட்!!!” என்று அதிர்ந்து கத்தியவளின் தோற்றத்தை அந்த இருட்டிலும் பார்த்தவன் , கட்டுபடுத்த முடியாமல் சிரிப்பு வர,தொண்டையை தடவுவதை போல தன் கைகள் கொண்டு சிரிப்பை அடக்கி



“ஓகே. சி யு டுமரோவ்” என்றபடி நடந்தவன் திரும்பி ,



"நான் சொன்ன புன்னகை மன்னன் ஸ்டைல் கையை புடிச்சுகிட்டு குதிக்கிறது ,நீ என்னனு நினைச்ச" என்று நக்கல் அடித்தவன் மேலும் ,



"உனக்கு பிரச்சனை இல்லனா.. எனக்கு அதுக்கும்... ஓகே தான்... " கேலியாக சொல்லியபடி திரும்பி நடந்து சென்று சிறிது தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறி மறைந்தான்.



“வரும் போது இந்த காரை நாம பார்கலையே... இவன் எப்போ வந்தான்” என்று யோசித்தவள், என்ன செய்வது என்றுதெரியாமல் குழம்பி நின்றாள்.



அதேநேரம் மேலோகத்தில்



“சுவாமி அந்த பெண் தங்களை அவமான படுத்துகிறாள்.. தாங்கள் எதுவும் கண்டுக்காமல் இருக்கிறீர்கள்.... இப்பொழுதேசொல்லிவிட்டேன்... இப்போதைக்கு அவள் மேலோகம் வர கூடாது” கோபமாக பேசிய வள்ளியை, நொந்த பார்வை பார்த்த முருக்ஸ்



“அட நீ வேற ஏன்மா நொய்நொய் என்று உயிரை வாங்குகிறாய் , நானே எவ்வாறு அந்த அரை கிறுக்கை கழட்டி விடுவதுஎன்று யோசித்து கொண்டு இருக்கிறேன்” என்றவரை



“அவள் நம் இருவரையும் பிரிப்பேன் என்று சபதம் எடுத்திருக்கிறாள்... தாங்கள் எதுவும் செய்யாமல் என்னை குறைசொல்லுகிறீர்கள்... ஓஹோ நான் சென்று விட்டால் மூன்றாவதுக்கு அடி போடுகிறீர்களா... நான் இப்போதே என் வீட்டுக்குசெல்கிறேன்” கோபமாக வெளியேறியவரை தடுக்கும் வழி தெரியாமல் திகைத்து நின்றார் முருக்ஸ்.



சற்று நேரம் தாடையை தடவி யோசித்தவர் “இம்ம் இதற்கு இதுதான் தீர்வு... இருந்தாலும்...” சற்று தயங்கியவர் ,



“அதைபிறகு பார்த்து கொள்ளலாம்“ என்றபடி இவ்விடத்தை விட்டு மறைந்தார்.



அங்கே திவி குன்றின் மறு புறம் வந்து அவன் சென்ற திசையை வெறித்து பார்த்தவள் , திரும்பவும் குன்றின் உச்சிக்கு சென்று தன் கண்களை இறுக மூடிக்கொண்டு "அத்தான்... இந்த ஜென்மத்தில் நீங்க எனக்கு இல்லைனு ஆகிடுச்சு... ஆனா அடுத்த ஜென்மத்தில உங்களை விட மாட்டேன்...அதுக்காக உங்களை சந்தோசமா விட்டுட்டு போய்டுவேன்னு நினைச்சீங்களா ....நெவெர் ....இனிதான் என் ஆட்டம் இருக்கு. வரேன் உயிரோட இருந்து என்னால பண்ண முடியாததை செத்து ஆவியா வந்து பண்ணுறேன்..... நான் உங்க யாரையும் சும்மா விடமாட்டேன்..." என்றாள் ரௌத்திரமாக.



ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை வீட்டின் அழைப்புமணி சிறிது அசைக்க, புரண்டு படுத்தவன் திரும்பவும் தூக்கத்தைதொடர, மீண்டும் மீண்டும் ஒலித்த அழைப்புமணியால் எரிச்சல் அடைந்து சுவர் கடிகாரத்தில் நேரத்தை பார்க்க அது ஐந்து என்று காட்ட,



‘இந்த நேரத்தில் யாரா இருக்கும்’ யோசித்தவாறே தன் உடையை அணிய ஆரம்பித்தவனின் சிந்தனைமுழுவதும் நேற்று இரவு சந்தித்த கிறுக்கியை பற்றி நினைத்தது,



நேற்றைய சம்பவத்தை நினைவு கூர்ந்தவனின் முகத்தில் புன்னகை அரும்பியது, எப்பொழுதும் போல பின்னிரவில் தனிமையை வேண்டி தினமும் வந்து போகும் இடத்திற்கு வந்தவனுக்கு , அங்கே குட்டையும் இல்லாமல் நெட்டையும் இல்லாத உயரத்தில் , அளவான உடல்வாகுடன் பால் நிறத்தில் ஒரு வித படபடப்புடன் குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும் பின்பு பள்ளத்தாக்கை எட்டி பார்ப்பதுமாய் இருந்தவளை பார்த்த உடனே கண்டுகொண்டான்.... அவள் ஒருவித மன அழுத்தத்தில் இருப்பதை.



சிறிது நேரம் அவள் கடவுளுடன் போட்ட சண்டையை ரசித்தவன், அவள் குதிக்க முயல்கையில் கூட அவன் இருந்த மனநிலையில் தடுக்க முயற்சி செய்யவில்லை. நேரம் செல்ல செல்ல அவள் புலம்பல்களும் அழுகையும் அதிகம் ஆக சகிக்க முடியாமல்தான் அவளிடம் சென்று கோபப்பட்டது. ஆனால் அவளுடைய அதிர்ந்த முகத்தை பார்த்தவனால் அவன் கண்களை அவளிடம் இருந்து அகற்ற முடியவில்லை , காண்பவரை சுண்டி இழுக்கும் குழந்தை தனமான முகம் , ஆனால்அந்த முகத்தில் துளிகூட நிம்மதி இல்லை.



தன்னோட வாழ்க்கையே அந்தரத்தில் தொங்குகிறது, இதில் இந்த கிறுக்கிக்கு என்ன பிரச்னை இருந்தா எனக்கு என்ன என்ற எண்ணம் தோன்ற , அவ்விடத்தை விட்டு விலக நினைக்கையில் அவள் தன்னை அளவிடுவதை கண்டவன் அவளையே பார்த்து கொண்டிருக்க , திடீர் என்று தன் தாடியை பார்த்து சிரித்தவளை கண்டவனுக்கு தன் தாடியை வருடி கொடுக்க பரபரத்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கியப்படி அவள் சிரித்த முகத்தை ரசித்துக்கொண்டிருதான்.



அவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது அவளுக்கு சாக துணிவு இல்லை, அனால் இதே நிலை நீடிக்குமா என்று அவனுக்கு தெரியவில்லை . மனிதர்களை பார்த்தவுடன் எடை போடுவதில் கில்லாடியான அவனுக்கு தெரிந்தது அவள் மறுநாள் அவனுக்காக காத்துக்கொண்டிருப்பாள் என்று, அதுமட்டும் இல்லை இப்பொழுது அவள் நம்பும் ஒரே ஜீவன் அவன் மட்டுமே.



தலையை குலுக்கி அவள் நினைப்பை உதறித்தள்ளியவன்" கிறுக்கி... நீ எக்கேடு கெட்டுப்போ உன் விதி முடிஞ்சுதுன்னா மேலோகத்தில் பாப்போம்... நேத்து உனக்கு நல்ல நேரம் கிறுக்கி இல்லனா ... "என்று வாய்க்குள் முணுமுணுத்தவன் , யார் இந்த அதிகாலை வேளையில் வந்திருப்பார்கள் என்று யூகித்தவன் அவர்களை வரவேற்க வாசல் நோக்கி சென்றான்.



அங்கே மேலோகத்தில் முருக்ஸ் இவன் வாய்விட்டு புலம்பியதை கேட்டவர் "என்னது விதி முடியணுமா!!!" என்று அதிர்த்தவர் "அப்படி நடக்க ஒரு நாளும் விடமாட்டேன்" என்று மனதிற்குள் ரகசிய சபதம் எடுத்தார்.



அவன் நிதானமாக வாசற்கதவை திறந்து பார்க்க , அங்கே அவனை முறைத்தபடி அவன் சித்தப்பாக்கள் சேகர், குமார் நிற்க கூடவே தாய்மாமன் கிருஷ்ணன், அவர் மகன் விஷ்ணு மற்றும் சேகர் மகன் ஹரி ஆகியோரும் இருந்தனர். . அவன் அவர்களை வா என்றும் அழைக்கவில்லை போ என்றும் சொல்லவில்லை, அவனை முறைத்தபடி உள்ளே சென்றவர்கள் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தனர். சிறிது நேரம் யாரும் எதுவும் பேசாமல் அமைதியா இருக்க



"ஹரி எல்லா ரூமையும் நல்லா செக் பண்ணு" என்ற சேகர் சித்தப்பாவின் பார்வை வாசற்படியில் நின்றிருந்தவனை விட்டு விலகவில்லை.



அந்த வீட்டில் இருந்த எல்ல இடத்தையும் ஆராயந்தவன் , ஒன்றும் இல்லை விதமாக உதட்டை பிதுக்கி தலையை ஆட்ட,



“ ஸ்ரீ.... ஏன்டா இப்படி நடந்துக்குற... நீயா இப்படி பட்ட காரியத்தையெல்லாம் செய்யுறது நம்ப முடிலடா....” தொண்டை அடைக்க பேசிய சிறிய தந்தை குமாரை புருவம் சுருக்கி பார்த்தவன் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்க



“அறிவு கெட்டவனே அவன்கிட்ட என்ன பேச்சு... " தன் தம்பியை பார்த்து சீறிய சேகர்,



"துரை பெரியவரா ஆகிட்டாரு அவர்கிட்ட போய் நியாயம் தர்மம் எல்லாம் பேசிகிட்டு இருக்க... .. அவர்கிட்ட சொல்லிடு. முன்னாடி எப்படி வேணா அவர் இருந்துருக்கலாம், ஆனா இனி அவர் நாம சொல்றதைத்தான் கேட்கணும்... அவர் இல்லாம இந்த இடத்தை விட்டு போகிறதா இல்லை" என்றவர் நன்றாக சோபாவில் சாய்ந்து அமர்ந்துகொண்டார்.



இவர்கள் லேசில் இந்த இடத்தை விட்டு போக போறதில்லை என்று உணர்ந்து கதவை சாத்த முனைந்தவனின் பார்வை ஓர் இடத்தில் நிலைகுத்தி நின்றது, புதர்போல மண்டி கிடந்த தாடியையும் மீறி அவன் உதடுகள் விரிந்தது புன்னகையால்.



"ஸ்ரீ.... குறிச்ச முகூர்த்ததில் உனக்கும் மஞ்சுக்கும் கல்யாணம்...அது உன் சம்மதத்தோடு நடந்தாலும் சரி இல்லை என்றாலும் கண்டிப்பா நடக்கும்" என்றவரை அப்படியா என்பதை போல புருவத்தை ஏற்றி இறக்கி தாடியை தடவியவாறு பார்த்தவன் நக்கல் சிரிப்புடன் கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு சென்றான்.



"ஸ்ரீ.... "என்று கோபமாக அவனை நோக்கி வந்த ஹரியை அமைதியாக இருக்கும் படி சைகை செய்த குமாரை முறைத்தபடி இருக்கையில் அமர்ந்த ஹரி



"என்ன சித்தப்பா இப்போ எதுக்கு என்னை அமைதியா இருக்க சொல்லுறீங்க , அவன் அப்பாவை மதிக்காம போய்கிட்டே இருக்கான்... அவன் சட்டையை பிடிச்சு கேட்க்கிரதை விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க " என்றவனை



"அவன் போக்குல போய்தான் அவனை வழிக்கு கொண்டுவரனும்... இப்போ நீ ஸ்ரீ கிட்ட வம்பு பண்ணா அதையே சாக்கா வச்சுக்கிட்டு முரண்டு பிடிப்பான் ,கொஞ்சம் நீ பேசாம இரு நானும் சேகர் அண்ணாவும் பார்த்துப்போம்" என்ற குமாரை தொடர்ந்து



"ஆமாம் ஹரி.. சித்தப்பா சொல்லுறது கரெக்ட் கொஞ்சம் அமைதியா இரு என்னதான் பண்ணுறான்னு பார்ப்போம்" என்ற தந்தையை முறைத்தபடி



" ஆமா இவரு கூப்பிட்டவுடன் அவன் பின்னாடியே வந்துட போறான் , எல்லாரும் மூக்கு உடைபட்டுதான் கிளம்பப்போறிங்க" முணுமுணுக்க முணுமுணுத்தவனை முறைத்தபடி ஸ்ரீ வரவுக்காக காத்திருந்தார் சேகர்.



வெளியே சென்ற ஶ்ரீ நேராக தன் கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்தவன், அங்கே உடலை குறுக்கி போர்வையால் தன்னை மூடி இருந்த உருவத்தை பார்த்தவன் மேலே வானத்தை பார்த்து "தேங்க்ஸ் முருக்ஸ்" என்று மானசீகமாக கும்பிடுபோட்டபடி போர்வையை விலக்க , அவன் உதடுகளோ "கிறுக்கி” என்று மென்மையாக முணுமுணுத்தது.



அவளையே சிறிது நேரம் பார்த்தவன் பின்பு தன் கைகளில் அவளை அள்ளிக்கொள்ள , அவனுடைய ஸ்பரிசத்தில் கண் திறந்து பார்த்தவளின் கைகள் அனிச்சை செயல் போல அவன் புதர் தாடியை தடவியது ,அவளின் செய்கையில் வாய்விட்டு சிரித்தவன் கண்களுக்கு திக்கு தெரியாத சிறு பிள்ளை போலவே அவள் தெரிந்தாள் , ஏதோ ஒன்று அவனை உந்த முன்பின் அறியாத அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட , அதில் அதிர்ந்தவள் கோபமாக அவன் தாடையை தள்ளிவிட்டவள்.



"ஏய் முகத்துல எச்சில் பண்ணாத ,எச்சிதம்பலம் வந்துடும்" என்று தன்னை முறைத்தபடி பார்த்து கூறியவளை கண்டு மனதில் ,

'சரியான கிறுக்கி. அப்போ உதட்டுல கொடுத்தா ஓகேவா இவளுக்கு' என்று நினைத்தவன் வெளியில் அமைதியாக

"சரி " என்று கூறியபடி அவளை உள்ளே தூக்கி சென்று தன் சித்தப்பாவின் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 2








இதுவரை தன் எதிரில் கால் மேல் கால் போட்டு அமராதவன்... இன்று அமர்ந்தது மட்டும் இல்லாமல் ஒரு பெண்ணை மடியில் உட்காரவைத்ததைப் பார்த்த சேகரின் கோபம் பன்மடங்கு அதிகரிக்க , தன் முன்னால் இருந்த டீ டேபிளை ஆத்திரத்துடன் உதைக்க... அது தெறித்து ஸ்ரீ முன்னால் விழுந்தது, அதைப்பார்த்தவனின் உதடுகள் ஏளன புன்னகையை உதிர்க்க அவன் மடியில் இருந்தவளோ துள்ளி குதித்து அவனை விட்டு விலகி நின்று பேந்த பேந்த முழித்தபடி அவர்களைப் பார்த்திருந்தாள்.





அவள் விழிகளைப் பார்த்தவன் வந்த சிரிப்பைக் கட்டுப் படுத்தியபடி அவள் அருகில் சென்று தன் கரத்தை அவள் தோள் மீது போட்டு அருகில் இழுத்தவன்,





"கிறுக்கி இவங்க எல்லாம் யாருனு உனக்கு தெரியாது இல்ல... வா இன்ட்ருடுயூஸ் பண்ணி வைக்கிறேன்... இவர் என்னோட பெரிய சித்தப்பா சேகர்.. இவர் கடலூர் டிஸ்ட்ரிக்ட்ல ஃபேமஸ் லாயர்"என்றபடி.. தனக்குமட்டும் சக்தி இருந்தால் பார்வையாலேமே அவனை எரித்து விடும் நிலையில் இருந்த சேகரை காட்டியவன் , பின்பு குமாரை நோக்கி கையை காட்டி,





"இவர் என்னோட ரெண்டாவது சித்தப்பா குமார் ... இவர் தாசில்தாரா இருக்கார் ... அப்புறம் ரொம்ப நல்லவர்" என்று குமாரை பார்த்து கண்ணடித்தபடி கூறியவன் , பின்பு கிருஷ்ணாவை கை காட்டி,





"இவர் என்னோட மாமா கிருஷ்ணா பெரிய பிசினஸ்மேன் ... எங்க அண்ணனுக்கு மூத்த பொண்ணை கொடுத்திருக்கார் ....அதுமட்டும் இல்லை இப்போ விருப்பமே இல்லாத எனக்கு .. அவரோட ரெண்டாவது பொண்ண வலுக்கட்டாயமா கொடுக்க நினைக்கிறார்" என்றபடி நக்கல் பார்வை பார்க்க, அதில் முகம் கறுக்க,


"ஸ்ரீ......" என்று ஆத்திரத்துடன் அழைத்தவரை





"வெயிட் மாமா .... எல்லாரையும் இவளுக்கு அறிமுகம் படுத்திட்டு வரேன்” அலட்டாமல் கூறியவனை பார்த்து அங்கு இருந்தவர்களுக்கு கொலைவெறியே வந்தது , இருந்தும் பல்லை கடித்தபடி பொறுமை காத்தனர். நேராக விஷ்ணுவிடம் சென்றவன்





"இவன் விஷ்ணு..... மாமாவோட பையன் சிவில் என்ஜினீயர்" இதுவரை அவ்மூவரையும் ஒருவித பயத்துடன் பார்த்தவள் , விஷ்ணுவை பார்த்ததும் "ஹாய்"என்று கூற, விஷ்ணுவோ என்னவிதமான ரியாக்ஷன் காட்டுவது என்று தெரியாமல் அவளை முறைக்கவும் , இதையெல்லாம் பார்த்த ஸ்ரீக்கு சிரிப்பு வந்தது.





ஆனால் அவளோ "ஹலோ ஹாய் சொன்னா பதிலுக்கு ஹாய் சொல்லணும்... இத கூட உங்க வீட்டுல சொல்லி வளர்க்கலயா" என்று விஷ்ணுவிடம் சண்டைக்கு போனவளை தடுத்த ஸ்ரீ,





"ஏய் நான் வெயிட் பண்ண சொன்னது எல்லாருக்கும் சேர்த்து தான்.... புரிஞ்சுதா ... முதல்ல எல்லோரும் அறிமுகம் ஆகிப்போம் அப்புறம் சண்டை போடுவோம்" என்றவனை பார்த்து தலை அசைத்தவளை கண்டவன்.. மனதில்


'ஆஹா மறுகேள்வி கேட்காம தலையை ஆட்டுதே இந்த கிறுக்கி, ரொம்ப வசதியா போச்சு ' என்று எண்ணினான்.





இந்த கூத்தையெல்லாம் பார்த்த ஹரி மனதில் 'ஆஹா இப்படி பம்முறானே ஏதோ பெருசா பிளான் பண்ணுறான்' என்று நினைத்தவனை நோக்கி புன்னகைத்தபடி வந்தவன் , ஹரி தோளில் கையை போட்டு





"என்னோட செல்ல தம்பி ...தோள் கொடுப்பான் தோழன் போல தோள் கொடுக்கும் தம்பி.... இதுவரைக்கும் அப்படிதான் இருந்துருக்கான் இனிமேலும் அப்படிதான் இருப்பான் என்று நம்புறேன்" என்றவனை பார்த்த ஹரிக்கு தொண்டையை அடைத்தது , இருந்தாலும் தான் இப்போது நெகிழும் தருணம் இதில்லை என்று நம்பியவன், ஸ்ரீயை பார்த்து,





"ஆமா இவ்வளவு நேரம் எங்களை பத்தி சொன்னியே.... மேடம் யாருன்னு சொல்லமாட்டியா " என்றபடி அவளை பார்க்க





"ஓஹ் இவங்க...."என்று தலையை ஆட்டி புன்னகைத்தவன் , பின்பு தாடியை தடவியபடி





"அதை அவங்களே சொன்னாதான் சரியா இருக்கும்" என்றவன் அவளை பார்த்து இருகைகளையும் விரித்து தலையை ஆட்டி சொல்லு என்பது போல சைகை பண்ண, அவள் எச்சில் விழுங்கியபடி அவர்கள் எல்லோரையும் பார்த்து





"என் பெயர் திவ்யதர்ஷினி....... நான் திவ்யதர்ஷினி ...... நான் ஒரு ......"என்று தயங்கி தயங்கி சொல்லியவள் பின்பு எதையோ நினைத்தபடி





"இவங்க எல்லாம் உங்களை தேடி வந்துருக்காங்க...... அப்புறம் ஏன் நேத்து நைட் நீங்க ......" என்று ஏதோ சொல்லவந்தவளை மேலே சொல்லவிடாமல் அவளை இழுத்து அணைத்து





"இங்கபாரு திவிக்குட்டி.... நேத்து நைட் நடந்தது நம்மளோட பர்சனல் அதை இங்க பேசக்கூடாது.... வேணும்னா இன்னைக்கு நைட் அதை தொடர்வோம்" என்று சரசமாக கூறியவன் , மற்றவர்களை நோக்கி





"இப்போ சொல்லுங்க உங்க பிரச்சனையை" என்றான் நிதானமாக.





ஏற்கனவே கொதிநிலையில் இருந்த சேகர் அவனின் நிதானமான கேள்வியில் வெகுண்டு எழுந்தவர் , அவன் சட்டை காலரை பற்றி





"என்ன தைரியம் இருந்தா கண்டவளை கூட்டிட்டு வந்து கூத்து அடிச்சுருப்ப அதையும் எங்ககிட்ட வெட்கமே இல்லாம பெருமையா சொல்லிக்கிற...." என்றவர் அவனை கன்னத்தில் அறைய முயல்கையில்





"நிறுத்துங்க....." என்று ஆக்ரோஷமா கத்திய திவியை எல்லோரும் என்ன என்ற தோரணையில் பார்க்க, ஸ்ரீயோ 'அய்யோ இவ எதுக்கு தேவ இல்லாம மூக்கை நுழைக்கிறா' என்று மனதில் அவளை சபித்து கொண்டிருந்தான் , அவளோ





"உங்களுக்கு ஸ்ரீராமை எவ்வளவு நாள் தெரியும்" சேகரை பார்த்து கேள்வியை தொடுத்தாள்,





இங்கே ஸ்ரீயோ "அய்யோ சொதப்புறாளே" என்று வாய்விட்டு புலம்பியவன் அவளை பார்த்தபடி நிற்க





அவர் எதுவும் கூறாமல் ஸ்ரீயை முறைத்து கொண்டிருந்தார் ,பொறுமை இழந்த அவள்





"உங்களைத்தான் கேட்குறேன் ஸ்ரீராமை உங்களுக்கு எவ்வளவு நாளா தெரியும்" என்றாள்.





"எனக்கு ஸ்ரீராம்னு யாரையும் தெரியாது" நக்கலாக கூறியவரின் நக்கலை கண்டுக்காமல் ,





"அது எப்படி தெரியாமா போகும், இதோ இங்கே ஆறடி உயரத்துல இருக்குற உருவத்தை உங்க கண்ணுக்கு தெரியலையா.... நீங்க பெரிய லாயர் என்று ஸ்ரீ சொன்னாரு... ஆனா நீங்க வக்கீல் வண்டுமுருகன்னு சொல்லாம விட்டுட்டாரு..." என்று பெரிதாக சிரித்தவள்





" நெய் மீன் இருக்குன்றான் நெத்திலி மீன் இருக்குன்றான்....ஆனா நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லன்னுடாங்க அண்ணே..... ஹாஹா ....ஹாஹா அந்த வக்கீல் தானே நீங்க.. ஹாஹா" என்று சிரித்தபடி





"இம்ம் ஆளையே அடையாளம் தெரில இதுல ஜட்ஜ் பண்ணுறீங்களோ .... கிளம்புங்க கிளம்புங்க காத்துவரட்டும்....அதான் அவருக்கு விருப்பம் இல்லைனு சொல்லிட்டாரு இல்ல" என்றவள் திரும்பி ஸ்ரீயை பார்த்து கண்ணடித்தாள்.





அவள் கூறியதை கேட்ட ஹரியும் விஷ்ணுவும் கொதிநிலைக்கு சென்றவர்கள் அடிக்க கையை ஓங்க , அவர்களை தன் பார்வையாலேயே அடக்கியவரின் முகம் அவமானத்தில் சிறுத்திருந்தது, இதுவரை யாரும் அவரை நேரில் நின்று இதுபோல அவமானப்படுத்தியது இல்லை , குமாரும் கிருஷ்ணாவும் அவள் பேசியதை கேட்டு அதிர்ச்சியில் இருந்தனர், சேகர் அப்பொழுதும் ஸ்ரீயை தான் பார்த்து கொண்டிருந்தார், அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் இருந்ததை பார்த்தவரின் மனம் கொதித்தது யாரோ தேர்ட் கிரேடு பொண்ணு தன்னை அசிங்கப்படுத்தியதை கண்டுக்காமல் இருந்தவனை அந்நியபார்வை பார்த்தவர் பின்பு நிதானமாக திரும்பி அவளிடம்,





"எனக்கு இங்க நிக்கிற சார் ஸ்ரீதர் ஆகத்தான் தெரியும். ஸ்ரீராம தெரியாது ஒருவேளை நாங்க இங்க வருவதற்குள் பேரை மாத்திட்டாங்களோ என்னவோ" என்றவரை திருதிருனு முழித்தபடி பார்த்தவள் திரும்பி ஸ்ரீயை பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான், சேகர் மேலும்





"ஆமா முதல்ல நீயாரு .... ஸ்ரீ சம்சாரமா .... இல்ல லவ்வரா..... எனக்கு தெரிஞ்சு நீ ரெண்டுமே இருந்துருக்கு மாட்ட. வேணும்னா நேத்து அவன்கூட படுத்துருப்ப.....உன்னோட நிலை வெளில விட்டிருக்க செருப்புக்கு சமம்.... நீ எல்லாம் என்னை நக்கல் பண்ணுற.... ஏய் இங்கபாரு வந்தோமா வேலையை முடிச்சோமோ காசை வாங்கினோமான்னு போய்கிட்டே இருக்கனும்..... இங்க நின்னு பேச கூட உனக்கு தகுதி இல்லை .. இப்படி சம்பாதிக்கிறியே நீயெல்லாம் என்ன ஜென்மம், உனக்கு எல்லாம் எவன் குடிகெட்டா உனக்கு என்ன உன்னோட வயிறும் பையும் நிறையுனும்.... அடுத்த பொண்ணோட வாழ்க்கையை கெடுக்குறியே நீயெல்லாம் பெண் ஜென்மமாய் பிறந்ததுக்கு கேவல படனும்....தூ....இதுக்கு நீ செத்து போகலாம்...." வேங்கையாக சீறியவரின் வார்த்தைகளை கேட்டவளின் காதுகளில்





"என்னங்க பெரிய தப்பு பண்ணிட்டோம் ....இவ பொறந்த அன்னிக்கே இவ கழுத்தை திருகி போட்டிருந்தா இப்போ இப்படி பண்ணிருப்பாளா .... எப்படி உனக்கு உன்கூட பிறந்தவளின் குடியை கெடுக்க உனக்கு மனசு வந்துச்சு ....த்தூ .... நீயெல்லாம் பெண் ஜென்மமாய் பொறந்ததே கேவலம் டி .....செத்துபோ நாயே" என்ற அழுகுரல் மீண்டும் மீண்டும் கேட்க ,





அவள் மனநிலையும் மாறியது மூக்கு விடைக்க, கண்கள் சிவக்க உதடுகள் துடிக்க கண்களில் விடாமல் கண்ணீர் பொழிய நடுங்கும் கைகளால் சேகரின் சட்டையை பிடித்தவள்





"நான் கேவலமான ஜென்மமா ....சொல்லுடா ... சொல்லு ....நான் கேவலமானவளா" என்று ஆங்காரமாய் கத்தியபடி அவர் சட்டையை உலுக்கவும் யாரும் எதிர்பார்க்காத வேளையில் சட்டென்று நடந்த நிகழ்வால் அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.





அதில் முதலில் சுதாரித்த ஹரி அவளை பிடித்து தள்ளிவிட்டு தன் தந்தையை அணைத்து கொண்டான். தள்ளிய வேகத்தில் தடுமாறி கீழே விழுந்தவள் அருகில் இருந்த சுவற்றில் முட்டி கொண்டாள், செய்வதறியாது திகைத்து விழித்தவள் அவர்களை பயத்தோடு பார்த்த திவி பின்பு ஸ்ரீயை திரும்பி பார்த்து





“நான்.....நான் ......வே.....ணும்னு....பண்...” என்றவளை , ஸ்ரீ முறைத்த முறைப்பில் வாயை தன் கைகள் கொண்டு பொத்திக்கொண்டாள் .





அதற்குள் சுதாரித்த குமார் சேகர் அருகில் சென்று கண்கலங்க பார்த்தவர் , இதுவரை தலைநிமிர்ந்து சிங்கம் போல கர்ஜித்து வலம் வந்த தன் தமயன் இன்று சிறுபெண்ணால் ஏற்பட்ட அவமானத்தால் தலைகுனிந்து செய்வதறியாது திகைத்து நிற்பதை கண்டவரின் முகம் கோபத்தில் சிவந்தது, அதே கோபத்துடன் அவளை நோக்கி திரும்பியவரை கண்ட ஸ்ரீ அவரின் நோக்கம் புரிந்தவன் விரைந்து சென்று திவியின் அருகில் நின்று கொண்டான் , அவனின் செய்கையை பார்த்த குமார் அருவெறுப்புடன் முகத்தை சுழித்து ”ச்சை” என்றவர் திரும்பவும் சேகரிடம் சென்று ,





“நாம கிளம்பலாம்..... இங்க இருக்கிறது நம்ம ஸ்ரீ இல்லை இங்க இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்குத்தான் அசிங்கம்....." என்றவரை இடைமறித்த கிருஷ்ணா





“அத்தான்... இருங்க அவசரப்படாதிங்க.. . ஸ்ரீ கிட்ட பேசிப்பார்ப்போம்” என்றவரை கோபத்துடன் பார்த்த குமார் ,





“ அவன் இன்னும் எங்களை செருப்பால் தான் அடிக்கலை... அதையும் வாங்கிட்டு போகலாம்னு நினைக்கிறீங்களா...சொல்லுங்க அதையும் வாங்கிட்டு போயிடுவோம்” என்றவர் மேலும்





“ பாரு கிருஷ்ணா .... நல்லா பாரு... இவன் இதுவரைக்கும் தலை குனிந்து பார்த்து இருக்கியா.... வாயடைச்சு நின்றிருந்ததை பார்த்திருக்கியா.... இவனை எதிர்த்து யாராவது ஒரு சொல் சொல்லி பார்த்திருக்கிய....” என்று தன் அண்ணன் பட்ட அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியமால் கத்தினார் குமார்.





தன் தம்பியின் சத்தத்தால் அதிர்ச்சியில் இருந்து மீண்ட சேகருக்கு சுற்றுப்புறம் உரைக்க , நடந்ததை நினைத்து பார்த்தவரின் முகம் வேதனையில் கசங்க ஸ்ரீயை நோக்கியவரின் கண்களுக்கு ஸ்ரீ அந்த பெண்ணை இவர்களிடம் இருந்து காப்பதை போல நின்றிருந்தவனை கண்டு முகத்தில் கேலி புன்னகை தோன்ற





‘த்தூ’ என்பதைப் போல பார்த்தவர், பின்பு அங்கிருந்தவர்களிடம் போகலாம் என்பது போல தலையசைத்தவரை பார்த்த கிருஷ்ணா சற்று தயங்கியவாறே ,





“அத்தான்....மஞ்சு.... மஞ்சுக்கு .....” தொண்டை அடைக்க சொல்லவந்ததை சொல்ல முடியாமல் திணறியவரை பார்த்த சேகர் எதையோ யோசித்து முடிவு எடுத்தவராக அருகில் இருந்த ஹரியை பார்த்து





“ஹரி.... மஞ்சுவை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா” என்றவரை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்,ஒருவனை தவிர.





“ அப்பா நான் எப்படி....” என்று தடுமாறியபடி ஸ்ரீயை பார்த்தவன் பின்பு





“அது சரியா இருக்காதுப்பா....மஞ்சுவும்....இதுக்கு சம்மதிக்க மாட்டாப்பா” என்று கூறினான். மஞ்சுக்கு சம்மதம் என்றால் தனக்கு சம்மதம் என்று கூறியவனை கண்டுகொண்ட சேகர் ,





“மஞ்சு நாங்க சொன்ன புரிஞ்சுப்பா... முதல உனக்கு சம்மதமா சொல்லு ..... சில பேரை போல புடிச்சிருக்கு என்று சொல்லிட்டு , தேதி குறிச்ச பிறகு விருப்பம் இல்லைனு சொல்ல கூடாது.” என்றவர்,


பின் ஹரியை தீர்க்கமாக பார்த்தபடி





“ தாலி கட்டினப்பிறகு கடைசிவரை உன் பொண்டாட்டியை எந்த சூழ்நிலையிலயும் கைவிட கூடாது.... அவளின் கடந்தகாலத்தை பத்தி பேசி மனதையும் கொல்ல கூடாது” என்றவர் மேலும்





“ இதுக்கு சம்மதம்னா சொல்லு , மத்ததை நான் பார்த்துகிறேன் ....கிருஷ்ணா உனக்கு இதுல சம்மந்தமா....நான் வளர்த்த வளர்ப்புதான் பொய்த்துபோச்சு .... ஹரி என்னோட ரத்தம் அவன் முறை தவறமாட்டான்.... என்னை நம்புறியா கிருஷ்ணா” என்றவர் அங்கிருந்த அனைவரையும் பார்த்தபடி


"இனி இங்கே கெஞ்சி பிரயோஜனம் இல்லை" என்றபடி ஸ்ரீ அருகில் வந்த சேகர் , அவனை பார்த்து





"நீ எதுக்காக இப்படி பண்ணுறேன்னு தெரில.... ஆனா இனிமே ஊரு பக்கம் வந்துடாத.... நாங்க செத்தாலும் உனக்கு சொல்லமாட்டோம் அதேதான் உனக்கும் " என்றபடி கீழே கிடந்த திவியை ஒரு பார்வை பார்த்த சேகர் , குமாரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். ஸ்ரீ அருகில் வந்த கிருஷ்ணா





“நீ என் அக்கா பையனா இருக்கலாம்.....ஆனா நீ பண்ணியதை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்...... உன்னை நிம்மதியாகவும் இருக்க விடமாட்டேன் " என்றபடி வெளியேறியவரை தொடர்ந்து விஷ்ணுவும் வெளியேறினான்.


ஸ்ரீ அருகில் வந்த ஹரி அவனை ஏறிட்டு பார்க்க எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் மரக்கட்டைபோல இருந்தவனை பார்க்க பார்க்க கோபம் தலைக்கு ஏற, ஏதோ சொல்லவந்து பின்பு சொல்லமுடியாமல் வெளியேறினான்.





அனைவரும் வீட்டைவிட்டு சென்றவுடன் கண்மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்தியவன், திரும்பி பார்க்க அவளும் அவனைத்தான் பயத்துடன் பார்த்து கொண்டிருந்தாள். அவளை பார்த்து புன்னகைத்தவன் அவள் எழுந்துகொள்ள தன் கைகளை அவள் புறம் நீட்டினான், அதில் நிம்மதி அடைந்தவள் சிரித்த முகத்துடன் அவன் கைகளை பற்றி எழுந்து நின்றாள் .





"ஆமா நீ எப்படி இங்கே வந்த" அவள் கைகளை வருடியவாறே கேட்டவனை பார்த்து பெரிதாக புன்னகைத்தவள்





"நேத்து அந்த மலை உச்சியில் இருந்து உங்க கார் இறங்கிச்சா ...... அது ரெண்டாவது வளைவில் போய் திரும்புச்சு ,நீங்க எங்கதான் போறீங்கன்னு பார்த்துட்டு குதிக்கலாம்னு நினைச்சேன்னா ....அப்போ...." தலையை அசைத்து கண்களை உருட்டி சிறுபிள்ளையாய் கதை சொல்லுவது போல கூறியவளை புருவம் சுருக்கி பார்த்தவன் பின்பு





"அப்போ என்னாச்சு" என்று ஊக்குவிக்க





"அப்போ....காதுல திடீர்னு யாரோ குதிக்காத ..... குதிக்காதன்னு.... சத்தமா கதறுன மாதிரி இருந்துச்சா... அதான் குதிக்காம உங்களை தேடி வந்தேன்" என்று முடித்தவளை எதுவும் கூறாமல் அவளையே பார்க்க அதில் துணுக்குற்றவள் ,





"ஏன் அப்படி பாக்கிறீங்க .... "தயங்கி தயங்கி கேட்டவளை பார்த்தவன்





"சாப்பிட்டியா...." என்று கேட்க , அவள் இல்லை எண்ணும்விதமாக தலை அசைத்தாள் .





"சரி வா எனக்கும் பசிக்குது ....முதல்ல சாப்பிடலாம்" என்றழைத்தவனை மகிழ்ச்சியுடன் பார்த்தவள் வேகமாக தலையசைத்தபடி வெளியே ஓடினாள் , அவளுக்குத்தானே தெரியும் அவளின் பசியின் கொடுமை .





அவளின் செய்கைகளை பார்த்தவன் ஒன்றும் கூறாமல் அவள் விட்டு சென்ற கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியேறினான் , கார் அருகில் நின்றிருந்தவளை பார்த்தவன் அங்கே சென்று கைப்பையை அவளிடம் நீட்டினான், பின்பு கார் கதவையும் திறந்து விட்டு ஏறிக்கொள் என்பது போல தலை அசைக்க, பற்கள் தெரிய சிரித்தவள் சந்தோசத்துடன் காரில் ஏறி அமர்ந்தாள்.





காரை கிளப்பியவன் வழி நெடுகிலும் எதுவும் பேசாமல் அமைதியாக வருவதை பார்த்தவள், அவன் மூஞ்சை பார்ப்பதும் பின்பு தன் கை விரல்களை முறுக்குவதுமாக இருந்தவளை பார்த்தும் பார்க்காத போல இருந்தவன் பிரபலமான ஹோட்டல் முன்பு வண்டியை நிறுத்தினான். அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றவன், நான்கு பேர் அமரும் இருக்கையில் அமர்ந்து அவளை தன் எதிர் இருக்கையில் அமருமாறு சைகை செய்தான் பின்பு அவளிடம் மெனு கார்டை நீட்டியவன் , சர்வர் வந்தவுடன்





"என்ன சாப்பிடுற" மெனு கார்டை நோண்டியபடி கேட்க





"ரவா தோசை" என்றவளை பார்த்தவன் ,பின்பு பேரரிடம் "ஒரு ரவா தோசை , ரெண்டு இட்லி " சொல்லி முடிக்கும் முன்பே ,மீண்டும் அவள்





"ஒரு செட் மினி இட்லி..... ஒரு தயிர் வட.... ரவா கிச்சடி ஒன்னு அப்புறம் .... குழி பணியாரம் ஒரு செட் அவ்வளவுதான் " என்றவளை இடைமறித்த சர்வர்





" மேடம் குழி பணியாரம் ஈவினிங் டைம்ல தான் கிடைக்கும்" என்றவனை ஏமாற்றமாக பார்த்தவள் "அப்போ ஆப்பமும் தேங்காய் பாலும் கிடைக்குமா" கண்கள் மின்ன கேட்டவளை பார்த்த ஸ்ரீ





“இது எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க" என்று சர்வர்ரிடம் கூறியவன், தனக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை என்னும் விதமாக அங்கே ஓடிக்கொண்டிருந்த டீவியை பார்த்துக்கொண்டிருந்தான் ஸ்ரீ.





இதை எதையும் கவனிக்கும் மனநிலையில் அவள் இல்லை ,எப்போ சாப்பாடு வரும் என்னும் விதமாக சர்வர் சென்ற திசையே பார்த்தபடி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் பருகி கொண்டிருந்தாள் . சிறிது நேரம் சென்றவுடன் ,





"அச்சச்சோ ....தண்ணிய ஃபுல்லா குடிச்சுட்டேனே... வயிறு ரொம்பினது போல இருக்கே ..."என்று யோசித்தவள் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தாள் . அவள் செய்கைகளை பார்த்தும் பார்க்காது போல இருந்தவன் அவள் எழுந்ததை பார்த்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்த , சுண்டு விரலை தூக்கி காட்டியவள்





“யூரின் டேங்க் ஃபுல்லா ஆகிடுச்சு ரிலீஸ் பண்ணிட்டு வரேன்" என்றவளை பார்த்து சிரிப்பு வர இருந்தும் முகத்தை வெறுமையாக வைத்து கொண்டு போ என்பது போல தலை அசைத்தான்.





ஆர்டர் பண்ணிய அனைத்தையும் ஒரு பிடி பிடித்தவள் , வயிறு நிரம்பியதால் மூச்சுவாங்க நடக்க முடியாமல் உருண்டுகிட்டே வந்தவளின் கை பிடித்து இழுத்து வந்தவன் அவளை கார் உள்ளே தள்ளி தானும் அமர்ந்து காரை கிளப்பினான். காரில் ஏறியவுடன் உண்ட மயக்கத்தில் கண்கள் சொருக கார் மலை மேல் ஏறுவதும் தாலாட்டுவதை போல இருக்க சுகமாக உறங்கினாள். சிறிது தூரம் சென்றவன் ஒரு இடத்தில் காரை நிறுத்தியவன் , அவளை உலுக்கி எழுப்ப கண்விழித்து பார்த்தவளை இறங்குமாறு சைகை செய்து தானும் வண்டியை விட்டு இறங்கினான்.





"அதோ தெரியுது பாரு அதான் நேத்து நீ சூசைடு பண்ண இருந்த இடம்... " என்றவனை புரியாமல் பார்க்க





"என்ன ஒன்னும் புரியலையா ....எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கேன்னு" என்றவனை பார்த்து ஆமா என்னும் விதமாக தலை அசைத்தவளை பார்த்தவன் ,





"இப்போ நீ நேரா அங்க போற... நீ இப்போ குதிக்கிறியோ இல்ல நைட் குதிக்கிறியோ அது உன்னோட விருப்பம் .... ஆனா இன்னையோட உன்னோட கதை முடிஞ்சு இருக்கணும் புரியுதா ....."





கோபமாக பேசியவனை பார்த்து மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் கிறுக்கி .

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 3





தான் உச்சியில் இருந்து குதி என்றதை கேட்டு மலங்க மலங்க விழித்தவளை பார்த்தவன்





“என்ன சோறு எல்லாம் போட்டான் இப்போ குதிக்க சொல்லுறான்னு பார்க்கிறிய” என்றவனை பார்த்து வேகமாக தலையை ஆட்டினாள் .





“அது நீ தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு பண்ண உதவிக்கு” என்றவன் மேலும்





“ ஆமா யாருன்னு தெரியாத உன்னை வீட்டுக்குள்ள விடுறதுக்கு என்னை என்ன உன்னை போல அரை கிறுக்கன் நினைச்சியா” என்றவன் தொடர்ந்து,





“நான் தப்பு கணக்கு போட்டுட்டேன் ... .நீ ஒரு முழு கிறுக்கின்னு தப்பா கணக்கு பண்ணிட்டேன் .... ஆனா நீ பேசினதை வச்சு பார்த்த போதுதான் தெரியுது நீ எல்லாம் திரிஞ்ச விவரமான அரை கிறுக்கின்னு” அடக்கப்பட்ட கோபத்தில் சீரியவன் , மேலும் கோபம் அடங்காமல்





“ என்ன துணிச்சல் இருந்தா என் சித்தப்பா சட்டையை பிடிப்ப....” என்ற ஶ்ரீ “அவரை யாருன்னு நினைச்சே.... அவர்கிட்ட நின்னு பேசுறதுக்கே பயப்படுவாங்க... அவர் சட்டையை போய்” என்று கோபத்தில் கத்தியவன் ஆத்திரம் அடங்காமல் அவள் கழுத்தை நெறிக்க தொடங்கினான்.





கழுத்தில் ஏற்பட்ட திடீர் அழுத்தத்தால் கண்கள் கலங்க மூச்சுவிட சிரமப்பட்டாள் திவி , இருந்தும் அவன் தன்னை திட்டியதை பொறுத்து கொள்ள முடியாதவள்,





“அப்.....புறம்..... ஏ......ஏன்.... நேத்து .... நீ...” என்று தடுமாறியவளை பார்த்தவன் “ச்சை” என்றபடி அவளை உதறி தள்ளினான்.





தள்ளிய வேகத்தில் எட்ட சென்று விழுந்தவள், கைகளில் உள்ள மண்ணை தட்டியபடி எழுந்து நின்று அவனை முறைத்து பார்த்தவள் பின்பு வேகமா அவன் அருகில் வந்து நின்று ,





“ அப்புறம் என்ன டேஷுக்கு நேத்து நைட் என்கிட்ட அப்படிசொன்ன” மேல்மூச்சு வாங்க கேட்டவளை பார்த்தவன் , அடப்பாவி இப்படி எல்லாம் பேசுவிய என்று நினைத்த ஸ்ரீ , அவளை நோக்கி ஆட்காட்டி விரலை நீட்டி ,





“மரியாதை....மரியாதை..” என்றவனின் விரலை பிடித்தவள் அதை பின்புறமாக மடக்கி “அப்படிதான் பேசுவேன்... என்னடா பண்ணுவ” என்றவள் மேலும் அவன் விரலில் அழுத்தத்தை கொடுத்தாள் , பெரு வலி எடுக்க ஆண் என்ற ஈகோ தலை தூக்க பல்லை கடித்து வலி பொறுத்தவன் , அவள் பிடித்திருந்த தன் கையேடு சேர்த்து அவள் கையையும் சுழற்றி அவள் முதுகு புறம் கொண்டு வந்தவன் தன்னோடைய மற்றோர் கையால் அவள் பின்மண்டையை தட்டி,





"கேள்வியா கேட்குற " என்றவன் பின்பு "அதாண்டி நான் பண்ண தப்பு....நேத்து உன் காதுல குதிக்காதான்னு சொன்ன மாதிரி என் மூளையையும் ஏதோ மழிக்க அடிச்சுடுச்சு போல ...." என்றவன் மேலும் ஆத்திரம் தீராமல்





“ உன்ன அப்பவே புடிச்சு தள்ளி இருக்கணும்.... என் கண்முன்னாடி ஒரு உயிர் போக வேணா நினைச்சுதான் உன்கிட்ட அப்படி பேசினேன் .... இதுவே வேறொரு சமயமா இருந்திருந்தா , உன்னை என் வீட்டுல பார்த்தப்பவே கழுத்தை புடிச்சு தள்ளிருப்பேன் ....என்னோட கிரகம் உன்னால ஒரு காரியம் ஆகா வேண்டியதா இருந்தது அதான் உள்ள தூக்கிட்டு போய்ட்டேன்.... புரியுதா ....”” என்றவன் மேலும் கோபம் அடங்காதவனா





“தெரியாமத்தான் கேட்குறேன் யாரு கூப்பிட்டாலும் , இல்லசோறு போட்டாலும் போய்டுவியா ...” என்றவனை தன் கால்கள் கொண்டு உதைத்தவள் “விடுடா.... விடு ....” என்று திமிறியவளை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்த படி





“இப்போ புரியுது .... உன்னை போல மோசமான பொண்ண வச்சுக்கு முடியாதுனு தானே உங்க வீட்டுல துரத்தி விட்டாங்க .... ஏய் ஒழுங்கா சொல்லுடி என்ன பண்ணிட்டு வந்து இப்படி கிறுக்கியா அலைஞ்சுக்கிட்டு இருக்க” என்றதை கேட்ட திவி வெறிகொண்டது போல ஆவேசமாக





“ஆமா டா..... என்ன அடிச்சு தான் துரத்தி விட்டாங்க.... இப்போ அதுக்கு என்ன ..... நான் .... நானு.....” என்று பெருங்குரலெடுத்து அழுதவள் மீண்டும் ஆவேசமாக





“ என்னோட சந்தோசத்தை எல்லாம் கெடுத்துட்டா அந்த டிடி..... ஏய் தேவா உன்ன விடமாட்டேன்..... உங்க எல்லாரையும் விடமாட்டேன் அதுக்கு முன்னாடி உன்னையும் விட மாட்டேண்டா.... நான் செத்து ஆவியா வந்து முதல உன்னோட உயிரைத்தான் எடுப்பேன்...” என்று சிறுபிள்ளை போல சபதம் எடுத்தவளை பார்த்தவன் சத்தம் போட்டு சிரித்தபடி அவளை தன்னிடம் இருந்துவிலக்கியவன் , பின்பு அவளை பார்த்து கண்ணடித்து





“ ஐ அம் வைட்டிங் கிறுக்கி ” என்றபடி காரை நோக்கி சென்ற ஸ்ரீ , உள்ளிருந்த கவரில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து வந்தவன் அவளிடம் நீட்டியபடி ,





“இந்தா இது பாரின் சரக்கு.... அடிச்சேனா பயம் தெரியாது... கப்புன்னு அடிச்சுட்டு டக்குனு குதிச்சுடு... உன்னோடமுருக்ஸ்சால கூட காப்பத்த முடியாது” என்றபடி காரை நோக்கி சென்றவன் , திரும்பி நின்று





“ நீ பிறந்ததுக்கான பிறவிபயனை இன்னைக்கு அடைச்சுட்ட.... மூணு மாசமா என்னால முடியாத காரியத்தை... சில நிமிஷத்துல நீ பண்ணிட்ட..... எனக்கு ஹெல்ப் பண்ணுறதுக்கு தான் உன்னோட சாவு ஒரு நாள் தள்ளி போயிருக்கு போல.... அதனாலமறக்காம ......” என்றவன் தலையை ஒரு பக்கமா சாய்த்து நாக்கை கோணலாக ஒரு பக்கமாக துருத்தி சாவது போல சைகை பண்ணவன், மேலும்





“ நீ பழிவாங்க வரும் போது சொல்லு ..... சப்பல் துடைப்பம்எல்லாத்தையும் எடுத்து மறைச்சுவச்சுடுறேன்.... வரட்டா திவிகுட்டி” நக்கலாக சொல்லியபடி காரில் ஏறி மறைந்தான்.





காரில் ஏறி சென்றவனை வெறித்தவள் பின்பு வேகமாக தலையை மேலும் கிழுமாக ஆட்டியபடி "உன்ன விட மாட்டேன் டா.... போறேன் ..... இந்த உலகத்தை விட்டே போறேன்.....உன்னையும் பழி வாங்காமல் விடமாட்டேன் ..." கன்னத்தில் விடாமல் வழிந்த விழிநீரை துடைத்தவாரே ஆவேசமாக கத்தியவள் , பின்பு குன்றை நோக்கி செல்லத்தொடங்கினாள்.





குன்றைநோக்கி தன் இறுதி பயணத்தை தொடங்கியவளை பார்த்து பதறி எழுந்தார் முருக்ஸ் , இதை எல்லாம் கவனித்த அவருடய அண்ணன் ஆனைமுகத்தான்னின் நினைவுகள் பின்னோக்கி சென்றது,





அன்றொருநாள் திவி தன் தாயுடன் கோவிலுக்குள் வந்திருந்தாள் , உள்ளே சென்றவள் நேரமாக முருகன் பெருமானை நோக்கி சென்றவளை பார்த்தா அவளுடைய தாய் ,





"குட்டிமா முதல்ல பிள்ளையாரை கும்பிட்டுதான் மத்த சாமிகளை தரிசிக்கணும்" என்றவரை புருவம் சுருக்கி பார்த்தவள் ,





" போ மம்மி...எனக்கு முருக்ஸ்தான் புடிக்கும்...அவரு எவ்வளவு கெத்தா வள்ளியை விரட்டி விரட்டி காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்காரு ....அதுமட்டும் இல்லை.... இதோ இருக்காரே தொந்திசாமி இவருக்கு சில பேரு ரெண்டு பொண்டாட்டின்னு சொல்லுறாங்க சில பேரு இல்லைனு சொல்லுறாங்க.... ஆனா முருக்ஸ்க்கு ரெண்டு பொண்டாட்டி ,இருந்தாலும் தையிரியமா எல்லார் முன்னாடியும் நெஞ்சை நிமிந்து காட்டிட்டு நிக்கிறார்....இப்போ புரியுதா யாரு ஆபத்துல ஹெல்ப் பண்ணுவாங்கனு" என்றவளை தலையில் அடித்தபடி





"வாலு எப்படி எல்லாம் சிந்திக்கிற ....நீ பேசின பேச்சுக்கு உன் கண்ணை பிள்ளையார் குத்தப்போறார் பாரு" என்று கிண்டல் அடித்தபடி உள்ளே சென்றனர்.





இதை நினைவு கூர்ந்தவரின் மனதில் 'என்னை மதிக்காமல் சென்றாய் அல்லவா அதற்க்கு பலன் இன்று அல்பாயுசில் போக போகிறாய்'என்று எண்ணியவர் தன் தம்பியை நோக்கி





"பாவம் அப்பெண் அவள் விதியை முடித்து விடு , மேலும் துன்பத்தை தராதே தம்பி" என்றவரை பார்த்த முருக்ஸ் "இருந்தாலும் அண்ணா அவள் என் வெறித்தனமான பக்தை....அதுவும் இல்லாமல் .....வள்ளியும் ...."என்றவரை இடைமறித்த ஆனைமுகத்தான் , "நம் சொந்த பிரச்சனையை நம் பிள்ளைகளிடம் காட்டக்கூடாது" என்றார் , முருக்ஸ் சிறு யோசனைக்கு பிறகு "சரி அண்ணா அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சற்றென்று எழுந்த பெரியவர் , "தம்பி என்னோட பக்தைக்கு ஏதோ பிரச்சனை , அவள் வருசத்துக்கு ஒரு தடவை என்னை தரிசிப்பவள்.... நான் சென்று வருகிறேன்" என்று கிளம்பியவரை பார்த்த முருக்ஸ் வாயடைத்து போனார் மனதில் 'வருசத்துக்கு ஒரு தடவை பார்பவளையே காக்க நீ செல்லுகிறாய் ....ஆனா இவள் வாரம் இரண்டு தடவை என்னை தரிசிப்பவள்... " என்று சிந்திக்க ஆரம்பித்தார்.





வீட்டிற்க்குள் நுழைந்த ஸ்ரீ எதுவும் செய்ய தோணாமல் சோபாவில் அமர்ந்தவனின் மனோமோ ஏதேதோ சம்பவங்களை நினைத்து பார்த்தது, அதில் உண்டான வலியால் தலையை அழுந்த பற்றியவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியாது, அதை துடைக்க கூட தோன்றாமல் கண்களை இருக்க மூடியவன் சோபாவில் தலை சாய்ந்தான். அவன் சிந்தனைகள் மனோமோ நிகழ சாத்தியம் இல்லாத விஷயத்துக்காக பெரிதும் ஏங்கியது, பின்பு அவனின் சிந்தனைகள் தன் சித்தப்பாவை நோக்கி சென்றது.





நான்கு வயதாக இருக்கும் போதே தந்தையை இழந்தவன் ஆனால் இதுவரை தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் பார்த்துக்கொண்டார் சேகர், தன் மகன் ஹரியை விட ஸ்ரீ மேலதான் பாசம் அதிகம் அதனால் தான் தனக்கு தொழில் வாரிசாக ஸ்ரீயை நினைத்தவர் அவனையும் தன்னை போலவே லா எடுத்து படிக்க ஊக்குவித்தார், அவர் ஆசையை போலவே ஸ்ரீயும் அதில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தான் ஆம் அவன் ஒரு வளர்ந்துவரும் வழக்கறிஞர.





சிந்தனைகள் தேவை இல்லாத திசையில் செல்வதை உணர்ந்த ஸ்ரீ , காலையில் நடந்த பிரச்சனைகளால் தலை வலிப்பது போல உணர்ந்தவன் சிறிது ஓய்வு எடுக்க எண்ணி படுக்க சென்றான். சிறிது நேரம் கழித்து எழுந்தவன் நேரம் பார்க்க ஐந்தரை என்று காட்டியது , பசி வயிற்றை கிள்ள இன்னும் சிறிது நேரம் கழித்து சென்றால் நன்றாக இருட்டி விடும் என்பதால் உணவருந்த வெளியே சென்றான்.





காலையில் உணவருந்திய அதே உணவகத்துக்கு சென்றவன் காலை போலவே ரெண்டு இட்லி எடுத்து வர செய்து உண்ண தொடங்கினான் அப்போது,





“ சார் மேடம் வரலையா.... காலைல குழி பணியாரம் கேட்டுருந்தாங்க.... இப்போ ரெடியா இருக்கு..... எடுத்து வரவ” என்று காலையில் பார்த்த சர்வர் ஆர்வமுடன் கேட்க ,





இவன் தலை சரி என்னும் விதமாக ஆட்டியது அவன் உணர்வதுற்கு முன்னமே. சிறிது நேரம் வெயிட் பண்ணி பார்த்தவன் பொறுமை இழந்தவனாக,


‘இது கிறுக்கி நியாபகத்தால வாங்கல ....எனக்காக வாங்கியது’ மனதில் இருபதாவது தடவையாக சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் பார்சல் வர அதை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.





அப்பார்ஸலை பின் சீட்டில் தூக்கி விசியவனின் மணம் திரும்பவும் காலையில் நடந்த நிகழ்வை அசை போட்டது, கூடவே தன் சித்தப்பாவிற்காக வருந்தியவன் இந்நேரம் அனைவரும் ஊர் போய் சேர்ந்து இருப்பார்கள் என்று எண்ணினான். ஊரில் இருந்து வரும் போதே அவர்களுடன் எந்தவித தொடர்பும் இருக்க கூடாது என்று எண்ணியவன் தான் உபயோகித்த சிம்மை உடைத்தெறிந்தான், எப்பொழுதாவது இந்த நான்கு மாதத்தில் ஊரில் நடப்பதை அறிந்து கொள்ள தனக்கு மிகவும் நெருங்கிய மற்றும் விசுவாசமான ஆளிடம் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளவான்.





இன்றும் அவரை தொடர்பு கொண்டவன் அவர் அழைப்பை ஏற்றவுடன்,





“ ஹலோ.... அங்கே சிச்சூவேஷன் எப்படி இருக்கு ...அம்மா எப்படி இருக்காங்க” என்ற கேள்விக்கு, அவர் கூறியதை கேட்டவன் பல்லை கடித்தபடி





“மஞ்சுஉஉஉ.......” என்று ஆத்திரமாக அழைத்தவன் பின்பு “ என்ன நினைச்சுட்டு இருக்கா அவ மனசுல.....” என்று சீறியவனுக்கு மறுமுனையில் இருப்பவர் கூறிய பதிலில் கோவம் தலைக்கு ஏற,


“வரேன்..... வந்து இந்த ஸ்ரீ யாருன்னு காட்டுறேன்” ஆத்திரத்துடன் கூறியவன் தொலைபேசியை துண்டித்தான்.





அதே ஆத்திரத்துடன் காரில் ஏறி அமர்ந்தவன் ஸ்டேரிங் வீல்லை ஓங்கி குத்தியவன், சற்றுமுன் தொலைபேசி வழியே வந்த அந்த செய்தி ,





“ ஸ்ரீ..... மஞ்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா.... ஏற்கனவே உனக்கும் மஞ்சுக்கும் குறித்த தேதி நாளை மறுநாள் தானே..... அந்த தேதியே முடிவு பண்ணிட்டாங்க..... பட் அதுல ஒரு சிக்கல்..... நீ கல்யாணத்துக்கு வரணுமாம் உன் கண்ணு முன்னாடிதான் அவ கழுத்துல தாலி வாங்கிப்பாளம்.....” நினைத்து பார்த்தான்.





சத்தமாக சிரித்தவன் “ஸ்மார்ட் மூவ் மஞ்சு..... பட் அதை ஒரு கிரிமினல் லாயர் கிட்டயா காட்டுவ...” என்றவன் , தான் தனியே சென்றால் நிச்சயம் மஞ்சு இல்லை என்றால் தன் அன்னை பிளாக் மெயில் பண்ணி தாலி கட்ட வைத்து விடுவார்கள் என்று 100 சதவீதம் நம்பியவன்....எப்படி இதில் இருந்து மீள்வது என்று யோசிக்க ஆரம்பித்தவனின் மனக்கண்ணில் தோன்றினாள் கிறுக்கி. வழி கிடைத்துவிட்ட திருப்தியில் புன்னகைத்தவனின் புன்னகை சற்றென்று மறைந்தது,





“ அய்யோ அவளை சாவ சொல்லி சரக்கு வேற கொடுத்துருக்கேனே....அவளே அரை கிறுக்கி என்ன பண்ணி வச்சுருக்கானு தெரியலையே.....முருக்ஸ்.... இந்த ஒருதடவை அவளை காப்பாத்திடு” என்று வாய்விட்டு புலம்பியவன், சற்றும் தாமதிக்காமல் குன்றை நோக்கி காரை செலுத்தினான்.





வழி நெடுகிலும் அவளை எப்படி சமாதானம் பண்ணுவது என்பதை யோசித்தபடி காரை அதிவேகமாக ஓட்டியவன் , நேராக சென்று நிறுத்திய இடம் அதே குன்றின் உச்சியில், காரில் இருந்து வேகமாக இறங்கியவன் சுற்றும் முற்றும் பார்க்க அங்கே ஆட்கள் இருந்ததுக்கான அறிகுறி சிறிதும் இல்லாததை கண்டவன் , கின்றின் விளிம்பில் நின்று பள்ளத்தாக்கை எட்டி பார்த்தான் பின்பு எங்கயாவது அவளுடைய பொருட்கள் சிதறி இருக்கிறதா என்று தேடியவனின் மனம் அடித்து சொல்லியது அவள் இங்குதான் இருக்கிறாள் என்று.





“திவி..... திவிக்குட்டி......” என்று உரக்க அழைத்தவன் திரும்பி சென்று கார் கதவை திறந்து குழி பணியாரம் பார்ஸலை எடுத்தவன் , திரும்பவும்





“திவிக்குட்டி உனக்காக என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு” என்றவன் பார்ஸலை தூக்கி காட்டி


“ குழி பணியாரம் .... சுட சுட இருக்குது... நீ காலைல கேட்டில... அதான் உனக்காக வாங்கிட்டு வந்துருக்கேன்....” சொல்லியபடி திரும்பியவன் அருகில் இருந்த மரத்தில் இருந்து அசைவு வந்ததை தொடர்ந்து அந்த திசையில் திரும்பி பார்த்தவன் வந்த சிரிப்பை அடக்கி கொண்டான்.





அங்கே மரத்தில் அமர்ந்தபடி அவன் கையில் இருக்கும் பணியாரத்தையே பார்த்து கொண்டிருந்தாள் திவி, தான் பணியாரத்தை காட்டியும் வராமல் மறைந்து இருப்பவளை பார்த்தவனுக்கு எரிச்சல் வர





“எல்லாம் என் நேரம் இந்த அரை கிறுக்கிக்கிட்ட எல்லாம் கெஞ்ச வேண்டியதா இருக்கு” என்று புலம்பியவன் , அவள் திசையை பார்த்து “அய்யோ பாம்பு.....” என்று அலற , அவனின் அலறலை கேட்டவள் எதை பற்றியும் யோசிக்காமல் சற்றென்று மரத்தில் இருந்து குதித்து விட்டாள். மரத்தையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் எண்ணத்தை யூகித்தவன் மின்னல் வேகத்தில் அருகில் சென்று அவளை கைகளில் ஏந்தி கொண்டான். புன்னைகை முகமாகவே அவளை இறக்கி விட்டவன்,





“ ஆமா நீ சாகனும் முடிவு பண்ணித்தானே வந்த.... அது குதிச்சு செத்தா என்ன ..... இல்லை பாம்பு கடிச்சு செத்த என்ன.... எப்படியோ கதை முடியனும்தானே” என்றவனை வெட்டவா குத்தவானு பார்த்தவள் ,





“பாம்பு கடிச்சு சாகவா நான் சென்னைல இருந்து வந்துருக்கேன்” என்று கோவமாக கேட்டவளை புரியாமல் பார்த்தான் ஸ்ரீ.




 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 4


பாம்பு கடிச்சு சாகவா நான் சென்னைல இருந்து வந்துருக்கேன்” என்று கோவமாக கேட்டவளை புரியாமல் பார்த்திருந்தான் ஸ்ரீ,





“ ஏன் பாம்பு கடிச்சா மட்டும் உயிர் போகாத” என்றவனை நக்கல் பார்வை பார்த்த திவி ,





“ஹலோ.... ஹலோ.. என்னை என்ன ஒன்னும் தெரியாதவனு நினைச்சிட்டீங்களா .....” என்றவள் மேலும்,





“ பாம்பு கடிச்சா செத்துப்போவோம்.... தூக்கு மாட்டிக்கிட்டாலும்.....விஷம் குடிச்சாலும்.... கத்தியால் குத்திக்கிட்டாலும் சாவதான் செய்யோம்.... ஆனா அதுக்கு அப்புறம் போலீஸ் வந்து விசாரிச்சு.... அய்யய்யயோ.... நோண்டி நொங்கு எடுப்பாங்க”என்று சிலிர்த்தவளை பார்த்த ஸ்ரீ ,





“ஏன் நீ பள்ளத்தாக்குல குதிச்சா....நீ யாருனு தெரியாம போய்டுமா...” என்றவனை நீ இவ்வளவுதானா என்ற எள்ளல் பார்வை பார்த்து ,





“நீங்க கழுகு படம் பார்த்தது இல்லையா...” என்று சம்பந்தமே இல்லாமல் கேட்ட திவியை பொறுமை இழந்து பார்த்திருந்தான் ஸ்ரீ,





“அதுல பள்ளத்தாக்குல விழுருவங்களை காசு கொடுத்தாத்தான் மேல தூக்கிட்டு வருவாங்க... இங்க நான் விழுந்து ஆவியா வந்து பழி வாங்குனா... நான்தான் இதுயெல்லாம் செய்யுறேன்னு தெரியாதுல.. பகல்ல விழுந்தா கூட யாராவது பார்த்துசொல்லிடுவாங்க.. அதுக்குதான் நைட் வரவரைக்கும் மரத்துல ஏறி உட்கார்ந்துட்டேன்..” என்று கைகளை ஆட்டி அபிநயம்பிடித்தபடி கூறியவளை பார்த்து வாய்விட்டு சிரித்த ஸ்ரீ





“வாவ் ....என்னமா யோசிக்கிற .... நீ மட்டும் லா படிச்சுருந்த பெரிய கிரிமினல் லாயார் ஆகிருப்ப” என்றவன் “நீ....லாயாரா....” என்றுகேட்க, இல்லை என்று வேகமாக தலை ஆட்டி மறுத்தவள்,





“ நான்.... லாயார் இல்ல.... நானு...” என்று தொடங்கியவள் அவனை முறைத்தபடி





“என்ன போட்டு வாங்குறீங்களா” என்று கோவமாக கேட்டவளை பார்த்து சிரித்தவன் அவள் தோள்களை தனது இடதுகையால் அணைத்து ,





“பயங்கர உஷார்தான்... இந்தா பணியாரம்... உனக்காக வாங்கிட்டு வந்தேன் ...சாப்பிடு” என்று பார்ஸலை அவளிடம் நீட்டினான். அதை வாங்காமல் அவனை சந்தேகம் கொண்டு பார்த்தவளை கண்டு உள்ளுக்குள் சிரித்தபடி என்ன என்பது போல புருவத்தை ஏற்றி இறக்க , அவள்





“ எத்தனை படம் பாத்துருக்கேன்.... இதுல நீங்க ஏதாவது கலந்து கொடுத்திருந்தா....”என்று கேட்டவளை பார்த்து சிறிதுநேரம் எதுவும் பேசாமல் இருக்கவும் , அவளோ அவன் கைகளில் உள்ள பணியாரத்தை பார்த்தபடி ‘எதுவும் கலக்கலன்னுசொல்லேன்’ என்ற தோரணையில் ஏக்கமாக பார்த்திருந்தாள்.


அவளின் ஏக்க பார்வையை கண்டுகொண்டவன் , அப்பணியாரத்தை இப்போதைக்கு கொடுக்கும் எண்ணம் இல்லாதவனா ..பேச்சை வளர்க்கும் பொருட்டு, அவளிடம்





“ நிறைய சினிமா படம் பார்பபோல ” என்றவனை பார்த்து சிரித்தவள் பணியாரத்தை மறந்தவளாக,





“இம்ம்....நிறைய படம் பார்த்துருக்கேன்.... ஹாஸ்டல்ல இருந்த போது தேவா கூடா நைட் ஷோ போயிருக்கேன்” என்று ஆர்வமுடன் கூறியவளை பார்த்தவன் ‘அடேய் தேவா இவகூட நைட் ஷோ எல்லாம் போயி சுத்திருக்க.... இவளை ஏமாத்திட்டு கை விட்டுட்டியா...அதான் இப்படி அரை லூசா சுத்துறாளா’ மனதில் தேவாக்கு அர்ச்சனை செய்தவனை அவளின் கேள்வி கலைத்தது ,





“எனக்கு தல அஜித்தை ரொம்ப புடிக்கும்.... அஜித் படத்தை ஒன்னு விடாம பார்த்திடுவேன்...தேவாக்கு விஜயைத்தான் புடிக்கும் ஆனாலும் நான் அஜித் படத்துக்கு கூட்டிட்டு போய்டுவேன், ஆனா விஜய் படத்துக்கு நான் போகாம ஏமாத்திடுவேனே....” என்று பெருமை பேசியவள் ´ சரி உங்களுக்கு யாரை புடிக்கும் சொல்லுங்க” என்று சிறுபிள்ளை போல தன்னிடம் கேட்டவளை பார்த்து புன்னகைத்தவன் அவளை தன்னோடு மேலும் சேர்த்து இறுக்கியவன் , குனிந்து அவள் காதுகளில்





“எனக்கு...... நமிதாவை ரொம்ப ......ரொம்ப புடிக்கும்...” ரொம்ப என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கூறியவனை அதிர்ச்சியுடன் பார்த்தவள் அவனிடம் இருந்து விலகி நின்று கொண்டு மீண்டும் அவன் முகத்தையே பார்த்துகொண்டிருந்தாள்.





“ஏய்....ஏன் புடிக்கும்னு கேட்க மாட்டியா...” என்று கூறியபடி அவளை மீண்டும் நெருங்கியவனை, தன் ஒரு கையால் கிட்டவராதே என்று சைகை செய்தவள் மறுகையை அவனை நோக்கி நீட்டி பார்ஸலை தருமாறு கண்களால் கேட்டவளைக் பார்த்தவனுக்கு சிரிப்பு வர , அவளிடம் பார்ஸலை நீட்டியவன் அருகில் இருந்த கல்லை காட்டி ,





“அதுல உட்கார்ந்து சாப்பிடு நான் தண்ணி எடுத்துட்டு வரேன்“ என்றபடி காரை நோக்கி சென்றான். பணியாரத்தை முழுவதும் காலி பண்ணியவள் மறந்தும் உனக்கு வேண்டுமா என்று அவனிடம் கேட்கவில்லை , தண்ணீர் குடித்து பெரிய ஏப்பம் விட்டவள் அவனை பார்த்து சிரித்தபடி ,





"செம்ம டேஸ்ட்" என்று நாக்கை சப்புகொட்டியவளை பார்த்தவன் அவள் கை பற்றி விரல்களுக்கு சொடுக்கு எடுத்தவரே,





"திவி.....நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்....செய்வியா" என்று கேட்டதும்தான் தாமதம் , துள்ளி எழுந்தவள் வாய்க்குள் கைகளை விட்டு தான் சாப்பிட்டதை வெளியே வாந்தியாக எடுத்தாள். இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்ரீ ,





"ஏய் அறிவிருக்கா ...இப்படி சாப்பிட்டதெல்லாம் வொமிட் பண்ணுற....லூசா நீ..."கோபத்துடன் அவளை பார்த்து கர்ஜித்தான். "இதோ நீங்க வாங்கி கொடுத்த பணியாரத்தை வெளில எடுத்துட்டேன்.....இப்போ நான் உங்களுக்கு கடமை பட்டுஇல்லை...காலையில வாங்கிக்கொடுத்ததுக்கு ஏற்கனவே ஹெல்ப் பண்ணிட்டேன்....இதை நீங்க அள்ளிக்கிட்டு போய் வேற யார்கிட்டயாவது ஹெல்ப் கேளுங்க" என்று நக்கலாக அவனை பார்த்து கூறியவளை பார்த்தவனுக்கு கோவம் தலைக்கு ஏற ,அவள் கழுத்தை பற்றியபட





"ஏய் என்னடி நக்கலா... யார்கிட்ட உன் திமிர் தனத்தை காட்டுற ..தொலைச்சிடுவேன் தொலைச்சி " என்று கர்ஜித்தவனை தீர்க்கமாக பார்த்தவள் ,





"கோ அஹெட்.... ஆனா உனக்கு நான் ஹெல்ப் பண்ணமாட்டேன்... எப்படி எப்படி காலைல என்ன பேச்சுபேசின .. முடியாதுடா உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ" தெளிவாக பேசியவளை பார்த்தவன் தன் கைகளை அவள் கழுத்தில் இருந்து எடுத்துவிட்டு , தன் தாடியை தடவியபடி எதையோ யோசித்தவனின் முகத்தில் சிறு புன்னகை வந்திருந்தது , பின்பு முகத்தை பாவமாக வைத்தபடி,





"சரி விடு நீ ஹெல்ப் பண்ண வேண்டோம்.....இது உன்னால ஆரம்பிச்ச பிரச்னை அதான் உன்னை வச்சே முடிக்கலாம்னு நினைச்சேன்...இம்ம்..." என்று பெருமூச்சு எடுத்தவன் அவள் கைகளை பற்றி குலுக்கி ,





"எப்படியும் நான் போனவுடன் நீ சாகத்தான் போற....ஆல் தி பெஸ்ட்....இந்த தடவை உன்னோட அட்டெம்ப்ட் பெயிலியர் ஆகாம சக்சஸ் ஆகணும்னு உன்னோட முருக்ஸ் கிட்ட வேண்டுகிறேன் ..." சோகமாக கூறியவன் அவ்விடத்தை விட்டு விலகியபடி சிறிது தூரம் சென்ற ஸ்ரீ , அவளை திரும்பி பார்த்து தன் தலையை அழுத்தியபடி ,





"ஆங்....சொல்ல மறந்துட்டேன்.... நீ மேல போய் எனக்கும் ஒரு இடத்தை ரிசெர்வ் பண்ணிவை....இன்னும் கொஞ்ச நாளுல நானும் அங்கே வந்துடுவேன்" என்று கூறியபடி அவ்விடத்தை விட்டு விலகி கார் அருகில் சென்று நின்று கொண்டு , கார் கண்ணாடி வழியே அவளை பார்க்க அவள் அதே இடத்திலே திகைத்து போய் நின்றிருந்தாள், அதை பார்த்தவன் 'அடியே கிறுக்கி சீக்கிரம் என்ன பிரச்சனைன்னு கேளுடி...எவ்வளவு நேரம்தான் நான் கதவை திறக்குறதை போல நடிக்க முடியும்' என்று மனதில் புலம்பி கொண்டிருந்தான்.











பொறுமையா இருந்தா வேலைக்கு ஆகாது என்று நினைத்த ஸ்ரீ சட்டென்று வேகமாக இரும்பிய படி காரை விட்டு விலகி , கீழே குனிந்து துப்புவது போல பாவலா செய்தவனை பார்த்தவள் உண்மை என்று நம்பி அவன் அருகில் வேகமாக வந்தவளை பார்த்து சற்றென்று எழுந்து நின்று கால்களால் துப்பியதை மண்ணை போட்டு மூடுவதை போல செய்தான். அவன் அருகில் வந்தவள் ,





"என்ன செய்யுது" என்றவாறு அவன் கைகள் மேல் தன் கைகளை வைத்தாள் , அதை பற்றென்று தள்ளி விட்டவன் சற்று விலகி நின்றான். அவனின் செய்கைகளை அதிர்ச்சியுடன் பார்த்தவள் கண்களில் கண்ணீர் துளிகள் பூக்க , "ஏன் என்கிட்ட பேச மாட்டிங்களா" சிறு கேவலுடன் கேட்டவளை பார்த்தவனுக்கு ஏதோ செய்ய ,





"இல்லை பிளட் வந்துச்சு .....அதான் தள்ளி விட்டேன்" அவளை பார்த்து சிரித்தபடி கூற , பிளட் என்ற வார்த்தையை கெட்டவள் பதறிப்போய் "ஏன் என்னாச்சு .....எதுக்கு பிளட் வொமிட் பண்ணுறீங்க ...அப்போகூட உங்களுக்கும் இடத்தை ரிசெர்வ் பண்ண சொன்னிங்க....ப்ளீஸ் உங்களுக்கு என்னனு சொல்லுங்க..."என்று தேம்பியவளை பார்த்தவனுக்கு தான் சுயநலமா நடப்பதை கண்டு தன் மீதே வெறுப்பு வர இருந்தும் இதை விட்டால் வேறுவழி இல்லை என்று எண்ணியவன் , அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று மனதில் அசைபோட்டவன் ..ஒரு முடிவு எடுத்தவனாக





"திவி.... நான் சொல்லுறதை நல்லா கேட்டுக்கோ திரும்ப திரும்ப சொல்ல மாட்டேன் " என்றவன் மேலும் "எனக்கும் மஞ்சுக்கும் நாளை மறுநாள் கல்யாணம்.... அதனால்தான் இன்னைக்கு காலைல எல்லாரும் வந்தாங்க....எனக்கு அந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை....புரிஞ்சுதா" என்றவனை பார்த்தவள் புரியவில்லை என்றவாறு தலை அசைத்தவள் மேலும் ,





"ஏன்....உங்களுக்கு மஞ்சுவை புடிக்காத" என்றவளை வெறுமையாக பார்த்தவன் ,


"மஞ்சுதான் என்னோட உயிர் மூச்சு" தன் நெஞ்சை தடவியபடி கூறியவனை புரியாமல் பார்த்தவள் ,





"அப்புறம் ஏன்....." சொல்லவந்ததை சொல்லாமல் பாதியில் விட்டவளை பார்த்து கடுப்பானவன் , எரிச்சல் பட்டா வேலைக்கு ஆகாது என்றறிந்தவன் மீண்டும் பாவமாக முகத்தை வைத்தபடி ,





"எனக்கு பிளட் கேன்சர் ... உயிர் பொழைக்கிறதே பெருசுனு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்கா...."என்று சோகமாக கூறியவன் மேலும் "அப்புறம் எப்படி நான் மஞ்சுவை கல்யாணம் பண்ணிக்க முடியும் ...ட்ரு லவ் இருந்தா நம்ம லவர் நல்லா வழனும்தான் நினைப்பாங்க அதைத்தான் நானும் நினைக்கிறேன்" என்று பாவமாக கூறியவனை பார்த்தவள் , அவன் தனக்கு பிளட் கேன்சர் என்று கூறியதை கண்டுகொள்ளாமல் கடைசியாக கேட்டதை மட்டும் மனதில் போட்டு உழற்றியவள் ,





"நோ ...நோ ...நோ ....ட்ரு லவ் இருந்துச்சுன்னா நாம செத்தாலும் நம்ம கூடவே கூட்டிட்டு போய்டணும் அதுதான் உண்மையான லவ்" என்று ஆவேசமாக படபடத்தவளை பார்த்தவன் , மெதுவாக "அதுக்கு பேரு ட்ரு லவ் இல்லை ....கொலைக்கார லவ்.... அதனால்தான் நீ செத்து ...உன்னோடு உன்னோடயே ட்ரு லவ் கூட்டிட்டு போலன்னு நினைக்கிறிய" என்றவனை அதிர்ச்சியாக பார்த்தவள் பின்பு சுதாரித்து,





" சரி ரெண்டு நாள்தான் .....அதுக்கு அப்புறம் நான் இருக்க மாட்டேன்..... டீல் ஓகேவா....."என்று பேச்சை மாத்தியவளை கண்டவன் சிரித்தபடி மனதில் அப்படி வா வழிக்கு 'என்று நினைத்து வெளியே "டபுள் ஓகே ..." என்று புன்னகைத்தான் .





இரண்டு நாள் மட்டும்தான் என்றவளுக்கு , டபுள் ஓகே என்றவன் ... கார் நோக்கி சென்று அவளுக்காக கார் கதவை திறந்து பார்க்க அவள் அந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றிருந்தாள்.





‘அய்யோ வரமாட்டேன்னு பிளானை மாத்திட்டாளா’ என்று மனதில்சலித்தவன் அவளை நோக்கி சொல்ல அங்கே அவள் கைகள் கொண்டு முகத்தை மூடி அழுதுகொண்டிருந்தாள் , பதறிப்போய் அருகில் சென்றவன் ,





“ ஏய் திவி....இங்க பாரு இப்போ என்னாச்சு...எதுக்கு அழுகுற” அவள்முகத்தில் இருந்து கைகளை பிரித்தபடி கேட்டவனை பார்த்தவள் சற்றும்தாமதிக்காமல் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு, ஓ என்று கதறி அழுதாள். அவளின் இச்செயலை எதிர் பாக்காதவன் அவள் தலையை வருடியவாறு ,





“திவிகுட்டி எதுக்கு அழறாங்களாம்.....இப்போ என்கிட்ட சொல்லுவிங்களாம்”





என்று மென்மையான குரலில் கூறியவனிடம் முடியாது என்பது போல தலை அசைத்தவள் மேலும் அழுகையை கூட்ட , சற்று நேரம் தலையை வருடி கொடுத்தவன்,





“ எனக்கு....கேன்சர் சொன்னதுக்கா அழற” என்றவனை பார்த்து வேகமாக தலையை ஆட்டியவள் அவனை மேலும் இறுகஅணைத்து ,





“உ....உ ....உங்களுக்கு கஷ்டமா...இல்லையா” என்று அழுகையுடுன்கேட்டவளை பார்த்தவன், சத்தமாக சிரித்து ,





“இதே வாய்தான் என்னையும் சூசைடு பண்ண கூப்பிடுச்சு...அவங்களும் பல முறை சூசைடு பண்ண ட்ரை பண்ணுச்ச” என்றுஅவள் தலையை ஆட்டியபடி கேட்டான்.





“அது வந்து....என்னை எல்லாரும் ஏமாத்திட்டாங்க... அதான் சாக போறேன் ...





ஆனா உங்களுக்கு..மஞ்சு உயிர்தானே...உங்களுக்கு கஷ்டமாதானே இருக்கு ” என்றவளை இருக்க அனைத்தவன், தொண்டை அடைக்க “கஷ்டம்தான் ”


என்றவன் மேலே பேச முடியாமல் அமைதியாக இருக்க, அவனை அண்ணாந்து பார்த்தவள்,





“உங்களுக்கு....” என்று தயங்கிநிறுத்தியவளை பார்த்து ,





“இம்ம் எனக்கு என்ன திவி குட்டி” என்றவனை பார்த்து தயங்கி தயங்கி





“உங்களுக்கு கடைசி ஆசைன்னு ஏதாவது இருக்கா” பட் என்று கேட்டவளை பார்த்தவனுக்கு சிரிப்பு வர, வந்த சிரிப்பை அடக்கியபடி மூஞ்சை சோகமாக வைத்துக்கொண்டு,





“இருக்கு ஆனா அது நிறைவேறாத ஆசை....இம்ம்” என்று பெருமூச்சு விட்டவனை பார்த்தவள்,





“இல்ல...என்கிட்டசொல்லுங்க...நான் நிறைவேத்தி வைக்குறேன்” என்றவளை மேலும் கீழும் பார்த்த ஸ்ரீ ,





“கண்டிப்பா.... ஹெல்ப்பண்ணுவியா...அப்புறம் பேச்சு மாறக்கூடாது” என்று கூற, எதை பற்றியும் யோசிக்காமல் செய்கிறேன் என்னும் விதமாகதலை


அசைத்தவளை பார்த்தவன் குறும்பு கூத்தாட,





“அதுவந்து...அதுவந்து” என்று இழுத்தவனை பார்த்தவள் ,”இம்ம்” என்று தலையசைத்து அவனை மேலே சொல்லதூண்டினாள்,





“அதுவந்து...சாகரத்துக்குள்ள...லிப் டு லிப் கிஸ் அடிக்கணும்னு எனக்கு ஆசை...இம்ம் அது நிராசையா போச்சு”என்று ஏக்க பெருமூச்சு விட்டவனை பார்த்து





திரு திரு என்று விழித்தவள் அவனிடம் இருந்து விலகி தனக்குள்ளே பேசியபடி குறுக்கிலும் நெடுகிலும் நடந்தவள், பின்பு நின்று தலையை தட்டி எதையோ யோசித்தவள் , ஏதோ முடிவு எடுத்தவளாக பெருமூச்சை விட்டு அவனை நோக்கி திரும்பினாள்.





இவ்வளவு நேரம் அவள் செய்கைகளை புன்னகையுடன் ரசித்திருந்தவன், அவள் திரும்பவும் தன் முகத்தை பாவம் போலவைத்துக்கொண்டு அவளை பார்த்திருந்தான். நேரே அவனிடம் சென்றவள் ,





“அதுவந்து...ஒரு...ஒருதடவை கி...கி...இஸ் அடிச்சா போதுமில்ல..” என்று தயங்கி தயங்கி கூறியவளை பார்த்தவன் , அப்பாவியாக இம்ம் என்று தலையசைத்தான் .





மேலும் அவனை நெருங்கியவள் என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் முழித்தபடி நின்றிந்தருந்தவள் , தன் இடக்கை கொண்டு நெஞ்சை நீவிக்கொண்டாள் ,பின்பு அவனை அண்ணாந்து பார்த்தவள் தன் கால்களை எக்கி தன் இருகைகளாலும் அவன் முகத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்தவள் , எச்சிலை முழிங்கியபடி தன் உதடுகளை அவன் உதட்டின் மீது பொருந்தும் வேலையில் ,ஸ்ரீ தன் வலக்கை உள்ளங்கை கொண்டு அவளின் உதடுகளை பொத்தினான். அதில் திகைத்து அதிர்ந்து விழித்தவள் அவன் கையை விலக்கியபடி , "வேணாமா" என்று கேட்டவளை பார்த்தவனுக்கு கோவம் சுறுசுறுன்னு ஏற ,





"ஏய்.... லூசு யாரு எது சொன்னாலும் நம்பிடுவியா... கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம கிஸ் பண்ண வந்துட்ட" என்றபடி அவள் தலையில் ஓங்கி கொட்டினான்.





அதில் கோபமுற்றவள் தலையை தடவியவாறே அவனை முறைத்து,





"அப்போ சொன்னது எல்லாம் பொய்யா .... அப்போ கேன்சர் சொன்னதும் பொய் ...என்னை ஏமாத்திருக்கிங்க... நான் போறேன்" என்று கத்தியபடி அவ்விடத்தை விட்டு விலக முயன்றவளை பார்த்த ஸ்ரீ ,





'அய்யோ இது என்ன கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை போல ஆகுது' என்று மனதில் நொந்தவன்


" எதுக்கு திவிக்குட்டி டென்ஷன் ஆகுறீங்களாம்.... என்னை நல்லா உத்து பாரு ...என்ன பார்த்த கிஸ் அடிக்காத சின்ன பையன் போலவா இருக்கேன்... இம்ம்ம்" என்று புருவத்தை ஏற்றி கேட்டவனை கண்டு வாயில் கைவைத்தவள் ,


"அப்போ கிஸ் அடிச்சுருக்கீங்களா" என்றவளை பார்த்து "ம்ம்ம்" என்று கண்சிமிட்டியபடி காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.





மேலும் அவள் , "அப்போ மேட்டரும் முடிச்சுட்டீங்களா" என்றவளை பார்த்து இந்த முறை ஸ்ரீ வாயில் கைவைத்தவன் , 'கிறுக்கி மாறி இருந்துட்டு என்ன கேள்வி கேட்குது பாரு' என்று மனதில் அவளை வசைபாடி வெளியில் கோவமாக முகத்தை வைத்தபடி "அதுயெல்லாம் பர்சனல்... சொல்லமுடியாது" என்றவனை பார்த்து நோ ப்ரோப்லேம் என்ற தோரணையில் தோளை குலுக்கினாள்.





ஒருவழியாக அவளை பேசி சமாளித்து வீட்டிற்க்கு அழைத்து வந்திருந்தான் ஸ்ரீ. வீட்டிற்குள் அழைத்து வந்தவன் ஒரு சிறிய அறையை காட்டி ,





"இங்க நீ படுத்துக்கோ ..பக்கத்து அறைலதான் நான் இருப்பேன் , நல்லா தூங்கி எழு காலைல சாப்பிட்டு கிளம்பலாம் ...ஓகேவா" என்று சிறு பிள்ளைக்கு சொல்வதைப்போல சொல்லியவன் அவளிடம் குட்நைட் சொல்லி தன் ரூமில் சென்று அடைந்து கொண்டான்.





ரூமிற்கு வந்தவள் எதை பற்றியும் கவலை படாமல் நிம்மதியான உறக்கத்திற்கு சென்றால், மறுஅரையில் இருந்த ஸ்ரீயோ உறக்கம் அற்றவனாக ,தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடை பயின்று கொண்டிருந்தான், அவன் மனோமோ நிம்மதியற்று ,கடலில் எழும் பேரலையின் இரைச்சல் போல ஓ என்று கதறியது , நாளை மறுநாள் மஞ்சு அவனுக்கு சொந்தம் இல்லை, இதைநினைக்கும் போதே அவன் நெஞ்சம் வெடித்துவிடும் போல பலமாக துடித்தது , மஞ்சு...மஞ்சு....மஞ்சு என்று அவன் மனம் ஓசையில்லாமல் அரற்றியது , நேரம் செல்ல செல்ல தலை வலிப்பது போல உணர்ந்தவன் ...இங்கே இன்னும் சிறிது நேரம் இருந்தாலும் தன்னால் மன அழுத்தத்தை தாங்க முடியாது என்றுணர்ந்தவன் , அவ்வறையை விட்டு வெளியேறினான்.





வெளியே வந்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான் , எப்போதும் இது போல உணர்ந்தால் அவன் மனநிம்மதியை தேடி அந்த குன்றிற்குத்தான் செல்வான் ...ஆனால் இப்போது திவியை தனியாக விட்டு செல்ல மனம் இல்லாததால் சிறிது நேரம் ஹாலில் நடை பயின்றவன் அப்பொழுதும் நெஞ்சை அழுத்தும் உணர்வில் இருந்து வெளிவர முடியாததால் சிறிதும் யோசிக்காமல் திவி உறங்கும் அறைக்கு சென்றிருந்தான்.





அறைக்குள் நுழைந்த பிறகுதான் தான் வந்திருக்கும் இடம் புரிய தலையில் அடித்து கொண்டவன் அவ்வறையை விட்டு வெளியேற நினைக்கையில் ,அவள் தூக்கத்தில் குளிர் பொறுக்காமல் நடுங்கியபடி முனகி கொண்டே தூங்குவதை பார்த்தவன் சிரித்தபடி அலமாரியில் இருந்த போர்வையை எடுத்து அவளுக்கு போற்றிவிட்டான், அந்த கதகதப்பில் முனகுவதை விட்டவள் நன்றாக நீட்டி படுத்துகொண்டாள் , அவளின் செய்கைகளை உதட்டில் புன்னகையோடு பார்த்திருந்தவன் எதை பற்றியும் யோசிக்காமல் கட்டிலின் மறுபுறம் ஏறி படுத்துகொண்டான். சிறிது நேரம் அவள் முகத்தையே பார்த்திருந்தவனை தூக்கம் தழுவ அழுந்த உறக்கத்திற்கு சென்றான்.





காலையில் எப்பொழுதும் போல 6 மணிக்கு கண் விழித்தவனுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்று புரிய கட்டிலின் மறுபுறம் பாக்க அங்கே வெற்றிடமாக இருந்தது , பதறி அடித்து எழுந்தவன் அரை முழுவதும் கண்களால் அலசியவனின் பார்வையில் அவள் படவே இல்லை,





'அய்யோ ஒரே கட்டிலில் படுத்ததால் கோச்சுக்கிட்டு போய்ட்டாளா' என்று மனதில் பதறியவனாக வீடு முழுவதும் தேடியவனின் கண்களில் அவள் படவே இல்லை. அய்யோ என்றிருந்தது ஸ்ரீக்கு , இன்று கண்டிப்பா ஊருக்கு போகணும் அவள் இல்லாமல் வேளைக்கு ஆகாது , இப்போ எங்கன்னு தேடுவது என்று மலைப்பாக இருந்தது . தெருவில் இறங்கி நடந்தவன் காலை குளிரையும் பொருட்படுத்தாமல் வேகமாக சாலையின் இருபுறமும் பார்வையை துழாவ விட்டவாறே வந்தவனின் நடை ஓர் இடத்தில நின்றது , அங்கே ஒரு மரத்தடியில் சிறு கல் வைத்து மஞ்சள் பூசி சிகப்பு மஞ்சள் துணிகளால் சுற்றபட்டறிந்தது , அங்கே நின்று கொண்டு கண் மூடி வேண்டி கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு கோபம் புஸுபுஸுன்னு ஏற வேகமாக அவளிடம் சென்றவன் அவள் வேண்டுவதை பார்த்து திகைத்து நின்றிருந்தான்,





"முருக்ஸ் என்னோட ஆயுளையும் அவங்களுக்கு கொடுத்துடு....எப்படியாவது அவங்களை மஞ்சு கூட சேர்த்து வச்சுடு ...உன்னையும் வள்ளியையும் பிரிக்க மாட்டேன்" என்று மனம் உருக வேண்டிக் கொண்டிருந்தால் திவ்யதர்ஷனி. அவள் வேண்டுதலின் கண்கள் பணிக்க நின்றிருந்தவன் தொண்டையை செறுமியபடி ,





" திவி" என்றழைக்க , சற்றென்று திரும்பி பார்த்தவள் முகம் கொள்ள புன்னகையுடன் ,





"எழுந்துடீங்களா... நான் எழுந்திருக்கும் பொது நீங்க நல்ல தூக்கத்துல இருந்திங்களா....அதான் டிஸ்டர்ப் பண்ணாம வந்துட்டேன் ...எனக்கு எப்பவும் காலைல எழுந்தவுடன் முருக்ஸ்ச கும்பிட்டே ஆகணும் ....அங்க வீட்டுல சாமி படம் எதுமில்லையா அதான் இங்க வந்தேன்" என்றவளை பார்த்தவன் எட்டி அக்கல்லை பார்த்து ,





"ஆமா...இங்க இருக்குறவரு உன்னோட முருக்ஸ் தான் எப்படி கண்டுபுடிச்ச" என்று நக்கல் அடிச்சவனை பார்த்து முறைத்தவள் ,





"சாமியை கிண்டல் பண்ண கூடாது"என்றவள் மேலும் , "எனக்கு எந்த சாமியை பார்த்தாலும் முருக்ஸ் தான் கண்ணனுக்கு வருவாரு...என்ன எப்பவும் சுத்தமாத்தான் கும்பிடுவேன் ...இணைக்கு குளிச்சுட்டு அதே டிரஸ் போட்டுகிட்டேன் , மூணு நாள் இதே ட்ரெஸ்ஸோடத்தான் சுத்துறேன் ....எனக்கு வேற டிரஸ் வாங்கி தரீங்களா ." என்று கூறியவளை பார்த்து மூக்கை பொத்தியபடி ,





"அதான் ஒரே கப்படிக்குது "என்று கூறினான். அவனை பரிதாபமாக பார்த்தவள் குனிந்து தன்னை நுகர்ந்தபடி ,





"உண்மையிலேயே அவ்வளவு நாறுதா "என்று அப்பாவியாக கூறியவளை இழுத்து அனைத்தவன் , மூச்சு காற்றை உள் இழுத்தபடி தலையை இடமும் வலமும் ஆகா ஆட்டியவன் ,





"இல்ல ....நல்ல சுகந்தமனம் வீசுது" என்று கேலி பேசியவனை கண்டு மூக்கை பொத்தியவள் ,





"இப்போ இங்க இருந்துதான் எலி செத்த நாற்றம் அடிக்குது" என்று ஒரு அடி பின் எடுத்து வைத்தவளை பிடித்து இழுத்து அவள் மூஞ்சில் வேகமாக காற்றை ஊதியவன் ,





"இம்ம்ம்....காலைல எழுந்து வாய் கூட கொப்புளிக்காமா.... பேசுனா பண்ணீர் வாசனையா வரும் எல்லாம் எலி செத்த நாத்தம் தான் வரும்... இப்படியே நம்மோட லவர்க்கு கிஸ் அடிச்சோம்னா அப்படியே ..... வானத்துல பறக்குறப்போல ஜிவ்வுன்னு போதை ஏறும்...தெரியுமா" என்றவாறு நாக்கை குழைத்தவனை ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் கூறாமல் வேகமாக வீடு வந்து சேர்ந்தாள்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 5


ஸ்ரீ, திவி இருவரும் காலை உணவை முடித்து கொண்டு, மலையை விட்டு





இறங்கும் தருவாயில் , படகுத்துறையை கடக்கும் சமயம் ஆர்வம் மின்ன அந்த ஏரியையேபார்த்து இருந்தவளை கண்ட ஸ்ரீ ,





“போட்டிங் போகணுமா ” என்றதற்கு சிறுபிள்ளை போல தலை ஆட்டியவளை பார்த்து சிரித்தவன் , காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன்அவளையும் இறங்க சொல்லி,





“திவி ... டிக்கெட் கவுண்டர் கிட்ட காரை நிப்பாட்ட முடியாது... நீ...ஏரியை பார்த்தபடி வா நான் டிக்கெட் எடுத்துக்கிட்டு இருக்கேன்” என்றவன்அவளின் பதிலை எதிர் பார்க்காமல் வேகமாக டிக்கெட் கவுண்டர் நோக்கி செல்லவும் , தண்ணீரின் அழகை ரசித்தபடி வந்தவளின் பார்வை ஓரிடத்தில்


வெறித்து நின்றது. அங்கே கண்ட காட்சியை பார்த்தவளின் மனநிலை மாறியது , கண்களும் முகமும் சிவக்க மூச்சுகளை அதிவேகமாக விட்டவளின் கோபம் பன்மடங்கு பெருகியது. அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சிறிதும் அசையவில்லை , அங்கே ஒரு பெண் தடுப்பு சுவர் கட்டையில் அமர்ந்திருந்தாள் அருகே ஒரு ஆணும் நின்று கொண்டிருந்தான் , அவன் ஏதோ சொல்ல இவள் மறுத்து தலையசைத்து கொண்டிருந்தாள். அவர்களை பார்த்து கொண்டிருந்தவளின் வெறி நொடிக்கு நொடி ஏறி கொண்டே இருந்தது , கண்மண் தெரியாத கோபம் தலைக்கு ஏற , யாரை பற்றியும் கவலை படாமல் அவர்களை நோக்கி சென்றாள்.





அவள் அவர்கள் அருகில் நெருங்கிய நேரம் அந்த ஆணிற்கு கைப்பேசி அழைக்க, அதை காதில் வைத்தபடி சிறிது தூரம் விலகி சென்றான். செல்பவனையே கண் எடுக்காமல் பார்த்தவளை, அருகில் நடுங்கியவாறே கேட்ட “திவி“ என்ற அழைப்பு நாராசமாய் காதில் ஒலிக்க , சற்றென்று ஆங்காரமாய் திரும்பியவள் எதை பற்றியும் யோசிக்காமல் , கால்கள் நடுங்க நிற்க திரணியற்று தடுப்பு சுவரில் நடுங்கியவாறே அமர்ந்து இருந்தவள் அருகில் சென்று அவள் நெஞ்சில் கைவைத்து அவளை தண்ணீரில் தள்ளிவிட்டாள்.





நேரம் ஆகியும் டிக்கெட் கவுண்டர் அருகில் அவள் வரவில்லை என்றதும் என்னவானது அவளுக்கு என்று சிந்தித்தவாறே தேடிவந்தவனின் பார்வையில் அவள் ஒருபெண்ணை வெறிப்பதை கண்டான் ,


அச்செய்கை தவறாக படுவதை கண்டுகொண்டவன் அவளை நோக்கி வேகமா நெருங்கி கொண்டிருக்கும் போதே அப்பெண்ணை தண்ணீரில் தள்ளிவிட்டிருந்தாள். ஸ்தம்பித்து சில நொடிகள் நின்றவன் , பின் சுதாரித்து வேகமாக அவள் அருகில் வந்து அவளை பிடித்து பலமாக தள்ளினான் தள்ளிய வேகத்தில் அருகில் இருந்த மரத்தில் மோதி நிலை தடுமாறி மரத்தின் மறுபக்கம் விழுந்தாள். இதற்குள் யாரோ விழும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பதறியடித்து ஓடி வந்தனர், சிலர் தண்ணீரிலும் குதித்து இருந்தனர் , அந்த பெண் கூட இருந்த ஆடவனும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் , தடுப்பு சுவற்றில் அவள் அமர்ந்து இருந்த இடம் வெறுமையாக இருந்ததை கண்டவன் ,





“தேவா“ என்று கத்தியவாறே தண்ணீரில் குதிக்க முயன்றவனை சிலர் பிடித்து தடுத்தனர். அதற்குள் விஷயம் கேள்வி பட்டு படகு ஓட்டுபவர்கலும் தண்ணீரில் குதித்து இருந்தனர். ஸ்ரீக்கு தானும் தண்ணீரில் குதித்து தேட வேண்டும் என்று பரபரத்த தன் எண்ணத்தை திவியால் கட்டுப்படுத்திகொண்டான். அந்த ஆடவனை பார்க்க பார்க்க ஸ்ரீக்கு பாவமாக இருந்தது அதுவும்





“இதுக்குதான் இங்க வரணும்னு புடிவாதம் புடிச்சியா“ என்று புலம்பியவனை பார்த்தா ஸ்ரீக்கு அந்த கிறுக்கியை கொல்லும் வெறி எழுந்தது , நல்ல வேளையாக அவள் தள்ளிவிட்டதை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணியவன், அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று எட்டி பார்த்தான் . அவன் நின்றிருந்த இடத்தில் இருந்து பார்த்தால் அவள் இருப்பது யாருக்கும் தெரியாமல் மரம் மறைத்து கொண்டிருந்தது. ஆனால் அவளால் அவர்களை நன்கு பார்க்க முடிந்தது அவள் பார்வை அந்த ஆணை விட்டு அகலவில்லை , அதுவும் அவன் தேவா தேவா என்று கதறி அழுவதை கண்டவள்,











‘ஓ அவ செத்தா நீ கதறிவியா...அன்னைக்கு என்ன பார்த்து கண்ணு முன்னாடி நிக்காத... இல்ல நானே உன்னை கொன்னுடுவேன்னு சொன்னியே .... அப்போ நான் செத்தா பரவாலாய’ என்று மனதில் அவனுடன் சண்டை போட்டவள், திடீர் என்று ‘அய்யோ அத்தான்...ஏன் இப்படி பண்ணுற .... எனக்கு இங்க வலிக்குது’ என்று நெஞ்சைதடவியபடி மனதில் அவனிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்.


அவள் செய்கைகளை பார்த்திருந்த ஶ்ரீ அவளை அதிக நேரம் இங்கே இருக்கவைத்தால் விபரீதம் ஆகிவிடும் என்று எண்ணியவனுக்கு அந்த பெண் பத்திரமாக மேலே வரும்வரை அந்த இடத்தை விட்டு செல்லவும் மனமில்லை . தண்ணீரில் மூழ்கியவர்கள் அப்பெண்ணையும் இழுத்து கொண்டு


தண்ணீர் மேலே வந்தனர் , அப்பாடா என்று நிம்மதி மூச்சு விட்டவன் ‘அய்யோ என்ன கண்டிஷன்ல இருக்காங்கனு தெரியலையே‘ என்று மனதில் புலம்பியபடி திரும்பியவன் அதிர்ந்து போனான்.





அங்கே பத்திரகாளிஅவதாரம் எடுத்தபடி அந்த ஆண்மகனை நெருங்கி கொண்டிருந்தாள் கிறுக்கி. எதையும் யோசிக்காமல் சடுதியில் அவள் கையை பலமாக பற்றி இழுத்தவன் கார் நோக்கி செல்லவும் , அவனின் எண்ணம் புரிந்தவள் தன் மற்றொரு கை கொண்டு அவனை அடித்தபடி விடு விடு என்று கத்தியவாறே தன் கைகளை அவனிடம் இருந்து பிரிக்கமுயன்றாள்.





எல்லோர் கவனமும் அந்த பெண் மீதே இருந்ததால் யாரும் இவர்களை கண்டுகொள்ள வில்லை.


வலுக்கட்டாயமாக அவளை கார் நிறுத்தி இருந்த இடத்துக்கு இழுத்து வந்தவனின் கைகளை தன் நகம் கொண்டு பொரண்டியும் , தன் பற்களால் கடித்து துன்புறுத்தியவள், ஆவேசமாக





“விடுடா...விடு என்னை ...நான் எங்க அத்தான்கிட்டப்போறேன் ....விடு” என்று அவனை கால்களால் உதைத்தவள் மேலும் ,





“அந்த தேவா இன்னும் சாகலை ... அவ இங்கயே இருக்கட்டும்.. .....நான் அத்தானை நான் மேலே கூட்டிட்டு போறேன்.... விடு” என்று ஆங்காரமாய் கத்தியவள் ,


பின்பு தணிந்த குரலில் “ என்னை விடு...ப்ளீஸ் எனக்கு எங்க அத்தான் வேணும்....அவர் இல்லாம என்னால இருக்க முடியாது... விடு” என்று தேம்பி தேம்பி அழுத்தவளை பார்த்தவனுக்கு தலைவலிப்பது போல இருந்தது , தலையைதடவியவாறே ,





“திவி.....புரிஞ்சுக்கோ ...உங்க அத்தான் உன் சிஸ்ட்டரை தான் லவ் பண்ணுறாரு.. .அதை ஏன் மண்டைல ஏத்திக்க மாட்டுற” என்று தன்மையாக கேட்டவனை வெறித்தவள்,





“அவ என்னோட சிஸ்டர்னு உனக்கு எப்படி தெரியும்... சொல்லு” அவன் சட்டையை பற்றி உலுக்கியபடி கேட்டவளை பார்த்து





“ உன்னையும் உன் சிஸ்டெராயும் பக்கத்துல பக்கத்துல நிக்கவச்சா இந்த ஊருக்கே தெரியும் .... நீங்க ட்வின்ஸ்னு” என்று நக்கலாக கூறியவனை பார்த்து ,





“ஆமா...அவ என்னமாதிரி நடிச்சுதான் எங்க அத்தானை ஏமாத்திட்டா .. அவர் என் மேல எவ்வளவு பாசமா இருப்பாரு தெரியுமா ....இவதான் நடுவுல குழப்பிட்டா ....ஏமாத்துக்காரி” என்றவளை பார்த்திருந்த ஸ்ரீக்கு எங்கயாவது முட்டி கொள்ளலாமா என்றிருந்தது , லவ்க்கும் பாசத்துக்கும் வித்தியாசம் தெரியாதவளா இருக்காளே என்று நினைத்தவன் அதையே அவளிடம் கூற ,கோவத்தில் முகம் சிவக்க





“எனக்கு லவ் எதுன்னு தெரியாதா...சொல்லு ...நான் என்ன லூசா.....அத்தான் என்னதான் லவ் பண்ணாரு ....விடு நான் போகணும்” என்று திரும்ப ஆரம்பித்தவளை பார்த்து கட்டுப்படுத்திருந்த கோவம் வெடிக்க





“ஏய்...உள்ளே ஏறு”என்றபடி கார் கதவை திறந்துவிட்டவனை பார்த்து , முடியாது என்று தலையை அசைத்து ,





“ நீ யாரு என்ன போக கூடாதுனு சொல்லுறதுக்கு விடுடா ....பொறுக்கி” என்றவளை கண்கள் சிவக்க பார்த்த ஶ்ரீ தன் கோவத்தை கட்டுப்படுத்தியபடி ,











“இன்னொரு வார்த்தைபேசின அடிச்சே கொன்னுடுவேன்“ என்றவனை வெறித்து பார்த்தவள் , தலையை வேகமாக ஆட்டியவள்





”கொல்லுடா ...தையிரியம் இருந்தா கொல்லுடா .....நான் அத்தானை பார்க்காம இந்த இடத்தை விட்டு போக மாட்டேன்.... என்ன என்ன உன்ன மாதிரி நினைச்சியா லவ் பண்ணவளை கழட்டிவிட்டு ... வேற ஒருத்தனுக்கு ஜோடி சேர்க்குற மாமா பையன் நினைச்சியா” என்றவளின் காதில் இருந்து கொய்ங் என்று சத்தம் கேட்டது, காதும் அடைத்து கொண்டது போலவும் இருந்தது , கன்னத்தில் இருந்துவினு வினு என்ற வலியுடுன் எரியவும் செய்தது. அவளுக்கு சற்று நேரம் பிடித்தது என்ன நடந்தது என்று அறிவதற்கு , ஒரு கையை கன்னத்தில் பொத்தியபடி மெதுவா தலையை உயர்த்தி , எச்சில் முழுங்கியபடி ,





“எ...எ ...என்னை ...அடிசீங்களா” என்று தந்தி அடித்தபடி கேட்டவளை பார்த்தவன் வாயில் கை வைத்து பேசாதே என்று சைகை செய்தவன் கார் கதவை நன்றாக திறந்துவிட்டான் , அப்பொழுதும் வரமாட்டேன் என்று தலையசைத்தவளை இழுத்து டிரைவர் சீட் பக்கம் வந்தவன் கதவை திறந்து அவளை புடித்து உள்ளே தள்ளியவன் தானும் ஏறிக்கொண்டு அதிவேகமாக காரை செலுத்தினான்.





வேகமாக காரை ஒட்டியவனின் நெஞ்சோ உலை கொதிப்பதை விட வேகமாக கொதித்தது ,


‘என்ன நெஞ்சழுத்தம் இருந்தா என்னை பார்த்து மாமா பையன்... சொல்லிருப்பா ’ என்ற சிந்தனையே அவனை வாட்டியது.





‘இவளை நான் லேசா எடைபோட்டுட்டேன் , இவ அரைகிறுக்கி இல்ல அதுக்கும் மேல பழிவெறி புடிச்சவ.... கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம தன்னோட சிஸ்டர் தள்ளி விட்டுருக்கா’ என்று மனதில் புலம்பியவன் , ‘இவள் ஆபத்தானவள்‘ என்ற முடிவுக்குவந்திருந்தான்.





தனது நிலையே புயலில் சிக்கிய படகு போல இங்கயும் அங்கேயும் ஆடிட்டு இருக்கு , இதுல இவ பிரச்சனை வேற என்று சலித்தவன் , தேவையில்லாம இவளையும் சேர்த்து இழுத்துகிட்டு அலையிருமோ என்ற எண்ணம் தோன்றாமலும் இல்லை. மூச்சு முட்டும் அளவுக்கு தனக்கு பிரச்சனைகள் இருந்த போதும் நிம்மதியா இருந்த தனக்கு , என்று இவளை பார்த்தேனோ அப்போ ஆரம்பித்த தலைவலி இன்னும் நின்னபாடில்லை என்று நினைத்தவன். தன் கோபத்தை கார் ஓட்டுவதில் காட்டினான்.





அருகில் அமர்ந்திருந்த திவியின் மனநிலையும் நிமிடத்திற்கு நிமிடம்அதிகரிக்கும் புயலின் வேகத்தை கொண்டிருந்தது ,





‘என் கண்ணு முன்னாடியே ரெண்டு பேரும் கொஞ்சிகிட்டு இருக்காங்க... என்ன திமிர்’ மனதில் வஞ்சத்துடன் நினைத்தவள் , ‘நான் இருக்கேனா இல்லையானு கூட தெரியாம ... ஹனிமூன்க்கு கிளம்பி வந்துருக்காங்க ....அப்போ ...என்னை பத்திகவலை இல்லை’ என்று எண்ணியவளுக்கு கண்ணீர் அருவியாய் பொழிய ஆரம்பித்தது.





‘ அத்தான் உங்களுக்கு நான் வேணாமா.... ஏன் இப்படி மாறி போனீங்க’





என்று ஊமையாய் அரற்றியவள் , ‘ரொம்ப...வலிக்குது அத்தான்’ நெஞ்சை தடவியபடி மனதில் புலம்பியவள், சிறிது நேரம் கண்ணீரில் கரைந்தாள். இந்த பாரத்தை தாங்க முடியாதவள் போல தன்கைகளால் தலையை தாங்கி குனிந்து மனதில் பலதை போட்டு குழம்பிக் கொண்டிருந்தாள், ஒரூ முடிவுக்கு வந்தவள் போலதலையை மேலும் கீழுமாக ஆட்டியவள் ,





“ திவி....பி ஸ்டராங்... நீ முன்னாடி பிளான் பன்னபடி ... மேல போய்ட்டு உன் அத்தானை கூப்பிடுக்க”


வாய்விட்டு தன்னையே சமாதானம் படித்தியவள் திரும்பி ஸ்ரீயை பார்த்து ,





“டூ டேஸ்ல என்ன திரும்ப இதே இடத்துல விட்ருங்க” என்றவளை திரும்பியும் பார்க்கவில்லை ஸ்ரீ. சிறிது நேரம் அவனையே பார்த்திருந்தவள் ,பதில் எதுவும் வரவில்லை என்றதும்





“விட்ருவீங்கதானே“ தயங்கி தயங்கி கேட்டவளை சிறிதும் சட்டை செய்யாமல் கார் ஓட்டுவதில் மும்மரமாய் இருந்தான் ஸ்ரீ. என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியவள் கைகளை பிசைந்தபடி அவன் முகத்தை பார்ப்பதும் பின்பு சாலையை பார்ப்பதுமாய் இருந்தவள் பொறுமை இழந்து ,





“இப்போ எதுக்கு பேச மாட்ரிங்க..... நீங்கதானே என்ன அடிச்சீங்க ....அப்புறம் ஏன் பேச மாட்டுரிங்க" கண்ணத்தை வருடியபடி கத்தியவள் மேலும் ,





“நான் தேவாவை தள்ளிட்டேன் ... கோவமா இருக்கீங்களா" என்று பாவமாக கேட்டவள் , "இனிமே இப்படி பண்ண மாட்டேன் ...ப்ளீஸ் ப்ளீஸ் ...பேசுங்க " அவன் கையை புடிச்சு உலுக்கியபடி





"பேசுங்க ....சாரி " என்று மாறிமாறி கேட்டவளின் கதறல் அவன் காதில் சிறிதும் விழவில்லை.பலமுறை சாரி கூறியும் கண்டுகொள்ளாமல் இருந்தவனை பார்த்து கோபம் வர , தலையைசிலுப்பி போடா என்று நினைத்தவள் வெளியே இயற்கை காட்சிகளில் ஒன்றி போனாள்.





ஸ்ரீயின் மனமோ அவள் கூறிய மாமா பையன் என்றதிலேயே உழன்றது , மேலும் அவன் நினைவுகளில் சிரித்த முகத்துடன்‘அத்தான்’ என்று கொஞ்சிய மஞ்சுவின் முகமே வந்து போனது, அதை தொடர்ந்து அவளுக்கும் அவனுக்கும் நடந்த செல்லசண்டைகள் , கொஞ்சல்கள் ,கெஞ்சல்கள் , சிறு சிறு தீண்டல்கள் என்று அனைத்தும் படம் போல





அவன் மனக்கண்ணில் தோன்றி இம்சித்தன .அவன் உதடுகளோ அவனறியாமல் “மஞ்சு“ “மஞ்சு“ என்று முணுமுணுத்தது , தலையை யாரோ சுத்தியல் கொண்டு புளபதை போல உணர்ந்தவனின் கைகளில் கார் தடுமாறியது , இதே மனநிலையில் வண்டி ஓட்டதன்னால் முடியாது என்று உணர்ந்தவன் , சிறிது தூரம் சென்றபின் இயற்கை அழகை ரசிக்கும் பொருட்டு சற்று அகலமான சாலையில் தடுப்பு சுவர் அமைத்திருந்த இடத்தில வண்டியை நிறுத்தியவன் , அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் வண்டியில் இருந்து இறங்கி இலக்கற்று எதிர் திசையை வெறிக்க ஆரம்பித்தான் .





காரில் அமர்ந்திருந்தவள் அவன் தன்னை வெளியே வருமாறு அழைக்கவில்லை என்றதும் தானே இறங்கி சென்று அவன் அருகில் நின்று கொண்டாள் .தான் வந்தும் கண்டுக்காமல் இருப்பவனை வம்பு இழுக்கும் எண்ணம் தோன்ற , தங்கள் அருகில் மதில் சுவரில் அமர்ந்திருந்த குரங்கு கூட்டத்தை கண்டவள் , அவற்றை நோக்கி சிறிது நகர்ந்து நின்று ஸ்ரீயை பார்த்தபடி,





“குட்டி குரங்கே குட்டி குரங்கே... அந்த பெரிய குரங்கு” என்றவாறே ஸ்ரீயை நோக்கி கையை காட்டியவள்





“ என்கிட்ட பேச மாட்டிங்கது” என்றவளை ஸ்ரீ சற்றென்று திரும்பி பார்த்தான் , சடுதியில் நீட்டிய கையை இறங்கியவள் தன்னோடைய மற்றோர் கையை நீட்டி கூட்டத்தை விட்டு சற்று விலகி அமர்ந்து இருந்த வயதான குரங்கை சுட்டிகாட்டினாள்.





ஸ்ரீக்கு அவள் தன் அருகில் வந்து நின்றது தெரிந்திருந்தும் அலட்சிய படுத்தியவன் மேலும் அவள் தன்னை தான் குரங்கு என்று குறிப்பிடுகிறாள் என்றும் புரிந்தது , ஆனாலும் அவளிடம் பேச பிரியப்படவில்லை , சிறிதுநேரம் எதிர் திசையை வெறித்தவன் அழுத்தம் தாங்கமுடியாமல் சற்று விலகி நின்று சிகரெட்டை பத்தவைத்தான், நிதானமாக புகையை உள் இழுத்து பின்பு சுருள்சுருளாய் வெளியேற்றியவன் , சற்று இறுக்கம் தளர்ந்ததுபோல உணர்ந்தான்.





அவன் செய்கைகளை பார்த்திருந்தவளுக்கு ஆத்திரம் அதிகரித்தது , தான் நிற்பதை கூட பொருட்படுத்தாமல் புகைக்கிறவனை கண்டு கோவம் வர , அவன் அருகில் சென்றவள் ,





"எனக்கும் டென்ஷனா இருக்கு....எனக்கும் ஒரு சிகரெட் கொடுங்க" என்று அவன் தரமாட்டான் என்ற நம்பிக்கையில் அவனிடம் கேட்டாள். சற்றும் தமோதிக்காமல் அவளிடம் ஒன்றை நீட்டியவன் தன் வேலையை தொடர்ந்தான் , இதை கொஞ்சமும் எதிர்பார்காதவள் திகைத்து விழித்து கையில் இருந்ததை பார்த்து மீண்டும் ஒரு நம்பிக்கையில் ,





"என்கிட்ட மேட்ச்பாஸ் இல்ல" கடுகடு என்று கூறியவளிடம் இருந்து சிகரெட்டை வாங்கியவன் தன்னோட சிகரெட்டில் பற்றவைத்து அவளிடம் திருப்பி கொடுத்தான். கையில் வாங்கியதை முகத்தை அஷ்டகோணலாக்கி பார்த்தவள் அவனையும் திரும்பி பார்த்தாள் , அவன் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் புகையை இழுப்பதும் பின்பு விடுவதுமாக இருந்தான் , இன்னைக்கு நீயா நானா பார்த்துடுறேன் என்று மனதில் கறுவியவள் , மானசீகமாக முருக்ஸ் கிட்ட அவசர மன்னிப்பை வேண்டியபடி நடுங்கும் விரல்களால் சிகரெட்டை வாயில் வைத்து ஒரு இழு இழுத்தாள்.





அடுத்தநொடி கண்கள் கலங்க தொண்டை எரிச்சலோடு, நெஞ்சை அடைக்க விடாமல் இரும்பிக் கொண்டிருந்தாள். வாயில் சுரந்த உமிநீரை துப்பியபடி அவனை பரிதாபமாக பார்த்தவளை கண்டுகொள்ளாமல் அடுத்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன் , அவளிடம் திரும்பி ஒன்றை நீட்டி 'வேண்டுமா ' என்பதைப்போல தலை அசைத்தவனை பார்த்து அவசரமாக வேண்டாம் என்பதை போல தலைஆட்டியவள் , கையில் இருந்ததை தூக்கி போட்டு காரில் இருந்த தண்ணீர் எடுத்து வாயை நன்றாக கொப்பளித்து துப்பினாள். அவளோட செய்கைகளை ரகசியமாக பார்த்தவன் முகத்தில் புன்னகை பூத்திருந்தது.





அதற்குப்பிறகு அவள் அவனிடம் எதுவும் பேசவில்லை , வழியில் சிறிய கிளினிக்ல் நிறுத்தி தள்ளிவிட்டதால் அவளுக்கு ஏற்பட்ட தலை காயத்துக்கு மருந்திடவைத்தவன் , அங்கேயே அருகில் உள்ள துணிக்கடைக்கு அழைத்து சென்று பட்டு சேலையும் சில மாற்றுடைகளும் எடுத்தவர்கள் , அப்படியே உணவகத்தில் உணவு உண்டவர்களின் பயணம் அதன்பின் அமைதியிலேயே கழிந்தது. அவன் மனதில் ஊரில் எந்த பூகம்பம் வெடிக்கப்போகுது என்ற எண்ணம், இவள் மனதிலோ இவன் எப்பொழுது தன்னிடம் பேசுவான் என்ற கவலை , இவ்வாறே இருவேறு மனநிலையில் நள்ளிரவில் ஸ்ரீயின் சொந்த ஊரான கடலூர் அருகில் உள்ள பண்ருட்டிக்கு வந்து சேர்ந்தனர் .





வீட்டிற்கு செல்லாமல் வழியில் ஒரு இடத்தில் நிறுத்தியவன் மணியை பார்க்க அது சரியாக இரவு 11.50 என்று காட்டியது , பண்ருட்டியில் முக்கால்வாசி பேருக்கு இவனை நன்றாக தெரியும் , இருந்தும் தனக்கு நன்கு தெரிந்த ஹோட்டேல்க்கு சென்றவன் அங்கே தங்குவதற்கு ஓர் அறையை புக் செய்தவன் ,திவியுடன் உள்ளே செல்ல முயலகையில் வரவேற்பறையில் இருந்தவன் தயங்கி தயங்கி ,





"ஸ்ரீ அண்ணா.... இவங்க... யாருனு ரெஜிஸ்டர்ல போடுறது " என்று திவியை காட்டி தயங்கி தயங்கி கேட்டவனை பார்த்த ஶ்ரீ , சிரித்தபடி





" வொய்ப்னு .... போடு " என்று அசால்ட்டாக கூறி, அதிர்ந்து நின்றவளின் தோள் மீது கை போட்டு அணைத்தவாறே அறைக்குள் சென்றான். அறைக்குள் நுழைந்த ஶ்ரீ டென்ஷனை குறைக்க எண்ணி சிகரெட்டை கையில் எடுத்து பால்கனி நோக்கி செல்ல திரும்பியவனின் வழியை மறைத்தவரே நின்றவள் , அவனை முறைத்தபடி ,





"நீங்க எப்படி வொய்ப்னு சொல்லலாம்.... எங்க அத்தானை தவிர யாருக்கும் அந்த உரிமை கிடையாது தெரிமா" மூஞ்சை தூக்கி வைத்தபடி கூறியவளை பார்த்தவனுக்கு சிரிப்பு வர ,





"ஆனா உங்க அத்தான் உன்னோட சிஸ்டர்க்கு தான் அந்த உரிமையை கொடுத்துருக்காரு... இந்த ஜென்மத்தில் உனக்கு அது கிடையாது" வேண்டும் என்றே அவளை வெறுப்பேத்தியவன் அவளை சுற்றிக்கொண்டு செல்ல முயலகையில் மீண்டு மறித்தவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவன் சட்டையை பிடித்து ,





" நீ எப்படி சொல்லலாம் ....சொல்லு" ஆங்காரமாய் கத்தியவளை ,





"இச்சி ....போ ...பைத்தியக்காரி ....எப்போ பாரு கத்திகிட்டே இருக்குறது" என்றபடி அவளை பிடித்து கீழே தள்ளிவிட்டு பால்கனி நோக்கி சென்றான் ஶ்ரீ.சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றவன் தான் தள்ளிவிட்ட நிலையிலேயே அழுது கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு கோபம் வர , நேராக அவளிடம் சென்றவன் தன் கால்களால் அவளை உதைத்து ,





" ஏய்... எழுந்து மேல படு ... ஓவர்ரா சீன் கிரியேட் பண்ணாத... .இருக்குற கடுப்புல நானே அடிச்சே கொன்னுருவேன்... எழுத்துரு" , அப்பவும் எழும்பாமல் இருந்தவளை பார்த்து காண்டு ஆனவன் ,





"இங்க பாருடி கிறுக்கி...இந்த ஜென்மம் மட்டும் இல்லை இனி வர எல்லா ஜென்மத்துலயும் உன்னோட அத்தான் உனக்கு கிடைக்க மாட்டான் " என்றவன் மேலும் ,





"இப்படியே... நான் சாகப்போறேன்... நான் சாகப்போறேன்...மென்டலா சொல்லிகிட்டே திரிய வேண்டியதுதான்" என்று இகழ்ச்சியுடன் கூறி ,





"நீ எனக்கு ஹெல்ப் பண்ணுறேன் சொல்லிருக்க ....ஞாபகம் இருக்கட்டும் .... நானே உன்ன நாளைக்கு கல்யாணம் முடிஞ்சவுடன் ... எங்க சூசைடு பண்ண பார்த்தியோ . . அங்க விடுறேன்... நடுவுல எதுவாது சொதப்புன .... நானே போலீஸ்க்கும் உன் ப்ரேண்ட்ஸ்க்கும் தகவல் கொடுத்துடுவேன் ஜாக்கிரதை" என்று தன்னுடைய இயலாமை படப்படுப்பு மற்றும் யார் மேலயோ இருக்கின்ற கோபத்தை எல்லாம் அவளிடம் காட்டியவனின் மனம் சற்று நிம்மதி அடைய உறக்கம் அவனை தழுவ உறங்கிப்போனான் ஸ்ரீ.





அவளோ அவன் பேசிய பேச்சுக்கள் அவளை வறுத்த தேம்பி தேம்பி அழுத்தவள் அதே இடத்தில தன் நிலை மறந்து , மறுநாள் திவியாக இருக்கிறவள் திவ்யஸ்ரீயாக மாறப்போவதை அறியாமல் தன் அத்தானை நினைத்து உறங்கிப்போனால் கிறுக்கி.

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 6





மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தவன் அருகில் திவி இல்லாததை கண்டு குழம்பியவனுக்கு நேற்று நடந்தது நியாபகம் வர , எக்கி கட்டிலின் கீழே பார்த்தவன் அங்கே கால்களை குறுக்கி சுருண்டு படுத்திருந்தவளை பார்க்க பார்க்க பத்திக்கொண்டு வந்தது ஸ்ரீக்கு. ஏனோ முன்பு போல அவள் மேல் பரிதாபம் வரவில்லை மாறாக அவள் மேல் ஒருவிதமான வெறுப்பு உருவாகி இருந்தது அவனுக்கு.





முகூர்த்தம் 9 -10.30 என்றபடியால் நிதானமாகவே கிளம்ப நினைத்தவன் பாத்ரூம்குள் புகுந்து கொண்டான். குளித்து முடித்து பட்டு வேஷ்டி அணிந்தவன் , அவளை பேர் சொல்லி அழைக்க விருப்பம் இல்லாதவனாக , அவளை உலுக்கி எழுப்பினான் அதில் திடுக்கிட்டு எழுந்தவள் தன் முன்னே இருந்தவனை பார்த்து புன்னகை புரிந்தாள் , பதிலுக்கு சிரிக்காமல் தலையை அசைத்தவன் அவளிடம் உடைகளை கொடுத்து பாத்ரூமை கண்களால் காட்டியபடி அறையை விட்டு வெளியேறினான் .





சிறிது நேரம் அவன் சென்ற திசையை வெறித்தவள் முகம் தொங்கிப்போக பாத்ரூம்க்குள் நுழைந்து கொண்டாள் , குளித்து முடித்து வெளியே எட்டிப்பார்த்தவள் ஸ்ரீ ரூமில் இல்லை என்றதும் வெளியே வந்து பட்டு புடவையை உடுத்திக்கொண்டாள் ,பின்பு அறையை விட்டு வெளியை வந்தவள் ஸ்ரீ எங்கே என்று பார்த்தவளை கண்ட ஸ்ரீ அவளை நோக்கி வந்தவன் ரூமில் நுழைந்து அவளையும் உள்ளே வருமாறு சைகை செய்தான். உள்ளே வந்தவளை தலை முதல் பாதம் வரை அளவிட்டவன் திருப்தியின்மையை முகத்தில் காட்ட , ஏற்கனவே கழுத்தில் ஒற்றை செயின் ஒட அலங்காரம் எதுவும் இல்லாமல் அழுத முகத்தோடு சோர்ந்து போய் இருந்தவளின் மூஞ்சு மேலும் தொங்கிப்போனது.





அவளின் முகமாற்றத்தை கண்டா ஸ்ரீக்கு மேலும் கோவத்தை கிளப்ப ,





“ ஆமா நீ பொண்ணுதானே ... நேத்து கடையில புடவை வாங்கும் போது கழுத்துக்கு கைக்கு மூஞ்சுக்குனு வாங்க மாட்டியா” என்றவனை பேந்த பேந்த முழித்தவளை பார்த்தவன் ,





“ எப்ப பாரு அத்தான் ... பொத்தானு அலைய தெரிதுல... புடவை கட்டினா இதிது போடணும்னு தெரியாது” என்று அவளிடம் காய்ந்தவன் , வேகமாக ரூமை விட்டு வெளியேறினான்.





அவன் வெளியேறுவதை பார்த்திருந்தவளுக்கு கண்ணை கரித்து கொண்டு வந்தது , பொதுவாகவே மேக்கபில் விருப்பம் இல்லாதவள் இப்பொழுது உள்ள மனநிலையில் அதை பற்றி சிந்திக்கும் திறனற்றவளாக இருந்தாள் திவி.





ஸ்ரீயை முதன் முதலில் பார்த்தவளுக்கு தோன்றிய எண்ணம் தன்னோட வேண்டுதலை ஏற்று தனக்கு இறுதி பயணத்துக்கு துணை இவன் என்று முருக்ஸ் காட்டியதாக எண்ணினாள், ஆனால் நேற்றில் இருந்து அவனோடய பாராமுகம் அவளை மேலும் மேலும் சுருங்க செய்தது அவள் மனநிலையும் பாதித்தது.





கீழே சென்றவன் நேராக வரவேற்பு அறைக்கு சென்று அங்கிருந்த போனில் சில நம்பர்களை அழுத்தியவன் எதிர்முனை எடுத்தவுடன்,





“ நான் ஸ்ரீ பேசுறேன்” “இம்ம் நல்லா இருக்கேன்...இப்போ வீட்டுலதானே இருப்ப ... நான் ஒரு லேடிய அழைச்சுட்டு வரேன்” என்றவன் பட்டென்று போனை வைத்திருந்தான் , அங்கே சில பேர் தன்னை குறுகுறு என்று பார்ப்பதை கண்டவன் கோணல் சிரிப்பை உதிர்த்தவாறே நெஞ்சை நிமிர்த்தியபடி அவ்விடத்தை விட்டு அகன்றான்.





அறைக்குள் நுழைந்தவனை பார்த்து எழுந்து நின்றவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் தனக்கு தேவையானதை எடுத்து கொண்டவன் , அவளை வெளியே வரும்படி கைகளால் சைகை காட்டினான் , ‘ நேத்து அத்தான் பொத்தானு பேசினாங்க ... இப்ப பேச மாட்டாங்களா’ என்று மனதில் சலித்தபடி ரூமை விட்டு வெளியேறினாள் . ரூமை பூட்டியவன் நேராக கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு சென்றவன் அவளையும் காரில் ஏற்றி கொண்டு வேகமா ஓட்டியபடி அடிக்கடி மணியை பார்த்திருந்தான் . 10 நிமிட பயணத்திற்கு பின் சிறு வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் இறங்கி சென்று அழைப்பு மணியை அழுத்திய சில நொடிகளில் ஒரு இளம்பெண் கதவை திறந்தாள், திறந்தவள் வெளியே நின்றிருந்த ஸ்ரீயை பார்த்து புன்னைகைத்தவள் ,





“ஸ்ரீ அண்ணா எப்படி இருக்கீங்க .. .பார்த்து ரொம்ப நாள் ஆச்சு” என்றவளுக்கு ,





” எனக்கு பேச டைம் இல்லை புவனா முகூர்த்தம் 9துக்கு ஆரம்பிக்குது“ என்றவன் திரும்பி காரில் இருந்த திவியை பார்த்து வா என்பது போல தலை அசைத்தவன் ,





“சீக்கிரம்“ என்றவாறு திவியை அவளிடம் ஒப்படைத்தான்.





புவனா என்று ஸ்ரீயினால் அழைக்கப்பட்ட அப்பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் மாட்டி இருந்தவளை ஸ்ரீதான் அவ்வழக்கில் இருந்து விடுவித்தான் , அவன்தான் அவள் நிலை அறிந்து அழகுக்கலை பயிற்சியில் சேர பண உதவி செய்து சேர்த்தும் விட்டான்.





புவனா திவியை உள்ளே அழைத்து சென்று அமரவைத்தவள் , அவள் முகத்தை ஏறிட்டு பார்த்தால் , நல்ல களையாக துறுதுறு என்று குழந்தைத்தனமான முகத்தைபார்த்தவுடன் அவளுக்கு பிடித்து விட்டது , திவியை பார்த்து புன்னகைத்தவள் வெட்டி பேச்சு பேசாமல் காரியத்தில் மளமள என்று இறங்கினாள்.





கண்ணை உறுத்தாத மிதமான ஒப்பனையும், மிதமான நீளம் உடைய திவியின் கூந்தலில் சென்டர் கிளிப் போட்டு பிரீ ஹேர் விட்டவள் , கழுத்துக்கு புடவைக்கு மேட்சாக கல்வைத்த ஒரு நெக்லேஸ் மட்டும் மாட்டியவள் , கைகளுக்கும் அதேபோல கண்ணாடி வளையல் மாட்டினாள் பின்பு உள்ளே சென்று பிரிட்ஜ்ல் இருந்து மல்லிப்பூவை கொண்டு வந்தவள் , அதை திவியின் தலையில் சூடினாள். அதற்குள் பொறுமை இழந்த ஸ்ரீ ,





“புவனா ஆச்சா ... டைம் இல்ல” வெளியில் இருந்து கத்தினான்.


“முடிஞ்சுடுச்சுனா... டூ மினிட்ஸ்” என்றவள் திவியை அழைத்து சென்று கண்ணாடி முன் நிற்கவைத்தாள் ,





“பாருங்க.. சும்மா கும்முன்னு... இருக்கீங்க” என்றவளை பார்த்து வெட்க புன்னகை சிந்தினாள், கண்ணாடியில் தன்னை தானே ரசித்தவள் திருப்தியான புன்னகையுடன் வெளியே வர, அங்கே நின்று இருந்த ஸ்ரீயின் முகத்தை பார்த்தவளை ,அவன் சிறிதும் சட்டை செய்யாமல் புவனாவிடம் பிறகு வருவதாக கூறி வண்டியை கிளப்பி மண்டபத்தை நோக்கி செலுத்தினான்.





மண்டபத்தை நெருங்கியவன் காரை விட்டு இறங்கி , அவள் இறங்கவும் உதவி செய்தான், மண்டபத்தின் வெளியே அவனுடைய சக வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸ் துறையை சேர்ந்தவர்களும் ,அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சிலரும் நின்று இருந்தனர் , சிலர் அவனை பார்த்து திகைத்து நின்றனர், பலர் தங்களுக்குள் சலசலத்தனர். எதை பற்றியும் கவலை படாமல் திவியின் கையை பற்றியவனின் வெளி தோற்றம் கம்பிரமாக இருந்தது ஆனால் உள்ளுக்குள் குதிரையை விட வேகமாக துடித்தது அவனோடய இதயம். சில நண்பர்கள் அவனை நோக்கி வந்து நலம் விசாரித்தனர், அனைவர்க்கும் சிறு புன்னகையுடன் தலையசைப்பை பதிலாக கொடுத்தான் , அவனின் நிலை புரிந்து அவர்களும் அவன் உள்ளே செல்ல வழிவிட்டனர்.





உள்ளே செல்ல முயன்றவனின் பார்வையில் முதலில் பட்டது பேனர் அதில் , ஹரிஹரன் பி.இ இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் வெட்ஸ் மஞ்சரி பி.இ என்றிருந்தது , அதை பார்த்தவனின் நெஞ்சில் தணலை கொட்டியது போல துடிதுடித்தான். எவ்வளவு ஆசையாக இந்த நாளை எதிர் பாத்திருந்தான் எல்லாம் வெறு கணவாய் போனதை கண்டவன் ஆத்திரம் மேலோங்க , அவளை இழுத்து கொண்டு உள்ளே சென்றான்.





அங்கே வருகிறவர்கள் அனைவரையும் வரவேற்கும் பொருட்டு ஸ்ரீயின் அண்ணனும் அண்ணியும் நின்றிருந்தனர் , அவர்களை பார்த்து தயங்கி நின்றவன் தன் அண்ணனை பார்க்க அவன் , தயங்கி தயங்கி வா என்பதைப்போல தலை அசைத்தான் , மருந்துக்கு கூட அண்ணன் முகத்தில் சிரிப்பு இல்லை ,அவன் அண்ணியோ முகத்தை திருப்பிக்கொண்டவள் , அவன் கை பிடித்திருந்த திவியை கண்களால் பொசுக்கினாள் . இதை எதையும் அறியாத கிறுக்கியோ சந்தனத்தை சந்தோசத்துடன் அள்ளி கைகளில் தடவியவள் , ஸ்ரீயை திருப்பி அவன் முகத்தில் பொட்டு வைத்துவிட்டாள் . இதை சற்றும் எதிர் பார்க்காத ஸ்ரீ தன் அண்ணன் முன் சங்கடமா உணர்ந்தாலும் ,இந்த மாதிரி சீன் ரொம்ப முக்கியம் என்று உணர்ந்தவன் திவியை பார்த்து சிரித்து வைத்தான்.





அவன் சிரித்ததில் அகமகிழிந்தவள் ,அவளுடைய புன்னகையும் விரிய ஸ்ரீயின் கைகளை நன்கு பற்றி கொண்டாள். அண்ணன் அண்ணியை ஒரு பார்வை பார்த்தவன் அவளை அழைத்து கொண்டு மண்டபத்தின் உள்ளே சென்றான். அவன் செல்வதை சங்கடத்துடன் பார்த்திருந்த அவன் அண்ணனும் அண்ணியும் அவனை தொடர்ந்து உள்ளே சென்றனர்.





மண்டபத்தின் உள்ளே நுழைந்தவனை பார்த்து அங்கே கூடியிருந்த அவன் உறவுக்காரர்கள் மற்றும் தெரிந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர் , ஏன் எனில் ஸ்ரீ மஞ்சு காதல் அந்த சுற்று வட்டாரத்தில் புகழ் பெற்றது அவன் காட்டிய அலப்பறைகள் கொஞ்சமா நஞ்சமா , விதி இப்படி சதி செய்யும் என்றா கனவு கண்டான்.





அவர்கள் அனைவர்க்கும் அரசல் புரசலாக ஏதோ பிரச்சனை என்றும் ஸ்ரீ மஞ்சுவை கல்யாணம் பண்ண விரும்பவில்லை என்றும் தெரிந்திருந்தது. ஆனால் இன்று வேறு ஒரு பெண் கையை உரிமையுடன் பற்றிக்கொண்டு வருவதை பார்த்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தனர் , எதை பற்றியும் கவலை படாத ஸ்ரீ திமிராய் மனதில் ஒரு முடிவு எடுத்தவனாக முன்வரிசைக்கு வந்தவனுக்கு அங்கே அமர்ந்து இருந்தவர்கள் எழுந்து வழிவிட்டனர்.





மணமேடையில் ஹரிக்கு நலுங்கு வைத்து கொண்டிருந்தனர் , மேடையில் நின்றிருந்த அவனுடைய சித்தப்பாக்கள் சேகர் குமார் இவனையும் திவியும் முறைத்தபடி இருந்தனர் , அவன் அம்மா எங்கே என்று தேடியவனின் கண்களில் அவர் படவே இல்லை.





ஸ்ரீ இருக்கையில் அமர்ந்து தன் அருகிலேயே திவியையும் அமர செய்தவன் , ஹரியை பார்த்து புன்னகை செய்தான் . அவன் புன்னகையை பார்த்த ஹரிக்கு தொண்டையை அடைத்து கண்களும் கலங்கின , பதிலுக்கு ஹரியும் அவர்கள் இருவரை பார்த்து புன்னகைத்தவன் வா என்பதைப்போல தலை அசைத்தான்.





சில நிமிடங்கள் கடந்த நிலையில் ஸ்ரீயை நோக்கி பரபரப்புடன் வந்த விஸ்ணு ,





"அத்தான் ... அக்கா உங்களை கூப்பிடுறா" என்று தயங்கியவாறே சொல்லியவனை பார்த்த ஸ்ரீ புருவத்தை சுருக்கி சற்று யோசித்தவன் வரேன் என்பதை போல தலையசைத்தான்.





அருகில் இருந்த திவியையும் கூட்டி கொண்டு விஷ்னுவை பின்தொடர்ந்தான் , இவர்களை பார்த்திருந்த ஹரிக்கும் சேகர்க்கும் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பது மட்டும் புரிந்தது , மேடையை விட்டு எழ முயன்ற ஹரியை உறவினர்கள் நலுங்கு முடியாமல் பாதியில் எழ கூடாது என்று சொல்லியதால் அவன் தன் தந்தையும் சித்தப்பாவையும் உள்ளே செல்லுமாறு வேண்டினான்.





அங்கே ஸ்ரீயோ திவியின் காதில் மற்றவர் அறியாவண்ணம் கிசுகிசுத்தான் ,





"இங்க பாரு கிறுக்கி ... உள்ளே நான் என்ன சொன்னாலும் என்ன செஞ்சாலும் வாயை மூடிக்கிட்டு இருக்குற ...புரியுதா " என்றவனுக்கு புரியுது என்ற விதமாக தலையாட்டினாள். அவர்கள் நெருக்கமாக ரகசியம் பேசியதை தொலைவில் இருந்து பார்த்திருந்த மஞ்சு ஆவேசமாக ,





"அத்தான்" என்று கத்தினாள் , அவளின் கத்தலை கேட்ட அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர் , சத்தம் வந்த திசையை நோக்குவதற்கு முன்பே அழைத்து யார் என்று அறிந்த ஸ்ரீ திரும்பி அவளை பார்க்க பார்த்த வினாடி ஸ்தம்பித்து நின்றுவிட்டான் . பட்டு புடவையில் ஏற்கனவே அழகியாக இருந்தவள் இன்று பேரழகியாக காட்சி அளித்தாள், அவளை பார்க்க பார்க்க உணர்வுகள் ஆற்றில் ஏற்படும் வெள்ளம் போல அவனை அடித்து போட்டது. தான் நினைத்து வந்தது ஒன்று ஆனால் தன்னால் அவளை பார்த்தவுடன் எப்பவும் போல செயல் இழந்து போகும் மூளை இன்றும் வேலை நிறுத்தம் செய்ததை கண்டு உள்ளே அதிர்ந்து போனான்.





திவியிடம் இருந்து கையை பிரித்தவன் என்ன செய்வது என்று தடுமாறியபடி தன் தலையை கோதி கொடுத்தவன் , எச்சில் முழிங்கியபடி அவளை பார்க்க , அவனின் தடுமாற்றத்தை கண்டு கொண்டவள் உதடுகளில் புன்னகை பூக்க அவனை நோக்கி அடிமேல் அடியெடுத்து வந்தாள் .அவள் புன்னகையை கண்டவன் அடியோடு சித்தம் கலங்கி போனவன் ஆனான் , அந்த ஆரஞ்சு உதடுளை பலமுறை சுவைத்து இருந்தவன் , அதை இப்பவே சுவைக்க வேண்டும் போல வெறி எழ அது அவன் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது , அதையும் மஞ்சு கண்டுகொண்டாள் . அவள் மனதில் , 'அத்தான் உங்களை பத்தி தெரியும் அதான் நேருல வரவச்சேன் ' என்று கர்வமுடன் நினைத்தாள்.





அருகில் நெருங்கியவள் அவன் தாடி படர்ந்த கன்னத்தை தன் கைகளில் ஏந்தி கண் கலங்க , "அத்தான்" என்று உருக்கமுடன் அழைத்தவள் அவன் நெத்தி, கண்கள் ,கன்னம், தாடை என்று முத்தமழை பொழிந்தாள் , ஸ்ரீயோ அவளின் முத்த மழையில் சுகமாக நனைந்தவனாக கண்கள் மூடி அதில் திளைத்திருந்தவனின் மனோமோ , 'எப்போ லிப்க்கு வருவா' என்று எதிர் பார்த்திருந்து, மெதுவாக கண் திறந்தவன் , அவள் உதடுகளையே பார்க்க அதை பார்த்து அவள் மயக்கும் புன்னகை சிந்தினாள் , அந்த புன்னகையில் மதி மயங்கியவன் அவள் உதடை நோக்கி குனியும் வேலையில் அங்கே இவர்களையே பார்த்தபடி நின்றிருந்த ஹரி கண்ணில் பட்டான்.





சற்றென்று விலகியவன் மானசீகமாக தலையில் அடித்து கொண்டவன் ,


'டேய் வெளில விறைப்பா போஸ் கொடுத்துட்டு ...கடைசில வடிவேலு ரேஞ்சுக்கு உதடை கடிக்க பார்த்திட்டியே டா 'என்று மனதில் தன்னையே காறித்துப்பி கொண்டிருந்தான்





அவன் விலகியதும் புரியாமல் பார்த்த மஞ்சு திரும்பவும் அவனை நோக்கி செல்ல அடி எடுத்து வைக்க முயலகையில் , சுதாரித்த ஸ்ரீ சற்றென்று திவி அருகில் போய் நின்று கொண்டவன் அவள் கைகளை அழுந்த பற்றிகொண்டவன் , திவியையும் முறைக்க தவறவில்லை





"தத்தி ... நான்தான் எல்லை மிறுறேன் தெரிதுல ஏன் கையை புடிச்சு இழுக்க வேண்டியதுதானே .... எ படம் பாக்குறமாதிரி பார்த்துகிட்டு இருக்குற" என்று அவளிடம் எகிறியவன் ,





"நானா உன்கையை விட்டாலும் ...நீ புடிச்சுக்கணும் புரியுதா" என்று அவளை மிரட்டினான் .


இதை எதையும் காதில் வாங்காத திவி ,





"நீங்க...அவங்களுக்கு " மஞ்சுவை நோக்கி கையை நீட்டியவள் "அத்தானா " என்ற மிகப்பெரிய சந்தேகத்தை கேட்டாள் , அப்போதுதான் அவளை நன்கு கவனித்த ஸ்ரீ அவள் பேய் அறைந்தது போல இருப்பதையும் , கேள்வியையும் கனெக்ட் பண்ணி பார்த்தவன் ,


'அய்யோ இவ அத்தான் பைத்தியம் ஆச்சே ' என்று மனதில் மானசீகமாய் கைவைத்தான் .




 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 7





நீங்க அவங்களுக்கு அத்தானா என்ற கேள்வியில் திகைத்து போனான் ஸ்ரீ , ‘அய்யோஅவங்களை சமாளிக்கிறதே பெரியப்பாடா இருக்கு ... இதுல இவ வேற சைடுல கிளப்பிறாளே ’ மனதில் நொந்தவன் , திவியை முறைத்தபடி





“ இப்போ அது ரொம்ப முக்கியமா” என்று சிடுசிடுத்தான். தன்னிடம் மயங்கி தான் கொடுத்த முத்தத்தில் கிறங்கி இருந்த தன்னுடைய அத்தான் சற்றென்று விலகியதும் இல்லமால் அந்த பெண் அருகில் சென்று அவள் கையை பற்றியதை பார்க்க பார்க்க ஆத்திரம் அதிகமாக , முயன்று கட்டுப்படுத்தியவள்





“அத்தான்... ப்ளீஸ் அத்தான் நீங்க எதுக்காக இப்படி பண்ணிங்கனு தெரில ...ஆனா நீங்க உங்களையும் ஏமாத்திகிட்டு என்னையும் ஏமாத்திரிங்க அத்தான்” என்று விசும்பியவளை பார்க்க அங்கிருந்தவர்களுக்கு பாவமாக இருந்தது , ஸ்ரீ மஞ்சுவின் விசும்பலை கேட்டவன் உள்ளுக்குள் துடிதுடித்து போனான் .





ஸ்ரீ அங்கிருந்த தன் சித்தி சேகரின் மனைவி துர்காவை பார்த்து ,


“ சித்தி ...ரொம்ப நேரம் இங்கயே எல்லாரும் இருக்கோம் ... முகுர்த்தத்துக்கு நேரமாச்சு பாருங்க ... ஹரியையும் மஞ்சுவையும் கூட்டிட்டு போங்க“ என்றது தான் தாமதம், ஆவேசம் அடைந்தவளாக





“உனக்கு இத சொல்ல வெட்கமா இல்ல” தூ என்று அவனை பார்த்து துப்பிய மஞ்சுவை பார்த்து , ஸ்ரீ நிதானமாக ,





“நான் ஏன்மா வெட்க படனும் ... நீதான் இப்போ ஹரி மற்றும் சித்தப்பாவை எல்லார் முன்னாடியும் தலைகுனிய வைக்க போற அதுக்கு நீதான் வெட்க படனும்” என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தவள் ,





“அத்தான் இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிட்டதுக்கு காரணமே நீங்க வருவீங்க.. . உங்களை சமாதானம் படுத்தி கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன் அத்தான் .... என்னால எப்படி ஹரி அத்தானை கல்யாணம் பண்ண முடியும்” என்றாள் கண்ணீர் மல்க ஹரியின் அருகில் ஓடியவள் ,





“ சொல்லுங்க ஹரி அத்தான்... உங்களை என்னால கல்யாண பண்ண முடியுமா... சொல்லுங்க , உங்களுக்கே தெரியும் அத்தான் தான் என்னோட உயிருனு .. .அவர் இல்லனா நான் செத்துடுவேன்... ப்ளீஸ் அவர்கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க... ப்ளீஸ் ப்ளீஸ்” என்றவளை வேதனையுடன் பார்த்தான் ஹரி ,





இதுவரை அவள் யாரிடமும் கெஞ்சியது கிடையாது , இந்த வீட்டின் செல்ல பெண் மஞ்சு, ஒரு முடிவு எடுத்தவனாக ஸ்ரீயிடம் வந்தவன் ,





“ஸ்ரீ... நான் ....” என்று ஆரம்பித்தவனை சுட்டெரிப்பது போல் பார்த்தவன் பேசாதே என்பது போல தலையை அசைத்தான் ,





“இல்ல.. ஸ்ரீ ” என்று மீண்டும் தொடங்கியவனை ஸ்ரீ, ‘உண்மைதெரிஞ்ச நீயே இப்படி பேசலாமா’ என்பதைப் போல அடிபட்ட பார்வை பார்த்தான். அதில் அடங்கிய ஹரி மஞ்சுவை பரிதாபமாக பார்த்து தலையை ஆட்டினான் , இதையெல்லாம் பார்த்த மஞ்சு ஆத்திரம் மேலோங்க ஸ்ரீயின் சட்டையை ஆங்காரமாய் பற்றியவள் ,





“ எப்படி உனக்கு .. என்னை என்னை ... வேறு ஒருவனோடு .. .ஜோடி சேர்க்க முடியுது ... அப்போ நீங்க என்ன ட்ருவா லவ் பண்ணலயா... சொல்லுங்கஆஆஆஅ” என்று அவன் சட்டையை உலுக்கியவளின் கைகளில் இருந்து தன் சட்டையை பிரித்து எடுத்தவன் ,





“ இப்பவும் சொல்லுறேன் நான் உன்னை லவ் பண்ணது உண்மை இப்போ அந்த லவ் இருக்குதான்னு தெரில , ஆனா ஒன்னு மட்டும் கண்டிப்பா சொல்ல முடியும் ... உன்னை எந்த காலத்துலயும் கல்யாணம் பண்ணிக்க முடியாது ... புரியுதா" என்றவன் மேலும்





" நான் இதை ஓபன்ணா சொல்லிட்டுதான் வீட்டை விட்டு போனேன் ... ஆனா நீ புத்திசாலித்தனமா ஏமாத்தி கல்யாணம் பன்னாலானு நினைக்கிற , குடும்பம் மானம் காத்துல பறந்தாலும் உனக்கு கவலை கிடையாதுல"





" போய் வெளில பாரு எவ்வளவு பேரு வந்துருக்காங்கன்ணு , அரசியல் தலைவர்கள இருந்து, சித்தப்பாகூட ஒர்க் பண்ணுற வக்கீல்.. ஜட்ஜ் , ஹரியோட போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து கூட வந்துருக்காங்க, இவங்க முன்னாடி எப்படி சித்தப்பாவும் ஹரியும் நாளைக்கு தலை நிமிர்ந்து நடப்பாங்க சொல்லு ...என்ன மயிருக்கு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட" என்று கோபமாய் கத்தியவனை பார்த்தவள் ,





"தெரியாம ஒத்துக்கிட்டேன் அத்தான் ... .ப்ளீஸ் ப்ளீஸ் அதை எதையும் மனசுல வச்சுக்காதீங்க ... நம்ம கல்யாணம் நடந்தா யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க அத்தான் ... ப்ளீஸ் வாங்க மேடைக்கு போவோம்" என்று அவன் கையை புடித்து இழுத்தவளை உதறிவிட்டான் ஸ்ரீ.





ஸ்ரீயிடம் இருந்து சேகரை நோக்கி சென்றவள் , அவர் கையை பிடித்து ,


"மாமா... அத்தான் கிட்ட சொல்லுங்க மாமா ... .நீங்க சொன்னா கேட்பார் .... என்னால முடில மாமா ... அய்யோ அத்தான் இல்லனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் மாமா ...ப்ளீஸ் ப்ளீஸ் ... அவரை கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லுங்க" என்று கெஞ்சியவளை பார்த்த அனைவர் கண்களும் கலங்கியது , சேகர் கண்கள் கலங்க ,





"ஸ்ரீ... நீ என்னை மதிக்கிறதா இருந்தா ... எதுவும் பேசாம மேடையில் போய் உட்கார" என்றவரை பார்த்து கை கூப்பினாள் மஞ்சு , அவர் அவளின் கையை இறக்கிவிட்டு தலையை தடவியபடி ,





"மத்தவங்களை விட உன்னோட வாழ்க்கைதான் எங்களுக்கு முக்கியம் மஞ்சுமா .. .மாமா இருக்கேன் கவலைப்படாத" என்றவரை வேதனையுடன் பார்த்தான் ஸ்ரீ , தன்னிடம் பேச மாட்டார் என்று எண்ணியவனுக்கு அவர் மஞ்சுக்காக இறங்கிவந்ததை பார்க்கும் போதே தன்னை இந்த பூமி சீதாவை போல முழிங்கிடாத என்ற பேராசை எழுந்தது கூடவே இப்போ தான் அதிரடியில் இறங்கவில்லை என்றால் தன்னை மணமேடையில் அமர வைத்துவிடுவார்கள் என்ற நம்பியவன் , சேகரை பார்த்து





"ஏன் சித்தப்பா ...ஒரு பெண்ணோட சாவுக்கு என்னை காரணம் ஆகா சொல்லுறிங்களா ... இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சா ... என்னால பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க" என்றவனை எல்லாரும் புரியாமல் என்ன சொல்லுகிறான் என்ற தோரணையில் பார்த்தனர்.





"உன்னால பாதிச்ச பெண்ணா..." என்று நக்கலா கூறியவர் , திவியை ஒரு பார்வை பார்த்து ,





"யாரு இந்த பெண்ணா ...ஸ்ரீ புதுசா எந்த கதையும் கட்டவேணா உனக்கு மஞ்சுவை கல்யாணம் பண்ணிக்குறதுல எந்த அளவுக்கு இஷ்டம் இல்லைனு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லாவே எங்களுக்கு காட்டிட... எதுவும் பேசாம மேடையில உட்கார்" என்று சற்று முன்பு முத்தத்தில் திளைத்து இருந்தவனை நக்கலாக சுட்டிக்காட்டியவர் , தன மனைவியிடம் ,





"துர்கா... மஞ்சு அழுது முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு பாரு சரி பண்ணி கூட்டிடுவா ... விஷ்ணு ஸ்ரீயை மேடைக்கு கூட்டிட்டு போ" அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்தவர் தன் தம்பியுடன் வெளியேற முயன்றவரை ஸ்ரீயின் குரல் தடுத்தது ,





"ஆல்ரைட் இதுக்கு மேல உண்மையை மறைக்கிறதுல எந்த ப்ரோஜனமும் இல்ல" என்றவன் ஹரியை பார்த்து ,





"ஹரி ... அன்னைக்கு சென்னைக்கு போனப்ப நடந்ததை எல்லார்கிட்டயும் சொல்லிடலாம்" என்றவனை பார்த்து நிம்மதி அடைந்த ஹரி ,





"உண்மையாவா " என்றவனை பார்த்து ஆமாம் என்னும் விதமாக தலை ஆசைதான் ஸ்ரீ.





"ஹரி எந்த உண்மையை சொல்ல போறீங்க ... நீயும் ஸ்ரீ கூட கூட்டு சேர்ந்த்திருக்கியா" என்று கடுமையாக கேட்ட சேகரை பார்த்து ஹரி


"இல்லைப்பா ...அதை எப்படி சொல்லுறதுனு தெரியாம ... தெரிஞ்சா எல்லாரும் கஷ்ட படுவீங்க , அதுவும் இல்லாம ஸ்ரீயும் யாருக்கும் தெரியவேணான்னு சொல்லிட்டான் பா " என்று கோர்வை இல்லாமல் துயரத்துடன் கூறிய ஹரியை கூர்மையாக பார்த்த சேகருக்கு அவன் பொய் சொல்லவில்லை என்று புரிந்தது , ஏதோ சங்கடம் தரும் செய்திதான் அது என்று அவர் உள்ளுணர்வு எச்சரித்தது , இருந்தும் அதை தெரிந்தால் தான் இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வரும் என்று எண்ணியவர் கண்கள் இடுங்க ,





"என்ன சொல்ல போறீங்க , எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க ... முகுர்த்தம் முடியம் கொஞ்ச நேரம்தான் இருக்கு" என்றவரிடம் ஹரி எதுவோ சொல்ல முயலகையில் , ஸ்ரீ





" நான் ரொம்ப டிஸ்டுர்பா இருக்கேன் ஹரி என்னை அவன் கூட சென்னைக்கு கூட்டிட்டு போனான் இல்லையா...அங்கே..அங்கே " என்று தொண்டையை செறுமியவன்





"அருள் டெத் பற்றி சில விஷயங்கள் தெரிஞ்சுது... அதுல ரொம்ப அப்செட்டா இருந்தேன் ... அப்போதான் ..." என்று தயங்கியவன் தொண்டை அடைக்க பேச முடியாமல் திணறியவனை பார்த்த ஹரி அவன் அருகில் வந்து அவனை அணைத்த படி ,





"பரவாயில்லை ஸ்ரீ ... எல்லாத்தையும் சொல்லிடு ...நீ தனியா மனசுக்குள்ள போட்டுக்கிட்டு தவிக்கிறது பாக்க முடிலடா ... இல்லைனா என்ன நடந்துச்சுனு நான் சொல்லவா" என்று அக்கறையாக தன்னை கேட்டவனை பார்த்த ஸ்ரீ வேண்டாம் என்னும் விதமாக தலை அசைத்தவன் ,





"இல்ல ஹரி ... இதை நான் தான் சொல்லணும்"என்றவனை எல்லாரும் கலவரத்துடன் பார்த்தனர் , மஞ்சு தன் உயிரை கையில் பிடித்தபடி ஸ்ரீயை பார்த்து கொண்டிருந்தாள். அவளுடைய தவிப்பை உணர்ந்த ஸ்ரீ மானசீகமாக அவளிடம் மன்னிப்பை வேண்டியவன் அன்று நடந்ததை விவரித்தான் ,





" அருள் சம்பந்தமா நான் கேட்ட செய்தி என்னை நிலையிழக்க செஞ்சுச்சு ... அப்போதான் ... நான் ஓவர் ட்ரிங்க்ஸ் எடுத்துக்கிட்டேன் ... எனக்கு போதை ஏற ஏற அருளை நினைச்சு வெறியும் ஏறிச்சு ... அந்த வெறியை யார் மேலயாவது காட்டணும்னு மனசு கடந்து துடிச்சுக்கிட்டு இருந்துச்சு ... அப்போ நான் ஹோட்டல்ல தான் தங்கிட்டு இருந்தேன் , ஹரி மீட்டிங்கு போய்ட்டான் " என்று நிறுத்தியவன் ஹரியை ஏறிட்டான் அவன் முகம் இறுக ஸ்ரீ முகத்தை பார்க்காமல் கோபத்தை அடக்கியபடி வாயை இறுக மூடியிருந்தான், ஸ்ரீ மேலும் நடந்ததை காட்சியாய் விவரிச்சான் ,





ரூமில் இருந்து வெளியே வந்த ஸ்ரீ





"அருள்... ஏன்டா என்னை விட்டு போன... முடிலடா... எனக்கு இப்போ இருக்குற வெறிக்கு யார் மூக்குலயாவது ஒரு குத்து விடணும்டா" என்று புலம்பியவன் தள்ளாடியபடி காரிடரில் நடந்து வர யார் மேலயோ இடித்து நின்றான் , சில நொடிகளில் கண்ணம் எறிந்த பின்தான் தெரிந்தது தன்னை யாரோ அறைந்ததை , ஏற்கனவே போதை வெறியில் இருந்தவன் அறைந்தவரை தும்சம் பண்ணும் விதமாக அவரின் கழுத்தை பிடித்தபின் தான் உணர்ந்தான் அது ஒரு பெண் என்று.





சட்டம் படித்து இருந்தாலும் , பெண் என்பவள் ஆணுக்கு அடங்கியவள் என்ற என்ன உடைய ஸ்ரீக்கு தன்னை அடித்தது ஒரு பெண் என்றதும் கோவம் கிர்கிர் என்று ஏற ,





"ஏய் -----(பேட் ஒர்டஸ் ) என்னையே அடிக்கிறிய உன்னை" என்று அவளை அடிக்க கையை ஓங்கியவனை பார்த்து தன் காலில் இருந்த செருப்பை கழட்டி ஆட்டியபடி ,





"ஏன்டா குடிக்கார நாயே ... குடிச்சுட்டு என்ன இடிச்சதும் இல்லாம ... கெட்ட வார்த்தையால திட்டவேற செய்யிறியா ... இன்னைக்கு அந்த வாயை பேக்காம விடமாட்டேன்டா " என்று ஆவேசமாக கத்தி அவன் வாயை செருப்பால் பிளக்க முயற்சித்தவளின் கையை ஈஸியாக தடுத்தவன் ஆங்காரமாக ,





"என்னையா செருப்பால அடிக்க பார்த்த ... உன்னை செருப்பை விட கேவலமான நிலைக்கு தள்ளுறேன் பாரு " என்றவன் வலுக்கட்டாயமாக அவள் திமிர திமிர தன் ரூமிற்க்கு இழுத்துவந்தவன் அவள் மேல் பாய்த்திருந்தான் வெறிகொண்ட வேங்கையாக. தையிரியமான பெண்ணாக இருந்தாலும் போதையில் வெறிபிடிச்ச நாயை போல பாய்ந்தவனை கண்டு மிரண்டவள் சற்றும் மனதளராமல் அவனிடம் இருந்து விடுபட முயற்சித்தாள் , பழியுணர்ச்சியுடன் வேட்டையில் இறங்கிய வேங்கையிடம் பரிதாபமாக துடிக்க துடிக்க தன் சித்தம் கலங்க தோற்றது புள்ளிமான்.





தலை குனிந்தபடி நடந்தை சொல்லி முடித்தவனை பார்த்திருந்த ஹரி அவனை முறைக்க அவன் பக்கம் திரும்பாமல் ஸ்ரீ எல்லோர் முகத்தையும் ஏறிட்டு பார்க்க அங்கே அப்பட்டமாக அதிர்ச்சி தெரிந்தது , மஞ்சு சுயநினைவே இல்லாதவள் போல சேகர் மேல் சாய்ந்திருந்தாள் , சேகரோ நம்பாத பார்வை பார்த்தபடி ,





"சரி..காரிடர்ல அந்த பெண்ணை வம்பு பண்ணதை யாரும் பாக்கலயா .... சரி மேலே சொல்லு" என்றவரை பார்த்து பல்லை கடித்த ஸ்ரீ ,





"இல்ல அப்போ யாரும் வரலை ... யாராவது வந்துருந்தா இந்த விபரீதம் நடந்துருக்காது" என்று தலையை ஆட்டி வருத்தப்பட்டவன் மேலும்





"நான் டயர்ட்ல தூங்கிட்டேன்...ஹரி வந்துதான் எழுப்புனான் " என்றவனை நன்றாக முறைத்தான் ஹரி , எல்லோரோட கவனமும் தன்னை நோக்குவதை கண்ட ஹரி முகத்தை சாதாரணமாக வைத்தபடி எல்லோரையும் பார்த்து ஆம் என்பது போல தலை அசைத்தான்.





"ஹரி என்னை எழுப்பி நடந்தது என்ன என்று கேட்டான் , அப்போதான் நான் செஞ்ச தவறு புரிஞ்சது , எல்லாத்தையும் நான் ஹரிகிட்ட சொன்னேன் ...அவன் என்கிட்ட கோப்பட்டன் ...சரி நடந்தது நடந்துருச்சு யாரு அந்த பொண்ணுன்னு விசாரிக்க சிசிடிவி கேமரா புட்டேஜ் பார்த்தப்போ அந்த பொண்ணு , அங்கே நடந்த கான்பிரண்ஸ் முடிச்சுட்டு போய்கிட்டு இருந்தப்பத்தான் இப்படி நடந்துடுச்சு...ஹரி அவனோட இன்ஃப்ளுயன்ஸ் யூஸ் பண்ணி அவங்க அட்ரஸ் கண்டுபுடிச்சு போனப்பத்தான் எங்களுக்கு அதிர்ச்சியான தகவல் கிடைச்சது" என்று நிறுத்தியவனை பார்த்த சேகர் , நக்கலாக





"யாரு அந்த பெண் ...நாங்க தெரிஞ்சுக்கலாமா" என்றவரின் பார்வை திவியை வருடியது , அவர் மனமோ 'டேய் ஸ்ரீ...பக்கா கிரிமினல் லாயர்னு ப்ருவ் பண்ணுற ' என்று நினைத்தது





அதுவரை மஞ்சுவின் அத்தான் என்ற அழைப்பும் ,அவளின் அத்தான் கதறலையும் மட்டுமே நினைத்திருந்த திவி எப்படியாவது மஞ்சுவையும் ஸ்ரீயையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தாள் , திடீர் என்று ஸ்ரீ உண்மையை சொல்லப்போறேன் என்றதும் ஹரியை போல இவளும் சந்தோசம் அடைந்தாள் ஆனால் ஸ்ரீ கூறிய அனைத்தையும் கேட்டுருந்தவள்





'என் கிட்ட பிளட் கேன்சர் சொன்னாங்க ... இப்போ வேற சொல்லுறாங்க' என்று பெரும் ஆராயச்சியில் இறங்கி இருந்தவளை நோக்கி ஸ்ரீ கையை நீட்டவும் குழப்பத்துடன் அவனை பார்த்தவளை பார்த்து ஸ்ரீ முறைத்தான் ,பின்பு அவனே கையை பற்றி எல்லோர் முன்னாடியும் நிறுத்தி ,





"அந்த பெண் இவங்கதான்" என்றவனை எல்லோரும் அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர் ,சேகர் மட்டும் நீ இதைத்தான் சொல்லுவேன்னு தெரியும்' என்ற பார்வை பார்த்தார் ', மஞ்சு விலுக்கென்று நிமிர்ந்து திவியை பார்த்தவள் 'நீயா இப்படி பண்ணது 'என்ற நம்பாமல் பார்த்திருந்தவளின் மூளை மரத்தத்தை போல உணர்ந்தவளுக்கு ,அடுத்து திவி ஸ்ரீயிடம் கூறியதை கேட்டதும் 1000 வாட்ஸ் பல்ப் போட்டது போல பிரகாசம் ஆனது ,





திவி ஸ்ரீயை பார்த்து , "என்னை நீங்க ரேப் பண்ணிங்களா" என்று தலையை தட்டி யோசித்தவள் ,





"அப்படி ஒன்னும் நடந்தது போல எனக்கு பீல் ஆகலேயே " என்றவளை தூக்கிப்போட்டு பந்தாடும் மனநிலையில் இருந்தான் ஸ்ரீ.

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 8





தான் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து இருக்கும் வேளையில் , திவி தனக்கு அது போல பீல் ஆகவில்லை என்று கூறியதை கேட்டதும் ஸ்ரீக்கு கோபம் கிர்ர்ர் என்று ஏறியது , அவளை ஏறிட்டு பார்த்தவன் அவளை போல தலையை தட்டி யோசித்தவன் , அருகில் இருந்த அறையை சுட்டிக்காட்டி,





“எனக்கும் அன்னைக்கு நடந்தது நினைச்சு எந்த பீலும் இல்லை , உனக்கும் இல்லை அந்த ரூம்க்கு போவோமா , அன்னைக்கு என்ன நடந்துச்சோ அதை அப்படியே போல்லோவ் பண்ணுறேன் என்ன சொல்லுற“ என்றவன் கோவமாக அவள் கைகளை பிடித்து இழுக்க , சேகரின் குரல் சத்தமாக ஒலித்தது “ஸ்ரீஇஇஇ“ என்றதுதான் தாமோதம்,





“ ஏன் சித்தப்பா கத்துறிங்க ... நானே என் வாழ்க்கை பாதையே மாறிடுச்சுனு கவலைல பேசிகிட்டு இருக்கேன்... அதை கொஞ்சமும் நம்பாம நீங்க நக்கல் பண்ணுறீங்க .. .இவ பீல் இல்லைனு சொல்லிக்கிட்டு இருக்கா” என்றவனை பார்த்து





“ இல்ல ... இல்ல இல்ல ... நீங்க பொய் சொல்லுறீங்க” என்று கத்திய திவியின் கையை புடித்து முறுக்கியவன்





“எதுடி பொய் ..” என்று கோவமாக ஆரம்பித்தவனை பார்த்து , அவன் சித்தி துர்கா





“முதல்ல அந்த பொண்ணு கையை விடு... சும்மா சும்மா அவளை மிரட்டாதே... எந்த பெண்ணும் இந்த விசயத்துல பொய் சொல்ல மாட்டாங்க, அவதான் இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கா ... எதுக்கு கட்டாயப்படுத்திகிட்டு இருக்க ஸ்ரீ” என்றவர் , அவன் தாடையை தடவி ,





” ஏன்டா இப்படி மாறிப்போன ... மஞ்சு மேல உனக்கு என்ன கோவம் .... பெண் பாவம் பொல்லாதது... ஸ்ரீ” கூறும் போதே , சொந்தகார பெரியவர் உள்ளே நுழைந்து





“சேகர் முகுர்த்தம் முடிய இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு... அங்கே எல்லாரும் வாய்க்கு வந்தபடி பேசிகிட்டு இருகாங்க இங்கே நீங்க எல்லாம் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கீங்களா , ஏன்மா இவன்தான் உன்னை வேணாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சுட்டு போனானே அப்புறம் என்ன ம——கு அவன்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்க” கோவமாக சேகரிடம் ஆரம்பித்து மஞ்சுவிடம் முடித்தார்.





“மாமா நீங்க போய் அங்க பாருங்க ... நாங்க இதோ வந்துடுறோம் ... மத்த சடங்கு எல்லாம் பண்ண நேரம் இருக்காது, நேரா தாலி கட்ட சொல்லிடலாம்” தன் மாமா முறை உள்ள அந்த பெரியவரிடம் சேகர் தன்மையாக பேசி அனுப்பிவைத்தார், அந்த பெரியவரோ ஸ்ரீயை முறைத்தவாறே வாயில் எதையோ முணுமுணுத்தபடி அந்த இடத்தை விட்டு வெளியேறினார் .





முகூர்த்த நேரம் முடிய இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு என்பதை அறிந்த மஞ்சு இப்பொழுது விட்டால் தன் அத்தான் தனக்கு இல்லை என்பதை உணர்ந்தவள் , கண்ணீர்மல்க ஸ்ரீயை நோக்கி ,





"அத்தான் ... உங்... உங்களை அறியாமல் நடந்த தப்புதானே அத்தான்” கேவியவள் "அதுக்காக இத்தனை வருஷம் உங்களோட உயிரா பழகிய என்னை விட்ருவீங்களா ..." என்று முகத்தை மூடி அழுதவள் , பின்பு அவன் கையை பிடித்தபடி





"நீங்க எனக்கு வேணும் அத்தான்... நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது அத்தான்" என்று கதறியவளை பார்க்க அங்கே இருந்தவர்களுக்கு ஸ்ரீயை வெட்டி போடும் ஆத்திரம் எழுந்தது , அவனோ எதையும் கண்டுகொள்ளாமல் அவளிடம் இருந்து தன் கையை உருவும் முயற்சியில் இருந்தான்.





மஞ்சுவின் நீங்க வேணும் அத்தான் என்ற வார்த்தையே திவியின் காதுகளில் ரிங்காரமிட்டது , கூடவே





'எனக்கு நீங்க வேணும் அத்தான் ... இவ ..இவ ..உங்களை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டா... நீங்க இல்லனா நான் செத்துடுவேன்... ப்ளீஸ் ப்ளீஸ் அவ கழுத்துல இருக்குற தாலியை கழட்டி எரிங்கஆஆஆ' அதற்கு 'செத்து தொலை' என்றவனின் பதிலும் அவளின் நினைவுகளில் வந்து இம்சித்தது.





மஞ்சுவின் கதறலை கேட்டவள் அதற்குமேல் பொறுக்க முடியாமல் , தலையை பிடித்தபடி "ஸ்டாப் இட்" என்று கத்தியவளை அனைவரும் வினோதமாக பார்த்தனர் , மஞ்சுவோ தன்னை நிறுத்து என்று கூறியவளை கோபம் பொங்க பார்த்தவள் அவள் அருகில் சென்று ஏதோ சொல்ல முயலுகையில் ,





"உங்களுக்கு உங்க அத்தானா ...உயிரா" என்று தன்னிடம் வினவிய திவியின் கைகளை பற்றிய மஞ்சு , "ரொம்ப ... ரொம்ப "என்று அழுத்தி கூறியவளை பார்த்த திவி , மஞ்சுவின் கண்ணீரை துடைத்தபடி ,





"எனக்குதான் எங்க அத்தான் கிடைக்கல " என்று சிறுகுழைந்தை போல அழுதவளை பார்த்திருந்த அனைவரும் அவளை குழப்புதுடன் பார்த்துக்கொண்டிருக்க , மஞ்சுவோ ,





"எங்க அத்தானை எனக்கு திருப்பி கொடுத்துடு ...ப்ளீஸ்" என்று கைகூப்பி கெஞ்சியவளை பார்த்து திவி அவள் கைகளை இறக்கிவிட்டபடி,





"உங்க அத்தான் உங்களுக்குத்தான் மேடைக்கு கூட்டிட்டு போங்க " என்றவளை பார்த்திருந்த ஸ்ரீ ஆத்திரம் மிகுதியாக ,





"ரெண்டு பேரும் நிப்பாட்டுரிங்களா , என்ன காதலுக்கு மரியாதை படம் ஓட்டுரிங்களா" கோபமாக கேட்டவன் , திவியை பார்த்து ,





" என்ன பத்தின முடிவுகளை எடுக்க முதல உனக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தது... " என்றவனை திரு திரு என்று முழித்தவள் , பின்பு எதையோ நினைத்தவளாக





"நீங்க மட்டும் என்னை கேட்காமலே ..என்ன கல்யாணம் பண்ணிக்க போறேன் சொல்லுறீங்க உங்களுக்கு யாரு ரைட்ஸ் கொடுத்தது" என்று படபட என்று பொரிந்தவளை பார்த்து ஸ்ரீ நக்கல் சிரிப்புடன்





"நான் எப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னேன் திவிக்குட்டி" என்றவனை பார்த்து திவி மீண்டும் முழித்தால் என்றால் மஞ்சுவோ அவனின் திவிக்குட்டி என்ற அழைப்பை கேட்டவளுக்கு இதயத்தில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல உணர்ந்தாள்.





இந்த கூத்தையெல்லாம் காண சகிக்காமல் சேகர் , "ஸ்ரீ... " என்று தொடங்கியவரை கையை அமர்த்தி தடுத்தவன் ,





"யாரு சொன்னாலும் ...ஏன் அந்த கடவுளே சொன்னாலும் நான் கல்யாணத்துக்கு ஓத்துக்கமாட்டேன்" என்று பிடிவாதம் பிடித்தவனை, எப்படி சரி செய்வது என்று தெரியாமலும் அதற்கு நேரமும் இல்லை என்று அறிந்த அனைவரும் விழிபிதுங்கினர் , மஞ்சுவோ கண்ணீரோடு திவியை பார்த்து ஏதாவது செய்யேன் என்பதைப் போல பார்த்திருந்தாள்.





"எனக்கு தெரியாது... இப்போ நீங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறிங்க" என்று சிறுபிள்ளை போல கூறிய திவியை நோக்கி ஆள்காட்டி விரல் நீட்டியவன்





"உனக்கு தேவையில்லாத விஷயத்துல நீ மூக்கை நுழைக்காத , மரியாதையா ஒதுங்கி போய்டு" என்றவனை பார்த்தவள் ,





" எனக்கு தெரியாது... இப்போ நீங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறிங்க " என்று திரும்ப திரும்ப அதையே சொல்லுபவளை கொலை வெறியுடன் பார்த்தவன் ,





" கொடைகாணல்ல கொடுத்தது பத்தலயா திரும்பவும் வேணுமா " தான் அடித்ததை நினைவுபடுத்தி கூறியவனை பார்த்தவள் மீண்டு





"எனக்கு தெரியாது... இப்போ நீங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறிங்க " என்றதுதான் தாமதம் ,





"என்னடி நினைச்சுகிட்டு இருக்க **********( ஸ்ரீ கெட்ட வார்த்தை பேசுறதுல மாஸ்டர் வாங்கியவன்) விட்டா பேசிக்கிட்டே போகிற " என்றவன் அவளை அடிக்க கையை ஓங்கியவனின் கை அந்தரத்தில் நின்றது அவள் கூறியதை கேட்டு ,





"இப்போ நீங்க கல்யாணத்துக்கு ஒத்து கொள்ளலான ... நீங்க என்கிட்ட ஏன் கல்யாணம் பன்னிக்கமாட்டேன் சொன்ன விசையத்தை இங்க இருக்கவங்க கிட்ட சொல்லிடுவேன் ... சொல்லவா " என்று அவனுக்கு மட்டும் கேட்டும் குரலில் கூறியவளை பார்த்த ஸ்ரீ தலையை மேலும் கீழுமாக ஆட்டியவன் , "ஒஹ்ஹஹ் ...அப்படியா" என்றவனின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.





அங்கிருந்தவர்களுக்கு இவளுடைய நடவடிக்கை சற்று வித்தியாசமாக பட்டாலும் ஸ்ரீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா போதும் என்ற மனநிலையில் இருந்தனர் , திவியை முறைத்தவன் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறியவன்





"நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் " என்றதும்தான் தாமோதம் அனைவரும் சந்தோஷத்தில் திளைத்தனர் , சேகர் மட்டும் யோசனையோடு பார்த்திருந்தார் , ஹரியும் ஸ்ரீயைத்தான் நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தான் , மஞ்சு திவியை கட்டி அனைத்து கொண்டு தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினாள்.





"இப்போ உங்க எல்லாருக்கும் சந்தோசமா" கத்தியவனை பார்த்து மஞ்சு "அத்தான் "என்றழைக்க , "பேசாதே "என்று கடுப்படித்தான் , திவியிடம் திரும்பியவன் ,





"ஏய் கிறுக்கி... அரை கிறுக்கியா இருக்கிற உன்னை முழு கிறுக்கிய மாத்தலை என் பேரு ஸ்ரீதர் இல்லடி...சாவனும் சாவனும் சொல்லுவா தானே ...அத இன்னையிலருந்து தினம் தினம் நீ அனுபவிப்படி"





என்று வன்மத்துடன் கூறியவன் சற்றென்று தன் சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் கோர்த்த தாலி கயிறை எடுத்து திவியின் கழுத்தில் கட்டியிருந்தான். எதற்கும் இருக்கட்டும் திவியிடம் கொடுத்து அவளையே தெரியாமல் கட்டிக்கொள்ள சொல்லலாம் என்று முன்னேற்பாடாக எடுத்து வந்திருந்தவன் அவனே கட்ட வேண்டிய சூழல் ஏற்படும் என்று நினைக்கவேயில்லை





சடுதியில் நடந்த இந்த செயலை யாரும் எதிர்பார்க்கவில்லை , தன் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை பார்க்க பார்க்க வெறியேறிய திவி , தன் அத்தானிற்கு மட்டுமே அந்த உரிமை இருப்பதாய் எண்ணி இருந்தவளின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப்போட்டதை போல ஸ்ரீ தாலி கட்டியதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை , மேலும் மஞ்சுக்கு துரோகம் இழைத்தது போல உணர்ந்தவள் ஆத்திரம் கண்ணை மறைக்க ஸ்ரீயை அறைந்திருந்தாள் , அவளின் இச்செயலில் அதிர்த்த ஸ்ரீ ஏற்கனவே கோபத்தில் கொதித்து கொண்டிருந்தவனுக்கு எண்ணெய் ஊற்றியது போல கண்மண் தெரியாத அளவுக்கு கோபம் ஏற பலம் கொண்ட மட்டும் அறைந்திருந்தான்.





ஸ்ரீ அறைந்ததில் நிலை தடுமாறியவளுக்கு பொறி கலங்கியது , திகைத்து போய் கன்னத்தை பொத்தியபடி அவனையே வெறித்திருந்தாள் . ஹரி மட்டும் "ஸ்ரீ.." என்று கடுமையாக அழைத்தவன் அவள் அருகில் சென்று ,





"ஆர் யு ஓகே "என்றதிற்கு தலையை மட்டும் ஆட்டினாள் .


அவன் தாலி கட்டிய அதிர்ச்சியில் இருந்து மீண்ட சேகர் , அவன் சட்டையை பிடித்தபடி





"நீ கடைசிவரை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா கூட நான் மண்ணிருச்சுப்பேன் ஆனா நீ ... சொல்லு அருள் சாவுக்கு பழி வாங்கத்தான் இப்படி பண்ணியா "என்றவர் அவனை ஓங்கி அறைந்திருந்தார். அதுவரை பித்துபிடித்தது போல இருந்த மஞ்சு அருள் என்ற வார்த்தையை கேட்டவுடன் வெறிகொண்ட பெண்சிங்கமாய் சிலிர்த்து எழுந்தவள் , அவனை மாறி மாறி கன்னம் கன்னமா அறைந்தவள் , அவன் சட்டையை உலுக்கியபடி ,





"சொல்லுங்க ... என்னை விட்டுட்டு இவளுக்கு தாலி கட்டிருக்கனா அந்தளவுக்கு அந்த அருள் முக்கியமா போய்ட்டானா ... சொல்லு " என்று ஆங்காரமாய் கத்தியவள் ,





"நான் என்ன தப்பு பண்ணேன்...உன்னால எப்படி என் கண்ணு முன்னால அவளுக்கு தாலி கட்ட முடிஞ்சுது" என்றவளை பார்த்து இகழ்ச்சியாக சிரித்தவன் ,





" நீ காலம் பூரா என்ன நினைச்சு வேதனை படனும் ... அதை பார்த்து அந்த ஆள் தினம் தினம் செத்து செத்து பிழைப்பான் ...கூடவே மஜால்ஸ் பண்ணுறதுக்கு சும்மா கும்முன்னு குட்டி நமிதாப்போல பொண்டாட்டி ...இதுக்கு மேல வேற என்ன வேணும்" என்று அவளை வெறுப்பேத்துவதை போல நக்கல் அடித்தவனை பார்த்திருந்தவள் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் இறுகி போயிருந்தாள் , அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் ,





திவியை பார்த்து தன்னருகில் வரும்படி சைகை செய்தான் , அவள் பயந்து பயந்து வருவதை பார்த்து வேகமாக அவளை எட்டி இழுத்தவன் ,அவள் தோளில் கை போட்டு அனைத்தவன் ,





" இங்கபாரு திவிக்குட்டி சித்தப்பா ...இல்ல இல்ல ..உன் மாமா அடிச்சு கன்னம் பழுத்துருச்சு ...உனக்கு..லிப்போலஜி டிரீட்மென்ட் பண்ண தெரியுமா "என்றவனை பார்த்து எச்சில் முழிங்கியபடி தெரியாது என்று தலையசைத்தவளை பார்த்து வசீகரமாக சிரித்தவன் ,





"நோ ப்ரோப்லேம் ...உனக்கு நான் எல்லா கசமுசா விளையாட்டு சொல்லித்தரேன் குட் கேர்ளா கத்துக்கிட்டு மாமாக்கு அடுத்தவருடம் ஒரு குட்டி ஸ்ரீயோ இல்லனா குட்டி டிடியோ பெத்து கொடுக்குற ..என்ன " என்றவனை பார்த்து முழித்தவள் பின் ஆமாம் என்று சொல்லலைனா அடிப்பானோ என்று பயந்தவள் , சரி என்னும் விதமாக தலையை ஆட்டினாள்.





அவன் அவள் கன்னத்தை பிடித்து , "குட் கேர்ள்" என்று ஆட்டியவனின் கை அழுத்தத்தில் கன்னம் வலித்ததை கண்கள் கலங்க பல்லை கடித்து பொறுத்துக்கொண்டாள் , அவள் முகம் வலியில் சுருங்குவதை பார்த்தபின்தான் கன்னத்தில் இருந்து கையை எடுத்தவன் அவளை பார்த்து கண் சிமிட்டினான்.





இதையெல்லாம் பார்த்த அனைவரின் மனதில் இருந்தும் ஸ்ரீ சாக்கடை அளவுக்கு கீழ் இறங்கி போனான் , அப்பொழுதுதான் உள்ளே நுழைந்த மஞ்சுவின் தந்தைக்கு அவன் மஞ்சுவிடம் பேசியது அனைத்தும் காதில் விழுந்தது ,அதுவும் எல்லார் முன்னாடியும் அவன் அந்த பெண்ணை கொஞ்சுவதை பார்த்தவருக்கு கோபம் தலைக்கு ஏற விறுவிறு என்று அவனிடம் நேரே வந்தவர் ,





"டேய் ...எவ்வளவு தையிரியம் ..எங்க முன்னாடியே இதையெல்லாம் பண்ணுவ " என்றவர் சேகரை பார்த்து , "அத்தான் ..உங்க முன்னாடியே இந்த அக்கிரமம் பண்ணுறான் எல்லாரும் அமைதியா இருக்கீங்கா" என்று கத்தியவர் எட்டி அவன் சட்டையை பிடிக்க முயலுகையில் ,





"போய்யா மாமா ...கொலை காண்டுல இருக்கேன் ...அசிங்கப்படாம போய்டு" என்றவன் அவரை பிடித்து தள்ளியிருந்தான்.





அதில் நிலை தடுமாறி கீழே விழா போனவரை பிடித்த மஞ்சு , ஸ்ரீயை உணர்ச்சியற்ற பார்வை பார்க்க , அந்த பார்வையை காண சகிக்காதவன் போல திவியின் தோளில் அழுத்தம் கொடுக்க வலியில் பரிதாபமாக அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தாள் , அவன் பார்வையோ மஞ்சுவை விட்டு சிறிதும் அகலவில்லை , மேலும் மேலும் அழுத்தத்தை கூட்டிப்போனவனின் கையை பற்றியவள் அவன் விரல்களுக்குள் தன் விரலை கொடுத்து கோர்த்திருந்தாள் , கோர்த்த பின்தான் ஏன் கோர்த்தம் என்று நொந்து கொள்ளும் அளவுக்கு விரல்களை நெறித்திருந்தான், வலி பொறுக்க மாட்டாமல் திவி ,





"என்னங்க..." என்று ஸ்ரீயை கண்ணீர் மல்க அழைத்தவளை பார்த்தவன் , "என்ன வலிக்குதா" என்றதற்கு ஆம் என்று தலையாட்டியவளை பார்த்து சிரித்தவன் , " வலிக்கினும்...ஏன்டா தாலி கட்ட சொன்னோம்னு ஒவ்வரு தடவையும் நீ வலில துடிக்கணும் "





என்றவன் மேலும் அழுத்தத்தை கூட்டி அவள் விரல்கள் நொறுங்கும் அளவு நெறித்த பின்பே கைகளை விட்டான். அதற்குள் திவி துடிதுடித்து போனாள் , விரல்களை சிறிது நேரம் அவளால் அசைக்க கூட முடியவில்லை, இதெயெல்லாம் பார்த்த மஞ்சுக்கு அவன் ஆசையாய் அவள் கைகளை பற்றியதை போல உணர்ந்தவள் வாழ்க்கையை வெறுத்து போனாள் , கண்களை துடைத்தபடி , முகத்தில் நிமிர்வை கொண்டுவந்தவள் ,





"அப்பா நான் ஹரி அத்தானை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன்" என்றவள் மேலும் ஸ்ரீயை பார்த்தவாறே அழுத்தமாய்





"அத்தான் என் முன்னாடியே அவளுக்கு தாலி கட்டினீங்க பாருங்க அப்பவே உள்ள நொறுங்கிட்டேன் , என் முன்னாடியே நான் துடிதுடிக்க அவ கழுத்துல தாலி கட்டினமாதிரியே அவ கழுத்துல இருந்து கூடிய சீக்கிரம் தாலி இறங்கும்... அதுவரைக்கும் நான் ஹரி அத்தான் கூட குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமாட்டேன் ... அது எவ்வளவு வருஷம் ஆனாலும் காத்துகிட்டு இருப்பேன் ... இது சத்தியம்" என்று உறுதியாய் கூறியவளை கண்டு பதறிய ஹரி , "மஞ்சு..."என்றவனால் மேலே எதுவும் பேச முடியமால் தொண்டை அடைக்க ஸ்ரீயை பார்த்து பரிதவித்து நின்றிருந்தான்.





"வாழ்த்துக்கள் மஞ்சு கூடிய சீக்கிரமே உன்னோடைய சபதம் நிறைவேறி குட்டி ஹரியோ இல்ல குட்டி மஞ்சுவோ பிறக்க என்னுடைய ஆசிகள்" என்றவன் ஆசி வழங்குவது போல கையை தூக்கி ஆசிர்வதிக்க , மிக மிக வெறுப்புடன் அங்கிருந்து அனைவரும் வெளியேறினர், அவன் சித்தி கூட அவன் முகத்தை பார்க்க பிடிக்காதவன் போல முகத்தை திருப்பி கொண்டு வெளியேறினார்.





போகிறவர்களையே வெறித்து பார்த்திருந்த ஸ்ரீயின் தோள்களில் கரத்தை போட்டு அவனை அணைத்த ஹரி ,





"ஏன்டா இப்படி உன்னோட பேர கெடுத்துகிட்ட ...எல்லாரும் உன்னை வெறுத்துட்டாங்கடா" என்றவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் , அவன் முகத்தையே பார்த்திருந்தவன் ,





"ஹரி ... ம ...மஞ்சு ...பா ..ப " என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை , அவன் கண்களில் இருந்து கண்ணீர் துளிர்ந்தது அதை கண்ட ஹரி துடிதுடித்து போனான் ,





"ஸ்ரீ நீ கவலை படாதே ...மஞ்சு என் பொறுப்பு ... ஆனா மஞ்சு வாழ்க்கைக்காக இந்த பொண்ணு வாழ்க்கையை கேள்வி குறியா ஆக்கிட்டியே " என்றவனை முறைத்து பார்த்தவன் ,





"அவளை பத்தி பேசாத ...கிறுக்கிக்கிட்ட கழட்டி கொடுன்னு சொன்ன கொடுத்துடுவா .. இருக்கிற கோபத்துல அவளை நானே புடிச்சு ஏதாவது கடலில் புடிச்சு தள்ளிவிட்ருவேன்"என்று கூறியபடி ஹரியை அணைத்து விடுவித்தவன் அவனை பார்த்து புன்னைகைத்து அவன் தோளில் தட்டிவிட்டு வேகமாக வெளி ஏறினான் ,





அங்கே வழியில் சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்த தன் அன்னையை பார்த்தவன் , "அம்மா "என்று அவர் மடியில் தலை சாய்த்தவன் முதுகு குலுங்கியது , அவன் அழுவதை கண்டு பொறுக்கமாட்டாமல் ,





"சின்னதம்பி ... நீ ஏன் இப்படி பண்ணேன் எனக்கு தெரியலை ஆனா என் பையன் எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்னு எனக்கு தெரியும் .. அதான் நான் உள்ளே வரலைடா தம்பி … அம்மா நம்புறேன் ... கண்ண தொடைங்க" என்றவரின் கைகளில் முகத்தை புதைத்தவன் ,





"சாரிமா ...உங்களை என்கூட வச்சு பார்த்துக்க முடில..." என்றவனின் பேச்சை இடை மறித்தவர்





“எனக்கு எந்த குறையும் இல்லடா தம்பி ... நீ சந்தோசமா போய்வாய... இங்க நீ ரொம்ப நேரம் இருந்தினா யாராவது உன் மனசு வலிக்கும் படி பேசிடுவாங்க போய்வாயா "" என்ற அன்னையை அணைத்து விடுத்தவன் , விடு விடு என்று அவ்விடத்தை விட்டு நீங்கியிருந்தான்.





திவியின் காதுகளில் மஞ்சு கூறிய "அவ தாலி சீக்கிரம் இறங்கும்" என்ற வார்த்தையே கேட்டவளுக்கு , அன்றொருநாள் இதைப்போலவே தன்னை சபித்த பெண்மணியின் வார்த்தைகளே காதில் திரும்ப திரும்ப ஒலித்தது ,





"ஏய் டாக்டரு ...என் பொண்ண இந்தக்கதிக்கு ஆளாக்கின நீ நல்லாவே இருக்க மாட்ட ...என் வயிறு எரிஞ்சு சாபம் விடுறேன் ....உன் கழுத்துல ஏறிய தாலி அதே வேகத்துல இறங்கும்...நீ நாசமா போய்டுவா " என்ற குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்க தலையை பிடித்து கொண்டவள் அதன் அழுத்தத்தை தாங்க முடியாமல் மயங்கி சரிந்தாள்.





அவள் விழும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து ,அவள் முகத்தில் தண்ணியை அடிக்க அதில் தெளிந்தவள் அவர்களை பார்த்து மலங்க மலங்க விழித்தவள் பின்பு நினைவு வந்தவளாக ஸ்ரீயை தேடி கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்தவள் அங்கே ஸ்ரீ இல்லாமல் திகைத்து போய் நின்றிருந்தாள் .





அமைச்சர் ஒருவரை வரவேற்க வெளியே வந்த சேகர் அங்கே விழித்தபடி நின்றிந்தவளை பார்த்து அருகில் சென்றவர் , அங்கிருந்த ஒருவனை அழைத்து , "ஸ்ரீ தங்கியிருந்த ஹோட்டல் தெரியுமா "என்றதற்கு தெரியும் என்றவனிடம் , திவியை கையை காட்டி "அவங்களை அங்கே விட்டுடு" என்றவர் அந்தஇடத்தை விட்டு வெளியேறினார்.





காரை அதிவேகமாக செலுத்திய ஸ்ரீ நேராக முந்திரி தோப்பு முன்பு காரை நிறுத்தினான். அந்த காட்டிற்குள் நுழைந்தவன் பல மரங்களை கடந்தபின் குறிப்பிட்ட ஒரு மரத்தின் அருகில் சென்று நின்றவன் அதில் எழுதி இருந்த பெயர்களை மெல்ல வருடிக்கொடுத்து " அருள்" என்று உச்சரித்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது , "ஏன்டா என்ன விட்டு போன ...ஏன் என்ன தனியா விட்டுட்டு போன ...என்னை நம்பியதாலதானே பாதியில போன " என்று அழுதவன் "அருள் "என்று அந்த முந்திரி காடே அதிரும் வண்ணம் கத்தினான்.





ஹோட்டலில் மாஸ்டர் கி கொண்டு தங்கள் அறைக்கு வந்த திவியின் காதுகளில் திரும்ப திரும்ப அந்த தாயின் கண்ணீர் நிறைந்த சாப குரல் அவளை வாட்டி எடுத்தது , அவளுடைய கைகளோ தன்னிச்சை செயல் போல தாலியை தொட்டு பார்த்தது, அப்படியே மெத்தையில் சுருண்டு படுத்தவள் உறங்கியும் போனாள் .





மேலோகத்தில் :





முருக்ஸ் மற்றும் அவர் அண்ணன் ஆனைமுகத்தான்னும் ஹரி மற்றும் மஞ்சுவின் திருமணத்தை கண்டு ரசித்தனர் , மேல் இருந்தபடியே ஆசி வழங்கிய பெரியவர் ,"தீர்க்க சுமங்கலி பவ "என்று வாழ்த்தினார் ,





முருக்ஸ்சும் அவர்களை வாழ்த்தியவர் , "அண்ணா .அந்த பெண் "என்று ஏதோ சொல்லவருகையிலே கை அமர்த்தி தடுத்தவர் , "அதனை நான் பார்த்து கொள்வேன் ...என் பக்தையை துன்பத்தில் விடமாட்டேன்"என்றவர் மேலும் "நீ வாழ்த்தவில்லையா தம்பி உன்னுடைய பக்தையை "என்றவரை பார்த்து புன்னகைத்த முருக்ஸ் ,கையை தூக்கி





"தீ .."என்று ஆரம்பிக்கும் போதே , "பிரபு ..பிரபு ..அவசர படாதீர்கள் பிரபு .பெரும் தவறு நடந்து விட்டது " என்றபடி ஓடி வந்து தான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை முருக்ஸ்விடம் காட்டினார் முருக்ஸ் உதவியாளர். அதை பார்த்த முருக்ஸ் அதிர்ந்து போனார் , அங்கே என்ன இருக்கிறது என்று எட்டி பார்த்த பெரியவர் முகத்தில் சிறு புன்னகை தவழ ,





"நான் அன்றைக்கே உன்னிடம் கூறினேன் நீதான் கேட்கவில்லை ...சரி சரி நான் மிகுந்த சந்தோச நிலையில் இருக்கிறேன் அதனால் சிறு உலா போய்விட்டு வருகிறேன் " என்று கிளம்பியவரை பார்த்து பல்லை கடித்தார் முருக்ஸ் .





என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் தவித்த முருக்ஸ் தன் உதவியாளரை நன்றாக முறைத்து , "இதை முன்பே கூறியிருந்தால் என்ன ..இப்பொழுது எல்லாம் கை மீறிவிட்டது போ .ஏன் கண் முன்னே நிற்காதீர்கள் "என்று அவர்களை கடிந்தவர் ,





"இடும்பா "என்று உரக்க அழைத்தவர் , "எனக்கு தலை சுற்றுவது போல இருக்கிறது சக்தியும் வடிந்தது போலவும் இருக்கிறது சிறிது பருக அமிர்த பானம் கொண்டுவா "என்று கட்டளை இட்டவர் , கிழ்லோகத்தை பார்க்க அங்கே அவன் காட்டில் அழுது கொண்டிருக்க இவளோ அழுது களைத்து உறங்கிருந்தாள் , இதை பார்த்த முருக்ஸ் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார்.










 
Status
Not open for further replies.
Top