All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 2

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2 கலாப காதலா
" அம்மா "
என கத்தலில் சர்வமும் அடங்கி போனார் இந்திரா...
நித்யா " மா உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா அஜய் அவனோட உயிருக்கு உயிரான நண்பன இழந்துட்டு நிக்குறான் அவன் கிட்ட போய் இப்படி அசிங்கமா "
" ச்ச உன்ன நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கு நீ வா அஜய் போலாம் "
என தன்னவனின் கையினை பிடித்து கொண்டு போனவள். திரும்பி தனது தாயை பார்த்து " என அஜய பத்தி எனக்கு தெரியும் நீ உன் வேலைய மட்டும் பாரு "
" ஏன் டி நான் உன் நல்லதுக்கு தான்டி சொல்லுறேன் ஏய் நான் மாட்டும் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டும் போற "
என கத்தி கொண்டே இருக்க அதனை காதில் வாங்காமல் இருவரும் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தனர்...
காரின நித்யா ஓட்ட அங்கு மெல்லிசை மட்டுமே ஆட்சி புரிய இருவரும் அமைதியாக வந்தனர்..
நித்யா திரும்பி அஜய் பார்க்க இரு கண்களையும் மூடி உணர்வுகளை காட்டாமல் தனது முகத்தை வைத்திருந்தான்...
எப்படி இருந்தவன் ஒரு இடத்தில் சிரிப்பு சத்தம் இருக்கிறது என்றாள் அங்கே அஜய் உள்ளான் என அர்த்தம் அப்படி இருந்தவன் இன்று இப்படி இருக்கிறான் என எண்ணியவள்...
யாரும் இல்ல கடற்கரை அருகே வண்டியை நிறுத்தினாள்...
வண்டி நின்றவுடன் நினைவு வந்தவன் கண்களை திறந்து பார்க்க நித்யா அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்...
அஜய் " என்ன டி "
நித்யா " என்ன என்ன "
அஜய் " ஏன் டி இப்படி பாக்குற "
என சுற்றியிலும் பார்த்தவன்
" என்ன டி ஆளே இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு வந்துருக்கு "
நித்யா " சும்மா தான் "
என்றவள் அவனை நெருங்கி அமர்ந்து அவனது கையினை எடுத்து தனது இடையில் வைத்து கொண்டாள்...
அவளின் செய்கையில் இதழின் ஓரம் புன்னகை தோன்ற அதனை கண்ட நித்யா
" எவ்வளவு நாள் ஆச்சு நீ சிரிச்சு "
மறுபடியும் அவனது முகம் வாட
" அஜய் புரிஞ்சுக்கோ நடந்தது நடந்துச்சு நான் நீ இரண்டு பேரும் தான் பூர்ணி க்கு ஆதரவா இருக்கனும் புரியுதா "
" ம்ம் "
என அவன் தலையை ஆட்ட
மெதுவாக அவனது இதழை சிறை செய்தாள் விலக மனமின்றி நீண்ட நேரம் தொடர்ந்து இதழ் சண்டை.........
கையில் அவனது படத்தை வைத்து கொண்டு அவனை முதல் முதல் சந்தித்த நிகழ்வுகளை நினைத்து பார்த்தாள்.......
இரண்டு வருடங்களுக்கு முன்பு.....
அந்த பெரிய ஹோட்டலில் பணக்காரர்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட அந்த பப் யில் சுற்றி இருப்பவர்கள்
" சித் சித் சித் "
என ஒரு பக்கத்தினர் கூச்சலிட
" அஜய் அஜய் அஜய் "
என மற்றொரு பக்கத்தினர் கத்த...
சிறு சிறு கண்ணாடி கிளாசில் உள்ள உயர்ரக மதுபானத்தை யாரு முதலில் முடிப்பது என இருவருக்குள்ளும் போட்டி..
போட்டி போட்டு கொண்டு அருந்த சித்தார்த் வெற்றி பெற்றான்...
ஊஊஊஊஊஊஊ என பல சத்தத்துடன் கை தட்டி ஆரவாரம் பண்ண ஜெயித்தவனும் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை தோற்றவனும் கவலைப்படவில்லை.......
சித்தார்த் வர்மா
மிக பெரிய தொழிலதிபர் ராஜன் வர்மாவின் ஓரே பையன் கால் தடம் பதிக்காத தொழிலே இல்லை செய்த தொழில் அனைத்திலும் முன்னேற்றம் ஒன்றையே கண்டார். அதனால் கிங் ஆஃப் தி பிசினஸ் என்ன பட்டம் இன்றுவரை அவரிடம் மட்டுமே உள்ளது.....
அவரது ராசியே மீனாட்சி அவரது மனைவி என முழுவதுமாக நம்பினார்.. காதல் திருமணம் செய்ய வீட்டில் பலத்த எதிர்ப்பு அனைவரையும் மீறி தனது காதல் கணவனை கைபிடித்தார் மீனாட்சி...
இவர்களின் காதல் சாட்சியாக அடுத்த இரண்டு வருடத்தில் பிறந்தான் சித்தார்த்....
சித்தார்த் பிறந்து ஐந்து வருடங்களில் காய்ச்சலில் படுத்தவர் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை இறைவனடி சேர்ந்தார்...
கை உடைந்தது போல உணர்ந்த ராஜன் மகனுக்காக என மற்றொரு திருமணம் செய்து கொண்டார் ஆனால் சித்தார்த் அதனை ஏற்கவில்லை தனியாக வாழ பழகி கொண்டான்... இருவருடங்களுக்கு முன்பு தந்தையும் இறந்தார்........
அந்த பப் யில் சில பெண்கள் வழிய வந்து பேச அதனை எதையும் ஏற்காமல் தனது போனை நோண்டி கொண்டு அங்கு நடந்த நிகழ்வுகளை பார்த்து கொண்டு இருந்தான் சித்...
" ஹாய் பேபி "
என ஹஸ்கி வாய்சில் இளம்பெண் பாதி கால் முழு கையும் தெரியும் படி மார்டன் உடை அணிந்து முழு போதையில் சித் உடன் பேச வந்தாள்...
" ஹேய் பேபி கமான் கம் வித் மீ டான்ஸ் வித் மீ பேபி "
சித் " ஏய் ஏய் சாரி நாட் இன்ரெஸ்ட் "
" காமன் யா இப்ப டான்ஸ் நெக்ஸ்ட் ரூம் "
என அவள் பேச
சித் " ஹேய் ஐ யம் நாட் இன்ரெஸ்ட் understand "
அப்போது அவள்விடாபடியே அவனே இழுக்க சுற்றி முற்றிலும் பார்த்தவள்
சித் " ஹேய் ஹி ஸ் மை பிரண்ட் அஜய் போ போய் அவன் கூட ஆடு நல்ல கம்பெனி கொடுப்பான் "
என அவளை அனுப்ப..
" வேஸ்ட் பிஃலோ "
என அவனை மனதிற்குள்ளே திட்டிவிட்டு சிரிப்புடன் அஜயிடம் சென்றாள்...
சிறிது அவளிடம் பேசிய அஜய் மெதுவாக அவளுடன் சேர்ந்து நடனம் ஆடினான்....
அப்போது அவனது மொபைல் அடிக்க எடுத்த அஜய் எதிரில் இருந்த பெண்ணிடம் கை காட்டி விட்டு பேச ஆரம்பித்தான்...
அஜய் " ஹாய் பேபி "
நித்யா " என்னடா பண்ணிட்டு இருக்க "
அஜய் " பேபி நான் சித் கூட பார்ட்டி க்கு வந்தேன் "
நித்யா " உன் கூட ஒரு மேனா மினுக்கி டான்ஸ் ஆடிட்டு இருக்கால அவள மொதல எட்ட போக சொல்லு "
" மொத்ல அவள உன் மேலேந்து கைய எடுக்க சொல்லு டா "
பட்டென அவளின் கையை தட்டி விட்டவன் சுற்றிலும் பார்க்க அங்கு கண்ணத்தில் குழி விழ அவனை பார்த்து சிரித்தான் சித்தார்த்...
அஜய் " துரோகி "
நித்யா " துரோகி யா நான் உனக்கு துரோகியா யூ இடியட் எவ்வளவு திமிரு உனக்கு "
அஜய் " ஐய்யோ நித்து உன்ன இல்ல அந்த சித் பையல திட்டினேன் "
நித்யா " ஓஓஓஓ உன்ன பத்தி சொன்னா அவன் உனக்கு துரோகியா "
அஜய் " நான் எதும் அவன சொல்லல இதோ கிளம்பிட்டேன் போதுமா "
என ஃபோனை கட் செய்ய..
" ஹேய் டார்லிங் என்ன ஆச்சு "
அஜய் " அம்மா தாயே ஆள விடுமா அவகிட்ட அடி வாங்குற அளவு எனக்கிட்ட தெம்பு இல்லமா "
என அவளை நோக்கி கையால் கும்பிடு போட்டவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அஜய்...
நண்பணின் தோளில் கை போட்டவன்
" நான் மாட்டும் சவனேனு தான இருதேன் நீ ஏன் டா இவளையும் கோர்த்து விட்டு இப்போ அவளையும் கோர்த்து விட்டு வேடிக்கை பாக்குற உனக்குனக்கு ஏன்டா இப்படி ஒரு நல்ல எண்ணம் "
சித் " எல்லாம் ஒரு fun மச்சி "
அஜய் " எது நான் அடி வாங்கி ஹாஸ்பிடல் படுக்குறது உனக்கு ஃப்ன் ஆ "
சித் " சரி சரி வா மச்சி போலாம் "
என இருவரும் தோளின் மேல் கை போட்டு கொண்டு வெளியே வந்தனர்...
அஜய் குடும்பத்தினரும் தொழிலதிபர் தான் ஆனால் அவர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய தனது நட்பை துறக்க முடியாமல் அஜய் இங்கு தனது சொந்த அத்தை யான இந்திரா வீட்டில் தங்கினான்...
நித்யா அஜய் காதல் அனைவருக்கும் தெரியும் வீட்டினர் சம்மதம் கிடைத்ததால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கின்றனர்....
அஜய் கோபப்காரன் என்றால் சித்தார்த் அறிவுள்ளவன்.. எந்த ஒரு செயலையும் தனது பலத்தால் முடிப்பவன் அஜய் தனது மூளையால் முடிப்பான் சித்தார்த்...
இருவரும் இணைந்து தொழில் செய்ய தொடங்கி பல தொழில்களை வெற்றிகரமாக செய்கின்றனர்....
தொடரும்.......
 
Top