All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன் கண்ணில் என்னை கண்டேன் epi 24

Karthikpriya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் கண்ணில் என்னை கண்டேன்
24

வர்ணா இப்படியே தன் முயற்சிகளை தொடர்ந்தாள். இப்போதெல்லாம் அவள் எந்த தடங்கலும் இல்லாமல் அனைத்து உறுப்புகளையும் வரைந்து வண்ணம் தீட்டினாள். சிறு சிறு ரத்தம் தொடர்பான வீடியோக்களை பயமின்றியும் தண்ணீரின் உதவி இல்லாமலும் பார்க்க தொடங்கினாள்.

அவளுக்கு கொடுத்த கெடு முடிவடைய இன்னும் நான்கு நாட்களே மீதம் இருந்த நிலையில் சித்தார்த் வர்ணாவை தன்னுடன் வருமாறு எங்கோ அழைத்து சென்றான்.

“எங்க போறோம் சித்து?” என்று ஆவலாக கேட்டாள் வர்ணா.

“சர்ப்ரைஸ். அங்க போய் நீயே தெரிஞ்சிக்கோ!” என்று கூறியவன் “இல்லையென்றால் இப்போதே பைக்கில் இருந்து எகிறி குதித்து ஓடி விடுவாய்” என்று மனதிற்குள் நினைத்து கொண்டான்.

இருபது நிமிடம் கடந்து ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தினான். எங்கு வந்திருக்கிறோம் என்று நிமிர்ந்து பார்த்தவள், “ஹாஸ்பிடல்கா? நான் வரலை” என்று அடம்பிடித்தாள்.

“நீ எல்லாம் இன்னும் நாலரை வருடத்தில் டாக்டர் என்று சொல்லிவிடாதே” என்று கேலியாக கூறியவன். “அப்போ வேற கோர்ஸ் தான் எடுக்கணும்” என்று சரியான இடத்தில் அவளை லாக் செய்தான்.

“சரி சரி உடனே ஆரம்பிக்காத வரேன் போ” என்று சலித்தவரே கூறி அவனை பின் தொடர்ந்தாள்.

வரவேற்பறைக்கு வந்தவர்கள் அங்கிருந்தவரிடம், “ஹாய் மேம். ஐம் சித்தார்த். டாக்டர் ஜெய்ஸ்ரீ மேடம பார்கணும். ஏற்கனவே அப்பாய்ன்மெண்ட் வாங்கி இருக்கோம்” என்று கூறினான்.

அவரும் ஒரு நிமிட காத்திருப்பிற்கு பின் தன் முன் இருக்கும் கணினியில் செக் செய்துவிட்டு உள்ளே அனுமதித்தார். வர்ணாவும் சித்தார்த்தும் காரிடாரில் நடந்து வரும் போதே வழியில் டாக்டர் ஜெய்ஸ்ரீ நடந்து வந்து கொண்டிருந்தார்.

அவரை பார்த்ததும் சித்தார்த், “ஹாய் டாக்டர்” என்று முகமன் கூறினான்.

“ஹாய் யங் மேன். நீ நேத்து அவ்ளோ தூரம் கேட்டதால் இதை அலோவ் பண்றேன். இது வரை யாரையும் இதுபோல் அந்த ரூமிற்குள் அனுமதித்ததில்லை” என்று கூறியவரை செவிலியர் வந்து அவசரமாக அழைக்கவே சென்று விட்டார்.

அவர் சென்றதும் இருவரும் நடக்க தொடங்கினர். பத்தடி தூரம் கடந்து ஒரு சிறிய அறைக்குள் நுழைந்தனர். அங்கு ஒரு மேசையும் அதன் மேல் ஒரு கணினியும் அதற்க்கு முன்பாக இரு இருக்கைகளும் மட்டுமே இருந்தது.

அதில் ஒரு இருக்கையில் வர்ணாவை அமர்த்தியவன் இன்னொரு இருக்கையில் அமர்ந்து கணினியை இயக்க தொடங்கினான்.

அதில் ஒரு வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. இப்போது இவர்களிடம் பேசிவிட்டு சென்ற டாக்டர் ஜெய்ஸ்ரீ அந்த வீடியோவில் ஒரு ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

அங்கிருந்தவர்கள் மும்முரமாக அங்கு கிடத்தியிருந்த ஆக்சிடென்ட் ஆன பெண்ணின் உடலின் மேல் இருந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டும் அதனை நிறுத்தும் முயற்சியிலும் இருந்தனர். ஜெய்ஸ்ரீ உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த மருத்துவர் ஒருவர்,

“டாக்டர் அதிகமாக ரத்தம் வெளியேறி இருக்கு. விலா எலும்புகள் நுரையீரலை துளைத்திருக்கு. பேஷண்ட் அதிர்ச்சியில் உடனே மயங்கி இருகாங்க.” என்று அங்கிருக்கும் நிலவரத்தை வேகமாக தெரிவித்தார்.

அங்கு நடப்பதை பார்த்ததும் வர்ணா வேகமாக அங்கிருந்து கிளம்பத் தொடங்கினாள்.

அங்கிருந்து நகர்ந்தவளின் கையை பிடித்த சித்தார்த், “நில்லு வர்ணா. பிளட் போபியா இப்போ நார்மல். நிறைய பேருக்கு வந்திருக்கு. அதில் நிறைய பேர் அதிலிருந்து வெளிவந்திருக்காங்க. அதே போல் நீயும் வெளிவருவதற்கான நேரம் இது தான். ஓட நினைக்காத. இதே போல் இன்னொரு லைவ் சர்ஜரிக்கு என்னால் யாரிடமும் வேண்ட முடியாது. அப்படியே உனக்காக வேண்டினாலும் அனுமதிப்பாங்களானு தெரியாது. இப்போ இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இந்த பிரச்சனையில் இருந்து வெளிவர முயற்சி செய். வர்ணா ப்ளீஸ்” என்று கெஞ்ச தொடங்கினான்.

பின் “இது மிகவும் நெருக்கடியான அறுவை. ஆனாலும் அவர்கள் முழு மூச்சாக அந்த பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் பாரு. இந்த வீடியோ முழுவதும் நீ பார்த்தே ஆகணும்.” என்று கூறி கட்டாயமாக அவளின் கையை பிடித்து நிறுத்தினான்.

அவன் கூறி முடிப்பதற்குள் அவனின் கையை எடுத்துவிட்டு வேகமாக வெளியேற முயன்றாள்.

அவளை நகர அனுமதிக்காது அவளின் கையை கெட்டியாக பிடித்தவன், “நீ ரொம்ப தைரியமான பொண்ணு. எல்லா இடத்திலும் உன் தைரியம் தான் முதலில் தெரியும். இதிலும் உன் தைரியம் தெரியணும். பயப்படாம பாரு. உன்னால முடியும். நாம் இருவரும் சேர்ந்து பார்க்கலாம். நானும் உன்னுடன் தான் இருப்பேன். கவலை படாதே” என்று கூறிக்கொண்டே திரும்பவும் அவளை கணினியின் முன் நிறுத்துகிறான்.

சித்தார்த் கூறியதை கேட்டு மெதுவாக ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்க்க தொடங்கினாள். சிறிது நேரம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் திரும்பவும் ஓட தொடங்கினாள்.

அவள் ஓடுவதை பார்த்த சித்தார்த் வேகமாக சென்று கதவடைத்துவிட்டு அவளை அணைத்தவாறே உள்ளே அழைத்து வந்தான்.

அவளை கணினியின் முன் அமர்த்தி, “இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கு வரு. அந்த பெண் பிழைத்து கொண்டாளா என உனக்கு பார்க்க வேண்டாமா?” என்று கொஞ்சம் சத்தமாக கூறினான்.

“இல்ல சித்து என்னால முடியல. என்னை விட்டுடு ப்ளீஸ்” என்று கெஞ்ச தொடங்கினாள்.

“முடிய போகுது. இன்னும் கொஞ்சம் நேரம் தான்” என்று சமாதானமாக கூறினான்.

“இல்லை அவள் பொழைக்க மாட்டா. எவ்ளோ ரத்தம் பாரு. அவள் சாக போறா. எனக்கு தெரியும். என்னால ஒருத்தர் சாகறத கண் முன்னாடி பார்க்க முடியாது. நான் ஏத்துக்க மாட்டேன்.” என்று வெறிவந்தவள் போல் கத்த தொடங்கினாள்.

ஒரு நிமிடம் மூடி இருந்த கதவை பார்த்து நிம்மதி அடைந்தவன். “ இல்லை வர்ணா. அவள் பிழைத்துக்கொள்வாள். பாரு அங்கிருக்கும் எல்லா மருத்துவர்களும் அதற்காக தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணை திறந்து பாரு” என்று ஸ்திரமாக கூறினான்.

அவள் தன் காதை மூடியவாறு “இல்லை இல்லை” என்று கத்திக்கொண்டிருந்தாள்.

அதே நேரத்தில் திரையில் இருந்த மருத்துவர் ஒருவர் டாக்டர் ஜெய்ஸ்ரீயிடம்” “டாக்டர் ரத்தம் வெளியேறுவது நின்னுடுச்சு” என்று நிம்மதியாக கூறினார்.


அதை கேட்ட ஜெய்ஸ்ரீ, “இனி பயமில்லை பொழச்சுடுவாங்க” என்று கூறி கொண்டே சிகிச்சையை தொடர்ந்தார்.

இதை கேட்டதும் பட்டென்று கண்ணை திறந்த வர்ணா வீடியோவை பார்க்க தொடங்கினாள். சிறிது நேரத்தில் தன்னை அறியாமல் அழுது கொண்டே வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்ணீரோடு முழு வீடியோவும் பார்த்து முடித்தவள் வேகமாக சென்று சித்தார்த்தை அணைத்துக்கொண்டு கதற ஆரம்பித்தாள். சித்தார்த் ஆறுதலாக அவளை தட்டி கொடுத்து சிறுது நேரம் ஆசுவாச படுத்தினான்.

பின் மெதுவாக வெளியே வந்தவர்கள், பொறுமையாக காரிடாரில் நடக்க தொடங்கினர். அவளின் அழுத தடத்தை பார்த்த சித்தார்த் தன்னுடைய கைக்குட்டையை நீட்டினான்.

“தேங்க்ஸ் சித்து. இப்படி ஒரு லைவ் சர்ஜரி வீடியோ பார்க்க ஏற்பாடு செய்ததற்கு.” என்று நன்றியோடு கூறினாள்.

“இறைவனுக்கு தான் முதலில் நன்றி சொல்லணும். அந்த பொண்ணை காப்பாத்திட்டாரு. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தாள் நான் என்ன ஆகியிருப்பேன்னு எனக்கே தெரியல. உனக்கு கைமாறா நான் என்ன செய்றதுன்னே தெரியல தேங்க்ஸ் எ லாட்.” என்று கூறி அவனின் கைக்குட்டையை கொடுத்தவள்,

அவனின் உடையில் அவளின் கண்ணீர் மற்றும் அவளின் குங்குமம் இருப்பதை பார்த்து, “அச்சோ சித்து! என்ன இது என்னோட குங்குமம் எல்லாம் உன் மேல பூசி வெச்சிருக்கேன். “என்று பதறியவள் “வீட்டுக்கு போனது கிளீன் பண்ணி தரேன் சாரி” என்று மன்னிப்பை வேண்டினாள்.

“உன் மன்னிப்பு நிராகரிக்க பட்டது” என்று கூறி குறும்பாக கண் சிமிட்டினான்.

அவன் கூறுவதை கேட்டு ஒரு நிமிடம் திகைத்தவள் பின் அவன் கிண்டலாக ஏதோ சொல்ல போகிறான் என்பதை புரிந்து, “அப்போ சார் என்ன செய்தால் என்னை மன்னிப்பீர்கள்” என்று சிரித்தவாறே கேட்டாள்.

“இன்னைக்கு மட்டும் இல்ல, வாழ்நாள் முழுவதும் என் ட்ரெஸ் கிளீன் பண்ணி தரதா இருந்தா இப்போ மன்னிச்சி விட்டுடுறேன்” என்று கூறி கண்ணடித்தான்.

“போ சித்து நான் இருக்கும் மூடில் நீ கிண்டல் பண்ணிட்டு இருக்க” என்று செல்லமாக சினிங்கியவள் திடீரென்று நியாபகம் வந்தவளாக, “உனக்கு எப்படி சித்து லைவ் சர்ஜ்ரி வீடியோ பார்க்க அனுமதி கிடைச்சது? லைவா பார்க்க அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்காதே” என்று கேட்டவள்,


அவன் பதில் கூறுவதற்குள் அவளே பேச தொடங்கினாள். “எப்பிடியோ வாங்கிட்ட. நீ உண்மையாவே கிரேட் சித்து. நாம அந்த டாக்டர் வர வரை காத்திருந்து அந்த பொண்ணை காப்பாற்றியதற்கும் நம்மை அதை பார்க்க அனுமதித்ததற்கும் அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு போகலாம். “என்று கூறிக்கொண்டிருக்கும்போதே அவர்களை கடந்து ஜெய்ஸ்ரீ போய் கொண்டிருந்தார்.

“ இவ்வளவு சீக்கிரம் எப்படி வந்தாங்க” என்று சித்தார்த்திடம் கேட்டுக்கொண்டே அவரிடம் விரைந்தாள்.

“டாக்டர்” என்று கதியவாறே வேகமாக அவரிடம் வந்தவள் அவருக்கு “நன்றி” கூறினாள்.

டாக்டர் குழப்பத்தோடு “எதற்கு” என்று கேட்டார்.

“நீங்க அந்த பொண்ணை காப்பாற்றியதற்கும், அதை எங்களை பார்க்க அனுமதித்ததற்கும்.” என்று உண்மையான நன்றியோடு கூறினாள்.

“அது எப்போதோ நடந்தது மா. அதற்கு இப்போது எதற்கு நன்றி” என்று கூறியவர் சிரித்தவாறே அங்கிருந்து நகர்ந்தார்.

அவர் சென்றதும் சித்தார்த்தை முறைத்த வர்ணா “பிராடு” என்று கூறி அவனின் முதுகில் ஒரு அடி வைத்தாள்.

“அப்போ அந்த பெண் பிழைச்சிடுவான்னு உனக்கு ஏற்கனவே தெரியும் இல்ல?” என்று முறைத்தவாறே கேட்டவள் பின் அவனை அணைத்து “என்ன இருந்தாலும் தேங்க்யூ சித்து” என்று உளமார கூறுகிறாள்.
 

Chitra Balaji

Bronze Winner
Paravala siddhu avala கொஞ்சம் konjamaa அந்த pobiya la irunthu கொண்டு vanthutu இருக்கான்.... Super Super maa...
 
Top