All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "அனல் தீண்டிய ஆருயிரே" ( Rerun) கதை நீக்கப்பட்டுவிட்டது. Sample அத்தியாயங்கள் மட்டுமே உள்ளது. Amazon link உள்ளே கொடுத்துள்ளேன்.📙📙📙

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

"அனல் தீண்டிய ஆருயிரே" rerun. பதிவுகள் நீக்கப்பட்டு விட்டது ம். Sample அத்தியாயங்கள் மட்டுமே உள்ளது.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

முழு கதை amazon link:

நன்றி


அருணா
 
Last edited:

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1:

நள்ளிரவு ஒரு மணி.

அந்த மிக பெரிய பங்களாவின் மதில் சுவரின் ஒரு பக்கத்தில் இருந்து வெளியே குதித்தனர் முக மூடி அணிந்த இருவர்..

அந்த காம்பவுண்ட் சுவர் முழுவதும் போட பட்டிருந்த வேலி ஒரு இடத்தில் மட்டும் அறுத்து எறியப்பட்டிருந்தது..

அதன் வழியாக தான் இருவரும் குதித்தனர்..

"சரியான முட்டாளா இருப்பான் போல் சிம்மா, இன்னும் அந்த காலம் போல் பரண் மேல், சாமி அடி என்றெல்லாம் கள்ளப்பணத்தை வைத்துக்கொண்டிருக்கிறான் டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்து விட்டது.." சலிப்புடன் கூறியவனின் தோளில் லேசாக தட்டியவன்,

"இது தான் சேப் ரங்கா.. அவன் விவரமா தான் இருக்கான் டெக்னாலஜியைஉடைக்க வழியிருக்கு.. ஆனால் பழைய முறை என்று இங்கு யாரும் தேட மாட்டாங்க இல்லையா.. அதான் இங்கே வைத்திருக்கிறான்.. என்ன இவனுங்களோட எந்த விவரமும் நம்மிடம் செல்லுபடி ஆகாது.. அவ்வளவு தான்.." என அழுத்தமாக ஒலித்தது சிம்மனின் குரல்..

அந்த தெருவை விட்டு வேகமாக பக்கத்து தெருவிற்கு வந்தவர்கள் அங்கிருந்த நம்பர் பிளேட் இல்லாத ஆட்டோவில் ஏறினர்..

சிம்மன் தன்னிடம் இருந்த மிக பெரிய பையை பின்னால் போட்டவன், "கெட் இன் ரங்கா.. குயிக்.." என்றுவிட்டு ஆட்டோவை எடுத்தான்

அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் மிகவும் தனிமையான இடத்தில் இருக்கும் மற்றொரு பங்களா முன் இருந்தனர்..

இவர்களை பார்த்ததுமே வாட்ச்மேன் கதவை திறந்துவிட, உள்ளே சென்று ஒரு ஓரமாக சிம்மன் ஆட்டோவை நிறுத்தியவுடன் அங்கு ஒருவன் ஓடி வந்தான்..

"இரண்டு மூட்டையையும் ஸ்டோர் ரூமில் போடு" என்றுகூறிக்கொண்டே சிம்மன் இறங்கி நடக்க தொடங்கிவிட, அவனை தொடர்ந்தான் ரங்கன்..



"நேரம் ஆகிடுச்சா ரங்கா" என்று கேட்டுக்கொண்டே சிம்மன் வேகமாக நடக்க, ஆறடியும் கட்டுமஸ்தான உடம்புடன் சாதாரணமாகவே வேகமாக நடந்த சிம்மனின் பின்னால் ரங்கன் ஓட தான் வேண்டி இருந்தது..



"இன்னும் ஐந்து நிமிடம் இருக்கு சிம்மா" என மூச்சு வாங்க கூறி கொண்டே ரங்கன் வர, சட்டென நின்று திரும்பினான் சிம்மன்,



"போய் ப்ரெஷ் ஆகிட்டு வா ரங்கா.. நான் மீட்டிங் போறேன்.. நீ பொறுமையா வா போதும்.." என சிம்மன் கூறி விட,



"சரி சிம்மா" என நின்றுவிட்டான் ரங்கன் ..



சிம்மனின் வார்த்தைக்கு அங்கு மறுபேச்சு பேசும் தைரியம் யாருக்குமே கிடையாது..



கீழே இருந்த ஒரு அறைக்கு சென்று முகமூடியை கழட்டிவிட்டு ரங்கன் ப்ரெஷ் ஆக, சிம்மனோ முகமூடியுடனே முதல் தளத்தில் இருந்த ஒரு மிக பெரிய ஹாலுக்குள் நுழைந்தான்..



அவன் நுழைந்ததும் அங்கு அமர்ந்திருந்த பத்து பேரும் எழுந்து நிற்க, கான்பெரென்ஸ் அறை போல் இருந்த அந்த அறையில் நடுநயாகமான இருக்கையில் அமர்ந்திருந்தவர் மட்டும் அவனை பார்த்து லேசாக புன்னகைத்தார்..



"என்ன சிம்மா போன காரியம் என்ன ஆச்சு?" என்று அவர் கேட்க, தன் கட்டை விரலை உயர்த்தி காட்டிவிட்டு மற்றவர்களை பார்த்து அமரும் படி கையசைத்து விட்டு அமர்ந்தான் சிம்மன்..



நடுவில் பெரிய மேசை இருக்க, அதை சுற்றி போட பட்டிருந்த சேரில் சிம்மனும் தேவநாதனும் தவிர பத்து பேர் அமர்ந்திருந்தனர்..



மேசையின் ஒரு பக்கம் இருந்த நாற்காலியில் தேவநாதன் அமர்ந்திருக்க, அவருக்கு நேர் எதிர்முனையில் இருந்த நாற்காலியில் சிம்மன் அமர்ந்தான் ..



"எஸ் பா" என தேவநாதனை அழுத்தமாக பார்த்து சிம்மன் தொடங்க,



"சிம்மா அடுத்த மாதம் ஜி.கே ஜுவல்லரி கடைக்கு முழுக்க முழுக்க இல்லீகலாக வாங்கப்பட்ட நெக்லஸ் வருது.. ஒரு நாள் தான் கடையில் இருக்கும்.. அடுத்த நாளே அதை பிரிச்சு மாத்திடுவாங்க.." என்று தேவநாதன் கூற,



"தூக்கிடலாம்" என்றான் சிம்மன்..



"நான் அங்கு ரெகுலர் கஸ்டமர் ஆகி விடுகிறேன்.." என அங்கிருந்த ஒருவன் கூற,



"ம்ம் சந்தேகம் வந்துவிடாமல்" கால்மேல் கால் போட்டு அமர்ந்து எப்போதும் போல் வலது கட்டைவிரலால் புருவத்தை நீவி கொண்டே சிம்மன் கூற, "ஸ்யூர் சிம்மா.." என்றான் அவன்..



"இத்தனை கஷ்டப்படணுமா?" என திடீரென கூட்டத்தில் ஒருவன் குரல் ஒலிக்க, அவனை அனைவரும் ஒரே நேரத்தில் திரும்பி பார்த்தனர் ..



மொத்த பேரும் தன் பக்கம் திரும்பியதும் சிறு பயத்துடன் அவன் அனைவரையும் பார்க்க, "என்ன சொன்ன?" என்றான் சிம்மன்..



அவன் குரலில் இருந்து ஒன்றும் கணிக்க முடியாமல் மென்று விழுங்கியவன், "இல்லை இத்தனை கஷ்டப்பட்டு கொள்ளையடிக்கனுமா? ட்ரக் டீலிங் மாதிரி தானே இப்போ எல்லாரும் பண்ணுறாங்க.. அது போல் எதாவது செய்தால் சுலபமாக இருக்குமே.." என அவன் இழுத்துக்கொண்டிருக்கும் போதே,



"வாட் நான்சென்ஸ்" என சீறிக்கொண்டு எழுந்துவிட்டான் சிம்மன் ..



மற்ற அனைவரும் பேசியவனை எரிச்சலுடன் தான் பார்த்துக்கொண்டிருந்தனர்..



ஆனால் அவர்கள் ரியாக்ட் பண்ணும் முன் சிம்மன் எழுந்திருந்தான்..



எழுந்த வேகத்தில் அவனிடம் வந்தவன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைவிட, சேர் உடன் பின்னால் சென்று விழுந்தான் அவன்..



கீழே விழுந்தவன் சட்டையை பிடித்து ஒரே இழுப்பில் இழுத்து காலால் சேரை நிமிர்த்தி அதில் அவனை அமரவைத்த சிம்மன், "ரங்கா" என உச்ச ஸ்தாயியில் கத்த, அப்போது தான் அந்த அறை கதவை திறந்த ரங்கன் வேகமாக சிம்மனிடம் ஓடி வந்தான் ..



அவன் அருகில் வந்ததும் அவனிடம் வேகமாக செய்ய வேண்டியதை கூறியவன், "லோக்கல் ஆளுங்களுக்கு கால் பண்ணி கூட்டிட்டு போ.. ஒருமணி நேரத்தில் எனக்கு போன் வரணும்.." அடிக்குரலில் ஒலித்த சிம்மனின் குரலில் எதுவும் வாக்குவாதம் செய்யாமல்,



"சரி சிம்மா" என்றுவிட்டு நகர்ந்துவிட்டான் ரங்கன்..



ரங்கன் சென்றதும் சிம்மனின் பார்வை சற்று நேரம் முன்பு அந்த நகை கடைக்கு கஸ்டமராக செல்கிறேன் என்று கூறியவன் புறம் திரும்பியது..



அவன் ஏற்கனவே பயந்து நடுங்கி கொண்டு தான் இருந்தான்.



"ஹேய் யு.. இங்க வா.." என ஒற்றை விரல் நீட்டி சிம்மன் அழைக்க, அவனை பார்த்து நடுங்கிக்கொண்டே பக்கத்தில் சென்றான் அவன்..



மொத்தமாக மூடி இருந்த சிம்மனின் முகத்தில் தெரிந்ததே அவன் கண்கள் மட்டும் தான்..



அதுவும் கன்றி சிவந்திருக்கவும் அங்கிருந்த அனைவருக்கும் அவன் கோபம் புரிந்தது..



அவன் அருகில் வந்தவன், "ச.. ச.. சாரி.." என தொடங்க அவன் கன்னத்திலும் ஓங்கி ஒரு அறை விழுந்தது..



"இவனை நீ தானே சேர்த்துவிட்டது..?" கோபத்துடன் சிம்மன் கேட்க, கன்னத்தை பிடித்துக்கொண்டே அவனை பார்த்தவன்,



"சாரி சிம்மா.. இவனுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று சத்தியமா தெரியாது.. ஏதோ ரொம்ப சமூக அக்கறை இருப்பது போல் பேசினான்.. அதான் நம்பி சேர்த்துவிட்டேன்.." நடுங்கி கொண்டே அவன் கூற,



"மணிகண்டன் உண்மையான சமூக அக்கறையுடன் பேசுவது யாரு, சமூகத்தின் மேல் கோபத்துடன் பேசுவது யாரு என்ற வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியனும்.. அப்படி தெரியவில்லை என்றால் பேசாமல் இருக்கனும்.." என அழுத்தத்துடன் சிம்மன் கூற,



"சாரி சிம்மா.. இனி ஒரு முறை நிச்சயம் இந்த மாதிரி தவறு நடக்காது.. தயவு செய்து மன்னித்துவிடு சிம்மா ப்ளீஸ்.." மணிகண்டன் கெஞ்சி கேட்க, அவனை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவன் தேவநாதன் புறம் திரும்பி,



"இதை எல்லாம் கூட கவனிக்காம என்ன பண்ணுறீங்க பா?" என கோபம் குறையாமல் கேட்டான்..



"சாரி சிம்மா.. மணி மேல் இருந்த நம்பிக்கையில்.." என தொடங்கியவர் அவன் பார்வையில் சட்டென வாயை மூடி கொண்டார்..



அவரிடம் இருந்து மற்றவர்கள் புறம் திரும்பியவன் சத்தமாக சொடக்கிட்டு "எல்லாரும் இங்க கவனிங்க" என்றான் அழுத்தமாக..



அவன் குரலில் அனைவரும் அவன் புறம் திரும்ப, "இது போல் இனி ஒரு முறை எக்காரணம் கொண்டும் நடக்க கூடாது.. வெளியிலும் போலீசிலும் இப்படி ஒரு கேங் இருக்கிறது என்றே தெரியாமல் இத்தனை வருடமாக இருக்கிறோம் என்றால் சும்மா இல்லை.. நல்லது நினைப்பவர்களுக்கு மட்டும் தான் இங்க இடம்.. இங்கு நாம் கொள்ளையடிப்பது அனைத்தும் நல்லதுக்கு மட்டும் தான் பயன்படும்.. மீறி இது போல் ஆசையுடன் யாரவது இருப்பது தெரிந்தது, அத்தனை பேரையும் சுட்டு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. காட் இட்.." டேபிளை முழு வேகத்துடன் தட்டி சிம்மன் கேட்க,



"எங்களுக்கு தெரியும் சிம்மா. இங்க எல்லாருமே உன்னை போல் தான் டென்ஷன் ஆகாதே.. கொஞ்சம் அமைதியா இரு.." என ஒருவன் கூற,



"ம்ம்" என்று கூறிக்கொண்டவனுக்கோ கொஞ்சமும் கோபம் குறையவில்லை..



சேரில் அமர்ந்திருந்தவன் புறம் திரும்பியவன், அவனை அழுத்தமாக பார்த்து கொண்டே தன் பேண்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தான்..



"உன்னை உயிருடன் விடலாமா, வேண்டாமா?" சத்தமாக யோசித்துக்கொண்டே அவன் துப்பாக்கியை வைத்து தன் புருவத்தை நீவ,



"ஐய்யோ விட்டுருங்க சார்.. நான் சத்தியமா இந்த பக்கமே வர மாட்டேன் சார்.." என கெஞ்ச தொடங்கிவிட்டான் அவன்..



"வர மாட்டாய் சரி.. வெளியில் போய் போலீசில் போட்டு கொடுத்துட்டா?" என்று கேட்டுக்கொண்டே சிம்மன் கன்னை ட்ரிகர் செய்ய, எதிரில் அமர்ந்திருந்தவனுக்கோ இதயம் வேகமாய் துடித்தது…



"சார் என் பிள்ளை மீது சத்தியமா சொல்ல மாட்டேன் சார்.. விட்டுருங்க சார் ப்ளீஸ்.." என சிம்மனின் காலில் விழுந்து அவன் கெஞ்ச, சரியாக அதே நேரம் சிம்மனின் போன் அடித்தது..



போனை எடுத்து பேசிய சிம்மன், "ம்ம் குட்" என்றுவிட்டு போனை வைத்தவன், தன் காலில் விழுந்திருந்தவனை ஒரே கையில் கொத்தாக பிடித்து தூக்கினான் ..



"உன் வீட்டில் பாம் வச்சாச்சு.." என சிம்மன் அசால்டாக கூற, அவனுக்கோ பயத்தில் உயிரே போய் விடும் போல் இருத்தது..



"சார் என் குடும்பம் வீட்டில் இருக்காங்க சார்.. விட்டுருங்க சார்.. ப்ளீஸ்.." என மீண்டும் அவன் காலில் விழ, அவனை அழுத்தமாக பிடித்து நிறுத்திய சிம்மன்,



"நீ வாயை மூடிக்கொண்டு இருக்கும் வரை எந்த பாதிப்பும் வராது.. எங்காவது எங்களை பற்றி வாயை திறந்தால், அடுத்த நொடி உன் குடும்பம் காலி.. உன் மீதும் உன் குடும்பம் மீதும் நான் எப்போதும் ஒரு கண் வைத்திருப்பேன்.. எங்கயாவது தவறின..." கர்ஜனையுடன் சிம்மன் நிறுத்த,



"இல்லை இல்லை சார்.. இது எல்லாமே நான் மறந்துடறேன் சார்.. நிஜமா சார்.. நம்புங்க ப்ளீஸ்.." என அவசரமாக கெஞ்சினான் ..



"எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் ட்ரான்ஸ்பெர் ஏதாவது வாங்கிக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிடு.. உன் உயிருடன் சேர்த்து உன் மொத்த குடும்பத்தின் உயிரும் போனால் பரவாயில்லை என்றால் தாராளமா எங்கவேண்டுமென்றாலும் சொல்லலாம்.."



ஒரு வித நக்கலுடன் கூறிவிட்டு சிம்மன் அவனை உதறிவிட, "ஐயோ நான் வாயே திறக்க மாட்டேன் யா" என பெரிய கும்பிடாக போட்டுவிட்டு ஓடிவிட்டான் அந்த ஆள்..



அவன் சென்றதும் மணிகண்டன் புறம் திரும்பிய சிம்மன், "அவனை கண்காணிப்பது உன் பொறுப்பு" என்று அழுத்தமாக கூற,



"சரி சிம்மா" என அவனும் தலையாட்டினான் ..



"நகையை எடுப்பதற்கு பிளான் போட்ட பின் அடுத்த மீட்டிங் வச்சுக்கலாம்.. எல்லாருக்கும் நியூஸ் வரும்.. இப்போ கிளம்பலாம்.." என்று சிம்மன் முடித்துவிட, அனைவரும் விடைபெற்று கிளம்பினர்…



அங்கிருந்து அனைவரும் கிளம்பி சென்றபின் அதை முழுதாக உறுதிசெய்திகொண்டு தன் முகமூடியை கழட்டினான் சிம்மன்..



"சாரி சிம்மா" மெதுவாக தேவநாதன் கூற,



"மன்னிப்பு எதையும் சரி பண்ணாதுப்பா.. நாம் செய்து கொண்டிருப்பது நமக்கு தான் நியாயம்.. வெளியில் தெரிந்தால் குற்றம் தான்.. கவனம் முக்கியம் இல்லையா.." கொஞ்சமும் இலகாமல் சிம்மன் காய,



"புரியுது டா.. இனி இது போல் நடக்காது.. நீ போய் ரெஸ்ட் எடு சிம்மா.." என்று தேவநாதன் மென்மையாகவே கூற,



"ஜாக்கிரதை பா. நம்மை நம்பி பல பேர் இருக்காங்க..." என அழுத்தமாக கூறிவிட்டு நகர்ந்தான் சிம்மன்..



சிம்மன் தேவநாதனின் வளர்ப்பு மகன்.. சிறு வயதில் அனாதை ஆசிரமத்தில் இருந்து தான் அவர் சிம்மனை தத்தெடுத்தது..



அப்போது சிம்மனுக்கு பத்து வயது இருக்கும்.. நன்றாகவே விவரம் தெரிந்திருந்தது..



மும்பையில் இருந்த அவனை சென்னைக்கு அழைத்து வந்தார்..



தேவநாதன் ஒரு நிழல் உலக தாதா.. வெளியில் ரியல் எஸ்டேட் செய்வதாக கூறி கொள்பவர், பின்னால் தனக்கு கீழ் சிலரை வைத்துக்கொண்டு பணகடத்தல், நகை கடத்தல் எல்லாம் செய்துகொண்டிருந்தார்..



அவர் செய்தது தவறுதான் என்றாலும் அவரிடம் இருந்த நல்ல விஷயம் அந்த பணம் அனைத்தையும் நல்லதற்கு மட்டுமே தான் செலவு செய்வார்..



கருப்புபணமாக பலரிடம் தூங்கும் பணத்தை எடுத்து டிரஸ்ட் பெயரில் பல நல்ல காரியங்களுக்கு கொடுத்துவிடுவார்..



ட்ரஸ்டில் இருந்து வரும் பணம் என்னும் போது யார் கொடுத்தது என்ற ஆராய்ச்சி பெரிதாக இருக்காது..



சிறு குழந்தைகள் படிப்பு, வேலை இல்லாதவர்களுக்கு சுயதொழில் உதவி, பெண்கள் பாதுகாப்பு என பல விஷயங்கள் செய்து கொண்டிருந்தார்..



தன் குடும்பத்தை மும்பையில் நடந்த விபத்தில் பறிகொடுத்திருந்தவர், தன் குடும்பத்தின் நினைவாக ஒரு ஆசிரமத்திற்கு பணம் கொடுக்க போகும் போது சிம்மனை பார்த்து அவனிடம் தன் மகன் சாயல் இருந்ததால் அழைத்து வந்திருந்தார்..



அவனும் அவரை சொந்த தந்தை போலவே பார்த்து வளர தொடங்கி விட்டான்..



வளர வளர தான் செய்யும் அனைத்தையும் அவர் சிம்மனுக்கும் சொல்லியே வளர்க்க, அவனுக்கும் அவர் செயல் நியாயமாக தான் பட்டது..



லஞ்சம் என்னும் பெயரில் பல பேர் வாழ்க்கையில் குழி தோண்டும் பணத்தை எடுத்து அந்த குழியை மூடுவது அவனுக்கு தவறாக தோன்றவில்லை..



தேவநாதன் மட்டும் இதை செய்து கொண்டிருந்த போது அவருக்கு கீழ் இருந்த சிலர் சொதப்பி மாட்டி எல்லாம் இருக்கின்றனர்.



தேவநாதன் பல லட்சம் செலவு செய்து தான் தன் பெயர் வெளியில் வராமல் பார்த்துக்கொள்வார்.



சிம்மன் வளர்ந்த பின் பொறுப்பை அவன் எடுத்து கொண்டான்..



இப்போது வெறும் அடியாட்கள் மட்டும் இல்லாமல் அவர்களிடம் இருக்கும் முக்கியமான ஆட்கள் வெளியில் நல்ல வேலையில் நல்ல பதவியில் இருப்பவர்கள்.



அதுவும் தேவநாதனுக்கும் சிம்மனுக்கும் நன்கு தெரிந்தவர்கள் மட்டும் தான் அவர்கள் கேங்கில் உண்டு..



அனைவருமே நன்கு படித்து ஏதோ ஒரு நல்ல வேலையில் இருப்பவர்கள் என்பதால் கச்சிதமாக பிளான் செய்து முடித்துவிடுவார்கள்..



அனைவருமே முப்பதில் இருந்து முப்பத்தைந்து வயதிற்குள் உள்ளவர்கள் தான்..



சிம்மனுக்கு முப்பது வயது..



அங்கு இருப்பவர்கள் தேவநாதனிடம் முதலில் இருந்தே விசுவாசமாக இருப்பவர்கள், அவர்கள் நண்பர்கள் என்று தான் இருந்தனர்.



இன்று வரை அவர்கள் யாரும் கொள்ளையடித்த பணத்தில் தங்களுக்கு என்று ஒற்றை ரூபாய் கூட எடுத்ததில்லை..



சிம்மன் தலைமை எடுத்தபின் கொள்ளை மட்டும் இல்லாமல், ஏதாவது மிக பெரிய தவறு செய்பவர்கள் அவன் கையில் சிக்கினால் தயங்காமல் சுட்டுவிடுவான்..



ஒருவன் உயிருடன் இருந்து நூறு பேரை கொல்வான் என்றால் அந்த ஒருவனுக்கு சிம்மனிடம் கிடைக்கும் தண்டனை மிகவும் கொடுமையாக தான் இருக்கும்..



இத்தனை செய்பவன் முகத்தையே அந்த கேங்கில் யாரும் பார்த்ததில்லை..



சிம்மன் முகம் தெரிந்தது மொத்தமே இருவர் தான்..



ஒன்று தேவநாதன், மற்றொன்று ரங்கன்..



ரங்கன், சிம்மன் வரும்போதே அந்த வீட்டிற்கு வந்தவன்..



எப்போதும் சிம்மனின் வலது கை போல் அவனுடனே இருப்பவனும் கூட..



அவர்கள் இருவரை தவிர சிம்மனது இன்றைய முகம் அவனை சிறு வயதில் பார்த்தவர்களுக்கு கூட தெரியாது..



இடையில் தன் படிப்பை ஹாஸ்ட்டலில் இருந்து முடித்து அதற்கு பின்பும் சில வருடங்கள் கழித்தே சிம்மன் வந்தான்.. அப்படி வந்தவனது தற்போதைய முகத்தை அவன் யாருக்கும் காட்டவில்லை.. எப்போதும் அந்த வீட்டில் மற்றவர்கள் முன் அவன் இருக்கும் போது அவன் முகத்தில் முகமூடி இருக்கும்..



வெகு சில சமயங்களில் மட்டுமே அவன் மற்றவர்களுடன் இருப்பதால் அது ஒன்றும் அத்தனை கஷ்டமாக இருப்பதில்லை..



******************



கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பிரமாண்டமான வில்லா..



முதல் தளத்தில் இருக்கும் தன் அறையில் குப்புற படுத்து நன்றாக உறங்கி கொண்டிருந்தான் அக்ஷய்..



அக்ஷய் குமார்.. பிரபல சினிமா நடிகன்.. திரைத்துறைக்கு வந்து குறைந்த வருடங்களில் தன் நடிப்பு திறமையால் பலர் மனதை வென்றுவிட்டவன்..



இதுவரை நடித்த பத்து படத்தில் எட்டு படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததில், திரையுலகில் தவிர்க்க முடியாத கதாநாயகன் ஆகிவிட்டவன்..



பத்து மணி ஆகியும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவனை அவன் போன் சத்தம் தான் எழுப்பியது..



கண்களை திறக்காமலேயே அதை எடுத்து அவன் காதில் வைக்க, "நேரம் ஆச்சு எ.கே இன்னும் ஒரு மணி நேரத்தில் ஷூட்டிங்கில் இருக்கனும்.. எழுந்து கிளம்பு.." என்றான் எதிர்புறம் இருந்தவன்.,



அவன் குரலில் முகத்தை சுளித்த அக்ஷய், "தூக்கம் வருது சரண்.. பேசாமல் ஷூட்டை நாளைக்கு வைக்க சொல்லேன்.." என்று குளறலாக கூற,



"இது பெரிய இயக்குனர், பெரிய பேனர் படம் எ.கே உன் இஷ்டத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது.. ஒழுங்கா எழுந்திரு.. நைட் வேணா சீக்கிரம் வர பார்ப்போம்.." சற்று அழுத்தமாக சரண் கூறியதில்,



"ப்ச் வரேன் வை" என்றுவிட்டு போனை எறிந்தவனுக்கு மீண்டும் தூக்கம் வரும்போல் இருக்க, அவசரமாக எழுந்து அமர்ந்தான்..



சரண் அக்ஷயின் பி.எ.. இருவருக்கும் கிட்ட தட்ட ஒரே வயது தான்.. அக்ஷய்யை பொறுத்தவரை எல்லாமே சரண் தான் பார்ப்பான்..



சரியாக சொல்ல போனால் சரண் போல் ஒரு பொறுப்பானவன் உடன் இருப்பதால் தான் அக்ஷய் கொஞ்சம் நிம்மதியாகவே இருக்கிறான்..



நன்றாக கண்களை தேய்த்துக்கொண்டு எழுந்து அமர்ந்தவன் மீண்டும் ஒரு முறை போனை எடுத்து ஆராய, அதில் எப்போதும் போல் மெசேஜ்ஜஸ் நிரம்பி வழிந்தது..



அதில் பல மெசேஜ் அவனிடம் நடித்த நடிக்கும் நடிகைகளிடம் இருந்து தான்..



அவன் தோற்றத்தில் பல பேருக்கு மயக்கமே இருந்தது..



அவன் இதுவரை யாரிடமும் பேச முயற்சித்ததில்லை.



ஆனால் தன்னை விரும்பி வரும் நடிகைகளை அவன் ஒதுக்கியதும் இல்லை..



அந்த துரையில் கட்டிப்பிடிப்பதோ, முத்தம் கொடுப்பதோ சகஜமாக நடக்கும் விஷயங்கள்.. ஆனால் அவன் யாரிடமும் எல்லை மீறி சென்றதில்லை.. யாரையும் எல்லை மீறி தன்னை நெருங்க விட்டதுமில்லை..



இப்போதைக்கு அவனுக்கும் பிரபல நடிகை மிருதுளாவிற்கும் காதல் என்று தான் செய்தி பரவி கொண்டிருக்கிறது..



அவனும் மிருதுளாவும் சேர்ந்து பல இடங்களுக்கு செல்லும் போட்டோவும் வெளியிட்டு கொண்டே தான் இருந்தனர்..



அக்ஷய்யை பொறுத்தவரை அவன் எதையும் மறுக்கவும் இல்லை, ஒத்துக்கொள்ளவும் இல்லை..



அவனிடம் இருந்து பதில் வாங்க போராடி தோற்று போன மீடியா இப்போதெல்லாம் தாங்களே இருவரும் காதலர்கள் என்று முடிவுகட்டி பேச தொடங்கி இருந்தனர்..



அடுத்த அரை மணி நேரத்தில் அக்ஷய் கிளம்பி கீழே இறங்கி வந்தபோது அவனுக்காக உணவு மேசை அருகிலேயே காத்திருந்தான் சரண்..



"என்ன டா சரியா வந்துட்டேனா?" என சரணின் தோளில் தட்டிக்கொண்டே அக்ஷய் அமர,



"பெர்பெக்ட் எ.கே" என்று கூறிக்கொண்டே தானும் அமர்ந்தான் சரண்..



இருவருக்கும் வேலைக்காரன் காலை உணவை பரிமாற, இருவரும் உண்டுமுடித்துவிட்டு கிளம்பினர்..



சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடம் முன்பே அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்து விட, அக்ஷய் காரில் இருந்து இறங்கியதுமே, "எ.கே வாவ் செம ஸ்மார்ட்டா இருக்கீங்க.." என தினமும் கூறும் அதே வார்த்தையை மாடுலேஷன் மாறாமல் கூறிக்கொண்டே அவனை வந்து அணைத்து கொண்டாள் அந்த படத்தின் இரண்டாம் நாயகி..



ஒரு மெல்லிய புன்னகையுடன் அவள் அணைப்பை ஏற்று விடுவித்தவன், "கம்" என அவளையும் அழைத்துக்கொண்டு செட்டுக்குள் வந்தான் …



உள்ளே வந்ததும் நேராக அவன் இயக்குனரிடம் சென்று அமர்ந்துவிட, அதற்கு மேல் யாரும் அவனை நெருங்கவில்லை..



அன்றைய காட்சியை தெளிவாக ஒரு முறை கேட்டுக்கொண்டவன் இரண்டே டேக்கில் அதை நடித்தும் முடித்துவிட்டான்..



அதிகம் போன ஒரு டேக் கூட உடன் இருந்தவர்களால் தான் சென்றது..



அடுத்து அவன் இல்லாத வேறு ஒரு காட்சிக்கு தயாராக, செட்டில் சில மாற்றங்கள் செய்துகொண்டிருந்தனர்..



அதை பார்த்துக்கொண்டிருந்த இயக்குனர் அருகில் வந்து அமர்ந்த அக்ஷய், "என்ன சார் ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒரு வாரம் ஆச்சு, இன்னும் ஹீரோயின் பிக்ஸ் பண்ணாம இருக்கீங்களே?" என்று கேட்க,



"ப்ச் பண்ணனும் எ.கே.. நல்ல குடும்பப்பாங்கான கதாபாத்திரம்.. ப்ரெஷ் முகமா இருந்தா நல்லா அழுத்தமாக நம்பும்படியா இருக்கும்.. ஒரு பெண்ணை மிகவும் பிடித்திருந்தது, பேசி இருக்கேன்.. கண்டிப்பா ஓகே ஆகிடும்.."



"ம்ம் ஓகே.. சீக்கிரம்.. அப்புறம் டேட்ஸ் ப்ராப்ளம் வந்துட போகுது.."



அவர் நல்லதுக்காக தான் அக்ஷய் கூறினான்..



அது அவருக்குமே புரிய, "ஸ்யூர் எ.கே.. தேங்க்ஸ்.." என்றார் அந்த இயக்குனரும்…


தீண்டும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2:

அன்று இரவு எட்டு மணிபோல் தேவநாதன் வீட்டிற்கு வந்திருந்தான் சிம்மன்.

அவன் வந்த போது அவர் உண்டு கொண்டிருக்க, "வா சிம்மா.. சாப்பிடறயா?" என அவனை அழைத்தார் தேவநாதன்..

"வேண்டாம் பா.. நான் சாப்பிட்டாச்சு.. நீங்க சாப்பிடுங்க.. நான் ரூமில் வெயிட் பண்ணுறேன்.." என்றவன் அதற்கு மேல் நிற்காமல் படியை நோக்கி நடக்க தொடங்கிவிட, அவன் முதல் படியில் கால் வைத்த போது,

"ஆ.." என்ற சத்தம் அவனுக்கு பின்னால் இருந்து ஒலித்தது

அதில் குழப்பத்துடன் சிம்மன் திரும்ப, அங்கு ஒரு பெண் கீழே விழுந்து கிடந்தாள்..

அவளை பார்த்ததும் லேசாக தலையில் அடித்துக்கொண்டு அவளிடம் வந்தவன் கையை நீட்ட, அவன் கையை பிடித்துக்கொண்டு எழுந்தாள் அந்த பெண்..

நிமிர்ந்து நின்றவள் காலை உதற, "எப்போது ஒழுங்காக நடக்க கத்துக்கொள்ள போகிறாய் பிரகதி?" என்றான் சிம்மன் சலிப்புடன்..

"நீங்க எப்போது இந்த முகமூடியை கழட்டுவீங்க?" என அவள் பதிலுக்கு கேட்க, அவனோ பதில் கூறாமல் அவளை அழுத்தமாக பார்த்தான்..

அணிந்திருந்த முகமூடியை தாண்டி அவன் முகத்தில் தெரிவதே அந்த கண்கள் மட்டும் தானே..

அதில் தெரிந்த அழுத்தத்தை புரிந்துகொண்டவள், "மாட்டீங்க இல்லையா.. அது போல் தான் இதுவும்.. என்ன செய்வது, எப்போ பாரு ஏதாவது தடுக்கி விட்டு விடுகிறது!" ஒழுங்காக பேச ஆரம்பித்தவள் முணுமுணுப்புடன் முடிக்க,

அவளை ஒரு முறை தலை முதல் கால் வரை அளந்தான் சிம்மன்..

முட்டிக்கு சற்றே கீழ் வரை ஒரு ஜீன்ஸ்ஸும் ஸ்லீவ்லஸ் டீ ஷர்ட் தான் அணிந்திருந்தாள்..

"உன்னை உன் கால் தான் தடுக்கி விடுகிறது பிரகதி.." அவன் குரலில் இருந்து நக்கலடிக்கிறானா சீரியஸ்ஸாக பேசுகிறானா என அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே சிம்மன் தொடர்ந்தான்..

"உன்னை எப்படி அந்த கேங்கில் வச்சிருந்தாங்க.. போற இடத்தில் எல்லாம் நீ இப்படி விழுந்து வாரினால் உன்னை தூக்கவே நேரம் சரியா இருந்து இருக்குமே.. அதனால் தான் அந்த கேங் உறுப்படாமலே இருக்கோ..!" யோசிப்பது போல் சிம்மன் நிறுத்த, இப்போது அவன் தன்னை கிண்டல் தான் செய்கிறான் என அவளுக்கு உறுதியாகவே புரிந்துபோனது,

"சிம்மா.." என கோபத்துடன் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க பிரகதி கத்த,

"ம்ம் எஸ்.." என்றான் அவன் சீரியஸ்ஸாக.

அவனை திட்ட காரணம் தேடி பிரகதி யோசித்துக்கொண்டிருக்க, "எப்போ பாரு அவளிடம் என்ன வம்பு சிம்மா?" என்று கேட்டுக்கொண்டே வந்தார் தேவநாதன்..

"நான் எங்கே பா வம்பு வளர்த்தேன்.. அவள் தான் எப்போதும் போல் விழுந்தாள்.. நான் தூக்கி மட்டும் தான் விட்டேன்.." நல்ல பிள்ளை போல் சிம்மன் கூற,

"என்னை கிண்டல் பண்ணினார் சார்" என சிறு பிள்ளை போல் கம்பளைண்ட் செய்தாள் பிரகதி..

அதில் வெளிப்படையாகவே தலையில் அடித்து கொண்ட சிம்மன், "இவளை அங்கேயே விட்டிருக்கனும் பா.." என்று கூறிவைக்க

"ப்ச் பேசாமல் வா சிம்மா.. நீ போ பிரகதி.." என அவளை அனுப்பி விட்டு சிம்மனுடன் தன் அறை நோக்கி நகர்ந்தார் தேவநாதன்..

சிம்மனை பார்த்து பொய் கோபத்துடன் முறைத்து கொண்டே பிரகதி செல்ல, சிம்மன் முகத்தில் என்ன உணர்வு இருந்ததோ அவனுக்கு தான் வெளிச்சம்..

பிரகதி இங்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது..

இதற்கு முன் வேறு ஒரு கேங்கில் இருந்தவள் பிரகதி..

அங்கு நிறைய தவறுகள் செய்யவும், அங்கிருக்க பிடிக்காமல் இங்கு தேவநாதன் ஆள் ஒருவன் மூலம் இந்த கேங் பற்றி கேள்விப்பட்டு இங்கே வந்து விட்டாள்..

பொதுவாக வெளி ஆட்களை அத்தனை சுலபமாக அனுமதிக்காத சிம்மன் பிரகதியை சேர்த்து கொண்டது எல்லாருக்குமே ஆச்சர்யம் தான்..

பிரகதி ஒரு கைதேர்ந்த கம்ப்யூட்டர் ஹாக்கர்..

அவர்களுக்கு அவள் வேலையும் மிகவுமே தேவையாக இருந்ததால், பெரிதாக யாரும் யோசிக்கவில்லை..

அனைவருமே நெருங்க முடியாத உயரத்தில் எப்போதும் உயர்ந்து நிற்கும் சிம்மன் பிரகதியிடம் மட்டும் சில சமயங்களில் இலகுவாக வம்பு வளர்த்து கொண்டிருப்பான்..

முதலில் சற்று பயந்த பிரகதியும் பின் அவன் விளையாட்டுக்கு தான் வம்பிழுக்கிறான் என்று புரிந்துவிட தானும் தைரியமாக பேச தொடங்கி இருந்தாள்..

தேவநாதன் அறைக்கு வந்ததும் அவர் கதவை பூட்டி விட, தன் முகமூடியை கழட்டிவிட்டு சற்று ஆசுவாசமாக அமர்ந்தான் சிம்மன்..

தேவநாதனும் அவன் அருகில் அமர்ந்துகொள்ள, சட்டென அவர் மடியில் தலை வைத்து படுத்துவிட்டான் சிம்மன்..

அவன் படுத்ததும் மென்மையாக அவன் சிகையை கோதி கொடுத்தவர், "என்ன சிம்மா" என்று மெதுவாக கேட்க,

"ஒன்னும் இல்லை பா.. நீங்க சொல்லுங்க.. எதுக்கு கூப்பிட்டீங்க..?" என்று படுத்துக்கொண்டே அவன் கேட்க,

"ஒரு புது ஆடு முளைச்சிருக்கு சிம்மா" என்றார் தேவநாதன்

அவர் கூற்றில் அவர் மடியில் நேராக படுத்தபடியே சிம்மன் அவரை கேள்வியாக பார்க்க, "செந்தில் என்று ஒருத்தன் சிம்மா.. கரிகாலன் கேங் கூட சேர்ந்து ட்ரக் டீலிங் பண்ணிட்டு இருக்கான்.. இப்போ தான் சேர்ந்திருப்பான் போல்.. சின்ன லெவலில் தான் கை மாத்திட்டு இருக்கான்.. முளையிலேயே கிள்ளிட்டா பரவாயில்லை.." என்றார் தேவநாதன்

"டன் பா... நானும் ரங்காவும் போய் நாளைக்கு மிரட்டிட்டு வரோம்.. அதுக்கு மசியாமல் துள்ளினால் அடிதடியில் இறங்கிக்கலாம்.."

"அந்த கரிகாலனை சீக்கிரம் முடிச்சுக்கட்ட கூடாதா சிம்மா? அவனை பல நாளா விட்டு வைத்திருக்கயே டா.."

"அதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமே பா"

"தெரியும் தான் டா.. ஆனால் அவன் ஆட்டம் ஏறிக்கொண்டே போகுது சிம்மா.." எரிச்சலுடன் தேவநாதன் கூற,

"சீக்கிரம் முடிவு கட்டறேன் பா" என்றுகூறிக்கொண்டே எழுந்துவிட்டான் சிம்மன்.

அவன் எழுந்ததும், "சிம்மா கொஞ்ச நேரம் தூங்கு" என தேவநாதன் கூற,

"இல்லை பா கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சுட்டு படுக்கறேன்.. நாளைக்கு அந்த செந்திலை பார்த்துட்டு உங்ககிட்ட சொல்லறேன்." என்றுவிட்டு வேகமாக சென்றுவிட்டான் சிம்மன்..

அவன் இது போல் மடியில் படுப்பதெல்லாம் அரிதாக தான் நடக்கும்..

ஒரேடியாக ஓடுபவனுக்கு சில சமயங்களில் மனதை நிலைப்படுத்த வேண்டி இருக்கும்..

அந்த சமயங்களில் தந்தை மடியில் சிறிது நேரம் படுத்து எழுந்தாலே அவன் மனம் சமண் பட்டு விடும்..

வீட்டை விட்டு கிளம்பியவன் மனம் முழுவதும் இப்போது அந்த கரிகாலன் நினைவு தான்..

அவனும் தேவநாதனை போல் தான்.. என்ன ஒரே வித்தியாசம், தேவநாதன் நல்லது மட்டுமே செய்வார்.. கரிகாலன் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்..

அவனுக்கு கீழும் ஒரு கேங் இயங்கி கொண்டிருந்தது..

அதில் இருந்தவள் தான் பிரகதி..

அவர்கள் செய்யும் தவறுகள் பிடிக்காமல் தான் இங்கு வந்துவிட்டாள்..

சீக்கிரம் அவனுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் காரை எடுத்தான் சிம்மன்..

********************

அன்றைய படப்பிடிப்பில் சண்டை காட்சி எடுக்கப்பட்டு கொண்டிருந்தது..

அக்ஷய் ஒரு மூன்று மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து பக்கத்து மாடியில் குதிக்க வேண்டும்..

அக்ஷய் ஷாட்டுக்கு தயாராக நிற்க, "எ.கே ரெடி" என சைடில் இருந்த ஸ்டண்ட் மாஸ்டர் குரல் கொடுக்க,

"ரெடி மாஸ்டர்" என்ற அக்ஷயின் கண்கள் கூர்மையுடன் அந்த மாடியின் முனையில் தான் பதிந்திருந்தது..

ஆக்க்ஷன் என்ற இயக்குனரின் குரல் கேட்டதும், வேகமாக இருந்த இடத்தில் இருந்து ஓடியவன் ஒரே ஷாட்டில் அடுத்த மாடியில் இறங்கி விட்டான்..

அங்கு ஏற்கனவே கேமராவுடன் நின்றிருந்தவர் அவன் முக பாவனையை படம் பிடித்ததும், அந்த ஷாட் கட் செய்யப்பட்டது..

அவன் கீழே இறங்கி வந்ததும் அங்கிருந்த மொத்த பேரும் கைதட்டி "செம ஷாட் சார்" , "சூப்பரா பண்ணிடீங்க" என மாற்றி மாற்றி பாராட்டி அவனை வரவேற்க, ஒரு சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டு வந்தவன் முகம் லேசாக சுருங்கி இருப்பதை முதலில் சரண் தான் கவனித்தான்.

வேகமாக சரண் அக்ஷயை ஆராய, அவன் உள்ளங்கையில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது தெரிந்தது..

"என்ன ஆச்சு எ.கே?" என்று கேட்டுக்கொண்டே சரண் அவன் கையை தூக்கி பார்க்க, அப்போது தான் அனைவருமே அவன் கையில் வழிந்துகொண்டிருந்த ரத்தத்தை கவனித்தனர்.

"நத்திங் டா.. நான் குதித்த இடத்தில் இருந்த கூர்மையான கல் குத்திடுச்சு.." அசால்டாக கூறிய அக்ஷய் கையில் இருந்த காயம் என்னவோ கொஞ்சம் ஆழமாக தான் இருந்தது..

"ப்ச் அதற்காக இதனுடன் நடித்தாயா? கட் செய்வதற்கு என்ன? ரத்தம் கொட்டுது பார்.." என சரண் அவனை கடிந்து கொள்ள,

"இன்னொரு முறை குதிப்பதற்கு இது பெட்டர் டா.." என்றான் அக்ஷய் சிறு புன்னகையுடன்..

அதற்குள் அங்கிருந்த அசிஸ்டன்ட் டைரக்டர் சென்று பர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எடுத்து வர, அக்ஷய் கையில் அடிபட்டிருந்த இடத்தை சுத்தம் செய்து கட்டுப்போட்டு விட்டனர்

"சரியாக பார்ப்பதில்லையா" என இயக்குனர் ஒரு பக்கம் உதவி இயக்குனர்களை திட்டி கொண்டிருக்க,

"விடுங்க சார்" என அக்ஷய் தான் அவரையும் சமாதான படுத்தினான்.

அடுத்த ஷாட்டிற்கு ரெடி பண்ணி கொண்டிருந்த போது தனியாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து அக்ஷய் போனை பார்க்க தொடங்கி விட, "ஹாய் எ.கே" என சத்தமாக ஒலித்த ஒரு பெண் குரல் அவன் கவனத்தை கலைத்தது..

குரல் வந்த திசையில் பார்த்தவன் அங்கு வந்துகொண்டிருந்த மிருதுளாவை பார்த்ததும், "வா மிரு" என்று கூறி கொண்டே எழுந்துவிட, இருவரும் ஒரு முறை அணைத்து விடுவித்து கொண்டனர்..

அதை தவறாமல் சிலர் படம் எடுத்தும் கொண்டனர்.

முட்டி வரை மட்டுமே நீண்டிருந்த இறுக்கமான உடையில் இருந்தவளை சிலர் கண்கள் ரசிக்கவும் தவறவில்லை..

அக்ஷயிடம் இருந்து விலகியதும் தான் அவன் கையில் இருந்த காயத்தை கவனித்தவள், "ஐயோ எ.கே என்ன ஆச்சு?" என்று பதற,

"ஹேய் நத்திங் மிரு.. டென்ஷன் ஆகாத.. வா.." என அவள் தோளில் கைபோட்டு லேசாக அணைத்தது போல் அழைத்து சென்றவன், இயக்குனரிடம் சென்று,

"ஒரு டென் மினிட்ஸ் சார்.." என்று கூற அவரும் சிரித்துக்கொண்டே தலையாட்டினார்..

மிருதுளாவை அழைத்துக்கொண்டு கேரவனுக்குள் வந்தவன், கேரவன் கதவை அடைத்ததும் அவள் தோளில் இருந்து கையை எடுத்துவிட்டான்..

"காபி" என அக்ஷய் கேட்க மறுப்பாக தலை அசைத்தாள் மிருதுளா..

தான் மட்டும் ஒரு கப்பில் காபியை விட்டுக்கொண்டு வந்து அமர்ந்தவன், "ம்ம் சொல்லு.. முகத்தில் ஏதோ பல்ப் எரிவது போல் இருக்கே ஏதாவது ஸ்பெஷல் நியூஸ்ஸா?" என்று கேட்க,

"வாவ் எப்படி எ.கே" என ஏகத்துக்கும் வியந்தாள் மிருதுளா..

"போதும் போதும்.. உன் ஆச்சர்யத்தை கட்டுபடுத்திட்டு விஷயத்தை சொல்லு மா.." கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவன் காபியை குடித்துக்கொண்டே அவளை பார்க்க, மிருதுளாவும் தான் சொல்ல வந்த விஷயத்தை சிறு வெட்கத்துடன் கூறி முடித்தாள்..

அவள் கூறி முடித்ததும் "தேங்க் காட்" என ஒரு பெருமூச்சுடன் கூறிக்கொண்டே எழுந்தான் அக்ஷய்..

"பட் இன்னும் ஒன் இயர் ஆகுமா.. சீக்கிரம் ஒரு முடிவிற்கு வர பாருங்க.. ஐ நீட் ரிலீப்.." என அக்ஷய் கூற,

"கண்டிப்பா எ.கே.. எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் முடித்து விடுகிறேன்.. தேங்க்ஸ் அகைன்.. நீங்க இல்லைனா நான் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பேன்.. இன்னும் கொஞ்ச நாள் மட்டும் பொறுத்துக்கோங்க.." என்றாள் மிருதுளா மெதுவாக,

"தட்ஸ் பைன்" என முடித்துவிட்டான் அக்ஷய்..

கேரவன் திறந்து கொண்டு முதலில் அக்ஷய் இறங்க, அவன் சாதாரணமாக வந்து அமர்ந்துவிட்டான்..

பின்னால் இறங்கி சென்ற மிருதுளா முகம் லேசாக வெட்கத்தில் சிவந்திருந்தது போல் இருக்க, அதையும் சிலர் கவனித்துக்கொண்டனர்..

அனைத்தும் தெரிந்திருந்தும் உதட்டோரத்தில் எப்போதும் ஒட்டி இருக்கும் நக்கல் சிரிப்புடன் அமைதியாகவே இருந்தான் அக்ஷய்..

******************

அன்று இரவு தன் அறையில் நன்றாக உறங்கி கொண்டிருந்த செந்திலுக்கு திடீரென விழிப்பு தட்டியது..

ஏ.சி அறையில் வியர்க்க தொடங்கவும் தூக்கம் களைந்து அவர் லேசாக கண்விழிக்க, எதிரில் யாரோ தன்னையே பார்த்து கொண்டிருப்பது போல் தெரிந்தது..

கனவாக இருக்குமோ என கண்ணை கசக்க அவர் முயற்சித்த போது தான் கையை தூக்கவே முடியவில்லை என்று புரிந்தது..

அதில் தூக்கம் முற்றிலுமாய் கலைந்தவர், வேகமாக எழுந்து அமர, அவர் கைகள் இரண்டும் சேர்த்து முன் பக்கம் கட்டப்பட்டு, வாயிலும் பிளாஸ்டர் ஒட்டி இருந்தனர்..

அதில் உச்சக்கட்ட பயத்துடன் அவர் விழிக்க, அவர் முன் முகமூடி அணிந்து நின்றிருந்த இருவரில் ஒருவன் பேசினான்..

"என்ன செந்தில் சார் கையை கட்டும் போது வாயை மூடும் போதெல்லாம் விழிக்காமல், ஏ.சியை அனைத்த அப்புறம் எழுந்துக்கறீங்க..! அப்படி தூக்கமா!" நக்கலாக ஒருவன் கேட்க,

"சொகுசு பழகிடுச்சு போல் சிம்மா.. அடக்கிடுவோமா.." என்றான் மற்றொருவன் நக்கலாக

அவனது 'சிம்மா' என்ற அழைப்பில் செந்திலின் கண்கள் மேலும் பயத்துடன் விரிந்தது..

அவன் பார்வையை உணர்ந்த சிம்மன் "ம்ம் என்னை பற்றி கேள்விப்பட்டிருப்பாய் போலயே.." என நக்கல் குறையாமல் கேட்க, பயத்துடனே தலையாட்டினான் செந்தில்..

"குட்... எனக்கு வேலை மிச்சம்.. புதுசா ஏதோ தொழில் பண்ணுறயாமே.. அதுவும் நாட்டுக்கு ரொம்ப தேவையான ட்ரக்ஸ் சப்ளை.. செய்யக்கூடாது என்று எச்சரித்தால் கேட்பாயா, இல்லை மறக்காமல் இருக்க ஏதாவது மார்க் வேணுமா?" சாதாரணமாக பேசி கொண்டே தன் பேண்டில் இருந்து துப்பாக்கியை எடுத்தவன் செந்தில் உள்ளங்கையில் அதை வைத்து கோலம் போட, அவனுக்கு பயத்தில் மேலும் வியர்த்து வடிந்தது

"ரங்கா" என்று சிம்மன் குரல் கொடுக்க, அவன் கூற வருவதை புரிந்துகொண்டு செந்தில் வாயில் ஒட்டி இருந்த பிளாஸ்டரை கழட்டினான் ரங்கன் …

அவன் கழட்டியது தான் தாமதம்"சுட்டுராதீங்க.. சுட்டுராதீங்க..." என பயத்தில் பிதற்றியவன்

"யாராவது காப்பா..." என கத்த தொடங்கும் போதே அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் சிம்மன்..

அதில் மல்லாந்து சரிந்தவன் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து அழுத்தியவன், "ஏன் டா எவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன், கத்துற நீ.. என்னை பத்தி கேள்விப்பட்டிருந்தால் உனக்கு இதுவும் தெரிந்திருக்குமே, எனக்கு அதிகம் பொறுமை கிடையாது.. இனி ஒரு வார்த்தை உன் வாயில் இருந்து சத்தமாக வந்தாலும் சுட்டு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. புரிந்ததா.." சீறலாக ஒலித்த சிம்மனின் குரலில் செந்தில் வாய் தானாக மூடி கொண்டது…

அதை திருப்தியுடன் பார்த்துக்கொண்டவன் "ரங்கா" என்று கையை நீட்ட அவன் கையில் ஒரு கத்தியை வைத்தான் ரங்கன்

அதை வாங்கி கொண்டு சிம்மன் திரும்ப, "ஐயோ ஒன்னும் பண்ணிடாதீங்க.. நான் சத்தியமா இனி எதுவும் பண்ணமாட்டேன்.. ப்ளீஸ் விட்டுருங்க.." என பயத்தில் செந்தில் கதற, அவனை அழுத்தமாக பார்த்து கொண்டே அவன் வாயை எழுந்து மூடிய சிம்மன், கையில் இருந்த கத்தியால் அவன் கையில் அழுத்தமாக கீறி விட்டான்..

அதில் வலியில் கத்த முயற்சித்த செந்திலால் சிம்மனின் அழுத்தமான பிடியை தாண்டி வாயை திறக்கவே முடியவில்லை.

ஒருவாறு கத்தாமல் வலியில் துடித்து அவன் சற்று நிலைபெற்ற பின் தான் சிம்மன் கையை எடுத்தான்..

"கத்தகூடாது" என்று கூறிக் கொண்டே சிம்மன் கையை எடுக்க, செந்திலும் முயன்று வாயை மூடி கொண்டான்

"இது வெறும் எச்சரிக்கை தான் செந்தில்.. இனி ஒரு முறை நீ ஏதாவது தவறு செய்தாய் என என் காதுக்கு வந்தது, அடுத்த முறை இந்த கத்தி நேராக உன் கழுத்தில் தான் இறங்கும்.. ஜாக்கிரதை.." என அடிக்குரலில் கூறிவிட்டு சிம்மன் எழுந்துகொள்ள,

"எதுவும் பண்ண மாட்டேன்.." என்று திக்கி திணறினான் செந்தில்..

"ம்ம் குட்" என்ற சிம்மன் தன்னிடம் இருந்த கத்தியை ரங்கனிடம் நீட்ட, அதை வாங்கிக்கொண்டு ஒரு ஸ்பிரேயை சிம்மனிடம் கொடுத்தான் ரங்கன் .

அதை வாங்கி சிம்மன், செந்தில் முகத்தில் அடிக்க, அடுத்த நொடி அவன் மயங்கி சரிந்தான்..

அவன் மயங்கியதை உறுதிப்படுத்திக்கொண்டு இருவரும் கிளம்பினர்..

"என்ன சிம்மா அடங்கிடுவானா?" என அதிகம் சத்தம் இல்லாமல் ரங்கன் கேட்க,

"பயந்துட்டான் டா.. நாளைக்கு ஹார்ட் அட்டாக் வராமல் உயிருடன் இருந்தால் நிச்சயம் இனி தப்பு செய்ய மாட்டான்.." என்றான் சிம்மன்..

இலகுவாக பேசிக்கொண்டு செந்தில் அறையை திறந்து வந்தவர்கள் பின் பக்கமாக செல்ல பின்புற தோட்டத்தின் கதவை திறக்க, சிம்மன் கதவில் கை வைத்த அதே நேரம் வெளிப்புறத்தில் இருந்து கதவு வேகமாக திறக்கப்பட்டது

"ம்ம் வச்சுடறேன் டி.. நாளைக்கு பேசுவோம்.." என்று கூறி கொண்டே ஒருபெண் வேகமாக கதவை திறக்க, அதே நேரம் உள்புறம் இருந்து சிம்மன் கதவை தள்ளவும் தடுமாறி விழ போனாள் அந்த பெண்.

அவள் தடுமாறுவதை நொடியில் கண்டுவிட்ட சிம்மன் அடுத்த நொடி யோசிக்காமல் அவளை இடையுடன் சேர்த்து அணைத்து பிடித்துவிட்டான்..

தன் முகத்திற்கு வெகு அருகில் தெரிந்த பாவையவள் முகத்தில் சிம்மனின் கண்கள் அழுத்தத்துடன் படிந்தது..

நிலவொளியில் ஏதேனும் தேவதை தான் வந்துவிட்டதோ என முட்டாள் தனமாக அவன் மனம் யோசிக்க தொடங்கும் போதே, அவனிடம் இருந்து வேகமாக திமிறினாள் அந்த பெண்..

அது வரை ஏதோ மோன நிலையில் அவளையே பார்த்து கொண்டிருந்த சிம்மன், அவள் திமிறியதும் தான் அவளை விட்டான்.

"நீ.. நீங்க யாரு.. திருடனா.. யாராவது வாங்களேன்.. அங்கிள்.. அங்கிள்.." என அந்த பெண் கத்த தொடங்கிவிட, அவள் வாயை மூடினான் சிம்மன்

"ஷ்... கத்த கூடாது.. உன் வீட்டில் இருப்பவனை விட நாங்க மோசமானவங்க கிடையாது.. அமைதியா உள்ளே போ.. நாங்க திருடும் அளவு இந்த வீட்டுக்கு எந்த தகுதியும் இல்லை.."

அவள் கண்களை பார்த்து சிம்மன் சற்று மென்மையாகவே கூற, திருடன் போல் இருந்த ஒருவனிடம் இருந்து வந்த ஆழமான குரலில் திகைத்து விழித்துக்கொண்டு நின்றாள் அவள் ..

அவள் திகைத்து நின்றிருந்த நேரத்தை பயன்படுத்தி ரங்கனை அழைத்து கொண்டு ஓடிவிட்டான் சிம்மன்

சுவர் அருகில் வரை சென்றவன் நின்று ஒருநொடி திரும்பி பார்க்க, அவளோ இன்னமும் திகைப்பு மாறாமல் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள் …

நிலவொளியில் தெரிந்த அவள் முகத்தை பார்த்து லேசாக சிரித்துக்கொண்டே சுவர் ஏறிக்குதித்து சென்றுவிட்டான் சிம்மன்..

சற்று தூரம் வந்ததும் தங்கள் காரில் ஏறியவன் கையில் இருந்த க்ளவ்ஸை கழட்டிவிட்டு முகமூடியையும் கழட்ட, ரங்கனும் இரண்டையும் கழட்டினான்..

"என்ன சிம்மா, நீ பெண்களிடம் இப்படி எல்லாம் பேச மாட்டியே?" அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ரங்கன் கூற

"அவள் என்னவோ செய்யறா டா" என மனதை மறைக்காமல் கூறிக்கொண்டே சிம்மன் காரை எடுத்தான்

"சிம்மா இது என்ன சினிமாவா, ஒரே பார்வையில் காதல் வர.."

சிம்மனிடம் இதை கொஞ்சமும் எதிர்பார்க்காமல் ஆச்சர்யத்துடன் ரங்கன் கேட்க, "நிஜத்திலும் நடக்கும் போல் டா" என்றான் இப்போதும் சிம்மன் விடாமல்

தொடர்ந்து இதே போல் சிம்மன் பேசியதில் அதிர்ச்சியுடன் அவனை பார்த்த ரங்கன், "சீரியஸ்ஸா பேசறையா சிம்மா?" என்று கேட்க,

"அப்கோர்ஸ்" என தோளை குலுக்கினான் சிம்மன்..

தீண்டும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3:

கிட்டத்தட்ட இரண்டு வாரம் ஓடி இருந்த நிலையில் அன்று ஷூட்டிங் வரும் போது சரணிடம் பேசிக்கொண்டே வந்தான் அக்ஷய்..

"இவர் ஹீரோயின் இல்லாமலே கதையை முடிச்சுடுவார் போல் சரண்.. ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒரு மாதம் பக்கம் ஆக போகிறது, இன்னும் மனுஷன் ஹீரோயின் சூஸ் பண்ண மாட்டேன் என்கிறாரே..!" சிறு எரிச்சலுடன் அக்ஷய் கூற,

"ஐயோ உன்னிடம் சொல்ல மறந்தே போய்ட்டேன் எ.கே, ஹீரோயின் சூஸ் பண்ணிட்டாராம்.. இன்னிக்கு வந்துடுவாங்கனு சொன்னாரு.." என வேகமாக சரண் கூற, அவனை திரும்பி முறைத்தான் அக்ஷய்..

"டேய் நான் தான் ஹீரோ.. கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா..!" சலிப்புடன் அக்ஷய் கேட்க,

"சாரி சாரி எ.கே, வேற டென்ஷனில் மறந்துட்டேன் டா.. நான் என்ன எ.கே வா எல்லாத்தையும் ஒரே நேரத்தில் தெளிவா செய்ய.." என பல்லைக்காட்டிக்கொண்டே சரண் கூற,

"டேய் நீ மறந்த கொடுமை கூட பரவாயில்லை, அதுக்காக எனக்கு ஐஸ் வைத்து சாகடிக்காத டா.. முடியலை.." என்று அக்ஷய்யும் சிரித்து விட்டான்..

அன்று இண்டோர் ஷூட் தான்..

அந்த படத்திற்கென்றே தனியாக வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தான் அன்று ஷூட்டிங் நடப்பதாக இருந்தது..

அக்ஷய் செட்டுக்குள் செல்லும் போதே ஒரே இடத்தில் இயக்குனர், உதவி இயக்குனர்கள் எல்லாரும் குழுமி இருப்பது தெரிந்தது..

அங்கு தான் புது ஹீரோயின் இருக்கிறாள் என பார்த்ததுமே தெரிந்து விட, "எதுக்கு இப்படி கூடி நிக்கறாங்க?" என சரண் காதில் முணுமுணுத்துக்கொண்டே வந்தான் அக்ஷய்..

அதற்குள் அவன் வந்ததை கவனித்து அங்கிருந்து எல்லாரும் நகர, இயக்குனர் மட்டும் மெதுவாக ஒரு பெண்ணிற்கு எடுக்கப்போகும் காட்சியை சொல்லிக்கொண்டிருந்தார்..

அக்ஷய்யை பார்த்ததும் தானும் எழுந்தவர், "வாங்க எ.கே.. இவங்க தான் நம்ம ஹீரோயின்.. பெயர் காயத்ரி.."

"காயத்ரி இது அக்ஷய் குமார்.. எங்க எல்லாருக்கும் எ. கே.." என இருவரையும் அறிமுகப்படுத்தி வைக்க, அக்ஷய்யின் கண்கள் காயத்ரி மீது அழுத்தத்துடன் படிந்தது..

"ஹாய்" என அவன் கை நீட்ட, அவளோ மிகவும் தயங்கி தயங்கி தான் கையே நீட்டினாள்.

அவள் நீட்டிய கைகளை மென்மையாக பிடித்து குலுக்கி விட்டுவிட்ட அக்ஷய்க்கு அவளது அந்த ஒரு செயலிலேயே அவள் தயக்கம் புரிந்து விட்டது.

யார் கண்களையும் நேராக பார்க்காத அவள் முகமே அவளுக்கு சுத்தமாக விருப்பம் இல்லாமல் தான் அங்கு அமர்ந்திருக்கிறாள் என அக்ஷய்க்கு உணர்த்திவிட்டது..

அதே நேரம் எப்போதும் போல் படத்தில் நடிக்கும் ஒரு நடிகை வேறு வந்து 'எ. கே எப்படி இருக்கீங்க' என அவன் மீது விழுந்து வைக்க, எப்போதும் போல் சிறு புன்னகையுடன் அவளை அணைத்து விடுவித்தவன் தற்செயலாக காயத்ரியை பார்க்க, அவள் முகமோ பல உணர்வுகளை பிரதிபலித்து கொண்டிருந்தது..

கலங்கிவிடுவேன் என்று பயமுறுத்திய கண்களை போராடி கட்டுப்படுத்தி கொண்டிருதால் போல், சிறு பயம், லேசான அருவெறுப்பு, அதை காட்டமுடியாத தயக்கம் எல்லா உணர்வும் ஒரே நேரத்தில் அவள் முகத்தில் வந்து போனது..

அனைத்தையும் கவனித்து கொண்டே யோசனையுடன் அமர்ந்தான் அக்ஷய்..

இயக்குனர் வந்து எடுக்க போகும் காட்சியை அவனிடம் விவரிக்க, ஒரு நொடி காயத்ரி மீது அழுத்தமாக படிந்து மீண்டது அக்ஷயின் பார்வை..

அவர் கூறிய காட்சி இது தான்..

அந்த வீட்டின் நடுவில் பிரமாண்டமாக இருந்த படியில் வேகமாக காயத்ரி இறங்கிவர வேண்டும்.. கடைசி இரண்டு படியில் இறங்கும் போது அவள் அணிந்திருக்கும் தாவணியில் பாவாடை தடுக்கி அவள் விழ போக, அக்ஷய் அவளை தாங்கி பிடிக்க வேண்டும்..

அடுத்து இருவருக்கும் கிளோஸ் அப் ஷாட்..

அக்ஷய் அவளை தாங்கி உறைந்து நின்றுவிட, அவளும் அதே போல் மெய்மறந்து அவனை பார்க்க வேண்டும்..

இதை தான் இருவரிடமும் இயக்குனர் கூறினார்..

ஷூட்டிங் ஆரம்பம் ஆனதும் முதலில் காயத்ரியை முகம் முழுவதும் சந்தோசத்துடன் துள்ளி குதித்து இறங்கி வர சொன்னார் இயக்குனர்..

அதுவே அவளால் முடியவில்லை.. வேகமாக வந்தாலே ஒழிய, அவர் எதிர்பார்த்த பரவசமும் மகிழ்ச்சியும் அவள் முகத்தில் வரவேயில்லை..

அதை வர வைப்பதற்குள்ளேயே அவர் பெரும் பாடு பட்டு போனார்..

ஒருவாறு அந்த உணர்வை முகத்தில் கொண்டு வந்ததும் அடுத்த சோதனை தொடங்கியது..

இறங்கி வந்தவள் அக்ஷய் கைகளில் விழ வேண்டும்.. அவளோ அந்த இடத்தில் தடுக்குவது போலவே வரவில்லை..

கடைசி இரண்டு படி வரை ஓடி வந்தவள் அக்ஷய்யை பார்த்ததும் அப்படியே நின்று விட்டாள்..

தொடர்ந்து பத்து டேக் இப்படியே போக, "உனக்கு என்ன தான் மா பிரெச்சனை" என்று கத்திவிட்டார் இயக்குனர்..

அக்ஷய்யும் அவள் முகத்தை தான் பார்த்தான்..

அவள் பல்லை கடித்துக்கொண்டு நின்றாலே ஒழிய ஒன்னும் சொல்லவில்லை..

"உன் ஷாட் கொஞ்ச நேரம் கழித்து எடுத்துக்கலாம்.. நீ போ மா.." என எரிச்சலுடன் இயக்குனர் கூற, அவளும் அமைதியாக தலை குனிந்த படியே சென்றுவிட்டாள்..

அடுத்து அக்ஷய் மட்டும் மற்றவர்களுடன் நடிக்கும் காட்சி எடுத்தவர், அது முடிந்ததும் பெரும் யோசனையுடன் அமர்ந்துவிட்டார்..

அவர் அருகில் வந்து அமர்ந்த அக்ஷய்,

"என்ன சார் ஹீரோயின் பிக்ஸ் பண்ணும் முன் அவங்க விருப்பம் கேட்க வேண்டாமா?" என்று அழுத்தமாக கேட்க,

"நான் கேட்காமல் இருப்பேனா எ.கே, இந்த பெண்ணின் கார்டியனிடம் கேட்டபோது இந்த பெண்ணுக்கு நடிக்க ஆர்வம் இருக்கு” என்று தான் கூறினார்.. அவர் முன்னாடி வைத்து இந்த பெண்ணும் தலையாட்டியதை நம்பி அட்வான்ஸ் வேற கொடுத்தாச்சு.. இப்போ பார்த்தால் இந்த பெண் இப்படி பண்ணுது.. படம் தொடங்கி வேற நாள் ஆச்சு.. இப்போ முதலில் இருந்து திரும்ப தேடணும்னா கஷ்டம்.."

அவர் பாட்டிற்கு புலம்பிகொண்டே போக, "கவலைப்படாதீங்க நான் பேசி பாக்கறேன்.. இருங்க.." என்றுவிட்டு எழுந்தான் அக்ஷய்..

காயத்ரியை தேடி அவன் வர, அவளோ அந்த வீட்டின் பின் பக்கமாக இருந்த தோட்டத்தில் யார் கண்ணிலும் படாதவாறு ஒரு ஓரமாக நின்றிருந்தாள்..

"காயத்ரி" என்று அழைத்து கொண்டே அக்ஷய் வர, வேகமாக திரும்பியவள் வேக வேகமாக கண்ணை துடைத்து கொள்ள, அவள் முகத்தில் இருந்தே நன்றாக அழுதிருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது..

"என்ன ஆச்சு உங்களுக்கு? நடிக்க ஒத்துக்கொண்டு தானே வந்தீங்க.. இப்போ இப்படி செய்தால் உங்களை நம்பி பணம் போட்டவங்களுக்கு பிரெச்சனை வராதா?" மென்மையாக தான் அக்ஷய் பேசினான், அதற்கே அவளுக்கு மேலும் கண்கள் கலங்கி விட்டது..

வெகு இறுக்கத்துடன் அழுகையை கட்டுப்படுத்த தெரியாமல் நின்றிருந்தவளை பார்த்தவனுக்கு பாவமாக இருந்தது..

"சும்மா சும்மா அழுது கொண்டே இருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது மா.. என்ன தான் பிரெச்சனை.. நீங்க ஏதாவது சொன்னால் தான் என்னால் ஏதாவது உதவ முடியும்.." மேலும் மெதுவாக அக்ஷய் கூற, அவனை நிமிர்ந்து ஒரு புரியாத பார்வை பார்த்துவிட்டு மீண்டும் குனிந்து கொண்டாள் காயத்ரி..

அவள் பார்வையின் அர்த்தம் புரியாமல் சிறிது யோசித்தவன் பின் அந்த ஆராய்ச்சியை விட்டுவிட்டு, அவளை அழுத்தமாக பார்த்தான்..

"நான் சொல்வதை கவனிங்க காயத்ரி.." என அக்ஷய் அழுத்திக்கூ ற, அதில் அவனை தன்னை அறியாமல் கவனித்தாள் காயத்ரி

"நீ நடிப்பேன் என்று ஒத்துக்கொண்டதால் தான் பணம் கொடுத்து உன்னை இந்த படத்திற்கு புக் பண்ணி இருக்காங்க.. இப்போது நீ மீண்டும் பணத்தை திரும்ப கொடுத்துவிட்டால் கூட உன் மேல் இவர்களால் கேஸ் போட முடியும்.. அதை எல்லாம் பார்க்கும் அளவு வசதியோ பின்புலமோ இருக்கா?" தெளிவாக அக்ஷய் கேட்க, சிறு பயத்துடன் மறுப்பாக தலையசைத்தாள் காயத்ரி

"அப்போ உனக்கு வேறு வழி இல்லை மா.. நடித்து தான் ஆகணும்.. என்னிடம் உன் பிரெச்சனையை கூறினால் என்னால் முடிந்த உதவி செய்வேன்.." மீண்டும் அவளிடம் இருந்து அதே புரியாத பார்வை

ஆனால் இந்த முறை அக்ஷய் அவளை அழுத்தமாக பார்த்தான்..

'நீ பதில் சொல்லி தான் ஆக வேண்டும்' என்ற செய்தி அவன் பார்வையில் இருந்தது..

அது அவளுக்கும் புரிந்ததோ என்னவோ மெதுவாக வாய் திறந்தாள்..

"நேக்கு இது எதிலுமே இஷ்டமில்லை.. என் கார்டியன் வற்புறுத்தி நடித்து தான் ஆகனும் என்று அனுப்பிட்டார்.. நேக்கு இப்படி தொட்டெல்லாம்... என்னவோ போல் இருக்கு.. என்னால் முடியலை..." ஒரு மாதிரி மரத்த குரலில் காயத்ரி கூற, அவளை சற்று ஆச்சர்யமாக பார்த்தான் அக்ஷய்..

"உனக்கு என்ன வயசாகுது"

"இருபது"

"அப்போ கார்டியன் சொல்வதை கேட்கவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லையே மா.. அப்படி அவர் சொல்வதை கேட்டு ஆக வேண்டும் என்று ஏதாவது இருக்கா என்ன?" குழப்பத்துடன் அக்ஷய் கேட்க,

"என் தங்கை அவன் கட்டுப்பாட்டில் இருக்கா.. நான் அவன் சொல்வதை கேட்கா விட்டால் அவளை ஏதாவது பண்ணிடுவேன் என்று மிரட்டறான்" காயத்ரி பேசியதில் இருந்தே தன் கார்டியனால் அவள் நொந்து போய் இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது..

"நீ ஏன் கார்டியன் பொறுப்பில் இருக்க? உன் தங்கை ஏன் அவன் பொறுப்பில் இருக்கா? எல்லாமே தெளிவா சொல்லு காயத்ரி.. அப்போ தான் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியும்.." என்று அக்ஷய் கூற, இப்போது அவனை தயக்கத்துடன் பார்த்தாள் காயத்ரி..

'இவனிடம் சொல்வதா வேண்டாமா' என்ற குழப்பம் அவளுக்கு

"நீ சொல்வதை வைத்து நான் தவறா ஒன்றும் செய்துவிட மாட்டேன் மா.. தைரியமா சொல்லு.." என்று அக்ஷய் கேட்க,

"இல்லை நீங்க செத்த நேரம் முன்பு அந்த பொண்ணு கூட கட்டிப்பிடிச்சு.. உங்களை நம்பி எப்படி என் குடும்ப விஷயம் எல்லாம் சொல்வது.." அவள் தயங்கியதில் அவனுக்கு சிரிப்பு கோபம் இரண்டும் சேர்ந்தே வந்தது, சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டவன் அழுத்தத்துடன் தான் பேசினான்..

"அது என் தனிப்பட்ட விஷயம் மாமி.."

"காயத்ரி" என்று அவள் வேகமாக திருத்த,

"மாமியே நல்லா இருக்கு.. பொருத்தமாகவும் இருக்கு.. இப்போ அது பிரெச்சனை இல்லை.. சொல்வதை கேள்.." என்று அவன் கூறியதில், அவன் குரலை மறுக்கமுடியாமல் அமைதியாக அவனை பார்த்தாள் காயத்ரி

"இப்போது உனக்கு வேறு வழி இல்லை மாமி.. என்னிடம் உன் பிரெச்சனைகளை சொன்னால் என்னால் ஆன உதவி செய்வேன்.. அந்த பெண்ணிடம் நான் நடந்து கொண்டது என் தனிப்பட்ட விஷயம்.. ஆனால் உன் மேல் என் விரலாவது பட்டதா? நீ படியில் இருந்து இறங்கி வரும்போது உன்னை கட்டாயமாக இழுத்திருக்க எத்தனை நேரம் ஆகும் என்று நினைக்கிறாய்?" குரலில் சிறு நக்கலுடன் அக்ஷய் கேட்க, அவனை அதிர்ந்து பார்த்தாள் காயத்ரி..

"இப்போது நீ சொல்லவில்லை என்றால் அடுத்து அது தான் நடக்கும்" என்று அக்ஷய் முடிக்க அவனை மேலும் கண்கள் விரிய பார்த்தாள் காயத்ரி..

அவள் கண்ணழகை உள்ளுக்குள் ரசித்தவன், "விருப்பம் இல்லாத பெண்ணை நெருங்கும் பழக்கம் எனக்கு இல்லை மாமி.. சோ தைரியமா சொல்லு.." என்றான்..

அவன் கூறியதை கேட்டவளுக்கு தனக்கும் வேறு வழி இருப்பது போல் தெரியவில்லை..

அவன் ஏதாவது உதவுவான் என்று சுத்தமாக தோன்றவில்லை தான்.. ஆனால் சற்று முன் அவன் சொன்னது போல் நடிப்பை தவிர்க்கவாவது சொல்லி தான் ஆக வேண்டும் என்று புரிய, தன் விதியை நொந்து கொண்டே தன் வாழ்க்கையில் நடந்ததை கூறினாள் காயத்ரி..

காயத்ரி, ரங்கநாதன் சீதா தம்பதியின் மூத்த மகள்..

அவர்களது இரண்டாம் மகள் ஹரிணி..

காயத்ரிக்கும் ஹரிணிக்கும் ஐந்து வயது வித்தியாசம்..

ரங்கநாதன் துணிக்கடை ஒன்று வைத்து நடத்தி கொண்டிருந்தார்..

வருமானம் நல்லபடியாகவே வந்துகொண்டிருக்க, மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றுகொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை..

யார் கண் பட்டதோ, காயத்ரிக்கு பதின்மூன்று வயதிருக்கும் போது ரங்கநாதனுக்கும் சீதாவிற்கும் மிகவும் கொடூரமான விபத்து ஒன்று ஏற்பட்டது.

அப்போது செந்தில் என்பவன் ரங்கநாதனுக்கு நெருங்கிய தோழன்..

ரங்கநாதனுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாததால் அவர் நண்பர்களுடன் தான் மிகவும் நெருங்கி பழகுவார்..

அதில் அவர் கல்லூரி தோழனான செந்தில் அவருக்கு மிகவுமே நெருக்கம்..

செந்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் தான் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

ரங்கநாதன் இறக்கும் தருவாயில் அவருக்கு மகள்களை பற்றிய கவலை தான் பெரிதாக இருந்தது..

செந்திலுக்கு திருமணம் ஆகி குழந்தை வேறு இல்லாமல் இருந்ததால் அவரை நம்பி தன் மகள்களை மரணப்படுக்கையில் ஒப்படைத்தார் ரங்கநாதன்..

அவர் சொத்துக்கள் அனைத்தும் மகள்கள் பெயரில் இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த வயது வரும் வரை செந்திலை தான் கார்டியனாக நியமித்து இருந்தார்..

"அங்கிள் சொல்வதை கேட்டு ஹரிணி பாப்பாவையும் பார்த்துக்கோ டா" என்பது தான் ரங்கநாதன் காயத்ரியிடம் கடைசியாக பேசியது

அந்த விபத்தில் ரங்கநாதன் சீதா இருவர் உயிரும் பிரிந்துவிட, காயத்ரி ஹரிணி இருவருமே செந்திலின் கட்டுப்பாட்டில் வந்தனர்

அவரும் ஆரம்பத்தில் இருவரையும் தன் பிள்ளைகள் போல் பாசமாக தான் பார்த்துக்கொண்டார்..

ரங்கநாதன் கடை அவர் பொறுப்பில் வந்ததும், தன் வேலையை விட்டுவிட்டு அதில் பொறுப்பேற்றுக்கொண்டார்..

அவர் மனைவியும் குழந்தை இல்லாததால் காயத்ரியையும், ஹரிணியையும் தன் குழந்தைகள் போலவே வளர்த்தார்..

சிறு பெண்கள் இருவரும் ஓரளவு அந்த வீட்டில் ஒட்டிய நொடி அவர்களுக்கு அடுத்த இடி காத்திருந்தது..

ஆம் அடுத்த மூன்றே வருடத்தில் அப்போதைக்கு அவர்கள் அன்னை என்று நினைத்துக்கொண்டிருந்த செந்திலின் மனைவியும் இறைவனடி எய்திவிட்டார்.

அதற்கு பின் தான் வீட்டில் சோதனைகள் தொடங்கியது..

வேலை மட்டுமே பார்க்க தெரிந்த செந்திலுக்கு தொழிலை ஒழுங்காக பார்க்க தெரியாமல் போக, கொஞ்சம் கொஞ்சமாக தொழில் சரிய தொடங்கியது..

அவருக்கோ திடீரென கிடைத்த செல்வச்செழிப்பில் வாழ்ந்து பழகி விட்டவருக்கு, அதை விட்டுக்கொடுக்கவும் மனம் வரவில்லை..

ஏதேதோ செய்து பார்த்தவர் ஒன்றும் முடியாமல் ஒரு கட்டத்தில் கடையை விற்றே விட்டார்..

அதில் வந்த பணத்தை பேங்கில் போட்டு அதன் வட்டியில் வாழ தொடங்கியவருக்கு, கொஞ்ச நாளில் காயத்ரி, ஹரிணி படிப்பு செலவு ஏறவும் அதை பார்க்க முடியாமல் போயிற்று.

தனது பகட்டை கொஞ்சமும் குறைத்துக்கொள்ள விரும்பாதவர், 'யாராவது ஒருத்தரை தான் படிக்கவைக்க முடியும்' என காயத்ரியிடம் கூறி விட, வேறு வழி இல்லாமல் அவள் பன்னிரெண்டாம் வகுப்புடன் தன் படிப்பை முடித்துக்கொண்டு, 'ஹரிணியை படிக்க வையுங்கள்' என்று கூறிவிட்டாள்..

அவர் மனம் இப்போது மனிதத்தன்மை இழந்து விட்டதை கண்டுகொண்டவள், தங்கைக்கு அதெல்லாம் தெரியவேண்டாம் என அவளை வற்புறுத்தி ஹாஸ்டெலில் சேர்த்து விட்டுவிட்டாள்..

கடந்த ஒரு வருடமாக செந்தில் அந்த வட்டி பணம் தவிர வேறு வருமானத்திற்கு என்ன செய்கிறார் என்று அவளுக்கு ஒன்றும் தெரியாது..

சில சமயம் பகட்டுடனும் சில சமயம் நொந்தும் சுற்றி கொண்டிருப்பார்.

காயத்ரியோ எதையும் கண்டுகொள்ளாமல் தன் படிப்பிற்கு எதேனும் சாதாரண வேலை கிடைக்குமா என்று தேடி கொண்டிருந்தாள்.

இந்த நிலையில் தான் சில நாட்கள் முன்பு திடீரென யாரோ அவர்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை காயப்படுத்திவிட்டு சென்று விட்டனர்..

அது நடந்து இரண்டே நாளில் இந்த திரைப்பட வாய்ப்பு வர, அவளை நடிக்க போய் தான் ஆக வேண்டும் என ஒரே காலில் நின்றுவிட்டார் செந்தில்.

அவளும் தனக்கு இதெல்லாம் ஒத்துவராது, யாரோ ஒருவனுடன் நடிக்கவெல்லாம் முடியாது என எத்தனையோ கெஞ்சி பார்த்து விட்டாள்..

அப்போது தான் செந்திலின் உள்ளுக்குள் இருந்த மிருகம் முதல் முதலாக வெளியே வந்தது

அவருக்கு பணத்தின் மீது எத்தனை வெறி இருக்கிறது என்றும் காயத்ரி அப்போது தான் புரிந்துகொண்டாள்..

ஒரேடியாக அவர் நடிக்க வற்புறுத்தவும், ஒரு கட்டத்தில் காயத்ரியே கத்தி விட்டாள்.

"இதோ பாருங்க அங்கிள் எனக்கு இருபது வயசாச்சு.. நீங்க சொல்வதை கேட்டு தான் ஆக வேண்டும் என நேக்கு எந்த கட்டாயமும் இல்லை.. தேவையில்லாமல் என்னை வற்புறுத்தினால் உங்க மேல் கேஸ் போட்டுவிடுவேன்.." வரவழைத்து கொண்ட தைரியத்துடன் காயத்ரி பேச,

அதில் அவளை பார்த்தவர் கண்களில் அத்தனை வெறி இருந்தது..

"ஆஹா கேஸ் போடுவாயா.. போடேன், தராளமா போடு.. ஆனால் என்ன எனக்கு கேஸ் கொடுத்துட்டு நீ வீட்டிற்கு வரும் போது உன் தங்கச்சி செத்துட்டாங்கற செய்தி தான் உனக்கு கிடைக்கும்.. பரவாயில்லையா..?" ஒருவித வெறியுடன் செந்தில் கூற, ஒரு நொடி காயத்ரிக்கு சர்வமும் அடங்கி விட்டது

"அங்கிள் என்ன பேசறேள்?" என சத்தமாக காயத்ரி கத்திவிட,

"அட ச்சீ கத்தாத டி.." என முதல் முறை தன் கேவலமான முகத்தை காட்டினான் செந்தில்

"உன் அப்பன் கொடுத்துட்டு போன பணம் வைத்து வாழ்க்கையை ஓட்டுவதே கஷ்டமா இருக்கு, இத்தனை நாள் உங்களை பாதுகாப்பா பாத்துக்கிட்டேனே அதுக்கு நீ எனக்கு நன்றியோடு இருக்க வேண்டாம்.. சும்மா குதிக்கற.. ஒழுங்கா வந்திருக்கிற வாய்ப்பை பயன்படுத்தி நடிச்சு சம்பாதிக்க பாரு.. இல்லாட்டி உன் தங்கச்சியை மறந்துட வேண்டியது தான்.."

கொஞ்சமும் இரக்கமில்லாமல் செந்தில் மிரட்ட, அவளுக்கும் உதவி கேட்க கூட வேறு யாரையும் தெரியாது என்பதால் வேறு வழியே இல்லாமல் ஒத்துக்கொண்டிருந்தாள்..

அனைத்தையும் முடிந்தவரை வேகமாக அக்ஷய்யிடம் ஒப்பித்தவள், "வேறு வழியில்லாமல் ஒத்துன்டேன்.. ஆனால் என்னால் நிஜமாவே முடியவில்லை.. யாருனே தெரியாத ஒருத்தரை தொட்டெல்லாம் நடிக்கணும்னு நினைச்சாலே அருவெறுப்பா இருக்கு.."

ஒரு ப்ளோவில் சேர்த்து சொல்லிவிட்டவள் அக்ஷய் முகத்தை பார்த்துவிட்டு, "மன்னிச்சுடுங்கோ உங்களை ஒன்னும் தப்பா சொல்லவில்லை.. பொதுவா தான் சொன்னேன்.." என அவசரமாக சேர்த்து சொன்னாள்..



அவனோ, "ப்ச் அதனால் ஒன்னும் இல்லை.. எனக்கு புரியுது.. பட் இப்போ உன் பிரெச்சனைக்கு என்ன செய்வது என்று தான் யோசிக்கிறேன்..." என்றவன் சற்று நேரம் அமைதியாக தீவிரமாக யோசிக்க,

'இவனால் நிஜமாகவே தன் பிரெச்சனைக்கு ஏதேனும் தீர்வு சொல்ல முடியுமா' என்ற நம்பிக்கையில் சிறிய நப்பாசையுடன் அவனை பார்த்தாள் காயத்ரி

சற்று நேரம் அமைதியாக யோசித்த அக்ஷய், "மாமி நீ இந்த படத்தில் இருந்து இப்போது விலகினால் எல்லா வகையிலும் உனக்கு பிரெச்சனை தான்.. அதுக்கு பேசாமல் இந்த ஒரு படம் நடித்து கொடுத்துவிடு.." என்று அவன் நிறுத்த,

'இதற்கு எதுக்கு டா என்னிடம் இத்தனை நேரம் கதை கேட்டாய்' என்பது போல் பார்த்தாள் காயத்ரி..

அவள் பார்வை உணர்ந்து லேசாக சிரித்தவன், "மனசுக்குள்ள என்னை திட்டாத மாமி.. உனக்கு என்ன இந்த தொட்டு பேசுவது, கட்டிப்பிடிப்பது இதெல்லாம் தானே பிரெச்சனை..?" அக்ஷய் கூறக்கூறவே அவள் முகம் சுருங்க, அதை தானும் உணர்ந்துகொண்டவன்

"முடிந்தவரை உனக்கு சங்கடம் இல்லாமல் நான் பார்த்து கொள்கிறேன்.. சரியா.. இந்த படத்தில் உனக்கு முக்கால் வாசி தாவணி தான்.. பாடல்களில் தான் உடை மாற்ற வாய்ப்புண்டு.. அதிலும் அதிகம் எக்ஸ்போஸ் ஆகாத உடை கொடுக்க ஏற்பாடு செய்யறேன்.. இப்போது சொன்ன சீன் கூட ஒரேடியாக அணைத்து பிடிக்காமல் கை மட்டும் பிடித்தால் உனக்கு ஓகே வா.. என்னை ஒரு நல்ல பிரென்ட்டா நினைச்சுக்கோ மாமி.. தப்பா தெரியாது.." என உதட்டில் உறைந்திருந்த புன்னகையுடன் அக்ஷய் கூற,

"நீங்க கட்டி எல்லாம் பிடிப்பேள்" என்றாள் காயத்ரி சிறிது நேரம் முன்பு நடந்ததை நினைத்தவளாய்,

"அட டா மாமி உன்னிடம் அப்படி நடந்துகொண்டால் தான் நீ கோபப்படணும்.. இந்த துறையில் அதெல்லாம் சகஜம்.. உனக்கு பிடிக்கவில்லை என்றால் உன்னிடம் யாரும் வராமல் உன்னை நான் பாதுகாப்பா பார்த்துக்கறேன்.. அதுக்காக நான் மத்தவங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னு நீ சொல்ல கூடாது.."

அவனுக்கும் சற்று கோபம் வந்து விட இத்தனை நேரம் இருந்த மென்மையை கைவிட்டுவிட்டு அழுத்தமாகவே பேசினான் அக்ஷய்

அதில் காயத்ரி அவனை பயத்துடன் பார்க்க, ஒரு பெருமூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தி கொண்டவன், "மாமி நான் தான் ஏற்கனவே சொன்னேனே.. உனக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்த பின் நிச்சியம் நான் உன்னை தவறான எண்ணத்துடன் தொட மாட்டேன்.. வேறு யாரும் நெருங்காமல் பாத்துக்கறேன்.. கொஞ்சம் என்னை நம்ப முயற்சி பண்ணு மாமி.. இப்போ உனக்கு வேறு வழியும் இல்லை.. இந்த படம் முடிஞ்சதும் உன் மற்ற பிரெச்சனைகளுக்கும் நான் ஏதாவது தீர்வு சொல்றேன்.. நீ நினைக்கும் அளவு நான் பொறுக்கி இல்லை மா.. நம்பு.."

மீண்டு விட்ட குறும்புத்தனத்துடன் அக்ஷய் கூற, அவனை யோசனையுடன் பார்த்த காயத்ரிக்கு இப்போதைக்கு அவன் கூறுவது ஒன்று தான் வழி என்று புரிந்தது..

எவனோ ஒரு மூன்றாவது மனிதன் தான்.. ஆனால் கூடவே இருக்கும் மிருகத்தை ஒத்துப்பார்க்கும் போது அக்ஷய் ஒன்றும் அத்தனை மோசமானவனாக அவள் கண்களுக்கு தெரியவில்லை..

அதான் விருப்பமில்லாதவளிடம் வரமாட்டேன் என்று விட்டானே..

அது அவன் ஈகோவாக கூட இருக்கலாம்.. எதுவானாலும் அவளுக்கு நல்லது தான்..

"தேங்க்ஸ்" என மெதுவாக காயத்ரி கூற,

"ஹப்பா ஒருவழியாக இந்த தலைக்குள் நான் சொன்னது ஏறிவிட்டதா.." என விளையாட்டு போல் அக்ஷய் கூறியதில் அவளுக்கு லேசாக சிரிப்பு கூட வந்துவிட்டது..

அவளது அந்த இலகு தன்மையை விடாமல் பார்த்துக்கொண்டவன் அவர்கள் நடிக்க வேண்டிய காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என அவளுக்கு பொறுமையாக சொல்லி கொடுத்தான்..

எங்கு கால் வைத்து எப்படி விழுவது போல் நடித்தால் வெறும் கை மட்டும் பிடித்துக்கொண்டே அந்த காட்சியை முடிக்க முடியும் என்று அவளுக்கு சொல்லி கொடுத்தவன், இயக்குனரிடமும் கமெரா அங்கிளை அவர்கள் அணைத்திருப்பது போல் தெரியுமாறு வைக்க சொல்லிவிட்டான்.

மீண்டும் ஷூட் தொடங்கிய போது காயத்ரி முதலில் சொதப்ப தான் செய்தாள்..

ஒரு ஷாட் கட் செய்த இடைவெளியில் காயத்ரி அருகில் வந்தவன், "சத்தியமா உன்னை எந்த தவறான எண்ணத்திலும் நான் தொட மாட்டேன் மாமி.. என்னை நம்பி நடி.." என அவளுக்கு மட்டும் கேட்பது போல் ஆழமான குரலில் கூற, அந்த குரல் செய்த மாயமோ என்னவோ அடுத்த டேக் ஓகேவாகி விட்டது..

அதில் மொத்த யூனிட்டிற்குமே பெரும் நிம்மதியாக இருந்தது..

"வெரி குட் மாமி" என அக்ஷய் சத்தமாகவே பாராட்ட, அவள் தான் திருதிருவென விழித்தாள்

அவள் விழித்ததில் தனக்குள் சிரித்துக்கொண்ட அக்ஷய், "மாமி இதுக்கு இப்படி முழிக்க கூடாது.. லேசாக சிரித்து பாராட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும்.." என அவள் காதருகில் கூற,

"நேக்கு வரலை" என்றாள் காயத்ரி சலிப்புடன்

அவள் கூறியதில் அவள் பதட்டம் உணர்ந்து, அவனுக்கு மேலும் சிரிப்பு தான் வந்தது.

"அவ்வளவு தான் மாமி.. இன்னிக்கு முடிஞ்சது.. போக போக பதட்டம் குறைந்து பழகிடும்.. இந்த படம் முடியும் வரை உன் நிம்மதி என் பொறுப்பு.. தைரியமா வீட்டுக்கு போ.." என்றுவிட்டு நகர்ந்தான் அக்ஷய்

அவன் கூற்றில் உண்மையாகவே காயத்ரிக்கு சற்று தைரியம் வந்தது போல் தான் இருந்தது.

அவன் குரல் செய்த மாயமோ இல்லை சொன்னதை போலவே செயலில் காட்டிய கண்ணியமோ, ஏதோ ஒன்று அவளுக்கு பெரும் நிம்மதியை கொடுத்திருந்தது..

தீண்டும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4:
அன்றைய படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது அக்ஷய், காயத்ரி பற்றி சரணிடம் கூறினான்..

அவன் கூறிய அனைத்தையும் கேட்ட சரணுக்கும் காயத்ரி நிலை நினைத்து வருத்தமாக தான் இருந்தது..

"நீ பார்த்துக்கோ எ.கே.. பாவம் இந்த வயதில் நிறைய கஷ்டப்பட்டுட்டா போல்.." மெதுவாக சரண் கூற,

"ம்ம் ஆமா டா.. அவள் சொன்னதை கேட்க கேட்க ரொம்ப பாவமா போச்சு.. அவள் பாதுகாப்பிற்கு நான் பொறுப்பு.. ஆனால்.." என ஏதோ யோசனையுடன் அக்ஷய் நிறுத்த

"என்ன ஏ. கே?" என்றான் சரண்

"எனக்கும் அவளுக்கும் வயது வித்தியாசம் நிறைய டா.. ஒரே குழப்பமா இருக்கு.." என்றான் அக்ஷய் யோசனையுடன்

அதில் லேசாக சிரித்துக்கொண்ட சரண், "அதெல்லாம் ஒன்னும் பெரிய காரணம் இல்லை எ.கே, உன்னை விட வேறு யாராலும் அவளுக்கு நல்ல எதிர்காலம் கொடுத்துவிட முடியாது டா.." உறுதியாக சரண் கூற,

"நீ என் மேல் இருக்கும் அன்பில் சொல்கிறாய் சரண்.. ஆனால் இதில் யோசிக்க வேண்டியது நிறைய இருக்கு டா.. லெட் மீ திங்க்.." என முடித்துவிட்டான் அக்ஷய்

அன்று வீட்டிற்கு வந்த காயத்ரிக்காக செந்தில் வாசலிலேயே காத்திருந்தார்..

இஷ்டமே இல்லாமல் சென்றவள் ஒழுங்காக நடித்தாளா இல்லை ஏதாவது பிரச்சனை செய்து விட்டு வருவாளா என்ற பயம் அவருக்கு..

காரில் வீட்டு வாசலில் வந்து இறங்கிய காயத்ரி வாசலிலேயே நின்றிருந்த செந்திலை கவனித்தாலும் ஒன்றும் பேசாமல் அமைதியாக உள்ளே போக, "நில்லு காயத்ரி" என்று கூறிக்கொண்டே அவள் பின்னாடி வந்தார் செந்தில்

அவர் அழைத்ததில் அமைதியாக காயத்ரி நிற்க, "ஒழுங்கா நடிச்சியா? ஒன்னும் வம்பு பண்ணி விடவில்லையே?" என வேகமாக அவர் கேட்க

அவரை நிதானமாக பார்த்தவள் "ஏதாவது வம்பு பண்ணி இருந்தா என் மனம் புரிந்து வேண்டாம் என்று சொல்லிட போறேளா?" என்று கேட்க, அவருக்கோ அவள் நேரடியாக பதில் சொல்லாததில் எரிச்சல் வந்தது

"ஏதாவது வம்பு பண்ணினாய் என்று என்னிடம் எவனாவது பணத்தை கேட்டு கொண்டு வந்தால், இந்த வீட்டில் பிணம் தான் விழும்.." வெறியுடன் செந்தில் கூற, இதுவரை இருந்த கோபம் மறைந்து காயத்ரி கண்களிலும் சிறு பயம் எட்டிப்பார்த்தது..

அதை திருப்தியுடன் பார்த்துக்கொண்டவர், "சினிமா என்றால் கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்.. பொறுத்துக்கொண்டு நடி.." என அழுத்தமாக கூறி விட்டு சென்று விட, மனதில் மண்டிய எரிச்சலுடன் அவரை அற்ப புழு போல் பார்த்துவிட்டு சென்றாள் காயத்ரி

தன் அறைக்கு வந்து ப்ரெஷ் ஆனவள் தினப்படி வழக்கம் போல் ஹரிணிக்கு அழைத்தாள்..

ஹரிணியிடம் இன்னும் அவள் சினிமாவில் நடிக்க சென்றதை கூறவில்லை..

எப்படியேனும் தட்டி போய் விடாதா என்ற நப்பாசை இருந்ததே..

அது நடக்காது என்று தெரிந்ததும் இனி மறைத்து பிரோயோஜனம் இல்லை என்ற முடிவிற்கு வந்திருந்தாள்..

காயத்ரியின் அழைப்பை பார்த்ததுமே "அக்கா என்ன இன்னிக்கு லேட்டா?" என்ற ஆர்ப்பாட்டமான தங்கை குரலில் காயத்ரிக்கு தன் அழுப்பெல்லாம் மறந்து புது உற்சாகம் பிறந்தது போல் இருந்தது..

"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் ஹரி மா " என காயத்ரி பீடிகையுடன் தொடங்க

"என்ன என்ன அக்கா? சீக்கிரம் சொல்லு.." என ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டாள் ஹரிணி



அதில் மெலிதாக சிரித்து கொண்ட காயத்ரி, "நேக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வந்தது ஹரி.. நடிக்க போறேன்.." தங்கை என்ன சொல்லுவாளோ? என்ற குழப்பத்துடன் காயத்ரி நிறுத்த,



"வாவ் அக்கா நிஜமாவா! நீ சினிமாவில் நடிக்க போகிறாயா? ஹை அப்போ நான் நடிகையின் தங்கையா.. நிஜமா தான் சொல்லுறயா கா.. ஒன்னும் கிண்டல் பண்ணவில்லையே..?" ஆர்பாட்டத்துடன் ஆரம்பித்தவள் சந்தேகத்துடன் முடிக்க, இந்த துறையின் கருப்பு பக்கம் தங்கைக்கு தெரியவில்லை என காயத்ரிக்கு புரிந்து போனது..

பாவம் அவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறு பெண் தானே.. சினிமா என்றதும் அதில் கிடைக்கும் நன்மையையும் புகழும் மட்டுமே யோசித்திருக்கிறாள்.

ஆனால் அதன் மற்றொரு பக்கமும் தெரிந்து பயந்து நடுங்கிய அவளுக்கு தானே தெரியும் அந்த பயம்..

ஒரு கசந்த முறுவல் காயத்ரி உதட்டில் தோன்றி மறைய, "உண்மை தான் டி" என்றாள் காயத்ரி மெதுவாக

ஆனால் அதற்குள் சிறியவளுக்கு என்ன தோன்றியதோ, "அக்கா சினிமா என்றால் ரொம்ப நெருக்கமா எல்லாம் சில படங்கள் எடுப்பாங்களே! சின்ன சின்ன டிரஸ் எல்லாம் போட்டு அது மாதிரி எல்லாம் எதுவும் இல்லை தானே?"

அவள் நினைக்கும் அளவு, தான் சிறு பெண் இல்லை என நிரூபித்தாள் ஹரிணி

அவள் கேள்வியில் பெரியவள் மனமும் நெகிழ்ந்துவிட்டது.

எல்லாமே இருந்திருக்கும் தான்.. அதில் இருந்து அவளை காப்பதாக ஒருவன் சொல்லி இருக்கானே..

"அப்படி எல்லாம் இல்லை ஹரி.. எல்லாம் அக்ஷய் பார்த்துக்கறேன்னு சொல்லி இருக்கார்.." என்று காயத்ரி கூற,

"அக்ஷய் என்றால் அக்ஷய் குமாரா கா? அவருடனா நடிக்க போகிறாய்? வாவ் அவர் தான் இப்போ எல்லாருக்கும் கனவு நாயகன்.. என் ரூம் மேட்ஸ் கூட அவர் படம் ரூம் முழுக்க ஒட்டி வச்சிருக்காங்க.. எனக்கு கூட ரொம்ப பிடிக்கும் கா.. சூப்பரா நடிப்பார் கா.." மீண்டும் ஹரிணி ஆர்ப்பரிக்க தொடங்கி விட,

"போதும் டி எனக்கும் தெரியும்" என்றாள் காயத்ரி சிறு புன்னகையுடன்..

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் போனை வைத்தனர்..

தான் நடிக்க போகும் விஷயத்தை தங்கை நல்ல முறையிலேயே எடுத்துக்கொண்டது காயத்ரிக்கு பெரும் நிம்மதியாக இருந்தது..

ஹரிணியை பொறுத்தவரை தனக்கு தெரிந்த சங்கடங்களை மட்டும் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டாள்..

மற்றபடி அவளுக்கு மகிழ்ச்சி தான்..

ஹரிணி வீட்டிலேயே அதிகம் வளர்ந்த பெண்.. அன்னை தந்தை இல்லாதபோதும் காயத்ரியே ஒரு தாய் ஸ்தானத்தில் நின்று அவளுக்கு எந்த குறையும் வராமல் தான் பார்த்துக்கொண்டாள்..

இதோ கடந்த ஒருவருடமாக தான் செந்திலுக்கு பயந்து அவளை கோவையில் உள்ள பெரிய ஸ்கூலில் படிக்க சேர்த்துவிட்டாள் காயத்ரி..

அடுத்து அவள் மனம் அக்ஷயிடம் வந்து நின்றது..

அவனை இன்று தான் முதல் முறை நேரில் பார்க்கிறாள்.. இதற்கு முன் சினிமாக்களில் பார்த்திருக்கிறாள்.. அவனையும் மிருதுளாவையும் இணைத்து வந்த கிசு கிசு கூட சிலது படித்திருக்கிறாள்..

அவன் பார்ட்டியில் இருந்த படங்கள், நடிகைகளுடன் இருந்த படங்கள் என நிறைய பார்த்திருக்கிறாள்..

சாதாரணமாக பார்த்த போது ஒன்றும் தோன்றவில்லை தான்.

ஆனால் அவனுடன் நடிக்க வேண்டும் என்னும் போது எல்லாமே அவள் கண்முன் பூதாகரமாக நின்றது..

அவனை நினைத்து தான் அவளது முக்கியமான பயமே..

ஆனால் அவனே அவளுக்கு உதவ முன் வந்தது அவளுக்கு பெரும் ஆச்சர்யம் தான்..

மற்ற நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பவன் இஷ்டம் இல்லை என்றால் பக்கத்தில் கூட வர மாட்டேன் என்று கூறியது அவளுக்கு விசித்திரமாக இருந்தாலும் பெரும் நிம்மதியும் கொடுத்தது என்று தான் கூறவேண்டும்..

இப்போது கூட உண்மையாகவே முழுதாக அவன் உதவுவானா என அவளுக்கு சந்தேகமாக தான் இருந்தது..

ஆனால் அவன் குரலில் ஏதேனும் காந்த சக்தி இருந்ததோ என்னவோ, அது அவனை நம்ப சொல்லியது..

தன் கண் முன்னால் ஒரு பெண்ணை அணைத்தவன் அவளுக்கு துளி சங்கடம் கூட இல்லாமல் காட்சியை முடித்துக்கொடுத்தானே!

முரண்பாட்டின் மொத்த உருவமாய் இருப்பான் போல் என காயத்ரி நினைத்துக்கொண்டிருந்த போதே அவள் போன் அடித்தது..

புதிய எண் என்றதும் யோசனையுடன் அவள் போனை காதில் வைக்க, "பத்திரமா வீட்டுக்கு போய்ட்டயா மாமி?" என அந்த பக்கம் இருந்து வந்த குரலில் திகைத்து விழித்தாள் காயத்ரி

இத்தனை நேரம் அவனை பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ திடீரென அவன் பேசவும் அவளுக்கு முதலில் திகைப்பு தான் வந்தது.

அதற்குள், "மாமி இருக்கியா? ஒன்னும் பிரச்சனை இல்லையே!" என அந்த பக்கம் அவன் பதட்டமாக கேட்க தொடங்கி விட,

"ஆ.. ஒன்னும் இல்லை.." என்றாள் காயத்ரி ஒருவாறு தெளிந்து

"தேங்க் காட்.. நிம்மதியா தூங்கு மாமி.. என்னை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு முழித்துக்கொண்டிருக்காதே.. மற்றவர்களுக்கு எப்படியோ, உனக்கு நான் மிகவும் நல்லவன் தான்.. குட் நைட்.." என்றுவிட்டு அவன் வைத்துவிட,

இவனுக்கு எப்படி தான் இவனை பற்றி நினைப்பது தெரியும் என்ற யோசனையுடன் போனை வைத்தாள் காயத்ரி

நல்லவனாக இருந்தால் நிச்சியம் தன் காலம் உள்ளம்வரை அவனுக்கு அவள் நன்றியுடன் இருப்பாள்..

வெறும் நன்றி உணர்ச்சியுடன் அவள் உறங்கிவிட, அங்கு போனை வைத்த அக்ஷய் அவளையே தான் நினைத்துக்கொண்டிருந்தான்..

அவள் எந்த பதிலும் கூறாமல் வைத்துவிட்டதிலேயே தன்னை பற்றி தான் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என அவனுக்கு புரிந்துவிட, அவன் முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை தோன்றி மறைந்தது..

'என்னை என்ன செய்கிறாய் மாமி.. இத்தனை வருடங்கள் எதற்கும் இலகாமல் இருந்த இரும்பை ஒற்றை பார்வையில் கட்டிப்போட்டு விட்டாயே டி.. சினிமாவில் கூட நான் நம்பாத விஷயங்களை என் வாழ்விலேயே நடத்தி காட்டுகிறாய் மாமி.. இது எங்கு போய் முடியுமோ தெரியலையே!' என நினைத்துக்கொண்டவன் முகத்தில் இருந்த சிரிப்பு மறையவே இல்லை

******************

இரவு பதினோரு மணி..

தேவநாதன் வீட்டில் மீட்டிங் அறையில் தேவநாதன், சிம்மன், ரங்கன், பிரகதி, மணிகண்டன் அனைவரும் குழுமி இருந்தனர்.

"பார்த்து ஜாக்கறதை சிம்மா" என தேவநாதன் கூற,

"நான் பாத்துக்கறேன் பா" என்ற சிம்மன் மற்றவர்களை பார்த்தான்

"எல்லாம் ஓகே தானே?"

முக்கியமாக அவன் பிரகதியையும் மணிகண்டனையும் பார்த்து கேட்க "ஓகே தான் சிம்மா.. கச்சிதமா முடிச்சிடலாம்.." என்றாள் பிரகதி

"வரோம் பா" என தேவநாதனிடம் சிம்மன் கூற, அனைவரும் கிளம்பினர்

ஏற்கனவே திட்டமிட்டது போல் அந்த நகையை திருட தான் இன்று செல்கின்றனர்..

மணிகண்டன் முன்பு சொன்னது போலவே, ஏற்கனவே சென்று அந்த கடையின் இண்டு இடுக்கு வரை ஆராய்ந்து வந்துவிட்டான்..

அவனுடனே சென்ற பிரகதியும் அந்த நகை வைத்திருக்கும் இடத்தில் இருக்கும் அலாரமை நிறுத்தும் வழியை கண்டு பிடித்திருந்தாள்..

அந்த அலாரம் ஸிஸ்டத்தில் செய்திருந்ததால் வெளியில் இருந்தே ஹேக் செய்து அவளால் அனைத்து விட முடியும்..

பன்னிரண்டு மணி அளவில் ஒரு நம்பர் ப்ளேட் இல்லாத ஆட்டோவில் நால்வரும் அந்த இடத்தை அடைந்தனர்.

கடைக்கு பின் பக்கம் இரண்டு தெரு தள்ளி ஆட்டோவை மறைவாக நிறுத்திய சிம்மன், "பிரகதி எல்லா அலாரமும் ஆப் பண்ணு.." என்று கூற, அவளும் கையில் இருந்த ஸிஸ்டெமை திறந்தாள்

சிறிது நேரம் அதில் ஏதோ செய்து கொண்டிருந்தவள் முகம் யோசனையுடன் சுருங்கியது

அதை கவனித்து "என்ன" என்று சிம்மன் கேட்க,

"ஏற்கனவே அலாரம் எல்லாம் அணைக்கப்பட்டிருக்கு சிம்மா.." என்றாள் பிரகதி யோசனையுடன்

அவள் பதிலில் ஒரு நொடி யோசித்த சிம்மனின் உதடுகள் அடுத்த நொடி அர்த்தம் பொதிந்த புன்னகையுடன் வளைந்தது.

அவன் முகமூடியை மீறி அது வெளியே தெரியாமல் போக, "என்னவா இருக்கும் சிம்மா?" என்றாள் பிரகதி குழப்பத்துடன்

"உன் லவர் தான்" என்று கூறி சிம்மன் கண்ணடிக்க, அவன் பதிலில் அதிர்ந்து விழித்தவள் வாய் மெதுவாக "ரஞ்சித்" என முணுமுணுத்து கொண்டது..

"ம்ம் அவன் தான்.. சரியான அவசர குடுக்கை.." என சிம்மன் சலித்துக்கொள்ள, அவனை திரும்பி முறைத்தாள் பிரகதி.

"உன் ஆளை சொன்னதும் கோபம் வருதாக்கும்?" நக்கலுடன் சிம்மன் கேட்க, அவள் முறைப்பு மேலும் அதிகரித்தது

அதில் லேசாக தலையாட்டி சிரித்துவிட்டு சிம்மன் திரும்பி விட, "என்ன செய்யலாம் சிம்மா?" என்றான் ரங்கன்

அவன் கேள்வியில் சிம்மன் சில நிமிடங்கள் அமைதியாக யோசித்தான்..

பின், "நம் வேலையை சுலபமாகிட்டான் ரங்கா.. அவன் நகையை எடுத்துவரட்டும் அவனிடம் இருந்து நாம் சுட்டுவிடுவோம்.." என அசால்ட்டாக கூற, அவன் திட்டம் உணர்ந்து சிரித்து கொண்டான் ரங்கன்..

மற்ற இருவரும் அவனை குழப்பத்துடன் பார்க்க, "ஒன்னும் குழம்ப வேண்டாம்.. ரங்கா, மணி ரெண்டு பேரும் போய் அவங்க எத்தனை பேர் வந்திருக்காங்க என்று பார்த்துட்டு வாங்க.. மீதியை அப்புறம் சொல்லுறேன்.." என்று சிம்மன் கூற, இருவரும் இறங்கி சென்றுவிட்டனர்..

அவர்கள் சென்றதும் பிரகதி புறம் திரும்பிய சிம்மன், "உன் ஆள் திருட கூட பின்புற வழியா வரமாட்டானா?" என்று கேட்க,

"அந்த கடைக்குள் வேறு சில பக்கங்களிலும் வழி இருக்கு.. அதில் எதிலாவது சென்றிருப்பான்.." என்றாள் பிரகதி இன்னும் முறைப்பு குறையாமல்,

"அவன் மேல் அத்தனை அக்கறை இருக்கிறதென்றால் நீ வரும் போதே அவனையும் அழைத்து வந்திருக்கலாமே?" அழுத்தமாக சிம்மன் கேட்க,

"எங்கே அவன் வந்தால் தானே.. அந்த கரிகாலன் தான் அவனை வளர்த்தானாம்.. அதனால் அவனுக்கு நேர்மையாக தான் இருப்பானாம்.. அவன் செய்வது எல்லாமே தவறு என்று சொன்னால் புரிந்துகொள்ளவே மாட்டேங்கறான்.." இத்தனை நேரம் இருந்த விளையாட்டு தனம் மறைந்து சீரியஸாக பிரகதி புலம்ப,

"சீக்கிரம் புரிய வைப்போம்" என்றான் சிம்மன் வெகு அழுத்தமாக

அதில் திகைத்து பிரகதி நிமிரும் போதே ரங்கனும் மணிகண்டனும் வந்துவிட்டனர்..

"மொத்தம் ஐந்து பேர் சிம்மா" என்று ரங்கன் கூற,

"ம்ம் அப்போ சுலபம் தான்.. அங்கு ரஞ்சித்தை சமாளிப்பது மட்டும் தான் கொஞ்சம் கஷ்டம்.. அவனிடம் தான் நகையும் இருக்கும்.. அதை அவனிடம் இருந்து எடுப்பது என் பொறுப்பு.. மற்ற நால்வரையும் நீங்க பார்த்துப்பீங்க தானே.." என்று சிம்மன் கேட்க,

"பார்த்துக்கறோம் சிம்மா" என்றனர் மூவரும்..

"டன்.. ரங்கா நீ அவர்கள் வண்டி வரும் வழியில் ஆணியை போடு, பஞ்சர் ஆகி அவர்கள் இறங்கும் இடைவெளியை நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.. பிரகதி உன் முகத்தை அவங்க பார்த்துடாம பார்த்துக்கோ.. பார்த்தால் கோபம் அதிகரிக்கும்.." தெளிவாக அனைத்தையும் கூறி முடித்தவன் அதற்கு மேல் அமரவில்லை, வேகமாக இறங்கிவிட்டான்.

ரஞ்சித் கார் வரும் தெருவில் நால்வரும் ஆளுக்கொரு பக்கம் பதுங்கி கொண்டனர்..

ரஞ்சித் பயங்கர திறமைசாலி.. கரிகாலன் கேங்கே அவனை வைத்து தான் இயங்கி கொண்டிருந்தது..

உடல் பலம், மூளை பலம் இரண்டும் ஒருங்கே பெற்றவன் ரஞ்சித்..

அவனுடன் கரிகாலன் கேங்கில் இருந்த போது தான் அவனுக்கும் பிரகதிக்கும் இடையில் அழகிய காதல் மலர்ந்தது..

ஆனால் ஒருகட்டத்தில் அவர்கள் செய்யும் தவறுகள் பிடிக்காமல் விலகிய பிரகதி அவனிடம் பேசி பார்த்தாள்.

அவன் ஒரேடியாக மறுத்துவிட்டதால் பிரகதி மட்டும் தனியாக வெளியேறி இருந்தாள்..

சரியாக இருபது நிமிடத்தில் ரஞ்சித்தின் கார் அந்த பாதையில் வந்தது..

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிக அழகாக நகையை தூக்கி இருந்தான் ரஞ்சித்..

திடீரென நடு ரோட்டில் கார் பஞ்சர் ஆகி நிற்கவும் ரஞ்சித்துடன் வந்தவர்கள் காரில் இருந்து குழப்பத்துடன் இறங்க, அடுத்த நொடி அவர்கள் மீது சிம்மன் மற்றும் அனைவரும் பாய்ந்திருந்தனர்..

திடீரென யாரோ வந்து அடிக்கவும் ஒன்றும் புரியாமல் முதலில் தடுமாறியவர்கள், பின் நிலைமையின் தீவிரம் உணர்ந்து சண்டையிட்டனர்..

ரஞ்சித்தை மட்டும் தனியாக இழுத்து வந்து விட்டான் சிம்மன்.

அவன் தன்னிடம் இருந்து நகையை எடுக்க முயல்கிறான் என்றதுமே ரஞ்சித் முழு வெறியுடன் அவனை தாக்கினான்..

ஆனால் சிங்கத்தின் முன் யாரால் நிற்க முடியும்!

ரஞ்சித்தை அதிகம் திருப்பி அடிக்காமலே அவன் தாக்குதலை சுலபமாக சமாளித்தான் சிம்மன்..

ஒரு கட்டத்தில் ரஞ்சித்தை கீழே தள்ளி அவன் மேல் ஏறி அமர்ந்துவிட்டவன், ரஞ்சித்தின் இரண்டு கைகளையும் அவன் தலையின் மேல் அழுத்தமாக அமுக்கி பிடித்து, அவன் பாக்கெட்டுல இருந்து நகையை எடுத்துவிட, அதை கவனித்த ரஞ்சித்தின் கோபம் தாறுமாறாக எகிறியது.

"டேய் பொட்ட பயலே, கடையில் புகுந்து திருட துப்பில்லாமல் என்னிடம் இருந்து திருடுகிறாயே.. வெட்கமா இல்லையா..." என ரஞ்சித் கத்த

அதில் அவன் மார்பில் மேலும் அழுத்தமாக தன் காலை வைத்து மிதித்த சிம்மன், "நான் எதுக்கு ரஞ்சா வெட்கப்படணும்? என் வேலையை நீ சுலபமாக்கி தந்தாய் அதை பயன்படுத்திக்கொண்டேன்.. அவ்வளவுதான்.." என்று அசால்டாக கூற, அவனை மேலும் முறைத்தான் ரஞ்சித்..

"இதை எடுத்துக்கொண்டு நீ என்ன செய்வாய் டா.. மேலும் பணமாக்கி மேலும் தவறு செய்வாய்.. ஆனால் நான் நல்லதற்கு மட்டும் தான் பயன்படுத்துவேன்.. உன் மூளையை கொஞ்சம் நன்மைக்கும் பயன்படுத்தேன் டா.." அழுத்தமாக சிம்மன் கூற, அதை கொஞ்சமும் காதில் வாங்காத ரஞ்சித்

"என் கையை விடு டா" என்று திமிறினான்

"உனக்கு வார்த்தையால் சொன்னால் புரியாது ரஞ்சா" என நக்கலாக கூறிய சிம்மன் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்..

அதில் அவன் முகம் திரும்பிவிட, அந்த நொடியில் எழுந்தவன் "கைஸ்" என சத்தமாக குரல் கொடுக்க அவன் குரலில் அனைவரும் தன்னுடன் போராடிக்கொண்டிருந்தவர்களை வேகமாக தாக்கி விட்டு சிம்மனுடன் இணைந்து கொண்டனர்.

அனைவரும் தாங்கள் வாங்கிய கடைசி அடியில் இருந்து தெளிவதற்கு முன் சிம்மன் கேங் அந்த இடத்தை விட்டு மறைந்திருந்தனர்.

சிம்மன் குத்தியதில் கலங்கிய மூளையை வேகமாக நேர் செய்துகொண்டே ரஞ்சித் எழுந்து அமர்ந்தபோது, அங்கு யாருமே இல்லை.

பெரும் கோபத்துடன் ரோட்டில் முட்டிபோட்டு அமர்ந்தவன், "சிம்மா..." என உச்சஸ்தாயில் கத்திகொண்டே ரோட்டை ஓங்கி குத்தினான்..

தீண்டும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5:

கரிகாலன் வீட்டிற்குள் நுழைந்த போதே ரஞ்சித் அறையில் இருந்து ஏதோ உடைந்து நொறுங்கும் சத்தம் கேட்டது.

அவரும் ஏற்கனவே பயங்கர கோபத்துடன் தான் வந்திருந்தார்..

ரஞ்சித் அறைக்குள் அவர் நுழைந்த போது அவன் கையால் மற்றொரு பூஜாடி உடைந்து நொறுங்கி இருந்தது..

அதை பார்த்துவிட்டு கோபத்துடன் அவனை பார்த்தவர், "என்ன பண்ணுற ரஞ்சித் நீ! நிறுத்து எல்லாத்தையும்.." என்று சத்தமாக கத்த, அவர் குரலில் நிமிர்ந்தவன் அவர் கண்கள் சிவக்க கோபமாக நின்றிருப்பதை பார்த்ததும் முயன்று தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டான்..

அவன் அமைதியாக நின்றதும் நிதானமாக அவன் அருகில் வந்தவர், "வேலையில் கவனமா இருந்திருக்க வேண்டும் ரஞ்சித்.. இப்போது கோபப்பட்டு என்ன பண்ண போற? போன நகை திரும்ப வந்துடுமா?" அழுத்தமாக கரிகாலன் கேட்க,

"தப்பு தான் சார்" என இறுக்கமான முகத்துடன் ஒத்துக்கொண்டான் ரஞ்சித்

"யாருனு தெரிந்ததா?" அங்கிருந்த சேரில் அமர்ந்துகொண்டு கரிகாலன் கேட்க,

"சிம்மன்" என்றான் ரஞ்சித்

"எப்படி அவன் தான் என்று சொல்கிறாய்? அவன் தான் முகத்தை காட்டமாட்டனே?" யோசனையுடன் கரிகாலன் கேட்க,

"என்னிடம் இருந்து பிடுங்கும் ஒரே ஆள் அவன் தானே!" என்றான் ரஞ்சித்தும் அடக்கப்பட்ட கோபத்துடன்

ஆம், இது முதல் முறை இல்லை.. இதற்கு முன்பும் சில முறை ரஞ்சித் கொள்ளையடித்ததை சிம்மன் அவனிடம் இருந்து பறித்து சென்றிருக்கிறான்..

முதல் முறை அவனே தான் சிம்மன் என்று கூறிவிட்டான்.. அடுத்த முறையில் இருந்து ரஞ்சித்திற்கே தெரிய ஆரம்பித்துவிட்டது..

"அவன் ஏன் உன்னிடம் மட்டும் இப்படி செய்கிறான்? மற்ற யாரிடமும் அவன் இது போல் செய்வது போல் தெரியலையே?" தன் வெகு நாள் குழப்பத்தை கரிகாலன் கேட்க, ரஞ்சித்திற்கும் பதில் தெரியாமல் உடல் இறுகி போயிற்று..

"அவன் மட்டும் ஒரு முறை கையில் சிக்கட்டும்.." கோபத்துடன் ரஞ்சித் முணுமுணுக்க அவனை எந்த பதிலும் கூறாமல் அமைதியாக பார்த்தான் கரிகாலன்..

ரஞ்சித்தின் இந்த கோபம் காரிகலனுக்கு நல்லது தான்..

எப்படியோ யார் மூலமாவது அந்த சிம்மன் ஒழிந்தால் சரி என்றிருந்தது அவருக்கு..

"அடுத்த முறையாவது ஜாக்கிரதையா இரு ரஞ்சித்" என்று அழுத்தமாக கூறிவிட்டு கரிகாலன் எழுந்து சென்றுவிட, அவர் சென்றதும் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் ரஞ்சித்.

ரஞ்சித்தை விவரம் தெரிந்த வயதில் இருந்து கரிகாலன் தான் வளர்க்கிறார்.

அவர் இல்லீகல் வேலைகள் தான் செய்கிறார் என்று தெரிந்தும் அவருடன் சேர்ந்து அனைத்தும் செய்தான் ரஞ்சித்.

அவர் அவனை வளர்த்ததே அதற்காக தானே..

அவனுக்கும் அந்த நன்றி நிறைய இருந்ததால் அவர் சொல்வதை மட்டும் தான் அப்போதைக்கு செய்து கொண்டிருந்தான்.

படித்த படிப்பு மூளை அனைத்தையும் அவர் சொல்வதை செய்யவே பயன்படுத்தியவன், அதற்கு மேல் எதுவுமே யோசித்ததில்லை..

************

அக்ஷய் காயத்ரி சேர்ந்து நடிக்கும் காட்சி முதல் நாள் எடுத்தபின், அடுத்து கொஞ்சம் காயத்ரி தனியாக நடிக்க வேண்டிய காட்சிகள் எடுத்தார் இயக்குனர்..

பொதுவாக தனக்கு காட்சி இல்லை என்றால் அக்ஷய் ஷூட்டிங் வர மாட்டான்..

ஆனால் இப்போது காயத்ரியை விட முடியாது என்பதால் ஷூட்டிங் பார்க்கிறேன் என பெயர் பண்ணி கொண்டு தினமும் வந்து கொண்டிருந்தான்.

அன்று அவன் வர சற்று தாமதமாகிவிட, காயத்ரி சிறு டென்ஷனுடன் தான் நடிக்க தயாராகி கொண்டிருந்தாள்..

தெரிந்தோ தெரியாமலோ அக்ஷய் கண் முன் இருப்பது அவளுக்குள் ஒரு வித தைரியத்தை விதைத்து பழகி இருந்தது..

இன்று அவனை காணவில்லை என்றதுமே அந்த தைரியம் ஆட்டம் கண்டு விட்டது..

லேசாக கைகள் நடுங்க மேக் அப் எல்லாம் முடிந்து டென்ஷனுடன் அவள் நிற்க, "ஷாட் ரெடி" என்று குரல் கொடுத்தார் இயக்குனர்

"காயத்ரி உங்க மார்கில் நில்லுங்க மா" என்று அவர் கூற, அவளும் அமைதியாக சென்று நின்றாள்..

ஆனால் நடிப்பு தான் வந்தபாடில்லை..

தொடர்ந்து மூன்று டேக் சொதப்ப, அலைபாய்ந்து கொண்டே இருந்த அவள் கண்களில் இருந்து இயக்குனருக்கு அவள் அக்ஷய்யை தான் தேடுகிறாள் என்று புரிந்துவிட்டது..

அவன் வந்தால் தான் அவள் ஒழுங்காக நடிப்பாள் என்று புரிந்துவிட, "கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு மா.. உன் காட்சி கொஞ்ச நேரம் கழித்து எடுத்துக்கொள்வோம்" என்று கூறிவிட்டார் இயக்குனர்..

இப்போதெல்லாம் அவரும் அவளிடம் கோபப்படுவதில்லை..

அக்ஷய் அவளுக்கு துணையாக நிற்கிறான் என்று புரிந்ததால் அமைதியாகி விட்டிருந்தார்..

'இவர் எங்க போனார்.. இன்று வரமாட்டாரோ' என ஏதேதோ டென்ஷனுடன் நகத்தை கடித்து கொண்டு காயத்ரி நிற்க, "ஹாய்" என அவள் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது..

அதில் அவள் திரும்பி பார்க்க, அங்கு அவளையே மேலிருந்து கீழ் வரை அளந்துகொண்டு ஒருவன் நின்றிருந்தான்..

"ஐ எம் ஷ்யாம்.. இந்த படத்தின் தயாரிப்பாளர் பையன்..." என அவன் கையை நீட்ட, அவன் பார்வையே அவளுக்குள் கூசி போயிற்று..

பச்சையாக அவளை பார்த்துக்கொண்டிருந்தவனை நிமிர்ந்து கூட பார்க்க பிடிக்காமல் போக "வணக்கம்" என கைகூப்பி வைத்தாள் காயத்ரி...

இதுவும் அக்ஷய் தான் சொல்லி கொடுத்திருந்தான்..

முதல் பார்வையிலேயே தள்ளி வைத்துவிட்டால் பலர் நெருங்க யோசிப்பார்கள் என்று கூறி இருந்தான்..

ஆனால் ஷ்யாம் அப்படி போகும் ஆள் போல் தெரியவில்லை..

"ஹேய் பியூட்டி, இது என்ன அசிங்கமா கைகூப்பிக்கிட்டு.. கிவ் மீ எ ஹக் யா.. யு ஆர் சோ ஹாட்.." என்று கூறிக்கொண்டே அவன் அவளை அணைக்க வர,

"ஐயோ" என தன்னை அறியாமல் முனகி கொண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள் காயத்ரி..

இரண்டடி எடுத்துவைத்தவள் யார் மீதோ மோத, அதில் மேலும் அதிர்ந்து திரும்பியவள் பின்னால் நின்றிருந்தவனை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சுடன் அவன் அருகில் சென்று நின்று கொண்டாள்..

"என்ன ஷ்யாம்? எப்போ அமெரிக்காவில் இருந்து வந்த?" என சிறு நக்கலுடன் கேட்ட அக்ஷய் ஆறுதலாக காயத்ரி கையை பிடிக்க, ஒரு நொடி அவன் கொடுத்த ஆறுதலில் நிம்மதி அடைந்தவள், அடுத்த நொடி மெதுவாக தன் கையை உருவ, அவனோ அவளை பார்க்காமலே மேலும் அழுத்தமாக அவள் கையை பிடித்தான்..

அதில் திகைத்து காயத்ரி நிமிர, அவனோ அவள் முகத்தை பார்க்கவே இல்லை..

அக்ஷய்யை பார்த்து முதலில் அதிர்ந்து நின்று விட்ட ஷ்யாம் ஒருவாறு சுதாரித்து "இன்று தான்" என்றான் இருவரையும் ஆச்சர்யமாக பார்த்து கொண்டே,

"ம்ம் கையை நீட்ட யோசிக்கும் பெண்ணை அணைக்க வருகிறாயே அறிவில்லையா?"

நேரடியாக அக்ஷய் கேட்டுவிட, காயத்ரி இப்போது கையை பற்றிய எண்ணத்தை விட்டுவிட்டு மேலும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்..

"எ. கே மரியாதையா பேசு.. சும்மா பிரென்ட்லி ஹக் தான்.. அதுக்கு ஏன் இத்தனை பில்ட் அப் பண்ணுற.." கோபத்துடன் ஷ்யாம் கூற,

"ரோட்டில் போற எல்லாருக்கும் பிரெண்ட்லி ஹக் கொடுப்பாயா நீ..?" என்றான் அக்ஷய் கொஞ்சமும் நக்கல் குறையாமல்

அதற்கு பதில் சொல்ல தெரியாமல் ஷ்யாம் அவனை முறைக்க, "வாங்கினது மறந்துட்ட போலயே! திரும்ப கொடுக்கவா..?" தன் தாடையை நீவிக்கொண்டே யோசனையுடன் அக்ஷய் அவனை பார்க்க, அவன் கூற்றில் கோபம் வந்தாலும் அக்ஷய் யோசிக்காமல் கைநீட்டி விட கூடிய ஆள் என்பதால் அவனை முறைத்து கொண்டே சென்று விட்டான் ஷ்யாம்...

மிருதுளா நடிக்க வந்த புதிதில் அவளிடம் இதே போல் ஒரு முறை ஷ்யாம் வம்பு செய்து வைக்க, பொது இடம் என்று கூட பார்க்காமல் அக்ஷய் அவனை அறைந்து தள்ளி விட்டான்..

அதில் இருந்து தான் அக்ஷய்க்கும் மிருதுளாவிற்கும் காதல் என்றே செய்தி பரவியது..

சில காரணங்களால் அவனும் அதை மறுக்கவில்லை..

காயத்ரி கையை பிடித்திருந்தவன் அவளை கையோடு இழுத்துக்கொண்டு கேரவெனுக்குள் வந்தான்..

அவன் இழுப்பிற்கு வேறு வழி இல்லாமல் காயத்ரியும் செல்ல, கேரவென் கதவை அடைத்துவிட்டு அவள் கையை விட்டவன், "உனக்கு என்னையும் அவனையும் பார்த்தால் ஒரே போல் தெரிகிறதா?" என்று சீறினான்..

ஏற்கனவே அவன் அழுந்த பற்றி இருந்த இடத்தை தேய்த்துவிட்டு கொண்டிருந்த காயத்ரி அவன் கோபமாக கேட்டதும் பயத்துடன் அவனை பார்த்தாள்..

அவள் பார்வையில் என்ன கண்டானோ, "பதில் சொல்லு மாமி" என்றான் சற்று தணிந்த குரலில்,

"இல்லையே.. நான் அப்படி எதுவும் சொல்லலையே..!" என்றாள் காயத்ரி மெதுவாக,

"அப்புறம் கையை எடுத்தாய்? உனக்கு ஆதரவா தானே பிடித்தேன்.. நீயும் நானும் நெருக்கமா இருக்கோம் என்று தெரிந்தால் தான் உன்னிடம் வாலாட்ட மாட்டான்.."

அவன் கூற்றில் காயத்ரி ஒரு மாதிரி முகம் சுருக்க, அதை பார்த்ததும் தான், தான் பேசியதை அவள் தவறாக புரிந்துகொள்கிறாள் என்று அக்ஷய்க்கு உரைத்தது

"காட்.. நெருக்கம் என்றால் நீ நினைப்பது போல் இல்லை.. ஜஸ்ட் கிளோஸ் ப்ரெண்டஸ் அந்த மாதிரி.." தலை கோதி கொண்டே ஒரு பெருமூச்சுடன் அக்ஷய் கூற,

"நேக்கு இதெல்லாம் சங்கடமா இருக்கு.. சுத்தி இத்தனை பேர் இருக்கும் போது கையை பிடிக்கிறது கட்டி பிடிக்கிறது ப்ச்.. என்ன கண்றாவியோ.. நேக்கு இதெல்லாம் பொருந்தவே மாட்டேங்கறது.. நான் என்ன பண்ண..!" முகத்தை சுருக்கி கொண்டு காயத்ரி புலம்ப, அவள் பேசிய அழகில் அவன் மனம் தன்னை அறியாமல் தாளம் தப்பி துடித்தது..

'அடி என் செல்ல மாமி! இப்படி பேசினா ஊரே உன் பின்னாடி தான் டி சுத்தும்..' என மனதிற்குள் சலித்துக்கொண்டவன் வெளியில் எதுவும் காண்பித்து கொள்ளவில்லை..

"மாமி இங்க கவனி" என சற்று அழுத்தமாக அக்ஷய் அழைக்க, அதுவரை தன் நினைவில் மூழ்கி இருந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்

"நீ தெரிஞ்சோ தெரியாமலோ சினிமாக்குள் வந்து விட்டாய்.. இங்கு ஷியாம் போல் சிலர் இருக்க தான் செய்வாங்க.. அவங்களிடம் இருந்து தப்பிக்கணும்னா கொஞ்சம் என்னுடன் நீ ஒத்துழைத்து தான் ஆகணும் மாமி.. உன்னை அத்து மீறி நான் ஒரு பார்வையாவது பார்த்திருக்கேனா?"

அவள் கண்களை பார்த்து அக்ஷய் கேட்க, எப்போதும் தன் கண்ணை மட்டுமே பார்த்து பேசும் அவன் கண்ணியம் அவளுக்கு புரிந்தது..

அவள் மறுப்பாக தலையசைக்க, "ஒரு நல்ல பிரென்ட்டா என்னை நினைச்சுக்கோ மாமி.. உன் பிரென்ட் கூட நல்லா பேசமாட்டியா.. லேசா கையை பிடிச்சா கூட அது தவறான நோக்கமா தான் இருக்கும் என்று எந்த கட்டாயமும் இல்லை மாமி.. உனக்காக தானே இவ்வளவு பேசறேன்.. என்னை கொஞ்சம் நம்பக்கூடாதா..?" சீரியஸ்ஸாக பேச ஆரம்பித்தவன், பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டு முடிக்க, அவளும் சற்று யோசித்தாள்..

அவளால் அவனை நெருங்க முடியாமல் இருப்பதற்கு காரணம் அவனது குணம் தான்..

அவளிடம் தான் அவன் கண்ணியம் எல்லாம்.. மற்ற யாராவது மேலே வந்து விழுந்தால் பல்லை காட்டிக்கொண்டு தானும் அணைத்துவிட்டு தானே விடுவான்..

அவன் என்ன தான் இது சகஜம் என்று கூறிக்கொண்டாலும் ஏனோ அவள் மனம் ஏற்றுக்கொண்டு தொலையாது..

அதையே யோசித்துக்கொண்டு அக்ஷய்யை பார்த்தவளுக்கு அவன் கூற்றுக்கு மறுப்பு சொல்லவும் தைரியம் வரவில்லை.

அவன் அவளுக்காக தானே சொல்கிறான்..

அரைகுறையாக அவள் தலையாட்டி வைக்க, அவள் மனதை தெளிவாக படித்தவன் லேசாக சிரித்துக்கொண்டான்..

"நாம ப்ரெண்ட்ஸ் என்றாள் முதல் முயற்சியா என்னை பெயர் சொல்லி கூப்பிடு மாமி" என அடக்கப்பட்ட சிரிப்புடன் அக்ஷய் கூற,

"நீங்க என்னை விட பெரியவரா இருப்பீங்க.. அது எப்படி பெயர் சொல்லி கூப்பிடறது?" என காயத்ரி யோசிக்க,

"ஏன் மா நான் என்ன கிழவனா? இத்தனை யோசிக்கிறாய்!" என்றான் அக்ஷய் ஒன்றும் வரையறுக்க முடியாத குரலில்

"இல்லை நீங்க நிச்சியம் என்னை விட ரொம்ப பெரியவரா தான் இருப்பேள்.." அவன் ஆறடி உயரத்தை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே காயத்ரி கூற,

"ஆமா மாமி பெரியவன் தான்.. ஆனால் கிழவன் இல்லை.. ஒழுங்கா ஏதாவது பெயர் சொல்லி கூப்பிடு.. இப்படி மொட்டைக்கட்டையா வாங்க போங்கன்னா கேட்கவே சகிக்கலை.." மனதில் தோன்றிய எரிச்சலை கொஞ்சமும் மறைக்காமல் அக்ஷய் கூற, எதற்கெடுத்தாலும் தான் மறுப்பது அவன் கோபத்தை தூண்டி விடுகிறது என்று அவளுக்கு புரிந்தது

"சரி அ.. அக்ஷய்" என மெதுவாக காயத்ரி கூற, அவள் அழைப்பு அவனுக்குள் ஏதோ செய்தது

அவனை 'அக்ஷய்' என்று அழைப்பவர்கள் வெகு அரிது..

வெளி உலகத்தில் அனைவருக்குமே அவன் 'எ.கே' தான்..

வாழ்வில் அவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே அழைக்கும் விதத்தை அவள் தேர்ந்தெடுத்தது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது..

"இன்னும் ஒரே ஒரு முறை கூப்பிடேன் மாமி" ஏக்கத்துடன் ஒலித்த அவன் குரலை ஏனோ மறுக்க முடியாமல் போய் விட,

"அக்ஷய்" என்றாள் காயத்ரி தெளிவாக

அவள் அழைப்பில் அவன் முகம் தானாக மலர, "தேங்க்ஸ் மாமி.. போகலாம் வா.." என அவளையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான் அக்ஷய்..

அடுத்து எடுக்கப்பட்ட காட்சிகள் அக்ஷய் கொடுத்த ஊக்கத்தில் அழகாய் நடித்து முடித்துவிட்டாள் காயத்ரி..

********************

தன் போனை தேவநாதனிடம் காட்டிய சிம்மன், "அந்த நகையின் பணம் ரெடி பா.. நீங்க ஏதாவது பிளான் வச்சிருக்கீங்களா, இல்லை நான் பார்த்துக்கவா..?" என்று கேட்க

"ஒன்றும் பிரெச்சனை இல்லையே சிம்மா?" என்றார் தேவநாதன்

"ஒன்னும் இல்லை பா.. இது ஒன்னும் அந்த ஆள் ஒழுங்காக வாங்கியது இல்லையே.. அவனே ப்ளாக்கில் தான் வாங்கினான்.. திருடனுக்கு தேள் கொட்டின கதை தான்.. மறைமுகமாக தேடிட்டு இருக்கான்.. கொஞ்ச நாளில் அதுவும் விட்டுருவான்.." என்றான் சிம்மன் சிறு புன்னகையுடன்

"அப்போ சரி டா.. என்ன செய்வது என்று நீயே சொல்லு சிம்மா.. ஏதாவது யோசித்து வைத்திருப்பாயே.." என அவன் தோளில் தட்டி தேவநாதன் கேட்க,

"ஆமா பா" என்ற சிம்மன் தன் திட்டத்தை கூறினான்..

"பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு கிராமத்தில் எந்த வசதியும் இல்லை பா.. சரியா ரோடு கூட இல்லை.. தண்ணி குளமும் வற்றி போச்சு.. அந்த கிராமத்துக்கு தேவையான அடிப்படை தேவைகளை இதில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று பார்க்கிறேன் பா.. நம்ம பினாமி ட்ரஸ்ட்டுக்கு முதலில் அனுப்பறேன்.. அதன் மூலமா செஞ்சுடலாம்.." என சிம்மன் முடிக்க,

"செய் டா.. உன் இஷ்டம்.. பார்த்துக்கோ" என முடித்துக்கொண்டார் தேவநாதன்..

சிம்மனும் சொன்னது போலவே பணத்தை அனுப்பி விட்டு வேறு ஆட்களை வைத்து அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து முடித்தான்..

அடுத்த இரண்டு நாள் சென்றிருந்த நிலையில் அன்று சிம்மன், தேவநாதன், பிரகதி, ரங்கன் நால்வரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது தேவநாதனுக்கு போன் வந்தது..

அதை பேசிவிட்டு வைத்தவர் எரிச்சலுடன் வந்து அமர, "என்ன ஆச்சு பா?" என்றான் சிம்மன்..

"செந்திலை வைத்து செய்ய முடியாத ட்ரக் டீலிங்க்கை ரஞ்சித்தை வைத்தே கரிகாலன் முடித்துவிட்டானாம்.. தெரிந்தே தான் விட்டாயா சிம்மா..?" யோசனையுடன் தேவநாதன் கேட்க

"அப்பா" என்று கத்திகொண்டே எழுந்துவிட்டான் சிம்மன்

அவன் முகத்தில் இருந்த கோபத்தை பார்த்ததும் தான் அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டோம் என்றே அவருக்கு உரைக்க,

"சாரி சிம்மா" என்றார் தேவநாதன் மெதுவாக

சில ஆழ்ந்த மூச்சு எடுத்து தன்னை முயன்று சமன் செய்துகொண்டவன், "இன்னும் ஒரு மாதத்தில் ரஞ்சித் என் காஸ்டெடியில் இருப்பான்.. மற்ற வேலைகளால் மட்டும் தான் தாமதம்.. வேறு எந்த காரணமும் இல்லை.." என அழுத்தமாக கூறியவன் அங்கிருந்து விறுவிறுவென சென்று விட்டான்

அவன் சென்றதை பெருமூச்சுடன் பார்த்த ரங்கன், "ஏன் பா.. அவனை பத்தி தெரியாதா?" என கவலையுடன் கேட்,

"ப்ச் ஏதோ நினைவில் சொல்லிட்டேன் டா.. தப்பு தான்.. நான் போய் அவனை சமாதானப்படுத்தறேன்.." என்றவர் சிம்மன் எங்கு இருப்பான் என ஏற்கனவே உணர்ந்தவராக அங்கு சென்றார்

அவர் எதிர்பார்த்தது போலவே அவன் தன் அறை பால்கனியில் தான் நின்றிருந்தான்..

இத்தனை நேரம் பிரகதி இருந்ததால் அணிந்திருந்த மாஸ்க்கை கழட்டி இருந்தான்..

நேராக அவனிடம் வந்த தேவநாதன் கைகளை கட்டிக்கொண்டு இருளை வெறித்துக்கொண்டிருந்தவனை பின்னால் இருந்து மெதுவாக தொட்டார்..

அவர் தொடுகையில் அவரை வெறுமையாக சிம்மன் திரும்பி பார்க்க, "மன்னிச்சுரு டா.. ஏதோ நினைத்து சொல்லிவிட்டேன்.. அப்பா தானே, மன்னிக்க கூடாதா.." சிறு பிள்ளை போல் அவர் கேட்க, மெதுவாக சிரித்தவன்

"பரவாயில்லை பா.. என்னை என்ன சொல்லவும் உங்களுக்கு இல்லாத உரிமையா.. வேறு நினைவு பா.." என்றவன் முகம் மீண்டும் இறுகி விட

"எனக்கு புரியுது சிம்மா.. உனக்கு என்ன தோன்றுகிறதோ செய் டா.. நிஜமாவே தெரியாமல் தான் சொல்லி விட்டேன்.. அதை மட்டும் மன்னித்து விடு.. சரியா.." என மீண்டும் தேவநாதன் கூற,

"அப்பா ப்ளீஸ்.. விடுங்க பா.." என்று லேசாக சிரித்தான் சிம்மன்

அவனை ஒரு முறை அணைத்து விடுவித்தவர், "எனக்கு நீ தான் முதலில் முக்கியம் சிம்மா.. மத்த எல்லாமே அப்புறம் தான்.." என அழுத்தமாக கூறி அவன் முகத்தில் இருந்த புன்னகை விரிவதை உறுதி செய்து கொண்டே அங்கிருந்து சென்றார் தேவநாதன்..

அவர் சென்றதும் சிம்மனின் முகம் மீண்டும் பெரும் யோசனையுடன் சுருங்கி போயிற்று..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6:

காலையில் வேகமாக கிளம்பி கொண்டிருந்த அக்ஷய்யிடம் வந்தான் சரண்..

"கிளம்பியாச்சா எ. கே?" என்று கேட்டுக்கொண்டே அவன் வர,

"ம்ம் ரெடி டா.. இரண்டு நாளில் வந்துவிடுவேன்.. அது வரை எல்லாம் பார்த்துக்கோ.. ஏதாவது பிரெச்சனை என்றால் எனக்கு உடனே கூப்பிடு.." என்று கூறிக்கொண்டே தன் பையை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தான் அக்ஷய்..

"நான் பார்த்துக்கறேன் எ.கே.. நீ போய்ட்டு வா.. காயத்ரியிடம் உன் காதலை சொல்ல போகிறாயா எ. கே..?" என சரண் கேட்க, ஒரு நொடி தயங்கி நின்றான் அக்ஷய்..

அமைதியாக சில நொடிகள் யோசித்தவன், "இல்லை சரண்.. அது சரி வராது.. இந்த படம் முடியட்டும்.. அவள் எதிர்காலத்துக்கு ஏதாவது வழி செய்துகொடுத்துவிட்டு ஒதுங்கி கொள்ள போகிறேன்.. அவ்வளவு தான்.." என உறுதியாக அக்ஷய் கூற, அவனை அதிர்ந்து பார்த்தான் சரண்..

"உனக்கு அவளை மிகவும் பிடித்திருந்ததே டா..?"

ஒன்றும் புரியாமல் சரண் கேட்க, "ம்ம் பிடிச்சுருக்கு தான்.. பட்..." தலை கோதி நிறுத்தியவன்,

"உனக்கு தெரியாதா டா.. இதெல்லாம் சரி வராது.. ஏதோ பார்த்ததும் அவளை பிடித்துவிட்டது.. அதான் கொஞ்சம் தடுமாறிட்டேன். இப்போ யோசித்தால் எதுவும் சரி வரும் என்று தோன்றவில்லை.. அவள் நிம்மதியை கெடுக்க முடியாது சரண்.. அவளுக்கு அமைதியான அழகான ஒரு வாழ்க்கை அமையும்.. சந்தோசமா இருக்கட்டும்.. அவள் சந்தோசமா இருந்தாலே எனக்கு போதும்.."

உறுதியாக பேசுவது போல் இருந்தாலும் அவன் குரலில் மறைந்திருந்த வலி சரணுக்கு புரியாமல் இருக்குமா என்ன!

"கொஞ்சம் யோசி எ. கே.. இது உன் வாழ்க்கை பிரெச்சனை.. இன்று அவளை இழந்துவிட்டு நாளைக்கு வருத்தப்பட முடியாது டா.." மெதுவாக சரண் கூற,

"என்னால் அவள் வருத்தப்படும் படி ஆகிவிட கூடாது என்று தான் பயப்படறேன் சரண்.. புரிஞ்சுக்கோ.." என்றான் அக்ஷய் அழுத்தமாக,

"அப்போ அவளை மறந்து விடுவாயா?" நண்பனை கூர்மையாக பார்த்து கொண்டே சரண் கேட்க, அக்ஷய் முகத்தில் ஒரு கசந்த முறுவல் தோன்றி மறைந்தது..

"மறப்பதா! அவளையா! இது வெறும் ஈர்ப்பு இல்லை சரண், காதல்.. அவள் நினைவு மட்டும் தான் இனி நான் உயிருடன் இருக்கும் வரை எனக்கு துணை.. போதும் டா.. கிளம்பறேன்.. பார்த்துக்கோ" ஒரு கட்டத்திற்கு மேல் பேச முடியாமல் குரல் கரகரத்துவிட, வேகமாக நகர்ந்து சென்று விட்டான் அக்ஷய்..

அவர்கள் படத்திற்காக ஊட்டியில் ஷூட்டிங் வைத்திருந்தனர்..

அக்ஷய் அங்கு தான் கிளம்பினான்..

வீட்டில் இருந்து கிளம்பியவன் நேராக ஷூட்டிங் ஸ்பாட் செல்ல, அங்கு ஏற்கனவே சிலர் வந்திருந்தனர்..

அனைவரையும் பார்த்து ஒரு முறை புன்னகைத்துக்கொண்டவன் கண்கள் என்னவோ தன்னவளை தான் தேடியது..

சற்று பின்னால் நின்றிருந்தவள் அக்ஷய்யை பார்த்ததும் முன்னால் வர, அவளுக்கு அந்த சிரமத்தை கூட வைக்காமல் வேகமாக தானே அவளிடம் சென்றான் அக்ஷய்..

மேலும் சிலரும் வந்து சேர்ந்த பின் மொத்த யூனிட்டும் சேர்ந்து ஒரு மிக பெரிய பஸ்சில் கிளம்பினர்..

இரண்டு இரண்டு சீட்டாக இருக்கும் வால்வோ பஸ் அது..

காயத்ரியை தன் அருகிலேயே அமரவைத்து கொண்டான் அக்ஷய்..

முதலில் அவன் சொன்ன போது அவள் துணை நடிகைகளுடன் அமர்ந்துகொள்வதாக கூறி பார்த்தாள்..

"உன்னிடம் அமர்ந்திருப்பவளை மிரட்டி உன்னை யாராவது நெருங்கினால் அப்போது என்னை தேடக்கூடாது பரவாயில்லையா.." என அவன் கேட்டு வைக்க, பயந்து போய் அவனுடனே அமருகிறேன் என்று கூறிவிட்டாள்

அதை நினைத்து இப்போது லேசாக சிரித்துக்கொண்டவன், "உள்ளே உட்காரு மாமி" என சற்று தள்ளி நிற்க, அவனை தாண்டி சென்று கவனமாக அமர்ந்து கொண்டாள் காயத்ரி

அவள் அமர்ந்ததும் தானும் அமர்ந்தவன், "நிம்மதியா வா என்னை மீறி யாரும் உன்னிடம் வர முடியாது.." என மெலிதாக சிரித்து கூற

அவனை நிமிர்ந்து பார்த்தவள், "ம்ம் உண்மை தான்.. இவ்வளவு பெருசா நீங்க உக்காந்திருக்கும் போது உங்களை தாண்டி நான் தெரிவதே கஷ்டம் தானே அக்ஷய்.." என உதடு துடிக்க கேட்க, அவளை போலியாக முறைத்தவன்

"உனக்கு வாய் கொழுப்பு அதிகமாகி போச்சு மாமி.." என்றான் சலிப்பு போல்

அவன் சலித்துக்கொண்டதில் சற்று சத்தமாகவே சிரித்துவிட்டவள், "எல்லாம் உங்களால் தான்" என சீரியஸ்ஸாக கூற, அவளை லேசாக புருவம் நெரிய பார்த்தான் அக்ஷய்

"நீங்க தான் நான் எதற்கும் பயப்பட தேவை இல்லாதது போல் பார்த்துக்கறேளே.. அதான் நிம்மதியா இருக்கேன்.." மனதார தோன்றிய புன்னகையுடன் கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்து கொண்டே காயத்ரி கூற,

"உன் இந்த புன்னகை வாடாமல் இருக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் மாமி.." என்றான் அக்ஷய் ஒரு மாதிரி குரலில்

அவன் குரலில் தெரிந்த வித்தியாசத்தில் லேசான குழப்பத்துடன் காயத்ரி அவன் புறம் திரும்ப, "கம்பர்ட்டபிள்ளா உட்காந்திருக்கயா மாமி.. சீட் ஏதாவது அடஜஸ்ட் பண்ணனுமா.." என அக்ஷய் பேச்சை மாற்றி விட

"இல்லையே சரியா இருக்கே.." என்ற காயத்ரியும் முந்தைய எண்ணத்தை மறந்துவிட்டாள்

போகும் வழியில் அவர்கள் உண்பதற்கு என தனியாக புக் செய்திருந்த ஹோட்டலில் பஸ்ஸை நிறுத்தினர்..

அனைவரும் இறங்கி செல்ல தொடங்கி விட, அக்ஷய்யிடம் வந்த தயாரிப்பாளர், "உங்களுக்கு இங்கேயே அனுப்பறேன் சார்.. நீங்க உள்ளே வந்தால் கூட்டம் கூடிடும்.." என்று கூற,

"தேங்க்ஸ் சார்.. காயத்ரிக்கும் சேர்த்து அனுப்பிடுங்க.." என்று அக்ஷய் கூறி விட, அவரும் சரி என தலையாட்டிவிட்டு சென்றுவிட்டார்.

சற்று நேரத்தில் இருவருக்கும் உணவு வர, அக்ஷய் சாப்பிட வசதியாக இருக்க வேண்டுமென பக்கத்து சீட்டில் சென்று அமர்ந்திருந்தான்.

காயத்ரி கையில் ஒரு பிளேட்டும் அக்ஷய் கையில் ஒரு பிளேட்டும் ஹோட்டலில் இருந்து வந்தவன் கொடுக்க, அக்ஷய்க்கு அசைவ உணவும் காயத்ரிக்கு சைவ உணவும் கொடுக்கப்பட்டிருந்தது..

அக்ஷய் உணவை பார்த்த காயத்ரி அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..

ஆனால் அவன் சும்மா இருக்கவில்லை.

"எனக்கும் வெஜ் கொண்டு வாங்க" என்று கூறி அவன் அதை திருப்பி கொடுத்துவிட,

"நீங்க இதெல்லாம் விரும்பி சாப்பிடுவீங்களே சார்.. உங்க பேட்டியில் பார்த்திருக்கேனே.." என்றான் அந்த சர்வர்

"இப்போது சாப்பிடுவதில்லை" அழுத்தமாக அக்ஷய் கூற, அதற்கு மேல் பேச்சு வளர்க்காமல் அவன் அதை வாங்கி கொண்டு சென்றுவிட்டான்

அவர்கள் பேசுவதை கவனித்து கொண்டிருந்த காயத்ரி, சர்வர் சென்றதும் அக்ஷய் புறம் திரும்பினாள்.

"ஏன் திரும்ப கொடுத்துட்டேள்? எனக்காகவா?" என அவனை ஆராய்ந்துகொண்டே காயத்ரி கேட்க,

"உனக்கு சங்கடமா இருக்கும் இல்லையா மாமி.. ப்ச் என் தப்பு தான்.. முதலிலேயே சொல்லி விட்டிருக்கனும்.." என அவன் சலித்துக்கொள்ள,

"அச்சோ எனக்காக ஏன் அக்ஷய் இப்படி பண்ணுறீங்க.. நேக்கு இதெல்லாம் பழகி போச்சு.. வீட்டில் அங்கிள் எப்போதும் சாப்பிடுவார்.. நான் அவரை சாப்பிட கூடாது என்றா கூற முடியும், சகிச்சுண்டு பழகிட்டேன்.." சாதாரணமாக காயத்ரி கூற

அவளை ஒரு புரியாத பார்வை பார்த்த அக்ஷய், "என்னிடம் நீ எதுக்குமே சகித்துக்கொள்வது எனக்கு பிடிக்காது மாமி.." என்றான் அவள் கண்களை அழுத்தமாக பார்த்து

அந்த கண்களிலும் குரலிலும் தான் எத்தனை அழுத்தம்..

எதற்காக என ஒன்றும் புரியாமல் காயத்ரி விழிக்க, அவனும் சட்டென முகத்தை மாற்றி கொண்டான்..

அதற்குள் அவனுக்கான உணவும் வந்து விட, அக்ஷய் பேச்சை மாற்றி வேறு ஏதோ கேட்க இருவரும் பேசி கொண்டே உண்டு முடித்தனர்..

அக்ஷய் காயத்ரி உண்டு முடித்து சிறிது நேரத்தில் மற்றவர்களும் வந்து விட, அந்த படத்தில் நடிக்கும் நகைச்சுவை நடிகர் அக்ஷயிடம் வந்த ஏதோ யோசனையுடன் நின்றார்..

"சொல்லுங்க" என அக்ஷய்யே எடுத்துக்கொடுக்க,

"இல்லை கேட்கிறேன் என்று தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க இதுபோல் வெளிஊர் ஷூட் எல்லாம் தனியா உங்க காரில் தானே வருவீங்க? இப்போது என்ன திடீரென எங்களுடன் வரீங்க..?" குறிப்பாக காயத்ரியை பார்த்துக்கொண்டே அவன் கேட்க, காயத்ரி வெளியே பார்த்துக்கொண்டிருந்ததால் அவன் பார்வையை கவனிக்கவில்லை

ஆனால் அக்ஷய் கவனித்து விட்டான்..

"காயத்ரி புது ஹீரோயின் இல்லையா.. கொஞ்சம் பயந்தாங்க.. இங்கு சிலரை நம்பமுடிவதில்லையே.. அதான் நானே பாதுகாப்பிற்கு வந்தேன்.." என நேரடியாக அக்ஷய் கூறிவிட, அவனது இந்த நேரடி பதிலை அந்த ஆள் எதிர்பார்கவில்லை என அவன் விழித்ததில் இருந்தே தெரிந்தது..

சில நிமிடங்களில் சுதாரித்துவிட்டவன் "இப்படி நீங்க மற்ற யாருக்கும் போய் நான் பார்ததில்லையே சார்....?" என வேண்டுமென்றே இழுக்க,

"உனக்கு தெரியாது என்று சொல்" என அழுத்தமாக நிறுத்தினான் அக்ஷய்

அவனது அழுத்தமும் அவன் கண்களில் ஏறி இருந்த சிவப்பும் அவன் கோபத்தை வலியுறுத்த, அதற்கு மேல் வம்பு பண்ண தைரியம் இல்லாமல் அவன் ஓடிவிட்டான்..

ஆனால் அவன் விட்டதை காயத்ரி தொடர்ந்தாள்..

அவளுக்கும் அப்போது தான் அந்த சந்தேகம் வந்தது..

"ஆமாம் நீங்க யாருக்கென்றாலும் இப்படி தான் உதவுவீங்களா அக்ஷய்?"

அவள் கேள்வியில் 'அடுத்து நீயா' என்பது போல் அவள் புறம் திரும்பியவன், "எல்லாரும் உன்னை போல் ஒரேடியா பயந்தவங்களா இருக்க மாட்டாங்க இல்லையா மாமி.. இங்கு வரும் முக்கால் வாசி நடிகைகள் இந்த துறை பற்றி எல்லாம் தெரிந்து வருபவர்கள்.. அவர்களுக்கு அவர்களை காத்துக்கொள்ள தெரியும்.. உன்னை போல் ஒன்றும் தெரியாமல் மாட்டி கொள்பவர்கள் அரிது மா.." நிதானமாக எடுத்து கூறினான் அக்ஷய்..

எதற்காகவும் அவள் அவனை தவறாக நினைப்பது அவனுக்கு பிடிக்கவில்லை.

அவன் பதில் அவளுக்கும் புரிய, "சாரி அக்ஷய்.. உங்களை தவறா நினைப்பது போல் கேட்டுவிட்டேன் இல்லையா.. நேக்கு இங்கு எதுவுமே புரியமாட்டேங்கறது.. அதான் ஏதாவது உளறி வைக்கிறேன்.. மன்னிச்சுடுங்கோ.." எப்போது போல் அவள் அழகாய் மன்னிப்பு வேண்ட, அதற்கு மேல் அவன் எங்கிருந்து கோபப்படுவது

"லூசு மாமி" என மெதுவாக முணுமுணுத்துவிட்டு அவன் சீட்டில் சாய்ந்து விட,

"நான் ஒன்னும் லூசு இல்லை" என முறுக்கி கொண்டு திரும்பினாள் காயத்ரி

அதில் சாய்ந்தவாக்கிலேயே அவளை திரும்பி பார்த்தவன் புன்னகை மேலும் விரிந்தது..

சிறிது நேரத்தில் அக்ஷய் அப்படியே கண்ணசந்து விட, திடீரென தன் தோளின் மேல் ஏதோ பாரமாக அழுத்தும் உணர்வில் கண் விழித்தான் அக்ஷய்

தனது தோளை திரும்பி பார்த்தவனுக்கு அங்கு கண்ட காட்சியில் முகம் இலகிவிட்டது..

அவனவள் தான் தூக்கத்தில் தன்னை அறியாமல் அவன் தோளில் சாய்ந்திருந்தாள்..

அப்போது கூட பட்டும் படாமல் அரைகுறையாக தூங்கி கொண்டிருந்தவளை பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது..

'நான் இருக்கும் போது உனக்கு என்னடி பயம் மாமி' என மெதுவாக முனகி கொண்டவன் அவள் தூக்கம் கலையாதவாறு தன் தோளை லேசாக அசைத்து அவள் வாகாக படுப்பது போல் அமர்ந்துகொள்ள, அவளும் சற்று நிம்மதியாக உறங்கினாள்..

அதற்கு மேல் அக்ஷய் கண் அசரவில்லை..

தன்னவளை தோளில் தாங்கி இருந்த ஒவ்வொரு நொடியையும் ஆழ்ந்து அனுபவித்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்..

ஒருவாறு மலை மீது ஏறி முடித்து அவர்கள் செல்ல வேண்டிய ஹோட்டல் அருகில் வந்ததும் ஒரு பெருமூச்சுடன் காயத்ரி புறம் திரும்பியவன், முதலில் அவளை தன் தோளில் இருந்து நகர்த்தி விட்டான்..

அவள் தூக்கம் கலையாமல் அவளை நன்றாக நகர்த்தி விட்டு லேசாக அவன் அவளை உலுக்க, மெதுவாக கண்விழித்தாள் காயத்ரி..

அனைவரும் ஹோட்டலில் இறங்க அக்ஷய் தன் ரூமுக்கு அருகில் தான் காயத்ரிக்கு ரூம் புக் செய்திருந்தான்..

"பத்திரமா இரு மாமி.. யாராவது தெரியாதவங்க கதவு தட்டினா எனக்கு ஒரு கால் பண்ணிட்டு கதவை திற.." என கூறிக்கொண்டே அக்ஷய் அவளுடன் இணைந்து நடக்க,

"சர்வர் கதவை தட்டினா கூட உங்களுக்கு போன் செய்துவிடுகிறேன் சரி தானா..!" என்றாள் காயத்ரி உதடு துடிக்க

அவள் கிண்டலில் தானும் சிரித்தவன், "வாயாடி.. அப்படி கூப்பிட்டாலும் தப்பில்லை.. நீ பத்திரமா இருந்தா சரி தான்.." என அக்ஷய் கூறவும் காயத்ரி அறை வரவும் சரியாக இருந்தது..

"நாளை காலை தான் ஷூட்.. நிம்மதியா ரெஸ்ட் எடு.." என்றுவிட்டு அவன் தன் அறை நோக்கி செல்ல, காயத்ரியும் தன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்..

தன்னவளுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும், சிறு சிறு கிண்டல் பேச்சுகளையும் பொக்கிஷம் போல் மனதிற்குள் சேமித்துக்கொண்டிருந்த அக்ஷய்க்கு இந்த பயணத்தின் விளைவு காயத்ரி மனதை மீண்டும் இறுக்க போவது தெரியவில்லை பாவம்..

***********************

கரிகாலன் வீட்டில் தன் அறையில் யாருடனோ போனில் பேசி கொண்டிருந்த போது, அங்கு வேகமாக வந்தான் அவரது ஒரு அடியாள்..

"ஐயா, ஐயா நம்ம மாணிக்கத்தை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க ஐயா.." என அவன் மூச்சு வாங்க கூற போனை அனைத்துவிட்டு பொறுமையாக திரும்பியவர்

"அவன் என்ன பண்ணினான்?" என்றார்

"அது.." என வந்தவன் தலையை சொரிய,

"ஒழுங்கா சொல்லு டா" என்றார் கரிகாலன் பொறுமை இல்லாமல்

"ஐயா நேத்து கொள்ளையடிக்க போன இடத்துல ஒரு பொண்ணு மேல கையை வச்சுட்டான்.. அந்த பொண்ணு அவனை அடையாளம் காட்டிருச்சு.." என அவன் மெதுவாக கூற,

"முட்டாள்" என கோபத்துடன் அவனை அறை விட்டார் கரிகாலன்

அவர் அறைந்த கன்னத்தை அமைதியாக பிடித்திக்கொண்டவன் "நான் என்ன பண்ணுறது ஐயா?" என மெதுவாக கேட்க,

"அவனை ஒழுங்கா கூட்டிட்டு வரதுக்கு என்ன? பொண்ணுங்க மேல கைவைக்காத என்றால் அவன் கேக்கறதே இல்ல.. காரியத்தை ஒழுங்காகவும் முடிக்காம, அறைகுறையா விட வேண்டியது.. அறிவுகெட்டவன்.." எரிச்சலுடன் கரிகாலன் முணுமுணுக்க,

"ஐயா அவனை வெளில எடுக்கணும்" என்றான் மற்றவன் மெதுவாக

"எடுத்து தொலைவோம்.. வேற வழி.." என அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே அறை வாசலில் ரஞ்சித் வந்துகொண்டிருப்பது தெரிய,

"டேய் இது ரஞ்சித்துக்கு தெரியக்கூடாது.. பொண்ணு விஷயம்னு தெரிந்தால் அவனே மாணிக்கத்தை போட்டு தள்ளிருவான்.. வெளிய போ.. அவன் கிளம்பியதும் மீதியை பேசிக்கலாம்.." என அவனை அனுப்பிவிட்டார் கரிகாலன்

அவனுக்கும் ரஞ்சித் பற்றி தெரியும் என்பதால் அவனும் வேகமாக வெளியேறி விட்டான்..

கரிகாலனை பொறுத்தவரை ரஞ்சித்திடன் இது ஒன்று தான் பிரெச்சனை..

என்ன தான் தவறு செய்தாலும் பெண்கள் விசயத்தில் நெருப்பாக இருப்பான்..

ஒருமுறை அவர்கள் கேங்கிலேயே ஒருவன் தவறு செய்தான் என்று தெரிந்த போது யோசிக்காமல் கொல்லவே போய் விட்டான்..

கடைசி நேரத்தில் கரிகாலன் பிடித்ததால் அவன் தோள்பட்டையில் குண்டடியுடன் தப்பித்திருந்தான்..

அதில் இருந்து இது போன்ற விஷயங்கள் ரஞ்சித்திடம் போகாமல் அவர் தெளிவாக பார்த்துக்கொண்டார்..

ரஞ்சித் மனதை பாதித்த ஒரே பெண் பிரகதி தான்.

அவளை மனதார விரும்பினான்.. இதோ இன்று வரை அவளை மட்டும் தான் நினைத்துக்கொண்டிருக்கிறான்..

ஆனால் அவனுக்கு அவள் மேல் கோபமும் இருந்தது..

இங்கிருந்து அவள் போனதை பற்றி அவனுக்கு ஒன்றும் இல்லை.. ஆனால் அவன் எதிரியான சிம்மனிடம் அல்லவா கூட்டு சேர்ந்திருக்கிறாள்..

அது தான் அவன் கோபத்தை ஏகத்திற்கும் கிளறி விட்டிருந்தது..

கரிகாலனுடன் பேசிவிட்டு ரஞ்சித் வெளியே வந்த போது அவன் போன் அடித்தது..

அதில் ஒலித்த பிரகதியின் நம்பரை பார்த்ததும் கோபம் வந்தாலும் அதை அலட்சியம் செய்ய மனம் இல்லாமல் போனை எடுத்தான் ரஞ்சித்..

"எனக்கு எதுக்கு கூப்பிடற?" போனை எடுத்தவுடன் ரஞ்சித் கத்த,

"ப்ச் காத்தாதே ரவுடி பேபி.. ஒரு காதலியிடம் பேசுவது போலவா பேசற.. கொஞ்சம் அன்பா பேசு டா.." மென்மையாக பிரகதி கூற,

"முடியாது" என்றான் ரஞ்சித் ஒற்றை சொல்லாக

"திருந்தவே மாட்ட டா நீ.. எனக்கு உன்னை பார்க்கணும்.. நாளைக்கு காலை அம்மன் கோவிலுக்கு வா.." என அவள் கட்டளையாக கூற,

"முடியாது போ டி" என்றான் ரஞ்சித் கோபத்துடன்

அவன் பதிலில் அந்த பக்கம் சத்தமாக சிரித்து அவன் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தாள் அவனவள்

"நீ வருவ ரவுடி பேபி.. எனக்கு பிடிச்ச ப்ளாக் ஷர்ட் போட்டுட்டு வா டா.." என அவள் ஆசையாக கூற,

"நான் வர மாட்டேன் டி" என பல்லை கடித்தான் ரஞ்சித்

"நாளைக்கு பார்ப்போம் ரவுடி பேபி" என்றுவிட்டு அவள் போனை வைத்துவிட,

"இம்சை" என முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தான் ரஞ்சித்.

தொடரும்..


 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7:

மறுநாள் காலை பத்து மணி அளவில் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு ரஞ்சித்திற்காக காத்திருந்தாள் பிரகதி..

எப்படியும் வந்துவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தாலும், அவன் கோபத்தை நினைத்து கொஞ்சம் பயமாக இருந்தது..

சிறு படபடப்புடன் ஒரு தூண் அருகில் நின்று கொண்டு அவள் வாசலையே பார்த்துக்கொண்டிருக்க, அவளை அதிகம் காக்க வைக்காமல் இறுக்கமான முகத்துடன் வந்து சேர்ந்தான் ரஞ்சித்..

அவனை பார்த்ததுமே நின்ற இடத்தில் இருந்தே பிரகதி மலர்ந்த முகத்துடன் கை ஆட்ட, அவனோ அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டு வந்தானே ஒழிய புன்னகைக்க கூடவில்லை..

ஆனால் அவன் முகம் வெளிப்படுத்தாத அவன் காதலை அவன் உடை காட்டிக்கொடுத்தது..

ஆம் அவள் ஆசைப்பட்டது போல் அவளுக்கு பிடித்த கருப்பு சட்டை தான் அணிந்து வந்திருந்தான்..

பிரகதி பக்கத்தில் வந்ததும், "எதுக்கு கூப்பிட்ட?" என எடுத்த எடுப்பில் ரஞ்சித் கேட்க,

"உன்னை சைட் அடிக்க தான் ரவுடி பேபி" என்றாள் பிரகதி கண்ணடித்து

அதில் அவளை முறைத்தவன், "என்ன வேணும் ஒழுங்கா சொல்லு பிரகதி.. எனக்கு வேலை இருக்கு.." என இழுத்து பிடித்த பொறுமையுடன் கூற,

"ஊரை ஏமாத்தற வேலை தானே.. அதுக்கு ஓவரா பில்ட் அப் கொடுக்கற டா நீ.." என்று சலித்துக்கொண்டாள் பிரகதி

"நீ மட்டும் என்ன சமூக சேவையா பண்ணுற?" நக்கலாக ரஞ்சித் கேட்க,

"ஆமாம் என்று சொன்னால் நம்புவாயா ரஞ்சி.." விளையாட்டுதனத்தை விட்டுவிட்டு பிரகதி சீரியஸ்ஸாக கேட்டாள்

"எவனாவது காதுகுத்தாமல் திரிவான், அவனுக்கு குத்து.." என்றான் ரஞ்சித் எரிச்சலுடன்

அவன் கோபத்தையும் எரிச்சலையும் கவலையுடன் பார்த்தவள், "நான் சொல்வதை கொஞ்சம் கேளேன் ரௌடி பேபி.. ஒரே ஒரு முறை.. எனக்காக.. ப்ளீஸ்.." என அவள் கெஞ்சி கேட்க, அதை மறுக்க முடியாமல் அமைதியாக அவளை பார்த்தான் ரஞ்சித்

"நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அங்க உண்மையாவே சேவை தான் பண்ணுறாங்க ரஞ்சித்.. கொள்ளையடிக்கும் பணத்தில் ஒரு ரூபாய் அவங்க யாருமே சொந்த செலவுக்கு எடுத்துக்கொள்வதில்லை டா.. நான் கூட தேவநாதன் சார் ரியல் எஸ்டேட் ஆபிசில் வேலை பார்த்து அதுக்கான சம்பளம் தான் வாங்கறேன்.. அங்க எல்லாருமே அப்படி தான்.. ஊருக்குள் எத்தனையோ ரௌடி கேங் கொள்ளையடிக்கும்.. பெரிய அளவில், சின்ன அளவில் எல்லாம் இருக்கும்.. ஆனால் யாருமே நல்லது செய்து இருக்க மாட்டாங்க.. இவங்க ரொம்ப வித்தியாசமா இருக்காங்க ரஞ்சி. யாருக்கும் தெரியாம நல்லது மட்டும் தான் பண்ணுறாங்க.. இங்க வேலை செய்யும் போது மனதில் அப்படி ஒரு நிம்மதி கிடைக்குது டா.."

"எனக்கு அந்த நிம்மதி என்னை வளர்த்தவருக்கு வேலை செய்யும் போது தான் கிடைக்குது ரதி.." பட்டென ரஞ்சித் கூற,

"அந்த வேலை தவறானது ரௌடி பேபி.. நீ எந்த நல்லதும் பண்ணலை.. நீ கொள்ளையடித்து கொடுக்கும் பணத்தில் கரிகாலன் சுகமாய் வாழ்ந்து கொண்டு, எங்கோ இருக்கும் தன் சொந்த குடும்பத்தை சுகமா வச்சிருக்கான் டா.. அதுக்காக நீ தேவையில்லாம தப்பு பண்ணிட்டு இருக்க.. அவன் கொலைக்கு கூட அஞ்சாதவன் டா.."

"போதும் நிறுத்து டி.."

அவள் கரிகாலனை மரியாதை இல்லாமல் பேசியதில் ஏற்பட்ட கோபத்தில் ரஞ்சித் அடிக்குரலில் சீற, அவன் கோபம் உணர்ந்து பிரகதியும் அமைதியாகி விட்டாள்..

"அந்த சிம்மன் பேச்சை கேட்டுக்கொண்டு தேவை இல்லாமல் சார் மீது பழி போடாதே.. கூட இருக்கும் உங்களிடமே முகத்தை கூட காட்டாமல் சுத்தும் அவன் நல்லவன், நாங்க எல்லாம் உனக்கு கெட்டவனா போய்ட்டோமா?" அடக்கப்பட்ட கோபத்துடன் ரஞ்சித் கேட்க,

"அவர் எதுவும் சொல்லவில்லை ரஞ்சி.. நான் நம்ம கேங்கில் இருந்து வந்ததும் எங்கே நான் நம்ம கேங் பத்தி சொல்லிவிட போகிறேனோ என்ற பயத்தில் கரிகாலன் என்னை கொல்ல ஆள் அனுப்பினான் ரஞ்சி.. சிம்மன் தான் என்னை காப்பாத்தினார்.."

மெதுவாக பிரகதி கூற, "ஒன்னும் தப்பில்லையே" என்றான் ரஞ்சித் நிதானமாக

கொலை செய்ய ஆள் அனுப்பினார்கள் என்றதுடன் பிரகதி நிறுத்திக்கொண்டிருந்தால் கூட அவன் கொஞ்சம் யோசித்திருப்பானோ என்னவோ, அவள் சிம்மனை சேர்த்து சொல்லவும் அவனுக்கு கோபம் கண்ணை மறைத்து விட்டது..

தன்னவனின் கூற்றை கொஞ்சமும் எதிர்பார்க்காமல் பிரகதி அதிர்ந்து நின்று விட, "நீ செய்தது தவறு தானே.. வெளியில் போய் சும்மா இருந்து இருந்தாலாவது பரவாயில்லை.. எதிரணியில் போய் சேர்ந்தால் கோபம் தானே வரும்.. உன்னை கொல்ல நினைத்தால் எப்படி அதை தப்பு சொல்லமுடியும்..?"

சிம்மன் மீது இருந்த கோபத்தை கொஞ்சமும் யோசிக்காமல் பிரகதி தலையில் கொட்டிவிட்டான் ரஞ்சித்..

அவனுக்கே தான் பேசிமுடித்ததும், இத்தனை நேரம் இருந்த அழுத்தம் எல்லாம் மறைந்து சிறு பிள்ளை போல் கண்கலங்க தன்னை பார்த்த கொண்டிருந்த பிரகதியை பார்த்ததும் என்ன உளறி வைத்திருக்கிறோம் என்றே புரிந்தது..

"ரதி.." என அவன் மெதுவாக தொடங்க, அவளோ பேச வேண்டாம் என்பது போல் மறுப்பாக தலையசைத்தாள்..

"நான் செத்தால் பரவாயில்லையா உனக்கு?" கண்கள் கலங்க அவள் கேட்க,

"ஐயோ அப்படி இல்லை டி" என அவசரமாக மறுத்தான் ரஞ்சித்

ஆனால் அவன் வார்த்தைகள் அவள் மனதை பெரிதாக பாதித்துவிட்டதே..

"ம்ஹும்.. என் தவறு தான்.. அனாதை பொண்ணுக்கு என்ன காதல் வேண்டி கிடக்கு.. இனி உன்னை நான் எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன் ரஞ்சித்.. என்றைக்காவது ஒரு நாள் நான் இறந்துவிட்டேன் என்ற செய்தி கிடைத்தால் சந்தோசப்பட்டுக்கோ.." கலங்கி தவித்து கொண்டிருந்த கண்களை முயன்று உள்ளிழுத்து கொண்டு கூறியவள், அதற்கு மேல் நிற்காமல் வேகமாக நகர்ந்து விட்டாள்

"ரதி நில்லு டா.." என அழைத்துக்கொண்டே பின்னால் வந்த ரஞ்சித்தால் கோவிலில் ஒரு கட்டத்திற்கு மேல் கத்தவும் முடியவில்லை

வேகமாக வெளியே வந்த பிரகதி தன் புல்லட்டில் ஏறி பறந்து விட, எப்போதும் அவள் பைக் ஓட்டும் அழகை ரசிப்பவனோ இன்று அவள் பத்திரமாக வீடு போய் சேர வேண்டுமே என மனதார முதல் முறை கடவுளை வேண்டி கொண்டான்..

அவன் எந்த வார்த்தையையும் மனதில் இருந்து கூறவில்லை தான்..

தன்னை அழிக்க நினைப்பவனிடம் போய் வேலைக்கு சேர்ந்திருக்கிறாளே என்ற கோபம் அவனுக்குள் கனன்று கொண்டே இருந்தது..

அதே நேரத்தில் சிம்மன் மீதும் கட்டுக்கடங்காத கோபம் இருந்தது..

அனைத்தும் சேர்ந்து ஒரே நேரத்தில் தப்பு தவறான வார்த்தைகளாக வெளி வந்துவிட்டது.

என்ன காரணம் இருந்தாலும் தன்னவள் உயிர் பற்றி பேசி இருக்க கூடாது என அவன் மனமே அவனை சாட, அதற்கு பதில் கூற முடியாமல் தவித்து போனான் ரஞ்சித்

பிரகதி கிளம்பி போன சில மணி நேரத்தில் அவள் போனுக்கு ரஞ்சித் முயற்சிக்க, அவளோ அதை எடுக்கவே இல்லை..

ஆனால் அவனோ மனதில் இருந்த அலைப்புறுதலில் மீண்டும் விடாமல் அவளுக்கு போன் அடித்து கொண்டிருந்தான்.

வீட்டில் தன் அறையில் வந்து அமர்ந்திருந்த பிரகதி போனை பேசாமல் அனைத்துவிடலாம் என்று நினைத்து எரிச்சலுடன் அதை எடுக்க, சரியாக அதே நேரம் அவள் போனில் ரஞ்சித்திடம் இருந்து மெசேஜ் வந்தது..

"ரதி மா சாரி சாரி டா.. ஏதோ கோபத்தில் பேசிட்டேன்.. தயவு செய்து பத்திரமா வீட்டுக்கு போய் விட்டாயா என்று மட்டும் சொல்லு டி.. நீ போனை எடுத்து பதில் சொல்லும் வரை நான் இந்த கோவிலை விட்டு நகரவே மாட்டேன் ரதி மா.."

மன்னிப்புடன் ஆரம்பித்திருந்தவன் ஒருவித அழுத்தத்துடன் முடித்திருந்தான்..

அதை படித்ததும் பிரகதியின் கோபம் மேலும் அதிகரித்தது.

ஆனால் அதை அப்படியே காண்பிக்க முடியாது.. அவன் ஒரு இம்சை பிடித்தவன்.. சொன்னால் செய்துவிடுவான்..

அடுத்த முறை கால் வந்த போது எரிச்சலுடன் போனை எடுத்தவள், "இப்போதைக்கு உயிருடன் வீட்டுக்கு வந்துட்டேன்.. உன் ஆளுங்களை அனுப்பி கொலை பண்ணிக்கோ.. தப்பிக்க எந்த முயற்சியும் சத்தியமா பண்ண மாட்டேன்.." என கத்திவிட்டு போனை வைத்துவிட, இந்த பக்கம் ரஞ்சித்தும் லேசாக கலங்கி இருந்த கண்களை துடைத்து கொண்டே போனை வைத்தான்..

மீண்டும் அவனிடம் இருந்து ஒரு மெசேஜ் மட்டும் பிரகதி போனுக்கு வந்தது.

"சாரி டி.. என் ரதி செல்ல குட்டி இல்லையா.. உனக்கு ஏதாவது ஒன்று என்றால் உன் ரௌடி பேபியும் உன்னுடனே வந்துவிட மாட்டேனா.. மன்னிச்சுரு டி ப்ளீஸ்.. கோபத்தில் உளறிட்டேன்.. சாரி சாரி டி.." என முடிந்திருந்த மெசேஜ் பக்கத்தில் ஆயிரம் ஹார்ட்டின் வேறு விட்டிருந்தான்..

அதை பார்த்து அவளுக்கு ஒன்றும் பெரிதாக ஆறுதல் தோன்றிவிடவில்லை..

அவன் கூறிய வார்த்தையின் வீரியத்தை தாண்டி இந்த காதல் வார்த்தைகள் மனதை அடையாமல் போய் விட, பேசாமல் போனை அனைத்து தூக்கி வீசி விட்டு படுத்துவிட்டாள் பிரகதி.

அவள் அதை தான் செய்வாள் என தெரிந்திருந்த ரஞ்சித்தும் "சாரி டி" என மீண்டும் மனதிற்குள் தன்னவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே கிளம்பினான்..

இந்த கூத்தில் கரிகாலன் பற்றி பிரகதி கூறியதை அவன் ஒழுங்காக ஆராயாமல் விட்டுவிட்டான்.

******************

ஊட்டிக்கு சென்ற மறுநாள் காலையில் இருந்து அங்கு ஷூட்டிங் ஆரம்பமானது..

முதலில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்னவோ சாதாரணமாக தான் எடுத்தனர்..

அக்ஷய்யும் காயத்ரியும் திருமணம் ஆகி தேனிலவு வந்திருப்பது போல் காட்சிகள்..

முதலில் பொட்டனிக்கல் கார்டன் சென்றவர்கள், அங்கு காயத்ரி பூக்களை ரசிப்பது போலவும் அக்ஷய் அவளை ரசிப்பது போலவும் காட்சிகள் எடுக்க, இருவருமே இயல்பாகவே அதை செய்துவிட்டனர்..

காயத்ரி உண்மையாகவே பூவை ரசித்தாள் என்றால் அக்ஷய்யோ கண்களில் வஞ்சனை இல்லாமல் வழிந்த உயிர் நேசத்துடன் தன்னவளை பார்த்துக்கொண்டிருந்தான்..

இருவர் செயலையும் காமெரா அழகாக தன்னுள் படமாக்கி கொண்டது..

அடுத்து காட்சியை இயக்குனர் அக்ஷய்யை தனியாக அழைத்து கூறினார்..

"ஹனிமூன் சீன்ஸ் எடுக்கிறோம் எ.கே.. ஒரு கிஸ் சீன் கூட இல்லைனா நல்லா இருக்காது.. அட்லீஸ்ட் கன்னத்திலாவது கொடுப்பது போல் ஒரே ஒரு சீனாவது வேண்டும்.." தயங்கி கொண்டே அவர் கூற, அவர் சொல்ல வருவது அக்ஷய்கும் புரிந்தது

ஆனால் காயத்ரிக்கு எப்படி புரிய வைப்பது என்று தான் அவனுக்கு தெரியவில்லை..

தானும் புருவ முடிச்சுடன் அமர்ந்துவிட்டான் அக்ஷய்..

"உங்ககிட்ட தான் அந்த பொண்ணு நல்லா பழகறாளே எ. கே.. நீங்க சொன்னா கேட்கமாட்டாளா..?" மெதுவாக இயக்குனர் கேட்க,

"இப்படிப்பட்ட காட்சிகளில் இருந்து காப்பாத்தறேன் என்று சொன்னதால் தான் என்னிடம் பழகறா சார்.." என்றான் அக்ஷய் அழுத்தமாக

"பட் இங்கு தேவைப்படும் எ.கே.. உங்களுக்கு புரியுது இல்லையா.." தன் கூற்றில் விடாமல் இயக்குனர் நிற்க, அவனுக்கும் புரிய தான் செய்தது

ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்தவன், "நான் பேசி பார்க்கறேன்.." என்றுவிட்டு எழுந்து சென்றான்

ஒரு பக்கம் யூனிட்டை விட்டு நகர்ந்து நின்று காயத்ரி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அவளருகில் வந்து "மாமி" என்று அழைத்தவன் அவள் திரும்பிய பின்பும் எதுவும் பேசாமல் ஏதோ யோசித்துக்கொண்டே நின்றான்

"என்ன அக்ஷய்?" என காயத்ரி சற்று சத்தமாக கேட்க, அதில் நினைவிற்கு மீண்டவன் இப்போது தயக்கத்துடனே அவளை பார்க்க, ஒருவாறு ஏதோ பிரெச்சனை என அவளுக்கு புரிந்து போயிற்று

"பரவாயில்லை சொல்லுங்க அக்ஷய்" என இறுக்கத்துடன் அவள் கேட்க, அதில் அவன் மனம் மேலும் தயங்கியது

"கிஸ் சீன் வைக்கணும் என்று சொல்லுறாங்க மாமி.. கன்னத்திலாவது வைக்கணும் என்று..." அதற்கு மேல் கூற முடியாமல் அவன் நிறுத்திவிட, சிறிது நேரம் காயத்ரியும் எதுவும் கூறவில்லை

பல்லைக்கடித்து கொண்டு அமைதியாக நின்றாள்..

இதற்கெல்லாம் தானே அவள் பயந்தது.

அதில் இருந்து காப்பாற்றுகிறேன் என்றவனே வந்து சொல்லும் போது, அவள் யாரிடம் உதவி கேட்க

உதட்டை அழுத்தமாக கடித்து வெளிவர துடித்த அழுகையை கட்டுப்படுத்தி கொண்டவள், "த..தவிர்க்க முடியாதா..?" கதறி துடிக்க முயன்ற குரலை மிகவும் முயன்று கட்டுப்படுத்திக்கொண்டு தான் காயத்ரி கேட்டாள்

தன்னவள் நின்றிருந்த நிலையில் மனம் வெகுவாய் வலித்தாலும் இதற்கெல்லாம் மறுப்பு கூறினாலும் நன்றாக இருக்காதே என்றும் அவனுக்கு தோன்றியது

அவன் அமைதியாகவே நிற்கவும், அவளுக்கு புரிந்து போயிற்று..

சினிமாக்களில் வெகு சாதாரணமாக நடக்கும் விஷயம்.. அவளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக எத்தனை தான் மறுப்பது..

"வாங்க போகலாம்" என்றுவிட்டு காயத்ரி முன்னால் நடக்க தொடங்கிவிட, அவளை திகைப்பும் வேதனையுமாக பார்த்துக்கொண்டே தொடர்ந்தான் அக்ஷய்

"ஷாட் போலாம் சார்" என மெதுவாக காயத்ரி கூற அவளை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இயக்குனர் "ரெடி" என்று சத்தம்போட, காயத்ரிக்கும் அக்ஷய்க்கும் டச் அப் செய்தனர்

ஒரு மரத்தில் சாய்ந்து காயத்ரி நிற்க, அவள் அருகில் நின்றிருக்கும் அக்ஷய் அவள் கன்னத்தில் முத்தமிடுவது போல் காட்சி தான்..

முக்கியமாக அவன் முத்தமிடும் போது அவள் வெட்கப்பட வேண்டும்..

அது தான் காயத்ரிக்கு பெரும் சவாலாக இருந்தது.

அவளுக்கு அழுகை தானே வந்து தொலைத்தது..

முடிந்தவரை ஒரே டேக்கில் முடித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டவள் தன் மனதை மிகவும் முயன்று கட்டுப்படுத்தி கொண்டாள்..

அக்ஷய்க்கும் அதே எண்ணம் தான்..

ஒரே டேக்கில் முடித்துவிடுலாம் என்று நினைத்துதான் அவனும் அவள் அருகில் சென்றான்..

ஆனால் அங்கு நின்ற வரை தான் அவனால் அது போல் நினைக்க முடிந்தது..

"ஆக்க்ஷன்" என டைரக்டர் குரல் கொடுத்ததும், வெளியில் வெட்கப்படுவது போல் முகத்தை வைத்துக்கொண்ட காயத்ரி தன் உணர்வை கட்டுப்படுத்த கையை இறுக்கமாக மூடி இருந்தாள்..

சினிமாவிற்காகவென நீட்ட நீட்டமாக வளர்த்து வைத்திருந்த நகங்கள் உள்ளங்கையில் குத்தி லேசாக வலிக்க தொடங்க, அந்த வலி அவளுக்கு தேவையாக இருந்தது..

வெட்கத்துடன் நின்றிருந்த காயத்ரி முகத்தின் அருகில் சென்று அவள் காதோர முடியை மென்மையாக பின்னால் தள்ளிவிட்டு அவள் கன்னத்தின் அருகில் செல்லும் வரை அக்ஷய் ஒழுங்காக தான் செய்தான்..

ஆனால் தற்செயலாக அவன் கண்கள் அவள் கையில் பதிய, அதை அழுந்த ரத்தம் வரும் அளவு அவள் மூடி இருப்பதை பார்த்ததும் சட்டென பின்னால் நகர்ந்துவிட்டான் அக்ஷய்..

'ச்ச ஒரு நொடியில் என்ன செய்ய பார்த்தான்.. அவள் மனதை இந்த அளவு கஷ்டப்படுத்தும் ஒரு செயலை செய்து அவன் என்ன சாதித்து விட போகிறான்..'

'ரத்தம் வருவது கூட தெரியாமல் நிற்கிறாளே.. உள்ளுக்குள் என்ன பாடுபடுகிறாளோ' என அவன் மனம் அடித்துக்கொள்ள, ஒரு நொடி அவசரப்பட்டுவிட்ட தன்னையே 'முட்டாள்.. முட்டாள்..' என வேகமாக திட்டி கொண்டான் அக்ஷய்

"கட்" என்ற டைரக்டரின் சத்தத்தில் தான் அக்ஷய் காயத்ரி இருவருமே நினைவிற்கு மீண்டனர்..

ஒருவாறு அவள் அழுந்த மூடி இருந்த கையை விட, அதை கவனித்து நிம்மதியாக பெருமூச்சு விட்டான் அக்ஷய்

அக்ஷய் ஷாட்டை சொதப்பியதில் இயக்குனரே கொஞ்சம் அதிர்ந்து தான் விட்டார்..

சொதப்பிவிடுவாள் என்று நினைத்த காயத்ரி ஒழுங்காக நடித்துக்கொண்டிருக்க, அக்ஷய் நின்றுவிட்டது அனைவருக்குமே அதிர்ச்சி தான்.

"என்ன ஆச்சு எ.கே" என்று கேட்டுக்கொண்டே இயக்குனர் அங்கு வர, அதற்குள் முழுதாக சுதாரித்திருந்த அக்ஷய் இப்போது மீண்டுவிட்ட அழுத்தத்துடன் அவரை பார்த்தான்..

"இந்த சீன் வேண்டாம் சார்.." என அவன் தெளிவாக கூற, இயக்குனர் காயத்ரி இருவருமே அவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர்

"இல்லை எ.கே" என இயக்குனர் தொடங்க

"உங்களுக்கு கிஸ் சீன் தானே சார் வேணும்.. லிப் லாக் எடுங்க.. கமெரா பின்னால் வைங்க.." என வெகு அழுத்தமாக அக்ஷய் கூறி விட, அந்த குரலை மறுக்க முடியாது என அனுபவத்தில் உணர்ந்திருந்த இயக்குனர் "ஓகே" என்றுவிட்டு சென்றுவிட, இங்கு காயத்ரி தான் பெரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்து கொண்டிருந்தாள்..

கன்னத்தில் முத்தம் கொடுப்பது போல் காட்சி நடிக்க வேண்டும் என்னும் போதே அவள் அந்த பாடுபட்டாள்..

இவனானால் சுலபமாக லிப் லாக் என்கிறானே என்றிருந்தது அவளுக்கு..

'ஏன் இப்படி சொல்கிறான்.. தன்னால் எப்படி முடியும்..?' பரிதவிப்புடன் காயத்ரி அக்ஷய்யை பார்க்க

"எத்தனை நாளாக என்னுடன் பழகுகிறாய்.. இன்னும் என்னை சந்தேக பார்வை தான் பார்ப்பாயா மாமி.. கொஞ்சமாவது மனுஷனை நம்பு டி.. வலிக்குது.."

அவள் பயந்த பார்வையில் தன் உணர்வை மறைக்க முடியாமல் மனதில் தோன்றிய வலியை அப்படியே வார்த்தைகளாக கொட்டிவிட்டான் அக்ஷய்..

அவன் கூற்றில் எந்த பதிலும் சொல்ல தோன்றாமல் காயத்ரி திருதிருவென விழிக்க, அவன் தன்னை தானே தான் தேற்றிக்கொள்ள வேண்டி இருந்தது..

ஒரு ஆழ்ந்த மூச்செடுத்துக்கொண்டு அவளை பார்த்தவன், "நீ எதுவும் செய்ய வேண்டாம் மாமி.. சீன் ஆரம்பித்ததும் கண்ணை மட்டும் மூடிக்கோ.. உனக்கு பிடிக்காத எதுவும் நடக்காது.. என்னை நம்பமாட்டாயா..?" ஆழமாக ஒலித்த அவன் குரலை ஏனோ அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை..

"நம்பறேன் அக்ஷய்.." தன்னை அறியாமல் காயத்ரி கூற, அதில் அவன் மனதில் இத்தனை நேரம் அழுத்திக்கொண்டிருந்த வலி தானாக குறைந்து, எப்போதும் போல் சிறு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது..

மீண்டும் காட்சி தொடங்க அக்ஷய் கூறியது போலவே கண்களை மட்டும் மூடி கொண்டாள் காயத்ரி..

அவள் முகத்திற்கு வெகு அருகில் அவன் மூச்சுக்காற்றை மட்டும் உணர்ந்தவள் மீது, அவன் முகம் இம்மி அளவும் கூட படவில்லை..

"நான் நகர்ந்ததும் வெட்க பட்டு தலை குனி மாமி.. அவ்வளவு தான்.." என மெதுவாக கூறிவிட்டு அவன் நகர, அவன் கூறியது போலவே காயத்ரி செய்து முடிக்கும் போது, "டேக் ஓகே" என கூறிவிட்டார் இயக்குனர்

அவர் குரலில் நிம்மதியுடன் காயத்ரி அக்ஷய்யை பார்க்க, அவனோ அவளை எந்த உணர்வுமற்று பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டான்

அவன் பார்வையில் அவன் தன் மீது கோபமாக இருக்கிறான் என காயத்திற்கு புரிந்து விட, அவசரப்பட்டு அவனை சந்தேகபட்ட தன் புத்தியை வேகமாக திட்டி கொண்டே அவனை தேடினாள் காயத்ரி..

காயத்ரி அக்ஷய்யை தேடிய போது அவன் இயக்குனர் அருகில் சென்று அமர்ந்துவிட்டது தெரிந்தது..

சரி தனியாக பேசிக்கொள்ளலாம் என்று அவள் நினைக்க, அவனோ அன்றைய படப்பிடிப்பு முழுவதும் அவளுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கவே இல்லை..

ஷாட்டிற்கு மட்டும் அவளுடன் நிற்பவன், அது முடிந்ததும் யாரிடமாவது சென்று அமர்ந்துகொண்டான்..

அத்தனை பேர் முன்னிலையில் அவனை இழுத்து வைத்து பேசவும் அவளுக்கு கஷ்டமாக இருந்தது..

அக்ஷய்கோ அன்று ஏனோ மனம் பெரிதாக வலித்தது..

ஏற்கனவே தன் காதலை கூற கூட முடியாத நிலையில் தவித்து கொண்டிருக்கிறான்..

ஏதோ முடிந்தவரை அவளுடன் கிடைக்கும் நேரத்தை செலவழித்துக்கொள்ளலாம் என்று இருப்பவனை போய் அவள் சந்தேக பார்வை பாத்து வைத்தால் அவனும் என்ன செய்வான்..

தன் மனதின் வலி கோபமாக வெளி வந்துவிடுமோ என்று பயந்து தான் அவளை தவிர்த்து வந்தான்..

அவளை நெருங்க தான் இல்லையே ஒழிய, அவன் கண்கள் அவள் மீது தான் இருந்தது..

அவள் பாதுகாப்பிற்கு அவன் தானே பொறுப்பு..

அது புரிந்து காயத்ரியின் குற்ற உணர்வு தான் அதிகரித்து கொண்டே போனது..

அன்று ஷூட்டிங் முடிய இரவாகி விட, அனைவரும் ஒன்றாக டின்னரை முடித்து கொண்டு தங்கள் அறை நோக்கி சென்றனர்..

அக்ஷய் காயத்ரி அறை மட்டும் தான் மூன்றாம் தளத்தில் இருந்தது..

இரண்டாம் தளத்தில் அனைவருமே இறங்கி விட, லிப்டில் காயத்ரியும் அக்ஷய்யும் மட்டுமே எஞ்சி இருந்தனர்..

"சாரி அக்ஷய் ப்ளீஸ்.. அந்த நேர குழப்பத்தில் அப்படி பார்த்துட்டேன்.. தப்பு தான்.. மன்னிச்சுடுங்கோ ப்ளீஸ்.." என அவள் கெஞ்சி கேட்க, எப்போதும் அவளது இத்தகைய செயலுக்கு உடனடியாக இலகி விடும் அவன் மனது இன்று ஏனோ முறுக்கி கொண்டது.

காதல் மனம் செய்த மாயமோ!

அவனிடம் புன்னகையை எதிர்பார்த்து காயத்ரி அவனை பார்க்க, அவனோ எந்த உணர்வும் காட்டாமல் அவளை பார்த்தவன், "விடு எனக்கும் உனக்கும் என்ன இருக்கு.. நான் உனக்கு மூன்றாம் மனிதன் தானே.. சந்தேகப்படுவது சரி தான்.." என வெறுமையான குரலில் கூறிமுடிக்கும் போது லிப்ட் சரியாக நின்றது

அக்ஷய் தன் வேக நடையுடன் முன்னால் சென்று விட, அவன் பின்னால் கிட்டத்தட்ட ஓடினாள் காயத்ரி

'அட வளந்துகெட்டவனே, கொஞ்சம் மெதுவா போனால் என்ன!' என அவள் வாய் தானாக முணுமுணுத்து கொண்டது

அவன் தன் அறையை திறக்கும் முன் சரியாக அவன் முன் சென்று நின்றுவிட்டவள், "அக்ஷய் நான் தான் சாரி கேட்கறேனே.. நேக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, நீங்க பேசாமல் இருந்தா.. ப்ளீஸ் பேசுங்கோ.." என மெதுவாகவே காயத்ரி கேட்க,

"பேச ஒன்னும் இல்லை மா.. எப்போதுமே உன் பாதுகாப்பு என் பொறுப்பு தான்.. அதில் எந்த மாற்றமும் வராது.. போய் தூங்கு.." என்றுவிட்டு அவன் கதவை திறக்க போக, அவன் கையில் இருந்த சாவியை பிடுங்கி விட்டாள் காயத்ரி

"நீங்க என்னை பார்த்துப்பேள் என்று எனக்கு தெரியும்.. ஆனால் என்னை மன்னிச்சால் தான் சாவியை கொடுப்பேன்.. அப்போ தான் நானும் போவேன்.." என்று அழுத்தமாக கூறியவள், அந்த தளத்தின் ஒரு முனையில் இருந்த பெரிய ஜன்னல் திண்டில் சென்று அமர்ந்துகொண்டாள்

அவள் விறுவிறுவென சென்ற அழகில் இத்தனை நேரம் இருந்த கோபம் மறைந்து அக்ஷய் முகத்தில் புன்னகை மீண்டு விட்டது..

'லொள்ளு பிடிச்ச மாமி' என்று முணுமுணுத்துக்கொண்டே அவளை தொடர்ந்து வந்தவன், அவளுக்கு எதிரில் தானும் அமர்ந்துகொண்டு அவளை அழுத்தமாகவே பார்த்தான்

அவளும் சளைக்காமல் எதிர் பார்வை பார்க்க, அதில் தன்னை மறந்து சிரித்துவிட்டவன், "சரெண்டெர் மாமி.. சாவியை கொடு.." என்றான் சிரித்தபடியே

அவன் சிரித்துவிட்டதில் நிம்மதியுடன் அவனிடம் சாவியை கொடுத்தவள், "நிஜமாவே சாரி அக்ஷய்.. நான் அப்படி நினைச்சிருக்க கூடாது.. நீங்க உடன் இருப்பதால் தான் நான் நிம்மதியா இருக்கேன்.. அதை மறந்து அவசரப்பட்டுட்டேன்.. நீங்க உதவறேள் என்பதெல்லாம் தாண்டி நீங்க கோபப்பட்டா நேக்கு கஷ்டமா இருக்கு.. நீங்க முதலில் சொன்னது போல் உங்களை நல்ல பிரென்ட்டா நினைக்க ஆரம்பிச்ச்சுட்டேன் என்று தோணுது.. ப்ரெண்ட்ஸ்.." என அவள் தன் கையை நீட்ட, அதை மனம் நிறைந்த நிம்மதியுடன் குலுக்க போனவன் அப்போது தான் அவள் கையில் இருந்த சிறிய காயத்தை கவனித்தான்

காயம் என்னவோ நகம் பட்டு சிறியதாக தான் இருந்தது.. ஆனால் அவனுக்கு அதிகமாக தான் வலித்து வைத்தது..

"இரு மாமி வரேன்" என்றவன் எழுந்து வேகமாக சென்றான்

எங்கே ஓடுகிறான் என்று புரியாவிட்டாலும், அவன் சமாதானம் ஆகிவிட்டான் என்பதிலேயே மனம் நிம்மதி அடைந்துவிட, அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்தாள் காயத்ரி

சுற்றிலும் இருளும் பனியுமாய், அதில் அங்கங்கு தெரிந்த வெள்ளை விளக்குகளுமாய் கண்களுக்கு காட்சி அழகாக இருந்தது

"மாமி கையை நீட்டு" என திடீரென ஒலித்த அக்ஷய் குரலில் திரும்பியவள், அவன் கையில் காயத்திற்கு போடும் கிரீமை பார்த்ததும் சிறு புன்னகையுடன் கையை நீட்டினாள்

"சின்ன காயம் தான் அக்ஷய்.. தானாக சரி ஆகிடும்.." என சிறு புன்னகையுடன் காயத்ரி கூற

"ப்ச் சும்மா இரு.. வலிக்கும்.." என்றவன் மருந்து போட்டுவிட்டே அவள் கையை விட்டான்

"நானும் சாரி சொல்லணும் மாமி.. முதல் முறை டைரக்டர் சீன் சொல்லும் போதே மறுத்திருக்கணும்.. இதெல்லாம் ரொம்ப சகஜமான சீன் மாமி.. அதான் சட்டுனு மறுக்க வாய் வரலை.." அவள் கையை பார்த்துக்கொண்டே வருத்தத்துடன் அக்ஷய் கூற,

"ம்ம் நேக்கும் புரிந்தது அக்ஷய்.. அதான் ஒத்துண்டேன்.." என்றாள் காயத்ரி

"அதுக்காக கையை இப்படியா பண்ணிக்கொள்வது.. போ மாமி.." இன்னும் வருத்தம் தாங்காமல் அவன் புலம்ப

"என்ன செய்யறது அக்ஷய், என்னவோ என்னால் இதை எல்லாம் சுலபமா எடுத்துக்க முடியலை.." என முகம் சுருங்க கூறியவள், அதில் அவன் முகமும் சுருங்கவும்

"அதான் நீங்க அழகா மாத்திட்டேளே.. நீங்க இருக்கும் போது நேக்கு எந்த கவலையும் இல்லை.." என்று முடித்துவைத்தாள்

அவள் குரலில் இருந்த அழுத்தத்தில் ஆச்சர்யத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன், "என்னை நம்புகிறாயா மாமி?" என்று அவள் கண்களை பார்த்து கேட்க

"ரொம்ப" என்றாள் அவள் அழகாய் கைகளை விரித்து

அதில் லேசாக சிரித்தவன், "எந்த அளவு நம்புகிறாய்?" என மீண்டும் கேட்க

"நீங்க நேக்கு நல்லது மட்டும் தான் செய்வேள் என்னும் அளவு.." என்றாள் காயத்ரி கொஞ்சமும் யோசிக்காமல்

"இப்போ நான் ஒன்னு கேட்டா தருவாயா மாமி?"

"கண்டிப்பா"

அவன் தவறாக எதாவது கேட்டுவிடுவானோ என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் உடனடியாக அவள் கூறிய பதிலில், அவள் தன்னை நம்பவில்லையே என ஓட்டிக்கொண்டிருந்த சிறு கசடு கூட நீங்கி, அக்ஷய் மனம் முழுதாய் நிம்மதி அடைந்து விட்டது..

"உன் கையால் ஒரு காபி கிடைக்குமா மாமி.. ரொம்ப குளிர் இல்லையா..?" வெளியில் பார்த்துக்கொண்டு அக்ஷய் கேட்க

"இதோ போட்டு எடுத்துண்டு வரேன்.." என்றுவிட்டு ஓடிவிட்டாள் காயத்ரி

தன் அறையில் இருந்த காபி மேக்கரில் இருவருக்கும் சேர்த்தே காபி கலந்து இரு கப்பில் எடுத்து வந்தவள் ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றை தான் வைத்துக்கொண்டு அமர, இருவரும் ஏதேதோ கதை பேசிக்கொண்டே காபியை முடித்தனர்

சற்று நேரத்தில் குளிர் அதிகமாக தொடங்கி விட, காயத்ரி உட்கார முடியாமல் கைகளை கட்டி குளிரை கட்டுப்படுத்த முயன்று கொண்டே எழுந்துவிட்டாள்..

அவளுடன் தானும் எழுந்தவன், "போய் தூங்கு மாமி.. குளிர் அதிகமாகுது.." என்று கூறி கொண்டே தன்னிடம் இருந்த ஷாலால் அவளுக்கு அணைப்பாய் போர்த்தி விட்டான்..

அதை நன்றாக காயத்ரி போர்த்தி கொள்ள, இருவரும் தங்கள் அறை நோக்கி நடந்தனர்..

அவன் அறை வாசலில் வந்ததும் ஷாலை அவனிடம் கொடுத்துவிட்டவள், "குட் நைட் அக்ஷய்" என்றுவிட்டு தன் அறைக்கு சென்றுவிட, தன் கையில் இருந்த ஷாலை பொக்கிஷம் போல் எடுத்துக்கொண்டு சென்றான் அக்ஷய்

அவனவளை தீண்டி வந்த பாக்கியம் செய்த ஷால் அல்லவா..!

அதை பத்திரமாக வைத்து விட்டு, படுத்து உறங்கினான்..

இருவரும் நல்ல மனநிலையில் உறங்க, அந்த மனநிலையை குலைக்கும் ஒரு சம்பவமும் நடந்தது..

தீண்டும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8:

ஊட்டியில் அக்ஷய் காயத்ரி சம்மந்தமான காட்சிகள் எடுத்து முடித்துவிட்டனர்..

மேலும் மற்ற நகைச்சுவை காட்சிகள் அங்கு எடுக்க வேண்டி இருந்தது.. அதற்கு அக்ஷய் காயத்ரி இருவரும் தேவைப்படாததால் அவர்கள் கிளம்பி விட்டனர்.

அக்ஷய் தன் காரை வர சொல்லி இருக்க, அதில் அக்ஷய் காயத்ரி இருவரும் கிளம்பி சென்னை வந்துவிட்டனர்..

காயத்ரியை அவள் வீட்டில் இறக்கி விட்ட அக்ஷய், "இன்னும் நாலு நாள் லீவு தான்.. நிம்மதியா இரு மாமி.." என்று கூற

"கண்டிப்பா அக்ஷய்.. ஹப்பா ஒவ்வொரு நாளும் எத்தனை டென்ஷன்.. எப்போ எதை சொல்லுவாங்களோ என்று யோசிச்சு யோசிச்சே நொந்துண்டு இருந்தேன்.. இந்த நாலு நாள் நிம்மதியா இருக்க போறேன்.." என மலர்ந்த புன்னகையுடன் கூறிவிட்டு காயத்ரி இறங்கி சென்று விட, அவளையே பார்த்து கொண்டிருந்த அக்ஷய் முகத்தில் ஒரு விரக்தி முறுவல் தோன்றி மறைந்தது

'உன்னை பார்க்காம எப்படி இருக்க போறேன் மாமி.. ரொம்ப கஷ்டமா இருக்கு டி..' என மெதுவாக கூறிக்கொண்டவன் அமைதியாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்

அடுத்து வந்த நாட்களை ஓட்டுவது அக்ஷய்க்கு தான் பெரும் பாடாக போயிற்று..

தினமும் காயத்ரியை பார்த்துக்கொண்டே இருந்த போது அவளை துறக்க தயாராக இருந்த மனது, அவளை பார்க்காமல் இருந்த இந்த நாட்களில் அவனை பெரிதாக படுத்தி எடுத்தது..

ஒவ்வொரு நொடியும் அவளை பார்க்க வேண்டும் என அடம்பிடித்த மனதை கடைசியாக அவள் புகைப்படத்தை பார்த்து தான் அவன் ஆற்றி கொண்டான்

**************

அன்று தனது பிசினஸ் விஷயமாக ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் வந்திருந்தார் தேவநாதன்..

ஊரின் முக்கிய இடத்தில் இருக்கும் ஒரு நிலத்தை ஒருவருக்கு கிரயம் செய்து கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்..

தனியான ஒரு வழியில் அவர் ஜீப் வந்துகொண்டிருந்த போது அங்கு நடு ரோட்டில் வண்டி போக முடியாதது போல் நிறைய பெரிய பெரிய கற்கள் வைக்கப்பட்டிருந்தது..

அதை பார்த்ததும் யோசனையுடன் டிரைவர் வண்டியை நிறுத்த, சூழ்நிலையில் இருந்த அசாத்திய அமைதியில் ஏதோ பிரெச்சனை என தேவநாதனுக்கு உடனடியாக புரிந்து போயிற்று..

டிரைவர் இறங்கிய நொடியே அவர் சிம்மனுக்கு அழைத்துவிட்டார்.

அவன் போனை எடுத்ததும் முதலில் தான் இருக்கும் இடத்தை தெளிவாக கூறியவர், "ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சு வந்துட்டு இருக்கேன் சிம்மா.. ஏதோ தப்பா படுது டா.." என்று அவர் வேகமாக கூற,

"உங்களுடன் ரங்கன் இருக்கான் இல்லையா பா..?" என்றான் சிம்மன் வேகமாக

"இருக்கான் சிம்மா" என்றவர் தாமதிக்காமல் அவனிடம் போனை நீட்ட, ஏற்கனவே சுற்றுப்புறத்தை கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்த ரங்கன் போனை வாங்கியதும்

"என்ன பண்ண சிம்மா?" என்றான் நேரடியாக

"நீங்க இருக்கும் இடத்தில் இருந்து சரியக அறை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பழைய கல்யாண மண்டபம் இருக்கு ரங்கா.. எப்படியாவது அப்பாவை அங்க கூட்டிட்டு போய்டு.. யாரவது வந்தா நீயும் உன்னுடன் இருக்கும் இரண்டு பேரும் சேர்ந்து முடிஞ்ச வரை சமாளிங்க.. நான் குறைந்தது கால் மணி நேரத்தில் அங்கு இருப்பேன்.." என்று விட்டு சிம்மன் போனை வைக்கும் போதே, அவன் பைக்கை உதைக்கும் சத்தம் கேட்டது.

சிம்மன் போனை வைத்ததும் தேவநாதன் தவிர மற்ற மூவரும் வேகமாக முகமூடியை அணிந்து கொண்டு அவருடன் இறங்கினர்..

அவர்கள் இறங்கியது தான் தாமதம், அவர்கள் எதிர்பார்த்தது போலவே மறைவிடத்தில் இருந்து சிலர் தேவநாதனை தாக்க வர, தேவநாதனை பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு ரங்கன் ஓட, மீதம் இருந்த இருவரும் வந்தவர்களுடன் சண்டையிட தொடங்கினர்.

அவர்களை மீறி இருவர் ரங்கனையும் தேவநாதனையும் துரத்த, பின்னால் வந்தவர்களை தன் முழு பலம் கொண்டு அடித்து தள்ளி விட்டு சிம்மன் சொன்ன மண்டபம் நோக்கி சென்றான் ரங்கன்..

வேகமாக மண்டபத்திற்குள் நுழைந்த ரங்கன் தேவநாதனை அங்கிருந்த ஒரு அறையில் மறைவாய் இருக்க சொல்லிவிட்டு, தான் முக்கிய ஹாலின் ஒரு தூண் பின் மறைந்து நின்று கொண்டான்.

அவன் நின்றிருந்த இடத்தில் இருந்து வாசல் புறம், தேவநாதன் இருந்த அறை எல்லாமே நன்றாக தெரியும்..

அவர் இருந்த அறையை வெளிப்புறமாக பூட்டி இருந்தான்..

அதை மீறி யாரேனும் உள்ளே போனால் பார்த்துக்கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தான்..

சிறிது நேரத்தில் அவன் அடித்து போட்டு விட்டு வந்த இருவர் அந்த மண்டபத்திற்குள் வர, ரங்கனின் பார்வை கூர்மையடைந்தது

உள்ளே வந்ததும் சுற்றி சுற்றி தேடியவர்கள் மூடி இருந்த கதவை திறக்க போக, அதற்கு மேல் மறைந்திருக்க முடியாமல் வெளியே வந்து விட்டான் ரங்கன்..

"டேய்.." என கத்திகொண்டே அவன் அவர்களை நோக்கி செல்ல, அவனை பார்த்ததும் அவர்களும் அவனிடம் சண்டையிட தொடங்கிவிட்டனர்..

அவனுடன் மோதிய இருவரும் அவனை காயபடுத்துவதை தாண்டி அவன் மாஸ்க்கை கழட்டுவதிலேயே குறியாக இருக்க, அவனுக்கோ அதை காத்துக்கொள்வதே பெரும் பாடாக போயிற்று..

ஒரு கட்டத்தில் ரங்கனை சமாளித்து அவன் மாஸ்க்கை கழற்றுவது நடக்காது என்று புரிந்துவிட, பேசாமல் அவனை கொன்றுவிடலாம் என தன்னிடம் இருந்த கத்தியை எடுத்தான் ஒருவன்..

அவன் கத்தியை கையில் தூக்கியது மட்டும் தான் அவன் நினைவில் இருந்தது..

அடுத்த நொடி யாராலோ தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து கிடந்தான் அவன்..

அவன் விழுவதை கவனித்த ரங்கன் "சிம்மா" என்று எதிரில் இருந்தவனை அழைக்க, அதில் ரங்கனை பிடித்துக்கொண்டிருந்தவன் பிடியும் தளர்ந்தது..

அவனை உறுத்து விழித்த சிம்மன் அவனையும் ஓங்கி உதைக்க, அவனும் தள்ளி போய் விழுந்தான்.

அவர்கள் இருவரையும் சமாளிப்பது சிம்மனுக்கு ஒன்றும் அத்தனை கஷ்டமாக இருக்கவில்லை..

பெயருக்கு ஏற்றார் போல் சிங்கம் போன்ற அவன் வேட்டையாடலில் அந்த இருவர் உடலில் அடுத்த பத்தாவது நிமிடம் உயிர் மட்டும் தான் மிஞ்சி இருந்தது.

சிம்மன் வந்துவிட்டான் என்றதுமே ரங்கன் சென்று தேவநாதன் இருந்த அறை கதவை திறந்து அவரை அழைத்து வந்து விட்டான்..

அவர்களை அடித்துமுடித்துவிட்டு கையை தூசி தட்டிக்கொண்டே இவர்களிடம் வந்த சிம்மன், "கரிகாலன் ஆளுங்க தான் இல்லையா?" என்று ரங்கனிடம் கேட்க, அவன் ஆமோதிப்பாய் தலை அசைத்தான்

"அவனை.." என பல்லை கடித்தவன் கோபம் ஏகத்திற்கும் எகிறியது..

இப்போதைக்கு அங்கிருந்து செல்வது தான் முக்கியம் என்பதால் "போலாம் டா" என்றுவிட்டு முன்னால் நடந்தான் சிம்மன்

ரங்கனும் தேவநாதனும் அவனை தொடர, மூவரும் ஜீப் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்..

அங்கு ஏற்கனவே இருந்த இருவரும் அவர்களை தாக்கிய மற்ற இருவரை அடித்து போட்டிருந்தனர்..

அங்கிருந்த கல்லை தூக்கி ஓரமாக போட்டுவிட்டு அனைவரும் வர, டிரைவரிடம் சாவியை வாங்கிக்கொண்ட சிம்மன், "நான் பார்த்துக்கறேன்.. நீ என் வண்டியை எடுத்துட்டு வா.." என்றுவிட்டு தானே ஜீப்பை எடுத்தான்..

வீட்டை அடைந்ததும் தேவநாதன் அறைக்கு வந்தவன், ரங்கனையும் தேவநாதனையும் மட்டும் உள்ளே அழைத்துக்கொண்டு கதவை பூட்டி கொண்டான்..

உள்ளே வந்த தேவநாதன் ஓடிய கலைப்பிற்கு தண்ணீர் குடித்துவிட்டு ஓய்வாக அமர, கதவை அடைத்துவிட்டு திரும்பிய சிம்மன் தன் முகமூடியை கழட்டி எறிந்துவிட்டு அங்கிருந்த மேசையை கோபத்துடன் வேகமாக குத்தினான்..

அவன் குத்திய வேகத்தில் மேசையில் இருந்த மொத்த பொருட்களும் சிதற, அப்போது தான் தானும் தண்ணீர் குடிக்கலாம் என்று பாட்டிலை எடுத்திருந்த ரங்கன் அதை வைத்துவிட்டு வேகமாக சிம்மனிடம் வந்தான்..

"ரிலாக்ஸ் சிம்மா ப்ளீஸ்" என அவனை பிடித்து ரங்கன் கட்டிலில் அமர வைக்க, கோபம் கொஞ்சமும் குறையவில்லை என்றாலும் நண்பன் குரலுக்கு மரியாதை கொடுத்து அமைதியாக அமர்ந்தான் சிம்மன்..

சில ஆழ்ந்த மூச்சுகள் எடுத்து தன்னை நிலைப்படுத்தி கொண்டவன், "சாரி பா" என்றான் மெதுவாக தேவநாதன் புறம் திரும்பி

அவன் அருகில் வந்து அமர்ந்த தேவநாதன், "நீ என்ன டா பண்ணின? சரியான நேரத்துக்கு வந்து காப்பற்றியதற்கு யாராவது மன்னிப்பு கேட்பார்களா?" அவன் தலையை மெதுவாக கோதி கொடுத்து கொண்டே தேவநாதன் கூற,

"அவனை இந்த அளவு விட்டதே என் தப்பு தான் பா.. இதற்கு மேல் பொறுமையா இருக்க முடியாது.." என்றவன் குரல் வெகு அழுத்தத்துடன் ஒலித்தது

"ரங்கா நான் சொல்வதை செய்" என்ற சிம்மன் வேகமாக தன் திட்டத்தை கூற,

"டன் சிம்மா.. நான் பார்த்துக்கறேன்.." என்றுவிட்டான் ரங்கன்

"எதுவானாலும் பார்த்து ஜாக்கிரதை சிம்மா"

அவன் பாதுகாப்பை மட்டுமே நினைத்தவராய் தேவநாதன் கூற, அவரை பார்த்து மெலிதாக சிரித்தவன், "இந்த சிம்மனை அழிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை பா.. நானே என்னை அழித்துக்கொண்டால் தான் உண்டு.." என்று கூறி கண்ணடிக்க,

"அபசகுனமா பேசாதே டா" என்றார் தேவநாதன் அழுத்தமாக

அதில், "சும்மா பா" என சிரித்தவன் ரங்கனை திரும்பி அழுத்தமாக பார்க்க, அவனும் சிம்மனின் பார்வை உணர்ந்து தலையாட்டினான்.

*******************

அன்று காலையும் காயத்ரி தாமதமாக தான் எழுந்தாள்..

கடந்த மூன்று நாட்களாகவே சற்று நிம்மதியாக தூங்கி எழுந்து தான் பொழுதை கழித்து கொண்டிருக்கிறாள்..

அவளுக்கு மனதில் மண்டி கிடந்த எத்தனையோ அலைப்புறுதல்களை எல்லாம் தான் ஆண் தேவதை போல் ஒருவன் வந்து தீர்த்துவைக்கிறானே..

மறுநாள் ஷூட்டிங் நினைத்தால் அவள் முகம் சற்று சுருங்க தான் செய்தது..

ஆனால் அதை நினைத்து இன்றைய மகிழ்ச்சியை கெடுத்துக்கொள்ள கூடாது என்ற எண்ணத்துடன் புத்துணர்ச்சியுடன் எழுந்தாள் காயத்ரி..

ப்ரெஷ் ஆகி சமையலறைக்கு வந்தவள் அங்கிருந்த வேலைக்கார பெண்ணிடம் காபி கலந்து வாங்கி கொண்டு வந்து உணவு மேசையில் அமர்ந்தாள்.

போனை பார்த்து கொண்டே அவள் காபி குடித்து கொண்டிருக்க, சரியாக அதே நேரம் அங்கு காலை உணவை உண்ண வந்து அமர்ந்தார் செந்தில்

அவருக்கு வேலைக்கார பெண்மணி டிபன் எடுத்துவர, அதில் அசைவ உணவு இருப்பதை பார்த்தவள், "நான் எழுந்து போனதும் அவருக்கு வைங்க கா.. இப்போ உள்ளே எடுத்துட்டு போங்க.." என்றாள் அழுத்தமாக

அவள் தான் வீட்டின் முதலாளி என அனைவருக்குமே தெரியும் என்பதால் சமையல்கார பெண்மணியும் அவள் கூற்றை எதிர்க்காமல் அதை எடுத்து சென்றுவிட்டார்..

அவர் செல்லும் வரை கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு அமர்ந்திருந்த செந்தில், அவர் உள்ளே சென்றதும் உச்சகட்ட கோபத்துடன் காயத்ரி பக்கம் திரும்பினார்..

"ஏய் என்ன டி அதிகாரம் எல்லாம் பலமா இருக்கு.. என்னையே அவமான படுத்தறயா நீ?" கோபத்தை கொஞ்சமும் குறைக்காமல் அவர் சீற,

"டென்ஷன் ஆகாதீங்க அங்கிள்.. பிபி வந்துட போகுது.. இது என் வீடு.. நீங்க வாழ்ந்துகொண்டிருப்பதே என் காசில் தான்.. நீங்க எங்களை பார்த்துக்கற வயதை எல்லாம் நாங்க தாண்டிட்டோம் அங்கிள்.. என்னால் ஹரிணியை பார்த்துக்க முடியும்.. அவள் உயிருக்கு பயந்து மட்டும் தான் நீங்க சொல்றதை கேட்டுண்டு இருக்கேன்.. மத்தபடி நான் உங்க அடிமை இல்லை.." தெளிவாக நிறுத்தி நிதானமாக காயத்ரி பேச, அவள் நிதானத்தில் ஒரு நொடி அதிர்ந்து தான் விட்டார் செந்தில்

ஆனால் நொடியில் சுதாரித்துக்கொண்டவர், "இன்னமும் அவள் உயிர் என் கையில் தான் இருக்கு காயத்ரி" என்றார் அழுத்தமாக

அவளோ குடித்து முடித்திருந்த காபி கப்பை வைத்துவிட்டு அவரை அலட்சியமாக பார்த்தவள், "அவளை ஏதாவது பண்ணினேள் என்றால் அதற்கு பின் நீங்க சொல்லும் எதையும் நான் கேட்க மாட்டேன்.. உங்களுக்கு தான் நட்டம்.. யோசிச்சுக்கோங்கோ.." என்று தெளிவாக கூற, அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தார் செந்தில்

அவள் கூறியது அனைத்தும் உண்மை தானே.

வாத்து உயிருடன் இருக்கும் வரை தானே தங்க முட்டை கிடைக்கும்.. அதை கொன்றுவிட்டு வருத்தப்பட்டு என்ன செய்ய!

இருந்தும் அவள் அவமானப்படுத்திய கோபம் ஒரு பக்கம் மனதில் கனன்று கொண்டு தான் இருந்தது..

'ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும் டி.. உன்னை பார்த்துக்கறேன்..' என்று மனதில் நினைத்துக்கொண்டவர், வெளியில் இறுக்கமான முகத்துடன் அமைதியாக அமர்ந்துவிட, அவரை அழுத்தமாக பார்த்து கொண்டே தன் அறைக்கு வந்துவிட்டாள் காயத்ரி..

உள்ளே வந்தவள் கதவை அடைத்துவிட்டு முதல் வேலையாக அக்ஷய்க்கு தான் போன் செய்தாள்..

அவன் போனை எடுத்ததுமே, "அக்ஷய் நான் அங்கிளை எதிர்த்து பேசிட்டேன்.. அவர் பதிலே சொல்ல முடியலை தெரியுமா!" என குதூகலத்துடன் கூற,

"வெரி குட் மாமி.. அப்படியே என்ன நடந்தது என தெளிவா சொல்லு பார்ப்போம்.." என்றான் அக்ஷய்

அதில் காயத்ரி நடந்தை அப்படியே கூற, எதிரில் இருந்தே காயத்ரியால் கணிக்க முடியாமல் போன செந்திலின் கோபத்தை அக்ஷய் சரியாக கணித்தான்.

"நல்லது தான் மாமி.. ஆனால் இனி தான் மேலும் ஜாக்கிரதையா இருக்கனும்.. எப்போதும் போனை கையில் வச்சுக்கோ.. எதுவானாலும் எனக்கு உடனே கூப்பிடனும் சரியா..?" என அழுத்தமாக கூறினான் அக்ஷய்

காயத்ரியின் பேச்சு செந்திலின் கோபத்தை பல மடங்கு ஏற்றி விட்டிருக்கும் என்று தான் அக்ஷய்க்கு தோன்றியது..

என்னதான் காயத்ரி உயிரை பாதிப்பது போல் எதுவும் செய்துவிட மாட்டான் என்றாலும், அவளை அடக்க வேண்டுமென அவன் வேறு எதுவும் செய்து விட கூடாதே என்ற பயம் அக்ஷய்க்கு இருந்தது.

ஆனால் காயத்ரிக்கு அது புரியவில்லை போல்.

"என்னை பயப்பட கூடாதுனு சொல்லிட்டு நீங்க பயப்படறேளே அக்ஷய்! தைரியமா இருங்கோ.. நானும் தைரியமா இருக்கேன்.." என விளையாட்டு போல் கூறிவைத்தாள் காயத்ரி

அவளை தைரியமாக பேச சொல்லி அவன் தான் கூறினான்..

ஆனால் அதே நேரம் இப்போது பின் விளைவுகள் பற்றி அவளுக்கு எப்படி புரியவைப்பபது என அவனுக்கு புரியவில்லை..

தனது அனுபவத்தால் நடக்க கூடிய பல பாதகங்களை அவன் மனம் கணக்கிட்டது..

ஆனால் எதையும் சிறு பெண் அவளிடம் கூறி அவளை பயமுறுத்த அவன் விரும்பவில்லை.

ஒருவேளை உண்மையாகவே செந்தில் பணத்திற்கு மயங்கி அமைதியாக கூட இருந்து விடலாம்.. அவளை சும்மா குழப்புவானேன் என்று தான் அவனுக்கு தோன்றியது..

"சரி தான் மாமி.. ஆனாலும் போனை எப்போதும் உடன் வைத்திரு.. எந்த நேரமானாலும் ஏதாவது பிரச்சனை என்றால் யோசிக்காமல் எனக்கு அழைத்து விட வேண்டும்.. ஓகே..?" பொறுமையாக எடுத்துச்சொல்லி அக்ஷய் முடிக்க

"சரி அக்ஷய்" என்று தானும் ஒத்துக்கொண்டாள் காயத்ரி..

மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி எந்த பிரெச்சனையும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.

அன்றும் அக்ஷய் காயத்ரி சம்மந்தப்பட்ட காட்சிகள் அந்த படத்திற்கென வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் எடுத்துக்கொண்டிருந்தனர்.

ஒரு இடைவெளியில் அக்ஷய் காயத்ரி இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, அவனை பார்க்க வந்தாள் மிருதுளா..

அவளை தூரத்திலேயே பார்த்த அக்ஷய் "ஒரு நிமிஷம் மாமி" என்றுவிட்டு எழுந்துவிட்டான்..

அதற்குள் அவனை பார்த்துவிட்டு அவன் அருகில் வந்த மிருதுளா அவனை எப்போதும் போல் அணைக்க வர, சட்டென யார் கவனைத்தையும் கவராமல் பின்னால் நகர்ந்துவிட்டான் அக்ஷய்

"நோ ஹக் மிரு" என அழுத்தமாக அதே நேரம் தாழ்ந்த குரலில் அவன் கூற, அவளுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் அவன் வார்த்தையை மீறாமல் அமைதியாக நின்றுவிட்டாள்..

என்று தன்னவளுக்கு இது போன்ற செயல்கள் பிடிக்கவில்லை என்று புரிந்ததோ அதில் இருந்தே அவள் கண் முன் அக்ஷய் எந்த பெண்ணையும் அணைத்தெல்லாம் பேசுவதில்லை..

அது அவளுக்கு ஒரு சங்கடத்தை கொடுக்கும் என்பதால் அந்த செயலையே அவள் முன் முற்றிலுமாக தவிர்த்து விட்டான் அக்ஷய்..

அவன் உடல் உயிர் அனைத்தும் அவளுக்கானது தானே..

அவளுடன் வாழ வழி இல்லாவிட்டாலும் கடைசி வரை அவளை நினைத்துக்கொண்டு தான் வாழ்வது என அவன் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டானே..

"பேசணுமா மிரு?" என்று அக்ஷய் கேட்க, அவள் ‘ஆம்’ என்பது போல் தலை மட்டும் அசைத்தாள்..

"இரு மாமி வரேன்" என காயத்ரி புறம் திரும்பி கூறியவன்,

"வா மிரு" என அவளை அழைத்துக்கொண்டு தனியாக வந்தான்..

அவர்கள் செல்வதை பார்த்த காயத்ரியின் புருவம் ஒரு நொடி யோசனையுடன் சுருங்கியது..

மிருதுளாவை அவளுக்கு அடையாளம் தெரிந்தது..

அவளுடன் அக்ஷய்க்கு காதல் என்று தானே நியூஸ் வரும்.

உண்மை, பொய் என எதுவும் அக்ஷய் கூறியதில்லை..

சிறிது நேரம் யோசித்தவள் எதுவா இருந்தால் தனக்கென்ன என்று ஒரு தோள் குலுக்கலுடன் திரும்பி விட்டாள்

மிருதுளாவுடன் தனியாக வந்த அக்ஷய் "என்ன விஷயம்" என அவளிடம் கேட்க, அவனுக்கு சற்று நிம்மதி தரும் விஷயத்தை தான் அவள் கூறினாள்..

"ஓகே மிரு.. ரொம்ப சந்தோசம்.. காங்கிராட்ஸ்.." என அவன் கைநீட்ட, அதை பற்றி குலுக்கியவள்

"தேங்க்ஸ் அக்ஷய்" என மலர்ந்த புன்னகையுடன் கூறிவிட்டு கிளம்பினாள்..

அக்ஷய் மீண்டும் வந்து காயத்ரி அருகில் அமர, அவனை திரும்பி பார்த்தவள், "அவங்க ரொம்ப அழகா இருக்காங்க அக்ஷய்" என்றாள்

அவள் கூற்றில் இதை ஏன் தன்னிடம் கூறுகிறாள் என்று புரியாமல் அக்ஷய் அவளை பார்க்க, "நீங்க அவங்களை விரும்பறீங்களா? உங்க இரண்டு பேரையும் சேர்த்து நிறைய நியூஸ் வருமே.. ரொம்ப அழகா இருக்கு உங்க ஜோடி பொருத்தம்.." அவள் பாட்டிற்கு சாதாரணமாக கூற, அவன் உடலோ வெகுவாய் இறுகி போயிற்று

"அந்த பேச்சு வேண்டாம் மாமி" கொஞ்சமும் இறுக்கம் மாறாமல் அவன் கூற, அவன் திடீர் இறுக்கத்தின் காரணம் புரியாமல் திருதிருவென விழித்தாள் காயத்ரி

"ஏன் அக்ஷய்? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?" என மீண்டும் காயத்ரி கேட்க,

"ப்ளீஸ் மாமி.. தயவு செய்து பேசாதே.." என்றவன் குரலில் அத்தனை வலி

அதன் காரணம் புரியாவிட்டாலும் அவள் அதற்கு மேல் பேசவில்லை..

அவனை கஷ்டப்படுவது புரிந்து அமைதியாகி விட்டாள்..

அவனுக்கோ தன்னவளே தன்னை மற்றொரு பெண்ணுடன் இணைத்து பேசுகிறாள் என்ற கோபம், அதை காண்பித்து தொலைக்க முடியாத நிலையில் இருக்கும் வேதனை, எல்லாம் சேர்ந்து அவனை படுத்தி எடுத்தது..

ஏற்கனவே அக்ஷய் தாங்க முடியாத தவிப்பில் இருக்க, மறுநாள் யாரும் எதிர்பார்க்காமல் வந்த செய்தி அவன் நிம்மதியை மேலும் குலைத்தது..

தீண்டும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9:

காலையில் ஷூட்டிங் கிளம்பிக்கொண்டிருந்த அக்ஷய் அறைக்கு வேகமாக வந்தான் சரண்..

"எ.கே போன் பார்த்தியா?" என அவன் பதட்டத்துடன் கேட்க,

"இல்லையே டா.. என்ன ஆச்சு?" என்றான் அக்ஷய் முகம் சுருங்க,

"இதை பாரு.." என சரண் தன் போனை அவனிடம் நீட்ட, குழப்பத்துடன் அவன் போனை வாங்கி பார்த்தவனுக்கு தூக்கி வாரி போட்டது..

அதில் அவனையும் காயத்ரியையும் இணைத்து தப்பு தவறாக யாரோ சோசியல் மீடியாவில் பரப்பி வைத்திருந்தனர்.

அவர்கள் இருவரும் ஊட்டியில் சில சமயங்கள் சேர்ந்து தனியாக பேசி கொண்டிருந்த புகைப்படங்களுடன், அன்று எடுக்கப்பட்ட முத்தக்காட்சி புகைப்படமும் இருந்தது..

அது என்னவோ அவர்கள் பொதுவெளியில் உண்மையாக ரொமான்ஸ் செய்தது போல் சித்தரித்து இருந்தனர்..

"ஏற்கனவே மிருதுளாவை காதலிப்பதாக கூறப்படும் அக்ஷய் குமார் இப்போது தன்னுடன் புதுப்படத்தில் நடிக்கும் கதாநாயகியுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்.."

"வந்த முதல் படத்திலேயே நாயகனை கைக்குள் போட்டுக்கொண்ட நாயகி"

"மிருதுளா நிலை என்ன?"

இப்படி பல தலைப்பில் அந்த செய்தி பரவி கொண்டிருந்தது..

அதை பார்த்ததும் எரிச்சலுடன் போனை தூக்கி கட்டிலில் எறிந்தான் அக்ஷய்..

"திருந்தவே மாட்டானுங்களா டா?" எரிச்சலுடன் அக்ஷய் கத்த,

"எப்போதும் நடப்பது தானே எ.கே.. ஆனால் காயத்ரியை நினைத்தால் தான்.." யோசனையுடன் சரண் நிறுத்த,

"எனக்கும் அதே பயம் தான் டா.. இது என்னுடைய ஒவ்வொரு படம் வரும் போதும் நடக்கும் விஷயம் தான்.. எனக்கு ஒன்னும் இல்லை.. ஆனால் அவளால் நிச்சயம் ஏத்துக்க முடியாது டா.. நடிகர்கள் என்றால் தனிப்பட்ட வாழ்க்கையே இருக்க கூடாதா.. ஒரு பெண்ணை பற்றி ஒன்றுமே தெரியாமல் அவள் சினிமாவில் நடிக்கிறாள் என்னும் ஒரே காரணத்துக்காக அவள் பெயரை கெடுக்கறாங்களே டா.."

மனதில் இருந்த கோபத்தில் புலம்பி கொண்டே தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் அக்ஷய்..

"டென்ஷன் ஆகாத எ.கே.. நீயே இப்படி புலம்பினால் காயத்ரிக்கு யார் ஆறுதல் சொல்ல.. முதலில் அவளுக்கு போன் போடு.." என்று சரண் கூற, நிலைமையின் தீவிரம் உணர்ந்து அக்ஷய்யும் காயத்ரிக்கு அழைத்து பார்த்தான்

அவள் போன் எடுக்கப்படாமல் இருக்க, அவனது பயம் மேலும் அதிகரித்தது.

"எடுக்கமாட்டேங்கறா சரண்.. அவள் இதை பார்த்தாளா? ஒன்றும் புரியலையே டா.." என புலம்பியவன் ஏதோ தோன்ற வேகமாக நிமிர்ந்தான்

"சரண் இன்னிக்கு அவளை சீக்கிரம் ஷூட் வர சொல்லி இருந்தாங்க.. அதான் நானும் சீக்கிரம் கிளம்பினேன்.. அநேகமா அவள் போய் இருப்பா.. நம்ம டைரக்டருக்கு கால் பண்ணி அவள் வந்துட்டாளாணு கேளு.." என்று அக்ஷய் கூற, அடுத்த நொடி டைரக்டருக்கு அழைத்து பேசினான் சரண்..

நல்லவேளையாக காயத்ரி அங்கு தான் இருக்கிறாள் என்று இயக்குனர் கூற, அதை அப்படியே அக்ஷயிடம் கூறினான் சரண்..

அதில் மனதில் தோன்றிய நிம்மதியுடன் போனை கையில் வாங்கிய அக்ஷய், இப்போது பரவி இருக்கும் வதந்தியை அவரிடம் கூறியவன், "நான் வரும் வரை விஷயம் காயத்ரிக்கு தெரியாமல் பார்த்துக்கோங்க.. நான் வந்து சொல்லிக்கறேன்.." என்று அக்ஷய் கூற, காயத்ரி பற்றி அவருக்கும் தெரியும் என்பதால்

"நான் பார்த்துக்கறேன் எ. கே.. நீங்க வாங்க.." என்றுவிட்டார் அவர்

போனை வைத்துவிட்டு வேகமாக எழுந்த அக்ஷய் "போகலாம் டா" என்று கூறிக்கொண்டே முன்னால் நடக்க, சரணும் அவனை தொடர்ந்தான்..

ஹாலிற்கு வந்ததும் ஒரு நொடி தயங்கி நின்ற அக்ஷய், சரணை திரும்பி பார்த்தான்

இன்னும் வெளியே போகும் அளவு அவன் தயாராகவில்லை என்று பார்த்ததும் புரிந்தது..

இன்னும் சாப்பிட்டும் இருக்க மாட்டானே என்று தோன்ற, "சரண் நீ கிளம்பி சாப்பிடுட்டு வா.. நான் முன்னால் போறேன்.." என்றுவிட்டு அக்ஷய் நடக்க தொடங்கிவிட,

"நானும் வரேன் எ. கே.." என்று கூறிக்கொண்டே அவனை தொடர்ந்து வாசல் வரை வந்தான் சரண்..

அவன் குரலில் திரும்பிய அக்ஷய், "நோ சரண்.. சொல்வதை செய்.." என்று அழுத்தமாக கூறிவிட்டு சென்றுவிட்டான் அக்ஷய்..

எப்படிப்பட்ட சூழலிலும் அனைவரை பற்றியும் யோசிக்க அவனால் மட்டும் தான் முடியும்..

அவன் அக்கறை புரிந்து நெகிழ்ச்சியுடன் புன்னகைத்து கொண்டே உள்ளே சென்றான் சரண்..

வீட்டில் இருந்து கிளம்பி தானே காரை ஓட்டி கொண்டு வந்த அக்ஷய் அடுத்த இருபதாவது நிமிடம் ஸ்பாட்டில் இருந்தான்..

அவன் வந்தபோது காயத்ரி ஏதோ காட்சி நடித்துக்கொண்டிருக்க, அவள் அதை முடிக்கும் வரை அங்கேயே ஒரு பக்கம் அமைதியாக அமர்ந்துவிட்டான் அக்ஷய்..

ஐந்து டேக் போன அந்த ஷாட்டை ஒருவழியாக முடித்துவிட்டு அவனிடம் வந்த காயத்ரி, "குட் மார்னிங் அக்ஷய்" என மலர்ந்த புன்னகையுடன் கூறிக்கொண்டே அவன் அருகில் அமர,

"மார்னிங் மாமி.. உன்னுடன் கொஞ்சம் பேசணும்.. வா.." என எழுந்துவிட்டான் அக்ஷய்

அவன் குரலில் இருந்த தடுமாற்றம் எதையோ உணர்த்த, எதிர் கேள்வி கேட்காமல் அவனை தொடர்ந்தாள் காயத்ரி

அக்ஷய் கேரவென் அங்கு தான் இருந்தது..

அவன் நேராக அதற்குள் செல்ல, காயத்ரியும் உள்ளே வந்தாள்..

அவள் வந்ததும் கதவை அடைத்தவன், தன் போனை அமைதியாக அவளிடம் நீட்ட, "என்ன ஆச்சு அக்ஷய்?" என சிறு பயத்துடன் கேட்டுக்கொண்டே அதை வாங்கியவள், அதில் இருந்த செய்தியை படிக்க ஆரம்பித்தாள்..

அந்த செய்தியின் தலைப்பை படித்ததுமே அவளுக்கு தூக்கி வாரி போட, "எ.. என்ன இது..?" என்றாள் காயத்ரி சிறு நடுக்கத்துடன்

"முழுதா படித்துவிடு மாமி.." என குரலில் எந்த உணர்வும் காட்டாமல் அக்ஷய் கூற, அதில் வேறு வழி இல்லாமல் முழுதாய் அதை படித்தாள் காயத்ரி

படிக்க படிக்கவே அவள் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக கலங்க தொடங்கியது..

கடைசியாக முழுதாக படித்து முடித்தவள், "என்ன அக்ஷய் இது? ஏன் இப்படி எல்லாம் எழுதி வச்சிருக்கா? நாம ஏதோ நடு ரோட்டில் தப்பா நடந்துண்டது போல்.. ஐயோ இனி நான் எப்படி வெளியே போவேன்..! எல்லாரும் அசிங்கமா பார்ப்பாளே.. ஏன் இப்படி என் மானத்தை வாங்கினேள்..?" அவள் பயத்துடன் அனற்றுவதை வேதனையுடன் பார்த்து கொண்டு நின்றிருந்த அக்ஷய், கடைசியாக அவள் அவனையே கேள்வி கேட்கவும் திகைத்து விழித்தான்

"நான் ஒன்னும் பண்ணலை மாமி" அவசரமாக மறுத்தவன், அவள் பதிலே சொல்லாமல் மீண்டும் அந்த செய்தியை பார்த்து கண் கலங்கவும், முதல் வேலையாக அவள் கையில் இருந்து போனை பிடுங்கினான்

அவன் பிடுங்கிய வேகத்தில் கலங்கிய கண்களுடன் நிமிர்ந்தவள், "ஏன் இப்படி பண்ணினேள்?" என மீண்டும் அவனையே கேட்க,

"ஏய் மாமி நான் ஒன்னும் பண்ணலை டி.. நான் சொல்றதை கொஞ்சம் கவனி.." என்றான் அக்ஷய் அவள் தோளை பிடித்து உலுக்கி

அவளோ, "தொடாதேள்" என வேகமாக பின்னால் நகர, ஒரு பெருமூச்சுடன் கையை எடுத்தவன்

"கொஞ்சம் உட்காரு மாமி.. பொறுமையா இரு.. நான் சொல்லுறேன்.." என நிதானமாக கூற,

"நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.. என் மானத்தை வாங்கி வச்சிருக்கா.. எனக்கு வாழவே பிடிக்கலை.. ரொம்ப அசிங்கமா இருக்கு.. இனி நான் வெளியே போனா என்னை எல்லாரும் அசிங்கமா தானே பார்ப்பா.. நான் என் அம்மா அப்பா கூடவே போறேன்.." திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் வாய்க்கு வந்ததை அவள் புலம்ப, அவள் மன நிலையை சரியாக புரிந்துகொண்ட அக்ஷய்கு அவள் வார்த்தைகள் பெரும் வலியை கொடுத்தது

அதை முயன்று அவன் கட்டுப்படுத்தி கொண்டிருக்கும் போதே, அவள் கதவை திறக்க போய்விட, அவளை வேகமாக இழுத்தான் அக்ஷய்..

அவனுடன் வராமல் அவள் ஒரேடியாக திமிர, ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கு பேசி புரியவைக்க முடியாது என்று உணர்ந்து ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்து விட்டான் அக்ஷய்..

அப்போது அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை..

தன்னிலை மறந்து அவள் இப்படியே வெளியே போனால் அவ்வளவு தான்..

இப்போது அவள் நினைத்து பயந்த அனைத்தும் நடந்து விடும்..

அவளை கட்டுக்குள் கொண்டுவர தான் அடித்தான்..

அது சரியாகவே வேலையும் செய்தது..

அவன் அறைந்த வேகத்தில் சுள்ளென்று எறிந்த கன்னத்தை பிடித்துக்கொண்டு அதிர்ச்சியுடன் காயத்ரி அவனை பார்க்க, சிறு பிள்ளை போல் அவள் விழித்ததில் மனம் இளக அவளை பார்த்தவன், "சாரி மாமி.. எனக்கு வேற வழி தெரியலை.. இப்படி உட்காரு.. கொஞ்சம் நான் சொல்வதை கேளு.." என்றவன் அவள் திகைத்த நிலையை பயன்படுத்தி தானே அவளை பிடித்து சோபாவில் அமரவைத்துவிட்டு தானும் அவள் அருகில் அமர்ந்தான் அக்ஷய்

"இங்கே கவனி மாமி" என்றவன் அவள் முகத்தை பிடித்து தானே தன் கண்களை பார்க்க வைத்தான்..

"இதெல்லாம் சினிமா உலகில் சகஜம் மாமி.. நான் ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் அந்த நடிகையுடன் சேர்த்து இது போல் வதந்திகள் வர தான் செய்யும்.. சில சமயம் சினிமா ப்ரோமோஷனுக்காக பட தரப்பில் இருந்தே கூட செய்வது உண்டு.. இதை எல்லாம் அவமானம் என்று நினைத்தால் இங்கு யாருமே நடிக்க முடியாது மாமி.. புரியுதா டா.." தெளிவாக கூறிவிட்டு மென்மையாக அக்ஷய் கேட்க,

"நேக்கு அசிங்கமா இருக்கு" என்றாள் காயத்ரி உடல் எல்லாம் கூசி போய்,

"இதில் அசிங்கப்பட ஒன்னும் இல்லை என்று தான் மா சொல்லுறேன்.. இதெல்லாம் சும்மா பொழுது போகாமல் செய்வது மாமி.. வேறு ஏதாவது செய்தி வந்தா இதை மறந்துட்டு போயிட்டே இருப்பாங்க.. ஏன் இந்த படம் முடிந்து நானே அடுத்த படத்தில் நடிக்க போனால், அந்த நடிகையுடனும் இதே போல் தான் செய்தி வரும்.. இதற்கு யோசித்தால் யாருமே நடிக்கவே முடியாது.. அப்புறம் நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேன் சொல்லு.." சீரியஸ்ஸாக பேசிக்கொண்டிருந்தவன் விளையாட்டாக முடிக்க, அவன் எதிர்ப்பார்த்த புன்னகை தான் அவள் முகத்தில் வரவில்லை

"என்னவோ சொல்றேள் அக்ஷய்.. ஆனால் நேக்கு கஷ்டமா தான் இருக்கு.. இந்த படம் முடிச்சுட்டு நான் வெளியே வேலைக்கெல்லாம் போனால் இதை பத்தி பேசமாட்டாளா.. முதலில் போக முடியுமா.. அந்த ஆள் என்னை விடுவானா.. எந்த முடிவும் எடுக்க முடியாமல் ஹரிணி வேற அவனிடம் மாட்டிண்டு இருக்கா.. எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணுறேளா அக்ஷய்..?" ஏதேதோ நினைத்து குழப்பிக்கொண்டவள் கேள்வியுடன் நிறுத்த,

"என்ன மாமி?"என்றான் அக்ஷய் அவளை கூர்மையாக பார்த்துக்கொண்டே,

"நாம இனிமே இப்படி நெருக்கமா சுத்த வேண்டாம் அக்ஷய்.. கொஞ்சம் ஒதுங்கியே இருப்போம்.. ப்ளீஸ்..” என்று மெதுவாக காயத்ரி கூற,

"உன் பாதுகாப்பிற்காக தான் மாமி நான் உன்னுடன் இருக்கேன்" என்றான் அக்ஷய் குரலில் நிறைந்துவிட்ட வலியுடன்

"அந்த பாதுகாப்பை கொஞ்சம் தள்ளி இருந்தே கொடுங்களேன்.. இதை கேட்க நேக்கு உரிமை இல்லை தான்.. ஆனால் எனக்கு வேறு வழியும் தெரியலை.. ப்ளீஸ் அக்ஷய்.." கைகூப்பி அவள் வேண்ட

"கையை கீழே போடு மாமி" என கோபத்துடன் தட்டி விட்டான் அக்ஷய்..

அவள் செயலும் வார்த்தையும் அவனுக்கு எத்தனை வேதனையை கொடுத்தது என்பது அவன் மட்டுமே அறிந்த ஒன்று..

அவள் கேட்டால் உயிரை கூட சந்தோசமாக அவன் கொடுத்துவிடுவான்..

அவளை ராணிபோல் பார்ப்பவனிடம் போய் கைகூப்பி அவள் வேண்டினால் அவனும் கோபப்படாமல் என்ன செய்வான்.

முதற்கட்ட கோபம் குறைந்ததும் அவன் மனம் அடுத்த நொடி தன்னவளின் நிலை பற்றி தான் யோசித்தது..

அவன் விருப்பம் காதல் எல்லாம் அவளுக்கு தெரியாதே..

அவள் இடத்தில் இருந்து பார்க்கும் போது அவள் செய்வது சரி தான்..

இருந்தும் மனம் கேட்காமல், "என்னை பிரென்ட் என்று சொன்னாயே மாமி.. அதை நீ உணர்ந்து சொல்லவே இல்லையா..?" தன்னவளின் நட்பு கூட தனக்கு இல்லையோ என்ற பரிதவிப்புடன் அக்ஷய் கேட்க,

"உணர்ந்து தான் சொன்னேன் அக்ஷய்.. ஆனால் இங்கு நட்பு கூட தவறா தானே பேசப்படறது.." என்றாள் காயத்ரியும் மெதுவாக

தான் இத்தனை தூரம் கூறியும் இந்த வதந்தியை சாதாரணமாக அவளால் ஒதுக்க முடியவில்லை என்று அக்ஷய்க்கு புரிந்தது..

சில நொடிகள் எடுத்து தன் மனதை கட்டுப்படுத்தி கொண்டவன், "சரி மாமி.. உன் இஷ்டம்.. நான் தள்ளியே இருக்கேன்.. நான் எங்கு இருந்தாலும் உன் மீது என் கண் இருக்கும்.. பயப்படாமல் இரு.." என்றவன் ஏதோ யோசித்தவனாக,

"உன் அங்கிள்ளிடம் இந்த செய்தி உன் மனதை பாதித்தது போல் காட்டிக்கொள்ளாதே மாமி.." என்று சேர்த்து கூற,

அவன் கூறியதை அவள் ஒழுங்காக கவனித்தாலோ இல்லையோ தலையை மட்டும் உருட்டி வைத்தாள்..

"முகத்தை அலம்பிக்கொண்டு வா மாமி.. நான் முன்னால் போறேன்.." என்றுவிட்டு வேகமாக வெளியே வந்துவிட்டான் அக்ஷய்

அவன் சென்றதும் அவன் கூறியது போலவே முகத்தை அலம்ப சென்றவளுக்கு தனிமை கிடைத்ததும் மீண்டும் அழுகை வந்தது..

ஏதோ அவள் அவனை வளைத்து போட்டது போல் அல்லவா எழுதி வைத்திருந்தனர்..

என்ன தான் அக்ஷய் கூறினாலும் உள்ளுக்குள் உடல் கூசுவதை அவளால் தவிர்க்கவே முடியவில்லை..

பல முறை தண்ணீர் தெளித்து முகத்தை அலம்பியவள் குறைந்தது அப்போதைக்கேனும் மனதை நிலை படுத்தி கொண்டு வெளியே வந்தாள்..

அக்ஷய் வெளியே வந்ததுமே அவனிடம் வந்த இயக்குனர் காயத்ரி மனநிலை பற்றி கேட்க, "பரவாயில்லை சார்.. ரொம்ப பீல் பண்ணுறா.." என்றான் அக்ஷய் வேதனையுடன்,

"இருக்க தான் செய்யும் இல்லையா எ.கே.. இப்போ தான் பீல்டுக்குள்ள வந்திருக்காங்க.. ஆரம்பத்தில் கஷ்டமா தானே இருக்கும்.. இந்த செய்திகளுக்க்கு மரியாதை கொடுக்க தேவை இல்லை என போக போக தானே சார் புரியும்.."

'போக போக வா.. இந்த ஒரு படம் முடிவதற்க்குள்ளேயே அவள் எதிர்காலத்திற்கு ஏதாவது வழி செய்து விட வேண்டும்' என்று நினைத்துக்கொண்டவன்

"எஸ் சார்" என்று மட்டும் வெளியே கூறி வைத்தான்..

மீண்டும் வந்த காயத்ரி அக்ஷய்யை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு வேறு பக்கம் சென்று அமர்ந்துவிட, அவனுக்கு தான் மனம் எல்லாம் வலித்தது..

அவள் அவன் புறம் திரும்பாமலே இருந்தது வேறு அவனுக்கு வசதியாக போய் விட, ஒரு கண்ணாடியை போட்டுகொண்டு நொடி பொழுதும் வீணாக்காமல் தன்னவளையே தான் பார்த்து கொண்டிருந்தான் அக்ஷய்..

***************

வெளியே சென்றிருந்த ரஞ்சித் அன்று வீட்டிற்குள் வந்த போதே ஒருவன் அவனிடம் வந்து, "சார் உன்னை கூப்பிடறாங்க ரஞ்சித்" என்றுவிட்டு சென்றான்..

அவன் நேராக கரிகாலன் அறைக்குள் செல்ல, "வா ரஞ்சித்.. உட்காரு.." என்று அவர் கூற, அவருக்கு எதிரில் சென்று அமர்ந்தான் ரஞ்சித்,

"ஒரு பெரிய டீல் வந்திருக்கு.. இது மட்டும் வெற்றிகரமா முடிந்தால் நமக்கு நிறைய லாபம் வரும்.. ஆனால் ஒரே ஒரு குழப்பம்.." என அவர் நிறுத்த,

"என்ன சார்" என்றான் ரஞ்சித்,

"இது ஏதோ கம்ப்யூட்டர் சம்மந்தமான டீல், அது தெரிந்த ஆள் மட்டும் தான் வரணும்னு சொல்லுறாங்க.. நம் ஆட்களில் உனக்கு மட்டும் தான் அதெல்லாம் தெரியும்.. உன் உடன் கூட யாரும் வர முடியாது.. தனியா போய்ட்டு வரியா.. பரவாயில்லையா..?"

அவன் என்ன பதில் சொல்லுவான் என்று தெரிந்து கொண்டே, ஏதோ அவன் உணர்வுக்கு மரியாதை கொடுப்பது போல் அவர் கேட்டுவைக்க, "இதில் என்ன சார் இருக்கு.. நான் பார்த்துக்கறேன்.. என்ன வேலை என்று டீடெயில்ஸ் சொன்னாங்களா?" என்று கேட்டான் ரஞ்சித்

"ஏதோ பேங்க் சிஸ்டம் ஹேக் பண்ணனும் என்று சொன்னாங்க ரஞ்சித்.. நேரில் டீடெயில்ஸ் சொல்வதா சொல்லி இருக்காங்க.."

"ம்ம் ஓகே சார்.. எப்போ போகணும்..?"

"இன்னிக்கு நைட் பன்னிரண்டு மணிக்கு மேல் வர சொல்லி இருக்காங்க.. நான் அட்ரஸ் தரேன்.." என்றவர் செல்ல வேண்டிய இடத்தை அவனிடம் கூற,

"ஓகே சார்" என்று வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான் ரஞ்சித்..

தன்னை எந்த கேள்வியும் கேட்காமல் எழுந்து செல்லும் ரஞ்சித்தை பார்த்தவருக்கு கொஞ்சமும் பாசம் வராமல் அவர் முகம் இகழ்ச்சியுடன் புன்னகைத்து கொண்டது..

வந்திருந்தது அத்தனை பெரிய டீல்..

ஏற்கனவே கிட்டத்தட்ட பத்து கோடி அவர் அக்கௌன்ட்டிற்கு வந்து விட்டது..

இன்னும் டீல் முடிந்தால் மேலும் அறுபது கோடி கொடுப்பதாக சொல்லி இருந்தனர்..

அதனால் தான் வருபவன் தனியாக தான் வர வேண்டும் என்று கூறியும் ரஞ்சித் உயிருக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்துவிட்டார் கரிகாலன்..

அவனுக்கு என்ன ஆனால் அவருக்கு என்ன.. அவருக்கு பணம் வந்தால் சரிதான்..!

தீண்டும்..


 
Status
Not open for further replies.
Top