All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"அன்பென்ற மழையினிலே" - முன்னோட்டத்திரி

Status
Not open for further replies.

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லாஸ்...

இந்த கதை என்னோட மைண்ட்ல ரொம்ப நாளா ஓடிட்டே இருக்கு ..அதுனால ஒரு சின்ன டீசர் போட்டு இன்னைக்கு ஆரம்பிக்கலாம்ன்னு நினைக்கறேன்..

இன்னைக்கு என்ன ஸ்பெஷல் டே அப்படின்னா... எங்களோட ஃபேமிலி பர்த்டே.. ரொம்ப யோசிக்காதீங்க ..

அந்த காலத்துல பள்ளிக்கூடத்துல சேர்க்கிறதுக்கு, கையால தலையை சுத்தி மறுபக்க காதை தொட சொல்லுவாங்க .. அப்படி தொடமுடியாதவங்களை சேர்த்துக்க மாட்டாங்க.. அப்போ சில பேர் பிறந்த தேதியை மாற்றி குடுப்பாங்க.. அப்படி குடுத்ததுதான் இந்த டே.. என்னோட அம்மாக்கு தான் இந்த டேட் அப்படின்னு பார்த்த , என்னோட அத்தை , மாமா இப்படி 3-4 பேருக்கு இன்னைக்கே பொறந்தநாளாம்.. அதுனால அதை கொண்டாடும் விதமாய் நான் முன்னே யோசித்த கதையின் டீசர் இதோ உங்களுக்காக............


அன்பென்ற மழையினிலே...

கதை மாந்தர்கள் :

  • சித்தார்த்
  • வருண்
  • அர்ஜூன்
  • சிவானி
  • அக்ஷ்ரா
  • விந்தியா
நோட்; இதுல யாரோட பேருக்கு எந்த போட்டோ சரியா இருக்கும் என்று கெஸ் பண்ணுங்க.. ஓகே வா...
அதை கருத்திரியில் சொல்லுங்கோ...

6995
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


முன்னோட்டம் -1 :

நகரத்தில் உள்ள மிகப்பெரிய மண்டபம்.. அதன் அலகாரங்களும் செல்வசெழிப்புகளும் அங்கே திருமணம் செய்ய விருக்கும் மணமக்களின் செல்வநிலையை பறைசாற்றியது.. அதோ இதோ என்று நீண்டுகொண்ட சடங்குகள் முடிந்து அங்கே மணவறையில் அமர்ந்திருந்த மணமகன்ளோ ஐயர் கூறிய மந்திரங்களை சரியாக உச்சரித்தபடி இருக்க , பேரழகுடன் விளங்கிய மணமகள்கள் அணிவகுத்து வர, முதலில் வந்த சிவானியோ க்ரோதத்துடன் வருணை முறைத்துவிட்டு சித்தார்த் அருகில் சென்று அமர்ந்தாள். அடுத்து வந்த விந்தியாவோ கண்களில் காதலுடன் வருணின் அருகில் அமர , வருணோ அதி தீவிரமாக ஐயர் கூறியதை கேட்டுக்கொண்டு இருந்தான். அடுத்து வந்த அக்ஷராவோ மென்னகையுடன் அர்ஜூன் அருகில் அமர்ந்தாள். ஆனால் அவள் மனமோ உலைகலன் போல கொதித்துக்கொண்டு இருந்தது.. பழிவாங்கும் வெறி மனதில் அதிகரிக்க , அவள் வெறுப்புடன் மற்ற இரண்டு ஜோடிகளை பார்த்துவிட்டு , அர்ஜுனை பார்க்க திரும்பினாள். அவனை கண்டு புன்னகைக்க , அவனும் அவளை பார்த்து கண்சிமிட்ட , வெட்கம் என்னும் பேரில் தலை குனிந்து கொண்டாள்..


இப்படி இவர்கள் வெவ்வேறு மனநிலைகளுடன் அதை அறியாமல் அவர்கள் சந்தோஷம் இதுவென எண்ணி , அவர்களை எல்லாம் பார்த்தபடி அங்கே இரண்டு ஜீவன்கள் ஆனந்த கண்ணீரில் மிதந்து கொண்டு இருந்தன..


*********************************************

" ஐ லவ் யு......... சித்தார்த்... " என்று சித்தார்த்திடம் மண்டியிட்டு கையில் மோதிரத்துடன் கண்களில் காதலுடன் வினவினாள் அக்ஷ்ரா..

சித்தார்த் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க , எழுந்தவள் அவன் அருகே சென்று அவனது இதழ்களை தன்னுடைய இதழ்கள் கொண்டு சிறை செய்தவளை அதிர்ச்சியுடன் பார்க்க, அவளோ அவனது காதருகில் எம்பி , " இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சித்து...பிறந்தநாள் பரிசு ஓகே வா " என்று அவனிடம் கேட்டுவிட்டு அவனது மார்பில் சாய்ந்தாள்..

சித்தார்த்தின் கைகள் அவனை அறியாமல் அக்ஷ்ராவை தன்னுடன் அணைத்துக்கொண்டது..

*************************************************

"மச்சி .. நீ எப்போ உன்னோட காதலை சொல்லபோற.." என்று கேட்ட அக்ஷ்ராவிடம் , விரக்தி சிரிப்பை சிந்தியவள் அவளது கேள்வியில் இருந்து தப்பித்து பாத்ரூமிற்குள் சென்றாள்.

'சொல்லும்முன்னே கருகிய காதலடி என் காதல்..' என்று அழுது கரைந்தவள் , தனது விதியை எண்ணி நொந்துகொண்டாள் விந்தியா..

*************************************************

"ஹேய் அர்ஜூன் ... என்னடா தேவதை கூட கனவா ?" என்று அவனை கலாய்த்தபடி அவனது படுக்கையறைக்குள் நுழைந்தனர் சித்தார்த் மற்றும் வருண்..


"ஹேய் வாங்கடா.. அதெல்லாம் இல்லை .." என்று சிறிது வெட்கத்துடன் கூறியவனை கண்டு நகைத்தனர் அவ்விருவரும்...

"ஆண்களும் வெட்கபடுவார்கள் என்று சொல்லீருக்காங்க.. அதுக்குனு இப்படியா ... வெட்கம் அப்படின்னா எப்படி இருக்கும் என்பதே மறந்துபோற அளவிற்கு நீ பண்ணுற" என்று அவனை சீண்ட ,அர்ஜுனோ அவர்களை சமாளித்துவிட்டு குளியலறைக்குள் சென்று தன் இனிய தேவதையை நினைத்து பார்த்தான்.

அவள் வருவாளா ...

என் நண்பன் இதயத்தோடு இதயம் கோர்க்க
அவள் வருவாளா...


என்று குளியலறைக்கு வெளியே நின்று பாடியபடி அர்ஜுனை சீண்டினர்..

*******************************************
நடந்தவை எல்லாம் நன்மைக்கே...


நடந்துகொண்டு இருப்பவை எல்லாம் நன்மைக்கே ...

நடப்பவை எல்லாம் நன்மைக்கே......



யாருக்கு நன்மை .... யாருக்கு தீமை ... இந்த அறுவரின் வாழ்க்கை காதலால் எப்படி மாறுகிறது என்பதை இனிவரும் அத்தியாயங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.........

***********************************************
ஹாய் செல்லாஸ்...


முதல் முன்னோட்டம் எப்படி இருந்தது என்று உங்களது கருத்துகளை பதிவிடுங்கள்..

"அன்பென்ற மழையினிலே..."- கருத்துத்திரி

 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சின்ன டீ :

"மச்சான் .. என்னடா மறுபடியும் உன்னோட தேவதை கூட டூயட் பாட போய்ட்டியா..?" என்று கேட்ட வருணை பார்த்து சிரித்துவிட்டு ,
" இல்லை டா .. இப்போ அவ எங்க எப்படி இருப்பான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.. "

"அடப்பாவி .... அவ முகமே உனக்கு தெரியாதா.. குஷ்டகாலம் தான் உனக்கு...
அவ பேராவது தெரியுமா ?"

"ஆரா.. அதுதான் டா நான் அவளுக்கு வச்ச பேர் .. " என்று அர்ஜூன் ஆர்வத்துடன் கூற , 'விளங்கிடும்' என்ற பாவனையுடன் அவனை மேலும் கீழும் பார்த்தான் வருண்..

"ஆரா யாரு ..."

"ஆரா என்னோட உசிறு டா .. என்னோட கனவுல வந்து கொஞ்சம் கொஞ்சமா என்னோட இதயதுக்குள்ள வந்து இப்போ என்னோட உடம்பு முழுக்க பரவி கிடக்கா டா... "

"சூப்பர் டயலாக் மச்சி.. மைனா படத்துல சுருளி இப்படிதான் சொல்லிக்கிட்டு திரிவான் .. பார்த்து மச்சி ..." என்று நண்பன் மீது உண்மையான அக்கறையில் கேலியுடன் கூறினான்..

"உனக்கும் லவ் வந்த புரியும் டா ... என்னோட உணர்வுகள் .. எல்லாமே ..." என்று வருணை பார்த்து சொல்ல , "அதெல்லாம் வந்த பார்க்கலாம்" என்று தோளை குலுக்கியவனை பார்த்து , " நீ எவ பின்னாடியோ லோலோன்னு சுத்த போற.. அது மட்டும் எனக்கு நல்ல தெரியுது ..." என்று அர்ஜூன் கூற ,
"யாரு ... நானு .. போட போட ... நடக்கறதை பேசுடா .. " என்று இருவரும் வெளியே சென்றனர்..

*************************************************
அர்ஜூனின் ஆரா , " அப்போ என்னோட காதல் பொய்யா... உன்னோட கண்ணுல தெரிஞ்ச காதல் எல்லாமே பொய்யா?.. சொல்லுடா .." என்று எதிரில் இருந்தவனின் சட்டையை பிடித்து உலுக்கியபடியே கேட்டாள்.. அவளது கண்கள் கண்ணீரை சுரந்தது..

"நானடி உன்ன லவ் பண்ணுனேன் .. நான் என்னைக்காவது உன்கிட்ட லவ் சொன்னேனா.. உன்கிட்ட எப்போவது தப்பா நடந்து இருக்கேனா.. நீயா வந்த.. லவ் சொன்ன .. கிஸ் பண்ணுண ... சரி நானும் வலிய வர சான்ஸை மிஸ் பண்ணாம இருந்தேன்.. நீயா என்கிட்ட வந்துட்டு இப்போ ஏதோ பெரிய இவளாட்டம் பேசுற.. நீயா ஆம்பிள்ளைசுகம் தேடி என்கிட்ட வந்ததுக்கு பேர் என்ன தெரியுமா ... "

"ஜஸ்ட் ஸ்டாப் இட்..இதுக்குமேல ஒருவார்த்தை பேசுன .. மரியாதை கெட்டுடும்.. ஏண்டா.. பொண்ணுக பிடிச்சு லவ்வை சொல்லி உங்களை கணவனா நினைச்சு பேசுன அவளை என்னவேணா சொல்லுவீங்களா.. இப்போ கேட்டுக்கோ .. உன்னைவிட தகுதியான ஒருத்தனை நான் கல்யாணம் பண்ணுவேன்.. உன் முன்னையே நான் சந்தோஷமா வாழ்ந்து காட்டுவேன்.. அதுக்கு முன்னாடி .. இப்போ நீ பேசுன பேச்சுக்கு .." என்று பளார் என்று அவனது கன்னத்தில் அறைந்தாள்.. அர்ஜூனின் ஆரா....

*****************************************
அர்ஜூன் ;

7032
********************

ஹாய் ஃபிரண்ட்ஸ்...

இந்த டீ படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க ..

"அன்பென்ற மழையினிலே"- கருத்துத்திரி
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சின்ன டீ:

"எதுக்குடி இப்படி பண்ணுன.. நான் உனக்கு என்ன பண்ணுனேன்... உன்னோட காதலை ஏத்துக்கலைன்னு இப்படி பண்ணுவியா ?" என்று தனது உச்சகட்ட கோவத்தை அடக்கியபடி கத்தினான் அவன்..

இதழ்களில் கேலி புன்னகையுடன் , தனது ஒற்றை புருவத்தை உயர்த்தி , " நான் என்ன பண்ணுனேன் சா..ர்..." என்று அப்பாவியாக கேட்டாள் ஆரா..

"நீ என்னதான் பண்ணுலை.. இப்போ நீ பண்ணிக்கிட்டு இருக்கிறது ரொம்ப அநியாயம்.. இதோட விட்டுட்டு , போய் உன்னோட புருஷனோட குடும்பம் நடத்துற வழியை பார்.. அதை விட்டுட்டு என்னோட குடும்பத்தை கலைக்குற வேலை வச்சுக்காத.." என்று ஆறடிக்கு நின்று கொண்டு உறுமியவனை பார்த்து, சிரித்தவள் , அங்கே இருந்த நாற்காலியில் அவனை பார்த்தபடியே உட்கார்ந்து , ஒரு காலை தூக்கி இன்னொரு கால் மீது நீலாம்பரி ஸ்டைலில் போட்டாள்..
தனது தலையில் இருந்த கூலெர்சை எடுத்து படையப்பா ரஜினி ஸ்டைலில் கண்ணாடியை அணிந்தவளை உறுத்து முறைத்தான் அவன்..

"என்ன பா .. வளர்ந்து கெட்டவனே .. இந்த முறை முறைக்குற.. படையப்பா படம் பார்த்தது இல்லையா.. இல்லென ஓடி போய் பார்த்துட்டு வந்து பேசு .. " என்று ஏளனத்துடன் கூறியவளை நெருங்கி அவளது கழுத்தை நெறித்தவன் , அப்படியே தூக்கிக்கொண்டு சுவற்றோடு சேர்த்து அழுத்தினான்..

அவளுக்கு மூச்சு முட்டினாலும், சிரித்தபடி , கண்களில் ' இவ்ளோதானா நீ' என்ற கேள்வியை தேக்கி அவனை பார்த்தாள்.. அதில் அவனது முகம் கறுத்தது..

"உனக்கு இப்படி சொன்ன புத்தி வராதே..இப்படி சொன்ன தான் புத்தி வரும் " என்று அவளை இடையோடு அழுத்தி , தனது இதழ்களை அவளது முகம் நோக்கி கொண்டு செல்ல , அவளோ தனது மெல்லிய கரங்கள் கொண்டு அவனை தள்ளிவிட முயற்சி செய்தாள். வலிமையான உடல் முன் அவளது மெல்லிய உடல் தோல்வியை தழுவியது. இருந்தும் தனது ஒட்டுமொத்த சக்தியை கொண்டு அவனது கன்னத்தில் பளார் என்று அறைந்தாள்..

" நான் உன்னை காதலித்தேன்.. அதுக்குனு நீ என்ன பண்ணுனாலும் பொறுத்துபோகுறதுக்கு நான் ஒண்ணும் உன்னோட அடிமை இல்லை .. நான் மிஸஸ். ********* .. தி க்ரேட் பிசினஸ்மேன் ****னின் மனைவி.. " என்று அவளை அறியாமல் தனது கணவனுடன் தன்னுடைய பெயரை இணைத்தவளை , புரியாது பார்த்தான்..

மீண்டும் அவனை அறைந்தவள், "இதுக்குமேல என்னை தொடணும்னு நினைச்ச '" என்று தனது ஆள்காட்டி விரல் நீட்டி அவனை எச்சரித்து , அவனை பார்த்தபடியே கீழே விழுந்த கூலெர்சை காலால் மிதித்துவிட்டு , 'இதுதான் நடக்கும் ' என்று சொல்லாமல் சொல்லியபடி வெளியே சென்றாள் பாரதியின் புதுமைப்பெண் ஆரா..

**********************************************
ஹாய் ஃபிரண்ட்ஸ்...

இந்த டீ எப்படி இருந்தது என்று படித்துவிட்டு தங்களது கருத்துகளை கூறவும்..

"அன்பென்ற மழையினிலே " - கருத்துத்திரி
********************************************
இதோ உங்களின் ஆரா ... போட்டோ ஓகே வா ஃபிரண்ட்ஸ் ..

7059
 

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சின்ன டீ:

பால்கனியில் தோட்டத்தை வெறித்தபடி இருந்தவள், அப்படியே தூங்கிவிட,உள்ளே வந்தான் வருண்..

அவள் தூங்கும் அழகை ரசித்தவன், யோசனையில் அவளது புருவ முடிச்சு சுருங்கியதை தனது விரலால் நேர்படுத்தியவன், முன்னாள் விழுந்த தலைமுடியை பிடித்து அவளது காதோரம் தள்ளிவிட,அதில் சிணுங்கியவள், தூக்கத்தில் அவளது கைகளை எதிரே இருந்தவன் மீது மாலையாக கோர்த்தாள்.

அவனோ அவளது கைகளை விலக்கவும் முடியாமல் சாய்ந்தபடி கைகளை நாற்காலியின் கைப்பிடி ஓரத்தில் பிடித்துகொண்டு அவளை ரசித்துக் கொண்டு இருந்தான்.. அவள் மேலும் இழுக்க, அவனது நெற்றி அவளது நெற்றியில் மோதியது.. அவனது வளர்ந்தும் வளராத தாடி அவளது கன்னத்தில் உரச, தூக்கத்திலும் அவளது கன்னங்கள் சிவந்தது.. அவனது இதயம் வேகமாக துடித்தது.. தன்னருகே சிவந்த முகத்துடன் இருந்த மனைவியை ரசித்தவன், அவளது இதழ்களை சுவைக்க நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டான்..

சில மணிநேரம் கழித்து, அவளது கைகள் வலிஎடுக்க கண்களை திறந்தவுடன் அருகில் கண்ட தன்னவனின் முகத்தை பார்த்தாள்.. வெகுநேரம் கைகளை ஊன்றி நின்றவன் ,அப்போதுதான் கண் அசர, அவளோ அவனை ரசித்துக்கொண்டு இருந்தாள்..

அவனது அசைவை உணர்ந்தவள் தனது கண்களை மூட, அவனோ மீண்டும் ஒரு முறை அவளை ரசிக்க, அவளோ தனது ஒரு கண்ணை மட்டும் மெதுவாக திறந்து அவனை பார்க்க, வருணோ அவளை முறைத்துகொண்டு இருந்தான்..


*********************************************
ஹாய் ஃபிரண்ட்ஸ்...

இந்த டீ எப்படி இருந்தது என்று படித்துவிட்டு தங்களது கருத்துகளை கூறவும்..

"அன்பென்ற மழையினிலே " - கருத்துத்திரி
********************************************

இதோ உங்கள் வருண்...

7069
 
Status
Not open for further replies.
Top