All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனுசரணின் "உயிரின் தேடல் நீய(டா)டி" - கதை திரி

Status
Not open for further replies.

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24122 24123

. 24125
அத்தியாயம் 8

அந்த வீடே வெறிச்சோடிக் கிடந்தது... வந்த சொந்த பந்தங்கள் எல்லாம் எதிர்பாராமல் நிகழ்ந்த இரண்டு மரணங்களுக்கும் துக்கம் விசாரித்துவிட்டு சென்றிருக்க ஸ்ரீ யின் குடும்பத்தினர் ஆளுக்கொரு மூலையில் அடைந்திருந்தனர்..

பெரியவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் கேளாது ரவி,ராம் விஷ்ணு மூவரும் சென்னை கிளம்பியிருந்தனர் ஸ்ரீ இறந்த பத்து நாட்களில்....
அன்று...
ஸ்ரீ யின் உடல் மதியம் தாண்டியே பொள்ளாச்சியை அடைந்தது. உடன் ராமநாதனும் வந்திருந்தார். வர்ஷினி கண் விழித்ததால் கலைச்செல்வியே பார்த்துக் கொள்வதாய் கூற கோபால் எவ்வளவோ தடுத்தும் கிளம்பி வந்துவிட்டார்.

அதற்குள் ராமும் ரவியும் வந்திருந்தனர். பெரியவர்கள் ஒரு பக்கம் சின்ன வர்கள் மறுபக்கம் என யார் யாரை தேற்றுவது என்ற வழியறியாது அழுது கொண்டு இருந்தனர். இதில் சவிதா வேறு ஸ்ரீ யின் உடலை கண்டு மயங்கி விழ இன்னும் களோபரம் ஆனாது.

ராம் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் வைராக்கியமாய் நின்றிருந்தான். சிறுவயதில் இருந்தே இரட்டையர்கள் போல் ஒன்றாய் திரிந்தவர்கள்... அதில் அவள் இல்லை என்பதை அவனால் முழுதாய் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...

பங்காளிகள் என ஸ்ரீ யின் உடலை தூக்க வர அதனைத் தடுத்து ராம் ரவி நவீன் நரேன் என அண்ணன் தம்பிகளே அவளின் இறுதியாத்திரையை முடித்து வைத்தனர்.

சுந்தரம் தாத்தாவிற்கு அன்றிரவு அதீத நெஞ்சுவலி ஏற்பட மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரை விட்டிருந்தார். ஒன்றிற்கு இரண்டு மரணம் நிகழ்ந்திருக்க அங்கிருந்தவர்கள் ஒருவர் கண்ணிலும் ஜீவனில்லை...

அடுத்தநாள் அவருக்கான காரியங்களும் முடிந்திருக்க உடலின் சக்தி மொத்தமும் வடிந்ததுபோல் அனைவரும் இருந்தனர்... உணவு, தூக்கம், சுற்றுபுறம் மறந்து இன்ன பிற அன்றாட வேலைகளையும் மறந்து ஒரு வாரம் அனைவருக்கும் போனதே தெரியவில்லை..

இறுக்கமாகவே இருந்த ராம் உறவினர் ஒருவர் ஸ்ரீ மற்றும் சுந்தரம் படத்திற்கு மாலை அணிவிப்பதை பார்த்து ஆவேசமானான்.

வேகமாக சென்று ஸ்ரீ க்கு போடப்பட்ட மாலையை கழட்டி வீசி எறிந்தான். அதை கண்ட அனைவரும் சுயவுணர்வு பெற்று வந்து ராமை தடுக்க அதற்குள் ஸ்ரீ புகைப்படத்தில் வைக்கப்பட்டிருந்த பொட்டையும் அழித்திருந்தான்.

சில இடங்களில் இறந்தவர்க்கு குறிப்பிட்ட நாட்கள் வரை அவர் படத்திற்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றுவது வழக்கம். அதேபோல் தான் எண்ணி அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் இவர்கள் வருந்துவதைப் பார்த்து விட்டு அவரே ஹாலில் இருந்த படங்களை எடுத்து சுத்தம் செய்து பொட்டிட்டு மாலையிட்டார் ஆனால் ராமின் ஆவேசத்தில் அவரே பயந்து ஒதுங்கி கொண்டார்.

மூர்த்தி "ஏன் இப்படி நடந்துக்கற ராம்.. இதெல்லாம் வழக்கமா செய்யர முறைதான நாம தான் கவலைல மறந்துட்டோம் அதான் அவங்க பண்றாங்க நீ ஏன் தடுக்கற " என்றார் குரல் கமற.

ராம் " பெரியப்பா என்ன பேசுறீங்க ...ஸ்ரீ நம்மல விட்டு எங்கயும் போகல அவ நம்ம கூட தான் இருக்கா ... இருப்பா ... எப்பவும்.... நீங்க எல்லாம் மொதல்ல அழறத நிறுத்துங்க ... இப்படி எல்லாம் நீங்க அழறீங்கனு தெரிஞ்சாலே அவ ரொம்ப வருத்தப்படுவ அவ ஆத்மா கூட சாந்தி அடையாது.. எல்லாரும் போய் அவங்க அவங்க வேலைய பாருங்க " என்றான் திடமான குரலில் கூறியவன் அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டான்.

அவன் குரலில் இருந்த கட்டளையே அனைவரையும் எழும்ப வைத்தது..இதுவரை விளையாட்டு தனமாய் இருந்தவன் இவ்வளவு பொறுப்பாய் பேசுவதைக் கண்டு வாயடைத்து போயினர்.

விஷ்ணுவும் ரவியும் அவன் பின்னாலேயே சென்றவர்கள் அவன் வயலையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து அருகில் வந்து அவன் தோளைத் தொட்டு திருப்பினர்" எங்களை விட ஸ்ரீ உனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்று எங்களுக்கு தெரியும் ராம் அவ இல்லைங்கறத ஏத்துக்கோ ... வாய்விட்டு அழுதுரு டா ... துக்கத்தை மனசுக்குள்ளையே வச்சுக்காம அழு டா... மனசு கொஞ்சம் லேசாகும்...எங்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்லற ஆனால் உன்னோட வருத்தத்தை வெளிக் காட்டாம பெரிய மனுஷன் மாறி நடந்துக்கற.." என்றான் விஷ்ணு.

அவர்களை நோக்கி ஒரு வலி நிறைந்த புன்னகையை சிந்தியவன் அங்கிருந்து நகர்ந்து சென்றான். அவன் செல்வதைப் பார்த்த இருவரும் பெருமூச்சுடன் அங்கிருந்து சென்றனர்.

அன்று இரவு விஷ்ணுவிற்கு அழைத்த ராமநாதன் கூறிய விசயத்தில் விஷ்ணு,ரவி, ராம் மூவரும் அடித்து பிடித்து அடுத்தநாள் சென்னை கிளம்பியிருந்தனர்..
--------------------------------------
அந்த இரவின் தனிமையில் பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பிப் பார்த்தவள் வீல்.. என அலறியிருந்தாள். அங்கு முகம் மற்றும் உடல் முழுவதும் இரத்தக் கறையுடன் நின்ற உருவம் அவளை நொக்கி வர இவளோ நடுக்கத்துடன் பின்னால் நகர்ந்தாள்.

"அக்கா பயப்படாதீங்க ... பயக்காம என்னை பாருங்க பயந்தால் என் உருவம் அகோரமாகதான் தெரியும் " என்ற மழலை குரலில் அந்த உருவம் பேச முதலில் பயந்து பின்னோக்கி நடந்தவள் அந்த உருவம் தன் நடையை நிறுத்தியதும் அதில் இவளும் சற்று தள்ளி நின்று பயத்தை போக்க ஆழ்ந்து மூச்செடுத்தவள் கண்களை மூடித்திறக்க தற்போது அவளின் இடுப்பளவே உள்ள ஏறத்தாழ பத்து வயதுடைய சிறுவன் நிற்க ஸ்ரீ யோ விழிவிரித்து அவனைப் பார்த்தாள்

'சிறிது முன் அவனின் தோற்றம் என்ன தற்போதுள்ள தோற்றம் என்ன எப்படி இப்படி ஆனது ஏதோ மேஜிக் மாறி இருக்கு...' என எண்ணி வியந்தாள்.

அவனோ " அக்கா என்னைப் பார்த்து பயப்படாதீங்க நானும் உங்களை மாதிரி தான்" என்றான் சர்வசாதாரணமாக.

அவன் கூறியது புரியவே ஸ்ரீ க்கு சில நிமிடங்கள் ஆனது புரிந்ததும் அவளுக்கு இன்னும் மனதில் பாரம் ஏறிக் கொண்டது. ஓடியாடி விளையாட வேண்டிய இந்த சிறு வயதிலேயே இந்நிலையில் உள்ளான் என்றால் இந்த மரணம் தான் எத்தனை கொடியது என்றே ஸ்ரீ யின் மனதில் தோன்றியது.
--------------------------------------
இங்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட எத்தனையோ அதிசயங்கள் இவ்வுலகில் நடந்திருக்கிறது.. நடந்துகொண்டும் உள்ளது. இங்கு பல விசயங்கள் விடை தெரியாத மர்மங்களாகவே உள்ளது.. அதற்கான எத்தனையோ விளக்கங்கள் அறிவியல் பூர்வமாக கூறினாலும் மர்மங்கள் தீர்ந்தபாடில்லை..

அப்படி பட்ட இடம் தான் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் பகுதி சுமார் 12 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட காடு தான் மதிகெட்டான் சோலை.. சாதரணமாக காட்சியளிக்கும் இந்த வனாந்தர பகுதி பல மனிதர்களையும் சித்தர்களையும் காவு வாங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது..

மருத்துவ செடிகளைத் தேடியும் காட்டை ஆராயவும் என்று சென்ற ஒருவரும் திரும்பி வரவில்லை. அறிவியல் பூர்வமாக அவர்கள் திரும்பி வராததற்கு அங்குள்ள ஒருவகை மூலிகைதான் அவர்களின் மதியை மயக்கி காட்டில் இருந்து வெளிவர இயலாமல் செய்து கொல்கிறது என பல அறிஞர்கள் கூறினாலும் இங்கு பல்வேறு விசயங்கள் மர்மமாகவே உள்ளது

அதனால் நம் அரசாங்கமே அந்த 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காட்டை சுற்றியும் கம்பி வேலி அமைத்து தடைசெய்யப்பட்ட பகுதி என பிரசங்கப்படுத்தியுள்ளது.. சூரிய ஒளியை உள்ளே விடாமல் அந்த அடர் வனப்பகுதியின் நடுவே நடுநாயகமாக நின்று கொண்டிருந்தான் அவன்.

பல நூறு ஆண்டுகளாக இந்த காட்டை ஆட்சி செய்பவன் உள் நுழையும் ஒருவரையும் விட்டு வைத்ததில்லை அவர்களின் ஆவி கூட அந்த காட்டை விட்டு வெளியே செல்ல அவன் அனுமதித்ததில்லை...

தற்போது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மரக்கிளைகள் இருபுறமும் அரண் போல் வளர்ந்து இருக்கக் முட்கள் நிரப்பப்பட்ட அந்த தரைக்கு பத்தடி உயரத்தில் மிதந்து கொண்டிருந்தவன் உடல் முழுதும் செதில்கள் போலவும் அகோரமாய் வளர்ந்திருக்க செய்த தவம் நிறைவுபெற முன்தின இரவே கண்விழித்து இருந்தான்.

ஒரு ஆன்ம சக்தியின் மூலம் ஆறடிக்கு மேல் மூன்று இன்ச் அதிகமான உயரமும் வசீகரமான முகத்துடன் பார்க்க முப்பது வயது இளைஞன் போல் இருக்கும் தன் இளமையை மீட்டு எடுத்து இருந்தான் அவன் ஆதிலிங்கம்..

அவனின் சிவப்பு நிற விழிகள் வேட்டையாட போவது போல் பளபளத்தது.

அவனால் தீயசக்திகளாக மாற்றப்பட்டு பிசாசுகளாக இருந்த இரண்டு ஆத்மாக்களை அழைத்தவன் அக்காடே அதிரும் வண்ணம் அகோரமாய் சிரித்தான்.

"இத்தனை வருட தவத்தில் எனக்கு தேவையானது கிடைக்கப் போகிறது... இன்னும் சில நாட்களில் நான் சாப விமோசனம் பெற்று விடுவேன்... அதன் பின் இந்த உலகமே என் கட்டுப்பாட்டில்" என்று கண்கள் மின்ன கூற அந்த பிசாசுகளும் தன் கோரப்பற்களைக் காட்டி சிரித்தது..பின் தன் இரையை பற்றிய விவரங்கள் கூறியவன் அது இருக்கும் திசையையும் கூறி அதனை இழுத்து வர கட்டளையிட்டான்.




கதையின் போக்கை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24201

அத்தியாயம் 9

சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் நேற்று வர்ஷினி யின் தந்தை கூறியதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது...

விஷ்ணு விற்கு அழைத்த ராமநாதன் பொதுவான‌ நலம் விசாரிப்புக்கு பின் விபத்து கேஸ் பற்றி பேசினார்.. அதில் வர்ஷினி மற்றும் ஸ்ரீ ஓட்டிய வண்டியை எந்த வாகனமும் இடிக்க வில்லை எனவும் அவர்களின் வண்டி பிரேக் பிடிக்காமலே தடுமாறி விழுந்ததாக பதிவு செய்து கேஸை முடித்துள்ளதாக கூறினார்... காவல் நிலையம் சென்று விசாரிக்க அவர்கள் சரியான தகவல்கள் தரவில்லை என்றும் சொல்ல இவர்களுக்கோ மிகுந்த அதிர்ச்சி அதுவும் வர்ஷினி தன் கண்ணால் கண்டு உள்ளாளே இடித்தது கார் தான் என்று பிறகு எப்படி என்று அனைவரும் குழம்பினர்... ரவி தான் இதில் ஏதோ பெரிய சதி நடந்துள்ளது எனக் கூறி உடனடியாக நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என கிளம்பி விட்டான்...

சென்னை அடைந்த மூவரும் முதலில் நேரே சென்றது வர்ஷினி அனுமதித்திருந்த மருத்துவமனைக்கு தான் .. இந்த இடைப்பட்ட நாட்களில் நன்கு தேற வேண்டிய உடல்நிலையை ஸ்ரீ யின் இழப்பு தெரிந்து தன்னையே வருத்திக் கொண்டாள் வர்ஷினி..

வற்புறுத்தி ஸ்ரீ யை பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்ததால் அதுவும் அவள் சுயநினைவு இல்லாமல் இருந்த சமயம் அவள் தன்னிடம் பேசினாள் என உறுதியாக கூறவும் பொறுமை இழந்த கலைச்செல்வி உண்மையை உடைத்திருந்தார்... அதைக் கேட்டவளுக்கோ கத்தி அழக் கூடத் தெம்பில்லாமல் மௌனமாய் கதறினாள்...

மருத்துவர்கள் எவ்வளவு தான் ட்ரீட்மென்ட் கொடுத்தாலும் அவளின் உடல் பாதியே அதனை ஏற்றுக் கொண்டது... பத்தாதற்கு விசாரணை என்ற பெயரில் போலீஸ் வேறு அவளை முழுதும் குழப்பி ப்ரேக் பிடிக்காமல் தான் விபத்து நேர்ந்தது என அவளிடமே கூறி கையெழுத்து வாங்கி சொல்ல அவள் இன்னும் மன அழுத்தத்திற்கு ஆளானாள்..

அன்று நடந்த சம்பவத்தைப் பற்றியே எந்த நேரமும் நினைத்துக் கொண்டே யாரிடமும் பேசாமல் மௌனியாகிப் போனாள்... அவளின் பெற்றோர்கள் ஏதேனும் கேட்டாலும் ஆம் இல்லை பதிலும் சில சமயங்களில் அதுவும் இன்றி தலையசைப்புடன் பொம்மை போல் இருந்தாள்... வர்ஷினிக்கு கை கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டிருக்க எழுந்து நடக்க இரண்டு மாதங்கள் ஆகும் என்றிருந்தனர்.

மருத்துவமனை வந்து வர்ஷினியை பார்த்தவர்களுக்கு மன வருத்தம் அதிகரித்தது... ராமநாதன்
" ஸ்ரீ பத்தி தெரிந்ததில் இருந்து இப்படி தான் இருக்கா .. யாருகிட்டையும் பேசுறது இல்லை.. எங்கையோ வெறித்துப் பார்த்துட்டே இருக்கா ... எங்களால் அவளை இப்படி பார்க்கவே முடியல" என கண்கலங்கி கூறினார்... கலகலவென இருக்கும் பெண் இப்படி ஊமையாகிப் போனதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

இடது காலில் பெரிய கட்டுடன் தொட்டிலில் தொங்க , இடது கையிலும் பெரிய கட்டு போடப்பட்டு தலையிலும் கட்டு என பல கட்டுகளுடன் முகத்திலும் சிறு சிறு கீரல்கல்களுடனும் சாய்ந்து படுந்திருந்தவளைக் கண்டு ரவிக்கு மனிதில் பெரிய வலி உருவானது...

வர்ஷினிக்கும் ரவிக்கும் எப்போதும் ஒத்துப்போனதே இல்லை... ஒருமுறை ஸ்ரீ குளிக்கும் போது அவளிற்கு ரவி போனில் அழைத்திருந்தான் இருமுறை எடுக்கப்படாமல் போக மூன்றாம் முறை அழைக்க எடுத்தது என்னவோ வர்ஷினி தான்... அழைப்பு ஏற்க்கப்பட்டவுடனே " ஸ்ரீ என்னாச்சு டா ஏன் இவ்வளவு நேரம் போன் எடுக்கல... அந்த குடைமொளகா உன்கூட சண்டை போடுறாளா சொல்லுடா அவளை நான் பாத்துக்கிறேன்... " என அவன்பாட்டுக்கு பேசிக் கொண்டே போக பொறுமை இழந்த வர்ஷினி " ஏய் ...நெடுமரம் யாரப் பார்த்து குடமுளகானு சொல்லற....
வந்தேன் பல்லைத் தட்டிக் கைல கொடுத்துருவேன்... " என சீறியிருந்தாள்.

ரவியோ ஒரு நிமிடம் ஜெர்க்காகி பின் அவளுடன் சரிக்கு சமமாய் சண்டையிட்டுக் கொண்டிருந்தான் குளித்து வந்த ஸ்ரீ யே அவர்களுக்குள் சண்டையை முடித்து வைத்தாள்... ஸ்ரீ குடும்ப புகைப்படம் காட்டும் போதே ஏனோ நெடுநெடுவென வளர்ந்திருந்த ரவியை முதல் பார்வையிலேயே அவளுக்கு பிடிக்கவில்லை .. பிடிக்கவில்லை என்பதை விட அவளுள் ஏற்பட்ட தாக்கத்தை மறைக்கவே இந்த அரிதாரத்தைப் பூசிக் கொண்டாள் என்பது சரியாக இருக்கும்... ரவிக்கும் ஸ்ரீ அவனுடன் பேசும் போது எல்லாம் இடையூறு செய்து வம்பு வளர்க்கும் வர்ஷினியை ஏனோ பிடித்திருந்தது... அப்படிப் பட்டவள் இன்று பாதி உயிராய் இருப்பதைக் கண்டு கண்கள் கூட கலங்கியது...
-------------------------------------------------------------------
தன் முன் நின்றிருந்த சிறு பாலகனைப் பார்த்த ஸ்ரீ முதலில் பயந்தவள் பின் அவனின் வெகுளியான பேச்சில் அவனை முழுதும் நம்பியிருந்தாள்

"அக்கா என் பேரு ஆதித்யா .. உங்க பேரு என்ன?" என அவளின் முன் கையை நீட்டி இருந்தான் அச்சிறுவன்.. அவனின் முன் மண்டியிட்டவள் . "என் பேரு ஸ்ரீ நிதி. ஆமா முதல்ல ஏன் அப்படி டிரஸ் முழுக்க இரத்தமா இருந்தது அப்புறம் மறுபடியும் பார்த்தால் எதுவும் இல்லை எப்படி இப்படி எல்லாம் மேஜிக் பண்ற ஒரு நிமிடம் நான் எப்படி பயந்துட்டேன் தெரியுமா!"என்றாள்.

ஆதித்யா "அய்யோ ஸ்ரீ உனக்கு இது கூட தெரியாத இங்கவா " என்று அருகில் அழைத்தவன் அவள் காதில் " நாமே பேய் தான் நம்மை பார்த்து மத்தவங்க தான் பயப்படனும் நம்மலே பயப்படத் கூடாது சரியா" என்றான் அதைக் கேட்ட ஸ்ரீ வாயில் கை வைத்து " ஆலாக்கு சைசில இருந்துட்டு என்ன பேச்சு பேசுது பாரு " என நினைத்து கொண்டாள்...

திரும்பவும் சுற்றி முற்றி பார்த்து விட்டு " நாம் பயந்துகிட்டே பேய பாத்தா அவங்க பேயாகும் போது எப்படி இருந்தார்களோ அப்படித் தான் தெரிவாங்களாம் " என்றான் கிசுகிசுப்பாக.. அவன் சொன்னது புரிந்ததும் அவளோ திகைத்து ஆதித்யா வை பார்த்தாள் ஏனெனில் உடல் முழுவதும் இரத்தக் கறையுடன் அல்லவா அவள் கண்ணுக்கு தெரிந்தான்..

கண்கலங்க அவனின் கையை பிடிக்க ஆதித்யா வின் ஸ்பரிசத்தில் அவளின் கண் முன்னே

ஆதி பள்ளி சீருடையில்..... அவன் அருகே மேடிட்ட வயிற்றுடன் ஒரு பெண்மணி அவனிடம் "ஆதி சேட்டை பண்ணாம இருக்கணும் சரியா.. ஸ்கூல் வேன் வந்துடுச்சு அம்மாக்கு முத்தம் குடுடா " என கேட்க அவனோ முதலில் அவரின் மேடிட்ட வயிற்றில் முத்தமிட்டு பின் அங்கிருந்த இருக்கையில் ஏறி தன் தாய்க்கு முத்தமிட்டான் அதனை கண்கலங்க கண்டவர் அவனை அணைத்து முத்தமிட்டு வேன் ஏற்றிவிட ஆதியும் " பை மா ... பை பேபி .. " என அவரின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சொல்லிவிட்டு ஓட்டுநரின் பின் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.. அவர் வாகனத்தை செலுத்த அங்கு கீர் போடும் பாகத்தில் சிறிய ஓட்டை இருந்தது.. எப்போதும் கவனமாய் இருக்கும் அந்த வண்டியின் உதவியாளர் அன்று ஏதோ ஒரு குழந்தை அழுது கொண்டு இருக்க அதனை சமாதானம் செய்து கொண்டிருநதார்... முன்னால் இருந்த ஆதித்யா எழுந்து நின்று விளையாடிக் கொண்டே அந்த கீர் பகுதியில் கால் வைத்து விட நொடியில் அதனுள் விழுந்திருந்தான்... சிறிய ஓட்டை தான் ஆனால் அதனை சுற்றியிருந்த பகுதி சற்று லேசாய் இருந்திருக்க அவன் கால் வைத்ததும் பெரிதாகி அவனை விழுங்கியிருந்தது... ஏதிர்பாரமல் நடந்த நிகழ்வில் ஓட்டுநர் வண்டியை நிறுத்துவதற்குள் அடியில் விழுந்த ஆதித்யா உருண்டு அந்த வாகனத்தின் சக்கரத்திலேயே மாட்டி உயிரை விட்டிருந்தான்...."

இதனை தன் கண்கள் வழியே கண்டவள் வேகமாக அவன் கையை விட்டாள்... அவளுக்கு கண்கலங்கி மூச்சு விட சிரமப்படுபவள் போல் உணர்ந்தாள்.. என்ன கொடுரமான நிகழ்வு.... நமக்காவது பரவாயில்லை தலையில் பட்ட சிறுகாயத்துடன் வலி இல்லாதது போல் மரணம் நிகழ்ந்தது ஆனால் இவனோ உடல்.... அதற்கு மேல் நினைக்க முடியாமல் ஆதித்யாவை மென்மையாக அணைத்துக் கொண்டாள்....

சிறிது நேரத்தில் அவளே விலகி "ஆமா உனக்கு பயமா இல்லையா இப்படி இருக்க " என்று அவனின் மரணத்தை பற்றி கேளாமல் பேச்சை மாற்றினாள்..

." ரொம்ப பயமா இருந்தது.. அப்போதான் ஒரு அங்கிள் நீ பயப்படக் கூடாது னு சொல்லி நிறையா மேஜிக்லாம் சொல்லித் தந்தாங்க " என கண்கள் மின்னக் கூறினான்... " இப்போ அவங்க எங்க " ஸ்ரீ..

" தெரியலையே எங்கூடத் தான் இருந்தாரு நேத்து நான் பார்க்கும் போதே ஏதோ வொய்ட் டார்ச்சு மாறி லைட் அவரு மேல பட்டுச்சா திடிர்னு மறைஞ்சு போய்ட்டாரு... நானும் இது மேஜிக் னு நெனச்சேன் ஆனால் இப்போ வர அவரு திரும்பி வரவே இல்லை" என அழகாய் தன் மழலை குரலில் பேசினான்..

" சரி எனக்கு மேஜிக் செய்து காட்டுவாயா " என வினவ .. அவனும் "ம்ம் செய்து காட்டுறேன் ஆனா இப்போ வேணா நாளைக்கு செய்து காட்டுறேன்" என்றான் ஆர்வமாய்....

இருவரும் அங்கிருந்த படகில் மேல் ஏறி வலையின் மீது படுத்துக் கொண்டு கதையளந்து கொண்டிருந்தனர்.. ஓயாது வாயடிக்கும் ஆதித்யா வைக் கண்ட ஸ்ரீ க்கு அவளின் சிறுவயது நினைவுகள் தோன்றியது..

ஸ்ரீ மனது லேசாய் இருப்பது போல் உணர்ந்தாள் எப்போதும் அவளை சுற்றி ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் இதுவரை அவள் தனிமையை உணர்ந்ததில்லை ஆனால் இந்த பல மணிநேரங்களாய் தனிமையிலேயே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தவளுக்கு ஆதித்யா மருந்தாகிப் போனான்.. அவனின் வெகுளியான பேச்சும் தைரியமும் அவளுள் சிறு தைரியத்தை விதைத்தது..
------------------------------------------------------------------
தன் கண் முன்னே குற்றுயிராய் கிடந்தவனைக் கண்ட ஆருஷிக்கு இதழில் ஒரு வெற்றிப் புன்னகை... கீழே கிடந்தவனுக்கோ தலையிலும் கை கால்களிலும் பட்ட அடியுடன் ஒரு இன்ச் கூட அசைய முடியா சூழ்நிலையில் அவனின் கண்களில் மங்கலாக தெரிந்த ஆருஷியின் உருவத்தை கண்டு அதிர்ந்து மெல்ல தன் உயிரை விட்டிருந்தான்... அதன் பிறகே சற்று சாந்தமானான் ஆருஷி.

பின் அங்கிருந்து நகர முயற்சிக்க அவனை நோக்கி வீசிய வெள்ளை நிற ஒளியின் மூலம் அவன் இழுக்கப்பட அவனோ அதிர்ச்சியில் விழிவிரித்தான்... சிறிது சிறிதாக அவன் அதனுள் செல்ல அதற்குள் அவனை சுற்றி வளைத்த சிவப்பு நிற ஒளிக்கதிர்கள் அவனை அந்த வெள்ளை நிற ஒளியின் எதிர்புறம் இழுத்தது..

இவனோ என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு அதனிடம் இருந்து விடுபட போராட இருபுறமும் ரப்பர் போல் இழுக்கப்பட்டான்.. சிறிது நேர போராட்டத்திற்கு பின் அவனை சூழ்ந்த சிவப்பு நிற ஒளியால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு மின்னல் வெட்டுபோல் அவ்விடத்தில் இருந்து மறைந்தான்.

சில நொடிகளில் கண் விழித்து பார்த்தவனை சுற்றிலும் இருள் சூழ்ந்து இருக்க கண்ணில் எதுவும் தென்படவில்லை அவனை இழுத்து வந்த அந்த சிவப்புநிற ஒளி சிறுபுள்ளியாய் மாறி அவனின் முன் ஒளிர்ந்து கொண்டிருந்தது...

அந்த சிறிய வெளிச்சத்தில் அவன் இருக்கும் பகுதி மரங்கள் சூழ்ந்த அடர்காடு என்பதை புரிந்து கொண்டான்.. ஆருஷி சுற்றுலும் தன் பார்வையை ஓட்டியவன் ஆபத்து இல்லை என்பதை அறிந்து அந்த ஒளியை ஆராய்ந்தான்.. அந்த ஒளியோ அவனின் முன்னே ‌ஒரு வழியைக் காட்டி முன்னேற இவனும் வேறு வழி இன்றி அதன் பின்னேயே சென்றான்.

சுற்றுப்புறத்திலும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டவன் அந்த ஒளியை பின்பற்ற அதுவோ அடுத்து சென்றது அந்தக் காட்டின் மையப் பகுதியில் உள்ள ஒரு அருவிக்குத் தான் ... அதன் அருகில் இருந்த சுனை போன்று குறைவாக விழும் நீரின் கீழ் பச்சை நிற கல்லில் சிவலிங்கம் இருக்க அந்த சிவப்பு நிற ஒளியோ அந்த லிங்கத்தின் உள்ளே சென்று மறைந்தது. ..

இதை கண்டு ஆருஷி முற்றுலும் திகைத்து விட்டான். பொதுவாகவே ஆருஷிக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாக கிடையாது.. அதிலும் ஆவி,பேய் இதிலும் சுத்தமாய் நம்பிக்கையற்றவன்.. அதைப்பற்றி ஆராயும் நேரமும் அவனுக்கு இல்லை அவன் பார்க்கும் சில சினிமாக்களில் இது போன்ற காட்சிகள் வந்தாலே சிரித்து விடுவான் அப்படி ஒரு நார்த்திகவாதி.. தன் அன்னை கோவில், பூஜை என்று செல்வது அவனுக்கே முட்டாள்தனமாகத் தான் தோன்றும்..

ஆனால் இந்த ஒருவாரமாக அவனை சுற்றி நடக்கும் அத்தனையும் அவனின் எண்ணத்திற்கு அப்படியே நேர்மாறாக ஒவ்வொன்றும் அவன் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது.. அவனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை... ஏனெனில் நடப்பது அனைத்தும் அவனை மூலதனமாய் வைத்து அவனுக்கே அல்லவா நடக்கிறது..

சிறிது நேரம் அந்த லிங்கத்தைப் பார்த்தவன் அவனை அறியாமலே அவன் இரு கைகளும் வணங்குவது போல் குவித்திருத்தான்... சில நொடிகளில் தெளிந்தவன் கைகளை வேகமாக கீழிறக்கி ' என்ன பண்ற ஆருஷி ' என அவனையே கடிந்து கொண்டு மீண்டும் லிங்கத்தையே பார்த்தான் .. அவனுக்கு ஏனோ அந்த சிவலிங்கத்தைக் கண்டு வணங்கவே தோன்றியது.. தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டவன் திரும்பி அருவியைப் பார்க்க அதுவோ அந்த பௌர்ணமி நிலவின் ஒளியில் வெள்ளி போல் மின்னிக் கொண்டிருந்தது..
"ஆருஷி...." யாரோ தன்னை அழைப்பது கேட்க குரல் வந்த திசையை நோக்கி பார்த்தான் அங்கு யாருமில்லை .. பிரம்மை என எண்ணி ஒதுக்க நினைத்தவன் திரும்பவும் "ஆருஷி" என அழுத்தமாய் அழைக்க தற்போது குரல் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அது அந்த சிவலிங்கத்தின் வலது புறமிருந்து வர சுற்றிலும் பார்வையை ஓட்டியவன் மெதுவாக அவ்விடத்திற்கு சென்றான்...

அந்த சுனையின் பின் நிலவின் வெளிச்சம் நன்றாக விழ அஙகு சமதளப்பரப்பில் நிறைய வேல் குத்தப்பட்டு இருக்க அதன் அருகில் உடல் முழுதும் திருநீறு பூசப்பட்டு முடியும் தாடியும் நீண்டு வளர்ந்திருக்க உடம்பில் ருத்ராட்சமும் கச்சாடையும் மட்டும் அணிந்திருந்த ஒருவர் இரு கைகளையும் உயர்த்தி குவித்து வைத்து ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தார்..

அவரின் அருகே அவரைப் போன்றே ஒரு பிம்பம் பத்மாசனத்தில் காற்றில் மிதக்க ஆருஷி அவர்களை ஆச்சரியமாகப் பார்த்தான். சித்தர்கள் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறான் ஆனால் இதுவே முதல் முறை நேரில் பார்ப்பது அதுவும் இந்நிலையில்....

சித்தர்கள் தன் ஆழ் தியானம் மற்றும் பக்தியின் மூலம் ஆன்மாவை உடலில் இருந்து பிரிக்கும் வல்லமை கொண்டவர்கள் என்பதை முதல் முறை தன் கண்களால் கண்டான்.. சித்தரின் பிம்பம் மெல்ல நகர்ந்து அருகில் ஒற்றைக் காலில் நின்ற தன் உடலுடன் இணைந்த நொடி கண் திறந்தார்.

அவரின் விழிகள் நீல நிறத்தில் சாந்தமாய் காட்சியளிக்க அவர் கண் திறந்த நொடி ஆருஷிக்கு உடல் சிலிர்த்து அடங்கியது...

கண்முன் நடந்த இந்த விந்தையைக் கண்டவன் மனதில் 'மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி இந்த உலகில் உள்ளது என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை' என்றே தோன்றியது...



இக்கதையின் போக்கை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24386

அத்தியாயம் 10

சுற்றிலும் அரவம் கேட்க கண்விழித்தாள் வர்ஷினி ... அவளை சுற்றிலும் அவளின் பெற்றோர்கள் மற்றும் விஷ்ணு,ரவி, ராம் ஆகியோர் நின்றிருந்தனர்.ரவியைக் கண்டு ஒரு நொடி அவள் ‌கண்ணில் பிரகாசம் கூடியதோ!!!!

அவர்களை கண்டு கண்களை எட்டாத புன்னகை சிந்தியவள் எழ முயன்றாள்.. வர்ஷினியின் முயற்சி உணர்ந்த அவளின் தந்தை ராமநாதன் பெட்டை உயர்த்தி சரி செய்தார்...

பொதுவான நலம் விசாரிப்புகளுக்கு கூட ஒரிரு வார்த்தைகளில் பதில் அளித்தவள் மறந்தும் அதிகமாய் ஒரு வார்த்தை பேசிடவில்லை... அவளின் மனநிலை கருத்தில் கொண்டு விபத்து பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் என எண்ணிய மூவரும் ராமநாதன் உடன் வீட்டிற்கு சென்றனர்..

ராமநாதன் " இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குப்பா நான் அது முடிந்ததும் வந்துவிடுவேன் நீங்க மதியம் வரை ஓய்வு எடுத்துக்கோங்க " எனக் கூற

ராம் " இல்லை அங்கிள் ..நாங்க குளிச்சிட்டு ஹாஸ்பிடல் போகிறோம் ஆன்ட்டி தனியா இருப்பாங்க . நீங்க நேரா அங்க வந்துருங்க.. அதுக்கு அப்புறம் நாம போலீஸ் ஸ்டேஷன் போகலாம்" என்றான். பக்கத்தில் இருந்த உணவகத்திலேயே காலை உணவை வாங்கியவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

ராமநாதன் அலுவலகம் கிளம்பி விட அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் குளித்து முடித்து மருத்துவமனை கிளம்பி இருந்தனர்.. இவர்களை கண்ட கலைச்செல்வி
" என்னப்பா யாரும் ஓய்வெடுக்கலையா... கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்து வந்திருக்கலாம்ல."

"பரவாயில்லை ஆன்ட்டி வர்ஷீவ நாங்க பார்த்துக்கிறோம் நீங்கள் விஷ்ணு கூட போய் ப்ரஸ் ஆகிட்டு வாங்க" என்றான் ராம்.. இன்னும் தூக்க மருந்தின் வீரியத்தில் வர்ஷினி உறங்கி கொண்டிருக்க கண்விழிக்க நேரம் இருப்பதாலும் அவள் எழவதற்குள் வந்துவிடலாம் என்று விஷ்ணுவுடன் கிளம்பியிருந்தார்.

ரவியும் ராமும் வர்ஷினி யின் படுக்கை அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர். ராம் அவனின் மொபைலில் மூழ்கி இருக்க, ரவி மொபைலில் ஒரு கண்ணும் வர்ஷினியின் மீது மறுகண்ணும் என இருந்தான்..

அவளிடம் அசைவு தெரிய ராமை அழைத்த ரவி " ராம் நீ போய் கேண்டீன்ல டீ குடிச்சுட்டு எனக்கும் டீ வாங்கிட்டு வா" என அவனை வெளியில் அனுப்ப நினைக்க அவனோ ரவியை ஒரு மார்க்கமாய் பார்த்து வைத்தான்... அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரவியோ அவனை அனுப்புவதில் குறியாய் இருக்க

" இப்போ என்ன நான் வெளிய போகணும்... அதானே ... அவகிட்ட பொறுமையா நடந்ததை கேளு நா ஆன்ட்டி வந்தா கால் பண்றேன் " என வெளியேறினான். ராமிற்கு ரவி வர்ஷினியை பார்க்கும் பார்வையின் மாற்றத்திலேயே யூகித்திருந்தான்.

வெளியேறும் ராமின் முதுகை பார்த்த ரவி மென்னகை புரிந்தான்... இதுவரை அவனிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் பாசம் அதிகம் தான்.. பொறுப்பற்று விளையாட்டு தனமாய் இருக்கிறான் என‌ எண்ணியிருக்க ராமோ தன் எண்ணத்தை சரியாய் கணித்ததில் ரவிக்கு பெருமிதமே...

கண்விழித்த வர்ஷினி அறையில் ரவி மட்டும் இருப்பதைக் கண்டு மற்றவர்களை தேடி அறை முழுதும் பார்வை ஓட்டினாள். அவளின் தேடலை உணர்ந்தவன் " அங்கிள் ஆபிஸ் போயிருக்காங்க , ஆன்ட்டி பிரஷ் ஆக வீட்டுக்கு விஷ்ணு கூட போயிருக்காங்க, ராம் வெளியே இருக்கான் " என்றான்...

இதைக் கேட்ட வர்ஷினி சரி என்று விட்டு அவனுக்கு மறுபுறம் திரும்பி சன்னல் புறம் வெறிக்க ஆரம்பித்தாள்... அவளுக்கு அழுகை வரும் போல் இருந்தது உதட்டை கடித்து அதை அடக்கியவள் கண்களை மூடிக் கொண்டாள்.

அதுமட்டுமின்றி ஸ்ரீ யின் இழப்பு வேறு அவளை உயிருடன்‌ வதைக்க தான் இன்னும் கவனமாய் வண்டி ஓட்டியிருக்க வேண்டுமோ என்றும் நினைத்து நினைத்து குற்றவுணர்சியில் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தாள்..
அதிலும் அவள் சொல்வதை யாரும் நம்பவில்லை என்பதில் இருந்து இங்கிருப்பவர்கள் தன்னை பரிதாபமாகவும் ஏதோ மனநோயாளி போல பார்ப்பதிலும் மிகுந்த வருத்தத்தில் இப்படியே செத்துவிட மாட்டோமா என்ற‌ விரக்தியில் இருந்தாள் ஆனால் இன்னும் சிறிது நம்பிக்கையாய் அவளின் பெற்றோர்கள் இருக்கின்றனர் அல்லவா!!

தன் எதிர்புறம் முகத்தை திருப்பி அழுகையை அடக்கி கொண்டு இருந்தவளைக் கண்டவன் எழுந்து அவள்புறம் சென்றான்.. தன் முன் நிழல் ஆடுவதை உணர்ந்தும் கண் விழிக்காமல் இருந்தவள் மென்மையாய் "வர்ஷு..." என்ற அவனின் அழைப்பில் அதுவரை உணர்வுகளை அடக்கி வைத்தவள் அதற்கு மேல் முடியாமல் தன் வலது கையால் அவனின் சட்டையை இழுத்து அவன் மேல் சாய்ந்து அழுக ஆரம்பித்து விட்டாள்...

தன் மேல் சாய்ந்து அழுது கொண்டு இருப்பவளை சமாதானம் செய்யாமல் சிறிது நேரம் அழுது மனபாரம் குறையட்டும் என நினைத்தவன் ஆறுதலாய் அவள் தலையை மட்டும் வருடிக் கொடுத்தான்.

இதுவரை எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் எதிர்பாராத நிகழ்வுகளால் ஒன்று சேர்ந்திருந்தனர்.. அவளின் பெற்றோர்கள் இருந்தும் தன்னிடம் அவள் ஆறுதல் தேடுகிறாள் என்பதே அவனின் மனதினுள் இதத்தை ஏற்படுத்தியது..

அவளின் அழுகை குறைய ரவி பேச ஆரம்பிக்கும் முன் வர்ஷினி " என்னால தான் ஸ்ரீ நம்மல விட்டு போயிட்டா நான் கவனமா வண்டியை ஓட்டியிருக்கணும்... என்னால முடியல ரவி செத்து போலாம் போல இருக்கு..." என்று முடிப்பதற்குள் ரவி கையை ஓங்கி விட்டான் அவளை அடிக்க... "அறஞ்சேன்னா பாத்துக்கோ... இன்னொரு தடவை இப்படி பேசின அவ்வளவு தான்..." என்றவன் தலையை அழுத்திக் கோதி தன்னை சமன்படுத்தி கொண்டான்...

என்னல்லாம் பேசுகிறாள் ஒரு இழப்பையே இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அனைவரும் நடைபிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கையில் இவளின் வார்த்தையில் மனதளவில் பெரிதும் காயப்பட்டான்... வர்ஷினியோ அவனின் கோபத்தில் மிரண்டு விழிக்க அதில் அவள் மேல் பரிதாபமே அவனுக்கு தோன்றியது...

அவள் அருகே சென்றவன் "இங்க பாரு வர்ஷு இந்த விபத்தில உன்னோட தப்பு எதுவும் இல்லை .. இன்னோரு முறை இப்படிலாம் பேசாத... எங்களால ஸ்ரீ இழப்பையே தாங்க முடியாமல் இருக்கோம்... " என்றான் குரல் கமற..
அவனின் சோகம் அவளை வருத்த " சாரி இனி இப்படி பேசமாட்டேன் ரவி" என்றாள்..

அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவளின் கைகளை தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டான்.... "ரவி நான் லூசாகிட்டேனா... நான் சொல்றத யாருமே நம்ப மாட்டீங்குறாங்க..." என கலங்கினாள் வர்ஷினி...

" ஏன் இப்படி எல்லாம் பேசுற வர்ஷு .. நான் உன்ன நம்புறேன்... அன்னைக்கு என்ன நடந்தது...‌உங்களை இடிச்ச காரை நீ பாத்தியா " ரவி..

"நான் நல்லா பார்த்தேன் ரவி கருப்பு கலர் ஃபெராரி தான் ....இடிச்சதும் ஒரு நிமிடம் கூட நிற்கல வேகமாக போயிருச்சு... இதை போலீஸ் கிட்ட சொன்னா நம்ப மாட்டிங்கறாங்க .. வேகமாக வண்டி ஓட்டி வரும் போது பிரேக் பிடிக்காம தான் விபத்து நடந்ததா சொல்லுறாங்க.. நான் அன்னைக்கு மெதுவாதான் வண்டி ஓட்டினேன் அதுவும் பிரேக் நல்லாதான் இருந்தது .நான் எவ்வளவோ சொல்லியும் நம்பல நான் மயக்கத்துல இருந்ததால எதுவும் சரியா கவனிக்கலனு சொல்றாங்க ரவி..." என கண்கலங்கினாள்.

"நீ சொல்றத நான் நம்புறேன் வர்ஷூ... அந்த காரோட நம்பர் இல்ல வேற ஏதும் அடையாளம் பார்த்தாயா" என கேட்க அவளுக்கு எதுவும் நினைவில் இல்லை என்று அவனைக் கண்டு உதட்டை பிதுக்க ரவியும் அதற்கு மேல் அவளை கஷ்டப் படுத்த விரும்பாது விட்டுவிட்டான்.

சிறிது அமைதிக்குப் பின் " ஊரில் எல்லா எப்படி இருக்காங்க ..." என்றாள்

" ம்ம் இருக்காங்க.. உயிர் இல்லா நடைபிணமா.. எங்களோட செல்லப் பொண்ணு அவ .. அங்க வீட்டுல ஒவ்வொரு இடத்துலயும் அவளோட நியாபகங்கள் மட்டும் தான்..தாத்தா எப்பவும் ஸ்ரீ ய பத்தியே தான் நினைச்சுட்டே இருப்பாரு சின்ன வயசுல எல்லாம் அவளோட கால் தரைல பட விட மாட்டாரு தோள்ளையேதான் சுமப்பாரு அதான் அவ இல்லைங்கறத ஏத்துக்க முடியாம அவ கூடவே ...‌ ஆனால் இப்படி எல்லாம் நடக்கும்னு நாங்க கனவுல கூட நினைக்கல...." என்றான் கண்கலங்க....

" எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு ரவி ரொம்ப குற்றவுணர்ச்சியா!! " என்றாள் வர்ஷினி ..

அவன் "நீ எதுவும் கவலைப்படாத வர்ஷூ... இதுக்கெல்லாம் யார் காரணம்னு மட்டும் தெரியட்டும் அன்னைக்குதான் அவனுக்கு கடைசி நாள் "என்றான் தீர்க்கமாய்.. அதன்பின் ரவியின் போன் அழைக்க பார்த்தால் ராம் தான் கலைச் செல்வி மருத்துவமனை வளாகத்தினுள் வந்து விட்டதாய்..

ரவி அவளிடம்‌ " வர்ஷூ எதைப்பற்றியும் கவலைப்படாத ... உனக்காக எப்பவும் நான் இருப்பேன் ...‌ " என்றவன் அவளை நெருங்கி அவளின் நெற்றியில் தன் முதல் அச்சாரத்தைப் பதித்தான்.. அவளும் கண்மூடி அதை அனுபவித்தவளுக்கு மூடிய இமைவழியே கண்ணீர் வழிந்தது ராம் அதை துடைத்துவிட்டு அங்குள்ள இருக்கையில் சமத்தாய் அமர்ந்து கொண்டான்..
-------------------------------------
தீர்க்கமான பார்வையுடன் தன்னை அளவிடுவது போல் பார்த்துக் கொண்டிருப்பவரைக் கண்டவனுக்கு சற்று வினோதமாக இருந்தது.. அடுத்த வினாடியே தன் தயக்கங்களை தகர்த்து எறிந்த ஆருஷி அவரிடம் " நீங்க யாரு? இது என்ன இடம் ... நான் எப்படி இங்கே வந்தேன் ... என்னை சுத்தி என்ன தான் நடக்குது.." என்றான் அழுத்தமான குரலில்.. இந்த மாதிரி ஒரு வனாந்திர சூழ்நிலை நிச்சயம் எவ்வளவு தைரியமானவருக்கும் பயத்தை உருவாக்கும்.. அப்படி இருக்கையில் தன்னிடம் தைரியமாக பேசுபவனை கண்டு மெச்சுதலான பார்வை பார்த்து வைத்தார் சித்தர்... அவரின் பார்வையை தாங்கி நின்றவனைக் கண்டவர் " ஆருஷி இந்த உலகத்தில் நடக்கின்ற எல்லா செயல்களுக்கும் சாதகம் பாதகம் என்று ரெண்டு விசயம் இருக்கு அது உனக்கு தெரியுமா" என வேதாந்தம் பேச இவனோ இப்படி ஒரு இடத்தில் இருந்து கொண்டு எப்படி என் பெயரை தெரிந்து வைத்திருக்கிறார் .. இன்னும் என்னைப் பற்றி என்னவெல்லாம் தெரியும் என சிந்தித்தவன் பின் அவரின் கேள்வியில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டான்...

"தெரியும்... ஆனால் நான் என்ன செய்தேன்.." என்றான் குற்றவுணர்ச்சியை வெளிக்காட்டாமல்.. ஏனெனில் தற்போது தான் ஒருவனை மேலோகம் அனுப்பி வைத்தான்...

அவரோ அவன்பதிலில் புன்னகை புரிந்தவர் தொடர்ந்து "உன்னால் நேர்ந்த கெட்ட சம்பவம் ஒரு அசுரனுக்கு சாதகமாய் முடிந்திருக்கிறது... அதை சரிசெய்ய வேண்டியதும் உன் பொறுப்பு தான் ஆருஷி.." என்றார் நிதானமாக... அவனோ அவர் கூறுவதில் தலையும் புரியாமல் காலும் புரியாமல் விழித்தான்.

பின் அவனே " அவன் தப்பு பண்ணியவன் அவனை விட்டு வைத்தால் இன்னும் பலருக்கு துன்பம் அதனால் அப்படி செய்தேன்"என்றான் உண்மையை ஒப்புக் கொண்டவனாய்

அவரோ " நான்‌ அதைப் பற்றி கூறவில்லை ஆருஷி அவன் தீயவன் என்று எனக்கும் தெரியும் .. அவனை நீ கொலை செய்வில்லை உனக்கு தீங்கிழைத்தவனை வதம் செய்துள்ளாய்... உனக்கு தெரியாமல் உன் சுயநினைவு இல்லாமல் செய்த பிழையால் இங்கு எத்தகைய தீங்கு நிகழப் போகிறது தெரியுமா அதைப் பற்றி தான் சொல்ல வருகிறேன்" என்றார்..

அப்பொழுது தான் ஆருஷி துணுக்குற்றான். நான் என்ன தவறு செய்தேன் என்னால் யாருக்கு பிரச்சினை என்று யோசித்தான்.. அவனின் நெற்றி சுருக்கம் மூலம் அவனின் குழப்பத்தை ஊகித்தவர் அவனாய் கேள்வி கேட்கும் வரை அமைதியாக இருந்தார்...

அவனோ " சரி நான் செய்த பிழையை நானே சரி செய்கிறேன்... ஆனால் இந்த நிலையில் எப்படி... என்னால் பெரிதாய் என்ன செய்திட முடியும்" என்றான் சந்தேகபாணியில்... அவரும் அவனின் பதிலில் திருப்தியுற்று .

."நீ இப்போ உதவி செய்யப் போறது ஒரு ஆத்மாவிற்கு உன்னால் உயிரிழந்து ஆன்மாவாக மாறியவருக்கு... அந்த ஆன்மா மிகவும் சக்தி வாய்ந்தது அதனை அந்த தீயவன் மட்டும் அடைந்து விட்டால்... இங்கு பல விபரீதங்கள் நிகழும் ... அதனால் நீ அதனை தேடி சென்று ஆதியில்லா வெளிச்சத்திற்கு அனுப்ப வேண்டும் " என்றார் நிதானமாய் அதனை கேட்ட ஆருஷி அதிர்ச்சி அடைந்தான் தன்னால் இதை செய்ய முடியுமா என்று ... இருந்தும் உறுதியை தளர விடாமல்

" வெளிச்சமா!! அப்படி என்றால் என்ன? எனக்கு புரியல " என்றான் தொடர்ந்து...

" ஆருஷி உனக்கு ஆரம்பத்தில் இருந்து சொன்னால் புரியும் என்று நினைக்கிறேன்... நான் கூறுவதை நீ கவனமாய் கேட்க வேண்டும்... அப்போதுதான் ஆபத்தின் போது உன்னால் சமயோசிதமாக செயல்பட முடியும்" என்று ஆரம்பித்தார் சித்தர்..
--------------------------------
பத்து நாட்கள் ஆகி இருந்தது ஸ்ரீயின் உயிர் உடலை விட்டு பிரிந்து.. அவள் ஒரளவு பழகியிருந்தாள் இந்த ஆன்ம நிலைக்கு உடன் ஆதித்யா வேறு அவளை வாட‌ விடாமல் உற்சாகமாய் வைத்துக் கொண்டான்..

அவள் சில சமயங்களில் யோசிப்பது உண்டு இந்த நிலைக்கு ஒரு முடிவு இல்லையா சிறுவயதில் கேள்வி பட்டிருக்கிறாள் சில கதைகளையும் அதில் வரும் பேய்கள் ஆக்ரோஷமாகவும் பிறரை பயமுறுத்துவதாகவும் இருக்கும் என ஆனால் தானும் ஆதித்யாவும் அவ்வாறு இல்லையே என நினைத்துக் கொள்வாள்..

அவளுடைய பெரிய பிரச்சினை உச்சி வெயிலும், இரவு பொழுதுகளும் தான் அதனை கடப்பதற்கு தான் பெரும்பாடு ஆகி விடுகிறது... நெருப்பு போல் தகிக்கும் வெயில் அவளின் ஆன்மாவை நிலை குழைய செய்கிறது ... இரவுகளில் இருட்டு பயம்...அந்த நிசப்தமான‌ சூழ்நிலையில் கேட்கும் வித்தியாசமான சத்தமும் நாய்களின் சத்தமும் தான் அவளின் மிகப் பெரிய பயமே..அந்நேரங்களில் பயந்து சிவநாமத்தை அவளை அறியாமலே உச்சரித்துக் கொண்டு இருப்பாள் அதுவே அவளைக் காக்கும் கவசம் என்று அறியாமல் ... சில நேரங்களில் அனைத்திற்கும் துணையாய் ஆதித்யா இருந்தான்...

இத்தனை நாட்களில் ஆதித்யா செய்யும் குறும்புகளில் பெரிதும் தேறியிருந்தாள். அவனோ பகல் நேரத்தில் விளையாட்டு பூங்கா சென்று அங்குள்ள குழந்தைகளுடன் குழந்தையாய் கலந்து விடுவான்... மற்றவர் கண்களுக்கு நாம் புலப்பட வில்லை என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விசயம் என்பதை அவன் நிருபித்து இருந்தான்..

நேராய் செல்பவன் அங்குள்ள குழந்தைகளின் வழியாக ஊடுருவி சென்று அவர்களுக்கு பழிப்புக் காட்டுவான்.. ஊஞ்சலில் குழந்தைகள் அருகில் அமர்ந்து அவர்களுடனே ஆடுவான்... வழுக்கி விழும் பலகை, சிசாவிலும் அவன் செய்யும் சேட்டைகளை கண்டு ஓரமாய் அமர்ந்து சிரித்துக் கொண்டிருப்பாள் ஸ்ரீ..

வாடாத மலராய் அவளினுள் இருக்கும் கவலை அவளின் குடும்பம் தான் எவ்வாறு தன் இழப்பை ஏற்றுக் கொண்டார்கள் இவ்வளவு நாட்களில் மீண்டு வந்திருப்பார்களா என்று மீண்டும் மீண்டும் நினைப்பவள் இறைவனிடம் வேண்டிக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியும் இல்லை.. அத்துடன் இந்த நிலைக்கு சீக்கிரம் முடிவு வேண்டியும் நிதம் மனதார பிராத்திக்கிறாள்.

அன்றிரவு வழக்கம் போல் அந்த கடற்கரை ஓரமாக ஸ்ரீ யும் ஆதித்யாவும் வந்தனர்... "ஸ்ரீ நாளைக்கு நம்ம மால் போலாமா... எங்க அம்மாவும் அப்பாவும் என்ன ஒரு பெரிய மால்க்கு கூட்டிட்டு போயிருக்காங்க .. அங்க போலாம் பா பிளீஸ் " என்றான் ஆதித்யா.. "சரி ஆதி போலாம்... " என்றாள் ஸ்ரீ அவளுக்கு இன்றிரவு எப்படி கடக்க போகிறோம் என்ற கவலை... ஆதி அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் பயம் என்னவோ விட்ட பாடுதான் இல்லை....அதிக வெளிச்சமும் ஆன்மாக்களுக்கு ஆகாது என்பதால் அவர்களால் விளக்கு எரியும் இடங்களிலும் இருக்க முடியாது...

இவை அனைத்துமே ஸ்ரீ அனுபவத்தால் உணர்ந்ததும் ஆதித்யா கூறியதும். ஆன்மாவாகிய அடுத்தநாள் இரவு இருட்டு பயத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் நிற்க பத்து நிமிடங்களில் அவள் ஆன்மா மெல்ல மறைய அவளுக்கு கை கால்கள் எல்லாம் எரியத் துவங்கியது... அதன் பின்பே உணரத் துவங்கினாள் அதிக வெளிச்சமும் வெப்பமும் ஆபத்து என்பதை...

" ஸ்ரீ...ஸ்ரீ ... "என ஆதி இருமுறை அழைத்த பின்பே சுயத்திற்கு வர ஆதியோ அலுத்துக் கொண்டான்

" என்ன ஸ்ரீ நீ கனவு காணுகிறாயா எவ்வளவு நேரம் கூப்பிட்டுட்டே இருக்கேன் " எனவும் கனவு என்றவுடம் தான் அவளுக்கு அவளின் கனவு நாயகனின் நினைவு வந்தது .. அதிலேயே மூழ்கி விட்டாள் ஸ்ரீ. சென்னை வந்து ஊரிற்கு கிளம்பும் அந்த வாரம் அவளிற்கு அவனின் தரிசனம் கிடைக்கவே இல்லை அதில் சிறுவருத்தம் இருந்தாலும் அதை மறந்து தான் அன்றாட வேலைகளை செய்வாள்.

ஆனால் இன்றோ அவளுக்கு அவனின் நினைவுகள் அதிகமாய் தோன்ற ஒவ்வொரு கனவாய் அவள் நினைத்துக் கொண்டே வந்தாள். வழக்கம் போல அவர்களின் படகிற்கு வந்தவர்கள் அதன் மீது மல்லாக்க படுத்துக் கொள்ள ஆதியோ தன் பெற்றோருடன் மாலிற்கு சென்ற கதையை விவரித்துக் கொண்டு இருந்தான்.. ஸ்ரீ வெறுமனே ம் கொட்டிவிட்டு கனவில் மூழ்கி விட்டாள். அவனின் நினைவில் மூழ்கியவள் சிவநாமத்தை சொல்ல மறந்திருந்தாள் அதனால் நிகழவிருக்கும் விபரீதத்தை அறியாமல்......


(*சற்று வித்தியாசமான கதைக்களம் மக்களே ... பொதுவாக மக்கள் மனதில் இருக்கும் பேய் ஆன்மா பற்றிய சித்தரிப்புகளை மாற்றிய புது முயற்சி... இன்னும் ஆன்மா பற்றிய பல தகவல்களை என் கண்ணோட்டத்தில் அடுத்தடுத்த எபிசோடுகளில் போடுகிறேன் மக்காஸ்.. இன்று காதலர் தினம் என்பதில் சிறிது காதலையும் கலந்துள்ளேன். என்னுடைய கதைக்கருவிற்கு காதல் காட்சிகள் பெரிதும் பொருந்தாது இருந்தும் கதையை பாதிக்கா வண்ணம் தர முயற்சிக்கிறேன் நட்புக்களே!!*)

வழக்கம் போல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 👇👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24617

அத்தியாயம் 11

கலைச்செல்வி உள்ளே வருவதற்கு முன்பே ராம் வர்ஷினி அறையினுள் வந்து ரவியுடன் அமர்ந்து கொண்டான்... உள்ளே வந்த கலைச்செல்வியோ முதலில் கண்டது முகத்தில் தெளிவுடன் அமர்ந்து இருந்த வர்ஷினிதான் அதுவும் தன்னைக் கண்டு மெலிதாய் அவள் புன்னகைக்க அவருக்கு நெகிழ்ச்சியில் கண் கலங்கியே விட்டது...

அவளிடம் சென்றவர் அவள் தலையை மென்மையாய் வருடிவிட்டு ரவி ராம் இருவரையும் நன்றியுடன் பார்த்தார். கண்விழித்த இத்தனை நாட்களில் அவள் முகம் எப்போதும் கவலையுடனும் சோகத்துடனும் இருந்தது இவர்கள் எவ்வளவு தைரியம் கூறியும் சரியாகதவள் இப்போது சற்று தெளிந்திருப்பது பெற்றவள் மனதில் பால் வார்த்தது இதற்கு காரணம் ரவியும்,ராமும் தான் என்பதை யாரும் சொல்லாமலே புரிந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் வந்த ராமநாதனுடன் மற்ற மூவரும் விபத்து நடந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன் சென்றனர். விசாரித்து இன்ஸ்பெக்டரை பார்க்க சென்று தங்களைப் பற்றிய விபரம் கூறினர்.

" பத்துநாள் முன்னாடி இந்த ஏரியா ஒரு வழிப் பாதையில் நடந்த ஸ்கூட்டி விபத்துல இறந்துபோன ஸ்ரீ எங்களோட தங்கச்சி தான்... அந்த விபத்து அப்போ கார்தான் அவங்கள இடிச்சதா கூட இருந்த வர்ஷினி சொல்றாங்க எங்களுக்கு சந்தேகமாக இருக்கு அத பத்தி தான் நாங்க கேட்க வந்துருக்கோம் " என விஷ்ணு கூற..

இன்ஸ்பெக்டரோ அருகில் நின்ற ராமநாதன் உஷ்ணமாக பார்த்துப் பின் "அந்த தலையில் கட்டுப் போட்டு கோமா போய் வந்த வர்ஷினி தான சொல்றீங்க... அந்த பொண்ணுக்கே தலையில் அடிப்பட்டிருக்கு அதனால மூளை குழம்பி போய் ஏதோ ஏதோ சொன்னா அதைக் கேட்டுட்டு வந்து என்கிட்ட விசாரணை பண்ணீட்டு இருக்கிங்க ... அந்த வழியா அந்த நேரத்தில் எந்த வண்டியும் வரல கார் வந்ததுக்கான எந்த ஆதாரமும் இல்லை ... அவங்க ஸ்கூட்டி பிரேக் ஃபெயிலியர் ஆகி விபத்து நடந்திருக்கு ..அதுதான் உண்மை " என்றார் அழுத்தமாக.

ரவிக்கோ அவரின் பதிலில் நரம்புகள் புடைத்து கிளம்பின அதுவும் தன் முன்னேயே தன்னவளை ஏதோ மனநிலை சரியில்லாதது போல் பேசுபவரை அடித்து நொறுக்கும் எண்ணம்... மேலும் தங்களிடமே இப்படி பேசுபவர் வர்ஷினியிடம் எப்படி விசாரித்துப்பார் என்பது ரவிக்கு நன்றாய் புரிந்தது...

உடனே ராமநாதனோ " இல்லை சார் அந்த வாரத்துல தான் ஸ்கூட்டி சர்வீஸ்க்கு விட்டோம் வண்டி நல்ல கண்டிஷன்ல தான் இருந்தது அப்படி இருக்கும் போது எப்படி பிரேக் ஃபெயிலியர் ஆகும்"என்றார். அதற்கு அவரோ "அதெல்லாம் எனக்கு தெரியாது விபத்து நடக்க இதுதான் காரணம்... எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு உங்களுக்கு விளக்கம் கொடுக்கிறது மட்டும் வேலை இல்லை "என எழுந்து கொள்ள

ராமோ " என்ன சார் பேசுறீங்க... கேஸப்பத்தி சரியா விசாரிக்காம முடிச்சுட்டு நாங்க சந்தேகம் சொன்னாலும் கேட்க மாட்டிங்ரீங்க ..." என எகிற ரவி அவனின் கையை அழுத்தி பேச வேண்டாம் என தலையசைத்தான்... ரவியோ ஒரு வார்த்தை போசாமல் அவரையே கூர்மையாய் பார்க்க அவரோ அவனின் பார்வை வீரியத்தை தாங்காதவர்

" ஆதாரமில்லாத கேஸ் இதுல நூறு சதவீதம் விபத்துனு தெரிஞ்சதுக்கு அப்புறமும் உங்க கற்பனைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது " என்றவர் வெளியில் கிளம்ப அவரைத் தொடர்ந்து எழுந்த நால்வருக்கும் அவரைக் கொலைப் பண்ணும் ஆத்திரம்.
வெளியே வந்த இன்ஸ்பெக்டர் யாருக்கோ போனில் அழைத்து நடந்ததை கூறியவர் " சார் இப்போதைக்கு அமைதியா அவனுங்க போகிறமாதிரி இருக்கு ஆனால் திரும்ப கண்டிப்பா பிரச்சனை பண்ணுவாங்க.." எனக் கூறி வைத்தார்....

தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே எதிர் டீக் கடையில் வந்து சோர்வாய் அமர்ந்தனர்.. அவர்களுக்கு தெளிவாய் புரிந்தது இதில் பெரிய சதி நடந்துள்ளது என்று... ராமநாதன் " நீங்க வந்ததுனால தான் என்ன உள்ளயே விட்டாங்க.. ரெண்டு நாளாக இங்க வந்து இன்ஸ்பெக்டரை பார்க்கவே விடலப்பா..." என்றார் சோர்வாய்..

அப்போது அங்கு வந்த கான்ஸ்டபிள் ஒருவர் " சார் நீங்க வர்ஷினி அப்பா தான அவங்க இப்போ எப்படி இருக்காங்க" என்றார்.. ராமநாதனுக்கோ சட்டென‌ அடையாளம் தெரியாமல் சிறிது நேரம் யோசித்தார் பின் தான் நினைவு வந்தது விபத்து அன்று இவர்களுடன் மருத்துவமனையில் இருந்தவர் என்று அவரை பார்த்து புன்னகைத்தவர் " இப்போ கொஞ்சம் பரவாயில்லை சார் எழுந்து நடக்க எப்படியும் ரெண்டு மாசம் ஆகும்னு சொல்லிருக்காங்க சார்" என்க... " நல்லா பாத்துக்கோங்க சார் "என்றவர் கிளம்ப எத்தனிக்க அவரை தடுத்து நிறுத்திய ரவி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு "சார் அன்னைக்கு என்ன நடந்தது ஏன் இன்ஸ்பெக்டர் மாத்தி பேசுறாரு " என கேட்க பெருமூச்சு விட்டபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த கான்ஸ்டபிள் " அவரே மாத்தி தான் வந்துருக்காரு " என்க "என்ன .." என அனைவரும் ஒரு சேர அதிர்ந்தனர்..

" ஆமா தம்பி விபத்து நடந்த அன்னைக்கு அத விசாரிச்ச இன்ஸ்பெக்டர் சேகர் அவரை அடுத்த நாளே வேறு ஊருக்கு மாத்திட்டாங்க. நானும் ஊருக்கு போயிட்டு நேத்து தான் வந்தேன் சார்"என்றார்...

பின் விபத்து கேஸ் குறித்தும் அந்த இன்ஸ்பெக்டர் நடத்து கொண்டதைப் பற்றியும் அவரிடம்‌ கூற.. அவரோ " தம்பி நீங்க சொல்றத பார்த்தா இது பெரிய இடத்தோட வேலைன்னு நினைக்கிறேன்.. அந்த பொண்ண பத்திரமா பார்த்துக்கோங்க சார்... அதுமட்டுமில்லாம அவங்கள சாட்சியா வச்சும் எதும் செய்யாதிங்க அப்புறம் வர்ஷினி மன நிலை சரி இல்லாதவங்கனு இவனுங்களே முத்திரை குத்திருவாங்க .. வேறு ஆதாரம் எதுவும் கிடைக்குதானு பாருங்க இல்லாட்டி இந்த இன்ஸ்பெக்டர விட பெரிய ஆளுங்க யாராச்சும் மூலமாக கேஸ திரும்ப ஓப்பன் பண்ணுங்க"என்று அவருக்கு தெரிந்த வழிகளைக் கூறிச் சென்றார்.. இதைக் கேட்ட நால்வரும் தீவிர யோசனை செய்தனர்...

திரும்ப மருத்துவமனை செல்லும் வழியில் விபத்து நடந்த பாதையில் வண்டியை விட சொன்னான் ரவி... அந்த சாலை எப்போதும் போல் சாதாரணமாக ஆட்கள் நடமாட்டம் குறித்து ஒரு சில வண்டிகள் மட்டும் அந்த பாதையை பயன்படுத்திக் கொண்டிருந்தன.. இவர்கள் வண்டியை ஓரம் நிறுத்தி விட்டு விபத்து நடந்த இடத்தை நோக்கி சென்றனர்..

பத்து நாட்கள் ஆகி இருந்ததால் அங்கே விபத்து நடந்ததுக்கான எந்த அடையாளமும் இன்றி சாதாரணமாய் காட்சி அளித்தாலும் ஓரத்தில் ஸ்ரீ விழுந்த இடத்தில் இன்னும் செங்குருதி பளபளப்பது போல் அவர்களுக்கு தெரிந்தது ராமோ அதைக் கண்டு முகம் இறுக மண்டி போட்டு அதனை தன் கைகளால் தடவினான் ..ஈரப்பசையற்று காய்ந்து போய் இருந்தது அவனோ இளகும் மனதைக் கட்டுப்படுத்த அதற்கு மேல் முடியாமல் எழுந்து சென்று காரின் அருகில் நின்று வேக வேக மூச்சுக்களால் தன்னை சமன் படுத்திக் கொண்டான் விஷ்ணுவிற்கோ அழுகை வர ரவியை கட்டிப்பிடித்து "ரவி என்னால முடியலடா போலாம்" என்றான்..
" நம்ம ஸ்ரீ யோட இந்த நிலைமைக்கு காரணமானவன நம்ம கையால் தான் போட்டுத் தள்ளுணும்டா" என்றான் ஆக்ரோஷமாய் மற்றவர்களும் அதனையே ஆமோதித்தனர். பின்பு விபத்து பற்றி சுற்றிலும் இருந்த சிலரிடம் விசாரிக்க தெரியவில்லை என்ற பதிலே கிடைத்தது..

சோர்வுடன் அன்றிரவே மூவரும் பொள்ளாச்சி கிளம்பினர் ... இன்னும் இரண்டு நாட்களில் ஸ்ரீ யின் பிறந்தநாள் என்ற நிலையில் ரவி தான் செய்யவிருப்பதைப் பற்றி யாரிடமும் அவன் கூறவில்லை தெரிந்தால் நிச்சயமாக அனைவரும் தடுக்கவே செய்வார்கள் என்று எண்ணியவன் பயிற்சி முடிந்தும் அவர்களுக்கான முறையான பணிநியமன விழா மட்டும் இருந்தது அதற்காக அடுத்த நாளிலேயே டெல்லி கிளம்பிவிட்டான்..
=========================================
ஆதிலிங்கம் பெயரைப் போலவே அவனும் சிறுவயதில் மிகுந்த சிவபக்தி உடையவன்... அவனுடைய தந்தை சிவகணமாக இருந்தவர் ....

சிவபெருமானின் மீது மிகுந்த அன்பு கொண்டு தன் வாழ்க்கை முழுவதும் அவருக்காக அர்பணித்துக் கொள்பவர்கள் சிவனடியார்கள்(சித்தர்கள்) ,சிவகணங்கள் என்னும் இருவகையை சேர்வர்.... இதில் ஆண் பெண் பேதம் இல்லை..

சிவனடியார்கள் முழு நேரமும் சிவபெருமானை தொழுபவர்கள் மனித வாழ்வைத் துறந்து சித்தமும் சிவனை சிந்தையில் நினைத்து வாழ்ந்து பிறப்பில்லா முக்தியை அடைவார்கள் அவர்கள் வாழும் வரை மக்களுக்கு பல தொண்டுகள் செய்து சிலர் ஜீவசமாதியும் அடைந்துள்ளனர்....

சிவகணம் என்பது சிவபெருமான் என்ற ஈசனின் பாதுகாப்புப் படையே ஆகும்..அவர்களின் வேலை சித்தர்களை முக்தி அடைய செய்ய,கைலாயம் அழைத்து வருவதும் , பூமியில் வாழும் மனித மிருகங்களை அழிப்பதே ...இன்றளவும் சில தீயவர்களுக்கு மனித ரூபத்தில் இறைவன் தண்டணை கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்...

இந்தப் பிரபஞ்சத்தில் லட்சக்கணக்கான சிவகணங்கள் அந்த ஈசனின் உத்தரவுக்காக பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக காத்துக் கொண்டிருக்கின்றன.... இறைவன் நேரில் வருவதில்லை ஏன் அவருக்கு உருவம் கூட கிடையாது.... ஏனெனில் அவர் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி..
மிருகங்கள் ,பறவைகள், பூச்சிகள் என உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் சிவகணங்கள் வாழ்கின்றனர்...

திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் பிட்டுக்காக மண் சுமந்த படலத்தின் இறுதியில் வந்தி பாட்டியைச் சிவகணங்கள் கயிலைக்கு அழைத்துச் செல்லுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரு காகம் சிவகணமாக மாறிய வரலாறும் உள்ளது... இதில் மனிதர்களின் எண்ணிக்கை மட்டுமே மிகக் குறைவு ... ஆறறிவு கொண்ட மனதிர்கள் ஒரு கால கட்டத்திற்கு மேல் சுயநலவாதிகளாக மாறிவிடுகின்றனர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநிலை என்னுமிடத்தில் அமைந்துள்ள திருநிலை பெரியாண்டவர் திருத்தலம் அதில் உள்ள 21 சிவகணங்கள் லிங்க வடிவில் காட்சியளிக்கின்றனர். அதுவே இந்த கலிகாலத்தின் கடைசி மனித சிவகணங்கள் ஆகும். அவர்களின் வாரிசுகள் இருந்தாலும் அவர்கள் சாதரண மனிதர்கள் போல் பொன் பொருள் மேல் ஆசை கொண்டு மனித வாழ்வினுள் கலந்து விட்டனர்.சிவகணங்கள் மனிர்களோடு ஒன்றி வாழ்ந்தாலும் அவர்களை விட ஒருபடி மேலே பக்தியும் மனோதிடமும் கொண்டு தன் வாரிசுகளுக்கும் அதனையே கற்பிப்பர்...... ஆசையை துறந்து எந்நிலையிலும் கடவுளுக்கு தொண்டு செய்பவர்களே அதற்கு தகுதியானவர்கள்...

சிவகணங்கள் குடும்ப வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஒரே வாரிசாகவும் அதுவும் ஆண்மகவாகவுமே பிறக்கும் அதுவும் சில தலைமுறைகளாக தான்... அந்த 21 சிவகணங்களில் ஆதிலிங்கத்தின் தந்தையும் ஒருவர்...

இருபது வருடங்களாக ஒன்றாய் வாழ்ந்தவர்கள் தந்தை முக்தி அடைய சென்ற பின்பு தாயுடன் சிறிது காலம் வாழ்ந்த ஆதிலிங்கம் இந்த மனித வாழ்வினுள் சரியாக பொருந்த முடியாமல் காட்டினுள் சென்றுவிட்டான்... அது நாகரிகம் சற்று வளர்ந்து வரும் காலகட்டம் அவனுடைய தாயும் பின்பு முக்தி பாதையை அடைந்துவிட தனிமையில் விடப்பட்டான் தன் வாலிப வயதில்... அதுவரை நல் பாதையில் சென்று கொண்டிருந்த அவனின் எண்ணங்கள் சரியான வழிகாட்டுதலின்றி தீய வழியை நோக்கி சென்றது... பொதுவாகவே சிவனடியார்கள், சிவகணங்கள், அட்டமா சித்திகளை நன்கு கையாளத் தெரிந்தவர்களாக இருப்பர்...

அனி மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே"
* திருமூலர்- திருமந்திரம்

அட்டமா சித்திகள்
அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.
இந்த எட்டு அட்டமாசித்திகளிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பர்.. "

"பிராகாமியம் சித்தியாலதான் நீங்க உங்களோட ஆன்மாவை உங்க உடம்புல இருந்து தனியா பிரிக்க முடிஞ்சுருக்கு" என்றான் ஆருஷி யோசனையுடன்... அவனை மெச்சுதலான‌ பார்வை பார்த்த சித்தருக்கு ஆருஷியால் தான் அந்த ஆத்மாவை காப்பாற்ற முடியும் என்று புரிந்தது......

(தாமதத்திற்கு மன்னிக்கவும் மக்களே!!! சில சொந்த வேலை பளு காரணமாக யுடி கொடுக்க முடியவில்லை... இனி வாரம் ஒருமுறை தொடர்ந்து தவறாமல் யூடி வரும் மக்காஸ்) ( இது முழுக்க முழுக்க என் கற்பனைக் கதையே ... முன்னரே அறிவித்து விட்டேன் பொங்கி விடாதீர் மக்காஸ்😂)

கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 👇👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24717. 24718. 24719.

அத்தியாயம் 12.

ரவி டெல்லியில் இரண்டு நாள் விழா முடிந்தவுடனேயே ஊரிற்கு கிளம்பியிருந்தான் அவனிற்கு ஸ்ரீ யின் விபத்திற்கு காரணமானவர்களை அழிக்க வேண்டிய வெறி...

இன்று ஸ்ரீ யின் பிறந்தநாள் ... போன வருடம் அவளுடன் மகிழ்ந்த நாட்கள்‌ நினைவு வர அன்று எவருக்கும் உணவு இரங்கவில்லை... வெகு நாட்கள் கழித்து ராம் ஸ்ரீ யின் அறைக்குள் நுழைந்தான் அவனுடன் சிறியவரகளும்... ஸ்ரீ யின் தாயும் சவிதாவும் அவளுடைய உடைகள் இன்ன பிற பொருட்கள் என அனைத்தையும் அழுது கொண்டே பேக் செய்து கொண்டிருந்தனர்....

ஆம் , அவர்கள் அவளின் பொருட்களை ஆசிரமத்திற்கு கொடுக்க முடிவு செய்திருந்தனர்... சில இடங்களில் இறந்தவர்களின் பொருட்களை மூன்றாம் நாளிலோ அல்லது பதினாறாம் நாளிற்குள்ளோ அதனை அப்புறப் படுத்தி விடுவார்கள் ... இதில் ஸ்ரீ யின் குடும்பத்தினர் யாருக்கும் விருப்பமில்லை என்றாலும் வேறு வழியின்றி அதனை தூக்கி போடுவதற்கு பதில் ஆசிரமத்திற்கு கொடுக்கலாம் என ராம் கூறியதை ஏற்று அனைவரும் அவளின் பிறந்தநாளான இன்றே அதை செய்ய முடிவு செய்தனர்.

சுத்தமாக இருந்த அறையின் மூலையில் அவள் அவர்களுக்காக கடைசியன்று வாங்கிய பொருட்கள் நிறைந்த பைகள் இருந்தன. ராமநாதனே அதையெல்லாம் இங்கு சேர்த்திருந்தார்.... அந்தப் பைகளை படுக்கையின் மேல் வைத்தவர்கள் அதனை பிரிக்க அனைவருக்கும் ஒவ்வொரு செட் உடை இருந்தது...

காபி கப்பில் சின்னவர்கள் அனைவரும் இருக்க நடுவில் ஸ்ரீ நின்று ராம் மற்றும் ரவியின் தோளில் கைப் போட்டு சிரித்துக் கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் கடைசிப் பிறந்தநாள் அன்று எடுத்து இருந்ததை பிரிதிபலிக்க எட்டு கப்புகள் அதே போல் இருந்தது...

அவர்களின் துணிப் பைகளினுள் விஷ்ணுவிற்கும் சவிதாவிற்கும் பேபி தூங்குவது போன்ற கீ செயின் அதனுடன் இருக்க அதைக் கண்டு இருவருக்கும் சொல்ல முடியாத துக்கம் தொண்டையை அடைத்தது... நீண்ட இடைவெளியில் ஸ்ரீ பிறந்ததால் விஷ்ணு அவளை மகள் போலவே வளர்த்தான் சவிதாவும் அப்படியே எண்ணியிருந்தாள் அப்படிப்பட்டவள் இன்று தங்கள் குழந்தையைக் கூட காணமல் மறைந்து விட்டாளே என்ற ஆதங்கம் உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது.

ரவிக்கு வெள்ளிக் காப்பு ஒன்று... நவினுக்கு சிறிய வடிவிலான ஸ்டேத்தஸ்கோப்பு நரேனுக்கு வக்கிலைக் குறிக்கும் டை மற்றும் சுத்தியல் கொண்ட கீ செய்னும் இருந்தது . மனோஜிற்கு நவீன வீடியோ கேம்கள் அடங்கிய பார்சல் இருந்தது..

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க கடைசியாய் ராம் என பெயர் எழுதிய கிஃப்ட் கவர்கள் சூழ ஒரு பெட்டி இருந்தது... அதனை கைகள் நடுங்க ராம் பிரிக்க அதில் மினியேச்சர்( சிறிதான) கிரே கலர் ராயல் என்ஃபீல்டு அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது... அவ்வளவுதான் இவ்வளவு நாள் அவன் கடைபிடித்த வைராக்கியம் ஒரு நொடியில் காணமல் போக அதனை கட்டிப் பிடித்து வெடித்து அழுதிருந்தான்...

ராமிற்கு ஒர்ஜினல் பைக்குகளை விட இது போன்ற மினியேச்சர்களில் தான் மிகுந்த ஆர்வம் .. தன் படிப்பு முடிந்து கலெக்சனை ஆரம்பிக்க எண்ணியிருந்தான் ... இது வேறு யாருக்குமே தெரியாது... ஆனால் ஸ்ரீ க்கு இது எப்படித் தெரியும் என் ஆசைகளை துல்லியமாக கணித்திருக்கிறாளே என்று எண்ணியவன் இனி அவள் என்னுடன் இருக்கப் போவது இல்லை என்று எண்ணி எண்ணி அழுதான்... விஷ்ணு, ரவி , சவிதா என அத்தனை பேரும் எவ்வளவோ சொல்லியும் அவனைத் தேற்ற முடியவில்லை...

மனபாரம் தாங்காது அறைக்குள் அடைந்தவன் தான் மாலைவரை வெளியே வரவே இல்லை... பெரியவர்களும் அவனை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டு அவளுடைய பொருட்களில் சிலதை மட்டும் வைத்துவிட்டு துணிகள் பொம்மைகள் என அனைத்தையும் ஆசிரமத்திற்கு அனுப்பினர்.

அவள் அறையில் இருந்த‌ பெரிதான குடும்ப புகைப்படம் வீட்டின் ஹாலில் மாட்டப்பட்டது.. சிறியவர்கள் ஒவ்வொருவரும் அவளின் ஒவ்வொரு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர் அவள் நியாபகார்த்தமாய்.. அன்று மாலை போன வருடம் எடுத்த ஸ்ரீ யின் பிறந்தநாள் வீடியோவைப் போட அனைவரும் மூர்த்தி வீட்டில் குவிந்தனர்... அதில் அவளை எழுப்பியதில் இருந்து கேக் வெட்டியது இறுதியில் அவள் இரவு அந்த அறையைச் பார்த்து மகிழ்ந்து விஷ்ணுவிடம் அடைக்கலமானது வரை இருந்தது ... இதை எடுத்தது வேறு யாரும் அல்ல சவிதாவும் ரவியும் தான்.. அதை இந்த வருட பிறந்தநாளுக்கு அவளுக்கு போட்டுக் காட்ட திட்டமிட்டிருந்தனர். கடைசியில் அவள் இல்லாமல் பார்க்கும் நிலை வரும் என எவரும் கனவில் கூட நினைக்கவில்லை.. கண்கலங்க அதனை பார்த்து முடித்தவர்களிடம் ரவி தான் அடுத்தடுத்து செய்யப் போகும் செயல்களைக் கூற அங்கிருந்தவர்களின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது...
---------------------------------------------------
தற்போது கொடைக்கானல் என அழைக்கப்படும் கோடைமலையில் தான் ஆதிலிங்கம் வாழ்ந்தது... பொதுவாகவே காடு மலைகள் உள்ள பகுதிகளில் தான் சித்தர்களும் சிவனடியார்களும் அதிகம் வாழ்வர்.. ஏனெனில் காடுகளில் தான் தவம் செய்வதற்கான தனிமையும் அமைதியும் கிடைக்கும்...

ஆதிலிங்கம் தாய் முக்தி அடைந்து விட தனித்து விடப்பட்டான். அவனுக்கு சாதாரண மனிதர்களுடன் வாழ்வதில் சிறிதும் விருப்பம் இல்லை.. மனிதர்களை விட தான் ஒரு படி மேல் என்ற கர்வம் எப்போதும் அவனுள் இருந்து கொண்டே இருக்கும்... அதோடு அவனுடைய வம்சத்தினர் வழிவழியாய் சிவனடியார்களுக்கு சேவை செய்வர் அதில் அவனுக்கு சுத்தமாய் உடன்பாடு இல்லாமல் போனது.... தாம் ஒருவனுக்கு அடிமையைப் போல் வாழ்வதா என்று கர்வமாய் இருந்தான்... தன்னுடைய இருப்பத்தி மூன்றாம் வயதில் அவன் முற்றிலும் மாறிப் போனான்...

அங்குள்ள ‌காட்டினுள் வாழ்ந்தவன் மனிதர்கள் யாரையும் அந்த காட்டிற்குள்‌அவன் அனுமதித்ததில்லை... சிவனடியார்களை விட சிவகணங்கள் உடல் வலிமை உடையவர்கள்... தன் தந்தையைக் கொண்டு பிறந்தவன் ஆறடிக்கும் அதிகமான நல்ல திடகாத்திரமான உடலுடன் இருப்பான்.... தனக்கு தெரிந்த அட்டமா சித்திகளை அவன் தவறான வழியில் பயன்படுத்தினான்... அங்கு பக்கத்தில் பழங்குடியின மக்கள் வாழும் சிறு கிராமம் ஒன்று இருந்தது... அவனைப் பற்றி அறியாமல் மூலிகை பறிக்கவும‌் மிருகங்களை வேட்டையாடவும் காட்டினுள் வருபவர்களை அவன் பயமுறுத்தி துரத்தி விடுவான்... பின்னர் அவர்களின் விளைச்சல்களை அழிப்பது , புது விதமான நோய்களை பரப்புவது என அவனின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஆதிலிங்கத்திற்கு இவையெல்லாம் போதவில்லை இன்னும் தனக்கு சக்திகள் வேண்டும் என எண்ணியவன் அதற்கான வழிகளை தேடினான்... ரிக், யஜுர், சாம,அதர்வண வேதங்களையும், கற்றான்... அவன் கற்ற வரை மிகப் பெரிய விசயமாக பேசப்பட்டது மரணமும் அதன் பின்னான நிலையும் தான்... அவனுக்கு தன் மரணத்தில் சுத்தமாய் உடன்பாடில்லாமல் முதலில் மரணத்தை வெல்லவும் தன் இளமை இழக்காமல் இருக்கவுமான வழிகளை ஆராய்ந்தான்... அப்போது தான் அவனுக்கு தெரிந்தது ஒவ்வொரு உயிர்களுக்கும் ஆதராமான ஆரா சக்தி பற்றி...

அனைத்து ஜீவராசிகளிடமும் உள்ள ஒன்றுதான் ஆரா. இதில் மனிதர்களின் ஆராவைப் பற்றி மட்டும் தான் இங்கு காணப் போகின்றோம். இது நம் உடலை சுற்றி ஒளி கவசம் போல் தோன்றும். மனிதனின் ஆற்றலில் இருந்து வெளிப்படும் ஒன்றுதான் ‘ஆரா’. இதனை நாம் கண்களால் பார்க்கவும் முடியும். உணரவும் முடியும். விஞ்ஞானத்தில் இது நேர்த்திசை, எதிர்த்திசை இரண்டையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஞான மார்க்கத்தில் உள்ளவர்கள் அஷ்ட சக்கரத்தின் வெளிப்பாடு என்றும், சூட்சம சக்தியின் வெளிப்பாடு என்றும் கூறுகின்றனர்.

இந்த சக்தியானது நம் உடம்பிற்கு உள்ளேயும், வெளியேயும் ஊடுருவி செல்லும் தன்மையை கொண்டது. நம் மூளையில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நம்மைச் சுற்றியுள்ள ஆராவின் தன்மையும் மாறிவிடுமாம். நம்முடைய உடம்பு முழுவதும் நம் உள் உறுப்புகளின் துணைகொண்டு இந்த ஆரா சக்தி செயல்படுவதாக நம் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர் ஆனால் அது உண்மை இல்லை நம் மனோதிடமும், தவ வலிமையுமே ஆரா சக்தியை பலப் படுத்தும்..

இந்த ஆரா சக்திக்கு பல பெயர்கள் உண்டு. மின்காந்த சக்தி, மின்சார சக்தி என்று சித்தர்களும், ஞானிகளும் இதனை குறிப்பிடுகின்றனர். பொதுவாக சித்தர்களால் ஆரா சக்தியை உணரவும் முடியும், காணவும் முடியும். இதற்கு அவர்களது தவவலிமையே காரணம். சித்தர்களின் ஆரா சக்தியானது பல ஆயிரம் தூரம் பயணிக்க கூடிய சக்தியாக இருக்கின்றது.

இதனால் தான் சித்தர்கள் முன்கூட்டியே பல விஷயங்களை அறிந்து கொள்ளும் சக்தியை பெற்றுள்ளனர். சித்தர்கள் ஜீவசமாதி அடைய ஆரா சக்தி மிகவும் உதவியாக இருந்தது. அவர்கள் ஜீவசமாதி அடைந்த பின்பும் அவர்களது நல்ல ஆரா சக்தி இன்னும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. ஞான மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு இது தெரியும்.

இந்த ஆரா சக்தி பல நிறங்களை கொண்டுள்ளது. நம் குணத்தை வைத்து இந்த ஆரா சக்தியின் நிறம் மாறுபடும். பொதுவாக ஆரா சக்தி நிறமானது சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, கருப்பு மற்றும் வெள்ளையாக இருக்கும்.மனிதனின் உடம்பில் ஆரா சக்தியானது அவனது கண்கள், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் இருந்து வெளியாகின்றது. இந்த ஆராய்ச்சியை கொண்டு நம்மால் நோய்களை குணமாக்க முடியும்.

ஆரா சக்தி குறையும்போது பலவிதமான நோய்கள் உண்டாகும். பயிற்சியின் மூலம் சக்தியை நாம் அதிகப்படுத்துவதன் மூலம் கேன்சர் போன்ற நோய்கள் கூட குணப்படும் என்று ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.. ஒரு மனிதனின் இறப்பின் பின் ஆராவானது வெளியேறி நம் உருவத்திற்கு உயிர் கொடுக்கிறது இந்நிலை அடைய ஒருவன் மனோதிடம் உரியவனாக அல்லது மிகுந்த பக்தி உடையவனாக இருத்தல் வேண்டும் அது மட்டுமின்றி அவர்களின் மரணம் நிகழும் கால, நேரம் மற்றும் திகதி(நாள்) பொருத்தும் அமையும். இந்த மரணத்திற்கு பிறகான நிலையே நாம் ஆன்மா, பேய் இன்ன பிற பெயர்களால் குறிப்பிடுகிறோம்.

இதனை அறிந்த ஆதிலிங்கம் அந்த ஆரா சக்திகளே தன்னை வலிமை படுத்தும் என்றுணர்ந்து அதனை அடைவதற்கான வழிகளை தேடினான் அதன் பதில் மரணம்... ஒருவரின் மரணமே ஆரா சக்தியை அடையும் வழி என்றறிந்தவன் அதனை செயல் படுத்த முனைந்தான். இதனைப் பற்றியெல்லாம் அறிய பல பிரதேசங்கள் சென்றவன் நீண்ட நெடிய பயணங்கள் முடித்து தன் முன்பு வசித்த காட்டிற்கே வந்தான். எதனையும் தன் வாழ்ந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க எண்ணி வந்திருந்தான்.

சில வருடங்கள் அவன் இல்லாமல் நிம்மதியாய் வாழ்ந்த பழங்குடி இன மக்கள் அந்த காட்டினுள் தைரியமாக சென்று வரும் அளவு பழகி இருந்தனர். அவன் திரும்பி வந்த அன்று காட்டினுள் வேட்டையாடிக் கொண்டிருந்தவர்களை முதலில் தாக்கி அவர்களின் ஆன்மாவைக் கைப்பற்றினான். அதன் பின் அவர்களைத் தேடி வந்தவர்களையும் விட்டு வைக்க வில்லை ..

அவர்களின் கதறல்கள் அந்தக் கானகம் முழுவதும் எதிரொலிக்க பார்க்கவே அகோரமான பிம்பத்தை ஏற்படுத்த அந்த கிராம மக்கள் மிகுந்த மன வருத்தம் கொண்டனர். இந்நிலையில் தான் தன் வேலைகளை ஆன்மாக்களிடம் ஏவ அதுங்களோ அவன் பேச்சைக் கேட்காமலும் அதன் பிம்பம் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பு மறைந்து போவதையும் அறிந்தவன் தன் நீண்ட தவத்தின் பலனாய் அதற்கான வழிகளையும் கண்டறிந்தான்...

அதன்படி அவனால் கவரப்பட்ட ஆன்மாக்களை அவன் தன் அட்டமா சித்திகளை பயன்படுத்தி அகோரமான பிசாசுகளாக மாற்றினான். அதன் பின் அவன் சொல்வதை இம்மி பிசகாமல் அவை செய்ய அவனோ அந்தக் காட்டினுள் குட்டி ராட்சியத்தை நடத்தி வந்தான்.

ஆண்களை விட பெண்கள் மனதால் மிகவும் வலிமையானவர்கள் எந்த வலியையும் தாங்கும் சக்தி படைத்தவர்கள் என்பதை அறிந்தவன் அவர்களின் ஆரா சக்தியை அடைய நினைத்தான்.. பிசாசுகள் மூலம் பெண்களை கவர்ந்து வந்து ஈவு இரக்கமின்றி அவர்களை பயமுறுத்தி கொல்வான்... பிசாசுகளால் பகல் நேரங்களில் வெளியில் வர இயலாது ஏனெனில் சூரிய ஒளி அவர்களின் ஆன்மாவை பொசுக்கி விடும்

எனவே அவைகளை இரவு நேரங்களில் அனுப்பி தன் வேலைகளை முடித்து கொள்வான். இதனை அறிந்த கிராம மக்கள் இரவுகளில் பெண்களை வெளியில் அனுப்பாமல் பாதுகாத்து வந்தனர் இருந்து பெண்கள் காணமல் போவது மட்டும் நிற்கவில்லை...

ஒருநாள் பகலில் அவனே சென்று எட்டுமாத கர்ப்பிணி பெண்ணை கவர்ந்து காட்டினுள் வந்தவன் அவளை துடி துடித்து கொல்ல எண்ணி முட்களால் அவளின் உடம்பில் குத்த வைத்து அவளின் கதறல்களை காது குளிர கேட்டுக் கொண்டிருந்தான்... அந்த பெண்ணோ " தயவு செய்து என்னை விட்டுவிடு ... எனக்காக இல்லாவிட்டாலும் என் குழந்தைக்காக என்னை விட்டுவிடு .... " என்று தன் வயிற்றுக்கு அணைவாய் கைகளை வைத்துக் கொண்டு அந்த பெண் கதற அவ்விடத்தில் எந்த அரக்கனுக்கும் இரக்கம் சுரக்கும் ஆனால் ஆதிலிங்கமோ அதனை இரசித்துக் கொண்டிருந்தான்...

அந்த நேரத்தில் அங்கு வந்தார் சித்தர் ஒருவர் ... அவரோ பின் எழுபதுகளில் இருந்தார். தன் ஞானத்தின் மூலம் அவனின் கொடுமைகளைத் கண்டவர் அவனின் செயல்களை தடுத்து நிறுத்த வந்திருந்தார்..

"ஆதிலிங்கம் நீ பெரிய தப்பு செய்து கொண்டிருக்கிறாய் அந்த பெண்ணை விடு" என்றார் அழுத்தமாய்... அவனோ சிறிதும் பயப்படாமல் " முடியாது அவளை நிச்சயம் நான் கொன்றே தீருவேன் ... உங்கள் உயிரை காத்துக் கொள்ள வேண்டுமெனில் வந்த வழியே சென்று விடுங்கள்" என்றான் ஆங்காரமாய்...

மேலும் அந்த பெண்ணைச் சுற்றி நெருப்பு வளையம் இட்டு அவளின் கதறல்களை இன்னிசை போல் கேட்டுக் கொண்டிருந்தான். சட்டென தன் சக்தி மூலம் அந்த பெண்ணை நெருப்பில் இருந்து விடுவித்த சித்தர் ஆதிலிங்கத்தை நோக்கி
" வேண்டாம் இதுவரை செய்ததை விட்டுவிட்டு என்னுடன் வா உன்னை முக்தி அடைய வைக்கிறேன்... உன்னுடைய தவறுகளை மன்னித்து கடவுள் நிச்சயம் உன்னை ஏற்றுக் கொள்வார் என்னுடன் வா " என அழைத்தார் சித்தர்.

அவனோ அந்த பெண்ணை காப்பாற்றியதில் ரௌத்திரமாய் நின்றவன் அவர் கூறிய வார்த்தைகளில் இன்னும் ஆத்திரமடைந்தான்... "நான் எங்கும் வர மாட்டேன் என் மகிழ்ச்சிக்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன் இந்த உலகில் நான் ஒருவன் தான் அனைத்துலும் சிறந்தவனாகவும், சக்தி வாய்ந்தவனாகவும் இருப்பேன்...அதற்காக எந்த எல்லைக்கும் நான் செல்வேன் .. மீண்டும் எச்சரிக்கிறேன் உங்கள் உயிர் வேண்டுமெனில் இங்கிருந்து சென்று விடுங்கள் " என்க...

சித்தரோ இவனிடம் இனி பேசி புரிய வைக்க முடியாது என எண்ணியவர் இவன் அழிந்தால் தான் நன்மை என்று எண்ணியவர் அவனை தாக்கினார் ... சிவபெருமானின் ஆஸ்தான பக்தன் அவர் அனுபவங்கள் அவரை பலப்படுத்த ஆதிலிங்கமோ வெறும் உடல் வலிமையை மட்டும் கொண்டு அவரைத் தாக்கினான்.. அவன் இன்னும் முழுதாய் சக்திகள் பெற்றிட வில்லை அவனால் தன் சக்தி கொண்டு பொருட்களை நகர்த்தவும் ஆன்மாக்களை மாற்றவும் செய்வான் ஆனால் சித்தரோ சிவனின் முழு அருள் பெற்றவர் அவரின் நிதானமும் பொறுமையும் அவருக்கு உதவ அவனை சற்று எளிதாய் அழிக்க வழி வகுத்தது..

அவன் தொடர் கொலைகள் செய்ததால் அவனில் இருந்த தூய்மை நீங்கி இருக்க அவனால் அவரின் ருத்ராட்சம் கொண்ட தாக்குதலை சமாளிக்க முடியவில்லை அவனின் பலவீனத்தை அறிந்தவர் தான் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையைக் கொண்டு அவனை சுற்றி நெருப்பு வளையம் உருவாக்கி ஆதிலிங்கததின் உடலை அதற்கு இரையாக்க அவன் உடலும் அதில் பொசுங்கியது...

சிறிது நேரத்தில் அவ்விடத்தில் அவன் உடலின் வெறும் சாம்பல் மட்டுமே மிஞ்சியிருக்க அதனை தன்னிடம் உள்ள ஒரு சிறிய சுருக்குப் பையில் நிறைத்தவர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல நினைத்து திரும்பினார்.

மாலை நேரம் ஆகியிருக்க லேசாக சூழ்ந்த இருள்.. தற்போது வேகமாய் அந்த காட்டை மூழ்கடிக்க அங்குள்ள ஆந்தைகள் மற்றும் பிற பெயரறிய உயிரினங்கள் இறைந்து ஆபத்தை உணர்த்த திடிரென்று மாறிய சூழ்நிலையில் அதிரந்த சித்தர் அந்த பெண்ணை பாதுகாப்பாக அனுப்ப நினைத்தவர் அங்கு செல்ல அவரின் பின்னே அந்த காடே அதிரும் வண்ணம் சிரிக்கும் சத்தம் கேட்க அதிர்ந்து அவ்விடத்திலேயே உறைந்து விட்டார் சித்தர்.



சற்று வித்தியாசமான கதைக் களம் மக்களே ..... கதையின் போக்கைப் பற்றிய உங்கள் கருத்துக்களே என்னை மேற்கொண்டு எழுத தூண்டும்... நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 🙏👇👇

 
Last edited:

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24869

அத்தியாயம் 13


தன் பின்‌னால் கேட்ட சிரிப்பொலியில் சூழ்நிலையின்‌ வீரியத்தை உணர்ந்தவர் முதலில் அந்த பெண்ணைக் காப்பாற்ற எண்ணி தன் கையில் இருந்த சாம்பல் நிறைந்த அந்த சுருக்குப் பையை அவரிடம் கொடுத்து அவசர அவசரமாக பேசத் தொடங்கினார்
" இதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் இது ஒன்றே அவனை அழிக்கும் சக்தி... நீங்கள் தற்போது வசிக்கும் பகுதியை உடனே காலி செய்துவிட்டு வேறெங்கேனும் சென்றுவிடுங்கள்.... இனி எவரும் இந்த காட்டினுள் நுழையாதீர்... குறிப்பாய் பெண்கள்.. " என்க ...

அந்த கர்ப்பிணி பெண்ணோ " சாமி நீங்களும் வந்துருங்க .... அந்த அரக்கன்‌ உங்களை எதாவது பண்ணீட்டா என்ன செய்யறது..." என கண்ணீர் மல்க வினவ

அவரோ " என்னைப் பற்றி கவலை வேண்டாம் பெண்ணே.. என் முடிவு நெருங்கி விட்டது ... இந்த சாம்பலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்... " என்றவர்..

தான் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தார் " இது உன்னை அவனிடம் இருந்து காத்து இந்த காட்டை விட்டு வெளியே கொண்டு செல்லும் பின் இதை அந்த சுருக்குப் பையுடன் வைத்துக் கொள்ள வேண்டும் அது இந்த அரக்கனிடம் இருந்து இந்த சாம்பலை மறைக்கும் விரைந்து செல் மகளே... " என துரிதப்படுத்தி அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்தார். அந்த பெண்ணும் அவனால் சூழப்பட்ட இருளில் தட்டுத் தடுமாறி அவ்விடத்தை விட்டு அகன்றார்.

சித்தரோ நிதானமாய் திரும்பி அவர் இருக்கும் இடத்தில் தன் பார்வையை சுழற்றினார்... அவனின் சிரிப்பு சத்தம் நிற்காமல் கேட்க இவரோ " ஆதிலிங்கம் என் கண் முன் வா... இப்பவும் எந்த தவறும் இல்லை உன்னை முக்தி அடைய செய்கிறேன்....உன் ஜீவனை என் கண்ணில் காட்டு " என்றார்.

இன்னும் ஆக்ரோஷமாய் சிரித்தவன்.... " நீ பெரிய தவறை செய்து விட்டாய் கிழவா என் மெய்யை (உடல்) அழித்து இப்போது என் கையால் அழியப் போகிறாய் ..." என்று எக்காளமிட்டான்... அவனின் மிரட்டலுக்கு சிறிதும் பயக்காத சித்தரும் அவனை எதிர்க்க தயாரானார்..

அவனின் ஆத்ம சக்தியை கொண்ட உருவம் மெல்ல மெல்ல சித்தரின் கண்களுக்கு அந்த இருளை மீறியும் தெரிந்தது அதில் அவனின் கண்கள் சிவப்பு நிறத்தில் பழிதீர்க்கும் வெறியுடன் மின்னி மினுமினுத்தன... ஆதிலிங்கம் மெல்ல காற்றில் முன்னேறி தன் கண்களை அவரின் கண்களினுடே கூர்ந்து பார்த்தவன் அவரின் சதி அறியாது " இன்னும் உனக்கு தைரியமெல்லாம் இருக்கிறதா " என்று தன் கைகளையே கூர் வாளாக்கியவன் அவரின் கழுத்தில் ஒரு நிமிடம் நிதானித்து வைத்தான்... அவனின் எண்ணம் புரிந்தவர் தன் கண்களை மூடி

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.

என்ற மந்திரத்தை உருப்போட அவரின் இதழோறும் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.

அவரின் புன்னகை கண்டவன் ஒரு நிமிடம் கூட தாமதிக்காது 'சதக்...' என்ற சத்தத்தில் அவரின் தலை தனியாய் சென்று விழுந்தது.... அவன் ஆத்மா முழுவதும் சித்தரின் ரத்தம் படிந்திருக்க அவனோ வெற்றிக் களிப்பில் புன்னகைத்து அவரின் ஆராவை அடைய மேற்கொண்டு உயிரற்ற உடலுக்கு சிதை மூட்டினான்... அதிலிருந்து வெளிப்பட்ட சித்தரின் ஆத்மாவை தன்னுள் அடக்க மந்திரங்கள் கூற சிதையில் இருந்து வெளிப்பட்ட சித்தரோ ( ஆன்மா)

"முட்டாள் அரக்கனே ... இவ்வளவு சீக்கிரம் என்னைப் போன்ற சிவனடியாரை வென்றிட முடியும் என நினைத்தாயோ!!! உன் வாழ்வில் நீ செய்த மிகப் பெரிய பிழை இது இனி உன்னால் எந்த சூழ்நிலையிலும் இந்த காட்டை விட்டு வெளியேற முடியாது ... அத்தோடு ஒரு சிவனடியாரைக் கொன்ற சாபமும் உன்னை சேரும்... என்னால் உன்னை அழிக்க முடியாமல் போயிருக்கலாம் ஆனால் எந்த பெண்களை உன் வெறிக்காக கொன்றாயோ,உன் அழிவு உன் இனத்தில் பிறக்கும் முதல் பெண் வாரிசால் தான் நிகழப் போகிறது... எவனொருவன் பெண்ணிற்கு துன்பம் விளைவிக்கிறானோ அவன் எந்த உச்சாணிக் கொம்பில் இருந்தாலும் அவன் அழிவு உறுதி...அதையே தான் நீ செய்துள்ளாய்... உன் அழிவும் நிச்சயம்!" என்றவர் காற்றுடன் கலந்து அந்த காட்டை சுற்றிலும் தன் சக்திகள் மூலம் தன் ஆன்மாவையே வேலியாய் அமைத்தார்...

அவர் சொன்னதைக் கேட்ட ஆதிலிங்கம் முழுதாய் உறைந்து விட்டான்.. சிவனடியார்களைக் கொன்றால் சாபம் கிடைக்கும் என அறிந்தவன் அவரின் ஆன்மாவை அடைந்துவிட்டால் பிரச்சனை இல்லை என எண்ணியிருக்க இப்படிப்பட்ட ஒரு விளைவை எதிர்பார்க்கவில்லை ...

தன்னால் இந்த காட்டை விட்டு வெளியேற இயலாது என எண்ணுகையிலேயே அத்தனை உவகையாய் இருந்தது அவனுக்கு... சரி முயற்ச்சி செய்வோம் என எண்ணியவன் அந்த கானகத்தின் ஒரு பக்க எல்லை வரை சென்றான் மேலும் முன்னேற நினைக்க அவனின் ஆன்மாவை மின்னல் போன்ற ஒரு வெளிச்சம் தூக்கியடித்தது.. அவனிற்கோ வெறியேறியது..

மீண்டும் மீண்டும் அந்த காட்டின் மற்ற பகுதிகளுக்கும் சென்று வெளியேற நினைக்க அங்கும் அதேபோல் நடக்க வெறி கொண்ட வேங்கை போல் கத்த ஆரம்பித்துவிட்டான்.. அவனின் அலறல் அந்த கானகத்தின் எட்டு மூளைகளிலும் எதிரொளிக்க இதிலிருந்து வெளிவர முடியாமல் திணறினான்.

இத்தனை சக்திகள் நம்மிடம் இருந்தும் ஒரு ஆன்மாவாய் மாறியும் ஒரு கிழவனிடம் தோற்றதை அவனால் சுத்தமாய் ஏற்றுக் கொள்ள வில்லை....இதிலிருந்து வெளிவர என்ன வழி என்று தீவரமாய் யோசித்தவனுக்கு மூளையில் மின்னல் வெட்டியது ஆம் அவர்கள் வம்சத்தில் நீண்ட வருடங்களாய் பெண் வாரிசே இல்லை ...

எனவே இனிப் பிறந்தாலும் எப்படியாவது அந்த ஆன்மாவையும் நாம் அடைந்து விட்டால் நிச்சயம் இந்த சாபத்தில் இருந்து வெளிவந்து விடலாம் வந்தவுடன் முதலில் சிவனடியார்னு சொல்றவங்க எல்லாரையும் அழிக்கணும் என்று முடிவெடுத்தவன் தன்னால் பிசாசுகளாக மாற்றப்பட்ட ஆன்மாக்களை அழைத்து சித்தரால் தப்பித்து சென்ற கர்ப்பிணி பெண்ணை மீண்டும் இழுத்து வர கட்டளையிட்டான் ...

பிசாசுகளால் அந்த காட்டை விட்டு வெளியேற முடிந்தது... ஏனென்றால் சாபம் ஆதிலிங்கத்திற்கு மட்டுமே..வெளியே சென்று தேடிய அவைகளால் அந்த பெண்ணின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை ஏன் அங்கு இருந்த அந்த பழங்குடியான மனிதர்களையும் தான்.

இவனோ கோபம் கொண்டு அடுத்து அனுப்பியது சிவகணங்களின் குடும்பத்தைத் தேடித்தான் அவனுக்குத் தான் கோவிலில் முக்தி அடைந்த 21 சிவகணங்கள் தான் கடைசி மனித சிவகணங்கள் என்று முன்னாடியே தெரிய தற்போது அவர்களின் குடும்பத்தை கண்டறிய அனுப்பியிருந்தான்...

அவைகளும் இரவு நேரங்களில் சென்று தேடவாரம்பித்தனர்... அவனும் தீரா பழிவெறியுடன் அந்த காட்டில் மேலும் பல தவங்கள் செய்து தன் சக்திகளை அதிகரித்துக் கொண்டான்... மூலிகைகள் தேடியும் காட்டை ஆராயவும் உள்ளே வருபவர்களை அவன் கொடூரமான முறையில் கொன்று தன் வெறியை குறைத்து கொள்வான் மேலும் அவர்களின் ஆன்மாவையும் தன் அடிமைகளாய் மாற்றிக் கொள்வான்..
************
சித்தர் கூறியதை கூர்மையாய் கவனித்த ஆருஷிக்கு நன்றாக புரிந்தது இதில் பல சிக்கல் உள்ளது என்று...

அவனும்"அப்போ நான் காப்பாற்ற வேண்டியது ஒரு பெண்ணின் ஆன்மா... அதாவது என்னால் மரணித்த பெண்ணின் ஆன்மா" என்க அவரும் ஆமோதிப்பதாய் தலையசைத்தார்.. மேலும் அந்த பெண்ணின் பிறப்பு பற்றிய இரகசியத்தையும் கூறியவர்...

"அதுமட்டுமல்ல ஆன்மாக்களைப் பற்றி இன்னும் நீ நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்... மரணம் என்பது உடலுக்கு மட்டும் தான் நம் ஆன்மாவிற்கு இல்லை.. உடலை விட்டு வெளிவரும் ஆன்மா நம் ஆரா சக்தி மூலம் உருவம் அடையும்... அவ்வாறு மாற்றமடையும் ஆன்மாவிற்கு பஞ்சபூதங்கள் உதவி செய்யும் அதாவது பஞ்சபூதங்களில் ஒன்றான காற்று முதலில் அவர்களுக்கு வடிவம் அளிக்கும்... பின் நீர்,ஆகாயம் ,நிலம் , நெருப்பு என மற்ற பூதங்களையும் நம்மால் பயன் படுத்த முடியும்...பிசாசுகள் என்பது ஆன்மா தீய எண்ணங்களால் உருமாற்றப்படுவது அவைகளால் முக்தி பாதையை எப்போதும் அடைய இயலாது ... மாறாக ஐம்பூதத்தில் ஒன்றான நெருப்பு அல்லது வெப்பம் அவைகளை பொசுக்கும்... மேலும் குளிர்ந்த பகுதி அது வாழ்வதற்கு உகந்த இடம்... "

மேலும் முக்தி பற்றியும் விளக்கினார்.. " நம் ஆன்மாவிற்கு முக்தி என்பது அவரவர் எண்ணங்களையும், ஆராவின் சக்தியையும் பொறுத்து அமையும். சிலருக்கு பத்து நாட்களில் முக்தி அடையலாம் அல்லது ஒரு வருடம் ஏன் அதற்கு மேலே கூட ஆகலாம்... முக்தி என்பது பிறப்பில்லா நிலையை அடைவது ஆகும். ஆன்மாக்களால் அதிக ஒளியையும், சூரிய வெப்பத்தையும் தாங்க இயலாது .. ஏனெனில் அவைகள் ஆத்மாவிற்கு உஷ்ணத்தை ஏற்படுத்தி உருவத்தை அழிக்கும் திறன் கொண்டவை.. ஆன்மாக்களுக்கு உடல் சார்ந்த வலிகள் கிடையாது அதாவது காயம் ஏற்படுத்தும் வலி போன்றவை ஆனால் உள்ளம் சார்ந்த உணர்ச்சிகள் உண்டு அதாவது கோபம்,அழுகை, சிரிப்பு, பாசம் போன்றவை... மேலும் அதில் உஷ்ணமும் சேரும்...நீ அந்த பெண்ணின் ஆன்மாவை உணர்ச்சிகள் கொண்டே அதனை வெளிச்சத்திற்கு அனுப்ப வேண்டும்..." என்று தன் நீண்ட விளக்கத்தை கூறினார் சித்தர்...

ஆருஷி " உணர்ச்சிகள் கொண்டு என்றால் என்க்கு புரியவில்லை." என்றே வினவ" சிலருக்கு தன் இறப்பிற்கு காரணமாக இருந்தவர் மீது கோபம் இருக்கும் அது தீர்ந்தவுடன் அவர்களின் ஆன்மா வெளிச்சத்தை அடையும் அதே போல் தான் மற்ற உணர்ச்சிகளும்... இன்னும் சிலருக்கு அவர்களின் ஆசை தீராமலே முக்தி பாதையை அடைந்து விடுவர் இது எல்லாமே ஆராவை பொறுத்தே அமையும் "என்றார். ஆருஷிக்கு எதுவோ புரிவது போல் இருந்தது...

ஆருஷி " சரி நான் இனி எவ்வாறு அந்த ஆன்மாவை கண்டுபிடிப்பேன் " என்றான்.. "அந்த ஆன்மாவின் வலது கையில் வேலும் ருத்ராட்சமும் கொண்ட அடையாளம் இருக்கும். அத்தோடு உனக்கு என் சக்தியையும் அளிக்கிறேன் அது உன்னை அந்த ஆன்மாவின் இருப்பிடத்தை அடைய உதவும்... என் சக்திகளைப் நீ பெறுவதால் உன்னால் அட்டமா சித்திகளையும் பயன்படுத்த முடியும்... அதுவும் நீ இன்னும் நான்கு நாட்களில் இந்த வேலையை முடிக்க வேண்டும் அதுவரை தான் உனக்கான நேரம்.. காலம் கடந்து விட்டால் உன்னை எந்த சக்தியாலும் காக்க இயலாது .. எனவே விரைந்து செயல்படு " என்றவர் இன்னும் பல அடிப்படை தற்காப்பை அவனுக்கு சொல்லிக் கொடுத்தவர் ....

தன் சக்தியை திரட்டி தன் கையில் அணிந்திருக்கும் ருத்ராட்ச மாலையில் செலுத்தியவர் அதை அவனுக்கு அணிவித்தார் .. " பிசாசுகளால் இரவு நேரங்களில் மட்டுமே தாக்க முடியும் அந்த சமயங்களில் இதனை பயன்படுத்து " என்று அவனை அனுப்பி வைத்தார் ...

இந்த பாதை எங்கு முடியும் தன் பயணம் எதை நோக்கி செல்கிறது என்ற எந்த அடிப்படைக் கேள்விக்கும் விடை தெரியாது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் பயணிக்க ஆருஷி தயாரானான்.. காலம் அவனுக்கு தரவிருக்கும் அதிர்ச்சிகளை அறியாமல் சித்தரின் சக்தியையும் தன் தைரியத்தையுமே ஆதாரமாய் கொண்டு முன்னேறி செல்கிறான் ஆருஷி.
======================================
அந்த காவல் நிலையம் மிகுந்த பரபரப்புடன் இருந்தது அன்று அவர்களின் புது மேலதிகாரி பொறுப்பேற்றவுடன் முதலில் அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த காவல் நிலையத்தை பார்வையிடுவதற்காக வருகிறார்...

அதனால் அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டரோ சற்று பயம் கலந்த உற்சாகமாக இருந்தார்... முதல் நாளே அவரைக் காக்கா பிடிக்க மாலை மரியாதைகளுடன் காத்திருந்தார். நேரம் பத்தை நெருங்க அந்த காவல் நிலைய வாசலில் சைரன் ஒலியுடன் வேகமாக வந்து நின்றது ஒரு போலீஸ் ஜீப்...
இன்ஸ்பெக்டரும் வாயெல்லாம் பல்லாய் அவருக்கு மாலை அணிய முன்னே வர அந்த வண்டியில் இருந்து கம்பீரமாய் இறங்கியவனைக் கண்டவருக்கு ஒரு நிமிடம் சப்தநாடியும் ஒடுங்கியது...


கதையின் போக்கைக் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே 👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24960 24961

அத்தியாயம் 14:

ரவி ஐபிஎஸ் பயிற்சியில் உடல் மற்றும் அறிவு சார்ந்த திறன்களில் முன்னிலையில் இருந்தான்.... அந்த பயிற்சி போட்டிகளின் போதும் அவன் எப்போதும் முதல் மூன்று இடங்களில் ஏதோவொரு இடத்தை பிடித்திடுவான்... கிராமத்தில் வளர்ந்தவனுக்கு உடல் வலிமையில் குறைவேது... அதனால் தான் அவன் விடுமுறை கேட்டவுடன் மேல் அதிகாரிகள் ஏற்று அனுப்பி வைத்தனர்...

பயிற்சி முடிவில் அவர்களுக்கான வேலை நியமனத்தின் போது டாப் லெவலில் இருப்பவர்களின் விருப்ப படிவத்தை பெற்றுக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் தான் வேலையை அந்த ஊர்களில் நியமிப்பர் உதாரணமாக காலேஜ் கவுன்சிலிங் போவது போல்...

அவன் ஸ்ரீ மரணத்திற்கு முன்பு தன் சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவட்டத்திற்கே விண்ணப்பத்திருந்தான் ....நடந்த நிகழ்வின் பின் டெல்லி சென்றவன் தன்னுடைய விருப்பபடிவத்தை சென்னையாக மாற்ற சொல்லி கேட்டிருந்தான்.....

அவனின் நன்னடத்தையின் அடிப்படையில் அங்கிருந்த அதிகாரிகளும் அவனுக்கு சென்னைக்கே போஸ்டிங் போட்டு விட்டனர்..... ஸ்ரீ யின் பிறந்தநாளுக்கு ஊரிற்கு வந்தவன் தனக்கு சென்னையில் வேலை என்பதை கூற குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவ்வளவு அதிர்ச்சி...

ஏனெனில் கோவைக்குத் தான் விண்ணப்பத்திருப்பதாய் முன்னாடிக் கூறியவன் தற்போது எப்படி என குழம்பினர் அவர்களுக்கும் தெரியுமே அவனின் திறமையை பற்றி ..... ரவியோ அழுத்தமாய் எதுவும் பேசாமல் நிற்கவே புரிந்து விட்டது ஸ்ரீ க்காகவே இப்படி ஒரு முடிவு என அதன்பின் யாரும் அவனிடம் கேள்வி கேட்கவில்லை... அடுத்த நாள் வேலையில் சேர்ந்தவனுக்கு கற்கண்டாய் வந்தது அவனின் கீழ்தான் ஸ்ரீ விபத்தான பகுதி போலிஸ் ஸ்டேஷன் வருகிறது என்ற செய்தி ... உடனே கிளம்பி விட்டான்...

தன் கண் முன்னே மாலையுடன் நிற்கும் இன்ஸ்பெக்டரைப் பார்த்தவனுக்கு இதழோரம் கேலிப் புன்னகை உருவானது... இவரோ அதிர்ச்சியில் இருக்க மற்ற காவலர்கள் வரவேற்று உள்‌ அழைத்து சென்றனர். அங்கிருந்த ஒரு சிலருக்கு மட்டுமே அவனை அடையாளம் தெரிய அவர்களும் அவனின் கூர் பார்வையில் எச்சில் கூட்டி விழுங்கி சற்று பயத்துடனே இருந்தனர்... இன்ஸ்பெக்டரோ யாருக்கோ தகவல் தர தன் கைப்பேசியை எடுக்க போக அதை ரவி பார்த்துவிட்டான் அவன் பார்வையில் போனை பாக்கெட்டில் வைத்து அமைதியாக நின்று கொண்டார்..

நேராய் இன்ஸ்பெக்டரின் மேஜைக்கு சென்றவன் அதன் மீது அமர்ந்து தனக்கு அளிக்கப் பட்ட துப்பாக்கியை எடுத்து மேஜையில் வைத்தவன் கண்களால் அந்த இன்ஸ்பெக்டரை அழைக்க அவரோ பயத்துடன் முன்னே வந்து ரவிக்கு சல்யூட் அடித்தார்... அவனும் குரூரமாய் அவரைப் பார்த்தவன்
" மிஸ்டர்.... " என் இழுக்க
அவரோ " நல்லதம்பி சார் " என்றார்...
" எஸ் மிஸ்டர் நல்லதம்பி ...பொது மக்களுக்கு சேவை செய்ய தான் நமக்கு இந்த காக்கி சட்டை சம்பளம் எல்லா ஆனால் நீங்க வேற யாருக்கோ வேலை செய்யற மாதிரி இருக்கு " என ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க அவருக்கோ வியர்த்து வடிய ஆரம்பித்து விட்டது...
" அப்டியெல்லாம் இல்லை சார்" என்க
" ஆஹான்... அப்போ கொஞ்சநாள் முன்ன அந்த ஒரு வழிப் பாதை விபத்து கேஸ்ல என்ன நடந்ததுனு அப்படியே சொல்லுங்க பார்ப்போம் " என தன் துப்பாக்கியை ஒருமுறை கையில் எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் அதன் இடத்திலேயே வைக்க இன்ஸ்பெக்டருக்கு நெஞ்சில் நீர் வற்றியது...
------------------------------------------------------------
ஆதித்யா அவன் பாட்டிற்கு தன் தாய் தந்தையுடன் மால் சென்றதைப் பற்றி கூறிக்கொண்டு இருக்க ஸ்ரீ யோ ஒரு பக்கம் வெறும் 'ம்..' கொட்டி விட்டு தன் கனவு நாயகனின் நினைவில் மூழ்கி இருந்தாள்...

ஏனோ இந்த நிலையிலும் அவளுக்கு அவனைப் பற்றி நினைப்பது கூட மிகவும் இன்பமாய் இருந்தது... இதற்கு காதல் என்ற‌ பெயரை அவள் வைத்திட வில்லை ஏனெனில் கனவில் வருவதெல்லாம் நிச்சயம் நிஜவாழ்க்கைக்கு ஒத்து வராது என்ற அளவிற்கு தெளிவு இருந்தது ..

ஆனால் மரணத்தை தழுவிய பிறகு அவளுடைய எண்ணங்களும் உணர்வுகளும் தெளிவினை இழந்து சற்று கலங்கி தான் இருந்தாள்.. அவளுக்கு அவளின் குடும்பத்தைப் பற்றி நினைத்தாலே தற்போது அவர்களின் நிலையை நினைக்கவே சற்று மன உளைச்சலுக்கு ஆளாகி மனம் அலைப்புறதலாகி விடும் எனவே தான் அவளின் சிந்தனை தற்போது அவளின் கனவு நாயகனில் நிலைத்து நிற்கிறது... சுகமாய் அவனுடனான தன் கனவுத் தருணங்களை நினைத்துக் கொண்டே இருந்தவள் தன் ஜீவன் காக்கும் சிவ மந்திரத்தை மறந்திருந்தாள்.. தெரிந்தோ தெரியாமலோ தன் பயத்தை போக்குவதற்காக அவள் உச்சரிக்கும் ஸ்லோகங்கள் அவளுடைய ஆன்மாவை பிசாசுகளிடம் இருந்து மறைத்துக் கொண்டு இருக்க இன்று அதித மன தழும்பலில் மறந்திருந்தாள்.

நேரம் நடுநிசியைத் தாண்டி செல்கையில் அந்த கடற்கரை அலைகள் சற்று அதிகமாக கரையை மோதி ஆட்பறிக்க அன்று அம்மாவசை இரவு .... எப்போதுமே கடல் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சற்று வீரியமான கடல் அலைகளைத் தான் கொண்டிருக்கும் ஆனால் இன்றோ இன்னும் சற்று அதிக வீரியத்துடன் இருந்தது....

வீசிய கூதல் காற்றில் மணல் முழுதும் சற்று மேலெழும்ப அவர்கள் இருந்த படகின் அருகில் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது ... ஸ்ரீ மற்றும் ஆதித்யா கெட்ட வாடை வருவதை உணர்ந்து எழுந்து படகிலிருந்து கீழே வர ஆங்காங்கே படுத்திருந்த நாய்கள்முதலில் இவர்களை பார்த்து குறைத்துக் கொண்டே வந்தவை பின் திரும்பி அவர்களின் எதிரில் தெரிந்த இருள் சூழ்ந்த பகுதியை நோக்கி முன்னேறி ஆக்ரோஷமாய் குலைக்க இவர்கள் இருவருக்கும் சுற்றிலும் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை...

அந்த நாய்கள் மேலும் முன்னேறி கத்திக் கொண்டே செல்ல அதன் பின்னிருந்தவைகளும் ஊளையிட ஸ்ரீ யும் ஆதியும் சற்றே பயந்தனர்.... பின் அந்த நாய்கள் என்ன உணர்ந்தனவோ திரும்பி வந்த அதே வேகத்தில் இருளின் எதிர்ப்புறம் பயந்து ஓட ஆரம்பித்து விட்டனர்...

இருளின் இருந்த ஏதோ ஒன்று அவர்களை நோக்கி முன்னேற கெட்ட வாடை அதிகமாக வீச ஆரம்பித்தது ஆதியும் ஸ்ரீ யும் தங்களின் மூக்கை கைகளால் பொத்திக் கொள்ள அந்தோ பரிதாபம் காற்றால் உருவம் பெற்றவர்களால் அந்த வாடை தன்னுள் கலந்து வீசுவதை தடுக்க முடியவில்லை...

ஆதித்யா வேறு ஸ்ரீ யின் கைகளை கெட்டியாய் பிடித்துக் கொள்ள இவளோ அவனை மறைத்தவாறே முன் நின்றே கொண்டாள்... ஆதித்யா தைரியமானவன் தான் இருந்தும் இம்மாதிரியான புது சூழலுக்கு பழக்கப் பட்டவன் இல்லையே!!!

அந்த அம்மாவாசை இருளிலும் கூட ஏதோ ஒன்று அவர்களை நோக்கி முன்னேறுவதை உணர்ந்த ஸ்ரீ ஆதியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு பின்னோக்கி செல்ல அந்த இருளும் அவர்களை நோக்கி வந்தது... அவர்களின் பின்னும் ஏதோ ஒன்று அசைவதை உணர்ந்த ஆதித்யா
" ஸ்ரீ பின்னால ஏதோ இருக்கு பாரு " என காண்பிக்க அவளும் திரும்பி பார்த்தவளுக்கு ஒரு நொடி உலகமே தட்டாமாலை ஆனது ஏனெனில் அவள் பின்னும் அதே போன்ற இருள் சூழ என்ன செய்வதென்று தெரியாமல் ஆதியை தன்னுடன் இறுக்கிக் கொண்டாள்..

அவர்களை முழுதும் சூழ்ந்த அந்த இருள் வட்டமடிக்க இவர்களின் காதில் ஏதேதோ அகோரமான சப்தங்கள் கேட்க ஆரம்பித்தது. பெண்கள் கத்துவது போன்றும் யாரோ அகோரமாய் சிரிப்பது போன்றும் கேட்க இருவரும் தங்கள் காதுகளை பொத்திக் கொண்டு பயத்துடன் அவ்விடத்திலேயே மடிந்து அமர்ந்து விட்டனர்...

யார் யாரோ அலறுவதும் மந்திரங்கள் ஓதுவதும் என அவ்வட்டத்தில் மாட்டிய இருவரும் உச்சகட்ட பயத்தில் இருக்க அந்த வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறுகிக் கொண்டே அவர்களை நெருங்க ஸ்ரீ ஆதியை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டவள் அவ்விருளை உன்னித்துப் பார்க்க அதில் இரத்த நிறம் கொண்ட கண்கள் இரு ஜோடியும் அவைகளின் கூர் பற்களும் தெரிய பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள்...

அவைகள் தன்னை நெருங்குவதை உணர்ந்த ஸ்ரீ அந்த இருள் தன் ஆன்மாவை உருச பனிக் கட்டியிலும் குளிர்ந்த மெல்லிய உணர்வொன்று அவர்களினுள் ஊடுருவி சென்றது...

அதில் இன்னும் பயந்து அலறி கத்த திடிரென அனைத்து மாற்றங்களும் ஸ்விட்ச் போட்டது போல் அணைந்து போயின ... இறுக கண் மூடியிருந்த இருவரும் தன் காதுகளில் கேட்ட அலறல்களும் கெட்ட வாடையும் முற்றிலும் நீங்கி இருக்க ஸ்ரீ க்குமே தன்னைத் தீண்டிய குளுமை இல்லாமல் போக மெல்ல இருவரும் கண்விழித்தனர்....

என்ன ஆச்சர்யம் இதுவரை நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றுமே இல்லாத வண்ணம் பேரமைதியுடன் அவ்விடம் இருக்கலாயிற்று... மெல்ல எழுந்து இருவரும் சுற்றி முற்றி பார்த்தனர்....

ஆதி " ஸ்ரீ என்ன இது ... இப்போ என்ன நடந்தது நம்ம சுத்தி இருந்தது எல்லா எங்க போச்சு.... எனக்கு பயமா இருக்கு " என மேலும் அவளுடன் ஒன்றினான்..

ஸ்ரீ " அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆதி நீ பயப்படாத நாம் இனிமே இங்க வர வேணாம் சரியா வேற எங்காவது சென்றுவிடலாம்.." என அவனை ஆறுதல் படுத்த முனைந்தாள்..அவளுக்குமே தங்களை சுற்றி நடந்த இந்த நிகழ்வில் மிகவும் பயந்து இருந்தாள்... அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் கண்ணைக் கட்டி காற்றில் விட்டது போன்று இருந்தனர்..முதலில் இருளில் இருந்து வெளிவர எண்ணி அங்கிருந்து சிறிய வெளிச்சத்தை நோக்கி சென்றனர்.

ஆதி இன்னும் பயத்திலேயே இருந்தான் ஸ்ரீ அவனை மாற்றும் பொருட்டு " இங்க பாரு ஆதி கண்ணா பயப்படக் கூடாது சரியா நான் இருக்கேன்ல ... அது ஏதோ சும்மா காத்து மாதிரி சரியா !!! நாம் இனி அங்க போக வேண்டாம் " என கன்னம் பற்றி சமாதானப் படுத்த முயல அவனோ சற்றும் தெளிவில்லாது ஸ்ரீ யுடன் ஒன்றிய படியே இருந்தான்... " இன்னைக்கு ஏதோ மால் போலாம்னு சொன்னல நல்லா விடிஞ்சதும் அங்க போலாம் சரியா ... நீ கூட அன்னைக்கு ஏதோ டிரஸ் மேஜிக் செய்து காட்டுனல அதை நாளைக்கு அங்க போய் ட்ரைப் பண்ணலாம் ஓகோ" என அவன் மனதை மாற்ற பேச அது சற்று வெற்றி அடைந்தது......

அவனும் சிரித்தபடி தலையாட்டி அந்த மேஜிக் பற்றி விவரிக்க இவள் அவன் பழைய மாறியதில் சந்தோஷப்பட்டவளுக்கு மனதில் பாரம் ஏறிக் கொண்டது... இது எல்லாம் என்ன ... எதற்கு எங்களை சூழ்ந்தது... தீடிரென என்ன நடந்தது என ஒன்றும் புரியாது குழம்பினாள்.....

இவர்களின் சம்பாஷனைகளை தூரத்தில் இருந்து கண்ட ஒரு ஜோடி நீலக் கண்களின் ஒரு கண்ணில் இருந்து மட்டும் கண்ணீர் வேகமாய் உருண்டோடியது.... அதுவும் ஸ்ரீ யைக் கண்டு தாங்க முடியாத துயரை அடைந்து அவ்விடத்திலேயே தரையில் மடங்கி தன் கைகளால் மண்ணில் குத்தி " இல்லை..." என கத்த அக்குரல் அந்த கடற்கரை எங்கும் எதிரொலித்தது... இத்தனை நாட்கள் தான் யாரை காண ஆவலுடன் இருந்தோமோ அவளை அதுவும் இந்த நிலையில்..... அவனால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை....அதுவும் தன்னால் தான் அவளுக்கு இப்படி ஒருநிலைமை என்று எண்ணுகையிலேயே தன்னையே வெறுத்தான் ஆருஷி...

சித்தர் அனைத்தையும் கூறி அனுப்ப முயல அவரின் ஞானதிருஷ்டி மூலம் அந்த ஆன்மாவின் ஆபத்தை உணர்ந்தவர் அவனை விரைந்து செல்ல உத்தரவிட்டார் அவரின் சக்தி மூலம் ஒரு நொடியில் கடற்கரை வந்தவனுக்கு தெரிந்ததெல்லாம் முழு இருட்டே ...

சுற்றுலும் கேட்கும் அலைகளின் ஒசையிலேயே இது கடற்கரை என்று பிடிபடவே சில நொடிகள் தேவைப் பட்டது...பின்னர் சுற்றுப் புறத்தை கவனிக்க எங்கிருந்தோ வந்த அலறல் சத்தத்தில் சுற்றிலும் தேட ஒரு இடத்தில் மட்டும் சுழல் போல காற்று வீச அருகில் சென்று பார்க்க அதில் சிவப்பு நிற கண்களும் நீண்ட பற்களும் கொண்டு நகங்கள் நீண்டு இருந்த அகோர உருவத்தை கண்டு ஒரு முழு நிமிடம் திகைத்து விட்டான்..

.பின் அதனை ஊடுறுவி பார்க்க அவர்களின் நடுவில் ஒரு பெண் சிறுவனை அணைத்துக் கொண்டு ஓரு கையால் காதுகளை மூடி அமர்ந்திருக்க அவனுக்கு அக் கைகளில் இருந்த வேலும் ருத்ராட்சமும் மின்னி மின்னி மறைந்து அடையாளம் காட்டிக் கொடுத்தது...

அப்போது அந்த இருளில் அவளின் முகத்தை காணவில்லை வெறும் இதனை மட்டும் கண்டு தாம் இவர்களைத் தான் காப்பற்ற வேண்டும் போல என‌ எண்ணியவன் அப்போ அவர்களை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் பிசாசுகள் என அறிந்தவன் அவர்களை அழிக்க சித்தர் சொன்னவைகளை சிந்தித்து கொண்டு இருக்க அதற்குள் ஒரு பிசாசு அப்பெண்ணை நெருங்கி தோளைத் தொடுவதை உணர்ந்து விரைந்து செயல்பட்டு அவைகளை தொட அவ்வளவுதான் நொடி நேரத்தில் அவைகளின் ஆன்மா தீக்கு இரையாகி எரிந்து காற்றுடன் கலந்தது...

அதனை ஆச்சர்யமாக கண்டவனுக்கு "புனித சக்திகளின்‌ ஸ்பரிசமும், கோபப் பார்வையும் பிசாசுகளை தீக்கிரையாகும் " என பிசாசுகள் பற்றி அவர் கூறியது அவனுக்கு அசரிரியாய் கேட்பது போல் இருந்தது... அவன் தன்னிலை அடைந்து பார்க்கையில் இருவரும் எங்கேயோ நடப்பதை பார்த்தவன் அவர்களை பின் தொடர்ந்து சென்றான்...

அங்கு சிறு வெளிச்சத்தில் ஆன்மாவின் முகத்தை கண்டவனுக்கு உயிரை வேருடன் அறுத்த வலி உருவானது... திரும்ப திரும்ப தரையில் கைகளால் குற்றியவனுககு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.தான் யாரை காதலித்தோமோ அவளை நேரில் சந்திக்க எவ்வளவோ விதவிதமான கற்பனைகள் செய்து வைத்திருகக இப்படி ஒரு சூழ்நிலையிலா பார்க்க வேண்டும் என தன் விதியையே நொந்து கொண்டான்....


மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே
திசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ
கணங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே அரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ


கதையின் போக்கைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே 👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புக்களே 🙏🙏
கதைத்திரி என ஆவலுடன் வந்தவர்களுக்கு முதலில் என் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன் நட்புக்களே..... இன்னும் ஒரு மாதத்திற்கு என் கதையை நிறுத்தி வைக்கிறேன் மக்களே மே மாதமே என்னால் யூடி தர இயலும் தயவு செய்து மன்னித்து விடுங்கள்..... நான் எழுதும் கதை ஜோனருக்கு இடையில் நிறுத்துவது கதைக்கு மிகப் பெரிய பின்னடைவு தான் .அதற்காக மிகவும் வருந்துகிறேன்...ஆனால் வேறு வழி தெரியவில்லை..... நான் கணிதத் துறையில் ஃபுல் டைம் பிஎச்டி படிக்கும் மாணவி... கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டே ஜனவரியில் ஆரம்பித்தேன் .... இந்த மாதத்திற்குள் முடித்துவிடலாம் என எண்ணியிருந்தேன்.... ஆனால் என் ஆராய்ச்சி கட்டூரை இறுதிக்கட்ட நிலையில் உள்ளதால் தற்போதெல்லாம் கிடைக்கும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகள் அதிலேயே போய்விடுகிறது... எழுத நேரம் ஒதுக்கினாலும் கோர்வையாக எழுத முடியவில்லை... என் முதல் கதையில் இவ்வாறு நடக்கும் என கனவிலும் நினைக்கவில்லை.... ஆனால் இதுவரை வந்ததே பெரிது என நினைக்கிறேன்... நிச்சயம் என் வேலை முடிந்தவுடன் ( மின்னல் வேகத்தில்) மே மாதத்தில் கதை முடிக்க முயற்ச்சிக்கிறேன் நட்புக்களே .. என் சூழ்நிலையை புரிந்து கொள்வீர்கள் என நம்பிக்கையுடன் விடைபெறுக்கிறேன்.. மீண்டும் விரைவில் சந்திப்போம் நட்புக்களே👍
 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன் கதை சுருக்கம்:

அன்பான,அழகான கூட்டுக் குடும்பத்தின் வாரிசு தான் ஸ்ரீ நிதி.. அவளுக்கு குடும்பம் தான் எல்லாமே. சுந்தரம் வள்ளி தம்பதியினர்க்கு நான்கு மகன்கள். மூத்தவர் மூர்த்தியின் மகளே ஸ்ரீ நிதி .மிகுந்த சிவ பக்தியும், இரக்க குணமும் உடையவள்... உடன் பிறந்த அண்ணன் விஷ்ணு. சித்தப்பா பசங்கள் ஐந்து பேர். அவர்களுக்கு ஸ்ரீ என்றால் உயிர். இரட்டையர்கள் போல் ஸ்ரீ மற்றும் ராம் எப்போதும் இணைந்தே இருப்பர். வேலைப் பயிற்சிக்காக சென்னை செல்லும் ஸ்ரீ எதிர்பாராமல் ஏற்படும் விபத்தில் மரணத்தை தழுவுகிறாள் உடன் சென்ற அவளின் தோழி வர்ஷினிக்கும் படுகாயம் ஏற்படுகிறது‌. ஸ்ரீ மரணத்தைத் தழுவினாலும் அவளின் ஆன்மா உயிர்ப்புடன் இருக்கிறது. மரணத்திற்கு பிறகான இந்த நிலையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் தனிமையில் இருக்க அவளுக்கு உற்ற துணையாக ஆதித்யா வருகிறான். ஸ்ரீ மரணத்தை அவளின் குடும்பம் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில் ஸ்ரீ மற்றும் வர்ஷினியின் விபத்து வண்டியில் பிரேக் பிடிக்காமல் நிகழ்ந்தது என கேஸ் முடிக்கப்பட்டது.ஆனால் வர்ஷினியோ கார் இடித்ததாலே விபத்து ஏற்பட்டது எனக் கூற குடும்பத்தினர் குழம்பினார். ஸ்ரீ சகோதரர்களான விஷ்ணு, ராம், ரவி மூவரும் சென்று விசாரிக்க சரியான தகவல் அளிக்கப்படாமல் போக சோர்வுடன் திரும்புகின்றனர். இதில் ரவி ஐபிஎஸ் பயிற்சி முடித்திருக்க அதே காவல் நிலையத்திற்கு மேலதிகாரியாக வருகிறான்.
சென்னையில் வளர்ந்து வரும் தொழில் அதிபர்கள் வரிசையில் இருக்கும் நம் நாயகன் ஆருஷி. எதிர்பாராத சில நிகழ்வுகளால் மற்றவர்கள் மரணத்திற்கு காரணமாகிறான்.. அதனை சரிசெய்ய சித்தர் அவனை கட்டுப்படுத்த முதலில் மறுத்தவன் பின் தன்னால் நிகழ்ந்தவற்றை சரி செய்ய ஒத்துக் கொள்கிறான்.
சித்தரோ சிவகணங்கள் சிவனடியார்கள் பற்றியும் ஆன்மாக்கள் பற்றியும் விளக்கியவர் பல வருடங்களாக பழிவெறியுடன் காத்திருக்கும் ஆதிலிங்கம் என்ற அரக்கனைப் பற்றியும் அவனின் தற்போதைய நோக்கத்தையும் விளங்கினார். அதன்படி ஆருஷியால் மரணத்தை தழுவிய ஆன்மாவை வெளிச்சத்தை அடைய செய்வதே அவனின் கடமை.சித்தரிடம் இருந்து சக்தியைப் பெற்றவன் அந்த ஆன்மாவை காண செல்கின்றான். அவன் செல்லும் நேரம் ஆன்மாவை ஆபத்து சூழ்ந்திருக்க அதனை விளக்கி அதன் முகத்தை கண்டவனுக்கு உயிர் போகும் வலி. ஏனெனில் அந்த ஆன்மாவே அவனின் அன்புகுரியவள் என அறிந்தவன் மேலும் தானே அவளின் மரணத்திற்கு காரணமாகிவிட்டோம் என மிகவும் வருந்துகிறான்.
காட்டில் பல வருட தவத்தின் பலனாய் தன் சாபம் போக்கும் ஜீவன் ஆன்மாவாய் மாறியதை அறிந்தவன் அதனைக் கைப்பற்ற அவனால் பிசாசுகளாக மாற்றப்பட்ட ஆன்மாக்களை அனுப்புகிறான் ஆதிலிங்கம்.
இந்த அரக்கனிடம் இருந்து ஸ்ரீ தப்பிப்பாளா ஆருஷி எவ்வாறு ஸ்ரீ யை எதிர்கொள்ளப் போகிறான்.. ஸ்ரீ யின் விபத்திற்கு பின்னால் இருப்பது யாரென ரவி கண்டறிவானா!!! என்பதைப் பற்றி இனிவரும் அத்தியாயங்களில் காண்போம்.
 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26490

அத்தியாயம் 15

கத்தி முனையை விட கூர்மையான பார்வையால் தன்னை குத்திக் கிழித்துக் கொண்டிருக்கும் ரவியின் விழிகளில் இன்ஸ்பெக்டர் நல்லதம்பியோ உடல் வியர்க்க எச்சில் கூட்டி விழுங்கி கொண்டு பயத்துடன் நின்று கொண்டு இருந்தார்.
ரவியோ தன் பார்வையை இம்மியளவும் மாற்றாமல் அவரை பார்வையால் துளைத்தெடுக்க மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.
" சொல்லுங்க நல்லதம்பி ஸ்ரீ வர்ஷினி கேஸ்ல உண்மைலேயே பிரேக் பிடிக்காமால் தான் விபத்து நடந்தததா..."

அவரோ சற்று தைரியத்தைக் கூட்டி "ஆமா சார் ... வண்டியை செக் பண்ணும் போது அதுல பிரேக் வயர் தேய்ந்து அறுந்து இருந்தது.அந்த பொண்ணு சொல்ற மாதிரி எந்த வண்டியும் அந்த வழியாக வரல சார்" என்றார்.

அவரின் பதிலில் பல்லைக் கடித்த ரவி "இதுக்கு முன்னாடி எங்க டியூட்டி பார்த்தீங்க" என்க "மதுரை சார்" "சென்னைக்கு எதுக்காக டிரான்ஸ்பர் வாங்குனீங்க " ரவி..

"என் மனைவி சொந்த ஊர் இதுதான் சார்.முன்னாடி இங்கதான் சார் இருந்தோம் இரண்டு வருஷம் முன்ன மதுரை டிரான்ஸ்பர் ஆகிடுச்சு நான் மட்டும் தான் போனேன் சார். பசங்க படிக்கறதால அவங்க இங்க தான் இருந்தாங்க. நானும் ரொம்ப நாள் டிரான்ஸ்பர் கேட்டேன் சார் தரல இப்போ தான் தந்தாங்க சார் " எனக் கூற அவரை மேலிருந்து கீழாக பார்த்தவன் "அப்போ இதுக்காகத் தான் உங்க நேர்மையை விலை பேசியிருக்கீங்க" என்க அவருக்கோ நெஞ்சில் நீர் வற்றியது.

நேர்மையான மனிதர் தான் நல்லதம்பி கஷ்டப்பட்டு எஸ்ஐ எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி இந்நிலைக்கு வர முழுதாய் ஐந்து நீண்ட நெடிய வருடங்கள் ஆகினர் அதுவும் உடல் தேர்வுகளில் பல முறை அரசியல் தலையீடுகளால் வாய்ப்பிழந்து இறுதி முயற்சியில் இந்த வேலையில் சேர்ந்தார். நேர்மையாக இருக்க நினைத்ததால் எட்டு வருட பணியில் பல முறை மாற்றல் பெற்றார் . இறுதியில் சென்னையில் வேலை பார்த்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குடும்பம் என்றானபின் அவரும் வளைந்து கொடுத்து வேலை செய்ய ஆரம்பித்தார். அப்படியும் அவரால் சில தவறுகளை மன்னிக்க முடியாமல் வழக்கு தொடர அடுத்த நாளே மதுரைக்கு பந்தாடப்பட்டார். அவரின் இரு பையன்களும் படிப்பதால் கல்வி பாதிக்கும் என எண்ணியவர் அவர்களை சென்னையிலேயே விட்டு விட்டு தனியாய் மதுரை சென்று பணியில் சேர்ந்தார்.. கடந்த இரண்டு வருடங்களாக மாற்றலுக்கு எவ்வளவோ போராட பழைய பார்ட்டிகளின் தலையீட்டால் மாற்றல் பெற முடியவில்லை .. கடந்த வாரம் அவன் நண்பன் தந்த தகவலில் அவரும் எதைப்பற்றியும் சிந்திக்காமல் தலையாட்ட அடுத்தநாளே சென்னையில் பணியமர்த்தப் பட்டார். அவர் செய்த செயலுக்கு சன்மானமாக பெட்டி நிறைய பணம் கிடைக்க அதனை மறுத்து இந்த பணியிடமாற்றலே போதும் என்றுவிட்டார்.

ஆனால் பின்புல மற்ற சாதா விபத்து கேஸ் என எண்ணியிருந்தவருக்கு இப்படியொரு சூழ்நிலை வரும் என கனவிலும் எதிர் பார்க்க வில்லை... பழைய நினைவில் இருந்து மீண்டவர் முன் அழுத்தமாக நின்றிருந்த ரவியைக் கண்டு பயந்தாலும் எக்காரணம் கொண்டும் நண்பனைக் காட்டிக் கொடுக்க கூடாது என எண்ணியவர் எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றார்.
அவரின் முக்த்தை உற்று நோக்கியவனுக்கு இவருக்கும் இதில் பங்கு இருக்கிறது என்று உறுதி செய்தவன் மிரட்டி உண்மையை கண்டுப்பிடிப்பதை விட சற்று சமயோசிதமாக செயல்பட எண்ணியவன்.. இவரை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று யோசித்தவன் அவரை அழுத்தமாய் பார்த்துவிட்டு வெளியேறினான்.

வெளிவாசலில் அன்று முதல் முறை காவல் நிலையம் வந்து சென்றபின் சந்தித்த கான்ஸ்டபிள் நிற்க அவரை அழைத்துக் கொண்டு ஜீப்பில் புறப்பட்டிருந்தான். சிறுது தூரம் சென்று நிறுத்தி அவரை தனியே அழைத்து சென்ற ரவி மீண்டும் விபத்து அன்று நடந்தவற்றை விசாரிக்க அவரும் அன்று நடந்தவற்றை கூற கூர்மையாய் கவனித்தவனுக்கு இன்ஸ்பெக்டர் சேகரை சந்தித்தால் அவன் மனதின் பல கேள்விக்கு பதில் கிடைக்கும் என முடிவு செய்தான். அடுத்து ரவி அழைத்தது என்னவோ அவனின் தோழன் ஹரிக்கு தான் .அவனும் காவல் துறையில் தகவல் சம்பந்தப்பட்ட பகுதியில் பணியாற்றுகிறான்.அழைப்பை ஏற்ற ஹரியிடம் இன்ஸ்பெக்டர் சேகர் பற்றி கான்ஸ்டபிள் கூறிய தகவலை கூறியவன் தற்போது அவர் இருக்கும் இடம் பற்றிய தகவலை விசாரிக்க கூறி போனை வைத்தான். பின் ரவிக்கும் மற்ற வேறு வேலைகள் இருப்பதால் தற்போதைய இன்ஸ்பெக்டர் நல்லதம்பி பற்றியும் விசாரித்தவன் அவரை கண்காணிக்க சொல்லிவிட்டு கான்ஸ்டபிளை அனுப்பினான்.
------------------------------------------------------
இரத்தமென சிவப்பேறிய கண்களும், தன் கூர் பற்களை அனாயசமாக வெளியில் தெரிய , கூர் நகங்கள் ஒரு பக்கம் பளபளக்க உடல் முழுதும் ஒருவித கருமை பூசப்பட்டது போல் இருக்கும் உருவங்கள் அந்த இடத்தில் நிரம்பி இருக்க, அந்த உருவங்களோ தரையில் இருந்து இரண்டடி மேலே காற்றில் மிதந்து கொண்டிருந்தன..அவைகளின் கண்களில் உயிர் குடிக்கும் வெறியைத் தாண்டயும் ஒருவித பயம் உருவாக, அதற்கு காரணமானவன் நடுநாயகமாக அந்த கூட்டத்தின் நடுவில் உக்கிரமாக நின்று கொண்டிருந்தான் ஆதிலிங்கம்.

தான் அனுப்பிய பிசாசுகள் இன்னும் திரும்பி வராததில் ஆத்திரம் கொண்ட ஆதிலிங்கம் அந்த காட்டையே ஒரு வழி செய்து கொண்டிருந்தான். அவனால் அனுப்ப பட்ட ஆன்மாக்கள் இந்த பூமியில் இருப்பதற்கான எந்த ஒரு அடையாளமும் இன்றி மாயமானதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை...

ஏனெனில் அவனுடைய சக்தி மூலம் அந்த பிசாசுகள் எங்கு இருப்பினும் அவனால் அதனை உணரமுடியும் ... தன் கட்டளையையும் பிறப்பிக்க முடியும் அப்படியிருக்கையில் இன்று சுத்தமாய் அவைகளை உணரமுடியாது தோற்று நின்றான்.... ஆத்திரத்தில் கண்கள் சிவக்க அவனால் தீய சக்தியாய் மாற்றப் பட்ட அனைத்து பிசாசுகளையும் ஒன்று கூட்டினான்...

"என்ன தான்‌ நடக்கிறது ... ஒரு சாதாரண பெண்ணின் ஆன்மாவை இழுத்து வர‌ இவ்வளவு தாமதமாகுமா ... சென்ற‌ இரண்டு பிசாசுகளும் தற்போது பூமியில் இருப்பதற்கான அறிகுறிகளே என் ஞானத்திற்கு தென்படவில்லை.... " என குழம்பி குறுக்கும் நெடுக்கும் நடந்தான்..

'இது எவ்வாறு சாத்தியம் யார் இதற்கு பின்னால் இருப்பது ' என மனதில் நினைத்தவனுக்கு தன்னை சுற்றி ஏதோ மாயவலை பின்னப் படுவதைப் போல் உணர்ந்தான்.
அதே கோவத்துடன் அங்கிருந்த இரண்டு பிசாசுகளை தன் சக்திகள் மூலம் அருகில் இழுத்தவன் காற்றில் அனல் பறக்க
"என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது அந்த ஆன்மா எனக்கு வேண்டும்... இன்னும் இரண்டு நாட்களே உங்களுக்கு கெடு .... ஆன்மாவோடு வரவில்லையெனில் அடுத்த நிமிடமே உங்களை பொசுக்கி விடுவேன்... விரைந்து செல்லுங்கள் " என கட்டளையிட்டான்.

அவனுக்கு தெரியும் சில ஆன்மாக்கள் வெளிச்சத்தை அடையும் காலம் குறுகியது .. அவ்வாறு அவை வெளிச்சத்தை அடைந்துவிட்டால் அவைகளின் மறுஜென்மம் வரை அவன் காத்திருக்க வேண்டும் சில சமயங்களில் ஆன்மாக்கள் பிறப்பில்லா முக்திப் பாதையையும் அடைய வாய்ப்பு இருப்பதால் அவன் ஸ்ரீ யின் ஆன்மா அந்நிலைக்கு செல்வதற்குள் அடைய நினைக்கிறான்..அதனால் தான் அவனால் பொருமையாக சிந்திக்க அவகாசமோ இல்லை அவனை சுற்றி நடப்பதை உணரும் தெளிவோ இல்லாமல் போனது.. நாளுக்கு நாள் அவனின் ஆத்திரம் அதிகமானதே தவிர சிறிதும் குறையவில்லை... ஆதிலிங்கத்தின் தேடல் ஒன்றே ஒன்றுதான் அது ஸ்ரீ யின் ஆன்மா..
--------------------------------------------------------------
ஆதித்யா வை சமாதானம் செய்தவளால் தன்னுடைய மனதின் விடையில்லா கேள்விகளுக்கு சமாதானம் செய்ய முடியவில்லை.

தான் ஏன் இந்நிலையில் உள்ளோம், இம்மாதிரியான ஆன்மாவிற்கெல்லாம் ஒரு முடிவில்லையா, இறந்தவர்கள் அனைவரும் இப்படி மாறிவிடுவார்களா அப்படியானால் அவர்கள் எல்லாம் எங்கே ஏன் அப்படி மற்ற ஆன்மா எதுவுமே இதுவரை நான் பார்க்க வில்லையே, சில பேய்க் கதைகளில் வருவது உண்மை என்றால் ஏன் நானும் ஆதித்யாவும் அதில் வரும் பேய்களைப் போல் கொடூரமாக இல்லாமல் சாதரணமாக இருக்கிறோம் என பல கேள்விகள் ஸ்ரீ மனதை குடைய குழப்பத்திலேயே இருந்தாள். எனினும் இவை எதையுமே ஆதித்யா விடம் காட்டிக் கொள்ளவில்லை ஏனெனில் இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவு அவனுக்கு வயது இல்லை என்பதால்.

அவனின் மனதை மாற்றி மாலின் குழந்தைகள் பகுதியில் விட்டவள் அவன் மற்ற குழந்தைகள் போல் அதில் விளையாட இவள் சற்று தள்ளி நின்று அதனை ரசித்துக் கொண்டிருந்தாள். ஆதித்யாவோ கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி அங்கிருக்கும் குழந்தைகளுடன் அவர்கள் பின்னால் அமர்ந்து அவர்களுடனே விளையாடிக் கொண்டிருந்தான்.

தீடிரென உலகில் நாம் மட்டும் இன்விசிபில்(கண்ணுக்கு புலப்படாமல் மறைந்து போவது) ஆகி விட்டால் எப்படி இருக்குமோ அப்படி தான் ஸ்ரீ மற்றும் ஆதியின் நாட்கள் கடந்து கொண்டிருந்தது. பணம் பணம் என அதன் பின்னால் நாயாய் அலையும் இந்த மனித வர்க்கங்களுக்கு மரணம் என்ற ஒன்று இருப்பதுவே அவ்வபொழுது மறந்து விடுகின்றனர். எவ்வளவுதான் ஒரு வரை ஒருவர் ஏய்து சம்பாதித்தாலும் இறுதியில் அவை ஏதும் நம்முடன் வருவதில்லை என்ற நிதர்சனத்தை ஏனோ மனிதர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

தாம் செய்யும் தவறுகளுக்கான தண்டனையாக கர்மா நம்மை என்றும் விடாது என்ற உண்மையையும் உணராமல் மேலும் மேலும் தவறிழைத்துக் கொண்டே இருக்கின்றனர்
மனிதனே மனிதனை வேட்டையாடும் காலமும் தான் இது என்பதை நம் நெற்றிப் பொட்டில் அறைந்து புரிய வைக்கிறது இந்த பொல்லாத உலகம். இப்படிப்பட்டவர்கள் நடுவே எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி இருக்கும் இந்த நிலை கூட ஏனோ ஸ்ரீ க்கு ஒரு வகையில் பிடித்து தான் இருந்தது.

யோசனைகளில் இருந்து மீண்டவளுக்கு அருகில் உள்ள பேக்கரியைக் கண்டதும் நாவில் எச்சில் ஊறியது.
அந்த கண்ணாடி பெட்டிக்குள் வைக்க பட்டிருந்த சாக்லேட் ஐஸ்கிரீம் கேக்கை நாவில் எச்சில் ஊற கண்களாலே விழுங்கி கொண்டிருந்தாள் ஸ்ரீ. கைகள் பரபரக்க சுற்றும்முற்றும் பார்த்து மீண்டும் அதையே கண்களில் ஆசை மின்ன பார்த்து கொண்டிருந்தாள்.

அப்போது " உன்னால் அதை பார்க்க மட்டுமே முடியும் சாப்பிடவோ ஏன் தொடக்கூட முடியாது அப்புறம் ஏன் வீணாக ஆசையை வளர்த்துக் கொள்கிறாய்" பின்னால் இருந்து கேட்ட அழுத்தமான குரலில் தூக்கிவாரிப் போட ஒரு முழு நிமிடம் கண்களை மூடி தன்னை சமன்படுத்தி கொண்டு திரும்பி பார்த்தாள் ஸ்ரீ.

அங்கு கைகளை கட்டிக்கொண்டு நின்றவனைக் கண்டு அவள் கண்கள் சாசர் போல் விரிந்தன. இவனுக்கு எப்படி நான் தெரிகிறேன் என குழப்பிக் கொண்டிருக்க அவனோ இதழை கேலிபோல் வளைத்து அவளையே அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தான் ஆருஷி.

கதையின் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே

 
Status
Not open for further replies.
Top