All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
super story sis.... really ivalo sekiram mudinjuruchenu kastama iruku... karun love super.... rendu perume kadhalai varthayal sollamal kankalal pagirnthu kondathu arumai.... very very nice sis......
நன்றி நன்றி சுமன் மா .🥰😍🥰😍🥰😍🥰😍

கதை ஆரம்பித்த போதே சொன்னேனே.. 25 யூடிஸ் தான் ப்ளான் பண்ணிருக்கேன்னு.. நான் நினைத்தது விட அதிகமாக தான் போச்சு..

சில யூடிக்கள் இரண்டு யூடி ஸைஸ்☺☺☺☺

உங்களுக்கு பிடித்தது மிக்க மகிழ்ச்சி மா..

என் கதைல கண்ணுலேயே காதல் பண்ணிட்டு ஓடிருவாங்க.. அதுக்க மேல எழுதினா.. எனக்கு கை நடுங்கிடும்.. ஹி ஹி..


அழகான கருத்துப் பகிர்வு நன்றி மா..
 

Samvaithi007

Bronze Winner
நன்றி நன்றி சுமன் மா .🥰😍🥰😍🥰😍🥰😍

கதை ஆரம்பித்த போதே சொன்னேனே.. 25 யூடிஸ் தான் ப்ளான் பண்ணிருக்கேன்னு.. நான் நினைத்தது விட அதிகமாக தான் போச்சு..

சில யூடிக்கள் இரண்டு யூடி ஸைஸ்☺☺☺☺

உங்களுக்கு பிடித்தது மிக்க மகிழ்ச்சி மா..

என் கதைல கண்ணுலேயே காதல் பண்ணிட்டு ஓடிருவாங்க.. அதுக்க மேல எழுதினா.. எனக்கு கை நடுங்கிடும்.. ஹி ஹி..


அழகான கருத்துப் பகிர்வு நன்றி மா..
அப்படியா சொல்றீங்க...ஆனா fb போஸ்ட் பார்த்து தாமரைமா romance la விளையாண்டிருக்காங்க இல்ல நினைச்சேன். ஆனாலும் இதுக்கே அந்த போஸ்ட்டுனா .... அப்ப உங்களுக்கு எந்த அளவு கைநடுங்கிருக்கும்னு யோஜிக்கிறேன்....ஹிஹிஹிஹ


லொல்😜😜😜😜😜😜
 

Samvaithi007

Bronze Winner
தாமரைமா...சட்டுனு முடிஞ்ச மாதிரி இருக்கு...நீங்க fast uds கொடுத்தீங்களா...எனக்கு தான் பத்தலையானு தெரியலை......ஆனாலும் ஆரம்பிக்கறதுக்குள்ள முடிஞ்ச மாதிரி இருக்கு....இந்த வாட்டி ஒரு எஸ்ஸே இல்ல....அலப்பரை அட்டகாசம் அதிகமா இல்ல...ஜோகத்த என்ன சொல்ல ...சரி விடுங்க...அதுங்க ரெண்டு இசையில மிதந்துட்டு சந்தோஷமா இருந்துட்டு போகட்டும்...நா ஜோகமா இருக்கேன் அடுத்ததா யாரை கூட்டி வரப்போறீங்க...missing.... missing.... missinng😔😔😔😔
 

Samvaithi007

Bronze Winner
தாமரைமா...

வாய்பேச்சு வீரன் எல்லாம் வீணன்...

சிறு விதையை வித்திட்டு புதிய மாற்றத்தை கொண்டு வருபவனே .. .

நம் மனதில் பதியம் போடுவான்...

சாகரன் அவன் செயல் மழையில் பலநேர் நனைந்து சிலிர்த்து நிற்க...

இந்த சாகரனோ...அவளது குற்றால சாரலில்...கோடை பனியில் ....

மனம் நனைய கருத்த முகமும்...

நெறித்த புருவமுமாய் ....உருத்த கண்களுமாய் திருமணம் திரிந்தவன்...

பலிரிடும் பற்கள் மின்னல் வெட்ட...

பளிங்கு முகம் அகத்தை பிரதிபலிக்க...

கூர்மை விழிகளிண்டும்...மனத்தை எதிரொலிக்க...

சில்லிடும் உணர்வு சீராக இதயத்தை பரவிட...இறுக்கம் தொலைத்திட...

இவன் எங்கள் சாகரன் தானோ என இமைகள் கொட்டிட...

பெயருக்கேற்றார் போல...இந்த பொலி வினை காண ...


அப்ப்பா...இதயம் இடம்பெயர்ந்ததோ முகத்திற்கு...

இதில் தான் எத்தனை கனிவு...அதில் தான் த்தனை பொழிவு🌹🌹🌹🌹❣❣❣❣
 

Jeen

Well-known member
நன்றி நன்றி ஜீன் மா😍🥰😍🥰😍🥰😍🥰
எபி லாக்கா.. ட்ரை பண்றேன் மா.. வந்தா எழுதி போடுறேன்💕💖💕💖💕💖💕💖
அக்கா அதல்லாம் தன்னால வரும்.ஒரு 10நிமிடம் அமைதியா இருந்தால் 2பக்கத்திற்கு எழுதிரலாம் pl.............😙😙😙
 

thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் அக்கா,

கடல்தாகம் தீர்க்கவா மழைத்துளியே!

கவித்துவமான தலைப்பு...ஆயிரம் கடல்துளிகள் கையருகே இருந்தாலும் ஒரு மழைத்துளி தாகத்தைத் தணிப்பது போல் தணித்து விட முடியாது👏👏👏

நீங்கள் போடும் படங்களை எல்லாம் பார்த்துப் பார்த்து ஆவல் பெருகினாலும் என் பொறுமை பற்றித் தெரியும் என்பதால் கதை முடிந்து படிப்பது என்று காத்துக் கொண்டிருந்தேன்...worth waiting story எனப் படித்ததும் புரிந்து விட்டது. 👌👌👌

கருண் சாகர தொண்டைமானுக்கு அருணாச்சலம் perfect match. கதை முழுதும் அவனே என் மனதில்...🤝🤝🤝

மதுவர்ஷினி...ப்பா...என்னா make இவ என்பது போல் ஒரு கேரக்டர்...சில நேரங்களில் இவள் வரும் இடங்களில் அடுத்து ‘ எங்க நாம போறோம்...கேஎஸ் கார்டனுக்கு... எங்க நாம போறோம்...கேஎஸ் கார்டனுக்கு...’ என்று டோரா குரலில் பாடி விடுவாளோ என்று கூடத் தோன்றியது எனக்கு...ரோஹித்துக்கு இவள் வைக்கும் நாமதேயங்கள்... செண்பாக்காவுக்கு ஹார்ட் விடுவது...என இவள் செய்யும் அட்டகாசங்கள் மற்ற நாயகி பாத்திரங்களைப் போல் சட்டெனக் கடந்து விடும் பாத்திரமல்ல இவள் என்பதைக் காட்டியது.

கருண்சாகரின் புயல் வீசிய வாழ்வில் தென்றலாய் வந்தவள்... தேவதையாய் வாழ்பவள். வாழ்க வளமுடன்!💐💐💐

விஷ்ணு விஷால்... ஆண் பெண் நட்பு அழகாக அமைந்து விட்டால் அது வாழ்வில் சுவாரசியம் கூட்டும். ‘தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே’ என்பது போல் மதுவுக்கு எல்லாமாக... தேவைப்பட்ட போது அவள் சரிபாதியாகப் போகிறவனிடமே எச்சரிக்கை செய்யுமளவு ஒரு நண்பன் கிடைப்பதெல்லாம் வரம்... ஆசீர்வதிக்கப்பட்டவள் வர்ஷினி😘😘😘

இன்னும் உதய் சாகர், கேசி( ரமணிம்மாவின் கதாபாத்திரங்களில் என்னால் மறக்க முடியாத பெயர்), ஹசீனா என அனைத்து கதாபாத்திரங்களுமே நிறைவாக இருந்தன.👏👏👏

காடுகள் அழிப்பு, நிலவளத்தை பாதிக்கக் கருவேலங்காடுகள், நீர்வளத்தை பாதிக்க ஆகாயத்தாமரை போல் ஆங்கிலேயர்களால் மலைவளமும் திட்டமிட்டுக் கெடுக்கப்பட்டிருக்கிறது போன்ற பல அறியாத புதிய விஷயங்களைக் கொடுத்ததன் மூலம் சாதாரண கதையாக இருந்தாலும் அதற்கான விவரங்களுக்காக எத்தனை மெனக்கெட்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. 👍👍👍

Hats off for that effort u took. Very informative story.:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12

ஒரு இனிய கவிதை வாசித்த உணர்வு இன்னும் சில நாட்களுக்கு என மனதில் இருந்து கொண்டிருக்கும் என்ற கடைசி வார்த்தையுடன் இன்னும் பல படைப்புக்கள் இதைப் போல் வழங்கிட வாழ்த்தும்

என்றும் உங்கள் நலம் நாடும்

தூரிகா
:smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1:
 

Samvaithi007

Bronze Winner
தாமரைமா....🌹🌹🌹❤❤❤

என்ன சொல்ல....நட்பதிகாரம்....நிச்சயம்..
ஏங்க வைத்துவிடுகிறீர்கள்....இதே போல்

நண்பன் ஒருவன் வேண்டுமென...
ஆயிரம் சண்டைகள்...

காரணமில்லா காலைவாருதல்...

குடுமிபிடி சண்டைகள் கூட கோலகலமாய்...

கடைசியில் நட்பின் பெருமை சொன்னீர்களே...

வரிகளா அவை ...எத்தனை உண்மை...

எதிர்பார்ப்பும் இல்லை ஏமாற்றமும் இல்லை ....

ஒருவரின் நலன் மற்றவரினுள் ...

காதல் கூட பிச்சுகொள்ளும்...கடைதேறாது என தெரிந்தால்😏😏😏😏😏

நட்பு...உருவத்தால் இல்லாவிட்டாலும்...

உயிர்ப்பாய் உணர்வாய் தொடரும்❣❣❣🌹🌹🌹🌹🌹

வாழ்த்துக்கள்❤❤❤❤
 

JoRam

Active member
வாவ், செம்ம கவித்துவாமாய் இருந்தது முடிவு. முடிவுன்னு சொல்ல கூடாது, அவர்களின் பயணம் இனிதே ஆரம்பாகிற்று.

அருமையான கதை மாந்தர்கள் கருண், மது, சுகர் ஜி, விவி, சீனா தானா, தீபி, ரோஹித், அருண், வத்சூ, கேஸ் தலைவர், செம்பாக்கா, மீனாக்கா, டேவிட், வள்ளி மற்றும் கியூபி அனைவரும் கண்ணில் உலா வருகின்றனர்.

அருமை என்ற வார்த்தைக்கு வேறு வார்த்தை தெரியாதினால், அருமையோ அருமை.

வாழ்த்துக்கள் சிஸ். 💐💐💐
 
கதை ரொம்ப அருமை கொடைகானல நேராக பார்த்து வந்தமாதிரி ஒரு உணர்வு வர்ணனை யெல்லாம் ரொம்ப நல்லாயிருந்தது இளமை கலாட்டா காமடிக்கு பஞ்சமில்லை எல்லாம் சூப்பர்
 
Top