All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Shalini01

Member
அழகான தலைப்பு. அருமையான கதைகளம். முகிலேஷ் வாழ்வில் பல இன்னல்களை கடந்து வாழ்வில் ஜெயித்தவன். வளர்த்த தாய் மேல் அளவில்லா அன்பு கொண்டவன் . தாயிடம் கொடுத்த சத்தியத்தை இறுதி வரை காத்தவன். பல பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றியவன். தனது வளர்த்த தாயை பரத்தை நிலைக்காக்கிய தந்தைக்கு சரியான தண்டனை வழங்குகின்றான். செல்வராஜூக்கு அவன் தண்டனை வழங்க நினைக்கையில் இவன் மூலம் உண்மை அறிந்த ஜோதி கணவனது தவறுக்கு தண்டனை வழங்குவதோடு தனது உயிரையும் துறக்கின்றார். ஜோதியின் முடிவு மனதை வலிக்க செய்கின்றது.
தேவராஜ் , சிவராஜ். இருவருக்கும் அவரவர் மனைவிகள் மூலம் தண்டனை வழங்கி , கொடிய செயல்கள் செய்ய ஆதாரமாக இருந்த அவர்களது பண பலத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கி திருந்தி வாழ வழி செய்கின்றான். மதன்ராஜ் நல்லவனாக இருந்த போதும் அவனது பங்கு சொத்தையும் வாங்கி அவனை தப்பு செய்ய விடாமல் காப்பதோடு மட்டுமில்லாமல் உனக்கு என்ன தேவைப்பட்டாலும் நான் செய்வேன் என சொல்வது அருமை. மற்றும் அவர்களின் சொத்தை அவர்களின் பிள்ளைகளுக்கு எழுதி வைப்பது என ஒவ்வொரு செயலிலும் அவனது உயர்ந்த குணமே மிளிர்கின்றது. ரதியின் மேல் அவன் கொள்ளும் காதல் அழகு. அவள் ஆரம்பத்தில் அவனை வெறுத்தாலும், தேவையில்லாத வார்த்தை பிரயோகமாட்டும், மற்றும் அவனை பல பெண்களோடு சம்பந்தபடுத்துவதாகட்டும் , குழந்தையை அழிக்க துணிவதாகட்டும் எல்லாவற்றிலும் அவள் யது மேல் கொண்ட அதீத காதலே காரணம். ஆனால் பாவம் அவளது கோபம் அதை புரிந்து கொள்ள முயலவில்லை . தாலி அறுந்து அவன் கையில் போகும் போது தான் முட்டாள் பெண் அவனது அதீத காதலை உணர்கின்றாள். ஆனால் அவளது இச்செயல் அவனது காதலை இறுக செய்கின்றது. முடிவில் பல போராட்டங்களிற்கு பிறகு இருவரும் இணைகின்றார்கள். விமலாவின் மனதை மாற்றி தமையனுடன் சேர வைப்பது, தன்னுடைய தவறுக்கு தண்டனையாக கணவனிடம் குழந்தையை கொடுத்து விட்டு பால் கட்டி தவிக்கும் போது ஒரு தாயின் உணர்வு ரொம்ப மனதை வலிக்க செய்கின்றது ஆனால் முகிலேஷ் வந்து அவளது நிலை கண்டு மருத்துவரோடு தொடர்பு கொண்டு அவர் கூறிய படி செயல்ப்படும் போது தாயுமானவனாக மிளிர்கின்றான். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். எப் பகுதியை விமர்சிப்பது என்று தெரியல்ல . ஒவ்வொரு பகுதியையும் உங்களது எழுத்து நடையால் அழகாக செதுக்கியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்🥰😍👏👏👏👏👏👏💐💐💐💐💐
 

Samvaithi007

Bronze Winner
Nice story 😘😘😘😍😍😍😍

வலிகளே வாழ்க்கையானலும் வசந்தங்கள் வரப்பிரசாதமாக இடைக்க வாழ்க்கையென்னும் பாடத்தை அதனோடு சக்தியை மட்டுமல்ல புத்தியை கொண்டும் போராட வேண்டும் என்று அழகாய் உணர்த்தும் கதைகளம்...

பழி சொல்ல ஆயிரம் பேர் இருப்பார்கள் ...வழி சொல்ல தான் ஆட்களுக்கு பஞ்சம்... அப்படி கிளம்பியவனின் வாழ்க்கையில் ஏற்றப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகளை, ரணங்களை,பாசத்தை ,ஏக்கத்தை,காதலை, அவன் அதனை எதிர் கொண்டு வெற்றியடைந்த முறையை அற்புதமாக எடுத்து காட்டீனர்.... இந்த பயணத்தின்.அடுத்த தொடக்கம் இன்னும் அழகாக சிறப்பாக அமைய வாழ்த்துகள்...💟💟💟💟💟💖💖💖💕💝💕💝💕💝💕💕💝💝💕
 
Top