All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராஹ்வின் "கண்களில் காதல் மொழிகள்" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழர் / தோழிகளே ,

நிறைய கதைகளை படிச்சு இம்பிரஸ் ஆகி நாமும் எழுதலாமா அப்டி ஒரு எண்ணம் வந்தது. சரி டிரை பண்ணுவோம்னு பண்றேன்... ஏதாவது தப்பு இருந்தா மன்னிக்க வேண்டுகிறேன். சொல்லுங்க திருத்துகிறேன்... பிளீஸ்......

கண்களில் காதல் மொழிகள்

நாயகன் - அமரேர்ஷா வத்சால்ய (Amaresha vatsalya)

நாயகி - ஈஷாணி( Eshaani)

சீக்கிரம் கதையோடு வருகிறேன்....


நன்றி

விஷ்வா ஸ்வராஹ்
 

Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்களில் காதல் மொழிகள்

முன்னுரை :

அமரேஷ்ஷா வத்சால்ய (வயது 25) :: சரபேஷ் வத்சால்ய - ஸ்வர்ணமாலியா தம்பதிகளின் முதல் புத்திரன்.
நிஹாரிகா (வயது 20) இருவரின் புதல்வி மருத்துவம் பயின்று வருகிறாள்.
அமர் - 6.2” அடி உயரம் , மா நிறம், ஆண்களுக்கு ஏற்ற கட்டான உடல், கோபம் அவனுடைய உயிர் நண்பன். தன் நண்பர்களுக்கு ஒன்று என்றால் எதுவும் செய்பவன். பெண்கள் மீது அவ்வுளவாக இவனுக்கு பிடித்தம் கிடையாது.

அமர் தன் தந்தையுடன் சேர்ந்து அவர்களது குடும்பத் தொழிலை கவனித்து வருகிறான். S.S.A group of constructions, S.S.A. Soft Tech.Solutions என்று இவர்களுக்கு கம்பெனிகள் சென்னையில் உள்ளது. உலகம் முழுவதும் புகழ் பெற்றது.
அது மட்டும் அல்லாது S.S.A பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்று.


ஈஷாணி (வயது - 18) :: சுந்தரம் - வைஷ்ணவி தம்பதிகளின் செல்ல புத்திரி குழந்தை பருவம் மாறாத முகம், பால் நிறம், பெரிய குண்டு கண்கள் . தோழிகளுக்கு மட்டும் முண்டக்கண்ணி. தன் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவை எதிர்பார்த்து கொண்டு இருப்பவள். வீட்டில் அமைதி மாதிரி ஆன அமைதி இல்ல . அவளின் வம்பு மற்றும் சேட்டைகள் எல்லாம் அன்னையிடம் , தம்பி சரணிடமும் தோழிகளிடமும் மட்டும்.
சுந்தரம் நேர்மையான அரசாங்க அதிகாரி. இப்பொழுது சென்னைக்கு பணி உயர்வுடங்கூடிய மாற்றம் கிடைத்து உள்ளது.

அமரின் கோபமும் - ஈஷாணியின் சேட்டையும் சேர்ந்த பயணம் தான் இந்த கதை.


இவர்களுடன நம் கதையில நரேன், சுதீப் , நிகிதா மற்றும் அனீஷ் (குட்டீஸ்) , விவேக் , கிரண் , தமிழ் , சிவா (அமரின் தோழர்கள்) மற்றும் சில வில்லங்கமான ஆட்களும் உள்ளனர்……..
 
Last edited:

Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ,

ஒரு சின்ன முன்னுரை கொடுத்திருக்கேன்... தப்பு இருந்தா சொல்லுங்க ஏதாவது தமிழ் மிஸ்டேக் இல்லனா செண்டென்ஸ் ஃபார்ம் பன்றதுல... I ll change it.
 

Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழர்/ தோழிகளே,

நாளைக்கு கண்டிப்பா முதல் ரெண்டு அத்தியாயம் கொடுக்கிறேன்....
 

Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்களில் காதல் மொழிகள்

அத்தியாயம் 1

கன்னியாகுமரி விரைவு இரயில்

B1 கம்பர்ட்மென்டில் மதுரையில் வழியாக சென்னை நோக்கிப் பயணம் செய்து கொண்டு இருந்தனர் சுந்தரம் - வைஷ்ணவி தங்கள் மகள் மட்டும் மகனுடன்.

“ ச்ச மதுரையிலே இருந்திருக்கலாம் எனக்கு சென்னைக்கு போகவே புடிக்கல. என் பிரெண்ட்ஸ் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன் ” என்று தன் அன்னையின்் காதில் புலம்பிக் கொண்டு இருந்தான் சரண்.

“ ஆமா பெரிய பொடலங்க பிரெண்ட்ஸ் போட….. உங்களால அந்த காலனியே அல்லோல பட்டுச்சு இப்ப தான் எனக்கு சந்தோஷமா இருக்கு பா அந்த குட்டி பிசாசுங்க எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்து என்ன படுத்தாது “ என்று தம்பியின் தலையில் லேசாக தட்டினாள் ஈஷாணி.

“ஈஷூ அவன்ட வம்பு இழுக்காதனு எத்தன தடவ உண்ட சொல்றது “ என்று அவளை கண்டித்தாள் வைஷ்ணவி.

“ கூல் வைஷ் பேபி ஒய் டென்ஷன் . சும்மா லோலலைக்கு “ என்று சொல்லி கண்ணடித்து சிரித்தாள் ஈஷூ.

“ ஏய் டிரெயின்ல வச்சு என்ன விளையாட்டு “ என்று தன் மகளையும் மனைவியையும் முறைத்தார் சுந்தரம்.

*****************************************
அதே இரயிலில் A1 கம்பர்ட்மென்டில் எரிச்சலுடன் வந்து கொண்டிருந்தான் அமர். திருச்சியில் ஒரு காண்ட்ராக்ட் விஷயமாக வந்தவனுக்கு ப்ளைட்டில டிக்கெட் கிடைக்காமல் தன் பி. ஏ மூலம் இரயிலில் புக் செய்து வந்து கொண்டிருந்தான்.

“ ஷிட் டிஸ்கஸ்டிங் டூ டிராவல் இன் திஸ் டிரெயின் மா ” என்று தன் தாயிடம் மொபைலில் புலம்பிக் கொண்டிருந்தான்.

“ இட்ஸ ஓகே அட்ஜஸ்ட் பண்ணிகோ அமர் நாளைக்கு மார்னிங் வரதான பா “ என்று ஆறுதல் சொன்னால் ஸ்வர்ண
“ஓகே மா பை சீ யூ… குட் நைட் “ என்று அணைப்பை துண்டித்தான்.

அமர் பணத்தில் வாழ்பவன். சுருக்காகமா சொன்னா பணம் மட்டுமே அவன் பிரதானம். பணத்தை கொண்டு எதுவும் செய்ய முடியும் என்ற எண்ணம் எப்பொழுதும் அவனிடம், சாதிக்கவும் செய்பவன்.

*******************************************

“ அம்மா நான் கொஞ்சம் அங்க போய்ட்டு வரேன் “ என்று தன் அன்னையின் காதில் சொல்லிவிட்டு எழுந்து சென்றாள் ஈஷூ.

கதவின் பக்கம் நின்று கொண்டு காற்று வாங்கி கொண்டு இருக்கும் போது ஒரு வலிய கரம் அவளை பற்றி இழுத்தது.

“ அறிவு இல்ல தற்கொலை பண்ண டிரை பன்ற don't u have sense..idiotic people “ என்று அவளை திட்டி விட்டு சென்றான அவன்.

அவன் தள்ளியதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்தாள் ஈஷூ. பின்னர் தன்னை சமாளித்து எழுந்து கொண்டாள்.


அந்த அவன் வேற யாரு நம்ம நல்லவர் ஹீரோ அமர் தாங்க.
சும்மா வெளில காத்து வாங்க வந்த அய்யா நம்ம ஹீரோயின் தற்கொலை பண்ண போறதா நெனைச்சு பொரிஞ்சு தள்ளிட்டு போறாரு.

நம்ம ஹீரோயின் என்ன நினைப்பாங்க..???

கண்டிப்பா நாமளே…….லூசாப்பா நீனு அப்டி நினைக்கிறோம்.

அப்பறம் சேட்டைகாரி என்ன நினைப்பாள்????

“ லூசுப்பையா.... தள்ளிவிட்டு போகுது பாரு மவனே... என் கைல்ல மாட்டினா சட்னி தான் நீ " என்று போகும் அவனை பார்த்து சொல்லி விட்டு தன் சீட்டிற்கு சென்று படுத்து கொண்டாள்.

அமர் தன் சீட்டிற்கு வந்து அவளைத்தான் அற்சித்து கொண்டிருந்தான். “ சீச்…… லூசு…. கோழை…. தற்கொலை முயற்சி பண்ணுது பாரு…. அம்மா அப்பாவை பற்றி யோசிக்க வேண்டாம்…..பைத்தியக்கார பெண் “ என்று சொல்லி கொண்டிருந்தான்.

அப்போது அவன் மொபைல் அடித்தது. அது யார் என்று எடுத்து பார்த்தவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“ஹலோ சொல்லுடா என்னபன்ற..” என்று கேட்டான் அமர்.

எதிர்ப்புறம் வந்த பதிலிற்கு சத்தமாக சிரித்தான்.

“ ஓகே நாளைக்கு மீட் பண்ணலாம் k குட் நைட்” என்று கூறி அணைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தான்.

***************************************

விடியைலில் காலை 6.50 மணிக்கு

சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில்

நடைபயணம் 1 சென்னை வந்து சேர்ந்த கன்னியாகுமரி விரைவு இரயிலில் இருந்து எல்லோரும் தங்கள் உடைமைகள் சரி பார்த்து இறங்கி கொண்டிருந்தனர்.

“ அப்பா அதோ இந்திரன் மாமா…. பாருங்க “ என்று தந்தையிடம் சொன்னாள் ஈஷூ

அவர்களை கண்டவுடன் அவர்களை நோக்கி வந்த இந்திரன்

“ வாங்க சுந்தரம் வாங்க தங்கச்சி எப்டி இருக்கீங்க…? பிரயாணம் எல்லாம் நல்ல இருந்துதா…? ஹே பாப்பா தம்பி எப்டி இருக்கீங்க….” என்று கேட்டார் இந்திரன்.

“ எங்களுக்கு என்ன அண்ணா சூப்பரா இருக்கோம்… அண்ணி நிஷா எல்லாரும் நல்ல இருக்காங்களா..?? “ என்று விசாரித்தார் வைஷ்ணவி

“ எல்லாரும் நல்லா இருக்கோம் மா வாங்க வீட்டுக்கு போய் பேசலாம் மத்த சமான் எல்லாம் பேக்கேஜ் அண்ட் மூவர்ஸ ல வருமா…?” என்று அவர்கள் பை ஒன்ற எடுத்து கொண்டு சென்றார்.

“ ஆமா இந்திரன் நாளைக்கு வரும் சொன்னாங்க..” என்றார் சுந்தரம்.

“ என்னமா பாப்பா நல்ல மார்க்ஸ் வருமா +2 ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவியா? “ என்று கேட்டார் இந்திரன்

“ கண்டிப்பா வரும் மாமா பாருங்க எல்லா காலேஜ்ல இருந்து வாங்க வாங்கனு ஃப்ரீ சீட் தர போறாங்க பாருங்க” என்று ஈஷூ கூறினாள்

“ எங்க மா இப்ப எல்லா காலேஜ் உள்ள ஒரு மாதிரி வெளில ஒரு மாதிரி பேச்சு வருது மா…. பாத்து தான் காலேஜ் செலக்ட் பண்ணனும். இல்லனு சொல்லாம...Anna University க்கு அப்பறம் S.S.A group of colleges தான் நல்லா இருக்குனு பேரு . நீ நல்லா மார்க் வாங்கி அந்த காலேஜ் ல உனக்கு புடிச்ச கோர்ஸ்ல சீட் வாங்கிடு.. நம்ம வீட்டு பக்கம் தான் காலேஜ் உனக்கு போய்ட்டு வர ஈசியா இருக்கும்..” என்றார் இந்திரன்.

“ ஐயோ அது மினி ஜெயில்ல சொன்னாங்க பிரெண்ட்ஸ் . எனக்கு வேண்டாம் பா அந்த காலேஜ். நமக்கு எல்லாம் ஜாலியா காலேஜ் என்ஜாய் பண்ணனும் பா… ... அந்த டப்பா காலேஜ் நமக்கு ஆகாது மாமா” என்றாள் ஈஷூ

இவர்கள் உரையாடலை கேட்ட அமர் ஒரு புறம் சந்தோஷம் பெருமை தங்கள் நிறுவனம் நினைத்து.. மறுபுறம் ஈஷூ பதிலில் கோபம் கொண்டு அவளை காண நினைத்து அவர்களை பார்த்தான்.

ஆனால அவள் தும்மல் வந்ததால் தன் ஷால் கொண்டு முகத்தை பாதி மூடிக் கொண்டாள். அதில் அமர் கண்டது அவளின் பெரிய குண்டு கண்கள்… ஒரு நொடி அந்த கண்ணிடம் சரணடைய மனம் விரும்பினான்.

தன் தலையை அழுத்தி பிடித்து கொண்டு நிலை படுத்திகொண்டு “கண்ட்ரோல் அமர் “ என்று கூறி கொண்டு “ உனக்கு இருக்கு டி முண்டக்கண்ணி “ என்று கருவிக் கொண்டு தனக்காக வந்த காரை நோக்கிச் சென்றான்.

ஆனால் மவனே நீதாண்டா அவள்ட மாட்ட போற…நம்ம ஈஷூட்ட நீ முழி பிதுங்கி நிக்க போற… என்றார் வருங்காலம் என்ற கடவுள்…….????????????



நன்றி
விஷ்வா ஸ்வராஹ்
 

Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்களில் காதல் மொழிகள்


அத்தியாயம் 2


எழும்பூர் இரயில் நிலையம்


தன்னை அழைத்துச் செல்ல வந்த தன் உயர்ரக ஜகுப்ர் F 8 மாடல் காரில் ஏறி வீட்டை நோக்கி சென்றான்.


தன் மொபைலில் “ சுதன் இன்னிக்கு என்னென்ன appointments, meetings இருக்கு” அமர்


“ டூ டே வி ஹவ் டூ மீட் தி அனு பில்டர்ஸ் ஸார் அட் 1 p.m ஸார் “ என்றான் சுதன் அமரின் 8 வருடப் பி. ஏ.


சுதன் தன் முதலாளிக்கு விசுவாசமான தொழிலாளி. அமரின் ஒவ்வொரு அசைவையும் புரிந்து செயல் படுபவன். அமரால இவன் தான் ஸ்வர்ணவிடமும் அதிகம் திட்டு வாங்குபவன். சுருக்கமா சொல்லனும்னா நம்ம சுதன் மத்தளம் மாதிரி ரெண்டு பக்கமும் இடி தான் அவனுக்கு.. ஐயோ பாவம்…


“ பாஸ் ஃபர்ஸ்ட் வீட்டுக்கு போய் ஃப்ரெஷ் ஆகிட்டு டிஃபன் முடிச்சிட்டு மேடம் பார்த்துத்துட்டு ஆபீஸ் போவோம் பாஸ் “ என்று அமரிடம் கெஞ்சினான் சுதன்…


அவனின் கெஞ்சலில் அமருக்கு புரிந்து விட்டது அவன் உதட்டில் புன்னகை அரும்பியது…


“ என்ன சுதன் அடி ரொம்ப பலமோ…?” என்று கேட்டான்.


அதற்கு திரு திருவென முழித்து விட்டு சுதன் “ ஆமாம் பாஸ் பெரிய மேடம் ட கேட்டுறாதீங்க… அதுக்கும் சேர்த்து இன்னும் விழும்... பிளீஸ் பாஸ்….” என்று இரஞ்சினான் சுதன்.


வாய் விட்டுச் சத்தாமக சிரித்தான் அமர்.. “ don't worry சுதன் நா மாம் ட பேசுகிறேன்” என்றான்


“ ஐய்யோ பாஸ்… வேண்டாம் நா ஆபீஸ் போறேன் நீங்க வீட்டுக்கு போய்ட்டு வாங்க பாஸ்” என்று அவசரமாக பதிலுறைத்தான் சுதன்…


“ ஓகே… ஓகே…. I ll get down in home” என்று நகைத்தான் அமர்…


********************


அடையாரில் அந்த பெரிய “வத்சால்ய வில்லா” என்ற வீட்டில் நுழைந்தது அந்த கார்..


அமர் இறங்கியதும் “ ஓகே சுதன் I'll be in office at 11. Need some rest please postpone my urgent meetings after 11 bye….” என்று விட்டு வீட்டினுள் நுழைந்தான்..


அமரை கண்டதும் “ ஹாய் ப்ரோ … மீட்டிங் எப்டி போச்சு… சக்ஸஸ் ஆஹ்” என்று கேட்டாள் நிஹாரிகா

அமரின் செல்ல தங்கை. மருத்துவம் இரண்டாம் வருடம் முடித்து உள்ளாள்..


“ யா குட் நல்லா போச்சு always சக்ஸஸ் தான். ஓகே I’ll take some rest and see u later bye” என்று தன் அறைக்கு செல்ல திரும்பினான்.


“ அமர் காபி சாப்டு போய் ரெஸ்ட் எடு பா” என்றார் ஸ்வர்ண.


“ இல்ல மாம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து சாப்பிடிரேன் பிளீஸ்…. டாட் கொஞ்ச நேரம் ஆபீஸ் கவனிசுகொங்க பிளீஸ் நா ஒரு 11 ku ஆபீஸ் வரேன். “ என்று விட்டுச் சென்றான்.


“ஓகே அமர் நா பாத்துக்கிறேன்.. நீ ரெஸ்ட் எடுத்துட்டு வா … ஸ்வர்ண டிஃபன் போடு நா ஆபீஸ் கிளம்புறேன்” என்று சோஃபாவில் இருந்து எழுந்தார் சரபேஷ் வத்சல்யா


இந்தியாவின் சிறந்த பெரிய தொழில் அதிபர்களில் ஒருவர்…..

வீட்டில் அவர் மனைவியின் மீதும் மக்களின் மீதும் பாசம் கொண்டவர்.. தொழிலில் புலி எதிரிகளை தடயமும் சத்தமும் இல்லாமல் வீழ்த்துபவர்.. அமரின் குணங்கள் அனைத்து தன் தந்தையை போலே… ஒன்றைத் தவிர…கோபம், அவனின் வாழ்க்கை அனுபவத்தில் வந்தது.


ஸ்வர்ண மற்றும் நிஹாரிகா மிகவும் அமைதியான சாந்தமான பெண்கள். அதனால் தான் அமர் தன் தாய் தங்கையை தவிர மற்ற பெண்களிடம் பேச விருப்பமும் ஆசையும் கிடையாது. உணவு உண்டு விட்டு சரபேஷ் அலுவலகத்திற்கும் , நிஹாரிகா கல்லூரிக்கும் சென்று விட்டனர்..



ஸ்வர்ண கோவிலுக்கு சென்று வருவதாக தங்கள் வீட்டில் வேலை செய்யும் கமலம் என்ற சமையல்க்காரியிடம் சொல்லிவிட்டு சென்றார்..


தனது அறையில் மிதமான ஏ சி குளிரில் உறங்கி கொண்டு இருந்தான் அமர்.


************************************



வத்சால்ய வில்லாவின் எதிர்ப்புறம் உள்ள வர்நிகா அபார்ட்மெண்டில் தங்கள் இன்னோவா வில் வந்து இருங்கினர் இந்திரன் , சுந்தரத்தின் குடும்பமும்.


“ வாவ் அபார்ட்மெண்ட் சூப்பரா இருக்கு மாமா. எங்க பிளாட் இங்க தான் இருக்கா?? “ என்று கேட்டாள் ஈஷூ


“ ஆமாம் மா பாப்பா டி பிளாக் தான் உங்க பிளாட் எங்களோடது சி பிளாக் 3rd floor C நம்பர். உங்களது 2nd floor B நம்பர் “ என்றார் இந்திரன்.


“ வாங்க எங்க வீட்டுக்கு போலாம். நாளைக்குள்ள வீடு ரெடி ஆகிடும் அப்பறம் திங்ஸ் வந்துததும் வீட்ல செட்டில் ஆகிக்கிங்க “ என்று அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றார்.


“ வாங்க சுந்தரம் அண்ணா வாங்க அண்ணி.. வா பாப்பா தம்பி எல்லாரும் நல்லைருகீங்களா…? எத்தன வருஷம் ஆச்சு உங்களை எல்லாம் பாத்து. ஈஷூ பாப்பா நல்ல வலந்துட்ட “ என்றார் ரோஜா இந்திரனின் மனைவி.


“ நாங்க நல்லா இருக்கோம் அண்ணி நிஷா எங்க எப்டி இருக்கா மெடிசின் படிப்பு எப்டி போகுது அவளுக்கு “ என்று கேட்டார் வைஷ்ணவி


“ நல்லா போகுது இப்ப தான் காலேஜ் கிளம்பினா… நீங்க ஃப்ரெஷ் ஆகி சாப்ட வாங்க டிஃபன் ரெடி “ என்று அவர்களை ரூமிற்கு அனுப்பி வைத்தார்…


குளித்து முடித்து விட்டு டிஃபன் சாப்ட வந்தனர். மஞ்சள் நிற டி- ஷர்ட் , லாங் ஸ்கர்டில் பொம்மை போல இருந்தாள் ஈஷாணி.


“ அழகா இருக்க பாப்பா “ என்று திருஷ்டி கழித்தார் ரோஜா.


“ தாங்க்ஸ் அத்தை நாங்க சாப்ட்டு அபார்ட்மெண்ட் சுத்தி பார்க்கிறோம்“ என்று கேட்டாள் ஈஷாணி.


“ இல்லாம ஈவ்னிங் நிஷா வந்ததும் போய் பாத்துட்டு வாங்க இப்ப ரெஸ்ட் எடுங்க “ என்றார் இந்திரன்.


“ சரி மாமா “ என்றாள் ஈஷூ


“ ரோஜா நானும் சுந்தரமும் போய் அந்த வீட்ல வேலைப் பாக்ரதுகு ஆட்களை ரெடி பண்ணிட்டு வரோம்…” என்று கூறி சென்று விட்டனர் சுந்தரமும், இந்திரனும்….


“ அப்பறம் ஈஷூ மதுரை ல எப்டி பொழுது போச்சு உனக்கு.. சரண் ஸ்கூல் போடுவான்ல அப்ரம் என்ன பண்ணுவ “ என்று கேட்டார் ரோஜா.



அதற்கு வைஷ்ணவி “ நீங்க வேற அண்ணி எப்ப டா காலேஜ் போவானு இருக்கு எனக்கு படுத்தல் தாங்கல. காலைல நாய் நரினு சுத்துவா.. ஈவ்னிங் சரண், அவன் பிரெண்ட்ஸ் அப்டின்னு எல்லா வாண்டுகள் கூட சுத்தி ஏதாவது வம்பா இழுத்துட்டு வருவா… இதே வேலை “ என்று பதிலடித்தார்.


“ ஹலோ வைஸ் பேபி வொய் திஸ் கொலவெறி… கவலைய விடுங்க இங்கையும் அதே வேலை பாத்த்ரன் ஓகே வா “ என்று கூறி கண் சிமிட்டி சிரித்தாள்.


“ போதும் டி இங்காயவது வால சுருட்டிடு இரு இல்ல ஒட்ட நருக்கிருவென் ராஸ்கல் “ என்று அவளை மிரட்டினார் வைஷ்ணவி


“ ஹி ஹி ஹி…… சும்மா சரி நா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன். அக்கா வந்தா என்ன எழுப்புங்க டேய்.. வாடா சரண் “ என்று அவனையும் கூட்டி சென்று விட்டாள் ஈஷூ.


“ அப்பறம் அக்கா கேக்கறேன் தப்ப நினைக்காதீங்க…. அமிர்ஷ் பேசரனா…???? அவன் ஒய்ஃப் ஷில்பா பேசராள..?” என்று கேட்டார் வைஷ்ணவி


“ எங்கக்க அவனும் பேசறது எல்லா இவரும் என்ன பேச விடறது இல்ல. ஒருப் பையான போய்டான் பேசாம இருக்க கஷ்டமா இருக்கு” என்று அழுதார் ரோஜா.


“ அழாதீங்க அண்ணி எல்லா சீக்கரம் சரியாகிடும். அவனே வந்து உங்கள்ட பேசுவான் உங்களை பாக்க வருவான் பாருங்க “ என்று அவருக்கு தைரியம் சொன்னார் வைஷ்ணவி


சிறிது நேரம பேசிவிட்டு வைஷ்ணவி் மற்றும் ரோஜா மதிய உணவை தயார் செய்தனர் எல்லோரும் தூங்கி எழுந்தவுடன் மதியம் உணவை முடித்துவிட்டு மறுபடியும் உறங்க சென்றனர்…

மாலை 5 மணிக்கு நிஷா வருவதற்குள் ஈஷூ மற்றும் சரண் ரெடி அகிருந்தனர்…


“வாங்க அத்தை மாமா நல்லாய்ருகீங்களா ..? ஹே…. ஈஷூ பேபி எப்டி இருக்க ஆளே மாறிட்ட.. செம்ம அழகா ஆகிட்ட வாங்க ” என்று நிஷா ஈஷூவை கட்டிக் கொண்டாள்.


“ நீங்களும் சூப்பரா ஆகிடீங்க அக்கா “ என்று அவள் கன்னத்தில் முத்திட்டாள் ஈஷூ.


“ சரி நா ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.. சரண் குட்டி அக்கா வந்து உண்ட பேசறேன் டா “ என்று தன் அறைக்கு சென்று விட்டாள் நிஷா.


“ நீ எல்லாம் எலியன் உணத பேசலனு அக்கா ஃபீல் பண்ணிட்டு போரங்களே ச்ச…ச்ச “ என்று சரணிடம் வம்பு இழுத்தாள் ஈஷூ.


“ அம்மா பாருமா அக்காவ “ என்று அன்னையிடம் குற்றம் கூறினான்


“ விடு டா தம்பி நம்ம அப்டியா பலகிருக்கோம்..” அவனை சமாதானம் செய்தாள்


“ அந்த பயம் இருக்கணும் உனக்கு இல்ல அப்பாட்ட சொல்லிடுவேன் “ என்று கூறி விட்டு ஓடி விட்டான் சரண்.


“ அடேய்…. கைல மாட்டுவல அப்பா இருக்கு உனக்கு …. அம்மா நா கீழ பார்க் போறேன் நிஷக்கா வ அங்க வரசொல்லிடுங்க “ என்று பல்லைக் கடித்துக்கொண்டு வெளியில் சென்று விட்டாள்


கீழே பார்க் சென்று அமர்ந்த ஈஷூவின் மீது ஒரு பந்து வந்து விழுந்தது. அதை எடுக்க ஒரு வாண்டு ஓடி வந்தது..


“ ஹலோ அக்கா என் பால குடு “ என்று கேட்டது அந்த வாண்டு.


“ பால் தரணுன்ன என்ன உங்க குரூப் ல சேர்த்துப்பீங்களா “ என்று அவளிடம் டீல் பேசினாள் நம்ம பெரிய மனுஷி…


“ வெயிட் நா குரூப் ல கேட்டுட்டு டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன் “ என்று ஓடி விட்டாள்.


“ பயபுள்ள இந்த வயசுலயே இவளோ வெவரமா இருக்கு . நாமலம் இவா வயசுல அம்மா கூட சுத்திட்டு இருந்தோம் எதுவா இரு்தாலும் அலர்ட் அஹ் இருக்கணும் ஈஷூ “ என்று தனக்குள் கூறி கொண்டாள்.


இந்த வாண்டுகளால் தான் நம்ம வாழ்க்கை மாற போகுத்ணு தெரிஞ்சு இருந்தா பிரெண்ட்ஸ் ஆக கேட்டு இருக்க மாட்டாள்….



நன்றி

விஷ்வா ஸ்வராஹ்
 

Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்களில் காதல் மொழிகள்

அத்தியாயம் 3

பார்கில் யோசித்து கொண்டு இருந்த போது சரண் மற்றும் நிஷா அவளை தேடி வந்தனர்..

“ ஹே ஈஷூ என்ன யோசனை பலமா இருக்கு. எந்த கோட்டைய புடிக்கப் போற “ என்று அவளின் தோளில் தட்டினாள் நிஷா.

“ நீங்க வேற க்கா இங்க உள்ள வாண்டுகள்ட எப்டி ப்ரெண்ட் ஆகலாம் அப்டின்னு யோசிக்கிறேன் “ என்றாள் ஈஷூ

“ அடிப்பாவி வேண்டாம் டி அத்தை இப்ப தான் எண்ட உன் கதையா சொன்னாங்க இங்கேயும் ஆரம்பிச்ராத அப்பறம் அபார்ட்மென்ட் அலரிடும் டி” என்று எச்சரித்தாள் நிஷா.

“ நோ……. அக்கா வம்பு பண்ணாம இந்த ஈஷூ வால இருக்க முடியாது முடியாது “ என்று கத்தினாள் ஈஷூ

“ ஹை அப்ப நீ எங்கள மாதிரியா? “ என்று கோரசாக குரல்கள் வந்தது.

“ எவ அவ “ என்று திரும்பினாள் ஈஷூ

“ அய்யய்யோ “ தலையில் அடித்துக் கொண்டாள் நிஷா.

ஏனெனில் இந்த நால்வர் படை பற்றி கேள்வி பட்டு இருக்கிறாள். அபார்ட்மென்ட் மாடியில் இருந்து secretary தலையில் பந்து எரிவது , வாழைப்பழம் தோல் அவர் தலையில் போடுவது , வம்பு இழுப்பது , கிரிக்கெட் விளையாடி பல வீட்டு கண்ணாடி ஜன்னல்கள் உடைப்பது என்று வம்புகள் பலபல…..

“ ஈஷூ வேண்டாம் டி உங்க கூட்டனி சரி இல்ல அப்பறம் ஏதாவது வம்பு இழுத்துட்டு வந்தா அத்தை மாமா திட்ட போறாங்க “ என்று அவள் காதில் ஓதினாள் நிஷா.

“ அக்கா நோ ஃபீலிங் I will see everything . I இருக்கா y feel க்கா “ என்று கூறினாள் ஈஷூ.

“ நீங்க இருப்பீங்க டி இனி இந்த அபார்ட்மென்ட் ல எவனும் இருக்க முடியாது போலவே அதான் பயாம இருக்கு “ என்று பெருமூச்சு விட்டாள்
நிஷா.

“ நிஷா ஆன்டி என் ஃபீல் பண்றீங்க நாங்க இவங்கள பத்திரமா பாத்துபோம் நீங்க வீட்டுக்கு போய்ட்டு வாங்க “ என்றான் அனீஷ். அந்த கூட்டத்தின் தலைவன்.

“ அடிங்க… நா ஆண்டி இவ அக்காவா வ டா தடியா “ என்று அவனை மிரட்டினால் நிஷா

அதற்கெல்லாம் அஞ்சினால் அவன் தலைவனா ????

“ ஹாய் நா ஈஷூ ஈஷாணி இவன் என் தம்பி சரண் 4th கிளாஸ் இது நிஷாக்கா நாங்க சி பிளாக் 2nd floor B நம்பர் பிளாட்டுக்கு புதுசா வந்திருகிராம் “ என்று அவர்களிடம் தன் சுயசரிதையை கூறிக் கொண்டு இருந்தாள்

“ ஹாய் நான் அனீஷ் இந்த டீமொட ஹெட் , இது சுதீப், நிகிதா, நரேன் என் பிரெண்ட்ஸ் “ என்று கூறி intro சொல்றான் இந்த வாண்டு.

“ பெரிய வெங்காயம் டீம் டேய் தடியா உங்க அம்மா அப்பா ட சொல்லிக்குடுக்கவா ஓடிரு ஒழுங்கா “ என்று மிரட்டனால் நிஷா

“ அக்கா சின்ன பையன் ஏன் இப்டி மிரட்டுறீங்க “ என்றாள் ஈஷூ.

“ இதுவா சின்ன பையன் நீ வேற லாஸ்ட் டைம் என் ஸ்கூட்டில bubblegum ஒட்டி வச்சு என் ஸ்கூட்டி ஹேன்ட்பர் ஃபுல்லா சூயிங் கம் கை வைக்க முடியல க்ளீன் பண்ணுறதுக்குள்ள கடுப்பகிட்டேன் “ என்றாள் நிஷா..

“ ஹாஹா….. பசங்களா செம்ம பிளான் எத மாதிரி நிறைய இருந்தா சொல்லி தாங்க எனக்கு “ என்று அவர்களிடம் ஹை ஃபை தட்டினாள் ஈஷூ.

“ அடியேய்…. இரு அத்தை டா உன்ன போட்டு குடுக்கிரேன்.” என்று அவளை மிரட்டினால் நிஷா.

“ ஓகே குட்டீஸ் அக்கா இங்க தான் இருப்பேன் நம்ம நாளைக்கு மீட் பண்ணலாம். டெய்லி லூட்டி அடிக்கலாம் பை…. “ என்று வீட்டை நோக்கி சென்றனர் மூவரும்..

**************************************

பதினொரு மணிக்கு ஆபீஸ் மீட்டிங் சென்ற அமர் தன் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு இரவு 10 மணிக்கு வந்தான்..

“ அமர் இப்படி சாப்பிடாம வேலை மட்டும் பாக்ர சாப்பிடாம உடம்ப கெடுத்துக் காத பா காலைல சாப்டது மதியம் சாப்டல இப்ப மணிய பாரு 10 “ என்று வருத்தம் கொண்டார் ஸ்வர்ண.

“ மாம் நாளைக்கு சன்டே வீட்ல தான் இருக்க போறேன். ஈவ்னிங் தான் பிரெண்ட்ஸ் மீட் பண்ண போறோம். ஓகே ஒழுங்கா சாப்டிரேன் இனி. செல்ல மாம் குட் நைட் “ என்று மாடி ஏறி தன் அறைக்கு சென்று விட்டான்.

“ கடவுளே…. என் குடும்பம் நல்லா இருக்கணும் “ என்று கடவுளிடம் வேண்டி படுக்கச் சென்றார் ஸ்வர்ண.

இந்திரன் வீட்டில்

இரவு உணவு முடித்து விட்டு நிஷா அறையில் ஈஷூ , சரண் மட்டும் நிஷா உறங்கிக் கொண்டிருந்தனர்


***************************************

ஞாயிறு காலை

வத்சால்ய வில்லாவில்

“ அம்மா டிஃபன் செம்ம “ என்று நாலாவது தோசையை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தாள் நிஹாரிகா

“குட் மார்னிங் மா…மார்னிங் பா , மார்னிங் நிகா ” என்று தன் இடத்தில் உணவு உன்ன அமர்ந்தான் அமர்.

“மார்னிங் ப்ரோ. இன்னிக்கு பிரெண்ட்ஸ் மீட்டிங் எங்க…?” என்று வினவினாள் நிஹா.

“ சேம் பிளேஸ் பீனிக்ஸ் மால்… ஏன்?” என்று அவளிடம் கேட்டான் அமர்

“ இல்ல சும்மா கேட்டேன்… ஓகே என்ஜாய் நானும் நிஷா வீட்டுக்கு போறேன்” என்றாள் நிஹா.

“ஓகே ஓகே….. என்ஜாய்……பை மோம்” என்று விட்டு தன் டுக்காட்டி வண்டியை நோக்கிச் சென்றான்.

அமர வேலை அல்லாத நேரத்தில் தன் நண்பர்களை காண தன் டுக்காட்டியில் செல்வான்….

அவன் சென்ற பின் “அம்மா நானும் நிஷா வீட்டுக்குப் போய்ட்டு வரேன்… ஈவ்னிங் வந்த்ருறேன் அப்படி லேட் ஆச்சுன்னா போன் பண்றேன்…. பை” என்று கிளம்பி விட்டாள்…

“ஸ்வர்ண நம்ம எங்கயாவது போய்ட்டு வருவோமா…?? ஜாலியா” என்று மனைவியிடம் ரகசியமாக கேட்டார் சரபேஷ்

“ உங்களுக்கு வேற வேலையே இல்லையா…?” என்று அவரிடம் நோடித்து கொண்டு கிட்சென்குள் சென்றாள்.


“இப்ப என்ன சொல்லிட்ன்னு மூஞ்ச திருப்பிட்டு போறா?” என்றபடி தன் மனைவியை காணச் சென்றார்.

தன் வண்டியை எடுத்து வீட்டைவிட்டு வெளியே வந்த அமரின் மீது ஒரு பந்து வந்து ஹெல்மெட்டை இடித்தது.
அதில் சற்று தடுமாறிய அமர் பின் சுதாரித்து வண்டியை நிறுத்து விட்டு பந்தை எடுத்துக் கொண்டு சுற்றி கண்களை ஒரு பார்வை ஓட்டினான்.

வர்நிகா அபார்ட்மெண்டில் மதில் சுவரின் ஒரு புறம் இருந்து சிறு கூட்டம் தங்கள் தலையை மட்டும் நீட்டி வெளியே எட்டிப் பார்த்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது அங்கு வந்த வாட்ச்மான்
“ ஏய் பசங்களா அங்கன என்ன பண்ணிட்டு இருக்கீங்க…” என்று கத்திக் கொண்டே அவர்களை நோக்கி வந்தார்.

“ அய்யய்யோ…. அந்த டபரா மண்டையன் வந்தட்டான்
வாங்க ஓடிறலாம்…” என்று தன் நண்பர்களிடம் கூறினாள் நிகிதா.

“ ஏய் அதுகெல்லாம் அசரளமா நாம…. எதுக்கும் பயப்படாதீங்க…” என்று கூறி விட்டு அவரை சமாளிக்க சென்றான் அனீஷ்..

“ டேய் ஏதாவது ஐடியா பண்ணி போய் பால வாங்கிட்டு வாங்கடா…?” அவர்களிடம் நச்சரிதாள் நிகிதா.

“ ஒய்….என்ன எங்கள அவன்கிட்ட மாட்டி விட பாக்கிறிய… ஒழுங்கா நீயே போய் பால வாங்கிட்டு வா போ…” அவளை மிரட்டினான் சுதீப்.

“டேய் சண்ட போடாம நா சொல்ற ஐடியாவ ஃபாலோ பண்ணுங்க… வாங்க என்கிட்ட” என்று அவர்களின் காதில் தன் திட்டத்தை ஓதினால் ஈஷூ

“டன் இப்ப எப்டி அசத்ரோம்னு பாரு ஈஷூ கா” என்று அமரை நோக்கி ஓடினர் இந்த நால்வரும்.

“ ஈஷூ கா அவங்கள எங்க.?” என்று அங்கு வந்தான் அனீஷ்.

“ Just wait and watch” என்று அனிஷை அங்கு நின்று பார்க்க சொன்னாள் ஈஷூ.

“ஐயோ அவன்ட்ட போய் என்ன பேச போறாங்க… வேண்டாம் ஈஷூ கா அவன் ரொம்ப டென்ஷன் பார்டின்னு எங்க அப்பா சொள்ளிருகாங்க.. அவன்ட ஏன் இவங்கள அனுப்பின” என்று அவளிடம் கத்தினான் அனீஷ்.

“இருடா குண்டா என்ன நடக்குதுனு முதல பாரு” என்று அவன் மண்டையில் ஒரு தட்டு தட்டினாள் ஈஷூ.

அங்கு அமரிடம் சென்ற நிகிதா “ அங்கிள் என் பால குடுங்க” என்று அவன் முன் இடுப்பில் கை வைத்து நின்றாள் நிகிதா.

“பால யாரு அடிச்சது”அவளிடம் எதிர் கேள்வி கேட்டான் அமர்.

அவள் திரு திரு என முழித்து கொண்டு இருந்த நேரம். அவர்களை நோக்கி வந்தான் அடுத்த வாண்டு

“அங்கிள்….. அது அவ பால் இல்ல அது என்னோடது எண்ட தாங்க”என்று அவனிடம் கை நீட்டி கேட்டான் சுதீப்.

“அவன் பொய் சொல்றான் டேய் ஏண்டா பொய் சொல்ற அது என் பால்” என்று அவனிடம் சண்டைக்கு நின்றாள்.

இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான் அமர். அப்பொழுது அங்கு ஓடி வந்த அடுத்த வாண்டு ( வேற யாரு நம்ம நரேன் தான்)
“அங்கிள் அவங்க ரெண்டு பேருமே ரொம்ப பொய் சொல்றாங்க….. அது என்னோட பால் தான் குடுங்க”என்று வந்து நின்றான்.

மூவரையும் பார்த்த அமர் தன் வண்டி முன் பையில் பாலை வைத்து விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய சென்ற சமையம்…. அவன் முன் இடுப்பில் கை வைத்து கொண்டு தன் வானர படையுடன் நின்று கொண்டு இருந்தாள் ஈஷூ.

அவன் செயலை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்ததால் அவள் வேகமாக அவன் முன் ஓடி வந்து நின்றாள். கீழே அந்த நண்டுகளை பார்த்த அமர் நிமிர்ந்து பார்ப்பதற்குள் அவன் வண்டி முன் வந்து அவன் பாலை வைத்த இடத்தில் இருந்து உருவிக் கொண்டு ஓடி விட்டாள் ஈஷூ அவள் பின் அந்த ஐவரும்.

அவர்களின் செய்யலை அமர் யோசிக்கும் முன் அவர்கள் ஓடி விட்டனர்.. அதில் கோபம் கொண்ட அமர் அந்த கோபத்தை தன் வண்டியில் கட்டினான்..

“சை…. இம்சைங்க என்னைக்காவது கைல மாட்டுங்களா அப்ப இருக்கு… “ என்று மனதிற்குள் பொருமி கொண்டு இருந்தான்.

அங்கு வேகமாக ஓடி வந்த ஆறு பேரும் ஹப்பா தப்பிச்சோம் என்று அவனை ஏமாத்தி பாலை எடுத்ததை நினைத்து சிரித்தனர்……

ஈஷூ மட்டும் “ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே” என்று பேரு மூச்சு விட்டாள்.

அப்பொழுது ஈஷூ நினைத்து இருக்க மாட்டாள் அவனோட தினமும் நாம் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க போகிறோம் என்று.
 

Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மன்னிக்கவும்.... சாரி friends.., கொஞ்சம் வொர்க் பிஸியா அதான் update Thara முடியல... இனி கொஞ்சம் சீக்கரம் தர டிரை பண்றேன்.... தப்பா நினைக்காதீங்க.....
 

Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 4


“ஹே….. ஈ….. கலக்கிட்ட நீ …. எப்படி ஐடியா பண்ணி என் பால வாங்கிக் கொடுத்துட்ட” என்று அவளிடம் நன்றி கோரினான் நரேன்.


“அடேய்…...நானே எப்படியோ சமாளிசிட்டென்…. நீ பந்துலயே குறியா இருக்க… இன்னும்…. “ என்று நரேனின் மண்டையில் கொட்டினாள் ஈஷூ.


“ சரி நா வீட்டுக்கு போய்ட்டு வரேன்… பசிக்குது ரொம்ப” என்று சென்று விட்டனர் நம் ஐவர் குழு.


அப்போ நம்மாலும் வீட்டுக்குப் போய் ஏதாவது ஹெல்ப் பண்ண டிரை பண்ணுவோம்… என்று கிளம்பினாள் நம் நாயகி.


“அம்மா நா வந்துட்டேன் ………. என்ன ஒரு பயபுள்ளையும் காணு……. வைஷூ…… வைஷூ… டார்லிங்….. என்று வீட்டுக்குள் நுழைந்து சுற்றி சுற்றி பார்த்து விட்டு சரி நம்ம வேலைய பாப்போம் என்று கிட்சென் சென்று அங்குள்ள பாத்திரங்களை உருட்டினாள் ஈஷூ.


“ ஹேய் நிஷு ஏதோ சத்தம் கேட்டது ல…” என்று கேட்டாள் நிஹா


“ எங்கடி எனக்கு கேக்கல…. இரு.. ஆமடி…. ஓஹோ அந்த வாலு வந்துட்டா… வா போய் பார்ப்போம்….” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.


அங்கு சென்று பார்த்த போது நிஹாரிகா முழித்து கொண்டு இருக்க நிஷாவோ அடிப்பாவி…. என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்… ஏனெனில் அங்கு நம் ஈஷூ தட்டில் அனைத்து உணவையும் போட்டுக் கொண்டு உண்டு கொண்டு இருந்தாள்…..


“அடியே எங்களுக்கு கொஞ்சம் மிச்சம் வையு…… எல்லாத்தையும் மொக்கிட்டு இருக்கே….” என்று கத்தினாள் நிஷா..


“ எவ… அவ….” என்ற ரியக்சன் கொடுத்துக் கொண்டே திரும்பி நிஷாவை பார்த்த ஈஷூ “ ஓய் அக்கா நீ அவுட்டிங் போகல…… இங்க என்ன பண்ற போ போ போய் ஒழுங்கா படிச்சு வைத்தியம் பன்ற வழிய பாரு…..” என்று விட்டு தட்டுக்குள் தலையை விட்டாள்.


“ நீ திங்கிரதுக்கு என்ன விரற்றியா…. எல்லாரும் அங்க அரேஞ்ச் பன்ற வேல இருக்காங்க…. நீ ஏன் அங்க போகல அந்த வாலு கூட்டத்தோடு சுத்திட்டு வரியா….?” என்று முறைத்தாள் நிஷா..


“ இல்லவே இல்லை க்கா நான் அங்க இருந்து தான் வரேன் ஒரே டயர்ட் ஆ இருக்கு அதான் நான் சாப்ட வந்துட்டேன். சரி சரி நீங்க சாப்டீங்களா…? ஹே யார் இந்த ப்யூடி உங்க ப்ரெண்டா… செம்ம அழகா இருக்காங்க…. ஹாய் நா ஈஷாணி….. நீங்க” என்று நிஹாவை பார்த்து கேட்டாள் ஈஷூ.



அவளை பார்த்து சிரத்தபடியே “ ஹாய் நான் நிஹாரிகா நிஷாவோட ப்ரெண்ட்.. நீ… ?” என்று யோசித்தாள்.


“ இந்தக் கொரங்கு எங்க ஃபேமிலி ப்ரெண்ட்….. சரியான….அறுந்த வாலு பாவம்…..வைஷு அத்தை… சுந்தரம் மாமா இவள சமாளிக்க முடியாமல் கஷ்டப் படுறாங்க…” என்று அவளின் சரிதையை சொன்னாள் நிஷா.


“ நிஷா no violence… பேச்சு பேச்சா இருக்கணும். ஆமாமா நீங்க வெளில போகலையா இன்னிக்கு சன்டே தான….??” என்று அவளிடம் கேட்க


“ஆமாம் டி போகனும் இவ என் ப்ரெண்ட் அதுக்குதான் வந்திருகிரா…. இப்ப தான் கிளம்பலாம் நெனைச்சேன் நீ வந்துட்ட சரி வரியா எங்களோட..? நிஹா அவ வரர்து உனக்கு ஒரு பிராப்ளம் இல்லையே…?” என்று கேட்டாள் நிஷா.


“என்னடி நீ அவ என் சிஸ்டர் மாதிரி தான…. வரட்டும்…” என்றாள் நிஹாரிகா.


“நீ வேற இப்படியெல்லாம் சொல்லிராத அப்பறம் நீ அவகிட்ட சிக்கிட்டனு அர்த்தம்… புரியாம சிஸ்டர்னு வாக்கு குடுத்துட்ட” என்று தன் தலையில் கைவைத்தால் நிஷா.


“ ஹய்யா ஜாலி ஜாலி…… நா இப்பவே போய் ரெடி ஆகிட்டு வரேன். வெயிட் பண்ணுங்க “ என்று சிட்டாய் பறந்து ஓடினாள் ஈஷூ


“ ஹேய் பார்த்து ஓடுடி விழுந்திர போற…. “ கத்தினாள் நிஷா.


சிறிது நேரத்தில்


“ நா ரெடி…….. வாங்க போகலாம் எங்க போறோம்….??????” என்று வந்தாள் ஈஷூ அழகிய ஒயிட் டாப்ஸ் ரெட் ஸ்கர்டில்


தன் நீல முடியில் பிரெஞ்ச் பின்னல் போட்டுக் கொண்டு ஸ்கர்ட்க்கு ஏற்ப ரெட் சில்க் த்ரட் கம்மல் மற்றும் செயினில் அழகாய் மிலிர்ந்தாள் ஈஷூ.


“ செம்ம கியூட்டா இருக்க ஈஷூ..” என்று அவள் கன்னம் தட்டினாள் நிஹா.


“ தாங்க்ஸ்கா நீங்க என்னவிட செமயா இருகீங்க” என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் ஈஷூ.


ஈஷூவின் பழக்கம் இதுவே அவளுக்கு ஒருவரை பார்த்ததும் பிடித்துவிட்டால் அவர்களை தன் அன்புத் தொல்லையால் படுத்தி எடுத்து விடுவாள். இதுவே அவள் குணம். இப்பொழுது அவளுக்கு நிஹாவின் அமைதி ரொம்ப பிடித்து விட்டது.


“ சரி நா அம்மாட்ட சொல்லிட்டு வரேன்……” என்று ஓடி விட்டாள்.


அவள் சென்ற பின்னர் நிஷா நிஹாரிகாவிடம் “ எங்க ஃபேமிலில ஒருத்தி மாதிரி…. சரியான சுட்டி…அம்மா அப்பாக்கு இவனா ரொம்ப இஷ்டம்…. ஆன செம்ம ஸ்மார்ட் பொண்ணு…”


“ஆளு செம்ம அழகா இருக்கா… நம்ம மொழில சொல்லனும்னா இவள கட்டிக்க போறவன்…. ரொம்ப பாவமோனு தோணுது… ஆனா இவ இருக்கிற வீடு செம்ம கல கலனு இருக்கும்” என்று தன் அண்ணனுக்காக இன்றே வருத்தப்பட்டால் நிஹா…..


அவள் வருவதற்குள் நிஷாவும் ரெடியாகி வர பின் மூவரும் கிளம்பி சென்றனர்


ஃபீனிக்ஸ் மால்….


“ சொன்ன கேட்டியா ஃபோரம் மால் போகலாம்னு எவளோ ரஷ் பாரு…” என்று ஈஷூவை கடிந்தாள் நிஷா.


“இந்த மால் தான சென்னையிலேயே பெரிய மால்… அதான் இங்க கூட்டிட்டு வர சொன்னேன்… நெக்ஸ்ட் டைம் அங்க கூட்டு போங்க ஓகேவா நிஷாக்கா …” என்று அவளை சிறிதும் கண்டுக்கொல்லாமல் பதில் கூறினாள் ஈஷூ.


“ சொல்லுவடி நெக்ஸ்ட் டைம் உன்ன கழட்டி விட்டு வரேன் பாரு..” என்று நோடித்துக் கொண்டாள் நிஷா


“ ஓகே…. போதும் நிப்பாட்டுங்க உங்க ரெண்டு பேரோட சண்டைய” என்று காதில் கைவைத்து கத்திய நிஹாரிகா… “அப்பா… போலாமா…. வாங்க” என்று இருவரையும் பிரிக்கும் பொருட்டு இருவருக்கும் இடையில் வந்து கைப்பற்றி இழுத்து சென்றாள்…


“நிஷூ landmark போகலாம் செல ஐட்டம் வாங்கனு” என்று அவளிடம் பேசிக்கொண்டே வந்த நிகா…. “ ஹே வாண்டு உனக்கு என்ன வேணும்…?” என்று கேட்டாள்..


“ யார பாத்து வாண்டு சொல்றீங்க….. நா பெரிய பொண்ணு… என்ன கொஞ்சமே கொஞ்சம் சேட்டை பண்ணுவேன் இதுகெல்லம் இப்படி சொல்லலாமா??? டூ பேட்…” என்றாள் ஈஷூ


“ அதானே நீ அவள வாண்டுனு கூப்படாம…. வாலுனு கூப்பிட்டு இருக்கணும்… என்னம்மா ஈஷூ அப்டி தானே… “ என்று கேட்டாள் நிஷா.


“ இதவிட நிஷா மொங்கியின் சிஸ்டர் அது ஓகே தான” என்று கேட்டாள் ஈஷூ


அடிங்க…. உன்ன என்று அவளை துரத்த இவளும் அவளிடம் சிக்காமல் நேராக அங்கு கூட்டத்தில் புகுந்து ஓடினாள்…


அதில் அவள் ஒருவன் மீது இடிக்க கோவத்தில் அவன் நிஷா தான் இடித்தது என்று எண்ணிக் கொண்டு அவளை கன்னத்தில் அறைந்தான்…


ஒரு நிமிடம் சுற்றி இருப்பவர்கள் வேடிக்கை பார்க்க…. நிஷாவின்

கண்களில் கண்ணீர் நிறைந்து காணப்பட்டது…


“ யோவ்… சென்ஸ் இல்ல…. இடிச்சது நா எதுக்கு எங்க அக்காவ அடிச்ச” என்று அவனிடம் சண்டைக்கு நின்றாள் ஈஷூ


“ ஈஷூ விடு… என்று விட்டு சாரி சார்… என் சிஸ்டர் தெரியாம இடிசிட்டா” என்று கூறிவிட்டு அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் நிஷா.


தான் செய்தது தவறு என்று உணர்ந்த கிரண் “ ஹலோ…. நானும் சாரிங்க… தெரியாம அடிச்சிட்டேன்” என்றான் .


சட்டென்று நின்ற நிஷா அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னே சென்றாள். சென்ற அவளின் கண்ணீர் நிறைந்த கண் கிரணின் மனதில் பதிந்து விட்டது.


ஆனால் ஈஷூ அவனிடம் வந்து “அடிக்கறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும் சார்…. முந்திரிக் கொட்டையா இருக்காதீங்க.” என்றாலே பார்க்கலாம்..


ஒரு நிமிடம் அவள் பேச்சில் முழித்தான் பின் “ சாரிங்க ….. மேடம்…. நீங்க உங்க வால சுருட்டி வச்சுக்கோங்க சரியா…” என்று விட்டு எக்சல்லேட்டர் ஏரி ஓடிவிட்டான்…


“ என்னது வாலா…..?ஓய்…வழாந்தவனே….. ஓடிரிய கைல்ல சிக்குவல்ல வாடி இருக்கு உனக்கு” என்று அவனிடம் கத்த முடியாமல் வாய்க்குள் பொருமினாள் ஈஷூ…


பின்னாள் இருவர் சிரிக்கும் சத்தம் கேட்டு திரும்பி பாராமல்…. அதான் கேட்டுட்டுடீங்களா…. போதும் சிரிச்சது வாங்க போகலாம் என்றால் நிஷா மற்றும் நிஹாரிகா பார்த்து…


கண்களில் கண்ணீருடன் வந்த நிஷாவிடம் என்ன நடந்தது என்று கேட்ட நிஹாரிகா “அவள எங்க…?” என்ற கேள்வியில்… நிஷா..

“ஐய்யோ அங்க சண்ட போடிராலோ…” என்று வேகமாக ஓடி வந்த இருவரும் கிரண் ஈஷூவை சொல்லி விட்டு ஓடுவது கண்ணில் பட சிரித்துக் கொண்டே வந்தனர்…


“ ஹா…. ஹாஹா… ரெண்டு நிமிஷத்துல நீ ஒரு அருந்த வாலுனு கண்டுபுடிசிட்டரே… அவரு…” என்று எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டாள் நிஷா..


“ ஹேய்… அவர் எங்க அண்ணவோட ப்ரெண்ட் தான் கிரண் அண்ணா …. இப்ப தான் பாத்தேன்….” என்றாள் நிஹாரிகா..


“ அப்டியா அப்போம் உங்க அண்ணாட்ட அவர் ஃப்ரெண்ட ஒழுங்கா இருக்க சொல்லி சொல்ல சொல்லுங்க…. என் கைல மாட்டினாரு… அவளோ தான்… “ என்று கூறினாள் ஈஷூ.


இன்னும் சற்று நேரத்தில் தானே அவனிடம் வம்பு வளர்த்து சண்டைக்கு போக போகிறோம் என்று நினைத்து இருக்கமாட்டா… இவ…..
 
Status
Not open for further replies.
Top