All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
HAI FRIENDS AND SISTERS
ஹாய் என் அன்பு சகோதர சகோதரிகளே மற்றும் தோழர் தோழிகளே
நான் பிரியங்கா தேவதாஸ் AKA பிரியதர்ஷினி தவசீலன் (எங்க வீட்ல எல்லாருக்கும் ரெண்டு பெயர் அதான்)
ஊர் அரியலுர் மாவட்டம் மேலணிக்குழி( கிராமமா நகரமா னு Describe panna mudiyatha oor)
அப்பா அம்மா க்கு ஒரே பொண்ணு என் செல்ல அண்ணா க்கு ஒரே பாசமலர்
BE BIO MEDICAL ., MBA HOSPITAL MANAGEMENT 2 years சென்னை வாசம் marketing medical equipment chennai inside outside ஒரு அலசு அலசியாச்சு இப்போ வீட்ல வெட்டி ஆபிஸர்
பிடித்தது நிறைய (அப்பா அம்மா அண்ணா அக்கா தம்பி தங்கச்சி கவிதை பாட்டு டான்ஸ் ஃப்ரண்ட்ஸ் ஸ்குல் காலேஜ் சமைக்றது சாப்பாடு .............................................................................)
பிடிக்காதது ENGLISH! EGLISH! ENGLISH!
அதுக்காக english தெரியாதா னு கேட்ராதிங்க தெரியும் ஆனா பிடிக்காது சின்ன வயசுலருந்து ஒரு வெறுப்பு அது மேல
என்னை பத்தி என்ன சொல்ல !
சரியான புத்தக புழு
எங்க ஊர் library la நான் படிக்காத புக்கே இல்ல
அறிவியல் வரலாறு னா ரொம்ப பிடிக்கும் (திஷி அக்கா நாவல் ல அதிகமா மருத்துவத்த சம்பந்த படுத்தி இருக்கும் ரொம்ப பிடிக்கும்)
ஃப்ஸ்ட் நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன் அருள்மொழிவர்மன் வானதி வல்லவரையன் குந்தவை ஆதித்ய கரிகாலன் நந்தினி sema adict
9th படிக்கும் போது மதுரை book expo la appa வாங்கி கொடுத்தாங்க அப்போ ஆரம்பிச்சது இன்னும் முடியல max 1000 time padichrupen
பிடிச்சிடுச்சுனா எப்பவும் அது என் கை லதான் இருக்கும்
ரமணி அம்மா நாவல் தான் lucky la padichen vera ethavathu padikalamnu அப்போ தான் ஸ்ரீ கா நாவல் வீழ்கிறேன் உனது விழிகளில் இணையுமோ இருதயம் simultaneous ah padichen apram intha site அறிமுகம்
முதல்ல மாயமோ மதுரமோ என் மதுரா ரிச்சி ஃபேன் ஆகிட்டேன் அப்டியே ஸ்ரீ அக்கா டை ஹார்ட் ஃபேன் ஆகிட்டேன்
நெக்ஸ்ட் தீபு கா ( PPM1 AND 2 ,USN , ESP, ANEA, ENV)மோகி கா( ENUN) திஷி கா(MM, NNK) ராஜி கா(ERN, UIUT, RGP, TTU,MM) இன்னும் நிறைய பேர் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க HEARTLY LOVELY THANKS TO THESE ALL AND MY LOVELY SRI KA UUUMMMMMMMMMAAAAAAAAAAAAAAAAA TO ALL
AND MORE OVER என்னோட காலேஜ் ஜுனியர இங்க ஒரு எழுத்தாளரா பார்க்க பெருமையா இருக்கு( SRI VANI (UTUN)) LOVE U SRI VANI உன் எழுத்து பணி தொடர என் வாழ்த்துக்கள் தோழி
ப்ரியா.. நன்றி மா..இப்போ புது ஸ்டோரியில் விண்வெளி.. சயின்ஸ்..etc etc.. படிச்சிட்டு சொல்லுங்கோ
 

தாமரை

தாமரை
நானு நானு நானும் சொல்லுவேன்...

ராஜலட்சுமி முருகேசன் ஆக பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவைதான்... எனக்கு பயணம் ஒத்துக்காது.. அடிக்கடி பார்க்காமலும் இருக்க முடியாது என்று... என் அப்பா பக்கத்திலே... ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கட்டிக்கொடுத்துட்டு.. மூன்று வருடங்களுக்கு முன்... அவர் வர முடியாத தூரத்திற்கு சென்றுவிட்டார்.

தற்போது..ராஜலட்சுமி அன்புச்செல்வன் ஆகி அடுத்த வாரம் வந்தால் பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிடும்..

என்னோட பத்தொன்பது வயதிலிருந்து நான் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன்... அனைவரையும் போல் rc mam நாவல்கள் தான் முதல்ல பழக்கம் ஆச்சு.. அதில் விழுந்து நீந்தி கரைத்து குடித்தேன்.. அப்பறம்.. கல்கியின் பொன்னியின் செல்வன் படித்ததும் அசந்துட்டேன்.. நாவல்கள் என்றால்... இப்படியும் கண் முன் காட்சியாய் விரிவது போன்றும் அந்த கதாபாத்திரங்கள் தன் கண் முன் நடமாடுவது போலவும் எழுதலாமான்னு.. வியந்து போய் அடிமையாகிட்டேன்... பின் ஒவ்வொரு எழுத்தாளார்களாக தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.. அப்பொழுது அறிமுகம் ஆனது தான் ஸ்ரீக்காவின் நாவல்கள்... ஸ்ரீக்காவுடைய நாவல் படித்ததும் எனக்கு நாவல் எழுவதில் இப்படியும் ஒவழிமுறை இருக்கா என்று வியந்தேன்.. மனித நுண்ணிய உணர்வுகளை போட்டு ஆலசி அதற்கு அழகான தீர்வு.. அசத்தலான ஹீரா... அவனையே சரணடைய செய்யும் ஹீரோயின் கூடவே... சமூக நலக் கருத்துக்கள்... அசர வைக்கும் எழுத்துக்கள் என்று அமர்களம் செய்திருப்பாங்க.. மேலும் அவர்களுடைய நாவல்களின் தேடலில் இந்த சைட்க்கு வந்தேன்... போன வாரத்தோட முதலாம் ஆண்டு நிறைவு பெற்றது..
இங்கே ஸ்ரீக்காவுன் நட்பு மட்டுமின்றி பல அருமையான தோழமைகள் கிடைத்தார்கள்...(AARK gang ???)

ஒரு வாசகர் தன் கமெண்ட்டில் எனக்கு கதை எழுத பிடிக்கும் என்று எழுதியிருந்தாங்க.. உடனே... ஸ்ரீக்கா கிட்ட இருந்து ரிப்ளை... கதை நேம் சொல்லுங்க த்ரேட் ஓப்பன் செய்து தரேன்.. என்று படித்ததும் அசந்து விளையாட்டாய்... "அட அப்போ நானும் கதை எழுதப் போரேன்" என்று ரிப்ளை செய்தேன். .. உடனே தளத்தோழிகள் லட்சுமி, சாந்தி, திஷியிடமிருந்து வாழ்த்தும்.. வந்தது...ஸ்ரீக்காவிடமிருந்து அழைப்பும் வந்தது... ஐ...மற்றவர்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்காங்க நாமேளே நம் மீது ஏன் நம்பிக்கை வைக்கக்கூடாது என்று எழுத ஆரம்பித்து விட்டேன்...

அனைவரும் கொடுத்த ஆதரவாலும்... உற்சாகத்தாலும்... இப்போ... நான்காவது மற்றும் ஐந்தாவது கதை எழுதிட்டு இருக்கேன்.... ☺☺☺☺
:love::love::love::smile1::smiley3:
 
ஹலோ தோழிகளே

நான் புனிதவதி லட்சுமணன் ஆக இருந்து புனிதவதி செல்வராஜ் ஆகி 5 வருடம்ஆச்சு. பிறந்தது திருப்பூர் இப்ப வாழ்றது பூனே. என்னோட college days la கதை படிக்க ஆரம்பித்தேன்.நான் எப்பவும் story complete ஆனா அப்பறம் தான்படிப்பேன். நான் siteku புதுசு இல்ல but comments போட்டது இல்ல. ஆனா இனி active இருக்கணும்நினைக்கிறேன். இங்க எனக்கு நிறைய friends கிடைக்கனும் அப்படிணு எல்லாரும் bless பண்ணுங்க பாக்கலாம்.
 

TAMIL SELVI

New member
என் பெயர் தமிழ் செல்வி. என் ஊர் திருநெல்வேலி. வசிப்பது கோவை. நான் இத்தளத்திற்கு புதிது. நான் ரொமன்ஸ் நாவல்களை விரும்பி படிப்பேன்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi நான் கவிதா என்னோடு பிறந்த ஊர் cuddalore இப்போ சிங்கப்பூர்ல இருக்கேன் என் கைல நாவல் இருந்துச்சுன்னா இந்த உலகத்தையே மறந்துடுவேன் , அந்த நாவல் முடியிறவரைக்கும் எனக்கு தூக்கமே வராது அப்படி ஒரு புத்தக பைத்தியம் . காலேஜ் படிக்கும் போது லெண்டிங் லைப்ரரில மெம்பெர் அப்போ ரமணி அம்மா நாவல் மட்டும்தான் தெரியும் அவங்க நோவேல்ஸ் எல்லாத்தியும் 20 தடவைக்கு மேல படிச்சுருப்பேன் . கல்யாணம் ஆச்சு படிக்கறது கொஞ்ச நாள் மூட்டைகட்டி வச்சேன் , போன வருஷம் தான் ஸ்ரீ மேடம் நாவல் அன்புடை நெஞ்சம் படிச்சேன் அவங்க way of writingla addict ஆகி மத்த நோவேல்ஸ் எல்லாத்தியும் தேடி தேடி படிச்சேன் அப்படியே அவங்க நாவல் familyla மெம்பெர் ஆகியாச்சு .
 
Top