Vithubala
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna da ellarayum ipdi vachu senjitasema siripu daடீசர் -2
ஆரத்தி தட்டை கையில் எடுத்து வந்து தனது அபிமான
பிரியத்துக்குறிய விஐபி ஆன தீபிகாவை வரவேற்க வாசலில் வந்து நின்று கொண்டுருக்கையில் சர் சர் சர் மூன்று விலை உயர்ந்த வெளிநாட்டு கார்கள் வந்து நின்றது அதில் இருந்து ஒரே நேரத்தில் மெழுகு சிலை போல மூன்று அழகிய இளம் பெண்கள் இறங்கி நடந்து அஞ்சலி அருகில் வந்து நின்றனர்.அஞ்சலி அருகே வந்து நின்றவர்களின் கமபீரத்தையும் அழகையும் கண்டு அஞ்சலி அப்படியே பிரமித்து ஸ்தம்பித்து நின்று விட்டால் அவளின் முன் வந்து நின்ற அழகிகளில் ஒருத்தி தனது கைகளை அவள் முகத்தருகே அசைத்தால் உடனே சுயநினைவிற்க்கு வந்த அஞ்சலி தீபிகாவிற்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி "வாங்க வாங்க" என வரவேற்றாள் அங்கே இருந்த மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்க அருகில் வர அவர்களிடமிருந்து
தீபிகா"சற்று பொருங்கள்" என மரியாதை நிமித்தமாக அறிவித்து விட்டு ஆரத்தி தட்டை கையில் வைத்திருந்த பெண்ணின் கையில் இருந்த தட்டை கையில் எடுத்து வந்து அந்த இரு பெண்களுக்கும் ஆரத்தி சுற்றி விட்டு அதை அந்த பெண்ணிடமே கொடுத்து விட்டு தனது இரு கைகளின் கட்டை விரலை வைத்து ஆரத்தி திலகமிட்டு அதே போல் ஒரே நேரத்தில் இரு மாலைகளை அணிவித்து இரு பெண்களின் கைகளை கோர்த்து கொண்டு "நாங்கள் மூவரும் சார்லஸ் ஏஞ்சல்ஸ் எங்கள தனி தனியாக பிரித்து பார்க்காதிங்க" என்றுரைத்து விட்டு கம்பீரமாக வீட்டின் உள்ளே ஓரே நேரத்தில் நுழைந்தார்கள் எங்கள் அட்ராசிட்டிஸ் சார்லஸ் ஏஞ்சல்ஸ்
சார்லஸ் ஏஞ்சல்ஸின் ஒருத்தியான ஹன்சுவிடம் "நீங்க தான jk Rowling ஓட ஹாரிபாட்டர் கதைக்கு அவங்களுக்கு நாவல் திருத்தம் செஞ்சு கொடுத்தது" என ஆர்வமுடன் அவளை சுற்றி வளைத்து பிடித்து மகிழ்ச்சியடன் பேசி கொண்டிருந்தனர்
"என்ன ஏன் யாருக்கும் தெரிய மாட்டேங்குது தீபுவ தெரிஞ்சிருக்கு ஹன்சுவ தெரிஞ்சிருக்கு என்ன ஏன் தெரியல நீ எனக்கு மட்டும் சரியாக மீம்ஸ் போடல உன் மீம்ஸ் சரியில்லை அதுனால தான் என்னை யாருக்கும் தெரியாம இருக்கு" என பார்ட்டி நடக்கும் இடத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து ஒரே புலம்பலாக புலம்பி தீர்த்தால் அந்த சார்லஸ் ஏஞ்சல்ஸில் மற்றொருத்தியான விதுபாலா
அவள் அருகில் மிக ஸ்டைலாக கால்மேல் கால் போட்டு அமர்ந்து இருந்த ராஜ லஷ்மி எனும் ராஜீ
"உன் போட்டோ போடாம உன்ன எப்படி மீம்ஸ் போட்டு விளம்பரம் படுத்த முடியும் என்ன சொல்லு என்னோட மீம்ஸ குறை சொல்லாத" என கோபமாக உன்மையை உரைக்கவும் கப் என்று வாயை மூடிக் கொண்டால் விது
அஞ்சலியிடம் விருந்தினர் ஒருவர் "இட்லி ரொம்ப நல்லாருந்தது நா இதுக்கு முன்னாடி மல்லிப்பூ இட்லி கேள்வி பட்டுருக்கேன் ஆன சாப்பிட்டதில்லை இப்ப தான் சாப்பிடுறேன்... இது நீங்க உங்கள் வீட்டில் சமைச்சதா... இல்லை கடையில் வாங்கனதா" என அவர் கேட்டதுக்கு அவர் பாராட்டு மழையில் நனைந்த அஞ்சலி
"இல்ல இல்ல நானே பக்குவமாக மாவட்டி எடுத்து என் கையால செஞ்சது" என பெருமை பேசிக் கொண்டிருக்கையில்
"இது ஸ்ரீ கடையில் வாங்கின இட்லி எனக்கு நல்லா தெரியும் நா கண்ண மூடி சாப்பிட்டா கூடக் கண்டு பிடிச்சிருவேன்" என கத்திக்கொண்டிருந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில் இருந்த நபரை பார்த்தனர் அஞ்சலிக்கு அந்த நபரை பிடித்து இழுத்து சென்று கும்மி அடிக்க வேண்டும் என்ற வெறி எழுந்தது அந்த நபரின் அருகே சென்று அவரின் பெயரை மெதுவாகவும் அதே நேரத்தில் அழுத்தத்துடன் கோபத்தை அடக்கி "பூ" என்று கூப்பிட்டால் சற்றென்று இவளிடம் திரும்பிய பூபூ "பாரு அஞ்சலி என்ன ஏமாத்த பார்க்கறாங்க எனக்கு தெரியாது ஜெர்மன் நாட்டில கண்டு பிடிக்க தெரிஞ்ச என்னையவே ஏமாத்த பார்க்கறாங்க யாருகிட்ட" உண்மையை கத்திக்கொண்ருக்கும் பூபூவை அனைவர் முன்பும் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்து அருகில் இருந்த இட்லி தட்டில் இருந்த இட்லியை எடுத்து அவள் வாயில் முழு இட்லியை அடைத்தால் அஞ்சலி கையை எடுக்க வில்லை வாயில் இருந்த இட்லியை முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் பே பே வென முழித்து கொண்டுருந்தாள் பூபூ