View attachment 5112
Shri Vani அக்கா "தேயாத பேரின்பம் நீயடி" கதையின் தலைப்புக்கேற்ப கதை வாசிக்கும் கடைசி நொடி வரை ஏன் வாசித்தப்பிறகும் தேயாத ஆர்வத்தோடு இன்பமாய் இந்த கதை அமைந்தது என்றே சொல்லாம்.
அதிலும் இந்த விக்கியானந்தா மகிமைமைகளை என்னவென்று சொல்ல மொத எப்பியில்ல் புளி உருமுது அவரு ஆரம்பிச்ச பயணத்தை ஆரஞ்சு முட்டாயில் முடிச்ச பயபுள்ள கெத்தே தனி அதிலும் அவர் அழைப்புகளுக்கு அவர் சொல்லும் அகராதி அற்புதம்..
குட்டிமா குட்டிமானு னூ அன்புல உருகி தன் பிறப்பின் கதையறிந்து குழந்தையாய் தனிமையில் மறுகி நேசித்தவள் இழப்பில் இதயம் வலித்து துடி துடிக்கும் போது இறுதியில் அவனை தாங்கும் தாய் மடியாய் அவன் பக்கம் அவனின் அவள் காதம்பரியாகிய அவனின் "கண்ணம்மா" என்றோ காற்றில் தொலைந்து போன நினைவுகளில் கலந்திருந்து தன்னவன் தனக்காக இருக்கிறான் அவனை சேரும் நாள் ஏங்கி காத்திருந்து கடைசியில் அது காணலாகி போகவிருந்த சமயத்தில் அவன் கை சேர்ந்தவள் .
காதம்பரி தன்னவனிடம் இருந்தாலும் தனித்திருந்தாலும் தனக்கான இடத்தில் கம்பீரமாய் ஜொலிக்கிறாள். தன் மற்றா காதலால் அவன் தவறுகளை அவள் தாண்டி வரும் தருணங்களிலெல்லாம் மெய் சிலிர்க்கிறது.
இயழினி கதையில் ஒரு வாணவில் போல தோன்றி தன் குணத்தாலும் நேசத்தாலும் அழகாய் வண்ணமிடுபவள் சீக்கிரமே மறைந்து போவது சோகம் என்றாலும் தன் கண்களால் கடைசி வரை அவள் வாழ்கிறால் என்பதே மனதின் தேற்றம்..
சூரியா நல்ல அண்ணன் புரியாத காதலன் அடாவடி ராஜா அவனை அவனாகவே ஏற்றுக் கொண்டு நேசித்த சுகாசினியின் காதல் கதைக்கு என்னும் அழகு.
அணியாய காரர்களுக்கு வாணியக்கா உங்க கதையில் நீங்கள் கொடுத்த தண்டனை மிகச்சிறப்பு.. "அதுவும் ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தால் தான் அழிய வேண்டும்" என்று நீங்க கொடுத்த பனிஸ்யன்ட் ஹைலைட்.
தங்கம் இந்த காரேக்டர் கதையில் வரும் இடமெல்லாம் ஒருவித ஆர்வம் அதிகரிக்கவே செய்தது..
மொத்தத்தில் ஒரு அழகான கதை படைத்ததுக்கு நன்றி வாணியக்கா
.