All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸகியின் 'காதல்போதையடா நீ எனக்கு..' கதை திரி

Status
Not open for further replies.

Jadejavid

Writer'ZAKI'
IMG_20201226_141559.jpg


ஹாய்ய் நட்பூஸ்..

இதோ நம்ம மூன்றாவது நாவல் ஆரம்பிக்க போறோம்.. என்னோட முதல் இரண்டு நாவலுக்கு நீங்க தந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. 😍

நம்ம கதையோட பெயர்

காதல்போதையடா நீ எனக்கு..

நம்ம கதையோட கரு என்னன்னா கொஞ்சம் வித்தியாசமா பதினேழாம் நூற்றாண்டில் ஜுலியா டொஃபேனா எனும் பெண்ணால் உருவாக்கப்பட்ட மேக்கப் பொய்ஸன் (Makeup poison) தான்.. எனக்கு இது பத்தி தெரிஞ்சிக்கிட்டதுல இருந்து டொஃபேனா மேல ஒருவித ஈர்ப்புன்னு கூட சொல்லலாம் அதான் கதையாவே எழுதிட்டேன்😁.. So, இது பத்தி தெரிஞ்சவங்க உங்களுக்கு தெரிந்த தகவல்களை எனக்கு சொல்லலாம் தெரியாதவங்க கூகுள் மாமாகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்😁 Or நம்ம கதையிலேயே நா முடிஞ்ச வரைக்கும் அதை பத்தி சொல்லுவேன்.. Because நம்ம கதையே அதை வச்சிதானேயா இருக்கு..

கதாபாத்திரங்களை பார்க்க முன்னாடி முன்னோட்டத்தை பார்த்துரலாம் அதுலேயே உங்களுக்கு தெரிஞ்சிறும் நம்ம ஹீரோ ஹீரோயின் பத்தி..

முன்னோட்டம் 👇👇


' ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே'

என்ற பாடல் ஒலிக்க அந்த ஆடிட்டோரியமே அதிரும் வண்ணம் இருந்தது அங்கிருந்த மாணவர்களின் கத்தலும் கரகோஷமும்.. ஆனால் இதை எதையும் கண்டுக்காது சீரியஸாக பப்ஜியில் ஒருத்தனை "டேய்ய் நில்லுடா நில்லு.. இப்போ என்ன பன்றேன் பாருடா.." என சுடுவதற்கு ஓட ஓட துரத்திக் கொண்டிருந்தவள் "அய்ய்யய்ய்யோ நம்ம மண்டையிலேயே எவனோ குறி வச்சிட்டானே.." என சோகமாக உதட்டை சுழித்தவாறு நிமிர திடீரென்று தன் பக்கத்தில் இருந்த கீர்த்தி எழுந்து நின்று போட்ட ஓலத்தில் திடுக்கிட்டே போய்விட்டாள் அவள்.

'என்னடா நடக்குது இங்க.. இதுங்க எதுக்கு இப்படி குதிச்சிகிட்டு இருக்குதுங்க.. என்ட் ஏதோ சொல்லிகிட்டு வேற குதிக்கிதுங்க.. அது என்னன்னு தான் நமக்கு புரிய மாட்டேங்குது..' என்று தீவிரமாக யோசித்தவள் எழுந்து எல்லாரையும் தாண்டி மேடையை எட்டிப்பார்க்க அடுத்த நொடி மதிமயங்கி போய்விட்டாள் நம் நாயகி..

எதேர்ச்சையாக அவள்புறம் திரும்பிய கீர்த்தி அவளுடைய பார்வையை பார்த்து,
"எப்படி நம்ம சீனியர்.. சும்மா கெத்தா இல்ல.." என்று பெருமை பீத்த,

அவள்புறம் பார்வையை திருப்பாமலே,
"யாருடி அது.." என்று கேட்டவளின் கேள்விக்கு கீர்த்தியோ உற்சாகமாக,
"நம்ம சீனியர்டி.. ஸ்டுடன்ட் ப்ரெஸிடென்ட்.. பேரு *********" என்று சொல்ல

அடுத்த நம்நாயகி சொன்னதில் கீர்த்தியோ 'என்னாது..' என அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்தவாறு தொப்பென்று கதிரையிலேயே அமர்ந்து விட்டாள்.
----------------------------------------------------------------

"இல்லை அது.. அது.. நா.. ஐ.." என்று அந்த பெண் தடுமாற,

அவள் தடுமாற்றத்திலே புரிந்து கொண்டவன் அவளை கூர்மையாக பார்த்து,
"நொட் இன்ட்ரஸ்டட்.." என்று ஒற்றை வரியில் முற்றுப்புள்ளி வைக்க அந்த பெண்ணோ விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் அழுவதற்கு தயாராக பெருமூச்சுவிட்டவன் ,
"ஓகே நாம லவ் பன்னலாம் அதுக்கு முன்னாடி நா பேச வேண்டியதை பேசிடுறேன்.. நா பேசினதுக்கு அப்றமும் என்னை நீ லவ் பன்றன்னா ஓகே.." என்று அவன் சொல்ல அவளோ மலர்ந்த முகத்துடன் ஆர்வமாக தலையாட்ட,

விஷமமாக சிரித்த நம் நாயகனோ அவனுடைய ஆட்டத்தை ஆரம்பித்தான்.
"இப்போ நாம லவ் பன்றோம்னு வச்சிக்க உனக்கும் என்னை பத்தி தெரியாது எனக்கும் உன்னை பத்தி தெரியாது ஆரம்பத்துல நல்லாவே போகும்.. அதுக்கப்றம் நம்ம இரண்டுபேரோட குணமும் செட் ஆகாம ஏகப்பட்ட பிரச்சினை வரலாம்.. அதை உட்கார்ந்து சோல்வ் பன்னி உன்னை சமாதானப்படுத்தி அதுக்கு நீ ஒரு இரண்டு லீட்டர் கண்ணீரை வடிச்சி ஸப்பாஹ்ஹ்ஹ்.. அப்றம் இப்போ நீ ஃபர்ஸ்ட் இயர்.. நா இந்த இயரோட போயிருவேன்.. கெரியர் கோல் அப்டின்னு நாம பார்த்துக்குறது பேசிக்கிறது குறையலாம்.. நா உன்ன வெளில மீட் பன்ன கூப்பிட எல்லாம் வாய்ப்பிருக்கு.. அப்பா திட்டுவாரு ஆட்டுக்கு திட்டுவாருன்னு நீ வராம இருந்தா அடுத்த நிமிஷமே உன் வீட்டு வாசல்ல நா இருப்பேன்.. அப்றம் நம்ம மேட்டர் வீட்ல மாட்டிகிட்டு வீட்ல ஒத்துக்கலைன்னா என்னால எல்லாம் உன்ன தூக்கிட்டு ஓடவும் முடியாது.. அதுக்கு எனக்கு டைமும் இல்ல.. உன் பின்னாடி லவ்வு கல்யாணம்னு நா வர போறதில்ல உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது இதுல வர்ற பிரச்சினையை நீ சமாளிக்க போறதில்லைன்னு.. சுத்தி சுத்தி பிரச்சினை தான்.. இன்னும் சொல்லப்போனா நா சரக்கு அடிச்சா பிரச்சினை, நீ எனக்கு பிடிக்காத ட்ரெஸ்ஸ போட்டா பிரச்சினை, உன் பர்த்டேவ நா மறந்தா பிரச்சினை, நீ உட்கார்ந்தா பிரச்சினை, நா நடந்தா பிரச்சினை.. இப்படி பிரச்சினையவே வாழ்க்கையா மாத்துற லவ்வு உனக்கு வேணுமா பேபி சொல்லு.."

என்று அவன் பேசி முடிக்க எதிரே வாயில் ஈ போகாத குறையாக வாயைப்பிளந்த வண்ணம் அவனையே பார்த்திருந்தவள் அப்படியே யுடர்ன் அடித்து ஓட "யாருகிட்ட.." என்று கெத்தாக கோலரை தூக்கிவிட்டுக் கொண்டான் நம் நாயகன்..
----------------------------------------------------------------

பல குடுவைகள் சுற்றி வைக்கப்பட்டு அடியாட்கள் சுற்றி இருக்க அந்த ஆராய்ச்சி கூடத்தில்,

"நீ பன்றது ரொம்ப தப்பா இருக்கு.. உன் மேல இருந்ந நம்பிக்கையில தான் அக்வா டொஃபேனாவோட(aqua tofana) சீக்ரட்ட நா உனக்கு சொன்னேன்.. பட் நீ அதை ஐராவோட ப்ரான்ட்ட (brand) வச்சி தப்பா யூஸ் பன்னிகிட்டு இருக்க.. இது மட்டும் அவளுக்கு.. " என்று அந்த ஆராய்ச்சியாளன் மெட்ரிசன் பேசி முடிக்கவில்லை அடுத்த நொடி அவன் குரல்வளையிலே புல்லட்டை இறக்கியிருந்தான் அவன்.

'அக்வா டொஃபேனா' என்று பெயரிடப்பட்ட அந்த சிறு குடுவையை விஷம சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு எண்ணிற்கு அழைத்து,
"என்னாச்சு.." என்று கேட்க,

அவர்கள் சொன்ன பதிலில் கோபத்தின் உச்சத்திற்கு சென்று,
"யூ இடியட் அவ எப்படிடா மிஸ் ஆகினா.. " என ஆத்திரத்தில் கத்தியவாறு தன் ஃபோனை தூக்கி சுவற்றில் எறிந்தவன்,

"அவ இனி என் கண்ணு முன்னாடி வரக்கூடாது.. போனவ அப்படியே போனவளாவே தான் இருக்கனும்.. அவ திரும்பி வரவே கூடாது.. அவ செத்ததுக்கு சாட்சி கூட இல்லாம அவ சாம்பலாகனும்.. " என தன் முன்னால் இருந்தவர்களிடம் ஆக்ரோஷமாக கத்தி அவள் தப்பித்து விட்டாள் என்ற கோபத்தில் "******" அவள் பெயரை அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தினான் அந்த கொடியவன்..


இதுலேயே தெரிஞ்சிருக்கும் நம்ம ஹீரோ பத்தி ஆர்யன் ஹர்ஷா மாதிரி இல்ல காதல் கல்யாணம்னாலே ஒருவித அலர்ஜி இவனுக்கு.. இவனோட வன் என்ட் ஒன்லி வீக்னெஸ் கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திருப்பி வாங்குற பழக்கமே இல்ல அதுவே இவனுக்கு செம்ம ஆப்பா முடிய போகுது.. பையனுக்கு கொஞ்சம் திமிர் ஜாஸ்தி.. ஈகோவும் தான்.. நா பெயர் சொல்ல போறதில்ல கதையிலே தெரிஞ்சிக்கோங்க..


நம்ம ஹீரோயின் ரொம்பவே குறும்பு ஆருத்ரா மித்ரா மாதிரி டெரர் இல்ல But நிதானமான கெத்தான பொண்ணு இவ என்ன ரகம்னு எனக்கே புரியல.. ஆனா ரொம்ப டேன்ஜரான ஜந்து.. அழுத்தம் பிடிவாதம் இது இரண்டும் கலந்த கலவை.. நம்ம நாயகிகுள்ள ஏகப்பட்ட சீக்ரெட்ஸ் இருக்கு.. அது எப்படியும் அவ சொல்ல போறதில்ல நாமளே தான் கண்டுபிடிக்கனும்..


ஆரம்பத்தில் கல்லூரியை கதைக்களமாக கொண்டு கதை ஆரம்பமாகும்.. புதுவித கதைக்கருவோடு புதிய முக்கிய கதாபாத்திரங்களோடு காதல், உறவு, நட்பு, பிரிவு, வலி, மர்மங்கள், திருப்பங்கள், நகைச்சுவை என கதை உங்களுக்கு பிடித்தது போலவே நகரும்.. முடிந்த மட்டும் என் குட்டி மூளையை குடைஞ்சி சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்திருக்கேன்.. 01-01- 2021 கதையின் முதல் அத்தியாயம் பதிப்பிக்கப்படும்.. இந்தக் கதைக்கும் உங்க ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியம்..😍

AWAITING FOR UR COMMENTS..
KEEP SUPPORTING ME NATPUS..✌

-ZAKI💙
 

Jadejavid

Writer'ZAKI'
அடுத்த அத்தியாயத்துக்கான ஒரு சிறிய முன்னோட்டம்
👇👇

காட்டு பயலே கொஞ்சி போடா
என்ன ஒருக்கா நீ
முரட்டு முயல தூக்கி போக
வந்த பையடா நீ

கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா
பொரட்டி போட்டு இழுகுறடா நீ
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து
சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ

என்று பாடிக்கொண்டே சென்ற மாயா என்றும் இல்லாத அதிசயமாக இன்று நடந்ததில் ஆடிப்போய்விட்டாள்.

ரோஹன் தன் நண்பர்கள் சூழ தன் ரோயல் என்ஃபீல்டில் சாய்ந்து நின்றவாறு மாயாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க இதை பார்த்தவளுக்கு தான் தூக்கி வாரிப்போட்டது.

'ஒருவேள நமக்கு பின்னாடி யாராச்சும் இருக்காங்களோ.. நாமதான் தப்பு கணக்கு போடுறோமோ..' என்று நினைத்தவாறு பின்னால் திரும்பி பார்க்க அங்கு யாருமே இல்லை. 'அய்யய்யோ.. நம்மள தான் போல.. அலெர்ட் ஆகிக்கடா கைப்புள்ள..' என்று நினைத்தவாறு ஸ்லோமோஷனில் மீண்டும் ரோஹனின் புறம் திரும்பியவள் அவனையே உற்று பார்த்துக் கொண்டிருக்க,

அவளையே சிறிது நேரம் கூர்மையாக பார்த்தவன் கையசைத்து அருகே வரும்படி சைகை செய்ய மாயாவுக்கோ உச்சகட்ட அதிர்ச்சியாகிப்போனது.. பயத்தில்,
'அலெர்ட் மாயா.. கோ டூ த சேஃப் ஸோன்(zone)..' என்று தனக்குத்தானே வெளிப்படையாக கூறிவிட்டு அப்படியே யூடர்ன் அடித்து மாயா ஓட,

ரோஹனும் "ஓய்ய் மாயா.. மாயா.." என்று கத்த அவளோ காதில் வாங்காமலே வகுப்புக்கு ஓடியே விட்டாள்.
 

Jadejavid

Writer'ZAKI'
அடுத்த 09 ஆவது அத்தியாயத்துக்கான ஒரு சிறிய முன்னோட்டம்👇👇

அவன் பாதங்களுக்கு மேல் தன் பாதங்களை வைத்து ஏறி நின்றுக் கொண்டவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு,
"பேபி இப்படியே ஒரு வோக்(Walk) போயேன்.." என்று மாயா சொல்ல,

அவனோ அவளை ஏகத்துக்கும் முறைத்து,
"என்னடி பன்ற.. முதல்ல இறங்கு நீ.." என்று பல்லைகடித்துக் கொண்டு கூறியவாறு ரோஹன் அவளை தள்ளி விட,

"பேபி ப்ளீஸ் சின்ன வயசுல அம்மா கூட இப்படி போனது.. ரொம்ப ஆசையா இருக்கு.. ஒரே ஒரு தடவை.. " என்று தழுதழுத்த குரலில் கேட்க,

அவள் குரலில் என்ன கண்டானோ அவள் நடக்கும் போது விழாமல் இருக்க அவளை இடையை தன் வலிய கரங்களை கொண்டு வளைத்து பிடித்தவன் முதல் அடியை வைக்க அவளோ அவன் முகத்தையே பார்த்தவாறு பின்னோக்கி நகர்ந்தாள்.

அவள் கண்களையே பார்த்தவாறு ரோஹன் ஒவ்வொரு அடியாக வைத்து அந்த பீச் மணலில் நடக்க மாயாவுக்கோ சந்தோஷம் தாளவில்லை. கண்கலங்க முகம் முழுக்க புன்னகையுடன் அவனையே பார்த்தவாறு மாயா இருக்க திடீரென ரோஹன் அவளை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டதில் விழிவிரித்துவிட்டாள்.
 

Jadejavid

Writer'ZAKI'
அடுத்த 10ஆவது அத்தியாயத்துக்கான ஒரு சிறிய முன்னோட்டம்👇👇

கன்னத்தில் கைவைத்து மாயா அப்பட்டமாக அவனை சைட் அடித்துக் கொண்டிருக்க அவள் பார்வையை ரோஹன் உணர்ந்தாலும் ஒருமாதிரி கூச்சத்திலே அவளை நிமிர்ந்து பார்க்க முடியாது ஃபோனை நோண்டுவது போல் பானை செய்தவன் ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல்,
"இனாஃப்.. உன் நயாகரா ஃபோல்ஸ்ஸ கொஞ்சம் க்ளோஸ் பன்றியா.. நா போய் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்.. ச்சே.." என்று மாயாவுக்கு கத்திவிட்டு செல்ல மாயாவுக்கோ சிரிப்பு தான் வந்தது.

ரோஹனையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்த மாயாவிற்கு மிக அருகில்,
"ஹாய் மாயா.." என்ற குரல் கேட்க, சட்டென்று அந்த பழக்கப்பட்ட குரலில் இருக்கையிலிருந்து எழுந்து மாயா திரும்பி பார்க்க அவளெதிரில் நின்றுக் கொண்டிருந்தவனை பார்த்து அதிர்ச்சியில் ரோஹனை திரும்பி பார்த்தவள் ரோஹன் தன்னை பார்க்காததை உணர்ந்து தன் எதிரில் இருந்தவனின் கையை பிடித்து அங்கிருந்து சற்று தள்ளி அழைத்துச் சென்றாள்.

"லியோ நீ இங்க.." மாயா விழிவிரித்து திக்கித்திணறி கேட்க,

"வாவ்வ் யூ ஸ்டில் ரிமெம்பர் மீ.. ஹான்.." என்று லியோ நக்கல்குரலில் கேள்வியாக கேட்க, எதுவும் பேசாது அவனையே தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
 

Jadejavid

Writer'ZAKI'
இதோ அடுத்த அத்தியாயத்துக்கான ஒரு சிறிய முன்னோட்டம்👇👇

"ஹேய்ய் நீ.. நீ எப்படி இங்க.." என்று பதட்டமாக ரோஹன் கேட்க, அடுத்தநொடி மாயாவோ உதட்டை பிதுக்கி அழ ஆரம்பிக்க அவனுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை

"என்னை மன்னிச்சிறு ரூஹி நா உன்ன திட்டிட்டேன்.." என்று அவள் தள்ளாடியபடியே ரோஹனின் காலில் விழ போக,
"ஏய்ய் என்னடி பன்ற.." என்று கத்தியவன் கீழே விழுந்து கிடந்த அவளை தூக்கி நிறுத்த அவளோ மயக்கமாக அவனை ஒரு லுக்கு விட்டாள்.

"ரூஹி ஹேப்பி பர்த்டே செல்லக்குட்டி.." என்று குளறியபடி பேசியவாறு ரோஹனை மாயா தாவி அணைக்க ரோஹனுக்கோ அவள் செய்கைகள் வித்தியாசமாகவே பட்டது.. அதுவும் அவள் மேலிருந்து வந்த நெடியும் ஏதோ ஒன்றை உணர்த்த அங்குமிங்கும் தள்ளாடியபடி இருந்தவளின் தோளை பிடித்து ஸ்டடியாக நிற்க வைத்தவன்,
"ஏய் டெவில் குடிச்சிருக்கியா நீ.." என்று அதட்டலாக கேட்க, அவளோ மீண்டும் அழ ஆரம்பித்துவிட, அடுத்து மாயா செய்த கூத்தில் ரோஹன் தான் விழிபிதுங்கி நின்றான்..
 

Jadejavid

Writer'ZAKI'
இதோ அடுத்த அத்தியாயத்துக்கான ஒரு சிறிய முன்னோட்டம்👇👇

"தங்கச்சிமா சோரிடா அவன் இப்படி பேசுவான்னு நா எதிர்ப்பார்க்கல.. அவன தப்பா எடுத்துக்காத.." என்று ஆறுதலாக சொல்ல,

அவனை ஒரு மார்கமாக மேலிருந்து கீழ் பார்த்தவள்,
"அய்யோ அண்ணாத்த இப்போ நீ என்ன ட்ரை பன்ற.. நோ வொர்ரீஸ்.. என் ரூஹி பேசினதை நா காதுலயே வாங்கிக்கல்ல.." என்று சொன்னவளை பார்த்த கீர்த்தி,
"அதானே பார்த்தேன்.. என் ஜிலேபி பத்தி எனக்கு தெரியாது.." என்று கோலரை தூக்கி விட்டுக்கொள்ள, சன்ஜய்யோ 'க்கும்' என்று நொடிந்துக்கொண்டான்.

ஆனால் சட்டென்று சன்ஜய்யின் முகம் கோபத்திற்கு மாற அதை கவனித்த மாயா,
"அண்ணாத்த நா ஒன்னு கேப்பேன் தப்பா எடுத்துக்காத.. பாபிக்கும் உங்களுக்கும் அப்படி என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சிக்கலாமா.." என்று கேட்க,

அவளை பார்த்து புன்னகைத்தவன்,
"பாபி இல்ல மாயா தருண்.." என்று சொல்ல, அந்த பெயரில் அதிர்ந்தவள் புருவத்தை நெறித்து ஏதோ யோசிக்க,

சன்ஜய்யோ,
"அவன் பேரு தருண்.. எங்க எல்லாருக்கும் பாபி.. யூ க்னோ வட் மாயா ரோஹனோட பெஸ்ட் ஃப்ரென்ட் அவன்.. ரோஹனோட க்ரைம் பார்ட்னெர்.." என்று சொல்ல "வாட்.." என்று அதிர்ந்துவிட்டாள் மாயா.

-ZAKI💙
 

Jadejavid

Writer'ZAKI'
இதோ அடுத்த அத்தியாயத்திற்கான சிறிய முன்னோட்டம்👇👇

"சரியான கெட்ட பொண்ணுடி நீ.." என்று அவன் வார்த்தையை விட அடுத்தகணம் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு நின்றான் ரோஹன்.

அடித்தது நம் நாயகி அல்ல பாபி.. கன்னத்தில் கை வைத்தவாறு பாபியை ரோஹன் அதிர்ந்து நோக்க கண்கள் சிவந்து நரம்புகள் புடைத்து ஒற்றை விரலை அவன் முன் நீட்டிய பாபி,
"இன்னொரு வார்த்தை மாயாவ பத்தி தப்பா பேசின கொன்னுறுவேன்.. உன்ன சத்தியமா கொன்னுறுவேன்.. ஹவ் டேர் யூ *****..." என்று பல்லை கடிக்க, அடுத்தநொடி பாபியின் கன்னத்தில் பளார் என்று விட்டிருந்தாள் மாயா.

கீர்த்தியோ "ஜிலேபி.." என்று கத்த, சஞ்சய்யோ, "என்னடா இது மாறி மாறி அறைஞ்சி விளையாடிக்கிட்டு இருக்கீங்க.." என்று கத்திக்கொண்டு வர, ரோஹனோ அவளை புரியாமல் பார்த்தான் என்றால் பாபியோ கன்னத்தில் கை வைத்தவாறு,
"ஏன் பேபி.." என்று பாவமாக கேட்டான்.

"இந்த மாயாவோட ரூஹி மேல கை வைக்க யாருக்கும் ரைட்ஸ் இல்ல.. அது எனக்காகவே இருந்தாலும்.." என்று மாயா அழுத்தி சொல்ல, ரோஹனோ அவளையே இமைக்காது பார்த்திருந்தான்.
 

Jadejavid

Writer'ZAKI'
கதையின் அடுத்த அத்தியாயத்துக்கான ஒரு சிறிய முன்னோட்டம்👇👇

" காதல சொல்ற தைரியம் இங்க யாருக்குமே இல்லை.. நம்மள ஏத்துக்காம போயிறுவாங்களோன்னு பயமே நம்மள தடுக்கும்.." என்றவள் மாயாவின் முக மாற்றத்தை கவனிக்காது ஏதேதோ பேசியவாறு தூங்கிவிட,

அவள் தூங்கியதும் அவள் முகத்தை பார்த்த மாயா கண்களை அழுந்த மூடி திறந்து தன்னை நிலைப்படுத்தி கீர்த்தியை கட்டிலில் படுக்க வைத்து போர்த்தி விட்டவவள்,
"ஐ அம் சோரி போன்டா எனக்கு வேற வழி தெரியல.. உனக்கு தெரிஞ்சா என்னை போக விடமாட்ட.. அதான் உனக்கு ஸ்லீபிங் டேப்லெட்ஸ் கொடுக்க வேண்டியதா போச்சு.. என்னை மன்னிச்சிறுடி.." என்று கலங்கிய கண்களுடன் சொன்னவள் அதற்கு மேல் தாமதிக்காது தேவையான உடைகளையும் பொருட்களையும் எடுத்து வைத்து செல்வதற்காக தயாரானாள்.

தன்னவனை விட்டுச் செல்ல போகிறோம் என்ற நினைப்பே அவளை ரணமாய் கொல்ல முயன்றவரை வேகமாக தயாராகி லக்கேஜ்ஜை எடுத்துக்கொண்டு அறை வாசல் வரை சென்றவள் கண்களிலிருந்து உயிரை பிரித்தெடுக்கும் வலியில் கண்ணீர் ஆறாக பெருகியது..

-ZAKI💙
 

Jadejavid

Writer'ZAKI'
இதோ கதையின் அடுத்த அத்தியாயத்திற்கான ஒரு சிறிய முன்னோட்டம்👇👇

"உன்னை யாரு இங்க வர சொன்னா.. அதுவும் தனியா வந்தேன்னு அசால்ட்டா சொல்ற..நீ தனியா வந்ததே ஆபத்து.. அதுவும் இங்க இருக்குறது அதை விட ஆபத்து.. டோன்ட் யூ ஹேவ் சென்ஸ்.." என்று ரோஹன் திட்ட மாயாவோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.

"டேய் இது நம்மா மாயா இல்ல.. பார்த்து பேசு ரோக்கி.." ரோஹன் காதில் சஞ்சய் கிசுகிசுக்க, ரோஹனோ அதை கண்டுக்காது அவளை விடாது திட்ட,

ஒற்றை புருவத்தை உயர்த்தி அவனை பார்த்த மாயா,
"திஸ் இஸ் த லிமிட் மிஸ்டர்.ரோஹன்.. நா யாருன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.. என்கிட்ட பேசும் போது பார்த்து பேசுங்க.. நா இவங்க கூட ஈஸியா பழகுறதை வச்சி என் குணத்தை தப்பா எடை போடாதீங்க.. நா நினைச்சா உங்க கம்பனிய உருத்தெறியாம அழிக்க முடியும் கொட் இட்.." என்று அழுத்தமாக சொல்ல ரோஹனோ "டெவில்.." என்று திட்டியவாறு உக்கிரமாக அவளை முறைத்துக் கொண்டிருந்தான்..
-------------------------------------------------------------------

"நா உங்ககிட்ட ஹெல்ப் கேட்டேனா.." மாயா காட்டமாக கேட்க,

"உதவி பண்ண பர்மிஷன் கேக்கனும்னு அவசியம் இல்லை.. என் கண்ணு முன்னாடி தெரிஞ்து உதவி பண்ண வந்தேன் தட்ஸ் இட்.. ஆனாலும் இவ்வளவு திமிர் ஆகாது.." ரோஹன் கடைசி வசனத்தை முணுமுணுப்பாக சொன்னாலும் அவள் காதில் தெளிவாகவே விழுந்தது.

"ஹவ் டேர் யூ என்னை எப்படி நீங்க திமிர்னு சொல்லலாம்.. நீங்க தான் திமிர்.. ஆணவம்.. எல்லா உங்ககிட்ட தான் இருக்கு.." மாயா கோபத்தில் கத்த,

அவளை அழுத்தமாக பார்த்தவன் வண்டியில் ஏற போக அவனை தள்ளிவிட்டு காரில் மாயா ஏறிக்கொள்ள அவளை முறைத்தவன்,
"வட் த ஹெல் ஒரு பிஸ்னஸ் வூமன் போலவா நடந்துக்குற.. கொஞ்சம் கூட சென்ஸ்ஸே இல்லை.. மொதல்ல என் கார்ல இருந்து இறங்கு.." ரோஹன் கத்த,

"அதெல்லாம் முடியாது நீங்க வேணா என் பக்கத்துல இருங்க.." மாயா தெனாவெட்டாக சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொள்ள "டெவில்.." என்று அவளை ஏகத்துக்கும் முறைத்தான் ரோஹன்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top