All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷம்லாவின் "சிதற வைத்த செம்பாவையாள்" -கதை திரி

Status
Not open for further replies.

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'சிதற வைத்த செம்பாவையாள்'



அத்தியாயம் 07



இரவின் குளுமையில் மெல்லிசையுடன் ஏகாந்த சூழலை ஏற்படுத்தி இருந்தது அந்த ரெஸ்டாரண்ட். ஓலைகளால் வெய்யப்பட்ட குடிசை போன்ற அமைப்பில் தேக்கு மரங்களாலான வட்ட வடிவ மேசையும் இருக்கைகளும் என அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த உணவகம்.



“குச்ச் ஆர் சாஹி” (want anything else?) கையில் இருந்த பழச்சாற்றை டேபிளில் வைத்த பணிப்பெண் அங்கிருந்தவரை பார்த்து பணிவுடன் கேட்க, அவளின் கேள்வியில் உள்ளே தள்ளிக்கொண்டு இருந்த ப்ரைட் ரைஸை விடுத்து நிமிர்ந்து அவளை நோக்கி மேலும் கீழுமாய் அளவெடுத்தான் அவன்.



“ம்ம்... ஆமா நானும் வந்ததுல இருந்து பார்க்கிறேன் ஒருத்தி கூட தமிழ்ல பேசமாட்டீங்கிறீங்க”



அவனின் கேள்வியில் புன்னகை சிந்திய பணிப்பெண் “தமிழ் நஹி மாலும்”



“ஓஹோ... எங்க காசு வேணும்... எங்க ஓட்டு வேணும்... ஆனா தமிழ் மட்டும் வேணாமா...”



“ஹிந்தி நேஷனல் லேங்விஜ்... கத்துக்கோ பியூச்சர் நல்லாஆ இருக்கும்...” அவனின் கேள்விக்கு பதிலளிக்காது இலவச அறிவுரை வழங்கியவள் அங்கிருந்து நகர,



அவளை போக விடாமல் கைதட்டி “பாப்பா... இங்கிட்டு வா...” என அழைக்க, அவனை புரியாமல் பார்த்துக்கொண்டடே அவனருகில் வந்து என்னவென்பது போல் பார்த்து நின்றாள்.



“எங்க தமிழ் மொழி இல்லன்னா இன்னிக்கு இந்தியால ரெண்டு ஆஸ்கார் அவார்ட் கிடைச்சிருக்காது... பார்க்கிறதுக்கு தான் பம்மின மாதிரி இருப்போம் பதுங்கி பாயுறதுல புலி... புரிஞ்சதா... இப்போ நீ என்ன பண்றேன்னா... நல்ல தமிழ் டீச்சரா பார்த்து அனா, ஆவன்னா, இனா, ஈயென்னா கத்துக்கோ என் பக்கி...” அவளை முறைத்துக்கொண்டு கூற, அதை கேட்டு அவனை உறுத்து விழித்த ஹிந்திக்காரி முகத்தை தோள்பட்டையில் இடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.



அதேநேரம் “வாவ் சூப்பர்... அண்ணே கலக்கிட்டீங்க போங்க.. சான்சேயில்ல... பின்னிட்டீங்க...” கை தட்டி ஆர்பரித்த வண்ணம் அவன் இருந்த மேசையில் வந்து ஒன்றாய் அமர்ந்து கொண்டனர் அந்த மூவரும். அது வேறு யாருமில்லை.... சாட்சாத் ஷக்தி.. கணேஷ்.. கேப்டன்.. மூவருமே தான்.



அவர்கள் மூவரையும் புரியாது பார்த்தவன் “யாரு” என்பது போல் அவர்களை உற்று பார்க்க அதை கண்டு கொள்ளாமல் டேபிளில் இருந்த உணவுப்பதார்த்தங்களை தங்கள் புறம் நகர்த்திக் கொண்டவர்கள் “யாருக்கும் இந்த தைரியம் இருக்காதுண்ணே...” என்றபடி உணவை ஒரு வெட்டு வெட்ட ஆரம்பித்தனர்.



“உங்களை பார்த்தாலே தெரியுது உங்களுக்கு தமிழ் மேல பற்று அதிகம்னு...”



“ஆமாண்ணே... நீங்க சினிமால வசனம் எழுதப்போகலாம்... சும்மா சூப்பரா பேசுறீங்க...”



“வசனம் என்ன அண்ணா இனிமே தமிழ் பட ஹீரோ தான்...” ஆளாளுக்கு சிலாகித்து கூற,



“ஹீ ஹீ..” அதை கேட்டு பெருமையாய் சிரித்தபடியே, அவர்களை கேள்வியாய் பார்த்தவன் சிக்கனை எடுக்க கைகளை நீட்டி அதுவோ தட்டுபடாமல் போகவே டேபிளை பார்க்க அது அவர்கள் மூவரின் வாய்க்குள்ளும் அரைபட்டுக் கொண்டிருந்தது.



அதை பார்த்து முழி பிதுங்கியபடி ‘பார்த்தா பலநாள் பசியில கிடந்திருப்பாய்ங்கலோ இந்த பாச்சல் பாய்றானுங்க...’ என அவர்கள் உண்ட வேகத்தினை பார்த்து எண்ணிக் கொண்டவன் அங்கிருந்த பணிப்பெண்ணை அழைத்தான்.



“பாப்பா இங்க வாம்மா....” முன்பு கழுத்தை நொடித்துக் கொண்டு போனவள் அவன் மீண்டும் அழைக்கவும் அவனை குறுகுறுவென பார்த்துக்கொண்டு வர, அதை பார்த்து முறைத்தவன் ‘தம்பிங்க பசியில கிடக்கிறானுங்க... இது ஆடி அசஞ்சு பல்லை காட்டிக்கிட்டு வாரத பாரு..’ நொடித்துக் கொண்டான்.



அப்பெண் வந்து அவர்கள் மூவருக்கும் உணவுகளை பரிமாறிக்கொள்ள அவனோ அப்பெண்ணின் சட்டையில் இருந்த அந்த ரெஸ்டாரண்டின் நம்பரை பார்த்து ‘ஹோமுக்கு ஆர்டர் பண்ணி சொல்லிட வேண்டியது தான்...’ என எண்ணிக் கொண்டே அவள் சட்டையில் இருந்த எண்களை தன் செல்போனில் அழுத்திக் கொள்ள அதை எதேர்ச்சியாய் பார்த்தவள் அவன் பார்வை போகும் தன் நெஞ்சுப்பகுதியை பார்த்து முகம் கோபத்தில் ஜொலிக்க அவனை பயங்கரமாய் முறைத்தவள் மறுகணம் அவனருகில் சென்று கும்மி எடுத்து விட்டாள்.



அவள் வலியில் கதற, அதில் உண்டு கொண்டிருந்த மூவரும் என்னவோ எதொவோவேன்று அவனை காப்பாற்ற அந்த பெண்ணோ கோபத்தில் காச்சுமூச்சென்று கத்த ஆரம்பிக்க விஷயம் என்னவென்று புரிந்து ஷக்தி “என்னம்மா நீ நம்பரை எங்க எழுதி வைக்கனும்னு தெரியாது..” என மென்மையாய் கடிந்து கொள்ள அதன் பின்பே அவளுக்கும் தன் தவறு புரிந்தது.



அதன் பின் அப்பெண் தன் தவறுணர்ந்து மன்னிப்பு கேட்க, அதை பெரும் முறைப்புடன் ஏற்றுக் கொண்டவன் தன்னை காப்பாற்றிய மூவருடனும் தன் வீட்டுக்கு கிளம்பினான்.



ஊட்டியின் இரவு நேர குளுமையும் உடலை வருடிச் சென்ற சில்லென்ற குளிர் காற்றும் இரவு நேர நடையை இன்னும் அழகாக்க குளிரை தாங்க முடியாமல் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நடந்த நால்வரும் வெகு விரைவிலே வீட்டை அடைந்திருக்க மூடியிருந்த வீட்டின் கதவை திறந்து விட்டவன் அவர்கள் மூவருடன் வீட்டினுள்ளே நுழைந்தான்.



“பொம்பளைங்கலாடா அவளுங்க இந்த அடி அடிக்கிறாளுங்க... அவளுங்ககிட்ட இருந்து என்னைய காப்பத்தினதால தான் நான் என்வீடு வரைக்கும் உங்கள கூட்டியாறேன்... காலைல குளிச்சுகிளிச்சு ரெடியா இருங்க வொர்க்ஷாப் கூட்டிபோறேன்...” என்றவன் அங்கு தனக்கென்று இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.



வரும் வழியிலே இவர்கள் மூவரும் தங்குவதற்கு வீடும் செய்வதற்கு வேலையும் கேட்டிருக்க அவர்கள் மேல் பாவம் பார்த்தவன் தான் மேனேஜராக வேலை செய்யும் வொர்க்ஷாப்பிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தான். அனைவராலும் மேனேஜர் என அழைக்கபடும் கருப்பன்.



நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பில் போட்டது போட்டபடி அங்கிருந்த அறையினுள் சென்று கட்டிலில் விழுந்தவர்கள் அடுத்த சில நொடிகளிலே உறங்கிப்போயினர்.



தன் அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கேப்டனையும் கணேஷையும் பார்த்த ஷக்தியின் இதழ்கள் லேசாய் வளைந்தது.



ஒருவனின் வாழ்க்கை மாறுவதற்கு சில நொடிகள் போதும் போல. அவர்களின் வாழ்க்கையும் மாறிவிட்டதே.. சில நாட்களுக்கு முன்னான அவர்களின் வாழ்க்கையை நினைத்து பார்த்தவன் அந்த நினைவுகளுடனே கண்ணயர்ந்தான்.



********



பிரதான சாலையில் அமைந்திருந்தது அந்த தனியார் கல்வி நிறுவனம். விசாலமான நிலப்பரப்பில் எழுப்பப்பட்டிருந்த அந்த பள்ளியின் கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் அமைந்திருக்க மாணவர்கள் அனைவரும் காலைநேர ஒன்றுகூடல் முடிவடைந்து வகுப்பிற்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.



அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறையில் ஆங்கில பாடம் நடத்திக்கொண்டு இருந்தாள் ஷாஷி.



முன்பிருந்ததை காட்டிலும் மிகையான அழகுடன் மிளிர்ந்தாள்.



ஐந்தரை அடி உயரத்தில் இருந்தவளின் கொடி போன்ற தேகமும் பளிங்கு நிற மேனியும் படிப்பினால் கிடைப்பெற்ற நிமிர்வும் என அழகாய் ஜொலித்தவளின் அழகில் ஒன்று மட்டுமே குறையாய் இருந்தது.



அவளின் சிரிக்கும் இதழ்கள் இப்போதெல்லாம் சிரிப்பினை மறந்து செயற்கையாய் புன்னகையை பூசிக்கொண்டு இருந்தது. வாயோயாமல் வளவளப்பவளின் பேச்சு முற்றிலும் குறைந்து அங்கு அமைதி ஆட்கொண்டிருந்தது.



“Ok students, tomorrow is a very important test, so all must come..” மாணவர்களுக்கு எடுத்துரைத்தவள் அடுத்த படத்திற்கான அழைப்பு மணி இசைக்கவும் ஒருவித சோம்பலுடன் ஸ்டாப் ரூம் நோக்கி சென்றாள்.



ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மட்டும் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருக்க அவர்களை பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தவள் சற்று தள்ளி இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.



கைகளோ அதன் பாட்டிற்கு அங்கிருந்த புத்தகமொன்றை புரட்டிக் கொண்டிருக்க மனமோ புரட்டும் பக்கங்களை போல் நில்லாமல் எதையோ நினைத்து வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது.



அந்த நினைவுகளின் தாக்கம் என்றும் போல் இன்றும் தொண்டையை அடைக்க செய்ய அதை தாங்கவியலாமல் தண்ணீர் பாட்டலில் இருந்த தண்ணீரை தொண்டையில் சரித்துக் கொண்டவள் தன் துக்கத்தையும் அதனுடன் சேர்ந்து விழுங்க முயற்சி செய்தாள்.



முயற்சி மட்டுமே அவளால் செய்ய முடிந்ததே தவிர அந்த நினைவுகளை அவளால் மறக்க முடியவில்லை. அந்த நினைவு கொடுத்த வலி அவள் இதயத்தை சுருக்கென பதம் பார்த்தது. தாங்கொண்ணா வலி... அதை நினைக்கவும் முடியவில்லை மறக்கவும் அவளால் முடியவில்லை.



அதனூடே தலையை பிடித்துக் கொண்டிருந்தவளை அழைத்த பியூன் பிரின்சிபால் அழைப்பதாக கூறவும் முகத்தை கைகுட்டையால் அழுந்த துடைத்துக் கொண்டவள் பிரின்சிபாலின் அறை நோக்கி சென்றாள்.



“எக்ஸ்க்யூஸ் மீ..” நாசுக்காய் அறைக்கதவை தட்ட அதில் தலை உயர்த்தி பார்த்த பூங்கோதை நாச்சியார் அவளை உள்ளே வரும்படி சைகை செய்தவர் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.



“வர சொன்னதா சொன்னாங்க...” மரியாதையுடன் கேட்க, அதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவர் அங்கிருந்த இருக்கையை காட்டி அமரும்படி மீண்டும் சைகை செய்தார்.



ஐம்பதுகளில் இருப்பார்... நரைத்தமுடி... மூக்கு கண்ணாடி என ஒரு பெண் அதிபருக்கு உரிய அனைத்து தோரணைகளும் இருந்தது. மிக முக்கியமாய் கம்பீரம். அந்த வயதிலும் அத்தனை கம்பீரமாய் இருந்தார். கண்களில் ஒருவித கூர்மை. எதிராளியை துளைக்கும் பார்வை.



சில கணம் அமைதிகாத்தவர் தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.



“இன்னும் ஒன்வீக்ல அசோசியேஷன் ப்ரோக்ராம் ஒர்கனைஸ் பண்ணியிருக்கோம்... Am I right?” அவளை கூர்மையாய் அளவிட்டுக் கொண்டே கேட்க, அவரின் கேள்வியில் அவள் தலை தானாய் அசைந்து ஆம் என பதில் கொடுத்தது.



அதை கேட்டு மர்மமாய் புன்னகை புரிந்தவர் அவள் கண்டு கொள்ளும் முன்னே முகத்தை சாதாரணமாய் வைத்துக்கொண்டு “அதுக்கு சீப் கெஸ்டா ஆர்.கே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி எம்.டி யை இன்வைட் பண்ணலாம்னு டிஸைட் பண்ணியிருக்கோம்... நாளைக்கு நீ போய் அவரை மீட் பண்ணி பாங்க்சனுக்கு இன்வைட் பண்ணிட்டு வா...” என்றவர் அவ்வளவு தான் உரையாடல் முடிந்தது என்பது போல் தன் மடிகணனியுள் முகம் புதைத்துக் கொள்ள அவரின் அறையை விட்டு வெளியேறியவளுக்கு அவரின் கட்டளையை ஏற்று அங்கு செல்ல விருப்பமும் இல்லை அதை தட்டி கழிக்கவும் முடியவில்லை.



முன்பெல்லாம் எப்போதடா எங்காவது செல்வோம் என பரபரப்பாய் இருப்பவள் இப்போதெல்லாம் எங்கும் செல்ல பிடிப்பற்று வீட்டுக்குள்ளே முடங்கி விடுவாள். பள்ளி விட்டால் வீடு.. வீடு விட்டால் பள்ளி. இது தான் அவளின் தற்போதைய உலகம். இப்போதென்றால் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக.



யாரின் மேல் உயிரையே வைத்திருந்தாளோ அவனே அவளின் உயிரினை பறித்து விட்டு வெறும் கூடாய் அவளை விட்டுச்சென்றிருக்க அந்த வெறும் கூடோ ஜடமாய் மாறிப்போய் வெகுகாலமாகி விட்டது.



******


சென்னை விமானநிலையம் வழமைபோல் பெரும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாய் மக்கள் தத்தம் வெளியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்க அதே நேரம் ஆறடி உயரத்தில் கருநீல பேன்ட் வெள்ளை நிற முழுக்கை சட்டை அணிந்து ஒரு கையில் கரு நீல கோர்ட்டை ஸ்டைலாக பிடித்துக்கொண்டு கண்களில் கூலர்ஸ் மின்ன வேக நடையிட்டு வந்தான் அவன்.



பார்க்கும் பெண்கள் எல்லாம் பல முறை திரும்பிப் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடும் அழகு. அதை எல்லாம் கண்டும் காணாமலும் கடந்து சென்றவனின் நடை தன் கார் அருகில் வந்ததும் குறைய கார் கதவை திறந்து ஏறிக் கொண்டவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.



மூன்று வருடங்களின் பின் தாய்நாடு திரும்பிய முதலாளியை பார்த்து விசுவாசமாய் சிரித்த டிரைவர் காரை மிதமான வேகத்தில் செலுத்த அதை கூட கண்டு கொள்ளாமல் இருக்கையில் தலை சாய்த்தவனின் எண்ணங்கள் எங்கெங்கோ பறந்து சென்றது.



அதை நினைக்க நினைக்க முகம் கோபத்திலும் வெறுப்பில் இறுகிப் போனது கற்பாறையாய். அதற்கு மேலும் அதை நினைக்க பிடிக்காதவனை த மடிகனணியை எடுத்தவன் அதில் வந்துள்ள மெயில்களை செக் செய்ய ஆரம்பிக்க கார் வீடு வந்து சேரும் வரையிலும் கூட அவன் அதிலிருந்து தலை நிமிர்த்தி இருக்கவில்லை.



அந்தளவுக்கு வேலை அவனை ஆக்கிரமித்திருந்தது. அதை விடவும் தன் நினைவுகளில் இருந்து தப்பிப்பதற்காகவே அவன் தன்னை வேளைகளில் ஆழ்த்திக் கொண்டான்.



பல வருடங்களின் பின் ஊருக்கு திரும்பியவனை அவனது வீட்டினர் பாசத்துடன் வரவேற்க அவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடியவன் ‘ஓய்வெடுக்க வேண்டும்’ என்ற கூற்றுடன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.



அதற்கு மேல் யாருடனும் அவனுக்கு பேச நேரமில்லை அதை காட்டிலும் அவனது வீட்டினருக்கும் கூட அதற்கு மேல் அவனுடன் பேச நேரமிருக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழில். அதன் பின்னே ஓடுவதிலே அவர்கள் நேரம் விரைந்து விடும். இதில் எங்கே மற்றவர்களுடன் உற்காந்து பேசுவது.



அதை நினைத்து பார்த்தவன் மீண்டும் இறுகிப்போனான். இந்த இறுக்கத்தை தளர்த்த தானே அவன் அவளை நேசித்தான். அவள் சிரிப்பில் தன் துன்பம் குறைவது போல் உணர்ந்தானே... அவள் பேச்சில் தன் தனிமை கரைவது கண்டு மகிழ்ந்தானே. அனைத்தையும் சிதைத்து விட்டாள். அதை நினைக்க நினைக்க ஆத்திரம் அதன் எல்லையை கடந்தது போல் இருந்தது அவனுக்கு.



தன் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டவன் மறக்க நினைத்தும் முடியாமல் பொக்கிஷமாய் சேமித்து வைத்த அவள் நினைவுகளை கனத்த மனதுடன் அசைபோட்டான். கைகளோ அதன் பாட்டிற்கு அலுமாரியில் ஒரு ஓரத்தில் தூக்கி கடாசிய அவள் புகைப்படங்களை தூசு தட்டி அதில் புன்னகை முகத்துடன் காட்சியளித்தவளை ஏக்கமாய் பார்த்து வைத்தது.



அதேநேரம் இத்தனை துன்பத்தையும் மீறி அவன் இங்கு வந்திருக்கிறான் என்றால் அதற்கு காரணம் அவனின் செல்லா தான். அவனின் செல்லாக்காகத்தான் அவன் மீண்டும் இங்கு வந்திருகின்றான்.



தன் செல்லாவின் நினைவு வந்தவுடனே தான் செல்லாவுக்கு கொடுத்த வாக்கும் நினைவு வர தன் கையிலிருந்த புகைப்படத்தை நொடி நேரம் கூட தாமதிக்காது சுக்குநூறாய் கிழுத்தெறிந்தவன் ஓய்ந்து போய் கட்டிலில் அமர்ந்து கொண்டான். கைகள் தலையை தாங்கிக் கொண்டது. உடல் இறுகிப்போனது. இருந்தும் அவனையும் மீறி அவன் மனகண்ணின் மின்னி மறைந்தாள் அவனவள். புன்னகை முகத்துடன்.



*****

“எழுந்துடி... இன்னும் எவ்ளோ நேரந்தான் தூங்குவ... இப்போ எழுந்துக்க போறியா இல்லையா...”



“ஐஞ்சு நிமிசம்டி... ப்ளீஸ்... ராத்திரி முழுக்க தூங்கவே இல்ல...” பில்லோவை இறுக்கிக்கொண்டு குப்புற விழுந்து தூங்க ஆரம்பித்தாள் ஆர்த்தி.



“உன் வருங்கால புருசனோட சாட்டிங்காக்கும்... இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல... இன்னும் மூணு வாரங்கூட இல்ல கல்யாணத்துக்கு... இப்போவும் பேசித்தான் ஆகணுமா...” அவளை தூங்கவிடக்கூடாது எனும் தீவிர முடிவுடன் அவளை எழுப்புவதிலே குறியாய் இருந்தாள் நிம்மி. அவளின் அத்தை மகள். கூடவே பாலாவும் பல நாட்களின் பின் தன் இயல்பான நிலைக்கு திரும்பி அந்த கும்பகர்ணியை எழுப்புவதற்கு முயன்று கொண்டிருந்தாள்.



வெகு நேரம் முயன்று பார்த்த நிம்மி அவள் எழும் வழியை காணாது குளிர் நீரை எடுத்து வந்தவள் அவள் முகத்தில் அபிஷேகம் செய்ய மறுகணமே “ஆஆஆஆ” எனும் அலறலுடன் அலறியடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள் ஆர்த்தி.



முகத்தில் வழிந்த நீரை இரு கைகளாலும் ஒற்றி எடுத்துக் கொண்டவள் தன்முன்னே நின்றிருந்த பாலாவையும் தன் அருமை அத்தைமவள் நிம்மியை ரத்தகாட்டேரியின் பசியை தீர்க்க வந்த மாமிசமாய் கொலைவெறியுடன் பார்த்தவள் அடுத்த கணமே அவர்கள் இருவரின் மேலும் பாய்ந்திருந்தாள்.



“எதுக்குடி என்னை எழுப்பினிங்க... நான்தான் சொன்னேன்ல இப்போ தான் தூங்க ஆரம்பிச்சேன் எழுப்பாதிங்கன்னு... அதையும் மீறி எதுக்குடி என்னை எழுப்பினீங்க...” பில்லோவால் இருவரையும் மொத்த பதிலுக்கு அவர்கள் இருவரும் அவளை மொத்த கலகலப்பான குட்டி கலாட்டா அரங்கேறியது அந்த வீட்டில்.



அதற்குள் மூவரும் ஓய்ந்து போய் கட்டிலில் மல்லாக்க படுக்க ஆர்த்தியின் அருகில் படுத்த நிம்மி அவளை தலையில் கொட்டி “உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்காடி... உன் கல்யாணத்துக்கு வேலைமெனக்கெட்டு உன் பிரெண்டு சென்னைல இருந்து வந்திருக்கா... அவளுக்கு ஊரை சுத்தி காட்றதை விட்டிட்டு நல்லா தூங்குமூஞ்சியாட்டம் தூங்கி வழியிற... உன்னை நம்பி எப்பிடிடி உன் பிரெண்டு இங்க வந்தா...” அவளை கடிய, அதை கேட்டு நாக்கை கடித்துக் கொண்டவள் மன்னிப்பு கோரும் பாவனையில் பாலாவை பாவமாய் பார்த்து வைத்தாள்.



“சாரிடி... மன்னிச்சிடு.... எதோ தெரியாம... இதோ ஒரு நிமிசத்துல நான் பிரெஷாகிட்டு வந்திறேன்... வெளிய போகலாம்...” என ஆயத்தமாக கட்டிலில் இருந்து கீழிறங்க,



அதை கேட்டு மெல்லிய புன்னகை சிந்திய பாலா “அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஆரு... நீ கல்யாணப்பொண்ணு சோ வீட்டிலே இருந்துக்கோ.. நானும் நிம்மியும் வெளிய போய் சுத்திட்டு வரோம்...” அவளுக்கு பளிப்பு கட்டிக்கொண்டு கூற, அதை கேட்டு செல்லமாய் சிணுங்கினாள் ஆர்த்தி.



“அதெப்பிடி நீங்க ரெண்டு பேரும் என்னை தனியா விட்டிட்டு போகலாம்... அதெல்லாம் சரிவராது... நானும் உங்க கூட வரேன்...”



காலையுணவுக்கு மூவரையும் தேடி வந்த பஞ்சவர்ணம் மகளின் பேச்சை கேட்டு அவள் தலையில் கொட்டியவர் “இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணத்த வச்சிட்டு ஊர் சுத்த போக போறியா... அதெல்லாம் ஒன்னும் வேணாம்... பேசாம அடங்கி வீட்டில இருந்துக்கோ... யாராவது கேள்விப்பட்டா என்னத்துக்கோ ஆகும்...” கண்டிப்புடன் கூற,



“அதானே.. ஊரு உலகம் என்னத்த சொல்லும்... சோ நீ வீட்டிலியே இருந்துக்கோ ஆரு கண்ணு... நாங்க ரெண்டு பேரும் மட்டும் நல்லா ஜாலியா ஊர் சுத்திட்டு வரோம்... பாய்...” என அவளுக்கு பறக்கும் முத்தமொன்றை கொடுத்த நிம்மி ஆர்த்தியின் ஸ்கூட்டி கீயை எடுத்துக் கொண்டு பாலாவுடன் வெளியில் கிளம்பி விட்டாள்.



*****

காவல் நிலையம்...



அதற்கே உரிய பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. ACP ரத்னவேல் தன் அறையினுள் முக்கிய கோப்பொன்றை பார்வையிட்டுக் கொண்டிருக்க, அவனின் அறையை தட்டி அனுமதி வேண்டி உள்ளே நுழைந்தான் காளிதாஸ்.



“சார் குட் மோர்னிங்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சார்...” தன் கையிலிருந்த கோப்பை மேலதிகாரியின் முன் நீட்ட அதை வாங்கிக் கொண்டவன் அதை பிரித்து பார்த்தான்.





“அவனோட பிங்கர்பிரிண்ட் கரெக்டா மேட்ச் ஆகிடிச்சு” இன்னுமொரு கோப்பை எடுத்து நீட்டினான்.



“அவன் சம்பந்தமா எல்லா டீடைல்ஸையும் கலெக்ட் பண்ணிட்டேன் சார்... சம்பவம் நடந்த அடுத்த நாள் காலைல ராம் சில்க்ஸ்ல இருபத்தன்சாயிரதுக்கு ட்ரெஸ் பர்சேஸ் பண்ணியிருக்கான்... அங்கயிருந்த cctv புட்டேஜ்ல எல்லாமே கிளியரா ரெகார்ட் ஆகியிருக்கு...”



“இது பாடில இருந்து எடுத்த வூடன்ஸ்டிக்... இதால தான் குத்தி கொலை பண்ணியிருக்கான்...” ஒரு கவரை அவனிடம் கொடுத்தவன் “அதுமட்டுயில்லாம எட்டு வயசிலேயே தங்கச்சிய கொலை பண்ணியிருக்கான்... இப்போ சம்பத்... இவனை வெளியில் விட்டா யாருக்கு பாதுக்காப்பு இல்ல சார்...” தன் அறிக்கையை கூறியவன் பிற வேலைகளை கவனிக்க அங்கிருந்து வெளியேறி விட்டான்.



தன் கையிலிருந்த கோப்புகளை வெகு தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்த ரத்னவேல் அதிலிருந்த புகைப்படங்களை அங்கிருந்த போர்டில் ஒட்டினான். அதில் அப்பாவியாய் சிரித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் மூவரும்....



அவர்கள் யார் எனும் கேள்விக்கான பதில் விரைவில்..



“ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ”




சிதறும்...



plz drop ur valuable comments dears..

ஷம்லாவின் "சிதற வைத்த செம்பாவையாள்" -கருத்து திரி

கதை எப்பிடி போகுதுன்னு ஒரு வரிலாவது உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்...
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'சிதற வைத்த செம்பாவையாள்'



அத்தியாயம் 08



maxresdefault (3).jpg



அன்று நேரத்துடனே மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தாள் ஷிகா. அவள் கடமை நேரம் முடிவடைந்திருக்க வெளியேறியவள் அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த விக்ரமை பார்த்து சிநேகமாய் சிரித்து வெளியேற எத்தனிக்க அவளை கெஞ்சலாய் ஒரு பார்வை பார்த்தவன் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்... எனக்காக பைவ் மினிட்ஸ் ஒதுக்க முடியுமா...” வேண்டுதலாய் கேட்டான்.



அதை கேட்டு என்ன சொல்வதென தெரியாமல் சில கணங்கள் விழித்தவள் அவன் கண்களில் தெரிந்த கெஞ்சுதல் பார்வையில் அரைமனதாய் சம்மதித்தாள்.



இருவரும் மருத்துவமனை கான்டீனிற்கு வந்திருந்தனர். விக்ரம் இருவருக்கும் சேர்த்து காபி ஆர்டர் செய்திருக்க அதை மறுக்க முடியாமல் மௌனமாய் பருக ஆரம்பித்தாள்.



அவள் காபி அருந்துவதை ஓரக்கண்ணால் பார்த்தபடியே தானும் அருந்தியவன் எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் தொண்டையை செருமிக் கொண்டான்.



அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “பேசணும்னு சொன்னீங்க...” என இழுக்க, அதில் சற்று ஆசுவாசபட்டவன் அவளை பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான்.



“அதுவந்து... பவி உன்கிட்ட சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்... நீ இன்னும் எதுவும் சொல்லலையே அதான்...” அதற்கு மேல் என்னை கல்யாணம் செய்ய சம்மதமா என வெளிப்படையாய் கேட்க முடியாமல் தயங்கி நிறுத்தினான்.



அவனது பேச்சில் என்ன சொல்வதென தெரியாமல் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்கும் பாவனையில் தன் மனதை நிதானப்படுத்தியவள் “ஐயம் சாரி விக்ரம்.” அவன் முகத்தை நேராய் பார்த்தாள்.



இன்னும் எத்தனை நாளைக்கு தவிர்ப்பது. முதலில் ஒரு நல்ல தோழன் தன் வார்த்தையில் வருந்துவதா என அதை சொல்லாமல் தள்ளிப்போட்டவள் இப்போது அது தொடர்கதையாகி விடுமோ என பயந்து வாய் திறந்து விட்டாள்.



இன்னொருவனை மனதில் நினைத்துக் கொண்டிருப்பவளுக்கு வேறு ஒரு ஆடவனின் பார்வை தன் மேல் ஆர்வமாய் படிவதை கூட சாதாரணமாய் எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அது தன்னவனுக்கு இழைக்கும் துரோகமாகவே அவளுக்கு தோன்றியது. அவன் மனதில் என்ன இருந்தாலும் தன் மனதில் அவன் இருக்கும் பட்சத்தில் தான் காதலில் கற்புடன் இருக்க வேண்டும் என்றே அவள் நினைத்தாள்.



அதனால் இன்றே இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி அவனை மௌனமாய் ஏறிட்டாள். இவளின் மன்னிப்பென்ற வார்த்தையில் தன் கேள்விக்கான விடை தெரிந்து விட்டதில் விழுந்து போன முகத்துடன் அவளை பார்த்திருந்தான் விக்ரம்.



“ஏழு வருசமா ஒருத்தரை காதலிச்சிட்டு இருக்கேன்... அவருக்கு என்னை பிடிக்குமான்னு கூட தெரியலை.. ஆனா என்னால அவரை மறக்க முடியல... என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா என்னை தேடி வருவார் என்ற நம்பிக்கை தான் நான் வாழ்ந்திட்டே இருக்கேன்... ப்ளீஸ் விக்ரம் இனிமே இந்த நோக்கத்தில என்கிட்ட பேசுறதா இருந்தா ப்ளீஸ்... என்கிட்ட பேசாதீங்க...”



அதை கேட்டு ஏழு வருடமாகவா என ஆச்சரியப்பட்டு போன விக்ரம் அவளை பார்த்து ஆறுதலாய் சிரித்தான். முதலில் அவன் தோழனாகத்தான் இருந்தான். பெரிதாய் பேசிக்கொள்வதில்லை என்றாலுமே அவன் நல்ல நண்பன் தான். இடையில் தான் அவளின் மென்மையான நடவடிக்கை தன் குடும்பத்துடன் ஒத்துப்போகும் அதுவும் இருவரும் ஒரே பீல்ட் அதனால் இலகுவாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அவளை திருமணம் செய்ய விரும்பினான்.



அதில் நட்புடனான புரிதல் இருந்ததே தவிர காதல் இல்லை. இப்போது அவனுக்கு புரிந்தது. அவளின் காதலும் புரிந்தது, அவளின் காத்திருப்பும் புரிந்தது.



தன் மனதை சடுதியில் மாற்றி நட்புடன் புன்னகைத்தவன் “நான் தான் மன்னிப்பு கேட்கணும் ஷிகா.. உன்னோட காதலை பத்தி தெரியாம நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டேன்.. சாரி.. அண்ட் விஷ் யு ஆல் தி பெஸ்ட்... உன்னோட காதல் நிறைவேற என்னோட வாழ்த்துக்கள்...” என வாழ்த்தியவன் “எனக்கான ஐஞ்சு நிமிஷம் முடிஞ்சிடிச்சு...” சன்ன புன்னகை பூக்க,



அதை கேட்டு சிரித்தவள் “என்மேல கோபம் இல்லையே...” இழுக்க,



“சத்தியமா இல்லை... ஏழு வருஷம் காத்திருக்க உன் காதல் என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடிச்சு... இப்போ எனக்கும் கூட ஒரு பொண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணனும் போல தோணுது... அந்த பொண்ணு எங்க இருக்கோ...” என பெருமூச்சு விட்டான்.



சற்று நேரத்தின் முன் தோழியானவளிடத்தில் திருமணம் பற்றி பேச தயங்கி இழுத்தடித்தவன் இப்போது அவளின் காதலை பற்றி அறிந்து சகஜமாய் பேச ஆரம்பித்திருந்தான். அதில் நிறைந்து போனது பெண்ணவளின் மனது. தோழன் தன் காதலை புரிந்து கொண்டான் என்ற நிம்மதியில்.



அதேநேரம் உள்ளுக்குள் வலிக்கவும் செய்தது. இதுபோல் இன்னும் எத்தனை பேரை தான் சந்திக்க வேண்டுமோ என்ற எண்ணம் சிறு வலியையும் உண்டாக்கியது. அத்தனை பேரிடத்தில் விளக்க முடியாதே. அதே போல் எல்லோரும் ஒன்று போல் இருக்கமாட்டார்களே. நண்பனாய் இருக்க போய் தன் மனதை புரிந்து ஒதுங்கிக் கொண்டான். இதுவே இவனிடத்தில் வேறு யாராவது இருந்தால் இத்துடன் விடுவார்களா என்ற எண்ணம் தந்த தாக்கம் அவளின் காதல் நெஞ்சை பலமாய் தாக்கியது.



கழிவிரக்கத்தில் கண்களில் கண்ணீர் துளி பூக்க இருக்கும் இடம் கருதி அதை யாருமறியாமல் துடைத்துக் கொண்டாள். ஆனால் மனமோ விடாமல் அரற்றிக்கொண்டிருந்தது. ஒரு முறையாவது என்னை வந்து பாரேன் என தன்னவளிடத்தில் மானசீகமாய் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.



பெண்ணவளின் மனதின் கதறல் அவள் மனதில் சுமந்திருப்பவனின் நெஞ்சத்தை தாக்கியதோ என்னவோ இல்லை விதியின் செயலோ அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு வெகு விரைவில் வர காத்திருந்தது.



*****

அந்த தனியார் பள்ளி வெகு பிரமாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று அசோசியேஷன் ப்ரோக்ராம் நடைபெறவிருந்தது. அதற்கான தயார் நிலையில் பள்ளி வெகு அழகாய் காட்சியளிக்க மாணவர்கள் அத்தனை பேரும் கலகலப்பாய் சுற்றி திரிந்தனர்.



ஆடிடோரியத்தில் விழாவிற்கான ஏற்பாடு அத்தனையும் முடிந்த நிலையில் இருக்க இறுதியாய் ஒருமுறை அதை ப்ரின்சியின் கட்டளைக்கிணங்க மேற்பார்வை இட்டவள் அனைத்தும் சரியாய் இருக்கவே மாணவர்களை உள்ளே வந்து அமரச்செய்யும் படி ப்ரிபெக்ட் மாணவர்களிடம் உரைத்தவள் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வாஷ்ரூம் நோக்கி சென்று முகத்தை சீர்படுத்திக் கொண்டாள்.



காலை வந்ததில் இருந்து ஓரிடத்தில் நில்லாமல் பம்பரமாய் சுற்றிக்கொண்டு இருந்ததில் முகத்தில் அப்பிய வியர்வை துளிகளை தண்ணீர் கொண்டு ஒற்றியெடுத்தவள் வலியெடுத்த கால்களை நகர்த்த முடியாமல் ஓய்வாய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கண்மூடிக் கொண்டாள்.



கால்வலி தாங்கொண்ணாமல் இருக்க பல்லை கடித்துக் கொண்டவளுக்கு நினைவு பின்னோக்கி ஓடியது.



அன்றும் அப்படித்தான் அவளது கல்லூரியில் விழா ஒன்று ஏற்பாடு செய்திருக்க சோர்ந்திருக்க மனமற்று தோழிகளுடன் சேர்ந்து தானும் களத்தில் குதித்து வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு செய்தவள் இடையில் எதற்கோ படிகளில் இறங்கும் போது எதிர்பாரா விதத்தில் கால் சுழுக்கிக் கொண்டது.



வலி உயிர்போக காலை பிடித்துக்கொண்டு நின்றவளை பார்த்த அவள் வகுப்பு மாணவர்கள் அவளை ஒருவேலையும் செய்ய விடாமல் இருக்கை ஒன்றில் அமர்த்திவிட்டு தாங்களே வேலைகளை செய்து முடித்து விட்டனர். சற்று நேரம் ஓய்வாய் அமர்ந்திருந்ததில் கால் வலி சற்று மட்டுபட்டது போல் இருக்க கல்லூரி முடிந்து பேருந்தில் செல்ல முயன்றவள் மழை வருவது போல இருக்கவும் நடந்தே வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து மெல்ல நடையை எட்டிப்போட்டாள்.



பாதிதூரம் செல்லும் வரையிலும் கூட ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. அதற்கு மேல் தான் கால்வலி உயிர்போகுமளவிற்கு வலியெடுக்க வெறிச்சோடிப் போன சாலையில் தன்னந்தனியாய் நின்றுகொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் சிலீரென்றது.



மனக்கண்ணில் பள்ளியின் இறுதி நாள் நினைவில் யாருமில்லா தெருவில் சில ரௌடிகளுக்கு மத்தியில் தான் மாட்டிக்கொண்டு முழித்தது நினைவில் எழுந்தது தொண்டையை உளறச்செய்ய சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்துக் கொண்டே வலியெடுத்த காலை கடினப்பட்டு இழுத்து வைத்துக்கொண்டு ஒரு அடி வைக்கும் போதே அவளை உரசினார்போன்று வந்து ஒரு கார்.



அதில் நெஞ்சம் பதற முகம் வெளுக்க மீண்டும் தான் இக்கட்டில் மாற்றிக்கொண்டோமோ என பயந்து பேயறைந்தது போல் நின்று கொண்டிருந்தவளின் முன் தோன்றினான் அவளின் ரோஹன்.





எதிர்பாராமல் அவனை பார்த்தாலும் தனக்கு துன்பம் வரும் போதெல்லாம் தன் உடன் இருக்கும் அவனின் காதல் அவளை பெண்ணாய் மனம் சிலிர்க்கச் செய்ய நடுவீதி என்று கூட பாராமல் அவன் மார்பில் தஞ்சமடைந்து கொண்டாள்.



ஒரு நொடிபொழுதில் அவள் மனதில் தோன்றி மறைந்த எண்ணங்கள் அவளை பெரும் பயங்கொள்ள செய்திருந்தது. அவளின் செயலில் ஒரு கணம் திகைத்துப்போய் நின்றவன் பின் அவளின் பயம் உணர்ந்து முதுகை வருடிக் கொடுத்தான்.



அதற்குள் லேசான தூறலாய் தூவிக்கொண்டிருந்த மழை அதன் வேகத்தை அதிகரிக்க அவள் மழையில் நனைந்து செல்வதை விரும்பாதவனாய் அவளை காரில் ஏறிக் கொள்ளும்படி கூற அதை கேட்டு முதலில் தயங்கி பின் ஒத்துக் கொண்டவள் காலை ஒரு எட்டு வைக்க சுரீர் என்று தாக்கிய வலியில் பல்லைக் கடித்துக் கொண்டவளின் கண்களில் இருந்து வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணீர் துளி நிறைந்தது.



அந்த மழையில் கூட அவள் முகத்தில் வழிந்த கண்ணீர் துளியை கண்டு பதறிப்போனவன் அவளிடத்தில் காரணத்தை கேட்டறிந்து நொடியும் தாமதியாது அவளை தன் கரங்களில் ஏந்தி காரில் இருக்க வைத்தான்.



அவள்தான் மனம் கவர்ந்தவனின் அருகாமையில் நிலைதடுமாறி போய்விட்டாள். அவனுக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை போலும். சேய்க்கு ஒன்றென்றால் துடிக்கும் தாயின் நிலையில் தான் அவன் இருந்தான்.



உடனே அங்கிருந்த சிறிய கிளினிக் ஒன்றிற்கு அவளை அழைத்து சென்றவன் மருத்துவரிடம் கூறி அவளின் வலியை போக்கிய பின்னர் தான் ஆசுவாசப்பட்டான். மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரையை வாங்கி அவளை முழுங்கச் செய்தவன் தன் காரிலே அவளின் வீட்டில் அருகில் இறக்கி விட்டான்.



வீட்டிற்குள் அவளை அழைத்து வர எத்தனித்தவனின் செயலில் பதறிப்போய் அவனை தடுத்தாலும் தன் மேல் அவன் கொண்ட அக்கறையை அன்று முழுவதும் எண்ணி எண்ணி பூரித்துப் போனாள்.



அந்த நினைவுகளின் ஊடே கடந்த காலத்தில் திளைத்திருந்தவள் அதன் பின் நடந்த சம்பவங்களை எண்ணி மனம் வலிக்க அதற்கு மேல் தாள முடியாமல் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ஓய்ந்து போனவளாய் அமர்ந்து கொண்டாள்.



‘ஏன் என்னை விட்டிட்டு போனீங்க... நான் பண்ணது தப்பு தான்... ஆனா என்னோட நிலையை நீங்க புரிஞ்சிக்கவே மாட்டீங்களா... உங்க காதல் அவ்ளோ தானா...’ எத்தனை வளர்ந்திருந்தாலும் காதல் என்று வரும் போது படித்த மேதை கூட கோழையாகி போகும்போது இவள் மட்டும் எம்மாத்திரம். இப்போது அவள் பத்தாம் வகுப்பு ஷாஷியாகவே மாறியிருந்தாள். தான் ஒரு பள்ளியின் ஆசிரியை என்பதை மறந்தே போனாள். காதல் கொடுத்த பெரும் வலியை அந்த பேதை பெண்ணால் தாங்க முடியவில்லை.



எத்தனை நேரம் அழுதாலோ அருகில் கேட்ட சக ஆசிரியர்களின் குரலோசையில் தன் கண்ணீரை துடைத்து முகத்தை அழுந்த கழுவிக் கொண்டவள் கைகுட்டையால் ஈரத்தினை ஒற்றியெடுத்து முடியை சரி செய்து கொண்டாள்.



வழக்கமாய் அணியும் பருத்தி புடவையை தவிர்த்து மெல்லிய வேலைப்பாடுடன் கூடிய சேலை அணிந்திருந்தாள். ஒப்பனையில்லா முகம் அழுததில் சிவந்து போன கன்னங்கள் காதல் தோல்வியில் துவண்டுபோன மெல்லிய உடல் என சற்று ஒடுங்கி பார்ப்பதற்கு அழகு குறைந்தவள் போல் ஏனோதானோவெனத் தான் இருந்தாள்.



இந்நேரத்து விழா துவங்கி இருக்கும் என்பதால் முகத்தை சீர் செய்து கொண்டு விழா நடக்கும் இடம் நோக்கி சென்றவள் பின் வழியால் இருந்த கதவின் வழியால் உள்ளே நுழைந்து முகத்தில் கடமைக்கு சிரிப்பினை ஒட்டிக்கொண்டு மேடையை பார்த்திருந்தாள்.



அவளின் கண்கள் தான் அங்கு பார்த்திருந்ததே தவிர அவள் கருத்து தன் கடந்த காலத்திலே சிக்குண்டிருந்தது. அதிலிருந்து அவ்வளவு சுலபத்தில் அவளால் மீள முடியவில்லை.



அதேநேரம் மேடையில் நடுநாயகமாய் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ஆர்.கே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியின் எம்.டி அங்கு மெல்லிய கொடியாய் சோபையாய் சிரித்துக் கொண்டிருந்த ஷாஷியை பார்த்து நெஞ்சம் அதிர திடுக்கிட்டு போய் அமர்ந்திருந்தான்.



அவன் கண்களோ அவனையும் அறியாது தலை முதல் பாதம் வரை அவளை அளவிட்டது. தான் என்ன மாதிரி உணர்கிறோம் என புரியாத ஒரு மனநிலையில் சமைந்து போய் அமர்ந்திருந்தான் அவன்.



*****

வளைந்து நெளிந்து சென்ற ஊட்டியின் வளைவுப் பாதையில் மெதுவாய் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டிருந்தாள் பாலா.



ஜீன்ஸ் டாப்பில் இருந்தவள் குளிருக்கு இதமாய் ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். தலையில் மங்கிகெப்.. வீட்டில் ஏஸியின் செயற்கை குளிரில் சாதாரணமாய் இருப்பவள் ஊட்டியின் இயற்கையான குளிரினை தாக்குபிடிக்க முடியாமல் திண்டாடினாள்.



அதற்காக வீட்டினுள் முடங்கவும் அவளுக்கு விருப்பமில்லை. அதனாலே வெளியில் செல்ல விரும்பி ஆர்த்தியின் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். இத்தனை நாள் அவளுடன் துணைக்கு வந்த நிம்மி இன்று வேலை விஷயமாய் வெளியே சென்றிருக்க தனியாகவே கிளம்பி விட்டாள். இன்றுடன் அவள் ஊட்டி வந்து ஒருவாரம் ஓடி இருந்தது.



இடையிடையே வீட்டிற்கு அழைத்து பேசுவாள். பேசும் நேரங்களில் அவளின் அதிக நேரத்தை பிடித்துக் கொள்வது அவளின் ஹர்ஷு கண்ணா தான். அவனுடன் பேசுவதற்காகவே அவள் வீட்டிற்கு அழைப்பாள். தினம் தினம் வித விதமாய் புகைப்படங்கள் எடுத்து அவனுக்கு அனுப்புவாள். மீராவிடம் கூறி தன் செல்ல மகனையும் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுப்பாள். ஆகா மொத்தம் இருவரும் தூரத்தில் இருந்தாலும் மனதளவில் நெருக்கமாய் தான் இருந்தனர்.



இவளுக்கு அறியும் வயது அவளின் குட்டி கண்ணனுக்கு அறியாத வயது. அதுமட்டுமே அவர்களுக்கு வித்தியாசம். மற்றபடி அவளும் அவனுடன் பேசும் போது சிறு குழந்தையாகவே மாறிப் போய்விடுவாள்.



இப்போதும் ஹர்ஷுவின் நினைவில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவள் முன்னால் வந்து கொண்டிருந்தவனை கவனியாமல் மோதப்பார்த்து சடுதியில் பிரேக்கை அழுத்தி தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயல வண்டி தடம்புரண்டதில் மலைப்பாதையில் மண்டிக்கிடக்கும் முற்கள் அவளின் காலை பதம் பார்த்தது.



அதில் வண்டியில் இருந்து தட்டுதடுமாறி இறங்கியவள் காலை தரையில் ஊன்ற முடியாமல் தடுமாறி விழப்பார்க்க அவள் விழும் முன் அவளை தன் கைகளில் தாங்கிப்பிடித்தான் அவன்.



அவள் யாரின் மேல் மோதப்பார்த்தாளோ அவன் தான் அவள் விழாமல் தன் கைகளில் தாங்கியிருந்தான்.



மெலிதாய் உடலை தீண்டிச் சென்ற குளிரின் தாக்கத்தில் பெண்ணவளின் உடல் நடுங்க அவளின் நடுக்கத்தை உணர்ந்து ஆணவனின் கரங்கள் அவனையும் மீறி அவளை இறுக்கமாய் தழுவிக்கொண்டது.



சில்லென்ற காற்று... குளிரின் இரைச்சல் ஓசை... வனாந்திர பட்சிகளின் செல்லமான சங்கீத மொழிகள்... காற்றில் அசைந்தாடிய மரங்களின் கிரீச் ஓசைகள்... அதற்கு மெருகூட்டுவது போல் அதனுடன் சேர்த்து ஒலித்த இருவரின் இதயத்துடிப்பு ஓசையும் என ரம்மியமான சூழ்நிலையை உருவாக்கி இருந்தது.



இதுவரையிலும் எந்த பெண்ணினதும் சகவாசமின்றி உறவுமுறை சொல்லி பாசத்துடன் மட்டுமே பழகி வந்தவனுக்கு இந்த பெண்ணினது நெருக்கும் ஏனோ அவனது அடிநெஞ்சு வரை சென்று தித்திப்பாய் உணரச்செய்து இம்சித்தது. இதுவரை அவன் அறியாத உணர்வது.



அவளின் முகத்தையே இமைக்க மறந்து பார்த்தான். அதிர்ச்சியில் அகல விரிந்த கண்கள்... படபடப்பில் அடித்துக்கொண்ட கண்ணிமைகள்... குளிரின் தாக்கத்தில் சிவந்து போன கன்னங்கள்... ரத்த சிகப்பு இதழ்கள்... அவளின் ஆர்ப்பாட்டமில்லா அழகில் அவன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.



ஆனால் மறுகணமே தன் நிலையுணர்ந்து அவளை தள்ளி நிறுத்தினான். அதற்குள் தன்னிலைக்கு மீண்டிருந்த பாலா தன்னை மறந்து நின்றிருந்த தன் நிலையை அறவே வெறுத்துவளாய் தன் மீதிருந்த கோபத்திலும் இவன் எதற்கு என்னை பிடித்தான் என்ற ஆக்ரோஷத்திலும் தன்னையும் மீறி அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.



அதில் கன்னத்தில் கைவைத்து அவளை அதிர்ந்து நோக்கினான் ஷக்தி. அவனிடத்தில் வேறு யார் இருந்தாலும் இந்நேரம் பதிலுக்கு அவளை மாறி அறைந்திருப்பார்கள். ஆனால் அவன் அதை செய்யவில்லை. இருவரிடத்திலும் சரிசமமாய் தவறு இருந்த போதிலும் அதை சுட்டிக்காட்டி அவளை சாடாமல் அமைதியாய் நின்றுகொண்டான். தவறு என்மீது மாத்திரமே எனும் ரீதியில்.



உண்மையில் அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது. முழுத்தவறும் தன் மீது தான். அவளுக்கு உதவுவதற்காக பிடித்தால் சடுதியில் அவளை விட்டு விலகியிருக்க வேண்டும். அதையும் மீறி தன் நிலை தெரிந்தும் பெண்ணவளை ரசித்தது தவறு தானே. அதற்கான தண்டனையாகவே அவள் அறைந்ததை ஏற்றுக்கொண்டான்.



அவனை அறைந்ததும் தான் நடந்தது மண்டையில் உரைக்க இருந்தும் அவன் தன்னை ஆழ்ந்து பார்த்தது பிடிக்காமல் மன்னிப்பு கேட்க முயன்ற மனதை வெகுவாய் அடக்கிக்கொண்டவள் ஸ்கூட்டியை தூக்கி நிறுத்த முயல முற்கள் குத்திய பாதமோ வெகு நேரம் நிற்க முடியாமல் தள்ளாடியது.



அவளின் தள்ளாடலை கேள்வியாய் நோக்கியவன் அப்போது தான் அவளின் பாதத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்த இரத்தத்தை பார்த்து பதறியவனாய் அவளை பிடித்து நிறுத்தினான்.



அதில் பாலா கோபம் பொங்க அவனை நிமிர்ந்து பார்க்க அதை கவனியாதவனாய் அவள் பாதத்தை தன் கைகளில் தாங்கிக் கொண்டவன் “முள்ளு குத்திரிச்சு போல...” என பதறியபடி “என் வீடு பக்கத்தில தான்... பெஸ்ட்எய்ட் பண்ணிக்கலாம் என்கூட வரிங்களா...” தயக்கத்துடன் தான் கேட்டான்.



முன்னே பின்னே பார்த்திராத பெண். தன்னுடன் எப்படி தனித்து வருவாள் என்ற எண்ணம் கொடுத்த தயக்கம் அது.



ஆனால் பாலா அவனுக்கு முற்றிலும் வேறுபட்ட மனநிலையில் இருந்தாள். தன் மீது தான் தவறு என்று அவளுக்கு தெளிவாய் புரிந்தது. ஹர்ஷுவின் நினைவில் தான் தான் வண்டியை தாறுமாறாய் ஓட்டி அவனை இடிக்கப்பார்த்து கடைசியில் அவளுக்கு அடிபட்டு விட்டது.



இருந்தும் அவளுக்கு வந்த கோபத்தில் அவனை அடித்து விட்டாள். எந்தவொரு ஆணுக்கும் அத்தகைய செயல் பிடிக்காது. உதவி செய்யப்போய் கடைசியில் தனக்கு கிடைத்த மரியாதையில் வேறு யாராய் இருந்தாலும் பதிலுக்கு திட்டியோ அடித்தோ இருப்பார்கள்.



இவன் அமைதியாய் இருந்தது பெரும் ஆச்சரியம் என்றால் தன் பாதத்தில் ரத்தத்தை பார்த்து பதறிப்போய் தன் கால்களை அவன் கையில் தாங்கியது அதைவிட பெரும் ஆச்சரியமாய்பட்டது அவளுக்கு. எந்தவொரு ஆண் மகனும் செய்யத்துணியாத காரியம்.. அதுவும் யாரென்று தெரியாத பெண்ணிற்கு யாரும் இவனைப் போல் பதறமாட்டார்கள்.



இருந்தும் தன் பாதத்தை அவன் கைகளில் இருந்து விடுவிக்க முயன்றாள். அவன் கைகள் பற்றிய பாதம் ஏனோ பெண்களுக்கு இயல்பாய் தோன்றும் ஜாக்கிரதை உணர்வையும் அதே சமயம் கூச்சத்தையும் கொடுத்தது.


அவனோ அதை விடுவிக்கும் நினைவின்றி அவளுக்கு முதலுதவி செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்க அவளின் விடைக்காக பெண்ணவள் முகத்தையே தவிப்புடன் பார்த்திருந்தான்.



அவன் முகத்தில் அப்பிக்கிடந்த உண்மையான தவிப்பினை கண்டு உள்ளுக்குள் ஏதோ செய்தது அவளுக்கு. தன் மனம் போகும் போக்கினை கண்டு தன்னையே கடிந்து கொண்டவள் அவன் பிடியில் இருந்து காலை உருவிக்கொண்டு “அதெல்லாம் ஒன்னும் வேணாம் மிஸ்டர்...” நாசுக்காய் கூற,



அதைகேட்டு முகம் சுனங்கியவன் அவள் வலியை தாங்கிக் கொண்டு நிற்பதை பார்த்து என்ன நினைத்தானோ அவளை சடாரென கைகளில் ஏந்தி இருந்தான்.



ஒரு நொடி அவள் முகம் பார்த்து ரசித்தவனுக்கு அவள் வலியை தாங்கிக்கொண்டு நிற்பதை கண்டு தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவளிடத்தில் வேறு யாராய் இருந்தாலும் உதவி செய்ய முனைந்திருப்பான் தான் ஆனால் இவளிடத்தில் அதையும் மீறி ஏதோ ஒன்று கூடுதலாய் இருந்தது. உள்ளுக்குள் பனித்துளியாய் எதுவோ சிதறும் உணர்வு.



அவளை கைகளில் ஏந்திய போது மனம் சில்லென காற்றில் மிதப்பது போல் இருந்தது. அந்த வானத்தையே வசப்படுத்தியது போல் இருந்தது. முதல் தடவையாய் அவளை காண்கிறோம் என்ற எண்ணமே அவன் நினைவில் இல்லை. காலம் காலமாய் பழகிய உணர்வு. இதுவரைக்கும் எந்த பெண்ணிடத்திலும் அவனுக்கு இதுபோல் தோன்றியதில்லை. எந்த பெண்ணையும் அவன் பார்த்தது கூட கிடையாது.



முதல் பெண்... முதல் தொடுகை... அதுவும் அடிநெஞ்சு வரை தித்தித்த உணர்வு... முதன்முதலாய் தோன்றிய உணர்வு... அனைத்தும் புதிதாகவும் பிடித்ததாகவும் இருந்தது. சற்று முன் அவளை பார்த்து ரசித்தற்கு தன்னையே கடிந்து கொண்டவன் இக்கணம் அவளை கைகளில் ஏந்திக் கொள்வதற்கு கொஞ்சம் யோசிக்கவில்லை.



அவனின் செய்கையில் பதறிப்போனவள் அவன் கைகளில் இருந்து திமிற முதலில் அதில் அவளை இறக்கிவிட எத்தனித்தவன் அவள் கால்களில் வழிந்த ரத்தம் கண்டு தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டான்.



வெகு அருகில் தான் அவர்கள் மூவரும் தங்கி இருக்கும் வீடு என்பதால் கைகளில் அவளை ஏந்திக்கொண்டே அந்த மலைப்பாதையில் வேகமாய் நடந்து வீட்டினை அடைந்திருந்தான்.



வீட்டிற்குள் நுழைந்து இருக்கையில் அவளை அமர வைத்து அவளின் பாதத்தை ஸ்டூலின் மேல் வைத்தவன் அங்கிருந்த முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவளின் கால் காயத்தை துடைத்து அதில் மருந்திட்டவன் அதில் சிறு கட்டு போட்டான்.



அத்தனையையும் உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன் பார்த்திருந்தாள் மதுபாலா. முகம் தான் உணர்ச்சிகளற்று இருந்தது. அவள் உள்ளமோ உணர்ச்சிக்குவியலை தாங்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.



அன்று அவன் தொட்டபோது தான் சுயநினைவில் இல்லை. ஆனாலும் நிலைக்கு திரும்பி அவன் செயல் ஏற்படுத்திய காயத்தை தன் வார்த்தை மூலம் தீர்த்துக் கொண்டாள். இப்போதும் அவன் அவள் மனதில் இருக்கிறான் தான். ஆனால் காதலனாய் இல்லை. இன்னொருத்தியின் காதலனாய்.



முதலில் தடுமாறிக்கொண்டு தான் இருந்தாள். அவனை மறக்கமுடியாது. காலப்போக்கில் அந்த மாற்றமும் அவளிடத்தில் வந்து விட்டது. அதற்கு முக்கிய காரணம் மஹத். தன்னிடத்தில் காதலை தான் வேறு ஒருவனை காதலிப்பாய் கூறவும் நாகரீகமாய் விலகிக் கொண்ட அவனின் செய்கை பெண்ணிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த மாற்றத்தினை விதைத்தவன் மீது அவளுக்கு இப்போது நன்மதிப்பு உண்டு.



இன்று இவனின் தொடுகையை தான் ஏன் ஏற்றுக் கொண்டோம் என குழம்பிப் போனாள். இன்று சுயநினைவில் தானே இருக்கின்றோம்.. முதலில் அவன் தொட்டதற்கு அறைந்தவள் இப்பொது அவன் தன் கைகளிலே ஏந்திக்கொண்டு வந்திருக்கின்றான் இதற்கு சும்மா இருப்பதா மனம் தன் மனதின் தடுமாற்றத்தை கோபம் எனும் முகமூடியை அணிந்துகொள்ள கோபத்துடன் அவனை பார்த்தாள்.



அவனோ அடிபட்ட சேயை அரவணைக்கும் தாயினைப் போல் அவள் காயம்பட்ட பாதத்தினை தன் கரத்தினால் மென்மையாய் வருடிக்கொண்டிருந்தான். அதில் எந்த விகல்பமும் இல்லை. ஒரு தாய் தன் சேயை வருடிக்கொடுக்கும் பாசமே அதில் வெளிப்பட்டது.



அவனின் தன்னலமில்லா பாசத்தின் முன் அவளின் கோபம் எனும் முகமூடி கழண்டு விழுந்தது. இருவருக்கும் இது முதல் சந்திப்பு என்றே தோன்றவில்லை. ஏதோ ஜென்ம பந்தமாய்....

:

“இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்
அதற்குள்ளே உன்னையே பொறுத்தினாய்


அதில் காதல் கொடுத்து மனதினுள் நீயும்
விரைந்தாய் என் தேகம் குளிர மனதிலே
பரவசம் தருகிறாய்


நீ இறகாய் என்னை தொடுகின்றாய்
அழகாய் இம்சை செய்கின்றாய்
சுகமாய் நெஞ்சில் பாரங்கள் தருகின்றாய்


உன் விழிகள் என்னும் கடிகாரத்தில்
என் காதலினை பார்க்கின்றேன்
கூரான உன் இமைகள் ரெண்டும் முள்தானே


உன்னை பார்க்கும் போதெல்லாம் காலம்
இங்கு ஓடாதே முட்கள்
என்னை குத்தாதே பேரன்பே


அதில் காதல் கொடுத்து மனதினுள் நீயும்
விரைந்தாய் என் தேகம் குளிர மனதிலே
பரவசம் தருகிறாய்.”



சிதறும்..



plz drop ur valuable comments dears..

ஷம்லாவின் "சிதற வைத்த செம்பாவையாள்" -கருத்து திரி
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'சிதற வைத்த செம்பாவையாள்'



அத்தியாயம் 09



விக்ரமுடன் தன் மனம் குறித்து பேசியதில் சற்று ஆசுவாசப்பட்ட ஷிகா ஒரு நிறைவான மனதுடனே மருத்துவமனை வாயிலுக்கு வந்து தன் ஸ்கூட்டியை உயிர்ப்பித்தவள் அதில் ஏறி அமர்ந்துகொண்டு முறுக்கி விட்டாள்.



அவள் மனம் போலவே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டி மருத்துவமனைக்கு சற்று அருகிலிருந்த சிறுவர் பூங்காவினுள் நுழைந்தது தன் இயக்கத்தை நிறுத்தியது.



கைகள் அதன்பாட்டுக்கு வண்டியை ஓட்டிக் கொண்டுயிருந்தாலும் மனம் தன்னவனின் நினைவிலே மிதந்து கொண்டிருக்க அவன் நினைவு கொடுத்த சுகமான சுமையை மனதில் சுமந்துகொண்டு வண்டியில் இருந்து இறங்கியவள் தான் நின்ற இடத்தினை பார்த்து அதிசயித்து தான் போனாள்.



மனம் எப்போதெல்லாம் மிகையான சோகத்திலும் சந்தோஷத்திலும் இருக்கின்றதோ அப்போதெல்லாம் அவள் தஞ்சமடைவது இந்த சிறுவர் பூங்காவில் தான். மழலைகளின் மழலை மொழியில் தன் துக்கம் குறைவதையும் கண்டாள். அவர்களின் சந்தோஷ பீறிடலில் தன் இன்பம் பெருகுவதையும் கண்டாள்.





இன்று மனம் சற்று மகிழ்வில் திளைத்திருக்க தன் மனதின் எண்ணம் அறிந்து தன் கைகள் தன்னை சரியான இடம் நோக்கி கொண்டு வந்து விட்டிருக்கின்றது என்ற நினைவில் இதழ்களில் மெல்லிய புன்னகையை தவழ விட்டவள் வழக்கமாய் அமரும் இடத்தில் அமர்ந்துகொண்டு சிறுவர்கள் கலகலப்பாய் சுற்றி திரிவதை வேடிக்கை பார்க்கலானாள்.



*****


“ஹர்ஷு கண்ணா சொன்னா கேட்கனும் பேபி...” மருமகனிடம் பொறுமையாய் கூறிக்கொண்டு இருந்தான் ஆர்யன்.



“முடிது மாமு... நான் போவேன்...” மூக்கை விடைக்க உதட்டை பிதுக்கி அழுவதற்கு தயாரானான் சின்னவன்.



அதை பார்த்து தலையில் அடித்த ஆர்யன் தன் தமக்கையை பாவமாய் பார்த்து வைத்தான். தம்பியின் பார்வையில் நமுட்டு சிரிப்பு சிரித்த மீரா எனக்கும் இதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனும் ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டு துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்தாள்.



அதில் பல்லை கடித்தவன் தன் மருமகன் புறம் திரும்பி அவனை பாவமாய் பார்த்து வைத்தான்.



“ஹர்ஷு கண்ணா மாமுக்கு நிறைய வேலையிருக்கு ஆபீஸ் போகணும்.. நாம வேணா நாளைக்கு போகலாம்... இன்னிக்கு நான் ஷாக்கி வாங்கி கொடுக்கட்டுமா...” ஆவலுடன் கேட்க,



மாமுவின் பதிலில் தலை சாய்த்து கன்னத்தில் கைவைத்து யோசித்த சின்னவன் என்ன நினைத்தானோ மாமவின் நெஞ்சத்தில் சப் சப்பென குத்த ஆரம்பித்தான். அது ஆறடி ஆண்மகனுக்கு தடவிக்கொடுப்பது போலத்தான் இருந்தது. இருந்தும் அழுவது போல் சின்னவன் முன்பு பாவ்லா காட்டிக்கொண்டு முகத்தை கைகளால் மூடிக்கொண்டான்.



மாமுவின் செயலில் அடிப்பதை நிறுத்தியவன் அவன் உடல் அழுகையில் குலுங்கியது கண்டு என்ன நினைத்தானோ தன் பிஞ்சு கையால் அடித்த இடத்தை தடவிக்கொடுத்தான்.



“வலிக்குதா மாமு...” மெல்லிய குரலில் கேட்டுக்கொண்டே...



மருமகனின் செயலில் அவன் நெஞ்சம் பாகாய் உருகித்தான் போனது. காயத்தை கொடுத்து அதற்கு மருந்தும் போட சிறு குழந்தைகளால் தான் முடியும் என்பதை உணர்ந்தவன் பாசத்துடன் அவனை இறுக தழுவிக்கொண்டான்.



“மாமுக்கு கொஞ்சம் தான் வலிச்சது....” அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.



“நானு...நானு...” தனக்கு முத்தமிட்ட மாமுனுக்கு தான் முத்தம் கொடுத்தவன் அவன் தோளில் சாய்ந்துகொண்டான்.



“ஹெனி... ஷாக்கி கொடுத்த டிஸ்யூம் கொடுக்க சொன்னா...” அழகாய் தன் அத்தையையும் போட்டுக்கொடுத்தான். அதை கேட்டு அப்பிடியா எனும் பாவனையில் தலையசைத்தவன் மருமகனின் முகத்தில் பரவிக்கிடக்கும் சந்தோஷத்தினை கண்டு தன் வேலையை கிடப்பில் போட்டவனாய் சின்னவனை அழைத்துக்கொண்டு அவன் செல்ல விரும்பிய பார்க்கிற்கு அழைத்துச் சென்றான்.



****

ஸ்டாப் ரூமில் மேசையில் தலைசாய்த்து கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஷாஷி. சின்ன சின்ன வேலைகள் இருப்பதால் காலையில் வீட்டில் இருந்தும் வரும்போது பெயருக்கு கொறித்து விட்டு வந்திருக்க அது இப்போது அதன் வேலையை காட்டியிருந்தது.



நிகழ்ச்சி ஆரம்பிக்கவும் உள்ளே சென்று நின்றுகொண்டவளுக்கு நேரம் செல்லச்செல்ல தள்ளாட்டமாய் இருந்தது. கைகால்கள் வலுவிழந்தது போல் இருக்க அதற்கு மேல் நின்றால் மயங்கி விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதால் அவசரமாய் அங்கிருந்து வெளியேறியவள் வெளியில் நின்றுகொண்டிருந்த மாணவர்களை அழைத்து கான்டீனில் ஏதாவது வாங்கி வரும்படி கூறியவள் ஸ்டாப் ரூமிற்குள் தஞ்சமடைந்து கொண்டாள்.



அவர்களும் அவளின் சோர்ந்த தோற்றத்தை பார்த்து அவசரமாய் கான்டீனில் இருந்து உணவு எடுத்து வந்து கொடுக்க உண்ணமுடியாமல் சிறிது நேரம் உணவை வெறித்துப்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் மயக்கம் வரும் போல் இருக்கவும் உணவை உண்டு தண்ணீரை குடித்தவள் களைப்பில் கண்ணயர்ந்து விட்டாள்.



அதற்குள் சில மணித்துளிகள் கடந்திருக்க அப்போதுதான் மெதுவாய் கண்களை மலர்த்தினாள். முன்பைவிட இப்போது பரவாயில்லை என்றாலும் எழுந்தமற மனமில்லாமல் கண்களை மூடி இருந்தவாக்கிலே இருந்தாள்.



அதற்குள் அவளை தேடி வந்த அவள் வகுப்பு மாணவி ப்ரின்சி அழைப்பதாய் கூறவும் சில நொடி அசையாமல் இருந்தவள் பின் முகத்தை சீர் செய்து கொண்டு அவரை தேடிச்சென்றாள்.



மேடையில் தோரணனையாய் அமர்ந்திருந்த ஆர்.கே. கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி ரோஹன் கிருஷ்ணா வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில் இருக்கும் நிலையை தாண்டவும் முடியாமல் தாண்டிடாமலிருக்கவும் முடியாமல் அந்த நூலிடை இடைவெளியில் அல்லாடிக்கொண்டு இருந்தான்.



யாரை பார்க்கவே கூடாது என்று வெறுப்பை சுமந்துகொண்டு இருந்தானோ இன்று அவளே அவன் கண் முன். அவளை பார்ப்போம் என கனவிலும் நினைத்திறாதவன் அவள் எதிர்பாராமல் பார்த்ததில் திகைத்துத்தான் போனான்.



அதுவும் பெண்ணவள் தோற்றம். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்த்வளுக்கும் இப்போது இருப்பவளுக்கும் தான் எத்தனை எத்தனை வித்தியாசம். அதை தான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் மேல் மலையளவு வெறுப்பு இருக்கின்றது தான் ஆனால் கடலளவு காதலும் இருக்கிறதல்லவா...



காதல் கொண்ட நெஞ்சம் அவளின் உருக்குலைந்த தோற்றத்தில் துடித்து தான் போனது. சிட்டுக்குருவி போல் சுற்றிதிரிந்தவளின் சிறகை தான் துடிக்க துடிக்க பிய்த்துவிட்டோமோ காலம் கடந்து தோன்றியது.



அதுவும் பெண்ணவளின் தள்ளாடல் கண்களில் இருந்த சோர்வு மெலிந்த தோற்றம் அத்தனையையும் ஒரு நொடியில் படம்பிடித்துக் கொண்டது அவன் விழிகள்.



அவள் சோர்ந்துபோய் அங்கிருந்து சென்றதை பார்த்து பின்னே செல்ல துடித்த கால்களை அடக்கமுடியாமல தவித்தவன் அவளை பார்த்ததும் எங்கோ ஓர் மூலையில் ஓடிச்சென்று மறைந்து கொண்ட வெறுப்பினை இழுத்துப்பிடித்து அவள் பின்னே செல்லாமல் தன்னை தானே தடுத்து நிறுத்திக் கொண்டான்.



காதல் மனமோ அவளை தாங்கிட துடித்தது. அவள் சோர்வு கண்டு தாயாய் மடிதாங்கிட ஏக்கம் கொண்டது. அவள் கரம்பிடித்து நான் இருக்கிறேன் என ஆறுதல் கூற விளைந்தது. அவளை தன் கரத்தில் அல்லாமல் நெஞ்சத்தினில் தாங்கிட துடித்தான் அந்த காதலன்.



ஆனால் அவன் நினைத்த எதையும் அவனால் செய்ய முடியவில்லை. வெறுப்புக்கும் விருப்புக்கும் இடையில் அவனின் காதல் தோற்ற வலி கோபமாய் உருமாறியது. அவள் தன்னை தன் காதலை அசிங்கப்படுத்தியதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



அதை நினைக்கும் போதே அன்று தான் அடைந்த அவமானம் நினைவில் எழ அத்தனை நேரம் அவளை காதலுடன் தாலாட்டிக்கொண்டிருந்தவன் சடுதியில் கோபமும் வெறுப்பும் ஆக்கிரமிக்க வெறுப்புடன் அவள் நினைவுகளை தூக்கியெறிந்தான்.



இவள் இல்லை என்றால் ஊர் உலகத்தில் வேறு பெண்ணே இல்லையா என்ற அலட்சியத்துடன்... ஆனால் உள்ளுக்குள் சுருக்கென வலித்தது.



விடாப்பிடியாய் அதை மறைத்துக்கொண்டவன் கம்பீரமாய் கல் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.



ஓய்வு எடுத்தினாலோ என்னவோ தெம்பு வந்தது போல் இருக்க ப்ரின்சியை தேடி சென்றவள் அவர் ஆடிடோரியத்தின் வழியால் வெளியில் வருவதை பார்த்து அவரருகில் விரைந்தாள்.



“மேம்...” தயக்கத்துடன் அழைத்தாள். அன்று ஆர்.கே. கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியின் எம்.டியை நேரில் சென்று சந்தித்து விழாவிற்கு அழைப்பு விடுவிக்கும்படி கூறியிருந்தார். அவளும் செல்வதாகத்தான் இருந்தாள்.



ஆனால் எதிர்பாராதவிதமாய் அன்று உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட அவளால் வெளியில் செல்ல முடியாது போய்விட்டது. ஆதலால் தன் சக ஆசிரியரை அழைத்து தன் நிலையை கூறி அவரை அனுப்பி வைத்திருந்தாள்.



அது அவருக்கும் தெரிந்து விட்டதில் அவள் சிறிது சங்கடப்பட்டாள். அவர் அத்தனை கூறியும் தன்னால் செல்ல முடியவில்லையே என்று. அதனாலே அவர் முன் தயக்கத்துடன் நின்றிருந்தாள் ஷாஷி.



அவரோ அவளை திரும்பி பார்த்தவர் ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு “இப்போ உடம்புக்கு பரவாயில்லன்னா ப்ரைஸ் கிவிங் நடக்க போகுது உள்ளே போய் இருக்கலாமே...” என்க, அவரின் கூற்றில் அவரை ஆச்சரியமாய் பார்த்தவள் சரி எனும் தலையாட்டளுடன் உள்ளே சென்றாள்.



****


தன் பாதத்தினை வருடிக்கொண்டிருந்தவனை பார்த்து என்னமாதிரி உணர்ந்தால் என்று கூட புரியாத மனநிலையில் இருந்தவளுக்கு உள்ளுக்குள் எதுவோ பலமாய் தாக்கியது.



அவனது செய்கையை அவளால் ஏற்கவும் முடியவில்லை அவனை விலக்கி விடவும் முடியவில்லை.. இருவிதமான மனநிலையில் தவித்தாள். உள்ளுக்குள் சொல்லமுடியா போராட்டம் நிகழ்ந்தது.



“இப்போ எப்பிடி இருக்கு...” மென்மையான குரலில் வினவியவனின் குரலில் தன்னுள் மூழ்கியிருந்த பாலா தன்னிலைக்கு திரும்பி தலையை உலுக்கிக் கொண்டவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளையே தான் பார்த்திருந்தான் ஷக்தி.



அதை பார்த்து உள்ளுக்குள் எதுவோ செய்ய தன் முகத்தை திருப்பிக் கொண்டவள் “இப்போ பரவாயில்ல...” முணுமுணுத்தாள். அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. அவனுக்கெங்கே கேட்டிருக்கப்போகின்றது...



“ஏதாவது சொன்னிங்களா...” அவள் கூறியது தெளிவாக கேட்காததால் அவன் அவள் முகம் பார்த்து கேட்க, அதில் இல்லை எனும் விதமாய் தலையசைத்தவள் காலை மெதுவாய் அசைத்து கீழே வைக்க முயன்றாள்.



அவளின் முயற்சி புரிந்தவனாய் தானே அவள் பாதத்தை எடுத்து மெதுவாய் தரையில் வைத்தவன் அவள் எழுவதற்காய் கையை நீட்டினான்.



அதில் குறைந்திருந்த அவளின் கோபம் மீண்டும் சீறிக்கொண்டு வருவது போல் இருந்தது. இவன் எந்த உரிமையில் இதையெல்லாம் செய்கிறான் என்ற கோபமே அது. மிக முக்கியமாய் இவன் எதற்கு எனக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணமும் கூட.



ஒருபக்க மனது அவன் செய்கையில் மகிழ இன்னொரு மனதோ அடியே வெட்கம் கெட்டவளே என கேவலமாய் அற்ப பதரை பார்ப்பது போல் பார்த்து வைத்தது.



‘முன்பு ஒருவனை காதலித்து ஏமாந்து தினம் தினம் அனுபவிக்கும் வலி போதாதா... இவனையும் இவன் அனுசரணையையும் ஆசையாய் பார்க்கிறாயே வெட்கம் கெட்டவள்...’ மனசாட்சியின் சாட்டையாய் சுழன்றடித்த கேள்வியில் மனதினுள் மரித்துப்போனாள் பெண்ணவள்.



தான் செய்து கொண்ட சத்தியம் என்னவானது என்ற எண்ணம் அவள் கோபத்தை அதிகப்படுத்தியது. இப்படித்தான் இன்னொருவனை கண்டால் மயங்கிவிடுவாயா கேவலமாய் தன்னை குறித்த பேசிய மனசாட்சியின் கேள்விக்கு பயந்து மீண்டும் கோபம் எனும் முகமூடியை எடுத்து அணிந்து கொண்டாள்.



“நோ தேங்க்ஸ்...” கடுகடுத்த முகத்துடன் கூறியவள் எழ முயன்றால், அடிப்பட்ட காலை பாலன்ஸ் செய்து எழ முடியாமல் போக கைகள் இரண்டையும் இருக்கையில் ஊன்றி எழ முயற்சித்தாள்.



காயம் பட்ட பாதம் நிலையாய் நிற்க முடியாமல் தடுமாற அதை பார்த்து பதறியவன் அவளருகில் வந்து ஆபத்தில் உதவி செய்யும் ஆபத்பாந்தவனாய் அவள் தோளில் கைகொடுத்து தாங்கிக் கொண்டான். அதில் பெண்ணவள் தான் விக்கித்துப் போனாள்.



இதுவரையிலும் யாரையும் இது போல் தொட்டுப்பேச கூட அனுமதித்திறாதவள் இன்று அவனின் தொடுகையில் அதிர்ச்சியின் உச்சகட்டத்தில் சமைந்து போய் அவனை நோக்கி நின்றாள்.



“தூங்கி எழுந்தா கால் வலி சரியாகிடும்... இப்போ எப்பிடி வீட்டுக்கு போவிங்க... நான் வேணா உங்ககூட வீடு வரைக்கும் வரட்டுமா...” மீண்டும் தயக்கத்துடன் இழுத்தான்.



அதில் தன்னிலைக்கு திரும்பி அவனை வெறித்துப்பார்த்தவள் தான் இருக்கும் நிலையில் வீட்டுக்கு போவதென்பது இயலாத காரியம் என புரிந்ததில் சரி எனும் விதமாய் தலையசைத்தாள். தன் நிலையை எண்ணி தன்னையே நொந்தவளாய்.



அதை கேட்டு மென்னகை சிந்தி தலையசைத்தவன் “நீங்க இங்கயே இருங்க... நான் போய் உங்க ஸ்கூட்டியை எடுத்திட்டு வரேன்...” என்றவன் அடுத்த சில நொடிகளில் ஸ்கூட்டியுடன் வந்திருந்தான்.



அதை வாசலில் நிறுத்தியவன் அவளை கைத்தாங்கலாய் அழைத்து வந்து பின்னால் அமர வைத்து தான் முன்னால் அமர்ந்து கொண்டான்.



வளைவுப்பாதையை கவனத்தில்கொண்டு ஓரளவு மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டியவன் பெண்ணவளின் அருகாமையை மனதுக்குள் பொக்கிஷமாய் சேமிக்க ஆரம்பித்தான்.



ஏனோ அவனுக்கு அவளை பார்த்ததுமே உள்ளுக்குள் எதுவோ.. என்னமோ செய்தது. அதை என்னவென்று சொல்வது என்பது கூட அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அவள் அருகாமை அவனை தடுமாற செய்தது. அவளுடன் பேச வேண்டும்போல் தோன்றியது. ஆனால் தன் நிலை உணர்ந்து அதை அடக்கிக்கொண்டான்.



வண்டியில் அமர்ந்திருந்தாலும் அவன் மேல் எக்காரணம் கொண்டும் தன் உடல் படிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் வெகுவாய் இடைவெளிவிட்டே அமர்ந்திருந்தாள் பாலா.



அதுவே அவளுள் பல எண்ணங்களை விதைக்க அதில் தடுமாறித்தான் போனாள். அவள் வாழ்க்கை எப்படியெல்லாமோ இருக்க கனா கண்டாலோ அது போலவே தன் முன் இருப்பவன் இருக்கக்கண்டு அவள் என்னமாதிரி உணர்கிறாள் என்று அவளுக்கு சரிவர புரியவில்லை.



ஆரினை காதலிக்கும் போதும் தினமும் கனவில் அவனுடன் தன் முழு ஜென்மத்துக்கான வாழ்க்கையையும் வாழ்வது போல் தான் கனா கண்டாள். அவன் வெகுவாய் அக்கறையுடன் தன்னை தாங்கிக்கொள்வதை போல் எல்லாம் கனவு கண்டிருந்தாள்.



ஆனால் அது வெறும் கனவாக போய்விட இன்று அந்த கனவு நிஜத்தில் நனவாய் அரங்கேறி இருந்தது. ஆனால் அது யாரென்றே அறியாத ஒருவனால்.



அவனுக்கு இந்த இடம் புதிது என்பதால் அவளிடம் வழி கேட்க அவளுமே இங்கு வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்ததில் தட்டுதடுமாறி வழி கூறியவள் ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.



அவளின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் ஸ்கூட்டியில் இருந்து இறங்கி அவள் இறங்குவதற்கு கை நீட்ட தடுமாற்றத்துடன் அவன் கரம் பற்றி கீழிறங்கியவள் உள்ளே செல்ல எத்தனிக்கும் போதே ஸ்கூட்டியின் ஓசையில் தோழி வந்துவிட்டாளென வெளியே வந்த ஆர்த்தி அவள் நின்ற கோலம் கண்டு சந்தேகப்படாமல் அவளுக்கு என்னவானதோ என்று பதறிப்போய் அவளை நோக்கி ஓடினாள்.



“என்னடி ஆச்சு... ஏன் இப்பிடி நிற்கிற உன்னைத்தான் கேட்கிறேன் வாயில என்ன கொள்ளுகட்டையா வச்சிருக்க வாய தொறந்து பதில் சொல்லேன்டி...” பதட்டத்தில் படபடக்க, அவளை முறைத்து பார்த்தாள் பாலா.



“ஒன்னுயில்லடி... கால்ல லேசான காயம் அவ்ளோ தான்...” என்றவள் அவன் கரத்தின் மேல் இருந்த தன் கரத்தை நாசுக்காய் உறுவி தன் தோழியை பிடிமானமாய் பற்றிக்கொண்டாள்.



அதில் அவனுக்குள் புசுபுசுவென எதுவோ பொங்கியது. அத்தனை நேரம் உணராத பெண்ணவளின் மென்மையை அவள் விலகலின் போது உணர்ந்தவன் மலரினுள் மென்மையான அவள் மென்மையில் சொக்கித்தான் போனான்.



அவளுக்கு அதுபோல் எதுவும் தோன்றவில்லை போலும் தோழியை பார்த்து உள்ளே போகலாம் எனும்படி தலையசைக்க அவளோ அதை கண்டுகொள்ளாமல ஷக்தியை கேள்வியாய் பார்த்திருந்தாள்.



“நீங்க...” யார் என தெரியாமல் இழுக்க,



அதை புரிந்து கொண்டவன் “ஷக்தி” அளவான புன்னகையுடன் கைகூப்பினான்.



அதை ஆச்சரியத்துடன் ஆர்த்தி பார்த்தால் என்றால் பாலாவோ அவனை ஆராய்ச்சியுடன் பார்த்தாள். இவனிடத்தில் ஒருவிதமான அறியாமை தோன்றுகிறதோ என அவளின் கூர்மையான கண்கள் அவனை அளவிட்டது. அவளின் பார்வையை உணர்ந்தோ என்னவோ அவன் அவள் புறம் திரும்ப அவன் திரும்புவான் என்பதை அறிந்திறாதவளின் பார்வையை அவன் பார்வையுடன் சிக்குண்டது.



****

ரோஹன் மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கிக்கொண்டிருந்தான். அந்நேரம் ஷாஷியின் வகுப்பு மாணவி பரிசு வாங்குவதற்காக மேடையேறினாள்.



ரோஹன் அவளுக்கான் பரிசினை வழங்க அவனை தயக்கத்துடன் பார்த்தவள் “நான் என்னோட க்ளாஸ் டீச்சர் கையாள இதை வாங்கனும்னு விரும்பிறேன்....” தயக்கத்துடன் எடுத்துரைத்தாள்.



அதை கேட்டு மெல்லிய சிரிப்புடன் தலையசைத்தவன் அங்கிருந்தவரை பார்த்து தலையசைக்க அடுத்த சில நொடிகளில் பெரும் தயக்கத்துடன் தலை குனிந்த வாக்கில் மேடையேறினாள் ஷாஷி.



தன் வகுப்பு மாணவியின் அருகில் வந்து பாசத்துடன் அவள் தலையை வருடிக்கொடுத்தவள் மறுபுறம் நின்ற சீப் கெஸ்ட்டை நோக்கி திரும்ப அதேநேரம் அவசரமாய் வந்த அழைப்பை வெளியில் இருப்பதாய் கூறி துண்டித்து விட்டு திரும்பினான் ரோஹன்.



அவனுக்கு பெரிதாய் அதிர்ச்சி இல்லாவிடினும் அவளை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததில் அவன் காதல் நெஞ்சம் தடுமாறித்தான் போனது. ஆனால் காட்டிக்கொள்ளாமல் அலட்சியமாய் அவளை பார்த்து வைத்தான்.



பெண்ணவளோ அதிர்ச்சியின் உச்சகட்டத்தில் சமைந்து திக்பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தாள். அவனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லையே. கிட்டத்தட்ட மூன்று வருடம்.. இந்த மூன்று வருடத்திற்குள் தான் அவனில் எத்தனையெத்தனை மாற்றம்.





முன்பை விட அழகாய் கம்பீரமாய் ஒரு நிறுவனத்தின் முதலாளி எனும் தோரணையுடன் அலட்சியமாய் நிற்பவனை பார்த்தவள் உறை நிலையில் தான் இருந்தாள்.



பார்க்கவே மாட்டோமா என ஏங்கியவனை மீண்டும் பார்த்ததில் அவள் நெஞ்சத்தில் சாரலடித்தது. துள்ளிக்குதிக்க வேண்டும் போல் இருந்தது. சிறகில்லாமல் வானில் பறப்பது போல் இருந்தது. கண்களில் நேசம் பொங்கி வழிந்தது. பரவசத்துடன் தலை முதல் கால் வரை அவனை ஆராய்ந்தாள்.



அனைத்தும் சில நொடிகளே... தான் நிற்கும் இடம் கருதி அவனிடமிருந்து தன் பார்வையை அகற்றிக்கொண்டவள் அவன் கையிலிருந்த பரிசினை வாங்கிக்கொண்டாள். வாங்கும் போது இருவரின் விரல்களும் பட்டும்படாமலும் தொட்டுத்தழுவி முத்தமிட்டுக்கொண்டது. அதை ஒருவித வெறுப்புடன் பார்த்தான் அவன். பெண்ணவள் பல நாட்களின் பின்னான அவன் தொடுகையில் சிலிர்த்துப்போனாவளாய் அதை பொக்கிஷமாய் சேமித்துக் கொண்டாள்.



தன் வகுப்பு மாணவியின் கையில் பரிசினை திணித்தவள் அவனை ஏக்கத்துடன் பார்த்தவண்ணம் கீழிறங்கிச் சென்றாள். அவளின் ஏக்கப்பார்வை அவனையும் ஏக்கம் கொள்ள செய்தாலும் மனதின் கோபத்தினால் அவளை வெறுப்புடன் பார்த்தவன் அடுத்த சில நொடிகளில் அங்கிருந்து வெளியேறினான்.



*****

சிறுவர் பூங்காவில் அமர்ந்து சிறுவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஷிகாவினை தன் புறம் திரும்பச் செய்தது ஒரு சிறுவனின் மழலை சிரிப்பொலி. அதில் திரும்பிபார்த்தவள் அங்கிருந்த சிறுவனை கண்டு கண்களை விரித்தால் என்றால் அவன் சிரிப்பினில் சொக்கித்தான் போனாள்.



அத்தனை அழகாய் இருந்தான் அவன். வெள்ளைப்பற்கள் தெரிய அழகாய் சிரித்தவனை தூக்கி கொஞ்ச வேண்டும்போல் இருக்க தன்னையும் மீறி அவன் புறம் சென்றாள்.



அங்கு தன் வயதையொத்தவர்களுடன் சிரித்துப்பேசி மகிழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தது சாட்சாத் ஹர்ஷித்தே தான்.



அவனருகில் சென்றவள் அவன் உயரத்திற்கு மண்டியிட்டு “ஹாய் பேபி... உங்க பெயர் என்ன...” கொஞ்சும் குரலில் கேட்டவளுக்கு அவனை தூக்கி கொஞ்ச வேண்டும்போல் ஏக்கம் வந்தது.



தன் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்த புதியவளை புரியாமல் பார்த்த ஹர்ஷித் அவளை அளவிடுவது போல் பார்த்து வைத்தான். தெரியாதவர்களுடன் அதிகம் பேசக்கூடாது என்பது அவனது ஹெனியின் கட்டளை அல்லவா... அதை அப்படியே பின்பற்றினான் அவளின் செல்ல மகன்.



அந்த வயதிலே அவனின் கணக்கிடும் பார்வையை கண்டு அவனை ஆச்சரியமாய் நோக்கியவள் “ஐயம் ஷிகாயா..” தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கைகளை அவன் முன் நீட்டினாள்.


அப்போதும் அவன் அவளை உற்றுபார்த்தானே தவிர பதில் பேசவில்லை. அதில் முகம்சோர அவனை பார்த்தவள் அவனை எப்படி பேச வைப்பது என புரியாமல் தவித்தாள். சிலரை பார்த்தவுடனே மனதிற்கு பிடித்துவிடும். அதுவும் குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடித்து விடும். அவளுக்குமே அப்படித்தான். அதுவும் அவன் சிரிக்கும் போது கன்னத்தில் விழுந்த குழியும் வெள்ளைக்கார குழந்தைகள் போல் இருந்த அவனின் அழகும் அவள் மனதை கொள்ளைகொண்டு விட்டது.



அவளின் முகத்தையே பார்த்திருந்தவன் அவள் முகம் சோர்வது கண்டு என்ன நினைத்தானோ அவள் கன்னத்தில் கை வைத்தவன் பின்பு தன் பிஞ்சு கையை அவள் புறமாய் நீட்டி அவள் கையுடன் இணைத்துக்கொண்டவன் “ஐயம் ஹைஷித்” ஆங்கில மொழி அவனது மழலை வார்த்தையில் தெறித்து விழுந்தது.



அதில் அவனை தன் நெஞ்சத்தோடு சேர்த்தணைத்துக் கொண்டவள் “சோ ஸ்வீட் நேம் பேபி...” கொஞ்சிக்கொண்டே அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.



“நானு நானு...” தன் ஹெனிக்கும் மாமுவுக்கும் கொடுப்பது போல் கூச்சலிட்டவன் அவள் கன்னத்தில் தன் குட்டி இதழ்களை ஒற்றியெடுத்தான்.



அதே நேரம் அவசர அழைப்பின் காரணமாக சற்று தள்ளி சென்று உரையாடிக் கொண்டிருந்த ஆர்யன் தன் கன் பார்வையில் இருந்த மருமகனை காணாது பதறிப்போய் அழைப்பை துண்டித்தவனாய் அவனை தேடி கண்களை நாலாபுறமும் திருப்பியவன் அவனின் கூச்சல் குரல் கேட்கவும் அதை கணக்கிட்டவனாய் அங்கு வர அவன் யாரோ ஒரு பெண்ணின் பிடியில் இருப்பதை கண்டு கோபம் கொண்டவனாய் அவனருகில் வந்தவன் எதிர்பாரா நேரத்தில் அவனை அவளிடமிருந்து பிடுங்கி இறுக அணைத்துக் கொண்டான்.



தன் பிடியில் இருந்த சின்னவனை திடீரென யாரோ பிடித்து இழுக்கவும் பதறிப்போய் நிமிர்ந்தவள் தன் முன் கோபம் பொங்க நின்றவனை பார்த்து அதிர்ந்து விழித்தாள்.



ஏழு வருடமாய் யாரை மனதினுள் சுமந்து கொண்டிருந்தாளோ அவன் தான் அவள் முன் நின்றிருந்தான். ஆனால் எதிர்பாராத தோற்றத்தில். கையில் குழந்தையுடன். அதை பார்த்து சொல்லொண்ணா வலி அவள் நெஞ்சத்தை பலமாய் தாக்கியது. ஒரு கணம் கூட அவனுக்கு தன் நினைவு வரவில்லையா.. மனம் ஏக்கத்துடன் முணுமுணுத்துக் கொண்டது.



மனசாட்சியோ அவன் யாரை காதலித்தானோ அவளுடன் சந்தோஷமாய் வாழ்ந்து குழந்தையும் பெற்றுவிட்டான் நீதான் தேவையில்லாத ஆசையை மனதில் வளர்த்து நொந்துகொண்டு இருக்கின்றாய்... பரிதாபத்துடன் சாடியது.



மனசாட்சியின் கூற்றில் இன்னும் உடைந்து போனவளின் கண்கள் காதல் தோற்றுப்போன வலியினை தாங்கமுடியாமல் வைரமாய் பளபளத்தது கண்ணீர் துளிகள் நிறைந்து போனதில்.



உடைந்து போன நெஞ்சத்துடன் பெண்ணவள் அவனை பார்க்க அவனோ சொல்லமுடியா உணர்வில் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.



மூன்று தோழியர்களும் மூன்று விதமான மனநிலையில்....



“இதுவரை நான் கண்டுகொண்ட உறவு
நீ தந்தது..
இதுவரை நான் கண்டுகொண்ட கனவு
நீ தந்தது...
கண்ணை மூடி கண் மேலே முத்தம்
கொடுக்கலாம் நீ சொன்னது...
கையை பிடித்துக்கொண்டே நடந்து
போகலாம் நீ சொன்னது...
மனது..மனதுக்கு வலிக்கவில்லை உணர்வு
உணர்வு இன்னும் குறையவில்லை
குறைந்தால் கண்கள் கலங்கி விடும்
வலியில் உயிரை போக்கி விடும்..”




சிதறும்....



plz drop ur valuable comments dears...

ஷம்லாவின் "சிதற வைத்த செம்பாவையாள்" -கருத்து திரி
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'சிதற வைத்த செம்பாவையாள்'



அத்தியாயம் 10



உள்ளத்தினில் பொங்கி பிரவாகமெடுத்த உணர்வுகளை முகத்தினில் காட்டாது வெறுமை சூழ்ந்த முகமாய் தன் முன் நின்றவனையே பார்த்திருந்தாள் ஷிகா.



இதயத்தினுள் கத்தியை விட்டு சுழற்றியது போல் வலித்தது. தாங்கிக்கொண்டாள். கண்களில் இருந்து கண்ணீர் அருவி கொட்ட எத்தனித்தது. அணையிட்டு தடுத்து விட்டாள்.



அவன் ஏமாற்றியிருந்தால் ஒருவேளை கண்ணீர் வந்திருக்குமோ என்னவோ... இங்கு தான் அவன் அவளை ஏமாற்றவேயில்லையே... இங்கு காத்திருந்து ஏமாந்தது என்னவோ பெண்ணவள் தான் எனும் போது கண்ணீர் விட்டு என்ன பயன்.



தான் காத்திருந்த ஏமாந்து போன கதையை எண்ணி அவள் இதழ்கள் விரக்தியில் வளைந்தது. ‘எனக்கும் இப்போ காதலிக்கனும் போல இருக்கு...’ விக்ரமின் வார்த்தைகள் காதில் ஒலித்து அவளை பார்த்து ஏளனமாய் சிரித்தது.



இன்று அவனிடத்தில் பெருமையுடன் கூறிய தன் காதல் கதைக்கு அர்த்தமேயில்லாது போனதை எண்ணி கசந்த புன்னகையை படரவிட்டவள் மௌனமாய் அவனை பார்த்தாள். அவனிடத்தில் பேச வேண்டும் போல் உள்ளம் பரபரத்தாலும் என்ன பேசுவது தான் ஏமாந்த போன வேதனைக்கு அவனை பலிகடாய் ஆக்குவதா என்ற எண்ணம் மனதை வியாபிக்க நெஞ்சத்தினை பதம் பார்த்த வலியினை தாங்க முடியாமல் விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.



ஆர்யன் என்னவென்று பிரித்தறிய முடியாத ஒரு மனநிலையில் அவளையே பார்த்திருந்தான். அன்று சிறு பெண் போன்று இருந்தவள் தற்போது சராசரி உயரத்தில் அவளின் சிவந்த மேனிக்கு எடுப்பாய் பொருந்திய இளம் சிகப்பு நிற புடவையில் தேவதை போன்று நிற்பதை பார்த்து தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்பதை வரையறுக்க இயலாதவனாய் ஒரு நொடி கண்களை மூடி திறந்தவன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டான்.



ஏழு வருடங்களுக்கு முன்பு அவள் காதலை உரைக்கும் போது ஏதோ விளையாட்டிற்காய் கூறுகிறாள் என்று தான் அன்று அவன் அவளை திட்டிவிட்டு வந்தது. அதுவும் அப்போது தன் காதல் தோற்றுப்போன சோகத்தில் உழன்று கொண்டிருந்தவன் அவளின் பேச்சினை கேட்டு கோபமும் கொண்டதன் விளைவு தான் அவளை அறைவதற்கும் கையோங்கியது.



அதன் பின் இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட அவன் அவளை பார்க்கவில்லை. அவள் படிப்பதற்காய் வெளியூர் செல்ல அவன் மேற்படிப்பிற்காய் வெளிநாடு சென்று விட்டான். இப்போது தான் சொந்தமாய் நிறுவனம் நடத்தி வருகிறான். அதில் ஏகப்பட்ட வேலைகள் இருப்பினும் பாலாவின் வேண்டுகோளிற்கு இணங்க தினமும் தன் மருமகனை காண வந்துவிடுவான்.



அவனுக்கு இருக்கும் வேலைகளில் தினமும் ஹர்ஷுவை காண அவனால் வர முடியாது தான்.. இருந்தும் தானும் இல்லாமல் அவனும் வராவிட்டால் குழந்தை மனதுடைந்து போய்விடுவான் என்பதால் பாலா ஊட்டிக்கு செல்லும் முன் அவனுக்கு அழைத்து தினமும் ஒருமுறையாவது ஹர்ஷுவை வீட்டில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டாள்.



அவள் கேட்டதற்காகவே தன் வேலைகளை கிடப்பில் போட்டு மருமகனின் பின்னால் அலைந்து கொண்டிருக்கின்றான். தன்னால் காயப்பட்டு போனவளுக்கு அவளின் வார்த்தைகளை கேட்டு நடப்பதன் மூலமாவது பிராயசித்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொடுத்த உந்துதல் அது.



அப்படி வரப்போய் தான் தன் மனதின் ஆழத்தில் இருந்தவளை பல வருடத்தின் பின் நேரில் காண்கிறான். இதற்காகவே பாலாவிற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் போல் தோன்றியது.



அன்றைய மழைநாளில் தான் அவன் பாலாவை கடைசியா பார்த்தது. அதன்பின் அவளை பார்க்கும் திராணியற்று வெளிநாடு சென்றவன் திரும்பி வரும்போது அவள் முற்றிலும் மாறிபோய் வேறு ஒருத்தியாக இருந்தாள்.



அவனுமே அப்படியொரு நிலையில் தான் இருந்தான். நிறைவேறாது என்று தெரிந்தும் வீணே காதல் கொண்டு காத்திருப்பதற்கு அவனது பக்குவப்பட்ட மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனாலும் அவனால் அவ்வளவு சுலபத்தில் அவளை மறக்கமுடியவில்லை என்பது தான் உண்மை.



முதல் முதலாய் அவனுள் காதலை தோற்றுவித்தவள்... அவள் நினைவு என்றும் அவனுள் வாடாது இருக்கும். இப்போதும் அவனுள் அவளுடனான காதல் நினைவுகள் உயிர்ப்புடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இங்கு நினைவுகள் தான் வாழ்கின்றனவே தவிர காதலின் ஆதிக்கம் காலத்தின் நீண்ட நெடிய ஆறு வருடங்களின் தாக்கத்தில் குறைந்து மறைந்து போயிருந்தது.



தன் மனதை முதலில் தீண்டிய பெண்ணவளின் காதலை காலத்தின் கட்டாயத்தில் மறந்தவன் தனக்காய் காத்திருந்த பெண்ணவளை மனதினுள் நிறுத்திக்கொண்டான். இடையிடையே அவள் நினைவுகள் எழும் போதெல்லாம் அன்றைய அவளின் தோற்றத்தை கண்முன் நிறுத்திக்கொள்வான்.



இடைப்பட்ட இத்தனை வருடங்களில் அவளின் அன்றைய தோற்றத்தை மட்டும் தன் மனதில் நிறுத்திக்கொண்டு அவள் நினைவில் இருந்தவன் இன்று அவளை நேரில் பார்த்தும் உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளை கட்டுப்படுத்தவியலாது அவளையே விழியகற்றாது பார்த்தான்.



பெண்ணவளோ முகம் கசங்கி வேதனையில் வாடிப்போய் தலைகுனிந்து நிற்க அவள் தோற்றம் அவன் மனதை அறுப்பதாய்...



அவளருகில் சென்று ஆறுதல் கூற விழைந்த உள்ளத்தை பெரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டவன் தனக்கு உரிமையான பொருளை பார்வையிடும் உரிமையாளனைப்போல் அவளை பார்வையால் மொய்த்தான்.



தன்னை துளைப்பது போல் இருந்த ஏதோவொன்றில் விழியை உயர்த்திய ஷிகா ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை தன் மனதில் காதலனாய் இருந்தவன் தன்னை உரிமையாய் பார்ப்பதை கண்டு கண்கள் மின்ன அவனை ஆர்வமாய் பார்த்தாள்.



இதற்காகத்தானே அவள் இத்தனை நாளாய் தவமிருந்தது. அந்த தவத்தின் பலன் ஏழு வருடங்கள் கழித்து அவளுக்கு கிடைத்து விட்டது. அவளுக்கு இதுவே போதும். அவனின் பார்வை ஒன்றே ஆயுளுக்கும் போதுமாய் இருந்தது. அவனின் ஒற்றை பார்வையில் பெண்ணவள் உயிர்த்தெழுந்தாள்.



அவள் காதல் நெஞ்சம் காதலில் மலர்ந்து மணம் வீசியது. அவன் பார்வையின் வீரியத்தினை தாங்கவியலாதவளாய் இதழ் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டாள். அவன் பார்வை துளைத்த கன்னங்கள் வெட்கத்தில் கூசிச் சிவந்தது செந்தாமரையாய்...



ஆனால் மறுநொடியே நிதர்சனம் முகத்தில் அறைய கூனிக்குறுகிப் போய் அவனை பார்த்தவளின் பார்வை அவளையும் மீறி அவன் தோளில் வாகாய் சாய்ந்திருந்த சின்னவனின் மேல் படிந்தது.



‘தான் என்ன காரியம் செய்துவிட்டோம்...’ தன் காதலுக்காய் ஒரு சிறு மொட்டின் வாழ்க்கையும் அவனை பெற்ற தாயின் வாழ்க்கையும் பாழாவதா... என்ன கேவலமான எண்ணம்.. தன் காதல் அத்தனை கீழ்த்தரமானதா... காதல் தன் இணையை வாழ வைத்துத்தான் பார்க்கும்... இணையின் சந்தோஷத்தை பிடுங்கிக்கொள்ளும் காதல் காதலே அல்லவே... தன் ஒருத்தியின் சுயநலத்தால் ஒரு அழகிய குடும்பம் சிதைவதா வேண்டாம்.... வேண்டாம்... அப்படியொரு காதலே எனக்கு வேண்டாம்... மனதை கல்லாக்கிக் கொண்டாள்.



மனது மட்டுமல்ல அதனுள் இருந்த காதலும் கல்லாகவே மாறிவிட்டது. உண்மை அறியாமல் தன்னவனின் நலனிற்காய் அவனின் காதல் வாழ்க்கைக்காய் வேண்டி தன் காதலை துறந்தாள் அந்த காதலி.



கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் கல்லாய் இறுகிப்போன பெண்ணவளின் காதல் நெஞ்சத்தை கரைத்து அதனுள் இருக்கும் காதலை கசிந்திட செய்வானா அவளவன்...



*****



புயல் வேகத்தில் வந்த ஆடி கார் க்ரீச் என்ற சத்தத்துடன் போர்டிகோவில் குலுங்கிக்கொண்டு நிற்க அதிலிருந்து இறங்கிய ரோஹன் வேக நடையிட்டு தன் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக் கொண்டான்.



அறைக்குள் நுழைந்தவனுக்கு மனதின் புழுக்கம் அதிகரிப்பது போல் இருக்க தலையை பிடித்துக்கொண்டவன் அறையில் குறுக்கும் நெடுக்கமாய் நடக்க ஆரம்பித்தான். நடந்ததில் கால்கள் இரண்டும் வலிக்க ஆரம்பித்ததே தவிர மனதின் வெம்மையை வெறுமையை குறைக்க முடியவில்லை.



அன்றைய நாள் நினைவில் எழ கைக்கு அகப்பட்ட அனைத்தையும் போட்டு உடைத்தான். ஆத்திரம் குறையவில்லை. கோபத்தில் நரம்பு புடைக்க நிமிர்ந்தவன் ஆளுயர கண்ணாடியில் மின்னி மறைந்த பெண்ணவளின் பிம்பத்தினை கண்கொண்டு பார்க்க பிடிக்காமல் கையில் சிக்கிய பூஞ்சாடியை கொண்டு சுக்குநூறாய் உடைத்தெறிந்தான். சில்லு சில்லாய் சிதறிப்போனது ஆளுயரக்கண்ணாடி.



அப்படியும் அடங்க மறுத்த ஆத்திரம் அவனை செயலிழக்கச் செய்ய தலை பிடித்துக்கொண்டு கத்தியவன் குளிரூட்டியில் இருந்த டின் பியர் எடுத்து தொண்டையில் சரித்தான். மது போதையிலாவது மாதுவின் நினைவு குறைகின்றதா என பரிசோதித்தான்.



ம்ஹூம்... மதுவின் போதையில் மாதுவின் நினைவு அதிகமாய் மேலுழும்பி அவனை வாட்டி வதைத்ததே ஒழிய குறையவில்லை.



சில்லு சில்லாய் உடைந்து சிதறிய கண்ணாடி சில்லுகள் அவனின் காலினை பதம் பார்த்து ரத்தம் சொட்டு சொட்டாய் வடிய அதை வெறுமையாய் பார்த்தவனுக்கு இதே போல் அன்றொரு நாள் தான் அவள் முன்பு போய் நின்றதும் அதை பார்த்து தன்னவள் பதறியதும் நினைவில் எழுந்தது.



@@@@ பொன் மாலைப்பொழுது.



அன்று நண்பர்கள் அனைவரும் இரண்டு டீமாய் பிரிந்து மேட்ச் ஆடிக்கொண்டு இருந்தனர். இறுதி ஒரு ஓவர். பதினெட்டு ரன் எடுக்க வேண்டும். ரோஹன் பாட்டிங் எடுத்திருக்க அவனது அணியினர் கத்தி கூச்சலிட்டு ஆர்பரிக்க வெற்றி பெறவேண்டும் எனும் நோக்கத்தில் தீவிரமாய் விளையாடிக்கொண்டு கொண்டிருந்தான்.



நண்பர்களிடம் செல்போனை கொடுத்துவிட்டு விளையாடுவதில் தீவிரமாய் இருந்த ரோஹனின் அலைபேசிக்கு அப்போது பார்த்து அழைப்பு விடுத்தாள் ஷாஷி.



ஒருவாரத்தின் முன்பு உடம்பு சரியில்லை எனக்கூறியிருந்தான். அதைக்கேட்டு பதறிப்போனவள் தினமும் அவனுக்கு அழைத்து பேசிவிடுவாள். ஆனால் இந்த மூன்று நாளாய் பரீட்சை நடைபெற்றதில் படிப்பதில் நேரம் செலவழிந்து விட அவனுக்கு அழைக்க முடியாமல் போய்விட்டது.



அதனால் பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்தவுடனே அவனுக்கு அழைத்திருந்தாள். அவனோ ஒருவாரமாய் வீட்டில் இருந்ததில் சலிப்பு ஏற்பட நண்பர்கள் விளையாட அழைக்கவும் அவர்களுடன் இணைந்து கொண்டவன் செல்போனை கவனிக்கவில்லை.



ரோஹனின் நண்பர்களோ விளையாட்டின் தீவிரத்தில் அவனின் செல்போனிற்கு வந்த அழைப்பை துண்டித்து விட்டுக்கொண்டிருக்க மறுபக்கத்தில் இருந்த ஷாஷியோ விடாமல் அழைத்துக்கொண்டு இருந்தாள்.



பல முறை அழைத்து ஓய்ந்து போனவள் பிஸியாக இருக்கிறானோ என்னவோ என எண்ணி அவனிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தாள். உடல்நலம் எப்படி இருக்கின்றது எனக் கேட்டு. செல்போனை வைத்திருந்த அவன் நண்பர்கள் ஒருகட்டத்திற்கு மேல் தாங்கமுடியாமல் செல்போனை அணைத்து விட்டனர்.



இறுதியில் மூன்று பால்களை தட்டிவிட்டவன் மீது மூன்று பாலும் சிக்ஸ் அடிக்க அதில் அவனின் அணி வெற்றிபெற ஆர்ப்பரித்துக் கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து வெற்றிக்களிப்பில் சுற்றித்திரிந்தவன் அதன் பின்பே செல்போனை வாங்கிப் பார்வையிட்டான்.



ஏகப்பட்ட மிஸ்டுகால் குறுஞ்செய்தி வந்து குவிந்து இருந்தது. அதை பார்த்து தலையில் அடித்துக்கொண்டவன் எதற்கு அழைத்தாலோ என பயந்துபோய் அவளின் எண்ணிற்கு அழைக்க மறுபக்கம் அழைப்பு எடுபடவில்லை.



அது குறித்து நண்பர்களிடம் பேச அவர்கள் ஒரு பெண்ணுக்காய் எங்கள் மீது கோபம் கொள்கிறாயா என ஏறுக்குமாறாய் பேச வாய்த்தகராறு முற்றி அடிதடியாய் மாறிவிட்டது.



எப்போதும் இது போல் சிறு சண்டைகள் வருவதும் மறுநாள் அதை பற்றிய எண்ணமேயின்றி ஒரு தட்டில் சாப்பிடுவதும் என்பது அவர்களுள் சகஜம் என்பதால் அதை பெரிதுபடுத்தாமல் ரோஹன் தன்னவளை காணச்செல்ல ஏற்கனவே நண்பன் தங்கள் மீது கோபம் கொள்ளவும் இதற்கு காரணமானவள் மீது பெருங்கோபத்தில் இருந்தவர்கள் அவன் அவளை காண புறப்படவும் கோபம் தலைக்கேற என்னசெய்கிறோம் என யோசியாமல் கையில் இருந்த சோடா பாட்டிலை விசுக்க அது ஆழமாய் அவனின் கையை பதம் பார்த்து விட்டது.



அதில் பதறிப்போனவர்கள் அவனை தாங்க முற்பட அவர்களை ஒற்றை கையசைவில் விலக்கியவன் தன்னவளை தேடிச்செனறான்.



அவனுக்கு அழைத்து ஓய்ந்துபோய் சோர்வுடன் தோட்டத்து மர இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஷாஷி. வீட்டினர் உறவினர் வீட்டுக்கு சென்றிருக்க அவளுக்கு துணையாய் அவளின் பாட்டி வீட்டில் இருந்தார். தள்ளாடும் வயது. சோர்வில் அவருக்கான அறையில் துயிலில் இருந்தார்.



இங்கு அவளுக்கு அவர் துணை என்பதை காட்டிலும் அவருக்கு தான் அவள் துணை. அடிக்கடி பாட்டியின் அறையை நோட்டம்விட்டுக் கொண்டாள். ஏதாவது வேண்டுமா எனும் அக்கறையான விசாரிப்புடன்.



மெல்லிய போர்வையாய் இருள் சூழ்ந்த வானம். புள்ளினங்கள் சரணடையும் நேரம். கூட்டமாய் அவை பறந்து சென்ற காட்சி அழகுற அவளுள். ரசித்துப்பார்த்தாள். உள்ளுக்குள் சிறு கவலை இருப்பினும் ஓய்வாக இருந்தால் அவனே அழைப்பான் சப்பைக்கட்டுடன் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.



வானத்தை ரசித்தவளின் செவியில் அவள் எண்ணத்தின் நாயகனின் ஹார்ன் சத்தம். இனிமையாய் தீண்டிட முகம் பிரகாசிக்க வெளி வாயிலுக்கு ஓடினாள். அவளின் வீட்டிலிருந்து சற்று தள்ளி நின்றிருந்தான்.



மூச்சு வாங்க ஓடி வந்தவள் அவன் நிற்பதை பார்த்து மகிழ்வுடன் அவனை ஆராய்ந்தாள். எப்படி இருக்கிறான் என. தூரத்தில் நின்றதில் அவன் கை காயம் அவள் கண்களுக்கு புலப்படவில்லை. அந்த நேரத்தில் சாலையோரம் யாரும் கண்ணுக்கு அகப்படாததில் சிறு படபடப்புடன் அவனருகில் சென்றவள் அவனை இமைக்காது பார்த்தாள்.



“இப்போ உடம்புக்கு பரவாயில்லையா...” தவிப்புடன் வந்து விழுந்தது வார்த்தைகள்.



அவளை பார்த்தவாறே சிரிப்புடன் தலையசைத்தான். அவன் சிரிப்பில் தானும் மலர்ந்தவள் அப்போது தான் அவன் கையில் சொட்டிக் கொண்டிருந்த ரத்தத்தினை கண்டவளாய் பதறிப்போனவள் “அச்சோ ரத்தம்... எப்பிடி அடிபட்டது... என்னாச்சு... டாக்டர்கிட்ட போகலையா... ஏன் சும்மா நிற்கிறீங்க... முதல்ல டாக்டர்கிட்ட போய் மருந்து போட்டு வாங்க... எனக்கு பயமாயிருக்கு...” கன்னத்தில் கண்ணீர் சொரிந்தது.



தன் வலியினை காட்டிலும் தன்னவளின் கண்ணீர் பெரிதாய் பட “அதெல்லாம் ஒன்னுயில்ல பேபி... நீ இப்போ எதுக்கு அழுற... மருந்து போடணும் அவளோ தானே... நீ கிட் எடுத்திட்டு வா நானே போட்டுக்கிறேன்... இப்போ கண்ணை துடைச்சிக்கோ...” குழந்தைக்கு எடுத்துரைப்பது போல் கூற அதன் பின்பே கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.



இருந்தும் அவன் மருந்து கட்டும் போது அவன் கையை தன் கையுடன் சேர்த்து இறுக்கமாய் பிணைத்துக் கொண்டாள். முடிந்தால் அவன் வலியை தன் வலியாய் தாங்கியிருப்பாள். மருந்து கட்டியதும் போடுவதற்கு மாத்திரை கொடுத்து அவன் கையை தடவிக் கொடுத்தவள் ஜாக்கிரதையாய் வீட்டுக்கு போக வேண்டும் போனதும் போன் செய்ய வேண்டும் வீணாய் வெளியில் அலைய வேண்டாம் என பல கட்டளையுடன் அவனை வழியனுப்பி வைத்தாள்.



அதை நினைத்துப் பார்த்தவனுக்கு கண்கள் கரித்தது. எத்தனை அக்கறை கொண்டிருந்தாள் இருந்தும் எப்படி அவளால் முடிந்தது... அதை நினைத்துப் பார்த்தவனுக்கு அவளின் அக்கறை வேம்பாய் கசந்தது. காலின் வலி கூட பெரிதாய் தெரியவில்லை பெண்ணவள் கொடுத்த வலியின் முன்...



வலியும் வேதனையும் ஒருங்கிணைய முகம் இரண்டையும் பிரதிபலிக்கும் வண்ணம் கசங்கியது.



*****



“யாருடி அவன்... பார்த்தா நல்லவனாட்டம் இருக்கான்...” கேள்விக்கணையால் பாலாவை துளைத்துக்கொண்டு இருந்தாள் ஆர்த்தி.



அவளின் கேள்விகளுக்கு பதிலளித்து ஓய்ந்து போன பாலா “இன்னும் எத்தனை தடவ இதே கேள்விய டிசைன் டிசைனா கேப்ப...” கடுப்புடன் முறைத்துக்கொண்டு கேட்க, அசடு வழிந்தவள் “இல்லடி....” என முடிக்கும் முன்னமே,



“இல்லடி அவன் ரொம்ப நல்லவனா இருக்கானே அதான் கேட்டேன்... இத தானே சொல்லப்போற ஆயிரத்து ஒன்னாவது தடவ சொல்லிட்ட இதுக்கு மேலயும் கேட்ட கடிச்சு கொதறிடுவேன்...” வள்ளென்று விழுந்தவள் தள்ளாடிக்கொண்டே தனக்கு ஒதுக்கப்பட்ட அறையினுள் நுழைந்து கொண்டாள்.



‘என்னாச்சு இவளுக்கு...’ செல்லும் அவளையே குழப்பத்துடன் பார்த்திருந்தாள் ஆர்த்தி.



கட்டிலில் தலை சாய்த்து அமர்ந்து கொண்டவள் வலிக்கு மாத்திரை போட்டுக்கொண்டாள். கால் வலி குறைவது போல் தான் இருந்தது. மனதின் வலி தான் விடாமல் அரற்றிக் கொண்டிருந்தது. உடலின் வலியை கூட தாங்கிடலாம் மனதின் வலியை எளிதில் தாங்கிட முடியாது.



எதை தேடுகிறோம் என்று புரியாமலே அவள் மனது எதையோ தேடிக்கொண்டு இருக்கின்றது. அது எதுவென்று தான் அவளுக்கு புரியவில்லை.



அந்த வகையறியா தேடலின் ஊடே மனது தான் இன்று சந்தித்தவனை பற்றியும் சிந்தித்துக் கொண்டது. அவளின் வக்கீல் மூளையோ எதுவோ ஒன்று சரியில்லை என்பது போல் குறுகுறுத்தது. இயல்பான மனிதநேயம் கொண்ட மனமோ அவனின் வெகுளித்தனத்தை ரசித்தது. அதை வெகுளி என்பதை விட அறியாமை என்பது சிறந்ததோ... அதையும் ஆராய்ச்சி செய்தது அவளின் மூளை.



இருந்தும் அவனிடத்தில் எதுவோ ஒன்று கவருவதாய்... அழகை பார்த்தால் அவனை காட்டிலும் அழகனை எல்லாம் பார்த்திருக்கிறாள்... கம்பீரம்... சிரிப்பு... ஆளுமை... தோரணை... இவை அனைத்தும் சராசரியை விட அதிகம் பெற்றவர்களை கூட கண்ணார கண்டிருக்கின்றாள்... இது எதுவும் இல்லை என்றால் ஒருவேளை அவனின் வெள்ளை மனதோ. அதுவாகத்தான் இருக்கும் என்று அவளுக்குமே தோன்றியது.



மற்றவர்களின் தவறை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயினது மனப்பக்குவம் கொண்டவனின் குணம் தான் அவளை பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும். இங்கு ஒருத்தருக்கும் மனமும் கிடையாது குணமும் கிடையாது. பணத்தின் மதிப்பில் அத்தனையும் கீழிறங்கிச் சென்று விட்டது.



அந்த பணத்தின் சுவடே அறியாது வளர்ந்தவனுக்கு தான் உறவின் அருமை தெரியும். அதை புரிந்து வைத்திருப்பவன் தான் ஷக்தி. பணத்தினை விட மனத்தினை மதிப்பவன். பாசத்திற்கு கட்டுப்பட்டவன். பாசக்காரன்.



ஊட்டிக்கு வந்த முதல் நாள் அவர்கள் சந்தித்த மேனேஜரின் உதவியுடன் அவரின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் வொர்க்ஷாப்பில் வேலைக்கு சேர்ந்த ஷக்தி, கேப்டன், கணேஷ் மூவரும் இப்போது அவரின் உதவியுடனே அவரின் வீட்டின் அருகிலிருக்கும் வாடகை வீட்டில் தங்கிக்கொண்டனர்.



வாழ்க்கை என்னவோ முன்பை விட நன்றாகத்தான் சென்றது. முன்பு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு பெயரிட முடியாது. இந்த வாழ்கை சொர்க்கமாகத்தான் இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மூவரும் இரவுணவை முடித்துக்கொண்டு தரையில் பாயை விரித்துப் படுத்துக்கொள்ள தூங்க முயன்றும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் ஷக்தி.



அவன் நினைவுகள் எத்தனை முயன்றும் தடுக்க முடியாமல் இன்று சந்தித்த பெண்ணவளை சுற்றியே ஓடிக் கொண்டிருந்தது. அவளை நினைத்த மாத்திரத்திலே பனிச்சாரலாய் நெஞ்சம் குளிர்ந்தது.



அவள் நினைவுடனே இதழில் உறைந்த புன்னகையுடன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான். கண்கள் மூடிக் கொண்டாலும் மூளை இயங்கிக் கொண்டிருந்ததோ என்னவோ. மூளையின் இயக்கத்தில் கருமணிகள் எதை நோக்கியோ ஓட அதை தாங்கிட முடியாமல் கருமணிகள் மூடிய விழிகளுக்குள் அலைபாய்ந்தது.



அலைபாய்ந்த விழிகளினுள் ஒரு பெண்ணின் நிழலுருவம் மங்கலாய்... தெளிவற்ற காட்சிகள் தெளிவாய் கண் முன் ஓட அதை ஜீரணிக்க முடியாமல் உடலை முறுக்கியவன் எதையோ காப்பாற்ற துடிப்பவன் போல் கைகளை வலுவாய் இறுக்கினான்.



எங்கே கைவிட்டு போய்விடுமோ என்ற பயம் நெஞ்சத்தை கவ்வியது. காப்பாற்றுவேன் எனும் நம்பிக்கையுடன் கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டவனின் இதழ்கள் முணுமுணுத்தது ஒரு பெண்ணின் நாமத்தை.



“கீர்த்தி... கீர்த்தி....” கண்ட காட்சியின் தீவிரமோ உடலை தொப்பலாய் நனைக்க உடல் தளர வலுவிழந்து போனவன் அதற்கு மேலும் போராட முடியாமல் “கீர்த்தி” எனும் பலமான கூவலுடன் எழுந்தமர்ந்தான்.



அப்போது தான் உறக்கத்திற்கு சென்று கொண்டிருந்த கேப்டன் ஷக்தியின் குரலில் பதறியடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தார்.



“என்னாச்சு ஷக்தி....” அவனை உலுக்க அதில் கேப்டனை ஒரு பார்வை பார்த்தவன் விறுவிறுவென்று எழுந்து சென்று தன் துணிமணிகளை பையில் அடைக்க ஆரம்பித்தான்.



“என்னடா பண்ற...”



“முடியல கேப்டன்... நான் கீர்த்திய பார்க்கணும்...” இயல்புக்கு மாறான உரத்த குரலில் கத்தினான்.



இவன் கத்தலில் தூக்கம் கலைந்த கணேஷ் கலக்கத்தை சுமந்திருந்த அவர்களின் முகத்தினை பார்த்து பதறிப்போய் “என்னாச்சு கேப்டன்...” சொக்கிக் கொண்டிருந்த தூக்கம் முற்றிலும் பறந்தோடி இருந்தது.



“கீர்த்தியை பார்க்கணுமாம்...” கேப்டனின் வார்த்தையில் ஷக்தியை அதிர்ந்து போய் பார்த்தான் கணேஷ்.



அவனின் பார்வையை உணர்ந்தாலும் தன் முடிவில் உறுதியாய் இருந்தவன் “நான் கீர்த்தியை பார்த்தே ஆகணும்...” ஒருவித கலவையான குரலில் வெளிவந்தது அவனது வார்த்தைகள்.



அவன் குரலில் இருந்த உணர்வை புரிந்து கொண்ட கேப்டனும் கணேஷும் “அவளோட விதி அது தான்னா நாம என்ன பண்ண முடியும்...” விரக்தியாய் கூறினர்.



அதில் கோபத்துடனும் கழிவிரக்கத்துடன் அவர்களை பார்த்தவன் “எப்பிடி உங்களால இப்பிடி சொல்ல முடியுது...” கண்கள் கலங்க கேட்டான்.



அவன் வார்த்தையில் அவர்கள் மனமும் கலங்கியது. ஆறுதலாய் அவன் கரத்தை பற்றிக் கொண்டனர்.



“நம்மால என்ன பண்ண முடியும் ஷக்தி..”



“பண்ணனும் கேப்டன்... பண்ணித்தான் ஆகணும்...” தீவிரத்துடன் வந்த குரலில் கலக்கமும் சூழ்ந்திருந்தது.



“அதுக்கு இப்போ நான் போய்தான் ஆகணும்...”



“அவசரப்படாதடா... ஷக்தி வேணான்டா...” கணேஷின் வார்த்தைகள் பதற்றத்துடன் வந்தது.



“நீ போனா... உன்னை கொன்னுடுவானுங்கடா....” கலங்கிய கண்களுடன் தொண்டையடைக்க கூறினார் கேப்டன்.



“நீயாவது இவனுக்கு புரிய வைடா...” கணேஷை துணைக்கு அழைத்தார்.



ஷக்தியை பார்த்த கணேஷின் பார்வையில் இருந்த இறைஞ்சுதலை கண்கொண்டு பார்க்க முடியாமல் தலை குனிந்தவன் கண்களை இறுக மூடி உள்ளத்தின் ஓலத்தை தடுக்க முயற்சித்தான்.



முயற்சி செய்ய மட்டுமே முடிந்த அவனால் முயற்சியை முழுமையாகக முடியவில்லை.



வாழ்க்கை இவர்கள் மூவருக்கும் எதை வைத்து காத்திருக்கிறதோ....



“உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடி பார்த்ததில் சுகம்

கண்டேன் கண்டேன் நான் தானடா
புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய் உன்னை

கண்டேன் கண்டேன் நான் தானடா
உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
உந்தன் அணைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசு தான்
கொஞ்சம் நெருக்கம் கொஞ்சம் இருக்கம்

ரெண்டும் பெண்மை கேட்கம் பரிசு தான்...”



சிதறும்....



plz drop your valuable comments..

ஷம்லாவின் "சிதற வைத்த செம்பாவையாள்" -கருத்து திரி
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'சிதற வைத்த செம்பாவையாள்'



அத்தியாயம் 11



அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்த ஷிகாவிற்கு தான் எப்படி விபத்தின்றி வீடு வந்து சேர்ந்தோம் என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது.



கையில் குழந்தையுடன் அவனை பார்த்த கணம் உலகமே ஒருநொடி தன் இயக்கத்தை நிறுத்தியது போல் அல்லவா அவள் உணர்ந்தாள். அந்நினைவு இப்போதும் அவள் நெஞ்சத்தை சுருக்கென பதம் பார்த்து முள்ளாய் தைத்தது. உள்ளத்தின் வலி கன்னத்தில் கண்ணீரின் சாயலாய் வெளிப்பட்டது. ஆனால் அழபிடிக்கவில்லை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டாள்.



“நீ அழைப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்

எனை மணப்பாய் என நான் இங்கு

காத்திருக்கிறேன் மனதாலே உனக்கு மாலை

மாற்றிக்கொண்டே கனவாலே உனக்கு

மனைவியாகிக் கொண்டே நான் இங்கு

காத்திருக்கிறேன் காலங்களை மறந்து அசையாத

சிலையாக அமர்ந்தே நான் இங்கு

காத்திருக்கிறேன் இங்கு காத்திருக்கிறேன்”



திறந்திருந்த ஜன்னல் வழி கசிந்த பாடல் அவள் நிலையை அப்பட்டமாய் எடுத்துக்காட்டியது. தனக்காகவே பாடியிருப்பார்கள் போலும் கழிவிரக்கத்துடன் நினைத்துக்கொண்டாள். உள்ளம் வெதும்பியது. துக்கத்தில் தொண்டை அடைக்க இதயத்தினுள் கூர் கத்தியை விட்டு குடைந்தது போல் வலியெடுக்க கரம் கொண்டு நெஞ்சை அழுத்தினாள்.



கண்ணீர் கரையுடன் முகம் முழுவதும் சோகத்தை அப்பிக்கொண்டு வீட்டினுள் நுழைந்த மகளை கண்டு பதறிப்போன சிவகாமி அவள் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டதும் என்னவோ என்று உள்ளம் மறுக மகளின் அறைக்கதவை தட்டினார்.



“ஷிகா... ஷிகா கதவ தொறம்மா....”



அன்னையின் குரலில் நெஞ்சை அடைத்த துக்கத்தை விழுங்கியவள் குளியறைக்குள் சென்று முகத்தை அழும்பி தாமதிக்காமல் கதவை திறந்தாள்.



“என்னம்மா....” குரல் பிசிறடித்தது. அழுகையில் கரைந்த நெஞ்சத்தின் கரகரப்பு குரலில் பிரதிபலித்தது.



“என்னாச்சு ஷிகா... ஏன்மா ஒருமாதிரி இருக்க உடம்புகிடம்பு சரியில்லையா... காபி போட்டு தரட்டுமா...”



‘உடம்பு நல்லாத்தான்மா இருக்கு... மனசு தான் உடஞ்சுபோச்சு...’ அன்னையின் கேள்விக்கு மனதினுள் பதில் கூறிக்கொண்டாள்.



“லேசா தலைவலி மாதிரி இருக்கு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாகிடும்...”



“சரிம்மா தலைவலி மாத்திரை ஒன்னு போட்டு தூங்கு...” என்றவர் மகளின் முகத்தை கூர்ந்து பார்த்தவண்ணம் அகன்றுவிட்டார்.



பெற்று வளர்த்த தாய்க்கு தெரியாத மகளை பற்றி. மகளின் முகத்தை பார்த்தே புரிந்து கொண்டார். அது தலைவலி பிரச்சினை அல்ல தலைபோகும் பிரச்சினை என்று. அதை தான் தாய் அறியாத சூல் உண்டோ என்பார்களோ. இருந்தும் அதை அவளிடத்தில் கேட்டு சங்கடப்படுத்தாமல் வந்துவிட்டார். சொல்ல வேண்டும் என்றால் அவளே தன்னிடத்தில் சொல்லுவாள் என்ற நம்பிக்கையில்.



அவளே மறக்க நினைக்கும் ஒன்றை எப்படி தன் தாயிடத்தில் கூறுவாள்.


ஹர்ஷித்தை தமக்கை வீட்டில் விட்ட ஆர்யன் நொடியும் தாமதிக்காமல் வீட்டிக்கு வந்து அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டவன் பிரித்தறிய முடியா மனநிலையில் இருந்தான்.



அவளை பார்த்ததில் மகிழ்வதா இல்லை கண்ணீருடன் தன்னை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றதை நினைத்து வருந்துவதா என குழம்பிப் போனான்.



இருந்தும் முழுதாய் ஏழு வருடங்கள் கழித்து அவளை பார்த்ததில் அவன் நெஞ்சம் களிப்பில் விம்மியது. தன் காதல் தான் கைகூடாமல் போய்விட்டது அட்லீஸ்ட் அவளின் காதலாவது கைகூட வேண்டும் என எண்ணிக்கொண்டான். முக்கியமாய் தான் அவள் கைபிடிக்க வேண்டும் எனவும் எண்ணிக்கொண்டான்.



தன்னை காதலித்தவளின் காதல் நிறைவேற வேண்டும் என உளமார எண்ணினான் ஷிகாவின் காதலன்.



அவன் மனதின் எண்ணம் முகத்தில் புன்னகையை தோற்றுவிக்க பளீர் புன்னகையுடன் படுக்கையில் சாய்ந்தவன் அவள் நினைவுகளை சுகமாய் அசைபோட்டான்.



‘ஷிகாயா... என் பெயர்... பெயரை சொல்லியே கூப்பிடுங்க...’ பதின்வயதில் இருந்தவளின் ஆர்ப்பாட்டமான குரல் அவன் செவியினில் ஒலிக்க கண் மூடி ரசித்தவன் ‘இனிமே பேரை சொல்லி கூப்பிட வேண்டியது தான்..’ மனதோடு பேசி அவளின் நினைவுகளூடே உறக்கத்தை தழுவினான்.



தூங்க வேண்டும் எனக்கூறி விளக்கை அணைத்தும் கண்களில் தூக்கம் எட்டாமல் அவன் நினைவு கொடுத்த வலியை தாங்க முடியாமல் படுக்கையில் புரண்டவளுக்கு எத்தனை முயன்றும் கண்கள் கரிப்பதை தடுக்கமுடியவில்லை.



அதற்கு மேல் முடியாமல் எழுந்தமர்ந்தவள் தலையை கைகளால் தாங்கிக்கொண்டாள். இப்போது உண்மையிலே தலைவலி மண்டையை பிளந்தது. மாத்திரை ஒன்றை போட்டுக்கொண்டவள் தலையை கையால் தாங்கிக்கொண்டே அலுமாரியை திறந்து அதனுள் இருந்த கவரை வெளியில் எடுத்தாள்.



ஆர்யனின் நினைவில் அவள் எழுதிய கவிதைகளும் அவனை தினமும் பார்ப்பதற்காய் அவனை மனக்கண்ணில் கொண்டு வரைந்த ஓவியங்களும் அவளை பார்த்து கேலியாய் சிரித்தது.



அதை பிரித்து அதில் இருந்த ஓவியங்களை வெளியில் எடுத்தவள் வழக்கம்போல் ஒவ்வொன்றாய் பார்வையிட்டாள்.



அவன் இருப்பது போன்ற ஓவியம், அவனும் அவளும் இருப்பது போன்றது, அவர்களுக்கு திருமணம் ஆவது போன்று, தாய்மை பூரிப்புடன் அவள் கர்ப்பம் தரிப்பது போன்று, பிறந்த குழந்தையை அவன் கைகளில் ஏந்திய போல், அவர்களின் மகவு வளரும் பருவங்கள், இறுதியில் அவர்களின் முதுமை தோற்றம் என தாங்கள் இப்படியெல்லாம் வாழ வேண்டும் எனும் எண்ணத்துடன் அவள் வரைந்த ஓவியங்கள் அவை.



இதற்கு மேலும் இதை வைத்திருப்பது நியாயமன்று என வாதிட்ட மூளை அதை கிழித்தெறிய கட்டளை இட்டது. காதல் வாதையில் வாடிய நெஞ்சம் நிஜத்தில் உறவாட முடியாதவனை நிழலிலாவது பார்த்து வாழ ஆசை கொண்டு அதை பொக்கிஷமாய் பாதுகாக்க முயன்றது.



காதல் நெஞ்சமோ மூளையின் சொற்படி நடவாது மனதின் சொல் கேட்டு மீண்டும் அதை பத்திரப்படுத்தியது. ஆனால் மறு நிமிடமே அதை கசக்கி தூர வீசினாள். ‘அவன்’ நினைவில் அதை காக்க முயன்றவள் ‘சின்னவனின்’ நினைவில் தான் செய்ய துணிந்த காரியத்தை எண்ணி நொந்துபோய் தரையில் மடிந்து அமர்ந்து கதறியழுதாள்.



சிலவற்றை மறந்து விட்டேன் என்று வாயால் கூறலாமே தவிர மனதால் கூறுவது கடினம் தான். ஏனென்றால் சிலவற்றை அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது.



இப்போது அவள் நிலையும் அது தான். அவனை மறந்து விட்டதாக மனதை கல்லாகிக் கொண்டவள் இப்போது அவனை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் உள்ளம் கதற தவித்து துடித்துப் போனாள்.



மறுநாள் காலையில் வீங்கி சிவந்த முகத்துடன் மருத்துவமனை செல்ல தயாராகி வந்த ஷிகா ஒன்றும் பேசாது சாப்பாட்டு மேசையில் அமர்ந்தாள்.



காலையுணவை பரிமாறிக்கொண்டிருந்த சிவகாமி அவளின் வீங்கிய முகத்தையும் சிவந்திருந்த கண்களையும் ஓர் நொடி கூர்ந்தவர் அதை வெளிக்காட்டாமல் “தலைவலி இன்னும் கொறயலையா ஷிகா...” வாய் கேள்வி எழுப்பினாலும் கைகள் கணவனுக்கும் மகனுக்கும் பரிமாறிக்கொண்டிருந்தது.



மகளின் வரவில் நிமிர்ந்து பார்த்த சிதம்பரம் அவளின் வீங்கிய முகத்தை பார்த்து அதிர்ந்து போய் சாப்பிட்டில் இருந்து கையை எடுத்தவர் மனைவியின் கூற்றில் மகளுக்கு தலைவலி என்றறிந்து கவலையுடன் அவளை பார்த்தார்.



“தலைவலியா... மாத்திரை போட்டியாம்மா...”



தந்தையின் கேள்வியில் வெறும் தட்டை அளந்துகொண்டிருந்தவள் அவரை நிமிர்ந்து நோக்கினாள்.



“ஆ... ஆ.. ஆமாப்பா போட்டேன்... இப்போ கொஞ்சம் பரவாயில்ல...” மென்று முழுங்கினாள்.



தமக்கையின் செய்கையை விசித்திரமாய் பார்த்த சுரேன் அவளின் மேல் ஒரு கண் வைத்தவாறே தட்டில் இருந்த உணவை வாயில் திணித்தவன் விரைவாக உண்டு விட்டு கல்லூரி செல்வதற்காய் ஆயத்தமாகியவன் கல்லூரி செல்லும் முன் தமக்கையின் அறையினுள் நுழைந்தான்.



ராத்திரி படித்துக்கொண்டிருக்கும் போது தண்ணீர் தீர்ந்து போயிருக்க தண்ணீர் எடுக்க சமையல் அறைக்கு செல்ல வெளியில் வந்தவன் தமக்கையின் அறையை கடக்கும்போது உள்ளிருந்து எதுவோ சத்தம் கேட்க, இந்நேரத்தில் செல்வது சரியில்லை என்று விட்டவன் அவள் உணவு உண்ண அமர்ந்ததை பார்த்து அவளின் அறைக்குள் சென்று நோட்டம் விட்டான்.



மூளையில் கசங்கிக் கிடந்த பேப்பர்களை பார்த்தவன் கல்லூரி செல்லும் அவசரத்தில் அதை தன் பையினுள் திணித்துக்கொண்டு அவசரமாய் அங்கிருந்து அகன்று விட்டான்.



அன்னை தட்டில் உணவு பரிமாற மறுக்க முடியாமல் வாயில் திணித்து நீரை விழுங்கியவள் மருத்துவமனைக்கு புறப்பட எத்தனிக்க விரைவாக சென்ற மகளை தடுத்து நிறுத்தினார் சிவகாமி.



“ஷிகா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்மா...”



கைக்கடிகாரத்தை பார்த்தவள் தாயை கேள்வியாய் நோக்கினாள்.



“நேரமாச்சும்மா ஈவ்னிங் வந்ததும் பேசிக்கலாமே...”



அன்னை எதை பேசப்போகிறாரோ எனும் பயத்தில் தப்பிக்க முயல அவரோ அவளை அழுத்தமாய் பார்த்து வைத்தார். பதட்டத்தில் முகத்தில் வியர்வை துளிகள் அரும்ப கைகளை பிசைந்தவாறு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.



சிதம்பரம் பேங்க் மேனேஜர்... ஆதலால் சாப்பிட்டு முடித்த கையோடு மகளிடம் நலம் விசாரித்தவர் பேங்க் கிளம்பி சென்றுவிட்டார்.



கணவருக்கு விடைகொடுத்து மகனையும் கல்லூரி அனுப்பி வைத்தவர் பாத்திரங்களை சிங்கில் போட்டுவிட்டு மகளின் அருகில் அமர்ந்து அவளை ஆராய்ச்சியாய் பார்த்தவாறே பேச ஆரம்பித்தார்.



முதலில் அவரின் பேச்சை புரியாமல் கேட்டவள் பின்பு சாராம்சம் புரிந்து நெஞ்சம் அதிர திடுக்கிட்டு போய் அன்னையை வெறித்துப்பார்த்தாள்.



இவளைப்போன்றே இவளின் தோழி ஷாஷியும் பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தவள் நேற்றைய அவனின் நினைவை அசைபோட்டு அவன் கண்களில் கண்ட வெறுப்பினை இப்போதும் நேரில் காண்பவள் போன்று கண்மூடி ஜீரணித்துக் கொண்டவளுக்கு அதற்கு மேல் எதையும் செய்ய முடியவில்லை.



ஓய்ந்து போய் கட்டிலில் அமர்ந்தவள் விட்டத்தை வெறித்துப்பார்த்தாள். விழிகள் கலங்கி சிவந்தது. மனதின் பாரத்தை தாங்கமுடியாமல் விரல் நகங்கள் ஒன்றை ஒன்று பந்தாடின. உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வர இதழ்களை அழுந்த கடித்தாள். பற்களுக்கு இரையான இதழ்களில் ரத்தம் கசிந்தது.



மகள் இன்னும் கிளம்பி வராததில் அவளின் அறைக்குள் நுழைந்த கண்மணி மகள் அமர்ந்திருந்த தோற்றத்தை கண்டு துணுக்குற்றார்.



“ஷாஷி என்னடா....” தலையை வருடி பாசமாய் கேட்ட அன்னையின் குரலில் தன்னை கடிந்து கொண்டவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.



கண்களில் கவலை படிய தன்னையே பார்த்திருந்த தாயை கண்டு தன் சோகத்தை மறைத்துக் கொண்டவள் இதழ் பிரித்து சிரித்தாள்.



அதில் ஜீவனில்லாததை கண்டுகொண்டவர் பதறிப்போய் ஆதுரத்துடன் அவள் தலை வருடி உச்சி முகர்ந்தார். அவளுக்கு இருப்பத்து நான்கு வயதாகிய போதும் அவளின் தாய்க்கு அவள் இப்போதும் சிறு குழந்தை தான்.



அதற்குமேல் தாமதிக்க முடியாமல், அசைய மறுத்த கால்களை இழுத்து பிடித்து வைத்தவள் உணவுண்ண அழைத்த அன்னையை சமாதானப்படுத்தி ஒருவழியாய் பள்ளிக்கு புறப்பட்டாள். அங்கு தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்.



நகரின் மையத்தில் பணக்கார்கள் வசிக்கும் குடியிருப்பில் வெள்ளை பளிங்கு மாளிகை போன்றிருந்த வீட்டில் இரண்டு பக்கமும் நீண்டு விரிந்திருந்த படிகட்டில் பழுப்பு நிற பேன்ட் வெள்ளை நிற முழுக்கை சட்டை அதற்கு பொருத்தமான பழுப்பு நிற கோர்டில் அட்டகாசமாய் தலை கோதி படிகளில் இறங்கினான் ரோஹன் கிருஷ்ணா.



ஆறடியில் வயதுக்குரிய வளர்ச்சியுடன் கம்பீரமாய் இளம் புன்னகை முகத்துடன் மாடிப்படிகளில் இறங்கி வந்த பேரனை, ஹாலின் நடுநாயகமாய் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து பாசத்துடன் பார்த்தார் பூங்கோதை நாச்சியார்.



வெளிப்பார்வைக்கு கடுமையுடன் அதிகார தோரணையில் பணக்கார மிடுக்குடன் வலம் வருபவர் அவரின் பேரனின் முன்பு சாதாரண பாட்டியாய் மாறிப்போய்விடுவார்.



அவன் பிறந்து கைகளில் ஏந்திய நொடிப்பொழுதில் அவனை பாசத்துடன் பார்த்து வாஞ்சையாய் புன்னகைத்தவர் இன்று அவனுக்கு இருபத்தெட்டு வயதாகிய போதும் அதே மிதமிஞ்சிய பாசத்துடன் அவனை பார்த்திருந்தார்.



அதை பார்த்தவனின் கண்கள் பனித்தது. உள்ளத்தில் எரிமலை குழம்பாய் கோபம் வெறுப்பு கழிவிரக்கம் என அனைத்தும் அதிகபட்சத்தில் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த போதும் பாட்டியின் முன் அதை காட்டாமல் சிறு சிரிப்பை உதிர்த்தான். அதேநேரம் அவன் பார்வை வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்களின் மேல் விழுந்தது.



பூங்கோதையின் வலது பக்கமிருந்து சோபாவில் அமர்ந்து ‘தி எகோனாமிக் டைம்ஸ்’ பிசினஸ் நியூஸ் படித்துக்கொண்டிருந்தார் அவரின் மகனும் ரோஹன் கிருஷ்ணாவின் தந்தையுமான கிருஷ்ணபிரகாஷ். ஐம்பதை தொட்ட வயதிலும் அத்தனை கம்பீரமாய் இருந்தார்.



அவரின் சரிபாதி மாலதிபிரகாஷ் மடிகனணியில் வந்து கொண்டிருந்த மெயில்களை சரிபார்த்துக்கொண்டிருந்தார். mr&mrs பிரகாஷின் மூத்த மகன் ரஞ்சித் கிருஷ்ணா செல்போனில் வெகு தீவிரமாய் உரையாடிக்கொண்டு இருந்தான். அவர்களின் கடைசி மகளான நித்யஸ்ரீ ஐபேடில் முக்கிய குறிப்புகளை எடுத்தபடி அதில் தலை புதைத்திருந்தாள்.



பெற்ற மகனை காட்டிலும் உடன் பிறந்த சகோதரனை காட்டிலும் அவர்களுக்கு அவர்களின் வேலைகளே முக்கியமாய் பட தங்கள் கடமையை சரிவர செய்து கொண்டிருந்தனர். குடும்பத்தின் ஆணிவேரே அன்பு தான். இந்த பணக்கார வீட்டில் அது பஞ்சமாய் போய்விட்டது.



படிகளில் இறங்கியபடியே அவர்களை பார்த்த ரோஹனின் இதழ்கள் கசப்பாய் புன்னகை சிந்தியது. பேரனின் முகத்தையே பார்த்திருந்த பூங்கோதை நாச்சியார் அவன் மனதின் வாதையை உணர்ந்து ஆறுதலாய் அவனை பார்த்தார். அதை உணர்ந்தவனின் உள்ளம் நெகிழ்ந்தது.



அவன் குடும்பத்தில் இருக்கும் எவரும் காட்டாத பாசத்தை காட்டிய அவனின் பாட்டியினால் (அவனுக்கு மட்டும் செல்லா) மட்டுமே அவன் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறான். இல்லை என்றால் இந்நேரம் அவனை புதைத்த இடத்தில் பெரும் காடே உருவாகியிருக்கும்.



அந்தளவுக்கு பாசத்துக்காய் ஏங்கிப்போய் இருந்தான். அவனின் ஏக்கம் புரிந்தோ என்னவோ கடவுள் அவனுக்காக படைத்திருந்த பெண்ணவளை அவன் கண்ணில் காட்ட அவளை பார்த்த கணத்தில் இதயத்தில் காதல் மொட்டு அரும்ப அவளை பின்தொடர்ந்து அவளுடன் காதலால் இணைந்து அத்தனை சந்தோஷமாய் இருந்தான்.



அவனின் செல்லா கூட அவன் மீது அந்தளவு பாசம் நேசம் வைத்திருப்பாரா என்றால் தெரியாது என பதில் கூறுமளவுக்கு அவள் அத்தனை காதலை அவன் மீது வைத்திருந்தாள். அவள் காட்டிய காதலில் கரைந்து போய் உலகம் மறந்திருந்தான். அது அந்த கடவுளுக்கு பொறுக்கவில்லை போலும்.



பெண்ணவளின் பாசம் நேசம் தனக்கு மட்டுமே எனும் கர்வத்தில் தலைகால் புரியாமல் சிறகடித்துப் பறந்தவனின் சிறகை நொடியில் பிய்த்து எறிந்திருந்தாள் அவன் காதலி. நான் வைத்தது பாசம் அல்ல வேஷம் என்பது போல். சந்தர்ப்பவசத்தால் நடந்த நிகழ்வில் அவர்களின் காதல் சுக்குநூறாய் உடைந்து சிதறிப்போனது. அத்தனையும் காற்றோடு காற்றாய் மாறி பறந்து விட்டது.



இப்போது மீண்டும் அவன் பாசத்துக்கு ஏங்கும் மழலையாய் மாறிப்போனான். ஆனால் இம்முறை அதை யாரிடத்திலும் கட்டாமல் மறைப்பதிலும் வல்லவனாய் மாறிப் போயிருந்தான். ஒருமுறை பட்ட அடி ஆறாத வடுவாய் அவனுள் கனன்று கொண்டிருந்தது.



புன் சிரிப்புடன் பாட்டியின் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தவன் அவரின் தோளில் தலைசாய்த்துக் கொண்டான். சிறுபிள்ளை போல். அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்த அனைவரும் அவனின் செயலில் முகத்தை சுழித்தனர்.



“வாட்’ஸ் திஸ் ரோஹன்” முகச்சுழிப்புடன் கேட்டார் மாலதி.



அதில் தலையுயர்த்தி பார்த்தவன் “புரியலை...” உதடு பிதுக்கி தலை குலுக்கினான்.



அதில் மருமகளை கண்டிப்புடன் பார்த்த பூங்கோதை “மாலதி..” அழுத்தமாய் அழைக்க, அதில் அவரை புரியாது பார்த்தவள் தன் கணவனை கண்களால் பொசுக்கி “பிரகாஷ்...” என்றார் அழுத்தத்துடன்.



மனைவியின் குரலில் பேப்பரில் இருந்து தலையுயர்த்தியவர் “மாலு... கூல்...” என்றவாறே இளைய மகனை பார்த்தார்.



“ரோஹன் டிட்ன்ட் கோ டு ஆபீஸ்...”

அவரின் கேள்விக்கு பதிலளிக்க முற்பட்ட பேரனை கண்களால் தடுத்தவர் “இன்னையிலிருந்து ரோஹன் ஸ்கூலோட பொறுப்பையும் சேர்த்து எடுக்கட்டும்...” கண்டிப்புடனான குரலில் கூறியவர் மறுத்து ஏதோ கூற முயன்ற மகன் மருமகளை ஒற்றை பார்வையிலே வாய் மூட வைத்தார்.



“ரோஹன்... டுடே யூ ஆர் கோய்ங் டு டேக் சார்ஜ் ஒப் ஸ்கூல்... ஐ ஹேவ் ஆல்ரெடி கம்ப்லிடேட் தி அரேன்ஜ்மேன்ட்ஸ்... சோ டுடே யு ஹேவ் டு கோ டு ஸ்கூல் அன்ட் தென் கோ டு தி ஆபீஸ்...” என் முடிவே இறுதியானது என்பது போன்றதொரு குரலில் கூறியவர் தன் அறை நோக்கி சென்றார்.



பாட்டியின் பேச்சில் தலை குலுக்கி சிறு சிரிப்பை உதிர்த்து உங்கள் பேச்சை மீற மாட்டேன் என்பது போல் அவரை பார்த்தவன் தன் காரை நோக்கி சென்றான்.



உள்ளுக்குள் அவளை காண்போமா எனும் ஏக்கம் கரையனாய் அரித்தாலும் அவளை காணவே கூடாது என வெறுப்புடன் எண்ணிகொண்டான்.



தாமதமாய் வந்ததில் அரக்கபறக்க பள்ளியினுள் அடியெடுத்து வைத்த ஷாஷி மயான அமைதியில் இருந்த பள்ளியை புரியாமல் பார்த்தவண்ணம் உள்ளே நுழைய இவள் வரவிற்காகவே காத்திருந்தது போல் எங்கிருந்தோ வேகமாய் ஓடி வந்த பியூன் “ஷாஷி மேம் உங்கள கரஸ் சீக்கிரமா வர சொன்னாங்க...” என்றவன் அதே வேகத்தில் நில்லாமல் ஓடிவிட்டான்.



அதை புரியாமல் பார்த்தவள் கரஸின் அறைநோக்கி சென்று நாசுக்காய் கதவை தட்டினாள்.



“எஸ்...” ஆண்மையின் இலக்கணத்துடன் உள்ளிருந்து வந்த குரலில் நெஞ்சம் அதிர உடல் வெளுக்க தலை குலுக்கி சமன் செய்தவள் நகர மறுத்து கால்களையும் அதிர்ந்து துடித்த நெஞ்சத்தையும் வெகுவாய் கட்டுப்படுத்தி உள்ளே நுழைய, அங்கு கண்ட காட்சியில் நெஞ்சம் பதற விக்கித்துப்போய் நின்றாள்.



பூமி பிளந்து தன்னை உள்ளிழுக்காத எனும் ஏக்கமும் அதிர்வும் ஒன்றாய் அவள் விழிகள் பிரதிபலித்தது.



இவளை போன்றே விழிகளில் அதிர்வும் அதனுள் சற்று சந்தோஷமும் அதை வெளிக்காட்டாமலிருக்க முயற்சித்தும் முடியாமல் பளிங்கு நிலவாய் முகம் பிரகாசிக்க முகங்கொள்ளா புன்னகையுடன் அவர்களை பார்த்திருந்தாள் ஷாஷியின் தோழி மதுபாலா.



இன்னும் சில நாட்களில் திருமணம் களைகட்ட ஆரம்பித்துவிடும் என்பதால் அதற்கு முன்னர் ஊர் சுற்றிப்பார்க்க ஆசைகொண்ட மதுபாலா ஆர்த்தியை ஒருவழியாய் சமானதானப்படுத்தி வெளியே கிளம்பியிருந்தாள்.



அவள் காலை பதம் பார்த்து வந்ததில் இருந்து அவளை வெளியில் எங்கும் செல்லவிடாமல் அன்புத்தொல்லை செய்தவள் இன்று முழுதாய் குணமாகிய போதும் சிலபல கட்டளைளுடனும் ஆயிரம் பத்திரமுடனும் தன் ஸ்கூட்டியை கொடுத்து வெளியே செல்ல அனுமதித்திருந்தாள்.



ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு வந்தவளுக்கு திடீரென ஷக்தியின் நினைவு வர முகம் குப்பென வியர்க்க அதிர்ந்து போய் வண்டியை ஓரங்கட்டினாள்.



காலை நேரத்து பனிபடர்ந்த ரோஜாவாய் அழகுற காட்சியளித்தது வியர்வை துளிகள் பரவிய செம்பாவையாளின் வெண்தாமரை முகம்.



இயற்கையிலே சிவந்த செவ்விதழ்கள் படபடப்பில் தவித்து துடிக்க அதை தாங்க மாட்டாமல் பற்களால் கீழுதட்டை சிறை செய்து கொண்டாள்.



குளிர்ந்த தென்றல் காற்று பாவையாள் மேனி வருடி நேற்று உணராத ஆடவனின் தொடுகையை இன்று உணர்த்த முற்பட்டது. அதில் பெண்ணவளின் மேனி கூசிச் சிலிர்த்து அடங்கியது.



நெஞ்சுக்குள் ரயிலோடும் ஓசை. நேற்று உணராத அவன் தொடுகை இன்று அவன் கரம்பட்ட பாதத்தில் உணர்ந்தவளின் கால்பாதம் குறுகுறுத்தது. அதில் தளிர்மேனியாளின் வதனம் நடுங்கியது.



தன் உள்ளத்து உணர்வுகளை பிரித்தறிய முடியாமல் திகைத்துப்போய் நடுவீதியில் தடுமாறி நின்றாள் மதுபாலா. பலரின் வழக்குகளை வாதாடி அதை தன் திறமையான பேச்சாலும் நேர்கொண்ட பார்வையாலும் எதிராளியை ஒன்றுமில்லாமல் உடைத்தெறிந்து வெற்றி வாகை சூடி அவர்களுக்கான நீதியை வழங்கியவள் இன்று தன் நெஞ்சத்தில் மலர்ந்தும் மலராமலும் ஊசலாடிக்கொண்டிருந்த காதலுக்கு நீதி வழங்க முடியாமல் தன் உணர்வு செல்லும் பாதை சரியானதா என கணக்கிட முடியாமல் தன் உள்ளத்தை மறைத்து அதை வெளிப்படுத்த முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க பனி மறைத்த வானை வெறித்துக்கொண்டு நின்றாள்.



அவளின் தடுமாற்றம் உணர்ந்து பரிதாபப்ட்ட கடவுள் பெண்ணவளின் மனதின் உணர்வை அதன் நிலையை அவளுக்கு புரியவைக்க முயன்றார் மழலைகளின் சிரிப்பொலியின் மூலம்.



கவனம் சிதற மழலை மொழி தெறித்து விழுந்த திசையினை பார்த்தவள் மீண்டும் அதிர்ந்து போனாள். ஒரு நாளைக்குள் அவளும் எத்தனை அதிர்ச்சியினைத் தான் தாங்குவாள் எனும் நிலையில் தான் திகைத்துப்போய் நின்றாள்.



காரணம் அவள் வண்டியை ஓரங்கட்டிய இடம். ஷக்தியின் நினைவுகளின் ஓட்டத்தில் அவனின் வீட்டின் முன்னே தன் வண்டியை நிறுத்து கீழிறங்கி இருந்தாள். அது எப்படி சரியாய் அவன் வீட்டின் அருகில் வந்ததும் வண்டியை விட்டு இறங்கினோம் என்பது புரியாதவளாய் குழம்பியவளின் பார்வை அவளையும் மீறி திறந்திருந்த வாயிற்கதவின் வழியே உள்ளே பாய்ந்தது.



மழலைகள் மட்டுமன்றி தள்ளாடும் வயதினில் மழலைகளாய் மாறிப்போன வயது முதிர்ந்தவர்களும் அருகிலிருக்கும் வீடுகளில் வேலை செய்யும் வேலைக்கார பெண்களும் அந்த காலை நேரத்து புத்துணர்ச்சியுடன் தங்களை மறந்து சிரித்துக்கொண்டு இருந்தனர்.



கைகளை மேலே உயர்த்தி கீழே குனிந்து சத்தமாய் சிரித்துக்கொண்டிருந்தவர்களை பார்த்து அவள் இதழ்களும் சிரிப்பில் விரிந்தது.



சிரிப்பு யோகா. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. சிறார்கள் விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்துவருகிறார்கள். வயதானவர்களும் சிரிப்போடு துள்ளிக் குதித்துக்கொண்டே இந்த யோகாவைச் செய்துவருகிறார்கள். முதியவர்களும் குழந்தைகளாக மாறிப் போகிறார்கள். மிகவும் நெருக்கடியான இன்றைய வாழ்க்கைச்சூழலில் அனைவருக்கும் அருமருந்தாக இந்த யோகா இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை



மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிரிப்பு யோகா நல்ல மருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து செய்துவந்தால், அதிலிருந்து குணமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.


நம் நுரையீரலில் 6.8 லிட்டர் அளவு அசுத்தக் காற்று உள்ளது. நாம் சிரிக்கும்போது 5 லிட்டருக்கும் மேல் அசுத்தக்காற்று வெளியேறி, அதே அளவுக்கு நல்ல காற்று உள்ளே செல்கிறது. இது உடலுக்கு உற்சாகத்தைத் தரும்.



அதை தன்னை சுற்றியுள்ளோருக்கு கற்றுக்கொடுத்திருந்தான் ஷக்தி. வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும். இன்றும் அதேபோல் அனைவரையும் ஒன்றுகூட்டி தானும் அவர்களுடன் இணைந்து செய்து கொண்டிருந்தான்.



அதை தான் பெண்ணவள் இமைசிமிட்டாது பார்த்திருந்தாள்.



ஒருத்தனால் எப்படி எல்லாருக்கும் உதவ முடிகிறது. அன்று யாரென தெரியாத தனக்கு உதவினான். இன்று பலருக்கு தன்னால் முடிந்த நல்லதை செய்கிறான். இவனை எந்த கணக்கில் சேர்ப்பது என்பது புரியாமல் பளீர் புன்னகை முகத்துடன் சிறு குழந்தையை கையில் வைத்திருந்தவனை அளவிட்டாள்.



“முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ
மனசில் எதையோ மறைக்கும் விழியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு

மனசைத் திறந்து சொல்லடி வெளியே...”


சிதறும்....



plz drop your valuable comments for me..
(கதை எப்பிடி இருக்குன்னு ஒரு வரியில் சொல்லுங்க பிரெண்ட்ஸ்... அப்போ தான் சீக்கிரமா இதை முடிச்சிட்டு அனி ஷௌரியோட வரலாம்)


ஷம்லாவின் "சிதற வைத்த செம்பாவையாள்" -கருத்து திரி
 
Status
Not open for further replies.
Top