‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்!
இனிய தோழி,
வடம் தேடிய வழக்கில்
வெளுக்காத கிழக்கு!
அவன் காதல் கை பிடிக்க
அவள் காதல் கை கொடுக்க
கெட்டிமேளம் கொட்டி இங்கு
இருமனமும் துடிக்க...
மணம் கொண்ட மாறனின்
மாறாத காதல்...
மனம் கொன்ற பேதையின்
தீராத காதல்...
மனதை பூட்டி
உளக்கிடங்கை மறைத்தவள்...
அகத்தை மீட்டி
காதலாழியை திறந்தாளோ...?
வஞ்சிக்கப்பட்டவள்
வஞ்சியவள் என்றால்
தண்டிக்கப்பட்டவன்
தடம் மீறுவானே...!
தடம் மாறிய வழக்கில்
புடம் போட்ட பெண்மை
வடம் பிடிக்கும் வழக்கில்
வழுவாத நீதியில்
மனுநீதி யாரோ...?
நீதி கேட்ட இலக்கில்
வழுவாத மேன்மையில்...
ஜென்மம் கடந்தாலும்
பந்தம் அறுந்தாலும்
சொந்தம் புரிந்தாலும்
வித்திட்ட வினைக்கு
விளக்கங்கள் சொல்லாமல்...
பித்தான தந்தைக்கு
இளக்கங்கள் காட்டாமல்...
நீதியில் வென்றவன்
மனு நீதி என்று...
தன் தலை கொய்து
கோலோச்சினான் அரசனே!
வாழ்த்துகள் தோழி, நன்றி.
ஒரு வித்யாசமான, ஜென்ம பந்த பாசங்களை உயிரூட்டி, உணர்வால் மெருகூட்டி, மனதை மிரள வைத்த நடைக்கு என் இனிய வாழ்த்துகள் தோழி. விட்டு விட்டு படித்தாலும், தொட்டுத் தொடர்ந்த காதலது, மனதை கட்டி இழுத்த காருண்யம், எழுத்தரசி மொழிக்கு தமிழ் தந்த பெருமையே! அது எங்கள் மனம் வென்ற இனிமையே!
இந்த கதை, கற்பனையாய் நின்றாலும், காட்சிகளின் தெளிவில், கண்முன் நர்த்தனம் ஆடிய அழகு, பேரழகு.
சரத் சந்திரனவன் வழுவாத நீதிக்கு, கலியுக காவியத்தில், இது காப்பிய தோரணமே!
மீண்டும் ஒரு அழகிய காதல் கதையில், மேஉம் மேலும் உங்கள் கதையை ரசிக்க காத்திருக்கிறேன் தோழி. வாழ்த்துகள், நன்றி.