‘உன்னைத் தொடர்வேன்! உயிரால் தொடுவேன்!!’ -எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் தேடலான தேன் சுவை காவியம், இது கூதலான முதுமொழிக் காப்பியம்!
இனிய தோழி,
எதிரான அதிரடிக் காதலுடன்
புதிரான அதிரடிக் கூதலுடன்
ஆர்ப்பாட்டமான தொடரில்
தொடர்பவர் யாரோ...?
தொடுபவர் வேறோ...?
கேள்விக்கு விடைகள்
கேள்வியாய் நின்றாலும்
வேள்வியாய் கொன்றாலும்
காலத்தின் மாற்றத்தில்
காயமான நினைவுகள்
கோலத்தின் மாற்றத்தில்
காதலான நனவுகள்..
கண்கட்டு வித்தையாய்
கட்டிப் போட்டு அடித்தாலும்...
நிஜமான வாழ்வில்
கனவான கூதலும்
நிழலான வாழ்வில்
நனவான காதலும்
ஆழ்மன ஓட்டத்தில்
அரிதாரம் கலைக்காதோ...?
இளமையின் ஆட்டத்தில்
சமதர்மம் என்பது
காமத்தில் வாழும்
காந்தர்வம் என்றால்...
காதலில் வாழும்
கண்ணியம் எல்லாம்...
காற்றோடு காற்றாய்
காணாமல் போக...
பேச்சோடு பேச்சாய்
போதாமல் நீள...
நான் என்ற இலக்கில்
நாராசமானது அன்பும் பண்புமே!
இங்கு...
ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை...
காதல் களி ஆட்டத்தில்...!
காதல் என்பது....
கலவு சேர்ந்த கூடலா...?
இது இன்றைய புது மொழி!
எனில்...
கற்பு என்பது...
முதுமொழியில் பிழையான ஓர் ஒலியே!
தயக்கம் இல்லா பெண்மையும்
முயக்கம் கொள்ளா ஆண்மையும்
நவீன உலகில் நாகரீகம் பேச...
தான், தனக்கு என்ற ஆசை...
சுய நல உலகில் சுகவீனம் தானோ...?
வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
இன்றைய அத்தியாயம், நான் இன்றைய லவ் டுடே பார்த்த அன்று கொடுத்த அதே வலியை மீண்டும் உணர்த்தியது தோழி. அன்றும் இன்றும் ஒரே உணர்வுதான். படம் என்றும் கதை என்றும் தள்ளி விட நினைத்தாலும், இன்றைய இளைய சமுதாய கோட்பாடுகள் வெற்றிக்கு வித்திட்டாலும், சுய நல ஓட்டத்தில் புத்திக்கு வித்தாகாதோ என்ற வலி. நாளைய சமுதாய வீழ்ச்சிக்கு விதைத்திட்ட விதைகளை, அன்பும் பண்பும் வளர்க்கும் எழுத்துக்கள் உளி கொண்டு செதுக்கட்டுமே என்ற ஆற்றாமை என்னை மீறி எழுகின்றது தோழி!. இந்தக் கதை நீங்கள் எடுத்த விதம் இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஓர் வழிகாட்டலாய் அமையட்டும் தோழி. வாழ்த்துகள் தோழி நன்றி.