All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? இந்த பதிவு முதலிலிருந்து மனதில் நின்றதோ இல்லையோ ஒரு situation song போட்டு எங்கள் முகத்தில் ஒரு சிரிப்பை வரவைத்தீர்கள் பாருங்க ஹா! ஹா! அப்படியே அப்பட்டமாக பொருந்திவிட்டது அந்த இடத்தில்...

ராம் சொல்வது உண்மைதான்.. தனி மனிதனாய் சுதந்திர மனிதனாய் ஜெயித்தவன் இதயம் மட்டும் தோல்வியில் இருக்கவிடலாமா? சரியான நேரத்தில் அழகான முடிவை எடுத்துள்ளான்...

ரன்வீர் கண்டுகொண்டான் இருந்தும் ராமின் சமாளிப்பு அற்புதம்... ராம் நாயகன் ஆத்மி வசனகர்த்தா அர்ஜூன் வில்லன்... ஸ்ரீ மேம் இதற்கு மேலாவது அவர்கள் காதல் அழகாக செல்லும் என்று பார்த்தால் அர்ஜூன் சொன்னது திடுக்கிட வைக்கிறது... எத்தனை பேருடா வருவீங்க எங்க ராமிற்கு வில்லனா? நான் கூட நினைத்தேன் ஸ்ரீ மேம் கண்டிப்பாக ராம் வருவான் விமான நிலையத்திற்கு என்று.. ஆனால் ஆத்மி இனிமேல் அவனை மட்டுமே நினைக்க இப்படியெல்லாமா செய்வான்... ஹா! ஹா! ஸ்ரீ மேம் இந்த generationஐ மிஞ்சி விட்டீர்கள்...

ஆர்ப்பாட்டமான குதூகலமான பாடல்..

ராமின் அதிரடி காதலை காண ஆவலுடன்...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்.. நன்றி..

நன்றி சாந்தி :)
ஹா ஹா அந்த பாடலை டைப் பண்ணும் போதே எனக்குமே சிரிப்பு தான். அதில் எஸ்கே சேட்டை சிரிப்பை வரவழைக்கும். இந்த எஸ்கே எழுதும் போதும் சிரிப்பு தான் வந்தது. எத்தனை வில்லன் வந்தால் என்ன… இருவரின் மனதில் இருப்பதும் ஒன்று தான். அந்த காதல் அவர்களை இணைத்து வைக்கும்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2
இனிய தோழி,


ஆத்மனின் அவதாரத்தில்
ஆத்மியவள் அரிதாரம்!

ஆத்மியவள் ஆரோகணத்தில்
ஆத்மனவன் ஆலோலம்!

ஆலோலம் பாடும் ஆத்மராகம் -அதன்
பூபாளம் கேட்டால் ஆறாதோ சோகம்!

அவள் பக்கம் கோபத்தில்
அவன் பக்கம் தாபத்தில்
கோபத்தின் தாபத்தில்
இருபக்கம் இணைந்திட்டால்
ஆத்மத்தின் ராகம்
இசைக்காதோ மறுபக்கம்!

அர்ஜுனப் பிரவேசம்
அவதார ராமனுக்கு
மைத்துனனின் அவதாரமோ!

காதல் கிளிகளின்
கிச்சு கிச்சு பாசையில்
கிறங்கும் மனதை
என்னவென்று நான் சொல்ல?

ஆத்மராக சந்தத்தில்
ஆனந்தத்தின் வெள்ளோட்டம்!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 

vijirsn1965

Bronze Winner
Ram Jesika vuku poonkoththu koduththu Aadhmikavai kaduppakki vittan piragu avaluiku oru poongoththu koduththu avalai kovapaduthi paarkiraan nantra vaithu seikiraan Aadhmiyai avalai vittu vilaguvathu pola sentru eppothum avalai avan ninaipil irukkumpadi paarthukolkiraan nalla idea ithu avanuku antha dadhthi Aadhmikavai vida intha kovappadum Aadhmikavai thaan romba pidithirukkirathu Ram than aattaththai aarambiththu vittaan oru padaththil Vadivelu baril sentru eval enaku akka magal aaha veandum kaiyai pidiththu ezhuthena katti pidiththeana entru comedy pannuvaar athu pola Ram Aadhmikavai katti pidiththeana muththam koduththeana entru semmaiyai kalaaithu kondirukkiraan super poonga avalai oru vazhi aakkaamal vidamattan polum muthal kaatchiyil maartram veandum entru solli Ram kodukkum vilakkam abharam superb mam vegu vegu arumaiyana ud mam viji
 

Kalai karthi

Well-known member
ராம் அவளை கோபப் படுத்தியும் சீண்டி யும் அவளை தன்னை நினைக்க வைக்கிறது அழகு. ராம் அவனுடைய நியாயமான காரணத்தையும் சொல்லுகிறது சூப்பர். சுவாரஸ்யமாக போகுது கலா sis.❤❤❤❤
 
Top