All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

ஶ்ரீகலா

Administrator
Kozhuppai paathingala avanuku avala எப்படி வெறுப்பு ethuraan டேய் இது எல்லாம் romba over...... சூர்யா ஆத்மி இங்க வர vechi ராம் ah வெறுப்பு eththanumne avalodaya கதை ah avan appa kita solli produce panna sollitaan avanum அதுல வில்லன் ah நடிக்க poraan ah.... ரன்வீர் ku therijidichi ram thaan ஆத்மி ah vara vechi இருக்கான் nu...... ஆத்மி avalaala தனியா face panna முடியும் nu நம்பிக்கை oda வந்து இருக்கான்.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super mam.... Semma semma episode

நன்றி சித்ரா :)
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!


இனிய தோழி,





சின்னஞ்சிறு பிராயத்திலே


உதித்திட்ட அன்பு - இதில்


மெல்ல மெல்ல மலர்ந்ததம்மா


வித்திட்ட நட்பு !





புதுப் பூவாய் மணம் வீசும்


புன்னகையின் மொழி பேச


பூஞ்சாரலில் உயிர்ந்திட்ட காதல் - அது


மாஞ்சோலையில் மகிழ்ந்திட்ட கூதல்!





காதல் வந்த வேகத்தில்


மோதல் வந்த விவேகத்தில்


காலம் காட்டிய ரோகத்தில்


விழித்துவிட்ட துரோகம் - அது


காதலை ஜெயித்திட்ட பிரயோகம்!





காதல் அது தத்தளிக்க


கடமை அது பரிதவிக்க


காலத்தின் தீர்ப்பில்


கானலாய் போனதோ காதல்!





பழி தீர்த்த மன்னன்


பாவம் தீர்த்த கண்ணன்


விதி போடும் கோட்டில்


படி தாண்டி விட்டான்!


கடமை அழைக்க


கண்ணியம் காத்தவன்


காதலலையில் சிக்காமல்


பாசக் கூட்டில் பவித்திரமாய்


புகுந்திட்ட காதல் மகன்...


ஆசுவாசம் கொள்வானோ...?


ஆனந்தமாய் வாழ்வானோ...?


வாழ்த்துகள் தோழி, நன்றி.





அடுத்த பாகத்தில் படிக்க காத்திருக்கலாம்.... இது முதல் பாகம் முடிந்த விமர்சனம்.

 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? இந்த பதிவு முதலிலிருந்து மனதில் நின்றதோ இல்லையோ ஒரு situation song போட்டு எங்கள் முகத்தில் ஒரு சிரிப்பை வரவைத்தீர்கள் பாருங்க ஹா! ஹா! அப்படியே அப்பட்டமாக பொருந்திவிட்டது அந்த இடத்தில்...

ராம் சொல்வது உண்மைதான்.. தனி மனிதனாய் சுதந்திர மனிதனாய் ஜெயித்தவன் இதயம் மட்டும் தோல்வியில் இருக்கவிடலாமா? சரியான நேரத்தில் அழகான முடிவை எடுத்துள்ளான்...

ரன்வீர் கண்டுகொண்டான் இருந்தும் ராமின் சமாளிப்பு அற்புதம்... ராம் நாயகன் ஆத்மி வசனகர்த்தா அர்ஜூன் வில்லன்... ஸ்ரீ மேம் இதற்கு மேலாவது அவர்கள் காதல் அழகாக செல்லும் என்று பார்த்தால் அர்ஜூன் சொன்னது திடுக்கிட வைக்கிறது... எத்தனை பேருடா வருவீங்க எங்க ராமிற்கு வில்லனா? நான் கூட நினைத்தேன் ஸ்ரீ மேம் கண்டிப்பாக ராம் வருவான் விமான நிலையத்திற்கு என்று.. ஆனால் ஆத்மி இனிமேல் அவனை மட்டுமே நினைக்க இப்படியெல்லாமா செய்வான்... ஹா! ஹா! ஸ்ரீ மேம் இந்த generationஐ மிஞ்சி விட்டீர்கள்...

ஆர்ப்பாட்டமான குதூகலமான பாடல்..

ராமின் அதிரடி காதலை காண ஆவலுடன்...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்.. நன்றி..
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2


இனிய தோழி,


காலம் மாறிய கோலம் - இதில்
மங்கை அவள் ராதை!
ஆயக் கலையில் வித்தகி!

ராதையின் காதல்
ஆத்மராகம் பாட
அந்தராத்மா உறங்காமல்
ராமன் முகம் தேட..
ராதை உயிர்ப்பாளா...?
ராகம் இசைப்பாளா...?
தேடாத ராமனின்
தெய்வீகக் காதலில்...
ராதையும் கோதையும்
அவதார சீதைகளே!
ராமனுக்கு சீதை தான்
சீதைக்கு ராமன் தான்
சீதா ராமனவன்
பத்தினிக்கு எந்நாளும்
ஆரண்ய வாசம் தான்!

காலம் மாறிய கோலம் - இதில்
கண்ணன் அவன் மன்னன்!
மாயக் கலையில் வித்தகன்!

மன்னனின் காதல்
ஆத்மராகம் பாட
அந்தராத்மா உறங்காமல்
சீதை முகம் தேட...
ராமன் உயிர்ப்பானா...?
ராகம் இசைப்பானா...?
நாடாத சீதையின்
தெய்வீகக் காதலில்...
மன்னனும் கண்ணனும்
அவதார ஆத்மனே!
ஆத்மிக்கு ஆத்மன் தான்
ஆத்மனுக்கு ஆத்மிதான்
ஆத்மராகமவள்
ஆத்மனுக்கு எந்நாளும்
ஆத்மி அவள் சுவாசம் தான்!

பாகம் இரண்டானாலும்
தாகம் தீராக் காதல் - இது
யாகம் செய்யும் மோதல் - அதன்
ரோகம் தீர்ந்தால் கூதல்!

பாசத்தின் கூட்டில் அவன்
நேசத்தின் கூட்டில் அவள்
பாசத்தின் ஓட்டத்தில்
நேசத்தின் ஆட்டத்தில்
ஆத்மராகம் தேடும் வேளை
ஆத்மாக்கள் பாடுமோ நாளை
காதலெனும் சங்கீதம் கீதை!

வாழ்த்துகள் தோழி, நன்றி.
 

ஶ்ரீகலா

Administrator

"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!


இனிய தோழி,





சின்னஞ்சிறு பிராயத்திலே


உதித்திட்ட அன்பு - இதில்


மெல்ல மெல்ல மலர்ந்ததம்மா


வித்திட்ட நட்பு !





புதுப் பூவாய் மணம் வீசும்


புன்னகையின் மொழி பேச


பூஞ்சாரலில் உயிர்ந்திட்ட காதல் - அது


மாஞ்சோலையில் மகிழ்ந்திட்ட கூதல்!





காதல் வந்த வேகத்தில்


மோதல் வந்த விவேகத்தில்


காலம் காட்டிய ரோகத்தில்


விழித்துவிட்ட துரோகம் - அது


காதலை ஜெயித்திட்ட பிரயோகம்!





காதல் அது தத்தளிக்க


கடமை அது பரிதவிக்க


காலத்தின் தீர்ப்பில்


கானலாய் போனதோ காதல்!





பழி தீர்த்த மன்னன்


பாவம் தீர்த்த கண்ணன்


விதி போடும் கோட்டில்


படி தாண்டி விட்டான்!


கடமை அழைக்க


கண்ணியம் காத்தவன்


காதலலையில் சிக்காமல்


பாசக் கூட்டில் பவித்திரமாய்


புகுந்திட்ட காதல் மகன்...


ஆசுவாசம் கொள்வானோ...?


ஆனந்தமாய் வாழ்வானோ...?


வாழ்த்துகள் தோழி, நன்றி.





அடுத்த பாகத்தில் படிக்க காத்திருக்கலாம்.... இது முதல் பாகம் முடிந்த விமர்சனம்.

"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2


இனிய தோழி,


காலம் மாறிய கோலம் - இதில்
மங்கை அவள் ராதை!
ஆயக் கலையில் வித்தகி!

ராதையின் காதல்
ஆத்மராகம் பாட
அந்தராத்மா உறங்காமல்
ராமன் முகம் தேட..
ராதை உயிர்ப்பாளா...?
ராகம் இசைப்பாளா...?
தேடாத ராமனின்
தெய்வீகக் காதலில்...
ராதையும் கோதையும்
அவதார சீதைகளே!
ராமனுக்கு சீதை தான்
சீதைக்கு ராமன் தான்
சீதா ராமனவன்
பத்தினிக்கு எந்நாளும்
ஆரண்ய வாசம் தான்!

காலம் மாறிய கோலம் - இதில்
கண்ணன் அவன் மன்னன்!
மாயக் கலையில் வித்தகன்!

மன்னனின் காதல்
ஆத்மராகம் பாட
அந்தராத்மா உறங்காமல்
சீதை முகம் தேட...
ராமன் உயிர்ப்பானா...?
ராகம் இசைப்பானா...?
நாடாத சீதையின்
தெய்வீகக் காதலில்...
மன்னனும் கண்ணனும்
அவதார ஆத்மனே!
ஆத்மிக்கு ஆத்மன் தான்
ஆத்மனுக்கு ஆத்மிதான்
ஆத்மராகமவள்
ஆத்மனுக்கு எந்நாளும்
ஆத்மி அவள் சுவாசம் தான்!

பாகம் இரண்டானாலும்
தாகம் தீராக் காதல் - இது
யாகம் செய்யும் மோதல் - அதன்
ரோகம் தீர்ந்தால் கூதல்!

பாசத்தின் கூட்டில் அவன்
நேசத்தின் கூட்டில் அவள்
பாசத்தின் ஓட்டத்தில்
நேசத்தின் ஆட்டத்தில்
ஆத்மராகம் தேடும் வேளை
ஆத்மாக்கள் பாடுமோ நாளை
காதலெனும் சங்கீதம் கீதை!

வாழ்த்துகள் தோழி, நன்றி.

நன்றி செல்வி :)
அருமை அருமை… அழகான கவிதையில் கதையினை வடித்த பாங்கு அழகு, அழகு, அழகு :)
 
Top