All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அவல என்னமோ solli ஏமாத்துறான்..... Iva ஏன் இப்படி இருக்கா romba innocent ethuku payapudanum ram இல்லனா enna அமர் kita கேட்டு நிர்வாகம் panna வேண்டியது தான்..... என்னத்த panninaanu theriyala avan kuda தனியா pogavo irukkavo appadi payapuraa...... அவன் avanga kita velai paakuraven தானே அது sonna avanuku ஏன் கோபம் வருது..... அவனும் அனாதை ah avanga asharam வந்தவன் தானா...... ரன்வீர் வீடு la avanuku avanodaya அத்தை பொண்ணு ah kalyaannam panni veikkanum nu ninaikiraanga போல இவன் aathmika va love பண்றான்.... Iva அமர் kitayum solla maatengira.... Super Super mam... Semma semma episode
2nd ud padichachu amar anjaliku nallavanana ram yenoaathmikavuiku kettavanahi poonaan ithil unmaiyahave ranveer rai love seikiraala ud very nice superb mam(viji)
"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்!
இனிய தோழி,
ஆத்மன் அவன் மிடுக்கில்
ஆத்மி அவள் தடுக்கில்
ஆடும் ஆட்டத்தில்
அமரனவன் நிலை என்ன?
கேள்விக்கு விடையை
தேடும் எண்ணங்கள்...
ஆத்மராக ஓட்டத்தில்
தடுமாறும் வண்ணங்கள்...
எழுத்தரசி நடையில்
நிலை மாறும் கள்ளங்கள்!
உள்ளங்கள் இரண்டும்
உறவாடும் அன்பில்
ஊடுபா போல
உறுத்தும் முள் எதுவோ?
அவள் பார்வையில் தவிப்பு
அவன் பார்வையில் பழிப்பு
தவிப்பும் பழிப்பும்
பலியில் வீழ்ந்தால்
பாழாய் போவது எது?
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஆத்மிகா ராமை நிர்வாகத்திலிருந்து தள்ளி நிறுத்த நினைக்க அவன் தற்காலிமாக அவளை தள்ளி நிறுத்தி அதிர்ச்சியடைய செய்த பதிவு...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் ஆத்மிகா மனம் படும் பாட்டை அவளின் முகமே அவள் பெற்றோருக்கு காட்டி கொடுத்துவிட்டது... அவள் ஏதோ சொல்லி சமாளிக்க அஞ்சலி சமாதானம் ஆனாலும் சிறந்த தொழிலதிபரான அமருக்கோ ஆராய்ச்சி பார்வை தன் மகளின் மேல்... அதுவும் தன் மகள் ராம் பார்க்கும் தொழில்களை தான் பார்ப்பதாக சொல்வது இன்னும் சந்தேகம் வலுத்து அவளிடம் விசாரிக்க அவள் பதில் சொல்வதற்குள் அவளை காப்பாற்ற வந்து விட்டான் நம் நாயகன்..
அவளை அழைத்து கொண்டு செல்லும் போது ஒவ்வொரு தனிமையிலும் அவனை கண்டு அவள் பயந்து நடுங்க... ஆனால் அலுவலகத்திற்கு வந்தவுடன் அவள் செய்த நக்கலில் அவன் முகமும் மனமும் இறுகி அவளே தொழிலை கவனித்து கொள்ள சொல்லிவிட்டு அவன் வேறு கிளைக்கு சென்றவுடன் தன்னை விட்டு அவன் சென்றாலும் அவளுக்கு தனியே தொழிலை நிர்வகிக்க பயப்பட அதற்கும் அவனையே அழைத்தாள்...
அப்பப்பா! ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண்முன் உயிரோவியங்களாய்... அற்புதம் ஸ்ரீ மேம்...
ரன்வீர் ஆத்மிகாவை விரும்புகிறான்... ஆனால் ஒவ்வொரு உணர்விற்கும் ராமையே தேடும் ஆத்மிகாவின் நிலை??? அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.