ஶ்ரீகலா
Administrator
View attachment 29556
"ஆலி, ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் "அன்பின் அடைமழை அது வாழ்வின் வசந்தமே!" என்ற இலக்கணம் வகுத்த காவிய இலக்கியம்! அது காதலின் மகத்துவம்!
இனிய தோழி,
சுயம்பு அவன் சுழற்சியில்
அமுத மழையவள்
சுழன்றிட்ட காதை!
வர்ஷினி அவள் வசியத்தில்
ஸ்கந்த வேலனவன்
கரகமாடிய காதை!
பணம் படுத்தும் பாட்டில்
குணம் மாறிய வஞ்சம் - இது
மனம் படுத்தும் பாட்டில்
தினம் மாறிய தஞ்சம்!
ஆற்றின் நீரோட்டம்
வெள்ளத்தின் பிரவாகம் என்றால்
வாழ்க்கையின் வேரோட்டம்
உள்ளத்தின் பிரவாகம் அன்றோ!
உள்ளங்கள் பேசும் உன்னதம் - இது
கள்ளங்கள் காட்டும் ஊர்வலம்!
சுயம்பு லிங்கத்தின் ஆட்டத்தில்
இனிப்பும் கசப்பும் சமம் என்றால்
உப்பும் உறைப்பும் பதம் வென்றால்
துவர்ப்பும் புளிப்பும் நிறைதானே!
அறுசுவையின் ஆனந்த தாண்டவம் - அதில்
ஆதிசக்தியின் ஆலிங்கன மோகனம்!
கிராமத்து மனங்களின் தெம்மாங்கில்
கூடிக்களிக்கும் ஆரவாரம் - இதில்
உன்மத்தம் கொண்டது மனமென்றால் - அதில்
பொய்யொன்றும் இல்லை, இயல்பே தான்!
முள்ளாய் தைத்த வார்த்தையில்
கல்லாய் சமைந்தது மனம் என்றால்
சொல்லால் விதைத்த வார்த்தையில்
வில்லாய் வளைந்ததும் மனம் தானே!
வெடுக்கும் துடுக்கும் சரிபாதி
மிடுக்கும் எடுப்பும் அவன் ஜாதி
கடுத்து கனத்து நின்றாலும்
காதல் தேடிய அழகென்ன...?
அதன்...
காருண்யம் கண்ட தெளிவென்ன!
தாயும் ஆனவன்
தாய்மையைப் போற்றிய
நெஞ்சங்கள் எல்லாம்
தகப்பன்சாமி இவன்
தரணியை மிஞ்சய
தாளாத அன்பில்
வீழாத மனமும் வீழ்ந்திடுமே!
மீளாத அன்பில் வாழ்த்திடுமே!
வார்த்தைகள் வரவில்லை தோழி, உணர்வுகளின் போராட்டத்தில் மனம் தவிக்க தவிக்க ஒரு கதை. ரமணி அம்மாவின் ரோஜா முள் வாசித்த நாட்களுக்குச் சென்ற நிலை. அப்பப்பா, என்ன ஒரு மனப் போராட்டம். புத்தகமாய் படித்ததால் கிடைத்த அந்த நிம்மதி, அமைதி. ரசித்து ரசித்து லயித்து படித்ததில் கடைசி 150 பக்கம் அதன் அழுத்தம். என்ன ஒரு கதை தோழி. வாழ்வின் முப்பரிமானமும் காட்டிய கதை. அன்பின் பண்பு இருந்தால் தன்மானம் கூட பின்னால் போகும் என்று உணர்த்திய தெளிவு.
தன்மானம் மீறிய காதல் - அது
தன்மானம் போற்றும் கூதல்!
காதல் கூற்றில் மனம் சிலிர்த்தாலும்
கூதல் காற்றில் உடல் சிலிர்த்தாலும்
அன்பின் ஊற்றில் அகம் சிரித்திட்டால்
அடங்காத மனமும் அடைக்கலமாகுமே!
என்ற காவிய இலக்கணம் படைத்த பேரழகுக் காவிய இலக்கியம் சொன்ன எழுத்தரசியின் எழுத்து நடைக்கு தலை வணங்கி வாழ்த்துகிறேன். காலத்தின் தேவை உணர்ந்து சொல்லிய இந்த அற்புதக் கதைக்கு என் இனிய வாழ்த்துக்கள். இன்னும் பல பல அற்புதம் படைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் தோழி,
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
நன்றி செல்வி
வாவ்… ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க… ஸ்கந்தன் ஒரு தனிப்பிறவி… அவனை அம்ருவால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்… கிராமத்தான் கோபத்தில் கொந்தளித்து, பின்பு தத்தளித்து காதல் கொள்ளும் தத்தையின் அழகான வாழ்க்கை கதை… உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி… ரொம்ப அவசரமா, வேகமா 12 நாட்களில் எழுதி முடித்த கதை… அதனால் கொஞ்சம் பயமா தான் இருந்தது. எப்படி இருக்கிறது என்று… ரமணியம்மா ரோஜாமுள் எல்லோருக்கும் பிடித்த கதை. அதன் தாக்கத்தை இது கொடுத்திருக்கிறது என்பதை கேட்கும் போது… இதைவிட வேறு என்ன வேண்டும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கவிதை அருமை மா…