காமுகன் ஒருவனின் கயமை தனத்தால் விளையும் விளைவே கதை தளம்...சிதைந்த சீரற்ற நிலத்தை சிறந்த அறுவடையாக செய்ய முடியுமா... முடியும் என்று காட்டி தன் எழுத்தால் வாசகர்களின் இதயங்களையையே வெற்றிக்கு பரிசாய் தட்டி சென்றிருக்கிறார்.. ...நம் அன்பையே அருவடை செய்து....நமது அபயனின் மிளிரின் பிரம்மா....நம் இதயம் கவர்ந்த செல்ல மாமி...நயனிமா......
அன்னையாய் வளர்த்த தன் தமக்கையின் கதறலுக்கு.... தன் கண் முன்னே நடந்த உயிரை உறைய வைக்கும் கொடுங்கோலனின் கோர தாண்டவதத்துக்கும்.....அதன் பிறகு அவள் மீளா துயரில் மாளாது உழன்றதுக்கும் ....அதனால் அவனது வாழ்க்கை சொல்ல முடியாத அவலத்துக்கு ஆளானதுக்கும்...சிறிய வயதில் வன்மமாய் வஞ்சினமாய் வளர்த்தது...பருவ வயதில் அவனை வதைக்க அவனைப்போலவே பலி எடுத்து பழி தீர்க்க புறப்படுகிறான்...
காதல் என்ற போர்வைக்கு பின்னால் ஒளிந்து தன் இச்சையை நிறைவேற்ற கல்யாணம் என்ற புனித பந்தத்தை கையில் ஏந்துகிறான் கிராதகன்...
கல்யாண முடிந்த அன்றே அவன் வேஷம் கலைகிறது ...அவன் வைத்திருந்த துருப்பு சீட்டினால்.... பெண்ணவள் கணவனே ஆனாலும் துரோகியானவனை தூர நிறுத்துகிறாள்... விளைவு கொடுர மிருகத்தினும் கேடாய் தன் குருர அரங்கற்றத்தினை நிகழ்த்தி விட்டு சென்றுவிடுகிறான்...
ஆனால் காத்திருந்து பழியெடுக்க வந்தவனோ கன்னியவளை கண்டவுடன் காதலில் விழுகிறான்...
நெருப்பாய் தகித்த நினைவுகலையெல்லாம் நெய் ஊற்றி வளர்த்து தன் நினைவு கொன்று அவளை உயிரை கொன்று புதைத்து தன்னுடைய வித்தை விதைத்து விட்டு சென்றுவிடுகிறான் ....
எல்லோருக்கும் விடிந்த பொழுது அவளுக்கு மட்டும் விடியா பொழுதாய் விடிந்தது.....
தன் தந்தையின் வாயிலாக தன்னிலையின் காரணத்தையறிந்து இடி விழுந்தது...உயிர் கொடுத்தவனும் பொய்த்தான்....உயிரில் கலந்தவனும் பொய்த்தான்...
காலம் யாருக்கும் காத்திருக்காது.....புது புது அனுபவங்களோடு புதிய விடியல்கல்களோடும்....அவளுக்கும் விடிந்தது....ஆரா ரணங்களால் உண்டான குருத்துக்கள் தான்....ஆனால் அவள் காயத்துக்கு மருந்தானது...
அப்படியே சென்று விட்டால் வாழ்க்கையென்னும் ஆசானுக்கு மதிப்பேது....
விதி சிரித்து விளையாடியது...
இனிமேல் வாழ்க்கையில் யாரை இனி காணக்கூடாது என்று வைராக்கியத்தில் வாழ்ந்தாலே....சசகலமுமாக யாரை நினைத்து தன்னை அர்பணித்தாலே சறுகாய் அவள் வாழ்க்கையை மாற்றிவிட்டு மறைந்தானே.....
அவனே எதிரில் நின்றான்.....
நித்தம் நித்தம் நிம்மதி இழந்து.....பாவம் செய்யாமலே பாவத்துக்கு சம்பளாமாக்ககப்பட்டாலோ அவனே நின்றான்...அதே கம்பிரத்துடன்....
ஆவி கொன்றவனின் அண்மையே அவளை பாதி தின்றதென்றால்...மீதியை குஞ்சுகளை காக்கும் பேடையாய் அவள் பயம் மென்றது...
ஆனால் சுட்டெரிக்கும் சூரியனாய் தகித்தவன்...இன்று குளிர் நிலவாய் தன் அன்பால் நிறைத்தான்...தன் உதிரம் உரு கொண்டு உலா வருவதைப் பார்த்து உள்ளம் பதைத்தான்...அவர்களை தன் உயிரில் வைத்து அவர்களது அன்பு மொழியை சுவைத்தான்...
காயம் பட்ட இதயம் ...சூடு கண்ட பூனை..நம்பி ஏமாந்த இதயம்...நம்ப மறுத்தது...
அவன் அன்பாய் நாடினாலும் நடிப்பாய் நினைத்தால்....அனலாய் தகித்தால்...உடலை வதைத்தவனின் உயிரை தன் கூரிய நாக்கால் வதைத்தால்....
தவறு என்று தெரிந்தே இழைத்த பாவம் மன்னிப்பு கேட்டு தவறை சரி செய்ய முடியாத பாவியாகி போனதையும் தவறுக்கு தண்டனை ஏற்க தான் தயராக இருப்பதையும் உரைத்தான் ....
தான் தவறாகி போன காரணங்கள்.... அதனால் அவன் ரணவேதனைங்கள் எடுத்துரைத்தான்....
அவளை கண்ட நொடி தான் கொண்ட காதல்...ஆனால் கடந்த கால காயத்தால் ஏற்பட்ட வடுவை ...தான் வஞ்சித்ததை ...தன் தமக்கை வதைப்பட்டதை.... தான் சிதைப்பட்டதை....நினைத்துப் வதைத்தவனுக்கு தண்டனையாக வதைத்தேன்......இன்று உன்னிடமே உன் காதலை யாசித்தேன்...என்று தன் உள்ள குமரலை எடுத்துரைத்தான்....
பட்ட பாடு பட்ட பாடு யார் பட்ட பாடு பெரிது என்று தன் வார்த்தையின் அம்புகளாக்கி அவன் மீதே பாய்ச்சினாள்...
எத்தனை அம்புகளை வீசினாலும் அத்தனையும் தாங்கினான்...அவள் அன்புக்கு மட்டுமே ஏங்கினான்...
காதலும் மோதலுமாக காலம் சென்றது..கண்ணீர் மட்டுமே மீதம் இருந்தது....ஒருவரை ஒருவர் உயிர் தேடினாலும் ...உறவாய் தேடும் சமயம் நொந்தது...
ஒருவரை ஒருவர் பிறிந்தனர்....உள்ளம் அதனால் வெந்தனர்...
விடியலை தேடி இரவு மகள் பயனபட்டால்...ஆதவன் தன் அழகான கரங்களால் அவர்களை வாரி அணைக்கவே முடிவெடுத்தான்...
புரியாத பல புதிர்கள் விடை கிடைத்தன....மௌன மொழி கொண்ட மாதா அவள் தன் மௌனம் உடைத்து.... தன் அன்பு தம்பியின் காதல் கோவிலின் பூட்டுடைத்தால்...இத்தனையும் செய்தால் அந்த அன்னை ....அபயனின் தமக்கையாகயல்ல... மிளிரின் தாயாக....
காதல் ஊற்றெடுத்த உள்ளம்.... இப்பெழுது உடைப்பெடுத்தது ....கண்டம் விட்டு கண்டம்....தன் காதலனாகிய கணவனை நோக்கி பயணத்தை ஆழிபேரலையாய் அவனை அதனுள்ளே தானும் அமிழ பயணப்பட்டாள்....
கொல்லாமல் கொன்றவளை தன் காதல் மெய் போற்றும் காதல் அல்ல ...உயிருக்குள் உயிரை வைத்து உயிராய் போற்றும் காதல் என்று சொல்லால் அல்ல செயலால் உணர்த்தி அவள் மன்னிப்பை தன். ஆழமான காதலால் அடைந்த அபயனவிதுலனின் காதலில் மிருதுவான இவள் உள்ளம் மிளிர ......நாமும் வாழ்த்தி விடைபெருவோம்!!!!!