View attachment 9803
ஒரு சொல் உயிர் மீட்டு தருமா?
ஒரு உயிர், உயிர் கலந்திட வருமா?
எனை ஏங்க வைத்தாய் !
பழி வாங்க வைத்தாய் !
வலி தாங்க வைத்தாய் !
வழி மறைய வைத்தாய் !
ஊன் உருக வைத்தாய் !
உயிர் பருக வைத்தாய் !
என்னில் காதல் வளர்த்தாய் !
அதில் காமம் வளர்த்தாய் !
மோகத் தீ வளர்த்தாய் !
தாப நெய் வார்த்தாய் !
அதில் கோப நீர் தெளித்தாய் !
கடல் கண்டு, உடல் கொண்டு, மடல் எழுத,
ஊடல் கொண்டு நீ வாட,
கூடல் கொல்லாமல் சாட,
நீ தேடல் கொண்டு வாட,
தேகம் தீண்டும் காதல் இது அல்ல.
யத்ததில் வென்று, பெண்
பித்ததில் துவன்று,
முத்தத்தை கடந்து,
மூர்ச்சை அடைந்தவனுக்கு,
உயிரால் உயிரை ஊற்றிய,
உயிர் காதல் இது !
புணரும் புணர்ச்சி அல்ல,
உணரும் உணர்ச்சி.
கவரும் கவர்ச்சி அல்ல,
உயிர் நவிலும் நவிற்சி.
காமன் எறியும் பானம் எரிப்போமடி !
தீயில் தேனை கலப்போமடி !
புதைத்த இடத்தில் விதைத்த
காதல் விருட்சமடி !
சிதைத்த கோலம் வதைத்ததடி !
மறைத்த காதல் உயிர்த்ததடி !
கொடியில் மலர்ந்த பூ உதிர்ந்ததடி !
உதிர்ந்த பூவோ மன்னவன் தோள் சேர்ந்ததடி !
கனா கண்டேனடி,
மலர் மலர்ந்து மாலையாய், சோலையாய், குலுங்க,
மன்னவன் தாங்க,
கனா கண்டேனடி.
உயிர் பூவில் தேன் சேர்த்த
மாய தூரிகையே,
விஜிமாவே !
நீர் வரைந்த பக்கங்களுக்கு,
சத்தமில்லா முத்தங்கள் !