All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Jemsi

Well-known member
நீங்க இப்பவதுஅபயன 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😍😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭மிளிர கூட சேத்தி வைப்பிக்கணு நினைச்சேன் mam😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இப்படி பனிட்டேங்களே mam மறுபடியும் முதலில் இருத்த 😭😭😭😭😭😭😭😭😭😭😭mamroflphotos-dot-com-photo-comments-20180430184052.jpg
 
அபயன் செய்தது தப்பு தான் ஆனா அவன் பக்கத்து நியாயத்தை யோசிக்க மாட்டேங்கிறா இந்த மிளிர் பாலம் என்று டார்லிங் அழறனே
 
:cry::cry::cry::cry::cry::cry::cry::cry:இனி அபயன் என்ன மாதிரி விபரீத முடிவு எடுக்கப்போறானோ.அபயன் நிலாவை பார்த்து அம்மாவை கூப்பிட்டு அழுகும் போது நான் அழுதிட்டேன்.கனமான பதிவு
 

Samvaithi007

Bronze Winner
விதி செய்த சதி ...வினையின் பயனை
அனுபவிக்கிறேன்...

ஆடு பகையானது ...குட்டி உறவானது....

ஆட்டை பழிவாங்கவே குட்டியை பலிகொண்டேன்..

கடைசியில் பழிவாங்கப்ட்டவனும் .நானே... பலி கொடுத்து நிற்பதுவும் நானே...

முட்டி மோதி மூச்சடக்கி முடிந்த வரை முயன்றுவிட்டேன்....

முயற்ச்சி முடிவில் வீழ்ச்சியே பரிசாய் கிடைக்கிறது...


என் கரங்களாலே என் கரங்களாலே என் வாழ்வை நான் அழித்து விட்டேன்...

அழகான அவள் காதலையும் ஆழ குழி தோண்டி அதிலேயே புதைத்து விட்டேன்...

அவள் ஆழ்மன காதலை கண்டுகொண்டேன்...

ஆனாலும் அவள் பக்கம் அண்டி போகையிலே தீயாய் தகிக்கும் அவள் வார்த்தையில் நான் வெந்தேன்....

இயன்ற வரை துன்பத்தை அனுபவித்து விட்டேன்...

எல்லாம் விழலுக்கு இரைத்த நீராய் போனது...

பட்ட வலியெல்லாம் பசுமரத்தாணிப் போல் பதிந்தே கிடக்கிறது..

கலங்கி தவிக்கிறேன்....பழைய பக்கங்களை புரட்டி புரட்டி பார்க்கிறேன்....

இருண்ட காலமது இதயத்தினுள்ளே...அமாவாசை இருட்டாய் என் எதிர்காலம்...

பெயர் தெரியா ஊரில் மொழி வழி தெரியாமல் தவிக்கிறேன்...

என்னை பெற்றவளே...பிறந்தவுடனே கிள்ளி எறிந்திருக்கலாம்...

அடுத்தடுத்த துன்பங்கள் அனைத்தையும் கடந்தேன்..

ஆனால் அவளின் இந்த தீரா கோபத்தை தாங்கவியலாத இதயம் வெடித்து சிதறுகிறேன்...

தாங்க முடியாத இந்த தருணத்தில் என் மனபாரம் இறக்கவே ..

.உன் மடி தேடுகிறன்..உருகி தவிக்கிறேன்...உயிர் குலைந்து போகிறேன்...

வாடி வதங்கி வெம்பி வெதும்பி சாவவோ இவ் வாழ்வு ....இருளில் மட்டுமே என் வாழ்வு...

நல்வினை நான் செய்யவில்லையோ ...நல்வாழ்வென்பதே எனக்கில்லையோ......!!!!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நயனி,

ஆழ்மன ஏக்கத்தின்
ஆவேச மீறல்கள்...
அன்பு பாலம் அமைக்க அடிக்கல் நாட்ட....,
ஆழ்மனத் தாக்கத்தின்
துவேசக் கீறல்கள்...
துன்ப வேர் அசைக்க அடிக்கல் முட்ட...,
திசை மாறிய ஆனந்தத் தாண்டவம்
விசை மீறிய அகோரத் தாண்டவம்
எண்ணத்தின் ஏட்டில் எட்டிகாயாய்....
ஏற்றிய தீபம் எரிவதற்கு முன்னே
ஏமாற்றம் வந்தால் ஏக்கங்கள் தானோ...?

ஏக்கத்தின் தாக்கம் நோக்கமாய் ஆனால்
நோக்கத்தின் தாக்கம் தடை அகற்றாதோ...?

பாவத்தின் சம்பளம் மரணம் என்றால்
மரணத்தின் வலிக்கு தீர்வுகள் உண்டோ...?

தீர்வுகள் தேடும் காதலின் மொழிக்கு
தீர்ப்பெழுதிட்டால் தீருமோ தீயே...!

தீயாய் எரிக்கும் பாவத்தின் வேகம்
தாயாய் வரித்தால் தீருமோ தாகம்...!

வாழ்த்துக்கள் நயனி, நன்றி
 
விதுலனின் உணர்வுகளை எடுத்துக்காட்டிய விதமும் அவன் தவிப்பும் துடிப்பும் மிகவும் கனமானதாக இருந்தது சகோ

மிளிர்மீதும் தப்புசொல்ல முடியாது அவள் பட்ட காயம் அப்படி

விதுலன் மிளிர் பேச்சை கேட்டு தவறான முடிவுக்கு போயிருவானா சகோ

எங்கள் நம்ப சொல்லி ஏமாத்திட்டிங்க சகோ
😥😥😥😥😪😪😪😪😫😫😫😫
 
Top