தாமரை
தாமரை
கதை இன்னும் ஐந்து பதிவுகளில் முடியப் போகிறதா நயனி மா சொல்லிட்டாங்க..
அபய விதுலன்…
பற்றி என்னோட புரிதல்.. சொல்ல சொல்லி நயனிமா ஆசை ..ஆர்டர்..
நயனிமா நீங்க சொல்லி நான் செய்யாம இருப்பேனா
நல்லால்லைனா கூட நல்லாருக்கு சொல்லிடுங்க.. சரியா
அபய் விதுலன்..
என்னைப் பொருத்தவரை
அவன் முரண்களின் மொத்த உருவம்..
அதற்கு காரணமா அவனின் இளமைப் பருவம். பிள்ளைகள் வாழ்வில் பதின்பருவம் முக்கிமானது. அபயவிதுலனுக்கோ....அது மிகக் கொடுமை... விதியும்.. ஒரு மனிதனின் சதியும் வஞ்சித்தது.. அதில் தனது தாய்க்கு நிகரான தமக்கை .. மனதும் உடலும் சிதைவுற்றதை.. பார்த்து பார்த்து.. மனம் வெம்பி.. அடிபட்டு பட்டு காய்த்து.. போனது.. இளமையில் கொடிதா வறுமை வேறு.... அத்தனைக்கும் காரணமானவனை பழி வாங்க எண்ணிய வரை சரிதான்... பதினாறு வயதில் அதற்கு.. கருவியா.. ஒரு சிறு பெண்ணை சிவப்புக் குறி வைத்தது தான் தவறாகி போனது.. அந்தப் பெண்ணை.. அப்போதே காதலிக்க தொடங்கியது.. அடுத்த அனர்த்தம்..
எனக்கு டவுட்.. அபயனுக்கு ஸ்பிளிட் பரசனாலிட்டி( அந்நியன் படத்தை மானாவாரியா.. உத்து உத்துப் பாத்ததோட பலன்)..
அந்நியனா விக்கிய பழி வாங்க நினைக்கிறவன்… ரெமோ வா.. ம்ளிரை லவ் பண்றான்..
இந்தப் பக்கம் அம்பி மாதிரி படிக்குறான்.. மில்லினர் ஆகுறான்.. அக்காவை பாசமா பாத்துக்குறான்.. அக்கா பெண்ணை இளவரசியா வளர்த்தெடுக்குறான்.. பக்கா ஜென்டில்மேன்.. சந்திரன் சார் வாக்குமூலம் அதுவே.. அந்தப் பக்கம் ம்ளிர் அ மனதார விரும்புறான்.
விக்கி இருந்தவரை அவனை பாடா படுத்தின அந்நியன்.. பழி முடிந்து போனதும் விலகிட.. இப்போ அம்பியா மாறி குற்ற உணர்ச்சி.. அவ இனியாவது நல்லா இருக்கட்டும் னு தள்ளிப் போறான்.
ஆனா.. தனது காதலை கடமையை தள்ளி இருந்து செய்வதா எண்ணி இடம் வாங்குறான்.. அவ நினைவுடளோடவே வாழுறது.. தனக்கான தண்டனையா நினைக்கிறான்.☺☺☺
எல்லாமே தலைகீழ்...
குழந்தைகள் இருப்பது தெரிந்ததும்.. அவரின் மனதில் திரும்ப போராட்டம்.. அடக்கி வைக்கப் பட்டு இருந்த ரெமோ தலை காட்ட.. அம்பி அவரை அடக்க.. காதலியும் மனைவியுமான ம்ளிரோ புரிந்து கொள்ளாமல் எகிறிக் கொண்டே இருப்பதில்.. அடடா.. ன்னு பரிதாபப் படுற நிலை...
இப்போ.. இருக்குற இரு பர்சனாலிட்டீஸ் ல யாரு டாமினேட் பண்ணப் போறாங்க தெரியலை.. கடுப்பு தாங்காம அந்நியன் கிளம்பிருவாரோன்னு போன யூடில பயமா இருந்தது.. நல்ல வேளை அப்படி ஆகல..
எங்க..
எல்லாருடைய ஆசை.. ரெமோவா பாக்கிறது தான்..
ஸோ நடந்த குற்றத்துக்கு தவறுகளுக்கு... அபயவிதுலன் காரணமே கிடையாது..
அதனால அபயவிதுலனுக்கான
தண்டனை காலம் குறைய. பொது மன்னிப்பு வழங்க
வாய்ப்பிருக்கா வில்லி மேடம்..