மிளிரை தங்கம் என நினைத்து அன்று உரசிப் பார்த்தவன்,
இன்று வைரம் என நினைத்து பட்டைத் தீட்ட முயன்றவன்,
அந்தோ பரிதாபம் பட்டை நாமம் வாங்கினான்.
பட்டின் மிருதை ஒட்டிய மிருதையை,
தொட்டுச் சேர விழைந்தவன்,
இதயம் வெட்டுப்பட்டு கிடக்கிறான்.
உடைந்து விட்ட கண்ணாடித் துகள்களை ஒன்று சேர்த்து அதில் தன் முகத்தை பார்த்தவன்,
விகாரமாய் தெரிய, அந்தோ பரிதாபம்!
கிளியின் சிறகை ஒடித்தவன்,
பாலும் பழமும் கொடுத்தாலும்,
பாவம் கிளியோ பறக்கவில்லை.
மெல்லடியாள் சொல்லடியில்,
கல்லடி கண்டவன் வெல்வது எப்படி?
தோள் சேர்ந்தவன் அவள் கால் பிடித்தான்,
வேல் விழியாளோ சொல் வாள் பிடித்தாள்.
பஞ்சு என்ற அஞ்சனையின் பாதத்தை, தன் நெஞ்சத்தில் வைத்தான். மஞ்சத்தை நெருங்க,
அவளோ வஞ்சத்தை விழுங்க வைத்தாள். காதல் பஞ்சத்தில் மூழ்க வைத்தாள்.
நதி கடலில் சங்கமிக்க தயங்குவது, விதியின் செயலா?
இல்லை விஜியின் அருளா?
நதியின் அணையை இடிக்க எடுப்போம் கடப்பாரை!
முடிப்போம் தடுப்பாரை!
வெற்றிவேல்! வீரவேல்!