Nayaki
Bronze Winner
என் பெயர் அபயவிதுலன் ...
எதற்கும் அஞ்சாத, எதற்கும் ஒப்புவமை இல்லாதவனாக இருக்கவேண்டும் என்று பெயர்வைத்தார்களோ... தெரியவில்லை. நான்கு வயதில் என் அன்னையை இழந்தேன். அவளை தேடி அழும்போதெல்லாம், நிலாவை காட்டி சோறூட்டிய என் சகோதரி தாயானாள். அவள் அன்பில் குளிர்காய்ந்தேன். அவளை அன்னையாய் வரிந்துகொண்டேன்.
சின்ன கூடு எனது. நான் அக்கா, என் தந்தை... நன்றாகத்தான் போனது எனது வாழ்க்கை. அவனை சந்திக்கும்வரை. எங்கிருந்தோ வந்தான். நண்பர் என்றார் என் தந்தை. பார்த்த கணத்தில் என் சகோதரியின் விழிகளில் விழுந்து இதயம் நுழைந்தான் அவன். என் சகோதரிக்கு பிடித்ததால், எனக்கும் பிடித்தது. ஏற்றுக்கொண்டேன், அக்காவின் கணவனாக. அவனுக்கு எடுபிடியானேன். ஏனோ என்னை கண்டால் அவனுக்கு ஆவதில்லை. துரத்துவதிலேயே கண்ணாய் நிற்பான். தாங்கிக் கொண்டேன் என் சகோதரிக்காக.
காலம்தான் எத்தனை கொடியது... என் பதினோராவது வயதில் தந்தையும் தொலைத்தேன். நானும் சகோதரியும் மட்டும் இவ் உலகில் தனியாய்... இல்லை இல்லை அவனும் வந்தான், நான் இருக்கிறேன் என்றான். என் சகோதரியை அணைத்தான். அவள் மேனியில் ஊறிய கரங்களை அப்போது நான் புரிந்துகொள்ளவில்லை. பாவம் என் சகோதரியும் அறிந்துகொள்ளவில்லை.
மணம் செய்கிறேன் என்றான். நம்பினோம். மணந்தான்... வெளியே சென்ற என் காதுகளில் என் சகோதரியின் அலறல்... பதறி துடித்து ஓடினேன். ஜன்னலுக்குள்ளால் சிறுவன் பார்க்க கூடாத காட்சி. பார்த்தேன்... எதற்க்காக என் சகோதரியை கொல்ல துடிக்கிறான்.. காப்பாற்ற முயன்றேன். முடியவில்லை. கதற மட்டுமே என்னால் முடிந்தது. அவன் போய் விட்டாங்க. ஊஞ்சலாடிய உயிரோடு, இரத்தம் வழிந்தோட என் சகோதரி படுக்கையில். என்ன செய்வேன்? ஏது செய்ய வேண்டும். கற்றுத்தர யார் இருக்கிறார்கள்.
மருத்துவமனை கூட எதிரியின் கூட்டமோ...? ஏழைகளின் சிறைச்சாலையோ? பணம் கிடைத்தால் மட்டுமே சிகிச்சை எனில், ஓட்டு வீட்டில் வாழும் நான் எங்கே போவேன்... பிச்சையெடுத்து பணம் போதவில்லையே.. எனக்கு தெரிந்த தொழில்தான் என்ன? எங்கே சென்று பணம் புரட்டுவேன். அனாதை பயலுக்கு பணம் கொடுக்க யாரு முன்னே வருவர்... கடவுளும் கண் திறந்தானோ, என் சிறுநீரகத்தின் விலை இரண்டரை இலட்சம். அடேகேப்பா இரண்டரை இலட்சம். எத்தனை சைபர்கள்.. அது கூட எண்ண தெரியவில்லை. விற்றேன்...
என் சகோதரி மீண்டு வந்துவிட்டாள்... ஆனால் அவள் தன்னை தொலைத்து விட்டாள்... மீட்டெடுக்க தெரியாமல், விழி பிதுங்கி நின்றேன். உயிரை மாய்க்க ஓடும் சகோதரியை இழுத்து காப்பது என் உயிரை இழுத்து எடுத்த வலி... அவள் இல்லை என்றால் அநாதை என்று முத்திரை குத்தப்படுவேன். அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று தூற்றப்படுவேன். என் எதிர்காலம், சாக்கடையில் குளிக்கும். எனக்கிருக்கும் ஒரே பற்றுக்கோடு அவள்... அவளை காப்பதே என் லட்சியம். முயன்றேன்... இரும்பு கம்பியால் அவளிடமிருந்து அடி வாங்கினேன். ஆனாலும் தளரவில்லை... என்னை அடித்தால், அவள் பிழைத்துக்கொள்வாள் என்றால், என்னை அடித்தால், அவள் மனம் தெளியும் என்றால், என்னை அடித்தால் அவள் உயிர் பெறுவாள் என்றால் அடிக்கட்டுமே.. .மகிழ்ச்சியாகவே கம்பியை கொடுத்து ஆடி வாங்கினேன். ஒவ்வொரு அடியும், அவனை பழி வாங்கும் வன்மமாக மாற்றிக்கொண்டேன்.
அதோடு தொல்லை விட்டதா, பள்ளிக்கு சென்று வீடு வரும்போது, ஆடைகளை அவிழ்த்து நின்ற என் சகோதரியை நெருங்கினான் ஒருவன். பதறிப்போனேன். அன்றும் அவன் அப்படித்தானே செய்தான்... சீறி பாய்ந்தேன்... கிடைத்த கம்பியால் அவனை விளாசி தள்ளினேன்... சமூகமே என் மீது சீறி பாய்ந்தது. அசரவில்லை நான். வந்தவனை எல்லாம், என் கோபம் தீர வீசி தள்ளினேன்.
அடடே... என் சகோதரியின் வயிறு எதற்கு இப்படி உப்பி வருகிறது... ஏதாவது தீராத வியாதியோ... இழுத்துக்கொண்டு சென்றேன்... ஆஹா... என் சகோதரிக்கு குழந்தையா? நம் குடும்பத்திற்கு, சின்னச்சிரிய குழந்தை வரப்போகிறதா... ம்ஹூம் இந்த இடம் பொருத்தமில்லை... அவளை இழுத்துக்கொண்டு வேறிடம் சென்றேன்... பணத்துக்கு எங்கே போவேன்... வேலைக்காக பிச்சை எடுத்தேன்... சாக்கடை அள்ளுவது கூட சொர்க்கமாக இருந்தது... தார் ஊற்றுவது கூட இன்பமாய் இருந்தது... அது காலில் கொட்டி வலித்தது கூட எனக்கு தெரியவில்லை. பணம் வருகிறதே...
இதோ... சிறிய தேவதை என் கரத்தில்... பன்னிரண்டு வயது ஆண்மகன் ஒரு தந்தையாய்... தாய் மட்டும்தானா கன்னித்தாயாக இருக்க முடியும். நானும் கன்னித்தந்தைதான்... என் சின்ன சீட்டு அம்முக்குட்டிக்கு. ஐயையோ... அவளை பார்த்துக்கொள்ள யார் இருக்கிறார்கள். என்னை விட்டால் வேறு யாரும் இல்லையே... பாடசாலை என்ன பாடசாலை... கல்வி எப்போதும் கற்கலாம், ஆனால் என் அம்முக்குட்டியை யார் பார்த்துக்கொள்வார்... தொலைத்தேன் பாடத்தை. மறந்தேன் பள்ளியை... என் அக்காவிற்குமாய், என் தேவதைக்குமாய் மட்டும் வாழ முயன்றேன்.
அய்யய்யோ... என் சகோதரியிடம் உதிறம் வருகிறதே... அவள் இறக்க போகிறாளோ... உடலில் குருதி வடியே ஓடினேன் அருகே உள்ள வீட்டிற்கு... வந்தார்கள். உதவினார்கள். மறுமாதமும் தொடர, ஓடினேன்... புரிந்து கொண்டேன், பெண்மைக்கு இருக்கும் இன்னலை. மீண்டும் ஓடி பரிதாபத்தை விட பணம் வென்றது. எங்கே செல்வேன் பணத்துக்கு... காரியத்தை என் கரத்தில் எடுத்தேன்...என்ன தப்பு? என் தாய்க்கு நான் செய்கிறேன்... என்னை அந்த சமூகம் செய்ய வைத்தது... எனக்கு அருவெறுக்கவில்லை. பதட்டம் மட்டுமே. அக்காவும் இறந்துவிட்டால், அந்த குழந்தையும், அவனும் தனியாக என்ன செய்வார்கள்.
ஐயோ... என் உடலில் மாற்றம்... என்ன அது... நான் வாலிபனாக மாறுகிறேனா... அந்த ஆண் பெண் உறவு... இனிக்கிறதே... துடித்து போனேன்... அப்போ, அன்று என் அக்காவிற்கு நடந்தது...? புரிந்த பொது என் ஆவியே தொலைந்தது... என் அக்காவிற்காக உள்ளம் துடித்தது... யாருமில்ல தனிமையில் கதறினேன்... இறுகினேன்... என்ன அக்காவை வலிக்க செய்தவனை , என் இளமையை தொலைக்க காரணமானவனை... பழி வாங்க துடித்தேன். அவனுக்கு தண்டனை மரணம். ஆம் மரணம்...
முடிவு செய்த தருணதில், அந்த காமுகனிடமிருந்து ஒரு கடிதம். என் சகோதரியை விபச்சாரி என்கிற உன்னத பட்டத்துடன். அன்று முடிவு செய்தேன்... என் சகோதரிக்கு அவன் பதில் கூற வேண்டும் என்று. எப்படி என்ன சகோதரியை வலிக்க செய்தானோ எத்தகைய வலியை நான் பட்டேனோ அதே வலியை அவள் படவேண்டும் என்று நான் முடிவெடுத்தேன்...
ஆம்... அவன் மக்களை அதே போல, வன்புணர்வு செய்ய முடிவெடுத்தேன்... அதே பதினாறில் அவளை தேடி சென்றேன்.. கண்டதும் என் விழியை நுழைந்து இதயத்தில் குடிபுகுந்து விட்டாள் . பதறி துடித்துபோனேன். இவளை எப்படி வலிக்க செய்வேன்... ஆனாலும் என் சகோதரிக்கு நியாயம் வேண்டும்... முடிவெடுத்தேன். மணந்தேன்... அவன் எப்படி என் சகோதரியை புணர்ந்தானோ அப்படி அவளை வலிக்க செய்ய முயன்றேன்... ஆனால்... காதல் கொண்ட மனது... அதற்க்கு ஒத்துப்போகவில்லையே.. என்ன செய்வேன்.. போதை எடுத்தும், மனம் இணங்காவில்லியே... தோற்றுப்போனேன்... முழுதாக தோற்றுப்போனேன்.. நினைத்த அளவு வலிக்க செய்ய முடியாமல் பயங்கரமாக தோற்றுப்போனேன்... அவள் முகத்தில் விழிக்கும் தைரியம் இல்லாமல் ஓடிப்போனேன்.
ஓடிப்போனதாகத்தான் நினைப்பார்கள்... ஆனால்...
நான் சமூகத்தில் தண்டிக்கப்பட்டேன். ஆண் என்கிற காரணத்தினால்... அவள் பெண் என்பதால், அவள் வலி போற்றப்பட்டது.. ஆண் என்பதால் என் வலி தூற்றப்பட்டது... வலிக்கு ஏது பாகுபாடு... துடிக்கிறேன்.. இந்தக்கணம் வரை துடிக்கிறேன்... என்னை ஆறுதல் படுத்த எனக்கு நான் மட்டுமே.. .தெளிந்து விடுவேன்.. .மீண்டு வந்து விடுவேன்... வலி என்ன புதுசா எனக்கு... பழகிய ஒன்றுதானே... மரணித்த எனக்கு எதற்கு இன்னொரு மரணம்... வேண்டியதில்ல... அதையும் வெல்வேன்.. ஏன் எனில் நான் அபயவிதுலன்

Last edited: