All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Ayshs

New member
கண்கள் தேடுவதை உள்ளம் உணர்ந்தால் போதும்...
உயிரில் இருக்கும் நேசம் உணர்வில் தெரிந்தால் போதும்...
துணையானவனின் தூய காதல் அறிந்தால் போதும்....
துறத்தும் கடந்த காலத்தை உதற முடிந்தால் போதும்....
கண்முன் இருப்பன யாவும் கனவல்ல நிஜமென்று அறிந்தால் போதும்...
உள்ளமது அவனது அருகாமையை நேசிப்பதை அறிந்தால் போதும்....
பிரிந்துபோனவன் பிரிவு வாட்டுவது புரிந்தால் போதும்....
சொல்லாமல் சென்றதால் மனம் செல்லமாய் சிணுங்குவது உணர்ந்தால் போதும்...
நம்ப மறுப்பவனை நம்பியே நாட்டை விட்டு வந்திருக்கிறோம் என்று உணர்ந்தால். போதும்..

சீரற்ற உங்கள் வாழ்க்கை சீராக போகும்.... காலம் கனிய காத்திருக்கிறேன்..
☺☺☺☺
[/QUOTE/]
Mhm romba nulla irukku Negara solradu 😀😀😀😀 but konnnnnnnnjam kalam edukkum😋😋😋😋😊😊😊
 

Meenalochini

Well-known member
மிளிர்க்கு ஈகோ தடுக்கல நாயகிமா..
வலி உணர்வு மத்த அத்தனை உணர்வையும் மரத்துப்போக செஞ்சிருக்கு👍

இப்போத்தான் அதிலிருந்து வெளிய வர துவங்கியிருக்கா..
காலம் அத்தனைக்கும் மருந்துங்கறது சும்மாவா..

உங்க சம்மந்தி என்ன சொல்றாங்கன்னா..
மிளிர் தந்தை செய்த அதே தப்பை அபயனும் செய்யுறப்ப விக்னேஷ்வரன் மகளாய் போய்ட்ட ஒரே காரணத்துக்காக மிளிர்க்கு தண்டனை ஏன்?!

விக்னேஷ்வரனை அபயன் மன்னிக்காதப்ப மிளிர் மட்டும் ஏன் அதை செய்யனும்?! அவ்ளோதான்.

அதிலும் மிளிரை அவள் பெண்மையின் வலியை யாரும் புரிஞ்சுக்காம அவளையே குற்றம் சாட்டினப்பதான் அவுக கேள்வியே கேட்டு இடையில வந்தாங்க..

மற்றபடி மிளிர் அபயன் தப்பை மறந்து (மன்னிப்பை யாசிக்க கூடிய தப்பை நான் பண்ணலன்னு அபயனே கூறியாச்சு சோ மறத்தல் மட்டுமே சாத்தியம்) வாழ தொடங்கட்டும்ன்னுதான் அவங்களே சொன்னாங்க..
அதை யாருமே சரியா உள்வாங்கல😔

யாரும் அவங்க கேள்விக்கு நேரடி பதில் சொல்லல..
இது மறுக்க முடியாத உண்மை..
மாறாக காந்திமதியின் நிலையை சொல்லி அதை ஈடு செய்யவே பாத்திங்க👍

தப்பு ஒன்றே..
ஆனால் தண்டனையில ஏன் பாரபட்சம்ன்னுதான் கேட்டாங்க..

இது இந்த கமெண்ட்ஸ் த்ரெட் முழுக்க ரெண்டு ஆர்மியோட மோதலை படிச்சு நான் புரிஞ்சுகிட்டது👍

நான் என் இயல்புபடி சொல்லுற பதில்கள்கூட யாரையாச்சு நோகடிச்சிருமோன்னுதான் நான் விவாதத்துல தலையே கொடுக்கல..

விடுங்க நாயகிமா ..
நாம அவுக எப்படி சேருறாங்கன்னு மட்டும் பாப்போம்😚😚😚😚👍
புனிதா டியர்
"தப்பு ஒன்றே..
ஆனால் தண்டனையில ஏன் பாரபட்சம்"
வெரி சிம்பிள்!
விக்னேஸ்வரன் மனம் இரங்கவில்லை. தவறை உணர வில்லை.
அபி குட்டி மனம் திரும்பி மன்னிப்பு கேட்கிறான்.
 

Puneet

Bronze Winner
புனிதா டியர்
"தப்பு ஒன்றே..
ஆனால் தண்டனையில ஏன் பாரபட்சம்"
வெரி சிம்பிள்!
விக்னேஸ்வரன் மனம் இரங்கவில்லை. தவறை உணர வில்லை.
அபி குட்டி மனம் திரும்பி மன்னிப்பு கேட்கிறான்.

மீனா சிஸ் ரெண்டு பேருமே மன்னிக்கற தப்பை பண்ணல 1st..

அபயன் இருந்து மன்னிப்பு கேட்டதால நாம குரல் குடுக்கோம்.. என்னையும் சேர்த்துதான் சொல்றேன்..

சப்போஸ் இப்ப விக்னேஷ்வரன் இருந்திருந்தா மகள் வலி பாத்து தன் தப்பு புரிந்து குற்றவுணர்வாகி கஸ்தூரி கால்ல விழுந்தாச்சு மன்னிப்பு கேட்டிருக்கலாமோ என்னவோ..

ஆனா நாம மன்னிச்சிருப்பமா..
அதுக்கு வாய்ப்பில்லாம அனுப்பிட்டோம் அவரை..

அபயனை மன்னிக்க அவன் சார்பா ஆயிரம் காரணம் நயனிமா வச்சாச்சு...

அடுத்து நாங்க எதிரா குரல் கொடுக்கறது மிளிர் உணர்வை புரிஞ்சுக்காம அவளை திட்டினவங்களுக்கு..

அபயன் தப்பை ஒதுக்கி மிளிர் அவனை மன்னிக்காம போனதுக்காக அவளுக்கு வந்த ஏச்சு பேச்சுக்குத்தான் நாங்க குரல் கொடுத்தோம்..

நம்ம எல்லார் பார்வையும் வேற வேற..
நம்ம தனிப்பட்ட கருத்துக்களை வச்சு அடுத்தவர் கருத்து சுதந்திரத்துல தலையிட யாருக்குமே உரிமையில்ல..

என் கருத்தை நான் சொன்னேன்..
அவ்வளவுதான்..
இதற்கு மேல் இதில் பேச எனக்கு எதுவும் இல்லை👍
 

தாமரை

தாமரை
நயனி மேடம், நான் சமீப காலமாகத் தான் இந்த தளத்தின் கதைகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.. கதையைப் படிக்க மட்டுமே நாட்டம் உள்ள என்னை முதன் முதலில் எனது கருத்தை கமெண்ட் மூலம் சொல்லத் தூண்டியது நிச்சயம் உங்கள் வலிமையான எழுத்தின் தாக்கம் தான்.
நான் எல்லாம் எப்படின்னா "நீயா நானா" நிகழ்ச்சியில் boys Vs girls அணிகள் மோதிக் கொண்டால், எந்த நீதியையும் பற்றி யோசிக்காமல் பெண் என்ற ஒரே காரணத்திற்காகவே girls team a Support பண்ற ஆளு😀😀

கதையின் ஆரம்பத்தில் மிளிரின் கோபத்தையும் , வலியையும் உங்கள் எழுத்தின் வலிமையினால் உணர்ந்ததால் என்னையும் மீறி மிளிரை ஆதரித்து முதன் முதலில் கமெண்ட் செய்தேன்.

ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? தான் செய்யாத குற்றத்திற்கு மிளிர்க்கு எதற்கு தண்டனை என்று யோசித்து இருக்கிறேன். கதையில் சிறிதும் நாட்டம் இல்லாத என் கணவரை மிரட்டி ஒரு இடத்தில் உட்கார வைத்து மிளிர் பட்ட கஷ்டங்களைச் சொல்லி அவரை கஷ்டப்படுத்தியுள்ளேன். அதற்கு அவர் சொன்ன கமெண்ட் "பெண்டாட்டிய காப்பாற்றாத ஒருத்தனுக்கு அபயன் என்ற பெயர் எதற்கு " அதாவது அவர் நான் சொன்ன கதையை நல்லா கேட்டுகிட்டாராம்..😀😀 அபயன் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மனைவியைக் காப்பாற்றி தன் பெயரையும் காப்பாற்றிக் கொண்டான் என்பது வேறு விஷயம்.

அபயன் சார்பா யாராவது ஏதாவது சொன்னா கோபம் வந்துரும் ஆனா கதை நகர நகர அபயனின் மனது புரிய ஆரம்பித்தது. ஒரு ஆணின் மன உணர்வுகளை ஒரு பெண்ணால் அவ்வளவு எளிதில் புரிந்துக் கொள்ள முடியாதுன்னு நினைக்கிறேன். மிளிர், காந்திமதி, ஆராத்யா மற்றும் அபயன், இந்த நால்வருள் யாரோட வேதனை அதிகம் என்று யாராலேயும் மதிப்பிட முடியாது. அவங்கவங்க வேதனை அவங்கவங்களுக்கு அதிகம் தான். பல் வலியும் தலை வலியும் அவங்கவங்களுக்கு வந்தா தான் தெரியுங்கற மாதிரி..

விக்னேஷ்வரன் காந்திமதிக்கு இழைத்த அநீதிக்கு பழி தீர்க்க அபயன் மிளிர்க்கு அநீதி இழைச்சுட்டான். சரி இப்போ நியாயமா என்ன செய்யனும் மிளிரின் சார்பா ஒருத்தர் அபயனை பழி வாங்கனும் அது தானே நியாயம்??ஆனா எனக்குப் புரிந்த வரை அந்த குற்றத்திற்கு உரிய தண்டனையை தன் மனதிற்கும், உடலிற்கும் அபயன் தானே கொடுத்துக் கிட்டான். இங்க நான் என்ன பார்க்கிறேன் என்றால் காந்திமதியின் சகோதரனின் சார்பா தண்டனை வழங்கிய அபயனே மிளிரின் கணவன் சார்பாக தண்டனையைப் பெற்றும் கொண்டான். இங்கு தண்டனைப் பெற்ற அனைவருமே தான் தனக்காக செய்யாத குற்றத்திற்கு பெற்றவர்கள் தான். மிளிர்க்கு தண்டனையைப் பெற்றதால் ஒரு பங்கு வலியென்றால், அபயனுக்கு கொடுப்பது மற்றும் பெற்றுக் கொள்வது என்று இருபங்கு வலி. குழந்தையை கோபத்தில் அடித்து விட்டு பின்பு அக்குழந்தையின் வலியை தன் வலியாக உணரும் தாயின் நிலையில் இருக்கின்றான் அபயன். கோபம் கண்னை மறைத்து விட்டால் ஈன்றெடுத்த தாயே குழந்தையை அடிப்பது போல் விக்னேஷ்வரின் மேல் உள்ள கோபத்தால் மிளிரை அடித்து விட்டான். இப்போது விக்னேஷ்வரனே இல்லையெனும் போது மிளிரின் வலி மட்டுமே உணர்ந்து தவிக்கிறான் அபயன்.

கணவன் மனைவி உறவில் தவறு யார் செய்தாலும் கொடுக்கப்படும் தண்டனை அனுபவிப்பதென்னவோ இருவரும் தான். அதனால் நான் என்ன சொல்றேன்னா மிளிர் அபயனுக்கு "மன்னிப்பு" என்னும் இன்பத் தண்டனைய அபயனுக்கு வழங்கி தன்னோட இதயச் சிறையில் ஆயுள் கைதியா வைச்சுகிட்டா அந்த தண்டனைய அபயனும் மற்ற எல்லோரும் சந்தோஷமா ஏத்துப்பாங்க. சரியா மேடம் நான் சொல்றது. very nice Story madam.. கலக்கிட்டீங்க.. இந்த அளவிற்கு எந்தக் கதையும் என் மனதை பாதித்ததில்லை.. செம்ம..💐💐💐👍👍
மிக அழகான ஆழமான அலசல் மா....

அதிலும்... தம்பியாக பழி வாங்கிட்டு... கணவனா ...அந்த பழி தீர்த்த உடலை (தன் உடலை) தண்டித்தான்.. வாவ்... என்ன ஒரு நுண்ணிய மன உணர்வை சொல்லிருக்கீங்க...:smiley7::smiley7::smiley7::smiley7::smiley7:

நானும் நயனிமாட்ட கேட்ருக்கேன்..ம்ளிர் பற்றி அவனின் மனநிலை ல இவ்ளோ அப்ஸ் & டவுன்ஸ்.. அவனின் பதின்மவயதுத் துயரங்கள்.. கூடவே துளிர்த்த காதல்..
எல்லாமும்.. அப்படின்னு சொன்னாங்க... அவன் கெட்டவனா கஷ்ட்ப்பட்டு மாறின ஒரு நல்லவன்... அப்படி தானே இருப்பான்னு சொன்னாங்க..
I was convinced..
உங்க பார்வைக் கோணம்..remarkable..

ஹாஹா... ப்ரோ சொன்ன டயலாக்.,. சூப்பர். எனக்கும் பல முறை தோன்றியது..

பொண்டாட்டி கிட்ட லவ் சொல்ல முடியல, அவள கண்டுக்காம இருந்துட்டு..,, அபயன்ன்னு பேர்...விதுலன் .னு பேர் னு😂😂😂😂😂😂😂😂😂
 

தாமரை

தாமரை
லோட்டஸ் ஏன் இவ்வளவு விரக்தி..அபயனை எங்கே தூக்கினாங்க நம்ம வில்லி அவளுக்கு காயம்பட்டதலிருந்தே அவன் அவளிடம் தன் காதல உணர்த்த முயறச்சி செய்து கொண்டே தான் இருக்கான்..அதேபோல் இத்தன நாளும் மனதா கூட உணராமா இருந்தா ஆனா இப்ப லைட்டா மனதா உணர ஆரம்பிக்கறா... எனக்கு தெரிந்து இது தான் மாற்றம்மாக தெரிகிறது
ஆமா நாயகி மா.. சரியா சொல்லிருக்கீங்க👌👌👌👌👍👍👍👍👍
அவன் தட்டு வலிலயும் காதலிலும் எப்பவும் தாழ்ந்துதான் இருக்கும்..கனம் அதிகம் கரெக்ட்👌👌👌👌

அவ லைட்... ஆதான்உணருறா.. லூஸூ... அடுத்து அவனை பார்த்தும் வேதாளம் மாதிரி..முருங்கை மரத்தில ஏறிப்பா😂😂😂😂😂😂😂😂
 

vijirsn1965

Bronze Winner
super going mam
aazh manathil abayanidam miliriku kaadal irukkirathu aanaal athai otthukkollathaan thayaraga illai than vethanaiye perithaga ninaikiraal abayan evvalayu solliyum thanudaiya thunbam mattume perithu enru ninaikiraal kanyethire avaludaiya thanthaiyaal baathikka pattavarkalai parthum eppadi ippadi nadakka mudikirathu? enna irnthaalum seru vathil eval entha thunbaumm illamal sogusaga vazhnthu vittal allava athuthan eppadi irukkiraal abayanin anbai aval manathil irukkum kaadalai purinthu kondal nantraga irukkum paarkalam eppo purinthu kolkiraal enru story superb arumai mam next ud waiting mam anbudan(viji)
 

Pushpaprathap

Well-known member
மிக அழகான ஆழமான அலசல் மா....

அதிலும்... தம்பியாக பழி வாங்கிட்டு... கணவனா ...அந்த பழி தீர்த்த உடலை (தன் உடலை) தண்டித்தான்.. வாவ்... என்ன ஒரு நுண்ணிய மன உணர்வை சொல்லிருக்கீங்க...:smiley7::smiley7::smiley7::smiley7::smiley7:

நானும் நயனிமாட்ட கேட்ருக்கேன்..ம்ளிர் பற்றி அவனின் மனநிலை ல இவ்ளோ அப்ஸ் & டவுன்ஸ்.. அவனின் பதின்மவயதுத் துயரங்கள்.. கூடவே துளிர்த்த காதல்..
எல்லாமும்.. அப்படின்னு சொன்னாங்க... அவன் கெட்டவனா கஷ்ட்ப்பட்டு மாறின ஒரு நல்லவன்... அப்படி தானே இருப்பான்னு சொன்னாங்க..
I was convinced..
உங்க பார்வைக் கோணம்..remarkable..

ஹாஹா... ப்ரோ சொன்ன டயலாக்.,. சூப்பர். எனக்கும் பல முறை தோன்றியது..

பொண்டாட்டி கிட்ட லவ் சொல்ல முடியல, அவள கண்டுக்காம இருந்துட்டு..,, அபயன்ன்னு பேர்...விதுலன் .னு பேர் னு😂😂😂😂😂😂😂😂😂

தாமரை மேடம் Thank you So much... இது தான் என்னோட முதல் விமர்சனம். இதுவரை முயற்சித்ததில்லை. ஆனால் நீங்க, நயனி மேடம் மற்றும் தள உறுப்பினர் பலர் என் கருத்தை ஏற்றுப் பாராட்டுவது மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருக்கின்றது. Thanks for all💐💐
 
Top