Tamil novel lover
Bronze Winner
Thank you for the surprise update
Very nice update ma’am
You explain the situation of Milir very nicely
Very nice update ma’am
You explain the situation of Milir very nicely
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நாயகிமா..அய்யோ புனிதாமா எனக்கு தாமரையோட மன ஆதங்கம் புரிந்த்து... என்னப்பா இப்படி சொல்லிபுட்டீக..தப்பே செய்தாலும் அவன் என் மகன் அவனுடயை நியாயத்தை தானே பார்ப்பேன்..அதனாலதான் நான் லோட்டஸ் கூட விவாதித்தேன்...லோட்டஸ் என்னை சரியாக உள்வாங்கியிருப்பாங்கனு நினைக்கேன்..
எது எப்படியோ இருவரும் மனம் ஒத்து வாழ்ந்தால் மகிழ்ச்சியே
கண்டிப்பா புனிதாமா... எப்பொழுதும் நம் ஆரோக்கிய விவாதங்கள் தொடரட்டும்....அதற்கு நமக்கு நயனிமா அருமையாக வழிவகுப்பாங்கநாயகிமா..
எனக்கு எல்லாரோட உணர்வும் புரிஞ்சதாலதான் அமைதியா விலகி நின்னு விவாதத்தை வேடிக்கை பாத்தேன்
என் பதில் உங்களை புரிஞ்சுக்காம சொல்லப்பட்டது இல்ல..
உங்களை சரியா உள்வாங்கினதால நீங்க என்னை தப்பா புரிஞ்சுக்க மாட்டிங்கன்னு தைரியத்துல எல்லார்க்கும் பொதுவான கருத்தா முன் வைக்கப்பட்டது..
அவ்ளோத்தான்☺☺☺
அருமை புஷ்பாமா, நிதர்சணம் இதுதான்... மிளிரின் மனக்காயங்களை அபயனின் காதாலால் ஆற்றி அவளை கட்டிப்பாக அவனுள் ஆட்கொள்வான்நயனி மேடம், நான் சமீப காலமாகத் தான் இந்த தளத்தின் கதைகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.. கதையைப் படிக்க மட்டுமே நாட்டம் உள்ள என்னை முதன் முதலில் எனது கருத்தை கமெண்ட் மூலம் சொல்லத் தூண்டியது நிச்சயம் உங்கள் வலிமையான எழுத்தின் தாக்கம் தான்.
நான் எல்லாம் எப்படின்னா "நீயா நானா" நிகழ்ச்சியில் boys Vs girls அணிகள் மோதிக் கொண்டால், எந்த நீதியையும் பற்றி யோசிக்காமல் பெண் என்ற ஒரே காரணத்திற்காகவே girls team a Support பண்ற ஆளு
கதையின் ஆரம்பத்தில் மிளிரின் கோபத்தையும் , வலியையும் உங்கள் எழுத்தின் வலிமையினால் உணர்ந்ததால் என்னையும் மீறி மிளிரை ஆதரித்து முதன் முதலில் கமெண்ட் செய்தேன்.
ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? தான் செய்யாத குற்றத்திற்கு மிளிர்க்கு எதற்கு தண்டனை என்று யோசித்து இருக்கிறேன். கதையில் சிறிதும் நாட்டம் இல்லாத என் கணவரை மிரட்டி ஒரு இடத்தில் உட்கார வைத்து மிளிர் பட்ட கஷ்டங்களைச் சொல்லி அவரை கஷ்டப்படுத்தியுள்ளேன். அதற்கு அவர் சொன்ன கமெண்ட் "பெண்டாட்டிய காப்பாற்றாத ஒருத்தனுக்கு அபயன் என்ற பெயர் எதற்கு " அதாவது அவர் நான் சொன்ன கதையை நல்லா கேட்டுகிட்டாராம்.. அபயன் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மனைவியைக் காப்பாற்றி தன் பெயரையும் காப்பாற்றிக் கொண்டான் என்பது வேறு விஷயம்.
அபயன் சார்பா யாராவது ஏதாவது சொன்னா கோபம் வந்துரும் ஆனா கதை நகர நகர அபயனின் மனது புரிய ஆரம்பித்தது. ஒரு ஆணின் மன உணர்வுகளை ஒரு பெண்ணால் அவ்வளவு எளிதில் புரிந்துக் கொள்ள முடியாதுன்னு நினைக்கிறேன். மிளிர், காந்திமதி, ஆராத்யா மற்றும் அபயன், இந்த நால்வருள் யாரோட வேதனை அதிகம் என்று யாராலேயும் மதிப்பிட முடியாது. அவங்கவங்க வேதனை அவங்கவங்களுக்கு அதிகம் தான். பல் வலியும் தலை வலியும் அவங்கவங்களுக்கு வந்தா தான் தெரியுங்கற மாதிரி..
விக்னேஷ்வரன் காந்திமதிக்கு இழைத்த அநீதிக்கு பழி தீர்க்க அபயன் மிளிர்க்கு அநீதி இழைச்சுட்டான். சரி இப்போ நியாயமா என்ன செய்யனும் மிளிரின் சார்பா ஒருத்தர் அபயனை பழி வாங்கனும் அது தானே நியாயம்??ஆனா எனக்குப் புரிந்த வரை அந்த குற்றத்திற்கு உரிய தண்டனையை தன் மனதிற்கும், உடலிற்கும் அபயன் தானே கொடுத்துக் கிட்டான். இங்க நான் என்ன பார்க்கிறேன் என்றால் காந்திமதியின் சகோதரனின் சார்பா தண்டனை வழங்கிய அபயனே மிளிரின் கணவன் சார்பாக தண்டனையைப் பெற்றும் கொண்டான். இங்கு தண்டனைப் பெற்ற அனைவருமே தான் தனக்காக செய்யாத குற்றத்திற்கு பெற்றவர்கள் தான். மிளிர்க்கு தண்டனையைப் பெற்றதால் ஒரு பங்கு வலியென்றால், அபயனுக்கு கொடுப்பது மற்றும் பெற்றுக் கொள்வது என்று இருபங்கு வலி. குழந்தையை கோபத்தில் அடித்து விட்டு பின்பு அக்குழந்தையின் வலியை தன் வலியாக உணரும் தாயின் நிலையில் இருக்கின்றான் அபயன். கோபம் கண்னை மறைத்து விட்டால் ஈன்றெடுத்த தாயே குழந்தையை அடிப்பது போல் விக்னேஷ்வரின் மேல் உள்ள கோபத்தால் மிளிரை அடித்து விட்டான். இப்போது விக்னேஷ்வரனே இல்லையெனும் போது மிளிரின் வலி மட்டுமே உணர்ந்து தவிக்கிறான் அபயன்.
கணவன் மனைவி உறவில் தவறு யார் செய்தாலும் கொடுக்கப்படும் தண்டனை அனுபவிப்பதென்னவோ இருவரும் தான். அதனால் நான் என்ன சொல்றேன்னா மிளிர் அபயனுக்கு "மன்னிப்பு" என்னும் இன்பத் தண்டனைய அபயனுக்கு வழங்கி தன்னோட இதயச் சிறையில் ஆயுள் கைதியா வைச்சுகிட்டா அந்த தண்டனைய அபயனும் மற்ற எல்லோரும் சந்தோஷமா ஏத்துப்பாங்க. சரியா மேடம் நான் சொல்றது. very nice Story madam.. கலக்கிட்டீங்க.. இந்த அளவிற்கு எந்தக் கதையும் என் மனதை பாதித்ததில்லை.. செம்ம..