All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
நயனிமா,
உண்மையிலே மிக கணமான பதிவு...
அபயன் என்ன மாதிரியான ஒரு மனிதன்...காந்திமதி மற்றும் மிளிருக்கு இவன் ஒரு வரம்..தாய் இல்லா குறையை போக்கிய தன் சகோதரிக்கு அவன் செய்த செய்யும் கைமாறுக்கு எதுவும் ஈடாகாது...பெண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கும் ஒவ்வொரு அன்னைக்கும் தெரியும், பூப்பெய்த நம் குழந்தைக்கு மாதாந்திர பிரச்சனைகளை கற்றுக் கொடுத்து அவர்கள் பழகும் வரை நாம் எவ்வளவு சிரம்ப்படுகிறோம் என்று, இந்த சூழ்நிலையை எதிர்கொண்ட அபயனை நினைத்தால் ரத்த கண்ணீர் வருகிறது.
ஓடி ஆடி நண்பர்களுடன் விளையாடி, கல்வி கற்கும் பருவத்தில் ஓர் உறுப்பை விற்றும் வயதுக்கு மீறிய வேலயை செய்து தன் தமக்கையையும், அவள் குழந்தையையும் காத்த அபனுக்கு ஓர் மிகப் பெரிய சல்யூட்.
மிளிர் ஆர்மி சண்டைக்கு வந்தாலும் ஓக்கே...இத்தன பிரச்சனைகளுக்கு நடுவில் அவன் மிளிரை அவள் அப்பனை போல கலட்டி விடாமல் அவள் மனமரிந்து நடப்பதற்கே அவள் கடைசி வரை அவனுக்கு காதலை அள்ளி அள்ளி வழங்க வேணும்...
இந்த மிளிர் ஒரு அவசர குடுக்கை, முட்டாள்.... நடந்த முன் கதை அனைத்தும் கேட்டுப்புட்டு கேட்டு பாரு ஓர் கேள்வி...இந்த நிலைமயில நீங்களும் எக்கப்பா மாதிரி நடத்திருப்பிங்களானு...நீ எப்பம்மா திருந்துவ... அயோகியதன காரிய பண்ணுண உங்கப்பாவ நம்புற...நீயெல்லாம் முடியல...அபயனை கை நீட்டி குற்றம் சுமத்துவதற்கு முன் தயவு செய்து அவன் நிலமையிலிருந்தால் நீ என்ன காரியம் பண்ணியிருப்பேனு யோசிம்மா..
மிளிர் அபயனை நீ உயிருக்கு உயிராய் காதலித்தவ...உண்மை காதல் என்றைக்குமே அவர்களுடைய நிறை குறைகளுடன ஏற்று கொள்வதே...அபயனுடைய மன உடல் காயங்களுக்கு உன் காதலால் குணப்படுத்து..
அப்பா இன்னும் இன்னும் அபயனை பாராட்ட தோணுது இருந்தாலும் இப்போதைக்கு இது போதும் என்ற முடிவுடன் நயனிமாவுக்கு ஓர் ஹக் & உம்மா
 

Puneet

Bronze Winner
முழுதாக இரண்டு வருடம் தேவைப்பட்டது அவர்கள் பழைய மாதிரி மீண்டு வர'ன்னு அபயன் ஓரிடத்தில் சொல்லிருப்பான்😥
அவன் சொன்னதை வைத்து நான் ஓரளவு இப்படி எதிர்பாத்தேன் நயனி மா😥😥
ஆனால் இத்தனையை எதிர்பாக்கல😔😔😔😔

கஸ்தூரி மனநிலை பாதிக்கபட்டிருப்பார்..
அவரை வச்சுகிட்டு எப்படி வேலை செய்து கவனிச்சி காப்பாத்திருப்பான்னு மட்டுமே யோசிச்சேன்😰
அதுவும் பதினோரு வயசுலன்னு😥😥

ஆனா.. இயற்கை உபாதைகளை கூட அவன்தான் பாத்துக்கிட்டான்னு சொன்னப்ப.. நான் திகைச்சுட்டேன்😰

மாதவிடாய் சிலநேரம் பெண்களாலேயே அருவருக்கப்படுற ஒன்னு..
அதையே தன் வளர்ப்பு தாயான சகோதரிக்காய் கையாண்டிருக்கான்னு நெனக்கறப்ப என்ன மாதிரி ரியாக்ட் பண்ணன்னே நிஜமா புரியல😔😔😔

கூடவே கை குழந்தை,
அதற்கான தேவைகள், கவனிப்பு,
அத்தனைக்கும் மேலாய் அவர்களது அடிப்படை தேவைக்கான அவன் உழைப்பு நேரம்ன்னு எத்தனையெத்தனை அனுபவப்பட்டிருக்கான்..

அவன் வயசுக்கு சுமக்க முடியாத பாரம் அது..
ஆனாலும் அந்த வலிகளை கடந்து (அதை உணர விதி' நேரம் ஒதுக்கியிருந்தாதானே😏)
தைரியமாய் சூழலை கையாண்டிருக்கானே :):)(y)

நடந்த அத்தனையும் அபயன் சொன்னபிறகும், ஏற்கனவே விக்னேஷ்வரன் தன் வாயால் மிளிரிடமே தப்புகளை ஒத்துக்கொண்டும் அவர் அப்படி செய்திருக்க மாட்டார்ன்னு நம்புற மிளிரை என்ன சொல்ல:rolleyes::rolleyes: (கருத்து தெரிவிக்க விரும்பல)

நம்பக்கூடாத தந்தையை நம்புறவ நடந்ததையும் தன் வலியையும் சொல்லி..
உன்கிட்ட மன்னிப்பு வேண்டல..
மறக்க முயற்சி பண்ணுன்னு சொல்லுற அபயனை ஏன் நம்பி மறந்து வாழகூடாது🤔🤔

(பின்குறிப்பு.. மேலே உள்ளவை அனைத்தும் உள்நோக்கத்தோடு எழுதப்பட்டவை அல்ல.. தனிப்பட்ட என் ஆதங்கமே😌😌..
ஆர்மி ஆட்கள் யாரும் மிளிர்க்கு எதிராய் கருத்து சொன்னதாக போர்க்கொடி உயர்த்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்😌😌)

இந்த ரணகளத்துலயும் உனக்கு குசும்பு போகலையான்னு யாரும் கட்டையை தூக்கறதுக்கு முன்னே மீ எஸ்கேப்☺☺🏃🏃🏃🏃🏃
 
Top