All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

Deebha

Well-known member
Hi sis, சந்திரா வடுகனின் சண்டை அற்புதம். ஒரு குன்றை ஒரு வீர மங்கை ஒட ஒட விரட்டியது அருமை. (வானில் வால் நட்சத்திரம் தோன்றுவது , நான்கு சரம் தொடுப்பது ,போரில் எருதுகளை பயன்படுத்துவதில் பாகுபலி , மகதீரா effect) அதையும் தாண்டி ஒரு வீர மங்கையாக சந்திராவின் ஒரு கையில் வாளும் மறு கையில் உருமியும் என சுழல வைத்து கிட்டிய போர் வெற்றியை மணி மகுடமாக சூட வைத்தது பேரழகு. சிம்மன் & சந்திராவின் வீரதிலும் தீரதிலும் மிளிர்ந்து பேராண்மை... வெற்றி சந்திராவை கொன்றான் என்பதை நம்ப முடியவில்லை sis... அவன் வடுகன் / நாக ஜெயந்தன் சந்திராவை கொள்வதற்கு துணை போவான் என நினைத்தேன். வடுகன் எப்படி அங்கு வந்தான்? அவனை நிச்சயம் சந்திரா தான் கொன்று இருப்பாள். வெற்றியை கொன்றது யார் sis?? நாக ஜெயந்தன் என்னவானான் ??? வீரா சிறு பொழுது நகர்ந்ததால் அன்று சந்திரா உயிர் போக காரணமானதால் இப்பிறவியில் தன்னுயிர் தந்து மதியை காக்க விழைந்தானா ??? சிம்மன் எவ்வளவு ஆசையுடன் தன் இளவரசன் பட்டம் துறந்து தன்னவளை மணக்க தாலியுடனும் சேலையுடனும் வந்தான், அவனது ஆசை நிராசை ஆனது வேதனை. சந்திராவின் வார்த்தைக்காக 4 நாடுகளுக்கும் அரணாக துறவு வாழ்க்கை வாழ்ந்த சிம்மன் அருமை. சந்திரா ஆசைப்படி இந்த பிறவியில் சிம்மனுடன் இணைந்தது மகிழ்ச்சி..
 
தாமரை

நன்றி நன்றி தீபா மா💕💖💕💖💕💖💕💖

வரலாற்றுக் கதைகள் என்றால் சில நினைவுகள் வருவது தவிர்க்க முடியாது. சமீபத்தில் மிக ரசித்துப் படித்த வேள்பாரி(நான் போட்ட படங்கள் அந்த நாவலுக்காக மணியன் செல்வம் அவர்களால் வரையப் பெற்றவை தான்) சரித்திர நாவலின் தாக்கமும் இருக்கத் தான் செய்தது..

கதையின் முடிவு ஏற்கனவே சொல்லப்பட்டது.. தானே தீபா மா. சிவேஷ் முன்னோரால் தான் சந்திராமா இறந்தாங்க🙂 அதும் துரோகத்தால்..

முத்து வடுகனைக் கொன்றது.. சந்திராமா.. வீரவாள் அவங்க கையில் இருந்ததுன்னு தெளிவா சொல்லிருக்கேன். வெற்றி வேந்தனை கொன்றது யார்.. உங்க யூகத்திற்கு விட்டுட்டேன்.. (பொன்னியின் செல்வன், எஃபெக்ட், சில காட்சிகளை.. வாசகரகள் அனுமானத்திற்கு விடுவது.. சுவாரஸ்யம் கூட்டும்☺☺☺☺)

நாக ஜெயந்தன் வேங்கையரின் சிறையில் இருப்பதாக சொல்லி முடித்து விட்டேன். அவன் கதை சிம்மனால் ஒற்றைக் கை கால், கண் சிதைக்கப் பட்ட போதே முடிஞ்சுடுச்சு. நாகவல்லி சாவுக்கு யார் காரணம் குழப்பம் தீர்ந்ததும் அவனின் வஞ்சமும் முடிஞ்சு போய்டுச்சு.( நிறைய பேர் அவன் தான் திருமலையான்னு கேட்டாங்க.. நான் அதையும் அவங்க யூகத்திற்கே விட்டுட்டேன். கதையில் நான் அப்படி எந்த அழுத்தமும் கொடுக்கலை. பகையும் காமஆசையும் ஜென்ம ஜென்மமா கடத்தப் படுவது.. எனக்கு விருப்பம் இல்லை..😄😄😄😄)

சந்திரா சிம்மனின் கதை சோகமான முடிவு.. என்பது நான் முதல் யூடில இருந்தே சொல்லிட்டு வந்தது.. தாத்தா , பூசாரி சொல்லும் கதைகள்.. ஆதித் சொல்லும் அரைகுறை வரலாற்றில் வலியுறுத்தியது.. ம்.. அப்படியே முடிக்க வேண்டியதாகிடுச்சு.
அமர காதலுக்கான இலக்கணம் அவங்க மேல கொண்டு வரதா ஆகிடுச்சு🥲. அதனால தான் வர்💕வது வாக அவங்களை இணைச்சு நிறைவாக முடித்தேன்.

மிக மிக ஆழமான அலசல்களைக் கொண்ட பின்னூட்டங்கள் தீபா மா.. என்னை கருத்துத்திரிக்கு காலையில் விழித்ததும் ஆர்வமாக வரவழைப்பது உங்களின் ரசனைப் பகிர்வுகள்.. மிக்க நன்றி மா.. மீண்டும் சந்திப்போம்...praying-hands-faith-religion-belief-260nw-1532271497.jpg
 
JoRam

Active member
நீங்க சொன்ன மாதிரி கதை மாந்தர்கள் வாசிப்பவர்களின் மனதில் நிலைத்தால் சிறந்த படைப்பு என்று, அப்படியே, நீங்கள் எத்தனை படைப்புகள் கொடுத்தாலும் இந்த படைப்பு மணிமகுடத்தின் மேல் உள்ள இணையற்ற வைரக்கல் ஆக விளங்கும்.

சிறப்பு, மிகச்சிறப்பு. மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு. வாழ்த்துக்கள் சிஸ்.

உங்கள் எழுத்து பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மா.
 
ஆஹா.. நன்றி நன்றி ஜோ மா.. இவங்களை, இந்தக் கதையை மிஞ்சற மாதிரி ஒன்று எழுதனும்.. என்ற உத்வேகத்துடன் தான் ஒவ்வொரு கதையும் ஆரம்பிக்கிறேன்.. பார்ப்போம்.. ஜோ மா..

உங்களின் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

bitmoji-20171220073627.png
 
Deebha

Well-known member
Hi sis, திருமலையை முரடானக நினைத்தால் அவன் நரியின் தந்திரத்துடன் எவ்வளவு குழப்பங்கள் உண்டாகிவிட்டான் ??? ஆதித் குடும்பதினரின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது திருமலையின் திட்டத்திற்கு வழி வகுத்து விட்டது.. ஜெய் அந்த நிலையிலும் நிரஞ்சனாவை காப்பாற்றியதும், சிவ் குத்தீட்டி எரிந்ததும் ,ஜெய் திருமலையை சுட்டதும் செம.. ஆதித் மனமார தவறு உணர்த்தும், ஆதித் பாட்டி ஜெய்யிடம் மன்னிப்பு கேட்டதும் நிறைவு. இன்னா செய்தாரை என்ற வள்ளுவரின் வாக்கை , ஆதித் & பாட்டியிடம் ஜெய் மெய்பித்தது சூப்பர்... மதி காஞ்சனை & ஜெய் கிடையில் உறவு மேம்படுத்துவது சூப்பர்.. ஜெய் மதிக்கு 4 குழந்தைகள் என செம surprise கொடுத்துடிங்க sis.. ஆருத்ரா, வித்யூத் , சந்திர தத்தா, விதுரன் என கலக்கிட்டீங்க... ஜெய் மதி தன் மருமகன் விக்கி ஆசையை சந்திர தத்தா கொண்டு நிறைவேற்றியது சூப்பர். ஜெய் மதி அன்பாலும், நட்பாலும் , அரவணைப்பாலும் , உறவுகளாலும் பின்னி பிணைந்து இருப்பது மட்டுமல்லாமல் தொழிலிலும் புதுமை புகுத்தி வெற்றி தடம் பதிபது சூப்பர்.
 
Deebha

Well-known member
Hi thamarai sis, உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன் என் மனதையும் தொட்டது. இக்கதையில் உங்கள் எழுத்து நடை, உவமான உவமேய‌ம் ரொம்ப நன்றாக இருந்ததது. இந்த கதையின் கதாபாத்திரங்கள் எங்களை ஈர்த்ததற்கு உங்கள் எழுத்து நடை, அர்ப்பணிப்பு, 20 முறைக்கு மேலும் விடாது பிழை திருத்தம் மேற்கொண்ட உங்கள் விடா முயற்சியே காரணம். இதே போல் மேலும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள் sis..(y):smiley7:
Thank you for this wonderful story 💞🥰:smiley15:
 
மிகுந்த நன்றிகள் தீபா மா..

:smiley39::smile1::smiley55:
 
thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் அக்கா,

உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்.

ஏற்கனவே படித்து விட்ட கதைதான்...ஆனால் அப்போது நீங்கள் ஆன்லைனில் போட்ட போது ஏதேதோ பணிகளில் கொஞ்சம் அவசரம் அவசரமாகப் படித்து முடித்தேன். கிண்டிலிலும் படிக்க முடியாதாகையால் இந்த முறை கொஞ்சம் நிதானமாகப் படிக்க எண்ணியிருந்தேன். ஆரம்பத்தில் சில அத்தியாயங்கள் படிக்கவும் செய்தேன்,. ஆனால் நீங்கள் தினம் ஒரு பதிவு எனக் கொடுக்க ஆரம்பிக்கவும் என்னால் அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. கதை முடிந்ததும் மொத்தமாகவும் படிக்க நேரமில்லை. என்றாலும் ஏற்கனவே படித்ததில் எனக்குப் பிடித்த காட்சிகளை ரிவிஷன் செய்வது போல் ஒரு பார்வை பார்த்து விட்டேன். இத்தகையதொரு இனிய அனுபவத்தை அளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் :smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1:

என்றும் நலம் நாடும்
தூரிகா
 
ஆஹா.. நன்றி நன்றி தூரிகா மா.. உங்களின் அன்பிற்கும், அபிமானத்திற்கும் நன்றி டா
praying-hands-faith-religion-belief-260nw-1532271497.jpg
 
Priyajulian

Active member
Mam really sorry mam ennala ella ud kum reply panna mudiyala pasangaluku exam ponathu athanala thaan.. nenga first la sonnenga athe mathri chanthra such a amazing character mam innum chanthra illa appadindratha thaanga mudiyala kanil kanneer vanthutte irunthathu ilavl really romba pavam antha jenmam avangalukku evlo naragam nu enaku narayan mudiyuthu...enakku thaan Chandra va marakka mudiyala... epadi mam ellarudaiya unarvugalaiyum purinchi ellarumkkum pidikkiramathiri eluthurenga.... really one of the wonderful story mam... Rc mam Mr mam novel na first time padikkum bothu evlo excited aaneno same feel... ennoda life la marakka mudiyala novels la mukkiyamana idam intha novel ku undu mam thank you so much for very beautiful and nice story mam😍😍👌👌😘🥰🥰🥰💖💖👏👏👏👏
 
Top