Hi sis, சந்திரா வடுகனின் சண்டை அற்புதம். ஒரு குன்றை ஒரு வீர மங்கை ஒட ஒட விரட்டியது அருமை. (வானில் வால் நட்சத்திரம் தோன்றுவது , நான்கு சரம் தொடுப்பது ,போரில் எருதுகளை பயன்படுத்துவதில் பாகுபலி , மகதீரா effect) அதையும் தாண்டி ஒரு வீர மங்கையாக சந்திராவின் ஒரு கையில் வாளும் மறு கையில் உருமியும் என சுழல வைத்து கிட்டிய போர் வெற்றியை மணி மகுடமாக சூட வைத்தது பேரழகு. சிம்மன் & சந்திராவின் வீரதிலும் தீரதிலும் மிளிர்ந்து பேராண்மை... வெற்றி சந்திராவை கொன்றான் என்பதை நம்ப முடியவில்லை sis... அவன் வடுகன் / நாக ஜெயந்தன் சந்திராவை கொள்வதற்கு துணை போவான் என நினைத்தேன். வடுகன் எப்படி அங்கு வந்தான்? அவனை நிச்சயம் சந்திரா தான் கொன்று இருப்பாள். வெற்றியை கொன்றது யார் sis?? நாக ஜெயந்தன் என்னவானான் ??? வீரா சிறு பொழுது நகர்ந்ததால் அன்று சந்திரா உயிர் போக காரணமானதால் இப்பிறவியில் தன்னுயிர் தந்து மதியை காக்க விழைந்தானா ??? சிம்மன் எவ்வளவு ஆசையுடன் தன் இளவரசன் பட்டம் துறந்து தன்னவளை மணக்க தாலியுடனும் சேலையுடனும் வந்தான், அவனது ஆசை நிராசை ஆனது வேதனை. சந்திராவின் வார்த்தைக்காக 4 நாடுகளுக்கும் அரணாக துறவு வாழ்க்கை வாழ்ந்த சிம்மன் அருமை. சந்திரா ஆசைப்படி இந்த பிறவியில் சிம்மனுடன் இணைந்தது மகிழ்ச்சி..
நன்றி நன்றி தீபா மா
வரலாற்றுக் கதைகள் என்றால் சில நினைவுகள் வருவது தவிர்க்க முடியாது. சமீபத்தில் மிக ரசித்துப் படித்த வேள்பாரி(நான் போட்ட படங்கள் அந்த நாவலுக்காக மணியன் செல்வம் அவர்களால் வரையப் பெற்றவை தான்) சரித்திர நாவலின் தாக்கமும் இருக்கத் தான் செய்தது..
கதையின் முடிவு ஏற்கனவே சொல்லப்பட்டது.. தானே தீபா மா. சிவேஷ் முன்னோரால் தான் சந்திராமா இறந்தாங்க
அதும் துரோகத்தால்..
முத்து வடுகனைக் கொன்றது.. சந்திராமா.. வீரவாள் அவங்க கையில் இருந்ததுன்னு தெளிவா சொல்லிருக்கேன். வெற்றி வேந்தனை கொன்றது யார்.. உங்க யூகத்திற்கு விட்டுட்டேன்.. (பொன்னியின் செல்வன், எஃபெக்ட், சில காட்சிகளை.. வாசகரகள் அனுமானத்திற்கு விடுவது.. சுவாரஸ்யம் கூட்டும்☺☺☺☺)
நாக ஜெயந்தன் வேங்கையரின் சிறையில் இருப்பதாக சொல்லி முடித்து விட்டேன். அவன் கதை சிம்மனால் ஒற்றைக் கை கால், கண் சிதைக்கப் பட்ட போதே முடிஞ்சுடுச்சு. நாகவல்லி சாவுக்கு யார் காரணம் குழப்பம் தீர்ந்ததும் அவனின் வஞ்சமும் முடிஞ்சு போய்டுச்சு.( நிறைய பேர் அவன் தான் திருமலையான்னு கேட்டாங்க.. நான் அதையும் அவங்க யூகத்திற்கே விட்டுட்டேன். கதையில் நான் அப்படி எந்த அழுத்தமும் கொடுக்கலை. பகையும் காமஆசையும் ஜென்ம ஜென்மமா கடத்தப் படுவது.. எனக்கு விருப்பம் இல்லை..
)
சந்திரா சிம்மனின் கதை சோகமான முடிவு.. என்பது நான் முதல் யூடில இருந்தே சொல்லிட்டு வந்தது.. தாத்தா , பூசாரி சொல்லும் கதைகள்.. ஆதித் சொல்லும் அரைகுறை வரலாற்றில் வலியுறுத்தியது.. ம்.. அப்படியே முடிக்க வேண்டியதாகிடுச்சு.
அமர காதலுக்கான இலக்கணம் அவங்க மேல கொண்டு வரதா ஆகிடுச்சு
. அதனால தான் வர்
வது வாக அவங்களை இணைச்சு நிறைவாக முடித்தேன்.
மிக மிக ஆழமான அலசல்களைக் கொண்ட பின்னூட்டங்கள் தீபா மா.. என்னை கருத்துத்திரிக்கு காலையில் விழித்ததும் ஆர்வமாக வரவழைப்பது உங்களின் ரசனைப் பகிர்வுகள்.. மிக்க நன்றி மா.. மீண்டும் சந்திப்போம்...