All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
Hi sis, ஜெய் தன் பாதுகாப்பையும் உயிரையும் பற்றி கவலைப்படாமல் மதியை காக்க விழைவது செம தில்... அவளை பத்திரமாக சிவேஷ்டம் சேர்த்துவிட்டம் என அறிந்த பின் அதுவரை கட்டுப்படுத்திய மயக்க நிலைக்கு செல்வதில் ஜெய் யின் மன உறுதியும் , அவனின் தூய காதலும் பளிச்சிட்டன...
இளவரசி இப்போது திருமணத்தை விட போரில் வெற்றி பெறுவதே முக்கியம் என்று புரிய வைத்தது சூப்பர். சிம்மனும் அண்டை நாட்டு இளவரசிகளுடன் நடக்க போகும் திருமணத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிப்பது போல் உள்ளதே sis? அவனின் தந்தை அழகாக சிம்மனின் நாடி பிடித்துவிட்டார் . சந்திரா ஆசை கொண்டு வெற்றியை மணக்க சம்மதிக்கவில்லை என உணரும் போது சிம்மனின் நிலை என்ன?
நன்றி நன்றி தீபா மா😍🥰😍🥰😍🥰😍

ஜெய் அப்படித்தான், இன்னமும போகப் போக, அவனின் அன்பும் காதலும் வெளிப்படும் அவனையும் அறியாமல்.

சிம்மன் ஏற்கனவே புலம்ப ஆரம்பிச்சுட்டானே.. 😁😁😁😁😁😁😁

இன்னமும் கவலைக்கிடமா தான் போகும்.. பாவம் அவன்..😷😷😷😷😷😷
 
தாமரை

தாமரை
அந்த காலத்தை குறிக்கும் paintings வெகு அழகாக உள்ளது sis...
நன்றி தீபா மா.. வேள்பாரிக்காக மணியன் செல்வம் அவர்கள் போட்டிருந்தது. சுட்டுட்டேன்☺☺☺☺☺
 
Saveetha

New member
ஒவ்வொரு அத்தியாயமும் அருமை. இளவரசி சந்திரா உண்மை கதாபாத்திரமா ? RJV and Mathi காதலை எப்போது உணர்த்துவார்கள் ? கௌரியம்மா, ஆதித் செயல்பாடுகள் குள்ளநரித்தனம் வாய்ந்தவை. மாலா வசந்த மாலையின் மறு வடிவமோ ? இப்பொழுதாவது இவரகள் காதல் சேருமா ? அழகாக செல்கிறது கதை. அன்றும் இன்றும் எந்த தோய்வும் இல்லாமல் விறுவிறுப்பாக கதையை செலுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள் தோழி. 💐😊
 
மிக்க நன்றி சவீதா மா💕💝💕💝💕💝💕💝🙏🙏🙏🙏

இக்கதை முழுக்க முழுக்க கற்பனையே.. தூண்டுதலாக சில செவி வழிக் கதைகள், பார்த்த திரைப்படங்கள், படித்த புதினங்கள்..

சந்திர வதனாம்பிகைக்கு என் மனதில் நிறுத்தியது.. மீனாக்ஷி அம்மன்..

புராணங்கள் கூறும் கதை விடுத்து , என் கற்பனை வேறு திசையில் பயணித்தது. ஒரு பெண் அரசியாக கோலோச்சி, மக்களால் வணங்கப்பட அவர்கள் எவ்வளவு செய்திருப்பார்கள் என்று..

உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் வந்து கொண்டே இருக்கின்றன.. காட்சிகள் மடமடவென மாறும் .. லாஜிக் இல்லா மேஜிக்குகள் நடக்கும்..😁😁😁😁😁😁

ரசியுங்கள்.. 💕💕💝💝💝 ரசிப்பை என்னுடன் பகிருங்கள்..

கருத்துப் பகிர்விற்கு நன்றி மா..
 
Deebha

Well-known member
Hi sis. சவேஷ்யை பயமுறுத்திய பின் ஜெய் கண்விழித்துவிட்டான். தன் நிலையை கூட பொருட்படுதாமல் மதியின் நிலையை அறிய முயல்வது ஜெய் காதலின் உச்சம். அதீத் இனி மதி மேல் தாக்குதலை அதிகரிப்பானா ? சிவேஷ் இருவரின் நிலை புரிந்தும் முன்னேற முடியா நிலை. ஜெய், மதி இணைவது எப்போதோ ?
சந்திராவின் தந்தை குற்றமற்றவர் என்ற உண்மை சந்திராவிற்கு வலுசேர்க்கும். வீரா படை பலத்தை கணக்கிடுவதோடு வெற்றி யையும் அளவிடுகிறான். அவனின் கணிப்பும் வசந்தாவின் கூற்றும் வெற்றி இளவரசிக்கு சிறிதும் பொருத்தமானாவன் அல்ல. சந்திரா சிம்மனின் மனதை வீராவும் கண்டு கொண்டானா?
 
ஹாய் தீபா மா..

ஆதித் , ஒரு கண்ணு வச்சிருந்தான், இனி ரெண்டு கண்ணும் வைப்பான்🤭🤭🤭🤭

கதை நீங்க எதிர்பாராத திசையில் பயணிக்கும தீபா மா💓💓💓👍👍👍

சந்திரா இத்தோடு விட மாட்டாங்க, இன்னும் உள்நாட்டுப் பகை தீர்க்க போராடுவாங்க.

வீராவிற்கு தன் இளவலின் மீது அவ்ளோ நம்பிக்கை, தனியா போனா, சாதிச்சுடுவாரு..
ன்னு..

ஆனா சந்திராம்மா.. பற்றியும் தெரியும்.. கஷ்டம் தான்...
 
JoRam

Active member
ஆமாம், இந்த கௌிம்மா, ஆதித் ஏதாவது செஞ்சு கொஞ்ச நாள் ஓடாத மாதிரி பாத்துக்கோ, ரொம்ப அலப்பறை பண்ணுறாங்க.
பண்டைய காலத்து மண்டபம், தூண்கள் பற்றிய விளக்கங்கள் அருமை மா. மாலாவும் சிவேஷும் திரும்பவும் நல்லா பொருந்தியிருக்காங்க.

முத்து வடுகநாதன் பாகுபலில வர காளக்கியர்கள் மாதிரி தெரியுறாங்க. நம்ம சிம்மா இருக்க இளவரசிக்கு என்ன பயம் ?
 
Top