All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
Hi sis, ஜெய் சொத்தை ஏற்காதது சூப்பர். மேற்படிப்பு தன் சொந்த சம்பாத்தியத்தில் படித்தது சிறப்பு. சொந்தமாக தொழில் நிறுவி அதை வெற்றிகரமாக நடத்துவது அதை விட சிறப்பு. ரவீந்திரன் எவ்வளவு அழகாக புரிந்து நடக்கிறார். இ‌ந்த அதீத் ஏன் sis, இப்படி இருக்கான்? யாரிடமும் பாசம் இல்லாமல் வெறும் பழிவெறியில் வாழ்வது... ? ஜெய்யின் அவார்ட் வாங்கும் நிகழ்ச்சியில் மதி மனதை சிவேஷ் அறிந்து கொண்டது நலம் பயக்குமா ?
சந்திராவை ஜெயந்தனின் படை சூழ்ந்ததும் சூப்பர் வாள் போருக்கு காத்திருந்தால் சிம்மனின் உறுமி ருத்திர தாண்டவத்தை கொடுத்து கலக்கிட்டீங்க. ஆனால் சந்திரா வின் வாள் வீச்சுக்கும் waiting sis...கடைசியில் சந்திரா வின் பார்வையில் என்ன இருந்ததது sis? Hearty congratulations for 2000 views sis !!!
நன்றி நன்றி தீபா மா :smiley18::smile1::smiley3:

ஆதித் வர்மன் அப்படி வளர்க்கப்பட்டு இருக்கிறான் தீபா மா.. ரவீந்தர் சொல்கிறாரே..

போகப் போக, அவனின் தந்திரங்கள், கோபங்கள் அதிகமாத் தான் ஆகும்.

சிவேஷ் அறிந்தாலும் ஜெய் உணர்ந்தாலும், காத்து நின்ற காலம் சும்மா விடாதே.. 😍👍

எனக்கும் இந்தக் கதையில் இந்தப் போர்ஷன் ரொம்பப் பிடிக்கும் தீபா மா. சிம்மன் அவனின் கோபத்தை, வீரத்தை அழகாக வெளிப்படுத்தும் இடம்.. சந்திரா. அதுக்கு இடம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறாங்க..

வீரத்தை அக்கறையை விரும்பினாலும், கொள்கை, நாட்டு நிலை பின்னுக்கு இழுக்குது.. அதுதான்..

பாராட்டுக்கு நன்றி தீபா மா💕🙏💕🙏💕🙏
 
அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் மனதை பிரதிபலிக்கிறது உங்கள் கதை .கதையின் போக்கு மிக அருமை வாழ்த்துக்கள் சகோ .
 
JoRam

Active member
ஆஹா, ரெண்டு பொரி உருண்டைகள்(மாத்தி சொன்னா நல்லா இருக்குமுல்ல).

ஆமா, இவ்வளவு பெரிய வில்லன் சரி, அவன ஏன் அம்பூட்ட அழகா படம் புடுச்சு போட்டுருக்கீக ;);)

கத வேறு அம்சமா போய்ட்டு இருக்கு. இப்ப எத பத்தி சொல்ல, ஓரே கன்புயூசனா இருக்கு.
 
JoRam

Active member
ஏம்மா, எங்க சிம்மன் நின்ன இடத்திலே பாஞ்சு பாஞ்சு சண்ட போட்டு சந்திராம்மாவ காப்பத்தினா, உப்பு சப்பில்லாத நன்றிய சொல்லிட்டு போகுது. கண்டிச்சு வைமா கொஞ்சம்.

அவார்ட் எல்லாம் வாங்குற அப்பாடக்கரு செல்லம். மீ ஹாப்பி தான்.

நீங்க என்ன இம்புட்டு அழகான தமிழ்ல அழகா எழுதிறீங்க, டூயுசன் எங்காயச்சும் படிச்சீங்களா என்ன?
 
தாமரை

தாமரை
அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் மனதை பிரதிபலிக்கிறது உங்கள் கதை .கதையின் போக்கு மிக அருமை வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி ஜெமிலா மா💕💖💕💖💕💖
 
தாமரை

தாமரை
ஆஹா, ரெண்டு பொரி உருண்டைகள்(மாத்தி சொன்னா நல்லா இருக்குமுல்ல).

ஆமா, இவ்வளவு பெரிய வில்லன் சரி, அவன ஏன் அம்பூட்ட அழகா படம் புடுச்சு போட்டுருக்கீக ;);)

கத வேறு அம்சமா போய்ட்டு இருக்கு. இப்ப எத பத்தி சொல்ல, ஓரே கன்புயூசனா இருக்கு.
ஹா ஹா ஜோ மா.. உங்களுக்கு பொரி உருண்டைதான் புடிக்கும்னா.. அதே வச்சுக்கலாம்.. நல்லாருக்கு 😁👍😁👍😁👍😁

ஹி ஹி.. ஆன்டி ஈரோ எழுத வராது.. வில்லனை ரசிச்சு எழுதுவம்னு தான்😇😇😇☺.
ஆப்போனன்ட் எவ்ளோ இஸ்டாராங்கோ, அவ்ளோ.. நம்மளும் இறங்கி ஏறி ஆடலாம்.. அதான் ஆக்ஷ்ன் பேஸ்ட் ஆன இந்தக் கதைல அவனை அழக்க்கா போட்டேன்.. என்னாதான் இருந்தாலும் அவன் நம்ம ஹீரோக்கு பையன் முறை.. ஸோ அவனும் நச்சுனனு இருக்கனும்ல.🤭🤭🤭🤭🤭🤭

நீங்க இப்படி சொல்வதேனு.. மிகப் பெரிய பாராட்டு ஜோ மா.. ஹா ஹா,, செம்ம பின்னூட்டம்.💝💝💝💝🥰🥰🥰🥰
 
தாமரை

தாமரை
ஏம்மா, எங்க சிம்மன் நின்ன இடத்திலே பாஞ்சு பாஞ்சு சண்ட போட்டு சந்திராம்மாவ காப்பத்தினா, உப்பு சப்பில்லாத நன்றிய சொல்லிட்டு போகுது. கண்டிச்சு வைமா கொஞ்சம்.

அவார்ட் எல்லாம் வாங்குற அப்பாடக்கரு செல்லம். மீ ஹாப்பி தான்.

நீங்க என்ன இம்புட்டு அழகான தமிழ்ல அழகா எழுதிறீங்க, டூயுசன் எங்காயச்சும் படிச்சீங்களா என்ன?
ஜோ மா.. சந்திராமா சொன்னது தான். எப்பவும் அவனுக்கு அவசரம், எங்க இளவரசியே.. அடி வெளுத்துருப்பாங்க
இவன் இடை இறங்கி ஆடிட்டான். ஹூம்.. ஹீரோயிசம்..

நன்றி நாங்க கடேசி வரை ஜொள்ள மாட்டோம் 😄💓😄💓😄😉😉😉😉

தமிழ்.. என் பள்ளிப் படிப்பு தமிழ் மூலம் மா..

இப்பவும் அந்த டச் இருந்திட்டு இருக்கு.. பிள்ளைகளுக்கு தமிழும் இந்தியும் சொல்லிக் கொடுத்திட்டு இருக்காதாலே.. நேற்றுக் கூட எட்டுதொகை, பத்துப் பாட்டு, குற்றாலக் குறவஞ்சி ன்னு... அதிலயே மூழ்கிக் கிடப்பதாலே இருக்குமோ..

💞💖💞💖😍💖😍💖

குறைஞ்சது இருபது முறை எடிட் ஆகி இருக்கும் இந்த யூடி.. அதாலேயும்🤭🤭🤭🤭🤭😅
 
Deebha

Well-known member
கெளரி பாட்டி நினைத்திருந்தால் அவர் கணவரை முன்பே வேறு திருமணம் செய்யாமல் தடுத்திருக்கலாம்.. அவர் செய்த தவறுக்கு அவரை தண்டிக்காமல் விட்டுவிட்டு தன் பேரன் மூலம் வன்மத்தை தீர்க்க நினைப்பது கொடுமை. ரவிந்தர் உன் வேலையை மட்டும் பார் என நல்ல தந்தையாக கூறுகிறார். ஆதித் 'கெடுவான் கேடு நினைப்பான் 'கூற்றை மெய்பிப்பான் போல..கிளிமானூர் அரண்மனையில் தான் சிம்மன் சந்திராவிற்காக ஆசையாக உருவாக்கிய புடவையும் நகைகளும் இருப்பது ஆனந்த அதிர்ச்சி... தற்போதைய ஆதித்தின் குறி மதி போலவே... ஜெய் shopping complex கட்டும் இடத்தில் கண்டு பிடித்த மண்டபம் சந்திராவிற்கு உரிய இடமா?
Jei's eco friendly building features are amazing!!!
வில்லன் முத்துவடுகன் பாகுபலி இட்ல வில்லனை போல? நாகர் கூட்டம் தப்பிக்க உதவியது வெற்றியா? அவனின் காவல் எல்லையில் தானே அவ்வூர் உள்ளது sis? வசந்தாவின் கோபத்தை இளவரசி குறும்பால் போக்குவது சூப்பர். தாத்தாவிற்கு மன்னன் பற்றிய உண்மை நிலவரம் தெரியுமா? சிம்மன் மனதில் சந்திராவும் சந்திரா மனதில் சிம்மனும் இடம் பெயர்ந்து விட்டனரா? சந்திராவிற்கு வெற்றியுடன் நிச்சயம் நடந்ததை ஒத்துகொள்ளவே முடியவில்லை sis?
 
தீபா மா ,
மிக அழகான கருத்துப் பகிர்வு 😍🥰😍🥰😍🥰🙏🙏🙏🙏🙏

கௌரியம்மா! ஆண்களின் அதிகாரங்களுக்கு வரம்பு எல்லை இல்லையே. எவ்வளவோ நல்லது இருந்தாலும் பல ஆண்களுக்கு இது ஒரு வீக்னெஸ் போல, அதும் இது போல மஹாராஜாவா இருந்தவர், கட்டுப்படுத்துவது சுலபமா என்ன. கௌரிம்மாவின் நடவடிக்கைகளும் அப்படித்தான்.. ரவீந்தர் அவரை அலட்சியம் செய்துட்டார். ஆதித், அவர் வழியில, அவ்ளோதான்.

அந்த மண்டபம் ஒரு குறியீடு, வசந்தாவும் வீராவும் சந்திக்கும் வாவி அருகான மண்டபம் போல ஒரு மண்டபம்..

நாக ஜெயந்தனுக்கு மலைக்குடியினரின் ஆதரவு உண்டு மா, வெற்றி வேற மாதிரி ஆள், அதும் இப்போ அவன் அரசனாகும் நிலை, அவரகளுக்கு ஆதரவு அளிக்கத் தேவையில்லையே.

பாகுபலில வரும் அந்த வில்லன் தான் முத்துவடுகனுக்கு இன்ஸ்ப்ரெஷன்.😅😅😅 கண்டுபிடிச்சிட்டீங்க..

ஆனா தமிழக வரலாற்றில், களப்பிரர் ஆட்சி காலம் என்று ஒரு இருண்ட காலம் உண்டு. அது பற்றிய சில குறிப்புகள் வச்சுத்தான்.. களவநாடு அதன் மன்னன், செயல்பாடுகள் என்று வைத்தேன் ..

சந்திரவும் சிம்மனும் காதலிக்கலைன்னா கதை இல்லையே💕💞💕💞💕💞💕

ஆனா இருவரின் சூழ்நிலை💓💓💓💓💓💓. ம் பாவம் தான்.

அரசர் பற்றிய உண்மைகள் விரைவில் வெளிவரும் மா..

காலம் மாற.. காட்சிகளும் மாறும்.. தீபா மா.. நோ டென்ஷன்💟💖💟💖💟💖
 
Deebha

Well-known member
Hi sis, ஜெய் தன் பாதுகாப்பையும் உயிரையும் பற்றி கவலைப்படாமல் மதியை காக்க விழைவது செம தில்... அவளை பத்திரமாக சிவேஷ்டம் சேர்த்துவிட்டம் என அறிந்த பின் அதுவரை கட்டுப்படுத்திய மயக்க நிலைக்கு செல்வதில் ஜெய் யின் மன உறுதியும் , அவனின் தூய காதலும் பளிச்சிட்டன...
இளவரசி இப்போது திருமணத்தை விட போரில் வெற்றி பெறுவதே முக்கியம் என்று புரிய வைத்தது சூப்பர். சிம்மனும் அண்டை நாட்டு இளவரசிகளுடன் நடக்க போகும் திருமணத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிப்பது போல் உள்ளதே sis? அவனின் தந்தை அழகாக சிம்மனின் நாடி பிடித்துவிட்டார் . சந்திரா ஆசை கொண்டு வெற்றியை மணக்க சம்மதிக்கவில்லை என உணரும் போது சிம்மனின் நிலை என்ன?
 
Top