All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

இதோ அடுத்த கதையுடன் வந்துவிட்டேன்.

இந்த கதை.. இந்த வருட புத்தக திருவிழாவில் புத்தகமாக வந்த கதை..

அதனால் தொடர்ந்து யூடிகள் பதிவிடுவேன்.

ஒருநாள் விட்டு ஒருநாள் யூடிகள் வரும்.

இந்த கதையை பற்றி கூற வேண்டுமென்றால்.. இது சாதாரண மென்மையான காதல் கதை!

அதிரடியாக இல்லாமல் மென்மையாகவே இந்த கதை நகரும்.

ஒரே மாதிரி.. கதை கொடுப்பதில் எனக்கு.. விருப்பமில்லை.

ரோஹீத் சுபாஷினியுடன் சில நாட்கள் பயணித்திடுங்கள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர்ந்த காதல் கொடியிலா..! கையிலா..!

அத்தியாயம் 1

2000 அன்று

மணலும், புழுதியும், சிறுக் கற்களுமாக ஒழுங்கற்று இருந்த அந்த மைதானத்தில் மண்டையைப் பிளக்கும் வெயிலைப் பொருட்ப்படுத்தாது சிறார்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தாலும் பார்க்க முடியும். அவர்களிடையே சிறு கைக்கலப்பு கூடத் தோன்றியது. ஆனால் தோன்றிய கணத்திலேயே அது மறைந்தும் விட்டது. மனதில் கள்ளம் கபடு மட்டுமில்லை எந்தவித கட்டுப்பாடும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட அறியாது வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை இருகண்கள் ஏக்கத்துடன் இமைகளை இமைக்க கூட இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தது..!

பசுமை மிகுந்து காட்சியளித்த மலையடிவாரத்தில் உள்ள உயர்ந்த குன்றில் பிரமாண்டமாய் அமைந்திருந்தது அந்த மாளிகை!

ஆங்கிலேய மற்றும் இந்திய கட்டிடக்கலையைப் பின்பற்றி கட்டப்பட்டு அந்த மாளிகையின் வயது இருநூறு வருடங்கள் இருக்கும்..! பிரமாண்டமான தூண்கள் கொண்ட நுழைவாயில், வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள், சன்னல்கள், திரைசீலைகள் போன்றவற்றால் இந்த மாளிகை மேலும் கண்களைக் கொள்ளைக் கொண்டது. அந்த மாளிகையை நன்றாக சுற்றிப் பார்க்க இரண்டு நாட்கள் ஆகும்.

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு அந்த மாளிகைக்கு அருகில் சென்றாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் அவர்களின் வாழ்நாளின் இலட்சியமாகும். ஆனால் அந்த பிரமாண்டமான மாளிகையை நாளை ஆளப் போகிறவன்.. அங்கு இருந்துக் கொண்டு சிறார்கள் விளையாடுவதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அந்த சமஸ்தானத்தின் இளைய வாரிசான பன்னிரெண்டு வயது நிரம்பிய ரோஹீத்..!

கருப்புநிற கோட்சூட்.. அந்த ஒன்பது வயது நிரம்பிய ரோஹீத்திற்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது. சிகைப் படிய வாரப்பட்டிருப்பதால் அவனது எடுப்பான முகம் இன்னும் எடுப்பாக தெரிந்தது. கரங்களில் மெல்லிய வைரங்களால் ஆன பிரஸ்லெட்ம் மோதிரமும் இருப்பதைக் கண்டு நீங்கள் வியந்தால்.. இது என்ன பிரமாதம்..! அவனது கோட்சூட்டில் உள்ள பட்டன்களும் உயர்ந்த வகை வைரங்களே..!

இவை அனைத்தின் மதிப்பும் அவனது பிறப்பின் பெருமையும் அறியாது அவனது வயதுக்குரிய ஆவலுடனும் ஏக்கத்துடனும் அந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது “ரோஹீத் ஆர் யு ரெடி..!” என்ற குரலில் திரும்பினான் அவனது தந்தை ராஜேந்திர பூபதி நின்றுக் கொண்டிருந்தார்.

அவன் பதிலளிப்பதிற்குள் அருகில் வந்தவர்.. “ரோஹீத்..! இன்று பார்ட்டியில் வந்திருப்பவங்க அனைவரும்.. இந்தியாவின் பெரும்புள்ளிகள்..! அடுத்த சென்சூரியை வெல்கம் செய்ய இந்த பார்ட்டி என்றாலும் இந்த சமஸ்தானத்தோட அடுத்த வாரிசாக உன்னை அறிமுகப்படுத்தும் பார்ட்டி இது..! சோ அனைவரோட கவனமும் உன் மேலே தான் இருக்கும்..! அதனால் உன்னோட ஒவ்வொரு மூவ்விலும் கவனம் இருக்கணும். ஏன் இப்படி தளர்வா நிற்கிறே? கமான் ஸ்டென்ட் ஸ்ரைட் அன்ட் ஸ்ட்ரீப்..! அதே மாதிரி யாராவது உன் கிட்ட பேசினா ஒன் ஆர் டூ வேர்ட்ஸ்ல் அவங்க கேட்ட கேள்விக்கு மட்டும் ஆன்ஸர் செய்யணும்.. நேராக அவங்க கண்களைப் பார்த்து பேசணும் ஓகே! அன்ட் மோஸ்ட்லி இம்பார்டன்ட் அங்கே சர்வ் செய்ய வர சர்வன்ட்ஸ் கிட்ட கெஸ்ட்ஸ் முன்னாடி பேசி நமக்கு என்று இருக்கும் கௌவரத்தைக் கெடுத்துவிடாதே..” என்று முறைத்தார். ரோஹீத்தின் கண்களில் பயம் தொற்றிக் கொண்டது.

இருநாட்களுக்கு முன் தனக்கு சிகைத் திருத்தியவரிடம் சிரித்து பேசியதிற்காக தனி அறையில் ஒருநாள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தான்.

அவனது முகவாயைப் பற்றி நிமிர்த்திய ராஜேந்திரர் “ரோஹீத் லிசன்..! நீ சாதாரண ஆளில்லை. இருபது ஊர்களை உள்ளடக்கிய இந்த சமஸ்தானத்திற்கு நான் இராஜா என்றால் நீ இளவரசன்.. நாளை நீதான் இராஜாவாக இருப்பாய்..! உன்னை நிமிர்ந்துப் பார்க்கும் இந்த மக்கள் உன் குடிமக்கள்! அவங்களுடைய வாழ்க்கையை நீதான் சிறக்க செய்யணும். அவங்களின் வாழ்வை சிறக்க செய்யும் நீ அவர்களுக்கு கடவுள் போன்றவன். உன் பேச்சு, நடை, உடை, பாவனை, எண்ணம் எல்லாம் அவர்களை விட உயர்ந்தாய் தெரிய வேண்டும். அவர்களுக்கு உயர்ந்ததாய் தெரிந்து அவங்க உன்னைப் பிரமித்துப் பார்க்க வேண்டும். உன்னை மரியாதைக்கும் மேலாக பார்த்து உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்க வேண்டும். எந்த விதத்திலும் அவர்கள் நெருங்க முடியாதவனாய் அந்த வானத்தைப் போல் இருக்க வேண்டும். அந்த வானத்தைப் போல் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.. என்ன புரிகிறதா!” என்றுக் கேட்கவும், அதுவரை அவனது தந்தை பேசுவதை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்த ரோஹீத் புரிந்தது என்று தலையை ஆட்டினான்.

இராஜேந்திரர் “லெட்ஸ் மூவ்..!” என்று ரோஹீத்தை அழைத்துக் கொண்டுச் சென்றார். தந்தையுடன் சென்ற ரோஹீத் செல்வதற்கு முன் கடைசியாக மைதானத்தில் விளையாடும் சிறுவர்களைப் பார்த்திட வேண்டும் என்று நடந்தவாறுத் திரும்பிப் பார்த்தான். அதற்குள் அவர்கள் அறையை விட்டு வெளியே வந்திருக்கவும் ரோஹீத் திரும்பி பார்க்கையில் அவர்களின் பணியாள் பணிவுடன் கதவைச் சாத்தியிருந்தான்.

இந்தியாவில் மன்னராட்சி ஒழிப்பு சட்டம் கொண்டு வந்திருந்தாலும் சில இடங்களில் நடந்துக் கொண்டு தான் இருந்தது. அதுபோன்ற சமஸ்தானத்தின் இராஜா தான் இராஜேந்திரர்! மைசூர் மன்னர் உடையார் பரம்பரையின் வழி வந்தவர்கள். பிற்காலத்தில் மாநிலங்கள் பிரிக்கப்படுகையில் இவர்களுக்கு கீழ் இருந்த சமஸ்தானம் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு என்ற இரு மாநிலங்களின் எல்லைகளைப் பகிர்ந்துக் கொண்டது.

அங்கு இருக்கும் குடிமக்களுக்கு நிலங்களைக் குத்தகைக்கு கொடுத்தார்கள். அவர்கள் அதில் உழைத்து பெருகும் வருமானத்தில் பெரும்தொகையை எடுத்துக் கொண்டு அவர்கள் உழைப்பிற்கு தராளமாகவே பணம் அளித்து அங்கிருந்தவர்களை அவர்களுக்கு கீழ் வைத்துக் கொண்டார்.

நாளடைவில் நவீனம் பெருகினாலும் அவர்கள் மாறாமல் இராஜாக்களுக்கு கொடுக்கும் மரியாதையை அளித்து பயபக்தியுடன் இருந்தார்கள். அவர்கள் அவ்வாறு இருந்ததால்.. அதிகாரமும், கௌரவமும், ஆளுமையையும் மன்னர் பரம்பரையில் இருந்தவர்கள் கொண்டிருந்தார்களா..! அல்லது இவர்கள் நாங்கள் உங்களுக்கு கடவுளைப் போன்றவர்கள் என்ற பிரமிப்பை மக்களுக்கு தோன்றிவித்ததால் அவ்வாறு பயப்பக்தியுடன் மக்கள் இருந்தார்களா என்றுக் கேட்டால் பதில் இரண்டும் தான் என்று வரும்..!

வெள்ளையர்களிடம் இருந்து வாங்கிய இந்த மாளிகையை இந்திய முறைப்படி புதுப்பித்து.. தங்கள் வசமாக்கி கொண்டவர்கள்.. இங்கு சுமார் நூற்றியிருபது வருடங்களாக 2015 வரை வசித்திருந்தார்கள்.. அதன்பின்..???

இன்று..

மார்பு உயரமே கொண்ட மதிற்சுவரின் மேல் இரு கைகளையும் மடக்கி வைத்து அதில் முகவாயை வைத்துக் கொண்டவளின் பார்வை அந்த உயர்ந்த குன்றின் மேல் இருந்த கேட்பாரற்று இருந்த மாளிகையின் மேல் இருந்தது.

காலைப்பொழுதாகியிருக்க நேரம் ஏழு மணியாகிருந்தது. மலைகளை மூடியிருந்த வெண்பனி மேகங்கள் பஞ்சுபொதியாய் அந்த மாளிகையை மறைத்திருக்க.. மலையிற்கு பின்னால் இருந்த சூரியன் மெல்ல எட்டிப்பார்க்கவும் அந்த பனிமேகங்கள் மெல்ல விலகின.

சிறு வயதில் அவள் நினைவில் இருந்த காட்சிகள் மங்கலாய் வந்துச் சென்றுக் கொண்டிருந்தது. அவளின் வீடு மாளிகையில் இருந்து ஊர் செல்லும் வழியில் சிறு மணல்திட்டின் மேல் இருந்தது. அதனால் அந்த மாளிகையை நன்றாக பார்க்கலாம். இங்கு இருந்துப் பார்த்தால் யார் யார் என்றுத் தெளிவாக தெரியாவிட்டாலும் மனித உருவங்கள் தெரியும். சிறு வயதிலிருந்தே அவளின் பொழுது அந்த மாளிகையை வேடிக்கைப் பார்ப்பதிலேயே கழியும். அவள் என்ன வேலைச் செய்தாலும் அவளின் ஒரு கண் அந்த மாளிகையிலேயே இருக்கும். காலை நேரத்தில் பணியாளர்கள் சுறுசுறுப்பாக வேலைச் செய்வது. மாடியில் மன்னர் குடும்பத்தினர் காலை வேளையை இரசித்தபடி மேல்மாடத்தில் உலாவுதல், மதியவெயிலில் மின்னும் மாளிகை, இரவு நேரத்தில் விளக்குகளால் ஜொலிக்கும் மாளிகை, ஏதேனும் விழா நடத்தால் அமர்க்களப்படுத்தும் மாளிகை என்று அனைத்தும் அவளுக்கு அத்துபடி..! ஆனால் இந்த எட்டு வருடங்களாக என்று நினைத்தவளுக்கு நினைவில் வந்த காட்சிகள் தாங்க முடியாமல் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். பின் மெல்ல இமைகளைத் திறந்தவளுக்கு ஆள்நடமாட்டம் இல்லாத வெறுமையாக இருந்த மாளிகை அவளுக்கும் வெறுமையைத் தந்தது. மெல்ல தலையைத் திரும்பி மதிற்சுவற்றில் கோர்த்து வைத்திருந்த தனது கரங்களில் ஒரு பக்க கன்னத்தைச் சாய்த்தவாறு நின்றாள்.

“ஏய் சுபா..! இந்த கார்த்திகை பனியிலே ஏன் அங்கே நின்னுட்டே தூங்கிட்டு இருக்கிற? உள்ளே போய் படு..” என்ற அன்னை சுசீலாவின் குரலில் சுபா என்னும் சுபாஷினி திரும்பி பார்த்தாள்.

“அம்மா.. சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்ம்மா..!” என்றாள்.

“அங்கே வேடிக்கை பார்க்கிறதுக்கு வந்து எனக்கு பாத்திரம் விலக்கி தரலாமில்ல..! நான் டிபன் வேலையைப் பார்ப்பேன்.” என்றாள்.

“நீ தண்ணி தெளிச்சு வை..! வந்து விலக்கி தரேன்..” என்கவும், சுசீலா முணுமுணுத்துவிட்டே வீட்டினுள் சென்றுவிட்டார். அன்னை சென்றதும் சுபாஷினியின் பார்வை மீண்டும் மாளிகையிடம் சென்றது. தற்பொழுது பனிமேகம் முற்றிலும் விலகியிருக்க அந்த மலையின் நடுவில் அனாதையாய் அந்த மாளிகை மட்டும் தனியாக தெரிந்தது. சுபாஷினியின் கண்கள் அந்த மாளிகையை விட்டு அகலவில்லை. மீண்டும் அவளது நினைவுகள் எட்டு வருடங்களுக்கு முன் சென்றது.

2015 அன்று...

அவளது நினைவலையில் முதல் ஆளாக வந்தது மலர்விழி! பெயருக்கு ஏற்றாற் போன்று மென்மையும் அழகும் குணமும் கொண்டவள்..! சுபாஷினி வீட்டிற்கு சற்று தள்ளி தான் மலர்விழியின் வீடு உள்ளது. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அந்த ஊரில் உள்ள கொரியர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறாள். அவளின் அழகில் ஈர்க்கப்பட்ட பதினாறு வயது சுபாஷினி.. பள்ளி விட்டு வந்தால் பாடம் படிக்க போவதாக மலர்விழியின் வீட்டுக்கு சென்று அமர்ந்துவிடுவாள். சொல்லித் தரும் பாடத்தைக் கேட்பாளோ இல்லையோ..! அவள் சொல்லி தரும் அழகை இரசிப்பாள். வீட்டிற்கு சென்று மலர்விழியை போல் செய்து பார்ப்பாள்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று நேரத்திலேயே சுபாஷினியின் வீட்டிற்கு வந்த மலர்விழி சுபாஷினியின் அன்னையிடம் “சித்தி! நம்ம ஊரு தியேட்டரில் விஜய் படம் போட்டிருக்காங்க..! நான் போகலான்னு இருக்கிறேன். சுபாவையும் அனுப்பி வையுங்க..! பத்திரமா கூட்டிப் போயிட்டு கொண்டு வந்து விட்டறேன். சாந்தியும் அவளோட தம்பியும் கூட வராங்க..!” என்றாள்.

சுசீலா “என்ன மலரு! பாடம் படிக்கட்டும் என்று உன் கிட்ட அனுப்புகிற புள்ளைகளைக் கூட்டிட்டு சினிமாவுக்கு போறேன்னு சொல்கிறே!” என்று சிரித்தவாறு கேட்டாள்.

மவர்விழி “அப்படியில்லை சித்தி! என்னேரமும் படிச்சுட்டே இருந்தாலும் வெறுப்பு வந்திருமே..! நடுவில் இப்படி எதாவது வேண்டும் சித்தி!” என்றாள்.

சுசீலா “சரி சரி போயிட்டு வாங்க..! முதல்ல சுபாவை எழுப்பிவிட்டு போ..” என்றாள்.

மலர்விழி “இன்னும் தூங்கிறாளா..! இதோ எழுப்பிவிட்டு போறேன்..” என்று சுபாவை எழுப்பி விசயத்தைச் சொல்லவும், விஜய் படமா.. என்று துள்ளி குதித்து எழுந்த சுபாஷினி தயாராக குளியலறைக்குள் புகுந்தாள்.

அடுத்து மலர்விழி சாந்தி வீட்டிற்கு சென்றாள். அவளின் அன்னையிடமும் இதையே சொல்லிவிட்டு “சித்தி.. சுபா என் கூட வருகிறா! அவள் அம்மா சரி சொல்லிட்டாங்க! நீங்க வேண்டுமென்றால் சாந்தி கூட அவளுடைய தம்பியையும் அனுப்புங்க..” என்று அனுமதி வாங்கிவிட்டு இன்னொரு வீட்டுக்கும் சென்றுவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள். வீட்டின் பின்புறம் அழுக்கு துணிகளை துவைப்பதற்காக எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த அவளது அம்மாவிடம் சென்றாள்.

மலர்விழி “அம்மா..!” என்றுத் தயங்கியவாறு அழைத்தாள்.

“என்ன..” என்று வெடுக்கென்று பதில் வந்தது.

எச்சிலை மிடறு விழுங்கிட்டு “டியுஷனுக்கு வர பிள்ளைங்க எல்லாம் நம்ம ஊர் தியேட்டர்ல போட்டிருக்கிற விஜய் படத்திற்கு போகலாமான்னு கேட்கிறாங்க..” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

உடனே மலர்விழி அன்னை உச்சஸ்தாயில் கத்த ஆரம்பித்தாள்.

“என்ன விளையாடுகிறாயா! அழுக்கு துணியெல்லாம் குவிந்து கிடக்கு நனைச்சு வைக்கிறேன். துவைத்துக் கொடு..” என்றாள்.

மலர்விழி “நான் மதியம் வந்து துவைத்து தரேன்ம்மா..! ஆசையாக கேட்கிறாங்க..” என்று மன்றாடினாள்.

“அதுதான் வேண்டாமின்னு சொல்லிட்டேன் தானே..” என்று கடுமையாக சொல்லவும், மலர்விழி முகம் தொங்கி போனாள்.

அப்பொழுது வாயிலில் இருந்து குரல்கள் கேட்டது.

“அக்கா..! நாங்க ரெடி”

மலர்விழி சங்கடமும் ஏக்கமுமாக தன் அன்னையை பார்த்தாள். பெருமூச்சை இழுத்துவிட்டவர், “பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வா..” என்கவும், “சரிம்மா..” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு வாயிலுக்கு பறந்தாள்.

தியேட்டருக்குள் நுழைந்ததும் கடைசி வரிசையில் பார்த்து அமர்ந்தனர்.

சுபாஷினி “மலர்க்கா..! நாம ஐந்து பேர் தானே வந்திருக்கிறோம். நீங்க ஏன் ஏழு டிக்கெட் வாங்கியிருக்கீங்க?” என்றுக் குழப்பத்துடன் கேட்டாள். அதற்கு “அது..” என்றுத் திணறிவிட்டு “நாம் சின்னவங்க தனியா வந்திருக்கிறோம் தானே..! அதனால் ஒரு செக்யூர்க்காக தான்..” என்றாள்.

“ஓ..” என்று சுபாஷினி தலையை ஆட்டவும் மலர்விழி நிம்மதியுற்றாள். ஆனால் அவள் அமைதியாக அமரவில்லை. திரும்பி யாரையோ தேடிக் கொண்டிருந்தாள்.

சுபா “யாரைத் தேடறீங்க..?” என்று கேட்டதிற்கு “யாரையும் இல்லை.. படம் தொடங்கிருவாங்க..! பாருங்க” என்றுச் சொன்னாலும் அவளது முகம் வாடிப் போய்விட்டது. அது அவளது குரலிலேயே தெரிந்தது.

சிறிது நேரத்திலேயே படம் தொடங்கி விடவும் அனைவரின் கவனமும் திரையில் இருந்தது. சுவாரசியமாக படம் பார்த்துக் கொண்டிருந்த சுபாஷினி தன்னருகே அசைவை உணர்ந்து திரும்பி பார்த்தாள். மலர்விழி எழுந்து ஒரு சீட் தள்ளி அமர்வது தெரிந்தது. ஏன் என்று சுபா நன்றாக திரும்பி பார்க்கும் பொழுது தான் மலர்விழிக்கும் அடுத்த இருக்கையில் யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது. உடல் அசைவுகளால் ஒரு ஆடவன் என்று மட்டும் தெரிந்தது. சுபாவிற்கு திக்கென்று இருந்தது. யார் அது என்றுத் தெரிந்துக் கொள்ள ஆர்வம் கொண்டவளாய் மெதுவாக எட்டிப் பார்த்தாள். அந்த ஆண் மலர்விழியின் பக்கமாக முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்ததால் தோள் பகுதி மட்டும் திரையில் இருந்து வந்த ஒளியில் தெரிந்தது. தியேட்டரில் வசனங்களுக்கு வைத்த சத்தத்தில் அவர்கள் பேசுவது சுபாவிற்கு கேட்கவில்லை. இம்முறை எதையோ கீழே போட்டவள் போல் நன்றாக குனிந்து எட்டிப் பார்த்தாள். அவனது முகம் திரையை நோக்கி திரும்பவும் சுபாவினால் அவனது முகத்தை நன்றாக பார்க்க முடிந்தது. பார்த்ததும் திடுக்கிட்டவளாய் விருக்கென்று நிமிர்ந்து இருக்கையில் ஒட்டியவாறு சாய்ந்துக் கொண்டாள். ஏனெனில் அவர் அவர்களின் சமஸ்தானத்தின் இளைய ராஜா ரோஹீத்..!

சுபாஷினிற்கு பயத்தில் குப்பென்று வியர்த்துவிட்டது. பிரமிப்பாய் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து கிட்டத்தட்ட கடவுளாக நினைத்து வணங்குபவர் தனக்கு சற்று தள்ளி அமர்ந்திருப்பதை அவளால் நம்ப முடியவில்லை. சிறு வயதில் இருந்து மரியாதைக்கும் மதிப்பிற்கும் மேலாக வைத்து வணங்குபவன் தன்னோடு நிகராக அமர்ந்திருக்கவும், அவளால் சரியாக அமர முடியவில்லை. இரத்தத்தில் ஊறிய பழக்கமாக எழுந்து வணக்கம் செலுத்த.. அவளது உடல் பரபரத்தது. தனக்கு வலப்பக்கமாக திரும்பி பார்த்தாள். அவளோடு வந்திருப்பவர்களின் கவனம் படத்தில் தான் இருந்தது. அதனால் சுபா இடதுப்பக்கம் முகத்தைத் திருப்பவே பயந்தவளாய் உடலை விரைப்பாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். படத்தில் அவளால் லயிக்க முடியவில்லை.

இடைவேளை விட்டப் பொழுது தியேட்டரில் விளக்குகள் போடப்படவும் மலர்விழி “யாராவதுக்கு பாத்ரூம் போக வேண்டுமா?” என்றுக் கேட்கவும், தலையைத் திருப்ப பயந்தவளாய் நேராக பார்த்துக் கொண்டே மறுப்பாக தலையசைத்தாள். ஆனால் அவளோடு வந்தவர்கள் மலர்விழியிடம் திருப்பி “இல்லைக்கா..! படம் சூப்பரா இருக்கில்ல..” என்றுச் சிறிதும் தயக்கமின்றி பேசவும்.. சுபா குழப்பத்துடன் மெல்ல தலையைத் திருப்பி பார்த்தாள். மலர்விழிக்கு அந்த பக்கம் எவருமில்லை. சுபாஷினிற்கு திகைப்பாக இருந்தது. மெல்ல எட்டி மலர்விழிற்கு அந்த பக்கம் பார்த்தாள்.

சுபாஷினியின் பார்வை தன்னைத் தாண்டி செல்லவும் காரணத்தை யூகித்த மலர்விழி மெல்ல சிரித்துவிட்டு சுபாவிடம் எதுவும் கேளாமல் அமைதியாக அமர்ந்துவிட்டாள். இடைவேளை முடிந்ததும் விளக்குகள் மீண்டும் அணைக்கப்பட்டது. அப்பொழுது மலர்விழி அவர்களின் கையில் தின்பண்டங்களைத் திணித்தாள். மற்றவர்கள் திரையில் இருந்து கண்களை அகற்றாமலேயே வாங்கி கொண்டார்கள். சுபாவிற்கு யார் வாங்கித் தந்திருப்பார்கள் என்றுத் தெரிந்துவிட்டது.

படம் முடிந்ததும் விளக்குகள் போடப்பட்டது. கூட்டம் கலைந்து வெளியேறுவதற்காக இருக்கையிலேயே அமர்ந்துவிட்டார்கள். தற்பொழுது சுபா பயமில்லாமல் திரும்பி மலர்விழியைத் திரும்பிப் பார்த்தாள். சுபாவின் பார்வை உணர்ந்து திரும்பிய மலர்விழி “சுபா..” என்று அழைத்து அவள் புறம் சரிந்து மெல்லிய குரலில் “யார் கிட்டயும் சொல்லாதே சுபா..” என்று கண்களைச் சுருக்கி கெஞ்சினாள்.

சுபாஷினியோ “என்னது! யார் கிட்டயும் சொல்ல கூடாதா! எனக்கு இளைய ராஜா பற்றி நினைக்க கூடப் பயமாயிக்கு! இனி நான் எப்படி அவர் எங்க கூட உட்கார்ந்து சினிமா பார்த்தேன் என்றுச் சொல்ல போகிறேன். நான் சொல்ல மாட்டேன்க்கா..” என்றாள்.

சுபாஷினியின் பதிலில் நிம்மதியுற்றாலும் மலர்விழி எப்படிச் சொல்வது என்றுத் தெரியாமல் தயங்கவும்.. பதினாறு வயது நிரம்பிய சுபாஷினியிற்கா தெரியாது. சுபாஷினி இன்னும் குரலை தாழ்த்தியவளாய் “இளைய ராஜா உங்க கிட்ட பேசினதையும் சொல்ல மாட்டேன்.” என்று கிசுகிசுத்தாள்.

மலர்விழி முறுவலோடு நிமிரவும் சுபாஷினி “டெய்லி அவர் உங்க கூட பேசுவாறா..!” என்று ஆர்வத்துடன் கேட்டாள். அவளது தலையில் செல்லமாக கொட்டு வைத்த மலர்விழி “படிக்கிற வேலையை பாரு…” என்றுச் சிரித்தாள்.

ஆனால் சுபாஷினிக்கோ.. திரையில் தோன்றும் ஹீரோ ஹீரோயினுக்கு பதில்.. அவளது டீச்சரம்மா மலர்விழியும்.. சமஸ்தானத்தின் இளைய ராஜாவும் வந்தார்கள்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2

அதன் பின் மலர்விழியிடம் படிக்க போகும் பொழுது அவளைப் பார்த்தாலே சுபாஷினியிற்கு சிரிப்பாக வரும். மலர்விழி எச்சரிக்கை பார்வை செய்து அடக்குவாள்.

ஒருமுறை மலர்விழியின் வீட்டிற்கு பின்னால் சற்று தொலைவில் இருந்த தோட்டத்தில் வரப்போகும் தேர்விற்கு சுபாஷினிக்கும் மற்றவர்களுக்கும் மவர்விழி பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள். மலர்விழி படிப்பவர்களும் எதிர் எதிராக அமர்ந்து இருந்தார்கள். அப்பொழுது மலர்விழி திகைப்புடன் அவர்களுக்கு பின்னால் பார்த்தாள். ஏதேச்சையாக நிமிர்ந்துப் பார்த்த சுபாஷினி.. எதைப் பார்த்து திகைத்தாள் என்றுத் திரும்பி பார்க்க எதானிக்கையில் “ஏய்..! புக்கில் இருந்து பார்வையைத் திருப்ப கூடாது பேசாமல் படிங்க..” என்று அதட்டியவள் சங்கடத்துடன் எழுந்து அவர்களுக்கு பின்னால் சென்றாள்.

“இங்கே எதற்கு வந்தீங்க? யாராவது பார்த்துவிடப் போறாங்க..! படிச்சுட்டு இருக்கிறாங்கில்ல..” என்ற கிசுகிசுப்பான கெஞ்சும் மலர்விழியின் குரல் கேட்டது. சுபாஷினிக்கு யாருடன் மலர்விழி பேசுகிறாள் என்றுத் தெரிந்துவிட்டது. அந்த வயதிற்குரிய ஆர்வம் மேலோங்க தனது ஜாம்மேன்டரியை பாக்ஸை எடுத்து முகத்திற்கு முன் நேராக வைத்தாள். அந்த பாக்ஸின் பளபளக்கும் பின் பாகத்தில் முகம் தெரியாத ஆண் மலர்விழியை அருகில் இருந்த பெரிய மரத்தின் மறைவிற்கு இழுத்து சென்றது தெரியவும்.. சடார் பாக்ஸை எடுத்துவிட்டு முகம் சூடாக சுபாஷினி அமர்ந்துவிட்டாள்.

இவ்வாறாக நாட்கள் சென்றுக் கொண்டிருக்க.. ஒருநாள் வழக்கம் போல் வீட்டுப்பாடங்கள் படிக்க.. புத்தங்களை எடுத்துக் கொண்டு மலர்விழியின் வீட்டை நோக்கி சென்றாள். கதவு சாத்தப்பட்டிருப்பதைப் பார்த்ததும் யோசனையுடன் கதவைத் தட்ட கையை ஓங்கியவள், உள்ளே இருந்து கேட்ட மலர்விழியின் அழுகை சத்தத்தில் அதிர்ந்தாள்.

தொடர்ந்து மலர்விழியின் அழுகையோடு பேசுவது கேட்டது.

“அம்மா..! அவர் என்னை ரொம்பவும் காதலிக்கிறார்ம்மா..! என்னை கல்யாணம் செய்துகிறேன்னு பிராமிஸ் செய்திருக்கிறார்ம்மா..! நிச்சயம் அவர் என்னை கைவிட மாட்டார். நானும் அவரை ரொம்ப லவ் செய்கிறேன்ம்மா..! அவர் இல்லைன்னா என்னால உயிரோட இருக்க முடியாது. அவருக்கும் அப்படித்தான்ம்மா..!” என்றாள்.

“நான் இவ்வளவு சொல்கிறேன்! திரும்பியும் சொன்னதையே சொல்கிறாயா..” என்ற மலர்விழியின் அன்னை வடிவின் ஆவேசக்குரல் கேட்டது. மேலும் அடிக்கும் சத்தமும் கேட்டது. ‘மலர்க்காவை அடிக்கிறாங்களா..!’ என்று சுபாஷினி திடுக்கிட்டாள்.

“அம்மா..! நீங்க என்னை அடித்தே கொன்றாலும் என் மனதை மாற்ற மாட்டேன். நான் எங்கேயும் போக மாட்டேன்.” என்ற மலர்விழியின் உறுதியான குரல் கேட்டது.

உடனே “நான் ஏன்டி என் பொண்ணைக் கொல்ல போகிறேன். இளைய ராஜாவை நீ மறக்கலைன்னா அவங்க உன்னைக் கொன்றுவாங்கடி..! நீ ஆசைப்படுவது கொம்புதேன் இல்லைடி..! கொட்டுகிற தேனீ..! எனக்கு என் புள்ளை வேண்டுமடி..” என்று உடைந்த குரலில் மலர்விழியின் தாயார் அழுவது கேட்கவும்.. உடலும் மனமும் நடுங்கியவளாய் சுபாஷினி திரும்பியும் கூடப் பார்க்காமல் வீட்டை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.

மலர்விழியின் அழுகையும், கெஞ்சலும், உறுதியும்.. மலர்விழியின் அன்னையின் கோபமும், துக்கமும், அச்சமும் பதினாறு வயது பாவையைப் பயமுறுத்தியது. மேலும் மரணம், கொலை, பயம், மன்னர் குடும்பத்தைப் பற்றி பேசியது. அவளுக்கு திகிலைக் கிளப்பியது.

படிக்க சென்ற மகள் உடனே திரும்பியதோடு மட்டுமல்லாது பேயறைந்தது போல் வந்ததைப் பார்த்த சுசீலா “என்ன உடனே திரும்பி வந்துட்ட?” என்றுக் கேட்டாள்.

கேட்ட விசயங்களில் அதிர்ச்சியுற்றிருந்த சுபாஷினி.. தன் அன்னை கூறுவது புரியாது திருதிருவென விழிக்கவும், சுசீலாவே “ஏன் அவங்க வீட்டில் இல்லையா..?” என்கவும்.. “ஆமாம்” என்றுத் தலையை ஆட்டிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

சுசீலா “படிக்கிறதில் இருந்து தப்பிக்க இது ஒரு சாக்கு..” என்றுத் திட்டிவிட்டு அவளது வேலைப் பார்க்க சென்றாள். வீட்டிற்குள் சென்ற சுபாஷினி எதற்கு என்றுத் தெரியாமல் போர்வைக்குள் புகுந்துக் கொண்டு சிறிது நேரம் அழுது தீர்த்தாள்.

அதன் பின் இரண்டு நாட்கள் அவள் மலர்விழி வீட்டையே எட்டிப் பார்க்கவில்லை. மலர்விழி வேறு ஊருக்கு போவதால் இனி பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டாள் என்று அவளுடன் பாடம் கற்கும் சாந்தி வந்து சொல்லிவிட்டுப் போனாள். அதனால் அவளது அன்னையும் அமைதியாக இருந்துவிட்டாள். ‘மலர்விழிக்கா ஊருக்கு போகிறார்களா…! அப்போ?’ என்றுத் தோன்றிய கேள்விகளுக்கு விடைத் தெரியாமல் அந்த சிறு பாவை விழித்தாள்.

மாலையில் பள்ளி விட்டதும் வீட்டிற்கு காட்டுப்பாதை வழியாக சுபாஷினி வந்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது “நீ மலர் கிட்ட டியுஷன் படிக்கிற பெண் தானே..” என்ற கம்பீர குரலில் திரும்பி பார்த்தவள் விதிர்த்து போய் தலையும் உடலும் தானே இயல்பு போல் வளைய “வ...வண்ண...ணக்க..ம் இ..ளைய ரா..ஜா..” என்று தட்டு தடுமாறி சொன்னாள். ஆனால் அவன் அதைக் கண்டுக் கொள்ளாமல் “மலர்.. ஏன் டூ டேஸா வேலைக்கு வருவதில்லை..?” என்றுக் கேட்டான்.

சுபாஷினி இரு கைகளையும் கட்டிக் கொண்டு நிமிர்ந்து கூடப் பார்க்காமல் நின்றிருந்தாள். சிறு வயதில் இருந்து இராஜாக்கள் நாம் நெருங்க முடியாதவர்கள்.. மரியாதையான இடத்தில் இருப்பவர்கள் என்றுச் சொல்லியே வளர்க்கப்பட்டதால் அது அவளது மனதில் நன்றாக பதிந்துவிட்டது. தற்பொழுது நடந்த மலர் பிரச்சனை என்று எல்லாம் சேர்ந்து சுபாஷினிக்கு உடல் நடுங்க வாயில் இருந்து வார்த்தை வராமல் நின்றாள்.

அவள் பதிலளிப்பாள் என்றுக் காத்திருந்து இருப்பான் போல.. அவள் பதிலளிக்காமல் திணறவும்.. “ப்ச்..” என்ற சலிப்புடன் அகல்வது அவனது நகர்ந்த நிழலைப் பார்த்துத் தெரிந்துக் கொண்டவளுக்கு அவனைத் தடுத்து நிறுத்த வழித் தெரியாது.. அதே நேரத்தில் மலர்விழியின் நிலைமையும் மனதைச் சுட “மலர்க்கா..” என்று அழுதாள்.

மலர் என்ற பெயரில் பிரேக் போட்டது போல் நின்றவன் திரும்பி வருவது தெரிந்தது.

“மலருக்கு என்ன?” என்ற அவனது அழுத்தமான குரலில் மேலும் நடுங்கியவளாய் “அக்கா அழுகிறாங்க..! அவங்க அம்மா அடிக்கிறாங்க..!” என்று கண்களில் பெருகிய நீரை கட்டிய கையை எடுத்து துடைக்க கூடப் பயந்தவாறு அழுதபடியே தலைகுனிந்துக் கொண்டே சொன்னாள்.

சுபாஷினி சொல்ல சொல்லவே அவனுக்கு காரணம் விளக்கிவிட்டது போல.. அவனிடம் இருந்து சத்தமில்லை. விழிகளை உருட்டியவாறு அவனின் பதிலுக்காக காத்திருந்தவள்.. ‘தடார்’ என்ற சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள். அவன் வந்த காரில் முஷ்டியைக் கொண்டு ஒரு குத்து விட்டவன் மேலும் “ஆ..” என்ற கத்தலுடன் மேலும் குத்துக்களை விட்டான்.

முதலிலேயே சிறு அச்சத்துடன் இருந்தவள், அவன் ஆவேசத்துடன் காரில் குத்துகளை விட்டு தன்னையே வருத்திக் கொள்வதைப் பார்க்கவும்.. இன்னும் பயந்தவளாய் பின்னால் சென்றாள். அன்றுதான் அவனை முழுமையாக பார்க்கிறாள்.

காரில் குத்திவிட்டு திரும்பியவனின் முகம் வெயில் காரணமாகவோ அல்லது கோபத்தின் காரணமாகவோ சிவந்து இருந்தது. தன்னை அச்சத்துடன் விழியகல பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் மூச்சுகள் எடுத்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன்.. “அவ அம்மா அடித்ததில் மலர் ரொம்ப அழுதாளா..?” என்றுக் கேட்டான்.

சுபாஷினி ஆம் என்பது போல் தலையை மட்டும் ஆட்டினாள்.

சிகையை அழுத்த கோதியவன் சுபாஷினியிடம் திரும்பி “மலரை எப்படியாவது கோவிலுக்கு பின்னாடி இருக்கிற காட்டிற்கு கூட்டிட்டு வர முடியுமா..?” என்றுக் கேட்டான்.

சுபாஷினி பலமாக தலையை ஆட்டி சம்மதம் சொல்லிவிட்டு விரைவாக வீட்டை நோக்கி சென்றாள். தன் வீட்டில் தனது புத்தகபையை போட்டவள்.. உடையைக் கூட மாற்றாது மலர்விழியின் வீட்டிற்கு செல்ல எதானித்த போது அவளது அன்னையின் குரல் அவளைத் தேக்கியது.

“சுபாஷினி வந்துட்டியா..! சீக்கிரம் ட்ரஸ் மாற்று..! மாலதிக்கு குழந்தை பிறந்திருக்கு..!” என்று அழைத்தாள்.

சுபாஷினி என்ன சொல்வது எப்படி மறுப்பது என்று அறியாது திணறியாறு நின்றாள். பின் “சரிம்மா..! இதோ நான் மலருக்கா வீட்டுக்கு போயிட்டு இப்போ வந்திருவேன்.” என்றாள்.

சுசீலா தனது நெற்றிக் கண்ணை திறந்தார்.

“நான் போகலான்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன சொல்றே..? உன் கிட்ட சொல்ல கூடாதுன்னு பார்த்த என்னைச் சொல்ல வைக்கிறே..! குழந்தை பிறந்ததில் மாலதிக்கு பிக்ஸ் வந்திருச்சாம். பச்சை உடம்பைக்காரி இப்படி வரக் கூடாது, அதனால் பயமாயிருக்கு..! உன்னையும் இங்கே தனியா விட்டுட்டு போக முடியாது. அங்கே நீ பெரியம்மா வீட்டில் இரு நாங்க ஹாஸ்பெட்டலுக்கு போகிறோம்.” என்று அழுதவாறு சொல்லவும்.. அதற்கு மேல் சுபாஷினிக்கு அனைத்தும் மறந்துப் போனது. தனது பெரியம்மா மகளான மாலதியை நினைத்து “அக்கா..” என்று அழுதவாறு தயாரானாள்.

அரைமணி நேரப்பயணத்தில் சுபாவின் பெரியம்மா வீட்டில் இருந்தார்கள். சுசீலா சொன்னது போல் அவளை வீட்டில் விட்ட பின் சுசீலாவும், அவரது கணவர் கதிரேஷனும் மருத்துவமனைக்கு சென்றார்கள். வீட்டில் இருந்த சுபாவிற்கும் அவளது அக்கா பற்றிய நினைவு மட்டும் தான் இருந்தது. மாலதிக்கு நினைவு வந்துவிட்டது. நலமாக இருக்கிறாள் என்ற செய்தி கேட்ட பின்பே சிறிது நிம்மதியடைந்தாள். அப்பொழுது தான் இன்னொரு விசயமும் அவள் செய்ய வேண்டியது இருக்கிறதே என்ற நினைவு வந்தது. உடனே இளைய ராஜாவின் உருவம் தான் அவளின் கண் முன் வந்தது. சுபாஷினி விதிர்த்துப் போனாள். இளைய ராஜா அவளுக்கு இட்ட பணியை அவள் செய்யவில்லையே என்ற பயமும், குற்றவுணர்வும் மட்டும் தான் இருந்தது.

ரோஹீத்தும் மலர்விழியும் சந்தித்துக் கொள்ளாமல் போக நேரும் என்பது அவளுக்கு தோன்றவில்லை. அதனால் என்ன விபரீதம் நிகழ போகிறது என்பதையும் அவள் அறியவில்லை.

அடுத்த நாள் சுசீலா அவளது அக்காவிற்கும் அவளது மகள் மாலதிக்கும் உதவியாக அங்கேயே இருநாட்கள் இருப்பதாகவும்.. சுபாஷினியிற்கு தேர்வு நெருங்குவதாலும், வயலில் பயிரிடப்பட்ட கேரட் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதால் கதிரேஷனும் ஊருக்கு செல்வதாக முடிவு செய்யப்பட இருவரும் காலையில் மருத்துவமனைக்கு வந்து குழந்தையையும் மாலதியையும் பார்த்துவிட்டு நேரத்திலேயே கிளம்பினார்கள்.

ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் அவர்களது வீட்டிற்கு ஊரின் வழியாக தான் செல்ல வேண்டும். பேருந்து நிலையத்தில் இருந்து தங்கள் வீட்டை நோக்கி நடந்துக் கொண்டிருக்கும் பொழுதே ஏதோ சரியில்லாது போல் இருந்தது. ஊர் மக்கள் எங்கோ விரைந்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை நிறுத்தி கதிரேஷன் விசாரிக்கவும் அவர்கள் சொன்னதைக் கேட்டு கதிரேஷனை விட சுபாஷினி அதிர்ந்து போனாள்.

அவர்கள் சொன்ன செய்தி இதுதான்..!

‘மலர்விழியின் வீடு இரவில் ஏற்பட்ட தீ விபத்தால் முற்றிலும் தீக்கிரையாகி மலர்விழி அவளின் பெற்றோர் தம்பி ஆகியோர் உயிர் இழந்தார்கள்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கதிரேஷன் சுபாஷினியை அழைத்துச் செல்ல கூடிய இடமல்ல என்பதையும் மறந்தவராய் முன்னே ஓட.. சுபாஷினியும் பின்னே ஓடினாள்.

ஊரே அங்கு கூடியிருந்தது. அவர்களைத் தாண்டி சுபாஷினியால் பார்க்க முடியவில்லை. இடித்துக் கொண்டு அவர்கள் நகர்ந்த போது தோன்றிய இடைவெளியில் தரையில் வெள்ளைத்துணியால் மூடப்பட்டிருப்பதை மட்டும் பார்த்தாள். அதைப் பார்த்ததிற்கே அவளது உடல் சில்லிட்டு விரைத்தாற் போன்று ஆனது.

அப்பொழுது வேகமாக கார் வரும் சத்தம் கேட்டது. திரும்பி பார்ப்பதற்குள் அது கூடி நின்றிருந்த மக்களின் மேல் மோதுவது போல் வந்து தடுமாறி அருகில் இருந்த வீட்டின் சுவர் மீது இடித்து நின்றது. அது சரியாக கூட நின்றிக்கவில்லை. அதன் கதவை படார் என்றுத் திறந்துக் கொண்டு இறங்கிய ரோஹீத் எரிந்த வீட்டை நோக்கி ஓடினான். வேகமாக ஓடியவன் சட்டென்று தடுமாறி நின்றான். அவனது பார்வை வெள்ளைத் துணியால் போர்த்தி வைக்கப்பட்டிருந்த உடல்கள் மீது விழுந்தது. பார்த்ததை நம்ப முடியாமல் நின்ற இடத்திலேயே துவண்டு அமர்ந்துவிட்டான். வெறித்த அவனது விழிகளில் இருந்து கண்ணீர் கோடாய் இறங்கியது. திடுமென கண்களை அழுத்த துடைத்தவன் வெறிக்கொண்டவன் போல் அந்த உடல்களை நோக்கி வேகமாக வந்தான்.

தாறுமாறாக வந்த காரில் இருந்து இளைய ராஜாவான ரோஹீத் இறங்கியதுமே அங்கு கூடியிருந்த மக்கள் அதிர்ந்து நின்றனர். பார்ப்பதிற்கு கூட அரிதான இளைய ராஜாவை அங்கு பார்த்ததிலேயே அதிர்ந்து நின்றிருந்த மக்கள்.. இறந்தவர்களைப் பார்த்து அழவும் திகைப்பின் உச்சிக்கே சென்றார்கள். இறந்த உடல்களைப் பார்த்து ரோஹீத் ஓடுவதையும் திகைப்புடனேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் இன்னொரு கார் வந்து நின்றதை மக்கள் கூட்டம் கவனிக்கவில்லை. அதில் இருந்து இறங்கியவர்களையும் கவனிக்கவில்லை.

இறந்த உடல்களை நோக்கி ஓடிய ரோஹீத் சரியாக அதன் துணிகளை விலக்க எதானிக்கையில் மற்றொரு காரில் இருந்து இறங்கியவர்களான.. ரோஹீத்திற்கு என்று அமைக்கப்பட்ட பாதுகாவலர்கள் நான்கு பேர் அவனைப் பிடித்து விட்டனர். அவர்களின் பிடியில் இருந்து விடுபட ரோஹீத் திமிறினான். ஆனால் அவர்கள் விடாமல் பற்றிக் கொண்டனர். அவர்களில் இருந்து விடப்பட முடியாத ரோஹீத்தின் தொண்டையில் இருந்து “மலர்..” என்ற ஓலம் சத்தமாக ஒலித்தது.

சுற்றியிருந்த மக்கள் அதைக் கேட்டுத் திகைத்து நின்றனர்.

அதற்கு மேல் தாமதிக்காமல் ரோஹீத்தை தடாலடியாக இழுத்துக் கொண்டு சென்று காரினுள் போட்டவர்கள் உடனே காரை கிளப்பிக் கொண்டு சென்றார்கள். அங்கு நின்றிருந்த போலீஸ் இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர எதுவும் செய்யவில்லை. பின் மக்களைப் பார்த்து “நைட் ஏற்பட்ட எலக்ட்ரீக் லீக்கால் இந்த விபத்து நடந்திருக்கு..! இதுதான் நடந்தது வேற எதுவும் நடக்கவில்லை. இப்போ வேற எதையும் நீங்க பார்க்கலை..! ஓகேவா..! என் எச்சரிக்கையையும் மீறி எந்த புரளியையும் பேசக் கூடாது. மீறினீங்க..! அதற்கான தண்டனையை சட்டரீதியாகவும் அனுபவிப்பீங்க..! தனிப்பட்ட முறையிலும் அனுபவிப்பீங்க..! எல்லாரும் போங்க..” என்று எச்சரிக்கை செய்தார்.

அவரவர் மனதில் பல சந்தேகங்களும், கணிப்புகளும் தோன்றினாலும் முதலிலேயே பெரிய குடும்பத்தின் மீது பயமும், மரியாதையும் கொண்டிருந்தவர்கள். அவரவர் எண்ணங்களை மனதிற்குள்ளே புதைத்துக் கொண்டார்கள். போலீஸ் கலைந்து செல்ல சொல்லவும், அவசரமாக கலைந்துச் சென்றார்கள்.

சுபாஷினியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கதிரேஷன் வீட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். கதிரேஷன் மட்டும் கையைப் பிடித்து அழைத்துச் செல்லவில்லை எனில் சுபாஷினி மயக்கம் போட்டு விழுந்திருப்பாள். தீக்கிரையான வீட்டையும் உடல்களையும் பார்த்ததால் வந்த பார்த்த பயம் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் அதையும் மீறி சுபாஷினிக்கு உதறலை ஏற்படுத்தியது ரோஹீத்தின் துயரமும் ஓலமும்..!

அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக காதலித்தார்கள் என்று சுபாஷினி அறிவாள். காதல் மட்டுமல்ல மலர்விழி தன் தாயிடம் மன்றாடியது, அழுதது, ரோஹீத்தின் கோபம், தவிப்பு என்று அனைத்தையும் பார்த்திருக்கிறாள். கடைசியாக இளைய ராஜா.. மலர்விழியை அழைத்து வரும்படி இவளிடம் தான் சொல்லி அனுப்பியிருக்கிறான். ஆனால் இவள் அதைச் செய்ய தவறிவிட்டாள். ஒருவேளை தான் மலர்விழியை அழைத்து வந்திருந்தாள். இந்த இறப்பு நேர்ந்திருக்காதோ..! கதறி அழுதிருக்க மாட்டானோ..! அது தீ விபத்து இல்லையோ..! அன்று மலர்விழியின் அன்னை சொன்னது போல் இது கொலையோ..! ஆனால் இளைய ராஜாவை மலர்விழி சந்திருந்தால்.. எந்த துயரும் நேர்ந்திருக்காதோ..! அவள் சொன்னதைச் செய்யாதது தான் அனைத்திற்கும் காரணமோ..! என்று அவளின் எண்ணங்கள் சென்றதும் அதற்கு மேல் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

தன் மகளின் நிலையை உணர்ந்த கதிரேஷன் சட்டென்று கையில் ஏந்திக் கொண்டு வீட்டை நோக்கி சென்றார். வீட்டிற்கு சென்றதும் மனைவியை செல்பேசியில் அழைத்து விசயத்தை சுருக்க சொன்னார். மகள் பயந்துவிட்டாள்.. அதனால் வீட்டிற்கு வரச் சொன்னார். சுசீலாவின் அக்காவும்.. மாலதிக்கு இனி பிரச்சனை இல்லை என்பதால் சுபாஷினியிடம் சுசீலா இருப்பது தான் நல்லது என்று அனுப்பி வைத்தார். அரை மணி நேர பயணத் தொலைவு என்பதால் சுசீலா உடனே வந்து சேர்ந்தார்.

அன்று முழுவதும் ஊர் மக்கள் அனைவரும் ஆளுக்கொரு கணிப்பு கொண்டிருந்தாலும் அடுத்தவருடன் பகிர்ந்துக் கொள்ள அச்சம் கொண்டு ஒரு மாதிரியான மனநிலையில் இருந்தார்கள். ஆனால் சுபாஷினி தன் மேல் தான் தவறோ..! தான் மலர்விழியை அழைத்து வந்திருந்தால் இவை எதுவுமே நடந்திருக்காதோ என்ற மனவுளைச்சலில் உடல் அடிக்கடி நடுங்க படுத்திருந்தவளுக்கு சுசீலாவும் கதிரேஷனும் உறுதுணையாக இருந்தார்கள். வருடி கொடுத்து உறங்க வைத்தார்கள்.

அன்றுடன் துயரங்கள் முடியவில்லை. இருநாட்கள் கழித்து நடுஇரவில் வெளியே உள்ள கழிவறைக்கு சென்ற சுசீலா அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள். தாயின் குரலில் சுபாஷினியின் மற்றும் கதிரேஷனின் உறக்கம் கலைந்தது. சுசீலா பதறியடித்துக் கொண்டு வந்ததைப் பார்த்து பயந்தவராய் கதிரேஷன் சுபாஷினியை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு வெளியே சென்றவர்.. மனைவி சுட்டிக்காட்டிய திசையைக் கண்டு தானும் அதிர்ந்தவராய் நின்றுவிட்டார். சிறிது நேரம் காத்திருந்த சுபாஷினி பொறுக்க மாட்டாமல் மெல்ல வெளியே வந்துப் பார்த்தவள் திடுக்கிட்டு நின்றுவிட்டாள்.

அந்த கும்மிருட்டில் சற்று தொலைவில் மலைமேட்டில் இருந்த மாளிகை சிவப்பு திவாலைகளால் பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. ஊரே மலைக்குன்றின் கீழ் கூடியிருந்தாலும் எவரும் அதற்கு மேல் அனுமதிக்கப்படவில்லை. தீயணைப்பு வண்டிகளின் சைரன் ஒலி அந்த இடத்தையே நிரப்பியது. சில நிமிடத்தில் மாளிகையில் இருந்து ஆம்புலன்ஸ்களும் வெளிநாட்டு கார்களும் வரிசையாக அணிவகுத்து வெளியேறி சென்றது.

தீயணைப்பு வீரர்கள் ஒருவாறு முற்றிலும் தீயை அணைக்க விடியற்பொழுது ஆகிவிட்டது. யாருக்காவது விபத்து ஏற்பட்டு விட்டதோ என்று கவலையுடன் காத்திருந்த மக்களுக்கு மாளிகையின் செய்தித்தொடர்பாளர் செய்தியைச் சொன்னார்.

“தெய்வாதீனமாக அரச குடும்பத்தை சேர்ந்த எவரும் தீ விபத்தால் பாதிக்கப்படவில்லை. ஆனால் தீவிபத்து ஏற்பட்ட மாளிகையில் இனி தங்குவது அபசமாக கருதப்படுவதால் இனி அவர்கள் மைசூரில் உள்ள மாளிகையில் தங்கிக் கொள்வார்கள். ஆனாலும் அவர்கள் நமக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து நம்மை காப்பாற்றுவார்கள். நம்மை சந்திக்க வருவார்கள். நமக்கு ஏதேனும் வேண்டுமென்றாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். வழக்கம் போல் அரச விழாக்களில் தாங்கள் வந்து கலந்துக் கொள்ளலாம். இந்த செய்தி மன்னரால் அறிவிக்கப்பட்டது.” என்றுக் கூறிவிட்டு சென்றான்.

அதைக் கேட்டவர்கள் வருத்தமுற்றது உண்மையே..! காலம் காலமாக மன்னர் பரம்பரையின் மீது மரியாதையும், மதிப்பும் கொண்டு வாழ்ந்தே பழகியவர்கள்.. அவர்களுக்கு கீழ்படிந்து தான் என்றாலும் அவ்வாறு வாழ்ந்து பழகியவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கவலைக் கொண்டார்கள்.

மலர்விழி குடும்பத்தினரின் இறப்பு, இளைய ராஜாவின் அழுகை, இன்ஸ்பெக்டரின் மிரட்டல், இரு நாட்களில் மாளிகையில் ஏற்பட்ட தீ விபத்து போன்ற விசயங்கள் அந்த ஊரையே உலுக்கிப் போட்டது. இவ்விசயங்களை வைத்து ஊர்மக்கள் சில ஊகங்களைக் கொண்டிருந்தனர்.

இளைய ராஜாவும் மலர்விழியும் காதலித்திருக்கிறார்கள்.. மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவனுக்கு சாதாரண குடிமக்களில் ஒருத்தி மேல் காதல் வந்தது பெரும் தவறு..! அரசகுடும்பத்தின் ஆட்களின் மறுப்பு நியாயமானதே..! அரச குடும்பத்தில் இருந்து மிரட்டல் வந்திருக்கலாம். அதனால் மனமுடைந்த மலர்விழி குடும்பத்தினர் தற்கொலை செய்திருப்பார்கள். அந்த துக்கம் தாங்காமல் இளைய ராஜா வந்து அழவும் விசயம் கசிந்துவிடக் கூடாது என்று காவல்துறையினர் மிரட்டல் விடுத்திருக்கின்றனர். ஆனால் ஒரு குடும்பம் அநியாயமாக இறந்ததின் பலனாக மாளிகையில் தீ பிடித்திருக்கிறது. அது மலர்விழியின் இறந்து போன ஆத்மாவின் வேலையாகவும் இருக்கலாம். அதுதான் அவர்களை இந்த ஊரை விட்டு செல்ல வைத்துவிட்டது என்று முழுமையாக நம்பினார்கள். ஆனாலும் அரச குடும்பத்தினர் வெளியேறியதில் வருத்தமேயுற்றார்கள்.

அதன்பின் மன்னர் குடும்பத்தினர் அங்கு இல்லை என்பதைத் தவிர அவர்களின் வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லை. மாதத்திற்கு ஒருமுறையோ இருமாதங்களுக்கு ஒருமுறையோ பெரிய ராஜா இராஜேந்திரர் வந்து பார்ப்பார். பண்ணை வீடு ஒன்று உள்ளது.. அங்கு தான் வந்து தங்குவார். ஆனால் இரு நாட்களுக்கு மேல் தங்காமல் சென்றுவிடுவார். வருடங்கள் ஓட ஓட அதுவும் குறைந்து போனது. கோவிலில் திருவிழா நடைப்பெற்றால்.. முதல் மரியாதையை இங்கிருந்து அனுப்பப்பட்டது. மைசூர் அரண்மனையில் நடைப்பெறும் பிறந்தநாள் போன்ற விழாக்களின் போது ஊர்மக்கள் இங்கு கொண்டாடி மகிழ்ந்தார்கள். பின் நாளடைவில் கடமைக்காக மட்டும் கொண்டாடினார்கள். அங்கு இருந்து மானேஜர் வந்து குத்தகை பணத்தை வாங்கிக் கொண்டு போனார்கள். இந்த வகையில் அவர்களது தொடர்பு நீடித்தது.

மைசூரில் உள்ள மன்னர் குடும்பத்திலும் நிறையா மாற்றங்கள் ஏற்பட்டது. ரோஹீத் மைசூருக்கு சென்றதும் நிர்வாக படிப்பு படிக்க என்று இலண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இராஜேந்திரின் உடல்நிலை மோசமாகி போயிற்று. அதனால் விரைவிலேயே ரோஹீத்தின் தங்கை ரேஷ்மாவிற்கு இராஜேந்திரரின் அக்கா மகனுடன் திருமணம் முடிக்கப்பட்டது. நிர்வாகத்தை ரேஷ்மிகாவின் கணவன் ஆதர்ஷ் கையில் எடுத்துக் கொண்டான்.

இங்கு பெரும்பகுதி தீப்பிடித்த மாளிகையில் சிறு சீர்திருத்தப்பணி நடந்தது. பின் அதை அப்படியே விட்டு விட்டார்கள். அந்த மாளிகையைச் சுத்தம் செய்து பராமரிக்க மாரிமுத்து என்பவன் தன் குடும்பத்துடன் அங்கேயே தோட்டத்தில் தங்கியிருந்தான். அரச பரம்பரை வாழ்ந்த வீடு என்று அந்த வழியின் வழியாக சென்றவர்கள் நின்று பார்த்துட்டு போவார்களே தவிர.. யாரும் அதன் அருகில் கூடச் சென்றுப் பார்க்க மாட்டார்கள். ஏனெனில் இன்னும் மலர்விழியின் ஆத்மா அங்கு தான் சுற்றிக் கொண்டு இருக்கிறது என்று நம்பினார்கள்.

ஆனால் அந்த மாளிகையைப் பார்க்கும் போதெல்லாம் சுபாஷினிக்கு எண்ணங்கள் எல்லாம் அவளது குற்றவுணர்வைச் சுற்றியே இருக்கும். அன்று மலர்விழியை அவள் அழைத்து வந்திருந்தால் இவ்வளவு துயரங்கள் நிகழ்ந்திருக்காது என்பதில் உழன்று கொண்டிருக்கும்..! இயல்பிலேயே சுபாஷினி துள்ளி திரிந்து விளையாடும் பெண் அல்ல என்பதால் அவளது பெற்றோருக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. நாளடைவில் அவளது மனவுளைச்சலும் குறைந்தது. ஆனால் நாளில் ஒரு முறையாவது நினைக்காதிருக்க முடியவில்லை.

அன்றும் காலையிலேயே அந்த மாளிகையைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள்.

சுபாஷினியின் வீடு அந்த மலைக்குன்றுக்கு எதிர்புறமாக சாலையைத் தாண்டி முன்பே அமைந்திருக்கும்..! அது மலைப்பகுதி என்பதால் சாலைகளும் வளைந்து செல்லும். சுபாஷினியின் வீட்டைக் கடக்க வேண்டுமென்றால் முற்றிலும் வாகனங்கள் தெரியாத வளைந்த சாலை வழியாக வந்து பின் நேர் சாலையில் செல்ல வேண்டும். அதனால் அவளது வீட்டைக் கடக்கும் வாகனங்கள் ஆபத்தான வளைவு என்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாது என்பதால் ஹாரன் அடித்துவிட்டே செல்வார்கள். இதைக் குறிப்பிட்டு சுசீலா சில நேரம் எரிச்சலும் கொள்வாள்.

அந்த மாளிகையின் மேல் பார்வையை ஓட்டியவள், பின் தலையை ஒருபக்கமாக திருப்பி வளைந்த சாலையை நோக்கி அந்த காம்பவுண்ட்டின் மீது தலையைச் சாய்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது வித்தியாசமான ஹாரன் ஒலி கேட்டது. தொடர்ந்து அந்த வளைந்த சரிவில் வளர்ந்திருந்த செடிகள் காற்றில் அசைய அதன் பின்னிருந்து கருப்பு நிற ஜாக்குவார் கார் ஒன்று வந்தது. சுபாஷினி கண்ணிமைக்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களின் வீட்டையும் அந்த கார் மெதுவாக தாண்டிச் சென்றது. அப்பொழுதும் தன் பார்வையை அதன் மேலிருந்து விலக்கி கொள்ளாமல் அது செல்வதையே பார்த்தாள். அடுத்து அந்த கார் சென்ற திசையைக் கண்டு அதிர்ந்தவளாய் நேராக நிமிர்ந்து நின்றாள்.

ஏனெனில் அந்த கார் நேர்சாலையில் நேராக செல்லாமல் சுபாஷினியின் வீட்டைத் தாண்டிச் சென்று எதிரே இருந்த வளைவில் திரும்பி மலைக்குன்றின் மேல் ஏறியது.

அது அந்த மாளிகைக்கு செல்லும் வழி..!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3

பச்சை பசலென்று இருக்கும் அந்த மலைப்பாதையில் அந்த கருப்பு நிற கார் செல்வதையே சுபாஷினி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளால் பார்த்ததை நம்ப முடியவில்லை. அவளுக்கு தெரிந்து அந்த மாளிகைக்கு மன்னர் குடும்பத்து ஆட்கள் யாரும் வந்ததில்லை. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பின் விலையுயர்ந்த கார் அந்த பாதையில் வழியாக செல்வதை அன்று தான் காணுகிறாள். மாரிமுத்துவின் பைக் அந்த பாதையில் ஏற முடியாமல் மூச்சு வாங்கி கொண்டு ஏறுவதை தான் பார்த்திருக்கிறாள். மாரிமுத்துவின் பைக் ஏற்படுத்தியிருந்த பாதையை ஆக்ரோஷத்துடன் ஆக்கிரமித்தவாறு அந்த கார் கம்பீரத்துடன் சென்றது.

சுபாஷினிக்கு அந்த காரில் யார் இருக்கிறார்கள் என்றுத் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருந்தது. தற்பொழுது பொறுப்புகளை ஏற்று இருப்பவர்.. அடுத்த வாரிசு உரிமைக்கு இருப்பவர் இளைய ராணி ரேஷ்மாவின் கணவர் ஆதர்ஷ் என்றுத் தெரியும். ஒருவேளை அவராக இருக்குமோ என்று ஆர்வத்துடன் கால்களை எம்பி வைத்துப் பார்த்தாள்.

சரியாக கவனிக்கப்படாத மதிற்சுவர் கேட் அவசரமாக திறக்கப்படுவதைப் பார்த்தாள். அதற்கு மேல் தாறுமாறாக ஒழுங்கற்று மாளிகையைச் சுற்றி வளர்ந்திருந்த மரங்களின் கிளைகளின் உபயோகத்தால் அவளால் சரியாக பார்க்க முடியவில்லை.

அப்பொழுது “சுபா” என்று அவளது தாய் அழைக்கும் குரலில் மாளிகையைப் பார்த்தவாறே உள்ளே சென்றாள்.

போன வாரம் காய்ச்சலில் படுத்திருந்த தன் அன்னை பாத்திரம் விலக்கி கொண்டிருப்பதைப் பார்த்ததும்.. “அம்மா..! நான்தான் விலக்கி தரேன்னு சொன்னேனில்ல.. அதுக்குள்ள ஈரத்தில் கை வைத்துக் கொண்டு சளியை இழுத்து வைத்துக் கொள்ளாதீங்க..! இந்த குளிர்காலத்தில் சளி பிடித்தால் சரியாவது கஷ்டம்..” என்றவாறு வந்தவள் அன்னையை பற்றித் தள்ளி நிறுத்தினாள்.

குளித்துவிட்டு தலையைத் துவட்டியவாறு வந்த கதிரேஷன் “என்ன நர்ஸ்ம்மா..! வேலைக்கு போறதில்லை என்று அந்த வேலையை வீட்டில் பார்க்கறீயா..! நாங்க ஈரத்தில் கை வைத்து உழைத்து வந்த கூட்டம் அம்மா..! அவளுக்கு காய்ச்சல் வந்திற்கு காரணமே உனக்கு வந்த வரன் தான்! போன வாரம் அவ சொந்தக்காரங்க கல்யாணத்தில் போய் பெருமையா உனக்கு வந்த வரன் பற்றி சொல்லியிருக்கா..! எத்தனை பேர் பொறாமையில் பார்த்தாங்களோ வந்தவுடனே காய்ச்சலில் படுத்துட்டா..! அதுவும் இப்படி முதல் பேச்சு வார்த்தையிலேயே முடியும் என்று நாங்க நினைத்துப் பார்க்கலை. எப்படியாவது கல்யாணத்தை ஊரே மெச்சுகிற அளவிற்கு நடத்திரணும்.” என்றவரின் முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது.

அதைக் கேட்ட சுபாவின் முகமும் மலர்ந்திருந்தது. ஆகாஷின் முகம் தானே நினைவு வந்தது.

ஆகாஷிற்கும் சுபாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் இரு மாதங்களில் திருமணம் என்று வரை வந்துவிட்டது. சுசீலாவும், கதிரேஷனும் இந்தளவிற்கு மகிழ்ச்சி கொண்டதிற்கு காரணம் ஆகாஷ் கோவையில் பெரிய மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறான். செல்வாக்கு நிறைந்த குடும்பம்! சுபாஷினிக்கு வரன் பார்க்க என்று எடுத்ததும் உடனே அமைந்துவிட்டதை அவர்களால் நம்பமுடியவில்லை. அதுவும் சுபாஷினியின் தொழிலிற்கு ஏற்ற மாதிரியான மாப்பிள்ளை அமைந்ததில் அவர்கள் கொள்ளளவு மகிழ்ச்சி கொண்டனர். சுபாவிடம் அவளது தோழிகள் காதல் திருமணமா என்று கிண்டல் செய்து அதற்கு ஒரு கதையை கற்பனையாக சொல்லி அவளை ஓட்டியதும் உண்டு.

ஆகாஷ் தொழில் தான் மேன்மையான மருத்துவர் தொழில் என்றாலும்.. அவன் சரியான கலகலப்பான பேர்வழி..! நிச்சயத்தின் போது ரகளை செய்துவிட்டான். சுபாஷினியிற்கு இன்னும் நினைத்தால் சிரிப்பு வரும். அவனுடான தனது எதிர்கால திருமண வாழ்விற்காக மிகுந்த ஆவலும் மகிழ்ச்சியும் கொண்டாள். அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் வரை அவர்களது ஊருக்கு அருகில் உள்ள சிறிய மருத்துவமனையில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தவளை ஆகாஷ்.. இனி செல்ல வேண்டாம் என்று வேலையில் இருந்து விலகி கொள்ள சொன்னான். மேல்நாட்டிற்கு பயிற்சிக்காக ஆகாஷ் செல்ல இருப்பதால் திருமணத்தை ஆறு மாதங்கள் கழித்து நடத்த முதலிலேயே திட்டமிட்டிருந்தனர். அதுவரை சுபாவை மருத்துவம் சம்பந்தமான ஆனால் அவளுக்கு விருப்பமானதை படிக்க சொன்னான்.

அது மட்டுமல்லாது இனி வேலை செய்தால் அன்று அனுமதிக்கப்படும் நோயாளிகளின் பொறுப்பு அவர்களது உடல்நிலை பற்றிய கோப்புகள் என்று அவளிடம் ஒப்படைக்கப்படும். பிறகு அவர்கள் குணமாகி செல்லும் வரை அவர்களின் பொறுப்பு அவளுடையதாக இருக்கும். அந்த வேளையில் அவள் திருமணமாகி சென்றால் புதிதாக நியமிக்கப்படும் நர்ஸிடம் புதிதாக பொறுப்பை மாற்றும் பொழுது அவங்க திணற நேரிடும். அது நோயாளிக்கு உகுந்தது அல்ல என்று வேலையை விட்டு விலக சொன்னான். அது சரியாக படவும் சுபாவும் விலகி கொண்டாள்.

அன்று இரவு செல்பேசியில் பேசிய ஆகாஷ்.. “இனி என்னைப் பற்றிய ட்ரீம் மட்டும் காண்பது தான் உன் வேலை..” என்றுக் கூறி சிரிக்கவும் இந்த பக்கம் சுபாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது. இந்த நான்கு மாதங்களும்.. அவ்வவ்போது தான் ஆகாஷ் சுபாஷினியை செல்பேசியில் அழைப்பான். ஆனால் அதையே அவள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தாள். மகளை நல்ல இடத்தில் கொடுக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் கதிரேஷன் அவ்வவ்போது இவ்வாறு பேசுவது உண்டு. சுபாவும் முறுவலித்து விட்டு பாத்திரம் கழுவ தொடங்கினாள்.

சுபாஷினியின் தந்தை கதிரேஷன் காலை வேளை உணவு மற்றும் மதியம் சாப்பிடுவதற்கும் எடுத்துக் கொண்டு போவார் எனவே அதற்கும் சேர்த்து மதிய சமையல் செய்ய என்று அன்னைக்கு உதவிய சுபாஷினி.. வேலைகளை முடித்ததும்.. குளியலை போட வெளியே இருந்த குளியலறைக்கு வந்தாள். அவளது பார்வை வழக்கம் போல் மாளிகைக்கு சென்றது. ஆனால் இம்முறை அப்படியே நின்றுவிட்டாள். ஏனெனில் மாளிகையின் மாடியில் ஒரு உருவம் நின்றுக் கொண்டு இருந்தது. யாராக இருக்கும் என்ற யோசனையுடன் குளியலையில் முடித்துவிட்டு வந்தவள்.. தன் பெற்றோரிடமும் விசயத்தைச் சொல்ல மறக்கவில்லை. அவர்களும் யாராக இருக்கும் என்று அதிசயத்துவிட்டு அதை மறந்து போனார்கள்.

அவர்கள் வீட்டில் இருந்து பின்புறமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்தால் அவர்களது விவசாய குத்தகை நிலம் வரும். கேரட், பீட்ருட் முட்டைகோஸ் போன்றவை பயிரிட்டிருந்தனர். காலையில் கதிரேஷனும் சுசீலாவும் வாக்கிங் போல் பேசியவாறே நடந்து செல்வார்கள். பின் மதியம் நெருங்கும் பொழுது அங்கு அவசரமான வெளி வேலைக்கு செல்ல என்று நிறுத்தப்பட்டிருக்கும் அவரது மொபட்டில் மனைவியைக் கொண்டு வந்து வீட்டில் விட்டுட்டு அவர் சென்றுவிடுவார். பின் பொழுது சாய்கிற நேரத்தில் தான் வருவார்.

வழக்கம் போல் அவர்கள் காலையில் சென்றுவிடவும் சுபாஷினி படிக்கிறேன் என்ற பெயரில் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு செல்பேசியில் சமூக வலையதளங்களில் சுற்றிக் கொண்டிருந்தாள்.

அன்று நேரம் பன்னிரெண்டை நெருங்கையில் வீட்டின் முன் பச்சை நிற சீட்டால் அமைக்கப்பட்டிருந்த கூரையின் நிழலில் அமர்ந்துக் கொண்டு மொபைலை கையில் வைத்திருந்தவளின் பார்வை தானே மாளிகை புறம் சென்றது. மதிற்சுவரின் கேட் திறக்கப்பட காலையில் சென்ற கார் வெளியே வருவது தெரிந்தது. உடனே எழுந்தவள்.. அந்த கார் மலைப்பாதையில் மெல்ல ஊர்ந்தவாறு இறங்குவதைப் பார்த்தபடி காலையில் நின்றது போல் மதிற்சுவரிடம் சென்று நின்றாள்.

எட்டு வருடங்கள் கழித்து அந்த மாளிகைக்கு ஓருவர் வந்திருப்பது அவளுக்கு ஆர்வத்தைக் கிளப்பியிருந்தது. எனவே யார் வந்திருப்பது என்று அறியவதற்காக பார்த்தாள். அந்த மலைப்பாதையில் கார் இலாவகமாக கீழே வந்து திருப்பத்தில் மெதுவாக திரும்பி.. பிறகு அதே மித வேகத்துடன் அவளது வீட்டைக் கடந்து சென்று அடுத்து இருந்த திருப்பத்தில் திரும்பி சென்று மறைந்தது.

கார் கண் பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்துவிட்டு சிறு சிரிப்புடன் மீண்டும் பழைய இடத்தில் சென்று அமர்ந்தாள். காரோட்டியின் திறமையையும் அவளால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. இடத்திற்கு தகுந்த போன்று அவர்களிடம் வேலை செய்யும் ஆட்கள் கூட அமைவார்கள் போல என்று சிறு பெருமூச்சு விட்டாள்.

பின் வழக்கம் போல் மாற்றமில்லாது அவளது நாட்கள் சென்றது. நான்கு நாட்களுக்கு பின் வீட்டின் முன் இருந்த செடி கொடிகளுக்கு நீர் விட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது வித்தியாசமாக கேட்ட ஹாரன் ஒலியில் தண்ணீர் குழாயை அப்படியே வைத்துவிட்டு சென்று மதிற்சுவரில் இருந்து எட்டிப் பார்த்தாள். அவளை ஏமாற்றாது.. அந்த திருப்பத்தில் இருந்து அதே ஜாக்குவார் கார் வந்துக் கொண்டிருந்தது. நான்கு நாட்களிலேயே திரும்பவும் வந்த காரை பார்த்து அதிசயத்து பார்த்தவாறு நின்றுவிட்டாள். அந்த காரும் நிதானத்துடன் கடந்து சென்று மாளிகைக்குள் சென்று மறைந்தது. மதியவேளை நெருங்கவும் அந்த கார் திரும்பவும் செல்லுமோ என்று நொடிக்கு ஒருதரம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த கார் வரவேயில்லை. அவளது அன்னை ஒரு மணியளவில் வந்துவிடவும் அவருடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள். அப்பொழுது அந்த வித்தியாசமான ஹாரன் ஒலி கேட்கவும்.. பாதி சாப்பிட்டிலேயே எழுந்து சென்று வாயில் நின்று பார்த்தாள். ஹாரன் அடித்தவாறு மலைப்பாதையில் இருந்து இறங்கிய கார் அவளது வீட்டை கடந்து சென்றது.

எதற்கு முட்டாள்தனமாக கார் செல்வதைப் பார்க்கிறேன் என்று தன்னைப் பார்த்து சிரித்தவாறே உள்ளே வந்தவள் சுசீலாவிடம் நன்றாக திட்டை வாங்கி கட்டிக் கொண்டாள். ஏன் எழுந்து சென்றே என்ற கேள்விக்கு.. அவளது முட்டாள்தனத்தை சொல்ல அசடு வழிந்தவளாய் ஏதோ காரணம் சொல்லி தப்பித்தாள்.

அடுத்து நாள் அந்த மாளிகையில் ஆட்கள் நடமாட்டத்தைக் கண்டாள். அவர்கள் கரடுமுரடாக வளர்ந்திருந்த காட்டுக் கொடி மற்றும் செடிகளை சுத்தம் செய்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவள் மட்டுமல்லாது அவளது பெற்றோரும் அதை அதிசயமாக பார்த்தார்கள். சற்று தள்ளியிருந்த ஊரிலும் மாளிகைக்கு அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் வந்து சென்ற விசயம் பரவியது. அவர்களும் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் சென்றார்களே தவிர.. யாரும் அருகில் சென்று விசாரிக்கவில்லை.

பின் மேலும் இரு நாட்கள் சென்ற பின் காலையில் அவர்களது ஒற்றை மொட்டை மாடியில் துவைத்த துணிகளை சுபாஷினி காயப் போட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது காரின் ஹாரன் ஒலி கேட்கவும்.. கையில் வைத்திருந்த துணியை பாக்கெட்டிலேயே போட்டு விட்டு மாடி தடுப்பு சுவற்றைப் பற்றியவாறு எட்டிப் பார்த்தாள். ஜாக்குவார் கார் வழக்கத்தை விடவும் மிதமான வேகத்தில் அவளது வீட்டைக் கடந்துக் கொண்டிருந்தது. சுபாஷினி பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அது வழக்கம் போல் வேகத்தைக் கூட்டி மலைப்பாதையில் திரும்பியது. அவள் எதிர்பார்த்தது போல் அன்றே மதியம் கடந்த வேளையில் ஹாரன் சத்தம் கேட்கவும்.. அரச குடும்பத்து ஆள் என்கிற மரியாதை கலந்த பயம் காரணமாக முன்பு போல் மதிற்சுவரிடம் சென்று நின்று பாராமல் பச்சை நிற கூரையின் கம்பத்தைப் பிடித்தபடி நின்றுப் பார்த்தாள். கருப்பு கண்ணாடியால் அவளால் காரில் உள்ளே இருப்பவர்களைப் பார்க்க முடியவில்லை. காரில் இருப்பவர்களும் தன்னைப் பார்ப்பது என்ன.. தான் இருக்கும் திசையைக் கூடப் பார்க்க மாட்டார்கள் என்று சுபாஷினிக்கு தெரியும். இவ்வாறாக இரு வாரங்கள் கடந்தன.

இந்த இருவாரங்களில் ஐந்து முறை அந்த கார் வந்து சென்றது. எந்த வேலை செய்துக் கொண்டிருந்தாலும்.. அதை அப்படியே போட்டுவிட்டு சுபாஷினி தவறாது சென்றுப் பார்த்து விடுவாள். அந்த மாளிகையை சிறு வயதில் இருந்து எந்த வித நோக்கமும் இல்லாமல் பார்த்து வளர்ந்தது போல் கார் செல்வதையும் தவறாது பார்த்து பழகி கொண்டாள்.

இரு வாரங்கள் கழித்து வழக்கம் போல் செல்பேசியும் கையுமாக அமர்ந்திருந்தவள்.. தோழியுடன் குறுந்தகவல் மூலம் பேசிக் கொண்டிருந்தாள். அவளது தோழி அவளது திருமணம் பற்றிய கிண்டலில் இறங்கவும் சுற்றுப்புறத்தையே மறக்கும் அளவிற்கு சுவாரசியமாக அவர்களது குறுந்தகவல் பரிமாற்றம் நடந்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது திடுமென தோன்றிய உணர்வில் நிமிர்ந்து பார்த்தவள் திகைத்துவிட்டாள். கையில் வைத்திருந்த செல்பேசியில் அவளது தோழி வரிசையாக அனுப்பிய குறுந்தகவல்களால் அது அதிர்ந்துக் கொண்டிருக்க.. அதை விட அவளது மனம் அதிர்ந்திருந்தது. ஏனெனில் அந்த கருப்பு நிற ஜாக்குவார் கார் சரியாக அவளது வீட்டின் முன் நின்றிருந்தது.

சுபாஷினி வாயைப் பிளந்தவாறு எழுந்து நின்றாள். அவள் எழுந்து நின்றதும் அந்த கார் மெல்ல நகர்ந்து திருப்பத்தில் திரும்பி மலைப்பாதையில் ஏறியது.

சுபாஷினி எவ்வாறு உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

அவளைப் பார்க்க அந்த கார் நின்றதா..? அல்லது அவள் பார்க்க வேண்டும் என்று நின்றதா..? என்று அவள் நினைக்கையிலேயே அதில் இருந்த அபந்தத்தை அவள் உணர்ந்தாள். தன் தலையில் கொட்டி கொண்டாள். பின் அவளது அன்னை வந்துவிடவும்.. நல்லபிள்ளை போல் உள்ளே அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள். மதியம் சாப்பிட்டு முடித்ததும் சுசீலா சிறிது கண்ணயரவும்.. சுபாஷினி பாத்திரங்களை ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தாள்.

அப்பொழுது ஹாரன் ஒலி கேட்டது. சுபாஷினியின் கைகள் தடுமாறியது. காலையில் நினைத்தது மீண்டும் மூளைக்குள் குழம்பியது. எதேச்சையாக நின்றிருக்கலாம்.. என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டதும் அவளது கால்கள் தானே வெளியே சென்றது. கதவை பிடித்துக் கொண்டு பார்க்கையிலேயே கார் அவளது வீட்டை கடந்து சென்றுவிட்டது.

இன்னொரு முறை கார் வந்ததும் போக நினைத்தவள் அவளது மூளையை குழப்பிய விசயத்தைத் தெளிவுப்படுத்தி கொள்ள விரும்பினாள். எனவே முயன்று அடக்கி அமர்ந்துக் கொண்டாள். கார் திரும்பி மலையில் ஏறியிருக்கும் என்று சிறிது நேரம் கொடுத்துவிட்டு மெல்ல எட்டிப் பார்த்தவள் அதிர்ந்துவிட்டாள். ஏனெனில் அவள் எட்டிப் பார்த்ததும் அந்த கார் நகர்ந்து சென்றது. நடப்பதை அவளால் நம்ப முடியவில்லை. அவள் வந்து பார்த்த பின் தான் கார் கடந்து செல்கிறது என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.

ஆனால் யார் இந்த வேலையைச் செய்வது என்றுத்தான் தீர்மானமாக தெரியவில்லை. கார் ஓட்டுபவனா.. என்று ஐயம் கொண்டாள். அல்லது வந்து சென்றுக் கொண்டிருப்பது அரச குடும்பத்தைச் சேர்ந்தவரே இல்லையோ..! யாரோ வந்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்களோ..? என்றும் சந்தேகம் தோன்றியது. ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்று மட்டும் நினைக்கவில்லை. ஏனெனில் ஊர்மக்களை அவர்களின் குடிமக்கள் என்ற நிலையிலேயே வைத்திருப்பார்கள். அதனால் நிச்சயம் இது வேறு யாரோ என்று நம்பினாள். எனவே சிறிதும் கோபமும் கொண்டாள்.

மாலையில் ஹாரன் ஒலி கேட்டதும்.. இருந்த இடத்தில் இருந்து நகராமல் இருந்தாள். அடுத்து பலமாக ஒலித்தது. டிவி பார்த்துக் கொண்டிருந்த சுசீலா.. “யார் இப்படி சத்தமா ஹாரன் அடிக்கிறது தலை வலிக்குது..” என்று எழ முற்படவும் “நான் பார்க்கிறேன்…” என்று அவசரமாக சுபாஷினி எழுந்து சென்றாள். அவள் கதவருகே வந்ததும் கார் கிளம்பி சென்றது. சுபாஷினி கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டாள்.

அடுத்த மூன்று நாட்கள் கழித்து சுசீலாவும் கதிரேஷனும் தோட்டத்திற்கு சென்ற பின் வாயிலில் அமர்ந்திருந்தவளின் உள்ளுணர்வு அன்று அந்த கார் வரும் என்றுச் சொல்லியது. அவளது உணர்வு சொல்லியது சரியே என்பது போல்.. ஹாரன் ஒலி கேட்கவும், அவசரமாக எழுந்து உள்ளே சென்று நின்றுக் கொண்டாள். இம்முறை நிச்சயம் வெளியே போக கூடாது. ஆனால் அந்த காரில் வந்தவர் யார் என்றுப் பார்த்துவிட வேண்டும்.. என்று மனதில் தீர்மானம் எடுத்துவிட்டு மறைந்து நின்றுக் கொண்டாள்.

மெதுவாக அவளது வீட்டருகே கார் ஹாரன் அடித்தவாறு வருவதைப் பார்த்தாள். சுபாஷினி அமைதியாக அமர்ந்துவிட்டாள். தற்பொழுது மெல்ல சன்னல் திரையை விலக்கி எட்டிப் பார்த்தாள். அந்த கார் அவளது வீட்டின் வாசலின் முன் நின்றிருந்தது. சுபாஷினி இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தாள். ‘எவ்வளவு நேரம் சென்றாலும் வெளியே போக கூடாது.. அந்த காரை ஓட்டிக் கொண்டு வருபவன் என்ன செய்து விடுவான் என்றுப் பார்த்துவிட வேண்டும்..’ என்று இருந்தாள்.

சிறிது நேரமாக ஹாரன் ஒலி கேட்காதிருக்கவும்.. அதற்குள் சென்றுவிட்டானா என்று மெல்ல எட்டிப் பார்த்தாள். அந்த கார் கண்ணில் தட்டுப்படவில்லை.

‘அவ்வளவுத்தானா..! அவள்தான் பெரிய விசயமாக எடுத்துக் கொண்டாளோ.. முன்பே அவள் கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்க வேண்டுமோ..! அரண்மனை வீட்டு ஆட்களின் கார் என்று அவள் ஆர்வமாக பார்த்ததை யாரோ தவறாக எடுத்துக் கொண்டார்களோ..! பைத்தியம் பைத்தியம்!’ என்றுத் தன்னையே திட்டியவாறு எழுந்து மெல்ல வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். மலைப்பாதையிலும் அந்த கார் பயணிக்கவில்லை. அவளது வீட்டைக் கடந்த கார் மாளிகைக்கு செல்லவில்லையா..? என்றுத் திகைத்தவாறு மதிற்சுவரை நோக்கி சென்றாள். அதுவரை எங்கு நின்றிருந்ததோ.. அவளைப் பார்த்ததும்.. மலைப்பாதையில் கார் திரும்பியது.

சுபாஷினிக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது. அவளிடம் அந்த காரை ஓட்டுபவன் நன்றாக விளையாடுவது தெரிந்தது. அடுத்த முறை காரின் வழியை மறித்து கேள்வி கேட்டுவிட வேண்டியது தான் என்று உள்ளுக்குள் கறுவிக் கொண்டாள். திரும்பி அந்த கார் வரும் வேளைக்காக மாளிகையின் மேல் ஒரு கண் வைத்தவாறு காத்திருந்தாள். ஆனால் அந்த கார் வரவேயில்லை. மாலை வேளைத் தாண்டியும் வராதிருக்கவும் காத்திருந்த சுபாஷினிக்கு எரிச்சல் மிகுந்தது. இருள் பரவ தொடங்கிய வேளையில் ஆகாஷ் செல்பேசியில் அழைத்திருக்க.. அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது காரின் முன் விளக்குகளை போட்டுக் கொண்டு உண்மையாலுமே ஒரு கருஞ்சிறுத்தை போல் இறங்கி வந்தது. ஆகாஷிடம் பேசும் பொழுது பாதியில் விட்டு செல்ல முடியாது என்பதால் காரை பார்த்தவாறே நின்றுவிட்டாள். காரும் வழக்கமான நிதானமான வேகத்துடன் வந்து அவளது வீட்டைக் கடந்து சென்றது. அடுத்து ஒரு வாரங்களாக கார் வரவேயில்லை. அவளுக்கு தெரியாமல் கார் வந்து சென்றதோ என்று அவள் நினைத்துப் பார்ப்பதற்கும் வழியில்லை. ஏனெனில் அவளுக்கு நன்றாக தெரியும். ஹாரன் அடித்து அவளைக் கூப்பிடாமல் செல்ல மாட்டான் என்று! எனவே சேமித்து வைத்த கோபத்தை இழுத்துப் பிடித்தவாறு காத்திருந்தாள்.

ஒரு வாரம் கழித்து சுசீலாவும்.. கதிரேஷனும் தோட்டத்திற்கு சென்றனர். பலமுறை பத்திரமாக இரு என்று அறிவுரை சொல்லிவிட்டு அவர்கள் செல்லவும்.. பின் வாசல் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள். அப்பொழுது அங்கிருந்து அந்த ஜாக்குவார் கார் நொடிப்பொழுதில் அவளது வீட்டை கடந்து செல்வதைப் பார்த்தாள். சுபாஷினி வியப்பில் ஆழ்ந்தாள். ஹாரன் அடிக்காமல் முதல் முறையாக சென்றிருக்கிறது. மேலும் அவளுக்காக காத்திராமல் கடந்து சென்றுவிட்டது. அவளால் தற்பொழுது நடந்ததை நம்ப முடியவில்லை. இத்தனை முறை போல் அல்லாது அவளைக் கண்டுக்கொள்ளாது சென்றதையும் ஏனோ அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உடனே வேகமாக வெளிப்புற கேட்டை நோக்கி ஓடினாள்.

கேட்டை திறந்துக் கொண்டு வெளியே வந்தவள் சென்றுவிட்டதா என்றுப் பார்த்தவள்.. அதிர்ந்து நின்றுவிட்டாள். ஏனெனில் அந்த கார் அங்கு தான் நின்றிருந்தது. காரின் பின்பாகத்திற்கும் சுபாஷினி நிற்கும் இடத்திற்கும் ஆறு அடிகளே இருந்தது. அதன் ஓட்டுனர் பக்கம் இருந்த கண்ணாடி திறந்திருக்க கதவின் விளிம்பில் ஒரு ஆணின் கரம் ஊன்றியவாறு இருந்ததைப் பார்த்தாள்.

காரின் வழியை மறிக்க வேண்டும்! நீ யார் என்று கேட்க வேண்டும்! என்னிடம் விளையாடுகிறாயா என்றுச் சண்டை பிடிக்க வேண்டும்! இந்த மாளிகையில் நீ எப்படி வந்தாய்? எதற்கு வந்தாய்? கார் ஓட்டுகிற வேலைப் பார்க்க சொன்னால் என்ன செய்கிறாய் என்றுத் திட்ட வேண்டும்.. என்றுப் பல கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று பலவாறு நினைத்திருந்தவள், இமையசைக்க கூட மறந்தவளாய் சிலையென காரின் பின்னால் நின்றுவிட்டாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே.. அந்த ஆணின் கரம் உயர்ந்து கதவோரம் பின்னால் வரும் வாகனங்களைப் பார்க்க உதவும் கண்ணாடியை வருடியது. அந்த கரம் கண்ணாடியை ஏன் வருடியது என்று உள்ளுணர்வால் புரிந்துக் கொண்டவளுக்கு உடல் முழுவதிலும் சிலிர்ப்பை உணர்ந்தாள்.

பின் அந்த கார் மெல்ல கிளம்பி வழக்கம் போல் மலைப்பாதையில் ஏறிச் சென்றது. கேட் திறந்து உள்ளே செல்லும் வரை பார்த்தவாறு நின்றவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அந்த மாளிகையை நோக்கி மலைப்பாதையின் வழியாக ஓடினாள். மூச்சிரைக்க ஓடியவளுக்காக எவரையும் அனுமதிக்கப்படாத கதவு எவ்வாறு அவளுக்காக திறந்திருந்தது என்பதைக் கவனிக்கவில்லை.

பிரமாண்டமான மாளிகையின் வாசலில் சென்று நின்ற பின் தான்.. அவள் எங்கே வந்திருக்கிறாள் என்பதை அவள் உணர்ந்தாள். தலையை நிமிர்த்தி பார்த்தாள். அந்த பெரிய வாயில் அவளைச் சிறு பிள்ளை போல் உணர வைத்தது.

சிறு வயதில் அவளது அன்னையின் இடுப்பில் அமர்ந்துக் கொண்டு ஏதோ விஷேஷத்திற்கு இங்கு வந்தது அவளுக்கு நினைவு வந்தது. அன்று கண்ணைப் பறிக்கும் ஒளிவிளக்குகள் அவளது கண்களை கூச செய்யவும்.. சுசீலாவின் தோளில் முகம் புதைத்தது நினைவு வந்தது. கூடவே கூட்டநெரிசலில் சிக்கி கொண்டதும் நினைவு வந்தது.

இன்று..! என்று பார்வையைச் சுழல விட்டாள். அந்த மாளிகையின் பிரமாண்ட முன்வாசல் வெறிச்சோடி கிடந்தது. கண்களைக் கூச செய்யும் விளக்குகள் இல்லை. வெயிலின் ஒளியில் அதன் வெறுமை இன்னும் நன்கு புலப்பட்டது. இதுநாள் வரை அவள் வர வேண்டும் என்று நினைத்து கூடப் பார்க்காத இடத்திற்கு அவள் எதற்கு வந்தாள் என்று ஒரு நிமிடம் விழித்தவளுக்கு விடையாக வாயிலின் பிரமாண்ட கதவு திறந்தது.

அந்த கதவைக் கஷ்டப்பட்டு திறந்த மாரிமுத்து சுபாஷினியின் கண்களுக்கு தெரியவில்லை. இதுவரை மற்றவர்கள் சொல்லி கேள்விப்பட்டும்.. அரண்மனைகள் என்று அவள் வலையதளத்தில் உலாவிய படங்களாக மட்டும் பார்த்திருந்த அவளை மாளிகையின் உட்புறத் தோற்றம் வரவேற்க மெல்ல எட்டுக்கள் வைத்து உள்ளே சென்றாள். பார்த்த வரை அவள் ஏமாற்றம் அடைந்தாள். அவள் கேள்விப்பட்டதிற்கும் படங்களில் பார்த்தது போன்று அல்லாது.. பல வித்தியாசங்களைக் கண்டாள்.

பளபளக்கும் தரைகளும், தூண்களும் தற்பொழுது மங்கி போய் காணப்பட்டது. திரைச்சீலைகள் இல்லை..! கண்ணைப் பறிக்கும் விளக்குகள் இல்லை..! சமீபத்திலேயே சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரிந்தது. நாற்காலிகளும்.. பூச்சாடி வைக்கும் தாங்கிகளும் பொலிவிழந்து காணப்பட்டது. ஆனால் அவள் அண்ணாந்து பார்க்க வைக்கும் உயரமும், கண்களால் முழுவதும் அடக்கி விட முடியாத விசாலமும் மட்டும் மாறாமல் அவளை இன்னும் திகைப்பிலேயே கட்டிப்போட்டது. சுற்றிலும் பார்வையை ஓட்டியவளுக்கு தீக்கிரையான அடையாளங்கள் சிலவை மறைக்கபடாமல் கண்களில் தட்டுப்படவும்… அவளது முகத்தில் கொதிநீர் ஊற்றி நனவுலகிற்கு கொண்டு வந்தது.

இந்த மாளிகை தீக்கிரையானதிற்கும்.. இந்த மன்னர் பரம்பரையின் இளைய வாரிசின் வாழ்க்கை மாறிப் போனதிற்கும் அவளுக்கு இருக்கும் தொடர்பு நினைவு வந்தது. உடனே இந்த இடத்தை விட்டு சென்றுவிட வேண்டும் என்று நினைத்து திரும்ப முயன்றவளுக்கு யாரோ அவள் பின்னால் வந்து நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவளிடம் விளையாட்டு காட்டியவன் என்று அவளது உள்ளுணர்வு சொன்னாலும்.. அவனிடம் சண்டைப் போட்டு நீ யார்..? இங்கே எப்படி வந்தாய்? என்றுக் கேட்க நினைத்ததெல்லாம் செயலாற்ற முடியாமல் சில்லிடும் உணர்வு தோன்றியது.

தொண்டையைக் கூட்டி எச்சிலை விழுங்கியவள்.. மெல்ல திரும்பினாள்.

திரும்பியவளுக்கு அவனது உயரமே முதலில் தெரிந்தது. அவனது அகன்ற மார்பில் இருந்து மெல்ல முகத்தை நிமிர்த்தியவளின் கண்களில் அவனது திண்ணிய தோள்கள் தென்பட இன்னும் முகத்தை நிமிர்த்தி பார்த்தவள் அதிர்ந்தாள் என்றுச் சொல்வதை விட ஒரு நொடி இறந்து பிறந்தாள் என்றுச் சொல்லலாம். ஏனெனில் கம்பீரமாய் நின்றுக் கொண்டு முகத்தில் எந்தவித உணர்ச்சிகளுமின்றி கூர்ப்பார்வையால் அவளைத் துளைத்துக் கொண்டிருந்தவன்.. யாருக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்று இந்த எட்டு ஆண்டுகளாக குற்றவுணர்வில் குமைந்துக் கொண்டிருந்தாளோ.. அரச பரம்பரையின் இளைய ராஜாவான ரோஹீத் தான்..!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ! - 2வது பாகம்.. அமேசானில் பதிவு செய்துள்ளேன்.

படித்து தங்களது கருத்துக்களை பகிருங்கள்..

இந்த பாகத்தில் இருந்து சிறு பகுதி.‌..

##########

கௌதம் தொடர்ந்து “எனக்கு பழைய டவுட் வந்திருச்சு! நீங்க அவனோட அம்மா தானா! அப்படி அவனோட அம்மாவா இருந்தா.. யு ஆர் நாட் எ குட் மதர்..” என்று நேரடியாக கூறினான்.

சிறிது நேரம் ஆர்த்தியிடம் இருந்து பதிலில்லை.

கௌதம் “ஹார்சா பேசியிருந்தால்.. ஸாரி! குழந்தைங்க அடம் பிடிப்பாங்க.. என்றுத் தெரியும். ஆனா அந்த குழந்தையை ஹான்டில் செய்ய அவங்களோட அம்மாவுக்கு தெரியும். ஆனா அது உங்களுக்கு தெரியலை. இதனால் தான் டவுடா இருக்கு! ஆனா.. உள்விசயம் தெரியாம பேசாதீங்கனு சொன்னீங்க.. அது ஹன்டர் பர்சென்டேஜ் உண்மையான வார்த்தையா தெரிந்தது. அதனால் அமைதியாக இருந்துட்டேன். இப்பவும் அமைதியாகவே இருக்கிறேன். ஆனா என்னோட சின்ன அட்வைஸ்! இனி குளோஸா ப்ரணவ் கிட்ட பழகுங்க! நீங்க.. உங்க ஹஸ்பென்ட்.. ப்ரணவ்.. என்று மூன்று பேரும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பேமலியா பான்ட் உடன் இருங்க.. அது ப்ரணவோட எதிர்காலத்திற்கு ரொம்ப நல்லது.” என்றான்.

அப்பொழுதும் ஆர்த்தி அமைதியாக வந்தாள்.

அதற்குள்.. விமானநிலையத்தின் வாசலுக்கு வந்திருந்தார்கள்.

ஆர்த்தி மெல்ல “நான் ஒரு விசயம் சொல்வேன். அதை என்ன எது எப்படினு கேட்க கூடாது. நான் சொல்வதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டா கூட சந்தோஷப்படுவேன். இதுவும் உங்களுக்கு சொல்லியிருக்க மாட்டேன். நீங்க திட்டியிருந்த கூட பெருசா எடுத்திருக்க மாட்டேன். ஆனா நீங்க அட்வைஸ் செய்யறீங்க! அதனால சொல்றேன். நான் குட் மதர் இல்லை.. அதே மாதிரி.. குட் வைஃப்பும் இல்லை.” என்றாள்.



இதோ லின்க்..

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கதையை அமேசானில் பதிவேற்றம் செய்துள்ளேன். சப்ஸ்க்ரைப் இருக்கிறவங்க இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து மகிழலாம்.

இது 18+ content கதை.. கவனிக்கவும் content மட்டுமே..

ஹர்திக் மற்றும் ஜான்வியை படித்தவங்க மறந்திருக்க மாட்டிங்க என்று நினைக்கிறேன்.

காதல் என்ற பெயரில் சுயவொழுக்கம் தவறியதால்.. இருவரும் சந்திக்கும் பிரச்சினைகளும்.. அவர்கள் படும் துயரங்களும் பல! அவற்றை கடந்து அவர்கள் இணைந்தார்களா.. என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மறக்காமல் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்திடுங்கள்.

கதையில் இருந்து சிறு பகுதி..

**************

உறுதியுடன் நிமிர்ந்து “ஹர்திக்! போதும் நாம் இனி மீட் செய்ய வேண்டாம்.” என்றாள்.

ஹர்திக் புருவத்தை உயர்த்தி பார்க்கவும், ஜான்வி மனதிற்குள் ‘வாயைத் திறந்து ஏன் என்றுக் கேட்க மாட்டாரோ! இவர் புருவத்தை கேள்வியா உயர்த்துவதை வைச்சு.. நாமளே சொல்லணுமோ..’ என்றுப் பொருமி விட்டு “எனக்கு நீ ஒத்து வரலை. நம்ம கிட்ட நிறையா டிப்ரென்ஸ் இருக்கு! இப்படி எனக்கு செட் ஆகாதா.. உன்னோட எதுக்கு சேர்ந்துட்டு! அதுதான் போதும்.. இத்தோட முடிச்சுக்கலான்னு சொல்றேன்.” என்றாள்.

அவள் கூறி முடிக்கும் வரை.. சிறு யோசனையுடன் கேட்டுக் கொண்டிருந்த ஹர்திக் “பட் ஐ வான்(ட்) டு ஸ்டிக் வித் யு..” என்றான்.

ஜான்வி “பட் ஐ கான்ட்! சோ நாம இப்படியே பிரியறது தான் நல்லது.” என்றாள்.

அதற்கு ஹர்திக் நின்றிருந்த பைக்கை முடுக்கிவிட்டு “ஐம் நாட் அக்ரீ வித் தி(ஸ்)! கமான் சிட்..” என்றான்.

அவள் கூறியதை மதிக்காது பைக்கில் ஏறக் கூறியவனை திகைப்புடன் பார்த்த ஜான்வி, சற்று கோபத்துடன் “ஸாரி ஹர்திக்! இதைத் தான் சொன்னேன். நான் ஒண்ணு சொல்லிட்டு இருக்கேன். நீ ஒண்ணு சொல்லிட்டு இருக்கே! சோ பை..” என்றுவிட்டு தொடர்ந்து நடந்தாள். ஆனால் சட்டென்று பைக்கை அவளுக்கு முன் நிறுத்திய ஹர்திக் “உன் கூட ஸ்பென்ட் செய்த.. இந்த சிக்ஸ் டேஸ்.. எனக்கு வேஸ்ட் ஆஃப் டைம் ஆக இருக்க கூடாது.” என்றான்.

அதைக் கேட்ட ஜான்வி “உனக்கு என்ன வேணும்?” என்றுக் கேட்டாள்.

அதற்கு ஹர்திக் “வொர்க் முடிந்ததும் வந்து பிக்அப் செய்துக்கிறேன். பப்பிற்கு போகலாம். தென் நாளையில் இருந்து கட் ஆஃப் செய்துக்கலாம்.” என்றான்.

ஜான்வி “நான் உன் கூட அந்த மாதிரி இடத்திற்கு எல்லாம் வர முடியாது. இதை முதன் முதலா நாம் பாய்பிரெண்ட் கேர்ள் பிரெண்ட் அக்ரீமென்ட் போடும் போதே சொல்லிட்டேன்.” என்றாள்.

அதற்கு ஹர்திக் “லிசன் கேர்புல்லி! உன் கூட ஸ்பென்ட் செய்த.. சிக்ஸ் டேஸிற்கு எனக்கு பெனிஃபீட் வேண்டும். நவ் யு அன்டர்ஸ்டென்ட்! இல்லை இன்னும் ஓப்பனா சொல்லவா..” என்றுக் கேட்டான்.

---------------

எலக்ட்ரோ ட்ரெயின் பிடித்து.. தனது மருந்தகம் அமைந்திருக்கும் இடத்திற்கு சென்றுக் கொண்டிருந்தான்.

அவன் ஏறியதும்.. அமர்வதற்கு இடம் கிடைக்கவும், அமர்ந்துக் கொண்டு தனது செல்பேசியை பார்த்துக் கொண்டிருந்தான். மும்மரமாக பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு திரும்பிப் பார்க்காமலேயே அவனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் பெண் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்றுத் தெரிந்தது. அவனையும் அறியாது.. அவனது நினைவுகள்.. இதுபோல் அவனை ஆர்வத்துடன் பார்க்கும் பெண்களைத் தன் வசப்படுத்தியது நினைவிற்கு வந்தது.

அன்று ஏதோ பெரிய செருக்கான விசயமாக தெரிந்தது. தற்பொழுது மிகவும் கேவலமாக தெரிந்தத.

எழுந்து சென்றுவிடலாம் என்று நினைத்த பொழுது.. அந்த பெண்ணே எழுந்து.. வேறு ஒருவர் அமர்வது தெரியவும், சிறு நிம்மதியுடன் தலையைத் திருப்பிப் பார்த்தான். ஆனால் அவனோ ஹர்திக்கை பார்த்து முறைத்தான். அதிலேயே அவன் அந்த பெண்ணின் காதலன் அல்லது கணவன் என்றுத் தெரிந்தது.

இயல்பாக பார்த்தால்.. இது நகைச்சுவையாக பார்க்கப்படுவது. இன்னொருத்தனின் பெண்.. அவனை விட்டு மற்றவனை சைட் அடித்தால்.. அதைப் பார்த்து சிரிப்பார்கள்.

ஆனால்.. ஹர்திக்கிற்கு சுருக்கென்று இதயத்தில் வலித்தது. இன்னொருத்தரின் பெண்ணை அபகரிக்கும் காமுகன் மாதிரியா தெரிகிறான். அவன் அப்படிப்பட்டவன் அல்ல.. என்று அலற வேண்டும் போன்று இருந்தது. சட்டென்று அங்கிருந்து எழுந்து சற்று தள்ளி நின்றுக் கொண்டான்.
-----------
ஜான்வி அவனை நோக்கி வரும் பொழுதே “நீ இங்கே வருவேன்னு நினைச்சு பார்க்கலை ஹர்திக்..” என்றவாறு வந்தாள்.

அதற்கு ஹர்திக் “அதாவது எதுக்கு வந்தேன்னு கேட்கிறே..” என்றான்.

அதற்குள் அருகில் வந்திருந்த ஜான்வி மார்பிற்கு குறுக்கே கரங்களைக் கட்டிக் கொண்டு “எக்ஸாட்டிலி..” என்றாள்.

ஹர்திக் “நீ வர மாட்டேன்னு தெரியும். அதுதான் கொஞ்சம் கிளியர் செய்துக்கலான்னு நானே வந்தேன்.” என்றான்.

உடனே ஜான்வி “வேண்டாம்..” என்று கையை உயர்த்தினாள். பின் “வேண்டாம் ஹர்திக்! நமக்குள்ள எந்த கிளியரும் வேண்டாம். எந்த ஆறுதலும் வேண்டாம். நாம கப்புள்ளா இருந்ததால் எவ்வளவு பெரிய பிராப்ளம்ஸ் பேஸ் செய்தோம்.. என்றுத் தெரியும். இப்போ பிரெண்ட்ஸாக இருக்கலாம் என்றுப் பார்த்தால்.. இதுவும் நமக்கு செட் ஆகலைனு புரியுது. கம்பர்ட் செய்யறதா நினைச்சு.. பழசை பேசி.. மறுபடியும் பெயின் அதிகமான மாதிரி தான் இருக்கு! அதனால்.. நாம் இப்படியே விட்டராலாம். இங்கே உன்னை மறுபடியும் மீட் செய்யாத வரை நான் பழசை பற்றியெல்லாம் நினைச்சு பார்க்கலை. பார்த்ததால் தான் இத்தனை வினை..! நாம் ஒரு அன்பார்ச்சுனெட் பீப்பிள்! தட்ஸ் ஆல்! அந்த விதி மறுபடியும் நம்மளை மீட் செய்ய வைத்தாலும்.. உன்னையும் நானும் என்னை நீயும் கடந்து விட வேண்டும் என்று மட்டும் மனதில் உறுதியா வச்சுக்கலாம்.” என்றாள்.

அவள் பேசி முடிக்கும் வரை கேட்ட ஹர்திக் “ஏன் வான்ட்டர்டா.. நம்மளோட மீட்டிங்கை இவ்வளவு பெரிய இஷ்ஷுவா ஆக்கறே..” என்றுச் சரியான பாயின்ட்டை பிடித்தான்.

அவனது கூர்மையான பதிலால் ஓய்ந்த ஜான்வி “அதுதான் தெரியுதுல்ல விட்டுரு..” என்றாள்.

ஹர்திக் “முடியாது நிவி! எனக்கு உன்கிட்ட இருந்து பதில் கிடைக்காமல் விட முடியாது நிவி! நேத்து நீ வரிசையா கேட்ட கேள்விக்கு அர்த்தம் புரிந்து தான் கேட்டியா?” என்றுக் கேட்டான்.

ஜான்வி “அப்படி என்ன அர்த்தத்தைக் கண்டுட்டே?” என்றுச் சற்று எரிச்சலுடன் கேட்டாள்.

ஹர்திக் “டு யு லவ் மீ?” என்றுப் பட்டென்று கேட்டான்.

ஜான்வி அமைதியாக முறைக்கவும், ஹர்திக் “அம் ஐ லவ் வித் யு?” என்று அடுத்த கேள்வி கேட்டான்.

இந்தியா லின்க்..


வெளிநாட்டு வாசகிகளுக்கான லின்க்..

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4

மெல்ல நிமிர்ந்து பார்த்த சுபாஷினிக்கு.. ஏனோ மூச்சு கூட விட முடியவில்லை. இறுக்கி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். தன் முன் நிற்பது இளைய ராஜா அல்லது.. இந்த மாளிகையை பற்றி நினைத்த போதெல்லாம் அவரைப் பற்றி நினைப்பதால் ஏற்பட்ட பிரம்மை கலந்த பயம் தோன்றியது. தான் பார்த்ததை அவளது கண்களும்.. உள்ளமும் நம்ப மறுத்தது. நம்ப சண்டித்தனம் செய்தது என்று வேண்டுமென்றால் கூறலாம். உடலில் ஊறிப் போன மரியாதையும் பயமும் தானே வெளிப்பட உள்ளமும் உடலும் நடுங்கியவளாய் தடுமாறி விழுந்தாள்.

பேன்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் விட்டவாறு கால்களைச் சற்று அகற்றி வைத்து நின்றிருந்தவன்.. அவள் விழுந்தும் சிறிது கூட அசையாமல் பார்வை மாறாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுபாஷினி முற்றிலும் எதிர்பாராத ரோஹீத்தை பார்த்தவள் ஒரு நிமிடம் தடுமாறி விழுந்தாலும்.. அடுத்த நிமிடமே எழுந்து வாயிலை நோக்கி ஓடினாள். ரோஹீத் தான் நின்றிருந்த இடத்தில் இருந்து அசையாது தோளையும் தலையையும் மட்டும் திருப்பி சுபாஷினியை பார்த்தான்.

வாயிலைத் தாண்டி ஓடியவள்.. கேட் மூடியிருக்கவும் அதிர்ந்தவளாய் கேட்டை உலுக்கியபடி நின்றுவிட்டாள். பின்னால் வருகிறானோ என்ற பயம் திடுமென தோன்றவும் திரும்பி பார்த்தவாறு கேட்டை உலுக்கினாள். மாரிமுத்து விரைந்து வந்து “அதற்குள் வந்துவிட்டியாமா..” என்று அதிசயமாக கேட்டவாறு சற்றுமுன் பூட்டிய கேட்டை திறந்தான்.

மாரிமுத்துவை பார்த்ததும் இத்தனை நேரம் இருந்த மயக்க நிலையோ மாயமோ.. அவற்றில் இருந்து சுபாஷினி வெளியே வந்தது போல் உணர்ந்தாள். எனவே எச்சிலைக் கூட்டி மெல்ல விழுங்கிவிட்டு “அண்ணா..! அ...அ...அவ...ர்…” என்று மாளிகையைப் பார்க்கவும், சுபாஷினி என்ன கேட்கிறாள் என்றுப் புரிந்துவிட “அவர்தான்மா இளைய ராஜா..! இரண்டு மாதத்திற்கு முன்பு தான் வெளிநாட்டில் இருந்து வந்தார். இங்கே ஒரு மாதமா வந்துட்டு இருக்காரு..” என்று அவளது தலையில் இடியைப் போடும் செய்தியையும் சேர்த்து சொன்னார்.

மாரிமுத்து கேட்டை திறந்துவிட்டாலும் அவன் சொன்ன செய்தி கேட்டு அதிர்ந்தவளாய் சுபாஷினி நின்றுவிட்டாள்.

“அ..அண்ணா..! அப்போ அந்த கருப்பு கார்ல வருவது..?” என்று அதிர்ச்சியுடன் கேட்கவும்.. மாரிமுத்து “இளைய ராஜா தான்! அவரே காரை ஓட்டிட்டு வந்துடுவார்..” என்றுச் சொல்லிக் கொண்டிருந்தவன்.. திகைப்புடன் சுபாஷினியைப் பார்த்தான். ஏனெனில் அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே சுபாஷினி அவளது வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள்.

மூச்சிரைக்க திரும்பியும் கூடப் பார்க்காமல் ஓடி வந்த சுபாஷினி வீட்டிற்குள் வந்ததும் கதவை சாத்திக் கொண்டு அதன் மேல் சாய்ந்துக் கொண்டு மூச்சு வாங்கினாள்.

அவளைப் பார்க்க ஹாரன் அடித்து விளையாடுவது.. அவர்களுக்கு காரோட்டும் இளமைத் துடிப்பில் உள்ள ஏதோ ஒரு இளைஞன் என்று அதுவரை நினைத்திருந்தாள்.. ஆனால் அந்த சமஸ்தானத்தின் இளைய ராஜா தான் என்று அவள் நினைக்கவில்லை. தற்பொழுது ஏன் அவ்வாறு தன்னிடம் நடந்துக் கொண்டார்.. என்று குழம்பினாள்.

ஒருவேளை அன்று மலர்விழியிடம் வரச் சொல்லி செய்தி அனுப்பியும் செய்ய தவறி பெண்.. என்றுக் கண்டுப்பிடித்துவிட்டாரோ.. என்று நினைத்துப் பார்த்ததும் அவளுக்கு கை, கால்கள் உதறின. ஏனோ ரோஹீத் அவளது பின்னாடியே வந்து ‘மலரும்.. நானும் சேராது போனதிற்கு நீதான் காரணம்..’ என்று புருவம் நெறிய அவளை முறைப்பது போன்று தோன்றவும்.. அடுத்த நிமிடம் அவளது புத்தகத்தைத் தூக்கி கொண்டு அவர்களது தோட்டத்திற்கு விரைந்தாள். மதியம் அவளது தாயுடன் கூட வீடு திரும்பவில்லை. மாலையில் அவளது தந்தையுடனே வீட்டிற்கு வந்தாள். அடுத்த இரு நாட்களும் இதையே தொடர்ந்தாள்.

அப்பொழுது அவர்களது தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவன் வேகமாக ஓடி வந்து.. “ஐயா! உங்களுக்கு விசயம் தெரியுமா..! மாளிகைக்கு இத்தனை நாட்களாய் வந்துட்டு போயிட்டு இருக்கிறது.. இளைய ராணியை கட்டிக்கிட்டவரில்லை.. நம்ம இளைய ராஜாவாம்..! இப்போ அவரு.. ஊரை சுற்றிப் பார்த்துட்டு இருக்காரு..! அடுத்து நிலங்களைப் பார்க்க வருவாருன்னு நினைக்கிறேன்..” என்றதும் கதிரேஷனும் சுசீலாவும் பரபரப்புற்றனர். சுபாஷினி உடனே தன் தந்தையிடம் வந்தவள்.. வீட்டிற்கு போவதாய் சொன்னாள். திடுமென கேட்டவளை வித்தியாசமாக பார்த்தார். ஆனால் சுசீலா கணவரிடம் சிறு சமிக்கை செய்துவிட்டு சுபாஷினி செல்ல அனுமதியளித்தார்.

இளைய ராஜா வருவதற்குள் வீட்டிற்கு செல்ல வேண்டும்.. என்று விரைவாக வைத்த எட்டுக்களுடன் நடந்துக் கொண்டிருந்த சுபாஷினி அந்த வழியாக எப்பொழுது சென்றாலும்.. ஒரு குறிப்பிட்ட திசையில் அவளது பார்வை செல்லும்.. இன்றும் வேகமாக எட்டுக்களை வைத்தவாறு சென்றுக் கொண்டிருந்தவளின் கண்கள் தானே அங்கு சென்றது. அந்த திசையைப் பார்த்தவள் விக்கித்து நடைத் தடைப்பட நின்றுவிட்டாள்.

தாறுமாறாக வளர்ந்திருந்த முட்மரங்களையும் மீறி சுபாஷினி ஒருவரின் முதுகைப் பார்த்தாள். அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை கொண்டு அவர் யார் என்று அவளுக்கு தெரிந்துவிட்டது. உடனே அவளது நெஞ்சுக்குள் சுள்ளென்று வலி எடுத்தது.

ஆம் அது மலர்விழி வீடு இருந்த இடம்..!

மலர்விழி வீடு தீக்கிரையான பிறகு அந்த இடம் கவனிப்பாற்று போன தரிசு நிலமானது. அதனால் அங்கு முட்மரங்களும், புதர்களும் நிறைந்து கிடந்தது. சுபாஷினியின் வீட்டில் இருந்து தோட்டத்திற்கு போகும் வழியில் தான் அந்த இடம் இருப்பதால் சுபாஷினி அவ்வழியே போக நேரிட்டால் அவளது விழிகள் தானே அங்கு செல்லும்..! இன்றும் அவ்வாறு பார்த்தவள் ரோஹீத் அங்கு நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஸ்தம்பித்து நின்றாள். அவளுக்கே அவ்விடத்தைப் பார்த்தால்.. தாங்க முடியாதது ஆக இருக்கும். அவ்வாறு எனில் அவனுக்கு எப்படியிருக்கும் என்று அவனுக்காக வருத்தப்பட்டாள். தற்பொழுது அவனது பார்வையில் இருந்து படக்கூடாது என்றுத்தான் விரைந்துக் கொண்டிருக்கிறாள் என்பதையும் மறந்து மெல்ல அவனை நோக்கி நடந்தாள்.

அவனின் பின்புறத் தோற்றத்தைத் தான் பார்த்தாள் என்றாலும்.. தோள்கள் விரைத்து நின்ற விதத்திலேயே அவனது மனதின் இறுக்கம் தெரிந்தது. சுபாஷினிக்கு அன்றைய நினைவுகள் துல்லியமாக வந்தது.

‘மலர்விழியின் சடலத்தைப் பார்த்ததும்.. அவனது மனதில் இருந்து வந்த ஓலம்..! அவனுடைய காதலியின் உடலைச் சரியாக பார்த்து அழக் கூட இடம் கொடுக்காது பாதுகாவலர்கள் அவனை இழுத்து சென்றது. பின் மாளிகையில் ஏற்பட்ட தீவிபத்து! என்று அவனது மனம் எவ்வாறு புண்பட்டிருக்கும்..! எப்படிப்பட்ட மனநிலையில் இருந்திருந்தால் மனம் வெறுத்து வெளிநாட்டிற்கு சென்றவன் எட்டு வருடங்கள் கழித்து தற்பொழுது தான் திரும்பியிருப்பான்.

பெற்றோர்கள் நிச்சயத்த திருமணத்திலேயே அவள் திருமண வாழ்வைக் குறித்து.. அவளுக்கு அத்தனை எதிர்பார்ப்புகள் கொண்டிருந்தால்.. அவனே மனவிருப்பம் கொண்டு காதலித்த பெண்ணோடு வரப் போகும் எதிர்காலத்தைக் குறித்து எத்தனை கனவுகள் கண்டிருப்பான். அது கருகி போன போது எவ்வாறு துடித்திருப்பான்..! இன்றும் அதே மாறாத வலியுடன் நிற்கிறானே..!’ என்று அவளது மனம் அவனைப் பற்றி எண்ணியவாறு அவனை நோக்கி நடந்தாள்.

அவனைப் பார்த்தவாறு அவள் நடந்து வந்த ஆரவாரத்தில் ரோஹீத் திரும்பி பார்த்தான். ரோஹீத் சட்டென்று திரும்புவான் என்றுச் சற்றும் எதிர்பாராத சுபாஷினி.. அவன் திரும்பவும்.. திகைத்த சுபாஷினிக்கு எதற்கு அவனைக் கண்டு விலகி ஓடினாள் என்ற விசயம் தான் முதலில் மூளைக்குள் தோன்றியது. எனவே பயத்துடன் இரு கைகளையும் எடுத்து கும்பிட்டவாறு..

“என்னை மன்னிச்சுருங்க..! என்னை மன்னிச்சுருங்க..!” என்று பதறினாள்.

அவளை நோக்கி நிதானமாக திரும்பிய ரோஹீத்.. அவள் கேட்ட மன்னிப்பில் புருவத்தை உயர்த்தி பார்த்தான். பின் நிதானமாக கேட்டான்.

“ஃபார் வாட்..?” என்றான்.

சுபாஷினிக்கு ரோஹீத் கேட்டது புரிய சில நேரம் பிடித்தது. அவளிடம் வேண்டுமென்றே காரணம் கேட்கிறானா..! அல்லது உண்மையிலேயே காரணம் தெரியாமல் கேட்கிறானா.. என்றுத் திருதிருவென விழித்தவள்.. உண்மையைச் சொல்ல வாயெடுக்கையில்..

ரோஹீத் “டூ டேஸ் முன்னாடி எதுக்கு என் வீட்டிற்கு வந்தே? பின்னே ஏன் ஓடினே?” என்றுக் கேட்டான்.

உடனே சுபாஷினிக்கு மற்றதெல்லாம் மறந்துவிட்டது.. தானாய் உடல் வளைய “வேறு யாரோ என்று நினைத்தேன்.. நீங்க என்றுத் தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன். என்னை மன்னிச்சுருங்க..” என்று அவனது மாளிகைக்கு வந்ததிற்கு மன்னிப்பு கேட்டாள்.

இங்கு விதி தன் வேலையைக் காட்டியது.. சுபாஷினி முதலில் மன்னிப்பு கேட்டது.. எட்டு வருடங்களுக்கு முன் மலர்விழியை அழைக்க தவறியதிற்காக கேட்டாள். பின்னால் வந்தவள்.. திடுமென மன்னிப்பு கேட்கவும் ரோஹீத்திற்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் எதற்கு என்றுக் கேட்டவன் தொடர்ந்து வீட்டிற்கு வந்தவள் திரும்பி ஓடியதிற்கு காரணம் கேட்டான். அதைக் கேட்டதும் சுபாஷினி முதலில் பேசியதை மறந்து மாளிகைக்குள் சாதாரண மக்களான அவள் வந்தது பெரிய குற்றம் என்றுக் கருதி அதற்கு மன்னிப்பு கேட்கவும்.. ரோஹீத் அவள் கேட்ட இரு மன்னிப்புகளில் முதலில் கேட்ட மன்னிப்புக்கும் இரண்டாம் காரணம் தான் என்று நினைத்து விட்டான்.

ரோஹீத் அவளை அழுத்தமான பார்வையுடன் அளவிட்டான். பின் மெல்ல “நான்தான்.. கார் ஓட்டிட்டு வந்தேன். ஹாரன் அடித்து உன்னைக் கூப்பிட்டதும் நான்தான்..!” என்றான்.

சுபாஷினி அவன் சொல்லியதைக் கேட்டு திடுக்கிட்டு நின்றாள். முதலிலேயே அவன் முன் வாய் குழற நின்றிருந்தவள்.. தற்பொழுது என்ன மாதிரி பிரதிபலிப்பது என்றுக் கூடத் தெரியாது விழித்துக் கொண்டு நின்றாள்.

ரோஹீத் “என்னோட கார் உனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.. போல..” என்று உதட்டை சிறிது வளைத்து வைத்தவாறு வினாவினான்.

சுபாஷினி திக்கி திணறிவாறு “இல்லைங்க இளைய ராஜா..! அப்படியில்லைங்க..! இனி பார்க்க மாட்டேன் இளைய ராஜா..! ஸாரிங்க..” என்றாள்.

உடனே ரோஹீத் முகத்தைச் சுளித்தவாறு “ஸ்டாப் மென்சனிங் மீ.. லைக் தட்..” என்றான்.

பின் ரோஹீத் தொடர்ந்து “வாட்ஸ் யுவர் நேம்..?” என்றுக் கேட்டான்.

“சுபாஷினி..” என்று பெயருக்கே வலித்துவிடும் போல மெல்ல சொன்னவளின் பார்வை அவனைத் தாண்டி புதருக்குள் கிடந்த பழைய வீட்டின் மேல் சென்றது. அவளது பார்வைத் தொடர்ந்து திரும்பி பார்த்தவனின் பார்வை அங்கேயே தேங்கி விட்டது.

சுபாஷினிக்கு பழைய அச்சம் திரும்பி வந்தது. எனவே “நான் கிளம்புகிறேன் இளைய ராஜா..” என்று வணங்கிவிட்டு செல்ல தொடங்கினாள்.

சில கணங்கள் மலரின் நினைவுகளின் பின்னோக்கி சென்றவன் சுபாஷினியின் குரலில் சுயவுணர்வு பெற்றான். தலையை மட்டும் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தவன்.. திரும்பி பார்த்த பொழுது சுபாஷினி செல்வதைப் பார்த்து “ஸ்டாப்…” என்று அழுத்தமான கட்டளையிடும் குரலில் சொல்லவும்.. சுபாஷினி அந்த குரலில் அதற்கு மேல் அடியெடுத்து வைக்க முயலாதவளாய் பிரேக் பிடித்தாற் போன்று நின்றுவிட்டாள்.

மெல்ல விழிகளை உயர்த்தி பார்க்கவும்.. ரோஹீத் இறுக்கமான குரலில் “நான் உன்னைப் போக சொன்னேனா..” என்றுக் கேட்டான்.

சுபாஷினி உதட்டைக் கடித்தபடி நின்றவள்.. அவனுடன் தனியாக நிற்க பயந்தவளாய் யாராவது துணைக்கு வந்தால் பரவாயில்லை என்று யாராவது கண்ணில் படுகிறார்களா என்று மெல்ல விழிகளைச் சுழற்றிப் பார்த்தாள்.

அவளின் பார்வைச் சுழல்வதைப் பார்த்த ரோஹீத்தும் பார்வையைச் சுழற்றினான். கண்ணுக்கு எட்டும் தொலைவில் தெரிந்த அவளது வீட்டைப் பார்த்து.. “அதுதானே உன் வீடு?” என்றுக் கேட்டவன்.. தொடர்ந்து “அப்போ உனக்கு மலரை தெரிந்திருக்கும்..” என்று மெல்ல கேட்டான்.

சுபாஷினி கண்டுப்பிடித்துவிட்டானோ என்ற பயத்தில் மெல்ல தலையை மட்டும் ஆட்டினாள்.

அவளது முகத்தில் இருந்த பயத்தைப் பார்த்தவனின் முகம் யோசனையைத் தத்தெடுத்தது.. பின் விடைத் தெரிந்தவனாய் உதட்டு ஓரத்தை வளைத்து சிரித்தவன்.. கண்களைச் சுருக்கியவாறு “நான் மலர் கூடப் பேசி பழகியது கூட உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்..” என்றான்.

சுபாஷினி வாயைத் திறக்கவில்லை என்றாலும் அவளது முகம் அப்பட்டமாக ஆம் என்ற பதிலைச் சொல்லியது.

அதைப் பார்த்த ரோஹீத் வானத்தைப் பார்த்து தலையை நிமிர்த்தி மெல்ல சிரித்தான். பின் நேராக அவளைப் பார்த்தவனின் கண்களில் அத்தனை வலி..! பின் தோள்களைக் குலுக்கிவிட்டு “ஓகே யு கேன் கோ..” என்கவும்.. விட்டால் போதும் என்று அவனை வணங்கிவிட்டு திரும்பியளிடம் ரோஹீத் “நான் ஹாரன் எப்போ அடித்தாலும் நீ வந்து பார்க்கணும்..! அதே மாதிரி நான் போ என்றால் தான் போகணும்..! அன்டர்ஸ்டேன்ட்..!” என்றான்.

அதைக் கேட்ட சுபாஷினிக்கு திக்கென்று இருந்தாலும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு வேகநடை என்ற பெயரில் கிட்டத்தட்ட ஓடினாள்.

அவள் செல்வதைப் பார்த்த ரோஹீத்தின் முகத்தில் அத்தனை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து புன்னகை மலர்ந்தது.

பின் நிதானமான நடையுடன் காரை நோக்கி சென்று காரில் ஏறியவனுக்கு பல்வேறு நினைவுகள் அவனது மனதை அலைக்கழித்தது.

அவனது வாழ்வையே புரட்டிப் போட்ட எட்டு வருடத்திற்கு முன் அவனது நினைவுகள் சென்றது.

மலர்விழி தான் அவனது நினைவில் முதல் ஆளாக வந்தாள். கொரியர் அலுவலகத்தில் வேலைச் செய்தவள் வேலை நிமித்தம் பொருட்டு மாளிகைக்கு வந்த பொழுது தான் பார்த்தான்.. பார்த்ததும் காதல் மலர்ந்தது. இரு சந்திப்புகளில் இது நிலையான காதல் என்று உறுதிக் கொண்டான். முதலில் பயந்து ஒதுங்கியவளிடம் விடாது விரட்டி தன் காதலைப் பெற்றுக் கொண்டான். அப்பொழுதும் பயந்தவளை யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ந்தான். யார் எதிர்த்தாலும் அவளைத்தான் மணம் முடிப்பேன் என்று உறுதி தந்தான். உறுதியும் கொண்டான். ஆனால் அவர்களது காதலை அவனது வீட்டினர் கண்டுப்பிடித்ததும்.. அவனைப் பற்றித் தெரிந்திருந்த அவனது வீட்டார் மலர்விழியின் பெற்றோரை அணுகி மிரட்டல் விடுத்தனர். அந்த மிரட்டலைக் கேள்விப்பட்ட ரோஹீத் நேரடியாக பெற்றோர்களிடமே சென்று அவனது காதலுக்கு தடையாக யார் நின்றாலும் அவனால் அதைத் தகர்த்து மலர்விழியை மணக்க முடியும் என்று சவால் விட்டான். அதன் பலன் அவனை வீட்டிலேயே அடைத்து வைத்தனர். அடுத்த நாள் கேள்விப்பட்ட செய்தியோ அவனது தலையில் இடி விழ செய்தது. தீவிபத்தில் மலரின் வீடு முற்றிலும் எரிந்து அவளது குடும்பமே இறந்துவிட்டனர். உடனே அடித்துப் பிடித்து ஓடியவனால் அவளது சடலத்தைக் கூட முழுவதாக பார்க்க முடியவில்லை. அதன் பின்னோ அவன் பித்து பிடித்த நிலைக்கு சென்றுவிட்டான். தற்கொலை செய்துக்கொள்ள கூட முயன்றவனை அவனது பணியாளர்கள் பார்த்து தடுத்துவிட்டனர். அந்த வேலையில் இந்த மாளிகையிலும் தீவிபத்து ஏற்படவும்.. அவர்களது குடும்பமே இடம் பெயர்ந்தது.

அங்கும் ரோஹீத் அடங்காமல் இருக்கவும்.. அவன் இலண்டன் அனுப்பி வைக்கப்பட்டான். அங்கும் சில நாட்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தவன்.. மெல்ல இறுகி போனான். அதன் பின் ரோஹீத் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை.. அமைதியாக இருந்தவன்.. அவனது வேலைகளை இயல்பாக செய்தான். ஆனால் தன் பெற்றோர்களிடம் பேச மறுத்துவிட்டான். இந்தியாவிற்கும் வர மறுத்துவிட்டான். அவர்களே அவனைக் காண இங்கு வந்தாலும் ஒரிரு வார்த்தைகளில் பதில் தந்தான். மற்றபடி அவர்கள் வந்ததைப் பொருட்டாக மதிக்கவில்லை. பின் அவனது தந்தையே தனக்கு பின் அவன்தான் சமஸ்தானத்தின் இராஜாவாக பதவியேற்க வேண்டும். அதற்கான வயது அவனுக்கு வந்துவிட்டது என்றும் அதனால் இந்தியா வரச் சொன்னார்கள். அதற்கும் மறுப்பு தெரிவித்தான் வாக்குவாதம் முற்றிய போது அவன் கேட்ட கேள்வியிலும் பேச்சிலும் வாயடைத்து பதில் சொல்ல முடியாமல் திரும்பி சென்றார்கள்.

அதன் பின் ரோஹீத்தின் வாழ்க்கை முறையே மாறியது. பல்வேறு நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தான். ஒரு நாட்டிற்கு சென்றால் அந்த நாட்டில் இருக்கும் முக்கியமான இடங்களைச் சென்றுப் பார்த்துவிடுவான். பின் அங்கு இருக்கும் கிராமங்களுக்கு செல்வான். அந்த நாட்டு மக்களோடு ஒருவனாக அவர்களோடு பழகுவான்.. அவர்களின் பழக்க வழக்கங்கள்.. வாழ்க்கை முறைகளைத் தெரிந்துக் கொள்வான். அவர்களுடன் உற்சாகமாக ஆடுவான் பாடுவான் பழைய நினைவுகள் சுடுகையில் அவனையே மறக்கும் மது போதையில் ஆழ்வான். சில நாட்கள் அங்கு இருப்பான் பின் அடுத்த நாட்டிற்கு பறந்துவிடுவான். அவனது செலவிற்கு இராஜேந்திரர் வேறு வழியில்லாமல் பணத்தை அவன் பெயரில் போட்டுவிடுவார்.

இராஜேந்திரருக்கு உடல்நிலை சீர்கெட்ட போது கூட இந்தியா வர மறுத்துவிட்டான். வேறு வழியில்லாது ரோஹீத்தின் தங்கைக்கு மணம் முடித்து ஆதர்ஷின் கையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது. தங்கையின் திருமணத்திற்கு கூட ரோஹீத் வரவில்லை.

ரோஹீத்தின் தங்கையிடம் இருந்து ஒருநாள் செல்பேசியில் அழைப்பு வரும் வரை அவனது வாழ்க்கை மாறாமல் சென்றுக் கொண்டிருந்தது. ரேஷ்மா கூறியதைக் கேட்ட பிறகு இதற்கு மேலும் அவன் வராமல் இருப்பது சரியில்லை என்று எட்டு வருடங்களுக்கு பின் இந்தியாவிற்கு வந்தான்.

மைசூரில் இருந்த அவர்களது மாளிகைக்கு சொல்லாமல் கொள்ளாமல் வந்தவனைக் கண்டு அனைவரும் வியந்து நின்றனர். யாருடைய வரவேற்பையும் கண்டுக்கொள்ளாது அவனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்துக் கொண்டான். பின் இராஜேந்திரரை பெயருக்கு சென்றுப் பார்த்தவன்.. அவரது நலவிசாரிப்புகளுக்கு பதில் அளிக்காமல் அவனும் அவரைப் பற்றி விசாரிக்காமல் நேரடியாக விசயத்திற்கு வந்தான்.

சமஸ்தானத்தின் அடுத்த பொறுப்பை ஏற்க அவன் தயார் என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சொன்னான். அவன் சொன்னதை அவர்களின் காதுகளாலே நம்பமுடியவில்லை. ஏனெனில் பரம்பரையாக முறையான வாரிசுகளால் நடத்தப்படும் அவர்களது குடும்ப பொறுப்புகளை முறையற்று இருக்கும் ஆதர்ஷிடம் கொடுத்தது எவருக்கும் விருப்பமில்லை. ஆனால் வேறு வழியில்லாமல் இருந்தனர். தற்பொழுது ரோஹீத்தே அடுத்த பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள தயார் என்றுச் சொல்லவும்.. இராஜேந்திரரில் இருந்து இந்த மாளிகையின் அடிநிலை உறுப்பினர் வரை அனைவரும் மகிழ்ந்தனர்.

ரோஹீத் வந்ததைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்க வந்த ஆதர்ஷ் அவனது மகிழ்ச்சியைத் தெரிவித்தான். அங்கு நின்றிருந்த ரேஷ்மா அவனிடம் மெல்ல ரோஹீத் அடுத்த இராஜாவாக பதவியேற்க போவதைச் சொல்லவும் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் கேட்டவன்.. ரோஹீத்திற்கு வாழ்த்துச் சொன்னான். தற்பொழுதே அனைத்து பொறுப்புகளையும் ரோஹீத்திடம் ஒப்படைக்கிறேன் என்றுச் சொன்னான். அதற்கு ரோஹீத் முறுவலித்தவாறு மறுத்துவிட்டான்.

ஜோதிடரை வரவழைத்து நல்ல நாட்கள் பார்க்கப்பட்டன. அடுத்த இராஜாவாக வேண்டுமென்றால் ரோஹீத்திற்கு திருமணம் ஆகிருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். பழைய அச்சத்தில் மெல்ல விசயத்தை ரோஹீத்திடம் சொல்லிய போது வெளிப்புறத்தை வெறித்துப் பார்த்தவன்.. சம்மதமாக தலையசைத்தான். அடுத்த நான்கு மாதத்தில் திருமணம் அதற்கு அடுத்த மாதத்தில் பதவி பிராமணம் என்று முடிவு செய்யப்பட்டது. ரோஹீத்திற்கு மணம் முடிக்க பெண் தேடும் பணியும் வெகு வேகமாக நடந்தது. முடிவில் ஐதராபாத் சமஸ்தானத்தின் பெண் வாரிசான சுஹந்தாவின் ஜாதகத்தோடு ரோஹீத்தின் ஜாதகம் பொருந்தி போனது.

அனைத்திற்கும் ஒத்துக்கொண்டவன்.. பழகுவதில் மட்டும் தனித்தே இருந்தான். இவ்வாறு ரோஹீத் வந்து ஒரு மாதம் இருக்கையில் அவனது அறையின் கதவைத் தட்டிவிட்டு ரேஷ்மா உள்ளே சென்றாள்.

உள்ளே வந்த தங்கையை அவன் வா என்றும் சொல்லவில்லை.. ஏன் வந்தாய் என்றும் கேட்கவில்லை.

மெல்ல ரேஷ்மாவே பேச ஆரம்பித்தாள்.

“நான் சொன்னதும் நீ வரவாய் என்று நான் நிஜமா நினைக்கவில்லை. வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா..! நீ மேரேஜ் செய்ய ஒத்துக்கிட்டது அதைவிட சந்தோஷமா இருக்கு..!” என்று மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தவளின் பேச்சில் குறுக்கிட்டான்.

“எது வேண்டாம் என்று ஓடியவனை வரவழைச்சுட்டே தானே..! இந்த குடும்பம், மானம், பரம்பரை, மரியாதை, வம்சம், கௌவரம் என்ற சிறை.. என்று எதுவும் வேண்டாம் என்றுப் போனவனை அதற்காகவே வரவச்சுட்டே தானே..!” என்று எரிந்து விழுந்தவன்.. கோபத்தை அடக்கும் பொருட்டு சன்னலிடம் சென்று நின்று வெளியே தெரிந்த காட்சிகளை வெறிக்க ஆரம்பித்தான்.

தமையனின் வலி தெரிந்த ரேஷ்மா அமைதியாக அமர்ந்தாள். கண்களில் இருந்து வழிந்த நீரை துடைத்தபடி “ஸாரிண்ணா..! வேற வழியில்லை..! அன்று ஃபோனில் சொன்னதைத் தான் சொல்கிறேன். ஆதர்ஷ் என்னை மேரேஜ் செய்ததிற்கு காரணமே அவங்க இராஜவம்சத்தை நிலைநிறுத்தி விட்டு நம்மளோடதை அழிக்க தான்..! எங்களுக்கு மேரேஜ் ஆகி நாலு வருஷம் ஆச்சு..! ஆனால் இன்னும் குழந்தை இல்லை. அதற்கு காரணம் ஆதர்ஷ் தான்..! ஆனால் அதைக் காட்டி இப்போ அவனுக்கு வேற மேரேஜ் செய்துக்க பிளன் போட்டிருக்கான். அதுவும் அவங்க வம்சத்து ஆளாக தேடுகிறான். நம்ம தொழில்களில் பழைய பார்டனர்ஷிப்பை எல்லாரையும் விலக்கிட்டு அவங்க தொழில் கூட மட்டும் பார்டனர்ஷிப் வைத்திருக்கிறான். மற்றவங்க கூட வைத்திருந்த தொழில் லாஸில் போகுது.. அவன் அப்பா கூட வைத்திருக்கிற தொழில் மட்டும் அமோகமாக போகுது. கூடிய சீக்கிரம் அதை அவங்க கைவசம் கொண்டு வந்திருவான். அப்பறம் என்ன நடக்கும் என்றுத் தெரியும் தானே..! நம்ம வம்சம் இருந்த அடையாளம் கூடத் தெரியாது.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையில் ரோஹீத்தின் ஆவேசமான குரல் இடையிட்டது.

“அழிந்துப் போகட்டும்..! நான் ஏன் இதை நிலை நிறுத்தணும்..! எப்படிப் போன எனக்கு என்ன வந்தது! இந்த வம்சம், கௌவரம் எனக்கு என்ன செய்தது. என் வாழ்க்கையைத் தான் நாசமாக்கியது. எனக்கு பழிக்கு பழி வாங்க சரியான நேரம்..!” என்று மூச்சு வாங்க சொன்னவன்.. அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து முகத்தை மூடிக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

பின் நிமிர்ந்தவனின் முகம் இறுகியிருந்தது.. “என்ன நடப்பதாக இருந்தாலும் என் கையில் தான் நடக்கணும்..! மற்றவங்க கையில் நடக்க விட மாட்டேன்.” என்றவன் தற்பொழுது ரேஷ்மாவிடம் எரிந்து விழுந்தான்.

“அவன் இப்படிப்பட்டவன் என்றுத் தெரிய உனக்கு இத்தனை வருஷம் ஆகிருக்கு..! மேரேஜ் என்ற பெயரில் கமிட்மென்ட் செய்திருக்க..! அதுதான் அவன் இப்படிப்பட்டவன் என்றுத் தெரிஞ்சுருச்சு தானே! போடா என்று பேலஸை விட்டு துரத்தி விட வேண்டியது தானே..” என்றான்.

ஆனால் ரேஷ்மா.. கண்களில் நீர் தளும்ப அவனைப் பார்த்தாள். பின் மெல்லிய குரலில் “லவ்வை பற்றி நான் சொல்லி உனக்கு தெரியாது இல்லை. அவரை நான் ரொம்ப காதலிக்கிறேன். அது தோல்வியில் முடிய விடமாட்டேன். நான் இராஜ வம்சத்தை சேர்ந்தவள்.. எல்லாரும் தலை நிமிர்ந்து பார்க்கிற மாதிரி தான் இருப்பேன். உன்னால் கூட நம்ம வம்சத்திற்கு எதுவும் ஆக விட மாட்டேன்.” என்று தலையை நிமிர்த்தி சொன்னாள்.

தொடர்ந்து “உன்னால் முடியாது என்றால் சொல! நான் உன்னை வற்புறுத்தலை..” என்றவளை முகத்தில் முறுவலுடன் பார்த்தவன் பின் சத்தமாக சிரித்தான்.

பின் தலையைச் சிறிது அசைத்தவாறு “நாடி நரம்பில் பரம்பரை இரத்தம் ஊறிப் போனவள் நீ! அப்படியே அப்பா, தாத்தாவோட மறுபிறப்பு! டையலாக் கூட மாடுலேஷன் மாறாமல் சொல்கிறே..” என்றுச் சிரிக்க முயன்றவனின் முகத்தில் முடிவில் வெறுப்பே மிஞ்சியது.

பின் தொடர்ந்து “இப்பொழுதும் உதாரணத்திற்கு மட்டும் என் காதலை எடுத்துக்கிட்டியே அதுவே பெரிய விசயம்! என் லவ்வர் நம் அந்தஸ்த் இல்லை என்பதால் அந்த காதல் மட்டும் எப்படி மட்டமாச்சு..” என்றுச் சிரித்தவனின் முகத்தில் கோபத்துடன் சொன்னான்.

பின் அழுத்த முகத்தைத் துடைத்தபடி “நான் முழுமனத்துடன் தான் ஓகே சொல்லியிருக்கிறேன். சோ யு டொன்ட் வெர்ரி..!” என்றான்.

ரேஷ்மா “சுஹந்தா விசயத்தில்..” என்று இழுக்கவும்.. ரோஹீத் கசந்த சிரிப்புடன் “உன் ஹஸ்பென்ட் செய்த மிஸ்டேக்கை செய்ய மாட்டேன்.” என்றான்.

ரேஷ்மா பதிலளிக்காமல் சென்றுவிடவும்.. அவள் செல்வதை யோசனையுடன் பார்த்தான்.

ரோஹீத்திற்கு ஆதர்ஷ் விசயத்தில் என்ன செய்ய வேண்டும் என்றுக் கணக்கிட்டு விட்டான். இப்பொழுது கூட அவன் பொறுப்பேற்றதும் அவன் செய்து வைத்திருந்த குளறுபடிகளை ரோஹீத் கண்டுப்பிடித்து விடக் கூடாது என்று சரிச் செய்துக் கொண்டிருப்பான்.. அதற்காக தான் சிறிது காலம் அவனுக்கு கொடுத்தான். குளறுபடிகளைச் சரிச் செய்துவிட்டு அவன் மீண்டும் தொழிலில் கை வைக்கும் பொழுது ரோஹீத் பொறுப்புகளை கையில் எடுத்திருப்பான். ஆதர்ஷ் கொண்டே அவனது குளறுபடிகளைச் சரி செய்ய வைத்திருக்கிறான்.

சுஹந்தா தற்பொழுது விடுமுறையைக் கொண்டாட சிலி சென்றுள்ளாள். அவள் வந்ததும் திருமண நிச்சயத்தார்த்தம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷ்மாவிடம் சொன்னது போல் முழுமனதுடன் தான் திருமணத்திற்கு சம்மதித்தான்.

இவ்வாறு பல யோசனைகளுடன் திரும்பியவன் அங்கு இருந்த முழு உருவத்தைக் காட்டும் கண்ணாடியைப் பார்த்தான். அதில் அவனின் தந்தையும் அவனது தாத்தாவும் அவனைப் பார்த்து வெற்றிப்புன்னகை புரிந்தது போல் இருந்தது.

ஆம் அவர்கள் வெற்றிப் பெற்றுவிட்டார்கள் தான்..! எவ்வாறு அவர்கள் ரோஹீத் இருக்க வேண்டும் என்று விரும்பினார்களோ..! தற்பொழுது அவ்வாறுத்தான் அவன் இருக்கிறான். எதை வெறுத்து அவன் ஓடினானோ..! தற்பொழுது அவனே அதை செய்கிறான். சிகைக்குள் இருகைகளையும் நுழைத்துக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்தவனுக்கு மூச்சடைப்பது போல் இருந்தது.

அடுத்த நாள் காலையிலேயே காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். இலக்கற்று ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு அவர்களது பழைய மாளிகைக்கு போனால் என்ன என்றுத் தோன்றியது. உடனே காரை அந்த வழியாக திருப்பினான்.

அவர்களது மாளிகையை நெருங்கிவிட்டான்.. அந்த வளைவில் திரும்பி விட்டால் அவர்களது மாளிகைக்கு போகும் மலைப்பாதை வந்துவிடும். ஏனோ மனம் படபடவென இருந்தது. மலர்விழியின் நினைவுகள் அவனது மனதை நனைத்தது.

முதல் வளைவில் திரும்பிய பொழுதுதான் அவளைப் பார்த்தான்.

இளம்சிவப்பு மற்றும் ஊதா காகிதப்பூக்கள் மரங்களுக்கு நடுவில் மதிற்சுவர் மேல் தலையைச் சாய்த்துக் கொண்டு இன்னொரு மலர்ந்த மலர் போல் அவன் வரும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5

அவர்கள் முன்பு வாசம் செய்த இடம் தட்டி எழுப்பிய பழைய நினைவுகளும்.. முதலிலேயே அவன் மனம் கொண்ட இறுக்கமுமாக வந்தவனுக்கு.. அந்த காலைப் பொழுதின் இளம் வெயிலில் மலர்களுக்கிடையே தெரிந்த அந்த முகம் அவனது மனதில் நிர்மலமான நிலையை ஏற்படுத்தியது. அந்த முகத்தில் இருந்து அவனால் பார்வையை எடுக்க முடியவில்லை. அந்த பெண்ணும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த பார்வைக்கு கட்டுண்டவனாய் அவளைப் பார்த்தவாறே காரை ஓட்டினான். அவளைத் தாண்டிச் சென்ற பின்பும் அவளது முகமே நினைவில் இருந்தது.

மெல்ல சிரித்துக் கொண்ட ரோஹீத்திற்கு இந்த மனநிலை புதிதல்ல..!

ஆம்! பல்வேறு நாடுகளைச் சுற்றியலைந்த பொழுது மனம் வெம்மை கொண்ட பொழுது ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றைப் பார்த்தாலோ..! துளித்துளியாக பெயும் மழையைப் பார்க்கும் பொழுதோ..! குழந்தைகளின் சிரிப்பைப் பார்க்கும் பொழுதோ..! வெள்ளை மனம் கொண்ட மக்களோடு நடனம் ஆடும் பொழுதோ..! அழகிய இயற்கைக் காட்சிகளைப் பார்த்தாலோ.. ரோஹீத் இதே நிர்மலத்தை உணருவான். அதனால் முகத்தில் சிரிப்புடனே மாளிகையைச் சென்றடைந்தான்.

மாளிகை சென்றடைந்ததும் அது அவனுக்கு பல சிறு வயது நினைவுகளைத் தட்டி எழுப்பியது. அதில் மற்றதெல்லாம் மறந்து போனான். அந்த மாளிகையைப் பராமரிக்கும் மாரிமுத்துவிடம் அவன் வந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டான். சிறிது நேரத்திலேயே கிளம்பிவிட்டான். ஆனால் திரும்பி செல்லும் பொழுது அதே ஆவலுடன் அவள் வந்து பார்ப்பாள் என்று ரோஹீத் நினைக்கவில்லை. இத்தனை நாட்களாக யாரும் வராத மாளிகைக்கு தான் வந்ததைத் தான் அதிசயமாக பார்க்கிறாளோ என்று சிரித்துவிட்டு சென்றவனுக்கு மைசூர் சென்ற பிறகும் ஆவலுடன் அவனைப் பார்த்த அந்த முகத்தை மறக்கவில்லை.

ரோஹீத் ஒன்றை நினைத்துவிட்டால் அதை உடனே செய்துவிடுவான். சஹரா பாலைவனத்தில் ஒட்டகத்தின் மேல் சவாரி செய்துக் கொண்டிருக்கும் பொழுது கங்காரு தன் குட்டிகளுடன் குதித்து செல்வதைப் பார்க்க ஆசைப்பட்டான் என்றால் அடுத்து ஆஸ்திரேலியா சென்றிருப்பான். அதே போல் மைசூர் வந்து நான்கு நாட்கள் சென்ற பிறகும் அந்த முகம் நினைவிருக்கவும்.. காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

அவனை ஏமாற்றாது அதே ஆவலுடன் வந்து பார்த்தாள். ரோஹீத்திற்கே சிரிப்பாக வந்தது. அவளை விட அவன்தான் ஆவலுடன் பார்ப்பது போல் இருந்தது. அவ்வாறு ஒருநாள் வழக்கம் போல் ஹாரன் அடித்துவிட்டு சென்றான். ஆனால் அவள் அவன் வந்ததைக் கவனியாமல் செல்பேசியில் மூழ்கியிருந்தாள். ஏனோ ரோஹீத்திற்கு கோபம் வந்தது. உடனே பலமாக ஹாரனை அடித்தான். அவள் நிமிர்ந்து பார்த்ததும் சிரித்துவிட்டு சென்றான். ஒருமுறை அவள் வெளியே வரவேயில்லை.. எனவே விடாமல் ஹாரன் அடித்து அவளை வெளியே வர வைத்து பார்த்து விட்டே சென்றான். ஏனோ ஒருமுறை விளையாடத் தோன்றியது. ஹாரன் அடிக்காமல் வந்தவன்.. அவளது வீட்டைக் கடந்து சென்று காரை நிறுத்தினான். அவன் எதிர்பார்த்தது போல் அவள் வேகமாக வந்தவள்.. அங்கு அவளது காரை பார்த்து அதிர்ந்தவளாய் நின்றுவிட்டாள். பின்னால் பார்க்கும் கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பத்தை அவனையும் அறியாது வருடியவன்.. புன்னகைத்தவாறு சென்றுவிட்டான். ஆனால் அவள் அங்கேயே நின்றுவிட்டதைப் பார்த்தவாறு சென்றவன்.. எப்படியும் அவள் தன்னைத் தேடி வருவாள் என்று நினைத்தான்.

எனவே அவன் உள்ளே வந்ததும் மூட முயன்ற காவலாளிடம் மூட வேண்டாம் என்று உத்தரவிட்டான். அவன் காரை நிறுத்தியதும் வந்து காரின் கதவைத் திறந்துவிட்ட மாரிமுத்துவிடம்.. தற்பொழுது ஒரு பெண் வந்தால் அவளுக்கு மாளிகையின் கதவைத் திறந்துவிட வேண்டும் என்றும் பின் வெளி கேட்டை சாத்திவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டான். அவனது எதிர்பார்ப்பை பொய்யாக்காது அவள் வந்தாள்..! அவனை எதிர்பார்த்திருக்க மாட்டாள் போல.. அவனைப் பார்த்து அதிர்ந்து விழுந்தவளை சிறு ஏமாற்றத்துடன் பார்த்தான். அதன் பிறகு அவள் அவனது கண்ணில் தட்டுப்படவில்லை. மனதிற்கு பிடித்தது என்றுமே அவனுக்கு நிலையில்லை. இதுவும் அப்படித்தான் என்று சிறு சிரிப்புடன் கடந்துவிட்டான்.

ஆனால் இந்த ஊருக்கு வருவது பிடித்திருந்தது. இத்தனை நாட்கள் பார்க்க கூடாது என்று இழுத்துப் பிடித்து வைத்திருந்த மனதை முடிவில் அடக்க முடியாமல் மலர்விழி இருந்த இடத்திற்கு சென்றான். அங்கு வீடு இருந்த அடையாளமே சிதைந்து இருக்க.. அது அவனுக்கு பல்வேறு நினைவுகளைக் கிளப்பிவிட்டது. மனதில் வலியுடன் நினைத்துக் கொண்டிருக்கையில் யாரோ தன்னைப் பார்ப்பது உணர்ந்து திரும்பியவனுக்கு அவள் மீண்டும் கண்ணில் பட்டாள். அதுவரை எந்த பெண்ணுடனும் அவ்வளவாக நின்றுப் பேசாத ரோஹீத் அவளுடன் பேசினான். கடைசியாக அவன் அவளிடம் சொன்னதை நினைத்து அவனுக்கே சிரிப்பாக இருந்தது.

ஹரான் அடித்தால் வந்து பார்க்க வேண்டுமா..! வீட்டிற்கு வரலாமா! அவன் போக சொன்னால் தான் போக வேண்டுமா..!

இவ்வாறு நினைவுக்கோர்வையில் போக்கில் சென்றவனின் வாய் தானே கடைசியாக முணுமுணுத்தது.

“சுபாஷினி..!”

அங்கு சுபாஷினி நடந்ததை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள். தற்பொழுது அவளிடம் சென்று அவளும் ரோஹீத்தும் என்ன பேசினீர்கள் என்றுக் கேட்டால் பேந்த பேந்த விழிப்பாள். கடைசியாக சொன்னது மட்டும் தான் தெளிவாக நினைவு இருந்தது. மீண்டும் மீண்டும் காதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

‘என் வீட்டிற்கு நீ வரலாம்.. வந்தால் நான் போக சொன்னால் தான் போக வேண்டும்..’

‘இதற்கு என்ன அர்த்தம்..?’ என்று யோசித்தவள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

பின் மெல்ல வாய்விட்டே புலம்பினாள்.

“கடவுளே எனக்கு தப்பு தப்பா.. அர்த்தம் தோன்றுகிறதே..”

அவளுக்கு இந்நேரம் பார்த்து காயத்ரி என்கிறவரின் நினைவு வந்து தொலைத்தது.

காயத்ரி.. அந்த ஊரிலேயே அழகான பெண் என்றே சொல்லலாம்..! அவளுக்கு பெற்றோர்கள் இல்லை. ஒருநாள் காணாமல் போய்விட ஊரே பரபரப்புற்றது. ஆனால் நான்கு நாட்களில் திரும்பி வந்துவிட்டாள். எங்கே போனாய் என்றே கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டாள். ஆனால் அவளது அழுகை நிற்கவில்லை. பின் ஒரு வாரம் கழித்து மறுபடியும் காணாமல் போனாள். இம்முறை ஏதோ சந்தேகம் தோன்றவும்.. ஊரே அவளைத் திட்டி எப்படியோ போகட்டும் என்று ஒதுக்கி வைத்துவிட்டது. பின்பே அவள் இராஜேந்திரரின் கடைசி தம்பி விஜயேந்திரர் அவளைக் கடத்திக் கொண்டு போய்விட்டது தெரிந்தது. ஆனால் யாரும் இதைப் பற்றி பேச பயந்தவர்களாய் அமைதியாகிவிட்டார்கள். அதே போல் திரும்பி வந்தவளை அவளது மாமா வீட்டினர் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. போக்கிடமற்றவள் விஜயேந்திரரின் நிரந்திர ஆசைநாயகி ஆகி போனாள். அவளுக்கு என்று ஒரு வீட்டை ஏற்பாடு செய்யப்பட அங்கே தங்கினாள். விஜயேந்திரர் அழைக்கும் பொழுது சென்றுவிட்டு வருவாள். இது நடந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டது.

இந்த கதை கூட நான்கு வருடங்களுக்கு முன் தான் சுபாஷினிக்கு தெரிய வந்தது. சுபாஷினியின் ஒத்த வயது பெண்கள் கூடியிருந்த சமயம்.. ஒரு பெண்ணின் அன்னை அவள் காயத்ரியிடம் பேசியதைப் பார்த்து இனி அவளுடன் பேசக் கூடாது என்று எச்சரிக்கவே சொல்லியிருக்கிறார். அவள் உடனே வந்து மற்றவர்களிடம் பரப்பிவிட்டாள். இதைக் கேட்ட மற்றவர்களும் காயத்ரியிடம் பேசாது ஒதுங்கிவிட்டனர்.

தற்பொழுது சுபாஷினியிற்கு சம்பந்தமே இல்லாமல் அந்த கதை நினைவு வந்தது. அல்லது சம்பந்தம் உண்டோ.. என்றும் அவளது மனதில் அச்சம் தோன்றியது. முதலிலேயே ரோஹீத் இளைய ராஜா என்ற பயமும், அவன் அவளை மலர்விழியை அழைத்து வரச் சொல்லிய பொழுது செய்ய தவறியதால் தோன்றிய குற்றவுணர்வால் பயமும் கொண்டிருந்தவளுக்கு தற்பொழுது இந்த பயமும் சேர்ந்துக் கொண்டது.

இவ்வாறு அவள் எண்ணிக் கொண்டிருக்கையில் சரியாக ஹாரன் ஒலி கேட்டது. திடுக்கிட்ட சுபாஷினிக்கு அதை அலட்சியம் செய்ய தைரியமில்லை. எனவே மெல்ல எழுந்து வெளியே சென்றாள். இம்முறை காரின் கண்ணாடியை இறக்கி அவளைப் பார்த்துவிட்டு சென்றான்.

முகத்தில் மாறாத புன்னகையுடன் மைசூரில் இருக்கும் அவர்களது மாளிகைக்கு வந்தவனை.. உடனே வந்து பார்க்குமாறு இராஜேந்திரரிடம் இருந்து அழைப்பு வந்தது. வேண்டா வெறுப்புடன் சென்றான்.

அங்கு இராஜேந்திரர்.. அவனது அன்னை சாரதா, ரேஷ்மா.. அவளது கணவன் ஆதர்ஷ் மற்றும் இராஜேந்திரரின் இரு தம்பி குடும்பத்தினர் மட்டுமல்லாது இந்தியாவில் ஆங்காங்கே இருக்கும் அவனது குடும்பத்து உறுப்பினர் அனைவரும் கூடியிருந்தனர்.

ஆண்மையின் கம்பீரமாக வந்து நின்றவனை அனைவரும் ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்றனர். அவர்களின் அமர்க்களமான வரவேற்ப்பை எந்த வித உணர்ச்சியுமின்றி தலையை ஆட்டி ஏற்றுக் கொண்டான். அனைவரும் அவனை நீண்ட வருடங்களுக்கு பின் அவனைப் பார்த்ததில் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இராஜேந்திரர் “ரோஹீத்..! நீ வந்துவிட்டதை ஏன் முன்பே சொல்லலைன்னு எல்லாரும் என்கிட்ட சண்டைப் போட்டாங்க தெரியுமா..! உன்னைப் பார்த்ததில் இவங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் பாரு..! இவங்களுக்கு போய் இப்போ நீ வந்ததைச் சொல்ல வேண்டாம் அடுத்த மாதம் சொல்லலாம் என்றுச் சொல்லிட்டியே..” என்று முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் சொன்னார்.

ரோஹீத் நிதானமாக “பின்னே எப்படி இவங்க இப்பொழுது வந்தாங்க..!” என்றுக் கேட்கவும்.. இராஜேந்திரரின் முகம் சுருங்கி விட்டது.

அவன் அடுத்த மாதம் சொல்லிக் கொள்ளலாம் என்றுச் சொன்னதையும் மீறி தற்பொழுது அவர் சொல்லிவிட்டதை மறைமுகமாக சுட்டிக்காட்டினான். மற்றவர்களின் முகமும் மாறியது. தன்னை சமாளித்து கொண்ட இராஜேந்திரர் நிலைமையைச் சீர் செய்யும் பொருட்டு சற்று குரலை உயர்த்தி “என் மகன் மீண்டும் வந்துவிட்டதைப் பொருட்டு நீங்கெல்லாம் வந்ததிற்கு நாளைக்கு சின்ன பார்ட்டி ஒன்று அரேன்ஜ் செய்திருக்கிறேன்.” என்றார்.

உடனே அனைவரும் “யே..” என்றுக் குரல் எழுப்பி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இராஜேந்திரர் “எல்லாரும் இப்போ தான் வந்திருக்கீங்க.. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..” என்று அனுப்பி வைத்தார்.

அனைவரும் சென்ற பின் செல்ல தொடங்கிய ரோஹீத்திடம் இராஜேந்திரர் “ரோஹீத்..! உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டும்..” என்றார்.

அவர் கூப்பிட்டதும் திமிராய் திரும்பியவனைப் பார்த்த இராஜேந்திரருக்கு திக்கென்று இருந்தது. இந்த ரோஹீத் இருபது வருடங்களுக்கு முன் பார்த்த ரோஹீத் இல்லை என்றுத் தெரிந்தது. எனவே சொல்ல நினைத்ததைச் சொல்ல தயங்கினார்.

ரோஹீத் திருமணத்திற்கும் அடுத்த ராஜாவாக பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றுச் சொல்லியதும் மிகவும் மகிழ்ந்தனர். நாட்கள் குறித்த போது.. தற்பொழுது யாருக்கும் இந்த செய்தியைச் சொல்ல வேண்டாம். அவன் வந்த செய்தி கூடச் சொல்ல வேண்டாம் என்றுக் கண்டிப்புடன் சொல்லியிருந்தான். ரோஹீத் இந்தளவிற்கு இறங்கி வந்ததே மகிழ்ச்சி அளிக்கவும்.. சரி என்று ஒத்துக் கொண்டனர். ஆனால் தற்பொழுது அடிக்கடி அவர்களது பழைய மாளிகை இருந்த ஊருக்கு செல்கிறான் என்றுக் கேள்விப்பட்டு சற்று கலவரமடைந்தார்கள். ஏனெனில் அவனுக்கு அந்த ஊருக்கும் இருந்த தொடர்பு சரியில்லாதது ஆயிற்றே! அவன் அவர்களை வெறுத்து இத்தனை வருடங்கள் இருந்ததிற்கே அங்கு நடந்த சம்பவம் தானே காரணம்..! அவற்றை மறந்து அவர்களது வம்சத்திற்கு அவன் செய்ய வேண்டிய கடமை என்றுத் திருந்தி வந்திருக்கிறான் என்று நினைத்தது பொய்யோ என்றுக் கூடப் பயந்தார்கள். தங்களைப் பழிக்கு பழி வாங்க தான் வந்திருக்கிறானோ என்றும் சந்தேகப்பட்டார்கள்.

ரேஷ்மா தான் ‘அப்படியெல்லாம் இல்லை..! அண்ணா உண்மையாலுமே அவனது உரிமை கடமை தெரிந்து தான் வந்திருக்கிறான்’ என்று அவளது கணவன் செய்த தவறை மறைத்து பெற்றவர்களைச் சமாதானப்படுத்தினாள். இருந்தாலும்.. அவளுக்குமே மனதிற்குள் சிறு உதறல் இருந்தது. ஆனால் ரோஹீத் அவளிடம் சொல்லியதை வைத்து தைரியப்படுத்திக் கொண்டாள். ஆனால் அழிவு என்றால் அது என் கையால் தான் நடக்க வேண்டும் என்றுச் சொல்லியது வேறு இடித்தது.

எனவே தன் பெற்றோரிடமும் கூடிப் பேசி… இந்த விசயத்தில் பட்டும் படாமல் இருப்பவனை நன்றாக உள்ளே இழுத்து விட முயன்றார்கள். அதனால் முதல் வேலையாக உறவினர்களுக்கு விசயத்தைச் சொன்னார்கள். பின் அடுத்து வெளி உலகத்திற்கு சொல்வதற்காக விருந்தும் அறிவித்திருந்தார்கள்.

அந்த விசயத்தையும் மதிப்பூருக்கு இனி செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் சொல்ல அவனை அழைத்தார். ஆனால் ரோஹீத் நின்றுப் பார்த்த விதத்தில் இராஜேந்திரர் சொல்ல தடுமாறினார்.

ரோஹீத் அவர் பேசுவார் என்றுப் பார்த்துவிட்டு பொறுமையற்றவனாய் செல்ல தொடங்கவும்.. மீண்டும் அழைத்தவர் கவனமாக வார்த்தைகளைப் பொறுக்கியெடுத்து பேசினார்.

“ரோஹீத்..! நீ இப்போ சொல்ல வேண்டாம் என்றுச் சொல்லியும் நான் சொன்னதில் உனக்கு கோபமா? என்னப்பா செய்ய..! எனக்கு எல்லார்கிட்டயும் சொல்லி சந்தோஷப்படணும் என்று ஆசையாக இருந்தது. நாங்கெல்லாம் நீ திரும்பி வந்ததில் எவ்வளவு சந்தோஷமா இருக்கோம்..! நீ ஏன்பா டல்லா இருக்கே..! எங்களிடம் திரும்பி வந்ததில் நீ சந்தோஷப்படலையா..!” என்றுக் கேட்டார்.

ரோஹீத் “நான் உங்களைச் சந்தோஷப்படுத்த என்று இங்கே வரவில்லை. ரோஹீத் என்கிற எனக்கு இருக்கிற உரிமையை கடமையை நான் எதற்கு விடணும் என்றுத்தான் வந்தேன். நான் வந்ததிற்கு நீங்க சந்தோஷப்படுவதைப் பார்க்கும் பொழுது என்னால் உங்க சந்தோஷத்துல பங்கு கொள்ள முடியலை. மே பி..! ப்யுச்சரில் தோன்றலாம். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் என் கடமையை தவறாமல் செய்வேன். இந்த உரிமையை ஏற்றுக் கொண்டால் எப்படி இருக்கணுமோ அப்படியிருப்பேன். ஆனால் சில விசயங்களில் என் இஷ்டப்படி இருக்க விடாமல் என்னை நீங்கள் கட்டுப்படுத்தணும் என்று நினைத்தீர்கள் என்றால்.. எல்லாவற்றையும் தூக்கி எறிஞ்சுட்டு போயிட்டே இருப்பேன்.” என்று நறுக்கென்றுப் பதிலளித்தான்.

இந்த சமஸ்தானத்தின் அடுத்து ராஜாவாக பதவியேற்க போகிறவனின் பேச்சுக்கு மறுப்பேச்சு பேச அங்கு எவருக்கும் தைரியமில்லை. அமைதி காத்து தங்களது சம்மதத்தை சொன்னார்கள். அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல தொடங்கியவனை அவசரமாக ரேஷ்மாவின் குரல் தடுத்தது.

“அண்ணா! நாளைக்கு நடக்கிற பார்ட்டி..” என்று இழுத்தாள்.

ரோஹீத் “அதுதான் அனோன்ஸ் செய்தாச்சே! அதன்படியே நடக்கட்டும்.” என்றான்.

ரேஷ்மா “அந்த பார்ட்டியிலேயே ஆஃபிஷால ரிப்போர்ட்டர்ஸை வரவழைத்து எல்லாருக்கும் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்திருக்கோம். உனக்கு மேரேஜ் விசயம் உட்பட..! இதுதான் ரைட்டான டைம் என்று நினைக்கிறோம்..” என்றாள்.

அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால்.. அவனுக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதை அவன் கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். வெளியுலகத்திற்கு அறிவித்துவிட்டால் பின் வாங்கவும் முடியாது. எனவே தான் அவர்கள்.. இத்தனை அவசரப்பட்டார்கள். இவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்திருந்த ரோஹீத்தும் யோசனையில் ஆழ்ந்தான்.

இப்பொழுதோ அடுத்த மாதமோ.. எப்படியும் அவன் எதிர்கொள்ள போவது தான்..! எனவே தனது சம்மதத்தைச் சொல்லிவிட்டு சென்றான். ஆனால் தனது அறைக்குள் சென்றவனுக்கு தலையில் ஆயிரம் டன் பாரத்தை சுமக்க போகிற உணர்வை உணர்ந்தான். இத்தனை நாட்கள் தனிக்காட்டு இராஜாவாக சுற்றியதின் பயன் என்றுத் தன்னையே கேலி செய்துக் கொண்டான்.

அன்றே அவனுக்கு பிரத்தேக்கிய உடை வடிவமைக்கப்பட்டது. மைசூர் அரண்மனையின் ஒரு பகுதி.. விருந்துக்கென்று அலங்காரிக்கப்பட்டு தயாரானது. இந்தியாவின் அனைத்து அரச குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அடுத்த நாள் நடக்க இருக்கும் விருந்திற்காக அந்த அரண்மனையே அமர்க்களப்பட்டு கொண்டிருக்க அதற்கு காரணமானவனோ.. தனக்கு சம்பந்தமேயில்லாதவன் போல்.. மாளிகையில் வளர்க்கப்படும் வெளிநாட்டு நாய்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அடுத்தநாள் மாலையில்.. பழங்கால பிரிட்ஷ் பாணியில் கழுத்தில் ஸ்ப்பிரிள் செய்யப்பட்ட வெள்ளை நிற சட்டையும்.. அதன் மேல் கருப்பு நிற கோர்ட்டும் அணிந்துக் கொண்டு தயாரானான்.

ஏழு மணி என்றிருக்கையில் ஒவ்வொருத்தராக வர ஆரம்பித்தனர். கையில் தாங்கி பிடித்துக் கொள்ள கைத்தடியுடன் நின்றுக்கொண்டு இராஜேந்திரர் வருபவரை வரவேற்றார். நேற்று அழைப்பு விடுத்ததிற்கே இந்தியாவில் இருந்த பெரும்புள்ளிகள் அங்கே குழுமியிருக்கவும்.. முதலிலேயே அழைத்திருக்க வேண்டுமோ… அல்லது இருநாட்கள் தள்ளி விருந்து வைத்திருக்க வேண்டுமோ.. இன்னும் வெளிநாட்டில் இருக்கும் பிரபலங்களும் வந்திருப்பார்களோ என்று தன் மகளிடம் இராஜேந்திரர் வருத்தப்பட்டார். அதற்கு ரேஷ்மா “அதற்குள் அண்ணா மனதை மாத்திட்டா என்ன செய்வீங்க..?” என்றுக் கேட்கவும்.. வாயை அழுத்த மூடிக் கொண்டு நின்றுவிட்டார்.

தனது அறைக்குள் இருந்த ரோஹீத்திற்கு விருந்திற்கு தயாரானதும் சிறு வயது நினைவுகள் வந்து சென்றன. இயந்திரம் போன்று அவன் பேசுவது, நடப்பது, நிற்பது.. ஏன் அசைவதிற்கு கூட பாடம் எடுக்கப்பட்டது நினைவு வந்தது. பெருமூச்சை இழுத்துக் கொண்டவனின் முகத்தில் சிறு கள்ளச்சிரிப்பு குடிக் கொண்டது.

அனைவரும் வந்ததும்.. ரோஹீத் அந்த ஹாலுக்குள் வந்தான்.

ஆறடி உயரத்தில் முப்பத்திரண்டு வயதிற்குரிய வளர்ச்சியும் கம்பீரமுமாக அவன் வந்த பொழுது அந்த ஹாலில் இருந்த அனைவருமே வாயைப் பிளந்துக் கொண்டு நின்றனர்.

அந்த ஹாலில் அவன் வந்ததும்.. அனைவரின் பார்வையும் தன் மீது திரும்பியதைப் பார்த்து.. புன்னகையுடன் தலையை அசைத்து அதை ஏற்றவாறு உள்ளே நுழைந்தான். சிறு மேடை போல் அமைக்கப்பட்டிருப்பதின் மேல் ஏறி நின்றான்.

இராஜேந்திரர் அவசரமாக மேடையை நோக்கி வந்தார். ரோஹீத் உள்ளே நுழைந்ததும் அவர் மேடையேறி பின் அவனை மேடைக்கு அழைத்து.. அனைவருக்கும் அறிமுகப்படுத்தி பேச திட்டமிட்டு இருந்தார். ஆனால் ரோஹீத் நேராக மேடைக்கு செல்வான் என்று அவர் நினைக்கவில்லை. எனவே வேகமாக சென்றார்.

அவர் வரும் முன்பே ரோஹீத் தனது அறிமுகத்தைத் தானே தொடங்கிவிட்டான்.

(ஆங்கிலத்தில்..)

“ஹாய் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்..! முதலில் இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துவிட்டு.. அன்போடு வரவேற்கிறேன். நான் வந்திருக்கிறேன் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து என்பதற்காகவா அல்லது.. உங்களது டைரியில் இன்று எந்த விருந்தும் இல்லை என்பதால் வந்திருக்கிறீர்களா என்றுத் தெரியவில்லை. ஏனென்றால் இதுவரை நான் எங்கே என்று யாரும் என் குடும்பத்தாரிடம் விசாரித்ததில்லை. என்னைப் பற்றித் தெரிந்தவர்கள் நான் எங்கே இருக்கிறேன் என்பதைப் பற்றி விசாரித்து என்ன பயன் என்று நினைச்சுட்டிங்களா.. அல்லது கணாமல் போனது நல்லதாக ஆகிற்று என்று விட்டுவிட்டீர்களா…!” என்று ஆரம்பத்திலேயே அதிரடியாக பேசியவனை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.

இராஜேந்திரரும் அவரின் குடும்பத்தாரும் முகம் வெளுக்க பார்த்தார்கள். ஆதர்ஷின் முகத்தில் வெற்றிச் சிரிப்பு பரவியது. அடுத்த நிமிடமே ரோஹீத் பேசியதைக் கேட்டு அந்த வெற்றி சிரிப்பு மறைந்தது.

அனைவரும் அதிர்ச்சியுடன் பார்ப்பதைப் பார்த்த ரோஹீத்.. “வாட் யா..! எல்லாரும் ஒருமாதிரி பார்க்கறீங்க..! இட்ஸ் எ ப்யுயர்லி ஹை கிளாஸ் ஜோக்..! யாருக்கும் புரியலையா..!” என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு தோளைக் குலுக்கியவாறு அனைவரையும் ஒரு மாதிரியாக பார்த்தான்.

உயர்தரப்பினர் செய்யும் கிண்டல் என்று ரோஹீத் சொல்லியதும்.. அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

“யு நாட்டி..!”

“தட் வாஸ் எ குட் ஒன்..”

“ஸ்டன்ர்டு ஜோக்..!” என்று ஆள் ஆளுக்கு புகழ ஆரம்பித்தார்கள்.

ஆனால் ரோஹீத்தின் கேலி புரிந்த அவனின் குடும்பத்தார் திகைத்து நின்றார்கள். அவன் முதலில் பேசியது.. அவனது மனதில் இருந்த அப்பட்டமான வெறுப்பையும்.. வெறுமையும்.. தான் வெளிப்படுத்தியது. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் அனைவரையும் நன்றாக திட்டியுள்ளான். ஆனால் அதையே உயர்தரப்பு கேலிப் பேச்சு என்று மாற்றி அனைவரையும் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாது அவனைப் புகழவே வைத்துவிட்ட அவனது சாமர்த்தியத்தைப் பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.

கள்ளச்சிரிப்புடன் தன்னைப் பாராட்டியவர்களைப் பார்த்த ரோஹீத் தொடர்ந்து.. “எஸ்.. நான் ஜாலியாக சுத்திட்டு இருந்தேன். எங்க சமஸ்தானத்திற்காக உழைக்க என் தங்கை கணவர் இருக்கிறார் என்ற மதர்ப்பில் இத்தனை நாட்கள் இருந்துவிட்டேன்.. ஆனால் என் தங்கைக்கு வரதட்சனையாக இந்த பொறுப்பைத் தரவில்லை என்றாலும் இதன் பொறுப்பை தரமாக பார்த்துக் கொண்ட ஆதர்ஷிற்கு நன்றி..! நான் என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்திவிட்டார். அதனால் இதோ நானே எங்க வம்ச முறைபடி அடுத்த ராஜாவாக பதவியேற்க வந்துவிட்டேன்.” என்று இராஜேந்திரர் அறிவிக்க நினைத்ததையும் அவனே அறிவித்தான்.

அந்த செய்தி உண்மையிலேயே அனைவரும் ஆனந்த அதிர்ச்சியைத் தரவும்.. அனைவரும் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். தலையை ஆட்டி அனைவரின் கரவோஷத்தை ஏற்றுக் கொண்டான்.

இம்முறை ஆதர்ஷின் முகம் கோபத்தில் சிவந்தது. மறைமுகமாக ஆதர்ஷை திட்டியுள்ளான். ரேஷ்மா கூட சங்கடத்தில் நெளிந்தாள்.

ரோஹீத் தொடர்ந்து “என்ன எப்பொழுது என்ற விபரங்களை..” என்று இராஜேந்திரரை பார்த்தான்.

முக்கியமான செய்தியான ரோஹீத் அடுத்த ராஜாவாக பொறுப்பேற்பதை பெருமையுடன் அவரே அறிவிக்க எண்ணினார். தன் மகன்தான் என்றாலும் தன்னை பணியாளன் போல் அவன் சொன்னதைச் செய்ய வைத்துவிட்டவனை வெளிப்படையாக முறைக்க முடியாமல் வேறு வழியில்லாமல் மேடைக்கு சென்றார்.

குறித்த நாளை சொன்னவர்.. கூடுதல் தகவலாக அவனுக்கு திருமணம் ஆக போகிற செய்தியையும் சொன்னார். ரோஹீத்திற்கு பெண் தரும் ஐதராபாத் சமஸ்தானத்தின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். ரோஹீத்திற்கு திருமணம் முடிக்க போகும் செய்தியைச் சொன்னதும்.. அவர்களும் மேடைக்கு அழைக்கப்பட்டனர். மற்றவர்கள் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஏனோ ரோஹீத்தால் இந்த கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் சுஹந்தாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் இன்முகத்துடன் பேசினான்.

அதன் பின் விருந்து களைக்கட்டியது.

அனைவரும் ரோஹீத்திடம் விருப்பத்துடன் பேசினார்கள். அவர்களுடன் ரோஹீத்தும் மிடுக்கு குறையாமல் பேசினான். ஆனால் ஒரு கட்டத்தில் நிறுத்துங்கள் என்றுக் கத்த வேண்டும் போல் இருந்தது. அதற்கு மேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை. ஒவ்வொருத்தரும் அவர்களது குலப் பெருமையை அவனிடம் பட்டியல் போட்டு சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு விருப்பம் இல்லாத பேச்சில் ரோஹீத்திற்கு தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. ரெஸ்ட் ரூம் செல்வதாக கூறி ஒருவரிடம் இருந்து தப்பி வந்தவன் ரெஸ்ட் ரூமின் தாளிட்டுவிட்டு கதவில் சாய்ந்தபடி நின்றுவிட்டான்.

எதிரே தெரிந்த கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தவன்.. அதன் அருகே சென்று முன்னால் இருந்த சின்கில் இருகைகைளையும் ஊன்றியவாறு தன்னையே உற்றுப் பார்த்தான்.

இந்த ஒரு மணி நேரத்திற்கு தன்னால் பொறுக்க முடியவில்லையே என்று முகத்தைச் சுளித்தான். அவர்களின் பெருமை பேச்சுக்களும்.. வாயில் அவனைப் பற்றிய புகழ்தலும்.. ஏன் திரும்பி வந்தாய் என்ற வெறுப்பும்.. அவனை பிரமிப்பாக பார்க்கும் பார்வைகள் கூட அவனுக்கு பிடிக்கவில்லை. கண்களை இறுக்க மூடித் திறந்தவனுக்கு இன்னும் விருந்து வந்தவர்களின் உடை மற்றும் ஆபரணங்களின் பளபளப்பு கண்களைக் கூச செய்தது. அவனது நாசியில் அவர்கள் போட்டு வந்திருந்த வாசனைத் திரவியம் புகுந்து மூச்சடைக்க செய்வது போலிருந்தது.

இப்பொழுதே சிலர் மேம்போக்கான பேச்சில்.. தொழிலில் சட்டென்று வந்து பொறுப்பேற்பது கடினம் முதலில் தொழிலைப் பழகுங்கள் என்று அறிவுரை சொல்வது போல் மிரட்டல் விடுத்தனர். அவர்களுக்கு சரியான பதிலடி ரோஹீத்தால் கொடுக்க முடியும். ஆனால் செயலில் காட்டுவதே சரியான முறையாக இருக்கும் எனவே அமைதி காத்தான். ஆனால் அவ்வாறு அமைதியாக நிற்பதே அவனுக்கு எரிச்சலைக் கிளப்பியது. போதாக்குறைக்கு ஆதர்ஷின் குடும்பத்தினர் அவனிடம் சிரித்து பேசுவதாக காட்டிவிட்டு முறைத்துக் கொண்டு போனது. ரேஷ்மா வேறு அவன் அனைவரிடமும் சரியாக பேசி பழகுகிறானா என்று ஆங்காங்கு நின்று அவனை உளவு பார்த்தது என்று எல்லாம் சேர்ந்து தலைப் பிடித்துக் கொண்டு கத்த வேண்டும் போலிருந்தது. எப்படியோ போகட்டும் என்று விட்டிருக்க வேண்டுமோ..! இங்கு வந்திருக்கவே கூடாதோ..! தனக்கு நிம்மதி தரும் விசயம் என்று ஒன்றும் இங்கே இல்லையா என்று நினைத்தவன் அந்த கண்ணாடியிலேயே தலையை முட்டிக் கொண்டான். அப்பொழுது அவனது நினைவில் சுபாஷினியின் முகம் வந்து சென்றது.

சட்டென்று சிரித்துவிட்டான்.

சுபாஷினியிடம் நிம்மதியை உணர்வது சரியா..! என்று மனம் கேட்டதிற்கு தவறு என்ற பதில் வரவும்.. கண்களை இறுக்க மூடித் திறந்தவன் பின் முகத்தைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் அவனுக்கு பிடித்தம் இல்லாத சூழலுக்குள் சென்றான்.

விருந்து முடியும் முன்னே வெளியேறியவன் நேராக தனது அறைக்கு சென்று உடையை கூட மாற்றாது கோர்ட்டை மட்டும் கழற்றி வீசி ஏறிந்தவன்.. படுக்கையில் படுத்து மனச்சோர்வில் உறங்கிவிட்டான்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே உறக்கம் கலைந்து எழுந்தவன் குளியலறைக்கு சென்று முகம் கழுவிவிட்டு பால்கனிக்கு செல்ல திரும்பியவன் அங்கிருந்த நாற்காலி காலைத் தட்டிவிட கீழே விழுந்தான். எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் வலது கால் பாதத்தில் சுள்ளென்ற வலி எடுத்தது. தாங்க முடியாத வலியால் நிச்சயம் சிறு எலும்பு முறிவோ அல்லது சுளுக்கோ என்றுக் கணித்தவன் மெல்ல எழுந்து ஒரு காலை மட்டும் ஊன்றியவாறு படுக்கையில் அமர்ந்தவனால் வலியைத் தாங்க முடியவில்லை. நிச்சயம் மருத்துவரை அழைத்தாக வேண்டும் என்று செல்பேசியை எடுத்தவன்.. அசையாது அமர்ந்துவிட்டான்.

மருத்துவரை அழைத்தால் காலில் கட்டு நிச்சயம்.. அதன் பின் எப்படியும் இருபது நாட்களுக்காவது அவன் கால்களை அசைக்காது இங்கேயோ மருத்துவமனையிலோ இருக்க வேண்டும்..!

இங்கேயா..! என்றுச் சுற்றிலும் பார்வையை ஓட்டியவன்.. மறுப்பாக தலையசைத்துவிட்டு செல்பேசியை பாக்கெட்டில் போட்டவன் மெல்ல வலியைப் பொறுத்துக் கொண்டு எழுந்தான். நேற்று வீசி ஏறிந்த கோர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டவன்.. வாலெட்டை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மெல்ல வெளியே வந்தான்.

நேற்றைய விருந்தில் கலந்த களைப்பில் வீட்டினர் யாரும் எழுந்திருக்கவில்லை. வேலையாட்கள் கூட சிலரே எழுந்திருந்தனர். லிப்டின் மூலம் கீழே வந்தவன்.. எதிர்பட்ட வேலையாளிடம் மதுமயக்கம் போல் காட்டி தோளில் கைப் போட்டு அழைத்து செல்ல சொன்னவன்.. அவனது காரை எடுத்து வரச் சொன்னான். பின் காரில் சிரமப்பட்டு ஏறியமர்ந்தவன்.. சுள்ளென்று எடுத்த வலியைப் பற்களைக் கடித்து பொறுத்துக் கொண்டு காரை மெல்ல மதின்பூரை நோக்கி செலுத்தினான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6

அதிகாலை என்பதால் சாலைகள் வெறிச்சோடி தான் இருந்தது. அதனால் ரோஹீத்திற்கு வாகனங்கள் எதிரே வரும் என்றுக் கவனமாக ஓட்ட வேண்டியது இருக்கவில்லை. ஆனால் காலைத் தொங்க போட்டுக் கொண்டே ஓட்டியதால் சிறிது நேரத்திலேயே மேலும் வலியெடுக்கவும்.. மெல்ல காலை சற்று மேலே வைக்க முயன்றான். இவ்வாறு ஒன்றரை மணி நேரம் பயணித்தவன்.. இதோ நெருங்கிவிட்டான்.

அடுத்த திருப்பத்தில் திரும்பினால் அவர்களது மாளிகைக்கு போகும் சாலை வந்துவிடும். ஆனால் இத்தனை நேரம் வலியுடன் காரை ஓட்டிக் கொண்டு வந்ததில் அதிக வலியின் காரணமாக தெப்பலாக வியர்வையில் நனைத்திருந்தான். கண்களும் சொருகி பாதை தெளிவற்று தெரிந்தது. “ரோஹீத் கமான் வேக் அப்..” என்று அவனுக்கே சொல்லியவாறு பற்களைக் கடித்தபடி அப்போதைக்கு இருக்கும் தன் பலத்தை முழுவதையும் பயன்படுத்தி முயன்று ஹாரன் அடித்தவாறு திருப்பத்தில் திரும்பியவன் அதற்கு மேல் தன்னைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதவனாய் சுயநிலை இழந்தான். அவன் சுயநிலை இழந்ததும் கார் அவனது கட்டுப்பாட்டில் இருந்து தவறி.. தாறுமாறாக ஓடி.. சுவரில் இடித்துக் கொண்டு நின்றது.

சுசீலா மற்றும் கதிரேஷன் வழக்கம் போல் காலையில் சென்றதும்.. அமர்ந்திருந்த சுபாஷினி நேற்றிரவு தன் பெற்றோரிடம் பேசியதை நினைத்துப் பார்த்தாள்.

அவள் விசயத்தைச் சொன்னதும் இருவரும் சற்று திகைப்புடன் பார்த்தார்கள்.

சுபாஷினியே “ஏன்பா..! ஒன்றுமே சொல்ல மாட்டேன்கிறீங்க..! நான் சொன்னது தப்பா..!” என்றுக் கேட்டாள்.

கதிரேஷன் “இல்லைமா..! ஆனால் ஏன் திடீர்ன்னு இப்படிச் சொல்கிறே..? இதற்கும் முதலில் அவங்க கூப்பிட்ட போதெல்லாம் போகலைன்னு சொல்லிட்டு இப்போ உங்க பெரியம்மா வீட்டில் கொஞ்ச நாட்கள் இருந்துட்டு வரேன்னு சொல்கிறே..” என்று அப்பொழுதும் தயக்கத்துடன் கேட்டார்.

ஏனெனில் அவர்களின் இரண்டாவது மகள் சுபாஷினியை விட இரு வயது பெரியவள்.. ஆனால் இன்னும் சரியான வரன் அமையவில்லை. அதனால் சுபாஷினிக்கு சீக்கிரமே அமைந்துவிட்டதில் சிறு மனச்சங்கடம் இருந்தது. அவரது மகளின் ஜாதகமும் சுசீலாவிடமும் இருந்தது. எனவே நல்ல ஜாதகம் வந்த பொழுது அவளது மகளுக்கு பார்ப்பதை விட்டு சுயநலமாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தினர். அதனாலேயே இருவருக்கும் சற்று மனவேறுபாடும் வந்தது. அன்று சுசீலாவிற்கு அதனால் தான் காய்ச்சல் வந்தது என்று கதிரேஷன் கேலி பேசினார். முழு விபரத்தையும் அவளிடம் இருந்து மறைத்துவிட்டார். இன்று சுபாஷினியே அங்கு செல்ல விரும்புவதாக சொல்லவும் உண்மையைச் சொல்ல முடியாமல் திணறினார்கள். மேலும் மகளை பிரியவும் தயங்கினார்கள்.

பெற்றவர்கள் அமைதியாக இருக்கவும்.. மீண்டும் சலுகையுடன் கேட்டாள்.

“வேலைக்கு போவதில்லையா..! இங்கே கொஞ்சம் போரடிக்குதுபா..! படிக்கவும் முடிய மாட்டேன்கிறது” என்றாள்.

கதிரேஷன் யோசனையுடன் “நாளைக்கு பதில் சொல்கிறேன்மா..” என்றார்.

சுபாஷினிக்கு இதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்றுத் தெரியவில்லை. ஆனால் நாளை பதில் சொல்கிறேன் என்றுச் சொன்னதே போதுமானதாக இருக்கவும்.. சரி என்றுத் தலையை ஆட்டினாள்.

தற்பொழுது அதை நினைத்துப் பார்த்தவளுக்கு அவளது பெற்றவர்கள் ஏன் தயங்கினார்கள் என்று அவளால் கணிக்க முடிந்தது. அவளை பிரிய மனமில்லாமல் தயங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்காக பார்த்தால் இங்கே இருக்க முடியாதே..! ரோஹீத்தின் பேச்சுக்கள் அவளை பயமுறுத்தியது. மேலும் அதன் தொடர்பாக அவளது எண்ணங்கள் சென்றது அவளுக்கு மேலும் பயத்தைக் கிளப்பியிருந்தது.

இவ்வாறு அவளுக்குள் உழன்றுக் கொண்டிருக்கையில் அவனது நினைவுகளின் நாயகன் வருவதை அறிவுறுத்த முரசு கொட்டுவது போல்.. ஜாக்குவார் காரின் ஹாரன் உறுமலாய் கேட்டது. ஆனால் அடுத்து காரின் கீறிச்சுடும் சத்தமும் தொடர்ந்து அது பலமாக எதன் மீதோ மோதும் சத்தமும் கேட்டது. திடுக்கிட்ட சுபாஷினி உடனே வெளியே ஓடி வந்துப் பார்த்தாள்.

வெளியே பார்த்த காட்சியை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. கருப்பு நிற ஜாக்குவார் கார் அவர்களது மதிற்சுவரின் மேல் முட்டிக் கொண்டு நின்றிருந்தது. ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றவள்.. உடனே அந்த காரை நோக்கி ஓடி சென்றாள்.

வேகமாக காரிடம் வந்தவள்.. காரின் கதவைத் திறக்க முயன்றாள். குளிர்சாதனம் கொண்ட அந்த காரின் கதவை அவளால் திறக்க முடியவில்லை. பின் உதவிக்கு யாராவது வருகிறார்களா என்றுச் சுற்றிலும் ஓடிச் சென்றுப் பார்த்தாள். அவளுக்கு காரை தனியாக விட்டுச் சென்று உதவிக்கு மற்றவர்களை அழைத்து வரவும் பயமாக இருந்தது. முதலில் காரிற்குள் இருக்கும் ரோஹீத்தின் நிலைமை எவ்வாறு உள்ளது என்றுத் தெரிந்துக் கொள்வது தான் அவளுக்கு முக்கியமாகப்பட்டது. சுற்றிலும் பார்த்தவள் இரு கைளாலும் அடங்க கூடிய அளவிற்கு பாறாங்கல் இருப்பதைப் பார்த்தாள். உடனே அதை எடுத்து வந்தாள். கவனமாக முன் சீட்டில் டிரைவர் இருக்கைக்கு அந்த பக்கம் கண்ணாடியின் புறம் சென்றவள், ஓங்கி அடித்தாள். அவளே பயத்தில் இருந்ததால் அவளால் பலமாக அடிக்க முடியவில்லை. பின் தன் முழுபலத்தையும் திரட்டி.. ஓங்கி அடித்தாள். சிறு விரிசல் விழுந்தது. அந்த விரிசலிலேயே மீண்டும் ஓங்கி அடித்தாள். இம்முறை கண்ணாடியின் சிறுப்பகுதி உடைந்து விழுந்தது. அதில் மீண்டும் அடித்து முழுவதையும் உடைத்து உள்ளே பார்த்தவளுக்கு திக்கென்று இருந்தது. ரோஹீத் ஸ்ட்டெரிங்கின் மேல் தலையைக் கவிழ்த்தவாறு இருந்தான். கையை உள்ளே விட்டு கதவைத் திறக்க முயன்றவள் முடியாமல் போகவும்.. “இளைய ராஜா..! இளைய ராஜா..” என்று அழைத்துப் பார்த்தாள். அவனிடம் அசைவில்லாது போகவும்.. பயந்தாலும்.. செவிலியராக பணி புரிந்திருந்த மனம் உந்த மெல்ல தன் கையை நீட்டி.. அவனது கழுத்தில் வைத்து நாடியை ஆராய்ந்தாள். அவனது நாடித்துடிப்பு திருப்தியை அளிக்கவும்.. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்றுப் பார்த்தவளுக்கு யாரும் கண்ணில் தட்டுப்படவில்லை. மேலே மாளிகையைப் பார்த்தவளுக்கு எப்படியும் மாரிமுத்து இருப்பான் என்று மலைப்பாதையில் ஓடினாள்.

அங்கு சாத்தியிருந்த கேட்டின் கதவைப் பிடித்துக் கத்தவும்.. மாரிமுத்து என்னவோ ஏதோ என்று ஓடி வந்தான். அவனிடம் விசயத்தைச் சொல்லவும்.. அவனும் அவளும் வேகமாக காரை நோக்கி ஓடினார்கள்.

வெளிக்காற்று பட்டதாலோ என்னவோ.. ரோஹீத் மெல்ல சுயவுணர்வு பெற்றான். மெல்ல தலையை உயர்த்தி இருக்கையில் சாய்ந்தவன் வலியினால் முகத்தைச் சுளித்தான். ஆனால் அவனால் இமையைக் கூடத் திறக்க முடியவில்லை. அதற்குள் மாரிமுத்துவும் சுபாஷினியும் வந்துவிடவும்.. கார் ஓட்டத் தெரிந்திருந்த மாரிமுத்து ரோஹீத் அமர்ந்திருந்த பக்க கதவைத் திறந்திருந்தான். சுபாஷினி மாரிமுத்துவிடம்.. “ப்ளீஸ் இவரை அப்படியே பக்கத்தில் இருக்கிற ஹாஸ்பெட்டலுக்கு கூட்டிட்டு போங்க..” என்றாள்.

அதுவும் சரிதான் என்று மாரிமுத்து ரோஹீத்தை மெல்ல நகர்த்திவிட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தான். அப்பொழுது ரோஹீத் கண்களைக் கூடத் திறக்காது.. மெல்ல உதடுகளைப் பிரித்து.. “காரை மேலே பேலஸிற்கு விடு..” என்றான்.

கையைப் பிசைத்தபடி நின்றிருந்த சுபாஷினி ரோஹீத் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள்.

மாரிமுத்து தயங்கியவனாய்.. “இளைய ராஜா..!” என்கவும்.. “டூ வாட் ஐ சே..! ஐயம் ஓகே..!” என்று அவனது உதடு முணுமுணுத்தது. அதை மீற இயலாதவனாய் காரை மாளிகையை நோக்கி திருப்பினான்.

உடனே சுபாஷினி “நோ! நோ! அவருக்கு மயக்கம் வந்திருக்கு..! அவரது தலையை நீங்க நகர்த்திய போது வலியில் முகத்தைச் சுளித்தார். உடம்பில் எங்கே அடிப்பட்டிருக்கும் என்றுத் தெரியாது. அதனால் கண்டிப்பாக டாக்டர் கிட்ட போய் புல் செக்கப் செய்ய வேண்டும். ரொம்பவும் டையர்டாக தெரிகிறார். ரொம்பவும் வியர்த்திருக்கு..! பாலுன் காப்பாற்றி இருந்தாலும் விலாவில் அடிப்பட்டிருக்கலாம். ப்ளீஸ்! டாக்டர் கிட்ட இம்மிடியட்டா கூட்டிட்டு போங்க..!” என்று அழுதுவிடுபவள் சொன்னாள்.

ரோஹீத் மெல்ல இமையைத் திறந்து சுபாஷினியை பார்த்தான். பின் மாரிமுத்துவிடம் “இன்னும் நீ காரை மாளிகைக்கு திருப்பலையா..” என்கவும்.. அவனை அப்படியே அனுப்ப மனமில்லாமல் அவளது தொழில் புத்தி உந்த.. சுபாஷினியும் காரின் பின்கதவை திறக்க சொல்லி ஏறிக் கொண்டாள். கார் மாளிகையை நோக்கி சென்றது.

கேட் காவலாளியின் உதவியுடன் மாரிமுத்து இறக்க முயலும் போது தடுத்த சுபாஷினி.. “அவருக்கு உடம்பில் எங்காவது பலமா அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம். அதனால் கவனமாக இறக்க வேண்டும்.” என்று அவனது இருக்கைகளையும் பிடித்து மார்பில் வைக்கவும்.. அவளது பிடியில் இருந்து கையை விடுவித்து கொண்டவன்.. “நீ டாக்டரா..?” என்றுக் கேட்டான்.

சுபாஷினி “நான் நர்ஸா வோர்க் செய்திருக்கிறேன். அதனால் எனக்கு உங்க கண்டிஷனோட ஆபத்து புரிகிறது. ப்ளீஸ் ஹாஸ்பெட்டல் போங்க..” என்றாள்.

ரோஹீத் “ஐயம் ஆல்ரைட்..!” என்று இறக்க முற்பட்டான். ஆனால் வலியில் முகத்தைச் சுருக்கவும்.. கேட் காவலாளியும் மாரிமுத்துவும் ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு மெல்ல மாளிகையினுள் அழைத்துச் சென்றனர்.

முன்னே இருந்த ஹாலை கடந்து இடதுபக்கமாக இருந்த பகுதிக்கு அழைத்துச் செல்ல சொன்னான். அங்கிருந்த ஷோபாவில் படுக்க வைத்ததும்.. பின்னேயே வந்த சுபாஷினி தயங்கி நின்றாள்.

அவளைப் பார்த்த ரோஹீத் “நீ நர்ஸ் தானே சும்மா நின்றுட்டு இருக்க.. என் ரைட் ஃபுட் என்னாச்சு என்றுப் பாரு..” என்றான்.

ரோஹீத் அனுமதி கொடுத்ததும் வேகமாக அருகில் வந்தாள். மாரிமுத்துவிடம் ரோஹீத்தின் சட்டைப் பட்டன்களைக் கழற்றி விடச் சொல்லிவிட்டு.. அவன் வலியெடுத்த இடத்தைச் சொல்லவும் மண்டியிட்டு அமர்ந்து அவன் கட்டியிருந்த ஷூவை கழற்ற முயன்றாள்.

ஆனால் அவள் ஷூவை தொட்டதுமே வலியில் முகத்தைச் சுளித்தவன்.. பற்களைக் கடித்துக் கொண்டு படுத்திருப்பதைப் பார்த்தாள். இவளுக்கும் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. மெல்ல ஷூவின் லேஸை கழற்றிவிட்டு ஷூவை கழற்றியதுமே.. அவளுக்கு அவனது கால் வீங்கியிருப்பது தெரிந்தது. எனவே மாரிமுத்துவிடம் கத்திரிகோல் கொண்டு வரச் சொல்லி சாக்ஸை வெட்டினாள். அவள் எதிர்பார்த்தது போல்.. பாதமூட்டு இரத்தக்கட்டால் வீங்கியிருந்தது.

சுபாஷினி பதட்டத்துடன் நிமிர்ந்து “மூட்டு விலகியிருக்கும் அல்லது எலும்பு முறிவாக இருக்கலாம். நான் வெறும் நர்ஸ் அதனால் இதற்கு சரியான ட்ரீட்மென்ட் எடுத்துக்க.. தகுந்த டாக்டரை தான் பார்க்கணும்… இல்லை என்றால் ஆபத்தில் முடியும் ஸார்..! ப்ளீஸ் ஹாஸ்பெட்டலுக்கு கூட்டிட்டு போங்க..” என்றாள்.

ஆனால் ரோஹீத் மாரிமுத்துவிடம் “நான்தான் ஹாஸ்பெட்டலுக்கு போக வேண்டுமா..! டாக்டர் என்னைப் பார்க்க வர மாட்டாங்களா..” என்றுக் கேட்டான்.

மாரிமுத்து “இதோ பக்கத்து ஹாஸ்பெட்டலுக்கு ஃபோன் போட்டு எலும்பு டாக்டரையே வரச் சொல்கிறேன்ங்க..!” என்றுவிட்டு செல்பேசியை எடுத்து அழைப்பு விடுத்தான்.

அதைப் பார்த்த சுபாஷினிக்கு தன் தலையில் பலமாக கொட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவள் எதோ சாதாரண ஆளுக்கு அடிப்பட்டு விட்டது போல் செய்ய வேண்டியதைச் சொல்லிக் கொண்டு இருக்கிறாள். அவர்கள் நினைத்தால் மருத்துவமனையே இங்கே வருமே..! மெல்ல எழுந்தவள்.. அப்பொழுது தான் அவள் எங்கே இருக்கிறாள் என்று நன்றாக பார்த்தாள்.

வட்டமாக அமைத்த கண்ணாடி அறை அது..! வடநாட்டு பாணியில் வேலைப்பாடுகள் கொண்ட கலர் கண்ணாடிகள் சுவர் மற்றும் கூரை முழுவதும் பொருத்தப்பட்டிருந்தது. சரியாக பராமரிக்காததால் நிறம் மங்கி காணப்பட்டது. சரியாக பராமாரிக்கப்பட்டிருந்தால் சூரிய ஒளிப்பட்டு நிச்சயம் கண்கவர் காட்சியை அளித்திருக்கும்.. வெளியே இருந்த தோட்டமும் நன்றாக இருந்திருந்தால் இங்கிருந்து காண கண்கள் கோடி வேண்டும்.. என்று நினைத்தாள்.

தலையை நிமிர்த்தி மேற்கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தவள்.. எதோ தோன்ற திரும்பிப் பார்த்தாள். பார்த்தவளுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது. ரோஹீத் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வையைத் தாக்குப் பிடிக்க முடியாதவளாய் இமைகளைத் தாழ்த்திக் கொண்டாள். ஏனோ அவனது பார்வை சில்லிட்டது போன்று இருந்தது. அவளுக்கு காயத்திரியின் நினைவு வந்தது. அப்பொழுது வலியில் ரோஹீத் முணுமுணுக்கவும்.. மற்றது எல்லாம் மறக்க.. குனிந்து காலை மீண்டும் ஆராய்ந்தவள்.. கண்டுப்பிடித்த விசயத்தில் சிறு திகைப்புடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

பின் மெல்ல தயக்கத்துடன் “வீக்கத்தைப் பார்த்தால்.. இப்போ ஆக்ஸிடென்ட்டால் ஆனது மாதிரி தெரியவில்லை.” என்றாள்.

ரோஹீத் “நாட் பேட்! யுவர் எ குட் நர்ஸ்..” என்றுச் சிரித்தவன்.. தொடர்ந்து “அங்கே என்னால் ஒரு ரூமில் அடைந்து உட்கார முடியாது.” என்றான்.

அதுவரை.. கார் விபத்து ஏற்பட்டதில் காலில் எழும்பு முறிவோ.. மூட்டு விலகலோ ஏற்பட்டிருக்கும் என்று நினைத்திருந்தாள். ஆனால் தற்பொழுது அவன் சொல்லியதைக் கேட்டு திகைத்தாள். காலில் பெரிய அடி என்றுத் தெரிந்தும்.. அங்கு இருக்க பிடிக்காமல்.. அத்தனை வலியையும் பொறுத்துக் கொண்டு இதுவரை காரை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறான்.

சுபாஷினி இன்னும் திகைப்புடன் பார்க்கவும்.. ரோஹீத் அவளைப் பார்த்து லேசாக கண்ணடித்தான்.

அதற்குள் மாரிமுத்து பேசி முடித்திருப்பான் போல.. நம்ப முடியாத அதிசயத்துடனும்.. முகம் கொள்ளா மகிழ்ச்சியுடனும் “இளைய ராஜா..” என்றவாறு வந்தான்.

ரோஹீத் “டொன்ட் கால் மீ லைக் தட்..!” என்று அந்த நிலையிலும் கடிந்தான்.

ஆனால் மாரிமுத்துவினால் அவனது மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.

“மனசு கேட்காமல் மைசூருக்கும் ஃபோன் போட்டு உங்களுக்கு அடிப்பட்ட விசயத்தைச் சொன்னேங்க..! நீங்க திரும்பி வந்ததே எங்களுக்கு அவ்வளவு சந்தோஷம்..! இப்போ மேனேஜர் சொன்ன செய்தி கேட்டு அதைவிட சந்தோஷமாக இருக்கேன். எங்களுக்கு அடுத்த ராஜாவாக வரப் போறீங்களா..! உங்களுக்கு கூடிய சீக்கிரமே கல்யாணம் ஆகப் போகுதுங்களாம்..! நேத்து தான் அறிவிச்சாங்களாம்..! ரொம்ப சந்தோஷம்ங்க..! அடுத்த நாளே இப்படியாகிருக்கு என்றால் திருஷ்டி பட்டுருங்குங்க..! இப்பவே திருஷ்டி கழிக்க தேவையானதை எடுத்துட்டு வரச் சொல்றேன்ங்க..” என்று அங்கிருந்து அகன்றான்.

மாரிமுத்து ரோஹீத்திடம் பேசிக் கொண்டிருக்க.. அவனது பார்வையோ சுபாஷினியின் மேல் இருந்தது. மாரிமுத்து பேச ஆரம்பித்ததும் அவளது முகத்தில் தோன்றிய பாவனைகளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

முதலில் அதிர்ச்சியும், பின் சிறு ஏமாற்றமும்.. பின் வெறுமையும் மாறி மாறி வந்துச் சென்றது. அதைப் புரியாத உணர்வுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7

வலியால் அயர்வுடன் சாய்ந்தவனுக்கு மற்றொரு காலில் இருந்த ஷு உறுத்துவது போலிருக்கவும், எட்டி கழற்ற முயன்றான். அதுவரை குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்த சுபாஷினி அவனது சிரமத்தைக் கண்டு அவனது காலுக்கருகே மண்டியிட்டு அமர்ந்து.. குனிந்த தலை நிமிராமல் “நான் கழற்றுட்டுமா இளைய ராஜா..!” என்று அனுமதி கேட்டாள்.

அதற்கு ரோஹீத் “அப்படிக் கூப்பிடாதே என்றுச் சொன்னேன் தானே..!” என்றுவிட்டு “ம்ம் கழற்றி விடு..” என்றான்.

கவனமாக அவனது ஷுவை கழற்றிக் கொண்டிருந்தவளின் குனிந்த தலையைப் பார்த்தவன், மெல்ல சரிந்து அவளது வதனத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தினான். அவன் நிமிர்த்தவதற்கும்.. சுபாஷினியின் விழியில் இருந்து விழிநீர் கன்னத்தில் உருண்டோடி வந்து அவனது கையில் விழுவதற்கும் சரியாக இருந்தது.

அச்சிறுத்துளி அவனது மனதைக் கலைத்துவிட்டது போல் இருந்தது.

ரோஹீத் “ஏன் அழுகிறாய்..?” என்றுக் கேட்டான்.

சுபாஷினி “தெரியலை..” என்றாள்.

“மாரிமுத்து சொல்லியதைக் கேட்டு ஏன் அழுகிறாயா..?” என்றுக் கேட்டான்.

அதற்கு பதில் தெரியாமல் விழித்த சுபாஷினி திருதிருவென விழித்தாள். பின் “நான் ஏன் அழ வேண்டும்! நான் அழலை இளைய ராஜா..” என்று கண்களை அழுத்த துடைத்தாள். பின் “நான் அழ மாட்டேன். இது தப்பு..” என்று வறண்ட விழியை மீண்டும் துடைத்துவிட்டு தனது வேலையில் கவனத்தைச் செலுத்தினாள்.

ரோஹீத் அவளைப் பார்த்தவாறே சாய்ந்தமர்ந்தான்.

பின் “அந்த காரில் இருப்பது யாரோ என்று நினைச்சியா!” என்றுக் கேட்டான்.

அதற்கு சுபாஷினி ஆம் என்று தலையை ஆட்டினாள்.

ரோஹீத் தொடர்ந்து “நான் என்றுத் தெரிந்திருந்தால்.. அந்த கார் ஹாரனுக்கு ரெஸ்பான்ஸ் செய்திருக்க மாட்டியா..” என்றுக் கேட்டான்.

அதற்கும் சுபாஷினி ஆம் என்று தலையசைத்தாள்.

ரோஹீத் மெல்லிய புன்னகையுடன் “அந்த கார்காரனை ரொம்ப லவ் செய்திட்டியோ!” என்றுக் கேட்டான்.

அதைக் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்த்தவளுக்கு.. கைகள் நடுங்கியது.

ரோஹீத் மாறாத புன்னகையுடன் “யாரோ என்னவோ என்று ஆசையா ஓடி வந்தியா! நான் என்றதும்.. ரொம்ப டிஸ்அப்பாயின்ட் ஆகிட்டியா…” என்றுத் தலையை பின்னால் சாய்த்து சிரித்தான்.

உடனே சுபாஷினி “அப்படியெல்லாம் இல்லைங்க இளைய ராஜா! என்னை யாரோ டீஸ் செய்யறாங்க! அவங்க யாருன்னு பார்த்து திட்..” என்றுக் கூறப் போனவள், அந்த வார்த்தையை முழுங்கி விட்டு “யார் என்றுப் பார்க்க வந்தேன். உங்களைப் பார்த்ததும்.. மரியாதை கலந்த பயம் வந்துருச்சுங்க! உங்க கார் பின்னாடி ஓடி வந்ததிற்கு திட்டுவீங்கனு பயந்தேன்ங்க! அவ்வளவுத்தான்ங்க..” என்றாள்.

ஆனால் ரோஹீத் விடாது அவள் புறம் குனிந்து “உன்னை டீஸ் செய்தவனைத் திட்ட வந்த மாதிரி தெரியலையே! கடைசியா நான் ஹாரன் அடிக்காம போனதும்.. ஏமாற்றத்துடன் வந்து நின்றது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..” என்றுச் சிரித்தான்.

உடனே சுபாஷினி பதட்டத்துடன் “அப்படியெல்லாம் இல்லைங்க இளைய ராஜா! ஏன்னா எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருச்சு..” என்று குனிந்த தலை நிமிராது பதிலளித்தாள்.

அதைக் கேட்ட ரோஹீத் ஷோபாவில் நன்றாக சாய்ந்துக் கொண்டு “ஓ கங்கிராஜ்லேஷன்ஸ்..” என்றான்.

சுபாஷினி “நன்றிங்க..” என்றாள். ஆனால் அவளது முகம் ஏனோ சிறுத்து போயிற்று.

அவளது முகத்தைப் பார்த்த ரோஹீத் “சுபா..” என்று அழைத்து “உன்னோட ஒவ்வொரு பிஹெவ்வும் சம்திங் ஸ்ட்ரேன்ஜ்ஜா இருக்கு! ஏன்?” என்றுக் கேட்டான்.

அதற்கு அவள் "அப்படியெல்லாம் இல்லைங்க.." என்று பதிலளித்தாள்.

ரோஹீத் “இல்லை. சம்திங் இருக்கு.. ஆக்சுவலா நீ என் கார் வருவதைப் பார்த்து ஆர்வமா வந்து பின் ஒளிந்து விளையாடி.. பின் ஏன் கண்டுக்காம போனேன்னு கோபம் பட்டு.. இந்த கருப்பு ஜாக்குவார் காரை ஓட்டியவன் கூட.. தனி காதல் கதையையே ஓட்டிய மாதிரி இருந்தது." என்று தலையைப் பின் சாய்த்து சிரித்தான்.

அவளுக்கே தெரியாததை.. அவன் கூறவும் அதிர்ந்த சுபாஷினி.. அவனது ஷுவையும் ஷாக்ஸையும் கழற்றிவிட்டு எழுந்து அகல முயலவும்.. சட்டென்று கையை நீட்டி அவளது கரத்தைப் பற்றினான்.

சுபாஷினி அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கவும்.. ரோஹீத் "எனக்கு அந்த விளையாட்டு இன்டர்ஸ்டிங்கா இருந்துச்சு. அதனால நானும் விளையாடினேன்." என்று பற்றிய அவளது கரத்தை விடாது கூறினான்.

ஆனால் “இளைய ராஜா..!” என்றுத் திடுக்கிட்டவளின் உள்ளத்து பயம் தானே வெளி வந்தது.

“இளைய ராஜா! என்னை விட்டு விடுங்க..! எனக்கு மேரேஜ் ஆகப் போகுது.” என்றுப் பதறினாள்.

ரோஹீத்தின் விழிகள் கூர்ப்பெற்றது.

“இதை ஏன் இப்போ சொல்கிறே?” என்றுக் கேட்டான்.

சுபாஷினி.. அவனது கரத்தில் சிக்குண்ட தனது கரத்தைப் பார்த்தவாறு.. “எனக்கு பயமாக இருக்கு..” என்றாள்.

“என்ன பயம்?”

“நானும் அவங்களை மாதிரி ஆகி விடுவேனோ என்று..” என்றாள்.

“யாரை மாதிரி..?” என்றுக் கேட்டவன், தொடர்ந்து “மலர் மாதிரியா..!” என்றுக் கேட்டதில் இருந்த அர்த்தத்தில் திகைப்புடன் நிமிர்ந்துப் பார்த்தாள். ஆனால் அவனோ அவளது பதிலுக்காக காத்திருந்தான். அதிலேயே அவன் கேட்டதின் அர்த்தம் புரியாது கேட்டுருக்கிறான் என்று சுபாவிற்கு தெரிந்தது. ஆனாலும் அவளையும் அறியாது மனதில் சில்லிடும் உணர்வை அவளால் தடுக்க முடியவில்லை.

அப்பொழுது மாரிமுத்து தன் மனைவியுடன் ரோஹீத்திற்கு திருஷ்டி சுற்ற வந்தான். ரோஹீத் சுபாவின் கரத்தைப் பிடித்தவாறு இருப்பதைப் பார்த்து அதிர்ந்து நின்றான். அவர்களைப் பார்த்த சுபா பயத்துடன் தனது கரத்தை விடுவித்து கொள்ள நினைத்தாள். ஆனால் அவனது இறுகிய பிடி அவளது முயற்சியைத் தடுத்தது. மாரிமுத்து மற்றும் அவனது மனைவி தங்கத்தின் பார்வை அவளைப் பிடித்திருந்த அவனது கரத்தில் இருப்பதைக் கண்டு மெல்ல விடுவித்தான்.

ரோஹீத் “வா மாரிமுத்து! திருஷ்டி சுத்திப் போடு!” என்றான்.

தங்கம் இடது கையில் வரமிளகாய், கல்உப்பு, எலுமிச்சையுடன் வந்து ரோஹீத்திற்கு திருஷ்டி கழித்துவிட்டு அதை முச்சந்தியில் வீச.. வெளியே சென்றாள். தனது மனைவியுடன் வெளியே செல்ல முற்பட்டவனை ரோஹீத் அழைத்தான்.

“சொல்லுங்க இராஜா!” என்று பவ்யமாக நின்றவனிடம் “இப்போ நீ செய்தது உன் விருப்பம். அதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். அதுக்காக என் விசயத்தில் தலையிடுவதை நான் ஒத்துக்க மாட்டேன்.” என்று இறுகிய குரலில் கூறவும், மாரிமுத்து வெடுவெடுத்து போனான்.

ரோஹீத் “நான் சொன்னதை செய்ய சொன்னா.. யார் உன்னை நான் சொல்லாததையும் செய்ய சொன்னது. உனக்கு அவ்வளவு தைரியம் வந்துருச்சா!” என்று தாழ்வான ஆனால் அழுத்தமான குரலில் கேட்டான்.

அந்த குரலில் மாரிமுத்து வெடவெடத்து போனான். அங்கு நின்றிருந்த சுபாஷினிக்கும் அதே நிலைமை தான்!

ரோஹீத் தொடர்ந்து “மைசூருக்கு நான் ஃபோன் போட சொன்னேனா?” என்றுக் கேட்கவும், மாரிமுத்து என்ன பதில் கூறுவது என்றுத் தெரியாமல் திருதிருவென விழித்தான்.

பின் சலிப்புடன் தலையைத் திருப்பிக் கொண்ட ரோஹீத் “காரில் என் ஃபோன் இருக்கும். அதுக்கு கண்டிப்பா ஃபோன் செய்திருப்பாங்க! அதை எடுத்துட்டு வா..” என்ற பொழுது.. வேறு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

மருத்துவர் வந்திருக்கிறார் என்று அவரை அழைத்துக் கொண்டு அப்படியே அவனது செல்பேசியையும் எடுத்துக் கொண்டு வருவதாக மாரிமுத்து விரைந்தான்.

அப்பொழுது சுபாஷினி "நான் கிளம்பட்டுங்களா.." என்றுக் கேட்டாள்.

அவளைப் பார்த்த ரோஹீத் "நான் உன்னைப் போக சொல்லுலையே.." என்றான்.

சுபாஷினி "எப்போ போகச் சொல்வீங்க இளைய ராஜா?" என்றுச் சங்கடத்துடன் கேட்டாள்.

அதற்கு ரோஹீத் "சொல்லும் போது போ.." என்றான்.

சுபாஷினி "வீட்டுல சொல்லிட்டு வரலை. தேடுவாங்க.." என்றுச் சிறுப்பிள்ளை கூறும் காரணம் போல் கூறினாலும்.. உண்மையே கூறினாள்.

அதைக் கேட்ட ரோஹீத் "ஓ! ஐ வில் தின்க் எ ரிஷன் ஃபார் தட்..." என்றான்.

அவள் இங்கேயே இருப்பதற்கு.. அவளது பெற்றோர்களிடம் சொல்ல காரணத்தை யோசிக்கிறேன் என்று அவன் கூறியதைக் கேட்டு சுபாஷினி அயர்ந்து நின்றாள்.

மருத்துவரை அழைத்துக் கொண்டு வந்த மாரிமுத்து பவ்வியமாக அவனின் செல்பேசியை நீட்டவும், ரோஹீத் வாங்கி பார்த்தான். அதில் மேனேஜரின் தவறிய அழைப்புகள் இருந்தன. அதை இகழ்ச்சியாக பார்த்த ரோஹீத் செல்பேசியை அணைத்து வைத்தான்.

அதற்குள் மாரிமுத்துடன் விரைந்து வந்த டாக்டர் ரோஹீத்தின் காலை ஆராய்ந்தார். பின் "எலும்பு முறிவு மாதிரி தெரியலைங்க! மூட்டு விலகியிருக்கு! ஹாஸ்பெட்டல அட்மிட் செய்துட்டா.. உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சரலாம். லேட் ஆனா ரொம்ப டேன்ஞ்சர் ஸார்!" என்றுவிட்டு.. உடன் அழைத்து வந்த கம்பௌன்டர் பாயிடம் அவர்கள் கொண்டு வந்த ஸ்டெக்சரில் ரோஹீத்தை படுக்க வைத்து கொண்டு போக கூறினார்.

ஆனால் அவர்களை கை நீட்டி தடுத்த ரோஹீத் "என்ன ட்ரீட்மெண்ட் தருவீங்க! அதை இங்கேயே செய்யுங்க.." என்றான்.

அதைக் கேட்டு திகைத்த மருத்துவர் "ஸார் அதற்கான ஸ்பெஷிலிட்ஸ் ஹாஸ்பெட்டல தான் இருக்கு! அதற்கு பிறகும் காலை அசைக்காம அன்டர்கேர்ல இருக்கணும்." என்றார்.

ரோஹீத் "ஹலோ டாக்டர்! நான் இங்கேயே ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறேன் என்றுச் சொல்லியாச்சு. அப்போ.. அதற்காக எப்படி.. என்ன செய்யணும் என்றும் நான் சொல்லிட்டு இருக்கணுமா.. அதற்கான அரேன்ஜ்மென்ட்ஸ் நீங்களே செய்ய மாட்டிங்களா! இந்த பொண்ணு நர்ஸ் தான் வீடும் இங்கே இருக்கு.. இவ என்னைப் பார்த்துப்பாள். ட்ரீட்மெண்ட் பிறகு அன்டர்கேர் பற்றி கவலைப்பட தேவையில்லை. சோ ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க.." என்றுவிட்டு வலியின் காரணமாக அயர்வுடன் சாய்ந்துக் கொண்டான்.

ரோஹீத் கூறியதைக் கேட்டு அதிர்ந்த சுபாஷினிக்கு.. வலியுடன் அவன் சோர்வது தெரியவும் மற்றதை மறந்து.. "டாக்டர்! அவருக்கு வலிக்குது போல.. முதலில் ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க.." என்றுத் துரிதப்படுத்தினாள்.

இராஜ பம்பரையின் இளைய வாரிசு கூறிய பின்.. அதற்கு மறுப்பு ஏது! எனவே மருத்துவர் சிகிச்சையை தொடங்கினார். சுபாஷினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. தன்னுடன் அழைத்து வந்த கம்பௌன்டரிடம் தேவையான மருந்துகளை மருத்துவமனையில் இருந்து எடுத்து வரக் கூறி அனுப்பினார்.

ஆனால் சுபாஷினி “டாக்டர்! அந்த மிடிஷன்ஸ் வரும் வரை.. காத்திருக்க வேண்டுமா.. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிருச்சு! அப்பறம் பாதமூட்டை சரியான போஸிஷனுக்கு.. நகர்த்த முடியாது. ஆப்ரேஷனை கையில் எடுக்க வேண்டியது வரும். இப்போ நீங்க கையிலேயே நகர்த்தி விடலாம். நான் தொட்டு ஆராய்ந்தவரை.. ரொம்பவும் விலகிய மாதிரி தெரியலை. லைட்டா நகர்ந்திருக்கு..” என்றாள்.

அவளை மெச்சுதலுடன் பார்த்த.. மருத்துவர் பிரதாப் “இளைய ராஜா வலியை தாங்குவாரா என்றுத் தான் யோசிக்கிறேன்.” என்றார்.

அதற்கு ரோஹீத் எரிச்சலுடன் “ஸ்டாப் ஃகாலிங் லைக் தட்! நான் தாங்கிப்பேன். சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க!” என்று உத்தரவிட்டான்.

அதற்கு மேல் தாமதியாமல் மருத்துவர் பிரதாப் இன்னொரு கம்பௌன்ட்டரை ரோஹீத்தின் முழங்காலில் அழுத்தமாக பிடித்துக் கொள்ள கூறினார். பின்னர் சுபாஷினியை பாதத்திற்கு மேலாக கண்டை காலை பிடித்துக் கொள்ள கூறியவர், ரோஹீத்தின் நகர்த்த பாதமூட்டை முதலில் மெல்ல தடவி நீவினார். சரியான நிலையை நீவி அறிந்தவர், அடுத்த நிமிடம் திடுமென பாதவிரல்களிடம் ஒரு கையால் அழுத்தமாக பிடித்துக் கொண்டு மறுகையால் பலம் கொண்ட மட்டும் அழுத்தமாக பிடித்து பாதமூட்டை பழைய நிலைக்கு அழுத்தி அசைக்கவும், ரோஹீத் வலியால் துள்ளினான். ஆனால் கம்பௌன்ட்டர் மற்றும் சுபாஷினி அழுத்தமாக பிடித்துக் கொண்டதால்.. அவனால் கால்களை அசைக்க முடியவில்லை. ஆனால் வலியின் காரணமாக கையால் அந்த ஷோபா உறை கிழிந்து விடும் அழுத்தி பிடித்தான்.

பிரதாப் பாதமூட்டை சரியான நிலைக்கு நகர்த்தியதும்.. கையோடு கொண்டு வந்திருந்த.. பெல்ட்டை இறுக்கமாக தற்போதைக்கு கட்டிவிட்டார். மருந்துகள் மற்றும் நவீன பெல்ட்… அசையாமல் இருக்க பேட் போன்றவை வந்ததும்.. சரியான சிகிச்சை முறை அளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

பின் ரோஹீத்தை நிமிர்ந்து பார்த்தார். அவர் நினைத்தது போல்.. வியர்ந்து ஒழுக கண்கள் சொருக அமர்ந்திருந்தான்.

உடனே பிரதாப் அங்கு ஓரமாக நின்றிருந்த மாரிமுத்துவிடம் ஒரு டம்ளர் நீரில் உப்பும், சர்க்கரையும் சரியான அளவில் போட்டு எடுத்துக் கொண்டு வரக் கூறினார். சுபாஷினி அங்கு நின்றிருந்த தங்கத்திடம் குளிர் நீரில் நனைத்த துண்டை கொண்டு வரக் கூறினாள்.

பிரதாப்.. கம்பௌன்டரை இன்னும் காலை விடாமல் பிடித்துக் கொள்ள கூறிவிட்டு.. கையோடு கொண்டு வந்திருந்த வலி நிவாரணிக்கான ஊசி மருந்தை உடலில் செலுத்தினார். அதற்குள் மாரிமுத்தும்.. தங்கமும் கேட்டதை கொண்டு வந்திருந்தார்கள். பிரதாப் பெல்ட் போடப்பட்டிருப்பதை ஆராய்ந்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, சுபாஷினியே டம்ளரை வாங்கி சிறிது சிறிதாக ரோஹீத்திற்கு புகட்டி விட்டாள். பின் தங்கம் கொண்டு வந்திருந்த துண்டை நன்றாக பிழித்துவிட்டு.. முகம், கழுத்து, மார்பு ஆகியவற்றை மெல்ல துடைத்துவிட்டாள்.

ஊசி மருந்து, சுபாஷினி செய்த அவசர உதவி என்று அனைத்தும் சேர்ந்ததும்.. கண்கள் இருட்ட, காதடைக்க அமர்ந்திருந்த ரோஹீத்திற்கு மெல்ல சுயநிலை வந்ததது. இமைகள் திறந்து நன்றாக சுற்றிலும் பார்த்தான்.

அயர்வாக படுத்தவன்.. அணைத்து வைத்திருந்த செல்பேசியை எடுத்துப் பார்த்தான். பல தவறிய அழைப்புகள் இருந்தன. மாரிமுத்துவை பார்த்தான்.

மாரிமுத்து "என்னோட ஃபோனுக்கும் ஃகால் வந்துச்சுங்க இராஜா! ஆனா என்ன பதில் சொல்றதுனு தெரியலை. அதனால எடுக்கலைங்க.." என்றான்.

ரோஹீத் "இப்போ பேசு! எனக்கு ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருக்குனு சொல்லு! நான்தான் இங்கேயே செய்ய சொன்னேனு சொல்லு! நான் இங்கே தான் இருப்பேன் என்றுச் சொல்லு! எனக்கு சரியாகிற வரை.. யாரும் என்னை டிஸ்டர்ப் செய்ய இங்கே வர வேண்டாம் என்று நான் சொன்னதா சொல்லு.." என்றான்.

மாரிமுத்து திருதிருவென விழித்தான். ஏனெனில் ரோஹீத் கூறியதைப் போல்.. அவன் கூறினால்.. அவனது வேலை போவது நிச்சயம்!

அவனது முகத்தைப் பார்த்து சிரித்த ரோஹீத் “நான் இன்னொரு தரம் சொல்வதாக இருந்தால்.. அதை உன்கிட்ட சொல்ல மாட்டேன். உன் இடத்தில் வேற ஒருத்தங்க இருப்பாங்க..” என்ற அடுத்த நிமிடமே மாரிமுத்து தனது செல்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே விரைந்தான்.

அங்கு மருத்துவர் பிரதாப்பும்.. வேண்டிய மருந்துக்களை வீட்டிற்கு தரத் தயங்கிய தலைமை மருத்துவரிடம் இளைய ராஜாவான ரோஹீத்தின் பிடிவாதத்தை கூறி.. ட்ரீப்ஸ் போன்ற மருத்துவ உதவிகரணங்களை மாளிகைக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டிருந்தார். மாரிமுத்துவிடம் பேசிவிட்டு.. திரும்பி ரோஹீத் டாக்டர் பிரதாப்பே பேசி முடித்துவிட்டதைப் பார்த்து புன்னகைக்கவும், பிரதாப் “நானும் உங்க கிட்ட கேட்க தான் திரும்பினேன் ஸார்! ஆனா மாரிமுத்துவிடம் நீங்க பேசிட்டு இருக்கிறதைப் பார்த்ததும்.. நானே கேட்டுட்டேன்.” என்று சிரித்தார்.

ரோஹீத் சிறு ஏளனச்சிரிப்புடன் “நான் விரும்பியதை செய்ய எதுக்கு மற்றவங்க இடையிடறீங்கனு தான் புரியலை.” என்றான்.

அதற்கு பிரதாப் “அனைவரும் உங்களோட நல விரும்பிகள்! உங்களுக்கு எங்க ஹாஸ்பெட்டல பெஸ்ட் ட்ரீட்மென்ட் அன்ட் கேர் கொடுத்து கௌரவிக்கணும் என்று நினைச்சுருப்பார். எதாவது கடைக்கு போன.. அங்கிருப்பதிலேயே பெஸ்ட் பொருள் உங்களுக்கு ஆர்வமா கொடுப்பாங்க இல்ல ஸார்! அந்த மாதிரி தான்..” என்றுச் சிரித்தார். அதை ஒத்துக் கொண்டு சிரித்த ரோஹீத் பின் முடிவில் இறுகிய முகத்துடன் “ஐ ஹெட் ஸ்பெஷல் கேர்..” என்கவும், பிரதாப் சிரிப்பை நிறுத்திவிட்டு அமைதியானார்.

அதைப் பார்த்து சிரித்த ரோஹீத் “ஆனா எனக்கு வேண்டும் என்ற இடத்தில் இந்த பவரை யுஸ் செய்துப்பேன். இப்போ ஹாஸ்பெட்டலுக்கு வர மாட்டேன் என்றுச் சொன்னேனே அந்த மாதிரி..” என்றுவிட்டு தலையைப் பின்னால் சாய்த்து சிரிக்கவும், பிரதாப் குழம்பி போனார்.

பின் ட்ரீப்ஸ் ஏற்ற மருந்துகள் வர இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்பதால்.. ரோஹீத்தின் பல்ஸ் மற்றும் உடல் வெப்பநிலை மீண்டும் சரிப்பார்க்கப்பட்டது. பிரதாப்பிற்கு மீண்டும் அழைப்பு வரவும்.. வெளியே சென்றார்.

அப்பொழுது சுபாஷினி “இளைய..” என்று இழுத்தவள், அவன் பார்த்த பார்வையில் “ஸார்! நான் போகட்டுங்களா..” என்றுத் தயக்கத்துடன் கேட்டாள்.

அதைக் கேட்டவனின் கண்கள் கூர்பெற்றது. அங்கு நின்றுக் கொண்டிருந்த கம்பௌன்டரை பார்த்து வெளியே போ.. என்பது போல் தலையசைக்கவும், அவன் அடுத்த கணமே வெளியேறினான்.

பின் ரோஹீத் சுபாஷினியை பார்த்து “என்னோட ஆர்டரை மீறுவதற்கு அவ்வளவு தைரியம் இருக்கா..” என்று உறுமினான்.

உடனே சுபாஷினி பயத்துடன் கரங்களை குவித்தவாறு “தைரியமில்லாமல் தான்.. நான் போகிறேன் என்றுச் சொல்கிறேன் ஸார்!” என்று மண்டியிட்டாள்.

அவளது பயத்தைப் பார்த்த ரோஹீத் “ஏன் என்னைப் பார்த்துக்க பிடிக்கலையா..” என்றுக் கேட்டான்.

அதற்கு சுபாஷினி “அச்சோ அப்படியில்லைங்க! நான் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக நீங்க என்றுத் தெரியாம நடந்துக்கிட்டேன். அதுதான் காரணம்..” என்றாள்.

ரோஹீத் குறுஞ்சிரிப்புடன் “நீதான் என்னைப் பார்த்துக்கணும் என்று நான் சொல்வதற்கும் அதுதான் காரணம்..” என்றுப் பேச்சை முடித்தான்.

சுபாஷினி மெல்ல “வேண்டாம் ஸார்! இது ஏதோ விபரீதமா போயிருமோ என்றுப் பயமா இருக்கு!” என்றாள்.

ரோஹீத் “என்ன விபரீதம் என்று நினைக்கிறே?” என்று அடக்கப்பட்ட முறுவலுடன் கேட்டான்.

சுபாஷினி பரிதாபமாக அவனை ஏறிட்டுப் பார்க்கவும், ரோஹீத் “ஓ! அப்போ அந்த கார்காரனை லவ் செய்துட்டியா என்றுக் கேட்டதைச் சொல்றீயா! அதுதான் நான் என்றால் நீ திரும்பியும் கூடப் பார்க்க மாட்டே என்றுச் சொல்லிட்டே! உனக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கு! அப்பறம் எதை விபரீதம் என்றுச் சொல்கிறே..!” என்றுத் தோள்களைக் குலுக்கினான்.

சுபாஷினி குனிந்த தலை நிமிராது “எனக்கு நீங்க இன்னும் விளையாடற மாதிரி இருக்கு!” என்றாள்.

ரோஹீத் “அது விளையாட்டு இல்லை! மை டிசையர்! சொல்ல போன ரொம்ப நாள் கழிச்சு.. எதாவது விசயம்.. அல்லது ஒரு நபரிடம் இவ்வளவு நேரம் பேசறேன். மலருக்கும் எனக்கும் இருக்கிற ரிலேஷன் பற்றித் தெரிந்திருந்தா.. உனக்கு சில கெஸ்ஸஸ் இருந்திருக்கும். எனக்கு இங்கே எதுவுமே பிடிக்கலை. எல்லாமே வெறுத்துப் போன எனக்கு உன்னோட பயம், ஆர்வம், ஏமாற்றம், கோபம், கண்ணீர், தயக்கம் எல்லாம் பார்க்க பிடிச்சுருக்கு! ஆனா இன்னும் நீ சிரித்து பார்க்கலை.” என்றான்.

ரோஹீத் கூறியது கேட்டு சுபாஷினி அயர்ந்து நின்றாள். என்ன பேசுகிறான் என்றுப் புரிந்துத் தான் பேசுகிறானா என்று இருந்தது. அவளது பயம் அதிகமானது போன்று இருந்தது. ஆனால் எட்டு வருடங்களுக்கு முன் அவனது ஆசை, காதல், வாழ்க்கை அழித்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு கொண்டிருந்த சுபாஷினிக்கு.. அவளுடன் பழக வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றி.. தான் செய்த குற்றத்திற்கு பிராய்சித்தம் செய்தால் என்ன என்றும் தோன்றியது. எப்படியும்.. சில நாட்கள் தான் இங்கே இருக்க போகிறான். அதுவரை.. அவனுக்கு பணிவிடை செய்து தனது தவறிற்கு பிராய்சித்தம் செய்ய எண்ணினாள்.

எனவே அவன் மேல் புதிதாக தோன்றிய பயத்தையும், முன் செய்த குற்றவுணர் போன்ற தனது உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மெல்ல “சரி ஸார்!” என்றாள்.

ரோஹீத் “ஷப்பா! இளைய ராஜா என்றுத் தான் பெத்த பேரு! ஆனா எனக்கு வேண்டியதை நிறைவேற்ற.. எப்படி கெஞ்ச வேண்டியது இருக்கு..” என்றுச் சிரிக்கவும், சுபாஷினி பதட்டத்துடன் “அப்படியெல்லாம் இல்லைங்க! என்னை மன்னிச்சுடுங்க! எனக்கு உங்களைப் பார்த்த பயம் கலந்த மரியாதை அதுதான் தயங்கினேன்ங்க..! மத்தபடி ஒண்ணுமில்லைங்க..” என்று பாதி உண்மையை அவசரமாக கூறினாள்.

அதற்குள் மருத்துவ உபகரணங்களை கொண்டு வந்த கம்பௌன்டருடன் ரோஹீத்தின் அனுமதி பெற்று உள்ளே வந்த பிரதாப்.. ரோஹீத்திற்கு அடுத்த கட்ட சிகிச்சை தொடங்கினார். உடன் இரு கம்பௌன்டர்கள் இருந்ததால்.. அவர்கள் உதவியுடன் ரோஹீத்தை ரெஸ்ட் ரூமிற்கு அழைத்து சென்று.. பின் அவன் அணிந்திருந்த உடையை மாற்றி.. இலகுவான உடையை அணிய செய்தனர். பின் பாதத்தில் அப்பொழுதைக்கு மாட்டியிருந்த பெல்ட்டை கழற்றி.. களிம்பு தடவி.. மூட்டு அசையா வண்ணம் இருக்க மாவு கட்டு போடப்பட்டது. பின் ரோஹீத்திற்கு ட்ரீப்ஸ் ஏற்றப்பட்டது. இவை அனைத்தும் செய்து முடிக்கும் வரை.. சுபாஷினியும் உதவி செய்தாள்.

ரோஹீத்தின் கட்டுப் போட்ட காலை மீண்டும் ஆராய்ந்த பிரதாப் “ஸார்! உங்களைத் தூக்க.. நடக்க வைக்க.. உதவியா இந்த கம்பௌன்ட்டரை இங்கே விட்டுட்டு போகட்டுமா..” என்றுக் கேட்டார்.

அதற்கு ரோஹீத் "மாரிமுத்து போதும் டாக்டர்!" என்றுவிட்டு செல்பேசியில் எதையோ பார்க்க ஆரம்பித்தான். எனவே பிரதாப் சுபாஷினியிடம் எந்தெந்த மாத்திரைகள் எந்தெந்த வேளைகளில் கொடுக்க வேண்டும் என்ற விபரங்களைக் கூறியவர், மாலையில் வருவதாக கூறிவிட்டு சென்றார்.

பிரதாப் சென்றதும்.. மாரிமுத்துவிடம் ரோஹீத்திற்கு காலை உணவாக இலகுவாக செரிமானம் ஆக இட்லி வேக வைக்க கூறினாள். மாரிமுத்து தனது மனைவியிடம் சொல்ல செல்வும், சுபாஷினி ரோஹீத்திடம் "நான் என்னோட அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு வந்தரேன் ஸார்.." என்றாள்.

ரோஹீத் சரி என்றுக் கூறவில்லை. போகாதே என்றுக் கூறவில்லை. சாய்வாக அமர ஏதுவாக போடப்பட்டிருந்த தலையாணியில் சாய்ந்தவாறு கையைக் கட்டிக் கொண்டு அமைதியாக எங்கோ வெறித்தவாறு இருந்தான். அதையே அனுமதியாக ஏற்றுக்கொண்டு.. வீட்டிற்கு விரைந்தாள். வேகமாக நடந்து வந்ததில் அவளுக்கு வியர்த்து ஒழுகியது. அதைத் துடைக்க கூட இல்லாமல் வீட்டைத் தாண்டி.. அவர்கள் விவசாயம் செய்யும் இடத்தை நோக்கி சென்றாள்.

அவளது மனதில் பல எண்ணங்கள் அவளை விட வேகமாக உழன்றுக் கொண்டிருந்தன.

மலரிடம் படித்த பெண்.. என்று அன்றே கண்டுப்பிடித்தவன், அதனோடு தொடர்ந்து நினைவடுக்கில் சென்று.. மலரை அழைத்து வரச் சொன்ன பெண்ணும் தான் என்றுக் கண்டுப்பிடித்து விடுவானோ என்று அஞ்சினாள்.

அடுத்த பயத்தை நினைத்து அவளே மனம் குன்றிப் போனாள். ரோஹீத் தான் காரை ஓட்டிச் செல்கிறான்.. என்று அறியாது, அவளை இந்த சில நாட்களாய் ஆட்டிப் படைத்த அந்த காரை கண்டால்.. அவளது நடவடிக்கை மற்றும் எண்ணங்களைப் பற்றி ரோஹீத் கூறியது வியப்பையும் அச்சத்தை அளித்தது.

மிகவும் வெளிப்படையாக அந்த காரோட்டியை காதலித்தாயா என்றுக் கேட்டுவிட்டான். இல்லை என்று மறுப்பு தெரிவித்தவளுக்கு.. அப்போ அவளது நடவடிக்கைக்கு என்ன பெயர் என்ற கேள்வியும் எழுந்து அவளைப் பயமுறுத்தியது. இன்னொருவருடன் திருமணம் நிச்சயத்திருக்கையில்.. ஒரு காரின் ஹாரன் சத்தத்திற்கு எப்படி மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாய் மாறினேன்.. என்றுத் தன்னையே கொட்டிக் கொண்டாள். அது வெளிப்படையாகவே தெரிந்திருக்கவே.. ரோஹீத் அதைச் சொல்லிக் காட்டுகிறார் என்று அவளுக்கு தெரிந்தது. அதை வைத்து.. அவளுடன் அவன் விளையாடுவது புரிந்தது.

அந்த விளையாட்டு விபரீதமாக போக கூடாது என்று அஞ்சினாள். ஏனெனில்.. அவளைப் பற்றித் தெரிந்து.. சமஸ்தானத்தின் இளைய ராஜாவாக.. சிறு அதிகாரத்துடன் அவன் பேசிய பேச்சுகளின் அர்த்தங்கள் வேறாக சுபாஷினிக்கு ஒலித்தது. அல்லது அவளுக்கு மட்டும் தான் அவ்வாறு அவன் என்ன பேசினாலும் விவகாரமாக அர்த்தம் தோன்றுகிறதா.. இல்லை.. உண்மையிலேயே.. இளைய ராஜா சற்று விவகாரமாக தான் பேசுகிறாரா.. என்றுப் பல கேள்விகள் எழுந்தன. ஆனால்.. அம்மாதிரி பேச்சுக்களுக்கு.. அவளின் பதில் அமைதியாக இருந்தால்.. அவளுக்கு இத்தனை பயம் இருந்திருக்காது. ஆனால் ரோஹீத் பேசும் வார்த்தைகள்.. சுபாஷினிக்கு அர்த்தம் வேறாக ஒலித்து சிலிர்ப்பை ஏற்படுவதைத் தான் பயத்துடன் உணர்ந்தாள்.

தற்பொழுது பிராய்சித்தம் என்றுக் கூறி.. அவனுக்கு பணிவிடை செய்ய ஒத்துக் கொண்டுவிட்டாள். அவள் ஒத்துக் கொள்ள விட்டாலும்.. ஒத்துக் கொள்ளும் வரை.. விட்டிருக்க மாட்டான் என்றுத் தோன்றியது. இம்மாதிரி ஏன் அவள் வேண்டும் என்ற பிடிவாதம் என்ற கேள்விகள் தான் சுபாஷினியை விபரீதமாக எண்ண தோன்றியது.

சுபாஷினியின் தற்போதைய பயமே வேறு.. இம்மாதிரி தொடர்ந்து இருபொருள் தரும்படி அதிக உரிமையுடன் பேசினால்.. அவள் மயக்கி விடுவாளோ என்று அஞ்சினாள். அவளுக்கு அந்த காயத்ரி வேறு நினைவிற்கு வந்தாள். அதே நேரத்தில்.. காயத்ரியை நினைத்து.. சுபாஷினி ‘அவங்களை மாதிரி ஆகிடுவேனோ’ என்று பயத்தில் உரைத்த பொழுது.. ரோஹீத் ‘மலர் மாதிரியா..’ என்று அவன் காதலித்தவளைப் பற்றிக் கூறியதைக் கேட்டு அவள் மனம் சிலிர்க்கவில்லை என்றால்.. அந்த மனம் இருந்து பயனில்லை.

ஆனால் அவளுக்கு ஒன்றும் மட்டும் நன்றாக புரிந்தது.

இந்த சமஸ்தானத்தின் இளைய ராஜாவை விரும்பினால்.. மலருக்கு நேர்ந்த கதி தான் அவளுக்கு! அல்லது இளைய ராஜாவால் விரும்பப்பட்டால் காயத்ரியின் நிலைமை தான் அவளுக்கு! ஊராரின் ஏச்சு பேச்சுகளுக்கு ஆட்பட்டு.. அசை நாயகியாக பேசப்படுவாள். எனவே இந்த இரு நிலைக்கும்.. அவள் சென்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ரோஹீத்திடம் எவ்வித உணர்வும் இன்றி.. எவ்வாறு அவனது அருகில் இருப்பது என்று பலவாறு எண்ணியவாறு நடந்தாள்.

அவளை அந்நேரத்தில் பார்த்ததும்.. அவர்களே அவளை நோக்கி வந்தனர். சுபாஷினி மிகவும் பதட்டத்துடன் இருந்தாள். அவளது பெற்றோர்கள் ரோஹீத்தை பார்த்து கொள்ள மறுத்துவிட்டால்.. எப்படிச் சமாளிப்பது என்று பல்வேறுவிதமாக ஒத்திகை பார்த்தவாறு சென்றாள். ஆனால் அங்கு இராஜ பரம்பரையை சேர்ந்த ரோஹீத்தை பார்த்துக் கொள்வது என்றால் அது அவர்களது கடமை என்றார்கள். எவ்வளவோ பெரிய மருத்துவர்கள் இருக்க.. ரோஹீத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவளுக்கு கிடைத்தது அவளது பாக்கியம் என்றுக் கூறிக் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுக் கூறினார்கள்.

அதைக் கேட்டவளுக்கு நடுஉச்சியில் அவர்கள் கொட்டியது போன்று இருந்தது. ரோஹீத்திற்கும் அவளுக்கு உள்ள உறவையும் எல்லையையும் பற்றி உரைப்பது போன்று இருந்தது.

ஆம்.. அவன் இந்த சமஸ்தானத்தின் இளைய ராஜா.. அவள் அவனுக்கு பணிவிடை புரிய வாய்ப்பு கிடைத்திருக்கும் பெண்! இதைத் தவிர வேறு எதுவுமில்லை என்ற தெளிவு அவளுக்குள் இருந்துவிட்டால்.. வேறு எந்த குழப்பமும் தேவையில்லை. அவனது எவ்விதமான பேச்சும் அவளைப் பாதிக்காது. வேறு அர்த்தம் போன்று தோன்றாது.. என்று எண்ண எண்ண மனம் தெளிவதைக் கண்டாள். எனவே தனது அன்னை மற்றும் தந்தையிடம் கூறிவிட்டு.. மாலை நெருங்கும் பொழுது வந்துவிடுகிறேன்.. என்றுவிட்டு மாளிகையை நோக்கி நடைப் போட்டாள்.

தற்பொழுது அவளது மனதில் மாரிமுத்து இட்லி அவிச்சு கொடுத்திருப்பானா.. அவன் உண்டிருப்பானா என்ற கேள்விகள் எழுந்தது. இம்மாதிரி பணிவிடைகள் செய்ய தான் அவளை வைத்திருக்கிறான். எனவே அப்பணியை ஆற்ற விரைந்து சென்றாள்.

மூச்சு வாங்க வேகமாக குன்றின் மலைப்பாதையில் ஏறியவள், கேட்டை திறந்ததும்.. அங்கு அணிவகுத்திருந்த கார்களை கண்டு அதிர்ந்தாள்.

அந்த கார்களின் பிரமாண்டத்தை வைத்தே.. அவை மற்ற இராஜவம்சத்தினரின் கார்கள் என்று அவளுக்கு தெரிந்தது.

அவ்வாறு எனில்.. இங்கிருந்து இளையராஜாவை அழைத்துச் சென்றுவிடுவார்களா.. என்று விக்கித்து நின்றுவிட்டாள்.

தெளிந்த அவளது உள்ளம் மீண்டும் குழம்பியது அவள் அறியவில்லை.
 
Status
Not open for further replies.
Top