All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!
கார்மேகம் சூழ்ந்த
காலையின் மழையில்...
தடாகத் தாமரை
சூரியனுக்கு தவமிருக்க....
பால் அன்னம் மெல்ல
படகாய் சிறகடிக்க...
பூத்திட்ட விடியலின்
பூபாள நேரம்....
புன்னகையின் பூவாசமே!
புதிய விடியல் புதுமைகள் படைத்து புன்னகை சிந்தட்டும்! இனிய காளை வணக்கம் தோழிகளே!
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!
இமை திறக்கும்
இனிய நேரம்
மனம் திறக்கும்
மங்கள நாதம்
அது...
பூமாளமன்றோ...?
இன்றைய விடியல் இனிப்பாய் இமை மீட்டி, இசை கூட்டட்டும். இனிய காலை வணக்கம்.
Last edited: Sep 29, 2020
வணக்கம் தோழிகளே!
அதிகாலை மூச்சும்
பனி வாடை காற்றும்
அலை மோதும் நேரம்
பூபாளமே...!
துயில் மீட்கும் சிட்டும்
குயில் கூவும் பாட்டும்
கிளை மோதும் நேரம்
பூபாளமே...!
பாய்ந்தோடும் மேகம்
சாய்ந்தாடும் தேகம்
மலை மோதும் நேரம்
பூபாளமே...!
முன் பனியின் துளியும்
வெண் நிலவின் ஒளியும்
இலை மோதும் நேரம்
பூபாளமே...!
செவ்வரியில் உதிக்கும் சூரியனும்
மெய்வரியில் தகிக்கும் வான்மகனும்
சிலை மோதும் நேரம்
பூபாளமே...!
இனிதான காலை இனிதாக மலர்ந்து இசையோடு இணைந்து இதம் சேர்க்கட்டும்.
இனிய காலை வணக்கம் தோழிகளே....!
Super
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!
விடியாத விடியலின்
வியப்பின் விளிம்பிலே
விரியும் சிரிப்பிலே
குழந்தையும் குமரியும்
ஒன்றினில் ஒன்றோ...?
வியக்க வைக்கும் காலையும், மயக்க வைக்கும் பூபாளத்தின் இனிதாய் இசைக்கட்டும். இனிய காலை வணக்கம்.
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!
ஆவாரம் பூவின் ஆரோகனத்தில்
ஆலோலம் பாடும் பூபாளத்தில்
ஆரவாரம் செய்யும் தென்றல் காற்றில்
ஆண்டவன் வாழும் ஆற்றோர மரமே....
உன் அமைதியின் சுகமே...!
என் நிம்மதியின் கணமே...!
இனிதான விடியல் அழகாய் ஆரம்பித்த அற்புத ஞாயிறின் அமுத கானம் ஆலோலம் பாடட்டும். இனிய காலை வணக்கம் தோழிகளே!
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!
தேனாற்றின் கரையினிலே
தெம்மாங்குப் பாட்டினிலே
பூபாளத்தின் இசையினிலே
பூலோகம் சிரிக்கையிலே
அசைகின்ற ஆழ்மனமே - அது
அதிசயத்தின் அற்புதமே!
தேன்சுவையாய் இனிக்கின்ற விடியல், சிறக்கட்டும் அனைவர்க்கும். இனிய காலை வணக்கம் தோழி.
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!
அடைமழை ஓய்ந்து நிற்க,
ஓடை வெள்ளம் புரண்டு நிற்க,
கானக் குயில் பாடும் போது
பூபாளமும் தேவகானமே!
புலர்ந்துவிட்ட காலையின் மண்மணக்கும் பாசையில் நாளெல்லாம் திரு நாளே!. இனிய காலை வணக்கம்.
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!
பூவிதழ் விரித்த
புன்னகைச் சாரலில்....
பூபாளம் பாடும்
புதிதான விடியலில்......
பூத்திட்ட காலையே
உன் ரீங்காரம்
சங்கீதமே.....!
அழகிய காலையின் ஆனந்த கீதம் அற்புதமாய் இசைக்கட்டும். இனிய காலை வணக்கம்.
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!
பூஜைக்கு பூக்கலும்
பூத்திட்ட காலையில்,
பூபாளம் ராகத்தின்
புத்தொலி கேட்டால்....
பூலோகமும் சிரிக்காதோ...?
இன்பத்தின் திறவுகோல் இனிய காலை. இனிய காலை இனிய இசை பரப்ப வாழ்த்துக்கள்!