All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நெருங்கவா விலகவா உயிரே கதை திரி

Status
Not open for further replies.

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க? இதோ நான் அடுத்த கதைக்கான டீஸருடன் வந்துவிட்டேன்..கதை எப்போ ஆரம்பிப்பேன் என சரியாக சொல்ல முடியாது பட் உங்களை ரொம்ப நாள் காக்க வைக்காமல் சீக்கிரம் வந்துவிடுவேன்.

டீஸர் படித்துவிட்டு கதையின் போக்கை பற்ரி சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்

நட்புடன் உங்கள்

கலை
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெருங்கவா விலகவா உயிரே

எளிமையாக அலங்கரிக்கப்பட்ட முதல் இரவு அறை… எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நெஞ்சம் வெறுமையில் துடிக்க, முகம் முழுக்க கோபக் கனல் கொந்தளிக்க நின்று இருந்தான் ராகவன்!!

அப்போது உள்ளே வந்தாள் கீர்த்தனா! அவனின் மனைவி. கதவு அடைக்கும் சத்தம் கேட்டும் திரும்பாமல் ஜன்னலோரம் நின்று இருந்தவனின் கவனத்தை கலைக்க மெல்லிய குரலில் ”மாமா!” என அவள் முடிக்குமும் முன்

”என்ன அப்படி கூப்பிடாதடி!!” என கர்ஜித்தான் ராகவன்.

“வாடி போடி சொன்ன வாயெல்லாம் பேத்துடுவேன் மாமா!!” என அவனுக்கு குறையாமல் கர்ஜித்தாள் கீர்த்தனா.

”ஒஹ் மேடம்க்கு மரியாதை முக்கியமோ?? இந்த தன்மானம் நேற்று வரை எங்கேடி போச்சு?? அமுக்குனி மாதிரி இருந்துட்டு என்ன வேலை செஞ்சு வச்சு இருக்க?? உன்னால என் லட்சியம், கொள்கை, வாழ்க்கை எல்லாமே போச்சு!! உன்னை பார்க்க கூட எனக்கு விருப்பமில்லை! நீயே சொல்லு இத்தனை வருடத்தில் நான் உன்னிடம் முறைப்பையனாக உரிமை பார்வை பார்த்து இருப்பேனா?? கடைசியில் உன் கழுத்தில் போயி நான் தாலி கட்டி இருக்கிறேன்!! உன்னால்… எல்லாமே உன்னால்!! ச்சீ போ டி!!” என தன் மனதில் இருந்ததை கொட்டியவன் விறு விறுவென நடந்து சென்று கட்டிலில் படுத்து கொண்டான். கீர்த்தனாவோ திகைப்போடு நின்றுவிட்டாள்.

ஏனேன்றால் இது அவனின் இயல்பே இல்லை. ராகவனுக்கு பேச தெரியுமா என பல நாள் யோசித்தருகிறாள் கீர்த்தனா. காரணம், அவன் யாரிடமும் நின்று பேசி அவள் பார்த்ததே இல்லை!! கேட்ட கேள்விக்கு பதில் அவ்வளவு தான். அவன் அன்னை அக்காவிடம் கூட மனம் விட்டு பேசி அவள் பார்த்ததே இல்லை. அப்படிப்பட்டவன் கத்திவிட்டு சென்றதை அவளால் நம்ப முடியவில்லை!!


------------------

மனைவிக்காக படுக்கையை விரித்து காத்துக் கொண்டு இருந்தான் ராகவன்! உள்ளே வந்தவளோ அங்கு ஒருவன் இருப்பதையே கண்டுக்காமல் வேகமாக சென்று கட்டிலில் நான்கு வயதான தன் இரட்டை பெண்பிள்ளைகளுக்கு நடுவில் படுத்து கொண்டாள். பத்து நிமிஷம் சென்று இருக்கும் தூங்குவது போல் நடித்துக் கொண்டு இருந்தவள் ’இன்னும் ஒன்னும் நடக்கவில்லையே’ என ஒரு கண் திறந்து எட்டி பார்த்தவள், கை கட்டி கொண்டு இருக்கும் நின்று இருக்கும் கணவனை கண்டு பட்டென கண்களை மூடிக்கொண்டாள்.

”ரொம்ப நடிக்காத கீழே இறங்கி வா டி!” என அவள் காலை பிடித்து இழுக்க இவளோ கோப சிணுங்கலுடன்

”ப்ச்! விடுங்க ராகவ். உங்களுக்கு தேவைன்னா தான் என் நியாபகம் வரும். மற்ற நேரத்தில் வீட்டில் ஒருத்தி இருப்பதே உங்க கண்ணனுக்கு தெரியாது!!” என புலம்பியவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் அவளை சற்றும் சமாதனம் செய்யாமல் தன் காரியத்தில் இறங்க அவளோ அவனை பட்டென விளக்கியபடி

”நீங்க ஏன் இப்படி இருக்கீங்க ராகவ்?? உங்களுக்கு என்ன சரியா படுதோ அதை தான் செய்றீங்க! ஆனால் என் மனதை கொஞ்சமும் புரிஞ்சிக்க மாட்டீங்க..” என அவள் கண்ணில் கண்ணீரோடு சொல்ல.பெருமூச்சு ஒன்றைஇ வெளியிட்டவன்,

”சரி சொல்லு என்ன உன் பிரச்சனை? என்ன வேணும் உனக்கு?”

”அ..அவள் இங்க இருக்க கூடாது! அந்த குழந்தையை கூட்டிட்டு ரெண்டு பெரும் கிளம்பனும்! நீங்க அவளை பார்க்க கூடாது!!” என சொல்ல தயங்கினாலும் தன் கூற்றை அழுத்தமாக பதிக்க, நொடியும் தாமதியாமல்

”முடியாது எனக்கு அவள் முக்கியம்!! அவ மட்டுமில்லை அந்த குழந்தையும் எனக்கு முக்கியம்!! என்றான் அவன்.

”என்னை விடவா ராகவ்??” என அவன் கண்ணை பார்த்து கேட்க. அவள் கருவிழியோடு தன் கருவிழியை உறவாடவிட்டவன் தீர்க்கமான குரலில்

”ஆமாம்!” என்றவன் கட்டிலில் சென்று படுத்துக்கொண்டான். இவளோ சிலை போல் நின்று விட்டாள்.
 
Last edited:

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெருங்கவா விலகவா உயிரே
அத்தியாயம்-1
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

என கீர்த்தனாவின் உதடுகள் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து கொண்டிருந்தாலும் அவள் கைகள் தன்பாட்டுக்கு விறுவிறுவென வேலை செய்து கொண்டிருந்தது. கீர்த்தனா பக்தி பழம் என சொல்வதற்கில்லை, வெள்ளிக்கிழமை போன்ற நாளும் கிழமையில் காலையிலே தலைகுளித்து வீட்டை துடைத்து பூஜையை முடித்துவிடுவாள்.

இன்று வெள்ளிக்கிழமை. அதுவும் ஆடி வெள்ளி. எனவே காலையிலே எழுந்து வடைபாயசத்தோடு சாப்பாடு செய்து கூடவே சர்க்கரை பொங்கல் மாவிளக்கு வைத்து சாமிக்கு பூஜையை முடித்தவள், காலையில் டிஃபனுக்கும் தனியாக இட்லி தேங்காய்சட்னி ரெடி செய்தாள். ஒரே ஆளாக இத்தனை வேலை செய்ததில் எப்போதும் விட இன்று சற்று தாமதமாகி விட அவசர அவசரமாக கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு லஞ்சு எடுத்து டப்பாக்களில் வைத்து கொண்டிருந்தாள்.

”மா! சீக்கிரம் மா. அப்பா பைக் எடுத்துட்டாரு…..” என மூன்றறை வயது ஆரு என்கிற ஆராதனா தன் மழலையில் குரல் கொடுக்க.

”மா ஸந்க்ஸ் என்ன வச்ச?” என தன் அதிதீவிர சந்தேகத்தை கேட்டாள் ஆருவின் இரட்டை சகோதிரி பரி என்கிற பிரத்தனா.
இவர்கள் பெற்றோர்களை தவிர வேறு யாராலும் இருவரையும் அடையாள காண முடியாத வகையில் ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரட்டை பிள்ளைகள் கீர்த்தனா-ராகவன் தம்பதிகளுக்கு.

தாங்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் கூறாமல் இருக்கும் அன்னையை கண்டு இருவரும் முறைத்தபடி, ”அம்மாஆ!!” என கத்த, செய்து கொண்டு இருக்கும் கைவேலையை பட்டென போட்டுவிட்டு

“எதுக்கு டி ரெண்டு பேரும் கத்தறிங்க? உங்களுக்கும் நான் இளிச்சவாயி! இதே உங்க அப்பாவா இருந்தா இந்நேரம் ரெண்டு பேரும் அவருக்கு குடை பிடிக்காத குறைய சேவகம் செய்வீங்க!!” என யார் மேலோ உள்ள கோபத்தை ஒன்றும் அறியாத பிள்ளைகளிடம் காட்ட, அம்மா என்ன கூறுகிறார் என புரியவில்லை இருந்தும் எதற்கோ திட்டுகிறார் என அறிந்து கொண்ட இரண்டு சமத்துகளும் தன் தாயின் காலை கட்டி கொண்டு,

”நோ அங்கிரி ம்மா!!” கோவம் கொள்ளாதே என ஆங்கிலத்தில் சொல்ல அதற்கெல்லாம் மசிபவளா நம் கீர்த்தி,

“போங்க டி ரொம்ப கொஞ்சாதிங்க. டேபிள் மேல பால் வச்சேன் எடுத்து குடிச்சிங்களா??: எனக் கேட்டபடி லஞ்ச் பையை எடுத்து கொண்டு ஹாலுக்கு வர இரண்டு பேரும் திரு திருவென முழித்துக் கொண்டே,

“குடிச்சிட்டோம் மா!” என மண்டையை உருட்ட அதில் சந்தேகமா அவர்களை பார்த்தபடி,

“உண்மையா குடிச்சிட்டுங்கிளா? அதிசயமா இருக்கே! பொய் சொல்லாம சொல்லுங்க குடிச்சிங்களா இல்லை பப்பிக்கு கொடுத்திங்கிளா??” என தன் செல்வங்களை பற்றி சரியாக கணித்தபடி கேட்க, இருவரும் மாட்டிக்கொண்ட தினுசில் தன் அன்னையை கண்டு மயக்கும் புன்னகையை சிந்தியபடி,

“மா! நான் மில்க் குடிச்சிட்டு இருந்தேனா அப்போ பப்பி சவுண்ட் போட்டுச்சா, அத பார்க்க பாவமா இருந்துச்சா அதான் என் மில்க்கை கொஞ்சம் இவளோ கொஞ்சம் தான் குடுத்தேன் மா!!” என பரி தன் இரண்டு பக்க சிண்டும் அசைந்தாட அபிநயத்தோடு சொல்ல,

”மா! அவ மட்டும் மில்க் கொடுத்து பப்பி கிட்ட குட் நேம் வாங்கறான்னு நானும் கொஞ்சம் என் மில்க்க கொடுத்தேன் ம்மா அப்போ தான் பப்பி என்கூட விளையாட வரும்!!” என ஆருவும் ஒத்து ஊத. இடுப்பில் கை வைத்தபடி அவர்களை முறைத்து பார்த்தவள்,

“தினமும் உங்களுக்கு இதே வேலையா போச்சு. உங்களுக்காக காலையில எழுந்து நான் சமைச்சு போடற சாப்பாடு கூட நம்ம வீட்டு பப்பி தான் சாப்பிடுது. நான் பெத்ததுங்க சாப்பிடமாட்டுதுங்க.. எனக்கு தெரியல உங்கள என்ன தான் செய்யணும்னு!!” என சொல்லியபடி இரண்டு பேர் காதையம் பிடித்து திருக வலிக்கவில்லையென்றாலும் தன் அம்மாவிடம் இருந்து தப்பிக்க

“ஆ!! ம்மா, விடு விடு!!” என இருவரும் ஒன்றாக அலற அவர்களின் காதுகளை விட்டுவிட்டு இருவரைம் இரண்டு பக்கமும் தூக்கி அவர்களின் கொலுகொலு கன்ன்ங்களை கடித்தவள்,

”இன்னைக்கு அம்மாக்கு கிஸ் கொடுத்திங்கிளாடி!!” என செல்லமாக திட்ட தன் அன்னை கடித்த கன்னத்தை தடவியபடி அவளை முறைத்து

”போ தரமாட்டோம்!” என இருவரும் தலையை சிலுப்பிக் கொண்டு அவளிடமிருந்து இறங்கப் பார்க்க எப்பவும் போல் அவர்களின் அந்த செல்லக் கோபத்தை ரசித்தபடி

”அப்போ அம்மா இந்த கன்னத்தையும் கடிப்பேன்!!” எனச் சொல்லிக் கொண்டு அடுத்த கன்னத்தை சற்று அழுத்தமாக கடித்தாள் கீர்த்தனா. இது தினப்படி அந்தவீட்டில் நடக்கும் ஒரு செயல். என்ன தான் தன் பெண்களின் சேட்டையில் கோவம் கொண்டாலும் அவர்களின் கன்னக்குழி சிரிப்பில் மயங்கிபுபவள், அவளும் குழந்தையாக சேர்ந்து தன்பிள்ளைகளுடன் வம்பு வளர்ப்பாள்.

”இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?? இது தான் அம்மாவும் பிள்ளையும் விளையாடும் நேரமா??” என கம்பிரமான ஆண் குரலில் அவசரமாக பிள்ளைகளை இறக்கிவிட, அவர்களும் இது தான் சாக்கென்று தன் தந்தையிடம் ஓடியவர்கள்

“அப்பா பாருங்க பா அம்மா எங்க சின்-அ கடிச்சிட்டே இருக்கா!” என ஆரு தன் அன்னையை பற்றி குற்ற பத்திரிகை வாசிக்க அவளை தூக்கிக் கொண்டவன்

“இருக்கா சொல்லக் கூடாது ஆரு, ரெஸ்பெக்ட் கொடுத்து பேசணும் சொல்லி இருக்கேன் தானே!” என மகளின் பேச்சை திருத்த முற்பட

“அம்மா மட்டும் எங்கள அடிக்கிறால அப்ப அப்படி தான் பேசுவோம்!” என பரி சத்தம் போட குனிந்து அவளையும் தூக்கி கொண்டவன்

“நீங்க மில்க் சாப்பிடலன்னு தான் அம்மா திட்றாங்க, ஒழுங்கா பால் குடிச்ச அம்மா திட்டமாட்டாங்க, அடிக்கமாட்டாங்க ஓகேவா!!” என மென்மையாக கேட்டான் ராகவன். கீர்த்தனாவின் கணவன்.

ராகவன் புகஹ்பெற்ற *****ஷோரூமின் மேனேஜராக இருக்கிறான். ஆரம்ப காலத்தில் சாதாரண சேல்ஸ் மேனாக சேர்ந்தவன், பின் சேல்ஸ் மேனேஜராக உயர்ந்து படிபடியாக தன் தகுதிகளை வளர்த்து தற்போது சென்னை கிளையின் மேனேஜராக பொறுப்பில் இருக்கிறான்.

”சரி கிளம்பலாமா இல்லை நீங்க உங்க அம்மா கூட வண்டியில போறீங்களா??” என கீர்த்தியை பார்த்துக் கொண்டே கேட்டவனின் கண்களில் நக்கல் இருந்ததோ??
பிள்ளைகள் பதில் சொல்லும் முன் அவசரமாக இடைபுகுந்தாள் கீர்த்தி,

“அச்சோ! வேணாம் வேணாம் நீங்களே கூப்பிட்டு போங்க. இந்த டிராஃபிக்ல போனா நான் நாளைக்கு காலையில தான் ஸ்கூலுக்கு போய் சேருவேன். ஆரு பரி உங்க பேக் எடுத்துட்டு கிளம்புங்க!!” என அனைவருக்கும் முன்னாடி வாசலில் போய் நின்று கொண்டாள் ராகவின் மனைவி.

‘இன்னும் ஒழுங்கா வண்டி ஓட்ட பயம், அதை சொல்லாம டிராபிக் அது இதுன்னு சாக்கு சொல்லிட்டு போறா! இரு உன்னை ஒரு நாள் முழுக்க தனியா வண்டியில அலையவிடறேன். அப்போ தான் உனக்குள் இருக்கும் பயம் போகும்!!’ என சொல்லிக்கொண்டவன் பிள்ளைகளுக்கான தலைக்கவசத்தை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.
பிள்ளைகளுக்கு அவர்களின் தளைகவசத்தை அணிவித்துக்கொண்டே,

”பரிமா ஆருமா இன்னைக்காவது யார்கிட்டயும் எந்த பிரச்சனையும் செய்யாம இருங்க. உங்க அப்பா என்கிட்ட போன்ல பேசறாரோ இல்லையோ உங்க கிளாஸ் மிஸ் தினமும் போன் போடறாங்கடி!! என்னால முடியல… அம்மா பாவமல்ல செல்லங்களா.. சோ யார் உங்க கிட்ட வம்பு பண்ணாலும் மிஸ் கிட்ட சொல்லுங்க, அத விட்டுட்டு நீங்களே தட்டி கேட்க கூடாது அது தப்பு புரிஞ்சுதா!!” என தன் அடங்காத செல்ல ராட்சசிகளுக்கு ஒரு கதா காலட்சேபம் எடுக்க, அவர்களோ புரிந்தும் புரியாமலும் மண்டைய மண்டைய ஆட்டிக் கொண்டு நின்றார்கள். அதை பார்த்துக் கொண்டே ஒரு சிறு சிரிப்போடு தன் வண்டியை ராகவ் ஸ்டார்ட் செய்ய, திடீரென நியாபகம் வந்தவளாக

”மாமா!” என அவள் கூப்பிட்டு முடிக்கு முன் அவன் தன்னை பார்த்த பார்வையில் அந்த மாமாவை தொண்டை குழியிலே முழுங்கி கொண்டவள்,

”அது பசங்க பிறந்த நாள் வருது டிரஸ் எடுக்கணும். நீங்க இன்னைக்கு சீக்கிரம் வந்து கூட்டிட்டு போறீங்களா??”

”ம்ம்.. இன்னைக்கு என்னால முடியாது. நீ கார்டு எடுத்துட்டு, கேப் புக் பண்ணி போயிட்டு வந்துடு!!” என்றவனை முறைத்து பார்த்தாள் கீர்த்தனா. அவள் முறைப்பில் கிடப்பில் போட்டுவிட்டு தன் வண்டியை கிளப்பியவன் எதிர் வீட்டு மாடியை பார்த்து இரண்டு முறை ஹாரணை ஒலிக்க விட, சில நொடிகளில் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பள்ளி சீருடையில் ஓடிவந்து மாடி சுவரை அவனால் முடிந்தவரை எக்கி ராகவனை பார்த்து சிரித்தபடி, அவனுக்கு எதிரில் அமர்ந்து இருந்தவர்களை பார்த்து கையசைத்தான். அவர்களும் இவனை கண்டவுடனே,

”ஹே அஜு! ஸ்கூலுக்கு கிளம்பிட்டியா? டாட்டா! நாம ஈவினிங் வந்து விளையாடலாம் என ப்ரத்தனா சொல்ல

”அஜு நெக்ஸ்ட் வீக் எங்களுக்கு பர்த்டே வரது! அம்மா டிரஸ் எடுக்க போறாங்க உனக்கு என்ன கலர் டிரஸ் வேணும் சொல்லு??” என கேட்க அவன் பதில் சொல்வதற்குள்,

”அவங்களுக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகுது கிளம்புங்க!!” என கீர்த்தி பல்லை கடித்துக்கொண்டு சொல்ல, வண்டியின் கண்ணாடி வழியே அவளை உணர்வுகளற்ற விழிகளால் பார்த்தவன், மேலே நின்று இருந்த அர்ஜுனை பார்த்து தலையசைத்துவிட்டு கிளம்பினான். அவன் தலையசைத்ததோ அந்த சிறுவனை நோக்கி தான், ஆனால் கீர்த்தனா என்றும் போல் இன்றும் அவன் அந்த சிறுவனுக்கு பின்னாடி நின்று கொண்டு இருந்த அழகிய இளமங்கையை பார்த்து தலையசைத்ததாக தவறாக எண்ணி கொண்டாள். அரண்டன் கண்ணுக்கு இருண்ட்தெல்லாம் பேய் என்னும் உவமை கீர்த்தனாவிற்க்கு பொருந்தும்.
கலங்கிய விழிகளோடு உள்ளே சென்று அமர்ந்தவளுக்கு பல விதமான குழப்பங்கள் தன் கணவனை எண்ணி!!! அவள் வாழ்க்கையை எண்ணி!

யார் அவள்?? இந்த கேள்வியை பல ஆயிரம் முறை அவனிடம் கேட்டு இருப்பாள் அதற்கு ஒரு பதில், ஒரே ஒரு பதில் சொன்னதில்லை அவன். அதுவும் முதலில் பிள்ளையோடு அவளை நேராக அழைத்து வந்ததே அவர்கள் வீட்டுக்கு தான்…
கணவனுக்கு தெரிந்தவள் என்று முறையில் கீர்த்தியும் அவர்களை நன்றாகவே கவனித்து கொண்டாள்… ஆனா நாள் போக்கில் ராகவன் அவர்களிடம் காட்டும் பாசமும் அக்கறையும் தாம் யாரென கேட்டும் பதில் கூறாததும் அவளுக்குள் அபாய மணியை ஒலிக்க விட…. தானும் தன் பிள்ளைகள் மட்டுமே கணவருக்கு முதன்மையா இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ராகவனை பலவிதமாக டார்சர் செய்து அவர்களை அவள் வீட்டை விட்டு வெளியேற்றினாள்.
மனைவியின் உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து அவர்களை வீட்டை விட்டு வெளிக்கொணர்ந்தாலும் தன் கண்ணெதிரே தான் இருவரும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அப்போது தான் காலியான எதிர்த்து வீட்டை வாடகைக்கு பிடித்து அங்கே அவர்களை குடியமர்த்தினான்…

இதில் மீண்டும் கொதித்தெழுந்த கீர்த்தனா, அவர்கள் அங்கே இருக்க கூடாது என அடம்பிடிக்க, ராகவன் அதை காதிலே வாங்கவில்லை,

’உனக்காக.. உன் பேச்சுக்காக அவர்களை இந்த வீட்டை விட்டு அனுப்பிவிட்டேன் இதற்கு மேல எதுவும் கேட்காதே! முக்கியமா என்ன நம்பாத உன்கிட்ட நான் எதுவும் சொல்லமாட்டேன்..!’ என அவள் மனதில் உள்ள சந்தேகத்தை சரியாக யூகித்து கொண்டவனை அதிர்ச்சியோடு நோக்கினாள் கீர்த்தி.

அவள் என்றும் ராகவனை சந்தேக பாடணும் என நினைக்கவில்லை. ஆனால் காணரநேமில்லாமல் கணவன் அவர்கள் மேல் காட்டும் அக்கறை தான் அவள் மனதில் ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணியிருக்கு இதில் அவனின் பதிலில் மனமுடந்து போனவள் பெரும் மனவுளச்சலுக்கு ஆளானாள் கூடவே இதனால் அவர்கள் திருமண பந்தமே கேள்வி குறியாக போகிறது என அவள் அப்போது அறியவில்லை. அவளின் எண்ணங்களை அறியாத ராகவனும் தன்னை எப்படி அவள் நம்பாமல் போனாள் என கோவத்தோடு அவளை தவிர்த்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டான்.

ஒரு சின்ன தீ பொறி போதும், பெரும் நெருப்பை உண்டாக்கி அழிவை ஏற்படுத்த!!!

கீர்த்தனாவின் மனதினுள் நம்பாமை என சிறு பொறி கொழ்ந்துவிட்டு அவள் வாழ்வையை அழிக்க காத்துக்கொண்டிருக்கு!!!
ராகவனின் காதலால் அது அணைக்கபடுமா அல்ல கீர்த்தனாவின் பயத்தால் தீ பொறி பெரு நெருப்பாக விசுறபடுமா???


உயிர் விலகும்
……..
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க?? ரொம்ப சாரி ஃப்ரெண்ட்ஸ் “என் காதல் செந்தூரன்” முடிச்சிட்டு ரொம்ப கேப் எடுத்துட்டேன். இதோ என் மூன்றாவது கதையான “நெருங்கவா விலகவா உயிரே” முதல் அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள் தோழமைகளே!

அடுத்த அத்தியாயம் சனிகிழமையன்று!!!

நட்புடன் உங்கள்
கலைமதி
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெருங்கவா விலகவா உயிரே
அத்தியாயம்-2

அலுவலகத்துக்குள் நுழைந்த ராகவனை ரிசப்ஷனில் இருந்த அழகிய மங்கை ’குட்மார்னிங்’ என புன்னகையுடன் வரவேற்றாள். அவளின் புத்துணர்ச்சியான அப்புன்னகை அவன் முகத்தையும் மலர செய்தததோடு,

‘தினமும் நான் கிளம்பிய பின் தான் கிளம்புகிறாள் ஆனால் எனக்கும் முன் அலுவலகம் வந்து விடறா! எத்தனை தடவை சொல்றது வண்டியை மெதுவா ஓட்டுனு!!’ என மனதுக்குள் எண்ணிக்கொண்டவன், ஒரு சிறு தலையசைப்புடன் தன் கேபினுள் நுழைந்தான்

அவன் மனதில் ஓடியதை அறிந்தது போல் புன்னகையுடன் தன் வேலையை கவனிக்களானா பல்லவி-அந்த அழகிய நங்கையின் பெயர் அர்ஜுனின் அன்னை. ஆனா தோற்றத்தில் அவளே சிறு பெண் போல் தான் இருப்பாள்.

இந்த அலுவலகத்தில் அவள் சேர்ந்து ஒரு ஐந்து ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும். ஏற்கனவே அவள் ரிசப்ஷனிஸ்ட் மற்றும் ஸ்டெனோகிராபராக இன்னும் பிற அலுவலகத்தில் பணி புரிந்தததால் ராகவனின் பரிந்துரை இல்லாமல் அவள் திறமையாலே இங்கு சேர்ந்தாள்.

இந்த ஊரில் அவளுக்கு தோழிகள், உறவுகள் என்று யாருமில்லை!! இங்கு என்று இல்லை தற்போது ராகவனை தவிர அவளுக்கு யாருமே இல்லையென்று சொல்லாம்!! அவளுக்கும் அவள் மகன் அஜுவிற்க்கும் ஒரே பாதுகாவலன் ராகவன் மட்டுமே!!

அதுவும் அவன் திருமணமானவன் என கேள்விப்பட்டபின் அவனுடன் வர தயங்கியவளை கட்டாயப்படுத்தி அவன் வீட்டுக்கே அழைத்து சென்றான் ராகவன். அதன் பின் கீர்த்தனாவின் கோவத்தில் அவன் வீட்டுக்கு எதிரே அவளை குடியமர்த்தினான்! அதை பல்லவியும் தடுக்கவில்லை. அவளுக்கு தேவை தற்போது ராகவனின் துணை.. அது போதும் என நிம்மதியோடு ’அடுத்து என்ன’ என தெரியாமல் விதி போக்கில் தன் வாழ்க்கை படகை ஓட்டிக் கொண்டு இருக்கிறாள்.

ஆனா அவளின் மனசாட்சி அவளிடம் நித்தமும் கேட்கும் ஒரே கேள்வி, ‘எத்தனை நாள் அவன் நிழலிலே வாழமுடியும்?’ என்பதே. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அதற்க்கு அவளிடம் பதில் இல்லை.

கதவு திறக்கும் ஒளியில் தன் நினைவில் இருந்து களைந்தவள், நிமிர்ந்து பார்க்க அங்கு அவளையே முறைத்து பார்த்தபடி சென்றான் வாசு!! அங்கு சூப்பர்வைசராக இருப்பவன், அதுமட்டுமல்லாது ராகவனின் உற்ற நண்பனும் கூட.

அவன் முறைப்புக்கு காரணம் அறிந்தவள், அவனை கண்டுகொள்ளாமல் ஒரு சிறு முகசுழிப்போடு கணினியில் அன்றைக்கான ஆர்டரை பார்வையிடலானாள்!!

அவளின் அந்த அலட்சியமான முக சுழிப்பில் ஆத்திரம் வரப் பெற்ற வாசு தன் வேகநடையை கோவ நடையாக்கி ராகவனின் அறைக்குள் சென்றவன்,

”நீ என்னடா ராகவா உன் மனசுக்குள்ள நினைச்சட்டு இருக்க??” என நண்பனிடம் எகிறினான்.

”ஏன்டா வந்ததும் வராததுமா இப்படி கத்தற??” என காதை தேய்த்துக் கொண்டவன், ”ம்ம் அப்புறம் என் மனசுல என்ன இருக்குன்னு என் பொண்டாட்டியாலே கண்டுபுடிக்க முடியல, நீ தெரிஞ்சு என்ன டா செய்ய போற??” என்றான் நக்கலாக.

”டேய் ஆனா உனக்கு இருக்க அழுத்தத்துக்கு…..!” என பல்லை கடித்தவன் தொடர்ந்து, ”பாவம்டா என் தங்கச்சி அவ எவளோ கஷ்டத்தை அனுபவிச்சிருக்கா, நீயாவது அவளை சந்தோஷமா வச்சுக்க கூடாதா??”

அதற்கு எதுவும் பதில் சொல்லாமல் கணினியில் முகத்தை புதைத்துக் கொண்டான் ராகவன்!!

இது வாசு எதிர்பார்த்தது தான்!! ராகவனை பற்றி முழுதும் அறிந்தவன் அவன்!! அவனின் கனவு, ஆசை, கொள்கை, மட்டுமல்லாது அவனின் துயரங்களை கூட அறிந்தவன் வாசு!! எதையும் ஒளிவுமறைவில்லாமல் ஒரு அளவுக்கோளோடு பகிர்ந்துக்கொள்வார்கள் நண்பர்கள் இருவரும்!! அதிலும் ராகவன் தன் குடும்ப வாழ்க்கையை பற்றி வாய திறக்கமாட்டான்.

தன்னோடு அவள் மகிழ்ச்சியா இருக்கிறாளா? இல்லையா? என்பது அவனுக்கு மட்டுமே ஆனது!! அதை தன் நண்பனோடு பகிர அவன் விரும்பவில்லை என்பதை உணர்ந்துகொண்ட வாசு ஒரு பெருமூச்சோடு,

“ம்ம் வாய திறக்கமாட்டியே? எப்படியோடா நீ கீர்த்தனாவோட நல்லா இருக்கனும். எனக்கு அது மட்டும் தான் வேணும்! இந்த பல்லவி யாருனு நீயே சொல்ற வர நான் இத பத்தி இனி கேட்கமாட்டேன்!!” என்றவனை நிமிர்த்து பார்த்து புரிதலோடு கூடிய புன்னகையை சிந்தியவன்,

“தேங்க்ஸ் வாசு! என்ன புரிஞ்சிகிட்டதுக்கு கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்.. நீ உன் தங்கச்சிய நினச்சு கவலைப்படாதே!!”

”அது ஓகே ராகவா கண்டிப்பா நீ எல்லாத்தையும் சரி பண்ணிடுவ… ஆனா இப்போ விஷயம் என்னனா உங்க வீடு இருக்கும் தெருவிலும் சரி, இங்க ஆஃபீசிலும் சரி உங்க ரெண்டு பேர பற்றியும் தப்பான வதந்தி கிளம்பிட்டுருக்க, முடிஞ்சவரை அது விஸ்வரூபம் எடுப்பதுக்குள்ள இந்த பிரச்னையை சரி செய்து விடு!!” என்றான் ஒரு நல்ல நண்பனாக.

ஒரு முறை அழுத்தமாக கண்மூடி திறந்தவன். பின் நிதானமாக,

“கண்டிப்பா வாசு! நான் பார்த்துக்குறேன். நீ இன்னைக்கு எங்க போற??” என்றான் தன் சொந்த விஷயங்களை மூட்டை கட்டிவிட்டு சிறந்த அலுவலகனாக,

“நான் குடோவுன் போறேன் ராகவா ஆடி ஆஃப்ர் செகண்ட் ஸ்டாக் இன்னைக்கு வருதுல சோ இன்னைக்கு முழுக்க எனக்கு அங்கையே நேரம் சரியா இருக்கும்…”

“ம்ம்…. இந்த முறை ஸ்டாக்கை கவனமா செக் பண்ணு வாசு! போனமுறை அவனுங்க செஞ்சது நியாபகம் இருக்குல்ல!”

”அதையெப்படி மறப்பேன்! அந்த போட்டி கம்பனிக்காரன், ஆளு தான் லூசு மாதிரி இருக்கான்… ஆனா சரியான வில்லத்தனம் புடிச்சவன்! எப்படி நமக்கே தெரியாம நம்ம ஸ்டாக் வண்டியை மாத்திவிட்டு நம்ம கம்பெனி பேர கெடுக்க பார்த்தான் அவன்!! நல்ல வேளை நீ அப்போ சரியான நேரத்துல சுதாரிச்சிட்டு திரும்பவும் ஸ்டாக் செக் செஞ்சு எல்லாத்தையும் கண்டுபிடிச்ச. இதனால நமக்கு நஷ்ட்டம் தான் பட், கம்பனி பேர் காப்பாத்தியாச்சு. ஆனா அடுத்த மாசம் மொத்த குழுமம் மீட்டீங்கல நீ பதில் சொல்லனுமே ராகவா என்ன பண்றது??”

”அதுக்கான ரிப்போர்ட்ஸ் நான் ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டேன் வாசு. நம்ம மேல தப்புயில்ல..அவங்க தான் இத செஞ்சாங்கன்னு சிசிடிவி ஆதாரத்தோட பக்காவா என்கிட்ட இருக்கு! இதுக்கு மேல அந்த போட்டி கம்பனிய எப்படி கவனிக்கமுன்னு மேலிடத்துக்கு தெரியும்! வாசு, நீ ஒவ்வொரு பாக்ஸும் திறந்து பாரு, பழய வேலிட் இல்லாத டிவி ஃப்ரிட்ஜ் நம்ம கம்பனி பேர போட்டுருக்கான்ன்னு…. ஏன்னா அவன் கைவைப்பதே அந்த பொருட்கள் மேல தான் புரியுதா!!” என தன்னை எச்சரிக்கும் நண்பனை பார்த்து,

”கண்டிப்பா ராகவா! சரி நான் கிளம்பறேன்.!” என வாசு விடைபெற்று சென்றுவிட, தன் மடி கணினியை மூடிவைத்து நாற்காலியில் தளர்வாக அமர்ந்து இருந்தவனின் முகம் முழுக்க யோசனையின் சாயல்கள்!!!

’மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ எனதுபோல் தன் வாழ்வு இருப்பதை எண்ணி அழுவதா! சிரிப்பதா! என அவனுக்கே தெரியவில்லை.

‘எந்த பிரச்னையுமில்லாமல் எப்படி இதை சரி செய்ய போறேன்?? முக்கியமா கீர்த்தி! இதனால் பாதிக்கப்பட போவது அவள் தானே? அவ மனம் புண்படாமல் எப்படி இதை சரி செய்ய போறேன்..? ஆனா ஒன்னு, எந்த காலத்திலேயும் அவ என்னையும், என் உணர்வுகளையும் புரிந்துகொள்ளவே மாட்டாள்!!’ என மனைவி பற்றி எண்ணியவன், அப்போது தான் அவள் கடைக்கு செல்வது பற்றி நியாபக வர அவசரமாக அவளுக்கு ஒரு கேப்பை ஏற்பாடு செய்து, அதை அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியவன் கூடவே நியாபகம் வந்தவனாக மற்றொரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தனது அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தான்.

---------------------------------

எப்பவும் ஷாப்பிங்கில் பெரிதாக ஆர்வம் கிடையாது கீர்த்திக்கு!! அவளின் முக்கிய ஆசையான பணி வீட்டை கவனிப்பதும், புருஷன், குழந்தைகளுக்கு விதவிதமா சமைத்து போட்டு அவர்களை கவனிப்பது என சராசரி குடும்ப தலைவியா இருப்பதே கீர்த்தியின் உயரிய லட்சியம்!!!

கடைதெருவுகளுக்கு கூட முன்னெல்லாம் தனியா செல்லவே மாட்டாள்… ராகவனின் அதட்டல் உருட்டலால் தான் வீட்டிற்க்கு தேவையான பொருட்கள் இன்னும் பிற அத்தியவசிய பொருலெல்லாம் தானே சென்று வாங்கி பழகிக் கொண்டாள்.

ஆனால் தீபவாளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் குடும்பத்தோடு சென்று ஜவுளி வாங்கி கொண்டு வருவார்கள், அது போல் வாரத்துக்கு ஒருமுறை ராகவன் தன குடும்பத்தை வெளியே அழைத்து செல்வான் அதெல்லாம் அவனை குறை சொல்ல முடியாது!! கீர்த்தியையும் சரி பிள்ளைகளையும் சரி அவன் கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்வான்.

என்னவொன்று அதை வெளிப்படையாக அவன் காட்டி கொள்ளமாட்டான்! ஆனால் அவனின் செய்கையில் அவனின் அக்கறை மிளிரும்!!

திருமணமான தினம் தொட்டே ராகவன் கீர்த்தனாவுக்கு புரியாத புதிர் தான்!! சின்ன வயசில் இருந்து அவனை தெரிந்து இருந்தாலும் அவனை பற்றி அவளுக்கும் ஒன்றும் அறியாதே!!

திடீர் பிரச்சனை, அதனை தொடர்ந்து இருவருக்கும் அவசர திருமணம்!!

அப்போது கீர்த்தனாவின் வயது பத்தொன்பது! திருமணமான சில நாட்கள் அவளிடம் கோவத்தையும் வெறுப்பையும் காட்டினாலும், இந்த திருமணத்தால் அவளின் படிப்பு பாதிப்படையா வகையில் ஒரு வருட படிப்பை முடிக்க வைத்தான். அதுவரை அவளை அவள் பெற்றோர் வீட்டிலே விட்டு சென்றான், அவள் படிப்பு முடிந்த அடுத்த நாளே அவளை தன்னோடு கூட்டி சென்றவன் அவளோடு வாழ்வும் ஆரம்பித்தான்.

அந்த இடைபட்ட காலத்தில் ராகவன் கீர்த்தனாவை விரும்பினானோ இல்லையோ கீர்த்தனா அனுதினமும் ராகவன் எண்ணங்களோடே உழன்றுகொண்டிருந்தாள்!! அவன் மேல் காதல் எப்போ வந்தது என அவள் அறியாள், ஆனா வந்துவிட்டது அதுவும் உயிர்காதல்!!!

அந்த காதல் கொடுத்த சொந்தமும், கணவன் எனும் பந்தமும், அவன் தனக்கு மட்டுமே எனும் உரிமை உணர்வும் அவளுள் சிறகைவிரித்தாட… அதன் விளைவு, கணவன் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் அவனின் ஒட்டுமொத்த சிந்தனையிலும் தாம் மட்டுமே ஆக்கிரமித்து இருக்கவேண்டும் என்ற எண்ணம் அவளுள் ஆழிபேரலையாக உருவாகிவிட்டதை ராகவன் அறியான்!!

இருந்தும் இதுவரை, அவள் தன் காதலை வாய் திறந்து கணவனிடம் சொன்னதில்லை! சொல்லவும் மாட்டாள்!! இது சுயமரியாதையோ அல்ல இதுவரை வார்த்தையால் தன் கணவர் தன்னிடம் கூறாத காதலை ஒரு பெண்ணாக தாம் முதலில் சொல்வதா! என்ற முற்போக்கு சிந்தனையோ காரணம் இல்லை!!

அவளின் ஒரே காரணம் அவள் மட்டுமே!!

தான் செய்த செயல், அதனால் விளைந்த தங்களின் அவசர திருமணம்! ராகவனுக்கு பிடிக்காத மனைவி! காலப்போக்கில் அவனுக்கு பிடித்தவள் தான் அவள் என கீர்த்தி அறிவுக்கு புரிந்தாலும் அவளின் மனது அதை ஏற்கவில்லை!!

’இன்னும் தன்னாலே எதையும் மறக்க முடியவில்லையே, ஒரு ஆண் அதுவும் கணவன் அவனால் எப்படி எளிதில் அதை மறந்து மன்னிக்கமுடியம்??’

திருமணமாகி ஆறு வருடம் கடந்தாலும், இரண்டு பிள்ளைகள் இருந்தாலும், சாதரண கணவன் மனைவியா சிரித்து பேசி கொஞ்சிகொண்டாலும் இதுவரை இருவருமே காதலை வெளிப்படையாக சொல்லிக்கொண்டது இல்லை‌!! அதேபோல் கடந்த காலத்தை பற்றி அவளும் அவனிடம் பேசியதில்லை, அவனும் அவளிடம் விளக்கம் கேட்டதில்லை!! இத்தனை வருடம் கணவனுடன் வாழ்ந்தாலும் தானாக அதைபற்றி அவனிடம் பகிர அவளுக்கு பயம்!! அதேபோல் ராகவனும் இதை பற்றி ஏன் விசாரிக்கவில்லை என அவளுக்கு இன்றுவரை புரியாத ஒன்று!!!

இந்த குறையை தவிர வேறெதுவும் அவள் வாழ்வில் இதுவரை இடஞ்சலாக இருந்ததில்லை!! ஆனால்‌ திடிரென பல்லவி அஜுவின் வருகை! அவர்கள் யார் என ராகவ் தன்னிடம் கூற மறுப்பது, தனக்கு பிடிக்கவில்லையென்று தெரித்தும் கணவன் அவர்களுக்கு தரும் முக்கியத்துவம், இதனால் சிலநாட்களாக இருவருக்குமிடையே ஏற்படும் பூசல்கள்.. என தன் வாழ்வு மீண்டும் கருகிவிடுமோ என ஒரு அச்சம் அவளுக்குள் துளிர்விட ஆரம்பித்துள்ளது!!

ராகவன் மேல் சந்தேகம் என வார்தைக்கே அங்கு இடமில்லை!! தனக்கு பிடிக்காதவர்கள் அவனுக்கும் பிடிக்ககூடாது என அவளின் சிறுபிள்ளைதனமான குணமும். ’அப்படி யார் அந்த பெண் என்னிடம் கூட அவளை பற்றி கூறமாட்டேன்கிறார்?’ என அவள் முறுக்கிகொள்ள, மனைவியின் இந்த குணம் அறிந்தாலும் ராகவனின் அமைதியுமே அவளின் மனவுளச்சலுக்கு முக்கிய காரணி!!!

டேக்ஸி நிற்கவும் தம் சிந்தனைகளை களைத்தவள் பணம் செலுத்திவிட்டு வாங்கி வந்த பொருட்களுடன் உள்ளே சென்றாள்.

காலை பிள்ளைகளை பள்ளிக்கு கூப்பிட்டு செல்பவன் மதியம் அவர்களை அழைத்து வர ஆட்டோவை நியமனித்திருந்தான்!! யுகேஜி என்பதால் ஒரு மணி போல் அவர்களுக்கு பள்ளி நிறைவடைந்துவிடும் பள்ளியில் வேன் வசதியிருந்தாலும் அருகிலிருக்கும் வீட்டிர்க்கு மற்ற வேன் பிள்ளைகளையெல்லாம் விட்டுவிட்டு ஆருவும் பரியும் வீட்டிற்க்கு வர குறந்தது ஒரு மணி நேரமாகும், எனவே தான் இந்த ஆட்டோ ஏற்பாடு. ஒரு மணிக்கு பள்ளி நிறைவடைந்தால் ஒன்றரை மணிக்குள் பிள்ளைகள் வந்துவிடுவார்கள்

பதினொரு மணி போல் ஸ்னேக்ஸ் அல்லது மதிய லன்சை பள்ளியில் சாப்பிட்டிருந்தாலும் அவர்கள் பசி பொருத்து ஜூஸ் அல்லது சாப்பட்டை ஊட்டிவிட்டு அவர்களை தூங்கவிடுபவள் மாலை எழுப்பி கை கால் கழுவிவிட்டு பள்ளியில் நடத்தியதை ஒரு முறை படிக்கச் சொல்லிவிட்ட பின் முழு நேரமும் அவர்கள் விளையாட்டு நேரம் தான்!! இரவு தூங்க செல்வதற்க்கு முன் சிறிது நேரம் மட்டுமே பொம்மை சேனல்கள் பார்க்க கீர்த்தனா அனுமதிப்பாள் எனவே ஆறு மணி வரை இருவர் மட்டுமே விளையாடுபவர்கள் அதற்க்கு பின் அஜு அவர்களுடன் சேர்ந்துக் கொள்வான்.

அஜு பள்ளி இவர்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவு பல்லவி காலையில் அவனை விடுவிட்டு செல்பவள், அவன் படிப்பது முதலாம் வகுப்பென்பதால் நாலு மணிக்கு பள்ளி முடிந்த பின் ஐந்தரை மணி வரை பள்ளிக்கு அருகிலே டியுஷனில் அவனை சேர்த்து விட்டிருந்தாள், அதன்பின் மாலை தாம் அலுவலகம் விடு வரும் போது மகனையும் அழைத்து சென்றுவிடுவாள்.

----------------------------------

ஏழு மணி போல் ராகவன் வர பிள்ளைகள் மூவரும் வாசல் வரண்டாவில் அமர்ந்து ஏதோ நோட்டில் வரைந்துக் கொண்டிருந்தார்கள் தன் வண்டியை நிறுத்திவிட்டு வந்தவன்

”ஹாய் குட்டிஸ் என்ன வரையறிங்க??” தந்தையின் குரல் கேட்டவுடன் இரண்டு சிட்டுகளும் ”ப்பா!!” என ஒடோடி சென்று அவன் காலைக் கட்டிக் கொண்டு,

”ப்பா எங்க மிஸ் சேவ் வாட்டர் பத்தி படம் வரஞ்சிட்டு வர சொன்னாங்க… அம்மா கிட்ட கேட்டா இப்படி இப்படி வரையனும் சொல்லி தந்தா அதை நாங்க ட்ரா பண்ணிட்டு இருக்கோம்!!” என பரி மழலையில் மிளிற்ற

”ஆமா ப்பா! அஜூ எங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கான்!!” என ஆரு தன் பங்குக்கு செல்லம் கொஞ்ச, இருவரையும் இரண்டு கையிலும் தூக்கிகொண்ட ராகவன், நின்ற இடத்திலே கண்ணில் ஏக்கத்தோடு தன்னையே பார்க்கும் சிறுவனை கண்டு நெஞ்சை அடைத்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவன் அருகில் சென்றவன்,

”ஹே சார்ம்!! இன்னைக்கு மேட்ஸ் டெஸ்ட் எப்படி பண்ண?? அப்புறம் நேத்து உன்கூட சண்டை போட்டானே பிரவீன் அவன் கூட ஃப்ரெண்டு ஆயிட்டியா??” என கேட்க, அவன் கேட்ட்தே போதுமானதாக இருந்தது அஜுக்கு!!

ஆருவும் பரியும் ராகவன் வந்தவுடன் அவன் காலை கட்டிக்கொண்டு கதை சொல்ல, ’தனக்கு ஒரு தந்தை இல்லையே? இப்படி தானும் செல்லம் கொஞ்ச!’ என அவன் பிஞ்சு மனம் வெதும்பி போகும்!

என்ன தான் பல்லவி தந்தையுமானவளாக அவனை வளர்த்தாலும் அவனின் தந்தை ஏக்கம் அவனை விட்டு நீங்கவில்லை! அதுவும் ராகவனை பார்க்கும் போது தனக்கு இது போல் யாருமில்லையே என சிறுவன் ஏங்கி போவான்!! அதை உணர்ந்தே ராகவன் அவனிடம் பேச்சு கொடுப்பது. அவனின் கேள்வியில் அஜுவும் உற்சாகமாக

”ம்ம்.. அங்கிள் டெஸ்ட் சூப்பரா செஞ்சேன். அப்புறம் பிரவீன் கூட நீங்க சொன்னமாதிரியே பேசி பிரென்ட் ஆயிட்டேன், சாக்லேட் தந்தேன், அவனும் பிரென்ட் சொல்லி எனக்கு சாக்லேட் தந்தான், ஐம் சோ ஹாப்பி அங்கிள்!!”

”குட்! இது போல தான் இருக்கணும். அனாவசியமா யார்கூட சண்டை போடக்கூடாது, அதுபோல உன்ன யாராவது அடிச்ச உடனே உங்க கிளாஸ் மிஸ் கிட்ட சொல்லனும், நீ அவங்கள எதுவும் செய்யக்கூடாது ஓகே!!” என பெண்களை இறக்கிவிட்டு அவன் தலை கோதி கேட்க, அவனின் செய்கையில் முகம் மலர ”ம்ம்” என தலையாட்டினான் சின்னவன். அதை வாசல் அருகில் நின்ற படி கீர்த்தனாவும், தன் வீட்டு மாடியில் நின்றபடி பல்லவியும் பார்த்து கொண்டு நின்றார்கள்!

”சரி வாங்க உள்ள போவோம்! அப்பா பிரஷ்ஷப் பண்ணிட்டு வரேன் சாப்பிடலாம்!!” என்றபடி அவன் உள் நடக்க அவசரமாக வந்து அவன் பையை வாங்கி கொண்டாள் கீர்த்தனா சற்று கோபம் கலந்த முகத்துடன்.

’ஒஹ் மேடம் இன்னும் கோவமா தான் இருக்காங்களா?’ என்று எண்ணியபடி உள்ளே செல்ல அவன் போவதையே தன் வீட்டு மாடியில் பார்த்த படி நின்று இருந்தாள் பல்லவி

உயிர் விலகும்……
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க?? இதோ நெருங்கவா விலகவா உயிரே அத்தியாயம்-2 பதிந்துவிட்டேன்… படித்துவிட்டு உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் தோழாமைகளே.அவசர அவசரமா டைப் செஞ்சேன் அதனால இன்னைக்கு சின்ன யுடி தான் சாரி ஃப்ரெண்ட்ஸ்.

போன அத்தியாயத்துக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கும் சைலண்ட் ரீடருக்கும் நன்றிகள்…

அடுத்த அத்தியாயம் புதன்கிழமையன்று

நட்புடன் உங்கள்
கலைமதி
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், எல்லோரும் எப்படி இருக்கீங்க?? என்னை யாருக்கெல்லாம் நினைவு இருக்கு??
என் மேல ரொம்ப கோவமா இருக்கீங்க போல?? ரொம்ப சாரி டியர்ஸ் இத்தனை கால தாமதத்திற்கு.. அடுத்த மாதம் நிச்சயம் ராகவன் - கீர்த்தனா உங்களை சந்திக்க வருவாங்க... என்னை நம்புங்கோ நியான்மாரே..

அப்புறம் அமெஸான் கிண்டலில், எனது முதல் கதையான “காதல் வைத்து காத்திருந்தேன்” இன்றும் நாளையும் இலவசமாக படிக்கலாம்…
படித்துவிட்டு உங்க கருத்துகளையும் பகிர்ந்துக் கொள்ளலாம்
காதல் வைத்து காத்திருந்தேன் (Tamil Edition) eBook: MATHI, KALAI: Amazon.in: Kindle Store
 
Status
Not open for further replies.
Top