All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா-மோகனின்-காதல்-காற்று-கதை-திரி

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏபி-13




அதிகாலை நாலு மணிக்கே மையூவுக்கு விழிப்பு தட்டி எழுந்துவிட. . அய்யயோ இவளோ நேரம் தூங்கி இருக்கேனா நேரம் ஆச்சே இன்னைக்கு ஆபீஸ் வேற போகணுமே இவங்க வேற எழுந்துட்டாங்களானே தெரியலையே அம்மா வேற நேத்தே சொன்னாங்க சீக்கிரம் எழுந்து கூடமாட வேளையே பார்க்கணும்னு என தனக்கு தானே பேசிக்கொண்டே அவசரமாக . எழுந்து மாற்று உடையே எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள் குளித்து உடை மாற்றிவிட்டு தான் இருந்த அறையே விட்டு வந்து பார்த்தவள் கார்த்திக் இன்னும் எழாமல் உறங்கி கொண்டு இருப்பது தெரிந்தது.. ” ஹப்பாடா இன்னும் தூங்கிட்டு தான் இருக்காங்க என்று மையூ கீழே சென்றாள்

வீட்டின் அமைதியே பார்த்து இன்னும் யாரும் எழவில்லை தெரிந்தது ,எல்லாரும் வருவதுக்குள் வேலையே முடித்து விடலாம் என்று முதலிலஅவளுக்கு பிடித்த பூஜை அறைய நோக்கி நடந்தாள் அப்போதுதான் அங்கே வேலை பார்ப்பவர் உறங்கி கொண்டு இருந்தவர் . இவளை கண்டதும்.அவசரமாய் எழுந்து

” என்னம்மா ஏதும் வேணும்களா . “என கேட்க

” எனக்கும் ஒன்னும் வேணாம் . நீங்க பால் மட்டும் காய்ச்சி வையுங்க.. நான் பூஜை முடிச்சுட்டு வந்துறேன்.. என்று சொல்லிவிட்டு . பூஜை அறைக்கு சென்றவள்
அங்கே.. அறையே சுத்தம் செய்து.. விளக்கு ஏற்றி..வீடு முழுவதும் தூபம் போட்டுக்கொண்டே
வந்தாள் முருகன் துதி பாடிக்கொண்டே
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே. என பாட ஆரம்பிக்க..
_____________________
ரகு.. தூக்கத்தில் , என் பொண்டாட்டிக்கு வேற வேலை இல்லை.. சாமத்துல தான் தூபம் போட்டு விட்டு உசுர வாங்குவா..என திரும்பி படுக்க அப்போது தான் அவர் அருகில்.. ராஜி இருப்பது தெரிந்து.. இவ இங்க இருக்கா வெளியே யாரு சாம்பிராணி புகை போட்டுவிட்டது.. என ராஜியை எழுப்பி விட..,ராஜி எழுந்திரிம்மா

ஏங்க. கொஞ்சம் நேரம் சும்மா இருங்க நான் தூங்கணும்.. இப்போ எதுக்கு எழுப்புறிங்க என
அவர் திரும்பி படுத்து உறங்கி விட்டார்


அடியே.. எழுந்துரி ம்மா வெளியே என்ன சத்தம்.. நீ தான் டிவி போட்டுவிட்டு வந்தியா, தூபம் வேற போட்டு இருக்கு

அதை கேட்டு எது நானா ராஜியும் எழுந்து அமர.. அப்போது தான் அவருக்கு அந்த குரல் கேட்டது..
ஆமாங்க யாரா இருக்கும்..ஒரு வேலை நந்தினியா இருக்குமா..

ரகு தன் மனைவியே முறைத்து ” அவளா, நல்லா என் வாயில எதாவுது வந்துவிட போகுது ராஜி.. கௌசிக்கே அந்த கேட்ட பழக்கம் கிடையாது.. அவ பெத்த பொண்ணு.. நந்தினிக்கு இருக்குமா என்று சொல்லிவிட்டு வா முதல வெளியே போய் பார்க்கலாம் என இருவரும் வெளியே சென்று பார்க்க..
அங்கே வீடு முழுவதும்.. தூபம் போட்டு.. தீபாராதனை.. கட்டி பூஜையே முடித்துவிட்டு. மையூ வர சரியாக இருந்தது


மையூவை பார்த்து ராஜி என்னம்மா இந்த நேரத்துல..என கேட்க

அவரை பார்த்து அத்தை அது இன்னைக்கு வெள்ளிக்கிழமைல அதான்..

நல்ல பொண்ணும்மா நீ அதுக்குன்னு இவ்வளோ சீக்கிரமே. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி இருக்கலாமே, என மையூவை ஆராய்ந்த படி கேட்க

பரவாயில்லை அத்தை காபி சாப்பிடறீங்களா ,

அது எல்லாம் வேண்டாம் ம்மா., இன்னும் கொஞ்சம் நேரம் ஆகணும்

சாரி அத்தை உங்க தூக்கத்த கெடுத்துட்டேனா

அடடா என்னமா நீ அது எல்லாம் ஒன்னும் இல்லை.. கல்யாண வேலை அசதில தூங்கிட்டேன். இல்லைனா. இந்நேரம் வீட்டு வேலைல நேரம் சரியாய் போய் இருக்கும்.அவரும் அவளிடம் அன்பாய் வீட்டின் வழக்கத்தை சொல்லிக்கொண்டு இருந்தார்

சரிங்க அத்தை காலையில என்ன செய்யணும் சொல்லுங்க அத்தை அதையே செஞ்சுடுறேன் ,மையூ கேட்க அப்போதுதான் தான் கார்த்திக். மாயா மாயா என அழைத்த படி. கீழே இறங்கி
வந்தான்.

“அவன் குரல் கேட்டு. என்னங்க என்று அவன் முன்னாள் சென்று நிற்க.

” ஓ காட் நீ இங்க தான் இருக்கியா உன்னை மேல தேடிட்டு இருந்தேன் அதான்.

நான் அப்போவே கீழே வந்துட்டேன் , ஏதும் வேனுமாங்க அவள் கேட்க

எனக்கு ஒன்னும் வேண்டாம் நீ கிளம்பி ரெடியா இரு இன்னைக்கி நீ ஆபீஸ் போகணும் என சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான்

ராஜி மருமகளை. கேள்வி உடன் பார்த்த படி நின்றார். ரகுவோ ராஜி பேசட்டும் என செய்தி தாள் உடன். அங்கே இருந்த சோபாவில் அமர்ந்துவிட

ராஜி என்னமா இது ஆபீஸ் அது என்னமோ சொல்லிட்டு போறானே, கார்த்திக் என்ன விசயம் கேட்க

மையூ மனதுக்குள் கடவுளே இப்பிடியா சொல்லிட்டு போவாங்க.. இப்போ அத்தைக்கு என்ன பதில் சொல்லுவேன். என அவள் திணற அப்போது பார்த்து நந்தினி. அங்கே வந்தாள்
அத்தை இப்போ எதுக்கு இந்த விசாரணை.. மையூ நேத்து என் கிட்ட சொன்னா நானும் சரி நீ எப்போவும் போல உன் வேளைக்கு போ சொல்லிட்டேன். கார்த்திக் அப்புறம் உங்க கிட்ட நானே பேசுறேன் சொன்னேன்.. அவ போகட்டும் அத்தை. அப்போ தானே அவ டிரீட்மெண்ட்க்கு உதவும் அந்த பணம். என நந்தினி அவள் போக்கில் பேச

ராஜிக்கோ . கோபம் தலைக்கு ஏறியது.. ” என்ன பொண்ணு இவ அப்பிடியே இவளை அறைஞ்சா தான் என்ன. என்று தோன்றியது.. இதுக்கு மேல் அவளை பேசவிட்டாள் சரி வராது என்று நிறுத்து நந்தினி போதும் நீ பேசினது ,முழுமையா கோபத்தை காட்ட முடியலைன்னு நாளும் சற்று கடுமையா தான் அவர் பேசினார் கல்யாணம் முடிஞ்ச மறுநாளே வீட்டு மருமக வேலைக்கு போறேன் சொன்னா. நம்மள பத்தி நாலு பேரு என்ன சொல்லுவாங்க அதுவும் இல்லாம மையூ வேலைக்கு தான் போகணும் என்ன அவசியம்.

நந்தினிக்கு .” ஆஹா. அத்தை இப்பிடி பேசுறது நமக்கு ஆபத்து ஆச்சே . என துணைக்கு வேதாச்சலத்தை தேட அவள் நினைத்தது போல் அவர் அங்கே வந்து சேர்ந்தார் ..
என்னம்மா என்ன பிரச்சனை காலங்காத்தால என கேட்க

இல்லை மாமா மையூ வேலைக்கு போகணுமா இதோ இவ என்னமோ பெரிய மனுசி மாதிரி. அவளுக்கு சரின்னு வேற சொல்லி இருக்கா அப்புறமா நம்மகிட்ட சொல்லணும் இருந்தாலாமா என்னனு நீங்க கேளுங்க..

ஹ்ம்ம் இது முன்னவே எனக்கு தெரியுமே ராஜி நீ எதுக்கு கோப படுற.. மருமக வேலைக்கு போகட்டும்.. என மருமகளை பார்வையில அடக்க. அவர் பேச்சுக்கு மரியாதையை கொடுத்து ராஜி அமைதி ஆகிவிட்டார்..

ராஜியின் முக மாறுதலை.. கவனித்த மையூ உண்மையிலே பயந்துவிட்டாள். மெல்ல ராஜி சென்று அவர் கையே பிடித்து அத்தை.. உங்களுக்கு பிடிக்கலைன்னா நான் போகல.. என அழுத்துவிடுவது போல் சொல்ல.

அதைக்கண்டு ராஜி.. ” ச்சு அது எல்லாம் ஒன்னும் இல்லை மையூ நீ போய் கிளம்பு சாப்பாடு.. எல்லாம் இன்னும் கொஞ்சம் நேரத்துல ரெடி ஆகிடும் என்று சொல்ல.
அப்போது தான் விஸ்மையாவுக்கு நிம்மதி ஆனது. அவரை பார்த்து தேங்க்ஸ் அத்தை.. என சொல்லிவிட்டு அவளோட அறைக்கு சென்று விட்டாள்

நந்தினி தான் வேதாச்சலம் இடம் சென்று.. என்ன தாத்தா அத்தை இவ்வளோ கோப படுறாங்க நான் இந்த வீட்டு பொண்ணு தானே என கண்ணீரை துடைத்த வராத படி.. கேட்க.

வேதாச்சலம் , ” நந்தினி. அது கோபம் இல்லை வருத்தம் பெரியவங்க இருக்கும் போது நீங்களா முடிவு பண்ணினா நாளைக்கு ஒரு பிரச்சனைன்னு வரும் போது அது எவ்வளோ கஷ்டமா இருக்கும்னு யோசிக்கணும் நந்தினி, அதுக்கு தான் ராஜி பயப்படுறது

” இருந்தாலும் தாத்தா “

” போதும் நந்தினி. உனக்கு வெளியே போற இருக்குல்ல அத பாரு ராஜியை அத மறந்துட்டா. நீ ஏன் இந்த விசயத்தை பேசி இன்னும் பெருசா ஆக்குற ” என சற்று அவர் குரல் உயர்த்தி சொல்ல.

இனி பேசி ஒரு பயன் இல்லை என்று நந்தினி மனதுக்குள் ராஜியை திட்டியே படி சென்றாள்..
” அவள் சென்ற உடன் வேதாச்சலம் ராஜியை அழைக்க”

” சொல்லுங்க மாமா “

நீ இனி ஏதும் பேச வேண்டாமா .. எல்லாம் கார்த்திக் பார்த்துக்குவான்.. சரியா. ஒரு குழப்பமும் வேண்டாம் . என அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.

இங்க தனது ஜோகிங் முடித்து விட்டு அறைக்கு திரும்பியவன் அங்கே மையூ இன்னும் கிளம்பாமல்.. ஏதோ யோசித்த படி அமர்ந்து இருப்பதை பார்த்து
என்ன இவ இப்பிடி உட்காந்து இருக்கா ..அவள் அருகில் சென்று
” மையூ ” என அவன் அழைக்க.
அவள் இடம் இருந்து எந்த ஒரு பதில் இல்லாமல் போக .. மீண்டும் குரல் உயர்த்தி மையூ ..மையூ என்று அழைக்க.

அப்போது.. தான் மையூ , ” ஹான். ஏ, என்னங்க எப்போ வந்திங்க.. “

” நான் வரத்து இருக்கட்டும். என்ன ஆச்சு உனக்கு அப்பிடி என்ன யோசனை.. யாரு வரா -போறா கூட தெரியாத அளவுக்கு.. “

” இல்லங்க.. பெருசா ஒன்னும் இல்லை. நந்தினி இன்னைக்கு அத்தை கிட்ட பேசினது பத்தி யோசிச்சுகிட்டு இருந்தேன் அவ்வளோ தான்.”

” ஓ. ” அதற்கு மேல் அவன் ஏதும் பேசவில்லை.
வேதாச்சலம் அவனுக்கு முன்பே நந்தினி பேசியது எல்லாம் சொல்லிவிட., அவன் நந்தினியை பற்றி மேலும் அவளின் செய்யலை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். இன்னும் சொல்ல போலாம் அவள் எந்த அளவிற்கு. தான் போவாள் தான் பார்ப்போமே என்று அவள் வழியில் சென்று அவளுக்கு சரியான புகட்டணும் என முடிவு செய்தான் அவன் இப்போ மாயாவும் இப்பிடி சொல்லவும்.. அவன் மனதுக்கு கொஞ்சம் கஷ்டமா தன இருந்தது.. இருந்தும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல். மையூவிடம் விடு மையூ எல்லாம் நான் பார்த்துகிறேன்.. இப்போ நீ கிளம்பு ஆபீஸ்க்கு, .

சரிங்க என்று அவள் கிளம்ப வர சென்று விட..
கார்த்திக் அங்கே இருந்த மற்றோரு அறைக்கு சென்று கிளம்பி வந்தான்.. போலாமா மையூ .

” போலாம்ங்க “
என இருவரும் கீழே வர அவர்கள் வருவதை பார்த்து ராஜி. மனதுக்குள் . இப்போ போல . எப்போவும் ரெண்டு பெரும் ஒண்ணா இறக்கணும் கடவுளே என வேண்டினார்.
ராஜி அருகில் வந்த கார்த்திக். ” அம்மா மையூ இன்னையில இருந்து ஆபீஸ் போறதா அதுவும் இல்லாம அவ படிச்சது ஏதும் வேஸ்ட் ஆகா வேண்டாமே. தான் நான் சரின்னு சொன்னேன். “அவன் தாய்க்கு விளக்கம் குடுக்க

“சரி கார்த்திக். ஆனா “
” ஒரு பயம் வேண்டாம் மா . நான் பார்த்துகிறேன். என்று அவன் சொல்லிவிட.. “
“பிறகு ராஜி மையூவிடம் ‘ இங்க பாரும்மா ஆபீஸ் போனதும். எப்போ எல்லாம் பிரீ டைம் கிடைக்குதோ போன் செய்து பேசணும்.. . சரியாய் என சின்ன குழந்தை சொல்வது சொல்ல. “

” அவளும் அவர் சொல்லுவார்த்துக்கு எல்லாம் சரி என்று தலை அசைத்துவைத்தால். “
” கார்த்திக்.. அவள் செய்கையே பார்த்து மனதுக்குள் சிரித்த படி அமர்ந்து இருந்தான் பிறகு.. வரையே திறந்து பேசினா. ராஜியிடம் யார் வாங்கி கட்டி கொள்வது. “
நேரம் ஆகி கொண்டு இருந்ததால். ” கார்த்திக் ,’ போதும் ம்மா மிச்சத்தை ஈவினிங் பேசிக்கோங்க நேரம் ஆச்சு , வா மாயா போகலாம். சொல்லி முடிக்கும் போதே
நந்தினி.. அங்கே வந்துவிட்டாள் ..’ கார்த்திக் மாயா ஆபீஸ்க்கு கிளம்பிட்டா போல . “

” அதுவரையில் தான் தாய் இடம் சிரித்த முகத்துடன் பேசி கொண்டு இருந்தவன்.. இவளை கண்டதும் ஒரு வித இறுக்கத்துடன்.. ” வெறுமென ” ஹ்ம்ம் ” என்று சொல்லிவிட்டு முன்னாள் சென்றுவிட..

இப்போது மாயாவுக்கு அவன் பின்னால் செல்வதா என்கிற குழப்பதுடன் இருந்தாள்
நந்தினி ராஜி இதற்கும் ஏதும் சொல்லிவிடுவார்களோ என்று அவசரமாக.. ‘ மையூ வா கிளம்பலாம்.. நேரம் ஆச்சுல்ல என்று வெளியே இருந்தே கத்தி அழைத்தான்

சரிங்க அத்தை அப்போ கிளம்புறேன் பை நந்து என இருவரிடமும் விடை பெற்று கிளம்ப போக

ஒரு நிமிஷம் மையூ , நானும் உன்கூட வரேன் என நந்தினியும் விஸ்மையவுடன் கிளம்பி சென்றாள்


இவ்வாறு கார்த்திக் -விஸ்மையா செல்லும் இடம் எல்லாம் நந்தினியும் செல்ல

ராஜி தான் ரகுவிடம் புழம்பி தள்ளிவிட்டார்..” என்னங்க இது ஊர்ல இல்லாத நியாயமா இருக்கு “
” இப்போ என்ன ஆச்சு ராஜி.. எதுக்கு இவ்வளோ கோபப்படுற ”

” ஆமாங்க நான் கோப போடுறது மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுது.. ஆனா இங்க நடக்குறது. ஏதும் உங்களுக்கு தெரியாதே.. “

” ஹே.. நான் என்னம்மா பண்ணினேன் சொன்ன தானே தெரியும் “
” இங்க பாருங்க. முதல உங்க தங்கிச்சி குடும்பத்தை அவங்க வீட்டுக்கு அனுப்பிவிடுங்க.. “

” என்ன ராஜி இது நீ இப்பிடி எல்லாம், பேசுவியா “ரகுவிற்கு அவ்வளோ ஆச்சரியம்

“ஏன் நான் என்ன ஊமையா.. , இவ்வளோ நாள் இப்பிடி பேசிருக்கேனா இல்ல இப்பிடி பேசி இருக்கேனா கேட்குறேன் இங்க என் புள்ளையோட வாழ்க்கையே.. போயிடும் போல இருக்குங்க .புள்ளையும் -மருமகளும் எங்க போனாலும் கூடவே போறா.. அவ… இப்பிடியே கார்த்திக் இருக்க தான் அவனுக்கு கல்யாணம் செய்து வச்சோமா நாம.. “

” ஹ்ம்ம் பிரச்சனை பெருசா தான் இருக்கு போல.. என ரகு யோசித்தவர்.. , சரி ராஜி இத பத்தி நான் அப்பா கிட்ட பேசுறேன்.. “என அப்போதைக்கு மனைவியே சமாதானம் செய்யே
” அது எல்லாம் தெரியாது நீங்க என்ன பண்ணுவீங்களோ பேசுவீங்களோ கௌசி நந்தினி அவங்க வீட்டுக்கு நாளைக்கே போய் ஆகணும் சொல்லிட்டேன்.. என்று முடிவாக சொல்லிவிட.. “
” ரகு.., சரி ராஜி நான் பேசுறேன் நீ இமோஷனல் ஆகிட்டு உடம்ப கெடுத்துக்காத.. “
” அரை மனதோடு.. வேறு வழி இல்லாமல்.. உறங்க சென்றார்.
” இரவு வெகு நேரம் கழித்து.. மையூ அறைக்குள் வர.. கார்த்திக்.. இன்னும் தனது லப்டோபைல் ஏதோ வேலை பார்த்து கொண்டு இருந்தான் “


அதை பார்த்து ., ”ஏங்க இன்னும் நீங்க தூங்கலையா. “

இனி தான் ம்மா கொஞ்சம் வேலை இருக்கு , நீ டப்ளேட்ஸ் எல்லாம் போட்டாச்சா.. “

” ஹ்ம் போட்டாச்சுங்க.. “

இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல்.. அவள் . தலை குனிந்த .. படி அமர்ந்து இருக்க.
கார்த்திக் தான் பேச ஆரம்பித்தான்.. , ‘ அப்புறம் வேலை எல்லாம் எப்பிடி போகுது..”

” நல்லா போகுது. , எல்லாரும் நல்ல பழகுறாங்க.. என பேச ஆரம்பித்தவர்கள்.. ” பிடித்தது பிடிக்காதது.. என அவர்களை பற்றி பேச , இப்பிடியே என்ன பேசினோம் , எதற்காக பேசினோம் தெரியாமல் இருவரும் நேரம் போனது தெரியாமல் பேசி கொண்டு இருந்தார்கள் [ இதை தான் ஸ்வீட் நத்திங் சொல்லுறவார்களோ ]

போதும் மையூ .. ரொம்ப நேரம் ஆச்சு தூங்கலாமா
.
” ஓகே குட் நைட் என சொல்லிவிட்டு அவள் அடுத்த ரூம்க்கு சென்று விட்டாள் ..

கார்த்திக் அவள் போன பின்பும் அப்பிடியே அமர்ந்து.. ” நந்தினியை பார்க்கறதுக்கு முன்னாடி உன்ன பார்த்து இருக்க கூடாதா மாயா., இப்போ விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் நான் தவிக்கிறது உனக்கு புரியுதா. . என மௌனமாய்.. அவள் அறையே பார்த்து பேசி கொண்டு இருந்தான்..
இவனது புழம்பலுக்கு வழி சொல்லுவது போல் ஏதும் நடந்துவிடாதா , ஹ்ம்ம் காலமும் கடவுளும் தான் சொல்ல வேண்டும்..
காற்று வீசும்.. ….
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPI -14

நாட்கள் அதுப்போக்கில் செல்ல விஸ்மையா -கார்த்திக் உறவு நல்ல நண்பர்கள் எங்கிற அளவிற்கு முன்னேறி இருந்தது , எந்த ஒரு விசயம் நாளும் மையூ தவறாமல் கார்த்திக்கிடம் ஒப்பித்துவிடுவாள் அவளது தினசரி கதைகளை கேட்க எவ்வளோ வேலை இருந்தாலும் சீக்கிரம் ஆஃபிஸில் இருந்து வந்துவிடுவான் . ஆனால் நந்தினி இடம் சிக்காமல் .

ஹலோ அம்மா ..

" டேய் சந்தோஷ் எப்படி டா இருக்க. இப்போதான் உனக்கு என்னோட ஞாபகம் வந்ததா "

" அம்மா பொறுமை பொறுமை ஒவ்வொரு கேள்வியா. கேளுங்க ம்மா அப்போதான் பதில் சொல்லுவேன் "

" போடா யாருக்கு வேணும் உன் பதில் "

" என்ன ம்மா மீ அப்பாவி "இப்படி நீங்க கோப படலாமா "

என சந்தோஷ் தாய் இடம் கெஞ்ச

சங்கரி ," சரி சரி ரொம்ப கெஞ்சாத எப்படி இருக்க . "

" எனக்கு என்ன நல்லா இருக்கேன் அப்பா எங்கே ம்மா "

" அவர் இன்னும் வரல டா , நீ சொல்லு , நல்லா வேலா வேலைக்கு சாப்பாடு எல்லாம் சாப்பிடுறியா . வேலை ஒன்றும் கஷ்டம் இல்லையே . எப்போ. லீவுக்கு ஊர். வர . " என சங்கரி பேசி கொண்டே போக

சந்தோஷ் , அம்மா ஸ்டாப் ஸ்டாப். கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு பேசுங்க. கோட். முதல பாப்புவ போய் பார்த்தீங்களா எப்படி இருக்கா அவ "

சங்கரிக்கு தெரியும் மகனை பற்றி மையூ பற்றி தெரிந்த பின்பு தான் அவர் கேட்கும் எந்தொரு கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று.

" அவ நல்லா இருக்கா. டா . ஆனா நான் தான் போய் இன்னும் புள்ளையே. பார்க்கல "
" என்ன அம்மா சொல்லுறீங்க பார்க்கல. ஆனா நல்லா இருக்கான்னு எப்படி சொல்லுறீங்க "அவனுக்கு இப்போது கோபம் வந்து விட்டது

" டேய் , பார்க்கல ஆனா தினமும் போன்ல பேசிட்டு தான் இருக்கேன் போதுமா வந்துட்டான் என்ன கேள்வி கேட்க என கோபமா அவரும் முணுமுணுக்க .

சந்தோஷ் " சாரி ம்மா என்னனு தெரியல பாப்பு கிட்ட பேசினேன் அப்போது இருந்தே என் மனசே சரி இல்லை . அதான் அப்படி கேட்டேன் ம்மா " என அவனும் வேதனை உடன் சொல்ல

அதை கேட்ட சங்கரிக்கோ, உள்ளம் பதறியது ," என்ன டா தம்பி சொல்லுற பாப்பா என்ன சொன்னா . "

" அது ஒன்னும் இல்லை ம்மா நேர்ல வந்து சொல்லுறேன் இப்போ அவளுக்கும் மாப்பிள்ளைக்கு சேர்த்து கிப்ட் அனுப்பி இருக்கேன் ரெண்டு நாள்ல வந்துடும் , நீங்களும் -அப்பாவும் அதை போய் கொடுத்துட்டு பார்த்துட்டு வாங்க "

" ஏன் டா நீ வரலையா "

"இல்லம்மா நான் அடுத்த மாசம் வருவேன் . எனக்காக நீங்களும் அப்பாவும் போய் பார்த்துட்டு வாங்க ப்ளீஸ் ம்மா " கெஞ்சினான்

"சரி டா " சங்கரியும் கேட்டுக்கொண்டார்

" நீங்க உங்க உடம்ப பார்துகொங்க அம்மா நான் அப்புறம் பேசுறேன் "

" சரி டா . நீயும் பார்த்துக்கோ . நேரத்துக்கு சாப்பிட்டு என சொல்லி விட்டு போனை வைத்தார்

அவர் மனதிலும் குழப்பத்திற்கான நிலைமை , " என்ன இந்த பையன் இப்பிடி சொல்லுறான் .என்னவா இருக்கும் . ஒரு வேலை மையூவுக்கு நிஜமாலுமே பிரச்சனையா இருக்குமோ ... என்று யோசித்த படி அமர்ந்து விட்டார்

அப்போது தான் ராமன். வேலை. முடித்து விட்டு வீடு வந்தவர் . என்ன இது வீடு இப்பிடி திறந்து கிடக்கு எங்க போனா இவ என யோசித்த படி உள்ளே வர அங்கே சங்கரி விஸ்மையா பற்றி நினைத்து கொண்டு எங்கயோ வெறித்து பார்த்த படி அமர்ந்து இருந்ததை பார்த்து . என்ன ஆச்சு இவளுக்கு . " சங்கரி ஏய் சங்கரி "

ராமன் குரலில் பதறியே சங்கரி " ஏ... என்னங்க. எப்போ. வந்திங்க . "

" அது சரி நான். வந்தது கூட தெரியாம அப்பிடி என்ன யோசனை , கதவு வேற திறந்து கிடக்கு . "

" ச்சு ஒன்னும் இல்லை . ஏதோ யோசனை. அதவிடுங்க .நான் போய் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன் என அவர் எழ போக

ராமன் சங்கரி கையே பிடித்து உட்கரு முதல . என்ன விஷயம் சொல்லு அப்புறம் காபி பத்தி யோசிக்கலாம் "

" ஹ்ம்ம் " மீண்டும் சோபாவில்அமர்ந்த அவர் சந்தோஷ் தன்னிடம் பேசியதை. எல்லாம் சொல்ல. .

" எல்லாம் சரிதான் சங்கரி. ஆனா நம்ம எப்பிடி இதுல தலையிடுறது அதுளையும் என ராமன் இழுக்க "

"என்னங்க பேசறீங்க அந்த புள்ள பாவம். எதையும் யார் கிட்டயும் சொல்ல மாட்டா நம்மலா பார்த்து தெரிஞ்சுகிட்டா தான் உண்டு . "

" எல்லாம் சரி தான் சங்கரி. இப்போ. என்ன பண்ணுறது. "

" ரெண்டு நாள் கழிச்சு போய் நாம பார்த்துட்டு வரலாம் நீங்க என்ன சொல்லுறீங்க , என சங்கரி கணவன் இடம் கேட்க.

" நான் என்னத்த. சொல்ல . உன் இஷ்டம்.. , அப்புறம் இப்போ போயிட்டு எனக்கு ஒரு கப் காபி போட்டு எடுத்துட்டு வா "

" இதோ என சங்கரி காபி. எடுத்துட்டு வர போய் விட , ராமனும் சங்கரி சொன்னதை பற்றி யோசிக்க ஆரம்பித்தார் "

" சங்கரி காபி எடுத்துட்டு வந்து ராம் இடம் கொடுக்க.. "

ராமன் மீண்டும், ' சங்கரி எதுக்கும் தமோ கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு மையூவ பார்க்க போலாம் என்ன

" சரிங்க நான் போய் ருக்குமணி கிட்ட சொல்லிட்டு வந்துறேன் "

"சரி என ராமன் ஓய்வு எடுக்க சென்று விட சங்கரி விஸ்மையாவின் தாயே தேடி அவர் வீட்டுக்கு சென்று . அவர்கள் இடம் சொல்லிவிட்டு இரண்டு நாள் கழித்து கிளம்பிறதுக்கு எல்லா பொருட்டுகளையும் எடுத்து வைத்தார் .. "

———-

" மையூ .. ராஜி பேச்சை கேட்காமல் வீட்டில் உள்ள எல்லா வேலையும் தன் தலையில் போட்டுகொண்டு செய்துக்கொண்டு இருந்தாள்

.

அதை நந்தினி ஒரு கேலி சிரிப்பு உடன். பார்த்து கொண்டு இருந்தாள்... "

அப்போது தான் அந்த வீட்டில் வேலை செய்யும் வேலை ஆள்... ராஜிடம் .

அம்மா யாரோ மையூம்மாவை தேடி யாரோ வந்து இருகாங்க.என சொல்ல

நம்ம மையூவை தேடியா .. யாரா இருக்கும் .சரி நீ போ என வேலை ஆளை அனுப்பிவிட்டு . ராஜி யாரு என்று பார்க்க

அங்கே சங்கரி மற்றும் ராமன் நின்று... மையூ இருக்காளா .கேட்க

" நீங்க .. "

நாங்க என பதில் சொல்லணும் முன் விஸ்மையாவே அத்தை. இது சரியா வருமா பார்த்து சொல்லுங்க என வந்து சேர

அங்க அமர்ந்து இருந்த சங்கரியே பார்த்து. அத்தை.. என சந்தோஷத்தில் சிறுபிள்ளை போல் அவரை கட்டிக்கொண்டாள்

. " எப்போ வந்திங்க எப்பிடி இருக்கீங்க "

கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு பேசு மையூ ம்மா .. ... இப்போதான் வந்தோம் நல்லா இருக்கோம்

ராஜிடம் இந்தாங்க அக்கா என சில பொருட்கள் இருந்த பையே குடுக்க

அவர் இது எல்லா எதுக்கு...

சங்கரி , அது சரி அக்கா. புள்ளையே. பார்க்க வரேன் சும்மாவா வர முடியாதே அதுவும் இல்லாம மையூ ரெண்டு வீட்டுக்கும் ரொம்ப செல்லம்... அதான்

" ராஜியும் அதுற்கு பிறகு மறுப்பு சொல்லமல் வாங்கி மையூவிடம் குடுத்து உள்ளே போய் வை மையூம்மா அப்பிடியே சாப்பிட எதாவுது எடுத்துட்டு வா "

இதோ ஒரு நிமிஷம் அத்தை எ அவளுக்கு ன என அனைவருக்கும் சாப்பிட பலகாரம் எடுத்துட்டு வந்தாள்

.

சங்கரி மையூவிடம் நலம் விசாரித்தார். அவரது விசாரிப்பில் தன்னை ஆராய்வது போல் மையூவுக்கு தோன்ற ...

அவள் ராஜியே பார்த்து எதாவுது பண்ணுங்க அத்தை என பார்வையாளையே கெஞ்ச

அவருக்கும் இந்த நிலைமையே எப்பிடி சமாளிப்பது தெரியாமல் அமர்ந்து இருந்தாள்

அப்போதான் கார்த்திக் .. என்றும் இல்லாமல் சீக்கிரம் வந்துவிட

அவனை பார்த்ததும் தான் அவளுக்கு நிம்மதியானது "ஹப்படா இனி சமளிச்சுடலாம் .' சங்கரிடம் அத்தை. அவங்க வந்துட்டாங்க ' என்று சொல்ல

சங்கரி .எங்கே என்று பார்க்க அங்கே கார்த்திக் இவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தான் ..

அவனை பார்த்த சங்கரிக்கு மனதில் நம்ம புள்ளைக்கு ஏற்ற பையன் தான் தோன்றியது ராமனுக்கு அதே நிலை தான் "

" கார்த்திக் இவர்களை நெருங்கிவிட . யார் இவர்கள் என்பது. மையூவிடம் பார்வையாளையே கேட்க "

" இவங்க என் அத்தை மாமா .. என அறிமுகம் செய்தாள்.. "

" ஓ .. வாங்க என சொல்லிவிட்டு மையூவிடம் " ஒரு நிமிஷம் மேல வா என்று சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்று விட "

" மையூ அப்பிடியே அவன் சொன்னதை கேட்டு நின்றுவிட்டாள். மனதுக்குள் ' இது என்ன புதுசா இப்பிடி பேசிட்டு போறாங்க என அவள் முழித்த படி நிற்க

சங்கரி தான் என்ன யோசனை பாப்பா போ – அவளை துரத்த

இல்ல அத்தை அது ..

" வந்து போய் எல்லாம் ஒன்னும் இல்ல நீ போ

" அத்தை, நீங்க சாப்பிட "

"மையூம்மா இப்போதானே டீ சாப்பிட்டோம் அதுவும் இல்லாம நாங்க வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சு , உன்னையும் தம்பியையும் தான் பார்க்க வந்தோம் பார்த்துட்டோம் . இப்போ கிளம்புறோம்

அதை கேட்ட ராஜி , என்ன இது இப்போதான் வந்திங்க அதுக்குள்ள "

" அது எல்லாம் ஒன்னும் இல்லை அக்கா இன்னும் ஓரு நாள் வந்துட்டா போச்சு . அப்போ நாங்க கிளம்புறோம் என சங்கரி ராமன் ராஜி இடம் சொல்லிவிட்டு , மையூ பக்கம் திரும்பி நாங்க வரும் டா பார்த்துக்கோ , தம்பி கிட்ட சொல்லிட்டு என சொல்லிவிட்டு கிளம்பி சென்று விட

இப்போது மையூ தங்களது அறைக்கு எப்பிடி செல்வது என்று யோசனை உடன் தயங்கிய படி நிற்க

வந்தவர்களை வழி அனுப்பிவிட்டு வந்த ராஜி மையூவை பார்த்து.. " என்ன இவ இப்பிடி நின்னுகிட்டு இருக்கா என்று யோசித்த படி .. என்ன ஆச்சு மையூ ஏன் இப்பிடி நின்னுட்டு இருக்க "

அவரது குரலில் சுயநினைவுக்கு வந்தவள் . அவரிடம் , அத்தை அது .. அவங்க .. என பாதி பேச்சை மென்று விழுங்க

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து கொண்ட ராஜி ," அவளிடம் . மையூ எந்த குழப்பம் வேண்டாம் கார்த்திக் மேல பயமும் வேண்டாம் சரியா நீ போ என அவளை அனுப்பிவைத்தார் "

மையூவும், எதுக்கு வர சொன்னாங்க என்னவா இருக்கும் என்கிற யோசனை உடன் அறைக்கு செல்ல , அங்கே கார்த்திக் கட்டிலில் கண் மூடி உறங்குவது போல் இருக்க

அவ்வளோ நேரம் என்ன பேசுவது என்று குழம்பிய படி வந்த மையூ அவனின் நிலை பார்த்து அப்பிடியே நின்று விட்டாள்..

" என்ன இது நம்மள வர சொல்லிட்டு .இப்போ இவங்க தூங்குரங்க .. இப்போ எழுப்புறதா இல்ல திரும்ப கிழ போலாமா "

"கிழ போகலாம் தூங்கட்டும் என அவள் திரும்ப போக ," எங்க போற மையூ " – என. கார்த்திக் குரல் கேட்டு அப்பிடியே நின்றாள்

அவன் பக்கம் திரும்பி .. இல்ல நீங்க தூங்கிட்டு இருக்கீங்க நினச்சு கிழ போலாம்னு

என் மேல அவ்வளோ பயமா மையூ . இவ்வளோ நேரம் கழிச்சு . அம்மா சொல்லி. அத்தை சொல்லியும் யோசிச்சுட்டே வர – என வருத்தத்துடன் சொல்ல

" ஐயோ அப்பிடி இல்லைங்க நீங்க திடீர்னு அப்பிடி சொன்னா அத்தை என்ன நினைப்பாங்க "

" ஹ்ம்ம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க , "

" ஆமா. நினைக்க மாட்டாங்க நீங்க கண்டீங்க , சரி இப்போ எதுக்கு வர சொன்னிங்க என்ன விஷயம் "

" இப்போவாது கேட்க தோணுச்சே .. நான் எதுக்கு. வர சொன்னேன்னு , என்று அவளை கேலி செய்துவிட்டு . , உன் ட்ரீட்மெண்ட் பத்தி பேச தான் வர சொன்னேன் , என் பிரென்ட் க்கு தெரிஞ்சவர் ஒருத்தர் யு.எஸ் ல இருகாராம் அவர் இன்னும் கொஞ்சம் நாள்ல இந்தியா வர பொறாராம் அவர் கிட்ட பேசி உனக்கு ட்ரீட்மெண்ட் செய்யலாம் இருக்கேன், மாட்டேன் மட்டும் சொல்ல கூடாது , நான் எல்லாம் ஏற்பாடு செய்துட்டேன் என்று அவன் பேசி கொண்டே போக

மையூ அப்பிடியே உறைந்து போய் கண்ணீர் வழியே அமர்ந்து இருந்தாள்......


 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்














கார்த்திக் பேச பேச . மையூ அப்பிடியே அவன் அக்கரையில் கரைந்துவிட்டாள் .அவன் பேச அவளுக்கு அழுகை தான் வந்தது இதுக்கேல்லாம் எவ்வாறு கைம்மாறு செய்யே போகிறாள் என்று தோன்றியது விஸ்மையாவுக்கு .

அவள் அழுத்த படி அமர்ந்து இருப்பதை பார்த்து.பதறி போன கார்த்திக் தனது பேச்சை நிறுத்திவிட்டு. ,” ஹே என்ன ஆச்சு ஏன் இப்பிடி அழற. நா … நான் ஏதும் தப்பா

“அவன் சொன்னதை கேட்டு மையூ அழுது கொண்டே இல்லை என்று தலை அசைத்தாள் .”

“அப்புறம் எதுக்கு இவ்வளோ அழுகை “

” இல்லைங்க நீங்க, நந்தினி, அத்தை, மாமா , தாத்தா , எல்லாரும் என்ன எவ்வளோ நல்லா பார்த்துகிறீங்க, ஆனா இதுக்கு எல்லாம் சேர்த்து நான் என்ன திருப்பி செய்ய போறேன்னு தெரியல ,அதான் எனக்கு அழுகை வந்துருச்சு “

அதை கேட்ட கார்த்திக் மனதுக்குள்.. ” இப்பிடியே எனக்கு பொண்டாட்டியா இருந்தரு மையூ என்று அவன் நினைக்க… அவன் எண்ணம் போன போக்கில் கார்த்திக் அதிர்ந்து விட்டான்

இது எப்பிடி , நான் நந்தினியை தானே நேசிச்சேன் இப்போ மையூவிடம் என் இதயம் சரிந்த மாயம் என்ன “

“அவன் யோசனை களைப்பது போல் மையூ , ‘ ஆமா இப்போ என் ட்ரீட்மெண்ட் க்கு என்ன அவசரம் அதுவும் நானே இப்போதான் வேளைல , இப்போ எப்பிடி என்று சொன்னவளை பார்த்து கார்த்திக் ” அம்மா தாயே.. செலவு நான் தான் செய்ய போறேன் , நீ. எனக்கு எப்போ முடியுதோ அப்போ பணம் குடு சரியா “

” இந்த டீல் ஓகே என சந்தோசமாய் சொன்னவள் பிறகு. அவசரமாக நான் இந்த விசயத்தை இப்போவே அத்தை , நந்தினி கிட்ட சொல்லிட்டு வரேன் என்று கிளம்பியவளே கண்டு கார்த்திக்

சரியா போச்சு என இனி இவளை எப்பிடி தடுக்கிறது ஏய் நில்லு ..என அவளை தடுத்து நிறுத்தும் எண்ணத்தில் அவள் கை பிடிக்க
அதில் மையூ அவளின் சேலையில் கால் தடுக்கி கார்த்திக் மேல சரிந்து விழுந்துவிட்டாள் அவனோ .. ” ஹே பார்த்து.. என்று அவளை தாங்கி பிடித்தான் “

மையூ அதிர்ந்து போய்.எங்கே தன்னை தவறாக நினைத்து விட்டானோ என்று அவனை. பார்க்க . அவனோ ,அவள் எதுலையாவுது இடித்துவிட்டாளோ என ஆராய்த்தான்

மையூ உன்னை தான் கேட்குறேன். அடி ஏதும் படலைல என அவன் குரல் சற்று ஓங்கும்போது தான் அவள் .” ஹான் என்ன கேட்டீங்க “
“சரியா போச்சு மேடம் எந்த லோகத்துக்கு போய்ட்டீங்க “
“அப்பிடி எல்லாம் இல்லை அது சாரிங்க தெரியாம. “
” ப்ளீஸ் மையூ ரிலாக்ஸ் , “
நான் கீழ போறேன் என அவள் நகற ..
ஒரு நிமிஷம் மையூ ,
” என்ன என்பது போல் அவள் நிற்க”
” இப்போதைக்கு வீட்டுல யார் கிட்டயும் உன் ட்ரீட்மெண்ட் பத்தி சொல்ல வேண்டாம் யார் கிட்டயும் சரியா. நான் சொல்லுற வரைக்கும். “
“ஆனா “
“இந்த ஆனா ஆவானா எல்லாம் அப்புறம் முதல சொல்லுறது மட்டும் செய் சரியா நான் எதுக்கு சொல்லுறேன்னு உனக்கே போக போக புரியும் . “
அவன் சொல்லுவதை கேட்ட மையூவுக்கு எதுக்கு இப்பிடி சொல்லுறான் . என்று சற்று அதிர்ச்சியா இருந்தும் கேட்க முடியாமல் விட்டுவிட்டாள். சிறிது நேரம் அமைதியாக நேரம் போக.
மையூதான் மெல்ல இப்போவாது நான் கிழ போகவா..என கேட்க

“அவள் கேட்ட விதத்தில் கார்த்திக் சிரித்து விட்டான். ஹ்ம்ம் போ.. “
ஹப்படா என அவள் அவசரமாக கிழ வர

நந்தினி அவளை பிடித்து கொண்டு ஹே மையூ என்ன டி இவ்வளோ நேரம் எங்க போய் இருந்த.. ஆமா கார்த்திக் எங்க என அடுத்து அடுத்து கேள்வி கேட்க

மையூவுக்கு அவளது பேச்சு கேட்டு ஒரு மாதிரி ஆகி விட.. . அதற்க்கு மெல் நந்தினி பேச்சை கேட்க பிடிக்காமல். நந்தினி.. நான் அப்புறம் சொல்லுறேன் இப்போ எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நீ வேணும்னா அவங்க கிட்ட பேசிக்கோயேன். என்று சொல்லிவிட்டு ராஜியே தேடி போய் விட்டாள்

இதை எல்லாம் கவனித்து படி கார்த்திக் கீழே இறங்கி வர அங்கே நந்தினி மையூவிடம் பேசுவது தெரியே . இனிமேல் எப்பிடி நந்தினியை சமாளிக்க போறோம் என்கிற எண்ணத்துடன் கீழே இறங்கி வர

அவன் வருவதை பார்த்து … கார்த்தி என நந்தினி அவன் அருகில் செல்ல.
நந்து ப்ளீஸ் பசிக்குது அப்புறம் பேசலாம் .
என்று சொல்லிவிட்டு டைனிங் டேபிள் சென்று விட
அவன் போவதை பார்த்த
நந்தினி இன்னைக்கு என்ன ஆனாலும் சரி பேசியே ஆகாணும் என அவன் அருகில் சென்று அமர்ந்தாள்
மையூ . நந்தியின் திட்டம் தெரியாமல் .. உணவு எடுத்து பரிமாற போக
நந்தினி. மையூவை தடுத்து . மையூ நான் சேர்வ் பண்றேன் நீ எல்லாம் ஐடெம்ஸ் எடுத்துட்டு வா . என சொன்னாள்.
அதை கவனித்த ராஜி.. மையூ நீயும் உட்காரு எல்லாம் முத்து. எடுத்து வருவான், சொல்லிவிட்டார்

சரிங்க அத்தை என அவள் ராஜி அருகில் சென்றி உட்கார போக

அதை ராஜி இது என்னடா இது கொடுமை என்று யோசித்து விட்டு மையூ ஒரு நிமிஷம் .

அத்தை, மையூ அப்படியே நின்றுவிட

நந்தினி நீ இப்பிடி என் கிட்ட வா மையூ அங்க உட்காரட்டும்

நந்தினி, ” என்ன அத்தை இருக்கு இதுல யார் எங்கே உட்கார்ந்தா தான் என்ன “பட்டென்று பேசிவிட

அப்பிடி இல்லம்மா நீ என் பக்கம் வா மையூ கார்த்தி பக்கத்துல உட்காரட்டும், என பொறுமையாகவே பதில் சொன்னார்

நந்தினி கார்த்தி தனக்கு சேர்த்து பேசுவான் என்று அவன் முகம் பார்க்க

அவனோ கோபத்தில் பல்லை கடித்த படி அமர்ந்து இருந்தான்.

நந்தினி தன் அம்மாவிடம் அவ்வாறு பேசினது அவனுக்கு பிடிக்காமல் போக.

அவன் முக மாற்றத்தை கவனித்த நந்தினி ஏதும் பேசாமல் ராஜி அருகில் சென்று அமர்ந்துகொண்டாள் . மனதுக்குள் தனக்கு இன்றைக்கு நேரம் சரி இல்லை என நினைத்து கொண்டாள் .. என்ன ஆனாலும் சரி இன்னைக்கு இவனிடம் பேசியே ஆகணும் என்கிற முடிவு உடன் அமைதியாய் பரிமாறிய உணவை சாப்பிட்டால்.

வேதாச்சலம் மனதுக்குள் பரவாயில்லை நம்ம மருமக பொண்ணு நல்லா பார்போம் பண்ணுறா . என மெச்சி கொண்டார்

மையூ தான் சற்று திணறி போய் விட்டாள்.. நந்தினியை நிமிர்ந்து பார்க்காமல் . . கார்த்திக் அருகே அமர்ந்து அவனுக்கு என்ன வேண்டும் என்று பார்த்து பரிமாறிவிட்டு தானும் சாப்பிடு முடித்தாள்…

இப்போது எல்லாம் நந்தினி எதற்கு எடுத்தாலும் . மையூ மெல் எரிந்து விழுந்து கொண்டு இருந்தாள்.. அதற்க்கு பயந்தே மையூ. இன்னும் கார்த்திக்கை விட்டு தள்ளி இருக்க.
கார்த்திக் தான் தன்னோட திருமண வாழ்க்கையை நினைத்து நொந்து விட்டான் ..
இதற்க்கு எல்லாம் சீக்கிரம் ஒரு முடிவு கட்டனும் என்கிற எண்ணம் தான் அவனிடம் கூடியது .

வந்த வாரத்தில் எல்லாம் மையூவை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல கார்த்திக் முயற்சி செய்யே அதெல்லாம் கௌசல்யாவின் புண்ணியத்தால் தோழ்வியில் முடிந்தது

மையூ தான் அதை பெரிதாக எண்ணவில்லை ஆனால் கார்த்திக்கு தான் மனதில் நந்தினி மற்றும் அவளது தாயின் மேல் வெறுப்பு கூடியது

. ……

மச்சி .எதாவுது அவசரம்னா. எனக்கு கால் பண்ணு… அப்புறம் என மேலும். சில வேலையே தனது நண்பன் இடம் ஒப்படைத்துவிட்டு . சந்தோஷ் தாயகம் திரும்பினான்.
” சொல்லாமல் வந்து நின்ற மகனை கண்டதும், சுந்தரிக்கு சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை..

டேய் சந்தோஷ் .எப்பிடி. டா இருக்க.

நல்ல இருக்கேன் ம்மா…

வரேன்னு ஒரு வார்த்தை சொன்னியா

அம்மா எல்லா கேள்வியையும் வசலையே வச்சு தான் கேட்கணுமா..,

சாரி டா உள்ள வா . மொதல்ல குளிச்சுட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.

சரி ம்மா.. என்று . சந்தோஷ் குளிக்க சென்று விட்டு
நிதானமாக இரவு உடைக்கு மாறிவிட்டு வந்தான்

சங்கரி அவனுக்கு. உணவு பரிமாறிய படி. ” எவ்வளோ நாள் லீவு டா .”
” லீவு இல்லம்மா , கொஞ்சம் நாள் இங்க ப்ராக்டிஸ் இருக்கு. “
அப்போ இங்கையே இருக்க போறியா தம்பி

ஆமா அம்மா . என வேகமாக சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்ப
அதை பார்த்த சங்கரி. ” வந்து ரெண்டு மணி நேரம் கூட ஆகலை அதுக்குள்ளே வெளியே கிளம்பியச்சா
“அம்மா நான் பாப்புவை பார்த்துட்டு வந்துறேன் “
” என்னது இந்த நேரத்துளையா “
” ஏன் இப்போ என்னமா ஆச்சு “
” டேய் தம்பி , பேசாம போ காலைல போய் பார்த்துக்கலாம் .”
” ஏன் அம்மா இப்போ போனா என்ன “
” சொல்லுறது கேளு தம்பி “
” ஹ்ம்ம் சரி ம்மா ” என சிறிது நேரம் யோசித்துவிட்டு . உறங்க சென்றுவிட்டான்

சங்கரி , தன் மகனை யோசனை உடன் பார்த்து. ” என்ன ஆச்சுனே தெரியல இந்த பயலுக்கு முகமே சரி இல்லையே. கேட்டாலும் சொல்ல மாட்டான். அவ்வளோ அழுத்தம். ஹ்ம்ம் விட்டு பிடிப்போம் என அவரும் தூங்க போய்விட்டார்
ஆனால் அறையில் சந்தோஷ் . மையூ ஏன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சா அப்பிடி என்ன பிரச்சனை என்கிற யோசனை உடன் உறங்காமல் பொழுதை கழித்தான்

……………
இங்கே கார்த்திக் . நாளைக்கு எப்பிடியாவுது மையூவை ஹாஸ்பிடல் அழைச்சுட்டு போகணும் நந்தினி கிட்ட சொல்லாம எப்பிடி அழைச்சுட்டு போக. அப்பிடியே அவளுக்கு தெரிஞ்சா எப்பிடி சமாளிக்க.. கடவுளே. என அவனும் உறங்காமல் விடியல் காக காத்து இருக்க.

பொழுது விடிந்ததும் கார்த்திக்.. மையூவை அவளது அறையில் தேட அங்கே அவளை காணாமல் கீழே வந்தான்
வந்தவனை வழி மறைத்து நந்தினி . ” என்ன கார்த்தி யாரை தேடுற “
” மையூவ என்று சொல்லிவிட்டு போக “
கௌசி மகளிடம் , ஏய் என்னனு கேளுடி. என சொல்ல

நந்தினி ,மீண்டும் கார்த்திக்கிடம் மையூவையா தேடுற எதுக்கு கேட்க

” ஹ்ம்ம் அவளை அழைச்சுட்டு கம்பெனி போலாம் தான் “

“ஒ கம்பெனி , அவ அத்தை கூட இருக்கா .போ என அனுப்பி வைத்தாள் “
மையூவிடம் பேசிவிட்டு கார்த்திக் திரும்பி வர அவனை பிடித்து ” கார்த்தி நான் இன்னைக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் உங்க ஆபீஸ் வேலையே எனக்காக கொஞ்சம் தள்ளி போட முடியுமா…

என விஷயம் நந்து எது நாளும் இங்க சொல்லு. என்கிட்டே நேரம் ரொம்ப கம்மியா இருக்கு

அப்பிடி எல்லாம் இங்க பேச முடியாது கார்த்திக். அத்தை இருக்காங்க நீ மையூவ அழைச்சுட்டே வரலாம் அப்போ தான் அத்தை கேள்வி ஏதும் கேட்க மாட்டாங்க என அவள் திட்டம் போட்டு கொடுக்க
” ஆனா நந்து “

“என்ன கார்த்திக் யோசனை , முன்ன எல்லாம் நான் சொல்லுறதுக்கு முன்னவே செயல் படுவ இப்போ எல்லாம் ரொம்ப யோசிக்கிறியே நீ மாறிட்ட ” அவனை பார்த்து நந்தினி கேள்வி கேட்க

அவளது கேள்வியால் கார்த்திக் அதிர்ந்துவிட்டன் , மனதுக்குள் இவளை யோசிக்க விட கூடாதே. அது நமக்கு தானே ஆபத்து. என்று வேகமாக , நந்து ஏன் தேவையில்லாமல் யோசிக்கிற . வேலை இருக்குன்னு சொன்னது ஒரு குற்றமா இப்போ என்ன உனக்கு வெளியே போகணும் அவ்வளோ தானே “
அவள் ஆமாம் என்று தலை ஆட்ட

சரி போய் கிளம்பு நான் மையூகிட்ட சொல்லி அம்மாகிட்ட பேச சொல்லுறேன். என சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டான் ..

அவன் போவதை பார்த்து கொண்டே , தன் அம்மாவிடம் , ” எப்பிடி அவனை வழிக்கு கொண்டு வந்தேன் பார்த்தியா ம்மா . “

மகளின் தந்திர திறமையை பார்த்து கௌசியின் மனம் குளிர்ந்து , மகளை பார்த்து , இது போதும் டி நந்து. சரி சரி கிளம்பு என அவளை துரத்த

நந்தியும் சிரித்த படி கிளம்ப சென்றாள்..
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்












ஒருவழியாக வீட்டில் உள்ளவரிடம் சொல்லிவிட்டு மையூ உடன் கார்த்திக் கிளம்பி செல்ல , நந்தினியும் சொன்னப்படி இணைந்துக்கொண்டாள் அப்போதுதான் அவர்களை பின் தொடர்ந்தது அந்த கருப்பு நிற பென்ஸ் கார்…. இது ஏதும் தெரியாத கார்த்திக் நந்தினியின் சொல் படி நகரத்தில் இருந்த பெரிய மால் முன்னாள் காரை நிறுத்தினான் இவர்களை தொடர்ந்த வந்த அந்த காரும் இவர்களைவிட்டு சற்று தள்ளி நின்றது அந்த காரில் இருந்து வெள்ளைநிற டி -ஷர்ட் அதற்க்கு ஏற்றதுபோல் நீலநிறத்தில் ஜீன்ஸ் அணிந்து இருந்த ஒரு நெடியவன் இறங்கி மேலும். அவர்களுக்கு இடையே இரண்டு அடி இடைவெளி விட்டு பின்னால தொடர்ந்தான் , நந்தினி அங்கே இருந்த டேபிளை காட்டி இங்கையே உட்காரலாம் கார்த்தி நாம என்று சொல்லிவிட்டு அவனோடு அமர்ந்துகொண்டாள்,மையூ அமர போகையில் அவளை தடுத்த நந்தினி ,மையூ ப்ளீஸ் நீ கொஞ்சம் இந்த இடத்தை சுற்றி பார்த்துட்டு வாயேன் அதுக்குள்ள நான் கார்த்திக் கிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசிக்கிறேன் .. இதை கேட்ட இங்க இருந்த இருவரும் அதிர்ந்து விழிக்க அதிர வேண்டியவலோ இப்பிடித்தான் நடக்கும் என்று முன்பே தெரிந்ததுபோல் சரி என்று ஏதும் சொல்லாமல் அங்கே இருந்து நகர்ந்து சென்று விட்டாள் கார்த்திக் மற்றும் அந்த நெடியவனும் தான் அதிர்ந்து போனது .

மையூ சென்றுவிட்டதை பார்த்த நந்தினி ஹப்படா போய்ட்டா . என மேலும் கார்த்திக்கை நெருங்கி அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து , கை கோர்த்து படி . எவ்வளோ நாள் ஆச்சு கார்த்தி உன் கூட இப்பிடி அவுட்டிங் வந்து , உன்கூட இப்பிடி பக்கத்துல உட்காந்து பேசி என ஏதோ ஏதோ பேச . ஆனால் கார்த்திக்கின் கவனமோ. நந்தினியின் பேச்சில் இல்லாமல் தன்னை விட்டு தள்ளி சென்ற மையூவிடம் தான் இருந்தது மனதுக்குள் இவள நான் பாதிக்கவே இல்லையா ,இவள நினைச்சு ஒவ்வரு நாளும் எனக்கு பைத்தியமே பிடிக்குது ஆனா இவ ? என நினைத்த படி .. பார்வையால் அவளை தொடர்ந்தான் அவர்களுக்கு பின்னால் இருந்து அந்த நெடியவன் உட்காந்து இருந்த இருவரையும் முடிந்த மட்டும் முறைத்து விட்டு மையூவை நோக்கி சென்றான்

அவளோ அங்க இருந்த ஒவ்வரு பொருட்களையும் ஆசையாய் வருடிவிட்டு வேடிக்கை பார்க்க அப்போதுதான் அவளுக்கு தான் பணம் எடுத்து வரவில்லை என்று ஞாபகம் வந்தது ..அட கடவுளே கிளம்புற அவசரத்துல காசு எடுத்துட்டு வராம வந்துட்டோமே இப்போ எப்பிடி இந்த பொம்மை எல்லாம் எப்படி வாங்குறது என்கிற யோசனையில் நிற்க . அவளை பார்த்த இரு ஆண்களும்… ” உதவின்னு வாய்யே திறந்து கேட்குறாளா பாரு என்கிற எண்ணத்தில் தான் நினைத்துக்கொண்டார் மையூவை நோக்கி செல்லலாம் என்று கார்த்திக்
மனது பரபரத்தாலும் கார்த்திக்கை பிடித்து நிறுத்தி கொண்டாள் நந்தினி . ஆனால் அங்கே நின்ற நெடியவனோ. எந்த ஒரு கட்டுப்பாடு இன்றி விஸ்மையா ஆசையாய் வருவடுத்தெல்லாம் ஒரு ட்ரொலியில் அடிக்கி கொண்டே அவளை அவ்வளோ நேரம் மையூவை கவனித்து கொண்டு இருந்த . கார்த்திக் அப்போது தான் அங்க மையூவை தொடர்ந்தவனை கவனித்தான் ” யார் அது . என்கிற யோசனையில் இருக்க இப்போது நந்தினி பேசுவது முற்றிலும் அவன் காதுக்கு கூட எட்டாமல் போய்விட்டது மேலும் அவள் பேசுவது எரிச்சல் கிளப்ப.அதுக்குமேல் நந்தினி பேசுவது பிடிக்காமல் கார்த்திக் அவள் இடம் .. நந்து போதும் எனக்கு தலை வலிக்குது கொஞ்சம் நேரம் அமைதியா இரேன் . என சொல்லிவிட்டு மையூவை தொடர்வது யார் என்று கவனிக்க ஆரம்பித்தான் . நந்தினிக்கு சந்தேகம் வராமல் இருக்க … இருவருக்கும் உணவை வரவழைத்த சாப்பிடறது போல் பாவனை செய்த படி அமர்ந்து இருந்தான் .. மையூ புத்தகம் அடிக்கி இருந்த பக்கம் வர. அப்போதுதான் அந்த நெடியவன் மையூவின் கண்களை பின்னால் நின்று மூடினான் மையூ, ” ஹே யாரு அது . என பயத்தில் திமிர.. அவனோ, ” ஹே பாப்பு யாருன்னு கண்டுபிடி . ” குரலை வைத்து அது யார் என்று மையூ கண்டுபிடித்து விட சந்தோஷத்தில் . ,” டேய் நட்டு கண்டுபிடிச்சுட்டேன் ”
“அவனோ , அறிவு தான் போ நீ என கேலி செய்தான் ”
டேய் என்ன கொழுப்பா , அவன் தோளில் செல்லமாக அடித்தாள் மையூ” இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த கார்த்திக்கின் மனதில் , சுனாமி வராத குறையை புயல் அடித்து வீச , யாரு டா இவன் நமக்கு சக்களத்தன் என்கிற எண்ணத்தோடு சந்தோஷை முறைத்த படி அமர்ந்து இருந்தான் அப்போது தான் அவனுக்கு பொட்டில் அடித்தது போல் இன்மை உரைத்தது என்னவென்றால் மையூவை அவன் மனதளவில் மனைவியாய் ஏற்று கொண்டான். நந்தினியை விட்டு கொடுக்க முடிந்தவனால் மையூவை வேறு ஒருவர் உடன் சேர்த்து பார்க்க அவனால் முடியவில்லை என்று அவன் மனதிலும் காதல் காற்று பலமாக வீச ஆரம்பித்தது ஆனால் அது மையூக்காக ” சந்தோஷ் எதோ சொல்லி மையூவின் கன்னத்தை பிடித்து ஆட்ட அதற்க்கு மேல் அவனுடன் மையூ பேசுவது பொறுக்க மாட்டாமல் .. கார்த்திக் எழுந்து விட அதை பார்த்து நந்தினி , ” என்ன ஆச்சு கார்த்தி.. ஏன் எழுந்துட்ட , சாப்பிடாம… ” அவளை கடுப்புடன் பார்த்து மனதுக்குள் ” ( அவனவன் வாழ்க்கையே போற நிலைமைல இருக்கு இப்போ இந்த சாப்பாடு தன ரொம்ப முக்கியம் போடிங்… என அவளை திட்டிவிட்டு . ) இதோ வரேன் நந்து . சொல்லிவிட்டு….நாலே எட்டில் மையூவை நெருங்கிய கார்த்திக் அவளிடம் மையூ போலாமா. ” என கேட்க அவனை பார்த்து மையூ வாங்க,நந்து கிட்ட பேசியச்சா… ”இப்போது மையூவின் கேள்வியில் மேலும் எரிச்சல் தான் வந்தது கார்த்திக்கு மனதுக்குள் ( ஆமா பெரிய உலக பொருளாதாரத்தை பத்தி பேசினா , ) ஹ்ம்ம் பேசியாச்சு. நாம போலாமா இப்போ. ஆமா சார் யாரு . சொல்லவே இல்லை என அப்போது தான் சந்தோஷை. பார்ப்பது போல பார்த்து கேட்க

மையூ பெருமையாய் சந்தோஷின் கையே கட்டிக்கொண்டு அவன் கையே கட்டிக்கொண்டு அவன் கையில் சாய்ந்தபடி ,” இவன் தான் சந்தோஷ். என் அத்தை பையன். . அத்தை கூட அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து இருந்தாங்களே
.” கார்த்திக், ” ஓ , அவங்க பைய்யனா . ஹலோ மிஸ்டர் சந்தோஷ் ” என கை நீட்ட

சந்தோஷ் பதிலுக்கு “ஹாய் ப்ரோ . என கார்த்திக்கின் கை பிடித்து குலுக்கினான்

ஏனோ ப்ரோ எங்கிற வார்த்தை அந்த நிமிடத்தில் இருந்து கார்த்திக்கு பிடிக்காமல் போய்விட்டது ( நான் உனக்கு ப்ரோ வா டா ) என மனதுக்குள் அவனால் எரிச்சல் மட்டுமே பட முடிந்தது அவனது முக மாற்றலை கவனித்த சந்தோஷ். : இனிமேல் தான் டா உங்களுக்கு இருக்கு. என கருவியே படி …… பிறகு சந்தோஷ் . மையூவை பார்த்து .. ஒய் வாலு கண்ணை மூடு . அவ்வாறு சொன்னவனை நிமிர்ந்து பார்த்து , மையூ , ஏன் டா . மாட்டேன் போ என முகத்தை திருப்பி கொள்ள

நீ இப்பிடி எல்லாம் சொன்ன கேட்க மாட்ட .என சந்தோஷ் .தன் பாக்கெட்டில் வைத்து இருந்த வெல்வெட் துணியை எடுத்து அவள் மறுக்க மறுக்க அவள் கண்களில் கட்டிவிட ..
இதை அனைத்தும் கார்த்திக் வெறுப்புடன் நந்தினி ஆச்சரியதுடனும் பார்த்து கொண்டு இருந்தாள் …
இப்போது நந்தினிக்கு மெல்ல மையூ மெல் பொறாமை என்னம் கிளம்பியது…. மனதுக்குள். அங்கே சந்தோஷ் கொண்டு வந்து அடிக்கியே பொருட்களை பார்த்து… யார் இவன்.. இவளுக்கு இவன் என்ன வேணும். என்று அவள் யோசிக்க

அதற்குள் . ஒன். டூ. த்ரீ… என சொல்லி சந்தோஷ் …..மையூவின் கண்களில் இருந்த கட்டை அவிழ்த்து விட
மையூ தன் கண்களை திறந்து. அவள் முன்னால் இருந்த பொருட்களை எல்லாம் பார்த்து… சந்தோஷ்……என மகிழ்ச்சியில் அவனை இடுப்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்

அதை பார்த்த கார்த்திக்கோ மனதுக்குள் கொலைவெறியே கிளம்பியது சந்தோஷின் மேல் பிறகு மையூவிடம் பார்வையே திருப்பி மனதுக்குள் எனக்கும் கை இருக்கு இடுப்பு இருக்கு கட்டிபிடிச்சுக்கலாம் அதென்ன அவன் பெரிய அப்பாட்டக்காரா என பொறுமியே படி நின்றான்


அதை பார்த்த சந்தோஷ் மெல்ல சிரித்த படி… எல்லாம் உனக்கு தான் ..

மையூ தன் இரு விழிகள் விரித்து ,” எல்லாமே எனக்கா.. நான் சும்மா தான் எடுத்து பார்த்தேன் அதையெல்லாமா இப்பிடி வாங்கி குவிப்ப . போடா லூசு..

சந்தோஷ், ..” உன்ன எனக்கு தெரியாதா. கல்யாணத்துக்கு வந்து நெறைய்ய செய்யணும் ஆசை பட்டேன் அதான் இப்பிடி சோ ஏதும் பேசாம எடுத்துக்கணும் சரியா என அவன் செல்லமாக மிரட்ட

மையூவும் . ,” சரி சரி.. என அவன் கொடுத்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு . போலாமா நந்து .. கேட்க

அவளோ சந்தோஷை. பார்த்த படி ஹ்ம்ம் போலாம் சொல்ல

மையூவும் , தன் பங்கிற்கு, ” நீயும் வா சந்தோஷ் வீட்டுக்கு ”
“இல்லைமா , நீங்க போங்க நான் இன்னும் ஒரு நாள் வரேன் கொஞ்சம் வேலை இருக்கு.. என சந்தோஷ் மறுத்து விட .

மையூ, ” கண்டிப்பா வரணும் … என சொல்லிட்டுவிட்டு கிளம்பினாள்.. போகும் போது நந்தினி இவனை திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள்

…….
வீட்டுக்கு வந்த கார்த்திக்கோ யாரிடமும் பேசாமல் தனது அறைக்கு சென்றுவிட்டான் ,கௌசல்யாவோ மகள் கையில் ஏதும் இல்லாமல் மையூவின் கையில் இருந்த பைகளை பார்த்து நக்கலாக என்னம்மா புதுப்பொண்ணு கடையே விலைக்கு வாங்கிட்ட போல இருக்கு

இல்லைங்க நான் வாங்கல எல்லாம் சந்தோஷ் என்னோட அத்தை பையன் தான் வாங்கிக்கொடுத்தான் என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு போய் விட்டாள்

கார்த்திக்கின் மனதில் இனம் புரியாத . வலி. உண்டானது.. ஏன் என்று புரிந்தாலும் அதை எப்பிடி சரி செய்வது .. என்று தான் விளங்கவில்லை.. . எந்த வழி தேர்ந்து எடுத்தாலும்..மையூவையும் அது பாதித்து விட கூடாதே என்கிற பயத்தில் ..அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தோன்றாமல் thondramal தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்

…….


இங்க ஹோச்பிடலுக்கு வந்த. சந்தோஷ் ….. தனது மெயில் எல்லாம் சரி பார்த்தான் . அதில் ஒரு மெயில் தான் பார்க்காமல் இருப்பது தெரிய அதை திறந்து
பார்த்தவனுக்கோ .. தான் இவ்வளோ நாட்கள் பேசி கொண்டு இருந்த க்லைன்ட். கார்த்திக் .. மையூவோட …. என யோசிக்க யோசிக்க . அப்பிடி ஒருக்கா கூடாது கடவுளே.. என வேண்டிக்கொண்டு. கார்த்திக்கு பதில் மெயில் அனுப்பினான்.
அதாவுது…

மிஸ்டர் கார்த்திக். நான் இந்தியா திரும்பிவிட்டேன் நீங்கள் உங்கள் மனைவியை அழைத்து கொண்டு கீழே கொடுத்து இருக்கும் ஹாஸ்பிடல் விலசத்திற்கு அழைத்து வரவும்…

அவன் அனுப்பிய மறு நொடி

கார்த்தி ,

நன்றி சார் நாளைக்கே. உங்களை வந்து நாங்கள் சந்திக்கிறோம் என்றுபதில் அனுப்பிவைத்தான்…


இனி நாளைக்கு இந்த் மூவருக்கும் என்ன காத்து இருக்கிறது என்று.. விடிந்தால் தான் தெரியும்…
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விடிந்ததும் . இப்போது மையூவை எப்பிடி ஹாஸ்பிடல் அழைத்து செல்லலாம் என கார்த்திக் யோசிக்க ஆரம்பித்தான் அப்போதுதான் ரகு.. ….. அவனை அழைத்து. . “கார்த்தி… ஆபீஸ்ல . எதோ சிஸ்டம் பிரோப்ளேம் சொல்லுறாங்க. நீ ஒரு எட்டு என்னனு போய் பார்த்துட்டு
வந்துரு, அவர் சொன்னதும் தந்தையே நன்றியுடன் பார்த்து சரிப்பா இப்போவே கிளம்புறேன் ..
மையூவையும் அழைச்சுட்டு போ கார்த்தி.. அங்கே அந்த புள்ளையோட ஓட உதவி உனக்கு தேவை படலாம் என சொன்ன உடன்.. கார்த்திக் . தனக்கு நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று மையூவை தன்னோடு அழைத்து கிளம்பி விட்டான்..

இதை பார்த்துக்கொண்டு இருந்த கௌசல்யா தன் மகள் இடம்….ஏண்டி நீ அவன் கூட போகல . பாரு.. ஆபீஸ்க்கு அவளை அழைச்சுட்டு போறான்… ஏற்க்கனவே இங்க நடக்குற ஏதும் எனக்கு பிடிக்கல இதுல.. இதும் சேர்த்து….

கௌசி பேசுவதை.கண்டுகொள்ளாமல்..அம்மா எப்போ பாரு டென்ஷன் உனக்கு. இப்போ எங்கே போயிட்டாங்க ரெண்டு பெரும்.. ஆபீஸ் தானே போகட்டுமே நான் அங்க போய் என்ன பண்ண போறேன்.. ரொம்ப யோசிக்காத..எனக்கு பார்லர் போக நேரம் ஆச்சு நீயும் கிளப் கிளம்பு.. நேத்தே என்கிட்ட விமலா ஆண்ட்டி எங்கே நீ கேட்டாங்க.., ஏதோ சொல்லி சமாளிச்சுட்டு வந்தேன்.. இனிமேல் எல்லாம் முடியாது.. என்று தாயின் பதில் எதிர்பார்க்காமல்..அவள் சென்று..விட..
கௌசி நிலை தான் பரிதாபமாக போய்விட்டது.. … மனதுக்குள்.. ஏதோ தவறு நடக்க போவதுபோல் அறிகுறி … ” என்ன இவ இப்பிடி பேசிட்டு போறா… இவளை வச்சு இந்த சொத்தை எப்பிடியாவுது நம்ம பேருக்கு மாற்றிலாம் பார்த்தா இந்த பொண்ணு இப்பிடி பேசிட்டு போறாளே…. கடவுளே இவளுக்கு கொஞ்சம் புத்தியே குடு…. என கௌசல்யாவும் புலம்பியே படி தான் அறையே நோக்கி சென்றாள்….

இங்கே சந்தோஷ் தான் படித்த விஷயம் சரிதானா அவளுக்கா இப்பிடி இல்லை வேற யாரோவா.. கடுவுளே. அப்படி இருக்க. கூடாது…அவளா இருக்கவே கூடாது … என இருக்கிற கடவுளை எல்லாம் வேண்டி கொண்டு.. தனது அறையில்… குறுக்கே நெடுக்கே நடந்து கொண்டு இருந்தான்…நடந்த திருமணம் , அவளின் மருத்துவ குறிப்பு எல்லாவற்றையும் அவன் யோசிச்சு பார்க்க மனதுக்குள் நந்தினியை நினைத்து பார்த்து கோபத்தில் கொந்தளித்து கொண்டு இருந்தான் இதுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகாணும் என ஆத்திரத்துடன் மையூ மற்றும் கார்த்திக் காத்து இருந்தான்

ரொம்ப நேரமாய் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்த விஸ்மையா அப்போது தான்.. கவனித்தாள்….அதாவுது.. அவர்கள் செல்லும் பாதை… ஹோச்பிடல்.. போகும் வழி என்பது… மனதில் தோன்றியதை.. . அப்பிடியே கார்த்திக் இடம் கேட்டும் விட்டாள் ,,…

ஏங்க .. இது.. ஆபீஸ் போற வழி மாதிரி இல்லையே.. ஹோச்பிடல் போற வழி மாதிரி இருக்கே….

” ஆமா நாம இப்போ ஹோச்பிடல் தான்.. போறோம்…வீட்டுலயே சொல்லி இருந்தேன்னா… நந்து நம்மள இங்க வர விட மாட்டா , அதான்…. . ” அவன் சொல்லி முடிக்க.. ஹோச்பிடல் வந்து சேரவும் சரியாக இருந்தது….

” அதுக்காக இப்பிடி … “

” ஆல்ரெடி.. நாம லேட் மையூ.. சீக்கிரம் வா…. என அவன் முன்னால் செல்ல…”

மையூவும் அவன் பின்ன கிட்டத்தட்ட .. ஓடினாள் …..(கொஞ்சம் மெதுவா தான் போனால் என்ன )
அங்கே நர்ஸ் இடம்… கார்த்திக்….” டாக்டர பார்க்கணும்… . அப்பைன்மென்ட் .. வாங்கியாச்சு.. என சொல்ல…
” கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்…. பார்த்துட்டு சொல்லுறேன். என்று.. தனது அருகில் இருந்த…கணினியில்… அலைபேசியில்… டாக்டரிடம்.. உங்கள பார்க்க கார்த்திக். வந்து இருக்காரு…… சார்….”
” ………………………….”

” சரிங்க சார்.. ” என அவள் கார்த்திக் இடம் திரும்பி. நீங்க போய் டாக்டர பார்க்கலாம்…. அவனுக்கு வழி சொல்லிவிட்டு.. தனது வேளையில் தொடர்ந்தாள் …

கார்த்திக்.. மையூவை.. அழைத்து கொண்டு.. உள்ளே சென்றான்.. அங்கே.. சந்தோஷ் இருப்பதை பார்த்து…மையூ அப்பிடியே நின்றுவிட்டாள் …
கார்த்திக்.. மனதுக்குள்….( இவனா இவன் எங்கே இங்க…..)

சந்தோஷ் ..இருவரையும்… பார்த்து.. வாங்க.. ப்ளீஸ் .டேக் யுவர் சீட் … என சொல்லி கொண்டே.. மையூவை பார்த்து… முறைக்க…

அவளோ. அவன் இடம்.. மன்னிப்பை.. வேண்டி.. தலை குனிந்த படி… அமர்ந்து இருந்தாள் …
கார்த்திக்கோ … சந்தோஷை முறைத்த படி…உட்கார்ந்தான் ( இவன் யாரு என் மையூவ பார்த்து முறைக்க என்கிற கடுப்புடன்……)

இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு… சந்தோஷ் நிதானமாக … மையூவிடம்… ..” ரொம்ப பெரியே ஆள் ஆகிடிங்க போல .. இருக்கு..மேடம் . என கேட்க…

அவனின் கேலியில் இருந்த கோபத்தை கண்ட மையூ… மெல்ல… “ அப்பிடி இல்லை சந்தோஷ்…..என சொல்ல..

அவ்வளோ நேரம் அவள் வாய் திறபதர்க்காகவே காத்து இருந்தவன்
போல்… அவளை திட்டி தீர்த்துவிட்டான்…..” பேசாத… மையூ என்ன காரியம் பண்ணி வச்சு இருக்க… நீ .. இவ்வளோ பெரியே விஷயம்… ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தை… , சொல்ல உனக்கு முடியல..என் கிட்ட கூட மறைச்சுடேள ..
சந்தோஷை எதிர்த்து பேசாமல்… மையூ அழுத படி இருக்க.. அதை காண.. சகிக்காமல்…. கார்த்திக்……சந்தோஷ் இடம்… “ நீங்க ரொம்ப அதிகமா பேசுறிங்க… “

அதை நீங்க சொல்ல கூடாது கார்த்திக்… எவ்வளோ பெரியே ஏமாற்று வேலை , உங்க ரெண்டு பேரு தேவைக்காக இவள யூஸ் பண்ணிர்கிங்க ஏன்னு கேள்வி கேட்டா பெருசா அக்கறை இருக்கிற மாதிரி… பேச்சு…

யார் யார் நடிச்சா , என கார்த்திக் கோபமாக கத்த
அப்போ நீங்க நடிக்கல அப்பிடித்தானே , எங்க வீட்டு பொண்ண ஏமாற்றி , அவ எப்போடா போய் சேருவா நீ புது மாப்பிள்ளை ஆக காத்திக்கிட்டு இருக்க கேட்டா அப்பிடி இல்ல நோப்பிடி இல்லை சொன்ன நான் நம்பணுமாக்கும் , குட் ஜோக்….மிஸ்டர் கார்த்திக்,…. என
சந்தோஷ் மற்றும் கார்த்திக் முட்டி கொள்ள…

இத பார்க்க சகிக்காமல்… மையூ இருவருக்கும் இடையில் புகுந்து… போதும்…சந்தோஷ்… அவர ஏதும்… சொல்லாத…என தடுக்க.
சந்தோஷின்.. மொத்தம் கோபம் மையூவின் பக்கம் திரும்பியது… ஆமா அவன சொல்லகூடாது… உன்ன தான் சொல்லணும்… எவ்வளோ பெரியே முட்டாள் நீ.. உன்ன பலி ஆடு ஆக்கி இருக்காங்க .அத உணராமல்… அவங்களுக்கே சப்போர்ட் பேசுற நீ…



தான் செய்வது.. தவறு… என யாராவுது சொல்ல மாட்டாங்கள.. என்று இத்தனை நாளாய்…நினைத்து தவித்து கொண்டு இருந்த மையூவுக்கு .. தன் தோழன்.. அதை சுட்டி காட்டியதில்.. நிம்மதி.அடைந்தாலும்.அவளுக்கு சந்தோஷ் கார்த்திகை.பேசுவது..பொறுத்துக்கொள்ள.முடியவில்லை..( இன்னுமா உனக்கு புரியல )

அவர் வேண்டாம் தான் சொன்னார் , ஆனா என் நிலைமையும் அப்பிடி ஆகிடுச்சு.. அவள் சொல்லும் சமாதனம்.. ஏதும்.. சந்தோஷ் இடம் எடுபடாமல்..போக அப்பிடியே அழுதே கரைந்தாள் …
அவள் அழுவதில் அவன் கோபம் காணாமல் போக.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டவன்.. மருத்துவராக அவளுக்கு நோயின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கு என்கிற பதட்டம் தோற்றி கொண்டது.. . அது மட்டும் இல்லாமல்..கார்த்தி இடமும் அவனுக்கு பேச வேண்டியது இருந்ததால். மையூவிற்கு எடுக்க வேண்டியே.. டெஸ்ட் எல்லாம்.. எழுதி.. அதை மையூவிடம். கொடுத்து.. இந்த டெஸ்ட் ஒன்னு விடாம எடுத்துட்டு வா என ஒரு நர்ஸ் உடன் அனுப்பிவைத்தான் …..

டெஸ்டின் முடிவு என்னவாக இருக்கும் என்று கார்த்திக் தன உயிரே கையில் பிடித்து கொண்டு மையூ சென்ற திசையே பார்த்து கொண்டு இருக்க……


அதை எல்லாம் கண்டுக்காமல்…… சந்தோஷ்……கார்த்திக் இடம்…. அப்புறம்.. பாஸ்… எப்போ உங்க அடுத்த கல்யாணம்… அந்த நந்தினி ஓட…..

ஒருவர் பெயரை.. இவ்வளோ வெறுப்புடன்.. சொல்ல முடியுமா.. என்று.. கார்த்திக்.. திரும்பி.. சந்தோஷை.. பார்த்தான்…..

அவனது..கேள்வி புரியாமல்.. என்ன சொல்லுரிங்க.. சந்தோஷ்…. ( அவன் மனம் முழுவதும்.. மையூவின் எண்ணம் மட்டும் ஓடிக்கொண்டு இருக்க..இப்போது நந்தினி யார் என்று கேட்டாலும் கேட்டு விடுவான்… அப்பிடி ஒரு நிலையில் இருக்க… அவன் இடம் இப்பிடி கேள்வி கேட்டா அவனும் தான் பாவம்.. என்ன பண்ணுவான்…)
ஹ்ம்ம்,, சந்தோஷ் .ப்ளீஸ் இது மாதிரி இனி பேச வேண்டாம்… எனக்கு பிடிக்கல…..

வேற எது மாதிரி பேச சொல்லுற….எதுக்கு இந்த நாடகம்…… மையூ அவளோட உயிரை விடுற வரைக்குமா,,

போதும் சந்தோஷ் என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு.. இதுக்கு மேல.. அவள
பத்தி..இது மாதிரி பேச வேண்டாம்… அப்புறம் நான் மனுசனவே இருக்க
மாட்டேன்……அவ எனக்கு வேணும் சந்தோஷ் … அட் எனி காஸ்ட் …….. ஆர் யு கேட்டிங்
மீ……. சினிமா வசனம் எல்லா பேச விரும்பல….. ஆனா.. இந்த ஜென்மம்.. மையூ
மட்டும் தான் என் மனைவி… அதுல எந்த மாற்றம்.. இல்லை… என கார்த்திக்
கோபமாக .சொல்லி முடிக்க….

அப்போ அந்த நந்தினி…..மீண்டும் சந்தோஷ்.. கேட்க..

நந்தினி நந்தினி… ஏன் இப்பிடி இந்த பெயரை சொல்லி காட்டியே என்ன ..
கொல்லுற .. அவ என் அத்தை பொண்ணு.. சின்ன வயசுல சொல்லி வச்சாங்க.. அது
நால எனக்கு..அவ மேல ஒரு க்ரஷ் இருந்தது.. ஆனா எப்போ அவ என்ன , என் மனச
புரிஞ்சுக்காம .. இப்பிடி ஒரு வேலையே பார்த்தாலோ. அப்போ அப்போவே அவ என்
மனசல.ஒரு படி கிழ இறங்கி போயிட்டா சந்தோஷ்.. , உனக்கு ஒரு விஷயம்
தெரியுமா… அன்னைக்கு இருந்த நிலைமைல.. நான் தாத்தா கிட்ட நந்தினிக்கு..
வேற பையன பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க சொன்ன எனக்கு மையூவை…
சொன்னேன்…. ஆனா.. என் மையூவை யாருக்கும்… எதுக்காகவும் .. விட்டு கொடுக்க
முடியாது… அது எமனா இருந்தாலும் கூட ……பிக்காஸ் ஐ லவ் ஹேர் ………சந்தோஷ்….



நான்.. இவ்வளோ பொறுமையா.. இருக்கிறதுக்கு காரணம் நந்தினிக்கு
எப்பிடியாவுது.. புரியே வச்சு அவளுக்கு நல்லா லைப் அமைச்சு தரனும் தான்…அது
மட்டும்.. இல்லாம… மையூவுக்கும்.. என் அன்பை புரியே வைக்க வேண்டாமா… அதுக்கு
எனக்கு டைம் வேணும் அதே சமயம் நந்தினி.எங்க வீட்டுல இருக்கணும்… மத்த
படி…. நந்தினி…மேல எனக்கு.எந்த ஒரு… இன்ட்ரெஸ்ட் கிடையாது….. இதுல்லாம் நான்
ஏன் உன்கிட்ட சொல்லுறேன் இதே இடத்துல.. மாமாவும் அத்தையும் இருந்தாலும்..
என் பதில்…இதுவாக தான் இருக்கும்.. நான் மாமா அத்தை சொன்னது மையூ ஓட..
அப்பா அம்மாவை….. என பேசினது போதும் என்று கார்த்திக்.. அமைதியாகி விட்டான்..
கார்த்திக்கின் பேச்சை முழுவதும் சந்தோஷால் நம்ப முடியவில்லை இப்பிடி இனிக்க பேசித்தான் பாப்புவை ஏமாத்தி இருப்பாங்களோ ரெண்டும் சேர்ந்து என யோசிக்கவும் தவறவில்லை பிறகு முடிவுடன் மையூவின் ரிபோர்ட்ஸ் காக காத்துஇருந்தான்

கார்த்திக்கும் ஒருவித பயத்துடன் தனது கை கடிகாரத்தை மற்றும் அறைவாசலையும் மாறி -மாறி பார்த்த படி இருந்தான்


hai friends romba sorry exam revision ,paper correction ellam sernthukitta naala episode type pannave mudiyalai ippovum paper correction irukku plus system problem so kuttty epi.
 
Last edited:

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரீபோட்கள் வர நேரம் ஆக கார்த்திக் நெருப்பின் மீது அமர்ந்து இருப்பது பொல் உணர்தான், எப்போது டா மையூ வருவாள் என்று இருந்தது இரு ஆண்களுக்கும் . சிறிது நேரம் கழித்து சோர்ந்து போய் வந்தவளை, சந்தோஷ் , தான் அவசரமாக அவள் சென்று அழைத்து வந்து அமர வைத்தான், பிறகு சூடா உணவை வரவழைத்து அவளை உண்ண வைத்தான், இதெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்த கார்த்திக்கு சற்று பொறுமையாக தான் இருந்தது மனதுக்குள் இந்த வேலை எல்லாம் நான் செய்யே வேண்டியது பொருமினான் ,
அவள் சாப்பிட்டு முடிப்பதற்குள் அவளது ரிபோட்ஸ் வந்துவிட்டது ,
அதை பார்த்து , இரு ஆண்களுக்கும் இரத்த அழுத்தம் எகுற , பதட்ட பட வேண்டிய அவளோ நிதானமாக சாப்பிட்டு கொண்டு இருந்தாள் அவளுக்கு முன்பே ரிப்போர்ட்டில் என்ன வரும் என்று தெரியும் என்பதால் எந்த ஒரு பதட்டம் இல்லாமல் சந்தோஷ் கொடுத்ததை பொறுமையாக ரசித்து ருசித்து உண்டாள், மனதில் பதறி கொண்டு இருந்தாலும், சந்தோஷ் அவளுக்கு என்ன வேண்டும் என்பதை பார்த்து கேட்டு சாப்பிட வைத்துக்கொண்டு இருந்தான் , இதெல்லாம் பார்த்த கார்த்திக்கு மனதில் , " டேய் அவ எனக்கு தான் டா பொண்டாட்டி , நான் தான் இதெல்லாம் பண்ணனும் , என பொறுமையே அமர்ந்து இருந்தான் "
வெகுநேரம் காக்க வைக்காமல் அவளது மெடிக்கல் ரிப்போர்ட் ஒரு வழியாக நர்ஸ் வந்து குடுக்க அதை அவசரமாக வாங்கி பார்த்த சந்தோஷ்க்கு அந்த நிமிடம் திகில் நிமிடமே , நோயின் தாக்கம் அவளுக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என பதட்டத்தில் அவளது ரிப்போர்ட்டை படித்து பார்க்க ஆரம்பித்தான் நேரம் செல்ல -செல்ல சந்தோஷின் முகம் கோபமாய் மாறியது , கார்த்திக்கும் ரொம்பவே பயமாகவே இருந்தது சந்தோஷின் பதிலக்காக அவனின் முகத்தையே பார்த்த படி இருக்க, திடீர் என்று சந்தோஷின் முகம் கோபமாய் மாறுவதை பார்த்த கார்த்திக்
, என்ன டாக்டர் , ஏதும் பிரச்சனையா ,என கேட்க
மையூவோட பழைய ரிப்போர்ட்ஸ் மற்றும் மெடிசின்ஸ் இருக்கா கார்த்திக்கு சீக்கிரம்
அவனின் அவசரம் புரிந்து , கார்த்திக் வேகமாக இதுவரை அவள் எடுத்துக்கொண்ட அணைத்து ரிப்போர்ட்ஸ் மற்றும் மருந்துகளை எடுத்துகுடுத்தான்
எல்லாம் வாங்கி பார்த்த சந்தோஷ், கோபத்தின் உச்சிக்கே சென்றான், " ஷீட் , அதை கோபத்துடன் கார்த்திக்கை பார்த்து , உங்களுக்கு இந்த மெடிசின்ஸ் யாரு எழுதி குடுத்தா
அவ்வளோ நேரம் அமைதியாக இருந்த மாயா , சந்தோஷின் கோபத்தில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு , " என்ன ஆச்சு சந்தோ , டாக்டர் கீதா தான் எழுதி குடுத்தாங்க

உடனே தன்னுடைய இன்டெர்க்கோம் எடுத்து , டாக்டர் கீதாவை உடனே என்னோட கேபின்க்கு வர சொல்லுங்க என உறுமினான்
அவனின் கோபம் கார்த்திக்கை மேலும் பதற வைத்தது என்ன ஆச்சு சந்தோஷ் ப்ளீஸ் சொல்லுங்க , உங்க கோபம் என்னக்கு மேலும் பயத்தை தான் குடுக்குது ,,
சந்தோஷ் பேசும் முன் , கீதா வந்துவிட, சார் வர சொன்னிங்கன்னு அவள் பேச ஆரம்பித்ற்குள்
என்னது இது அவள் முன்னாள் அந்த பைலை தூக்கி போட்டு என கோபமாய் கத்தினான்
அதை கையில் எடுத்து பார்த்த கீதாவுக்கு அப்போதுதான் அங்கே அமர்ந்து இருந்த மாயா மற்றும் கார்த்திக்கை கவனித்தாள்,
, இருவரையும் பார்த்து கீதா அதிர்ந்துவிட்டாள் , இதுங்க எங்கே இங்க , என மனதுக்குள் நினைத்துகொண்டால்
தனக்கு இன்னும் பதில் வராமல் இருக்க சந்தோஷ் , என்ன மிசஸ் .கீதா
சார் , ரிப்போர்ட்ஸ் எல்லாம் சரி பார்த்து தான்
ஸ்டாப் இட், இப்போ நீங்க உண்மையே சொல்ல போறிங்களா இல்லை நான் போலீசை வர சொல்லுவா என சந்தோஷ் மிரட்ட
கீதா பயந்துவிட்டார், விஷயம் வெளியில் தெரிந்தால் தன் டாக்டர் துறைக்கு ஒரு கும்பிட்டு போட்டுற வேண்டியது தான் , என்று உண்மையே சொல்ல ஆரம்பித்தாள் , அது எல்லாம் வெறும் சத்து மாத்திரைகள் தான் என சொல்லிவிட்டு நிறுத்த
மாயா மற்றும் கார்த்திக் கீதாவை அதிர்ந்து போய் பார்த்தார்கள் இது என்ன புது கதை என்பது போல்
மேல சொல்ல என்பது போல் சந்தோஷ் அவளை பார்க்க,
மாயா லோ பிபி நாள இங்க அட்மிட் ஆனாங்க ஆனா ரிப்போர்ட் மாறிடுச்சு எங்க இந்த உண்மையே சொன்னா பெயர் கேட்டு போயிடுமோ எங்கிற பயத்துல நானும் அப்பிடியே அமைதியா விட்டுட்டேன் சார் , வெளில என் பெயரை சொல்லிடாதீங்க சார் என அவர் கண்ணீர் விட ,
டாக்டர் மாதிரியா பேசுறீங்க நீங்க, வேற உதவுது நீங்க குடுத்த மருந்தால் அவளுக்கு என்னமோ ஆகி இருந்தா என்ன பண்ணி இருப்பிங்க இன்னும் கொஞ்சம் கூட கோபம் குறையாமல் பேச
கீதாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை , அவளுக்கு தெரிந்து விட்டது இனி தனக்கு இந்த மருத்துவமனையில் வேலை இல்லை என்பது, அவள் தலை குனிந்து மாட்டி கொண்டு பயத்தில் நின்று இருந்தால்
அவனோ கீதாவை மன்னிக்கும் நிலையில் இல்லை, தன் வீடு பெண்ணை இன்னும் எத்தனை பேர் ஏமாற்ற காத்துக்கொண்டு இருக்கிறார்களோ என்று கவலையாய் இருந்தது , மீண்டும் ஒருமுறை கீதாவை பார்த்து , நீங்க வெயிட் பண்ணுங்க என எல்லா விஷயத்தையும் ஹாஸ்பிடல் டீன் இடம் பேசிவிட்டு மாயா கார்த்தியிடம் பேச ஆரம்பித்தான்
இங்க பாருங்க ரெண்டு பெரும் இவ்வளோ நாள் இவள் சாப்பிட்டது வெறும் சத்து மாத்திரைகள் தான் பெரிய பிரச்சனையை ஏதும் இல்லை லோ பிரஷர் , தான் சரியா நேரத்துக்கு சாப்பிட்டால் போதும் , அப்புறம் இன்னும் ஒரு விசயசம் , இவளுக்கு எந்த ஒரு பிரச்சனை இல்லை என்று யாருக்கும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் முக்கியமா நந்தினிக்கு
மாயா உனக்கு தான் சொல்லுறேன் , எதாவுது வாயையே திறந்து அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன் , கிளப்புங்க இப்போ என சொல்ல

அவளுக்கு ஒன்றும் இல்லை என்ற செய்தியே கார்த்திக்கு நிம்மதியாக இருந்தது இனி எப்பிடியாவுது மாயா மனசுல இடம் பிடிச்சு அவளை தன்னோடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்

ஆனால் மாயா, அப்போ நமக்கு ஒன்னும் இல்லையா , இந்த சந்தோ ஏன் நந்தினிக்கு ஏதும் தெரிய கூடாதுன்னு சொல்லுறான் , எனக்கு ஒன்னும் இல்லைனா நான் கார்த்திக் சார் வாழ்க்கையே விட்டு நந்தினி காக விலகி போயிடனும் என்று முடிவு செய்தாள்
கணவன் - மனைவி இருவரும் வெவேறு முடிவு செய்ய , இங்க சந்தோஷ் இருவருக்கும் சேர்த்து ஒரு முடிவு செய்தான் - நந்தினியை இனி இவர்கள் வாழ்க்கையில் நெருங்க விட கூடாது என்று

hai friends eppidi irukinga enna maranthu irukka maatinganu ninaikkiren, imbutu naala enga ponen yosikiringala, vera locationkku shift aagiten , inge workload day by day athigam aagitu , laptop vera kaiyila illama pochchaaa athaan epis type pananve mudiyalai ini regular updates kdukka try pannuren . appdiyre enakunnu vachu irukira likes , comments , support ellam enake enakknu kudukkaa eduthu vachukkongaa
 
Top