All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிவேதா-மோகனின்-காதல்-காற்று-கதை-திரி

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


EPI -5







ஏன் நீ அந்த பொண்ணுக்கு உதவ போறியா. என்ன “,கார்த்திக் கேட்க

” ஆமா.. உதவ தான் போறேன் கார்த்திக்.. “என்றாள் அவள்

” நல்ல விஷயம் நாம அந்த பொண்ணு கிட்ட பேசி அவளுக்கு பணம் உதவி செய்யலாம்”

அவன் பணம் உதவி செய்யலாம் சொன்ன உடன் நந்தினி அவசரமாக ” பணமா வேண்டாம் கார்த்திக் நீ ஏன் அவள கல்யாணம் பண்ணிக்க கூடாது….”என்று கேட்டுவிட்டாள்

ஒரு நிமிடம்… தான் சரியா தான் கேட்டோமா…என கார்த்திக்.. நந்தினியே.. பார்க்க… “

” அவள் மீண்டும்.. கார்த்திக் நான் யோசிச்சு தான் சொல்லுறேன்.. நீ மாயாவ கல்யாணம் பண்ணிக்கோ..”

” ஏய் என்ன டி உளற.. உனக்கு என்ன பைத்தியமா படிச்சு இருக்கு…” கார்த்திக் கோபத்தில் கத்த ஆரம்பிக்க

” இல்லை கார்த்திக் நல்லா யோசிச்சு பாரு… அவளுக்கு இப்போ பணம் தேவை.. அதுவும் இல்லாம அவ நம்ம கிட்ட இருந்து..எந்த பணம் உதவியும் எதிர் பார்க்க மாட்டா.. அவளுக்கு இருக்கிற பிரச்சனைல அவ எப்போ சம்பாரிச்சு.. ஆபரேஷன் பண்ண.. அதுவரைக்கும், அவ உயிரோட இருக்க போறதும் இல்லை.. இது நம்மக்கு சாதகம் தானே….”என இறக்கமற்றவள் போல் பேசி நந்தினி

” நந்தினி இவ்வளோ கிழ் தரமாக பேசுவாள் என்று கார்த்திக்.. கொஞ்சம் கூட எதிர்பார்கவில்லை.. என்று அவன் முகம் காட்டி கொடுக்க… தன் கோபத்தை காட்ட.. இது சரியான இடம்… இல்லை என்று அவன் சற்று தன்னை நிதானம்..படுத்தி… ‘ சைன்ஸ் ரொம்ப வளர்ந்து கிடக்கு நந்தினி….”
மாயாவுக்கு முறையா ட்ரீட்மென்ட் கொடுத்தா சரி ஆகிடுவா… “ எவ்வளோ பொறுமையாக பேச வேண்டுமோ அவ்வளோ பொறுமையாக பேசினான்

” ஆனா நாம ஏன் ட்ரீட்மென்ட் கொடுக்கணும் . கார்த்திக்.. “

” என்ன சொல்லவர நந்தினி “ அவள் பேசுவது புரியாமல் அவன் கேட்க

நான் சொல்லுறத தெளிவா கேட்டுகோங்க கார்த்திக்.. .. நீங்க இத காரனம வச்சு.. அவள கல்யாணம் செய்துகொங்க. மாயா எப்பிடியும் நம்ம கிட்ட இருந்து பணம் உதவி எதிர் பார்க்க மாட்டா இவ பணம் சேர்த்து ட்ரீட்மென்ட் .. பண்ணுறதுக்குள்ள கண்டிப்பா உயிரோட இருக்க மாட்டா இப்போ புரியுதா என் திட்டம்.. என சந்தோஷத்தில் அவள் சொல்லி கொண்டு இருக்க ..”
முதல் முதலாய் கார்த்திக் தன்னவளை ஒரு புழுவை விட கேவலமாய் பார்த்தான் அவன் … பிறகு

ஒரு முடிவுடன் ” என் நால இதுக்கு சமாதிக்க .முடியாது. என்று சொல்லிவிட்டு கோபமாய் அந்த இடத்தை விட்டு நகர போக..”

கார்த்திக் நான் இத பத்தி தாத்தா கிட்ட பேசுவேன்… அப்போ என்ன செய்ய போற என்று அவனை மிரட்ட..”

” ஏய் உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ டி…சொல்லிவிட்டு சென்று விட்டான்..”

அவன் போவதை பார்த்த நந்தினி , ” ஓடு கார்த்திக் உன்னால எவ்வளோ தூரம்.. ஓட முடியுமோ ஓடு.. ஆனால் கடைசில நான் தான் ஜெயிக்க போறேன்…என தனக்கு தானே சொல்லி சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்று முதல் வேலையாக வேதாசலம் இடம் போய் தனக்கும் கார்த்திக்கும் நடந்த விசையத்தை சொல்ல..

அதை கேட்டு அங்கே இருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போய் விட்டார்கள் இவள் தன்னோட சுயநலத்துக்காக எதை வேண்டும்னாலும் செய்வாள் என்று தெரியும்….ஆனால் இந்த அளவிற்கு செல்வாள் என்று இன்று தான் தெரிந்தது.. தன் பேரன் ஓட நிலைமையே எண்ணி இப்போது அவர் எடுத்த முடிவு சரி என்று தான் தோன்றியது…. இந்த வலி அவனுக்கு தேவையான ஒன்று தான் என்றும் தோன்றியது ..

.நந்தினி இடம் கத்திவிட்டு ஆபீஸ் வந்து செர்ந்தவனுக்கோ வேலை ஏதும் ஓட வில்லை.. ஒரு வழியாக தன்னை நிதானம் படுத்தி கொண்டு வேலையே முடித்து கொண்டு வீட்டுக்கு வந்தவனுக்கோ ர நந்தினியின் செயல்.. மேலும் கோபத்தை தூண்டியது

” வீட்டுக்கு வந்தவனை, வேதாசலம் நிறுத்தி கார்த்திக்.. நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணுமே ..
அவர் என்ன பேச போகிறார் என்று அங்கே இருந்த நந்தினியே பார்த்தே கணித்து விட்டான் நந்தினி விசையத்தை வீட்டுக்கு சொல்லிவிட்டால் என்று..

அவனின் முகம் போன போக்கை வைத்தே பெரியவர்… அவளை பார்க்காத கார்த்திக்….என்ன பார்த்து பேசு…

” சொல்லுங்க தாத்தா …”

” நந்தினி என்னவோ சொல்லுரலே பா . என்ன முடிவு பண்ணிற்க நீ அதை பத்தி “

” தாத்தா என்னால அவள் சொல்லுறதுக்கேல்லாம் சம்மதிக்க முடியாது “
” ஏன் ப்பா அவ உன் மேல எவ்வளோ அன்பு வச்சு இருக்கா தெரியுமா..” [ அவர் குரலில் இருந்த கேலியே அங்க இருந்த யார் நாளையும் கண்டு கொள்ள முடியவில்லை..]
” என்ன தாத்தா நீங்களும் இப்பிடி கேட்குறிங்க.. என் சுயநலத்துக்காக ஒரு பெண் அதுவும்.. அவளோட இக்கட்டான நிலையே பயன் படுத்தி அவள் வாழ்க்கையோட நான் விளையாட மாட்டேன் அப்புறம் கடவுள் கூட என்ன மன்னிக்க மாட்டாரு.. “

வேதாசலம் ” அவனை பெருமையாய் பார்த்தார் இது இது தான் இவன் இப்போது அவர் அல்லவா முடிவு செய்யே வேண்டும்..சரி கார்த்திக்.. நீ உன் ரூம்க்கு போ … என்று அவனை அனுப்பி வைத்தார்…

ஆனால் நந்தனி அவனின் முடிவு தெரிந்து கொள்ளும் ஆசையில் பெரியவர் இடம்.. தாத்தா அது எல்லாம் செல்லாது… இப்போவே கார்த்திக்கை அவனோட முடிவு சொல்லிட்டு போக சொல்லுங்க..

தனது அறைக்கு செல்ல மாடி ஏறியவன் அதை வேகத்தில் அவள் அருகில் வந்து அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.. ” ஏய் என்ன பொண்ணு டி நீ.. உனக்கே இது நியாயமா படுதா..ரெண்டு பேரு ஓட வாழ்கை.. என்ன கல்யணம் பண்ணிக்கிட்டு அந்த பொன்னும்..நல்ல இருக்க போறது இல்லை….. உன்ன மறந்துட்டு அவளை கடிக்க எனக்கும் இஸ்டம் இல்லை…என்று சொல்ல ..
அவனை கையாலவா அவளுக்கு தெரியாது… அவன் அருகே வந்து .. எல்லாம் நம்ம நன்மைக்கு தான் கார்த்திக்…

” மண்ணாங்கட்டி , ஆதுனால இதுல நீ அந்த பொண்ண இழுத்து விடுவியா..எனக்கு பிடிக்கல..”

அவளுக்கு இப்போ பிரச்சனை அதுனால அவ இதுக்கு சம்மதிப்பா நான் அவள சம்மதிக்க வைப்பேன்.. நீங்க நிம்மதியா இருந்தா போதும் கார்த்திக் என நந்தினி பேசிக்கொண்டே போக

அவளின் பேச்சு பிடிக்காமல் . கார்த்திக் மேலும் ஏதோ சொல்ல போக…

இதுக்கு மேல் இருவரையும் பேச விட்டால் பிரச்சனை மேலும்..வளர கூடும் என்று வேதாசலம்.. போதும் கார்த்திக்.. நீ போ முதல நான் அப்புறம் உன் கிட்ட வந்து பேசுறேன்….என்று அவனை அனுப்பிவைத்தார்… “

கார்த்திக் , “ச்சீ . என வெறுப்பு உடன்..தனது அறைக்கு சென்றுவிட்டான்..”

கௌசல்யாவும் தன் . மகள் செய்வது சரி என்று சொன்னார் மனதுக்குள் எதுக்கு இவளுக்கு இந்த வேண்டாத வேலை… என்று யோசனை உடன்… மகள் மேல் நன்பிக்கை இருந்ததால்.. பேசாமல் அமைதி ஆகி விட்டார்..”

அவன் சென்று விட்டான் என்று உறுதி படுத்தி கொண்டு.. வேதாச்சலம். என்னமா நந்தினி நீ அந்த பொண்ணுகிட்ட பேசிட்டியா ..” என கேட்க

” நந்தினி.., பெரியவர் தனது பேச்சை.. ஒத்துகொண்டார் .. இனி அவர் கார்த்திகை.. சம்மதிக்க வைத்துவிடுவார்.. என.. உற்சாகத்துடன் பேசிட்டேன்.. தாத்தா..ஆனா கல்யாணம் விசயமா பேசல நீங்க.. சரின்னு .சொன்னா ..இப்போவே.. போய்..பேசிடுறேன்.. என அவள் சொல்ல..”

” சரிம்மா நீ பேசிட்டு எனக்கு சொல்லு…நான் அந்த பொண்ண பார்த்து பேசி.. சில..முடிவுகள்..எடுக்கணும் என்று அவர் சொன்னார்..”

” என்ன முடிவு தாத்தா..”

அவர் வழக்கம் போல தனது ட்ரேட்மார்க் சிரிப்பை. சிந்திவிட்டு.. நாளைக்கு.. உனக்கும் கார்த்திக்கும் எந்த பிரச்சனை.. வந்துற கூடாது இல்லையா…”

” சரிங்க தாத்தா..” என்று அவள் சொல்லி முடித்தாள் ”



இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த ரகுராம்.. மற்றும் ராஜி அப்பிடியே உறைந்து போய் நின்றார்கள்.. அவர் கண்கள் பெரியவரை குற்றம் சாற்றியது
இதை எல்லாம் கவனித்த அவர்.. மனதுக்குள்.. மகன் மருமகள் இடம்.. மானசிகமாக மன்னிப்பு ஒன்றை கேட்டு விட்டு தனது வேளையில் இறங்கினார்.. “

நந்தினி நீ எப்போ அந்த பொண்ணு கிட்ட பேச போற..
நீங்க எப்போ சொல்லுறிங்களோ அப்போவே பேசிடுவேன் தாத்தா..

” சரிம்மா நீ கொஞ்சம், சீக்கிரம் பேசிட்டு எனக்கு சொல்லு என அவர் சொல்ல . “
என்னமோ அவர் வாக்கே வேதவாக்கு போல் நந்தினி.. வேகமாக தனது மொபைல் எடுத்து மா நம்பரை எடுத்தால்..”

அதை பார்த்த வேதாசலம்.. ” அம்மாடி யாருக்கும்மா இப்போ போன் பண்ணுற..”
” எல்லாம் விஸ்மாயாவுக்கு தான் தாத்தா.. “

” ம் இப்போ வேண்டாம் ம்மா காலைல பேசிக்கலாம்.. இந்த மாதிரி விசையம் எல்லாம் காலைல அதுவும் நேருல போய் தான் பேசனும்மா உனக்கு வேலை இருந்தா நான் கூட பேசுறேன்.. “

” ஐயோ வேண்டாம் தாத்தா எனக்கு என்ன அப்பிடி வேலை நானே பேசிட்டு சொல்லுறேன்.. [
எங்கே அவர் பேசி அதிகம் பணம் தரேன் என்று சொல்லி மாயாவை தனக்கு எதிராக திருப்பிவிடுவிட்டால் என்கிற பயம் தான் நந்தினிக்கு.. ]

ஹ்ம்ம் சரி மா நீ போய் தூங்கு.அந்த பொண்ணுகிட்ட பேசும் பொது கொஞ்சம் பக்குவமா எடுத்து சொல்லு என்ன என அவளை கிளப்பிவிட்டார்.. அப்போ தானே கார்த்திக் இடம் பேச முடியும்..

ஓகே தாத்தா அப்பிடியே பேசிடுறேன்..”
இங்கே கார்த்திக்.. தன்னை.. சமாதான, செய்யே முடியாமல்.. தவித்து கொண்டு இருந்தான்.. ” ச்சே என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கா இவ தெரியல காதலிக்க ஒருத்தியும் கல்யாணம் பண்ணிக்க ஒருத்தியுமா இருக்க முடியுமா ச்சீ .. “

அவன் இடம் பேச வந்த வேதாசலம் அவனது நிலையே பார்த்து இப்போ என்ன இவன் கிட்ட பேசினாலும் பயன் இல்லை என்று மீண்டும் தனது அறைக்கே திரும்பி சென்றுவிட்டார்…

விஸ்மாயாவின் நிலையோ இன்னும் மோசமாக இருந்தது . தந்தையின் முடிவில் .. ” பெருமாளே இப்போ நான் என்ன பண்ணுவேன் .. அப்பா இப்பிடி சொல்லிடாரே .. இத எப்பிடி தடுக்குறது என யோசிக்க. கடைசியில் அவளது மூளை சூடு ஆனது தான் மிச்சம்.“
இது சரி வராது என மெல்ல எழுந்து.. ருக்மணி இடம் சென்று நின்றாள் .

அவருக்கா தெரியாது மகள் எதற்கு தன்னை தேடி வருகிறாள் என்று.. இருந்தாலும் அவளே விசையத்தை சொல்லட்டும் என மௌனமாய் காத்து கொண்டு இருந்தார்.. ‘ தாய் இடம் எப்பிடி ஆரம்பிப்பது என மாயா தனக்குள்ளே பேசி கொண்டு இருக்க..
இது சரி வராது என்று அவரே.. ” என்ன விசு.என்ன விசையம் ..

” அது வந்து அம்மா.. “:

” என்னடி இழுவ வேண்டி கிடக்கு என்னனு சொல்லு. எனக்கு வேலை இருக்கு..”

” இல்லைம்மா அது… .. ஆ “

” இப்போ சொல்ல போறியா இல்லையா .. ” என அவர் அதட்ட

” எனக்கு இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம் அம்மா என பட்டு என்று சொல்லிவிட்டால்.. “
இது தான் விசையம் என யூகித்து இருந்தவருக்கு அதிரிச்சி குறைவு தான் இருந்தாலும்.. மறுப்புக்கான காரணம். தெரிய வேண்டுமே ” என்னடி சொல்லுற எதுக்கு இப்போ வேணாம் சொல்லுறா.. போக போக வையசு என்ன குறையும் நினைப்ப உனக்கு.. “;

” அதுக்கு இல்லைம்மா இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே.. அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன்..எனக்கு உங்கள எல்லாம் விட்டு போக மனசே இல்லைம்மா.”

” இதுக்கு உன் அப்பா சம்மதிக்கணுமே.. “

” நீங்க சொன்ன அப்பா கேட்பாரு ம்மா..”

” அதுக்கு இல்லைடி உங்க அப்பா பத்தி உனக்கு தெரியாதா.. “

” ம்மா ம்மா ப்ளீஸ் மா என் செல்ல அம்மா ல நீங்க பேசுங்க அம்மா. “

” ஹ்ம்ம் இல்லை விசு.. என் நால இது விசையம அப்பா கிட்ட பேச முடியாது.. என கணவரை எதிர்த்து தன்னால் பேச முடியாது.. என்று அவர் திட்டவட்டமாக சொல்லி விட.. தன் உடல் நிலையே எண்ணி.. பெண் பார்க்க வர இருபாவர்களை எப்பிடி தடுத்து நிறுத்துவது என்று மீண்டும் பெருமாள் கோவில் சந்தியில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்ததால்.. ‘ யாருக்கும் சங்கடம் வந்து விட கூடாது.. என்ன செய்வது எப்பிடி தடுப்பது.. இப்பிடி அவள் யோசித்து கொண்டு இருக்கையில் அங்கே மீண்டும் அவளை தேடி நந்தினி வந்து சேர்ந்தால்..

யார் தன் அருகில் வந்து அமர்கிறார்கள் என்று கூட பார்க்க தோன்றாமல்.. மாயா பெருமாளை வெறித்து பார்த்துகொண்டஇருந்தாள் .[ வாழ்க்கையில் சோதனை வரலாம் ஆனால் வாழ்கையே சோதனை ஆகிடிவிட்டால் வாழும் காலம் நரகமே என்பது எவ்வளோ சத்தியமான வார்த்தை இப்போது என்ன செய்வாள் விஸ்மாயா ]
அவள் அமர்ந்து இருந்த நிலையே பார்த்து நந்தினி தனக்குள் .. எந்த கோட்டையே பிடிக்க இப்பிடி யோசித்த படி உட்காந்து கிடைக்க இவ .. என நக்கலாக நினைத்த படி அவள் அருகே சென்று அமர்ந்து அவள் தொலை தொட.
யாரோ எவரோ என்று மாயா திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்…. ஹ்ம்ம் ச்சு என ஒரு பெரியே மூச்சை இழுத்து விட்டு நீ தான

” நான் தான் நீ யார்ன்னு நினச்ச.. “

” அது அக்காவோ இல்லை அம்மாவோ நினைச்சேன்.. ஆமா உன் முகம் ஏன் வாடி போய் கிடக்கு நந்து.. “
” என்ன விடு விஸ்மாயா , இப்போ உனக்கு என்ன பிரச்சனையை சொல்லு.. என நந்தினி அழுத்தி கேட்க..
வேற வழி இல்லாமல்.. மாயா தனக்கு கல்யணம் ஏற்பாடு நண்டந்து கொண்டு இருப்பதை பற்றி ஒன்று விடாமல் சொல்லி முடித்தால்.. இப்போ எப்பிடி சமாளிக்க போறேன்னு எனக்கு தெரியல நந்து.. ஒரே கொழப்பமா இருக்கு..
இதை கேட்க நந்திநிக்கோ பழம் நழுவி தானாய் பாலில் விழுவது போல் தோன்றியது.. ” எஸ். நான் எதிர் பார்த்த நேரம் இது தான் இப்போ ஈஸியா இவள நம்ம வழிக்கு கொண்டு வந்துரலாம் என நினைக்க.

காற்று வீசும்…………..!!
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPI -6




நந்தினி தன் உணர்வுகளை கட்டுபடுத்தி சோகமாய் இருப்பது போல் முகத்தை மாற்றி கொண்டு… ”

இப்போ என்ன பண்ண போற மாயா. எப்பிடி இதை தடுத்து நிறுத்த போற.. “
” அது தெரியாம தான் உட்காந்து இருக்கேன்.. எனக்கு அப்பா அம்மாவும் தலை குனிய கூடாது அதை சமயம்.. இந்த கல்யாணம் நின்னு போகணும் ஆனா எப்பிடி தான் தெரியல “

நந்தின் சிறிது நேரம் யோசிப்பது போல் நடித்து விட்டு.. ” நான் வேணும்ன்னா ஒரு யோசனை சொல்லவா மாயா.. “

மாயா அவசரமாய் ., சொல்லு டா நீ எப்போவும் தப்பா ஏதும் சொல்ல மாட்ட.. சொல்லு “

” நீ கல்யாணம் பண்ணிக்கோ டா..”

” நந்து விடியே விடியே ராமணயம் கேட்டுட்டு இப்போ சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொல்லுற மாதிரி இருக்கு நீ பேசுறது.. நான் ஒரு கேன்செர் பேஷன்ட் எனக்கு எப்போ என்ன நடக்குமே தெரியாது. இந்த நிலைமைல நீயும் என்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னா என்ன அர்த்தம் “இயலாமையுடன் கேட்டாள் மாயா

அவளது பேச்சை கேட்ட நந்தினி , அவசரம் வேண்டாம் மாயா.. நான் சொல்ல வராத முதல பொறுமையா கேளு அப்புறம் உன் முடிவ சொல்லு.. இப்போ எனக்கு நேரம் ஆச்சு நாளைக்கு உனக்கு லீவ் தானே.. நாம காபி ஷொப்ல இத பற்றி பேசலாம் அப்போ நம்ம கூட இன்னும் ரெண்டு பேரு இருப்பாங்க அவங்க கிட்ட கலந்து யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம் என்ன சரியா..”

” மாயாவுக்கு இருந்த நெருக்கடியில் இருந்து எப்பிடியாவுது விடுதலை கிடைத்தால் போதும் என்று இருந்தது அதனால் அவளும் சரி என தலை அசைத்து வைத்தால்..”

” சரி வா சாமி கும்பிட்டு கிளம்பாலாம்.. மனசுல எதையும் போட்டு குழப்பிக்க வேண்டாம்.. எந்த பிரச்சனைக்கும் ஆரம்பம் இருந்தால் முடிவுன்னு ஒன்னு இருக்கும்.. [ சாத்தான் வேதம் ஓதுவது இங்கே தான் நடக்கும் .. ]

” ஹ்ம்ம்.. ” என சொல்லிவிட்டு நந்தினி உடன் சேர்ந்து பெருமாளை வணங்கிவிட்டு அவள் வீட்டுக்கு திரும்பினாள்

வாசலில் மாயாவை எதிர்ப்பார்த்த படி நின்றிருந்த ருக்மணி , ஏண்டி போனா போன இடம் வந்தா வந்த இடமா. எவ்வளோ நேரம் டி.. கோவில் போய்.. “

” சாரி மா கூட்டம் அதிகம் அதுவும் இல்லாமல் நந்தினி வேற வந்து இருந்தா பேசிட்டு வர நேரம் ஆகிருச்சு.. “

சரி சரி உள்ளே வா. சாப்பாட்டு சுடு பண்ணி எடுத்துது வரேன்

” சரி மா.. என சாப்பிட அமர்ந்தால்.. “
வேகமாய் சாப்பிட்டுவிட்டு.. . ப்ராஜெக்ட் வொர்க் இருக்கு மா நான் அப்புறம் வரேன் அம்மா என சொல்லிவிட்டு தனது அறை கதவை அடைத்துவிட்டு மறைத்து வாய்த்த மாத்திரைகளை எடுத்து போட்டு கொண்டு தன் வேலையே பார்க்க ஆரம்பித்தால், நந்தினி என்ன வழி சொல்ல போகிறாள் என்கிற யோசித்தாள்

இங்கே

கார்த்திக் வீட்டில் நாளுக்கு நாளாய் நிலைமையும் சரி நிம்மதியும் சரி.. குலைந்து போய் கொண்டு இருந்தது.. [ விதியும் நந்தினியும் கேட்பார் இன்றி தன் ஆட்டத்தை காண கட்சிதமாய் ஆடி கொண்டு இருந்தார்கள்.. ]

நந்தினி.. சந்தோசத்துடன் வீட்டுக்குள் வர.. எதிர அமர்ந்து இருந்த வேதாசலம் அவளின் புன்னகையே பார்த்து.. சொன்ன வேலையே முடிச்சுட்டா போலையே என நினைத்த படி அமர்ந்து இருந்தார்..

தாத்தா என்று சந்தோசமாய் கத்தி கொண்டே வர அவளது சத்தம் கேட்டு ராஜி மற்றும் கௌசல்யா கீழே இறங்கி வந்தார்

என்ன மா நந்தினி ரொம்ப சந்தோசமாய் இருக்கிற மாதிரி இருக்கு அந்த பொண்ண பார்த்தியா பேசிட்டியா என்ன .. ??

ஆமா தாத்தா பேசிட்டேன்..

” ஒ அப்போ நீ சொன்னதுக்கு அந்த பொண்ணு சம்மதம் சொல்லிடுச்சா” என்று யோசனை உடன் கேட்க.. “

” இல்லை தாத்தா.. சொல்லிடுவா நாளைக்கு நீங்க நானு கார்த்திக் போறோம் அவ கிட்ட பேசுறோம்.. அப்புறம் இப்போ அவளுக்கு இன்னும் நெருக்கடியான நேரம்.. அவ அப்பா அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காராம். அவளுக்கு இருக்கிற நிலைமைல இத எப்பிடி தடுத்து நிறுத்துறது கேட்டா நான் தான் நாளைக்கு சொல்லுறேன் சொல்லிடு வந்தேன்.. எப்பிடி தாத்தா என் பிளான். “

” அவளது யோசனை கேட்டு.. ராஜி.. அதிரிந்து.. ” அடிப்பாவி மகளே.. போயும் போயி உனக்கா அந்த புள்ள பிரெண்டா வரணும் என முகம் தெரியாத.. மாயாவுகாக ராஜியின் உள்ளம் பதறியது..

கௌசல்யா மகளை எண்ணி கர்வத்தில்.. . சூப்பர்.. நந்தும்மா எனக்கு தெரியும் நீ எது செய்தாலும் கரெக்டா செய்துடுவேன்னு.. என பாராட்டினார்..

இதை எல்லாம் வீட்டு வாசலில் நின்று கேட்டு கொண்டு இருந்த கார்த்திக் உள்ளுக்குள் மேலும் நூறு சில்லாக நொறுங்கி போய் கொண்டு இருந்தான்.. ச்சீ….. இவளையா நான் காதலிச்சேன்..

அவன் வந்து விட்டதை பார்த்த கௌசல்யா அவசரமாய்.. வாங்க.. மாப்பிள்ளை என சொல்ல..
நந்தினி சந்தோசமாய் திரும்பி அவன் இடம் சென்று .
” ஹே காத்திக் வா வா உனக்கு தெரியுமா நம்ம ப்ரொப்லெம் சரியாக போகுது.. என தீபாவளி வாழ்த்து சொல்லவது போல் சொல்ல…

பெரியவர்கள் இருக்கிறார் என்பதால் தான் கார்த்திக்.. அவளை முறைத்து விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.. அதுவும் வேதாச்சலத்தின் பார்வையாலையே தன்னை அடக்கியதால் மட்டுமே..

அவன் சென்றதை சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு… … மீண்டும் நந்தினி பெரியவர் இடம் திரும்பி.. அப்போ நாளைக்கு போறோம்ல.. தாத்தா..

” கண்டிப்பா நந்து ம்மா இப்போ நீ போய் சாப்டுட்டு ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு அவளை அனுப்பி வைத்தார்.. “

இரவில் ராஜி தன் கணவன் . இடம்.. பொரிந்து தள்ளி விட்டார்… என்னங்க நடக்குது இங்க.. இல்லை என்ன நடக்குதுன்னு கேட்குறேன்.. என் புள்ள முகத்துல சிரிப்பே போச்சி.. அவ என்னனா அவ இஷ்டத்துக்கு என்னமோ பண்ணுறா சொல்லுறா

ரகுவும் அவரது கேள்வியில் தலையே பிடித்து கொண்டு அமர்ந்து விட்டார்… ” அவருக்கும் பதில் தெரிந்தால்.. தானே.. சொல்லுவார்..எல்லாம் அவர் கை மீறி நடக்கும் பொது.. அவரும் தான் என்ன செய்வார்..

இப்போது மாயா மற்றும் கார்த்திக்கின் நிலை ஒன்றாங்க. இருந்தது.. .. அவன் காதலை எண்ணி கல்யாணம்.. வேண்டாம் நிற்க மாயாவோ…மரணத்தை எண்ணி கல்யாணம் வேண்டாம் என்று நின்றாள் இதில் யாரு வெல்வார்கள் நந்தினியா இல்லை விதியா.. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…

ஹாய் பிரெண்ட்ஸ் எக்ஸாம்ஸ்ல கொஞ்சம் பிஸி அதான் குட்டி எபி
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்




காலையில் வேலை பரபரப்பாக செல்ல.. விஸ்மாயா தனது எல்லா வேலையும் முடித்து கொண்டு அன்னை இடம் வெளியே ப்ராஜெக்ட் விசையமாக போவதாக சொல்லிக்கொண்டு. நந்தினி தனக்கு மெச்செஜ் செய்த இடத்திற்கு சென்றாள்

இங்கே கார்த்திக், தான் என்றைக்கும் இல்லாமல் கோபத்தின் உச்சியில் இருந்தான் எங்கே நந்தினியே தாமே கொன்று விடுவோமோ என்கிற பயத்தில் அறையே விட்டு அவன் வெளியே வரவே இல்லை மனதுக்குள் நேற்று இரவு வேதாசலம் பேசியது ஞாபகத்தில் ஓடியது…

இரவி பால்கனி எங்கையோ.. பார்வை பார்த்த படி கார்த்திக் நின்று கொண்டு இருந்தான்
அதை பார்த்து வேதாசலம் அவன் அருகில் சென்று ” கார்த்திக் ” என்று அழைத்தார்..

அழைத்தவரை திரும்பி பார்க்காமல்.. எனக்கு மட்டும் ஏன் தாத்தா இப்பிடி நடக்குது காதல் தான் கை கூடலைனா என்ன இப்பிடி பொம்மை மாதிரி ஆடி வச்சா என்ன அர்த்தம் எனக்குன்னு மனசு ஒன்னு கிடையாதா,”

அவனின் வேதனையே பார்த்து பெரியவரும் ” பொறுமை கார்த்திக் எல்லாம் நீயே தானே இழுத்துகிட்டது, அவளையும் அவள் குணத்தையும் பற்றி தெரிஞ்சு இருந்தும் நீ கவனம் இல்லாமல் இருந்தது உன் தப்பு தானே ” என அவன் செய்த தவறை அவர் சுட்டி காட்டினார் ”

” என்ன தாத்தா குத்தி காட்டுறிங்களா. “வேதனையுடன் அவன் கேட்க

” ஹ்ம்மும்..என மறுத்தவர் குத்தி காட்டாள ப்பா நீ நடந்துகிட்டத உனக்கு ஞாபகம் படுத்துறேன்.. அவ்வளோதான் “

அவன் திரும்பி அவரை அடிப்பட்ட பார்வை பார்த்து.. ஒத்துக்கிறேன்.. தாத்தா அவ திருந்தி என் மனச புரிஞ்சுப்பா நினைச்சது எல்லாம் என் தப்பு தான் நீங்க எதையாவுது செய்து இந்த கல்யாணம் பேச்சை நிருந்துங்களேன்.. எனக்கு முடியல தாத்தா,எனக்கு நெஞ்சே அடைக்கிற மாதிரி இருக்கு அதுவும் ஒரு பெண்ணை இப்பிடி ஏமாத்துறது.. அவளை நீங்க பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும் அவ்வளோ அப்பாவியா இருக்கா அவளை போய் நான் …. என அவர் கை பிடித்து அவன் கெஞ்ச..

” அது முடியாது கார்த்திக்.. நான் இப்போ நந்தினியே நிறுத்தினா அவ வேற ஒரு குறுக்கு வழியே.. தேர்ந்து எடுப்பா.. இப்போ இருக்கிற நிலைமைல. உன் அப்பா அதான் என் புள்ள முகத்துல கூட பார்க்க முடியாம குற்ற உணர்வுல இருக்கேன் இதுல நான் இன்னும் புதுசா ஏதும் செய்தா நம்ம குடும்ப மானம் காத்துல பறக்கும் அதுக்கு நான் ஒரு காலம் சம்மதிக்க மாட்டேன் என அவர் உறுதியாக சொல்லிவிட.”

கார்த்திக் தலையே பிடித்து கொண்டு இனி ஒண்ணுமே செய்யே முடியாத என்கிற எண்ணத்தில் தொப் என்று அங்கே இருந்த சேரில் விழுந்தான். “ அவன் இருக்கும் நிலைமையில் விட்டா கண்காணா தேசத்திற்கு ஓடிவிடுவான் ஆனால் முடியாதே அடுத்து என்ன பெரியவரை பார்த்து இப்போ நான் என்னதான் செய்யனும் சொல்ல வரிங்க தாத்தா.”

” நான் என்னத்த சொல்ல நீ அந்த புள்ளையே தான் கல்யாணம் செய்துக்க வேண்டி இருக்கும்..”

” தாத்தா. “
” ஏன் ப்பா வசதி கம்மியா இருக்கேன்னு பார்க்குறியா “
” என்ன தாத்தா இப்பிடி பேசுறிங்க.. அந்த பொண்ணு.. ஓட இயலாமையே…பயன் படுத்தி எனக்கு குளிர் காயே இஷ்டம் இல்லை..”

” அப்போ வேற பொண்ணு பார்கலாமா..”[ பேரனுக்கு நல்ல ஒரு வாழ்வை அமைந்துவிட வேண்டும் என்கிற ஆசையில் கேட்டார் ]

” என்ன தாத்தா நீங்க இப்பிடி கேட்டா நான் என்ன பதில் சொல்லுறது. நான் நந்தினியே கல்யாணம் பண்ணிகிறது காக. இன்னொரு.. உயிரை epidi பலி கொடுக்குறது அப்புறம் காசிக்கு போனாலும் அந்த பாவம் போகாது தாத்தா..”

”நீ இந்த பொண்ண வேணாம் சொன்னா அவ வேற பொண்ண பார்பாலே..” அவர் நந்தியின் எண்ணத்தை போட்டு போட்டு வைக்க

” தாத்தா நான் வேணும்னா பேசாம திரும்பி மும்பை.. போயிட்டுறேனே .” என கார்த்தி சொல்ல

அதை கேட்ட வேதாசலம். . ” இப்போ கூட உனக்கு உன் பெற்றொர பத்தி அக்கறை.. இல்லையா ”
” தாத்தா .. அதுக்காக.. “
” நாம அந்த பொண்ணு கிட்ட பேசிட்டு ஒரு முடிவுக்கு வரலாம் ப்பா “
” தாத்தா.. ?? “அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என கார்த்திக்குக்கு புரிந்து போனது
” இப்போ பேசாம தூங்கு நாம பிறகு பேசலாம்.. என்று.. சொல்லிவிட்டு.. அவன் உறங்கும்.. வரை.. கார்த்திக்.. அருகிலே.. அமர்ந்து இருந்த.. வேதாசலம்.. மேலும் சில முடிவுகளை எடுத்தார்..”

இவ்வாறு தன்னிடம்.. பேசியதை நினைத்து பார்த்தவனுக்கு மனம் வெறுத்து போய்விட்டது இனி என்ன செய்வது.. என அவன் மனம் இருதலை கொள்ளியாய் தவித்து கொண்டு இருந்தது..”
இதோ அவன் வேண்டாம் வேண்டாம் என்று நினைத்த விடியலும் விடிந்து விட்டது..

நந்தினி.. வீட்டை.. இரண்டு படுத்தி கொண்டு இருந்தால்.. வேதாசலம்.. இடம் வந்து.. தாத்தா நேரம் ஆச்சு.. கிளம்பலாம என அவசர படுத்தினால்..”
அவரோ மனதுக்குள்.. உன் அவசரம் உனக்கு.. என நினைத்த படி.. பொருமா கார்த்திக்.. வரட்டும்..”

” அய்யோ.. அவர் வரும் போது வரட்டும் தாத்தா வாங்க நாம கிளம்பலாம்.. விஸ்மாயா இந்நேரம் கிளம்பி இருப்பா..”
அப்போது தான் கீழே எந்திரமாய் கார்த்திக்.. வந்து கொண்டு இருந்தான்..”
அவனை கண்டதும். நந்தினி.. சந்தோஷத்தில்.. குதித்தாள் ” தாத்தா பாருங்க கார்த்திக் வந்தாச்சு வாங்க கிளம்பலாம் இப்போ..”

கார்த்திக்கின் சோர்ந்து போன.. முகத்தை. கண்டு.. ராஜி மனம் தாளாமல்.. பூஜை அறைக்கு சென்றுவிட்டார்…”
கார்த்திக் அவள் பேசியதை.. கவனிக்காமல். டைன்னிங் ஹால் சென்றுவிட்டான்..
அவன் பின்னால் சென்ற நந்தினி.. கார்த்திக் இடம் ரொம்ப சந்தோசமா இருக்கு கார்த்திக் உன் முடிவ மாத்தினதுக்கு.. இனி பாரு நம்மக்கு எல்லாமே நல்லது தான் நடக்க போகுது.. என பெருமை பேச..

கார்த்திக் அவளை கோபமாய் முறைத்து.. எதோ பேச போக..
வேதாசலம்.இவ அடங்கவே மாட்டாளா என நொந்து கொண்டு . . நிலைமை மோசமாய் மாருவதுகுள்.. நந்தினியே.. பார்த்து நீ மொதல சாப்பிட உட்காரு நமக்கு நேரம் ஆச்சு என அவசர படுத்தினார்.

கார்த்திக்.. மனதுக்குள் இனி ஒன்றுமே செய்யே முடியாது நடப்பது எல்லாம்.. நாராயணன் செயல் என அவர்களுடன் கிளம்பி சென்றான்…
ஹோட்டல் தமிழ்நாடு..
விஸ்மாயா நந்தினி புக் செய்து வைத்து இருந்த டேபிள் பற்றி விசாரித்து அங்கே சென்று அமர்ந்தால்.. ஒரு வித பதத்துடன் ..
அமர்ந்து இருந்தவள் சும்மா இருக்காமல் கையில் கந்த சஷ்டி கவசம் எடுத்து படித்து கொண்டு அவர்கள் காக காத்து இருந்தால்..

சரியாக.. அரைமணி நேரம் கழித்து நந்தினி கார்த்திக் மற்றும்.. வேதாசலம்… வந்து சேர்த்தார்கள்..
வரும் போதே நந்தினி பெரியவர் இடம். அதோ விஸ்மாயா உட்காந்து இருக்கா பாருங்க தாத்தா. எப்பிடி செலேக்சன். என கேட்க..
வேதாசலம்..மாயாவை பார்த்து.. ஹ்ம்ம் இவள் தான் நம்ம கார்த்திக்கு சரியான பொண்ணு… என முடிவு செய்துவிட்டார்…
கார்த்திக்கோ , இவள போயா ஏமாற்ற போறேன்.. என மீண்டும் தனக்கு தானே நொந்த படி அவர்கள் உடன் சென்றான்..

ஹாய் மாயா . என அழைத்து படி நந்தினி வர.
மாயா . திரும்பி பார்க்க.. அங்கே அவள் பின்னால் கார்த்திக் மற்றும் பெரியவர் வர.. மாயா எழுந்து பெரியவரை பார்த்து வணக்கம் தாத்தா.. வாங்க சார் என இருவரையும் அழைத்தால்..
இருக்கட்டும்மா உட்காரு.. என அவர் சொல்ல.
தாத்தா இது தான் மாயா .. கார்த்திக் உங்களுக்கு தான் இவள முன்னவே தெரியுமே..

சரி நாம பேசுறதுக்கு முன்னாடி எதாவுது ஆர்டர் பண்ணிடலாம் சாப்டுடே பேசலாம் என நந்தினி அங்கே இருந்த மெனு கார்டை எடுத்து மாயாவை பார்த்து. சொல்லு மாயா உனக்கு என்ன வேணும்

என்னது எனக்கா., ஐயோ வேண்டாம்.. எனக்கு வெளியே சாப்படா எல்லாம் சேராது.. நீங்க சாப்பிடுங்க.. என அவள் சொல்ல..”

கார்த்திக் உங்களுக்கு.. என நந்தினி கேட்க

” இப்போ தானே. சாப்படு வந்தோம். நீயே கொட்டிகோ என அவன் வெடுக்கென பேச. “

அது எல்லாம் கண்டுகொள்ளாமல்.. அவள் அடுத்து வேதாசலம் இடம் தாத்தா உங்களுக்கு

எனக்கும் ஏதும் வேண்டாம் நந்தினி

அப்போ சரி என தனக்கு மட்டும்.. உணவை ஆர்டர் செய்துவிட்டு.. மாயாவின் பக்கம். திரும்பி…இதோ பாரு மாயா.. உன் பிரச்சனைக்கு. ஒரே வழி நான் அப்போ சொன்ன மாதிரி கல்யாணம் தான்..
..
என்ன நந்தினி சொல்லுற.. நான் ஒரு கேன்சர் பேஷண்ட் எனக்கு எப்போ என்ன நடுக்கும்னே தெரியாது.. இதுல கல்யாணமா . இத சொல்ல தான் நீ என்ன இங்க வர சொன்னியா நீ..என அவள் கோபமாய் கேட்க..

ஹே கூல் கூல்.. நான் சொல்லுறத நீ நான் ஒத்துகிறேன் ஆனா உன் நிலைமையே புரிஞ்சு இருக்கிற மாதிரி. ஒருத்தர் வந்த நீ சம்மதிப்ப தானே

” என் நிலைமையே . புரிஞ்சுகிட்டு குட் ஜோக் நந்து யாரவுது நாளைக்கு சாக பொரவல ஏன் கல்யாணம் பண்ணிக்க நினைக்கணும்.. இதுனால அந்த யாருக்கு என்ன லாபம்.. “

நந்தினி மனதுக்குள்.. ” பாவி கண்டுபிடிச்சுடாலே ஆன்னாலும் இவ இவ்வளோ விவரமா இருக்க கூடாது.. என நினைத்த படி..யாருக்கும் லாபம் இல்லை மாயா. உனக்கு உதவும் எண்ணத்துல தான்.. இப்போ சொல்லு .. சம்மதிப்பியா நீ “

” என்னமோ ஆள் பார்த்து வச்ச மாதிரி பேசுறியே நந்தினி..”

” பின்ன உனக்கு ஒண்ணுனு சொன்னா . நான் செய்ய மாட்டேனா.”

இவளது பேச்சை கேட்ட பெரியவர் மற்றும் . கார்த்திக்.. இவ இவ்வளோ பெரியா ஆளா இருக்காளே என்று நினைத்தார்கள்..

மாயா அவளது பேச்சை கேட்டு குழம்பி போய் ” நீ என்ன சொல்லுற நந்தினி..”
” சரி சரி ரொம்ப குழப்பிக்காதே நானே சொல்லுறேன்.. எங்க பிரச்சனைக்கு இப்போ ஒரு ஆள் தேவை.. உன் பிரச்சனையும் தீரனும்.. என இழுக்க.”
” அதுக்கு.. ? “
” நீ ஏன் கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்க கூடாது. “
நாம சரியா தான் கேட்டோமா என்கிற எண்ணத்தில் மாயா மீண்டும் ” என்ன சொன்ன என்று கேட்க “
” மாயா நீ எங்க கார்த்திகை கல்யாணம் செய்துக்கணும்..என்று நந்தினி சொல்லி முடித்தாள்..”
” என்னது… நான்.. என அதிர்ந்து போய் எழுந்து நின்றே விட்டால்.. . உனக்கு என்ன.. பைத்தியமா பிடிச்சு இருக்கு…
பிறகு கார்த்திக் இடம் ஏன் சார்.. இவ தான் ஏதோ உளறா நீங்க இதுக்கு எப்பிடி சம்மதிச்சிங்க..

என்ன சொல்லுவான் இவன்.. அவளது கேள்விக்கு என்று அவன் தலை குனிந்த படி.. அமர்ந்து விட.
பெரியவர் தான்.. ஏதோ சொல்ல போக.. அதற்குள்.. நந்தினி முந்தி கொண்டு.. உனக்கு என் மேல அக்கறையே இல்லையா.. மாயா அப்போ நான் எப்பிடி போனாலும் உனக்கு சந்தோசமா.. என நந்தினி சரியான இடத்தில அடித்து விட..
மாயா.. ” நந்தினி..”
” ஆமாண்டி .. ப்ரெண்டுனு தானே உன் கிட்ட உதவி கேட்குறேன்.. ஆனா நீ இப்பிடி பேசுறியே.. “

” நீ தான் என் நிலைமையே புரிஞ்சிக்காம பேசுற நந்தினி. நான் கல்யாணம் வெறும்.. வெளையாட்டுக்கு பண்ண முடியாது இதுல என் குடும்ப மானம் மரியாதையை எல்லாம் அடங்கி கிடக்கு.. இதுல கொஞ்சம் தப்பு ஆனாலும், எங்க அப்பா உயிரை விட்டுர்வார் டி.. அதுனால தான் நானே என்ன பண்ணுறது தெரியாம.. தவிக்கிறேன் இதுல நீ இப்பிடி பேசினா நான் என்ன பண்ணுவேன்..”
ஒ கோட்.. இது தான் உன் பிரச்சனையா. அப்போ எல்லாம் முறை படி பெரியவங்க சம்மதத்தோட நடந்த உனக்கு ஒகே தானே.. மாயா. என அவள்.. ஆர்வத்தோட கேட்க..”

அது… இல்லை நந்து இது எல்லாம் சரியா வராது.
நந்தினி அவள் கையே எடுத்து தன் கையில் வைத்து கொண்டு.. இங்க பாரு மாயா எல்லாம் சரியா வரும்.. இது நாள ரெண்டு உயிர் தப்பிக இருக்கே..உன் ட்ரீட்மென்ட் கூட நடக்குமே..

அவளது வார்த்தையில்.. மாயா வெடுக்கென தன் கையே உருவி கொண்டால்.. ” போதும் நந்து.. என்ன விலை பேசுற மாதிரி இருக்கு.. என்றால் கோபத்துடன்..
அவளது பேச்சில் பெரியவர் பதறி. அம்மாடி அப்பிடி எல்லாம் பேசாதே ம்மா நந்தினி ஏதோ பேச தெரியாம பேசிட்டா. எப்பிடியும் நீயும் கல்யாணம் பண்ணிக்கிற நிலைமைல இருக்குற அதுக்கு அப்பிடி சொல்லிட்டா..
அதுக்குன்னு தாத்தா. என் நால பொம்மை கல்யாணம் மாதிரி செய்துக்க முடியாது தாத்தா.. இது ரெண்டு பேரோட வாழ்கை.. அப்புறம் என் மானம் என் குடும்ப கௌரவம் எல்லாம் அடங்கி இருக்கு.. என்னக்கு எங்க அப்பா-அம்மா ரொம்ப முக்கியம்

நடந்து கொண்டு இருக்கும் பேச்சு வார்த்தையே ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டு இருந்த கார்த்திக். ஒரு முடிவுடன் . அப்பிடி ஏதும் நடக்காது மாயா நீங்க சரின்னு சொல்லுங்க மத்த எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்.. யாரும் உங்கள கேள்வி கேட்க மாட்டாங்க.. அதுக்கு நான் பொறுப்பு.

அவன் சம்மதம் சொல்லிவிட்டான் என நந்தினி ஆச்சரியத்துடன் பார்க்க பெரியவரோ அவனை அறத்துடன் பார்த்தார்..

மாயாவோ அவனை கலக்கத்துடன் பார்த்த படி.. அமர்ந்து இருந்தாள்
இனி……………………………………
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



இது சரியா வருமோ என்கிற பயத்தில் மாயா கார்த்திக்கை நிமிர்ந்து பார்த்தாள்..

அவளின் எண்ணம் புரிந்தவனாய் பயம் வேண்டாம் மாயா நீங்க சொன்ன மாதிரி தான் எல்லாம் நடக்கும் அதுக்கு நான் பொறுப்பு இப்போ நீங்க உங்க முடிவ தான் சொல்லணும் என அவன் அவள் முடிவை எதிர்பார்க்க

மாயா அவன் சொன்னதை கேட்டு.. அரை மனதாய் " இப்போவும் இது சரியா வருமான்னு எனக்கு தோணல சார் ஆனா நந்தினி ,நீங்க எல்லாரும் சொல்லறதை வச்சு எனக்கு சம்மதம் என்று அவள் சம்மதம் சொல்ல..
நந்தினி சந்தோஷத்தில் அவளை கட்டி அனைத்து போதும் விஷ்மையா இது போதும் உன் உதவியே நான் என் காலம் வரை மறக்க மாட்டேன்.."சொன்னாள் "
வீட்டுல நாம அவ்வளோ பேசி சம்மதம் சொல்லாதவன் இப்போ சரின்னு சொல்லி இருக்கானா ஏதோ விஷயம் இருக்கு என பெரியவர் யோசனையுடன் கார்த்திக்கை பார்த்து கொண்டு இருந்தார்.பிறகு எப்பிடி விஸ்மையாவின் அப்பாவிடம் எப்பிடி திருமணம் பேச்சை எடுத்து செல்வது அவளது வீட்டில் யார்-யார்-இருக்கிறார்கள் ,எப்பிடி என நால்வரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள் ,விஸ்மையா தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்து , அவர்களிடம் ,அப்போ நான் கிளம்புறேன் நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு தேடுவாங்க என கிளம்ப
அவளை பார்த்து கார்த்திக் அவளுடன் எழுந்து " நான் வேணும்ன்னா ட்ரோப் பண்ணவா "அக்கறையாய் கேட்க "
ஐயோ அது எல்லாம் வேண்டாம் சார் நானே போயிடுவேன்.. "" இல்லை உன் ஹெல்த் "அவன் ஒருமையில் பேச்சை ஆரம்பித்துவிட்டான் என்பதை இருவரும் உணரவில்லை
ஆனால் வேதாச்சலம் கவனித்துவிட்டார் " அது எல்லாம் ஒரு பிரச்சனையை இல்லை சார் நான் பார்த்துகிறேன்.. என அவள் சொல்ல "
"அப்போ வீட்டுக்கு போயிட்டு நந்தினிக்கு மெஸ்சேஜ் போட்டுரு என கார்த்திக் சொல்ல அவளும் சமத்து பிள்ளைபோல் சரி என்று தலைஅசைத்துவிட்டு சென்று விட்டாள்

மாயாவை வழி அனுப்பி வைத்து விட்டு.. நந்தினி பெரியவர் பக்கம் திரும்பி.. " நான் தான் அப்போவே சொன்னேன்ல தாத்தா
அவ்வளோ நேரம் அவள் போவதை கொஞ்சம் பதட்டமாக பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தவனின் அருகில் சென்ற நந்தினி அவ போயிடுவா கார்த்திக் நீ பெயருக்கு தான் ஹஸ்பண்டா நடிக்க போற அதுக்குன்னு இப்போவே நீ நடிப்ப ஆரம்பிக்கவேண்டாம் வந்து உட்காரு இந்த நால கொண்டாட வேண்டாமா நம்ம வேலை எவ்வளோ ஈசியா முடிஞ்சு இருக்கு பாருங்க.. அணைத்து பற்கள் தெரிவது போல் ஒரு சிரிப்பை..சிந்தியே படி சொல்ல இதை கேட்ட
கார்த்திக் அவளை ஒரு வித அருவெறுப்புடன் பாத்தான் பிறகு.. பெரியவர் இடம் தாத்தா நான் கிளம்புறேன் எனக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமா மீட்டிங் இருக்கு. என சொல்லிவிட்டு நகர போக.."
அவனை தடுத்து என்ன கார்த்திக் கிளம்பியே ஆகணுமா அப்போ சரி நானும் உன் கூடவே வரேன் என்னையும் அப்பிடியே பார்லர்ல விட்டுட்டு என நந்தினி சொல்ல
அதை கேட்ட கார்த்திக் தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்த படி " ஹ்ம்ம் எனக்கு நேரம் இல்லை நந்தினி, நீ கால் டாக்ஸி பிடிச்சு போ. "சொல்லிவிட்டான்
"ஏன் இப்போ தான் விஸ்மையவை வீட்டுல விட்டுடவா கேட்ட அப்போ மட்டும் உனக்கு நேரம் இருந்ததா ."
"முடியாதே பொன்னே யாரு தயவு வேண்டாம்னு சொல்லிடு போறா உனக்கு என்ன வந்தது நல்லாதானே இருக்கே நீயே போ எனக்கு நேரம் ஆச்சு என்று அவன் வெடுக்கு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்
இந்த கார்த்திக் புதியவன் நந்தினிக்கு அவளது முகமோ அவனது பேச்சை கேட்டு.. அவமானத்தில் கருத்து போய்விட்டது அவள் அவனை உன்னை என் வழிக்கு கொண்டு வர எனக்கு தெரியும் கார்த்திக் இப்போத்தானே ஆரம்பிச்சுருக்கேன் இனிமேல் தானே இருக்குஅவளது முக மாற்றத்தை கவனித்தும் கவனிக்காதது போல் பெரியவர்.. வீட்டுக்கு கிளம்ப சொல்ல நந்தினி வேற வழி இல்லாமல். அவருடன் கிளம்பி வீட்டுக்கு திரும்பும் வழியில். இறங்கி கொண்டாள்வேதாசலம் தன் மகன் இடம் இந்த விஷயத்தை எப்பிடி சொல்லுவது என்று... யோசித்த படி.. வீட்டுக்கு திரும்பினார்..அங்கே அவர் வருகைகாக ரகு மற்றும். ராஜி காத்து கொண்டு இருந்தார்கள் இன்றைக்கு இருவருக்கும் ஒரு முடிவு தெரிய வேண்டியே இருந்தது அதை பார்த்த அவர்.. " என்னப்பா ரகு.. ஆபீஸ் போகல இன்னும் " இப்போ அது ஒன்னு தான் அப்பா இங்கே குறைச்சல் எரிந்து விழுந்தார் ." வேற எதுக்கு இங்க இப்போ குறை வந்துருச்சு உனக்கு இவ்வளோ கோபம் ரகு.." வேதாச்சலம் பொறுமையாக கேட்க பெரியவரின் நிதானம் ரகுவின் கோபத்தை கொஞ்சம் குறைத்து இருந்தும் பேசவேண்டி இருந்ததால் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார் " பின்ன என்ன அப்பா இங்க என் புள்ள முகத்துல சிரிப்பையே காணோம் எதையோ பரி கொடுத்தது போல் இருக்கான் அவன் முகத்த பார்க்க சகிக்கல எங்களுக்கு என்ன தான் நடுக்குது இங்கே,அந்த பொண்ணு என்னனா அவ பாட்டுக்கு இவன கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னா , சரி ரெண்டு பேருக்கும் பிடிச்சு இருக்கு சரி சொன்னோம் ஆனா இப்போ அவளே இவனுக்கு வேற பொண்ண பார்க்குறேன் கல்யாணம் பண்ணிக்கோ படுத்தி எடுக்குறா நீங்களும் அதுக்கு ஏதும் சொல்லாமல் அமைதியா வேடிக்கை பார்த்தா என்ன அர்த்தம் அப்பா .யாரும் இல்லதா அனாதையா அவன் . ." என கோபத்தில் ரகு பேச..

ரகுவின் பேச்சை அமைதியாக கேட்ட அவர்.. " பேசியாச்சா ரகு பிறகு தன மருமகள் இடம் நீ ஏன்மா அமைதியாக இருக்க நீயும் உன் பங்கிற்கு கேள்வி கேட்டுட்டு என அவர் சொல்லராஜி மௌனமாய் அழுத படி நின்று இருந்தார் அவரால் தந்தை போல் பார்த்துக்கொண்டு மாமனாரை எதிர்த்து பேச முடியவில்லை அதனால் அழுத்த படி நின்றிருந்தார் அதற்கும் ரகு.. கோபமாய் எதோ சொல்ல போவதற்குள்..

இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு அங்கே கௌசல்யா வந்து சேர்ந்தாள் . என்ன ஆச்சு , என்ன பேசுறீங்க என கேக்க மக்களது எண்ணத்தை புரிந்து கொண்ட பெரியவர் நீங்க ரெண்டு பெரும் என்னோட ரூம்க்கு வாங்க அங்கே பேசிக்கலாம் கையோடு முத்து என்று அங்கே வேலை பார்க்கும் ஆளை அழைத்து.. நான் சொல்லுற வரைக்கும் யாரு உள்ளே வர கூடாது அதை பார்த்துக்கிற தான் வேலை உனக்கு.. பார்த்துக் என்று சொல்லிவிட்டு.. ராஜி ரகுவை அழைத்து கொண்டு நகர

அதை கேட்ட கௌசல்யா . அப்பா.. நான் உங்க பொண்ணு.. என பதிலுக்கு போர் கோடி தூக்கினார் அது நால தான் சொல்லுறேன் , நீங்க ரெண்டு பெரும் வாங்க என அவர் சென்று விட..கௌசல்யா அங்கயே அமர்ந்துவிட்டாள்உள்ளே வந்த வேதாசலம் எப்பிடி ஆரம்பிப்பது என்று யோசிக்க. அவரது அமைதி கண்டு ரகு மீண்டும் அப்பா பேசுங்க பேசணும் தானே வந்திங்க இப்போ அமைதியா இருந்தா என்ன அர்த்தம் மொதல கார்த்திக்க கல்யாணம் பண்ணிக்க கேட்ட சரி நம்ம பயலுக்கு பிடிச்சு இருக்கேன்னு சம்மதம் சொன்னோம் ஆனா இங்க இப்போ நடக்குறது என்ன அப்பா..சொல்லுங்க என்ன சொல்ல சொல்லுற ரகு இதெல்லாம் நீயே தானே இழுத்துக்கிட்டது தானே நான் அணைக்கே சொன்னேன் கௌசி என் பொண்ணு தான் அதுக்குன்னு எல்லாம் இருக்க வேண்டியே இடத்துல இருக்கணும் நீ கேட்கல அதோட விளைவு தான் இது.."தந்தையின் பேச்சை கேட்டு அதிர்ந்தவர் அப்பா , " தங்கை கஷ்டத்துல இருக்கிற அப்போ நம்ம கண்ணு பார்வையில வச்சு அவளுக்கு உதவனும் நினச்சது தப்பா . "ஆதங்கம் தாளாமல் கேட்க

” தப்பு கிடையாது ரகு ஆனா எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குல.. சரி விடு பழச பேசி என்ன ஆகா போகுது இப்போ நந்தினி பார்த்து இருக்கிற பொண்ணு நம்ம கார்த்திக்கு சரியான பொண்ணு தான் என நந்தினியின் திட்டம் மாயாவுடன் நடந்த சந்திப்பு.. கார்த்திக்கின் முடிவு எல்லாம் அவர் சொல்லி முடிக்க.. ”எல்லாம் கேட்ட
ரகு எப்பிடி உணர்ந்தார் என்பதை வார்த்தையால் சொல்ல முடியாது என்று அவரது முகம் மாற்றமே சொல்லியது
ராஜியின் நிலையோ இன்னும் மோசமாய் போய் விட்டது அவரால் பெரியவர் சொன்னதை சகிகித்து கொள்ள முடியவில்லை .
பின் மாயா சொன்னது போல் ரகுவும் அப்பா இது சரியா வரும்னு எனக்கு தோனல வேற எதாவுது இதுக்கு வழி இருக்கணு பார்க்கலாம்

"வேற வழியே இல்லை ரகு நீ இதுக்கு மறுத்தால் நந்தினி வேற பெண் பார்ப்பா அது நம்ம கார்த்திக் வாழ்கையே பால் அடிச்சா என்னாலையும் உங்க நாளையும் தாங்கிக்க முடியாது என அவர் சொல்ல
” அப்பா ” என அவர் அதிர்ந்து விட்டார் .

ஆமா ரகு இப்போ நான் சொல்ல போறத நீங்க ரெண்டு பெரும் கவனமாக கேட்டுக்கோங்க என்று அவர் திட்டம் அனைத்தும் அவர் சொல்லி முடிக்க
இப்போது ரகு மற்றும் ராஜி அவர் திட்டத்துக்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்…

மாயா சொன்னது போல்.. அவள் வீட்டுக்கு எந்த வித சந்தேகம் வராத படி வேதாச்சலம் கல்யாணம் தரகர் இடம் பேசி ஜாதக பொருத்தத்தை பார்த்து பெண் பார்க்க வர போவதாக தாமோதரனுக்கு சொல்லி அனுப்பினார் .
தாமோதரனுக்கு.. சந்தோஷம் மற்றும் ஆச்சரியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.. இவ்வளோ பெரியே இடமா என்று அவர் இந்த விசையத்தை தன் மனைவி இடம் சொல்ல..
அவருக்கும் சந்தோஷம் தோற்றி கொண்டது,
இதை அனைத்தும் பக்கத்துக்கு அறையில் இருந்து கேட்டு கொண்டு இருந்த மையாவுக்கு அப்போது தான் நிம்மதியான மூச்சு விட முடிந்தது.. சொன்ன மாதிரியே செய்துடாங்களே என பெரியவர் மற்றும் கார்த்திக் மீதி மரியாதையை கூடியது..
ஆனால் அவளது சகோதரிகள் இருவரும் தான் பொறாமையில் வெந்து பொருமி போய் இருந்தார்கள் ..
” என்ன டி ரேஷ்மி இது நாம ஒன்னு நினைக்க இங்கே வேற ஒன்னு நடக்குதே.. இவளுக்கு இப்பிடி ஒரு வாழ்வா ”
ஆமா அக்கா நீ சொல்லுறதும் சரி தான் இப்போ என்ன பண்ணுறது… .
” இரு டி நான் பேசுறேன் என்று தாமோதரன் இடம் சென்று ” அப்பா எதுக்கும் நல்ல விசாரிங்க அப்பா. இவ்வளோ பெரியே இடம் வேற நிறையே எதிர்பார்பாங்களே.. என மேலும் ஏதோ சொல்ல போக..

தாமோதரனுக்கு கோபம் வந்து விட்டது போதும் ராகினி.. அது எல்லாம் விசாரிச்சாச்சு.. ஜாதகம் எல்லாம் பார்த்து தான் அவங்க எல்லாம் வராங்க உன் பேச்சை கேட்டு இவ்வளோ நாள் வந்த வரன் எல்லாம் தட்டி கழிச்சாச்சு.. இனியும் இந்த இடத்தை விட எனக்கு மனசு இல்லை.. அதுனால பேசாம இருகிறதா இருந்தா இருங்க இல்லை உங்க வீட்டுக்கு கிளம்பிற வழியே பாருங்க. என்று அவர் கண்டிப்புடன் சொல்ல
இரு பெண்களின் முகமும் அவாமனத்தில் விழுந்துவிட்டது இதற்க்கு மேல் பேச அவர்களுக்கு என்ன பைத்தியமா..
பிறகு ருக்மணி இடம் சென்று.. பலகாரம் செய்யே என்ன தேவையோ ஒரு லிஸ்ட் போட்டு குடு கடைல இருந்து கொடுத்து அனுப்புறேன் அவங்க வரதுக்குள்ள எல்லாம் ரெடியா இருக்கணும் பாப்பாவ ரெடி ஆகா சொல்லிடு அப்பிடியே என்று சொல்லிவிட்டு அவர் கடைக்கு சென்று விட..

ராகினி – ரேஷ்ம. ருக்குமணி இடம் வந்து அம்மா நாங்க கிளம்புறோம் எங்க வீட்டுக்கு
அவர்களது பேச்சை கேட்டு.. ருக்மணி அதிர்ந்து என்னடி சொல்லுறிங்க மையூவ பொண்ணு பார்க்க வராங்க நீங்க இருந்து அவளுக்கு உதவி செய்விங்க பார்த்தா கிளம்புறேன் சொல்லுறிங்க

ஆமா இப்போ அவளுக்கு கல்யாணம் ஒன்னு தான் குறைச்சல் .. என ரேஷ்மா சொல்ல

போதும் டி என்ன பேச்சு நீ பேசுற அவ உங்க கூட பொறந்த தங்கை தானே அவளை பார்த்து இப்பிடி பேச உங்களுக்கு எப்பிடி டி மனசு வந்தது..
அம்மா சும்மா கத்தாதிங்க இப்போவே எங்கள கண்டா மதிக்கவே மாட்டா மாட்ட இதுல இவ்வளோ பெரியே இடம்ன்னா எங்க நிலைமை அரோகரா தான்- என இரு பெண்களும் பேசிக்கொண்டே போக

போதும் டி மா நீங்க ரெண்டு பெரும் அவங்க அவங்க புருஷன் வீட்டுக்கு கிளம்புங்க என் பொண்ணுக்கு எப்பிடி என்ன செய்றதுன்னு எனக்கு தெரியும் என ருக்மணியும் முகத்தில் அறைந்தது போல் சொல்லிவிட்டார்
அவர் அப்பிடி சொல்லவும்
ராகினி. அம்மா நாங்களும் உன் பொண்ணு தான்..

” அதுக்கு நீங்க என்னவேணும்னாலும் பேசுவிங்க நான் கேட்டுகிட்டு சும்மா இருக்கனுமா… வேணாம் டி கிளம்புங்க.. ”
அவர்கள் தந்தையும் தாயும் தங்கள் இடம் கெஞ்ச வேண்டும் என்கிற எண்ணத்தில் வார்த்தைகளை துடுக்கா விட அதுவே அவர்களுக்கு எதிராய் திரும்பிவிட்டது நினைத்து அமைதியாக தங்கள் அறைக்கு திரும்பி விட்டார்கள் …… அப்பிடி யார் அவளை பெண் கேட்டு வந்து இருக்கிறார் என பார்பதற்கு நடந்தது எல்லாம்
விஸ்மையா
தன் அறையில் இருந்து கண்ணீருடன் கார்த்திக்கின் குடுப்பம் வரதுக்கு வேண்டி காத்து கொண்டு இருந்தாள் ஒரு வித இனம் புரியாத பயத்துடன்…
இனி….
.
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்






சகோதரிகளின் பேச்சை கேட்டு மையாவுக்கு மனது பாரமாய் ஆகிவிட்டது இரண்டு பெரும் சிறுவயது முதல் ஒட்டாமல் போனது ஏனென்று புரியாமலே போய்விட்டது ,கவலை படாதீங்க அக்கா , சீக்கிரம் உங்கள் எல்லாரையும் விட்டு நான் ரொம்ப தூரம் போயிடுவேன் என மனதுக்குள் விஸ்மையா சொல்லிக்கொண்டாள் .

மாலை நேரம் ஆகிவிட கார்த்திக் குடும்பத்தினர் வரப்போவதால் மையா ருக்மணி சொன்னது போல் கிளம்பிக்கொண்டு இருந்தாள்
ஏதோ யோசனையுடன் அவள் ஒரு வித படபடப்பு பயம் என இனம் புரியாத நிலையில் கார்த்திக் மற்றும் அவனது குடும்பத்துக்கு காக காத்து கொண்டு இருக்க
அவளை மேலும் தவிக்க விடாமல் சொன்னது போல் பெரியவர் கார்த்திக் ரகு ராஜி..நந்தினி குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்,
தாமோதரன் வேகமாக உள்ளே வந்து தன் மனைவி இடம் அவங்க எல்லாம் வந்துட்டாங்க போல ருக்கு மாயா ரெடியான்னு போய் பாரு நான் வந்தவர்களை பார்க்குறேன். என அவர் வந்தவர்களை அமர செய்தார்

ருக்மணி , மகள் அறையில் சென்று அவள் என்ன செய்கிறாள் பார்க்க அங்கே அவள் தனக்கு தெரிந்த அளவிற்க்கு கிளம்பி இருந்தாள் அவளிடம் அவங்க எல்லாரும் வந்துட்டாங்க மாயா என்று சொல்லிவிட்டு கிட்சென் சென்று விட்டார் .
அதைக்கேட்டு, மையா இன்னும் பதட்டம் ஆனாள் , கடவுள் இடம் பெருமாளே எல்லாம் நல்லா படியா முடியனும் அப்பாவுக்கு எந்த சங்கேதம் வந்துட கூடாது என .வேண்டினாள் .

இங்கே ராகினி மற்றும் ரேஷ்மா மறந்தும் கூட தங்களது அறையே விட்டு வெளியே வர வில்லை ஆனால் உள்ளே இருந்த படியே என்ன பேசுகிறார்கள் என கேட்டுக்கொண்டு இருந்தார்கள் ,
ருக்மணி எல்லோருக்கும் பலகாரம் கொடுக்க .
கௌசலயா தான் முதலில் பேச ஆரம்பித்தாள் , பொண்ண வர சொல்லுங்க என்று அடுத்து ஏதோ பேச போக
வேதாசலம் இவள் காரியத்தை கெடுத்துவிட கூடாது என்று கௌசி என அதட்ட

நந்தினி தாய் இடம் அம்மா நீ கொஞ்சம் சும்மா இரு அவளும் தன் பங்கிற்கு கௌசல்யாவை அதட்டினாள்

கௌசியோ மகளை மனதுக்குள் திட்டியே படி .நிமிர மாயா அங்கே .அழைத்து வரபட்டால். அதை பார்த்து கௌசல்யா அடி ஆத்தி இவ என்ன இம்புட்டு அழகா இருந்து தொலைக்கிரா .. என மகளை கவலை உடன் திரும்பி பார்க்க அதை ஏதும் உணராத .நிலையில் நந்தினி அங்கே நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தாள் .

விஸ்மையாவை பார்த்தவுடன் ராஜீக்கு பிடித்துவிட ரகுவும் சந்தோசத்துடன் சம்மதம் சொன்னார் எல்லார் பார்வையும் இப்போது கார்த்திக் இடம் செல்ல
அவன் நிமிர்ந்து அங்கே நின்று கொண்டு இருந்த விஸ்மையாவை பார்த்தான்
அவளும் கலக்கத்துடன் அவனை பார்க்க, அந்த பார்வை அவனுள் ஏதோ செய்ய அது என்னவென்று யோசித்த பட எனக்கும் சம்மதம் அம்மா என சொன்னான்

இத கேட்ட தாமோதரனுக்கோ இரட்டிப்பு சந்தோசம் தன் மகள் நல்ல பெரியே இடத்தில வாழ போகிறாள் என்று
பிறகு வேதாச்சலம் , தன்னோடு அழைத்து வந்த ஜோசியர் இடம் நல்ல நாள் திருமணதிற்கு பார்க்க சொல்ல

அவர்.. இந்த மாச கடைசில நாள் ரொம்ப நல்ல இருக்கு ஐயா
தாமோதரன் மற்றும் ருக்குமணி. என்னது இந்த மாசத்துக்குள்ளையா என்று திகைத்துவிட்டார்கள்

பெரியவர் .. ஒன்னும் பிரச்சனையை இல்லையே தாமோதரன் கேட்க

இல்லை.. ஐயா அது நாள் ரொம்ப கம்மியா இருக்கே அதுக்குள்ள எப்பிடி எல்லா வேலையும் முடிக்க என அவர் தயங்க …
இது தான் விசையமா நான் அதுக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணிடுறேன்.. நீங்க நல்ல படியா எங்க வீட்டு மகாலக்ஷ்மியே பத்திரமா பார்த்துகிட்டு எங்க கிட்ட சேர்த்தாலே போதும் என அவர் சொல்ல
அதுக்கு அப்புறம் தான் எந்த ஒரு தயக்கம் இல்லாமல் தாமோதரன் சரி என்று சொன்னார்
இதை கேட்ட ருக்மணி. மனதில் தோன்றியே கடவுளுக்கு எல்லாம் மகளுக்கு நல்ல இடத்தில வரன் வந்து இருப்பதாய் எண்ணி நன்றி தெரிவித்தார்.

இதை எல்லாம் கேட்டபடி ஒரு ஓரத்தில் மையா தலை குனிந்த படி அமர்ந்து தன் பிரச்சனைக்கு தீர்வு சொல்லியே தோழிக்கும் , கார்த்திக்கும் நன்றி சொல்லியே அமர்ந்து இருந்தாள் மனதுக்குள்..
அறையில் இருந்து இவை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த இரு பெண்களுக்கும்.. ஈயத்தை காய்ச்சி காதில் உற்றியது போல் இருந்தது.. .

வேதாசலம் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ன மகனுக்கு மற்றும் தமொதரனுக்கும் என்ன செய்யே வேண்டும் என்ன சொல்ல ஆரம்பிக்க கார்த்திக் மெல்ல ராஜி பக்கம் திரும்பி.. அவர் காதில் ஏதோ சொன்னான்…
அதை கவனித்த வேதாசலம் அவனிடம் நேராகவே என்ன கார்த்திக் .. என்று கேட்க

ராஜி அவசரமாய்.. அது ஒன்னும் இல்லை மாமா .

நீ சும்மா இரும்மா அவன் பேசட்டும்.. சொல்லு கார்த்திக்

தாத்தா அது வந்து வந்து.. நான் மையா கிட்ட ஒரு நிமிஷம் பேசணும்.. என அவன் சொல்ல

வேதாசலம், தாமோதரனை பார்க்க..
அவரோ ருக்மணியே பார்த்தார்.. அவர் பதில் சொல்லும் முன்பே நந்தினி முந்தி கொண்டு என்ன கார்த்திக்.. நம்ம வழக்க படி இப்பிடி எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ண பார்க்க கூடாது உனக்கு தெரியாதா என்ன.. ( அவளுக்கோ அவன் மாயாவிடம் பேச வேண்டும் சொன்னதை கேட்டு அதிர்ச்சி இது என்ன இப்பிடி கேட்குறான் அப்பிடி என்ன அவள் கிட்ட பேசணும் அவன் என்கிற நினைப்பில் முந்தி கொள்ள. )

இப்போது கார்த்திக். மாமா தப்பா எடுத்துகாதிங்க.. ஒரு அஞ்சு நிமிஷம் தான் பேச பேசணும் என்ன நீங்க நம்பலாம்…
அதற்குல் ருக்மணி.. ஐயோ என்ன தம்பி நீங்க.. தரலாமா போய் பேசிட்டு வாங்க… மையா அழைச்சுட்டு போம்மா..

என்னது பேசணுமா.. அதான் எல்லாம் அன்னைக்கே ரேச்டரன்ட்லையே பெசிடோமே இனி என்ன .. என என்கிற எண்ணத்துடன்.. வா.. வாங்க .. என்று கார்த்திக்கை அழைத்து அவள் நகர போக
நந்தினி,அவசரமாக நான் வேணும்னா கூட வரவா கார்த்திக் ( அந்த இடத்துக்கே சம்பதம் இல்லாத கேள்வியே அவள் கேட்டு வைத்தாள் )
அதைக்கேட்டு கார்த்திக்… ” ஹாஹா … ஒன்னும் பயம் வேண்டாம்
நந்தினி.. உன் பிரெண்ட நான் கடிச்சு ஒண்ணுமே சாப்பிட்ற மாட்டேன்.. நீங்க வாங்க மையா என அவளோடு.. அவளது அறைக்கு சென்றான், அங்கே அவளது அறை அவனது அறையில் ஆனால் அங்கே தேவையான அனைத்தும் இருந்தது அதை பார்த்தவன் அவளிடம்
“ஹ்ம்ம் ரூம் நீட்டா இருக்கு “
” தேங்க்ஸ் , உட்காருங்க சார்.. “
” கார்த்திக்கோ அவள் சார் சொன்ன உடனே அமர போவதை விட்டுட்டு அவசரமாய் சென்று தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு கதவை சாத்தி தாள் போட்டுவிட்டு வந்தான் ”

” அதை பார்த்த மையாவோ கடவுளே என்ன பண்ணுறாரு இந்த மனுஷன்.. என நினைத்ததை கேட்டும் விட..”
” பின்ன.. நீ பாட்டுக்கு.. இண்டர்வியுவுக்கு வந்த பொண்ணு மாதிரியும் நான் என்னமோ உனக்கு பாஸ் மாதிரியும்.. வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டா, என்ன ஆகுறது..”
” அப்புறம் உங்கள எப்பிடி நான் …என அவளுக்கு அதுக்கு மேல் பேச்சு வர மறுக்க..”

”பெயர் சொல்லி தான் இல்லைனா.. உங்க வீட்டுல எப்பிடி ஹஸ்பண்ட கூப்பிடுவிங்களோ அப்பிடி கூப்பிடாலும் எனக்கு ஓகே தான்.

ஹான் .அது.. என அவள் திருதிருவென முழிக்க..

சரி விடு.. நான் பேச வந்ததை பேசிடுறேன்.. அப்புறம் எப்பிடி கூப்பிடனும் பிரச்சனைக்கு வரலாம்.. என மேலும் சத்தம் வெளியே கேட்டுவிடாதபடி தன் குரலை தாழ்த்தி , ம் மாயா.. அடுத்த செக் அப் எப்போ உனக்கு.. டாக்டர் என்ன சொல்லுறாங்க.. உன் ஹெல்த் ஸ்டேடஸ் என்ன இது எல்லாம் எனக்கு தெரியனும்..”

அது , இப்போ மெடிசின் கொடுத்து இருக்காங்க.. என்னோட மெடிக்கல் ரிப்போர்ட் ப்ரெண்ட் கிட்ட கொடுத்து வச்சு இருக்கேன்.. இங்க வீட்டுல என் நால வைக்க முடியதுனால.

” ஒ , அப்போ அடுத்த செக் அப். “

” அது அடுத்த மாசம் தான்.. “
” அப்போ சரி . அதுக்குள்ள நீ நம்ம வீட்டுக்கு வந்துர்வ.. நான் கேன்சர் ஸ்பெசலிஸ்ட் கிட்ட பேசிடுறேன்.. அங்க வந்த உடனே ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுடலாம்.. “

” என்னது நீங்க.. எனக்கு ..எதுக்கு “அவள் தயங்கிய படி கேட்க

” அதுல ஒன்னும் தப்பு இல்லை மையா ஒரு பிரெண்டா கூட இத பண்ண கூடாதா, உனக்காக ”அவன் வருத்தமாக சொல்ல

” இல்ல.. அதுக்கு சொல்லல நான்.. எனக்கு யாரோட ஹெல்ப் தேவை இல்லையே.”

” அப்போ உன் ஹெல்ப் மட்டும் நாங்க எந்த ஒரு.. தயக்கம் இல்லாம வாங்கிக்கணுமா.. “

” ஆனா நந்தினி.. அப்பிடி என் கிட்ட சொல்லலையே..”

” அதை கேட்ட அவனோ.. அவளுக்கு அவ கவலை.. என்று நினைத்து விட்டு.. ம் சொல்லல தான் .. ஆனா. அதுக்காக என் நால சுயநலமா யோசிக்க முடியல.. நீ எனக்கு செய்யுற உதவிக்கு தான் உனக்கு நான் உதவ போறேன்.. சரின்னு சொன்னா நான் ரொம்ப சந்தோஷ படுவேன். இல்லேன்னா இப்போவே வெளியே போய் உங்க அப்பாகிட்ட சாரி சார் இந்த கல்யாணம் நடக்குது சொல்லிடுவேன்..என்ன கிட்டதட்ட அவன் மிரட்ட..[நந்தினி எப்பிடி இவளை மடக்கினாளோ அதே தான் கார்த்திக்கும் கடைப்பிடித்தான் ]

அதைக்கேட்டு மையா ” ஐயோ ப்ளீஸ் அப்பிடி ஏதும் பண்ணிடாதிங்க.. இப்போ என்ன எனக்கு ட்ரீட்மென்ட் க்கு ஹெல்ப் பண்ணணு தரலாமா பண்ணுங்க, அப்பா கிட்ட மட்டும் ஏதும் சொல்லிடாதிங்க.. அப்புறம் அவ்வளோ தான்..”என அழுதுவிடுபவள் போல் சொல்ல

அவளது நிலைமை பார்த்து இருந்தாலும் மனதுக்குள் சிரித்த படி கார்த்திக் அப்பிடி வா வழிக்கு குட் இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும் தாத்தா . அப்புறம் நந்தினி யாருக்கும் தெரியே வேண்டாம் சரியா.. . “

” ஹ்ம்ம் ஆனா ஏன் நந்தினிக்கு தெரியே கூடாது..”அவள் புரியாமல் கேட்க

” அது நீ போக போக தெரிஞ்சுப்ப..இப்போவெளியே போலாமா வந்து ரொம்ப நேரம்ஆச்சுன்னு நினைக்கிறேன் என பேசியது போதும் என.. அவன் எழுந்துவிட.”

” மையாவும் ஏதும் சொல்லாமல்.. அவன் பின்னே சென்றாள் ”

” பேசியாச்சு தாத்தா என கார்த்திக்.. பெரியவர் அருகில் சென்று அமர்ந்து விட்டான் “

” நந்தினி.. மாயாவிடம்.. என்ன சொன்னான் என்று பார்வையாலையே கேட்டால்

மாயா ஒன்னும் இல்லை என தலை மட்டும் அசைக்க அதை பார்த்த கார்த்திக்.. மனதுகுல் சிரித்து கொண்டான்…
நிட்சையே தாம்பூலம் மாற்றியாச்சு.. இனி கல்யாண வேலை எல்லாம் வேகமாய் நடக்கும் தாமோதரன்.. அப்போ நாங்க கிளம்புறோம்.. என வேதாசலம்.. தாமோதரனிடம் விட பெற..

தாமோதரன் , ” ரொம்ப சந்தோசம் ஐயா போயிட்டு வாங்க என தனது இரு கரம் குவித்து வழி அனுப்பி வைத்தார்
மாயாவிடமும் எல்லாரும் சொல்லி கொண்டு கிளம்பி சென்றார்கள்.

மாயாவின் பெற்றோருக்கு அளவில்லா சந்தோஷம்
ருக்குமணி , தான் தான் பேச ஆரம்பித்தார் ரொம்ப நல்ல மனுஷங்களா இருக்காங்களங்க . இவ்வளோ நாள் இவளுக்கு வரன் எல்லாம் தட்டி போறது நினைச்சு கவலையா இருந்தது ஆனா இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து அந்த ஆண்டவன் நம்ம சந்தோஷம் இரண்டு மடங்க குடுத்துட்டாருங்க
மனைவி சொன்னதை கேட்டு தாமோதரனுக்கும் அவர் சொல்லுவது சரி தான் தோன்றியது , அம்மா ருக்மணி நீ சொல்லுறது சரிதான் , நம்ம கிட்ட நாள் ரொம்ப கம்மியா இருக்கு எல்லா வேலையும் நாளைல இருந்து ஆரம்பிக்கணும் என சொன்னார்

அறையில் இருந்த இரு பெண்களுக்கும் எரிச்சலாக வந்தது

வேதாச்சலம் உத்தரவு படி திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டு இருந்தது
இதோ இன்றைக்கு இரு வீட்டாரும் திருமணத்திற்கும் துணிமணிகள் எடுக்க ஒன்று கூடி விட்டார்கள்

தாலி… சேலை… நகை , ருக்குமணி ராஜி.. கடையே விலை பேசி கொண்டு இருந்தார்

மாயா தான் எதுலையும் ஒட்ட முடியலாமல் தவித்து போய் விட்டாள் இன்னும் அவள் மனதில் தனக்கு இந்த திருமணம் தேவையா என்று என்கிற எண்ணம் தான் இன்னும் ஓடிகொண்டே இருந்தது..
இதை கவனித்த கார்த்திக்கோ மனதில் அவள் மேல் பரிதாபம் தான் எழுந்தது.. நமக்கு இருக்கிற மாதிரி தானே அவளுக்கும் இருக்கும்...




ஹாய் பிரெண்ட்ஸ் எக்ஸாம் நால எபிசொட் டிலே ஆகிட்டு​
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Epi-10


கார்த்திக் மாயாவை பற்றி நினைத்து கொண்டு இருக்க
ஆனால் மாயாவோ ஏதோ திகில் படம் பார்ப்பது போல்.. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்

நந்தினி தான் அவளுக்கு எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி கொண்டு இருந்தாள்

இதை கவனித்த ருக்மணி.. தன் கணவர் இடம்.. இந்த புள்ளைக்கு தான் நம்ம மக மேல எம்புட்டு பாசம் பாருங்க, எப்பிடி பார்த்து -பார்த்து செய்யுது.. எனக்கு இப்போ தாங்க நிம்மதியா இருக்கு.. என சொல்ல.
அவரும்.. ஆமா ருக்கு.. எனக்கும் அது தான் தோணுது

எல்லாரும்
சேர்ந்து கல்யாணத்துக்கு வேண்டி.. உடைகளை எடுத்து கொண்டு இருக்க மாயாவின் முகமாற்றத்தை வைத்து

கார்த்திக் மாயாவிடம் வந்து.. ” என்ன ஆச்சு மாயா உடம்புக்கு ஏதும் சரி இல்லையா என்ன. ஒரு மாதிரி டல்லா இருக்கிற மாதிரி இருக்கே..

திடுதிடிப்புன்னு அவன் வந்து அப்பிடி கேட்ட உடன்.. மாயா பதறி போய் ” ஐயோ அப்பிடி எல்லாம் ஒன்னும் இல்லை.. நேரம் ஆச்சு மாத்திரை போடணும்..
அதான்..

ஒ காட் ஒரு நிமிஷம்.. என தனது மொபைல் எடுத்து.. ராஜிக்கு அழைக்க..
சொல்லு கார்த்திக்.. பக்கத்துல இருந்துகிட்டே போனா என ராஜி கேலி செய்தார்

அம்மா.என்ன அப்புறம் கேலி பண்ணுங்க.. இப்போ நான் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்க..என்றான்
சொல்லு பா..
இன்னும் எவ்வளோ நேரம் ஆகும் பர்ச்சேஸ் க்கு

இன்னும் இருக்கே கார்த்திக்.. எல்லாருக்கும் எடுக்கனும்ல.. ஏதும் பிரச்சனையா கார்த்திக்.

பிரச்சனை இல்ல ம்மா மையு மாத்திரை போடுற நேரம் இது.. அதான்.. நீங்க.. ஆன்டி கிட்ட பெர்மிச்சன் வாங்கி குடுங்க நான் அவளை பக்கத்துல இருக்கிற ஹோட்டல்..அழைச்சுட்டு போய் சாப்பிட வச்சுட்டு வரேன் ம்மா.. ரொம்ப நேரம் ஆச்சு.. டல்லா வேற இருக்கிறா என கவலை உடன் சொல்ல.

அதை கேட்டு ராஜியும் பதறிவிட்டார் , அட கடவுளே நான் இங்க சொல்லிக்கிறேன் நீ அந்த புள்ளையே அழைச்சுட்டு கிளம்பு என அவசரமாக அவர் சொல்ல..
சரிம்மா நீங்க பார்த்துக்கோங்க நாங்க போயிட்டு சாப்பிட்டு வந்துறோம் என்று கார்த்திக் மையூவை அழைத்து கொண்டு அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்றான்
அவன் அப்பிடி அழைத்து வந்தற்கு மாயா நந்தினி ஏதும் நினைத்து கொள்ளவாலோ என்கிற பயத்தில் அங்கே கிடந்த இருக்கையில் அமர்ந்து இருந்தாள்

அவளுக்காக உணவை சொல்லிவிட்டு அவன் திரும்ப அங்கே மையூ ஏதோ யோசித்தபடி தன் துப்பட்டாவை திருகி ஒரு வழி செய்து கொண்டு இருந்தாள் என்னமோ யோசித்த படி
பத்து நிமிஷம் பொறுத்து பார்த்தவன் அவள் அமர்ந்து இருந்த விதத்தை பார்த்து.. ” போதும் மையூ பாவம் துப்பட்டா விட்டுரு அதை என்ன ஆச்சு இப்போ ஏன் இவ்வளோ டென்ஷன் .

ஆங் அது ஒன்னும் இல்லை சும்மா தான்

அவன் ஏதோ சொல்ல போக.. அதற்குள் அங்கே..
நந்தினி இவர்களை தேடி வந்து சேர்ந்தாள்
என்ன கார்த்திக் இங்க வர போறதா எனக்கும் சொல்லிட்டு வந்து இருக்கலாம்ல செம்ம பசி தெரியுமா அத்தை கேட்டு இங்கே வந்தேன் ஆமா டின்னெர் ஆர்டர் பண்ணியாச்சா, என பேசியே படி கார்த்திக் அருகில் சென்று அமர்ந்தாள்

ம் பண்ணியாச்சு நந்து என கார்த்திக் என்ன ஆர்டர் செய்தானோ மாயா அதை சொல்ல..

அதை கேட்ட நந்தினி முகம் விளக்கு எண்ணெய் குடித்தது போல் ஆனது . என்னது இது ஆடு மாடு சாப்பிடற மாதிரி ஒரு மெனு..அவள் முகம் சுழிக்க

கார்த்திக் நந்தினியே முறைக்க..ஆர்மபித்தான்

சாரி கார்த்திக் எனக்கு வெஜ் பிடிக்காதது உனக்கு தெரியும்ல அதுனால அப்பிடி சொல்லிட்டேன் என அவளுக்கு என்ன வேண்டுமோ அதை ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தாள்

விஸ்மையா தான் மட்டும் எப்பிடி சாப்பிடுவது என அவன் இடம் ” நீங்க சாப்பிடலையா கார்த்திக் சார், என கேட்க
” ஒ சாப்பிடலாமே என்று அவளுக்கு என ஆர்டர் செய்ததில் இருந்து தனக்கும் எடுத்து அவனும் சாப்பிட்டான்
பிறகு அவள் மாத்திரைகளை சாப்பிட்டு முடிக்கும் வரை காத்து இருந்து திரும்பினார்கள் மூவரும்

அதற்குள் அங்கே ராஜி, மற்றும் ருக்மணி எல்லாருக்கும் வேண்டியதை வாங்கி விட்டு இவர்களாகக காத்துகொண்டு நின்று இருந்தனர் .
என்ன அம்மா எல்லாம் வாங்கியாச்சா கிளம்பலாமா அவன் கேட்க

கிளம்பலாம் கார்த்தி எல்லாம் வாங்கியாச்சு , ராஜி சொன்னார்

ராஜி எல்லாம் சொல்லி சமாளித்து வைத்து இருந்ததால் ருக்மணி ஏதும் கேட்கவில்லை
அதைம் மையூ கவனித்து நிம்மதியானாள்

பிறகு விஸ்மையா மற்றும் அவளது பெற்றோரை அவளது வீட்டில் விட்டுவிட்டு கார்த்திக் குடும்பம் அவனது வீட்டுக்கு திரும்பியது

……………….. இரண்டு வாரம் கழித்து.

எல்லாரும் எதிர்பார்த்த அந்த நன்நாள் இன்றைக்கு தான்
முக்கியாமாக நந்தினி எதிர்பார்த்த கார்த்திக் -மையூ திருமணம் இதோ..

ஊரின் அந்த பெரியே.. திருமண மண்டபத்தில் உறவகள் சூழ.. அந்த நாளின் நாயகன்.. யாகத்தின் முன்னால் அமர்ந்து தெளிவு இல்லாத முகத்துடன் அய்யர் சொல்லும் மந்திரத்தை.. கவனமாக கேட்டு.. திருப்பி சொல்லி கொண்டு இருந்தான்.
அப்போது அய்யரோ ராஜியே பார்த்து.. பொண்ண அழைச்சுட்டு வர சொல்லுங்கோ நேரம் ஆகிடுச்சு சொல்ல..
மையூ கருநில வண்ணத்தில் புடவை அணிந்து அதர் ஏற்றது போல் நகைகள் அணிந்து மெல்ல அடி மேல் அடி எடுத்து நடந்து வந்தாள்
அதை பார்த்து
மீண்டும் கௌசல்யா தன் மகளின் காதில் ஏண்டி நந்து இவ ஏண்டி இப்பிடி செதுக்கி வச்ச சிலையாட்டம் இருக்கா. எனக்கு என்னமோ நீ அவசர பட்டுடியோ தொனுத்து டி நான் பெத்த மகளே.. பார்த்தியா என் அண்ணன் பொண்டாட்டியே உனக்கு கார்த்திக்கை பேசும் பொது.. அவ முகத்துல ஒரு பொட்டு சிரிப்ப காணோம் ஆனா இப்போ என்னனா எம்புட்டு.. பிரகாசம் பாரு அவ முகத்துல என்னமோ இவளுக்கே கல்யாணம் மாதிரி அம்புட்டு பூரிப்பு என கௌசல்யா தன்னோட புலம்பலை ஆரம்பிக்க

அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா எல்லாம் நான் பார்த்துகிறேன் எப்போ பாரு புலம்பிக்கிட்டு ஆகுற வேலையே பாருமா என நந்தினி நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் , அவளுக்கும் மையூவின் அருகில் சென்று நிற்க வேண்டும் என்று ஆசை ஆனால் அந்த ஹோமம் புகையில் எங்கே தனது மேக்கப் களைந்துவிடுமோஎன்கிற பயத்தில் கௌசி உடனே அமர்ந்துவிட்டாள் .

இங்கே ராகினி ரேஷ்மா இறுகி போய் விருந்தினரை போல் அமர்ந்து இருந்தார்கள் அங்கே இருந்தவர் யாரும்
இருவரையும் கண்கொண்டு கொள்ளவே இல்லை.

ராகினி தான் ஆரம்பித்தாள் என்ன அக்கா இது நாம ஏதோ திட்டம் போட்டா இங்க வேற என்னமோ நடக்குதே பொலம்ப

விடு டி பார்த்துக்கலாம் அவ அவ்வளோ நாள் எல்லாம் அங்கே வாழ மாட்டா எப்பிடி பார்த்தாலும் நமக்கு தான் வெற்றி.. என இரு சகோதிரிகளும் கோரமாக சிறிது மகிழ

இது ஏதும் தெரியாத விஸ்மையா மெல்ல நடந்து வந்து கார்த்திக்கின் அருகே வந்து அமர்ந்தாள்.

மாலையே சரி செய்வது போல் கார்த்திக் திரும்பி மையூவை பார்த்து ஒரு நிமிடம் கண் இமைக்க மறந்துவிட்டான் எவ்வளோ நேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தானோ

ஏதோ தோன்ற விஸ்மையா அவனை
திரும்பி பார்த்து விழிகளால் என்ன என்று கேட்கவும் தான் சுயநினைவுக்கு வந்தான் அவனுள் இருந்த மனசாட்சி டேய் மடையா அவளுக்கு நீ ப்ரெண்ட் அவ்வளோ தான் பேசினது எல்லாம் மறந்து போச்சா முழிச்சுக்கோ என அவனுக்கு எடுத்து உரைக்க கார்த்திக் சட்டு என தலையே உதறி கொண்டு அவளை பார்த்து சிநேகமாய் புன்னைகைதான்
அவளும் கொஞ்சம் பதட்டம் குறைந்து புன்னகைத்தால்
அய்யர் கெட்டி மேளம் சொல்ல அனைவரும் எழுந்து நின்று அட்சதை துவ கார்த்திக் மாயாவின் கழுத்தில் தாலியே கட்டினான்

விஸ்மையா தன் கண்களை மூடி கடவுளே நான் இனி எவ்வளோ நாள் இருப்பேன்னு தெரியல என் பிரச்சனையை என்னோடையே முடிஞ்சு போகணும்.. அப்பா அம்மாக்கு கடைசி வரைக்கும் தெரியவே கூடாது.. பெருமாளே.. என வேண்டினாள்

கார்த்திக்கோ.. என்ன மாதிரி மனநிலமையில் இருந்தான் என்பது அவனுக்கே தெரியவில்லை ஆனால் மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு நிறைவு.. அது எதனால் என்பது தன் அவனுக்கு புரியவில்லை..
புரியும் பொது.. ???
எல்லாரிடமும் ஆசீர்வாதம் வாங்கி முடித்துவிட்டு மாயா வீட்டுக்கு முதலில் செல்ல அங்கே இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்துவிட்டு மற்ற சடங்குகள் எல்லாம் முடித்து கார்த்திக் உடன் விஸ்மையா கிளம்பினாள்

இவ்வளோ நாள் எவ்வளோ பிரச்சனையா இருந்தாலும் தாயின் முகத்தை பார்த்து அல்லது அவரது மடியில் தலை சாய்த்து.. தன்னை தானே தேற்றி கொள்வாள் ஆனால் இனி.. தனக்கு ஒரு கவலை என்றால் எங்கே செல்வாள் என்கிற பயத்தில்
மாயா தன்னையும் மீறி.. அழ தொடங்க..

ருக்குமணி அவளை அணைத்து கொண்டு
வேண்டாம் பாப்பா.. எதுக்கு இவ்வளோ அழுகை . அம்மா அப்பாவும் எங்க போயிட போறோம் இங்க தானே இருக்க போறோம் பார்க்கணும் சொன்னா வந்துற போறோம் இல்லைனா நீ தம்பி ஓட இங்க வர போற இதுக்கு எதுக்கு அழுதுகிட்டு..என சமாதானம் செய்யே
அம்மா..என மீண்டும் மையூ தேம்பி கொண்டே அடுத்த அழ மகள் கண்ணீரை துடைத்து விட்டு , ச்சீ அசடு மாதிரி அழ கூடாது

நல்ல படியா போயிட்டு
கண்ணு வாடா, ருக்மணி மகளை வழி அனுப்ப

ஹ்ம்ம் என அரைமனதாய் தலை அசைத்தாள்
அதற்குள் ராஜியும்இவள்
அருகில் வந்து

மையூ நாங்க இருக்கோம்ல டா கிளம்பலாமா என சொல்ல அவள் பெற்றோரை திரும்பி பார்த்த படி நடந்தாள்
பெரியவர்கள் எல்லாரும் ஒரு காரில் கிளம்பி முன்னாள் செல்ல
விஸ்மையா - கார்த்திக் உடன்.. வேறொரு காரில் கிளம்பினாள் அவளுடன் ஏதாவுது முக்கியமாக பேச வேண்டிய இருக்கும் என்று ட்ரைவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு காரை தானே ஓட்டினான்

போகும் வழியில் சாரி என மையூ சொல்ல

எதுக்கு என்பது போல் அவளை திரும்பி அவன் பார்க்க..

அது அம்மா விட்டு வரது நால கொஞ்சம் எமோசனல் ஆகிட்டேன் அதுக்கு தான்

ஹாஹா பரவாயில்ல… விடு இதுக்கு எல்லாம சாரி கேட்பாங்க

பிறகு சிறிது நேரத்தில்
தேங்க்ஸ் என மீண்டும் சொல்ல

அடடா இது எதுக்கு , நோ சாரி அண்ட் தேங்க்ஸ் இன் பிட்வீன் அஸ் மையூ ஓகே என அவன் சாலையில் கவனம் செலுத்தினான்

ஹ்ம்ம் ஓகே என்று அவளும் புன்னைகைக்க முயன்றாள்

அப்போ பிரெண்ட்ஸ்.. என அவன் கையே நீட்ட,
அவளும் சந்தோஷமாய் பிரெண்ட்ஸ் என அவன் கரம் பிடித்தாள் .

ஏதோ மின்சாரம் தாக்கியது போல் கார்த்திக் அவள் கை பிடித்த வேகத்தில் விட்டுவிட்டான் .
என்ன ஆச்சு எனக்கு ஏன் இப்பிடி எல்லாம் தப்பவே தோணுது எனக்கு ஒரு வேலை மஞ்சள் கயிறு மேஜிக்கா இருக்குமோ அதெல்லாம் பெண்களுக்கு தான் வொர்க் அவுட் ஆகும் சொல்லுவாங்க ஆனா எனக்குள் ஏதோ நடக்குதே ஒருவேளை இந்த மேஜிக் என்னையும் அபெக்ட் பண்ணுதோ என்கிற யோசனை உடனே அவன் வீடு வந்து சேர்த்தான் மாயாவுடன் .

Hai friends itho next epi potuten padichu unga cmts sollunga
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவுடன் கார்த்திக் வந்து இறங்க ராஜி இருவருக்கும் ஆராத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்று பூஜை அறையில் விளக்கு எற்ற சொன்னார்.
அவளோ நடுக்கத்துடன் பேச்சை கேட்டு கவனாமாக விளைக்கை ஏற்றி கடவுள் இடம் எல்லாம் உன் செயல் பெருமாளே. இனி எல்லாம் படியா நீதான் நடத்தனும் என மனம் உருக வேண்டினாள்
நீயும் கும்பிட்டுக்கோ கார்திக் என ராஜி சொல்ல
சரிமா என அவனும் மனதுக்குள் ” கடவுளே இந்த கல்யாணம் விதி செயலா இல்லை அவள் சதி செயலா என் நால யூகிக்க முடியல நீ தான் இனி பார்த்துக்கணும்.. அப்பிடியே மையூவையும் காப்பாற்று என வேண்டினான்….

ராஜி, ” மையூ நீ அங்கே இருக்கிற ரூம்ல போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடும்மா கார்த்திக் நீயும் உன் ரூமுக்கு போ. “என சொல்ல

” அம்மா வந்து “கார்த்திக் எதோ சொல்ல முயல

அதை புரிந்து கொண்ட ராஜி ” டேய் உன்ன தான் போக தான் சொன்னேன்.. வந்து போய் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் இப்போ நீ போ ” என துரத்த வேற வழி .இல்லாமல். கார்த்திக் வேற வழி இல்லாமல் அந்த இடத்தைவிட்டு விட்டு சென்றான்”

விஸ்மையா ராஜி சொன்ன அறைக்கு சென்று அங்கே கிடந்த சோபாவில் உட்காந்து கொண்டு அந்த அறையே சுற்றி பார்த்தாள் பிறகு எங்க இந்த நந்தினி காலைல பார்த்தது அப்புறம் என்கிட்டே வந்து பேசவே இல்லையே
எங்க போனா அவ என யோசித்து கொண்டு இருந்தாள்.

இங்கே கௌசல்யா தங்களது அறையில் மீண்டும் நந்தினியிடம் எடி பாரு என் அண்ணி சாந்தி முகுர்தத்துக்கு வேற நல்ல நேரம் பார்க்க ஆரம்பிச்சுட்டா இப்பிடியே போச்சினா அவன் உன்ன முழுசா தண்ணி தெளிச்சி விட்டுர்வான் டி அப்புறம் உன் நிலைமையே கொஞ்சம் யோசிச்சியாஎன பொரிந்து தள்ள .

அம்மா உனக்கு நல்ல மாதிரியே பேச தெரியாதா. எப்போ பாரு.இப்பிடியே பேசிட்டு இருக்க அப்பிடி எல்லாம் ஒன்னு நடக்காது.. அதுக்கு நான் விடவும் மாட்டேன் எனக்கு கார்த்திக் விட மாயா மேல நம்பிக்கை இருக்கு ,நந்தினி சொன்ன உடன்

அடிப்பாவி என்னடி இப்பிடி சொல்லுற…ஏறக்குற கௌசல்யா அலற
இப்போது நந்தினிக்கு எரிச்சலை இருந்தது காலையில் இருந்து கார்த்திக் இடம் பேச அவள் முயற்சிக்க அவனோ கண்டுகொள்ளாமல் விட்டது ,அதோடு சேர்த்து கௌசல்யாவும் ஒவ்வரு விசயத்தை பேசி தூபம் போட, அதை கேட்க கேட்க நந்தினிக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகிவிட்டது
இருந்தும் விட்டுக்கொடுக்காமல் பேசினாள் அவள் தாயிடம்
இன்னும் என்ன அம்மா உனக்கு பிரச்சனை..

பின்ன அவன் மேல நம்பிக்கை இல்லைன்னு நீயே சொல்லுறியே உனக்கு மனசாட்சி இருக்கா.. அவன் பேச்சை தானே வந்தவளும் கேட்பா.

அம்மா திரும்ப முதல இருந்து ஆரம்பிக்காத அவ எனக்கு எதிரே திரும்பவும் மாட்டா அப்பிடி ஒன்னும் நினைக்க மாட்டா.

………………..

பட் நான் நினைப்பேனே பேபி… இன்னும் கொஞ்சம் நாள் தான் அப்புறம் உன்ன இந்தியாவில் இருந்து கடத்திகிட்டு வர போறேனா இல்லையானு மட்டும் பாரு .. என தன்னுடைய டாக்டர் கோட் போட்டு படி கண்ணாடி வழியாக நந்தினியின் புகை படத்துடன் பேசி கொண்டு இருந்தான்… அவன்….
அப்போதான் தனது போனில் இருந்து மாயாவின் திருமணத்துக்கு.. வாழ்த்து சொல்ல வேண்டும் என ரிமைன்டர் சவுண்ட் கொடுக்க..
அதை எடுத்து பார்த்தவன் ஒ ஷிட்… எப்பிடி மறந்தேன் குட்டிம்மா கோபத்துல பேச மாட்டாளே கடவுளே.. என வேகமாக மையூவிற்கு அழைத்தான் மையூவிற்கு .

அறையில் இருந்து நந்தினியே பற்றி யோசித்து கொண்டு இருந்த மையூ அப்போது தான் தான் செல் அலறியதை கவனித்து வேகமாய் சென்று எடுத்து பார்த்தாள் ..
அதில் வந்த எண்ணை பார்த்து போனை எடுத்து இசை போக பிறகு எப்போ போன் பண்ணுது பாரு பக்கி.. இப்போதான் என் யஞாபகம் வந்தது போல அட்டெண்ட் பண்ண மாட்டேன் போடா என போன் அட்டெண்ட் செய்யாமல் விட்டு அதையே முறைத்து பார்த்த படி அமர்ந்து இருந்தாள் சிறிது நேரத்தில் அதுவே அடிப்பதை நிறுத்துவிட
அவனோ என்ன போன் எடுக்க மாட்டேங்குறா நிஜமாலுமே கோபத்துல இருக்காளோ இல்லை தூங்கிட்டாளா என்னனே தெரியலையே என தனது வாட்சில்.. இந்திய நேரம் பார்க்க.. அது மாலை நேரம் தான் என காட்டியது மீண்டும் அவன் முயரிசிக்க.


மீண்டும் நானே என்று போன் ஆரம்பிக்க மையூ தான் பிழைத்து போகட்டும் என போன் எடுத்து ஹலோ.. என்று கோபத்துடன் சொன்னாள்

தங்க காட் போன் எடுத்துட்டியா..அவனும் நிம்மதியாக சொல்ல

அதைக்கேட்டு பேசாதே டா கொன்னுடுவேன் உன்ன இது தான் நீ போன் பண்ணுற நேரமா .. எப்போ இருந்து உன் கால்க்கு வெயிட் பண்ணினேன் தெரியுமா.. லீவ் தான் கிடைக்காதுன்னு சொல்லிட்ட அதுக்காக ஒரு போன் கூட பண்ண கூடாதுன்னு இருக்கா டாக்டர்னா நீ பெரியே அப்பாடக்கரா டா எரும.. என மையூ திட்டுவதை பொறுமையாக கேட்டபடி இருந்தான் சிறிது நேரம் அவனிடத்தி பதில் வராதது எண்ணி மையூதான் தான் அமைதியாகினாள் .

அவள் அமைதியாகிவிட்டாள் என்று புரிந்து கொண்ட அவன் முடிஞ்சதா எம்மா போதும் போதும் டா அம்மு.. என் கிட்டயே இப்பிடி பேசுற மாப்பிள்ளை ஓட நிலைமை ரொம்ப குஷ்டம் ச்சீ கஷ்டம் அவன் கேலி செய்ய

அவர் ஒன்னும் உன்ன மாதிரி கிடையாது இது மையூ

பாருரா சப்போர்ட் ..
அவன் மீண்டும் கேலி செய்ய ஆரம்பித்தவுடன்

இவளுக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது டேய் என்று பல்லை கடித்தபடி திட்ட ஆரம்பிக்க

அவளது கோபத்தை புரிந்து கொண்டவன் ஓகே ஓகே.. கூல் சாரி டா ஒரு முக்கியமான ஆபரேஷன் இருந்தது அதான் உனக்கு போன் பண்ண முடியல…
ஹ்ம்ம் சரி பரவாயில்லை விடு.. ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சதா ..
[ இது தான் விஸ்மையா ]

நல்ல படியா முடிஞ்சது சரி அப்புறம் சொல்லு மா மாப்பிள்ளை பத்தி.. என்ன பண்ணுறாரு.. எங்க இப்போ பக்கத்துல இருந்தா குடு பேச..

அவங்க.. ஏதோ ஆபீஸ் வேலை விசயசமா தாத்தா கிட்ட பேசிட்டு இருக்காங்க.. அப்புறம் நந்தினி இருக்கா இல்லை.
நந்தினி என்று சொன்னவுடன் அவன் தெரிந்தும் தெரியாதவன் போல்.. [ அவளை பற்றி தெரியே வேண்டுமே என ] எந்த நந்தினி.. என கேட்க
டேய்.. என் கூட பிஜி பண்ணினாலே டா அவ தான் மையூ சொல்ல

ஆமா ஆமா ஞாபகம் வந்துடுச்சு அவளுக்கு என்ன,

அவளுக்கு ஒன்னும் இல்லை.அவ ரிலேடிவ் தான் கார்த்திக்.. என்று.. தனக்கு கேன்சர் இருபத்தை மறைத்து.. பாதி உண்மையும் பொய்யும் கலந்து மையூ சொல்ல..
அதை கவனமாக கேட்ட அந்த புதியவனுக்கோ கோபம் ஏறி கொண்டே போனது.. இவ்வளோ வேலை பார்த்து இருக்காளா அதுவும்.. அவன் நேசிக்கும் ஒரு பெண் .. அவனுடையே தோழியே அல்லவா.. பகடக்காயயா ராஸ்கல் எவ்வளோ தைரியம் இது ஏதும் உணராமல்.. இந்த லூசு.. இப்பிடி சம்மதம் சொல்லி வச்சு இருக்கே . அதுக்கு மேல் மையூ சொல்லுவத்தை கேட்க பிடிக்காமல் . போதும் அம்மு..நிறுத்து என கத்தி விட்டான்

மையூ அப்பிடியே அதிர்ந்து போய் பேச்சை நிறுத்தி ” சந்தோஷ்..”என சொல்ல

” பேசாத.. வந்தேன் தொலஞ்ச நீ .. இவ்வளோ நடந்து இருக்கு எனக்கு … ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை எனக்கு சொல்லணும் உனக்கு தோணலையா. அவ சொன்னான்னு சரி சொல்லிற்க.. ஊருக்கு வந்து பேசுறேன் பாப்பா.. இதுக்கு மேல நல்ல நாள் அதுவுமா எதாவுது திட்டிர போறேன் போன வைக்கிறேன்.. எல்லாரையும் கேட்டேன் சொல்லு உனக்கு இருக்கு என கோபமாய் பேசிவிட்டு.. போனை கட் செய்தான்..”

மையூ என்ன பேசுவது தெரியாமல் அப்பிடியே உறைந்து போய் போனை கண்ணீர் உடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் எவ்வளோ நேரம் அப்பிடியே நின்றாளோ
அப்போது, ராஜி .. உள்ளே வந்து என்ன ஆச்சு ம்மா ஏன் கண்ணு எல்லாம் கலங்கி இருக்கு கேட்க்கும் போது மையூ நிதானத்திற்கு வந்தாள் அவள் பதில் சொல்லுவதற்குள் அவரே .. வீட்டு ஞாபகம் வந்துருச்சா ம்மா..அன்பாய் கேட்க

அவள் அவரே பார்க்க..


ஒன்னும் பயம் வேண்டாம் அங்க எப்பிடி இருந்தியோ அப்பிடியே இருக்கலாம் என்ன வேணும்மா தயங்காம என்கிட்டே கேட்கலாம் சரியா ..ராஜி

அவள் மெல்ல சரி என்று தலை அசைக்க ..

சரி.. போய் குளிச்சுட்டு இந்த சேலையே கட்டிக்கோம்மா

அதை வாங்கி பார்த்தவள் எதுக்கு அத்தை இதுவே நல்லா தானே இருக்கு.. தான் கட்டி இருந்த சேலையே பார்த்து மையூ சொல்ல .
அவளது கேள்வியில் ராஜி.. என்ன பதில் சொல்லுவது என குழம்பி விழிக்க.. [ இவ்வளோ அப்பாவியா இருக்காளே டேய் கார்த்திக்.ஹ்ம்ம்கும்.. ]
ஆ.. நீ முதல குளிச்சுட்டு வாம்மா நான் சொல்லுறேன் என அவளை குளியல் அறைக்குள் விட்டுவிட்டு திரும்பினார்

அப்போது தான் நந்தினி வந்து என்ன அத்தை இங்க என்ன பண்ணுறிங்க கேட்டாள்

ம் என்னடி ம்மா பண்ண சொல்லுற மையூவை ரெடி பண்ணிட்டு இருக்கேன்..என சொல்ல

உங்களுக்கு எதுக்கு இந்த வேலை அத்தை என்கிட்டே சொன்னா நான் பார்த்துக்கிற மாட்டேனா.. என அவள் வழியே

ராஜி மனதுக்குள் [ நல்ல பார்த்துப்ப டி மக்கா .. என் புள்ளையே ஓட வாழ்க்கைக்கே கெடுத்தவள் வைச்சவள் ஆச்சே.. என்று நினைத்த படி அவளுக்கு பதில் சொன்னார்.. ] இதுல என்ன இருக்கு நந்து.. விடு நானே பார்த்துகிறேன் என இருவரும் பேசி கொண்டு இருக்கும் போதே மையூ குளித்துவிட்டு வந்து சேர்ந்தாள்

அவள் கட்டி இருந்த சேலை .. அவள் அழகை மேலும் எடுத்து காட்ட .. முதல் முறையாக .. நந்தினிக்கு தன் தாய் சொன்னது போல் ஒரு வித பயம் தோன்றியது தான் எடுத்த முடிவு தவறோ என சிந்திக்க ஆரம்பித்தாள் மையூவை தலை முதல் கால் வரை பார்த்து எந்த ஒரு மேக் அப் இல்லாமல் அவள் அழகாய் இருக்காளே…என நந்தினிக்கு தோன்றியது

ராஜி.. வா ம்மா நேரம் ஆகிட்டே இருக்கு.. [ அவருக்கோ நந்தினியே மையூவிடம் பேச விடாத படி செய்து ஆகா வேண்டும்.. ] அதற்க்கு தான்.. மையூவுக்கு தானே அருகில் இருந்து எல்லாம் செய்ய.. வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார்..

இங்கே நந்தினி மையூவிடம் தனியா பேச நேரம் பார்த்துக்கொண்டு இருக்க

ஆனால் ராஜி மையூவை ரெடி ஆகியாச்சு.. வாமா என கையேடு.. அழைத்து கொண்டு ஹாலுக்கு சென்று விட்டார்..

அவள் இடம் பேச முடியவில்லையே என்கிற கோபத்தில் அத்தை என்ன இது நான் அவள அழைச்சுட்டு வர மாட்டேனா ..கோபத்தில் கேட்க

ராஜி. சற்று அவர் குரல் உயர்த்தி.. நந்தினி எனக்கு தெரியும் எத எப்போ எப்பிடி செய்யனும்னு . நீ எனக்கு சொல்ல வேண்டியது இல்லை.. போ போய் முதல சாப்புட்டு நீ வா மையூ என மருமகளை அழைத்துக்கொண்டு முன்னாடி சென்று விட..

ராஜியின் அதிக அக்கறை பார்த்து நந்தினி.. அவள் கையில் இருந்த செல் போனை கோபத்தில் தூக்கி எறிந்தாள் . [ அது உன் கையல இருக்குறதுக்கு இப்பிடி உடைஞ்சு போகலாம் என கீழே விழுந்து சிதறியது.. ].

இங்கே மையூ மற்றும் கார்த்திக்கு. ராஜியை இரவு உணவு பரிமாறினார்
அனைவரும்.. ஏதும் பேசாமல் சாப்பிடுவதில் கவனமாக இருக்க..

கௌசலயா தான் போருக்க மாட்டாமல் ஆரம்பித்தாள் .. ஏன்.. அப்பா கல்யாணம் .. தான் முடிஞ்சதே.. அது தானே நமக்கு வேண்டும்.. இப்போ மத்த சடங்குகளுக்கு என்ன அவசியம்
என இங்கிதம் கொஞ்சம் கூட இல்லாமல் கேட்க..

பெரியவர் இதை தான் இருந்தார்.. போல் ” ஏனம்மா கௌசி.. நீ பேசுறது.. உனக்கே நல்லவா இருக்கு.. இதே உன் பொண்ணா இருந்தா இப்பிடி பேசுவியா.. இல்ல அவளுக்கு இப்பிடி நடந்த அதை பார்த்துகிட்டு நீ தான் சும்மா இருப்பியா எதையும் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் என அவர் கண்டிப்புடன் சொல்ல..

நந்தினி.. இப்பிடியே போனால் எல்லாரும் மையூவின் பக்கம் பேச ஆரம்பிச்சுடுவாங்களே என்கிற பயத்தில் அம்மா நீ கொஞ்சம் சும்மா இரு நீங்க என்ன சொல்லுற படியே செய்ங்க அத்தை.. என அவள் சொல்லிவிட ..

இப்போது அதிர்வது மையூவின் முறை ஆனது .. எ .. என்ன சடங்கு என அவள் கார்த்திக்கை திரும்பி பார்க்க..

அவனோ.. இதுக்கும் எனக்கும் எந்த சம்பதம் இல்லை.. என்பது போல்..உணவில் கவனம் செலுத்த .. நந்தினி.. மையூக்கு எல்லா வற்றையும் [ தான் சொல்ல நினைப்பது எல்லாம் ] மெசேஜில் அனுப்பிவிட்டு .. மையூவை முகத்தை பார்க்க..உன் போனை பாரு என்று கண்ணால் சொல்ல அதை பார்த்த கார்த்திக் ஏதோ சரி இல்லையே.. என..

மையூ உன் போன் எங்கே ..

இதோ என்கிட்ட தான் இருக்கு

ஒரு நிமிஷம் தர முடியுமா என் மொபைல்ல சிக்னல் கிடைக்கல முக்கியமான கால் பண்ண வேண்டிய இருக்கு..

ஹ்ம்ம் இந்தாங்க. என அவள் போனை குடுக்க போனை வாங்கி கொண்டு அவன் பேச போவது போல்.. அவளுக்கு வந்த மெச்செஜ் இன்பாக்ஸ் ஓபன் செய்து பார்க்க அவன் சந்தேக பட்டது போல் நந்தினியின் மட்டமாக பேசி ஒரு செய்தி அனுப்பி இருந்தாள் ..
அதை படித்துவிட்டு. செய்தி வந்த தடம் தெரியாமல் டெலிட் செய்துவிட்டு.. தனது வேலை விசயமாக பேசிவிட்டு. உள்ளே வந்து அவள் இடம் போனை குடுக்க ,அப்புறம் குடுத்துக்கலாம் என அவனிடத்திலே வைத்துக்கொண்டான்

அவள்.. கை கழுவ எழுந்து செல்ல கார்த்திக் அவள் பின்னால் எழுந்து சென்று.. சற்று நெருங்கி நின்று.. மாயா உன் கிட்ட கொஞ்சம் இல்லை நிறையே பேச வேண்டியது இருக்கு சோ அம்மா என்ன சொல்லுறாங்களோ அத கேட்டு.. நம்ம ரூம்க்கு வந்து சேறு.. இட்ஸ் ஹைலி இம்போர்டன்ட்.. ப்ளீஸ் சொல்லிவிட்டு தாத்தா அருகில் சென்று நல்ல பிள்ளை போல் அமர்ந்து கொண்டான்..

ஆனால் மையூ தான் என்ன பேச வேண்டியது இருக்கு, என்கிட்ட அதான் அன்னைக்கே எல்லாம் பேசியாச்சே என ஹாலுக்கு வந்து சேர நந்தினி..

மையூ பார்த்தியா என கண் ஜாடையில் அவள் இடம் கேட்க..

அவள் கேட்பது புரியாமல்.. என்ன பார்த்தியா ,எதை சொல்லுற நந்தினி மையூ கேட்க

உன் போன்..
என்ன போன் எங்க வச்சேன் என் போன..மையூ தேட அங்கே கார்த்திக் வந்து சேர்ந்தான் மையூ உன் போன் என்கிட்ட தான் அப்புறமா தரேன்.. சொல்லிவிட..

நந்தினி.. நொந்து போய் விட்டால்..

அதற்குள் ராஜி.. மையூ . அழைத்து கொண்டு கார்த்திக் அறையில் விட்டுவிட்டு திரும்ப

மையூ அத்தை.. அது..ஏதோ சொல்ல போவதற்கு முன்பு

கார்த்திக் வருவான் ம்மா.. ஒரு பயம் வேண்டாம் என சொல்லிவிட்டு..கீழே சென்று விட..

கொஞ்சம் நேரத்தில் கார்த்திக் அவனது அறைக்கு வந்து சேர்ந்தான்..
அங்கே மையூ என்ன பேச போறான்.. ஒன்னும் புரியே மாட்டேங்குதே.. என அறையில் அடி பிரதக்சனம் செய்து கொண்டு இருந்தாள்

அதை பார்த்து.. போதும் மாயா.. உட்காரு கால் வலிக்க போகுது. என கார்த்திக்.. சொல்ல..
அவனது குரல் கேட்டு மையூ அப்பிடியே நின்று விட்டாள் ..
 

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எபிசோட்


அறையில் மாயா ஒரு வித பதட்டத்தில்.. இங்கும் அங்கும் நடந்து கொண்டு இருந்தாள் ., திருமணத்தை பற்றியே யோசிக்கத்தவள் நந்தினியின் கட்டாயத்தால் சம்மதித்து இருந்தாள் ஆனால் இன்று கார்த்திக்குடன் ஒரே அறையில் எப்பிடி தங்குவது , இவ்வளோ பெரிய வீட்டுல நமக்கு தனியா ஒரு ரூம் குடுத்து இருக்கலாம் என அவள் யோசித்துக்கொண்டு இருந்தாள்

கார்த்திக் தாத்தாவிடம் பேசி கொண்டு இருந்தான்
பெரியவர், ‘ சரி கார்த்தி மத்தத நாளைக்கு பேசிக்கலாம். இப்போ நேரம் ஆச்சு நீ உன் ரூமுக்கு போ என அவரும் எழுந்துக்கொள்ள

ஹ்ம்ம் சரி தாத்தா . என அவன் எழுந்து போகும் போது நந்தினி.. அவன் இடம் கார்த்திக் நான் சொன்னது எல்லாம் ஞாபகத்துல இருக்கட்டும்.. இந்த கல்யாணம் வெறும் பொம்மை கல்யாணம் தான்.. என்று அவன் கன்னத்தை தட்டிவிட்டு சிரித்தாள்

எதற்கோ கார்த்திக்கை தேடி வந்த ராஜியின் காதில் இந்த வார்த்தை விழுந்து விட. அவரோஅடிப்பாவி , மகளே இவள இதுக்கு மேல பேச விட்டா என் குடும்பம் விளங்கின மாதிரி தான் என அவர் உடனே கார்த்திக்.. என்று அழைக்க.

அம்மா என்ன ஆச்சு ம்மா, அவன் கேட்க

இன்னும் என்ன பண்ணுற இங்க.. அப்போவே உன்னை போக சொன்னேன்ல..

அது வந்து ம்மா. நந்தினி கிட்ட பேசிட்டு இருந்தேன்

அப்போது தான் ராஜி நந்தினியே பார்ப்பது போல் ” நீ இங்க என்ன பண்ணுற நந்தனி “நிச்சையமாய் அந்த குரலில் அன்பு இல்லை

ராஜியின் கேள்வியில் ‘ ஐயோ சும்மாவே ப்லேட் போடுமே இது என்று மனதுக்குள் நினைத்த படி.. ” அது ஒன்னும் இல்ல அத்தை சும்மா தான் கார்த்திக் கிட்ட பேசிட்டு இருந்தேன் “

பேசுறதுக்கு நல்ல நேரம் பார்த்த டிம்மா வா எனக்கு கொஞ்சம் உதவி பண்ணு.. நீ இன்னும் ஏன்டா இங்க நின்னுக்கிட்டு இருக்க.. போ.. என அவர் அதட்ட.. அதுக்கு மேல் அங்க நிற்க என்ன கார்த்திக்கு பைத்தியமா..

ஆனால் நந்தினி ராஜியே மனதுக்குள் திட்டி தீர்த்த படி…அவர் பின்னாள் சென்றாள்..
தன் அறைக்கு வந்த கார்த்திக்கோ.. அங்கே மையூ ஒரு வித பதட்டத்துடன் நடந்துகிட்டு இருப்பத்தை பார்த்தான் ..

அறை கதவை சாற்றியவன் ,அவளை பார்த்து
” மெல்ல மையூ எதுக்கு இந்த பதட்டம் “
அவன் குரல் கேட்டு விஸ்மையா அப்பிடியே அதிர்ந்து நின்று விட்டாள்..”
அவள் அருகே சென்று ஹலோ என்று அவன் கை அசைத்துவிட்டு
என்ன முழிச்சுகிட்டே தூங்குரியா.அவன் கேட்க

அவனது கேள்வியில் நிதானத்திற்கு வந்தவள் ” ஹான் அது எல்லாம் ஒன்னும் இல்லை..சும்மா ஏதோ யோசனை “

அப்பிடி என்ன யோசனை நான் வந்தது கூட தெரியாம “பேசிக்கொண்டெ அங்கே கிடந்த சோஃபாவில் அமர்ந்தான்

” அது..”அவள் கேட்க தயங்க
” எது ”அவள் பேசட்டும் என்று வார்த்தை எடுத்து குடுத்தான்

” உங்ககிட்ட பேசணும் அதான் எப்பிடி பேசுறது யோசிச்சுகிட்டு இருந்தேன்..”
” என்ன பேசணும் மையா எதாவுது பிரச்சனையா “இப்போது அவனது குரலில் சற்று பதட்டம்

” ச்சே ச்சே பிரச்சனையை எல்லாம் ஒன்னும் இல்லை “
” ஓஹ், வேற என்ன “என அவள் முகம் பார்க்க

” நாளைல இருந்து நான் வேலைக்கு போகட்டா லீவ் முடியுது.. “ஒரு வழியாக சொல்ல வந்ததை சொல்லிவிட்டாள்

” வேலைக்கா.. “இப்போது அதிர்வது அவனது முறையானது.

” ஐயோ ப்ளீஸ் வேண்டாம் சொல்லிடாதிங்க நான் நந்தினி கிட்ட பேசினேன்.. அவ சரின்னு சொல்லிட்டா.. ஆனா உங்க கிட்ட கேட்கணும் சொன்னதுக்கு நான் பேசிக்கிறேன் சொன்னா ஆனா எனக்கு தான் அவ
சொன்னது பிடிக்கமா இவ்வளோ நேரம் உங்களக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்…விஷயத்தை

” ம்ம் தேங்க்ஸ் மையூ உனக்காச்சும் என் சம்மதம் கேட்கணும் தோணிச்சே ‘ அவன் ஒரு மாதிரி குரலில் சொல்ல “

அவன் குரலில் தெரிந்த மாற்றத்தில் ” ஐயோ தப்பா எடுத்துகாதிங்க .. நான் உங்ககிட்ட தான் முதல்ல கேட்கணும் இருந்தேன் ஆனா நந்தினி விஷயம் கேட்டதால சொல்லவேண்டியதா போயிடுச்சி

அவன் கஷ்ட படுகிறான் என்று புரிந்துக்கொண்டு அவனுக்கு அவள் சமாதானம் சொன்னதே கார்த்திக்கு பெரிய ஆறுதல்
” பராவாயில்லை சரி மையூ எனக்கு புரியுது ரொம்ப நேரம் ஆச்சு… தூங்கலாமா… “அவன் கேட்க

” நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லையே.. “அவள் தயங்கிய படி நின்றாள்

” தாராளமா போகலாம்…”அவன் அனுமதி தந்தது அவளுக்கு அவ்வளோ சந்தோஷம்

” நெஜமாவ சொல்லுறிங்க.. “
“நிஜமே நிஜம் ஆனா மையூ நீ எதுக்கு இப்போ வேலைக்கு போகணும் சொல்லுற நான் தெரிஞ்சுக்கலாமா..”
” நான் தான் அன்னைக்கே சொன்னேனே .. எனக்கு ஆப்ரேசனுக்கு பணம் தேவை.. அதோட என்னோட தேவைகளை நானே தான் பார்த்துக்கணும் அதுனால தான்… “

அதை கேட்ட அவனுக்கோ ஐயோ என்று இருந்தது ,அடிப்பாவி அவ தேவையே அவளா பார்த்துக்கிற போரலாமே அப்போ நான் எதுக்கு ஒரு பிரெண்டா [ பிரென்ட் என்கிற வார்த்தையில் அவனது மனசாட்சி காரி துப்பியது என்பது தனி கதை ]கூட நான் இருக்க கூடாதா என மனதுக்குள் நினைத்த படி… ‘ ஹ்ம்ம் சரி உன் இஷ்டம் காலைல நான் அம்மா கிட்ட பேசிடுறேன் அப்புறம் நீ அந்த ரூம் யூஸ் பண்ணிக்கோ ,இங்கையே படுத்துக்கொள் என்று சொல்ல ஆசை தான் அவனுக்கு எங்கே அவனை தவறாக நினைத்துகொள்ளவாளோ என்கிற பயத்தில் தனது அறையில் மற்றொரு அறையில் அவளை தங்கிக்க சொல்லவிட்டான் - சார் ஜென்டில்மேன் ] எப்போ எது தேவை நாளும் தயங்காமல் என்கிட்டே கேட்கணும் சரியா , தூங்கலாமா ரொம்ப டயர்டா இருக்கும்மா .
அவன் சொன்னதுக்கு சரின்னு தலை அசைத்து
” ரொம்ப தேங்க்ஸ் சார்… “என மையூ சொல்ல

” என்னது சாரா . அம்மா தாயே.. தயவு செய்து.. என் அம்மா முன்னாடி என்ன சார் மொரு குப்பிட்டு வச்சுடாத..அவ்வளோ தான்.. “

” சாரி வேற எப்பிடி தான் உங்கள குப்பிடுறது… “
” பெயர் சொல்லி கூப்பிடு இல்லை.. உங்க வழக்க படி.. ஹஸ்பண்ட எப்பிடி கூப்பிடுவிங்களோ அப்பிடி ஏதாவுது ஒன்னு பொல்லொவ் பண்ணிக்கோ எனக்கு எந்த ப்ரொப்லெம் இல்லை.. ஓகே மா ரொம்ப நேரம் ஆச்சு.போ போய் தூங்கு “என அவன் சொல்ல

” ஓகே நீங்க இங்க தூங்குங்க என்று சொல்லிவிட்டு…பேச்சு அவளோ தான் என்று அவள் சென்று விட்டாள்
அவள் சென்றதும் கார்த்திக் இரவு உடைக்கு மாறியவன் கட்டிலில் அமர்ந்து நடந்ததை யோசித்து பார்த்துக்கொண்டு இருந்தான் ஒரே ஒரு ஜாதகம் தன் வாழ்க்கையே இப்பிடி புரட்டி போடும் என்று நினைக்கவில்லை மையூவின் அறைக்கதவை பார்த்தவன் இனிமேல் இப்பிடித்தான் தன் வாழ்க்கை இருக்க போகுது , என அவன் நினைக்க நந்தினி மேல் இன்னும் வெறுப்பு தான் கூடியது
நந்தினி இது உனக்கு தேவையா ஏண்டி இப்பிடி பண்ணின என புழம்பியே படி.. அப்பிடியே படுத்து உறங்கி விட்டான்…..

இங்கே நந்தினி.. தன்னுடைய அறையில் அடுத்து என்ன திட்டம் என யோசித்துக்கொண்டு இருந்தாள்
மையூவும் அப்பிடி ஒன்றும் உறங்கிவிட வில்லை கழுத்தில் இருந்த தாலியே எடுத்து பார்த்த அமர்ந்து இருந்தாள் ,அவளுக்கு திருமணம் என்று அவள் யோசித்து பார்த்தது கூட இல்லை அதுவும் கார்த்திக்குடன் , இன்னும் இது என்ன மாதிரியான திருமணம் என்று என யோசித்துக்கொண்டே இருந்தவள் அவளளுடையே யோசனையே வேலைய பக்கம் திருப்பினாள் எப்பிடி இந்த ப்ராஜெக்ட் முடிக்க போறமோ ,பிறகு ஆமா இந்த சந்தோஷ் ஏன் இப்பிடி கோப பட்டான் அவன் சொன்ன மாதிரி நாம ஏதும் பெரிய தப்பு பண்ணிட்டோமோ, வந்து பேசிக்கிறேன் வேற சொன்னனேனே என்னவா இருக்கும்.. என்கிற எண்ணத்துடன் அவளும் உறங்கிவிட்டாள்..


இனி.. விடியே போகும் விடியல்.. முவரும் நினைத்தது போல் நடக்குமா இல்லை இங்கையும் வேதாசலம் நினைத்தது போல்.. நடக்க போகுதா… காத்து இருந்து தான் பார்க்க வேண்டும்…


காற்று வீசும்….
 
Top